Wednesday, March 19, 2008

***பெண்ணழகு கண்ணழகு முன்னழகு பின்னழகு! - 1

நீ நடந்தால் நடை அழகு-ன்னு பாடுவாங்க காதலில் விழுந்த பசங்க! ஆனா காதலியின் நடைக்குக் குடை பிடிச்சிக்கிட்டுப் போகும் தெகிரியம் எத்தினி பேருக்குப்பா இருக்கு? :-)

அதுவும் நண்பர்கள் பல பேர் ஸ்பென்சர் ப்ளாசாவில் சூழ்ந்திருக்காய்ங்க!
அங்கே குக்கி மேனில் குக்கி தின்னுக்கிட்டு, "கடலையே கண்ணாயினார்"-ன்னு இருந்தாக் கூட மன்னிச்சி விட்டுருவாங்க நம்ம மக்கா!

ஆனா, நீ நடந்தால் நடை அழகு, உனக்கு நான் பிடிக்கும் குடை அழகு!-ன்னு பாடிக்கிட்டே...
காதலியின் தோளில் கை போட்டுக்கிட்டு,
மாலுக்குள்ளேயே குடை பிடிச்சிகிட்டுப் போனான்னு வைங்க!
அச் சிங்கம் அசிங்கமாயிரும், நண்பர்கள் கட்டுற ரவுசுல! :-)

ஆனா இந்த மாதிரி நெசமாலுமே நடந்து கொண்ட ஒரு இளைஞன், பின்னாளில் ஒரு பெரிய ஆன்மீகவாதியா மாறினானாம்! - அலோ, என்னை எதுக்குப் பாக்கறீங்க? நான் அவன் இல்லை! நான் யாருக்கும் குடையும் பிடிக்கலை! :-)


கங்கையிற் புனிதமாய காவிரிப் பெண் கொழித்தும் சுழித்தும் விளையாடும் ஊர். அந்தக் கள்ளன் அரங்கனோ, காவிரிப் பெண் வரும் வழியிலே பாம்புப் படுக்கை விரித்துப் படுத்துக் கொண்டான்!

பொதுவாகவே காவிரி நம்மிடையே தலை நிமிர்ந்து வரத் தயங்கும் பெண். எத்தனையோ சொல்லியாகி விட்டது. நாணம் அவளை விட்டபாடில்லை! ஞானம் அவளை அடைத்தவர்களைத் தொட்டபாடில்லை!

பார்த்தாள் காவிரி...அரங்கன் பள்ளி கொண்ட இடத்துக்குச் சில மைல்கள் முன்னரே இரண்டாகப் பிரிந்தாள், முக்கொம்பு என்னும் ஊரில்.
தென்காவிரி, வடகொள்ளிடம் எனப் பிரிந்து, இரண்டு பக்கமாக ஓடி வருகிறாள்.

ஒரு மாலையின் இரண்டு பக்கங்களைப் போல் ஓடியே வந்து, அரங்கனுக்கு நீர்மாலை சூட்டுகிறாள்.
திருமலையில் தோமாலை! அரங்கத்தில் நீர்மாலை!
பின்னர் கல்லணைக்கு முன்னுள்ள ஊரில் ஒன்றாகச் சேர்ந்து, ஓடுகிறாள் அந்த மாலையிட்ட மங்கை! இப்படி மாலுக்கே மாலையிட்டதனால், "கங்கையிற் புனிதமாய காவிரி" என்று பட்டம் பெறுகிறாள்.

அன்று காவிரிக் கரையில் ஒரே மக்கள் கூட்டம்...சாரி சாரியாக ஓடுகிறார்கள்!
கோயிலுக்குச் செல்லும் இராமானுசருக்கோ பெரும் வியப்பு!
சீடர்களைப் பார்த்துக் கேட்கிறார்..."ஆகா, மக்களுக்கு அரங்கன் மேல் ஆரா அன்பு வந்து விட்டதா என்ன? இத்தனை பேரும் ஆர்வமாக அரங்கத்துக்குள் செல்கிறார்களே?"

"சுவாமி...இவர்கள் ஓடிக் கொண்டிருக்கும் அரங்கம் திருவரங்கம் அல்ல! மல்யுத்த அரங்கம்!"

"என்னது...மல்யுத்த அரங்கமா?"

"ஆமாம் சுவாமி. யாரோ தனுர்தாசனாம்! பெரிய மல்யுத்த வீரன்! அவன் போடப் போகும் குத்துச் சண்டையைக் காணத் தான் இவ்வளவு கூட்டமும் செல்கிறது! பக்திச் சுவை அறியாத பாவி மக்கள்!"

"உம்! அப்படி மக்களைப் "பாவிகள்" என்று பழித்துச் சொல்லாதீர்கள்...இந்த நிலை மாற்றாத நாம் தான் பாவிகள்! மக்களை நோவதில் அர்த்தமே இல்லை!
அரங்கனின் கருவறைக்குள் அவர்களா இருக்கிறார்கள்? நாம் தானே இருக்கிறோம்! சொத்து யார் பொறுப்பில் உள்ளதோ அவர்கள் தான் அதைப் பராமரிக்க வேண்டும்!
இன்று அந்த மல்லனைப் பார்க்கப் போகட்டும். நாளை அவனை விடப் பெரிய மல்லன், மல்லாண்ட திண் தோள் மணிவண்ணன். அவனைக் காண இதே மக்கள் வருவார்கள். வாருங்கள் நாம் போய்ச் சேவிப்போம்! "மறு நாள் சித்திரை வெயில் சீரங்கத்தில் தகிக்கிறது! ஆற்றிலும் கால் வைக்க முடியவில்லை! ஆற்று மணலிலும் கால் வைக்க முடியவில்லை!

வேதம் சுடும் வேதியர்க்கும் பாதம் சுடும்; தமிழோதி வரும் முனிவனுக்கா காத தூரம் சுடும்? நாதம் சுடும், கீதம் சுடும்! ஆயின், நாரணா என்றாலே அந்தச் சூடும் சுடும்!

ஆற்றில் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, சீடர்களோடு வருகிறார் இராமானுசர்! வழியில் அந்தக் காட்சியைக் காண்கிறார்! - ஒரு பெண்ணும் பையனும் நெருக்கமாக!

அவள் கையை ஒய்யாரமாக வீசி வீசி நடந்து வருகிறாள்!
இவனோ அவளுக்குக் குடை பிடித்துக் கொண்டு நடந்து வருகிறான்!
அதுவும் எப்படி?
குடை வளைந்ததோ, இவன் தொடை வளைந்ததோ என்னும் படியாக ஒரு நடை!
வெயிலில் அவள் இட்டடி நோகக் கூடாதே! எடுத்த அடி கொப்பளிக்கக் கூடாதே! அப்படி ஒரு நடை!

சரி பாவம்...நல்ல வெயில்! ஏதோ இரண்டு பேருமாய் ஒன்னாக் குடை பிடித்து வந்தால் கூடப் பரவாயில்லை! இவன் பெருமாளுக்குக் குடை பிடிப்பது போல் பிடித்துக் கொண்டு வருகிறான். இவன் அடிகள் கொப்பளிக்கின்றன. ஆனால் அவனுக்கு அது ஒரு பொருட்டாகவும் தெரியவில்லை!

பார்த்தீர்களா? இராமானுசருக்கும் வெய்யில் பொருட்டில்லை, இவனுக்கும் வெய்யில் பொருட்டில்லை! இந்த விஷயத்தில் காதலும் கடவுளும் ஒன்னு! :-)


அவள் ஒரு தேவதாசி. பெயர் ஹேரம்பா.
பெயருக்கு ஏற்றாற் போலவே அவள் மேனியே பொன்மேனி தான்! தனியாகப் பொன்னாபரணங்கள் தேவையில்லை அவளுக்கு!
மின்னலைப் பிடித்து, பொன்னதில் உருக்கி, மேகத்தில் துடைத்து, பெண்ணெனப் படைத்து விட்டான் அந்தப் பிரம்மன்!

அவனோ மல்லன்! ஆனால் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் என்பதை அறி-யாதவன், அவன் ஹரி-யாதவன்!
பெயர் தனுர்தாசன்.
நேற்று மல்யுத்தத்தில் பலபேரைக் கட்டிப் போட்டுத் தூக்கி வீசிய மாவீரன்! இன்று மண்யுத்தத்தில் மங்கையின் காலடியை ஒத்தி ஒத்தி வருகிறான்!
இவர்கள் இருவரும் காதல் தம்பதியர்கள் தான்! கண்ணாலம் கட்டவில்லையானாலும் கணவன்-மனைவி தான்!
இருந்தாலும் அதையும் மீறிய கலை உணர்ச்சி இருவரிடமும் குடியிருந்தது!

வழியில் இந்தக் குடை பிடித்து வரும் தாசானு தாசன் காட்சியைக் கண்ட பலபேர் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்!
நேற்று இவனை ஆரவாரம் செய்த இதே கூட்டம்,
இன்று எச்சில் ஊற ஈரவாரம் செய்கிறது!

அத்தனையும் இராமானுசர் பார்க்கிறார்! லேசாகச் சிரிக்கிறார்!
போவார் வருவோரைப் பார்த்துச் சிரிக்கும் வழக்கம் இல்லை அவருக்கு!
ஆனால் இன்று என்னமோ தெரியவில்லை!
அவர் கெட்ட நேரம்! அவர் சிரிப்பதை இவனும் பார்த்து விட்டான்! போச்சு!

மீசை துடிக்க, அவள் ஆசை தடிக்க, ஓடோடி வருகிறான், குடையைக் கீழே போட்டுவிட்டு! இப்போ வெயிலில் அவள் பொன்மேனி உருகுதே! என்னாசை பெருகுதே!

அடப் பாவி...இப்போ மட்டும் வெயிலில் உருக மாட்டாளா? அவள் பாதம் தான் எரியாதா?
யாருக்கு வேணும் அதெல்லாம்? என்னைப் பார்த்து இழிவாகச் சிரித்து விட்டானே அந்த மனுசன்! அதுவும் ஒரு சாமியார்!
அதை எதிர்ப்பதா, இல்லை, இவளுக்குக் கேவலமாகக் குடைபிடித்துக் கொண்டு இருப்பதா? :-))

ஆகா...இப்போது மட்டும் "அது" கேவலம் என்று ஏன் தெரிகிறது?
சிற்றின்ப இன்பம் என்பது இது தானோ?
வேண்டும் வரை கூடு! அப்புறம் இறக்கை கட்டி ஓடு!
சிற்றன்பு கொண்டால் சிற்றின்பம்! பேரன்பு கொண்டால் பேரின்பம்! - மண்ணிலேயே பேரின்பம் காணலாமே! சம்சார சாகரத்தைக் காதலால் கடக்கலாமே!


"எதுக்குச் சாமீ, என்னைய பாத்துச் சிரிச்சே? இதே வேற யாராச்சும் செஞ்சிருந்தா நடக்கிறதே வேற!"

"கோச்சிக்காதேப்பா! நான் உன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை! இந்த மக்கள் நிலைமையை எண்ணிச் சிரிச்சேன்"

"பாக்க சாந்தமா இருக்க! ஆனாப் பொய் சொல்ற பாத்தீயா? உன்னை நம்ப மாட்டேன்! நீ ஒரு மோசடி.... "

"இல்ல தம்பீ....சரி விடு....நீ தானே நேற்று வெற்றி பெற்ற அந்த மல்யுத்த வீரன் தனுர்தாசன்?"

"ஆமாம்! அதுக்கென்ன இப்போ? தெரிஞ்சே தான் சிரிப்பு சிரிச்சீங்களா?"

"உம்ம்ம்ம்...நேற்றெல்லாம் கொண்டாடிய கூட்டம் இன்று துண்டாடியதைப் பார்த்தேனா! என்னையும் அறியாமல் சிரிப்பூ பூத்து விட்டது! தவறிருந்தால் என்னை மன்னித்து விடு தம்பி"

மல்லன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! எதிர்த்து எதிர்த்தே பழக்கப்பட்டவன்! இன்று இவ்வளவு பெரிய முனிவர் தன்னிடம் மன்னிப்பு கேட்கிறாரே!
சீடர்களுக்கும் இதே எண்ணம் தான்! "ச்சே...எவனோ ஒரு தாழ்ந்த சாதிக்காரன்....கன்னங் கரேல்-னு கட்டு மஸ்தா...இவனுக்கு அருகில் நின்று கொண்டு சரிசமமாப் பேசிக்கிட்டு இருக்காரே நம்ம குரு! இவருக்கு எப்பமே இதே வேலையாகப் போச்சு! ஆள் தராதரம் பாக்குறதே இல்ல!"

"என்ன தனுர்தாசா, பேசாமல் நின்னுட்ட...என்னை மன்னிக்க உனக்கு மனதில்லையா?"

"அய்யோ...அப்படியெல்லாம் சொல்லாதீங்க சாமீ...பாக்க ரொம்ப பெரிய சாமீ மாதிரி இருக்கீங்க! சரி நான் வாரேன்"

"நில்லு தம்பி...இத்தனை பேரும் சிரிக்கிறா மாதிரி நடந்து கொண்டாயே! இப்படியாப் பண்ணுறது? வேணும்னா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே குடையைப் பிடிச்சிக்கிட்டு வரலாமே! அதை விடுத்து, இப்படித் தாசானு தாசனாய்...."

"இல்ல சாமீ...அவ கண்ணுக்குள்ளாற இருக்குற சக்தி உனக்குத் தெரியாது! நானும் எத்தனையோ பேரைப் போட்டுத் தாக்கி இருக்கேன்! ஆனா இவ கண்ணால ஒரு பார்வை பாத்தா போதும்...
ஒரு வெட்டு வெட்டினா மாதிரி ஆயிடுது, வெட்டுப்பயலா, வெட்டிப்பயலா மாறிடறேன்! அதான்!"

"ஹிஹி! அவள் கண்களுக்கு அப்படி ஒரு சக்தியா?"

"ஆமா சாமீ....வேணும்னா நீயே போய் பாரேன்! மயங்கி விழுந்துருவ! ஏதோ நானா இருக்கவே, நடக்கவாச்சும் செய்யறேன்."

"உம்ம்ம்ம்...இந்தக் கண்கள் தான் உன்னை இப்படிச் செயல் இழக்கச் செய்யுதா? சரி...அவள் கண்கள் அழகு தான்! ஆனால் அதை விட அழகான கண்களை நான் உனக்குக் காட்டட்டுமா?"

"இருக்கவே முடியாது!"

"இருக்கே! காட்டினால் என்ன செய்வே?"

"அதை விட்டுவிட்டு, நீங்க காட்டும் கண்ணுக்கு அடிமை ஆயிடுவேன் சாமீ!"

"ஹிஹி! அப்போதும் அடிமை தானா? சரி என்னுடன் கிளம்பு! வா, போகலாம்!"

(கண்கள் மலரும்....)

74 comments:

 1. //இப்போ வெயிலில் அவள் பொன்மேனி உருகுதே! என்னாசை பெருகுதே!
  //

  இதென்னது... கதாசிரியர் 'கேப்பில் கடா வெட்டுகிறார்'? :-))

  //ஒரு வெட்டு வெட்டினா மாதிரி ஆயி, வெட்டுப்பயலா, வெட்டிப்பயலா மாறிடறேன்!//

  :-))))

  ReplyDelete
 2. இந்த கதை கேட்டதில்லை, very interesting,தொடருங்கள்.:):)

  //இதென்னது... கதாசிரியர் 'கேப்பில் கடா வெட்டுகிறார்'? :-))//

  :):)

  ReplyDelete
 3. இது யாரு கதைன்னு எனக்குத் தெரியுமே, டீச்சர், டீச்சர், நான் சொல்லட்டுமா?

  என்னது? இந்தப் பதிவை முழுசாப் படிச்சுட்டு தான் பின்னூட்டம் போடணுமா? :‍P

  ReplyDelete
 4. படம் சூப்பரா இருக்கு கே ஆர் எஸ்!

  இந்தப் படத்தைப் பாத்துட்டுத்தான் கண்னதாசன் இப்படிப் பாடினோரோ?

  “நாளெல்லாம் திருநாளாகும்
  நடையெல்லாம் நாட்டியமாகும்!”

  ReplyDelete
 5. அகண்ட காவிரி அரங்கனுக்கு மட்டுமா மாலையானாள்? அவள் உம்மைப்போலல்ல, அரனுக்கும் சேர்த்தே அகழி செய்தாள்.

  அந்த பக்கத்து ஆள் ஆருண்டு இங்கே என்றிருந்தீரோ?

  ஆ ஊ என்றால் ஆலிலைப் பிள்ளையும் அரங்கநாதனும் ஆராவமுதனும் மட்டுமே ஆரத்தி பெறுகிறார்கள் உம் பதிவில்.

  ஆளுடைப் பிள்ளையின்
  அழகுதமிழ் பெற்ற ஆடவல்லான் ஆலாலசுந்தரன் அங்கயற்கன்னிபாகன் ஆனைமுகனப்பன் ஆறுமுகனப்பன் அருகேதான் இருக்கிறான்.
  ஆனைக்காவில்.

  அரங்கனுக்கு மட்டுமில்லை நீர்மாலை.
  அகலட்டும் உம்கண்ணின் காமாலை.

  ReplyDelete
 6. //ஓகை said...
  அரங்கனுக்கு மட்டுமில்லை நீர்மாலை.
  அகலட்டும் உம்கண்ணின் காமாலை//

  பதிவுகள் என்பது பூமாலை!
  அதிலா எனக்குக் காமாலை?
  பொருள் சிறப்பதே பொன்மாலை!
  சொல்லினைத் தேடல் வீண்மாலை!
  :-))))

  என்ன ஓகை ஐயா
  இந்தப் பதிவைப் பாருங்க - ஒரு வருசத்துக்கு முந்தி போட்டது - நீங்களும் அதில் பின்னூட்டி இருக்கீங்க!
  http://madhavipanthal.blogspot.com/2006/12/1.html
  காவிரி அரங்கனுக்கும், ஆனைக்கா அப்பனுக்கும் சேர்ந்தே மாலையாகி ஓடூகிறாள் என்று தான் சொல்லி இருக்கேன்! அப்பறம் ஏன் இந்த அராஜகம் பண்ணறீங்க? :-))

  ஏன் இம்புட்டு கொலவெறி என் மேல மட்டும்? சொல்லுங்க ஐயா சொல்லுங்க!

  ReplyDelete
 7. //அரங்கநாதனும் ஆராவமுதனும் மட்டுமே ஆரத்தி பெறுகிறார்கள் உம் பதிவில்//

  அதில் ஏன் சில பேருக்கு வருத்தம்?
  ஒரு பதிவுல நான் பெருமாளைப் பற்றிச் சொல்ல வரும் கதையில் கூட....
  கூடவே ஈசன், முருகன் என்று எல்லாரையும் சேர்த்துத் தான் சொல்லணும்-னு ஏன் இந்த சட்டாம் பிள்ளைததனம்? :-)

  அதுவும் அதை என் கிட்ட மட்டும் தான் எதிர்பார்க்கறீஙக! ஏன் ஏன் ஏன்?
  சொல்லு அஞ்சலி! சொல்லு!
  சொல்லு அஞ்சலி! சொல்லு அஞ்சலி! :-))))))

  நான் ரொம்ப நல்ல பையன்! சுள்ளான் சூடானேன் வையுங்க....சூடானுக்கு ஓடிப் பூடுவேன்! சொல்ட்டேன் ஆமாம்!

  ReplyDelete
 8. சூடானுக்கா போவீங்க? சுந்தரத் தமிழ் பேசும் தருமமிகு சென்னைக்குத் தானே ஓடிப் போகப் போறீங்கன்னு நெனைச்சேன். :-)

  நான் இன்னும் இந்தப் பதிவைப் படிக்கலை இரவிசங்கர். விரைவில் படித்துவிடுகிறேன். நாம ஏற்கனவே ஒரு தடவை பேசுன கதை தான்னு நெனைக்கிறேன். நான் இதனைத் தொட்டு சென்ற போது நீங்கள் என்னிடம் இந்த கதையை முழுதுமாக எழுதச் சொன்னதாகவும் நான் 'நீங்கள் எழுதினால் தான் முழுச்சுவையும் இருக்கும்' என்று சொன்னதாகவும் நினைவு. சரி தானா?

  பாலகுமாரனும் இந்தக் கதையை வைத்து ஒரு பாக்கெட் நாவல் எழுதியிருக்கார். நாலைஞ்சு வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன்.

  ReplyDelete
 9. //'நீங்கள் எழுதினால் தான் முழுச்சுவையும் இருக்கும்' என்று சொன்னதாகவும் நினைவு. சரி தானா?//

  சொன்ன நிகழ்வு சரி தான் குமரன்
  ஆனா சொன்ன சொல் தான் சரி இல்லை! :-)
  நீங்க எழுதினா இத விட பத்து மடங்கு சுவை அதிகமாகும்!
  நான் எழுதினால் வெறும் மாவு
  நீங்க எழுதினால் தினை மாவு

  ReplyDelete
 10. @குமரன்
  நீங்க ஜிராவுக்குப் பயந்துகிட்டு தான் இந்தக் கதையை எழுதவில்லை என்று நெதர்லாந்து ஆம்ஸ்டெல்வீனில் இருந்து நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன! :-)
  இதை எழுதினால் சங்கு சக்கர முத்திரை குத்திடுவோம் என்று ஒங்களை கத்தி முனையிலும் வேல் முனையிலும் மிரட்டியதாகவும் வீடியோ ஆதாரங்கள் சொல்கின்றன! :-)))

  ReplyDelete
 11. ராமானுஜர் எதிர் வர தனுர்தாசன் குடைபிடித்து செல்லும் படம் கவிதையாய் இருக்கிறது. எங்கு கிடைக்கிறது இந்த படமெல்லாம் உங்களுக்கு எக்ஸ்குளூசிவ்வாய்.
  :)

  சாண்டில்யன் எழுதிய "கவர்ந்த கண்கள்" நாவலை படித்திருக்கிறீர்களா.

  இந்தக் கதையை விரிவாக புத்தகமாக எழுதியிருக்கிறார் பரம வைணவரான சாண்டில்யன்.

  ---

  தனுர்தாசனை கவர்ந்து ஆட்கொண்ட கண்கள் மூன்று.

  முதலில் காவிரியின் நீர்ச்சுழியாகிய கண்கள்.

  பிறகு அதற்கு நிகரான பெண்மகள் ஒருத்தியின் கண்கள்.

  மூன்றாவதாக அவனை ஆட்கொண்ட நிகரற்ற கண்கள் எருடையது என்று சொல்லவும் வேண்டுமா.. :)

  ----------

  அவன் குடைபிடித்து தாங்கி செல்வது கணிகையர் குலத்தில் பிறந்தாலும் கற்பு நெறி வழுவாத தன் காதல் மனைவிக்கே. கதை தெரியாமல் படிப்பவர்கள் தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். அவள் அவனுடைய மனைவி என்று தாங்கள் குறிப்பிடாததால்.

  நன்றி.

  ReplyDelete
 12. @குமரன், ஓகை ஐயா & அனைத்து ஆன்மீகப் பதிவர்கள் - ஜிரா, SK, ஜீவா, வல்லியம்மா, கீதாம்மா, வெட்டி, திவா, திராச...இன்னும் அனைவரும்
  அடியேன் பணிவுடன் உங்கள் முன் வைக்கும் கேள்வி.

  நேற்று நம்ம ரவிசங்கர் நேர்காணல் பதிவில் வவ்வால் சைவ/வைணவ பதிவுப் பூசல் பற்றி நியாயமான பின்னூட்டம் போட்டூருந்தாரு! அரைபிளேடும் மிக அழகாக அதுக்குப் பதில் சொல்லி இருந்தாரு!

  இந்த நிலை குறித்து நமக்குள் முதலில் பேச வேண்டும்! நான் என்ன தவறு செய்கிறேன் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்களேன்...ப்ளீஸ்!

  SK திருப்புகழ் மட்டுமே எழுதுவார்! பிரபந்தம் இல்லை - யாரும் கேட்பதில்லை
  ஜிரா - அநூபூதி, முருகன், தெய்வானை குறித்த சர்ச்சைப் பதிவு- யாரும் கேட்பதில்லை
  நம்ம நண்பர் ஜீவா சைவமும் தத்துவமும் அழகுடன் அள்ளித் தருவார்-வைணவம் சொல்வதில்லை-யாரும் கேட்பதில்லை
  கீதாம்மா-அவங்க ஊர் பெருமாள் கோயில் பற்றிச் சொன்னாலும், சிதம்பரநாதன் அழகை நிறைய அள்ளிக் கொட்டுவாங்க-யாரும் கேட்பதில்லை
  திராச ஐயா-முருகனருளில்-அபூர்வமான பாடல்களை அள்ளித் தருவாரு-யாரும் கேட்பதில்லை!

  அடியேன் முருகனருளில் சஷ்டிப் பதிவுகள் அள்ளித் தருகிறேன்
  அம்மன் பாட்டில் இடுகிறேன்
  சிதம்பரம், திருவாரூர் தலங்கள் பற்றி எழுதுகிறேன்
  புதிரா புனிதமாவில் சைவ சமயக் கேள்விகள் இடம் பெறுகின்றன...

  ஆனால்
  என் பதிவில் மாலவனுக்கு மட்டுமே ஆரத்தி என்று ஏன் இப்படி உருட்டி எடுக்கிறீர்கள்?
  கோவி அண்ணாவும் - எதிர் முகாமில் இருந்து அதையே சொல்கிறார்

  ஏன் அடியேனை மட்டும் சுட்டுகிறீர்கள்?
  எனக்கு யாரேனும் மனசாட்சியுடனான விளக்கம் தாருங்களேன்! ப்ளீஸ்!
  If there is really an element of justice, I am ready to do a course correction.

  ReplyDelete
 13. I like arai blade's approach so much...
  என்ன தான் முருக/மால் விளையாட்டு விளையாடினாலும், அவை யாவும் வினையாகாத விளையாட்டே!
  தேவையான போது தேவையானவற்றுக்குக் குரல் கொடுக்க அவர் தவறுவதில்லை!

  தலைவரே
  நீங்க சொன்னது போல் ஹேரம்பா காதல் மனைவி-ன்னு ரெண்டாம் பாகத்தில் வரும்! அவங்களுக்குத் தனி விடு பாத்து வைக்கப்படும்.
  இதில் வராதது என் ஓவர் சைட்! பதிவில் திருத்தி விடுகிறேன் தல! நன்றி!

  ஆக்கப் பூர்வமும் ஊக்கப் பூர்வமும் சேர்ந்தால் ஆன்மீகத்தில் தேக்கப் பூர்வம் தலையெடுக்கவே எடுக்காது! இதுவே சிறியேனின் சிறு கருத்து!

  ReplyDelete
 14. //@குமரன்
  நீங்க ஜிராவுக்குப் பயந்துகிட்டு தான் இந்தக் கதையை எழுதவில்லை என்று நெதர்லாந்து ஆம்ஸ்டெல்வீனில் இருந்து நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன! :-)
  இதை எழுதினால் சங்கு சக்கர முத்திரை குத்திடுவோம் என்று ஒங்களை கத்தி முனையிலும் வேல் முனையிலும் மிரட்டியதாகவும் வீடியோ ஆதாரங்கள் சொல்கின்றன! :-)))

  //

  அப்படி ஒன்று நடந்ததாகவே எனக்கு நினைவில்லையே? நீங்களாக கிளப்பிவிடுகிறீர்களா? :-)

  பதிவுலகில் நான் பயப்படும் ஒரே நபர் இராகவன் தான் என்பது உண்மையே. ஆனால் அது அன்பினாலும் நட்பினாலும் வந்த பயமே ஒழிய மற்ற எந்த வகையிலும் இல்லை. கருத்து, நம்பிக்கை என்று வரும் போது அவருக்குப் பிடிக்காத கருத்துகளை அடக்கி வாசிக்க நான் முயல்வதுண்டு. ஆனால் வெற்றி பெற்றதில்லை. மற்றவர்களுக்குப் பிடிக்காத கருத்துகள் என்று தெரிந்திருந்தாலும் அடக்கி வாசிக்க முயன்றதில்லை.

  ReplyDelete
 15. //ஆனால்
  என் பதிவில் மாலவனுக்கு மட்டுமே ஆரத்தி என்று ஏன் இப்படி உருட்டி எடுக்கிறீர்கள்?
  கோவி அண்ணாவும் - எதிர் முகாமில் இருந்து அதையே சொல்கிறார்
  //

  அது தான் நட்சத்திர வாரத்தின் பெருமை. :-)

  எனக்கும் இந்த பெயர் உண்டு. நானும் தான் நீங்கள் செய்வதை எல்லாம் செய்கிறேன். ஆனால் 90% வைணவம் தான் எழுதுகிறேன் என்று தான் சொல்கிறார்கள். :-)

  ReplyDelete
 16. நீங்கள் தான் ஆன்மிக சுப்ரீம் ஸ்டார் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றவர்கள் செய்வது கவனிக்கப்படாமல் நீங்கள் செய்வது மட்டும் மிகைப்படுத்தப்படுகிறது என்றால் உங்கள் வீச்சு ஒரு எல்லையைத் தாண்டி இருக்கிறது என்று பொருள்.

  ReplyDelete
 17. //பதிவுலகில் நான் பயப்படும் ஒரே நபர் இராகவன் தான் என்பது உண்மையே//

  அப்ப எனக்கு எல்லாம் பயப்பட மாட்டீங்களா? என்ன கொடுமை குமரன்? :-))
  என் கொடுப்பினை அம்புட்டு தான்! நான் என்ன செய்ய...ஹூம்ம்ம்ம்!
  :-(

  ஆனா நான் ஜிராவுக்கு எல்லாம் பயப்படாதவவன் என்பதை இங்க லவுட் ஸ்பீக்கர் வைத்துச் சொல்லிக் கொள்கிறேன்! :-)
  ஜிரா என் மனத்துக்கு இனிய ஆருயிர்த் தோழர் என்பது பலருக்கும் தெரியும்.

  ஆனால் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு-ன்னு ஒரு அம்மையார் என் கிட்ட சொல்லி இருக்காங்க! அவிங்க ஆணைப்படி சென்னையில் என் தோழன் ஜிரா என்னால் இடிக்கப்படுவார் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
  ஏய் ஜிரா, வரேன் இரு! இருக்குடீ உனக்கு ஆப்பு! :-))))

  ReplyDelete
 18. ஆங் சொல்ல மறந்துட்டேனே....
  குமரனுக்கு ஒரு ஜிரா போல்...
  நான் பயப்படும் ஒரே ஆன்மீகப் பதிவர் கோவி.கர்ணன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்! :-)))

  ReplyDelete
 19. @குமரன்
  இன்னொன்னு கவனிச்சீங்களா?
  நம்ம ரவிசங்கர் சொன்னதில் இருந்து.....

  //வைணவக் கோயில்களில் தமிழ்ப் பாசுரங்கள் பாடுவார்கள் என்பதே நீங்களும் குமரனும் சொல்லித் தான் எனக்குத் தெரியும். இது போல சின்னச் சின்ன விசயங்கள். எப்போதாவது எட்டிப் பார்க்கும் எனக்கே இப்படி என்றால் தொடர்ந்து ஆன்மீகப் பதிவுகளைப் படிப்பவர்களுக்கு இன்னும் கூடுதல் புரிதல் வரலாம்//

  Should we gotto do what we gotto do?
  நல்லன சொல்லிட நடுக்கம் இல்லை
  அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!
  :-))

  ReplyDelete
 20. //என் பதிவில் மாலவனுக்கு மட்டுமே ஆரத்தி என்று ஏன் இப்படி உருட்டி எடுக்கிறீர்கள்?//
  krs
  நான் பதிவு உலகத்துல கால் பதித்து சில மாதங்களே ஆனதால உறுதியா சொல்ல முடில.
  எல்லாருக்குமே ஒரு இஷ்ட தெய்வம் இருக்கும். அதைப்பத்தியே அதிகம் நினைக்க எழுத தோன்றும். தப்பே இல்லை. ஓ இவரா, இதைப் பத்திதான் எழுதுவார் ன்னு படிச்சுட்டு போயிடுவாங்க. ஆனா யார் பல தெய்வங்களை பத்தியும் எழுதறாங்களோ அவங்க எழுத்துல பயாஸ் இருக்கான்னு பார்ப்பாங்க.
  வைணவம் மட்டுமே தமிழ் வளர்க்கலியே! கண்ணபிரான் திரும்பத் திரும்ப வைணவம் தான் தமிழை வளர்த்தது என்று எழுதறீங்களோ?
  "சித்தர்கள், முனிவர்கள், புலவர்களில் இருந்து திருமுருகாற்றுப்படை எழுதிய நக்கீரரில் இருந்து தொடங்கி,தாயுமானவர், குமரகுருபரர், கச்சியப்பர், வள்ளலார், பாரதியார், கோபாலகிருஷ்ண பாரதியார், சுத்தானந்த பாரதியார், திரு கிரிதாரி பிரசாத், திருமுருக கிருபானந்த வாரியார், புலவர் கீரன், கண்ணதாசன், சிவானந்த சரஸ்வதி, தயானந்த சரஸ்வதி, என்று இன்னமும் குறிப்பிட நிறைய இருக்கிறார்கள். ஆனால் சைவம், வைணவத்தையும் போய்க் கட்டிக்கொள்ளும். அத்வைதத்தையும் குசலம் விசாரிக்கும். அனைவரையும் ஒன்று, "ஒன்றே குலம், ஒருவனே தேவன்!" என்றே சொல்லும்." அப்படின்னு ஒருவர் எழுதினாங்க.

  // தில்லையில் தமிழ் நுழைய இன்னமும் கூத்தாட வேண்டியிருப்பதைத் தான் பாக்குறோமே! ஆனால்//

  இந்த வரிகள் சிலரை புண் படுத்தி விட்டது என்று நினைக்கிறேன். இந்த விஷயம் குறித்து உங்கள் புரிதல் மற்ற பலர் புரிதலில் இருந்து வேறுபட்டு இருக்கிறது. அங்கே நடந்தது அரசியல்தான். வேறு எதுவுமே இல்லை.

  கொஞ்சம் பயாஸ் இல்லாமல் எழுதலாம். அல்லது வைணவம்/ பெருமாள் பத்தி மட்டுமே எழுதலாம். அப்படி எழுதினால் மற்ற தெய்வங்களை ஒரு அதீத உற்சாகத்தில் இறக்கிவிடக்கூடாது. அப்படி செய்யறீங்களான்னு சொல்ல 3 மாசம் மட்டுமே பதிவுகளை படிக்கிற எனக்கு தகுதி இல்லை. நீங்களே அதை சுய சோதனை செய்யறது நல்லது.
  அதுக்கு பின்னால தப்பு செய்யலைன்னு நினச்சா.. கோ அஹெட். மத்தவங்களைப்பத்தி கவலைப்படாதீங்க.

  ReplyDelete
 21. ரவி,

  தலைப்பு வைப்பதிலாகட்டும், படம் போடுவதிலாகட்டும், பத்தி பிரித்து நகைச் சுவையுடன் எழுதுவதிலாகட்டும், மறுமொழிகளுக்கு மறுப்புமொழிகள் எழுதுவதிலாகட்டும் - தங்களை மிஞ்ச ஆளே இல்லை - தெரியுமா - பாராட்டுகள் - நல் வாழ்த்துகள்.

  எதைப் பற்றியும் ஒரு சிறு சஞ்சலம் கூட வேண்டாம். அரங்கனைப் பற்றி எழுதிக் கொண்டே இருங்கள். மற்றவர்கள் ஏன் அதிகம் அரங்கனைப் பற்றி எழுதுகிறீர்கள் எனக் கேட்பதே இன்னும் எழுதுங்கள் எழுதுங்கள் என ஆசையுடன் கூற விரும்புவதினால் தான்.

  போற்றுவார் போற்றலும் .....
  போகட்டும் கண்ணனுக்கே !!

  பட்ம் எங்கேந்துய்யா எடுத்தீங்க ? ச்ச்ச்சூப்பர்

  ReplyDelete
 22. கண்ணுக்குள் நூறு நிலவா? இது ஒரு கனவா? என்ற பாட்டு தான் ஞாபகம் வந்தது இந்த பதிவை படிக்கும் போது.
  அடுத்து என்ன நடந்தது என்பதை படிக்க ஆவலாக உள்ளேன்.

  ReplyDelete
 23. //அலோ, என்னை எதுக்குப் பாக்கறீங்க? நான் அவன் இல்லை! நான் யாருக்கும் குடையும் பிடிக்கலை! :-)//

  நட்சத்திரப் பதிவர் பொய் சொல்லுகிறார். போன பதிவின் பின்னூட்டங்களைப் படியுங்க. ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட இவரு குடை பிடிச்சது அப்பட்டமாத் தெரியும்.

  பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க. அது பழமொழி. பொய் சொல்லும் பதிவருக்குப் பின்னூட்டம் கிடைக்காது! இது புது மொழி!

  ReplyDelete
 24. தெரிந்த கதை ஆனாலும் உங்கள் எழுத்தில் இன்னொரு முறை படித்தேன், மகிழ்ந்தேன். :-)

  //அரங்கனுக்கு மட்டுமில்லை நீர்மாலை.
  //

  ரீப்பீட்டே!!!! :-)

  //....சூடானுக்கு ஓடிப் பூடுவேன்! சொல்ட்டேன் ஆமாம்//

  விடாமல் அங்கும் தொடருவோம் தெரியுமில்ல!! ஆமாம் :-)

  மற்றபடி சமனில்லாம எல்லாத்திலும் ஆஜர் ஆகக் கூடாதுன்னு எங்க தாத்தா சொல்லியிருக்காரு, அதனால நான் அப்பீட் ஆகிக்கறேன்.... :-)

  ReplyDelete
 25. எங்க ரங்கனைப்பற்றி என்ன எழூதினாலும் சுவைதான்.. தென்னீர்பொன்னி திரைக்கையால் அடிவருடும் அரங்கமாநகர் கோபுரப்படம் நெஞ்சை அள்ளுகிறது.
  தொடருங்கள் ரவி!

  ReplyDelete
 26. //ஆனா இந்த மாதிரி நெசமாலுமே நடந்து கொண்ட ஒரு இளைஞன், பின்னாளில் ஒரு பெரிய ஆன்மீகவாதியா மாறினானாம்! - அலோ, என்னை எதுக்குப் பாக்கறீங்க? நான் அவன் இல்லை! நான் யாருக்கும் குடையும் பிடிக்கலை! :-)
  //


  நம்பவே முடியல :P

  ReplyDelete
 27. அண்ணாச்சி, முதலில் உங்க மனசாட்சியை கேட்டு பாருங்க, அது எப்படிங்க, தீர்த்தம் வித் கேஆரெஸ்!னு தலைப்பு வைப்பீங்க.

  ஏன் பஞ்சாமிர்தம் வித் கண்ணபிரான்!னு வைக்க கூடாதா? :p

  ReplyDelete
 28. ஆழ்வார்கள் வந்த அளவுக்கு இந்த மாதவி பந்தலில் எத்தனை நாயன்மார்கள் உலா வந்து உள்ளானர்? சுட்டி அளிக்கலாம், ஆனால் சதவிதம் பத்துக்கும் கீழே தான்!
  திவா அண்ணன் வேணும்னா 3 மாசம் பதிவு படிப்பவராக இருக்கலாம். நாங்க 2 வருஷமா நடத்தறோம், கமண்ட் போடாம கல்தா குடுப்போமே தவிர உங்க பந்தலை தவறாம பாத்துட்டு தான் இருக்கோம். :p

  பாருங்க, இந்த நட்சதிர வாரத்துலயும் திருமங்கையாழ்வாரை தான் அழைச்சு இருக்கீங்க, ஒரு தேவாரம் உண்டா? திருவாசகம் உண்டா?

  ReplyDelete
 29. //ஆழ்வார்கள் வந்த அளவுக்கு இந்த மாதவி பந்தலில் எத்தனை நாயன்மார்கள் உலா வந்து உள்ளானர்? சுட்டி அளிக்கலாம், ஆனால் சதவிதம் பத்துக்கும் கீழே தான்!//

  எலே அம்பீ
  அதைத் தான்-லே கேக்குறேன்!
  எதுக்கு என்னைய மட்டும் கேக்குறீங்க?

  //SK திருப்புகழ் மட்டுமே எழுதுவார்! பிரபந்தம் இல்லை - யாரும் கேட்பதில்லை
  ஜிரா - அநூபூதி, முருகன், தெய்வானை குறித்த சர்ச்சைப் பதிவு- யாரும் கேட்பதில்லை
  நம்ம நண்பர் ஜீவா சைவமும் தத்துவமும் அழகுடன் அள்ளித் தருவார்-வைணவம் சொல்வதில்லை-யாரும் கேட்பதில்லை
  கீதாம்மா-அவங்க ஊர் பெருமாள் கோயில் பற்றிச் சொன்னாலும், சிதம்பரநாதன் அழகை நிறைய அள்ளிக் கொட்டுவாங்க-யாரும் கேட்பதில்லை
  திராச ஐயா-முருகனருளில்-அபூர்வமான பாடல்களை அள்ளித் தருவாரு-யாரும் கேட்பதில்லை!
  //

  இவிங்க எல்லாரும் என் இனிய நண்பர்கள்!
  இவிங்க எத்தினி பேரு ஆழ்வாரை எழுதினார்கள்? எத்தினி பேரு திவ்யதேசங்களைச் சொன்னார்கள்?
  சதவிதம் மூனுக்கும் கீழே????
  இவிங்கள பாத்து ஏன் திவ்யதேசம் எழுதலை-ன்னு கேட்கலையே?
  அவரவர் மனோதர்மத்துக்கு மதிப்பளிக்கும் நீங்கள், எனக்கு மட்டும் ஏன் வேறு விதிகளைக் காட்டுறீங்க?

  பதில் சொல்லுலே அம்பி! சொல்லாம எஸ்-ஆன ஒன்னை வவாச-ல மாவாட்டச் செயலாளாரா ஆக்கிடுவேன்! ஆமாம்!:-))

  ReplyDelete
 30. என்னது இது சின்னபுள்ளத்தனமா?

  முப்பது முக்கோடி தேவர்கள் இருக்கிறார்களாம். அதைத் தவிர நம்ம சாஸ்தா, அய்யனார், கருப்பண்ணசாமி, மொட்டை கோபுரத்தான் போல் எண்ணற்ற தெய்வங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் பந்தலில் வைத்தால் அது அடர் கானகம் போல் ஆகிவிடாதா?

  உங்கள் பதிவுகளில் பிடித்ததே நீங்கள் ஒவ்வொரு விசயத்தையும் அழகுற தொடங்கி, பிறகு அதனை விரித்து அதன் பொருளை விளக்கி அதற்கு அழகாக படங்களை சேர்த்து, வருகின்ற பின்னூட்டங்களை வரவேற்று, இனிதாக உரையாடுவதுதான்.

  திடீரென்று இப்பொழுது இந்த 'சைவ, வைணவ' கேள்வி ஏனென்று புரியவில்லை. அந்த கேள்வி உங்களை இந்தளவு பாதித்ததும் ஏனென்றும் புரியவில்லை. :-(

  இன்னும் சாக்தம், காபாலிகம், தாந்திரீகம்,, பௌத்தம், சமணம் பற்றி எல்லாம் யாரும் கேட்கப் போகிறார்களோ என்னவோ...

  ReplyDelete
 31. ஹலோ! நல்ல கதையா இருக்கே, அவங்க ஏன் எழுதலை?னு நாங்க கேக்கறது இருக்கடும், முதல்ல உங்க கிட்ட கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க அப்பு! :))

  அதாவது, கேள்வியை முதலில் உங்ககிட்ட இருந்து ஷ்டார்ட் மீஜிக் போட்ருக்கோம்னு வெச்சுக்கங்களேன். :p

  இந்த வேலு நாயக்கர் மாதிரி, ஜிராவை பெருமாள் பத்தி எழுத சொல்லு! நான் சைவம் எழுதரேன்! கீதா மேடமை மாரியாத்தா பத்தி எழுத சொல்லு, நான் சிவன் பத்தி எழுதறேன்!னு சீன் போட வேண்டாம்.

  ReplyDelete
 32. //கீதாம்மா-அவங்க ஊர் பெருமாள் கோயில் பற்றிச் சொன்னாலும், சிதம்பரநாதன் அழகை நிறைய அள்ளிக் கொட்டுவாங்க-யாரும் கேட்பதில்லை//

  கீதா மேடம் கை வைக்காத தெய்வங்களே இல்லை, நவராத்திரினா அம்மனை கூப்டு சுண்டல் குடுக்கறாங்க,
  ஆடி மாதமானா கூழ் ஊத்தி வேப்பிலை எடுத்து ஆடறாங்க. சிவராத்ரினா பதிவு போட்டு கைலாசத்தை கலங்கடிக்கறாங்க, பிள்ளையார் சதுர்த்தினா வேகாத கொழுகட்டைய போட்டோவா போட்டு பதிவு போடறாங்க,
  அட கூடாரவல்லிக்கு பதிவு போட்டாங்கய்யா அவங்க!

  (மேடம், சைடு கேப்புல கிடா வெட்டி இருக்கேன், இப்போதைக்கு கண்டுகாதீங்க என்ன?) :p


  //திராச ஐயா-முருகனருளில்-அபூர்வமான பாடல்களை அள்ளித் தருவாரு-//

  அடுத்தாப்புல திராச சார்!

  அவரும் அப்படி தான்,
  நவராத்திரிக்கு 9 நாளும் சும்மா நச்சுனு பாட்டு போட்டு பின்னி இருந்தாரு.
  வினாயகர் சதுர்த்தி, ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, சூர சம்காரம்னு பாகுபாடு இல்லாம பதிவு போட்டு இருந்தாரு.

  உங்க சைடுல இருந்து என்ன பதிவு வந்தது?னு கேக்கறேன்.

  போதாகுறைக்கு பெருமாள் தான் தமிழ் கடவுள்னு ஸ்டார் வாரத்துல போடறீங்க. :))
  திராச சார்! இந்த தடவ இவரை கந்த கோட்டம் கூட்டிட்டு போகாதீங்க. :p

  அதனால உங்க கேஸ் செல்லாது! செல்லாது. :))

  ReplyDelete
 33. neenga enna venumnalum ezhuthunga. ellame azhaga iruku... aduvum inda padivula vantha photo super...

  hariyum sivanum onnu - ariyadavan vayila mannu appadinu enga super stare solikiraru.. adunala ellarum sandaiya vitu samathanama irunga

  ReplyDelete
 34. \\கண்கள் மலரும்....)\\

  நான் வெயிட்டிங் ;)

  ReplyDelete
 35. தனுர்தாசன் உய்ய வந்த ராமானுஜர் பாதங்கள் வாழி.
  கந்த கோட்டம் எப்பொ?:)

  ReplyDelete
 36. //அவரும் அப்படி தான்,
  நவராத்திரிக்கு 9 நாளும் சும்மா நச்சுனு பாட்டு போட்டு பின்னி இருந்தாரு.
  உங்க சைடுல இருந்து என்ன பதிவு வந்தது?னு கேக்கறேன்//

  எலே அம்பி
  சிவராத்திரிக்கு கொறட்டை விட்டுக்கிட்டு இருந்தியா?
  ஆருத்ரா அன்னிக்கு ஆப்பம் துன்னுக்கிட்டு இருந்தியா?
  கந்த சஷ்டி ஆறு நாளும் கம்பு சுத்திக்கிட்டு இருந்தியா?
  அம்புட்டு ஏன்?
  கிறிஸ்துமஸ் அன்னிக்கு என்ன கிண்டிக்கிட்டு இருந்த?

  அபாண்டம் பேசுறதையே பொழைப்பா வச்சிக்கிட்டுத் திரியும் உன்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணாம வுடப் போறதில்லடீ! :-)))

  போய் வாரியார் பெருமான் கிட்ட, மதுரகவி ஆழ்வாரைப் பத்தி பிரசங்கம் பண்ணச் சொல்லுவியா?
  வேளூக்குடி சுவாமிகள் கிட்ட போயி வேப்பமரத்து அம்மன்-ன்னு பேசச் சொல்லுவியா?

  வந்துட்டாங்க பெருசா, மாலவனுக்கு மட்டுமே ஆரத்தி நடக்குதுன்னு!
  என்னிக்குமே பொங்காதவன் இன்னிக்கி பொங்கிடறேன் பாருங்க! :-)))


  ஓகை ஐயா, ஸ்டார்ட் பண்ணி வுட்ட நீரு எங்க போனீரு! எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும்! :-))

  //போதாகுறைக்கு பெருமாள் தான் தமிழ் கடவுள்னு ஸ்டார் வாரத்துல போடறீங்க. :))//

  எதுக்குய்யா ஒங்களுக்கு எரியுது?
  முருகப் பெருமானத் தாழ்த்திப் பேசுனா மகா பாவம்! அடியேன் குல தெய்வம்! அப்படிச் செய்யலையே!
  முருகனைத் தமிழ்க் கடவுள்-ன்னு தானே சொன்னேன்!
  மாயோனும் தமிழ்க் கடவுள்-ன்னு சொன்னா எதுக்கு எரியுது?
  அதுவும் தரவுகளோடு தானே முன் வைக்கிறோம்!

  தரவுகளும் தரக்கூடாது, வாயும் பேசக்கூடாது, அப்படின்னு சொல்ல இங்க என்ன சர்வாதிகாரம் நடக்குது?

  இதே ஜிரா, பெருமாள் சிவன் எல்லாரும் வந்து மகுடம் காலடியில் புரள, தங்கள் தலைய முருகன் காலடியில் ஒத்தி ஒத்தி எடுத்தாங்க-ன்னு பதிவ போட்டாரு! போய் இதே சவடாலை அங்க காட்டுறது தான?

  எங்களால அப்படி எல்லாம் கல்லெறிய முடியாது! அப்படி எறிஞ்சா எங்க முருகன் மேலயும் அது படுமே-ன்னு அன்பினால் அமைதியா இருந்தா, ஆஃப் பாயில் போட்டு ஆப்படிக்கறீங்களா?

  அடியேனும் குமரனும் சாந்த சொரூபமா பதில் சொல்லிக்கிட்டு இருப்போம்! அரைச்ச மிளகாய நல்லா அரைக்கலாம் என்பது தானே இங்க நடக்குது? அது எல்லாம் பழைய கதை! இனி வேலும் மயிலும் துணை! குத்துக் குத்துக் கூர் வடி வேலால்! இனி வேலோட வரேன் இருங்க!

  :-)))))

  அப்பாடா பொங்கியாச்சு!
  நன்றி அம்பி! :-)

  ReplyDelete
 37. //போய் வாரியார் பெருமான் கிட்ட, மதுரகவி ஆழ்வாரைப் பத்தி பிரசங்கம் பண்ணச் சொல்லுவியா?
  வேளூக்குடி சுவாமிகள் கிட்ட போயி வேப்பமரத்து அம்மன்-ன்னு பேசச் சொல்லுவியா?
  //

  என்னது... ஜிரா, குமரன், கீதாம்மான்னு சொல்லிட்டிருந்தீங்க. இப்போ வாரியார் ரேஞ்சுக்கு பிரமோஷன் ஆ(க்கி)கிட்டிங்க போல :-))

  ஓகை, அரைபிளேடு, அம்பி, ஆஹா! ஒரு குரூப்பாத்தான் கிளம்பியிருக்காங்க போல. உங்ககிட்டயே வர்றாங்களே :-))

  ReplyDelete
 38. All Jokes Apart!
  அனைத்து ஆன்மீகப் பதிவர்களையும் இது குறித்துப் பேசத் தனி மடல் அனுப்பி உள்ளேன்! வவ்வால் ரவிசங்கரின் நேர்காணல்-ல கேட்டது சரி தான்! அவருக்குத் தான் நன்றி சொல்லுவேன், for belling the cat!

  I just dont want see this sheer hypocrisy anymore in aanmeega pathivugal! Nallava irukku?
  எதுக்கு அவரவர் மனோதர்மப் படி எழுத உரிமை மறுக்கிறீர்கள்?

  அரியும் சிவனும் ஒன்னு-ன்னு நல்லாவே தெரியும்! அறியாதவன் வாயில் மண்ணு-ன்னும் தெரியும்!

  எத்தனை முறை சொல்லி இருப்பேன், முனியே நான்முகனே முக்கண்ணப்பா-ன்னு நம்மாழ்வார் வீடு பேறு பெறும் போது சிவபெருமானையும் வேண்டிக் கொள்கிறார்-ன்னு! அதெல்லாம் கண்ணுக்குத் தெரியலையா?

  ஏன்டா நம்மாழ்வார் பாடினாரு-ன்னு சொல்லுற? ஒரு வாரம் அவர் பாடினாருன்னு சொல்லு? இன்னொரு வாரம் இவர் பாடினாருன்னு சொல்லு! மாத்தி மாத்திச் சொல்லுடா! அப்ப தான் முத்திரை குத்துவதை நிறுத்துவோம் என்று சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது எல்லாம் ஒன்றும் பயன் தராது!

  வெளியில் தான் முத்திரை குத்தல்-ன்னா இங்கு ஆன்மீகப் பணி செய்யும் நம்மிடையேயும் ஏன் இந்த முத்திரை குத்தல்?

  என்னிக்கும் இல்லாத அதிசயமா இருக்கே! கேஆரெஸ் பொங்காதீங்க! ஜோக்குக்குத் தான் சொன்னோம்-னு எல்லாம் சொல்லாதீங்க!
  Let us turn every small stone we could, to remove such an undercurrent flowing here...

  தியாகராஜரை, வைணவ அர்ச்சகர்கள் அவதூறு செய்ததைப் பட்டவர்த்தனமா நான் சொல்லலை? மூடி மூடி மறைச்சேனா? ராமர் பாலம் கட்டிக் காத்தேனா? இராமானுசர் ராமர் பாலத்தைப் பத்தி என்ன சொல்லி இருப்பாரு-ன்னு பதிவு போடலை?

  ஆன்மீகத்தில் உள்ள தில்லைப் பிரச்சனையோ, குருவாயூர் பிரச்சனையோ...பேசவே கூடாது! ஏகாத்ர தியான ஸ்வரூபத்தில் ஏகாந்த நிலையில் இருப்போம்-னு பொதுப்படை ஆக்க முடியாது!

  The first step in fixing any problem is to identify the problem! If we dont recognize our setbacks, people who are not in aanmeegam are going to recognize and throw it on us!

  அடியேனுக்குத் தில்லையோ, திருமலையோ...
  இறையன்பு மட்டுமே முன்னிற்கும்!

  உஷ்ஷ்...அப்பாடா பெருமா...ஐயோ வேணாம் சாமீ...இறைவா!

  ReplyDelete
 39. ச்சே....இந்தக் கூத்துல ஒரு அழகான கதை பின்னுக்குத் தள்ளப்பட்டிருச்சி!
  மத்த இடத்தில் என்ன நடக்குதோ, அதே தான் இங்கயும் நடக்குது...

  அடியேன் ரொம்ப அனுபவிச்சு எழுதினேன் இந்தப் பதிவை!
  //வேதம் சுடும் வேதியர்க்கும் பாதம் சுடும்; தமிழோதி வரும் முனிவனுக்கா காத தூரம் சுடும்? நாதம் சுடும், கீதம் சுடும்! ஆயின், நாரணா என்றாலே அந்தச் சூடும் சுடும்!//

  Instead of finger pointing...I myself am ashamed!
  ஆழ்வார் தப்பைத் தன் மேலயே போட்டுக்குவாரு!
  பற்றே ஒன்றுமிலேன் வெறும் பாவங்கள் செய்து உழல்வேன்!
  மற்றே ஒன்று அறியேன் மாதவனே எங்கள் மாயவனே...

  இப்ப இதுக்கு ஈடா நான் இன்னொரு சைவப் பாட்டைத் தேடணும்! இல்லீன்னா என் கதி அதோ கதி!
  இருங்க யோசிக்கறேன்!

  வலையைக் கடக்க அறியாதே
  வினையிற் செருக்கியடி நாயேன்
  விழலுக்கு இறைத்து விடலாமே
  - திருப்புகழ் பா!

  தீர்க்கதரிசிப்பா அந்த மகான் அருணகிரிநாதர்!
  வலையைக் கடக்க அறியாதே-ன்னு பாடி வச்சிட்டுப் போயிருக்காரு!
  வலையுலகைக் கடக்க அறியாதே-ன்னு நாயேன் இங்கிட்டு இருக்கேன்!
  :-(((((((((((((

  ReplyDelete
 40. விண்மீன் வாரம் உங்களைப் படுத்துதுன்னு நினைக்கிறேன். நேற்று எஸ்.கே. ஐயா ஒரு வார்த்தை சொன்னாருன்னு பொங்குனீங்க. இங்கே ஓகை ஐயா ஒரு வார்த்தை சொன்னாருன்னு பொங்குறீங்க. அவங்க சொன்னது மிகை தான் என்றாலும் நீங்களும் மிகையாகப் பொங்குகிறீர்கள் என்று தோன்றுகிறது. நிறுத்துங்கள். ஊருக்குப் போய்விட்டு வந்த பின்னால் இதனைப் பற்றி பேசலாம். அப்போதும் பேசுவதற்கு இருந்தால். உங்கள் பக்கத்து (சரி நம் பக்கத்து என்றே சொல்லுவோம்) கருத்தைச் சொல்லியாகிவிட்டது. அதற்கு பதில் வரும் வரை பேசுவோம் என்பது வேண்டாம்.

  ஸ்டாப் த ம்யூசிக். :-)

  (இன்னும் நான் இந்த அழகான கதையைப் படிக்கலை. பின்னூட்டங்களை மட்டும் படிச்சுக்கிட்டு இருக்கேன். கதையையும் படிக்கிறேன். )

  ReplyDelete
 41. ஜி.ராவிற்கு முருகன் மட்டுமே (தமிழ்) கடவுள். அவர் சொல்வது உண்மை இல்லைனு உங்களுக்கும் குமரனுக்கும் எண்ணம்.

  நீங்க மத்தவங்களும் (தமிழ்) கடவுள்னு சொல்றதால தான் பிரச்சனை. அதுவுமில்லாம நீங்க தொல்காப்பியத்துல இருந்து எல்லாம் எடுத்து சொன்னா மறுபடியும் பிரச்சனை தான் :-)

  எல்லாமே ராகவன் செயல்.

  (நீங்க ரெண்டு பேரும் சண்டை போடலனா போர் அடிக்கும்... அதனால நல்லா சண்டை போடுங்க:-))

  அப்பறம் உங்க பதிவுக்கு மாதவி பந்தல்னு ஏன் பேர் வெச்சீங்கனு ஒரு நிமிஷம் யோசிச்சா உங்களுக்கே தெரியும் இது வைணவ பந்தலா இல்லை சம தர்ம பந்தலானு ;)

  அப்பறம் உங்களை மட்டும் கேள்வி கேக்கறாங்கனு நினைக்க வேண்டாம். ஜிராவோட நான் இதைவிட நிறைய சண்டை போட்டிருக்கேன்))

  ReplyDelete
 42. //விண்மீன் வாரம் உங்களைப் படுத்துதுன்னு நினைக்கிறேன். நேற்று எஸ்.கே. ஐயா ஒரு வார்த்தை சொன்னாருன்னு பொங்குனீங்க. இங்கே ஓகை ஐயா ஒரு வார்த்தை சொன்னாருன்னு பொங்குறீங்க//

  ரிப்பீட்டே!!!

  ReplyDelete
 43. //வேதம் சுடும் வேதியர்க்கும் பாதம் சுடும்; தமிழோதி வரும் முனிவனுக்கா காத தூரம் சுடும்? நாதம் சுடும், கீதம் சுடும்! ஆயின், நாரணா என்றாலே அந்தச் சூடும் சுடும்!//

  அழகான எழுத்து. வழமையிலிருந்து மாறுபட்டு எழுதப்பட்டிருந்ததை நான் உணர்ந்தேன். அதைப் பற்றி ஒரு வார்த்தை எழுதியிருக்கலாம். ஆனால் எல்லாரும் அடிக்கும் போது கூட கொஞ்சம் சீண்டிப் பார்ப்பதில் மனது போய்விட்டது.

  ReplyDelete
 44. கேயாரெஸ், மத்தவங்க எப்படியோ ஆனால் நான் எழுதினது நூறு விழுக்காடு அங்கதம்தான். திருவாதிரைக் களியை என்னுடன் சேர்ந்து ருசித்தவரை அப்படியெல்லாம் சொல்லிவிடுவேனா?

  வேகப்பந்தாளர் சுழற்பந்து போட்டால் கில்லி கழன்றுவிடுமோ? பந்தை ஆறுக்கு அனுப்ப வேண்டாமோ?

  ReplyDelete
 45. ஓகை ஐயா
  அடியேனும் சுடுசொல் பேசுவேனா?
  வரம்பின்றி விவாதங்கள் இதுவரை அடியேன அறிந்ததா?

  பல நாள் சீண்டல்கள்! அதுவும் ஜிராவுடன்! :-)))
  அதான் இன்னிக்கி கொஞ்சம் பொங்கிருச்சி!
  அடியேனை அருள் கூர்ந்து மன்னியுங்கள்!

  எலே அம்பி
  மன்னிப்பு ஐயாவிடம் தான்! உன்னிடம் அல்ல! உனக்கு இருக்கு நேரா வரும் போது! :-))

  ReplyDelete
 46. சூடானுக்கு ஓடுவீர்களா? அப்படியெல்லாம் சொல்லப்படாது. சொல்லி சொல்லி அடிப்பவர் துவண்டு போகலாமா?

  போகிற போக்கில் பதில் சொல்லவேண்டியதை ஏன் பரிட்சை அளவுக்கு உயர்த்துகிறீர்கள்?

  சரி அப்ப்டித்தான் என்றாலும் இந்தப் பரிட்சையில் வெல்லுங்கள் ரவி.

  ReplyDelete
 47. //ஆனா இந்த மாதிரி நெசமாலுமே நடந்து கொண்ட ஒரு இளைஞன், பின்னாளில் ஒரு பெரிய ஆன்மீகவாதியா மாறினானாம்! - அலோ, என்னை எதுக்குப் பாக்கறீங்க? நான் அவன் இல்லை! நான் யாருக்கும் குடையும் பிடிக்கலை! :-)
  //

  நீங்க என்ன பெரிய ஆன்மிகவாதியா என்ன? நெனைப்பு தான் பொழைப்பைக் கெடுக்குது. ஒழுங்கா உதவி குடியரசுத் தலைவர் பொழைப்பைப் பாருங்க. :-) (அதென்ன விபின்னா உதவி அதிபர்ன்னு சொல்லலாமே? உதவி குடியரசுத் தலைவர்ன்னு சொல்லியிருக்கீங்க? )

  //அந்தக் கள்ளன் அரங்கனோ, காவிரிப் பெண் வரும் வழியிலே பாம்புப் படுக்கை விரித்துப் படுத்துக் கொண்டான்!
  //

  இந்த மாதிரி காஞ்சிபுரத்துலயும் பண்ணுனானில்லை இந்தக் கள்வன்?!

  //வேதம் சுடும் வேதியர்க்கும் பாதம் சுடும்; தமிழோதி வரும் முனிவனுக்கா காத தூரம் சுடும்? //

  புரியலை புரியலை புரியலை.

  //மின்னலைப் பிடித்து, பொன்னதில் உருக்கி, மேகத்தில் துடைத்து, பெண்ணெனப் படைத்து விட்டான் அந்தப் பிரம்மன்!
  //

  இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே. :-)

  இந்தக் கதையில வர்ற காதல் தம்பதியர் பெயர் தனுர்தாசனும் ஹேரம்பாவுமா? எனக்கு வேறு பெயர்கள் தானே நினைவில் இருக்கு. இனிமேல அந்தப் பெயர்களைச் சொல்லப் போறீங்கன்னு நினைக்கிறேன். அதனால முந்திரிக்கொட்டை மாதிரி இப்ப சொல்லலை. :-)

  ReplyDelete
 48. ஓகை ஐயா.

  கூடல் அழகர் என்றால் கூடலம்பதியில் இருக்கும் சுந்தரேஸ்வரரையும் சொல்லலாம்; கூடலழகரையும் சொல்லலாம். மீனாட்சி சுந்தரரைப் பற்றிப் பேசும் போது அவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். பெருமாளைப் பேசும் போது அவனை மட்டுமே பேசுகிறோம். அப்போதும் எமக்குக் காமாலைக் கண்ணென்று சொல்லுவீர்களா?

  அழகரசன் என்றால் சுந்தரேஸ்வரனும் அழகரசனே; சுந்தரராஜனும் அழகரசனே. அழகென்ற சொல்லுக்கு முருகா என்றும் சொல்வதுண்டு. ஒருவரைப் பற்றி சொல்லும் போது மற்றவரைச் சொல்லவில்லையே; காமாலைக் கண் என்று சொல்லுவீர்களா?

  தில்லையைப் பற்றியும் தமிழ்க்கடவுளைப் பற்றியும் உள்ளத்தில் உள்ள கருத்தைச் சொன்னது இப்படி நீங்கள் பேசுவதற்குக் காரணங்களா? இவற்றிற்கு உங்கள் கருத்தைச் சொல்வதோடு நிற்கலாமே. ஏன் இப்படி ஒரு மிகைப்படுத்தல்.

  அகண்ட காவிரி அரங்கனுக்கு மாலையானாள் என்று சொன்ன போது அரனுக்கு அவள் மாலையாகவில்லை என்று சொன்னாரா காமாலைக் கண்ணபிரான்? அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்ற பேச்சு ஏதுக்கு?

  அகண்ட காவிரி அரங்கனுக்கு அகழி செய்தாள் என்று சொல்லும் போதெல்லாம் அடைப்புக்குறிக்குள் அவள் அரனுக்கும் சேர்த்தே அகழி செய்தாள் என்று சொல்ல வேண்டுமோ? தில்லையின் ஆதிரைக்களியைப் பற்றி பேசும் போது நடராஜரை மட்டும் சொன்னீர்களா? கோவிந்தராஜரையும் சொன்னீர்களா? தில்லை என்னும் போது சிற்றம்பலத்தை மட்டுமே பேசுகிறீர்களே ஏன் சித்திரகூடத்தைப் பேசுவதில்லை; குறுகிய மனது - காமாலைக் கண் என்று உங்களையும் பேசட்டுமா? அப்படிப் பேசுவது தான் முறையாகுமா?

  ஆ ஊ என்றால் ஆலிலைப் பிள்ளையும் அரங்கநாதனும் ஆராவமுதனும் ஆரத்தி பெறத்தான் செய்கிறார்கள் இப்பதிவில் - அதில் என்ன குறை? எங்காவது நஞ்சுண்டானும் அம்பலநாதனும் அமுதகடேசனும் குறைத்துப் பேசப் பட்டார்களா? அடுக்கு மொழியில் தாக்குவது எதற்கு? இந்தப் பக்கத்து இளையவர் இளைத்தவர் என்றிருந்தீரோ?

  ஆளுடைய பிள்ளையின் அழகுதமிழ் பெற்ற அரன் ஆனைக்காவில் அருகிலே தான் இருக்கிறான். அவனைக் குறிக்காதது காமாலைக் கண் என்றால் கொல்லிக்காவலன் குலசேகரனின் குழைந்த தமிழ் பெற்ற திருச்சித்திர கூடத்தைக் குறிக்காதவரை என்னென்பது?

  உங்கள் பேச்சில் இருக்கும் மிகையைச் சுட்டிக்காட்டவே உங்களுக்குச் சமமாக வார்த்தையாடினேன். என் வார்த்தைகளில் இருக்கும் மிகையை மன்னித்து அருளுங்கள். எங்கள் வார்த்தைகளை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் தமிழை நாங்கள் சுவைத்ததைப் போல் என் வார்த்தைகளிலும் ஏதேனும் சுவையிருந்தால் சுவையுங்கள். :-)

  ReplyDelete
 49. தனுர்தாசர் தன் மனைவியாருக்கு நடை பாவாடையும் விரிப்பாரே. அதனைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே இரவிசங்கர்.

  //ஜிரா - அநூபூதி, முருகன், தெய்வானை குறித்த சர்ச்சைப் பதிவு- யாரும் கேட்பதில்லை//

  இது முழுவதும் உண்மையில்லை. இராகவன் மார்கழி முழுவதும் திருப்பாவைக்கு விளக்கம் கொடுத்தார். ஆனால் அடிக்கடி ஆரத்தி யாருக்கு என்று கேட்டால் ஐயமே இல்லாமல் குமரனுக்குத் தான். :-)

  //திடீரென்று இப்பொழுது இந்த 'சைவ, வைணவ' கேள்வி ஏனென்று புரியவில்லை. அந்த கேள்வி உங்களை இந்தளவு பாதித்ததும் ஏனென்றும் புரியவில்லை. :-(
  //

  எனக்கும் இந்தக் கேள்வி இருக்கின்றதென்றாலும் பதிவுகளைத் தாண்டியும் நடக்கும் உரையாடல்களால் என்ற காரணம் புரிகிறது.

  //போதாகுறைக்கு பெருமாள் தான் தமிழ் கடவுள்னு ஸ்டார் வாரத்துல போடறீங்க. :))
  //

  அம்பி. இரவிசங்கர் அப்படியா சொன்னார்? அப்படி மட்டும் சொல்லியிருந்தார்னா நானும் உங்க முயூசிக்ல கலந்துக்கறேன். அவர் பெருமாளும் தமிழ்க்கடவுள்ன்னு சொன்ன மாதிரி எனக்கு நினைவு. நீங்க அவர் பெருமாள் தான் தமிழ்க்கடவுள்ன்னு சொன்னதா சொல்றீங்க?

  ReplyDelete
 50. //உங்களுக்கே தெரியும் இது வைணவ பந்தலா இல்லை சம தர்ம பந்தலானு ;)//
  சம தர்மம் ன்னா எல்லாத்தைப்பத்தியும் எழுதினாதானா?
  எல்லாருக்குமே ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்கிட்ட ஈடுபாடு அதிகமா இருக்கும்தானே? அப்ப அதைப்பத்தி எழுதறதுல தப்பு என்ன இருக்கு? என் கடவுள் மட்டும்தான் கடவுள், உன் கடவுள் கடவுள் இல்லே ன்னு எப்ப சொல்கிறோமோ அப்பதான் சம தர்மம் காணாமப்போகுது.

  ஆமா கேஆர்எஸ், மத்த தமிழ் தெய்வங்களா தொல்காப்பியர் சொன்ன வேந்தன் என்கிற இந்திரன், வருணன் பத்தி ஏன் எழுதல?
  :-)))))))))))))
  அப்படா ஏதோ நம்மால ஆனது கொளுத்தி போட்டாச்சு. krs க்கு பத்து பின்னூட்டம் தேறும்!

  ReplyDelete
 51. This comment has been removed by the author.

  ReplyDelete
 52. @குமரன்
  //நீங்களும் மிகையாகப் பொங்குகிறீர்கள் என்று தோன்றுகிறது//

  இல்லை! இல்லை! இல்லை!
  எப்போது பொங்கி என்னைப் பார்த்துள்ளீர்கள்? சொல்லுங்க பார்ப்போம்! I am pained!

  இப்போ, எனக்கு இந்தக் கதையின் அடுத்த பாகத்தைப் போட வேண்டுமா என்று அச்சம் தோன்றுகிறது!

  ஏன்னா...அதில் மறுபடியும் திருக்கண்ணழகு...உடையவர் தாழ்ந்த சாதியான உறங்கா வில்லியை அணைத்துக் கொள்வது, மற்ற உயர்சாதி வைணவச் சீடர்களின் நடத்தை கண்டு கண்டிப்பது எல்லாம் வரும்! அதான் தயக்கம்!

  உண்மையான ஆன்மீகம் கேள்வி கேட்காது! அமைதி பெறும்! மற்றவை எல்லாம் குழப்பவாத ஆன்மீகம், கதையில் அவிங்களைக் கண்டிக்கும் பகுதியை மட்டும் நீக்கி விட்டு எழுதுங்கள்...அதை எல்லாம் நாமே ஏன் சொல்ல வேண்டும்-ன்னு வேற பேச்சு வருகிறது!

  அதனால் பேசாமல் இந்தக் கதையை இத்துடன் Ditch செய்து விடலாம்-னு தோணுது!

  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? குமரன் மற்றும் அனைத்து நண்பர்களும் சொல்லுங்கள்!

  ReplyDelete
 53. No way.

  கதையைத் தொடர்ந்து எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன். முனிவாகனர் கதையிலும் நந்தனார் கதையிலும் வராதது இந்தக் கதையில் வரவில்லை. அந்தக் கதைகளை நன்கு அறிந்தவர்கள் இந்தக் கதையையும் கேட்டுக் கொள்வார்கள். முன்பு தியாகராஜர் - திருமலை கதையிலும் அர்ச்சகர்களைப் பற்றி நீங்கள் சொன்னது சிறு சலசலப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கிறது. ஆனால் 'சர்ச்சையில் சிக்காத ஆன்மிகப் பதிவர்' என்ற பெயர் வேண்டும் என்று விரும்பி நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லாமல் விடக்கூடாது. சொல்ல வந்தவை முக்கியமா 'சர்ச்சையில் சிக்காத பதிவர்' என்ற பெயர் முக்கியமா என்று இப்போதே உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். வேண்டுமானால் அடுத்த பகுதியை ஊருக்குச் சென்று வந்த பிறகு இடலாம்.

  ReplyDelete
 54. //No way.

  கதையைத் தொடர்ந்து எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன். //

  ரீப்பீட்டே..

  உங்களுக்குச் சரின்னு தெரிவதை தயங்காமச் சொல்லுங்க கே.ஆர்.எஸ்.

  ReplyDelete
 55. என்ன நியாயம்? கதையை ஆரம்பிச்சா முடிச்சே ஆகணும். முடிக்கலை என்றால், கனவில் பூதம் வரும்; அப்புறம் மழையில் குடை திறக்காம சதி பண்ணும்; பரவாயில்லையா?

  //வேண்டுமானால் அடுத்த பகுதியை ஊருக்குச் சென்று வந்த பிறகு இடலாம்.// ரிபீட்டு.

  //என் கடவுள் மட்டும்தான் கடவுள், உன் கடவுள் கடவுள் இல்லே ன்னு எப்ப சொல்கிறோமோ அப்பதான் சம தர்மம் காணாமப்போகுது// இதுக்கும் ரிபீட்டு. இந்து மதத்தின் (பூனை குடிச்சபோது மீசையிலிருந்து கீழே விழுந்த துளியளவு தான் எனக்கு தெரியும்) தாத்பரியம் அந்த சமதர்மம்.

  ReplyDelete
 56. //என்ன நியாயம்? கதையை ஆரம்பிச்சா முடிச்சே ஆகணும். முடிக்கலை என்றால், கனவில் பூதம் வரும்; அப்புறம் மழையில் குடை திறக்காம சதி பண்ணும்; பரவாயில்லையா?//

  என்ன அக்கிரமம்! நான் கதையை ஆரம்பிச்சு பின்னால முடிக்காட்டா பெரிய பாவம் ன்னு சொல்ல நினச்சேன்!
  :-)))))))))))))

  ReplyDelete
 57. எனக்கு ஒரு சந்தேகம்...

  //நாதம் சுடும், கீதம் சுடும்! ஆயின், நாரணா என்றாலே அந்தச் சூடும் சுடும்!
  //
  அது என்ன சூடும் சுடும்? அப்படி சூடா இருக்கறதுக்கு சூடு பட்டுச்சுனா இன்னும் சூடு அதிகமா தானே ஆகும்?

  அப்படியே யாரும் கண்டுக்க மாட்டாங்கனு அடிச்சி விடறீங்களா?

  இந்த கதைலயா அந்த பெண்ணோட நகையை திருடும் போது இன்னொரு காதுல இருந்து நகையை எடுக்கட்டும்னு அவுங்க திரும்பி படுக்கறதும் அதுக்கு அவர் கணவர், இந்த நகை நம்மோடதுனு எப்படி உனக்கு அகங்காரம் வரலாம்னு கேக்கறதும் வரும்?

  சரி கதையை சீக்கிரம் போடுங்க...

  ReplyDelete
 58. //என்ன நியாயம்? கதையை ஆரம்பிச்சா முடிச்சே ஆகணும். முடிக்கலை என்றால், கனவில் பூதம் வரும்; அப்புறம் மழையில் குடை திறக்காம சதி பண்ணும்; பரவாயில்லையா?//

  கேக்கேபிக்குனி அக்காக்கு பயமுறுத்தவே தெரியல...

  (என்னை தவிர வேறு யாராவது) கதையை ஆரம்பிச்சி முடிக்காட்டா இந்தியா போகும் போது பக்கத்துல தூங்கிக்கிட்டே வர ஒரு ஆள் வருவான் (சுத்து வட்டாரத்துல ஒரு பொண்ணு கூட இருக்காது), தூக்கத்துல சூர்யா வருவான் (இந்த வயசுல ஜோ கேக்குதா?) , ஃபிளைட்ல யாருக்கு யாரோ மட்டும் தான் போடுவாங்க.

  ReplyDelete
 59. திவா, பாருங்க, வெட்டிப்பயல் நான் தான் வெட்டிங்கறாரு. நீங்க என்னடான்னா என் பின்னூட்டத்தை அக்கிரமம்னு சொல்றீங்க.

  வெ.ப., நல்ல ஆசிர்வாதமாக இருக்கே. ததாஸ்து! அப்புறம், சூர்யாவும் தியாவும் (ஜோவுக்கு வேறு வேலை) வந்து கனவில் தூங்க விடாமல் கேஆர் எஸ் "மாமா"வோடு தியா விளையாடக் கடவது. இது எப்படி இருக்கு?

  வெ.ப., நான் இன்னும் பதிவே படிக்கல. கரெக்டா தெலுகு ("சூடு") பாயின்டா பிடித்து கேட்டதற்கு நன்றி.

  ReplyDelete
 60. //உங்கள் தமிழை நாங்கள் சுவைத்ததைப் போல் என் வார்த்தைகளிலும் ஏதேனும் சுவையிருந்தால் சுவையுங்கள். :-)//

  குமரன் சொற்களில் சுவைக்கு என்ன குறை?

  ReplyDelete
 61. இரவிசங்கர்,

  நீங்கள் கதையைத் தொடர்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்? சொல்லுங்கள். அப்படியே செய்கிறேன்.

  சின்ன தப்புக்கெல்லாம் பெரிய தண்டனை குடுக்கப்பிடாது. மனசுகள் கஷ்டப்படும். உண்மையில் நான் சிறிதளவே அறிந்திருக்கும் இந்தக் கதையை உங்கள் மூலம் அறிந்து கொள்ள வெகு ஆவலாய் இருக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 62. neenga niraiya iramanarayanan padam papeengalo ;)

  ReplyDelete
 63. //நீ நடந்தால் நடை அழகு-ன்னு பாடுவாங்க காதலில் விழுந்த பசங்க! ஆனா காதலியின் நடைக்குக் குடை பிடிச்சிக்கிட்டுப் போகும் தெகிரியம் எத்தினி பேருக்குப்பா இருக்கு? :-)//

  கேஆர்எஸ்

  புகைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய போட்டோ இதுபோலுண்டு. தன் (இரண்டாம்) மனைவி கர்ப்பிணியாக இருக்கையில் ஓவியர் பாப்லோ பிக்காசோ பிரான்ஸ் கடற்கரையில் உலாச் செல்கையில் குடை பிடித்தார்:
  http://www.nytimes.com/imagepages/2005/07/19/arts/20east_slide01.html
  இதனை சினிமா இயக்குநர் ராபெர்ட் காப்பா எடுத்த படம்

  தனுர்தாசன் கதைக்குப் பழைய பிரமாணம் மணிப்ரவாள நூல்களில் உளவோ? இருந்தால் சுவையாக இருக்கும் அந்த நடை. அறியத் தாருங்கள்

  நா. கணேசன்

  ReplyDelete
 64. @கே அக்கா
  //திவா, பாருங்க, வெட்டிப்பயல் நான் தான் வெட்டிங்கறாரு. நீங்க என்னடான்னா என் பின்னூட்டத்தை அக்கிரமம்னு சொல்றீங்க.//

  நான் நினச்சா மாதிரியே (ஏறத்தாழ) பின்னூட்டம் போட்டு இருக்கீங்களே ன்னு சொன்னேன். வெட்டி யாருக்கு எப்படி பயமுறுத்தனும்னு ஆராய்ச்சி பண்ணி வெச்சு இருக்கார் போல....

  ReplyDelete
 65. //கீதாம்மா-அவங்க ஊர் பெருமாள் கோயில் பற்றிச் சொன்னாலும், சிதம்பரநாதன் அழகை நிறைய அள்ளிக் கொட்டுவாங்க-யாரும் கேட்பதில்லை//

  இன்னும் கதையைப் படிக்கலை, அதனால் அது சம்மந்தமான பின்னூட்டம் எதுவும் போடலை, இன்னிக்குத் தான் வந்திருக்கேன் 4 நாள் கழிச்சு, அதுக்குள்ளே குமரன் கிட்டே இருந்தும் மெயில், உங்க மெயிலும், புதிரா, புனிதமாவுக்கு அனுப்பறதே இல்லை, இதுக்கு மட்டும் அனுப்பறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., வரும் நாட்களில் இடும் பதிவுகள் உங்களுக்கான பதிலைச் சொல்லும் என்ற நம்பிக்கையுடன்,
  ஆனால் ஒண்ணு, நான் சிதம்பரம் பத்தி எழுதினாலும், சரி, வரேன், பார்க்கலாம், வரப் போகும் பதிவுகள் பதில் கொடுக்கும்னு நம்பறேன்.

  ReplyDelete
 66. //(மேடம், சைடு கேப்புல கிடா வெட்டி இருக்கேன், இப்போதைக்கு கண்டுகாதீங்க என்ன?) :p//

  அம்பி, இதுக்குத் தனியா இருக்கு, உங்களுக்கு! ஆள் மாட்டிக்கிறதே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 67. I just read this post. since i dont hv unicode, i am commenting in english. I will respond in tamil on tuesday.

  When I read the story,while reading the malai part, i felt exactly what Ogai Ayya felt. Anyways I stopped asking questions... but Ogai ayya asked the point.

  Ravi, I will answer to you on tuesday using unicode. or may be over phone..

  Kumaran, I have answers to you also.

  // அதுவுமில்லாம நீங்க தொல்காப்பியத்துல இருந்து எல்லாம் எடுத்து சொன்னா மறுபடியும் பிரச்சனை தான் :-) //

  Vetti, you have understood me wrong. You cant translate my ignorance that way.

  ReplyDelete
 68. //Kumaran, I have answers to you also.//

  Ok Ragavan. Even though I dont think I have asked any questions, I will wait for your answers. :-)

  ReplyDelete
 69. பெண்ணழகு கண்ணழகு முன்னழகு பின்னழகு! - இப்ப என்ன சொல்ல வறீங்க. எனக்கு புரியலை. இருந்தாலும் உங்க தமிழ் பற்று மற்றும் வலைப்பூ எனக்கு மிகவும் பிடித்திருக்கு!

  ReplyDelete
 70. கேயாரெஸ் அண்ணா,

  இந்த சர்ச்சைகளுக்காகத்தான் நீங்க பதிவு எழுதமாட்டேன்னு சொன்னீங்களா??

  தப்பு, அவங்க மேல இல்ல... உங்க மேலதான் இருக்கு... உங்கள யாரு இப்படியெல்லாம் ரொம்ப அழகா, அனுபவப்பூர்வமா, நகைச்சுவையா எழுத சொன்னது.

  எழுத்துல சுவராஸ்யம் சேக்கறது எல்லாருக்கும் வர்ராது. உங்க கிட்ட அது நிறைய இருக்கு.

  அதனாலதான், எல்லாரும் அவங்க அவங்களுக்குப் புடிச்சத எல்லாத்தயும் நீங்க எழுதணும், உங்க எழுத்த படிக்கணும் அவங்களுக்கெல்லாம் ரொம்ப ஆசை.

  ரொம்ப நல்ல குரல்வளம் இருக்கவங்க கிட்ட போய், எல்லாரும் அவங்களுக்குப் புடிச்ச பாட்ட நேயர் விருப்பமா கேக்கறாங்க ல்ல அந்த மாதிரிதான்.

  இந்த சாதாரண சங்கதிய போய் ஏன் எல்லாரும் இவ்வளவு பெருசா எடுத்துக்கறீங்க ன்னு புரியல...

  நீங்க வழக்கம் போலவே, ஓய்வு நேரங்கள்ல பதிவுகளைத் தொடர்ந்து எழுதணும்னு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

  அப்... அப்ப்.. அப்ப்ப்புறறறறம்ஃஃஃஃ ஒரு சின்ன விண்ணப்பம்...

  அப்படியேஏஏஏ....... புதிரா புனிதமாவும் தொடருங்களேன்.... தயவுசெய்துஉஉஉஉ...

  -முகிலரசிதமிழரசன்

  ReplyDelete
 71. //Mukilarasi said...//

  எப்படி இருக்கீங்க முகில்? தமிழும், குழந்தை மாறனும் நலமா?

  ரொம்ப ஊர் சுத்தல் வேலை! போதாக் குறைக்கு என் விஷயம் வேற ஒன்னு! அதான் பதிவு/தொடர்பு-ன்னு எல்லாமே கொறைஞ்சு போச்சி! :)

  //ரொம்ப நல்ல குரல்வளம் இருக்கவங்க கிட்ட போய், எல்லாரும் அவங்களுக்குப் புடிச்ச பாட்ட நேயர் விருப்பமா கேக்கறாங்க ல்ல அந்த மாதிரிதான்//

  :)
  நேயர் விருப்பத்தைக் கேட்கும் போது, காமாலையே பாடு-ன்னு எல்லாம் மிரட்ட மாட்டாங்க! :)

  அட....
  இது ரெம்ப நாளிக்கி முன்னாடி முகில்! இப்ப எல்லாம் நல்லவங்களா ஆயிட்டாங்க! நான் தான் பதிவே எழுதாம, கெட்டவனா ஆயிட்டேன்! :)

  புதிரா புனிதமா Form மாறிக்கிட்டே இருக்கணும்! கேள்வி, குறுக்கெழுத்து, ஆடியோ-ன்னு எல்லாம் போட்டாச்சி! வேற எதுனா புதுமையா யோசிக்கணும்! :) ஏதாச்சும் நல்ல ஐடியாவா கொடுங்க! :)

  ReplyDelete
 72. kannabiran, RAVI SHANKAR (KRS) said...

  /* எப்படி இருக்கீங்க முகில்? தமிழும், குழந்தை மாறனும் நலமா?*/

  அனைவரும் தற்சமயம் நலம். நீங்க எப்படி இருக்கீங்க??

  /* ரொம்ப ஊர் சுத்தல் வேலை! போதாக் குறைக்கு என் விஷயம் வேற ஒன்னு! அதான் பதிவு/தொடர்பு-ன்னு எல்லாமே கொறைஞ்சு போச்சி! :) */
  ம்.. சரண்யா சொன்னாங்க... போன் பேசக்கூட நேரமே இல்லையாமே உங்களுக்கு...

  / * //ரொம்ப நல்ல குரல்வளம் இருக்கவங்க கிட்ட போய், எல்லாரும் அவங்களுக்குப் புடிச்ச பாட்ட நேயர் விருப்பமா கேக்கறாங்க ல்ல அந்த மாதிரிதான்// :)
  நேயர் விருப்பத்தைக் கேட்கும் போது, காமாலையே பாடு-ன்னு எல்லாம் மிரட்ட மாட்டாங்க! :)*/

  அய்யய்ய.... அண்ணா, இதுக்கு பேரு மிரட்டல் இல்ல.... அதீத அன்பு. சரி விடுங்க...

  /* அட....
  இது ரெம்ப நாளிக்கி முன்னாடி முகில்! இப்ப எல்லாம் நல்லவங்களா ஆயிட்டாங்க! நான் தான் பதிவே எழுதாம, கெட்டவனா ஆயிட்டேன்! :)

  புதிரா புனிதமா Form மாறிக்கிட்டே இருக்கணும்! கேள்வி, குறுக்கெழுத்து, ஆடியோ-ன்னு எல்லாம் போட்டாச்சி! வேற எதுனா புதுமையா யோசிக்கணும்! :) ஏதாச்சும் நல்ல ஐடியாவா கொடுங்க! :) */

  பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, கீழ்கணக்கு, மேல் கணக்கு ன்னு எவ்ளோ இருக்கே! சங்க இலக்கியங்கள் ல இருந்து ஏதாவதொரு புதிர் தொடங்கலாமா?? ;-) புழக்கத்தில் அரிதாகிப் போன தமிழ் சொற்கள்... இலக்கியங்கள் ல உவமைக்காக எடுத்தாண்ட பொருட்கள், நிலைகள்...

  யாராவது அடிச்சிடப் போறாங்க என்னய... ச்சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்...

  -முகிலரசிதமிழரசன்

  ReplyDelete
 73. //புழக்கத்தில் அரிதாகிப் போன தமிழ் சொற்கள்... இலக்கியங்கள் ல உவமைக்காக எடுத்தாண்ட பொருட்கள், நிலைகள்...//

  ஹிஹி!
  கண்டிப்பா! எளிமையாத் தொடங்கி எழிலாக் கொண்டு போயீறலாம்!

  //யாராவது அடிச்சிடப் போறாங்க என்னய... ச்சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்//

  அட, புதிரா புனிதமாவே விளையாட்டு தானே! நீங்க விளையாட்டுக்கே சொல்லுங்க!

  //சங்க இலக்கியங்கள் ல இருந்து ஏதாவதொரு புதிர் தொடங்கலாமா?? ;-)//

  இலக்கிய வரிகள், பல தமிழ் சினிமாப் பாடல்களில் ஆளப்பட்டுள்ளது...
  காட்டாக...திருவிளையாடல், நறுமுகையே நறுமுகையே, மனம் முந்தியதோ விழி முந்தியதோ...போன்ற பாடல்கள்...
  இதை வச்சி ஒரு புதிர் வைக்கலாம்!

  எடுத்த எடுப்புலயே உவமை, உருவகம், நிலை, துறை, திணை-ன்னு போயீறக் கூடாது! விளையாட்டு-ன்னா எல்லாருக்கும் பொதுவா இருக்கணும்-ல்ல? :)

  என்னா சொல்றீங்க! நீங்களே பந்தலில் நடத்தறீங்களா முகில்? :)

  ReplyDelete
 74. ரெண்டு நாளா வந்து பாத்தும் எந்த பதிலும் வரவே இல்ல... என் பின்னூட்டத்துக்கு அப்புறம் எதுவும் வராது ன்னு நெனச்சேன்...

  ஹா ஹா கேயாரெஸ் அண்ணன் தொடங்கினா எழில் இல்லாம இருக்குமா?? :-)


  /*இலக்கிய வரிகள், பல தமிழ் சினிமாப் பாடல்களில் ஆளப்பட்டுள்ளது...
  காட்டாக...திருவிளையாடல், நறுமுகையே நறுமுகையே, மனம் முந்தியதோ விழி முந்தியதோ...போன்ற பாடல்கள்...
  இதை வச்சி ஒரு புதிர் வைக்கலாம்!

  எடுத்த எடுப்புலயே உவமை, உருவகம், நிலை, துறை, திணை-ன்னு போயீறக் கூடாது! விளையாட்டு-ன்னா எல்லாருக்கும் பொதுவா இருக்கணும்-ல்ல? :)

  என்னா சொல்றீங்க! நீங்களே பந்தலில் நடத்தறீங்களா முகில்? :) */

  அச்சச்சோ நானா??

  சினிமா ல்ல பயங்கர வீக்கு, சங்க இலக்கியங்கள் ல்ல ஆர்வம் மட்டும் தான் இருக்கு.
  போட்டி நடத்துற அளவுக்கு அறிவு இருந்தா, நான் ஏன் அண்ணா உங்கள கேக்கப்போறேன்... நானே கேள்விகள தயாரிச்சு முடிஞ்சா பதில் சொல்லுங்க பாப்போம் ன்னு உங்களுக்கு சவால் ல்ல விடுவேன்... :-)

  உதவி வேணும் னா நெறைய செய்றேங்க அண்ணா. ஆனா, தனியா ல்லாம் நடத்த எனக்குத் தெரியாதே!! என்ன மன்னிச்சுடுங்க ப்ளீஸ்!

  போட்டியில கலந்துட்டு தோக்கறதுன்னா எனக்கு ரொம்ப புடிக்கும்.
  போட்டியில முதல்ல வர்ரறது ரொம்ப ரொம்ப புடிக்கும்.

  குமரன் ஐயாவ கூப்பிடலாமா?


  அப்புறம் ஒரு முக்கியமான சங்கதி. உங்களால இணையம் பக்கம் வரத்துக்கு நேரம் இருந்தா, என் முகவரிக்கோ, என் மாமாவின் மின்னஞ்சல் முகவரிக்கோ ஒரு மின்னஞ்சல் அனுப்பறீங்களா? உங்க கிட்ட ஒன்னு கேக்கணும். கொஞ்சம் முக்கியமானது, உங்களுக்கு இல்ல... எனக்கு!

  -முகில்

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP