Monday, March 17, 2008

***குழந்தைப்பருவ விளம்பரங்கள்! போட்டுடைத்த டாக்டர் கலைஞர்!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம நண்பர் கப்பி, டிடி-1 & டிடி-2 பத்தி ஒரு பதிவு போட்டு நல்லாவே கொசுவத்தி சுத்தி இருந்தாரு!
அப்பவே கொசுவத்தி சுத்தும் ஆசை எனக்கும் வந்துருச்சி! இருக்காதா பின்னே! கோயில்ல கொசுக்கடி ஜாஸ்தியா இருக்குன்னு, அர்ச்சனைக் கூடைக்குள்ளாற டார்ட்டாய்ஸை வச்சி, பெருமாளுக்கே கொசுவத்தி கொடுத்த பச்சைப் புள்ளை நானு! அதுக்குச் செமத்தியா அடி வாங்குனது தனிக் கதை!

விசயத்துக்கு வருவோம்!
உங்கள் குழந்தைப் பருவ/பள்ளிக் காலத் தொலைக்காட்சி விளம்பரங்கள் எல்லாம் உங்களுக்கு நினைவிருக்கா மக்களே?
இன்னிக்கும் சில விளம்பரங்கள் எனக்கு அச்சடிச்சி வைச்சாப் போல ஞாபகம் இருக்கு! அதுவும் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு், வீட்டில் அடம் பிடிச்சி வாங்கின ஐட்டங்கள் இன்னும் நல்லாவே ஞாபகம் இருக்கு!
அதுல முக்கியமானது லிரில் சோப்பு! லிரில் சோப்புக்கு ஏன் அடம் பிடிச்சேன்-னு பதிவின் நடுவில் சொல்லுறேன்! :-)

நாங்க அப்ப சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தானா தெருவில், வாடகை வீட்டில் குடிபுகுந்து இருந்தோம்! சமையலறையும் சேர்த்து மொத்தம் மூனே அறை தான்! வீட்டில் ஒரு இத்துப் போன வெஸ்டன் டிவி - இப்படிச் சொன்னா அப்பாவுக்கு இப்பவும் கோவம் வரும்! :-)
பின்னே என்னவாம்! படிப்பு கெட்டுரும், படிப்பு கெட்டுரும்-ன்னு, புதுசா வந்த சேட்டிலைட் டிவி இணைப்பெல்லாம் கொடுக்கவே மாட்டாரு! ஒன்லி அழுமூஞ்சி டிடி-1 & டிடி-மெட்ரோ தான்!
ஆனா, உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா-ங்கிற கதையா, அதையும் டாக்டர் கலைஞர் வந்து கெடுத்தாரு! :-)


தங்கச்சி வேற அப்பாவுக்கு ரொம்பவே சப்போர்ட்டு! ஆயிரம் துர்கா பொண்ணுக்கு அவ சமானம்-ன்னா கற்பனை பண்ணிப் பாத்துக்குங்க! அவ படிக்கும் போதோ, வீட்டுப் பாடம் செய்யும் போதோ, ஒரு துளி சத்தம் கூட வரக்கூடாது!

அந்தச் சமயம் பார்த்து தான் ஜான்னி சாக்கோ & தி ஜெயன்ட் ரோபோ (Johnny Sakko & The Giant Robot) -ன்னு ஒரு சீரியல் போடுவாங்க! ஒரு பொடிப் பையனும், ஜெயன்ட் ரோபோட்டும் கூட்டுச் சேர்ந்து ஊரையே காப்பாத்தறது தான் கதை!
அதுல வர "அறிவியல் பூர்வமான" டிஷ்யூம் டிஷ்யூம் பார்த்துவிட்டு ரொம்பவே உற்சாகம் ஆயிருவேன்! அப்பப்ப விசில் கூட பறக்கும்!

வாய்ப்பு கிடைச்சா முழு சீரியலும் டிவிடி-யில் பாருங்க மக்கா! உங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும்! இப்போதைக்கு இந்தாங்க கொசுறு!



கொஞ்சம் வால்யூமைக் கூட்டி வச்சி என்சாய் பண்ணேன்-ங்கிற ஒரே காரணத்துக்காக, ஒரு வாரம் டிவி கட்! இப்படி அடக்குமுறை, அராஜகம், மிரட்டல், மந்திரம் எல்லாம் கண்டு வளர்ந்த ஒரு அப்பாவிச் சிறுவன் தாங்க நானு!

அன்று அப்பாவிடம் போட்டுக் கொடுத்த அந்தப் புண்ணியவதி,
இன்று...அமெரிக்காவில் இருந்து சென்னை வரும் போது, இன்னன்ன வாங்கிக்கிட்டு வரணும்-னு ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு லிஸ்ட்டு அனுப்பிச்சி இருக்கா!

நீங்களே சொல்லுங்க, என்ன, வாங்கிகிட்டுப் போவலாமா, வேணாமா? :-)


தொலைக்காட்சியில் (தூர்தர்ஷனில்) இந்தித் திணிப்பு பண்ணுறாங்க-ன்னு அப்போ ஒரு போராட்டம் பண்ணாங்கப்பா திமுக காரவுங்க! அதுல கடைசிக் கட்டம் தான், டிவி உடைப்புப் போராட்டம்! எங்க தானா தெருவுல தான் மேடை போட்டு, அதுக்கு ஏற்பாடு எல்லாம் பண்ணாங்க!

கலைஞர் அப்போ எதிர்க்கட்சித் தலைவர்-ன்னு நினைக்கிறேன்! அப்போ தான் அவரை மொத மொதல்ல நேராப் பாக்குறேன்! மஞ்சாத் துண்டு எல்லாம் அப்போ கிடையாது! ரொம்பவும் எளிமையாத் தான் இருந்தாரு! போலீஸ் கெடுபிடி எல்லாம் ஒன்னுமே இல்லை!
பேராசிரியர் அன்பழகன், எங்க ஏரியா மூக்காத்தாள் தெருவிலேயே குடியிருந்த நாஞ்சில் மனோகரன்-ன்னு எல்லாரும் மேடையில்! மேடையின் ஓரமா ஒரு டிவிப் பொட்டி!

கலைஞர் வந்தாரு! ஒரு பெரிய சொற்பொழிவு தந்தாரு! கடைசியில் ஒரு சின்ன சுத்தியை வச்சி டிவிப் பொட்டியின் கண்ணாடியை லைட்டாத் தட்டுனாரு! ஒரே விசில் முழக்கம்! இந்தி ஒழிக என்ற முழக்கம்!!
அவரு அந்தாண்ட போனது தான் தாமதம்! கரைவேட்டி கட்டிய சில பிரமுகர்கள் வந்து அந்த டிவியை ஒரு கும்மு கும்மினாங்க பாருங்க!
பச்சைப் புள்ள எனக்கே இந்தி எதிர்ப்பு உணர்வு குபுக்குன்னு ஏறிக்கிச்சு!:-)

ஆனா அதுக்கப்பறம் தான் ஆப்பே!
எங்கப்பா திமுகவுக்கு ஓட்டுப் போடறவராச்சா! கலைஞரே டிவிப் பொட்டிய ஒடைச்சிட்டாரு! இனிமே வீட்டுல எதுக்கு அனாவசியமா டிவி? வீட்டுல சின்னப் பொண்ணு படிப்பு வேற கெடுதுன்னு சொல்லி, இருந்த ஒரே இத்துப் போன டிவியையும் தூக்கி பாஸ்கர் அண்ணனுக்கு கொடுத்துட்டாரு!
அம்புட்டு தான்! வந்துச்சு பாருங்க, வாழ்க்கையில் எனக்கு முதல் கோபம்! :-)

பழனியாண்டவர் அவதாரம் எடுத்தேன்! வீடே ஒரு ரகளை ஆச்சு!
உண்ணாவிரதம் எல்லாம் இருந்து கடைசீலே அம்மா செஞ்ச பரிந்துரையில் போன டிவி மீண்டும் வீட்டுக்கே வந்து சேர்ந்துச்சு! ஆனால் பல வித கண்டிஷன்களோட! அதுல ஒரு முக்கியமான கண்டிஷன் மாலை 6:00-9:00 டிவியைச் சத்தமில்லாம பாக்கணும்!
ஏற்கனவே டிடி நிகழ்ச்சி எல்லாம் அப்படித் தான் இருக்கும்! இதுல சத்தமில்லாமப் பார்க்கணும்னா என்ன விளையாட்டா?

அப்ப ஆரம்பிச்சது தாங்க இந்த வெளம்பர மோகம்! கையில் புத்தகத்தை வச்சிக்கிட்டு, டிவி கிட்டே போய் உட்கார்ந்துப்பேன்! கொஞ்சமா வால்யூம் வச்சி வச்சி பார்ப்பேன்! தங்கச்சி கிட்ட இருந்து சவுண்டு வந்தா மறுபடியும் குறைச்சிருவேன்!
நிகழ்ச்சியை விட விளம்பரங்கள் தான் சத்தமாகவும், சூடாகவும், சுவையாகவும் இருக்கும்! சில விளம்பரங்கள் இந்தியிலும் வரும்! தமிழ்நாட்டுல எதுக்குடா இந்தி வெளம்பரம்-ன்னு கேட்க மனசு துடிக்கும்!
ஆனால் கலைஞர் எங்க வீட்டு டிவிக்கும் எனக்கும் செஞ்ச அந்தக் கொடுமையை நினைக்கும் போது, மனசு மாறிடும்! வெளம்பரங்களுக்கு மொழியே கிடையாது-ன்னு சமாதானம் சொல்லிக்கிட்டு தொடர்ந்து பார்ப்பேன்! :-)

இதோ என்னைக் கவர்ந்த அந்த கரிசல் காட்டு விளம்பரங்கள்!
நீங்களும் இதை எல்லாம் பார்த்திருக்கீங்களா? புடிச்சிருந்ததா-ன்னு சொல்லுங்க!


நட்ராஜ் பென்சில்!
பென்சில்களுக்கு இடையே ஒட்டப் பந்தயம்...நட்ராஜ் பென்சில் தவிர எல்லாப் பென்சிலுக்கும் பாதியிலேயே மூக்கு ஒடைஞ்சிரும்! கடைசீல நட்ராஜ் இஸ் த வின்னர்!
(நட்ராஜ் ஜியாமெட்ரி பாக்சும் அப்போ ரொம்ப ஃபேமஸ்! கேமலின் பாக்ஸ் விலை அதிகம்! நட்ராஜ் தான் ஏழைக்கேத்த எள்ளுருண்டை! நீங்க எந்த ஜியாமெட்ரி பாக்ஸ் வச்சிருந்தீங்க மக்கா?)




லிரில் சோப்பு
இந்தச் சோப்பு வெளம்பரத்தைப் பார்த்து சின்ன வயசுலேயே கெட்டுப் போன பையன்களில் "அடியேனும்" ஒருவன்! :-)
சரி வுடுங்க! அதெல்லாம் கலைக்கண்ணோட பார்க்கணும்!

இதுல அவங்க அருவியில் குளிக்கும் போது வரும் ஒரு புத்துணர்ச்சி இருக்கே! அதுவும் சினிமாத் தியேட்டரில், பெரிய திரையில் இந்த வெளம்பரத்தைப் பார்க்கணும்! யப்பா...நாமளே குளிச்சி முடிச்ச எஃபெக்டு குடுத்துரும்!
வீடே லைஃப்-பாயில் இருந்து ஹமாமுக்கு மாறினாலும், நான் மட்டும் அழுது அடம் பிடிச்சி, லிரில் மட்டுமே தொடர்ந்து போட்டுக்கிட்டு இருந்தேன்.




கோல்ட் ஸ்பாட் - தி ஜிங் திங்!
நான் சின்ன புள்ளையா இருக்க சொல்லவே வைச்ச கண்ணு வாங்காம பார்க்கும் வெளம்பரங்களில் இதுவும் ஒன்னு! அதுல அந்த யக்கா ரொம்பவே அழகா இருப்பாய்ங்க! அதுலயும் ஸ்டைலா ஸ்கேட்டிங் பண்ணிக்கிட்டு வரும் அழகே அழகு! :-)

அப்ப தான் ஸ்கேட்டிங் கனவுகள் எனக்கு ஆரம்பிச்சுது! தில்லு முல்லு படத்துல தலைவர் தங்கச்ச்சி ஸ்கேட்டிங் பண்ணும்! அப்பறம் இங்க நியூயார்க் வந்த பொறவு இன்னொரு காட்சி! பல பேரு, பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஸ்கேட்டிங் பண்ணிக்கிட்டே தான் ஆபீஸ் போறாங்கப்பா!




விக்ஸ் - தொண்டையில் கிச் கிச்!
திஸ் இஸ் ஒன்லி ஃபார் குட்டீஸ்! ஆனா எனக்கு அந்தப் பாட்டு ரொம்ப புடிக்கும்!




சிந்தால் சோப்பு
சாரி சிந்தால்! லிரில் இஸ் த பெஷ்டு! :-) அர்விந்த் சாமி நடிச்சி இருப்பாரு, இதுலயும் சன்ரைஸ் காப்பியிலும்!




விக்கோ வஜ்ரதந்தி - டூத் பவுடர் டூத் பேஸ்ட்
பல்லு-ன்னு இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம்-னு இதுல காட்டுவாங்க! ஆப்பிள் கடிக்கற சத்தம் சும்மா நச்-னு கேட்கும்!

அதே போல பாதாம் கொட்டை அது இது-ன்னு, இந்த வெளம்பரத்த பார்த்து கடிச்சவங்க கதி அதோ கதி தான்! :-)




காம்ப்ளான் - நான் வளர்கிறேனே மம்மி!
சின்ன வயசில் என் எதிரியே இந்தக் காம்ப்ளான் தான்! அம்மா ஒடம்புக்கு நல்லது-ன்னு வற்புறுத்திக் கொடுப்பாங்க! ஆனா எனக்கு வாசனையே சுத்தமாப் புடிக்காது!
நல்ல காலம், காம்ப்ளான்-ப்ளெயின் போயி காம்ப்ளான்-சாக்லேட்டு வந்துச்சு! நான் தப்பிச்சேன்!
சாக்லேட்டு-ன்னா எனக்கு ரொம்ப புடிக்கும்-னு என் பாசத் தங்கை, அ(டி)ப்பாவிச் சிறுமி, துர்க்காவுக்கு நல்லாவே தெரியும்! :-)




வாஷிங் பவுடர் நிர்மா
இதுல அப்பவே கலர் கலரா ஃபிகர்கள் வந்து சுத்திச் சுத்தி ஆடுவாய்ங்க! :-)
பாட்டும் நல்லா Foot Tapping Number தான்!





"டேய் வெளம்பரம் பாத்துக்கிட்டு இருக்கும் வெண்ணை! வந்து படு-லே! காலங்காத்தால ஸ்கூலுக்குப் போவணும்! உன்னைக் கிளப்பறதுக்குள்ள பெரும் பாடு ஆயிடும்!

டிவிப் பொட்டியை மறக்காம அணைச்சிட்டு வந்து படு-லே! அப்படியே ராப் பூரா ஓடிக்கிட்டு இருக்கப் போவுது!
அப்பறம் அப்பாரு தோலை உரிச்சிருவாரு! ஒன் தங்கச்சியே பெல்ட் எடுத்துக் கொடுத்தாலும் கொடுப்பா! " - பாட்டி கத்தறாங்க! ஸோ, மக்களே மீ த ஜூட்!

குட் நைட்! :-)

39 comments:

  1. விளம்பரமெல்லாம் அந்த காலத்துல சூப்பர் டூப்பரா இருந்தவை. இந்தி எதிர்ப்பு போராட்ட காலம் ரொம்ப கடந்த காலமா தெரியுதே?

    ReplyDelete
  2. எப்படி இந்த ரேட்டுல பதிவு போட்டு தாக்கறீங்க?!!!

    அந்த கால நினைவு எல்லாம் வந்தாச்சு.... அதுவும் இந்த லிரில் விளம்பரம் இருக்கே (சினிமா தியேட்டர்ல பாத்தது), "இப்படி எல்லாம் அந்த பொண்ணு குளிச்சு தான் ஜுரம் வந்து செத்துப் போச்சு"ன்னு சொல்லியே பயமுறுத்தினாங்க வீட்டுல... யாருக்கு ஜூரம்னு வளர்ந்தப்புறம் தான் புரிஞ்சுது;-) மத்தபடி டிவி /டேப் ரிகார்டர் வாங்கற அளவுக்கு நான் ஸ்கூல்/காலேஜ் போகும் போது வீட்டுல காசு இல்ல. சின்ன ரேடியோ தான்...

    நல்லா போகுது இந்த நட்சத்திர வாரம்.

    ReplyDelete
  3. அச்சச்சோ, ஓபன் கேட்டு! பரபரங்குதே, தமிழ்நாடு குலுங்கிட...

    சரி, பத்த வச்சாச்சு.

    ReplyDelete
  4. ஹீம்! நான் வீட்டை விட்டு கிளம்பும் வரை (வேலைக்காக) இந்த பெட்டி நாகப்பட்டினத்தை எட்டிப்பார்க்கவில்லை.
    பார்த்திருந்தால் நானும் இப்படி ஒரு பதிவை போட்டிருப்பேன். :-)
    லிரில் சோப்பை - தியேட்டரில் நானும் உங்களை மாதிரி கலைக்கண்ணோடு தான் பார்த்தேன். :-)

    ReplyDelete
  5. அப்ப டிவியை உடைச்சாங்களா. அதான் இப்ப டிவி கொடுக்கிறாங்களா?

    எங்க வீட்டுப் பையன் எழுதி இருந்தா இத்தனையையும் பதிவு செய்திருப்பாங்க.
    அதுலயும் சியட் டயர்க்கு பார்ன் டஃப்னு ஒரு விளம்பரம். அதில ஒரு ரைனோ காண்பிப்பாங்க.
    பெரியவனும் சின்னவனும் தங்க சகோதரியைக் கூப்பிட்டு ஏய் உன் படம் வருது பாருனு வெறுப்பேத்துவாங்க.
    நீங்அ சொல்கிற மாதிரி இப்ப அவளும் உங்க ஊரில இருந்து கொண்டு தம்பி அண்ணன் குழந்தைகளுக்கு பொம்மையும் ஃப்ராக்குமா அனுப்பித் தள்ளறா,.:)

    ReplyDelete
  6. //இந்தி எதிர்ப்பு போராட்ட காலம் ரொம்ப கடந்த காலமா தெரியுதே? //

    இது காங்கிரஸ் ஆட்சி இல்லைங்க. எம்ஜிஆர் ஆட்சி போதுதான்.

    ரவி,

    எப்படி இந்த விளம்பரங்களை பிடித்தீர்கள். அதுவும் அந்த கோல்ட்ஸ்பாட் விளம்பரம் எனக்கு ரொம்பவும் பிடித்த விளம்பரம்.

    ரஸ்னா விளம்பரம் எங்க? ஐ லவ் யூ ரஸ்னா :-))

    ReplyDelete
  7. //நீங்களே சொல்லுங்க, என்ன, வாங்கிகிட்டுப் போவலாமா, வேணாமா? :-)//

    வாங்கிட்டாப் போகலாம்!!

    ஒரு கொசுவர்த்திச் சுருள் விளம்பரம் கூட இல்லாத கொசுவர்த்திப் பதிவுக்கு எங்கள் கண்டனங்கள்.

    ReplyDelete
  8. எங்க வீட்டிலும் நான் +2 முடிக்கிற வரை டிடி மட்டும்தான்... அதுவும் படம் போடுறப்ப முதல் விளம்பரம் விக்கோ விளம்பரம் தான்..

    "வஜ்ரதந்தி வஜ்ரதந்தி விக்கோ வஜ்ரதந்தி
    விக்கோ பவுடர் மற்றும் பேஸ்ட் ..
    ஆயுர்வேத மூலிகைகளாலே உள்நாட்டிலே தயாரானது...
    பிரஸ் செய்யும் போது ஈறுகளை மெல்ல மெல்ல தேய்த்துக் கொடுக்க மற்றக்காதீர்கள்.
    நினைவிருக்கட்டும் ஈறுகளின் வலிமை.. பற்களின் பெருமை"

    :))))))))))))))))))

    நல்லா கொசுவத்தி சுத்த வச்சிட்டீங்க KRS !!!!!

    ReplyDelete
  9. //தமிழ் பிரியன் said...
    விளம்பரமெல்லாம் அந்த காலத்துல சூப்பர் டூப்பரா இருந்தவை//

    நன்றி தமிழ் பிரியன்.
    உங்க ஃபேவரிட் எது?

    //இந்தி எதிர்ப்பு போராட்ட காலம் ரொம்ப கடந்த காலமா தெரியுதே?//

    ஹிஹி! நீங்க சொல்லுற இந்தி எதிர்ப்பு போராட்டம் அண்ணா காலத்துல!
    இது வெறும் டிவியில் இந்தித் திணிப்பை எதிர்த்து! 1986-87ன்னு நினைக்கிறேன்!

    நான் அப்போ ஆறாங் கிளாஸ்! :-))

    ReplyDelete
  10. //Sridhar Narayanan said...
    ரவி,
    அந்த கோல்ட்ஸ்பாட் விளம்பரம் எனக்கு ரொம்பவும் பிடித்த விளம்பரம்//

    ஸ்ரீதர், நல்லா வேகமா இருக்கும், இல்லையா அந்த வெளம்பரம்? டிவி-ல்ல எல்லாமே ஸ்லோவா இருக்கும் அப்போ! அதுனாலயே இது எனக்கு ரொம்ப பிடிக்கும்! :-)

    //ரஸ்னா விளம்பரம் எங்க? ஐ லவ் யூ ரஸ்னா :-))//

    இதோ... :-)

    ReplyDelete
  11. அந்தலிரில் விளமபரத்திற்காகவே லிரில் சோப்பிற்கு மாறினவங்க ரெம்பப்பேறு!

    ஆனால் எனக்குப் பிடிச்ச விளம்பரம்:

    லைஃபாய் எக்கட உந்தி
    ஆரோக்யம் அக்கட உந்தி!

    (இது வெட்டிய உசுப்பேத்துறதுக்காக!)

    ReplyDelete
  12. நம்ம பேவரிட்டும் உங்களைப் போல லிரில் தான். அந்த அருவி அழகுக்கு மட்டும் தானுங்கோ :P

    ReplyDelete
  13. //விசயத்துக்கு வருவோம்!
    உங்கள் குழந்தைப் பருவ/பள்ளிக் காலத் தொலைக்காட்சி விளம்பரங்கள் எல்லாம் உங்களுக்கு நினைவிருக்கா மக்களே? //

    லிரில் விளம்பரம் சிறுவனாக இருக்கும் போது பெரிய திரையில் பார்த்திருக்கிறேன். லா.........லலலா........ல..ல..லா....லால்லாலா.

    அரியாத வயசு, நாமும் நீர்விழ்ச்சியில் குளித்தால் எப்படி இருக்கும் என்று நினைததுண்டு.

    மாறுபட்ட தொகுப்பு ! பாராட்டுக்கள் சார் !
    :)

    ReplyDelete
  14. Tortoise விளம்பரம் பார்த்ததே இல்லையா !!

    ReplyDelete
  15. ரஸ்னா விளம்பர தொடுப்புக்கு நன்றி.

    இதுக்கு முன்னால இன்னொரு விளம்பரம் வரும் ரஸ்னாவுக்கு. ஒரு சின்ன குழந்தை ரஸ்னாவுக்காக காத்திருக்கு ஒரு குண்டு பையன் பெரிய ஜார் நிறைய ரஸ்னாவை குடித்து முடிப்பான். 'ஐ லவ் யூ ரஸ்னா' என்று சொல்லும் அந்த குழந்தை.

    டார்டாய்ஸ் கொசுவர்த்திக்கு சின்னி ஜெயந்த் வந்து ரஜினி, கமல், தேங்காய் சீனிவாசன் போல மிமிக்ரி செய்வார்.

    லைப்பாய் ரொம்ப நாளா அந்த பாட்டுடன் வந்து கொண்டிருந்தது.

    அப்புறம் ரின் சோப்... 'என் சட்டைய விட இவரோடது வெளுப்பா?'

    இப்பொழுதும் மாறாத விளம்பரம் கோபால் பல்பொடிதான். டிவி விளம்பரம் என்று காரணத்திற்க்காக ஒரே ஒரு படத்தை மட்டும் போட்டு ஒப்பேற்றி (வெறுப்பேற்றி) விட்டார்கள்.

    கபில்தேவ் வந்து 'பாமோலிவ் கா ஜவாப் நஹி' என்று சொல்லிவிட்டு போவார். அதை வைத்து பல குவிஸ் நிகழ்ச்சிகளை கிண்டல் செய்திருக்கோம்.

    which shaving cream do you use என்று காமிராவிற்க்கு பின் மண்டையை காமித்துக் கொண்டிருக்கும் நபரை காமிக்க அவர் முகத்தை காமிரா பக்கம் திருப்பி தனது தாடியை தடவிக்கொண்டே 'மீ?' என்று கேட்பார் காட்ரெஜ் ஷேவிங் கிரிமீக்கிற்க்காக.

    விளம்பரங்களுக்காக மட்டுமே டீவி பார்த்த காலங்கள் அவை. விளம்ப்ரம் தொடங்கும்போதே அது என்ன விளம்பரம் என்று சொல்ல போட்டியே நடக்கும் எங்களுக்குள் :-))

    ReplyDelete
  16. imm.. nice one.. still so many advs are there..Marie glod Biscuit tea time adv, solidaire tv, sprite adv(one guy with triple act), Narasus coffee, Sunsire coffee with the theme of repairing the car(it was came with 3 or 4 theme that time)and etc...

    ReplyDelete
  17. அந்த Giant Robot ஒரு 15 நிமிஷம் போடுவாங்க இல்ல? அப்பெல்லாம் தெருவுல ஒரே ஒரு டி.வி தான் இருக்கும். அவங்க வீட்ல எல்லாரும் குழுமிடுவோம் :)
    15 நிமிஷ சீரியல் முடிஞ்சதும், சில வாண்டுகள், giant robot மாதிரியே விஷுக் விஷுக்னு தான் நடக்கும்.

    ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே ;)

    லிரில்ல வர அந்த பொம்மனாட்டி பேரென்ன? ஹ்ம்ம்ம். :)

    ReplyDelete
  18. உங்கள் விளம்பர ரசிப்பு[லிரில்] நல்லாத்தான் இருக்கு ரவி!

    ஆங்காங்கே....அன்பு தங்கை 'துர்கா'வுக்கு அர்ச்சனை செய்திருக்கிறீங்க, சூப்பரு!!

    ReplyDelete
  19. அடேங்கப்பா!!எத்தனை பேருக்கு இந்த விளம்பரங்கள் மேல ஈர்ப்பு.
    உண்மையாவே மனசில நிற்கிற விளம்பரங்கள்.
    அதோட ஒரு டாக்குமெண்டரி ஒண்ணும் வருமே. தபால், மற்றும் கல்வி கற்று கடிதம் படிப்பது பற்றி!
    இந்தியில் இருக்கும் கருத்தைத் தமிழில் படிக்கும் போது ரொம்ப இயல்பா வரும்.அம்மா,ஆயி,என்று போகும்.

    ReplyDelete
  20. //

    தங்கச்சி வேற அப்பாவுக்கு ரொம்பவே சப்போர்ட்டு! ஆயிரம் துர்கா பொண்ணுக்கு அவ சமானம்-ன்னா கற்பனை பண்ணிப் பாத்துக்குங்க!

    சாக்லேட்டு-ன்னா எனக்கு ரொம்ப புடிக்கும்-னு என் பாசத் தங்கை, அ(டி)ப்பாவிச் சிறுமி, துர்க்காவுக்கு நல்லாவே தெரியும்! :-)
    //

    தலைவர் கைப்புள்ள குரலில்... "ஏம்பா அவ பாட்டுக்கு ஒரு ஓரமா தான போய்க்கிட்டு இருந்தா... எதுக்கு இப்பிடி வாயக்குடுத்து வாசிப்பு வாங்கிக்கிற...??"

    Gold Spot விளம்பரம் சூப்பர். சிறுவயதில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதே சுத்தமாக புரியாது! Citra Super cooler என்று ஒரு கூல் டிரிங்க் விளம்பரமும் வரும்.

    நான் முதன் முதலில் ஓவர் லாஜிக் பேசி ஒடம்பை புண்ணாக்கிக்கிட்டது உஜாலா விளம்பரத்தை பார்த்துதான். அதுல ஒரு அழகான அம்மனி ஒரே ஒரு சொட்டு உஜாலாவை ஒரு பெரிய குளத்துக்குள்ள ஊத்திட்டு அப்படியே குதிச்சு பளீர்னு எந்திருச்சு வரும்!!

    இப்பவும் நான் டீவியில் விரும்பிப் பார்ப்பது விளம்பரங்களைத்தான். சூப்பர் பதிவப்பூ...!!

    ReplyDelete
  21. //
    நீங்களே சொல்லுங்க, என்ன, வாங்கிகிட்டுப் போவலாமா, வேணாமா? :-)
    //
    நீங்க உசிரோட இருக்கனுமா வேணாமா?? ரெண்டு கேள்விக்கும் ஒரே பதில் தான் ஐயா!!

    ReplyDelete
  22. Ravi,
    Natchatirama! Kalakkunga, Super star! Oru naal web pakkm varalainna ithanai pathiva?

    Surf ' Lalithaji ' maranthuteengala? Apparam ' Chottu Neelam doi '
    Shobha

    ReplyDelete
  23. ஆஹா.. காலங்கார்த்தாலே எழுந்து பார்த்தா... இப்படி ஒரு கொசுவர்த்தி பதிவு!!!

    எல்லாம் அருமையான விளம்பரங்கள்.

    அப்போ எங்க வீட்டிலே டிவி கிடையாது. மொடை மாடியிலிருந்து பார்த்தால், பக்கத்து வீட்டு டிவி தெரியும். வெயில், மழை என்று பார்க்காமல், குடை பிடித்து டிவியில் பார்த்த இந்த விளம்பரங்கள் நினைவுக்கு வருகின்றன...:-)

    ReplyDelete
  24. டாட்டாவின் சக்ராகோல்ட், வாசு அக்ர்பத்தி, ப்ரூ ,கூல் சோப் விளம்பரமெல்லாம் பிடிக்காதா?:) ஏன் கேக்கறேன்னா அதுல ..அதுல...
    :):)

    ReplyDelete
  25. // லிரில்ல வர அந்த பொம்மனாட்டி பேரென்ன? ஹ்ம்ம்ம். :)//

    லிஸா.
    லிஸா லிரில் லின்டாஸ் வின்னிங்க் காம்பினேஷன் அப்படின்னு படிச்ச ஞாபகம்.

    ReplyDelete
  26. மன்னிக்க அது கேரன் லுனல்.

    ReplyDelete
  27. ஏய்யா,முக்கியமான ஒரு விளம்பரம் விட்டுட்டிங்க..
    ஐஸ் முதல் முதல்(னு நெனைக்கிறேன் !) நடிச்ச ஒரு டயர் விளம்பரம்,அவரும் இன்னொரு ஆணும் ஆளுக்கொரு காரை ஓட்டிக் கொண்டே,கார்களே பாலெ டான்ஸ் மூவ்மெண்ட் கொடுக்கிற மாதிரி இருக்குமே??????????

    ReplyDelete
  28. KRS,
    ரொம்ப நல்லா இருக்கு!
    என்னையும் சின்ன வயது இராமாயணம் / மஹாபாரதம் கண்ட நாட்களை நினைவு படுத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  29. //சன்ரைஸ் காப்பியிலும்!//

    அரவிந்த்சாமி நடிச்சது லியோ காபில்ல???


    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தலீவா :)))

    ReplyDelete
  30. எதிர் வீட்டு டீவில இலங்கையின் தமிழ் ஒளி பரப்பு மட்டுமே (மிக அதிக இரைச்சல்களுடன்) பார்த்த காலம் போயி, கொடைக்கானல் ரிலே ஸ்டேஷன் வந்த போது நம்ம வீட்டிலேயே டயனோரா ப்ளாக் அண்ட் ஒயிட் டீவி-ல ரசித்தவை.

    நல்ல கொசுவத்திய கொளுத்திப் போட்டீங்க!!!!!

    ReplyDelete
  31. ரொம்ப ஒழைச்சுத்தான் பதிவு போடனும் போல இருக்கு. நல்லா இருக்கு.தங்கையை பத்தி இப்பட்டி சொல்லுவீங்க ஆனா சென்னை வந்ததும் மலர்ந்தும் மலராத பாதி மலர் போலன்னு பாடுவீங்களே உங்களைப் பத்தி தெரியாதா?

    ReplyDelete
  32. எல்லாம் நல்லாத்தானிருக்குங்க. ஆனா, அந்த Western டிவி பத்தி சொன்னதுதாங்க பிடிக்கலை. 1986-ல் இருந்து 2007 வரை(அட! இப்போதான் நினைவுக்கு வருது; நம்மட்ட இருந்த குதிரையும் 21-22 வருஷம் கூடவே இருந்தது)எப்படி உழைச்சது தெரியுமா?

    ReplyDelete
  33. தல

    முதல்ல கையை கொடுங்க...கலக்கிட்டிங்க...உங்களுக்கும்எனக்கும் நிறைய விஷயம் ஒத்துப்போகுது..;))

    \\அவ படிக்கும் போதோ, வீட்டுப் பாடம் செய்யும் போதோ, ஒரு துளி சத்தம் கூட வரக்கூடாது!\\

    என்ன உங்களுக்கு தங்கை எனக்கு அக்கா ;)

    \\ஆனா அதுக்கப்பறம் தான் ஆப்பே!
    எங்கப்பா திமுகவுக்கு ஓட்டுப் போடறவராச்சா!\\

    இங்கையும் அதே கதை தான் ;))

    \\\சின்ன வயசில் என் எதிரியே இந்தக் காம்ப்ளான் தான்! அம்மா ஒடம்புக்கு நல்லது-ன்னு வற்புறுத்திக் கொடுப்பாங்க! ஆனா எனக்கு வாசனையே சுத்தமாப் புடிக்காது!
    நல்ல காலம், காம்ப்ளான்-ப்ளெயின் போயி காம்ப்ளான்-சாக்லேட்டு வந்துச்சு! நான் தப்பிச்சேன்!
    சாக்லேட்டு-ன்னா எனக்கு ரொம்ப புடிக்கும்-னு என் பாசத் தங்கை, அ(டி)ப்பாவிச் சிறுமி, துர்க்காவுக்கு நல்லாவே தெரியும்! :-)\\

    முழுக்க முழுக்க எனக்கும் இப்படி தான்.

    படிக்கும் போது இது உங்க கொசுவத்தியா இல்ல என்னோட கொசுவத்தியான்னு யோசிக்க வச்சிட்டிங்க ;))

    ReplyDelete
  34. \\அந்தச் சமயம் பார்த்து தான் ஜான்னி சாக்கோ & தி ஜெயன்ட் ரோபோ (Johnny Sakko & The Giant Robot) -ன்னு ஒரு சீரியல் போடுவாங்க! ஒரு பொடிப் பையனும், ஜெயன்ட் ரோபோட்டும் கூட்டுச் சேர்ந்து ஊரையே காப்பாத்தறது தான் கதை!
    அதுல வர "அறிவியல் பூர்வமான" டிஷ்யூம் டிஷ்யூம் பார்த்துவிட்டு ரொம்பவே உற்சாகம் ஆயிருவேன்! அப்பப்ப விசில் கூட பறக்கும்!\\


    என்னாத்த சொல்ல புதன்கிழமையா இல்ல வியாழக்கிழமையான்னு தெரியல...7 மணிக்குன்னு நினைக்கிற்றேன் அந்த டைம் ஆனா உடனே அய்யோ எப்படியாச்சும் இந்த வாரம் அந்த ஆரக்கனை கொன்னுடானுமுன்னு சாமிக்கிட்ட எல்லாம் வேண்டியிருக்கேன்.


    அப்படி ஒரு கொலைவெறியோட பார்த்த தொடர் இது ;))

    ReplyDelete
  35. \\\நீங்களே சொல்லுங்க, என்ன, வாங்கிகிட்டுப் போவலாமா, வேணாமா? :-)\\

    தல இந்த நேரத்துக்கு எப்படியும் எல்லாத்தையும் வாங்கிட்டு இருப்பிங்க..பார்த்து ஊருக்கு போறாதுக்குள்ள லிஸ்ட்டு இன்னும் நீளமா இருந்த சரி தான் ;))

    ReplyDelete
  36. என்ன சொல்றது... எல்லா வீடியோவும் நல்லா இருக்கு.

    எங்களை மாதிரி யூத்துங்களுக்கு நாங்க பாக்காத அந்த கால விளம்பரங்களை புடிச்சி கொடுத்ததுக்கு ரொம்ப தாங்ஸ்.

    -----------

    //அதிரடிக் கேள்விகளுக்கு(Eg. அரை பிளேடு :-) மட்டும் இப்போதைக்குப் பதில் சொல்லிக்கறேன்!//

    ஸ்பெஷல் தாங்ஸ்.

    :)

    ReplyDelete
  37. நிர்மா நிர்மா வாஷிங் பவ்டர் நிர்மா,

    விக்கோ டர்மரிக் இல்லை காஸ்மெடிக்


    போன்ற விளம்பரங்கள் இன்னும் மனதை விட்டு அகலாதவை ரவி.

    அது இருக்கட்டும், இந்த விளம்பரங்களை எல்லாம் அவுகளே யுடியூப்புல ஏத்தினாங்களா இல்லை நீங்களா?

    ReplyDelete
  38. //கோபிநாத் said...
    தல
    முதல்ல கையை கொடுங்க...கலக்கிட்டிங்க//

    கோபி...
    அப்பவே பார்த்துட்டேன்!
    உனக்கு கையைக் கொடுக்கவே இப்ப இங்கிட்டு ஓடியாந்தேன் பா!:-)

    //உங்களுக்கும் எனக்கும் நிறைய விஷயம் ஒத்துப்போகுது..;))//

    ஆர்க்குட்-ல கச்சேரிய வச்சிப்போம்! :-)

    ReplyDelete
  39. எங்கள் ரூபவாகினியின் ஆரம்பகால 2 மணி நேர தமிழ் ஒளிபரப்பில் காட்டப்படும் விளம்பரம் லலிதா யுவலர்ஸ் மனதில் நிற்கவில்லை.
    ஆனால் உங்கள் ஞாபகம் அபாரம்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP