Wednesday, March 19, 2008

***E=mc^2. எனவே கடவுள் இல்லை! - 1

அறிவியல் வகுப்பில் மாணவர்கள், மாணவிகள் பலரும் ஜோடியா உட்கார்ந்து, ஜொள்ளிக் கொண்டிருந்தார்கள்...சாரி...சொல்லிக் கொண்டிருந்தார்கள்!
எதை? ஐன்ஸ்டீனின் Theory of Relativity-ஐ! அந்த இளம் பேராசிரியர் உள்ளே வருகிறார்! வகுப்பே எழுந்து நின்று பணிவுடன் வணக்கம் தெரிவிக்கிறது! பேராசிரியர் கே. பன்னீர் செல்வம் (KPS) ஒரு வருத்தப்படாத வாலிபர்! ரொமாண்டிக் மூடு அதிகம்! சிறு வயதிலேயே பேராசிரியர் ஆனவர்!

அவர் இயல்பாகப் பழகினாலும், அவருடைய அறிவுத் திறமும், பேச்சு வன்மையும் கண்டு, மாணவர் கூட்டம் அவரை ஒரு பத்தடி தள்ளியே வைத்திருந்தது! மாணவியர் கூட்டம் மட்டும் பத்தடி இல்லாமல், இரண்டடி மட்டும் தள்ளி வைத்திருந்தது! :-)

KPS புரியாத மண்டைக்கும் ஓரளவுக்காச்சும் புரிய வச்சிட்டுத் தான் அடுத்த வேலையைப் பார்ப்பார்! "ஐயோ எனக்குப் புரிய வேணாம் சார், நான் சாய்ஸ்-ல வுட்டுறேன் சார்", என்கிற சால்ஜாப்பு எல்லாம் அவர் கிட்ட எடுபடாது! அவரிடம் இருந்து தப்பிக்கணும்னா மாஸ் பங்க் தான் ஒரே வழி! :-)
அறிவியல் பற்றி அவர் விளக்கும் போதெல்லாம், பகுத்தறிவும் தெளித்து விளக்கும் ஆழ்ந்த பகுத்தறிவுச் செல்வர் நம்ம KPS! அறிவியல் பயிலப் பயில அனைத்தும் தெரிந்து தெளிந்து விடும் என்பது அவர் ஆழமான கருத்து!

"வணக்கம் KPS சார்"

"வணக்கம் மாணாக்கர்களே! உட்காருங்க! எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஐன்ஸ்டீன் தியரி பற்றி அவங்கவங்க பார்வையில் சிறு குறிப்பு எழுதிக்கிட்டு வரச் சொன்னேனே! யார் முதலில் வந்து பிரசென்ட் பண்ணப் போறீங்க?"

"நம்ம அப்துல்லா தான் சார் பண்ணப் போறான்!"

"வா அப்துல்லா, துவங்கு உன் கச்சேரியை!"

"நன்றி சார்!
ஒவ்வொரு அணுவுக்குள்ளும் (atom), சக்தி (energy) இருக்கு சார்! அதை எப்படி அளக்கணும் என்பதைத் தான் இந்த E=mc^2 சொல்லுது!
அந்தச் சக்தி = அணுவின் கனம் x ஒளியின் வேகம் x ஒளியின் வேகம்

உதாரணம் ஒன்னு பார்த்தா சுளுவாப் புரியும் சார்! ஒரு கிலோ தூய்மையான தண்ணியில் சுமார் 111 கிராம் ஹைட்ரஜன் அணுக்கள் இருக்கும் சார். அப்போ அந்தத் தண்ணிக்குள்ள எவ்ளோ சக்தி இருக்கும்?

E = 0.111 kg x 3x10^8 x 3x10^8 = 10,000,000,000,000,000 Joules!

"அருமை! அருமை! மேல சொல்ல அப்துல்லா!"

"ஒரு புத்தகத்தை வேகமாக் கீழே போட்டா ஒரு Joule சக்தி ஆவுது சார்! அப்படீன்னா ஒரு கிலோ தண்ணிக்குள்ளாற எவ்வளவு சக்தி ஒளிஞ்சிருக்கு பார்த்தீங்களா? கிட்டத்தட்ட நாப்பது மில்லியன் லிட்டர் பெட்ரோல் தரும் சக்தி ஒரு கிலோ தண்ணிக்குள்ள இருக்கு சார்!"

"வாவ்! மார்வலஸ்! மிகவும் எளிமையாச் சொல்லி இருக்க, அப்துல்லா!"

"இவ்வளவு சக்தியும் எப்படி சார் தண்ணிக்குள்ள இருந்து ரிலீஸ் பண்ண முடியும்? ஒரு பக்கெட் தண்ணிக்குள்ளாற இவ்வளவு சக்தியா-ன்னு முதலில் தோணும்!
அதே போலத் தான் சார் கடவுளும்! மேலோட்டமாப் பாக்கும் போது ஒன்னுமே தெரியாது! ஆனா அளந்து பார்த்தோம்னா, ஒவ்வொரு சின்னப் பொருளுக்கு உள்ளேயும், இறைவனின் அபிரிமிதமான சக்தி ஒளிஞ்சிக்கிட்டு இருக்குன்னு தெரியும்!

இது தான் சார் என்னோட பிரசென்டேஷன்! அனைவருக்கும் நன்றி நண்பர்களே!"



பேராசிரியர் KPSக்கு கோபம் பொத்துக்கிட்டு வருது!
"நான்சென்ஸ்! எதோட எதைத் தொடர்பு படுத்திச் சொல்லுற? அறிவிருக்கா உனக்கு! யார் சொல்லிக் கொடுத்தா இதை உனக்கு?"

"நான் படிக்கும் போது தானாப் புரிந்து கொண்டது தான்! ஏன் சார் தப்பா?"

"டோட்டல் நான்சென்ஸ்! இது அறிவியல்-டா! இதுக்குள்ள எப்படிடா கடவுள் வந்தாரு? கடவுள்-னு ஒருத்தர் இருந்தாத் தானே, அதன் சக்தியை அளக்க முடியும்? இல்லாத ஒன்னை எப்படிடா அளப்ப? பைத்தியம் போல பேசாதே!"

"கோவிச்சிக்காதீங்க சார்!
அணுவுக்குள் இவ்ளோ சக்தி இருக்கு-ன்னு நமக்கு மட்டும் முன்னாடி தெரிஞ்சுதா என்ன? இல்லை-ன்னு நினைச்சிக்கிட்டு இருந்த சக்தி இப்ப இவ்ளோ இருக்கே சார்? அதைத் தான் சார் நான் சொன்னேன்!"

"ஓகோ...அப்ப கடவுள் இருக்காருன்னு சொல்லுற! அப்படித் தானே?"

"ஆமாம் சார்!"

"சரி, மக்களே, இன்னிக்கு வகுப்புல இதான் டிஸ்கஷன்! நானும் பார்த்துடறேன் இது எங்க போயி முடியுது-ன்னு"



(வகுப்புக்கு ஆர்வம் பத்திக்கிச்சு! தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா-ன்னு பாடின பசங்க எல்லாம் இன்னிக்கு ஏதோ ஒன்னு பத்திக்கப் போவுதுன்னு ஆர்வமா முன் சீட்டுக்கு வராங்க! )

"சொல்லு அப்துல்லா, கடவுள் இருக்காருல்ல! அவர் நல்லவரா?"

"ஆமாம் சார்! நல்லவரு தான்! அறவாழி-ன்னு தான் வள்ளுவர் சொல்லி இருக்காரு"

"உம்ம்ம்ம்...சரி, கடவுள் சர்வ சக்தி படைச்சவரா?"

"ஆமாம் சார்!"

"எங்க அக்கா ரொம்பவே பெருமாள் பக்தை! அவளுக்குக் கேன்சர் வந்து கன்னியாவே செத்துப் போனா! பாவம், ரொம்ப நல்லவ, அன்பானவ!
கொஞ்ச நாள் அறிமுகமான நண்பர்களுக்கே நாம் முடிஞ்ச அளவுக்கு உதவறோம்! ஆனா அந்தக் கடவுள் அவளுக்கு உதவலை! ஏன்?
கடவுளுக்கு நல்ல மனசு இல்லையா, இல்ல அவர் கிட்ட அவ்ளோ சக்தி இல்லையா? அவரு பெருமாளா? வெறும் ஆளா?"
(அப்துல்லா மெளனமாகத் தலை குனிகிறான்)

"சரி அப்துல்லா, இதுக்காச்சும் பதில் சொல்லு! கடவுள் எல்லாவற்றையும் படைத்தார் அல்லவா?"

"ஆமாம் சார்!"

"உலகத்துல கொடுமை, அதர்மம், நோய், வெறுப்பு, அசிங்கம் எல்லாம் நிறைய இருக்கா?"

"இருக்கு சார்!"

"அதையெல்லாம் கூடக் கடவுள் தான் படைச்சாரா?"
(அப்துல்லா மறுபடியும் மெளனமாகத் தலை குனிகிறான்)

"உம்...அறிவியல் என்ன சொல்லுது? ஐந்து புலன்களையும் வைத்து உலக ஓட்டத்தை அறிந்து கொண்டு வாழறோம்-னு சொல்லுது இல்ல?
கடவுளை நீ எப்படி அறிந்து கொண்டாய்? எதை வைத்து அறிந்து கொண்டாய்?"
(அப்துல்லாவுக்குப் பேச்சே வரலை! மறுபடியும் தலை குனிவு தான்)

"ஆகக் கூடி, கடவுளை நீ பார்த்ததில்லை, கேட்டதில்லை, முகர்ந்ததும் இல்லை, சுவைக்கவில்லை, தொட்டதில்லை!
ஆனாக் கடவுள் இருக்காரு-ன்னு மட்டும் சொல்லுவே, அப்படித் தானே?"
(மறுபடியும் மெளனம் தான்...வகுப்பே ச்ச்ச்ச்ச்-ன்னு உச்சு கொட்டுது...)

(KPS வெற்றிக் களிப்புடன்)
"கடவுள் இருக்காருன்னு நீ இன்னும் நம்புறியா?"

"ஆமாம் சார்! நம்புறேன்!"

"அடப்பாவி! சின்னப் பசங்க தான்டா நாட்டின் எதிர்காலம்! நீங்கெல்லாம் அறிவியல் சிந்தனையை வளர்த்துக்கணும்! ஏதோ ரொம்ப நல்லா ஐன்ஸ்டீன் சூத்திரத்தைச் சொன்னியேன்னு பார்த்தேன்! இப்படி வடிகட்டின மடையனா இருக்கியே? கடவுளை நம்புறவன் முட்டாள்-டா!
அறிவியல்-ல சிந்திக்கணும்-டா உன் மூளை! அப்போ தான் முன்னேறுவ!
கடவுளை நம்புறேன், நம்புறேன்-னு சொல்லுறியே! எதை வச்சிடா நம்புற?"

"எதுவும் இல்ல சார்! என் நம்பிக்கையை வச்சித் தான் நம்புறேன்!"

"நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் சம்பந்தமே இல்ல! தெரியும் தானே?"
(மறுபடியும் தலை குனிவு தான்)

"சரி சார், இவ்ளோ நேரம் என்னைக் கேள்விகள் கேட்டீங்க! கடவுள் அறிவியல்-ல பல இடங்களில் வராரு! அதெல்லாம் நான் உங்களைச் சில கேள்வியாக் கேட்கலாமா?"

(மொத்த வகுப்பே சீட்டின் நுனிக்கு வருகிறது! நாளை தொடர்ந்து, நிறையும்...)


(முன்னெப்போதோ மின்னஞ்சலில் வந்த ஒரு ஆங்கில ஆக்கத்தை, மேலும் செவ்வியாக்கி, ஐன்ஸ்டீனின் கொள்கை E=mc^2 சேர்த்து, DNA Testing, நம்மாழ்வார்-அப்பர் சுவாமிகளின் பாடல்கள் எல்லாம் சேர்த்து, இந்த ஆக்கம் வரும்! கீழே அசை படம் பாருங்க! நல்லா இருக்கு!)

38 comments:

  1. முதல் ஆளா துண்டு போட்டு இடம் பிடிக்கிறேன்.

    மீ த ஃபர்ஸ்ட்டு...

    பதிவை படிக்கிறது இதுக்கு மேலதான் நெக்ஸ்ட்டு. :)

    ReplyDelete
  2. இன்னும் படிக்கல்ல, ஆனாலும் மீ த பஷ்ட்ன்னு மட்டும் சொல்லிட்டு அப்பறமா வரேன்.

    ReplyDelete
  3. அறிவியலாலும் அறிய முடியாத விஷயங்களில் கடவுள் ஒளிந்திருக்கிறார் என்று நம்ப வேண்டியதாக இருக்கிறது.

    நாம் இருக்கும் பிரபஞ்சத்தின் எல்லை எது. அது எவ்வளவு தொலைவில் இருக்கிறது. அந்த எல்லையை நாம் அடைந்து விட்டோம் என்றால் அதற்கு பிறகு என்ன இருக்கிறது.

    "கடவுள் இன்னும் சில சீட்டுக்கட்டு வித்தைகளை தன் சட்டை மடிப்பில் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறார்."

    இந்த உலகில் கண்டறியப்பட்ட அறிவியல் விதிகளையும தாண்டி தன்னளவிலான ஒரு பகடையை அவர் உருட்டுகிறார். (God throwing dice in the picture shown here.)

    ReplyDelete
  4. Superb. You stoped at good point.

    ReplyDelete
  5. உலகம் கடவுளின் பகடைக்காயா ?

    எதிர்காலத்தை நம்மால் கணிக்க முடியுமா. அது சிலகோட்பாடுகளுக்குள் அடங்கியதா இல்லை தன்னிச்சையானதா. பழங்காலத்தில் எதிர்காலம் என்பது தன்னிச்சையானதாகவே கருதப்பட்டது. வெள்ளம் நோய்கள் போன்றவை எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீர் திடீரென வந்து அலைக்கழிப்பவனவாய் இருந்த காலகட்டம். மக்கள் இவற்றால் தங்களை மிஞ்சிய ஒரு சக்தி இருப்பதாய் உணர இவை காரணம். எண்ணற்ற கடவுளர்கள் தோன்ற இவை ஒரு தூண்டுதலாய் இருந்தது எனலாம். எதிர் காலத்தில் என்ன நிகழும் என்ற பயமே கடவுளர்களை தொழுதலில் மனித இனத்தை கொண்டு தள்ளியது. மழை வேண்டி வெள்ளம் வராதிருக்க கடவுளர்க்கு பூஜைகள் பலிகள். மக்கள் தங்கள் வளமான எதிர்காலத்திற்காக கடவுளர்களிடம் நல்லெண்ண ஒப்பந்தம் போட முயன்றனர். கடவுளர்க்கு காணிக்கை அல்லது கப்பம் செலுத்துவது மூலம் தங்கள் காரியங்கள் நிறைவேறும் என்று கருதினர்.

    மெல்ல மக்கள் இந்த இயற்கை நிகழ்வுகளில் ஒரு ஒழுங்கு இருப்பதை கண்ணுற்றனர். இந்த ஒழுங்குகள் மிக தெளிவானவையாக வானத்தில் உலவும் கோள்களின் அடிப்படையில் இருந்தன. மெல்ல வானியல் ஆராய்ச்சி தொடங்கியது. 300 ஆண்டுகளுக்கு முன் நியூட்டன் கண்டறிந்து சொன்ன ஈர்ப்பு விசைத் தத்துவம் அனைத்து கோள்களுக்குமாய் பொருத்திப் பார்க்கப்பட்டது. வானியலை அடுத்து வாழ்வியலின் ஒவ்வொரு அங்கமும் அறிவியல் ரீதியான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் பட்டது.

    இவ்வாறாக அறிவியல் ரீதியாக கண்டறிதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் லாப்லாஸ். என்னவொரு கஷ்டம் என்றால் லாப்லாஸ் எழுதியிருக்கும் விதியை முற்றுமாய் ஒருமுறை படிப்பது என்பதே கடினம் என்னும்போது அதை புரிந்துகொள்வது என்பது அதைவிட கடினம். அவர் என்ன சொன்னார் என்றால் இந்த பிரபஞ்சத்தின் எந்த ஒரு பொருளுடைய இடம் மற்றும் அதன் வேகம் இரண்டும் தெரிந்தால் அதைக்கொண்டு அப்பொருளின் கடந்த கால நிலையையோ அல்லது எதிர்காலத்தையோ அறிவியல் ரீதியாக கணிக்கலாம். நெப்போலியன் ஒருமுறை லாப்லாசை கேட்டார், "உங்களுடைய இந்த அமைப்பில் கடவுள் எங்கிருக்கிறார்". லாப்லாஸ் சொன்னார். "எனது ஆராய்ச்சியில் கடவுள் என்ற கருதுகோளிற்கு இடமில்லை.". லாப்லாஸ் கடவுள் இல்லையென்று சொல்லவில்லை. அவர் தம் அறிவியல் ஆராய்ச்சியில் கடவுள் தேவையில்லாமல் இடையில் வந்து தமது அறிவியல் விதிகளை தகர்ப்பதை விரும்பவில்லை. இதுதான் ஒவ்வொரு அறிவியலாளரின் நிலையாகவும் இருக்கும். ஏதோ ஒரு சக்திதான் எல்லாவற்றையும் இயக்குகிறது என்று சொல்லிக்கொண்டு இருந்தால் அறிவியல் விதிகள் அர்த்தமற்றுப்போகும் என்பதால் கடவுள் கையைகட்டிக்கொண்டு சும்மா இருப்பதையே அவர்கள் விரும்புவார்கள்.

    பிரபஞ்சத்தின் நிலை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் என்னவாக இருந்தது என்று அறுதியிடுவது மற்றகாலகட்டங்களில் அது என்னவாக இருக்கும் என்று அறுதியிட ஏதுவானதாக இருக்கும் என்பது லாப்லாசின் காலத்தில் இருந்து வளர்ந்து வரும் அறிவியல் நோக்காகும். அதாவது அறிவியல் பூர்வமாக எதிர்காலத்தை கணிக்கலாம். ஆனால் நடைமுறையில் எதிர்காலத்தை தீர்மானிப்பது என்பது குழப்பமான கணக்கீடுகளையும் விதிகளையும் கொண்டது. ஜீராசிக் பார்க் படம் பார்த்திருப்பீர்கள். உலகின் ஒருபகுதியில் விழுந்த விண்கள் பலபகுதிகளிலும் வாழ்ந்து டைனேசர்களை முடிவுக்கு கொண்டு வந்ததென. இதுபோன்ற கணக்கில் வராத காரணிகளே கணக்கீடுகளின் நம்பகத்தன்மையை மாற்றுகின்றன. ஏதோ ஒரு பூங்காவில் ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு மழையை கொண்டு வரலாம். ஆனால் மறுமுறை அதே பட்டாம்பூச்சியின் சிறகசைப்பில் வேறு நிகழ்வு ஏற்பட்டு மழைக்கு பதில் வேறுவிதமான காலநிலை வரலாம். இதனால்தான் நமது வானிலை அறிவிப்புகளின நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.
    அறிவியலால் கண்டறிய முடியாத இந்த நம்பகமற்றத் தன்மைகளே கடவுளின் இருப்பை தொடர்ந்து நிலைநிறுத்துகின்றன.

    (அறிவியல் உரை - மொழிபெயர்ப்பு by araiblade)

    ReplyDelete
  6. இதை ஏற்கனவே படித்திருக்கேன்..கலந்து கட்டி கொடுத்திருக்கிறீர்கள்.
    நன்றாக இருக்கு.

    ReplyDelete
  7. நாளைக்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

    ReplyDelete
  8. அரை பிளேடு - செம விளக்கம். நன்றாக ரசித்தேன்.
    நன்றி.

    ReplyDelete
  9. Some Quotes from Albert Einstein

    When the solution is simple, God is answering.

    I want to know how God created this world. I am not interested in this or that phenomenon, in the spectrum of this or that element. I want to know His thoughts; the rest are details.

    I maintain that cosmic religiousness is the strongest and most noble driving force of scientific research.

    When you are courting a nice girl an hour seems like a second. When you sit on a red-hot cinder a second seems like an hour. That's relativity.

    One reason why mathematics enjoys special esteem, above all other sciences, is that its laws are absolutely certain and indisputable, while those of other sciences are to some extent debatable and in constant danger of being overthrown by newly discovered facts.

    ReplyDelete
  10. தலைவர் அரைபிளேடு பதிவாப் போட வேண்டிய பெரும் விஷயங்களை, வெகு அசால்ட்டா பின்னூட்டமாப் போடுவதைப் பார்க்கும் போது அரைபிளேடு தான் ஐன்ஸ்ட்டீனின் அவதாரமோ என்று அடியேன் மனம் சஞ்-ஜல்லிக்கிறது :-))

    தல
    பல அருமையான மெய்யுணர்வு கலெக்சனை மொழி பெயர்த்து வச்சிருக்கீங்க போல! அமர்க்களம்!!

    ReplyDelete
  11. ஒரு தீவிலே ஒரு குழந்தை வளர்கிறது.
    அங்குள்ளதை வைத்து அதன் திறமையால் சாப்பிட்டு விளையாடி வாழ்கிறது.

    அதனிடம் கேட்டால்(சைகையில் தான்)கடவுளா,தெரியாது என்கிறது.

    தெரியாததுதான் கடவுளா?
    புரியாததுதான் கடவுளா?

    இயற்கை என்று சொன்னால் போதாதா?

    GOD IS THE NOBLEST CREATION OF MAN-
    Robert G Ingersoll.

    ReplyDelete
  12. தல சுத்துது. ஆனா நாத்திகம் பேசறவங்களுக்கு ஆப்பு வைக்கப் போறீங்க போலத் தெரியுது. :))

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. கோவி.கண்ணன் said...
    //இலவசக்கொத்தனார் said...
    தல சுத்துது. ஆனா நாத்திகம் பேசறவங்களுக்கு ஆப்பு வைக்கப் போறீங்க போலத் தெரியுது. :))
    //

    இகொ சார்,

    இது பழைய கதை என்று ஏற்கனவே சொல்லிட்டார், இந்த கதை சக்சஸ் புல்லாக இருந்திருந்தால் எல்லோரும் ஆத்திகராக மாறி இருப்பாங்க.

    :)

    தூணிலும் துரும்பிலும் இருந்த கடவுள், தட் ஈஸ் மிஸ்டர் நரச்சிம்மர், இரண்யகசுபுவின் உடலில் கடவுள் இல்லை ? வயிற்றைக்கிழித்து சாகடித்தது ஏன் ?

    தத்துவம் தாறுமாறாக முரண்படவில்லையா ?

    ReplyDelete
  16. all the Science concepts are based on numbers (maths),and all numbers are the manipulation of 1-9.

    read the following
    At the hyde park meeting in new york on 18.9.1944 the us and british leadres agreed that the atomic bomb might be used againts japan.

    Hiroshima bombed on 6.8.1945

    Nagasaki bombed on 9.8.1945

    and they were planned on 18.9.1944

    make all the numbers to single digit
    ie
    hiroshima 6+8+19(1+9+4+5)=6
    nagasaki 9+8+19(1+9+4+5)=9
    planned on 9(1+8)+9+9(1+9+4+4)=9

    science says ,There are patterns in the natural world, and they can be understood by careful observation and study.

    patterns are also includes human behavior. thats why the human ego which brings destruction having a pattern or the manipulation of numbers.

    thats why religion says this
    revelation 13.18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
    Here is wisdom. Let him that hath understanding count the number of the beast: for it is the number of a man; and his number is Six hundred threescore and six.
    - bible
    666=6+6+6=18=9

    so knowing the laws is the knowing the god
    other than that nothing

    ReplyDelete
  17. @கோவி அண்ணா
    எதுக்கு கஷ்டப்பட்டு போட்ட பின்னூட்டத்தை எல்லாம் அழிச்சிக்கிறீங்க? எதுவானாலும் கருத்தாக்கம் தானே! தாராளமாச் சொல்லுங்க!

    @கொத்ஸ்
    நாத்திக ஆப்பு-ஆத்திக சூப்பு எல்லாம் ஒன்னும் இல்ல!
    அவரவர் தமதம அறிவறி வகைவகை-ன்னு நாளைக்குச் சொல்லுதேன்! :-)

    மீண்டும் @கோவி அண்ணா
    கதையைப் படிச்சா ஆத்திகர் எல்லாம் ஆக முடியாது! ஆத்திகரை இன்னும் எப்படி எல்லாம் கேள்வி கேட்கலாம்-ன்னு அறிவை வளர்த்துக் கொள்ள வேணும்னா கதைகள் உதவும்!:-)

    மீண்டும் மீண்டும் @கோவி அண்ணா
    //தூணிலும் துரும்பிலும் இருந்த கடவுள், தட் ஈஸ் மிஸ்டர் நரச்சிம்மர், இரண்யகசுபுவின் உடலில் கடவுள் இல்லை?//

    காற்று ரூம் ஃபுல்லா இருந்தாலும், ஃபேனைப் போட்டா மட்டும் நல்லா சுத்துது! அதான்! :-)

    தூணிலும் துரும்பிலும் இருந்த மிஸஸ் & மிஸ்டர் நரசிம்மர், இரண்யகசிபுவின் உடலிலும் இருந்தாரு!
    ஆனா ஹிஸ் எக்செலன்சி மிஸ்டர் இரண்யகசிபு ஸ்விட்சைப் போடாம, அங்க இருக்காரா இங்க இருக்காரா-னு கேட்டுக் கிட்டே இருந்தாரா?

    அதான் இந்தப் பய புள்ள உள்ளார இருந்தா தேடவே மாட்டான்! பேசாம வெளிய போய் உக்காந்தாலாச்சும் பாக்குறான்னான்னு பார்ப்போம் தான் தூணில போய் உக்காந்துக்கிட்டாரு!

    அவனும் எங்க பாக்க ஆசைப்பட்டானோ அங்கயே பாத்துக்கிட்டான்!

    ReplyDelete
  18. //வயிற்றைக்கிழித்து சாகடித்தது ஏன் ?//

    நகம் கடிப்பீங்களா?
    உங்க நகம் அதான் கடிச்சிக்கிறீங்க!
    இரண்யனுக்குள்ள தான் இறைவன் இருக்கானே நகமும் சதையுமாய்!
    அதான் இறைவன் தன் நகத்தை தானே கடிச்சிக்கிட்டான் :-))

    சீரியசா:
    ஏன்னா அது தான் இரணியகசிபுவின் விருப்பம்!
    அப்படியும் சாகக் கூடாது, இப்படியும் சாகக் கூடாதுன்னு கேட்டுகிட்டாச்சி! எப்ப எப்படித் தான் சாக முடியும்?

    எப்படியும் ஒரு நாள் எல்லாமே தளர்ந்து விட்டது, இனி ஒன்னுமே முடியலை, ஆனா சாக மட்டும் முடியாது...ஏன்னா வரம் வாங்கியாச்சு...அப்போ என்ன பண்ணறுது?...

    சரி மீண்டும் தவம் பண்ண வேண்டியது தான்...இப்போ என்ன வரம் கேக்குறது? அப்பத் தெரியாத்தனமா வரம் வாங்கிட்டேன்! இப்ப எப்படியாவது செத்தா பரவாயில்லை-ன்னு தோனுது! அதுக்கு ஏதாச்சும் வரம் கொடு-ன்னு தான் பாவம் கேட்டிருப்பான்! :-)))

    அவனுக்கு ஏற்கனவே கொடுத்ததையும் காப்பாத்தணும், இப்ப வேண்டுறதையும் கொடுக்கணும், முன்னுக்குப் பின் முரண் இல்லாம! அதான் அவன் விருப்பப்படியே அமைந்தது!

    கண்ணாடி முன்னாடி போய் நின்னா, எது நிக்குதோ அதைத் தான் காட்டும்!
    அசிங்கமா ட்ரெஸ் போட்டுக்கினு நின்னா அசிங்கமாத் தான் தெரியும்.
    ஒழுங்கா போய் நின்னா ஒழுங்காத் தெரிவோம்.

    அசிங்கமா காட்டுவது கண்ணாடியின் பிழை அல்லவே!
    எதிரியாப் போய் கண்ணாடி முன் நின்னா எதிரியாத் தெரியுது!
    பக்தனா போய் கண்ணாடி முன் நின்னா பக்தனாத் தெரியுது!
    எப்படித் தெரியுதோ, அப்படியே ஆகி விட்டான்!

    ReplyDelete
  19. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    @கோவி அண்ணா
    எதுக்கு கஷ்டப்பட்டு போட்ட பின்னூட்டத்தை எல்லாம் அழிச்சிக்கிறீங்க? எதுவானாலும் கருத்தாக்கம் தானே! தாராளமாச் சொல்லுங்க!

    //

    ரவி,

    ஒரே பின்னூட்டம் தான், மூன்று முறை வெளியாகிவிட்டது, முதலி இருந்த ஒன்றில் சிறு எழுத்துப்பிழை. மற்றபடி எல்லாம் ஒரே கருத்துதான். உங்களுக்கு பின்னூட்ட மின் அஞ்சல் வந்திருக்கும், அதில் பாருங்கள் தெரியும்.

    //அவனுக்கு ஏற்கனவே கொடுத்ததையும் காப்பாத்தணும், இப்ப வேண்டுறதையும் கொடுக்கணும், முன்னுக்குப் பின் முரண் இல்லாம! அதான் அவன் விருப்பப்படியே அமைந்தது!
    //

    வரம் கொடுத்த உடனேயே அவன் வயிற்றை கலக்குவது போல் நீ இப்படித்தான் சாகப்போகிறாய் என்று சொல்லி இருந்தால் அவன் திருந்தி இருப்பான். அவனுக்கு சான்ஸ் கொடுக்காமல் நரசிம்ம அவதாரம் நடக்க வேண்டும் என்று தன்நலமாக இருந்துவிட்டார் பகவான் என்று குற்றம் சாட்டுகிறேன்.
    :)

    ReplyDelete
  20. (மொத்த வகுப்பே சீட்டின் நுனிக்கு வருகிறது! நாளை தொடர்ந்து, நிறையும்...)

    எந்த இடத்தில் தொடரும் என்று போட வேண்டும் என்பதை அறிந்து போட்டிருக்கிறீர்கள் சுவாமி!

    முதல் பின்னூட்டத்தைப் பாருங்கள்!

    ReplyDelete
  21. //
    கூர்தல் அறக் கொள்கையை (Theory of Evolution)!
    //
    ஐன்ஸ்டீன் Theory of Evolution-ஆ சொன்னாரு???????

    பழய மேட்டர் தான் என்றாலும் தங்கள் நடை மற்றும் பில்டப் ரசிக்கும்படியாக இருக்கிறது!

    ReplyDelete
  22. //இல்ல அவர் கிட்ட அவ்ளோ சக்தி இல்லையா? அவரு பெருமாளா? வெறும் ஆளா?"
    //

    பாருங்க, இங்கயும் பெருமாள் வராரு, இதுலயாவது முருகன் வரகூடாதா? :p

    அரை பிளேடு அண்ணா அடிச்சு ஆடறாரு போலிருக்கே! வெரிகுட், வெரிகுட். :))

    ReplyDelete
  23. ஏற்ககெனவே படித்த கதைதான். உங்கள் மொழிமாற்றமும் அருமை. நல்ல கதையாக விவரித்து இருக்கிறீர்கள்.

    நான் படித்தது thermodynamics பற்றிய உரையாடல் என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
  24. //நமது வானிலை அறிவிப்புகளின நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.
    //

    அவ்வளவு எளிதாக அறிவியலின் நம்பகத்தன்மையை குறைத்து விட முடியாது. http://wwww.weather.com போன்ற தளங்களின் வானிலை அறிவிப்புகள் கிட்டதட்ட நூறு சதவீதம் துல்லியமாகவே இருக்கின்றன.

    "என்ன குடை எடுத்திட்டு போறீங்க..." "வானிலை அறிவிப்புகள்ல இன்னிக்கு நல்ல வெயில்னு சொன்னாங்க. எதுக்கு ரிஸ்க்னு குடை எடுத்திட்டு போறேன்" போன்ற ஜோக்குகள் வெறும் ஜோக்குகள் மட்டுமாகத்தான் தொடரும்.

    ஆழிப்பேரலை வந்த போதும் அதனை கண்டுபிடித்து எச்சரிக்கை வந்தது என்றும் ஆனால் அதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க தெரியாமல் இருந்துவிட்டார்கள் என்றும் செய்திகள் வந்தன.

    Big Bang theory-உம், பிரளயம் பற்றிய விவரணமும் ஒன்றுக்கொன்று மறுக்கவில்லையே.

    Darwin-ன் evolution கருத்தாக்கத்திற்க்கும், தசாவதாரக் கதைகளுக்கும் இடையே ஒற்றுமையும் நிறைய இருக்கதான் செய்கின்றன.

    ஏன்... 16ம் நூற்றாண்டு வரை பூமியை சூரியன் சுற்றிக் கொண்டிருந்தது என்று நம்பியவர்கள் சாதாரணர்கள் மட்டுமா? அன்றைய அறிவியல் அறிஞர்களும்தானே...

    மனிதனின் தேடுதல் இயல்பானது. கற்காலத்திலிருந்து தற்காலம் வரை மனிதனின் தேடலின் விஸ்தீரணம் மிகப் பெரியது. புறத்தில் தேடத் தேட அறிவியல் வளர்கிறது. அகத்தில் தேடத் தேட ஆன்மீகம் வளர்கிறது. ஒன்று மற்றொன்றை எப்பொழுதும் வெற்றி கொள்ள முடியாது. ஆனால் இவைகளின் ஒற்றுமை / வேற்றுமைகளே மிக்க சுவாரசியமானவை.

    ReplyDelete
  25. //ambi said...
    //இல்ல அவர் கிட்ட அவ்ளோ சக்தி இல்லையா? அவரு பெருமாளா? வெறும் ஆளா?"
    //
    பாருங்க, இங்கயும் பெருமாள் வராரு, இதுலயாவது முருகன் வரகூடாதா? :p//

    எலே அம்பி
    அவரு முருகனா, ஒன்னுமில்லாக் குறுகனா-ன்னு எழுதினேன்னு வையி, அப்போ இதே வாயி என்ன பேசும்? கற்பனை பண்ணி சொல்லுப்பா என் ராசா...:-))

    அதான் இங்க திட்டறதுக்கு பெருமாளைப் போட்டேன்! :-))
    நேரம்-டா சாமீஈஈஈஈஈஈ!

    ReplyDelete
  26. //அவரு முருகனா, ஒன்னுமில்லாக் குறுகனா-ன்னு எழுதினேன்னு வையி//

    ஓ! இப்படி எழுதற எண்ணம் வேற இருக்கா உங்களுக்கு? ஜிரா கவனிக்கவும் :p

    ReplyDelete
  27. நல்லதொரு டாப்பிக். அழகா கையாண்டிருக்கீங்க. தொடருங்கள். நன்றி.

    ReplyDelete
  28. மனிசன கடவுள் படச்சானா? இல்ல கடவுள மனிசன் படச்சானா? கடவுள் இருப்பதாய் வைத்துகொள்வோம். அப்படி என்ன அவருக்கு ஒரு ஈகோ? சர்வ சக்தி படச்ச அவரு நம்ம எல்லாருக்கும் ஒரு விசிட் தரலாமே!

    மனிசன் தப்பு செய்யாம இருக்கனுக்கனும்கிறதுக்காக கடவுள படச்சு பயம் காட்டினான். இப்ப எல்லாரும் ரொம்ப நல்லவங்க மாதிரி.... போங்க சார் நீங்களும் உங்க கடவுளும்... என்னை பொருத்தவரை "நாம எப்படியோ நமக்கு அப்படியே" அம்புட்டுதான். தீதும் நன்றும் பிறர் தர வாரா...

    ReplyDelete
  29. சிறில் அண்ணாச்சி
    உங்களுக்குப் பிடிச்சி இருந்திச்சின்னா ரொம்ப சந்தோசம் தான்!
    :-))

    ReplyDelete
  30. //அப்பு சிவா said...
    தீதும் நன்றும் பிறர் தர வாரா...//

    அப்ப இத்தினி தீது/நன்று எப்படி வருது?
    சொல்லுங்க அப்பு சிவா?

    பாபர் மசூதி இடிச்சது பிறர் தர வாரா?
    கோத்ரா எரிப்பு பிறர் தர வாரா?
    சாதி கொடுமைகள் பிறர் தர வாரா?
    தமிழ் உள்ளே வர முடியாதது பிறர் தர வாரா?
    காஷ்மீர் கொடுமை பிறர் தர வாரா?
    ஈழத்தில் சகோதரர்கள் துன்புறுவது பிறர் தர வாரா?

    இல்லீயா?

    பிறர் தர வாரா-ன்னா என்னன்னு அடியேனுக்கு தமிழ் அறிஞர்கள் சொல்லுங்கப்பா!

    ReplyDelete
  31. ரவி,
    நரசிங்கம் வந்ததும் ,அவனை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு
    ஹிரணியகசிபுவின் மனதில
    எங்கயாவது தான் இருக்கோமா என்று தேடிவிட்டுத் தான் ,அவனை அழித்தார்..

    ReplyDelete
  32. ரவி,
    நரசிங்கம் வந்ததும் ,அவனை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு
    ஹிரணியகசிபுவின் மனதில
    எங்கயாவது தான் இருக்கோமா என்று தேடிவிட்டுத் தான் ,அவனை அழித்தார்..

    ReplyDelete
  33. Theory of Evolution was proposed by Charles Darwin. I guess you meant to cite Theory of Relativity by Einstein. Kindly correct the post!

    I feel that it is just too atrocious to talk about Theory of Relativity and existence of an imaginary entity - God. The argument in the second part was not convincing at all.

    How can someone use all the benefits of Science (including your own computer, your ability to post and the internet) and argue against Science? Just plain ridiculous. Wish you could resort to a non-preaching mode.

    ReplyDelete
  34. ஆண்டவனுக்கு அப்புறம் போகலாம். முதல்ல இதில் வரும் அறிவியலையே எடுத்துக்கொள்வோம். பிழையாக உள்ளதே நண்பரே...


    ஹைட்ரஜனின் நிறையை மட்டும் கணக்கிட்டால் போதுமா? ஆக்ஸிஜனில் மட்டும் சக்தி இல்லையா என்ன? ஆகவே,

    1 கிலோ தண்ணீரில் உள்ள சக்தியானது

    1 x 3 x 10^8 x 3 x 10^8 = 9 x 10^16 joule

    தண்ணீரில் உள்ள சக்திய ரொம்பக் கொறச்சு 'எடை போட்டு'ட்டீங்களே.

    2ம் பாகம் படித்துவிட்டு அதற்கு மறுமொழியிடுகிறேன்...

    ReplyDelete
  35. சரவணன் சொல்வதே சரி.

    இங்கு ஒரு விளக்கம் சொல்லவேண்டும். இங்கு சொல்லப்படும் ஒரு கிலோ என்பது ஒரு கிலோ எடை அல்ல. அது ஒரு கிலோ பொருட்திணிவு. அதாவது kilogram-force அல்ல kilogram-mass

    ReplyDelete
  36. //இங்கு ஒரு விளக்கம் சொல்லவேண்டும். இங்கு சொல்லப்படும் ஒரு கிலோ என்பது ஒரு கிலோ எடை அல்ல. அது ஒரு கிலோ பொருட்திணிவு. அதாவது kilogram-force அல்ல kilogram-mass
    //

    பொருத்திணிவு என்ற கடினமான சொல்லால் நீங்கள் குறிப்பிடும் விஷயத்தையே 'நிறை' என்ற எளிய வார்த்தையால் பாடநூல்கள் குறிப்பிடுகின்றன. தரப்படுத்தப்பட்ட எளிய சொல் இருக்க அருஞ்சொல் ஏன்?

    Mass = நிறை; அலகு = kg (kilogram)

    Weight = எடை; அலகு = நியூட்டன் மற்றும் kg-wt. (kilogram-weight)

    kilogram-force, kilogram-mass என்பன தரப்படுத்தப்பட்ட கலைச்சொற்கள் அல்ல. அவற்றை நான் எந்தப்புத்தகத்திலும் பார்த்ததில்லை.

    கலைச்சொற்களைக் கையாளும்போது மிகுந்த கவனம் தேவை என்பதாலேயே இதனைக் குறிப்பிடுகிறேன்.

    ReplyDelete
  37. //Theory of Evolution was proposed by Charles Darwin. I guess you meant to cite Theory of Relativity by Einstein. Kindly correct the post!

    I feel that it is just too atrocious to talk about Theory of Relativity and existence of an imaginary entity - God. The argument in the second part was not convincing at all.

    How can someone use all the benefits of Science (including your own computer, your ability to post and the internet) and argue against Science? Just plain ridiculous. Wish you could resort to a non-preaching mode.//

    Dear ABN
    Why don't you study Hagelin's work
    and review his contibution to Physics!
    http://hagelin.org/about.html

    You seem to be the one in a preaching mode telling someone what to do! There are many
    sites in the net that may conform to your standards. If there isn't
    any go ahead and start one!
    Even the white man is willing to
    invest his time in search of truth in our neighborhood. We the brown ones, ignore the treasure trove in our own backyard!

    ReplyDelete
  38. சரவணன், நிறை என்ற சொல் சரிதான். நான் படித்தபோது (1974) பொருட்திணிவு என்று சொல்லப்பட்டது.

    Weight மற்றும் Mass கலந்து வரும் கணக்குகளில் வேறுபாடு காட்ட எடையை kgf என்று குறிப்பது நான் படித்தபோது வழக்கிலிருந்தது. இந்த அலகை kilogramforce என்று படிக்கவேண்டும். தற்போது kgf என்பதற்கு பதிலாக kg-wt என்று குறிக்கிறார்கள் போலிருக்கிறது.

    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP