Thursday, March 20, 2008

***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்! - கீதா சாரம்! - Part 2

கீதையின் துவக்கம்! மக்களே எல்லாரும் எழுந்திரிச்சி நின்னு, கன்னத்துல ஒரு தபா போட்டுக்குங்க! அப்படியே கிளாசில் ஒரு குவார்ட்டர் ஊத்திக்குங்க! இதோ பதிவர் கேஆரெஸ்-க்குப் பதிவர் ராகவன், திருவாய் மலர்ந்து அருளிய "பெகாவத்" கீதை! முந்தைய பகுதி இங்கே!

ஜிரா:
சண்டையை எண்ணிச் சலம்பிடும் சங்கரா!
சண்டையின் தன்மை சொல்வேன் கேளடா!
பதிவுகள் ஆன்மா மரணம் எய்தாது...மீள் பதிவு பிறந்திருக்கும்!
பின்னூட்டம் இடுவாய், பின்னூட்டம் இடுவாய், வீரத்தில் இதுவும் ஒன்றே!

நீ விட்டு விட்டாலும் இவர்களின் பதிவு, சூடாகி ஆவியாகும் ஓர் நாள்!

கேஆரெஸ்: உனக்கு எல்லாம் தெரியும்டீ! ஆனால் எனக்கு உன்னைத் தான் தெரியும் ஜிரா! நீயா என்னை இந்தப் பாவச் செயலைச் செய்யத் தூண்டுவது?

ஜிரா:
என்னை அறிந்தாய்! எல்லாப் பதிவும் என் போலி என்பதையும் அறிந்து கொள்வாய்!
ஜிரா மனது, ஜில்பான்ஸ் மனதோ? காண்டீபம் நழுவ விட்டாய்?
பதிவரும் நானே! போலியும் நானே! அனானியும் நானே நானே!
சொன்னவன் ஜிரா! ஜல்லி அடிப்பவன் ஜிரா! துணிந்து நில் தி(ர)ட்டி வாழ!!!

கேஆரெஸ்: சர்வமும் நீ தான், நீ தான் என்று சொல்லிக் கொள்கிறாயே எங்கள் மாதவா! உண்மையில் நீ யாரு? அதை ஒரு வாட்டியாச்சும் ஒழுங்காச் சொல்லித் தொலையேன்!

ஜிரா: அடேய்! என்னையா யாரென்று கேட்டாய்? நான் ஸ்ரீவள்ளியும் எழுதுவேன்! சில்க் ஸ்மிதாவும் எழுதுவேன்! ஆனா தேவயானையைப் பத்தி மட்டும் எழுதவே மாட்டேன்! இதோ பார் என் சுயரூபம்...ச்சே விஸ்வரூபம்..!!!
டொய்ங்க்...டொய்ங்க்...டொட்ட டொட்ட டொட்ட டொட்ட டொய்ங்க்க்க்க்க்!!!
(ஜிரா தன் சட்டை, கூலிங் கிளாஸ், கர்ச்சீப் என்று சகலமும் கழட்டி விட்டுத், தன் விஸ்வரூப ஆர்ம்ஸைக் காட்டுறாரு! ஒரு முறுக்கு முறுக்குறாரு!
"ஜீவன்டோன் சாப்பிடுங்க" என்று வெளம்பரத்தை உரக்கச் சொல்லி ஜிராவை அர்ஜூன கேஆரெஸ் கலாய்க்கிறான்!)


நான் யார்?
நானே பதிவும் பின்னூட்டமுமாய் இருக்கிறேன்!
ஆண்களில் நான் டாம் க்ரூஸ்!
பெண்களில் நான் பிரிட்னி ஸ்பியர்ஸ்!
நாடுகளில் நான் அமெரிக்கா!

நகரங்களில் நான் பாரீஸ்!

மொழிகளில் நான் பிரெஞ்ச்(கிஸ்)!
வேதங்களில் நான் காமசூத்திரம்!
தேவர்களில் நான் இந்திரன்!
அசுரர்களிலும் நானே இந்திரன்!


சாமியார்களில் நான் ஓஷோ!
மாமியார்களில் நான் இந்திரா காந்தி

நதிகளில் நான் நயாகரா!
மாத்திரையில் வயாகரா!


தீர்த்தங்களில் நான் குவார்ட்டர்
நடப்பதில் நான் கோபிநாத் வாக்கர்...ச்சே....ஜானிவாக்கர்
இசைக்கருவிகளில் நான் பேக்பைப்பர்
துறவிகளில் நான் ஓல்டுமாங்கு


சினிமாவில் டைரக்டர்ஸ் ஸ்பெஷல்
சரக்குகளில் நான் சுண்டக்கஞ்சி
பத்திரிகைகளில் நான் டெபோனேர்
புரொகிராம்களில் நான் மிட்நைட்மசாலா


மீன்களில் நான் கருவாடு!
அரிசியில் நான் புழுங்கல்!
பருப்பில் நான் முந்திரி!
மவனே போதும் எந்திரி!


கேஆரெஸ்: ஆகா...ஆகா...தன்யானேன் ஜிரா! என்ன ஒரு தரிசனம்! விஸ்வரூப தரிசனம்! என்னுடல் புல்லரிக்குது ஜிரா! இப்ப நான் ஒரு பாசுரம் பாடியே ஆகணும்!
(கேஆரெசாழ்வார் ஜிராவின் பொற்பாத கமலங்களைப் பணிந்து, தமிழ்ப் பாசுரங்களை ஓங்கிப் பாடுகிறார்...)
பச்சைமா மலைபோல் சாலட்
பவளவாய் கென்டக்கி சிக்கன்
அச்சுதா அஞ்சப்பர் குழம்பே
ஆயர்தம் அன்னப் பூர்ணா


இச்சுவை தவிர யான்போய்
மெக்டொனால்ட்ஸ் ஜங்ஃபுட் உண்ணும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
ஆம்ஸ்டர்டாம் நகர் உளானே...


ஜிரா: ஆகா! கேஆரெஸ்! நான் தான் டகால்ட்டி-ன்னு நெனச்சேன்! நீ என்னைய விட டகால்ட்டியா இருக்கியேப்பா! எப்படிடா நண்பா, இப்படி எல்லாம் தமிழ்ப் பாசுரம் பாடுற?

கேஆரெஸ்: அடியேன் சீவீ ராமானுஜ தாசன்! ஹிஹி! சரி ஜிரா பரந்தாமா, கீதை இவ்வளவு தானா? இல்ல இன்னும் ஏதாச்சும் பாக்கி கீக்கி இருக்குதா?


ஜிரா:
பதிவுலகில்
எது பதிந்ததோ அது பின்னூட்டம் பெற்றது.
எது பின்னூட்டம் பெற்றதோ அது நன்றாகவே சூடானது.
எது சூடானதோ அது பேஜ்விசிட் பெற்றது.
எது பேஜ்விசிட் பெற்றதோ அது அலெக்சியா ரேட்டிங் பெற்றது.

டாப் ஃபைவ்வில் ஒருவனே, டாவடிக்கும் பார்த்தனே...
எந்த ரேட்டிங்கை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு.
எந்த ரேட்டிங்கை நீ பெற்றாயோ அது இங்கிருந்தே பெறப்பட்டது.
எந்த ரேட்டிங்கை நீ இழந்தாயோ அது இங்கேயே இழக்கப்பட்டது.

எந்தப் வலைப்பூவை கொண்டு வந்தாய்! அதை நீ இழப்பதற்கு?
எந்தப் பின்னூட்டத்தை நீ போட்டாய்! பதிவு சூடாவதற்கு?
எதை நீ பப்ளிஷ் செய்தாயோ, அது இங்கிருந்தே பப்ளிஷ் செய்யப்பட்டது.
எதை நீ ரிஜெக்ட் செய்தாயோ, அதுவும் இங்கிருந்தே ரிஜெக்ட் செய்யப்பட்டது.


எந்த பின்னூட்டம் இல்லையென்று நீ அழுகின்றாய்?
கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!
பதிவினை எழுது! பின்னூட்டத்தை எதிர்பாராதே!!
குழுப் பதிவினில் எழுது! கும்மியை எதிர்பாராதே!!


எது இன்று உன்னுடைய குழுப் பதிவோ,
அது நாளை மற்றொருவர் உடையதாகிறது.
மற்றொருநாள், அது வேறோருவர் உடையாதாகும்.
Nothing Stays...Thatz what Nameethan Says!!
இதுவே பதிவுலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமும் ஆகும்.

கேஆரெஸ்: ஆகா......இதுக்குப் பேர் தான் கீதாசாரமா கண்ணா? எனக்கென்னமோ இது கீதாசாரமாத் தெரியலையே! அபசாரம் மாதிரி-ல்ல தெரியுது!

ஜிரா: இது அப-சாரமும் இல்லை! அபிஅப்பா-சாரமும் இல்லை! இதுவே ஜீரா சாரம்! ஜீரா சாரம்!!

கேஆரெஸ்: தன்யன் ஆனேன் ராகவா! ஆனால்...

ஜிரா: எலே மாங்கா...என்னவே ஆனால்-னு இழுக்குற...?

கேஆரெஸ்: மை டியர் ராகவா! என்ன இருந்தாலும் பின்னூட்டத்தில் சண்டை போடப் போகிறவன் நான் அல்லவா?
ஜிரா காட்டிய வழி என்று யாரையாவது நான் எடுத்தெறிந்து பின்னூட்டி விட்டால், அந்தப் பாவம் எனக்கல்லவா?
அதற்கு நீ உடந்தை ஆவாயா ஜிரா? சொல் ஜிரா சொல்!

ஜிரா:
உள்குத்து என்றிந்த உலகம் சொன்னால் அது போகட்டும் கோவி-கண்ணனுக்கே!
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் குமரனுக்கே!
ரத்னேஷே ஆக்கினான்! டிபிசிடியே தாக்கினான்!
வவ்வாலே கொலை செய்கின்றான்!!!
பதிவுலகில் எழுக! நின் சாக்பீசும் எழுக! பதிவெலாம் சிவக்க!!!ஆயிரம் ஆயிரம் மணிகள் ஒலிக்கின்றன. சங்க நாதம் பறக்கிறது. ஓசை செல்லா சவுண்ட் எபெக்ட்ஸ் பிச்சிக்கிட்டுப் போகுது. பதிவர்கள் மலர் மாரி பொழிகிறார்கள்!
பாஸ்டன் வியாசா Snap Judge-இல் சுட்டி கொடுத்து ஆசீர்வாதம் செய்கிறார்!
பெனாத்தலார் பெனாத்துவதை நிறுத்தி விட்டு, கீதாலஜி படிக்கத் துவங்குகிறார்!
அடுத்தது கீதை பற்றிய குறும்படம் தான் என்று டுபுக்கு கேஆரெஸ்ஸின் கால்ஷீட் தேடி ஓடுகிறார்!
கீதாசாரத்தின் படி, நல்ல பதிவனாய் நடந்து கொள்வது எப்படி-ன்னு டிப்ஸ் திவ்யா சிப்ஸ் போடுறாங்க!

கீதா ரகசியம் சொன்னவன் காலைக் கழுவிக் குடிங்கடே-ன்னு ஆசிப் அண்ணாச்சி அருள் வந்து ஆடுறார்!
இதுவே தமிழன் நிஜ கீதை! இதுவே கலைஞர் பெரும் பாதை! என்று லக்கி அண்ணாச்சி ஒரு சிலிர்ப்பு சிலிர்க்கிறார்!
இட்லி வடையில் ஜீரா சாரம் டாப் டென்னில் நிக்குது!
கீதைச் சார்பின்மையும் பதிவுகளின் பரிமாணங்களும் என்று நம்ம ரவிசங்கர் விக்கிபீடியாவில் ஆயிரம் பக்க வெள்ளை அறிக்கை ஒன்றைச் சமர்பிக்கிறார்!

நச்-னு ஒரு கீதைப் போட்டியை சுடச்சுட அறிவிக்கிறார் நம்ம சர்வேசன்! போட்டிக்கு விண்ணப்பங்கள் குவிகின்றன!
* வினையூக்கி எழுதிய மாயாவி மகாபாரதம்
* சிறில் அலெக்ஸ் எழுதிய முட்டத்தில் மகாபாரதம்
* தேவ் அண்ணாத்த எழுதும் விவாஜீ, கிருஷ்ணாஜீ, ஜீராஜீ
* செல்வன் எழுதும் ஜிரா புனிதாவை லவ் பண்ணுகிறாரா?
* தம்பி உமாகதிர் எழுதும் போர்க்களத்தில் ஒன்னுக்கு போகலாமா?
* காதல் மன்னன் ஜீ எழுதும் அர்ஜூன் என்ற அன்பானவன்
* அரைபிளேடு எழுதும் பாஞ்சாலியின் ஜன்னல் வச்ச ஜாக்கெட்.

என்று போட்டிக்கு பல லட்சம் பாரதக் கதைகள் வருகின்றன. அத்தனையும் சீக்ரெட்டாக எடைக்கு எடை போட்டுக் காசாக்குகிறார் சர்வேசன்! யார் இந்த சர்வேசன் என்ற சர்ச்சை பதிவுலகில் கூடவே எழுகிறது! அடுத்த ஐந்து நிமிடத்தில் யூ.எஸ்.மேப்பில் இருந்து பாஸ்டன் காணாமல் போகிறது!

கோமகன் கொத்தனார் இத்தனை களேபரத்திலும் கடமையே கண்ணாக உப்புமா கிண்டிக் கொண்டிருக்காரு! அவர் கிண்டக் கிண்டப் பின்னூட்டப் புயல் போர்க்களத்தில் சுழன்று சுழன்று அடிக்கிறது!

வெட்டிப்புயல் பதிவில் வீசிய புயல் எல்லாம், இப்போது இடம் மாறி வீசுவதைக் கண்டு, வெட்டிப்புயல் துரியோதனச் சக்ரவர்த்தி திகைத்துப் போய் நிற்கிறார். ஆல் பிகாஸ் ஆப் திஸ் ஜிரா என்று கறுவுகிறார்!

இனி வேறு வழியில்லை! சிங்கிளா இருந்தா சமாளிக்கலாம்! ஆனா இப்ப வெட்டி சிங்கிள் இல்லையே!...
சிங்கிள், ஜிராவின் பாதங்களில் மிங்கிள் ஆகிறது!
வெட்டிப்புயல், ஜிராவின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சரணாகதி செய்கிறான்!
இனி எல்லாம் சுகமே என்று கெளரவர்களின் எண்ணிக்கையும் 105ஆக உயர்கிறது! நியாயமாப் பாத்தா 106ஆக உயரணும்! ஆனால் வழக்கம் போலக் கடைசியில் எல்லாரும் கோவி கர்ணனை லூசில் விட்டுவிடுகிறார்கள்!

(இத்தனையும் சத்தம் போடாமல் ஒரு ஓரமாய் பார்த்துக் கொண்டிருந்த கீதாம்மா...
"அடப் பாவிங்களா,
"கீதா"சாரம் என்ற பெயரே என் பேரில் இருந்து தான் வந்தது! இதுக்கான ஆதாரத்தை ஒரு ஓலையில் எழுதி, சிதம்பரத்தில் சீக்ரெட்டா சீலிங்கில் தொங்க விட்டுருக்காங்க!
அதுக்குத் தான் எல்லோரும் அம்பலம் ஏறி அதைப் பறிக்குணும்-னு திட்டம் போடுறாங்க! என்னிடம் காப்புரிமை வாங்காத ஜிராவுக்கு ஆப்புரிமை கொடுத்தே ஆகணும்" என்று தீவிரமா யோசிச்சிக்கிட்டு இருக்க...அங்கே அம்பி...நல்லா விசிறி விட்டு விட்டு வந்த வேலை முடிஞ்சுது-ன்னு அப்படியே அப்பீட் ஆகிறான்!

சு! சுபா! சுபம்!!!
பதிவர்களுக்குச் சர்வ மங்களம் உண்டாகட்டும்!!!

38 comments:

 1. கீதாசாரத்தைப் படிச்சுட்டு வர்றேன்.. :)

  ReplyDelete
 2. ///"ஜீவன்டோன் சாப்பிடுங்க" என்று வெளம்பரத்தை உரக்கச் சொல்லி ஜிராவை அர்ஜூன கேஆரெஸ் கலாய்க்கிறான்!)///

  ஆகா...!
  மீண்டும் வருவேன்

  ReplyDelete
 3. பல பதிவர்களுக்கு அவரவர் இடத்தை கொடுத்திட்டீங்க...

  ReplyDelete
 4. கலக்கல் கதம்பம். உக்காந்த இடத்தில இருந்து ஊர்சுத்திப்பாத்த மாதிரி இருக்குதுங்க. :-)

  ReplyDelete
 5. அடடா, சண்டையே நடக்கலையா. த்சு த்சு.
  இங்க எழுதப் பட்டிருப்பது பகாவத் கீதை.
  ராகவாசாரம்.

  ரவியின் ஆயிர நாம அர்ச்சனை!!!
  யசோதைனு சொல்லிட்டு,பாட்டுப் பாடுவாங்கனு வேற விளம்பரம்!!!

  நல்லபடியா சென்னை வந்து சேருங்க. பார்க்கலாம்.
  வாழ்த்துகள் ரவி.

  ReplyDelete
 6. ரவி,

  கலக்கல், சட்டென்று தொடராமல் முடித்தது ஏமாற்றம்.

  இன்னும் 2 பதிவுக்கு எழுதி இருக்கலாம், இதுபோல் நகைச்சுவை உணர்வு வரம் தானே (வரம் - யார் கொடுத்தாங்க என்று சொல்ல வரலை)

  ReplyDelete
 7. அன்று சோம பாணம் ஒரு ஆனை ஆயிரம் போலத் தோன்லே

  இன்று ஆம்ஸ்டர்டாம் புகை,பவுடர் தீர்த்தம்

  நடந்தது நகைச்சுவையாகவே நட்ந்தது
  பின்னூட்டங்கள் பிச்சுக்கினு போச்சு
  கிஷ்ணா கர்ணா அச்சுனா சண்டை வேணாம், சமாதனந்தான் பெருசாச்சு.

  ReplyDelete
 8. \\ நல்ல பதிவனாய் நடந்து கொள்வது எப்படி-ன்னு டிப்ஸ் திவ்யா சிப்ஸ் போடுறாங்க!\\

  விளம்பரத்திற்கு நன்றி ரவி!!

  ReplyDelete
 9. இந்த கீதையை தினந்தோறும் எப்படி பாராயணம் பண்ணுவது ? பாராயணம் முடிந்தவுடன் என்ன நைவேத்தியம் பண்ணுவது? இந்த கீதையை படிப்பதால் யார் யாருக்கு என்னென பலன் கிடைக்கும்? வந்து படிக்கும் பெரியவர்களுக்கு என்ன
  சன்மானம் (தக்ஷிணை ) தரவேண்டும் என்றெல்லாம் விவரமாக அடுத்த பதிவிலே
  எழுதவும்.

  ஆக்ஸ்ஃபோர்டு பிரஸ்ஸிலே சொல்லி ஒரு 200 கோடி பிரதிகளுக்கு ஏற்பாடு செய்யலாம்னு இருக்கேன். ஹாரி பாட்டருக்கு அப்புறம் இதுக்குத் தான் ஓஹோன்னு
  ஸேல்ஸ்ன்னு பட்சி சொல்லுது.

  தமிழ் நாட்டிற்கு சொந்த ஊருக்கு வரப்போவதாகத் தெரிகிறது. வரும்போது அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு எனக்கு புஸ்தகத்துக்குண்டான ராயல்டி தரவும்.அதை எதிர்பார்த்து அட்வான்ஸ் புக்கிங் ந‌ட‌க்கிற‌து.

  புத்தகத்துக்கு ஏற்கனவே ஒரு 10000 காபி புக் ஆகிவிட்டது. புத்தகம் வாங்கினால்
  ஒரு பொட்டலம் பிரியாணி உண்டா என ஒரு நேயர் கேட்டு துன்புறுத்துகிறார்.

  ReplyDelete
 10. /// மீன்களில் நான் கருவாடு!
  அரிசியில் நான் புழுங்கல்!
  பருப்பில் நான் முந்திரி!
  மவனே போதும் எந்திரி! ////

  பரந்தமா:

  எது மாறும்?
  எது தேறும்?

  கழுதைஎன்றும் கழுதை!
  குதிரைஎன்றும் குதிரை!

  அறியாதவனா நீ?
  தெரியாதவனா நீ?

  எனிந்த பெகாவதம்?
  மாறாதா உன்வதம்?

  ReplyDelete
 11. //எந்த பின்னூட்டம் இல்லையென்று நீ அழுகின்றாய்?
  கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!
  பதிவினை எழுது! பின்னூட்டத்தை எதிர்பாராதே!!
  குழுப் பதிவினில் எழுது! கும்மியை எதிர்பாராதே!!//

  இது தான் ஹைலைட்!
  பலரும் ப்ளாகரில் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

  ReplyDelete
 12. KRS,
  மற்றவர்கள் எல்லோரும் என்ன ஊமையாகிவிட்டார்களா?

  டக்கால்டி பாரதம்! பொகவத் கீதையில் வெறும் ரெண்டு பேர் பேசினா போர் அடிக்குமே!

  ReplyDelete
 13. ///இந்த கீதையை தினந்தோறும் எப்படி பாராயணம் பண்ணுவது ? பாராயணம் முடிந்தவுடன் என்ன நைவேத்தியம் பண்ணுவது? இந்த கீதையை படிப்பதால் யார் யாருக்கு என்னென பலன் கிடைக்கும்? வந்து படிக்கும் பெரியவர்களுக்கு என்ன
  சன்மானம் (தக்ஷிணை ) தரவேண்டும் என்றெல்லாம் விவரமாக அடுத்த பதிவிலே
  எழுதவும்.////

  னைவேத்தியம் பாராயணம் பண்றதுக்கு முன்னாடியே சாப்பிடணுமாக்கும்!

  பரந்தாமன்கிட்ட நேரில நின்னு கேட்டவரே நைவேத்தியத்தை அடிச்சிட்டுத்தான் கேட்டிருக்கிறார்

  நீங்க பதிவின் முதல் பத்தியில பாருங்க!
  அதன்படி செய்ங்க!

  ஒரே மணி நேரத்தில பாராயணம் ஆயிடும்

  பர்ந்தாமனின் காட்சி கிடைக்கிற வாய்ப்பும் இருக்கு!

  ReplyDelete
 14. //மற்றொருநாள், அது வேறோருவர் உடையாதாகும்.
  Nothing Stays...Thatz what Nameethan Says!!
  இதுவே பதிவுலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமும் ஆகும்.

  கேஆரெஸ்: ஆகா......இதுக்குப் பேர் தான் கீதாசாரமா கண்ணா? எனக்கென்னமோ இது கீதாசாரமாத் தெரியலையே! அபசாரம் மாதிரி-ல்ல தெரியுது!

  ஜிரா: இது அப-சாரமும் இல்லை! அபிஅப்பா-சாரமும் இல்லை! இதுவே ஜீரா சாரம்! ஜீரா சாரம்!!//

  பத்து விவேக் பதினைஞ்சி வடிவேலு ஒண்ணா சேர்ந்து காமெடி கலக்கல் பண்ணின மாதிரி இருக்கு:) முழுப்பதிவையும் மூணு வாட்டி படிச்சும் திரும்பத்திரும்பப் படிச்சி நான் சிரிக்க ,வீட்ல என்னை ஒருமாதிரி பாக்றாங்க ரவி:) சூபர்ப் !

  ReplyDelete
 15. தல

  நல்லா சிரிக்க வச்சிங்க...அதே போல அனைத்து பதிவர்களையும் மறக்கமால் கொண்டுவந்திங்க பாருங்க சூப்பரு...கலக்கிட்டிங்க ;))

  இது போல தொடர் மாதம் ஒருமுறை போடுங்கள் ;))

  ReplyDelete
 16. ஹாய் கேஆரெஸ்,

  ஹா ஹா ஹா... சூப்பர்யா... கலக்கல்.. அக்மார்க் உங்க ஸ்டைல்.
  ஆமாம் நான் கூட படிச்சுட்டு வீட்டுல என்னமா சிரிச்சு ரசிச்சேன்.

  அதே மாதிரி இது போல நகைச்சுவையா நீங்க ஏன் நிறைய்ய பதிவுகள் போடக் கூடாது? இந்த மாதிரி நகைச்சுவை ங்கறது ஒரு வரம் தானே, அத நீங்க நிறைய்ய தரலாமே... எங்களுக்கும், எல்லாருக்கும்.

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. கீதாசாரம்/பதிவாசாரம் கலக்கல்....நல்லாச் சிரிக்க வச்சீங்க..

  ReplyDelete
 19. //
  பச்சைமா மலைபோல் சாலட்
  பவளவாய் கென்டக்கி சிக்கன்
  அச்சுதா அஞ்சப்பர் குழம்பே
  ஆயர்தம் அன்னப் பூர்ணா

  இச்சுவை தவிர யான்போய்
  மெக்டொனால்ட்ஸ் ஜங்ஃபுட் உண்ணும்
  அச்சுவை பெறினும் வேண்டேன்
  ஆம்ஸ்டர்டாம் நகர் உளானே...
  //

  wow
  CooooooooooooL

  ReplyDelete
 20. எப்படி?? இல்ல எப்படி இப்படியெல்லாம்??? சக்க காமெடி... ஸ்டார்ட் பண்ணி இடையிலே ப்ரேக்கே போடாம படிக்க வச்சது....

  ஆனா.... அர்ஜுனனா கேஆரெஸ் வர்றதுனால, 'அர்ஜுன் என்ற அன்பானவன்' டைட்டில்ல சொற்பிழை, கருத்துப்பிழை மற்றும் ஏனைய பிழைகள் இருப்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.... :))

  ReplyDelete
 21. எதைக் கட்டம் கட்டுறது எதை விடறதுன்னு தெரியலையே. நான் இரசிச்சதை எல்லாம் கட்டம் கட்டினா என்னைக் கட்டம் கட்டிடுவாங்க. அதனால பதிவுலகப் பரந்தாமன் பாதத்தை நானும் பணிந்து கொண்டு அப்பீட் ஆகிக்கிறேன். :-)

  ReplyDelete
 22. சூப்பர் கே.ஆர்.எஸ்....எப்படிய்யா இப்படி?

  ReplyDelete
 23. @kumaran
  //நான் இரசிச்சதை எல்லாம் கட்டம் கட்டினா என்னைக் கட்டம் கட்டிடுவாங்க//

  ungalai erkanave kattam kattiyaache! :-)))))

  ReplyDelete
 24. "ஜீரக ரசம்"........ச்சே "ஜீரா சாரம்" அட்டகாசம் போங்க.!!!:):)

  ReplyDelete
 25. அருமை அருமை...

  பேசாம வெட்டிப்பயல் பதிவை உங்ககிட்ட கொடுத்துடலாமானு யோசிக்கிறேன் ;)

  ReplyDelete
 26. இந்த ஆன்மீகப் பதிவை ரசித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

  இதை ஃப்ரூப் பாத்துக் கொடுத்த பிளேடு அண்ணனுக்கு நன்றியோ நன்றி! :-))

  ReplyDelete
 27. //அருமை அருமை...//
  நன்றி பாலாஜி!

  //பேசாம வெட்டிப்பயல் பதிவை உங்ககிட்ட கொடுத்துடலாமானு யோசிக்கிறேன் ;)//

  ஹிஹி
  மரியாதை மனசோட இருந்தாப் போதும் அண்ணாச்சி!

  நாங்க "பழம்பெரும்" பதிவர்களின் வலைப்பூவை எல்லாம் வாங்குறதில்லீங்கோ! :-))

  வேணும்னா "பழம்பெறும்" பதிவரை மட்டும் கன்சிடர் பண்ணுறோம்! :-)

  ReplyDelete
 28. யோவ்......எங்கிருந்தய்யா இதையெல்லாம் பிடிக்கிறே!!!


  ஒரே கலக்கலா இருக்கு:-))))))

  சிரிச்சு சிரிச்சுவந்தார் ....ன்னு சிரியோசிரி:-)))

  ReplyDelete
 29. //துளசி கோபால் said...
  யோவ்......எங்கிருந்தய்யா இதையெல்லாம் பிடிக்கிறே!!!//

  டீச்சர்
  ஒங்க வகுப்புல ரெண்டு நிமிசம் உக்காந்தாலே, வம்பு பண்ணுறது வட்டி போட்டு வருது டீச்சர்! :-))

  ReplyDelete
 30. நல்லா போடுறீங்களே..புகையயை... :)

  உள் குத்து கண்ணனுக்கா...இதில் உள் குத்து ஏதும் இல்லையே...

  ஏன்..டிபிசிடினாலே...தாக்குதல் தானே..என்ன கொடுமை அண்ணே இது..

  ரத்னேஷ் - தி(ருவள்ளுவர்)க(ம்பர்)வாம்..இந்தப் பக்கம் வந்தாரா தெரியல்ல..

  வவ்வால் - கொலை செஞ்சாரா..தெரிஞ்சா உங்களைச் செஞ்சாலும் செய்வார்..!!! :P

  இந்த கீதையில் சனாதான கருமம் இல்லாது இருந்தால். :) இல்லாட்டி :(

  ///
  உள்குத்து என்றிந்த உலகம் சொன்னால் அது போகட்டும் கோவி-கண்ணனுக்கே!
  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் குமரனுக்கே!
  ரத்னேஷே ஆக்கினான்! டிபிசிடியே தாக்கினான்!
  வவ்வாலே கொலை செய்கின்றான்!!!
  பதிவுலகில் எழுக! நின் சாக்பீசும் எழுக! பதிவெலாம் சிவக்க!!!
  ///

  ReplyDelete
 31. டிபிசிடி அண்ணாச்சி
  அடியேன் சொல்வதெல்லாம் உன்-மை!
  உன்-மையைத் தவிர வேற ஒன்னும் இல்லை!
  :-)))

  உங்க புது பேரு மட்டும் (தமிழ்-ல) மறந்து மறந்து பூடுது! :-)

  ReplyDelete
 32. யப்பா, ஃபாஸ்ட் மெயிலு, வந்து பதிவு படிச்சுட்டுத் தான் பின்னூட்டம் போடணும்னா, இந்த ஸ்பீடுல பதிவு இடுறீங்களே?!

  இது செம கலக்கல் பதிவு. மற்ற விண்ணப்பங்கள் போல, என்னுடையதும்: புதிரா, புனிதமா மாதிரி, அப்பப்போ, ஒரு இதிகாசம் / கதை எடுத்துகிட்டு, எங்களை (ஒரொரு காரக்டராக) பின்னூட்டம் மூலமாக களத்தில் குதிக்க விடவும்.

  கீதாம்மா ரசம் நல்ல (நகை) சுவை!

  ReplyDelete
 33. //வவ்வால் - கொலை செஞ்சாரா..தெரிஞ்சா உங்களைச் செஞ்சாலும் செய்வார்..!!! :P//

  ஆகா, இதை அப்ப நோட் பண்ணலையே! வவ்வால் வந்தாராமே மெரீனாவுக்கு! என்னைக் கொலை எல்லாம் செய்வாரா என்ன? அவரு நல்லவரு!

  அங்க என்னடான்னா வட்டாள் நாகராஜ் கிட்ட புடிச்சிக் கொடுக்கச் சொல்றீக! இங்க வவ்ஸை ஏவி வுடறீங்க! ஏன் டிபிசிடி அண்ணாச்சி உங்களுக்கு இந்தக் கொல வெறி, என் மேல? :-)

  ReplyDelete
 34. முத்தமிழிலே கொடிகட்டிப் பறக்குதே உங்க "கீதா"சாரம்! :P

  எத்தனை நாளாக் காத்துட்டு இருந்தீங்க இப்படி என்னைப் போட்டு வாங்கறதுக்கு? :P
  நல்லா இருக்கு உங்க பெகாவத் கீதை! :)))))))))))))))

  ReplyDelete
 35. இரண்டாம் தடவை படிச்சாக் கூட இன்னும் சிரிப்பு வருமா. இல்லை மீண்டும் எழுதப்பட்ட சாரமா!!என்னப்பா முகமெல்லாம் வலிக்குது சிரிச்சு.:))
  விபரீதமா புத்திக் கூர்மை.
  சொல்லத்தான் வார்த்தையில்லை. எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டே இருங்க.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP