கேள்வி கேட்கலையோ கேள்வி? நாத்திகன் ஆத்திகன் ஆன கதை!
அட, இந்தக் கேள்வி வியாபாரத்தை ஆரம்பிச்சு வச்ச புண்ணியவான் பேரு என்னப்பா? அந்தாளு 108 தேங்காய் ஒடைக்கறேன்-னு வேண்டிக்கிட்டா, அதைச் சொந்தச் செலவுல ஒடைச்சிக்கணும்!
இப்படி எல்லாப் பதிவர்களையும் கோத்து வுட்டு, ஒருத்தர் மண்டைய ஒருத்தர் ஒடைச்சிக்கிட்டு...சேச்சே! ஓசியில ஓம் போடறது ஓடம்புக்கு ஆவாது ராசா! :-)
Chaos Theory வித்தகர் ஸ்ரீதர் நாராயணன், பல தரப்பட்ட பாணங்களை நம் மேல ஏவி வுட்டுருந்தாரு! கொத்தனார் ஓட்டும் ரதத்தில் ஏறி, ரத்தம் பாக்க ஆசைப்பட்டாரு நம்ம அண்ணாச்சி! ஆனா இதுக்கெல்லாம் அஞ்சறவனா கேயாரெஸ்ஸூ?
நமக்குச் சாரதி யாரு? சாட்சாத் பதிவுலகப் பரந்தாமன் அல்லவா? அவன் அருளால், எனக்குப் பாணங்கள் எல்லாம் பாவனா போடும் மாலையாகி விடுமே! அஸ்திரங்கள் எல்லாம் அசின் சூட்டும் மாலையாகி விடுமே! இதோ பதில் அஸ்திரங்கள்! :-)
1. நான் வரட்டு ஆன்மீக பற்றாளன் இல்லை. ஆனால் உங்கள் எழுத்தில் இருக்கும் ஆன்மீகம் பல புதிய புரிதல்களை தருகின்றன.
நீங்கள் இறை மறுப்பாளராக இருந்து பின்னர் மாற்றம் கண்டதாக அறிகின்றேன். மாற்றங்கள் வாழ்வில் இன்றியமையாதது. ஆனால் ஆன்மீகத் தேடலைத் தாண்டி நீங்கள் ஆன்மீகம் வளர்க்க நிறைய சிரத்தை எடுக்கிறீர்கள். எதனால் இந்த மாற்றம்?
நானும் உங்களைப் போலத் தான்! வறட்டு ஆன்மீகப் பற்றாளன் இல்லீங்க! ஆன்மீகம் வளர்க்கிறேன்-ன்னு சொல்லுறது ஓவரோ ஒவர்! ஆன்மீகப் பயிர் வளர்க்கும் அருளாளர்களின் கால் தூசி பெறுவேனா அடியேன்?
ஆன்மீகம் என்பது மதம் சார்ந்த ஒன்று-ன்னு பல பேருக்கு எண்ணம்! ஆனா மதம் வேற, ஆன்மீகம் வேற!
மதம்=Religion; ஆன்மீகம்=Spirituality! கொஞ்சம் வேறுபாடு உண்டு!
மதத்தால் மதம் பிடிக்கும்! தமிழில் அழகாய்ச் "சமயம்"-ன்னு சொல்லுவாங்க! நம்மைப் பக்குவமாகச் சமைப்பது எதுவோ அதுவே "சமயம்"! அதுவே ஆன்மீகமும் கூட!
என்னாது? அடியேன் எழுத்து, பல புரிதல்களைத் தருதா? போச்சுடா! நம்ம பொழைப்பை இந்தப் பதிவுலகம் இன்னுமா நம்பிக்கிட்டு இருக்கு? :-)
ஆன்மீகத்துக்கும் அறிவியலுக்கும் அடிப்படை ஒற்றுமை ஒன்னு இருக்குங்க! இரண்டுக்குமே தேடல் கட்டாயம் தேவை!
ஒன்றில் "உள்ளே" தேடுதல்!
இன்னொன்றில் "வெளியே" தேடுதல்!
- எனக்கு இரண்டிலுமே, தேடப் பிடிக்கும்!
நான் என்னளவில் தேடுவதை எழுதுகிறேன்! தேடல் இருப்பதால் அந்த எழுத்து உங்களுக்கும் பிடிச்சிருக்கு போல! வேற ஒன்னும் ஸ்பெசலா கிடையாது!
பஸ் ஸ்டாண்டு ஃபிகரில் இருந்து பரந்தாமன் வரை விதம் விதமா தேடல் செய்கிறோமே? :-)
தேடிக் கிடைக்கும் பொருளால் ஒரு சுகம்! அதைத் தேடும் அனுபவமே இன்னொரு சுகம்!
சரி, சரி...சீன் போட்டது போதும்! விசயத்துக்கு வாரேன்... அடியேன் திராவிடர் கழக வாசம்! அதுக்குத் தானே காத்துக்கிட்டு இருக்கீக!:-)
வாழைப்பந்தல் கிராமத்துக் கோயில்-ல கொசுத் தொல்லை ஜாஸ்தியா இருக்குன்னு, அர்ச்சனைத் தட்டில் டார்ட்டாய்ஸ் வச்சிக் கொடுத்து, அடி வாங்குன பொடிப் பையன்! அவனுக்குள் எப்படி இறை மறுப்பு வந்துச்சு-ன்னு இப்பவும் சிரி்ச்சிக்கிட்டே யோசிக்கிறேன்! :-)
இறை மறுப்பை விட, சாதி தாழ்த்தியமை, தமிழ் தாழ்த்தியமை! இவையே நான் மறுப்பாளனாக மாறிய காரணமாகவும் இருக்கலாம்! அது கல்லூரிக் காலம்...
சென்னை தினத்தந்தி-க்கு அருகில் உள்ளது பெரியார் திடல்! அங்கு திராவிடர் கழக அலுவலகம், பெரியாரின் நினைவிடம்(சமாதி), நூலகம் எல்லாம் உண்டு!
வீரமணி ஐயா பந்தா இல்லாதவர்! நேரிடையாக உரையாடலாம்! ஆர்வம் உள்ளவர்களுடன் அவரும் அலசி ஆய்ந்து உரையாடுவார்! சீக்கிரமாகவே பழகி விட்டார்!
தமிழ்க் கருவூலங்களான கம்பன் காவியம், பெரிய புராணம் - இவற்றை எரிக்க வேணும் என்று அவர் சொன்ன போது, அதை அவர் கிட்டக்கவே மறுத்துப் பேசியது நான் முதலில் கிளப்பிய சூடு!
சீதை என்னும் பெண்ணைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்திப் பேசிவிட்டு, அதே பெண்ணுரிமையைக் காப்பதாக வேறு ஒரு குரலில் பேசிய போது - அதை ஆக்ரோஷமாக அடியேன் மறுக்க.....அடுத்த சூடான விவாதம்!
தந்தை பெரியார் வரைந்து கொடுத்த அதே பகுத்தறிவுப் பாணியில், வீரமணி ஐயாவிடம் நான் கேட்ட எதிர்க் கேள்விகள்! அதை எல்லாம் இங்கிட்டு சொல்ல முடியாது! :-)
அன்று அப்படியெல்லாம் விவாதித்த பின்னர், வீரமணி ஐயாவே,
"பகுத்தறிவு தான் என்றாலும், இவ்வளவு ஓப்பனா வேற எங்காச்சும் பேசினா, அதோ கதி தான்-பா உனக்கு", என்று நல்லபடியா அறிவுரை சொல்லி அனுப்பினார்! :-)
* கோயிலில் தமிழ் இல்லவே இல்லை என்று நாத்திகனாய் நானும் "நம்பிக்கிட்டு" இருந்தேன்!
* ஆன்மீகத்தில் சாதி உண்டு என்று நாத்திகனாய் நானும் "நம்பிக்கிட்டு" இருந்தேன்!
* கடவுளை நம்பவே கூடாது என்று நாத்திகனாய் நானும் "நம்பிக்கிட்டு" இருந்தேன்!
அப்போது என் தமிழாசிரியர் மூலமாகவும், பல்கலைக்கழகத் துறைத் தலைவர் (HOD) மூலமாகவும் வந்து சேர்ந்தவர் தான், உடையவர் என்று சொல்லப்படும் இராமானுசர்!
காரேய்க் "கருணை" இராமானுசா...என்னை நீ வந்து உற்ற பின்பு,
சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!
தமிழகத்து விடிவெள்ளி, ஐயா பெரியார், இருபதாம் நூற்றாண்டில் வைக்கம் கோயிலுக்குள் நுழையவே ஆயிரம் தடைகள்! சூழ்ச்சிகள்!
ஆனால் பதினொன்றாம் நூற்றாண்டு இராமானுசர், அன்றே ஆலயத்துக்குள், ஸோ கால்ட்டு கீழ்க் குலத்தாரை அழைத்துச் செல்ல முடிகிறது என்றால் எப்படி???.....
பகுத்தறிவுடன் கூடிய ஆன்மீகத் தேடல் இருந்தால், எந்தக் காலகட்டத்திலும், சமூக நீதி கிடைக்கும் என்றே பொருள்!
பாசுரங்கள் ஓதி தமிழ் முன்னே செல்ல, இறைவன் தமிழுக்குப் பின்னால் செல்கிறான்!
"பச்சைத் தமிழின் பின் சென்ற பசுங்கொண்டலே" என்று முருகபக்தரான குமரகுருபரர் இந்தக் காட்சியைப் பார்த்து ஏங்குகிறார்! ஏக்கம் தானே ஆக்கமாகும்?
* ஆன்மீகத்தில் சாதி இல்லை என்பதைக் கண்கூடாகப் பார்த்தேன்!
* கோயிலில் தமிழ் உண்டு என்பதைக் கண்கூடாகப் பார்த்தேன்!
* பகுத்தறிவை வெறுமனே "நம்பாமல்".....பகுத்தறிவையும் "பகுத்தறிந்தால்" - இனி எல்லாம் சுகமே! - பகுத்து அறிந்து கொண்டேன்!
இதுவே நாத்திகன் ஆத்திகன் ஆன கதை! (ஆத்திகன், வைணவன் ஆன கதை-ன்னு கூடவே ஒரு கும்மி எழும்! ஆனா என்னை அம்புட்டு சீக்கிரம் எதுக்குள்ளும் அடக்கிட முடியாது-ன்னு கூடப் பழகறவங்களுக்கு நல்லாவே தெரியும் :-)
என்னைக் கேட்டால், ஆன்மீகம் பயில்வோர் / பகுத்தறிவு பயி்ல்வோர், இருவருமே அறிவியல் பயில வேண்டும் என்று சொல்வேன்!
Thats the point where tangents to both circles can meet. And ironically thatz called the "Radical Axes"!:-)
2. இத்தனைப் பதிவுகள், பின்னூட்ட மட்டுறுத்தல், தொடர்ந்து விவாதம்...எப்படி நேரப் பங்கீடு செய்கிறீர்கள்?
என்ன நக்கலா?...இலவசத்தில் பதிவு போட்டு நீங்க கேள்வி கேட்டது போன வெசாயக் கெழமை! பதில் பாருங்க, எப்ப வருது-ன்னு! :-)
உண்மையைச் சொல்லணும்னா, இப்பல்லாம் நண்பர்கள் பதிவுக்குக் கூட என்னால் அடிக்கடி செல்ல முடிவதில்லை! இருந்தாலும் அத்தனை பேரும் இங்கு வந்து படிக்கிறார்கள்! பின்னூட்டம் இடுகிறார்கள்! இது அடியேனின் தகுதியைக் காட்டவில்லை! நண்பர்களின் அன்பையே காட்டுகிறது!
ஒரே ஒரு விசயம்:
Atleast, என் பதிவில் எழுப்பப்படும் கேள்விகள், விவாதங்கள்! அதிலாவது அனைவருக்கும் பதில் தர முற்படுகிறேன்! ஓரளவு நேர்மையான முறையில்!
அலுவலகத்தில் கொஞ்சம் பொறுப்பு கூடிப் போச்சு! அதனால் இரவு எவ்வளவு நேரமானாலும், இதுக்காக கொஞ்சம் மெனக்கெடுவேன்! அவ்ளோ தாங்க! பெருசா ஒன்னுமில்லை!
சில பதிவுகள் எழுதி முடிக்க எனக்கு ஏழு எட்டு மணி நேரம் கூட ஆகி இருக்கு! நம்ப முடியுதா? :-))
தியாகராஜர் பாட்டுக்குத் திருமலையில் தீப்பிடித்த பதிவு, அதில் ஒன்று!
தெர தீயக ராதா - திரை விலக்க மாட்டாயா-ன்னு கேட்கும் போது, அதை வெறும் ஒரு பக்தனாகவோ, இசை ஆர்வம் கொண்டவனாகவோ, என்னால் எழுத முடியாது!
அர்ச்சகர்கள் தன்னை அவமரியாதையாக நடத்தினாலும் தியாகராஜர் அதைப் பொருட்டாகக் கருதவில்லை! "எந்த பக்தனையோ இதே போல் கேலி பேசி இருப்பேனோ? அதான் இப்படி வினையெல்லாம் திரையாக வந்து தொங்குதோ?"-ன்னு தனக்குத் தானே தான் நொந்து கொள்கிறார்! தன்னுடைய ஆணவத் திரை விலக்க மாட்டாயா என்று தான் பாடுகிறார்!
மந்திரச் சக்திக்கா திரை எரிந்தது? கண்ணீர்ச் சக்திக்கு அல்லவா கனல் வந்தது! இதைப் போய் நான் எப்படி வெறும் வார்த்தையால் சோடிச்சி எழுத முடியும்?
ஒரே வழி.....சில நிமிடங்கள் மட்டுமாச்சும் அடியேனும் தியாகராஜர் ஆவது தான்! அதான், அந்தப் பதிவை இரவில் எழுதும் போது, அடியேன் கண்களிலும்.......
கூடி இருந்து இறைவனின் குணானுபவங்களைப் பேசுவதும் ஒரு இன்பம் தான்! கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
3. இந்த மாதிரி ஒரு தொடர் விளையாட்டில் உங்களை மூன்று பேர் ஒரே சமயத்தில் அழைக்கிறார்கள். ஒரு சங்கிலியில் தான் நீங்கள் பங்கு பெற முடியும் என்று விதி இருந்தால் (அட இருக்குன்னு சொல்றேன்!) யாருடைய சங்கிலியை தொடர வைப்பீர்கள்? ஏன்?
உங்களை தொடரச் சொல்லும் அந்த மூன்று பதிவர்கள்
அ) கோ. இராகவன்
ஆ) கோவி கண்ணன்
இ) வெட்டிப் பையல் பாலாஜி
ஹிஹி! நீங்க இதுக்கு முன்னாடி குமுதம் பத்திரிகைல வேலை பாத்தீங்களா ஸ்ரீதர் அண்ணாச்சி? நடிகர் சூர்யா கிட்ட போயி, "கதாநாயகியா உங்களுக்கு யாரை ரெக்கமெண்ட் பண்ணுவீங்க? பாவனா, நயன்தரா, அசின்?" ன்னு கேக்குற மாதிரி கேக்குறீங்க! சூர்யா உண்மையைச் சொன்னாலும் கஷ்டம்! பொய்யைச் சொன்னாலும் கஷ்டமாச்சே! :-)
யார் சங்கிலியைத் தொடர்வேன்? யார் கேள்விக்குப் பதில் சொல்லுவேன்?
ஹூம்ம்ம்ம்ம்...
ஹூம்ம்ம்ம்ம்...
கோ.இராகவன்! கோ.இராகவன்! கோ.இராகவன்!:-)
ஏன்? ஏன்? ஏன்?
கோ.இராகவன்! கோ.இராகவன்! கோ.இராகவன்!:-)
4. உங்கள் நினைவில் ஆழப் பதிந்து போன சிறு வயதுக் கதை? யார் அந்த கதையை உங்களுக்கு சொன்னார்கள்?
வீட்டில் அனைவருக்கும் நான் சங்கரா! பாட்டிக்கு மட்டும் கண்ணா!
எனக்கு, அவங்க சொல்லாத கதையில்லை! பாடாத பாட்டு இல்லை! படிக்காமலேயே படித்த அந்த ஜனகவல்லி அம்மாளின் நினைவு எனக்கு இன்ன்னிக்கும் ஈரம் தான்!
"அடே, நீ படிச்சதுலயே சாரமானதைச் சொல்லுடா!"
"நலம் தரும் சொல்லை, நான் கண்டு கொண்டேன், நாராயணா என்னும் நாமம்!"
"சண்டாளா, குலங் கெடுக்க வந்த கோடரிக் காம்பே! ஜாதிக்கே உன்னால இழுக்கு! உன்னை என்ன செய்யறேன் பார்?"
"அப்பா, உங்களை எதிர்க்கணும்-னு எண்ணமெல்லாம் இல்லை எனக்கு! படிச்சதில் ஏதாச்சும் சொல்லுடா-ன்னு கேட்டா, மாதா-பிதா-குரு-தெய்வம்-னு சொல்லிட்டுப் போயிருவேன்! ஆனா சாரமானதைச் சொல்லு, சாரமானதைச் சொல்லுன்னு திரும்பித் திரும்பிக் கேட்டா, நான் என்னாத்த சொல்வேன்?
உங்க கிட்ட பொய் சொல்லச் சொல்றீங்களா? காரியம் ஆகணும்-னு சாரத்தை மாத்திப் பேசும் பழக்கம் வர மாட்டேங்குதுப்பா! நான் என்னத்த செய்ய? நீங்களே சொல்லுங்க!"
தூணில் ஒரே அடி! துரும்பிலும் வந்தது இடி!
அடி அடி என்று அடிப் பையன்! அவன் பொடிப் பையன்! அசுரக் குடிப் பையன்!
பாட்டி சொன்ன அதே கதையைக் கோயில் உற்சவத்திலும் சொன்னாங்க! ஆனாப் பாட்டி சொல்லுற சுகம் அவிங்க சொல்றதுல வரலை!
மறு நாள் காலை கோவிலில் ஏதோ பூசை! அய்யிரு மந்திரம் எல்லாம் சொல்றாரு! மூக்கைப் பிடிச்சிக்கிட்டு, சாமி முன்னாடி, கலசத்தை ஏதோ மெல்லீசான குச்சியால் தொடறாரு!
"இவரு, என்னா பாட்டி பண்றாரு?"
"நம்ம சனத்துக்கு என்னா தெரியும்பா இதெல்லாம்? அதோ உன் பிரெண்டு தீபலட்சுமியோட அப்பா நிக்குறாரு பாரு! அவரைக் கேளு கண்ணா!"
"மாமா, அய்யிரு என்னா பண்றாரு?"
"அதுவா? அதுக்குப் பிராணப் பிரதிஷ்டைன்னு பேருடா! பகவானை நமஸ்காரம் பண்ணி, மூச்சுக் காத்து வழியா, கலசத்தில் எழுந்தருளச் செய்வது!"
"ஓ...ஓ...
ஆனா நேத்து சொன்ன கதையில, அந்தப் பையன், தூண்-ல இது மாதிரி எல்லாம் ஒன்னுமே பண்ணலையே!
ஆனா அதுல சாமி வந்தாரே? எப்படி மாமா?"
"அடி, படவா! நாலாங் கிளாஸ் பையன் பேசுற பேச்சா இது? அதுவும் சபையில, இத்தனை பெரியவா முன்னாடி?
ஜனகவல்லீம்மா, நன்னாவே வளர்த்து வச்சிருக்கேள், உங்க பேரனை! என்னா எடக்கு, என்னா மடக்கு?"
பூசைக்கு வந்திருந்தார் திருமலையின் சின்ன ஜீயர் சுவாமிகள்! அவர் மற்றவர்களைத் தடுத்து நிறுத்த...
"பையனை மடத்துப் பாடசாலைக்கு அனுப்பி வைக்கறீங்களா?"-ன்னு அவரு கேட்க, அப்பா மொதக் கொண்டு எல்லாரும் பேந்த பேந்த விழிக்க.....
"சாமீ, நாங்க சைவக் காரவுங்க! அசைவம் சாப்புடறவுங்க! முருகன் குல தெய்வம்! இது சரியா வராதுங்க சாமீ! எங்கள மன்னிச்சிருங்க!"-ன்னு அம்மா மட்டும் விடாப்பிடியாகப் பேசி, என்னை வூட்டுக்குக் கூட்டியாந்தாங்க!
வந்ததும் எனக்கு ரவுண்டு கட்டி மாறி மாறி அடி! :)
ஆண்டாள் பாட்டு பாடித் என்னைத் தூங்க வைச்ச காரணத்துக்காக அவங்க மாமியாரை (என் பாட்டியை), அம்மா ஒரு முறை முறைச்சாங்க பாருங்க... :-)))
இது தாங்க சின்ன வயசு நாஸ்டால்ஜியா கதை!
பூரண விசுவாசம் (அல்லது) பிரகலாதக் குழந்தை திருவடிகளே சரணம்!
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
இப்போ, அடுத்த கட்ட ஆட்டம்!
* வலையுலகில் பசங்க கடலை போடுவது பலரிடம்! பொண்ணுங்க கடலை போடறது யாரிடம்?
* கடலையை வாசம் வராமல் போடும் ஒரே பதிவன் யாரு?
* அப்படியே கடலையும் போட்டுட்டு, காதலுக்கு மரியாதை கெட்டப்பில் வலம் வரும் ஜென்டில்மேன் யாரு?
* மென்மையும் வன்மையும், இசையும் அரசியலும், சேர்ந்தே அலசக் கூடிய அழகிய தமிழ் மகன் யாரு?
*** வலையுலகின் ஒரே கானாப் பாடகன் யாரு? அவர் தான் கேள்வியின் நாயகன்!
கேள்வியின் நாயகனே! என் கேள்விக்கு பதில் ஏதைய்யா?
1. 100 பதிவு எழுதி, 1000 பின்னூட்டம் போட்டு, 10000 ஸ்கிராப்பு போட்டு உழைச்சிக் கொட்டுற நம்ம வாலிபக் குருத்துகளுக்கு இடையில்,
இதெல்லாம் ஒன்னுமே பண்ணாம, சிக்சர் சிக்சரா அடிச்சி விளாசும் உங்கள் இளமையின் ரகசியம் என்ன? மறைக்காம, வெக்கப்படாமச் சொல்லுங்க காபி அண்ணாச்சி! :-)
(சரி, போனாப் போகட்டும்...அல்லது)
உங்கள் FM றேடியோ நிகழ்ச்சி அனுபவங்களில், நீங்கள் எதிர்கொண்ட இனிமையான, மெல்லிய, ரொமான்டிக்கான கட்டம் எது?
2. இறைவன் உங்கள் முன் தோன்றி, உங்களை, இலங்கை அரசுக்கு சர்வ சக்தி படைத்த "ஒரு நாள் அதிபர்" ஆக்குகிறார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
உங்கள் முதல் ஆக்ஷன் (செயல்பாடு) என்னவாக இருக்கும்? (இனிய கற்பனை)
3. பதிவுலகில் சர்ச்சையில் சிக்கிக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும்? சிக்காமல் இருக்க என்னெல்லாம் செய்ய வேண்டும்? (அப்பாடா, சிக்காத நீங்க, இப்போ சிக்கிட்டீங்க :-)
4. இசையில் நீங்கள் அனைத்து வகை இசையும் விரும்பிக் கேட்பீர்கள்!-அறிவேன்!
தமிழகத்தில் தமிழிசை இயக்கம் சிறிது காலமாகத் தான் நன்கு மணம் வீசி வருகிறது! ஆனால் அதே சமயத்தில் பிறமொழி இசை ஒவ்வாமையும் நம்மிடையே சிறிது இருக்கத் தான் செய்கிறது!
கர்நாடக இசை என்றால் சில குறிப்பிட்ட வகுப்பினர், மற்ற இசை என்றால் சில குறிப்பிட்ட வகுப்பினர் என்று ரசிகர் வட்டம் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டு விடுகிறது! விபுலானந்த அடிகளைக் கொடுத்த ஈழத்திலும், இதே நிலை தானா? அப்போது எப்படி? இப்போது எப்படி?
ஸ்ரீதர் மட்டும் தான் கேள்வி கேட்டிருந்தாரு! இன்னும் சில நண்பர்கள், பல்வேறு காலங்களில், அடியேனைப் பல்வேறு கேள்விகள் கேட்கத் தோணியிருக்கும்! அவிங்க எல்லாருக்கும், போட்டுத் தாக்க, "இலவச" டிக்கெட் வழங்குகிறேன்!
கண்ணன் பாட்டு 100-ஐத் தொடும் நல்வேளையில் சிறப்புப் பரிசாக, என்ன வேணுமோ கேட்டுக்கோங்க மக்கா! - ஐ மீன் கேள்வீஸ் ஒன்லி கேள்வீஸ் :-)

கோபுரத்தின் முகப்பில் பெரியாரும் ஒன்றே! உடையவரும் ஒன்றே!

பாருங்கள்......அனைத்துச் சாதி அர்ச்சகர்கள், பல நூற்றாண்டுகளாக!
சட்டங்கள் இன்றி, சத்தங்கள் இன்றி...

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ரவி. பல இடங்களில் மனம் நெகிழ்ந்துதான் போகின்றது. படித்தவுடன் பகிர்ந்திட தோன்றியது. விரிவாக பின்னர் பதில் இடுகின்றேன்.
ReplyDeleteஉங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் பல.
//பிரகலாதக் குழந்தை திருவடிகளே சரணம்!//
ReplyDeleteஅருமை. கிருஷ்ண பிரேமி சொல்லக் கேட்ட மாதிரி இருந்தது உங்கள் கதை. :-))
நல்லா இருக்கு பதிவு. கொஞ்சம் பெர்ரிய பதிவு.
ReplyDelete"பகுத்தறிவை வெறுமனே "நம்பாமல்", பகுத்தறிவையும் "பகுத்தறிந்தால்" - இனி எல்லாம் சுகமே! - பகுத்து அறிந்து கொண்டேன்!"
ReplyDeleteரொம்ப ஆத்மார்த்தமானா உண்மை. ஆத்திகமோ நாத்திகமோ நம்பிக்கையின் அடிப்படையில் துவங்குவதுதானே.. கடவுள் உண்டென்றோ இல்லையென்றோ துவங்கும் பயணத்தின் நடைவண்டி நாம் அந்த உணர்விற்கு உண்மையாயிருப்போம் எனும் போது நம்மை பிரபஞ்ச உண்மைக்கு மிக அருகே இட்டுச்செல்லும் உங்கள் பதிவில் அது நிருபீக்கப்பட்டுள்ளது... வாழ்த்துக்கள்...
கலக்கல் பதில்கள் ;-)
ReplyDeleteஆனா நம்மள மாட்டிட்டீங்களே அப்பூ, சரி சரி "முயல்" கிறேன்.
//இப்பல்லாம் நண்பர்கள் பதிவுக்குக் கூட என்னால் அடிக்கடி செல்ல முடிவதில்லை! //
ReplyDeleteஅதாவதுங்கோ, நீங்கோ மூஊஊஊஊத்த வலைப்பதிவர் ஆயிட்டீங்கோ. (முன்னரே ஆகி இருந்தாலும் இந்த மாதிரி சுய விளக்கங்கள் வந்ததில்லையே!)
வாழ்த்துகள்!!
அப்புறம் என்னமோ திருப்பாவைக்கு விளக்கம் சொல்லும் பாணியிலேயே இந்தப் பதிவும் எழுதிட்டீங்க. கொஞ்சம் ஸ்டைல் மாத்தி இருக்கலாம்.
போகட்டும். ரொம்ப எதிர்பார்த்த கேள்விக்கு அதெல்லாம் இங்க சொல்லக்கூடாதுன்னு சாய்ஸில் விட்டுடீங்க.
ஜஸ்ட் பாஸ். அம்புட்டுதான்.
ஹாய் கேஆரெஸ்,
ReplyDelete//"பையனை மடத்துப் பாடசாலைக்கு அனுப்பி வைக்கறீங்களா?"-//
அது சரி, போகாமலே இந்த போடு போடறீங்களே, நீங்க மட்டும் போயிருந்தாக்கா என்னலாம் எழுதி தள்ளுவீங்க?
சில விஷயங்கள் உங்கள் பழைய பதிவுகளில் ஏற்கெனவே காணக்கிடைத்தது தான், முக்கியமாய் வீரமணி பற்றிய விஷயம். பாட்டி பற்றியதும், நீங்க சொன்னதா?? இல்லை படிச்சேனா?? :)))))
ReplyDeleteஎனிவே, வாழ்த்துகள், மூத்தபதிவர் ஆனதுக்கு, நாங்க எல்லாம் இன்னும் கை.நா. தான். :D
//ஆன்மீகம் என்பது மதம் சார்ந்த ஒன்று-ன்னு பல பேருக்கு எண்ணம்! ஆனா மதம் வேற, ஆன்மீகம் வேற! மதம்=Religion; ஆன்மீகம்=Spirituality! ரெண்டுத்துக்கும் கொஞ்சம் வேறுபாடு உண்டு!
ReplyDelete//
அப்ப நீங்க ஆன்மிகப் பதிவரா மதப்பதிவரா சமயப்பதிவரா? நல்ல பதிலா சொல்லுங்க. நான் உஷா கேட்ட கேள்விக்குக் கட் & பேஸ்ட் பண்ணனும். :-)
அதிசயம் அதிசயம் பெரியார் தான்...ஆனதென்ன ராஜாஜி !
ReplyDelete:)
//அப்ப நீங்க ஆன்மிகப் பதிவரா மதப்பதிவரா சமயப்பதிவரா? //
ReplyDeleteஆஹா! இது என்ன புதுக்கதை. இப்போதான் ஆன்மீகம் வேற மதம் வேற ஆனா ஆன்மீகமும் சமயமும் ஒண்ணுன்னு புரிஞ்சா மாதிரி இருந்தது.
யப்பா ரவி இவரு ரொம்ப குழப்பறாரு. கொஞ்சம் வந்து பதில் சொல்லுப்பா.
ஆன்மீகம், சமயம், மதம் - விளக்குக!
நல்லா எழுதியிருக்கீங்க கண்ணா. (வேற மாதிரி எப்படி சொல்றதுன்னு கத்துக்கணும் :)
ReplyDeleteசங்கரனைக் கண்ணனாய் வளர்த்த பாட்டியை வணங்கிக்கிறேன்.
//ஒரே வழி.....சில நிமிடங்கள் மட்டுமாச்சும் அடியேனும் தியாகராஜர் ஆவது தான்!
அதான், அந்தப் பதிவை இரவில் எழுதும் போது, அடியேன் கண்களிலும்.......//
எல்லோரும் வந்து படிக்கிறதுக்கு நீங்க இப்படி ஆழ்ந்து எழுதுவதே காரணம்..
வாழ்க, வாழ்க!
//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteயப்பா ரவி இவரு ரொம்ப குழப்பறாரு.//
யெஸ்ஸூ :-)
//கொஞ்சம் வந்து பதில் சொல்லுப்பா//
தோ வாரேன்!
//ஆன்மீகம், சமயம், மதம் - விளக்குக!//
அதெல்லாம் சபீனா பவுடர் போட்டு தான் வெளக்கணும்!
எக்ஜாம்பிள் பாருங்க! ஈஜியாப் புரியும்!
கேஆரெஸ்="ஆண்மீகப்" பதிவரு! (அடிக்கடி பாவனா/அமலா புராணம் பாடுவதால்)
கொத்ஸ்="சமையப்" பதிவரு! (உப்புமா கிண்டறப்பவே இதெல்லாம் யோசிச்சி இருக்கணும்...இப்போ டூ லேட்)
குமரன்="மொதப்" பதிவரு (அ.உ.ஆ.சூ.சா = வெளக்கம் தேவையில்ல-ன்னு நினைக்கிறேன்)
:-)
தல
ReplyDeleteஅருமையான பதில்கள்...பாட்டி கதையை படிக்கும் போது ஒரே சிரிப்பு வந்துடுச்சி ;))
\\எந்த பக்தனையோ இதே போல் கேலி பேசி இருப்பேனோ? அதான் இப்படி வினையெல்லாம் திரையாக வந்து தொங்குதோ?"-ன்னு தனக்குத் தானே தான் நொந்து கொள்கிறார்!\\
ஆகா..!!!!!
அடுத்த "தல" பதில்களுக்கு வெயிட்டிங் ;))
@ கொத்ஸ்
ReplyDeleteஎன்னாது //மூத்த பதிவரா?//
குறிலை ஏன் நெடில் ஆக்கறீங்க?
எழுத்துப் பிழை இல்லாம எழுதவே முடியாதா உம்மால? இருங்க வெட்டி கிட்ட சொல்லுறேன்! :-)
// கொஞ்சம் ஸ்டைல் மாத்தி இருக்கலாம்//
சரி தான்! மாத்திருவோம்!
அடுத்த மாசம் வவாச-ல, திருப்பாவை ஸ்டைலைத் தெருப்பாவை ஸ்டைலா மாத்திருவோம்! :-)
//போகட்டும். ரொம்ப எதிர்பார்த்த கேள்விக்கு அதெல்லாம் இங்க சொல்லக்கூடாதுன்னு சாய்ஸில் விட்டுடீங்க.//
அலோ! எல்லாத்துக்கும் பதில் சொல்லி இருக்கேன்! தூங்கி எழுந்தாப் பொறவு பாருங்க!
//ஜஸ்ட் பாஸ். அம்புட்டுதான்//
ஓ...பாசா! ஜூப்பரு!
ஆத்தா நான் பாசாயிட்டேன்!
சரி...மார்க் எல்லாம் போடறீங்க! நீங்க எப்போ றீச்சர் ஆனீங்க? :-)
//வீரமணி ஐயாவிடம் நான் கேட்ட எதிர்க் கேள்வி! அதை எல்லாம் இங்கிட்டு சொல்ல முடியாது!:-)//
ReplyDeleteஎச்சூஸ் மி.. ஐ ரெபரிங் திஸ் கொஸ்சின்.
டேங்க் யூ!
//என்னாது //மூத்த பதிவரா?//
ReplyDeleteகுறிலை ஏன் நெடில் ஆக்கறீங்க?
எழுத்துப் பிழை இல்லாம எழுதவே முடியாதா உம்மால? இருங்க வெட்டி கிட்ட சொல்லுறேன்! :-)//
ஆமாய்யா முதலில் நெடிலைக் குறிலாக்கச் சொல்லுவீங்க. அப்புறம் இல்லாத ஒற்றை கொண்டு வரச் சொல்லுவீங்க. இதெல்லாம் சரியாச் செய்யுங்க. ஆனா கேள்வி கேட்டா மட்டும்......
//சரி...மார்க் எல்லாம் போடறீங்க! நீங்க எப்போ றீச்சர் ஆனீங்க? :-)//
ReplyDeleteஎங்க ரீச்சர் பதிவில் இதெல்லாம் படிக்கலையா?!!ஓ!! நீங்கதான் மூஊத்த பதிவராச்சே! மறந்துட்டேன்.
//ஏற்கெனவே ஒரு தலைமைக் கேடி இருக்கார். //
//கொத்ஸ், பணவசூலை ஒழுங்காக் கவனிச்சுக்கணும். ஆமாம்.
//
ரீச்சரே சொல்லிட்டாங்க. அதனால இந்த பண வசூல், மார்க் போடறது, சர்டிபிகேட் தரது எல்லாமே நம்ம டிபார்ட்மெண்ட்தான்.
சரி, இந்த ரகரப்பிழைகள் வராதுன்னு பொது மாப்பு எல்லாம் கேட்டு சூடம் அணைச்சு சத்தியம் செஞ்சீங்க?
வெட்டி, ப்ளீஸ் கம் ஹியர்!
அருமையான பதில்கள் ரவி....
ReplyDeleteஉங்களது சிறப்பே நீங்க உணர்ந்ததை மட்டுமே எழுதுவது தான்.
வாழ்த்துக்கள் உங்களுக்கும் கானா அண்ணாச்சிக்கும் :-)
@ ஸ்ரீதர் அண்ணாச்சி
ReplyDeleteகதை பாட வைச்சதுக்கு ஸ்பெசல் நன்றி உங்களுக்கு!
//கிருஷ்ண பிரேமி சொல்லக் கேட்ட மாதிரி இருந்தது உங்கள் கதை. :-))//
நான் ஒன்னும் சொல்லலை! போதுமா? :-))
@சிவா
ReplyDeleteநன்றி!
கேள்வீ எல்லாம் ரொம்ப பெருசு சிவா! அதான்! அட்ஜஸ்ட் மாடி! :-)
//கிருத்திகா said...
ReplyDeleteஆத்திகமோ நாத்திகமோ நம்பிக்கையின் அடிப்படையில் துவங்குவதுதானே..//
:-)
தற்போதைய நாத்திகர்கள் யாராச்சும் இதுக்குப் பதில் சொல்லுங்கப்பா! :-)
//கடவுள் உண்டென்றோ இல்லையென்றோ துவங்கும் பயணத்தின் நடைவண்டி நாம் அந்த உணர்விற்கு உண்மையாயிருப்போம்//
கரெக்டாப் புரிஞ்சிக்கிட்டீங்க கிருத்திகா!
Yes, Integrity to thought is what is needed!
Or else it will become Hypocrisy!
கொள்கையை நடைமுறை வாழ்வில் காட்டாதவன் நாத்திகம் பேசி என்ன? ஆத்திகம் பேசி என்ன? பகுத்தறிவு பேசி என்ன? பக்தி பேசி என்ன?
Kannabiran, I am an atheist as of now.
Delete//கொள்கையை நடைமுறை வாழ்வில் காட்டாதவன் நாத்திகம் பேசி என்ன? ஆத்திகம் பேசி என்ன? பகுத்தறிவு பேசி என்ன? பக்தி பேசி என்ன? -
THe above lines are true. Your blog is very good. Your explaination about Samayam and Madham is good..
And as Kiruthika said, I was very much resolved about athiesm when I was become an atheist..but as I started questioning myself, I get more clarity and peace.
Good job man
//கானா பிரபா said...
ReplyDeleteகலக்கல் பதில்கள் ;-)//
நன்றி தல!
//ஆனா நம்மள மாட்டிட்டீங்களே அப்பூ, சரி சரி "முயல்" கிறேன்//
நான் "ஆமை"கிறேன்! :-)
அடிச்சி ஆடுங்க தல!
//Sumathi. said...
ReplyDelete//"பையனை மடத்துப் பாடசாலைக்கு அனுப்பி வைக்கறீங்களா?"-//
அது சரி, போகாமலே இந்த போடு போடறீங்களே, நீங்க மட்டும் போயிருந்தாக்கா என்னலாம் எழுதி தள்ளுவீங்க?///
சுமதி யக்கா
அத நெனச்சா எனக்கே பயமா இருக்கு! :-)))
எதை எழுதுவேன்? யாரைத் தள்ளுவேன்?? - கரீட்டாச் சொல்லுங்க!
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteமுக்கியமாய் வீரமணி பற்றிய விஷயம்//
யாரை ஞாபகம் வச்சிக்கணுமோ அவிங்கள நல்லாவே ஞாபகம் வச்சிக்கறீங்க கீதாம்மா! :-)
// பாட்டி பற்றியதும், நீங்க சொன்னதா?? இல்லை படிச்சேனா?? :)))))//
நான் பேசும் போது சொல்லி இருப்பேன்!
//எனிவே, வாழ்த்துகள், மூத்தபதிவர் ஆனதுக்கு//
நோ வே! நோ நெடில்ஸ்!
ஐ ஆம் முத்தப் பதிவர்!
//நாங்க எல்லாம் இன்னும் கை.நா. தான்.//
யூ மீன் கைவல்ய நாதர்????
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஅப்ப நீங்க ஆன்மிகப் பதிவரா மதப்பதிவரா சமயப்பதிவரா?//
இதுக்குப் பதில் சொல்லியாச்சி குமரன்!
சந்தேகம் இருந்தா கொத்ஸ் றீச்சர் கிட்ட கேட்டுக்கோங்க!
சரி...அவ்ளோ எதுக்கு?
நான் பதிவரா, பர்ஷ்ட்டு?
//நல்ல பதிலா சொல்லுங்க. நான் உஷா கேட்ட கேள்விக்குக் கட் & பேஸ்ட் பண்ணனும். :-)//
C&P?
U too? :-)
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteஅதிசயம் அதிசயம் பெரியார் தான்...ஆனதென்ன ராஜாஜி !
:)//
இந்தப் பாட்டை உரக்கப் பாடினா என்ன நடக்கும்-னு தெரிஞ்சி தான் பாடறீங்களா கோவி அண்ணா? :-)
உம்ம்ம்ம்
அதுக்காக என்னை ராசாசி-ன்னு திட்டி இருக்க வேண்டாம்! :-)
//கவிநயா said...
ReplyDeleteநல்லா எழுதியிருக்கீங்க கண்ணா. (வேற மாதிரி எப்படி சொல்றதுன்னு கத்துக்கணும் :)//
டேய், ஜூப்பரு! - இதான்கா வேற மாதிரி சொல்லுறது!
//சங்கரனைக் கண்ணனாய் வளர்த்த பாட்டியை வணங்கிக்கிறேன்//
:-)
//எல்லோரும் வந்து படிக்கிறதுக்கு நீங்க இப்படி ஆழ்ந்து எழுதுவதே காரணம்..//
நன்றிக்கா!
உங்க சி.வா.ஜி இன்னும் பாக்கி இருக்கு! திட்டாதீங்க! :-)
//கோபிநாத் said...
ReplyDeleteபாட்டி கதையை படிக்கும் போது ஒரே சிரிப்பு வந்துடுச்சி ;))//
எனக்கும் தான் மாப்பி!
எல்லாரும் என்னை வாலு-ன்னு சொல்வாங்க! ஆனா நான் ரொம்பவே சாது! நீ நம்புற-ல்ல? :-)
//அடுத்த "தல" பதில்களுக்கு வெயிட்டிங் ;))//
தல! முயலுங்க! குவிக், குவிக்!
//இலவசக்கொத்தனார் said...
ReplyDelete//வீரமணி ஐயாவிடம் நான் கேட்ட எதிர்க் கேள்வி! அதை எல்லாம் இங்கிட்டு சொல்ல முடியாது!:-)//
எச்சூஸ் மி.. ஐ ரெபரிங் திஸ் கொஸ்சின்//
விட மாட்டீரே, நீரு!
ஸ்ரீதர் கேள்விக்குத் தான் பதில் சொல்லியாச்சே! வீரமணி கேள்வி எல்லாம் எதுக்கு இப்ப? :-)
ஆனா, சீதை-ன்னு சொல்லி, "அந்தக்" கேள்விக்கு க்ளூ கொடுத்திருக்கேன்! நோட் தட் யுவர் ஹானர்! :-)
பதில்களின் பரமனே ... (ஸ்ஸ் ஒரு பட்டப் பேரு யோசிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்குது சாமி)
ReplyDeleteஅண்ணா, உங்களோட ஒவ்வொரு பதிவிலும், பதிலிலும், பக்தி ரசம் கொட்டுது(சாம்பார் பத்தி கேக்கக்கூடாது, ஏன்னா நான் பெங்களூரியன்)..
வற்றாத செல்வமே வாழ்க நீ வாழ்க !!
பரமனின் பரம ரசிகன்
இராகவன்
//எங்க ரீச்சர் பதிவில் இதெல்லாம் படிக்கலையா?!!ஓ!! நீங்கதான் மூஊத்த பதிவராச்சே! மறந்துட்டேன்//
ReplyDeleteஅலோ, டீச்சர் பதிவுக்கு வராத கேஆரெஸ்ஸா?
எங்க டீச்சர் சொன்னது பண வசூலை மட்டுமே! மார்க் எல்லாம் போட ஒங்களுக்குப் பட்டா போட்டுக் கொடுக்கலை!
பட்டங்கள் ஆள்வதும், மார்க்குகள் போடவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்-னு சட்டம் இருக்காம்!
ஸோ, நீங்களோ நானோ மார்க் எல்லாம் போட முடியாது!
//சரி, இந்த ரகரப்பிழைகள் வராதுன்னு பொது மாப்பு எல்லாம் கேட்டு சூடம் அணைச்சு சத்தியம் செஞ்சீங்க?
வெட்டி, ப்ளீஸ் கம் ஹியர்!//
என் தம்பி பாலாஜி சொன்னது "அதுக்கு" மட்டும் தான்!
ஈழத் தமிழ் வாடையில் வரும் றீச்சருக்கு இல்லை!
வெட்டி, ப்ளீஸ் கம் ஹியர் & கிவ் ஜட்ஜ்மென்ட்!
//மதுரையம்பதி said...
ReplyDeleteஉங்களது சிறப்பே நீங்க உணர்ந்ததை மட்டுமே எழுதுவது தான்//
:-)
என்னமோ சொல்ல வரீங்க! நன்றி மெளலி அண்ணா!
//வாழ்த்துக்கள் உங்களுக்கும் கானா அண்ணாச்சிக்கும் :-)//
காபி காபியைக் கலக்கிற மாட்டாரா என்ன?
//அந்தப் பதிவை இரவில் எழுதும் போது, அடியேன் கண்களிலும்//
ReplyDeleteஇதுதான்.. இதுதான் மீண்டும், மீண்டும் வந்து விட்டில் பூச்சி ஆகச் சொல்கிறது. தமிழ் இசையால் வசமாகா இதயம் எது? எது? ;-)
//விட மாட்டீரே, நீரு!
ReplyDeleteஸ்ரீதர் கேள்விக்குத் தான் பதில் சொல்லியாச்சே! வீரமணி கேள்வி எல்லாம் எதுக்கு இப்ப? :-)//
அது இதுக்கு தான்
//கண்ணன் பாட்டு 100-ஐத் தொடும் நல்வேளையில் சிறப்புப் பரிசாக, என்ன வேணுமோ கேட்டுக்கோங்க மக்கா! ஐ மீன் கேள்வீஸ் ஒன்லி கேள்வீஸ் :-)//
//ஆனா நேத்து சொன்ன கதையில, அந்தப் பையன் தூண்-ல இது மாதிரி எல்லாம் ஒன்னுமே பண்ணலையே! ஆனாலும் அதுல சாமி தானா வந்தாரே?"//
ReplyDeleteஇந்த கேள்விக்கு பதில் யாராவது சொன்னாங்களா? அப்படி சொல்லனாலும் இப்ப நீங்க சொல்லுங்க...
இல்லை கோ.ராகவன் கேட்ட தான் சொல்லுவீங்களா?
//
ReplyDeleteஆனா, சீதை-ன்னு சொல்லி, "அந்தக்" கேள்விக்கு க்ளூ கொடுத்திருக்கேன்! நோட் தட் யுவர் ஹானர்! :-)//
இது ஒரு க்ளூவா???
பதில் சரியா சொல்லலை...
எல்லா கேள்விகளுக்கும் விடை சூப்பர்... பெஸ்ட் 4வது கேள்விக்கு தான்... அதுக்கே 200 மார்க் கொடுக்கலாம்.. 100க்கு :-)...
ReplyDeleteமுதல் கேள்விக்கு பதில் என் வரைக்கும் திருப்தியா இல்லை... எங்க கேள்விக்கும் விடை கிடைக்கும்னா கேள்வியோட வரேன் :-)
இல்லை அதுக்கும் கோ.ராகவன் கேட்ட தான் சொல்லுவீங்கனா, மீ தி எஸ்கேப் :-)
//பதில்களின் பரமனே ... (ஸ்ஸ் ஒரு பட்டப் பேரு யோசிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்குது சாமி)
ReplyDeleteஅண்ணா, உங்களோட ஒவ்வொரு பதிவிலும், பதிலிலும், பக்தி ரசம் கொட்டுது(சாம்பார் பத்தி கேக்கக்கூடாது, ஏன்னா நான் பெங்களூரியன்)..
வற்றாத செல்வமே வாழ்க நீ வாழ்க !!
பரமனின் பரம ரசிகன்//
ஆஹா!!! வாங்க ராகவன்...
ஒரு பின்னூட்டதிலேயே ஒரு பட்டம், ஒரு ரசிகர்மன்றமுன்னு கலக்கிட்டீங்க போங்க...
எல்லாம் பெயர் ராசி, மற்றும் ஊர் ராசின்னு நினக்கிறேன் :))
//கொள்கையை நடைமுறை வாழ்வில் காட்டாதவன் நாத்திகம் பேசி என்ன? ஆத்திகம் பேசி என்ன? பகுத்தறிவு பேசி என்ன? பக்தி பேசி என்ன?//
ReplyDeleteஅட அட, எப்படிய்யா இப்படியெல்லாம் :-)
//இல்லை கோ.ராகவன் கேட்ட தான் சொல்லுவீங்களா?//
ReplyDeleteபாலாஜி....தெய்வமே!!!...நல்லா கேட்டீங்க...எனக்கிருக்கும் சந்தேகத்தையும் சேர்த்து 2 முறை கேள்வியா கேட்டதுக்கு நன்றி... :-)
//அருமை. கிருஷ்ண பிரேமி சொல்லக் கேட்ட மாதிரி இருந்தது உங்கள் கதை. :-))//
ReplyDeleteஸ்ரீதரண்ணாச்சி, இன்னோரு பட்டமா?...ஆஹா....ஆஹா...
கேள்வி கேட்ட போது ஒரு பட்டம், பதில் அளித்தவுடன் ஒரு பட்டம்...அட, அட
பெங்களூர்-எங்களூர் ராகவன் வேற ஒரு பட்டம் தந்து, அதுக்கு ரசிகர் மன்றம் வேற திறந்துட்டாரு....
ஜூப்பர்..
////கொள்கையை நடைமுறை வாழ்வில் காட்டாதவன் நாத்திகம் பேசி என்ன? ஆத்திகம் பேசி என்ன? பகுத்தறிவு பேசி என்ன? பக்தி பேசி என்ன?//
ReplyDeleteஎன்னைத் திட்டுறதுன்னா நேரடியாவே திட்டலாமே?! ஏன் இப்படி?
//இல்லை கோ.ராகவன் கேட்ட தான் சொல்லுவீங்களா?//
ReplyDeleteஅப்படியாங்கங்கங்க? ஆமாம், அவரெங்கே காணோம்? தங்க மரத்தை இழைச்சிகிட்டிருக்காரோ இன்னமும்...
:-)
ReplyDeleteஅதாவது கோவி.கண்ணன் சொன்னா புரிஞ்சிக்குவாரு
வெட்டி பாலாஜி சொன்னா கேட்டுக்கிறுவாரு
ஜிரா (எ) கோ.இராகவந்தான் சொன்னாப் புரிஞ்சிக்கவும் மாட்டாரு... கேட்டுக்கிறவும் மாட்டாரு... ஆகையால அவர் கேட்டதுக்குப் பதில் சொல்வீங்களாக்கும் :D
//G.Ragavan said...
ReplyDelete:-)
அதாவது கோவி.கண்ணன் சொன்னா புரிஞ்சிக்குவாரு
வெட்டி பாலாஜி சொன்னா கேட்டுக்கிறுவாரு
ஜிரா (எ) கோ.இராகவந்தான் சொன்னாப் புரிஞ்சிக்கவும் மாட்டாரு... கேட்டுக்கிறவும் மாட்டாரு... ஆகையால அவர் கேட்டதுக்குப் பதில் சொல்வீங்களாக்கும் :D//
சொன்னா புரிஞ்சிக்க மாட்டாங்க, கேக்க மாட்டாங்கனு தெரிஞ்சி பதில் சொல்றதுக்கு அவர் என்ன லூசா?
உண்மை நீங்க சொன்னதுக்கு அப்படியே அப்போசிட் ;)
//சொன்னா புரிஞ்சிக்க மாட்டாங்க, கேக்க மாட்டாங்கனு தெரிஞ்சி பதில் சொல்றதுக்கு அவர் என்ன லூசா?
ReplyDeleteஉண்மை நீங்க சொன்னதுக்கு அப்படியே அப்போசிட் ;) //
பாலாஜி,
எப்படிங்க ஒரே பால்ல மூணு சிக்ஸர் அடிக்கறீங்க :-))
- ரவி லூசான்னு கேட்டு ஒரு பிட்டப் போட்டு அவரத் தூக்கி அந்தாண்டை வச்சிட்டிங்க
- கோவி அண்ணா புரிஞ்சிக்க மாட்டார்னு ஒரு பிட்ட போட்டு அவரத் தூக்கி இந்தாண்டை வச்சிட்டிங்க
- கோ இராகவன் உண்மையை சொல்ல மாட்டார்ன்னு சொல்லி அவரையும் சேத்து தூக்கிட்டிங்க.
இவ்வளவுதான் எனக்குத் தெரியுது. இதுக்கு மேலயும் ஆராய இ.கொ. மைக்ரோஸ்கோப் எடுத்துகிட்டு வர்றாராம் :-))
//இவ்வளவுதான் எனக்குத் தெரியுது. இதுக்கு மேலயும் ஆராய இ.கொ. மைக்ரோஸ்கோப் எடுத்துகிட்டு வர்றாராம் :-))//
ReplyDeleteஇது, இது...
நான் சும்மா இருந்தாலும் என்னை இப்படி நுண்ணரசியல் ப்ராக்டிகல் க்ளாஸ் எடுக்க வைக்கறீங்க. போகட்டும். இப்போ வெட்டி சொல்லி இருக்காரு. தப்பாவா சொல்லி இருப்பாரு
ReplyDeleteஸ்ரீதர், நீங்க சொன்னா மாதிரி நேர் எதிர்ப்பதமா சொல்ல வந்தாருன்னு அது வெறும் முதல் அடுக்குதான். அதை மட்டுமே பார்த்துட்டு என்னமோ இந்த குதி குதிக்கறீங்களே!
அதை விடுத்து அதற்கு அடுத்த அடுக்கில் என்ன சொல்லி இருக்காருன்னு பார்க்கலாமா.
//கண்ணன் சொன்னாப் புரிஞ்சுப்பாரு.//
அதாவதுங்க இவரு அந்தப் பக்கமும் இருந்திருக்காரு, இந்தப் பக்கமும் இருந்திருக்காரு. அதனால கண்ணன் சொல்வது ஏன் எதற்கு என்பது இவருக்குப் புரியும். இதுவே தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றிருப்பவர்களுக்கு எப்படிப் புரியும் எனச் சாடுகிறார்.
அடுத்தது பார்த்தீங்கன்னா //வெட்டி சொன்னாக் கேட்டுக்கிறுவாரு//
இதுல விஷயம் என்னன்னா, வெட்டி எதனா சொல்லுவாரு. அதை இவரு காது குடுத்துக் கேட்பாராம். ஏன்னா வெட்டி ஒண்ணும் தெரியாத வெகுளி, குழந்தை மாதிரி. அந்த குழந்தையின் மழலையை அதில் அர்த்தமே இல்லாது போனாலும் நாம் கேட்டு மகிழ்வதைப் போல் இவர் வெட்டி பேசுவதைக் கேட்டு மகிழ்வாராம்.
மூணாவது, //ஜிரா (எ) கோ.இராகவந்தான் சொன்னாப் புரிஞ்சிக்கவும் மாட்டாரு... கேட்டுக்கிறவும் மாட்டாரு.//
இது மேட்டர் புதுசு இல்லை. பதிவில் சொன்னதுதான். அதாவது இவரு தியாகய்யர் வேஷம் போட்டுக்குவாருதானே. அப்போ இவருக்கு அரசன் யாரு? அந்த ராகவந்தானே? அவரைப் பத்தி சொன்னா இவருக்கு ஸ்வீட் சாப்பிடறது மாதிரிதானே. அதான் ஜிரா என்ற கோ ராகவன் - தான் சொன்னா இவரு புரிஞ்சுக்கவும் மாட்டாரு
கேட்டுக்கவும் மாட்டாரு
ஏனா இவருதான் தியாகய்யர் மாதிரி அவரைப் பத்தி நினைச்ச உடனே சுயநினைவு இல்லாமப் போயிடறாரே. அப்புறம் எங்க கேட்கறது எங்க புரியறது!!
//ஆகையால அவர் கேட்டதுக்குப் பதில் சொல்வீங்களாக்கும் :D////
அதனால ஸ்ரீதர் கேட்டா மட்டும்தான் பதில் சொல்லுவீங்களாக்கும் என வெட்டி இந்த அடுக்கில் சொல்லி இருக்காரு.
அடுத்த அடுக்கு எப்படி இருக்கு அப்படின்னு பார்க்கலாமா?
அடியேன் அவர்களே, இப்படி அடியேன் அடியேன்னு சொல்லியே 50, 100ன்னு அடிச்சுக்கிட்டே இருக்கீங்களே!! நல்லா இருங்கப்பா!!
ReplyDelete//இதுல விஷயம் என்னன்னா, வெட்டி எதனா சொல்லுவாரு. அதை இவரு காது குடுத்துக் கேட்பாராம். ஏன்னா வெட்டி ஒண்ணும் தெரியாத வெகுளி, குழந்தை மாதிரி. அந்த குழந்தையின் மழலையை அதில் அர்த்தமே இல்லாது போனாலும் நாம் கேட்டு மகிழ்வதைப் போல் இவர் வெட்டி பேசுவதைக் கேட்டு மகிழ்வாராம்.//
ReplyDeleteஇதுல எவ்வளவு நுண்ணரசியல் இருக்குனு தெரியலையே :-(
நான் ஆதரிக்கனுமா எதிர்க்கனுமா?
//இதுல எவ்வளவு நுண்ணரசியல் இருக்குனு தெரியலையே :-(
ReplyDeleteநான் ஆதரிக்கனுமா எதிர்க்கனுமா? //
நான் வெகுளின்னு ஒரு பேச்சுக்கு சொன்னதுக்காக இப்படி எல்லாம் நடிச்சுக் காட்டணுமா?
////கண்ணன் சொன்னாப் புரிஞ்சுப்பாரு.//
ReplyDeleteஅதாவதுங்க இவரு அந்தப் பக்கமும் இருந்திருக்காரு, இந்தப் பக்கமும் இருந்திருக்காரு. அதனால கண்ணன் சொல்வது ஏன் எதற்கு என்பது இவருக்குப் புரியும்.//
கொத்ஸ்...
:)
மகாபாரத கண்ணனின் நிலை கூட இதுதான். இரண்டு பக்கமும் இருந்து சமாதானம் செய்ய முயன்று...முடியாமல் போகாவே...ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற நிலையை கடைசியாக எடுத்தது தான். அவர் ஒரு பக்கத்துக்கு கண்ணன் - நான் மறுபக்கத்துக்கு. ஆனால் பாண்டவர்கள் யார் என்பது தான் பிரச்சனையே !
:)
கேஆர்எஸ் சொன்னால் மட்டும் கேட்பேன் என்று பொருளல்ல...அவர் என்னிடம் சொல்லாவிட்டாலும் செய்வேன் அதனால் தான் என்னை (கை)விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.
:)))))))))))
//கேஆர்எஸ் சொன்னால் மட்டும் கேட்பேன் என்று பொருளல்ல...//
ReplyDeleteநான் சொல்ல வந்தது நீங்க சொல்வதை ரவி புரிந்து கொள்வார் என்பது மட்டுமே. ஏன் என்றால் உங்களின் ஏரணம் அவருக்குப் புரியும் என்பதால்.
மற்றபடி உங்கள் புரிதலையோ நீங்கள் யார் பேச்சைக் கேட்பீர்கள் என்பது பற்றியோ நான் சொல்லவே இல்லை சாமி.
இந்தாங்க தல, நம்மால
ReplyDeleteமுடிஞ்சது ;-)
கேள்வியும் நானே பதிலும் நானே
http://ulaathal.blogspot.com/2008/06/blog-post.html
@கொத்ஸ்
ReplyDelete//அடியேன் அவர்களே, இப்படி அடியேன் அடியேன்னு சொல்லியே 50, 100ன்னு அடிச்சுக்கிட்டே இருக்கீங்களே!! நல்லா இருங்கப்பா!!//
ஹிஹி
கண்ணன் வெண்ணெய் திருடித் தின்ன போது, மணி அடியேன்-னு சொல்லுச்சாம்!
கண்ணனும் அடிக்க மாட்டேன் (அடியேன்)-ன்னு சொல்லுதாக்கும் நெனச்சி, தின்னு தீர்க்க...
அடியேன் (அடியவன்) மணி, டக டக டிகு டிகு டங்கு டிங்குகு-ன்னு நல்லாவே அடிச்சி ஊரைக் கூட்டிருச்சாம்! :-)
கண்ணனுக்கே அல்வா?
@வெட்டி
ReplyDelete//இது மாதிரி எல்லாம் ஒன்னுமே பண்ணலையே! ஆனாலும் அதுல சாமி தானா வந்தாரே?"//
//இந்த கேள்விக்கு பதில் யாராவது சொன்னாங்களா? அப்படி சொல்லனாலும் இப்ப நீங்க சொல்லுங்க...//
பாலாஜிக்குத் தெரியாத பதிலா பாலாஜி?
சரி பாலாஜி ஆசைக்கு அணை போடுவேனா? சொல்கிறேன்!
//இல்லை கோ.ராகவன் கேட்ட தான் சொல்லுவீங்களா?//
அது என்ன கோ.ராகவன் in bold font?
ராகவனையே போல்டு (bowled) செய்யும் அளவுக்கு நீங்க அவ்வளவு போல்டா (Bold-aa)?
//முதல் கேள்விக்கு பதில் என் வரைக்கும் திருப்தியா இல்லை... எங்க கேள்விக்கும் விடை கிடைக்கும்னா கேள்வியோட வரேன் :-) //
ReplyDeleteதிருப்பதிக்கே திருப்தி இல்லீனா எப்படி?
இன்னிக்கு முழுக்க ஆபீஸ்ல இங்கிட்டு தான்! :-)
அதுனால திருப்தியா கேள்வியோட வந்து, திருப்தியா கேள்வியோட (ஐ மீன் கேள்வி-பதிலோட) போங்க!
//குமரன் (Kumaran) said...
ReplyDelete//கொள்கையை நடைமுறை வாழ்வில் காட்டாதவன் நாத்திகம் பேசி என்ன? ஆத்திகம் பேசி என்ன? பகுத்தறிவு பேசி என்ன? பக்தி பேசி என்ன?//
என்னைத் திட்டுறதுன்னா நேரடியாவே திட்டலாமே?! ஏன் இப்படி?//
ஆகா
குமரனை அடியேன் வைய முடியுமா?
வைதாரையும் வாழ வைப்பவன் அல்லவா அதற்கு வர வேண்டும்!
அச்சுவை பெறினும் வேண்டேன்!
ஆம்ஸ்டர் டாம் நகருளானே!
:-))
//பாலாஜி,
ReplyDeleteஎப்படிங்க ஒரே பால்ல மூணு சிக்ஸர் அடிக்கறீங்க :-))//
ஹா ஹா ஹா
அதுவே கலியுகப் பதிவன் பாலாஜியின் மகிமை!
மும் மூர்த்திகளையும் ஒரே சொல்லால் பந்தாடும் மூல மூர்த்தி, பாலாஜி, போற்றி போற்றி!
//- ரவி லூசான்னு கேட்டு ஒரு பிட்டப் போட்டு அவரத் தூக்கி அந்தாண்டை வச்சிட்டிங்க//
ReplyDeleteநாரதா ஸ்ரீதரா!
//- கோ இராகவன் உண்மையை சொல்ல மாட்டார்ன்னு சொல்லி அவரையும் சேத்து தூக்கிட்டிங்க.//
வேலவா சீதரா!
//- கோவி அண்ணா புரிஞ்சிக்க மாட்டார்னு ஒரு பிட்ட போட்டு அவரத் தூக்கி இந்தாண்டை வச்சிட்டிங்க//
வில்லாதி ஸ்ரீதரா!
வீரமணி கண்டனே!
சரி...
ReplyDeleteஅப்ப பேசலாம்.
முதல் கண்டிஷன், சும்மா மொக்கையா தமிழ்ல மச்சியால், குச்சியால்னு எல்லாம் பேசாம ஸ்ட்ரைட்டா பதில் சொல்லுங்க.
1. இறை மறுப்பை விட, சாதி தாழ்த்தியமை, தமிழ் தாழ்த்தியமை! இவையே நான் மறுப்பாளனாக மாறிய காரணமாகவும் இருக்கலாம்!
இது உண்மையில்லைனு நீங்க உணர்ந்த பிறகு மறுபடியும் ஆத்திகரா மாறிட்டீங்கனு சொல்றீங்க.
இதை நீங்க பார்த்த இடங்கள் எல்லாம் பெரும்பாலும் வைணவ கோயில்கள். அதுக்கு காரணம் உடையவர் ராமனுஜர். 800 ஆண்டுகளுக்கு முன்னாடி வந்து அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் இன்னும் அமைதியா நடந்துட்டு இருக்கு.
ஆனா 2000 வருஷமா சைவத்துல இதை மாத்த யாரும் வரலையே. இன்னும் அங்க தமிழ் மறுப்பும், சாதி மறுப்பும் இருந்துட்டு தானே இருக்கு?
அரியும், சிவனும் ஒண்ணு தான். எந்த உருவத்துல வணங்கினாலும் அது ஒரு கடவுள் தான் நீங்க நம்பறீங்கனு நினைக்கிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன்?
வைணவ கோவில்களில் நடப்பது தனி ஒரு மனிதனின் செயலா அல்லது இறைவனின் செயலா?
உடையவர், கை தேர்ந்த மேனஜராக இருந்து ஒரு நிறுவனத்தை அமைத்தது போலவே எனக்கு தோன்றுகிறது. அதை போல் ஒரு மேனஜர் சைவர்களுக்கு கிடைக்கவில்லை.
//சாதி தாழ்த்தியமை, தமிழ் தாழ்த்தியமை//
இது தான் உங்க முக்கியத்துவத்தின் வரிசை என நம்புகிறேன். தமிழ் தாழ்த்தியமையை விட சாதி தாழ்த்தியமை தான் உங்களுக்கு அதிக கோபத்தை வர வழித்திருக்கும் என்பது என் புரிதல். (ஏன்னா உங்க தமிழ் பற்றை விட மனித நேயம் தான் ரொம்ப அதிகம்னு உங்களோட பழகனதுல என்னோட புரிதல்)
அப்படி பார்க்கும் போது உடையவர் ஏற்படுத்திய சமுதாய மாற்றத்தை விட பெரியார் ஏற்படுத்திய மாற்றம் தான் அதிகம் என்பது என்னோட புரிதல். அப்படி பார்க்கும் போது நீங்க பெரியாரை பின்பற்றாமல் உடையவரை பின்பற்ற ஆரம்பித்ததின் துவக்கம் என்ன?
என்னோட புரிதல் என்னனா?
//ஆனா நேத்து சொன்ன கதையில, அந்தப் பையன் தூண்-ல இது மாதிரி எல்லாம் ஒன்னுமே பண்ணலையே! ஆனாலும் அதுல சாமி தானா வந்தாரே?//
சாமிக்கு கொசு கடிக்கும் டார்டாய்ஸ் வைக்கனும்னு சொல்லி வளர்ந்த குழந்தை, நாத்திகனாக மாற காரணங்கள் வலுவாக இருந்திருக்க வேண்டும்.
நீங்க பெரியார் திடலுக்கு சென்றது, கழக கூட்டங்களில் கலந்து கொண்டது, எல்லாமே உங்களோட ஆன்மீக தேடல் தான். அதுக்கு பதில் கிடைத்ததும் இறைவனின் காலடியை இன்னும் இறுக பற்றி கொண்டீர்கள்.
அவ்வளவு தான்...
உங்களால் என்றைக்குமே பிள்ளையார் சிலையை உடைக்கவோ, ராமனின் சிலை மேல் *@#$%^ முடியவே முடியாது.
// Sridhar Narayanan said...
ReplyDelete//சொன்னா புரிஞ்சிக்க மாட்டாங்க, கேக்க மாட்டாங்கனு தெரிஞ்சி பதில் சொல்றதுக்கு அவர் என்ன லூசா?
உண்மை நீங்க சொன்னதுக்கு அப்படியே அப்போசிட் ;) //
பாலாஜி,
எப்படிங்க ஒரே பால்ல மூணு சிக்ஸர் அடிக்கறீங்க :-))
- ரவி லூசான்னு கேட்டு ஒரு பிட்டப் போட்டு அவரத் தூக்கி அந்தாண்டை வச்சிட்டிங்க
- கோவி அண்ணா புரிஞ்சிக்க மாட்டார்னு ஒரு பிட்ட போட்டு அவரத் தூக்கி இந்தாண்டை வச்சிட்டிங்க
- கோ இராகவன் உண்மையை சொல்ல மாட்டார்ன்னு சொல்லி அவரையும் சேத்து தூக்கிட்டிங்க.
இவ்வளவுதான் எனக்குத் தெரியுது. இதுக்கு மேலயும் ஆராய இ.கொ. மைக்ரோஸ்கோப் எடுத்துகிட்டு வர்றாராம் :-))//
ஸ்ரீதர்,
இப்படி தான் தசாவதாரத்துக்கு கமலே யோசிக்காததெல்லாம் நீங்களா யோசிச்சி ரிவியூ கமெண்ட்ல போட்டீங்க...
குப்பற படுத்துட்டு யோசிப்பீங்களோ! :-)
//குப்பற படுத்துட்டு யோசிப்பீங்களோ! :-) //
ReplyDelete:-)) உண்மையை சொல்லனும்னா, நகைச்சுவை என்று நினைத்து போட்ட பின்னூட்டம். போட்ட பிறகு கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தது உண்மை.
ஆன்றோர் சான்றோரை (கே ஆர் எஸ் பதிவுல இருக்கோம்ல. இப்படித்தான் எழுதனுமாம்) எல்லாம் கிண்டல் செய்வது எனது நோக்கம் அல்ல. கோவி கண்ணன், கோ இராகவன், ரவி மற்றும் பாலாஜி தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் :-)
@நு.நா
ReplyDeleteடாக்டர் கொத்ஸ்!
//கண்ணன் சொன்னாப் புரிஞ்சுப்பாரு.//
நீங்க எந்தக் கண்ணனைச் சொல்றீங்க? :-)
கண்ணன், சொன்னா புரிஞ்சிப்பாரா?
இல்லை
கண்ணன் சொன்னா, (இவரு) புரிஞ்சிப்பரா?
ஒரிஜினல் புதசெவி!
//வெட்டி ஒண்ணும் தெரியாத வெகுளி, குழந்தை மாதிரி. அந்த குழந்தையின் மழலையை அதில் அர்த்தமே இல்லாது போனாலும் நாம் கேட்டு மகிழ்வதைப் போல் இவர் வெட்டி பேசுவதைக் கேட்டு மகிழ்வாராம்//
அய்யோ!
ஆயிரம் பொன்! ஒவ்வொரு எழுத்தும்! :-)
//அதாவது இவரு தியாகய்யர் வேஷம் போட்டுக்குவாருதானே. அப்போ இவருக்கு அரசன் யாரு? அந்த ராகவந்தானே?//
ஐயா!
காலைக் காட்டுப்பா ராசா!
ஜிரா கால்-ல என்னை வுழ வைக்க, அவரு கிட்ட எம்புட்டு வாங்கினீரு?:-)
பிரியாணி-ன்னு மகரந்தத்தில் வந்த போதே நெனச்சேன்! மகரந்த வாசம் வீசாம, பிரியாணி வாசம் வீசுதே-ன்னு!
//ஜிரா என்ற கோ ராகவன் - தான் சொன்னா இவரு புரிஞ்சுக்கவும் மாட்டாரு கேட்டுக்கவும் மாட்டாரு//
அதுனால தானே தியாகராசர், ஓ ராகவா, எத்தினி முறை கூப்பிட்டும் வர மாட்டேங்குறியே! புரிஞ்சிக்க மாட்டேங்குறியே-ன்னு பாடி பாடி ஃபீல் ஆவறாரு!
மருகேலரா ஓ ராகவா?
எந்த முறோ பிலிசி ஓ ராகவா?
நேனு வாடினி பிலிசி, நீ ப்ளாக் சூச போயா?
கொத்ஸ் சொன்னதைப் பாத்து, இப்ப எனக்கே ஜந்தேகம் வந்துருச்சி!
இராகவன் போன ஜென்மத்துல "அவரோ"? அடியேன் "இவரோ"?
:-))))
//அடுத்த அடுக்கு எப்படி இருக்கு அப்படின்னு பார்க்கலாமா?//
அது வேற கீதா?
@கொத்ஸ்
ReplyDelete//நான் வெகுளின்னு ஒரு பேச்சுக்கு சொன்னதுக்காக இப்படி எல்லாம் நடிச்சுக் காட்டணுமா?//
எங்க வெட்டி சொன்னதைச் செய்வார்! செய்வதைச் சொல்வார்!
இதுவா நடிப்பு!
இதுவன்றோ பிடிப்பு!
:-)
@ கோவி அண்ணா
ReplyDelete//கேஆர்எஸ் சொன்னால் மட்டும் கேட்பேன் என்று பொருளல்ல...அவர் என்னிடம் சொல்லாவிட்டாலும் செய்வேன் அதனால் தான் என்னை (கை)விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.
:)))))))))))//
அய்யகோ!
காப்பு மறந்தறியேன்!
"கண்ணனே" என்றிருப்பேன்!
ஏதோ நான் பதிவு பக்கம் வர முடியலை-ங்கிறத்துக்காக அவசரப்பட்டு எந்தத் தப்பான முடிவும் எடுத்துறாதீங்கண்ணா!
:-))
@கோவி அண்ணா
ReplyDelete//அவர் ஒரு பக்கத்துக்கு கண்ணன் - நான் மறுபக்கத்துக்கு. ஆனால் பாண்டவர்கள் யார் என்பது தான் பிரச்சனையே !
//
சூப்பர்! ரசித்தேன்!
வெட்டிக்கு இணையாகப் பேசும் தெறமை உம்மிடம் இருக்கு!
:-))))
பாண்டவர்கள் யார்?
கண்ணன் யாரிடம் இருக்கானோ, அவர்களே பாண்டவர்கள்! :-))
//Sridhar Narayanan said...
ReplyDelete//குப்பற படுத்துட்டு யோசிப்பீங்களோ! :-) //
நகைச்சுவை என்று நினைத்து போட்ட பின்னூட்டம். போட்ட பிறகு கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தது உண்மை//
சேச்சே! எதுக்குச் சங்கடம்? சங்கடமே இல்லை! சங்கரன் இருக்கும் போது சங்கடம் எதுக்கு? :-)
//ஆன்றோர் சான்றோரை (கே ஆர் எஸ் பதிவுல இருக்கோம்ல. இப்படித்தான் எழுதனுமாம்)//
யோவ்!
சங்கடப் படுத்தறீரா?
சங்கரப் படுத்தறிரா? :-)
//கோவி கண்ணன், கோ இராகவன், ரவி மற்றும் பாலாஜி தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் :-)//
இதுல ஒருத்தரைத் தவிர மத்த எல்லாரும் தவறாவே நெனச்சிக்க மாட்டாங்க! புரிஞ்ச்சிக்கிறுவாங்க! கேட்டுக்கிறுவாருங்க! அது யாரு? :-))))
அதானே தேடிக்கிட்டு இருக்கோம்-ங்கறீங்களா?:-)
பாலாஜியின் முக்கியமான கேள்விக்கு இன்னும் பத்து நிமிடத்தில் வருகிறேன்! (சாப்பிட்டு விட்டு - Time is 2:00:-)
ReplyDelete//
ReplyDeleteஆன்றோர் சான்றோரை (கே ஆர் எஸ் பதிவுல இருக்கோம்ல. இப்படித்தான் எழுதனுமாம்) எல்லாம் கிண்டல் செய்வது எனது நோக்கம் அல்ல. கோவி கண்ணன், கோ இராகவன், ரவி மற்றும் பாலாஜி தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் :-) //
நான் கொஞ்சம் கூட தப்பா நினைக்கலப்பா.. ஜி.ராவும், கோவியும் கூட தப்பா நினைக்க மாட்டாங்க... நோ ஃபீலிங்ஸ் :-)
பாலாஜி
ReplyDelete//உங்களால் என்றைக்குமே பிள்ளையார் சிலையை உடைக்கவோ, ராமனின் சிலை மேல் *@#$%^ முடியவே முடியாது//
என்னால் திருவரங்கம் ஆலயத்துக்கு முன்னுள்ள பெரியார் சிலையையும் உடைக்கவோ, சிலை மேல் *@#$%^ முடியவே முடியாது!
மனதில் இருந்ததைத் தான் படத்தில் காட்டினேன்!
கோபுரத்தில் இராமானுசர் ஊருக்கே உரைக்க,
கோபுரத்துக்கு முன் பெரியார் ஊருக்கே உரைப்பதில்
எந்தவொரு வேறுபாடும் இல்லை!
அவர் குருவை மீறி உரைத்தார்!
இவர் சில குருடரை மீறி உரைத்தார்!
இருவரின் உரையும், உறைப்பவர்க்கு உறைத்தால் சரி!
Again @ Vetti
ReplyDelete//முதல் கண்டிஷன், சும்மா மொக்கையா தமிழ்ல மச்சியால், குச்சியால்னு எல்லாம் பேசாம ஸ்ட்ரைட்டா பதில் சொல்லுங்க//
அது...
மச்சியாள், குச்சியாள்,
வெற்றி வெட்சியாள், தமிழ்க் கட்சியாள்!
ளகரத்தை, லகரமாக்கும் உங்க பிசினஸ் எல்லாம் என்னிக்கும் நிக்கப் போறதில்ல! இப்படி வேணும்னே எழுத்துப் பிழை செய்வதை முதலில் நிறுத்துங்க! நல்ல தமிழில் லகரங்களைச் சேருங்க! :-))))))
@வெட்டி
ReplyDeleteஎப்போ ஒரு மனுசனுக்கு இறைவன் என்று தெரிய வருது பாலாஜி?
அம்மா அப்பா காட்டுறாங்க! இல்ல டீச்சர்! இல்ல பள்ளி நண்பர்கள்! இல்ல ஆதரவில்லா ஒரு புள்ளைக்கு, அனாதை ஆஸ்ரமத்தில் ஏதோ ஒரு நன்னாளில்...இப்படிப் பல வழிகள்!
எப்போ ஒரு மனுசன் நாத்திகன் ஆகிறான் பாலாஜி?
கிட்டத்தட்ட அதே பதில் தான்!
அவனைச் சூழ்ந்துள்ள அம்மா அப்பா ஒரு வேளை நாத்திகர்களா இருந்தால்...
முதலில் இறைவனைக் காட்டி, அப்படியாப்பட்ட இறைவன் இல்லை என்று காட்டுகிறார்கள்! :-)
என் அனுபவத்தைச் சுருக்கமாகத் தான் இங்கு தர முடியும்! மங்களூர் சிவா இதுவே பெரிய பதிவு-ன்னு சொல்லி இருக்கார் பாருங்க!
என்னை முதலில் மாற்றிப் பின்னரும் மாற்றிய காரணிகள் நிறைய என்றாலும் அடிப்படை, நீங்க என் கிட்ட கரெக்டாப் புடிச்சீங்க பாருங்க அந்தத் "தேடல்" தான்!
வாழ்வின் விரக்தியில் இறை மறுப்பவர்கள் சிலர் உண்டு!
ஆனால் அந்தத் தேடல் இருந்தால், தேடலில் நேர்மையும் இருந்தால், விரக்தியால் எவருமே இறை மறுக்க மாட்டார்கள்!
விரக்தியோ, விம்மிதமோ, இறையும் இயல்பாக உறையும்!
(வளர்ந்த பின் வரும் விவேக புத்தியால் இறை மறுப்பது இன்னொரு கோணம்! அது பிறகு பேசுவோம்)
//சாமிக்கு கொசு கடிக்கும் டார்டாய்ஸ் வைக்கனும்னு சொல்லி வளர்ந்த குழந்தை, நாத்திகனாக மாற காரணங்கள் வலுவாக இருந்திருக்க வேண்டும்//
ReplyDeleteகாரணங்கள் வலு இல்லை!
என் கேள்விகள் வலுவாக இருந்தன!
ஒப்புக்கு ஆன்மீகம் பேசி விட்டு
நடைமுறையில் கோன்மீகம் பண்ணுறது நமக்கு சின்ன வயசில் இருந்தே ஆவாது!
அகம் பிரம்மாஸ்மி, தத் த்வம் அஸி, தேவோ மனுஷ்ய ரூபே!...பாவி...என்னிக்கி கட்டைல போவானோ தெரியல்லை? இவன்-லாம் ஒரு அண்ணனா ஜனிச்சானே! இவனுக்கு வேணும் போது அப்பா சொத்தைப் பிரிச்சாப் போறுமாம்! ஏன் இப்போ பிரிச்சா என்ன?.....சரி சரி..மந்தரத்தை முடிப்போம்! தஸ்மை ந கராய நம சிவாய!
உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனெம் பெருமானே!!!
சாயந்திரம் ஆனா நம்ம வூட்டுக்கே வருதுங்க இதுங்க! உனக்குப் போதாதுன்னு இதுங்களுக்கு வேற பிஸ்கெட் வாங்கி வைக்கணூமா? நாளைல இருந்து நீ அவுங்க வீட்டுல போய் விளையாடு! பசங்களா இதுங்க? பிசாசுங்க! - கிருஷ்ணா நீ பேகனே! பாரோ!
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்...வந்துட்டானுங்க மதத்தைப் பரப்ப...நல்லவனுங்க மாதிரி கல்வி சொல்லிக் குடுக்கறானுங்களா? இல்லை அல்லே லூயா சொல்லிக் குடுக்கறானுங்களா?...யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்!
இந்த மாதிரி மக்கள்ஸ், சின்ன வயசுல என் கிட்ட மாட்டிக்கிட்டு பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லை! :-)
//நீங்க பெரியார் திடலுக்கு சென்றது, கழக கூட்டங்களில் கலந்து கொண்டது, எல்லாமே //
ReplyDeleteஅம்மா பொய் பேசுறாங்க, அப்பா சின்னச் சின்னக் கலப்படம் பண்றாரு, அண்ணன் ஓவர் ஜொள்ளன், எதுவுமே சரியில்லை-ன்னு வூட்டை வுட்டு ஓடிப் போச்சு ஒரு பொடிசு!
அங்கிட்டு போனா, இங்க பண்ணறது எல்லாம் அங்கேயும் பண்ணறாங்க!
வூட்டுச் சாப்பாடுல அம்மா கலப்படம் பண்ண மாட்டாங்க! வெளீல லைட்டா பண்ணுவாங்க!
அங்கனயும் அவங்க மண்டபத்துல மட்டும் கலப்படம் நடக்காது! மத்ததுல நடக்குறது எல்லாம் சாணக்கிய தந்திரம்!
மேடையில் ஏழையின் சிரிப்பில் இறைவனைப் பார்த்து விட்டு
கடைக் கோடியில், கல்லாவின் சிரிப்பில் கடவுளைக் காண்பது ஒரு மறுமலர்ச்சிப் பாதை!
பெண்ணைக் கிள்ளுக் கீரை-ன்னு நினைச்சீங்களா? அவ தீக்குளிக்கணுமா! அத்தினி பேரு முன்னாடி அவ மேல சந்தேகம்-னு சொன்னியே! த்தூ...நீயும் ஒரு ஆம்பிளை?
டேய், அவ முதுகுல மூனு கோடு இருக்கான்னு பாருடா! அவளைத் தொட்டாங்களா இல்லியான்னு தெரிஞ்சிடும்! அத்தினி பேரு முன்னாடி கேட்டாத் தாண்டா ஒரு விழிப்புணர்ச்சி கெடைக்கும்!
கண் இரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ?
இதுக்கு எதுக்கு வீட்டை விட்டு ஓடணும்? அதே தானே அங்கிட்டும் நடக்குது! பொடிசு திரும்பி வூட்டுக்கே ஓடியாந்திருச்சி! :-)
ஆத்திகரையோ நாத்திகரையோ கடவுள் உருவாக்குவதில்லை!
ஆத்திகர்கள் நாத்திகர்களை உருவாக்குகிறார்கள்!
நாத்திகர்கள் ஆத்திகர்களை உருவாக்குகிறார்கள்!:-)
நான் எப்பவோ கேட்ட கேளிவிக்கே இன்னும் பதிலோ பதிவோ இல்லை. மறந்தாச்சா ரவி?சொல்லிப் புரியவைக்க முடியாதுன்னு சாய்சில விட்டாச்சா?
ReplyDelete// கொத்ஸ் சொன்னதைப் பாத்து, இப்ப எனக்கே ஜந்தேகம் வந்துருச்சி!
ReplyDeleteஇராகவன் போன ஜென்மத்துல "அவரோ"? அடியேன் "இவரோ"?
:-)))) //
இம்மையில் இமையானான் உமையாள் மகன். மறுமையை மறைத்தொழித்தான் முழுவேந்தி புதல்வன். மும்மையும் எம்மைச் செம்மையாகக் காத்தவன்...என்றென்றும் தனை மறக்கவொட்டாது உடனிருப்பவன் செந்தமிழ்ச் செல்வன் வேலவன். ஆகையால அவராவோ இவராவோ இருந்திருக்க வாய்ப்பில்லைன்னுதான் தோணுது. :-)
//ஏன்னா உங்க தமிழ் பற்றை விட மனித நேயம் தான் ரொம்ப அதிகம்னு உங்களோட பழகனதுல என்னோட புரிதல்)//
ReplyDelete:-)))
//அப்படி பார்க்கும் போது உடையவர் ஏற்படுத்திய சமுதாய மாற்றத்தை விட பெரியார் ஏற்படுத்திய மாற்றம் தான் அதிகம் என்பது என்னோட புரிதல்//
மிகவும் உண்மை!
உடையவருக்கு மெய்ஞானம் கலந்த நோக்கமும் சேர்த்தே இருந்தது!
பெரியாருக்கு மெய்ஞானமாவது, வெங்காயமாவது! சமூக மறுமலர்ச்சி ஒன்றே குறிக்கோள்!
உடையவர் மென்மையானவர்!
அதிரடி செய்யும் போதும் அதைக் கருணையோடு செய்பவர்!
பெரியார் வீரம் செறிந்தவர்!
அதிரடி செய்யும் போது அதிரடியே அஞ்சும் அளவுக்குச் செய்பவர்!
//அப்படி பார்க்கும் போது நீங்க பெரியாரை பின்பற்றாமல் உடையவரை பின்பற்ற ஆரம்பித்ததின் துவக்கம் என்ன?//
:-)
இதுக்குப் பெரியார் வழியிலேயே நான் பதில் சொல்கிறேன்! (எதிர்ப்புகள் கிளம்பும் என்று தெரிந்தும்:-)
பெரியார் வழி இப்போது (அவ்வளவாக) இல்லை!
உடையவர் வழி இன்றும் இருக்கிறது!
பெரியார் என்ற தனி மனிதரே மாபெரும் இயக்கமும் ஆனார்!
(அவரை விட்டுப் பலர் விலகிய பின்னரும் கூட, அவர் மட்டுமே இயக்கத்தின் முகம்)
உடையவர் தன்னைப் பின்னுக்குத் தள்ளி, இயக்கத்தை முன்னிறுத்தினார்! கூரத்தாழ்வான், முதலியாண்டான், உறங்காவில்லி, அனந்தாழ்வான், பெண்கள் பருத்திக் கொல்லை நாச்சி, பொன்னாச்சி...என்று ஊருக்கு ஊர் தனித் தனி முகங்கள்!
பெரியார் ஒரு தலை சிறந்த மேலாளர் அல்லர்! அவர் தன் கட்சியிலேயே மக்களை நம்ப மாட்டார் என்று இயக்கத்தில் சொல்லுவார்கள்! அண்ணா போன்றவர்கள் விலகிச் செல்ல இதுவும் ஒரு காரணம்!
ஐயா பெரியார் செய்து காட்டிய புரட்சி, நல்ல காலம், அண்ணா போன்றோரின் முயற்சிகளால் சட்டமாக்கி நிலைநிறுத்தப்பட்டு விட்டது!
ஆனால் சட்டங்கள் இல்லாமல், தண்டனைகள் இல்லாமல், உடையவர் செய்து காட்டிய வழி இன்றும் நிலைத்து நிற்கிறது!
சட்டங்கள் போட்டும் தமிழ் அர்ச்சனை நடக்கிறதா?
இல்லை தில்லையில் சட்டமே முதற்கண் போட முடிகிறதா?
உடையவரின் சட்டம்=அடியவர் கைங்கர்யம்
உடையவரின் ஆயுதம்=கடல் போல் கருணை
உடையவரி உத்தி=பரந்துபட்ட நிர்வாகம்!
பெரியாரின் சமூக மாற்றம் உண்மையிலேயே உடையவரை விடப் பரப்பளவில் அதிகம்!
பெரியாரின் உழைப்பு சட்டப்படுத்தப்பட்ட பின், இனி அந்த அளவுக்குப் பயமில்லை! மக்களுக்கும் இன்னொரு பெரியார் "அவதாரம்" அவ்வளவாகத் தேவையும் இல்லை!
இருப்பினும் உடையவர் என்னைக் கவர்ந்தது எதனால்?
பெரியார் தந்தது மனித மாற்றம்!
உடையவர் தந்தது மன மாற்றம்!
அவர் ஆல மரம்!
இவர் வித்து!
இவரை நட்டுக் கொண்டே இருக்கலாம்!
வாழ்க!
//ஆனா 2000 வருஷமா சைவத்துல இதை மாத்த யாரும் வரலையே. இன்னும் அங்க தமிழ் மறுப்பும், சாதி மறுப்பும் இருந்துட்டு தானே இருக்கு?//
ReplyDeleteஇதுக்கு என்ன பதில் சொல்ல?
சொன்னால் விரோதம் இது என்று நம்மாழ்வார் பாடுவது தான் நினைவுக்கு வருது! அவர், ஆயினும் சொல்லுவேன் என்றார்! ஆனால் அடியேன் ?.....
//அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன்?//
எனக்கு இல்லை!
இதை வாயால் எல்லாரும் சொல்லலாம்! மனதாரச் சொல்ல அவரவர் அந்தராத்மாவை விசாரிச்சிக்கணும்!
//வைணவ கோவில்களில் நடப்பது தனி ஒரு மனிதனின் செயலா அல்லது இறைவனின் செயலா?//
தெய்வத்தால் ஆகா தெனினும் "முயற்சி" தன்
மெய் வருத்தக் கூலி தரும்!
//உடையவர், கை தேர்ந்த மேனஜராக இருந்து ஒரு நிறுவனத்தை அமைத்தது போலவே எனக்கு தோன்றுகிறது.//
உடையவர் மேனேஜர் தான்! ஆனால் எத்தினி நாள்?
அவருக்குப் பின் தமிழ் வழித் திருவாய்மொழித் திருநாளைத் திருவரங்கத்தில் சில காலம் நிப்பாட்டிச் சதி செய்தார்களே! Where did the managerism go?
ரொம்ப நாள் சதி நிலைக்கவில்லை! இப்போ மீண்டும் இருக்கிறதே? எப்படி? :-)
//அதை போல் ஒரு மேனஜர் சைவர்களுக்கு கிடைக்கவில்லை//
ஏன்?
எதனால்?
கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்! விடை எளிது! :-)
//அது வேற கீதா?//
ReplyDeleteஎன்னோட பதிவுல சர்வேசன் வந்து கீதா கீதான்னாரு. என்ன கீதாம்மாவை சொல்றீங்களான்னேன். இங்கே நீங்க அப்படி சொல்றீங்க. அவனா நீன்னு யாராவது வந்து கேட்டா என்னை குத்தம் சொல்லாதீங்க. ஆமாம். :-)
எச்சூஸ் மீ. வொய் ஆல்வேஸ் சீரியஸ். ஐ டோண்ட் லைக் திஸ் ஆட்ட்டிட்யூட்.
ReplyDeleteபதிவு இம்புட்டு நீளம்..பின்னூட்டம் அதை விட. லீவு போட்டுத்தான் படிக்கணும்.:)
ReplyDelete//பாணங்கள் எல்லாம் பாவனா போடும் மாலையாகி விடுமே! அஸ்திரங்கள் எல்லாம் அசின் சூட்டும் மாலையாகி விடுமே!//
ReplyDeleteக்குகும்...எழுதுவது ஆன்மீகம்..புலப்ம்புவது நடிகைநேம்!! என்னவோ கலக்குங்க:)
//ஆன்மீகம் என்பது மதம் சார்ந்த ஒன்று-ன்னு பல பேருக்கு எண்ணம்! ஆனா மதம் வேற, ஆன்மீகம் வேற! மதம்=Religion; ஆன்மீகம்=Spirituality! கொஞ்சம் வேறுபாடு உண்டு!
மதத்தால் மதம் பிடிக்கும்! தமிழில் அழகாய்ச் "சமயம்"-ன்னு சொல்லுவாங்க!நம்மைப் பக்குவமாகச் சமைப்பது எதுவோ அதுவே "சமயம்"! அதுவே ஆன்மீகமும் கூட!//
ஆஹா
அருமை.
இங்கேமதம்பிடித்து அலைவது யானைகள் அல்ல மதவெறிகொண்ட மனிதர்கள்தான் என எங்கோ படிச்ச நினைவு வர்து.
//என்று சொல்லப்படும் இராமானுசர்!
காரேய்க் "கருணை" இராமானுசா...என்னை நீ வந்து உற்ற பின்பு,
சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!//
இன்றென்ன எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் தித்திக்கும்!
//
பூசைக்கு வந்திருந்தார் திருமலையின் சின்ன ஜீயர் சுவாமிகள்! அவர் தடுத்து நிறுத்த..."பையனை மடத்துப் பாடசாலைக்கு அனுப்பி வைக்கறீங்களா?"-ன்னு அவரு கேட்க, அப்பா மொதக் கொண்டு எல்லாரும் பேந்த பேந்த விழிக்க,..//
என்னேபாக்கியம் ரவி!!ஸ்ரீரங்கம் சித்திரைவீதில கு சி பாடசாலைன்னு இப்போவும் இருக்கு குட்டிகுட்டிப்பையங்க அழகா குடுமி வச்சிட்டு பிரபந்தம் சொல்லும் அழகே அழகு! ஆணாய்பிறக்கலையேன்னு அதுக்காகவே வருத்தப்படுவேன்
//சில பதிவுகள் எழுதி முடிக்க எனக்கு ஏழு எட்டு மணி நேரம் கூட ஆகி இருக்கு! நம்ப முடியுதா? :-)) //
சின்னப்பதிவுகளாஎழுதும் எனக்கேநேரம் விழுங்குதே..நம்பாமல் என்ன? அதுதான் உண்மை.ஆனாலும் அதைப்படிப்பதால் எங்களுக்கு பெரும் நன்மை!
//இது தாங்க சின்ன வயசு நாஸ்டால்ஜியா கதை!
பூரண விசுவாசம் (அல்லது) பிரகலாதக் குழந்தை திருவடிகளே சரணம்! சின்னக் குழந்தை சேவடி போற்றி!//
வாழி ரவி! சிறந்தபதிவு அளித்தமைக்கு
பாராட்டுக்கள்!
1/2 நாள் லீவு போட்டாச்சு.
ReplyDeleteபதில்கள் ( பதிவில்) நல்லா சொல்லியிருக்கீங்க.
////அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன்?//
ReplyDeleteஎனக்கு இல்லை!
இதை வாயால் எல்லாரும் சொல்லலாம்! மனதாரச் சொல்ல அவரவர் அந்தராத்மாவை விசாரிச்சிக்கணும்!//
நான் கடவுளை சொன்னேன். ஏன் அவர் அப்படி அனுப்பல???????
//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteஎச்சூஸ் மீ. வொய் ஆல்வேஸ் சீரியஸ். ஐ டோண்ட் லைக் திஸ் ஆட்ட்டிட்யூட்.
//
ஆகா! ஜீரியஸ்? ரியலி??
ஜீரியஸா தான் ஜீரியஸ்-னு சொல்றீங்களா கொத்ஸ்?
என்னான்னு சொல்லுங்க! தண்ணி அடிச்சி, சாரி தண்ணி ஊத்தி சூட்டை எறக்கிடலாம்! :-))
வெட்டி கேட்டது சீரியஸ் கேள்வி! ஆழமான கேள்வி! ஒழுங்காப் பதில் சொல்லணும் வேற உத்தரவு போட்டிருந்தாரு!
அதான் ஜீரியஸ் பதில்கள்! ஜாரி! :-)
//என்னேபாக்கியம் ரவி!!ஸ்ரீரங்கம் சித்திரைவீதில கு சி பாடசாலைன்னு இப்போவும் இருக்கு குட்டிகுட்டிப்பையங்க அழகா குடுமி வச்சிட்டு பிரபந்தம் சொல்லும் அழகே அழகு! ஆணாய்பிறக்கலையேன்னு அதுக்காகவே வருத்தப்படுவேன்//
ReplyDeleteசாதி வேறுபாடு, மொழி வேறுபாடு பார்க்காத இடங்களில் பால் வேறுபாடு மட்டும் இன்னும் பார்க்கப்படுகிறதா? நான் அறிந்த வரை வைணவப் பெண்களின் அளவிற்குப் பாசுரங்களில் ஆழங்கால் படும் ஆண்களைப் பார்த்ததில்லையே? பொன்னாச்சி போன்ற பெண்களை முன்னிறுத்திய சமயத்திலா இப்படி? :-(
Just great episodes and excellent explanation. Hats off to you Ravi!
ReplyDelete