Wednesday, April 29, 2009

சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்!

இன்று இரு மகத்தான மனிதர்களின் பிறந்தநாள்! ஆன்மீக ஆற்றின் ஓரமாகப் பல காலம் தேங்கி விட்டன சனாதனக் குப்பைகள்! திடீர்-ன்னு ஒரு பெரு வெள்ளம் வந்து, அந்தக் குப்பையை இருந்த இடம் தெரியாமல் அடிச்சிக்கிட்டு போனது! அந்த வெள்ளம் தான் உலகாசான் - ஜகத்குரு என்று போற்றப்படும் ஆதி சங்கரர், இராமானுசர்!

இருவர் பிறந்த நாளும் ஒன்று தான் - இன்று தான்! சித்திரைத் திருவாதிரை (Apr 29th 2009)!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சங்கரா! பிறந்த நாள் வாழ்த்துக்கள் இராமானுசா! :)

* சங்கரர் காலத்தால் முந்தியவர் - 788 AD! மதங்களால் உடைந்து கிடந்த சமயத்தை ஒருங்கிணைத்து பிணக்குகள் தீர்த்தவர்!
* இராமானுசர் அவருக்குப் பிந்தியவர் - 1017 AD! சாதியால் உடைந்து கிடந்த சமயத்தை ஒருங்கிணைத்து பிணக்குகள் தீர்த்தவர்!

சைவமும் வைணவமும் கொண்டாட வந்த இரு ஜகத்குருக்களும்,
ஆதி குருவான சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரையில் பிறந்து, அறம் வளர்த்தது வியப்பிலும் வியப்பே!


கோடைக் காலம்! அன்று காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது! மணல் வெள்ளம் தான்! :)

விடுமுறைக் காலத்தில் சின்னப் பசங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்! ஒன்னாச் சேர்ந்து கில்லி அடித்து விளையாடலாம்! உயரம் தாண்டலாம்!
களைப்பெடுத்தா அதே மணலில் ஊற்று நீரைக் கீறிக் குடிக்கலாம்! கம்பை நட்டு, பாலத்தில் இருந்து கரைக்கும், கரையில் இருந்து பாலத்துக்குமாய் ஒரு எம்பு எம்பலாம் (Pole Vault)! மணற் புதையல் விளையாட்டு கூட விளையாடலாம்!

அன்னைக்கு அப்படித் தான், சின்னப் பசங்க பத்து பேரு, ஒன்னாச் செட்டு சேர்ந்துடுச்சுங்க! ஒரு வேளை நானும் அந்தச் செட்டில் இருந்திருப்பேன் போல! பதினோராம் நூற்றாண்டு! :))

ஆளாளுக்கு ஒவ்வொரு வேஷம்! ஒருத்தன் கோயில் அர்ச்சகர்! இன்னொருத்தன் வாகன புறப்பாட்டு ஆள்! இன்னொருத்தன் மடப்பள்ளி! இன்னொருத்தன் கோஷ்டியில் தமிழ் வேதம் சொல்பவன்! எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து மணலைக் குவிச்சி குவிச்சி, ஒரு சின்ன விமானத்தையே கட்டிட்டாங்க பசங்க!

ஒரு மினி திருவரங்கம் காவிரிக் கரையில்! அந்த ரங்கனுக்கு பிரணவாகார விமானம்-ன்னா இந்த ரங்கனுக்கு மணலாகார விமானம்! :)

வீட்டில் இருந்து பல மரச் சாமான்களைக் கொண்டாந்தாச்சு! சாப்பாட்டுத் தட்டும், தயிர் கடையும் மத்தும் தான் மேள தாளம்! அடுப்புல ஊதும் ஊதாங்குழல் தான் நாதசுரம்! கொட்டாங்குச்சி தான் கங்காலம் என்னும் பாத்திரம்! கடைத்தெருவில் கடை கடையாப் போகுதுங்க பசங்க!

"உங்க கடையில் புது அரிசி எப்படி இருக்கு-ன்னு பார்க்க, அம்மா ஒரு கைப்பிடி வாங்கியாரச் சொன்னாங்க நாடாரே"-ன்னு சொல்லுதுங்க! இப்படிக் கைப்பிடி கைப்பிடியாவே அரிசியைத் தேத்தியாச்சு! அரிசி வசூல் :)

ஆற்றங்கரையில் சின்னதா தீ மூட்டி, பழைய ஈயப் பாத்திரத்தை ஏத்தி, அரிசி பொங்குதுங்க! கைக்கு சல்லீசாக் கிடைச்ச கறிவேப்பிலை, கொத்துமல்லி-ன்னு எதை எதையோ அதில் கொண்டாந்து போடுதுங்க! வெந்தும் வேகாமல் ஒரு மாடர்ன் பிரசாதம் ரெடி! :)

பிரசாதம் ரெடியானாப் போதுமா? பகவான் வேணாமா?
தொழில் தர்மம்-ன்னு ஒன்னு இருக்குல்ல? எப்பமே அவனுக்குக் கண்ணால காட்டிட்டு தானே நாம ஒரு வெட்டு வெட்டுவோம்!
அவன் "கண்டு" அருளப் பண்ணுதல்! நாம் "உண்டு" அருளப் பண்ணுதல்! :)



குட்டீஸ் யானை வாகனம் :)
படங்களுக்கு நன்றி: இராமானுச தாசர்கள் Pbase குழு!



பிரசாதம் ரெடியானாப் போதுமா? பகவானுக்கு எங்கே போறது?
வீட்டுல இருந்து பெருமாள் படத்தை எடுத்துக்கிட்டு வந்தா பெருசுங்க பொலி போட்டுருவாங்க!

மரக்குச்சிகளை விதம் விதமாக் கட்டி, ஒரு மனுசன் போல உருவத்தை உருவாக்குதுங்க!
அதுக்குப் பொட்டு இட்டு, உதிரிப் பூவை மாலையாகப் போட்டு, நூல் கண்டை மஞ்சள் பட்டாடையாகக் கட்டி....அட...சங்கு சக்கரம் இல்லாமல் பெருமாளா?
கோலியே சக்கரம்!
சோழியே வெண்சங்கு!
இதோ மரக்குச்சி ரங்கன் ரெடி!

- பத்மநாபோ "மரப்" பிரபு! பத்மநாபோ "மரப்" பிரபு!

பத்மநாபோ "அமரப்" பிரபு என்ற சகஸ்ரநாமம், இங்கே மரக்குச்சியால், பத்மநாபோ "மரப்" பிரபு என்று ஆகி விட்டதே!
ஒரு பையன் கருடன் போல் குத்திட்டு உட்கார்ந்து கொள்கிறான்! அந்தப் பையன் மேல் குச்சி ரங்கனை வைத்தாகி விட்டது! ஆகா! கருட சேவை காணீரே!

* அந்த ரங்கனுக்கு இணையான எங்கள் அந்தரங்கன் கருட சேவை காணீரே!

வீட்டில் உள்ள தாழங் குடைகள்/கருப்புக் குடைகள் திருக் குடைகளாய்ப் பிடிக்கப் படுகின்றன!
பனை விசிறிகளே வெண்சாமரமாய் வீசப்படுகின்றன!
வடமொழி மந்திரங்களுக்கு இணையாக, உபய வேதாந்தம் என்று பெயர் கொடுத்து,
தமிழ்ப் பாசுரங்களைக் கருவறையில் ஓத ஏற்பாடு செஞ்சாலும் செஞ்சார்!
வேற வூட்டுப் பொடிசுங்க கூட, எளிமையாப் புரிஞ்சிக்கிட்டு, ஓதுறாப் போலவே பாடுதுங்களே! ஆகா! இது என்ன அழகான காட்சி!

பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ் வாயன் என்கோ!
சங்கு சக்கரத்தன் என்கோ! சாதி மாணிக்கத்து ஐயே!
அச்சுவைக் கட்டி என்கோ! அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேனும் என்கோ! கனி என்-கோ-பாலன் என் கோ!


தட்டில் சும்மனாங் காட்டியும் தீபம்!
கொட்டாங்குச்சியில் சடாரி!
ஒரு பழைய பாத்திரத்தில் காவேரி தீர்த்தம்!
- முதல் தீர்த்தம் யாருக்கு?

கோயிலில் "ஜீயோம்"-ன்னு கூப்பிடுவாங்களே! அப்போது இராமானுசர் அல்லவா வந்து தீர்த்தம் வாங்கிக் கொள்வார்! இப்போ யாருக்குடா கொடுக்கலாம்?
ஆங், அது தான் சரி! போன வாரம் அவங்க வீட்டில் சுட்ட மெதுவடையை எடுத்தாந்து எனக்குப் பாசமாய்க் கொடுத்தானே கோபால்!

"எலே, கோபால்! வாடா! நீ தான் இன்னிக்கி இராமானுஜர் வேஷம் கட்டுற! உனக்குத் தான் மொதல் தீர்த்தம்!" - அர்ச்சக வேஷம் கட்டியிருக்கும் அந்தப் பையன், மெதுவடைக்கு "மெது"வாக நன்றிக் கடன் தீர்க்கிறான்! :)


காவிரிக்கரையில் மக்கள் எல்லாரும் இந்த "லோக்கல்" கருட சேவையை, குச்சி ரங்கனை ஒரு செல்லமான கேலியுடன் பார்த்துக் கொண்டே செல்கிறார்கள்!
சரி, ஏதோ பசங்க வித்தியாசமா வெளையாடுது! வெளையாடிக்கிட்டு போவட்டும்! என்று வேடிக்கை பார்த்தவாறு அவரவர் நடையைக் கட்டுகிறார்கள்! கருப்புக் குடையும், சாப்பாட்டுத் தட்டில் மேளமும் அடிச்சி ஒரே டமாஷா-ல்ல இருக்கு? :)

அந்த வழியாக வருகிறார் உடையவர், எம்பெருமானார் என்று பலவாறாக அழைக்கப்படும் இராமானுச முனிகள்!
சீடர்கள் புடை சூழ அவரும் இந்தக் குச்சி ரங்கன் கருட சேவையைப் பார்க்கிறார்! சீடர்களின் முகத்திலும் பிள்ளைத்தனமான ஒரு நமுட்டுச் சிரிப்பு! :)

ஆகா! இது என்ன பதட்டம்? நிஜ இராமானுசர் ஓடுகிறாரே? அதுவும் நாலு கால் பாய்ச்சலில்? சீடர்கள் விவரம் புரியாமல் பின்னாடியே ஓட....

சிறுவர்கள்......."ஜீயோம்" என்று சொன்ன போழ்திலே....
இராமானுசர்......."அடியேன் நாயிந்தே, ஜீயேன்!" - என்று நெடுஞ்சாண் கிடையாக ஆற்று மணலில் வீழ்கிறார்! மரக்குச்சி ரங்கன் முன்பாக வீழ்ந்து சேவிக்கிறார்!

குட்டிப் பசங்களுக்கு இன்ப அதிர்ச்சி! பின்னால் வந்த சிஷ்யர்களுக்கோ இன்னும் அதிர்ச்சி!
ஒரு சிலருக்கு எங்கே தங்களையும் விழச் சொல்லி விடுவாரோ-ன்னு பயம்! :)
அந்தப் பழைய டப்பாவில் இருந்து சிறுவர்கள் அவருக்குத் தீர்த்தம் தருகிறார்கள்! மூன்று முறை கேட்டு வாங்கித் தீர்த்தம் பருகுகிறார் உடையவர்!

* முதல் தீர்த்தம் = பிரதமம் கார்ய சித்தயர்த்தம் = வினைத் திட்பம்! செயலில் வெற்றி பெற!
* இரண்டாம் தீர்த்தம் = த்வீதீயம் தர்ம ஸ்தாபனம் = அறன் வலியுறுத்தல்! தர்மம் செய்ய!
* மூன்றாம் தீர்த்தம் = த்ரீதீயம் மோக்ஷப் ப்ரோக்தம் குணார்னவம்! = மெய் உணர்தல்! மோட்ச உபாயம்!

இராமனுசருக்குச் சிறுவர்கள் சடாரி சார்த்துகிறார்கள்! கொட்டாங்குச்சி சடாரி! :)
உகப்புடன் ஏற்றுக் கொள்கிறார்!
ஒரு சின்ன இலையில் அதுகள் வடித்த சோறு வைத்து கொடுக்கப்படுகிறது! கொத்தமல்லிச் சோறு அரவணைப் பிரசாதம் ஆகிறது! :)

நெய்யிடை நல்லதோர் சோறும், நியதமும், அத்தாணிச் சேவகமும்,
கையடைக் காயும், கழுத்துக்குப் பூணொடு, காதுக்குக் குண்டலமும்,
மெய்யிடை நல்லதோர் சாந்தமும் தந்து, "என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல"
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே!

- என்று கருட சேவைப் பல்லாண்டை உடையவர் பாடுகிறார்! சிறுவர்கள் அத்தனை பேரின் பெயரையும் கேட்டறிந்து, தட்டிக் கொடுத்து விடை பெறுகிறார்! அதுகளுக்கோ ஒரே பூரிப்பு! :)


மடத்தில்.....

வயதில் மூத்த சீடர்: "தேவரீர் இப்படிச் செய்யலாமா? சின்னப் பொடியன்கள் ஏதோ விளையாட்டாய் விளையாடியதற்கு, அனைவரும் பார்த்துப் பரிகசிக்குமாறு, ஒரு மரப்பாச்சி பொம்மையைப் போய், விழுந்து சேவித்தீரே! என்ன ஜீயரே இது?"

உடையவர்: "ஆகா! அபசாரம்! பகவானைப் பொம்மை என்று நீங்களே சொல்லலாமா? அடியேன் தவறாக ஒன்றும் செய்து விடவில்லையே!
ஏன் இந்த மனக் கிலேசம்? அந்த மரக்குச்சி ரங்கனில் அரங்கன் இல்லை என்று நினைக்கீறீரோ?"

சீடர்: "அப்படியில்லை சுவாமி! அரங்கன் எங்கும் இருக்கிறான் என்பது பாமர வழக்கு! அது எங்களுக்கும் தெரியும்! ஆனால் சான்னித்யம்-ன்னு ஒன்னு இருக்கில்லையோ? என்ன இருந்தாலும் சிறுவர்கள் விளையாடிய ஒரு மரப்பாச்சிப் பொம்மைக்கு எப்படிச் சான்னித்யம் வரும்?"

உடையவர்: "ஓ...சான்னித்யம் இருக்கா இல்லையா என்று பகவானையே சோதித்துப் பார்த்துவிட்டு ஏற்றுக் கொள்வது தான் உம்ம வழக்கமோ நம்பிகளே?"

சீடர்: "இப்படி வார்த்தை ஜாலமாய் பேசினால் எப்படி? நீர் வர வர கண்ட பயல்களுக்கும் கொஞ்சம் அதிகமாகவே இடம் கொடுக்கிறீர் ஜீயரே! :("

உடையவர்: "உம்ம்ம், எதனால் அந்த மரக்குச்சி ரங்கனில் சான்னித்யம் இல்லை என்று கருதுகிறீர்கள்?"

சீடர்: "என்ன கேள்வி இது? சம்ப்ரோக்ஷணம்/கும்பாபிஷேகம் எல்லாம் செய்து, அஷ்ட பந்தனம் இட்டு, ஜீவாதார மந்திரங்கள் ஜபித்து, பிரதிஷ்டை-ன்னு செய்யும் போதல்லவா ஒரு சான்னித்யம் உண்டாகுது? ஒரு கருங்கல்லும் கடவுளாகிறது!
அதற்குச் சதா மந்திரம் ஜபித்து, சிரத்தையாக உருவேற்றி உருவேற்றி, சாஸ்திரத்தில் சொன்னபடி, நாங்களே பூஜிப்பதால் அல்லவோ சான்னித்யம் உண்டாகிறது?"

உடையவர்: "ஓ...அப்போது நீங்கள் சிரத்தையாகப் பூஜித்தால் சான்னித்யம்! அடுத்தவர் சிரத்தையாகப் பூஜித்தால் அதெல்லாம் ஒன்றுமில்லை! அப்படித் தானே?"

சீடர்: "ஸ்வாமி! எடக்கு மடக்காகப் பேசினால் எப்படி? ஆகமம் தாங்கள் அறியாதது அல்ல! இருந்தாலும் வேண்டுமென்றே இப்படியெல்லாம் பேசுகிறீர்களே! இது நியாயமா?"



உடையவர்: "அன்பர்களே! உங்கள் சிரத்தையை அடியேன் தாழ்த்தவில்லை! அடுத்தவர் சிரத்தையை நீங்களும் தாழ்த்தக் கூடாது என்பதே நான் சொல்லுவது!
ஆலய மந்திரப் பிரதிஷ்டையை, அடியேனோ, இல்லை அந்தச் சிறுவர்களோ மறுத்துப் பேசினோமா? இல்லையே! ஆலயத்திலும் வந்து பணிவாகச் சேவிக்கிறோம் அல்லவா?
அங்கு பணியில் இருக்கும் உம்மையும் மதிக்கிறோம் அல்லவா?
நீங்கள் மட்டும் ஏன், அதே மரியாதையை அவர்களுக்கும் தர மறுக்கிறீர்கள்?"

சீடர்கள்: (மெளனம்...)

உடையவர்: "நீங்கள் அறிந்த முறையில், உளமாரப் பூஜிக்கும் போது, சான்னித்யம் கிடைக்கிறது என்றால்...
அவர்கள் அறிந்த முறையில், உளமாரப் பூஜிக்கும் போது, சான்னித்யம் வராது என்று எப்படி நினைக்கிறீர்கள்?"

சீடர்கள்: (மெளனம்...)

உடையவர்: "பிரகலாதன், ஜீவாதார மந்திரங்கள் எல்லாம் ஜபித்து, பிரதிஷ்டை செய்த பின்னரா, தூணில் எம்பெருமான் சான்னித்யம் ஆனான்?"

சீடர்கள்: (பலத்த மெளனம்...)
ஆனால் ஒரு குரல் மட்டும்..."எல்லாரும் பிரகலாதன் ஆகி விட முடியாது இராமானுசரே!"

உடையவர்: "யாரது??? முன்னே வாருங்கள்! ஓ...நீங்களா? அதை அவர்கள் சொல்லட்டும் பெரியவரே!
உங்களால் பிரகலாதன் ஆக முடியாது என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம்!
அவர்களால் பிரகலாதன் ஆக முடியாது என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்!
நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?"

சீடர்கள்: (மெளனம்...)

உடையவர்: "எப்படி உம் வழிபாட்டு முறைகளில் அவர்களும் ஆனந்தமாகத் திளைக்கிறார்களோ, அதே போல், அவர்கள் வழிபாட்டு முறையிலும் நீங்கள் மதிப்பளிக்கக் கடவீர்களாக!
குழந்தைத்தனமாக வணங்கினாலும், ஆகமப் ப்ரீதியாக வணங்கினாலும், வணக்கம் வணக்கமே!"



சீடர்கள்: "ஸ்வாமி! கூடக்கூட வாதாடும் எங்களை மன்னித்து விடுங்கள்! இருந்தாலும் சாஸ்திரமானது நாங்கள் செய்வது போலத் தானே செய்யச் சொல்கிறது? சாஸ்திரம் முக்கியம் அல்லவா? அது தானே நமக்குப் பிரமாணம்?"

உடையவர்: "இந்த மரக்குச்சி ரங்கன் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கான்! மரக்குச்சி ரங்கனுக்கென்று ஒரு திவ்யதேசமே இருக்கு! அதைக் காட்டினால் ஒப்புக் கொள்வீர்களா?"

சீடர்கள்: "ஆகா....சாஸ்திரம் எதைச் சொன்னாலும் ஒப்புக் கொள்கிறோம் ஸ்வாமி! பாமரத்தனமான விளக்கத்தைத் தான் மனம் ஒப்புக் கொள்ள மாட்டேங்கிறது!"

உடையவர்: "ஹா ஹா ஹா...கண்ணெதிரே உள்ள உண்மையை ஒப்புக் கொள்ளப் பாமரம் என்ன? சாத்திரமென்ன?
சரி, ஆழ்வார்கள் அருளிச் செயல் கூட சாஸ்திரம் தானே! அதையாச்சும் ஒப்புக் கொள்கிறீரா?"

சீடர்கள்: "ஐயோ! என்ன கேள்வி கேட்டு விட்டீர்கள்? நமாமி திராவிட வேத சாகரம்! ஆழ்வார்கள் சொன்னால் அதுவும் சாஸ்திரம் தான்!
ஆனால் மரக்குச்சி ரங்கனை எல்லாம் அவர்கள் பாடியதாக நாங்கள் அறிந்த வரையில் இல்லை!"

உடையவர்: "ஓ! அப்படியா சேதி! இதோ கேளுங்கள்!
தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே!
தமர் உகந்தது எப்பேர், மற்று அப்பேர்! - தமர் உகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் அழியான் ஆம்!

முதல்-முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார் (சரஸ் முனிம்) பாடிய சாஸ்திரம் ஆயிற்றே இது!"

சீடர்கள்: (மெளனம்...)

உடையவர்: "தமர் எதில் உகக்கிறார்களோ, அதில் பகவான் வந்து அழியாது இருந்து விடுவதாக சாஸ்திரம் சொல்லி இருக்கே!
ஆழ்வார்கள் சொன்னது தமிழில் இருப்பதால் ஏற்றுக் கொள்ளக் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறதா? சம்ஸ்கிருதத்தில் வேணும்-ன்னா சொல்லட்டுமா?"

சீடர்கள்: (மெளனம்...)

உடையவர்: "யத் யத் தியாய த, உருகாய விபவ யந்தீ
தத் தத் வபு, ப்ரண யசே, சத் அனுக்ரஹ யா!
- இது பாகவதம்! என்ன சொல்கிறீர், ஸ்ரீமத் பாகவதம் என்பது சாஸ்திரம் தானே?

சீடர்கள்: (கப் சிப்...)

அன்புள்ள மடத்துச் சிஷ்யர்களே! நீங்களே ஒரு முறை "மனசாட்சியுடன்" எண்ணிப் பாருங்கள்!
அந்தச் சிறுவர்கள் அவர்கள் அளவில் பகவானை உகந்தார்கள் அல்லவா?
தமர் உகந்த அவ்வுருவம், அவன் உருவம் தானே!


அதனால் அல்லவோ அந்த மரக்குச்சி ரங்கனைச் சேவித்தேன்! அது தவறா?
உங்களுக்கு எல்லாம் குரு ஸ்தானத்தில் இருந்து கொண்டு,
என்னைத் "தமர் உகந்த" என்னும் சாஸ்திர வாக்கியத்தை மீறச் சொல்கிறீர்களா?"

சீடர்கள் வாயடைத்துப் போகிறார்கள்! இவருடன் வாதம் செய்ய முடியாது போலிருக்கே! இவர் கருத்துக்களை எடுத்து வைக்கும் போது,
எம்பெருமானார் வாதாடுகிறாரா?
இல்லை அந்த எம்பெருமானே வந்து வாதாடுகிறானா?


பிரம்ம சூத்திரங்களுக்குப் பாஷ்யம் எழுதிய இவர் மகா வேதாந்தியா?
இல்லை, மரப்பாச்சி பொம்மையைக் கூட விழுந்து வணங்கும் இவர் ஈரப் பாசுர உள்ளமா?

* சாஸ்திரம் என்பதை எழுத்தில் மட்டுமே பார்த்த தாங்கள் எங்கே?
* சாஸ்திரத்தை அதன் ஆத்மாவில் பார்த்த இராமானுசர் எங்கே?

அவர் பிறந்த நாள் அதுவுமாய், எம்பெருமானார் திருவடிகளே சரணம்! ஹரி ஓம்!


பட்டர்கள் பெரிய கருட சேவை! பிள்ளைகள் மினி கருட சேவை! :)

குறிப்பு:

இன்றும் சென்னைத் திருவல்லிக்கேணி - பார்த்தசாரதி பெருமாள் கோயிலில்,
சிறுவர்கள் சொப்பு விளையாட்டு போலவே நடத்தும் சின்னஞ்சிறு உற்சவம், பெரிய உற்சவத்துடன் சேர்த்தே கொண்டாடப்படுகிறது!

கோயில் பிரம்மோற்சவத்தின் போது, அக்கம் பக்கத்துச் சிறுவர்கள், அவர்களின் சின்னப் பெருமாளை வீதியுலா கொண்டு வருகிறார்கள்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குட்டி வாகனத்தில் அலங்காரம்!
* பெரிய பெருமாள், பெரிய யானை வாகனத்தில் வந்தால்,
* குட்டிப் பெருமாள், குட்டி யானை வாகனத்தில் வருவது வாடிக்கை!
அண்மைக் காலங்களில் இந்தக் குட்டி உற்சவம் இன்னும் பிரபலம் ஆகியுள்ளது!

அதனால்.....
தமர் உகந்த பகவத் அனுபவத்தை, ஏதோ விளையாட்டுத்தனமானது என்றோ, லோக்கல் பாஷையில் எழுதப் படுகிறது என்றோ, அசூயை கொள்ளாதீர்கள்!
ஏன் அப்படி செய்யப்படுகிறது என்ற ஆத்மாவைப் பார்த்தால் ஆன்மிகத்தைப் பார்க்கலாம்!

தமர் உகந்த எவ்வுருவம், அவ்வுருவம் தானே!
சொப்பு விளையாட்டுப் பெருமாள் திருவடிகளே சரணம்! :)

111 comments:

  1. ஸ்ரீமதே இராமானுஜாய நம:

    எம்பெருமானார் திருவடிகளே சரணம்..

    ReplyDelete
  2. ஜெகத்குரு ஆதி சங்கராசாரியர் திருவடிகள் பணிகிறேன்.

    ReplyDelete
  3. ஆசாரிய இராமானுசர் சரிதத்தை தங்கள் மூலமாகக் கேட்பது எவ்வளவு சிறப்பு அண்ணா...

    எம்மையும் திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்று விட்டீர்.

    ReplyDelete
  4. //Raghav said...
    ஸ்ரீமதே இராமானுஜாய நம:
    எம்பெருமானார் திருவடிகளே சரணம்..//

    அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயை-க சிந்தோ
    ராமானுஜஸ்ய சரணெள சரணம் ப்ரபத்யே!

    எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  5. //Raghav said...
    ஜெகத்குரு ஆதி சங்கராசாரியர் திருவடிகள் பணிகிறேன்//

    சதாசிவ சமாரம்பாம்
    சங்கராச்சார்ய மத்யமாம்
    அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம்
    வந்தே குரு பரம்பராம்!

    இனி மேல் தான் சங்கரர் தனிப் பதிவை எழுதணும்! இன்னிக்கி திருவாதிரைச் சிவராத்திரி தான்! :))

    ReplyDelete
  6. எனக்கு என் சிறு வயது ஞாபகம் வந்து விட்டது.. ஒவ்வொரு வருடமும் என் வீட்டில் என் பாட்டி வழிபட்டு வந்த சிறிய உற்சவ விக்ரகத்திற்கு எனது தெருப் பிள்ளைகள் அனைஅவரும் சேர்ந்து கள்ளழகர் அலங்காரம் செய்து சிறிய பல்லக்கில் எழுந்தருளச் செய்து எம்னேஸ்வரம் முழுவதும் வலம் வருவோம்.. காலை பல்லக்கு முடிந்தவுடன், மாலை குதிரை வாகன புறப்பாடும் நடைபெறும். பிரசாதம் விபூதி :)

    ReplyDelete
  7. //Raghav said...
    ஆசாரிய இராமானுசர் சரிதத்தை தங்கள் மூலமாகக் கேட்பது எவ்வளவு சிறப்பு அண்ணா...//

    ஆகா! வாய்யா இராகவ்! பதிவை முடிக்கும் போது உன்னைத் தான் நினைச்சேன்! உங்க ஊரு ஜீன்ஸ் பேண்ட் பெருமாளை நினைச்சேன்! :)
    நீயே வந்து நிக்குற! :)

    ReplyDelete
  8. //வெந்தும் வேகாமல் ஒரு மாடர்ன் பிரசாதம் ரெடி! ://

    நாங்க சர்க்கரைப் பொங்கல் செய்வோம்.. ஏன்னா.. எங்க ஊர் வரதராசனுக்கு ரொம்ப பிடித்தது சர்க்கரைப் பொங்கல் தான்..

    ReplyDelete
  9. //ஜீயோம்" என்று சொன்ன போழ்திலே....
    இராமானுசர்......."அடியேன் நாயிந்தே, ஜீயேன்!//

    தெய்வத்தை ஒரு மகா சக்தி.. செய்யும் காரியங்களுக்கு ஏற்ப பலன் அளிக்கும் ஒரு கடவுள் என்ற அளவிலே இருந்த என்னை.. ஆண்டவன் பால் காதலில் மூழ்கச் செய்தவர் ஆசார்ய இராமானுஜரின் கருணை ஒன்றே... இராமானுசர் பற்றி அறிந்திராவிடில் வீணாகிப் போயிருப்பேன்.. மீண்டும் ஆசார்யன் திருவடிகளில் பணிகிறேன்..

    ஆசார்ய இராமானுசர் பற்றி என்னை அறியத் தூண்டிய தங்கள் பாதமும் பணிகிறேன் அண்ணா..

    ReplyDelete
  10. சொல்லின் தொகை கொண்டு உனதடிப்போதுக்குத் தொண்டு செய்யும்
    நல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே
    அல்லும்பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்
    வெல்லும்பரம்! இராமானுச! இது என் விண்ணப்பமே!


    ஜெயஜெய சங்கர
    ஹரஜர சங்கர!


    ஆசார்யப்பெருமகான்களுக்கு வந்தனங்கள்.
    பதிவைப்படிச்சி வந்து விவரமாபின்னுட்டமிடறேன்

    ReplyDelete
  11. //வீட்டுல இருந்து பெருமாள் படத்தை எடுத்துக்கிட்டு வந்தா பெருசுங்க பொலி போட்டுருவாங்க!//

    :).. ஏனென்று தெரியவில்லை, நாங்க எங்க வீட்டு விக்ரஹத்தை அழகு பண்ணுகிறோம் பேர்வழி என்று படாத பாடு படுத்தினோம், எங்க பாட்டியோ தாத்தாவோ எதுவும் சொன்னதில்லை... தாத்தா.. புறப்பாட்டிற்காக சிறிய தொட்டி செய்து தருதல் போன்று பல உதவிகளும் செய்தவர்.

    ReplyDelete
  12. \\
    இருவர் பிறந்த நாளும் ஒன்று தான் - இன்று தான்! சித்திரைத் திருவாதிரை \\
    ஆருத்ரா நட்சத்திரமே இதனால் சிறப்பு பெற்றுவிட்டதே!

    \\
    அன்னைக்கு அப்படித் தான் சின்னப் பசங்க பத்து பேரு ஒன்னாச் செட்டு சேர்ந்துடுச்சுங்க! ஒரு வேளை நானும் அந்தச் செட்டில் இருந்திருப்பேன் போல! பதினோராம் நூற்றாண்டு! :))
    \\\

    இருந்திருப்பிங்க :):) நேர்லபாத்தமாதிரி சொல்றதால எனக்கும் அந்த டவுட் இருக்கு...முன் ஜன்ம நினைவுகள் வருதா அடிக்கடி ரவி!


    \\
    ஒரு மினி திருவரங்கம் காவிரிக் கரையில்! அந்த ரங்கனுக்கு பிரணவாகார விமானம்-ன்னா இந்த ரங்கனுக்கு மணலாகார விமானம்! :)

    \\


    ஆஹா!


    \\கோலியே சக்கரம்! சோழியே வெண்சங்கு! இதோ மரக்குச்சி ரங்கன் ரெடி! - பத்மநாபோ "மரப்" பிரபு! பத்மநாபோ "மரப்" பிரபு\\


    மரப்ரபுவா:) ரசித்தேன்!


    \\தட்டில் சும்மனாங் காட்டியும் தீபம்! கொட்டாங்குச்சியில் சடாரி! ஒரு பழைய பாத்திரத்தில் காவேரி தீர்த்தம்! முதல் தீர்த்தம் யாருக்கு?
    கோயிலில் "ஜீயோம்"-ன்னு கூப்பிடுவாங்களே! அப்போது இராமானுசர் அல்லவா வந்து தீர்த்தம் வாங்கிக் கொள்வார்\\


    எம்பெருமானாருக்குத்தான் எத்தனை மகிமை!


    (தொடரும் பின்னூட்டம்):)

    ReplyDelete
  13. \\ஜீயோம்" என்று சொன்ன போழ்திலே....
    இராமானுசர்......."அடியேன் நாயிந்தே, ஜீயேன்!" - என்று நெடுஞ்சாண் கிடையாக ஆற்று மணலில் வீழ்கிறார்! மரக்குச்சி ரங்கன் முன்பாக அடிக்கீழ் வீழ்ந்து சேவிக்கிறார்!

    \\


    இல்லை என்ற சொல்லிலும் உளன் என்றாரே கம்பன் அதுபோல எங்கும் நிறைந்தவனை ராமானுஜர் அறிந்தபடியால் சேவிக்கிறார். அதனால்தானே அவரும் அரங்கனின் அன்புக்கு உடையவர் ஆகி இருக்கிறார்!

    ReplyDelete
  14. \\முதல் தீர்த்தம் = பிரதமம் கார்ய சித்தயர்த்தம் = வினைத் திட்பம்! செயலில் வெற்றி பெற!
    * இரண்டாம் தீர்த்தம் = த்வீதீயம் தர்ம ஸ்தாபனம் = அறன் வலியுறுத்தல்! தர்மம் செய்ய!
    * மூன்றாம் தீர்த்தம் = த்ரீதீயம் மோக்ஷப் ப்ரோக்தம் குணார்னவம்! = மெய் உணர்தல்! மோட்ச உபாயம்!
    \\

    இப்போதான் தெரிந்துகொண்டேன் நன்றி விளக்கத்துக்கு

    ReplyDelete
  15. \\நெய்யிடை நல்லதோர் சோறும், நியதமும், அத்தாணிச் சேவகமும்,
    கையடைக் காயும், கழுத்துக்குப் பூணொடு, காதுக்குக் குண்டலமும்,
    மெய்யிடை நல்லதோர் சாந்தமும் தந்து, "என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல"
    பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே!
    - என்று கருட சேவைப் பல்லாண்டை உடையவர் பாடுகிறார்\\

    இது பெரியாழ்வாருடையதா ரவி

    ReplyDelete
  16. \\உடையவர்: "ஓ! அப்படியா சேதி! இதோ கேளுங்கள்!
    தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே!
    தமர் உகந்தது எப்பேர், மற்று அப்பேர்! - தமர் உகந்து
    எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
    அவ்வண்ணம் அழியான் ஆம்!
    \\

    ப்ரும்மாஸ்திரத்தைப்போட்ட்ருக்கார் யதிராஜர்!! சபாஷ்! பாஷ்யக்காரர் அவர்!

    ReplyDelete
  17. ]தமர் உகந்த எவ்வுருவம், அவ்வுருவம் தானே!
    சொப்பு விளையாட்டுப் பெருமாள் திருவடிகளே சரணம்]\\

    பதிவிலும் பாஷ்யக்காரர் திரு உருவத்தில் அவரைக்கண்டேன்! ஸ்ரீராமானுஜர்திருவடி சரணம்!

    பூமன்னு பொருந்தியமார்பன் புகழ்மலிந்த

    பாமன்னுமாறன் அடிபணிந்துய்ந்தவன் பல்கலையோர்
    தாம் மன்ன வந்த இராமானுஜன் சரணாரவிந்தம்
    நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே!


    ஆதிரைத்திருநாளில் அரங்கபக்தனின் பதிவினை இட்ட நீங்களும் பல்லாண்டு வாழ
    பரந்தாமனை பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
  18. //ஷைலஜா said...
    \\நெய்யிடை நல்லதோர் சோறும், நியதமும், அத்தாணிச் சேவகமும்,
    ...
    இது பெரியாழ்வாருடையதா ரவி//

    ஆமாம்-க்கா! பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு தான்!
    சோறு பிரசாதம் கொடுத்ததால் சோறு பாட்டு! :)

    ReplyDelete
  19. //Raghav said...
    //வெந்தும் வேகாமல் ஒரு மாடர்ன் பிரசாதம் ரெடி! ://
    நாங்க சர்க்கரைப் பொங்கல் செய்வோம்.. ஏன்னா.. எங்க ஊர் வரதராசனுக்கு ரொம்ப பிடித்தது சர்க்கரைப் பொங்கல் தான்..//

    ஹிஹி! வரதராசனா? எந்தத் தெருவில் அவர் வீடு? அவருக்குப் பிடிச்ச சர்க்கரைப் பொங்கலை அவருக்கும் கொடுப்பீங்க-ல்ல? :))

    ReplyDelete
  20. //Raghav said...
    எனக்கு என் சிறு வயது ஞாபகம் வந்து விட்டது..//

    அதுக்குத் தான் இந்தப் பதிவைப் போட்டது! :)

    //ஒவ்வொரு வருடமும் என் வீட்டில் என் பாட்டி வழிபட்டு வந்த சிறிய உற்சவ விக்ரகத்திற்கு எனது தெருப் பிள்ளைகள் அனைஅவரும் சேர்ந்து கள்ளழகர் அலங்காரம் செய்து சிறிய பல்லக்கில் எழுந்தருளச் செய்து எம்னேஸ்வரம் முழுவதும் வலம் வருவோம்..//

    சூப்பர்! கள்ளழகர் அலங்காரமா? ஆகா! வரதராஜனுக்கு சுந்தரராஜன் ஆக ஆசையா? :)

    //காலை பல்லக்கு முடிந்தவுடன், மாலை குதிரை வாகன புறப்பாடும் நடைபெறும். பிரசாதம் விபூதி :)//

    நித்ய விபூதியா? லீலா விபூதியா? :)

    கள்ளழகர் அலங்காரம் செய்விக்கப்பட்டு எழுந்தருளிய உங்கள் குட்டிப் பெருமாளுக்கு அடியேன் தெண்டம் சமர்பிக்கிறேன்! வாழி வாழி எமனையூர் பரி மேல் அழகன் வாழியே!

    ReplyDelete
  21. //Raghav said...
    //வீட்டுல இருந்து பெருமாள் படத்தை எடுத்துக்கிட்டு வந்தா பெருசுங்க பொலி போட்டுருவாங்க!//

    :).. ஏனென்று தெரியவில்லை, நாங்க எங்க வீட்டு விக்ரஹத்தை அழகு பண்ணுகிறோம் பேர்வழி என்று படாத பாடு படுத்தினோம், எங்க பாட்டியோ தாத்தாவோ எதுவும் சொன்னதில்லை...//

    சூப்பரு! ஏனென்றால் இவர்கள் மெய்யாலுமே "பெரியவர்கள்"! "பெருசு" அல்ல! அதனால் தான்!

    இவர்களுக்குப் பதிவில் ஒன்று, நிஜத்தில் ஒன்று-ன்னு எல்லாம் தெரியாது! விழைவதெல்லாம் அவன் திருமுக உல்லாசமே அன்றி, தங்கள் சுய உல்லாசங்கள் அல்ல! :)

    //தாத்தா.. புறப்பாட்டிற்காக சிறிய தொட்டி செய்து தருதல் போன்று பல உதவிகளும் செய்தவர்.//

    அருமை!
    விக்ரஹத்தை அழகு பண்ணுகிறோம் பேர்வழி என்று நீங்கள் படாத பாடு படுத்தினாலும், அதைச் சேதப்படுத்த மாட்டீர்கள் என்று அவர்களுக்கும் தெரியும்! அதே சமயம் அதன் மீது ஒரு கண்ணும் வைத்துக் கொண்டு தான் இருப்பார்கள்!

    இருப்பினும் குணானுபவத்துக்காக தங்களின் பெருமாள் உரிமைகளையே விட்டுக் கொடுப்பார்கள்! இவர்கள் அன்றோ பாகவத நம்பிமார்கள்!

    ReplyDelete
  22. நல்லா பொறுமையா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க இரவி.

    ReplyDelete
  23. //Raghav said...
    //ஜீயோம்" என்று சொன்ன போழ்திலே....
    இராமானுசர்......."அடியேன் நாயிந்தே, ஜீயேன்!//

    தெய்வத்தை ஒரு மகா சக்தி.. செய்யும் காரியங்களுக்கு ஏற்ப பலன் அளிக்கும் ஒரு கடவுள் என்ற அளவிலே இருந்த என்னை..

    ஆண்டவன் பால் காதலில் மூழ்கச் செய்தவர் ஆசார்ய இராமானுஜரின் கருணை ஒன்றே... இராமானுசர் பற்றி அறிந்திராவிடில் வீணாகிப் போயிருப்பேன்.. மீண்டும் ஆசார்யன் திருவடிகளில் பணிகிறேன்..//

    ஆகா! என்ன இராகவ், ஒரே உணர்ச்சி பாவம்!
    சரி, எதுவாயினும் உங்களுக்கு நன்மையே விளைய வாழ்த்துகிறேன்!

    அன்றும் இன்றும், இராமனுசரை அண்டினார்கள் அவரைப் போலவே ஆனார்கள்! அது தான் காரேய்க் கருணையின் குண விசேஷம்! நீங்களும் உரைகல் பட்ட பொன்னே ஆகுவீர்களாக! :)

    //ஆசார்ய இராமானுசர் பற்றி என்னை அறியத் தூண்டிய தங்கள் பாதமும் பணிகிறேன் அண்ணா..//

    ஹிஹி! என்ன இது?
    சின்னப் பிள்ளைத் தனமா-ல்ல இருக்கு! :)) அடியேன் பொடியேன்!

    எப்போதும் உடையவர் பாதங்களையே பற்றி, "இருங்கள்"!

    ReplyDelete
  24. //ஷைலஜா said...
    சொல்லின் தொகை கொண்டு உனதடிப்போதுக்குத் தொண்டு செய்யும்
    நல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே
    அல்லும்பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்
    வெல்லும்பரம்! இராமானுச! இது என் விண்ணப்பமே!//

    இதுக்குப் பொருள் என்னக்கா? என்ன பாட்டு இது? யார் எழுதியது? ரொம்ப நல்லா இருக்கே! :)

    ReplyDelete
  25. //ஷைலஜா said...
    ஆருத்ரா நட்சத்திரமே இதனால் சிறப்பு பெற்றுவிட்டதே!//

    ஆமாம்-க்கா! மார்கழித் திருவாதிரை ஓரு இறைவனுக்கு! சித்திரைத் திருவாதிரை இரண்டு ஆச்சார்யர்களுக்கும்! எனவே மார்கழித் திருவாதிரையைக் காட்டிலும் சித்திரைத் திருவாதிரை ஏற்றமுடைத்து! :)

    //இருந்திருப்பிங்க :):) நேர்ல பாத்தமாதிரி சொல்றதால எனக்கும் அந்த டவுட் இருக்கு...முன் ஜன்ம நினைவுகள் வருதா அடிக்கடி ரவி!//

    ஹா ஹா ஹா!
    மெளலி அண்ணா முன்ன ஒரு கேள்வி கேட்டார். பெருமாள்-தாயார் உரையாடலை என்னமோ நேர்ல பாத்தா மாதிரி எழுதறீங்களே! எப்படி? ஒட்டுக் கேட்டீங்களா?-ன்னு :)))

    //மரப்ரபுவா:) ரசித்தேன்!//

    பத்மநாபோமரப்பிரபு-ன்னு வரும்-ல? அதான்! :)

    ReplyDelete
  26. //ஷைலஜா said...
    இல்லை என்ற சொல்லிலும் உளன் என்றாரே கம்பன் அது போல..//

    முடிஞ்சா அந்தக் கம்பன் கவியைத் தரமுடியுமா-க்கா?
    ரொம்ப நல்லா இருக்கே! இல்லை என்ற சொல்லிலும் உளன்! ஆகா!

    ReplyDelete
  27. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //ஷைலஜா said...
    இல்லை என்ற சொல்லிலும் உளன் என்றாரே கம்பன் அது போல..//

    முடிஞ்சா அந்தக் கம்பன் கவியைத் தரமுடியுமா-க்கா?
    ரொம்ப நல்லா இருக்கே! இல்லை என்ற சொல்லிலும் உளன்! ஆகா!

    4:50 PM, April 29, 2009
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    \இதுதான் அந்தக்கவிதை
    இல்லை ஹரி என்று இரண்யன் சொல்ல அதற்குபதிலாய் பிரஹலாதன் சொன்ன பாடல்வரிகள் இவை.

    '"சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
    கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
    தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
    காணுதி விரைவின்" என்றான்; "நன்று" எனக் கனகன் நக்கான். (124 யுத்த காண்டம் இரண்யன் வதைப்படலம்)


    இதற்குப்பிறகு ஒருபாடல்முடிந்து இந்தப்பாடல்வருகிறது.






    'நசை திறந்து இலங்கப் பொங்கி, "நன்று, நன்று!" என்ன நக்கு,
    விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன, ஓர் தூணின், வென்றி
    இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
    திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்\\


    இந்தப்பாட்டுகேட்டதும்தான் கம்பரைப்பலர் மடக்கினர். சிங்கம் சிரிக்குமா உங்கபாட்டுதப்பு என்று ராமாயணம் அரங்கேறவிடாமல்தடுத்தனர்.அப்போ
    தான் கம்பர் ராமாயணக்கதையை அரங்கேற்றம் செய்த மண்டபத்திற்கு அருகே சந்நிதியில் இருந்தமேட்டழகிய சிங்கப்பெருமான் சிரமசைத்து தன் இருகரம் தூக்கி தமிழ்ப்புலவனின் மானங்காக்க சிரித்தார் உரக்கவே!

    ReplyDelete
  28. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //ஷைலஜா said...
    சொல்லின் தொகை கொண்டு உனதடிப்போதுக்குத் தொண்டு செய்யும்
    நல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே
    அல்லும்பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்
    வெல்லும்பரம்! இராமானுச! இது என் விண்ணப்பமே!//

    இதுக்குப் பொருள் என்னக்கா? என்ன பாட்டு இது? யார் எழுதியது? ரொம்ப நல்லா இருக்கே! :)

    4:43 PM, April 29,
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    என்ன ரவி இது எளியபாடல் ஆச்சே இதற்கு அர்த்தம் உங்களுக்குப்புரியலை என்றால் நம்பமுடியலையே!

    அபியுக்தர் அருளிய பாடல் இது.
    ராமானுஜ நூற்றந்தாதி சொல்லும்போது தனியன்களாக இதையும் சொல்வது வழக்கம்.

    சொல்லின் தொகைகளால்(பாக்களின் வகைகளால்) உனது அடிமலர்ப்பாதத்திற்கு தொண்டு செய்கின்ற நல்ல அன்பர்கள் துதிக்கும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே அமரும்படி அருள்வாய்.
    அறுசமயத்தை வெல்லும்பரமனே ராமானுசனே இது என் கோரிக்கையே!

    இதுதான் என் சிற்றறிவுக்கு எட்டிய பொருள்.

    ReplyDelete
  29. ஒரு திருவிழா எடுத்துவிட்டீர்கள் ரவி.
    வேறு என்ன சொல்வது. இத்தனை நல்லடியார் நடுவில் :))

    ReplyDelete
  30. சார், உங்க கையை கொடுங்க , என்னமா எழுதிறீங்க,... வாழ்த்துக்கள், அப்படியே, சின்ன வயசிலே செய்த பூஜைக்கும் , அலங்காரத்திற்கும் அழைத்து கொண்டு பொய் விட்டீர்கள்.

    குமுதத்தில் , படித்தது- நம்ம இயக்குனர் சிகரம் சின்ன வயதில் ஒரு கிராமத்தில் இருந்த பொழுது அவரும் , அவரோட தமக்கையும் ஒரு சின்ன பிள்ளையார் கோவிலுக்கு- சுத்தம் செய்வது, அபிஷேகம் , அலங்காரம், தீபாராதனை, நெய்வேத்யம்....எல்லாமே அவர்கள் தான் .... அது தான் வாழ்கையிலேயே best period அப்படின்னு சொன்னதா ஞாபகம்

    ReplyDelete
  31. //* முதல் தீர்த்தம் = பிரதமம் கார்ய சித்தயர்த்தம் = வினைத் திட்பம்! செயலில் வெற்றி பெற!
    * இரண்டாம் தீர்த்தம் = த்வீதீயம் தர்ம ஸ்தாபனம் = அறன் வலியுறுத்தல்! தர்மம் செய்ய!
    * மூன்றாம் தீர்த்தம் = த்ரீதீயம் மோக்ஷப் ப்ரோக்தம் குணார்னவம்! = மெய் உணர்தல்! மோட்ச உபாயம்!//

    உங்களுடைய ஒவ்வொரு பதிவிலும் ஏதோ ஒரு செய்தி இருக்கும். தங்கள் சேவை சிறக்க இரு ஆச்சாரியர்களையும் வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  32. தாங்கள் கூறியபடி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலிலும், திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திலும் இந்த சொப்பு விளையாட்டை அடியேன் திரிசித்துள்ளேன். பெருமாளுக்கு எப்படி அலங்காரம் செய்திருக்கின்றார்களோ அதே miniature தான் சிறுவர்களின் பெருமாளும். அருமையாக எழுதியுள்ளார்கள் நன்றி KRS ஐயா.

    ReplyDelete
  33. //ஷைலஜா said...
    ப்ரும்மாஸ்திரத்தைப்போட்ட்ருக்கார் யதிராஜர்!! சபாஷ்! பாஷ்யக்காரர் அவர்!//

    ஹிஹி! அவர் வைக்கும் வாதங்களுக்கு எதிர்வாதம் வைக்க முடியுமா என்ன?
    எம்பெருமானார் வாதாடுகிறாரா? இல்லை அந்த எம்பெருமானே வந்து வாதாடுகிறானா? :)

    ReplyDelete
  34. //ஷைலஜா said...
    பதிவிலும் பாஷ்யக்காரர் திரு உருவத்தில் அவரைக்கண்டேன்!
    ஆதிரைத்திருநாளில் அரங்கபக்தனின் பதிவினை இட்ட நீங்களும் பல்லாண்டு வாழ பரந்தாமனை பிரார்த்திக்கிறேன்!//

    நன்றி-க்கா! :)
    அடியேன் பதிவில் பாஷ்யக்காரர் தெரிவது அடியேன் பாக்கியம் தான்!

    ReplyDelete
  35. //குமரன் (Kumaran) said...
    நல்லா பொறுமையா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க இரவி//

    ஹா ஹா! என்ன குமரன் இது றெம்ப்ளேட் பின்னூட்டம்?

    பதிவைப் பற்றி பேசுங்க! :)

    ReplyDelete
  36. //இந் நின்ற தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்;//

    ஓ! அப்படி வருகிறதா? நீ சொன்ன "இல்லை" என்னும் சொல்லினும் உளன்! சூப்பர்!

    //திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்//
    //மேட்டழகிய சிங்கப் பெருமான் தமிழ்ப்புலவனின் மானங்காக்க சிரித்தார் உரக்கவே//

    இதை ஒரு கதை வடிவில் நீங்க ஒரு பதிவாய் இடணும்-க்கா!

    //சிங்கம் சிரிக்குமா உங்கபாட்டுதப்பு என்று ராமாயணம் அரங்கேறவிடாமல்தடுத்தனர்//

    மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம்
    அறிவுற்று
    தீ விழித்து
    பேர்ந்து
    உதறி
    மூரி
    நிமிர்ந்து
    முழங்கிப்
    புறப்பட்டு
    இப்போ சிரிக்கவும் சிரித்ததுவே!

    ReplyDelete
  37. // ஷைலஜா said...
    என்ன ரவி இது எளியபாடல் ஆச்சே இதற்கு அர்த்தம் உங்களுக்குப்புரியலை என்றால் நம்பமுடியலையே!//

    ஹிஹி! ஐ ஆம் ஒன் மெம்பர் ஆஃப் தி சபை! சபையில் கடைக்கோடியில் ஒருத்தருக்கு எவ்வளவு புரியுதோ அந்த அளவே எனக்கும் புரியும்! அதுனால இப்படியெல்லாம் கேள்வி கேட்போம்! :))

    //சொல்லின் தொகைகளால்(பாக்களின் வகைகளால்) உனது அடிமலர்ப்பாதத்திற்கு தொண்டு செய்கின்ற நல்ல அன்பர்கள் துதிக்கும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே அமரும்படி அருள்வாய்//

    சூப்பர்-க்கா! நன்றி!

    //அறுசமயத்தை வெல்லும்பரமனே ராமானுசனே இது என் கோரிக்கையே!//

    அறுசமயம்-ன்னா என்ன குமரன்? :)

    ReplyDelete
  38. //வல்லிசிம்ஹன் said...
    ஒரு திருவிழா எடுத்துவிட்டீர்கள் ரவி.
    வேறு என்ன சொல்வது. இத்தனை நல்லடியார் நடுவில் :))//

    ஆகா! சொப்பு விளையாட்டு பத்திச் சொல்லுங்க வல்லீம்மா! உங்க குறுங்குடியில் இல்லாத சொப்பா? :)

    ReplyDelete
  39. //அது ஒரு கனாக் காலம் said...
    சார், உங்க கையை கொடுங்க ,//

    இந்தாங்க! கை! :)
    அன்பான சொற்களுக்கு நன்றி!

    //அப்படியே, சின்ன வயசிலே செய்த பூஜைக்கும் , அலங்காரத்திற்கும் அழைத்து கொண்டு பொய் விட்டீர்கள்//

    சிறுவர் உலகமே சொப்பு உலகம் தானே!
    இப்ப தான் ஒரே ப்ளாஸ்டிக் பொம்மையாப் போயிருச்சி!
    மரச் சொப்பு, பனையோலைச் சொப்பு, கல்லுச் சொப்பு, சங்குச் சொப்பு-ன்னு எத்தனை எத்தனை சொப்புக்கள்! ஆகா!

    //அது தான் வாழ்கையிலேயே best period அப்படின்னு சொன்னதா ஞாபகம்//

    சிறுவர் மனக் கோட்டை மாதிரி வருமா என்ன? :)

    ReplyDelete
  40. நானும் கூட விளையாடிட்டேன் தல ;;))

    ReplyDelete
  41. சைவம், வைணவம், சாக் தம், செளரம், காணபத்தியம், கௌமாரம்.

    >>>அறுசமயம் இதுதான் ரவி

    குமரனைக்கேட்டீங்க அவரக்காணோமேன்னு குமரி ,,,,,,,(ஐயோஒ ஓவரா சரிசரி :) ....அரங்கப்ரியா வந்து பதில் சொல்லிட்டேன்:):)

    ReplyDelete
  42. ஷைல்ஸ்,ரவி
    அழகு பந்தல் ஸ்ரீராமனுஜருக்காக வேய்ந்து, அடியார்களை சேவிக்க வைத்துவிட்டீர்கள். பதிவு ஒரு பந்தல்.
    அதில் விதானம் பின்னூட்டங்கள்.

    என்ன ஒரு இரு விருந்தும்மா. நன்னாளீல் இந்த சத்சங்கம் நடந்தது வெகு அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  43. கே.ஆர்.எஸ் ஐயா,
    உங்கள் பதிவின் தலைப்பு சங்கர ஜெயந்தி. ஆனால் பதிவில் அவரைப் பற்றி ஒன்னும் காணலையே? தராதரம் தெரியாமல் போகிறவன் வருபவனுக்கெல்லாம் பூனூல் போட்டு ஏத்தி விட்ட ராமானுஜரை பற்றி தானே மாய்ஞ்சி மாய்ஞ்சி ஒவ்வொரு முறையும் எழுதறீங்க? இதுக்கு ஜால்ரா அடிக்கன்னே ரெண்டு பேரு எப்பவும் வந்துடறாங்க.

    போகட்டும். அது பத்தி நமக்கு கவலை இல்லை. சாஸ்திரம் என்றால் என்னன்னாச்சும் தெரியுமா? பாசுரங்கள் சாஸ்திரம் என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள்? பாசுரங்கள் பக்திப் பாடல்கள். அதை மறுக்கலை. ஆனால் சாஸ்திரம்ன்னா அது விஷயமே வேற. வேத சாஸ்திரம், மனு தர்ம சாஸ்திரம் என்றெல்லாம் சொல்வார்களே தவிர பாசுர சாஸ்திரம் என்று யாராவது சொல்லிக் கேட்டு இருக்கீங்களா? அப்புறம் எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை?

    பத்மனாபோ மரப் ப்ரபுன்னு உங்க இஷ்டத்துக்கு திரிச்சி எழுதறீங்க? இவ்வளவு பேசறீங்களே? முதலில் நீங்கள் சொன்ன மரக்குச்சி ரெங்கனையெல்லாம் போய் கர்ப்பக்ருஹத்தில் வைச்சிப் பாருங்க. ஒருத்தணும் கோயிலுக்கே வரமாட்டான். தங்க விமானம், வாஹனம் ஒன்னும் அமையாது.

    மரக்குச்சி ரெங்கன் எல்லாம் கதைக்கு வேணும்னா நல்லா இருக்கும். ஆனா அது அது சாஸ்திரப்படி இருக்கிறபடி இருந்தாத் தான் எது ஒன்னுத்துக்குமே மதிப்பு. அதை முதலில் புரிஞ்சிக்கோங்க. இது போன்ற கற்பனைப் பதிவுகளை நிறுத்துங்க. நீங்க சொல்றதை நம்பறத்துக்குன்னே ஒரு பெரிய கூட்டம் வேற இருக்கு. அதான் கொடுமை. உங்களைப் போல லிபெரல் ஆன்மீகவாதிகளைக் கண்டிச்சித் தான் தெய்வத்தின் குரலில் ஆசார்யாள் எடுத்துச் சொல்லி இருக்கார்.

    ReplyDelete
  44. வல்லிசிம்ஹன் said...
    ஷைல்ஸ்,ரவி
    அழகு பந்தல் ஸ்ரீராமனுஜருக்காக வேய்ந்து, அடியார்களை சேவிக்க வைத்துவிட்டீர்கள். பதிவு ஒரு பந்தல்.
    அதில் விதானம் பின்னூட்டங்கள்.

    <<<<<<<<<<<<<<<<,,,,அட அட!
    வல்லிமாவின் சொல்லுக்கு ஈடு இணை ஏது!

    நான் என்ன செய்தேன் வல்லிம்மா எல்லாப்புகழும் அந்த கண்ணபிரான்(ரவிசங்கரு)க்கே!

    ReplyDelete
  45. Anonymous said...
    கே.ஆர்.எஸ் ஐயா,
    உங்கள் பதிவின் தலைப்பு சங்கர ஜெயந்தி. ஆனால் பதிவில் அவரைப் பற்றி ஒன்னும் காணலையே? தராதரம் தெரியாமல் போகிறவன் வருபவனுக்கெல்லாம் பூனூல் போட்டு ஏத்தி விட்ட ராமானுஜரை பற்றி தானே மாய்ஞ்சி மாய்ஞ்சி ஒவ்வொரு முறையும் எழுதறீங்க? இதுக்கு ஜால்ரா அடிக்கன்னே ரெண்டு பேரு எப்பவும் வந்துடறாங்க.

    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<,,,,,,,

    தைரியம் இருந்தா பேரைச்சொல்லி வாங்க. ரெண்டுபேரும் உங்களமாதிரி அனானியா வந்து பின்னூட்டமிடலை. இறைவன் அடியார்களுக்கு ஜால்ரா அடிப்பதைப்பெருமையாத்தான் கருதறோம் ... ராமானுஜரைப்பற்றி இப்படிதராதரமில்லாமல் பேசின உங்களை அரங்கன் பார்த்துக்கொள்ளட்டும்.

    ReplyDelete
  46. ஆகா...
    நண்பர் வீட்டில் ராச்சாப்பாட்டுக்கு போய் வருவதற்குள் இது வேற நடந்திருக்கா?
    உம்...ஏதோ பெரிய பெரிய விஷயம் எல்லாம் சொல்லி இருக்காரு அனானிமஸ் ஆச்சார்யர்! :)

    முடிவே கட்டிட்டீங்களா? யோவ்...நான் ஆன்மீகவாதி எல்லாம் இல்லய்யா! ஒரு சாதாரணப் பதிவரு! நம்மளைப் பத்தி தெய்வத்தின் குரலில் சொல்ற அளவுக்கெல்லாம்....இதெல்லாம் டூ மச்!

    மெள்ள வாரேன்! பாசுர சாஸ்திரம், மரப் பிரபோ, கோயில் கருவறையில் குச்சி எல்லாம் வைக்க முடியாது-ன்னு அறிவுக் கண்ணைத் தொறந்து விட்டுருக்காரு! இப்போ கண்ணைச் சொக்குது! பைய வாரேன்!

    அதுக்குள்ள முடிஞ்சா சாஸ்திரம்-உபய வேதாந்தம் போன்றவற்றுக்குக் குமரன் மறுமொழி உரைக்கட்டும்!

    ReplyDelete
  47. //Anonymous said...
    கே.ஆர்.எஸ் ஐயா,
    உங்கள் பதிவின் தலைப்பு சங்கர ஜெயந்தி. ஆனால் பதிவில் அவரைப் பற்றி ஒன்னும் காணலையே?//

    அனானிமஸ் ஆச்சார்யரே,
    தங்களின் திவ்ய சக்ஷூ (ஞானக் கண்ணு) தொறந்து கொஞ்சம் பாருங்களேன்!

    //அந்த வெள்ளம் தான் உலகாசான் - ஜகத்குரு என்று போற்றப்படும் ஆதி சங்கரர், இராமானுசர்!//
    // சங்கரர் காலத்தால் முந்தியவர் - 788 AD! மதங்களால் உடைந்து கிடந்த சமயத்தை ஒருங்கிணைத்து பிணக்குகள் தீர்த்தவர்!//

    இதெல்லாம் சங்கரரைப் பத்தித் தானே? தேவரீர் பார்க்கலையோ? :)

    ReplyDelete
  48. //ஷைலஜா said...
    தைரியம் இருந்தா பேரைச்சொல்லி வாங்க. ரெண்டுபேரும் உங்களமாதிரி அனானியா வந்து பின்னூட்டமிடலை//

    ஆகா! அக்கா பொங்கிப் பார்த்ததே இல்லை! அவங்களேயே கோவப்பட வச்ச அனானி-ன்னா நீங்க பெரிய ஆளாத் தான் இருக்கணும்! :)

    சாரி-க்கா! என் பதிவில் உங்களையும் ராகவ்-வையும் வம்புக்கு இழுத்ததுக்கு!
    குமரன் அப்பவே அனானி ஆப்ஷனைத் தூக்கச் சொன்னாரு! ஆனால் நான் தான், பதிவரல்லாத பல தரப்பட்ட மக்களுக்கும் இருக்கட்டுமே-ன்னு வச்சிருந்தேன்!

    இவரையெல்லாம் லூசில் விடுங்க! நாளைக்கு காலையில் இவரைப் பார்த்துக்கலாம்! ஏதோ தங்க விமானம் எல்லாம் கிடைக்காதாமே! அதிலிருந்தே தெரியலையா இவரு கண்ணு எங்கே-ன்னு! பூரி ஜகன்னாதர் கருவறையில் மரக் குச்சி தான்! சாஸ்திரம் அறிந்த இவருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன? :)

    ReplyDelete
  49. //தராதரம் தெரியாமல் போகிறவன் வருபவனுக்கெல்லாம் பூனூல் போட்டு ஏத்தி விட்ட ராமானுஜரை பற்றி தானே மாய்ஞ்சி மாய்ஞ்சி..//

    ஓ! இது தான் மேட்டரா? ஹா ஹா ஹா! தான் ஆடாவிட்டாலும்....?:)

    நியாயமான கோவம், நியாயமான வெறுப்பு! அருமையான பின்னூட்டம்! :)))

    ReplyDelete
  50. Ravi,

    Do you really have to respond to that Anony? If this person has come and put in my post, I would have done either one of the following:

    1. Removed his/her comment as it does not belong to a post like this, with so many misunderstanding about aacharyaas, saasthraas, srisuukthis etc. Either he/she is totally illiterate on spiritual things or a crude non-believer pretending to be a Brahmin to stoke Brahmin:Non-Brahmin sentiments in this blog.

    Or

    2. If allowing these kinds of comments is misunderstood as democracy in blogworld, these kind of comment will be there but will not be responded. இடது புறங்கையால் தள்ளத்தகுந்தது இப்பின்னூட்டம்.

    ReplyDelete
  51. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //

    ஆகா! அக்கா பொங்கிப் பார்த்ததே இல்லை! அவங்களேயே கோவப்பட வச்ச அனானி-ன்னா நீங்க பெரிய ஆளாத் தான் இருக்கணும்! :)

    சாரி-க்கா! என் பதிவில் உங்களையும் ராகவ்-வையும் வம்புக்கு இழுத்ததுக்கு\\



    ரவி! ஸாரி எதுக்குக்கேக்கறீங்க..கேக்கவேண்டிய அந்த அனானி கேக்கட்டும்.... பணிவும் பக்தியும் கொண்ட ராமானுஜரைப்பற்றி அரைகுறையாய் தெரிந்துகொண்டு நரிபோல அவர் ஊளையிட்டால் நாமும் அதுபோல செய்வோமென எண்ணி விட்டார்போலும்.... சிங்கம் இடியின் கர்ஜனையை எதிரொலிக்குமே தவிர, குள்ள நரியின் ஊளைகளுக்கு எதிரொலிப்பதில்லை.

    ReplyDelete
  52. //If allowing these kinds of comments is misunderstood as democracy in blogworld, these kind of comment will be there but will not be responded. இடது புறங்கையால் தள்ளத்தகுந்தது இப்பின்னூட்டம்//

    அடடா. இவர் வேற இதுல கூட்டா? இது உங்க ராசி போல கே.ஆர்.எஸ் ஐயா. சப்போர்ட்டுக்கு உங்களுக்கு பஞ்சமே இல்லை போல. ஆஸ்திகனும் உங்களை ஆதரிக்கறான். நாஸ்திகனும் உங்களை ஆதரிக்கறான். பேசாம கட்சி ஆரம்பிக்கலாம். எல்லாம் போலியான இமேஜ். போலியான தன்னடக்கம். போலியான மாயை.

    புறங்கையால் தள்ளறதெல்லாம் இருக்கட்டும். என் கேள்விகள் நியாயமனது தானே? பதிலை சொல்லுங்களேன் பார்ப்போம். நாத்திகர் கோவி கண்ணன் கேள்வியெல்லாம் கூப்பிட்டு வைச்சி பதில் சொல்றீங்க. உண்மையான ஆத்திகர் கேள்விக்கு மட்டும் பதில் வராதோ? பத்மனாபோ மரப் ப்ரபுன்னு சொன்னது பொய் தானே?

    ReplyDelete
  53. குமரன் ஐயா, நீங்களும் சிதம்பரத்தை எதிர்த்து பதிவு போட்டவர் தானே?நீங்க என்னை புறம் தள்ளலாம். இவருக்கு ஜால்ரா அடிக்கலாம். ஆனால் தெய்வத்தின் குரலை புறம் தள்ள முடியாது. இந்தாங்க தெய்வத்தின் குரல் பகுதி.

    http://www.kamakoti.org/tamil/3dk103.htm
    ஸநாதனிகள் ஆசாரம் ஆசாரம் என்று சொல்லிக் கொண்டு, ஸ்பிரிட்டை (உயிரை) விட்டு விட்டு ஸ்கெலிடனை (எலும்புக்கூட்டை) மட்டும் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று இவர்கள் சொல்லி, ட்ரெடிஷனல் மதத்தில் தொண்ணூறு பெர்ஸென்டாக இருக்கும் ஆசார அநுஷ்டானாதிகளை விட்டு விட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஹிந்துமத parent body -யிலிருந்து வெளியேறித் தனியான சீர்திருத்த இயக்கமாகவும் இல்லாமல் இதிலேயே இருந்துகொண்டு, இவர்கள் அநுஷ்டிப்பதுதான் ஸரியான ஹிந்துமதம் என்று ஜனங்கள் பிரமை கொள்ளும்படிப் பண்ணுகிறார்கள்.

    ReplyDelete
  54. அன்புள்ள அனானி (சாரி திரு கண்ணபிரான், தங்களிடம் பிறகு வருகிறேன்)

    சாஸ்திரம். சாஸ்திரம். சாஸ்திரம். சாஸ்திரம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட நூலா? இதுதான் தங்களின் புரிதல் என்றால், மேற்கொண்டு பேச ஏதுமில்லை.

    சாஸனாத் இதி சாஸ்த்ர: அதாவது, ஒரு செயலை இவ்வாறு செய்ய வேண்டுமென்று விதிப்பதே சாஸ்த்ரம். பாசுரங்கள் இறைவனை அடையும் வழியை, அவனிடம் நமக்குள்ள அடிமைத்தன்மையை, அவன் எவ்வாறு நம்மை ஆட்கொள்கிறான் என்பன போன்ற உயரிய கருத்துக்களை, நாம் உய்வதற்காகத் தெரிவிப்பதால், அவற்றை சாத்திரம் என்று கொள்ள தட்டேதுமில்லை.

    தாங்கள் சாத்திரம் சாத்திரம் என்று கூறுவதைப் பார்க்கும்பொழுது, தங்களுடைய மனோநிலை ஒருவாறாக விளங்குகிறது. சற்று வெளிப்படையாகவே சொல்கிறேன். தங்களுக்கு, வடமொழி மட்டுமே உயர்ந்தது என்ற கொள்கை இருப்பின், இப்பதிவுகளில் தங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

    வடமொழி வேதங்களையும் தமிழ் கொண்டே தெளிந்திருக்கின்றனர் நம் முன்னோர். "செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி" என்பது திருமங்கையாழ்வார் வாக்கு. இறைவன் எவ்வாறு அனைத்துமாய் இருக்கிறான் என்று கூறப் புகுமிடத்து இவ்வாறு கூறுகிறார்.

    "லிபரல் ஆன்மீகம்" என்ற கூறி அவர்களை "ஆச்சார்யாள்" கண்டித்திருந்தால், அது திரு கண்ணபிரானிடம் பொருந்தாது. முதலில்.

    அடியேனுடய யூகம்.... தாங்கள் "சங்கரர்" என்ற பெயரைப் பார்த்துவிட்டு, அனைத்தும் இராமநுசரை மட்டுமே கூறுவதுபோல் இருப்பதைக் கண்ட ஏமாற்றத்தால் வந்த இடுகையே இது. இது ஒருவாறு தங்களின் சார்பை நன்றாக வெளிப்படுத்துகிறது. மேலும் திரு. கண்ணபிரானின் பிற பதிவுகளைத் தாங்கள் படிப்பதில்லை என்று நன்கு தெளிவாகிறது.

    இராமநுசரும், யாருக்கும் பூணூலைப் புதிதாக அணிவித்துவிடவில்லை. அவர் இறைவனை நன்கு உணர்ந்தவர். அவருக்கு சாதிகள் ஒரு தட்டில்லை. அனைவரும் இறைவனின் உடைமைகள் என்றும், தன் உடைமையை தான், தன் விருப்பப்படி அனுபவிப்பவன் இறைவன் என்றும், முடிவில் அனைவரையும் தன் பால் அழைத்துக்கொள்பவன் என்றும் நன்றாக அறிந்தவர். அப்படிப்பட்டவர், சிலருக்குப் புதிதாகப் பூணூலை அணிவித்தார் என்றது துளியும் பொருந்தாது.

    முதலில் தங்கள் மனதில் இருக்கும் superiority-complex-ஐ விடுங்கள்

    "மான் ஆங்கார மனம் கெட, ஐவர் வன்கையர் மங்க, தான் ஆங்காரமாய் புக்குத் தானே தானே ஆனான்"......


    பிறரை நிந்திக்கும் முன் தங்கள் பெயரையாவது வெளியிடும் தைரியம் இருக்க வேண்டும்.

    அடியேன்
    வேங்கடேஷ்,

    ReplyDelete
  55. திரு கண்ணபிரான்,

    மறுபடியும் ஒரு அருமையான இடுகை. அடியேன் இன்றுதான் படித்தேன். எங்கள் ஊர் (திருவல்லிக்கேணி) பிள்ளைகளின் ப்ரம்மோற்சவமே அழகுதான். போன வருடம் ப்ரம்மோற்சவம். அடியேனுடை வீதியில் பார்த்தசாரதிப் பெருமாள் எழுந்தருளும் தருணத்தில், மழைத் தூறல். உடனே மெழுகுப் போர்வைச் சாற்றி, விரைவாக கோயிலுக்கு எழுந்தருளப் பண்ணிவிட்டனர். ஆனால் இச்சிறுவர்களோ நிதானமாக நின்று அனைவர் இல்லத்திலும், பெரிய பெருமாளுக்கு அமுது செய்யமுடியாத ஏக்கத்தை, இந்த "குட்டி"ப் பெருமாளுக்கு செய்வித்துத் தணித்தனர். இருவருக்கு ஒரே வித்தியாசம். "Size" மட்டுமே.

    "அனானி" போன்றோரின் விமர்சனங்களை விட்டுத் தள்ளுங்கள். அதை இங்கு அனுமதித்ததனால் தங்களின் நேர்மையும், பெயரிடாமல் எழுதியதனால் அவருடைய நேர்மையின்மையும் நன்கு விளங்கியது.

    "எங்கும் உளன் கண்ணன்", "தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுரும் தானே" போன்ற பாசுரங்களின் சுவை வடமொழியில் இல்லாததால் அவரால் இதை புரிந்து கொள்ளவும் முடியாது, இரசிக்கவும் முடியாது.

    அருமையான தங்களின் சேவையைத் தொடருங்கள்.

    அடியேன்
    வேங்கடேஷ்

    ReplyDelete
  56. //அடடா. இவர் வேற இதுல கூட்டா? இது உங்க ராசி போல கே.ஆர்.எஸ் ஐயா. சப்போர்ட்டுக்கு உங்களுக்கு பஞ்சமே இல்லை போல. ஆஸ்திகனும் உங்களை ஆதரிக்கறான். நாஸ்திகனும் உங்களை ஆதரிக்கறான். பேசாம கட்சி ஆரம்பிக்கலாம். எல்லாம் போலியான இமேஜ். போலியான தன்னடக்கம். போலியான மாயை.

    புறங்கையால் தள்ளறதெல்லாம் இருக்கட்டும். என் கேள்விகள் நியாயமனது தானே? பதிலை சொல்லுங்களேன் பார்ப்போம். நாத்திகர் கோவி கண்ணன் கேள்வியெல்லாம் கூப்பிட்டு வைச்சி பதில் சொல்றீங்க. உண்மையான ஆத்திகர் கேள்விக்கு மட்டும் பதில் வராதோ? பத்மனாபோ மரப் ப்ரபுன்னு சொன்னது பொய் தானே?//

    அனானி,

    புறங்கையால் தள்ளத்தகுந்ததே உங்கள் புலம்பல்கள் எல்லாம். இரவிசங்கரோட இராசி என்னன்னு எனக்குத் தெரியும். அவரோட தகுதியும் என்னன்னு தெரியும். நான் ஆத்திகனா இல்லையா என்பதையோ அவருக்கு இருப்பது போலியான இமேஜா இல்லையா, போலியான தன்னடக்கமா இல்லையா, போலியான மாயையா இல்லையா என்பதெல்லாம் உமது பெயரைச் சொல்லிக் கொண்டு வந்து சொல்லுங்கள்.

    உங்கள் கேள்விகள் அபத்தம். நியாயமானவை இல்லை. அதனாலேயே புறந்தள்ளப்பட வேண்டியவை. நீர் உண்மையான ஆத்திகரும் இல்லை. ஆத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியும் உமக்கு இல்லை. பத்மநாபோ மரப்பிரபு என்று சொல்வதற்கான நிகழ்ச்சியைப் பற்றி நீர் அறியாமல் இருப்பதால் அது பொய்யாகிவிடாது. பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது.

    சங்கரரைப் போற்றுவது போல் போற்றி இராமானுசரைப் பற்றி இப்படி எழுதும் நீர் புறந்தள்ளத் தகுந்தவர் தான். தராதரம் பற்றி தராதரமே தெரியாமல் பேசும் நீர் பேசுவதா? கொடுமை. பூணூல் போடுபவன் என்ன உயர்ந்தவனா? என்ன கொடுமை இது? அதற்கு என்ன தராதரம் வேண்டிக் கிடக்கிறது? பிறப்பு மட்டுமே தான் தரமா? அந்தக் காலம் எல்லாம் மலையேறிவிட்டது! முதலில் அதனைப் புரிந்து கொள்ளும்.

    இராமானுசரைப் பற்றி மாய்ஞ்சி மாய்ஞ்சி எழுதினால் என்ன தவறு? எத்தனையோ பேர் சங்கரரைப் பற்றியும் ஞான யோகத்தைப் பற்றியும் மட்டுமே மாய்ஞ்சி மாய்ஞ்சி எழுதுகிறார்களே?! அவர்களையும் போய் அனானி வேடத்தில் கேட்க வேண்டியது தானே. இரவியை மட்டும் பழிக்க வந்ததன் நோக்கம் என்ன?

    பாசுரங்கள் சாத்திரம் என்று யார் சொன்னது என்று உமக்குத் தெரியாது! அதனால் அவை சாத்திரம் இல்லை என்றாகிவிடுமா? 'தெளியாத மறை நிலங்கள் தெளிய ஓதியது' இத்தமிழ்ப்பாசுரங்களைத் தான். அவையே சாத்திரங்களில் சிறந்தவை என்று சொன்னால் என்ன செய்வீர்?

    இந்தப் பதிவில் இருப்பது கற்பனை இல்லை. நீர் கேள்விப்படாதவை எல்லாம் கற்பனை என்று நீர் வேண்டுமானால் உம்மைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொள்ளலாம். 'பத்மநாபோ மரப் பிரபு'வும் உண்மையில் நடந்த நிகழ்ச்சியே. எம்பெருமானார் சிறு பிள்ளைகள் விளையாடிய விளையாட்டில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு விழுந்து சேவித்து தீர்த்த பிரசாதம் பெற்றுக் கொண்டதும் முழு உண்மையே.

    சிதம்பரத்தை எதிர்த்து பதிவு போட்டதால் நானும் லிபரல் ஆன்மிக வாதியா? இருந்துவிட்டு போகிறேன். என்ன குறைந்து விட்டது அதனால்?

    பரமாச்சாரியார் யாரை நோக்கி அதைச் சொன்னாரோ? ஆனால் அவை என்னையோ இரவிசங்கரையோ அவர் பதிவுகளைத் தொடர்ந்து படித்துப் பின்னூட்டங்கள் இடும் 'ஜால்ரா'க்களையோ சொல்லவில்லை என்பது திண்ணம். அவர் சொன்னது அனானியாக வரும் உம்மைப் போன்ற வலுவில்லாதவர்களை, போலி ஆத்திகர்களை, சமயத்தைக் கேடுறுத்துபவர்களை வேண்டுமானால் சொல்லியிருக்கலாம்.

    ReplyDelete
  57. அனானி சார்,

    அனுஷ்டானம்! இதையும் சாடுகிறார் பூதத்தாழ்வார். (மறுபடியும் மறுபடியும் இதை எழுதுவதற்கு மன்னியுங்கள் திரு கண்ணபிரான்)

    பாசுரத்தை விடுவோம், அதன் கருத்தை மட்டும் பார்ப்போம். அதாவது அனைத்தையும் படைத்து, காத்து, அழித்தருளும் அவனைப் பற்றிய சிந்தனையில்லாது செய்யும் சந்த்யாவந்தனாதிகளால் பயன் என்னவிளையும்? என்கிறார் தம்முடைய பாசுரத்தில்.

    அனுஷ்டானத்தில் மனம் லயிக்கும்பொழுது அதை நாம் செய்கிறோம் என்ற மமதை அதிகமாகிறது. நாம் செய்கிறோம் என்ற எண்ணம் தோன்றும் பொழுது, அதை ஒழுங்காக, "சாத்திரங்களில்" சொல்லியிருப்பதைப் போல், தவறாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. அவ்வெண்ணம் மேலோங்கும் பொழுது, நம்மை நடத்திச் செல்லும் இறைவனைப் பற்றிய எண்ணமும், நம் கர்மாக்கள் அவன் கைங்கர்யமாகவே செய்யப் படுபவை என்ற எண்ணமும் போய்விடுகிறது. நாமும் ஒரு "ரோபோ" போல்தான் காரியம் செய்கிறோம்.

    திரு. கண்ணபிரான் காட்டுவது ப்ரபந்ந குலம். இங்கு அனைத்தும் அவனே. பக்தி என்ற காதல் மிகுந்திருக்கும் நிலை. நாம் அவனுடைய அடிமை என்று தெளிந்திருக்கும் நிலை. "ஞானாந் மோக்ஷ:" என்றவிடத்தில் காதல் வெளிப்படுவதில்லை. ஆனால் "ப்ரபத்தி" நிலையில் அவனைத் தாயாய், தந்தையாய், சிசுவாய், தோழனாய், காதலனாய்ப் பாவிக்கும் ஒரு உன்னத நிலை உண்டாகிறது. அந்நிலைதான் குலசேகர ஆழ்வாரை, காலம் கடந்த பின்னும், இராமாயண காதை கேட்டவளவில், இராமனுக்கு உதவி செய்ய தன் படைகளை உடனே இலங்கை செல்லுமாறு பணித்தது. இந்நிலையாவது "ஞானம் கனிந்த காதல்" நிலை. அதாவது "நாம் அவனுக்கு அடிமை என்ற ஞானம் நன்கு உண்டாகும் பொழுது நமக்கு அவன்பால் தோன்றும் ப்ரேமையை, ஞானம் கனிந்த நலம்" என்பர்.

    ஞானம் கனிந்த நலங்கொண்டு, நாள்தொறும் நைபவர்க்கு
    வானம் கொடுப்பது மாதவன்! வல்வினையேன்மனத்தில்
    ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு அத்
    தானம் கொடுப்பது, தன் தகவென்னும் சரண்கொடுத்தே

    அவ்வாறான இராமாநுசரை.....

    காரேய் கருணை இராமாநுச! இக்கடலிடத்தில்
    ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை? அல்லலுக்கு
    நேரே உறைவிடம் நான், வந்து நீ என்னை உய்த்தபின் உன்
    சீரே உயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே

    என்றுப் பாடிப்போனார் திருவரங்கத்தமுதனாரும். இராமாநுசருக்கு, திருமாலை ஒத்த குணாதிசயங்களை இப்பாசுரத்தில் குறிப்பிடுகிறார்.

    எப்படி எம்பெருமான் தானே வந்து ஜீவர்களுக்கு அருள்புரிகிறானோ, அப்படியே "எம்பெருமானாரான" இராமாநுசரும், "பாருலகில் ஆசை உடையோர்க்கெல்லாம்" தானே சென்று இறைவனை அடையும் வழியை உணர்த்தி உய்வதற்கு வழி செய்தார் என்பது திண்ணம்.

    அடியேன்
    வேங்கடேஷ்

    ReplyDelete
  58. குமரன் சார்,

    //பூணூல் போடுபவன் என்ன உயர்ந்தவனா? என்ன கொடுமை இது? அதற்கு என்ன தராதரம் வேண்டிக் கிடக்கிறது? பிறப்பு மட்டுமே தான் தரமா? அந்தக் காலம் எல்லாம் மலையேறிவிட்டது! முதலில் அதனைப் புரிந்து கொள்ளும்.
    //

    இதை இவ்வாறு கேட்கவே எண்ணியிருந்தேன். ஆனால் திரு. கண்ணபிரான் அனுமதிப்பாரா என்ற குழப்பம் இருந்ததினால் அவ்வாறு எழுதவில்லை.

    இதைத்தான் அனானியின் மனோநிலை ஒருவாறு தெளிவாகிறது என்றும், அவருடைய superiority complex என்றும் குறிப்பிட்டேன்.

    இவர் "நெறி காட்டி நீக்குதியோ" என்ற பாசுரத்தையும் அறியார், "கருமமும் கரும பலனாகிய காரணன்" என்ற பாசுரத்தையும் அறியார். ஆனால் அனுஷ்டானத்தை மட்டும் விடார். இவர் போன்றோருக்காகத்தான், பூதத்தாழ்வார் "நகரம் அருள்.....ஓதி உருவெண்ணும் அந்தியாலாம் பயன் அங்கு என்?" என்று எழுதினார் போலும்.

    அனானி சாருக்கு ஒரு குறிப்பு,

    உடனே கற்பனைகளில் இறங்கவேண்டாம். அடியேன், பூணூல் போட்ட ப்ராமணன் தான். குறிப்பாக, அத்வைதியாக இருந்து, இராமாநுசரால் வாதில் வெல்லப்பட்டு, அவருடைய சீடரானவரின் வம்சத்தில வந்தவன் தான் அடியேன்.

    பிறருக்கு,

    இதை அடியேன் மமதையுடன் கூறவில்லை. பூணூல் போட்டதனால் மட்டும் ஒருவன் உயர்ந்து விடுவதில்லை. ப்ராமணனின் நடத்தை எவ்வாறு இருக்கவேண்டுமென்றால், இறைவனுடைய அருளை எதிர்ப்பார்த்துக் கொண்டு, பிறருக்கு உபயோகமான ஒரு வாழ்வை வாழ்ந்து கழிக்கவேண்டும். அவ்வாறிருக்கும் ப்ராமணனே உயர்ந்தவன்.

    அடியேன்
    வேங்கடேஷ்

    ReplyDelete
  59. ஓக்கே...வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்தாச்சு!

    எல்லாரும் சேர்ந்துக்கிட்டு பாவம் அனானியாச்சாரியாரைக் கடிந்து கொண்டால் எப்படி? பாவம்-ல்ல? அவர் "நியாயமான" கேள்விக்குப் பதில் சொல்லணும்-ல? கோவி-"க்கே" சொல்லும் போது, இவருக்கு கண்டிப்பாச் சொல்லி ஆகணும் தான்! :)

    தேவரீர் அனானியாச்சாரியார் அவர்களே,
    முதற்கண் என்னுடைய ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
    சங்கர ஜெயந்தி-ன்னு தலைப்புல பேரு வச்சிட்டு சங்கரரைப் பத்திப் பக்கம் பக்கமா சொல்லி உங்க ஆசையைப் பூர்த்தி பண்ண முடியாமப் போயிட்டேன்!

    ஆனாலும் ஜகதாச்சார்யரான சங்கரரைப் பத்தியும் பதிவில் கொஞ்சம் சொல்லி உள்ளேனே! கருணை கூர்ந்து அதை நோக்குங்கள் ஐயா! போதலையா? இந்தாங்கோ!
    http://madhavipanthal.blogspot.com/2008/11/blog-post_24.html

    சங்கரர் பற்றிய சிறப்புப் பதிவு! ஆச்சார்யர் அருளிய ஆத்ம ஷட்கத்தை ஒட்டி எழுதியது! சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்-ன்னு வருமே! அது!

    உங்களுக்கு யாரைப் பிடிச்சிருக்கோ அவங்களை எல்லாருமே கொண்டாடணும்! சரி தான்!

    மற்ற சம்பிரதாயங்கள் பத்தி எல்லாம் ஏதோ நான் அப்பப்போ எழுதலாம்! நீங்க தப்பு சொல்ல மாட்டீங்க! ஆனால் ஒரு அளவு-ன்னு இருக்குல்ல! மற்றதுக்குள்ளே இருக்கும் நல்லவற்றை ஒரேயடியா காட்டிறக் கூடாது-ல்ல? உங்கள் விருப்பத்துக்கு உட்பட்டுத் தானே காட்டணும்? Cabinet Minister serves under the pleasure of the Prime Minister-nnu சொல்வாய்ங்க! அது போல "under the pleasure of you"-ன்னு இருந்துக்கிட்டா எவ்ளோ நல்லா இருக்கும்? உங்களுக்கும் கோவம் வராது! மத்த சம்பிரதாயங்களும், "under the pleasure of you"-ன்னு, ஒரு மூலையில் இருந்துக்கிட்டு நிம்மதியா இருக்கும்!

    ச்சே...உங்க "நல்லெண்ணத்தை" நான் தான் சரியாப் புரிஞ்சக்கலை! என் அறிவுக் கண்ணை இன்னிக்கி நல்லாவே தொறந்து விட்டீங்க ஐயா! நன்றிங்கோ! :)))

    ReplyDelete
  60. இப்போ மேட்டர்!
    //பத்மனாபோ மரப் ப்ரபுன்னு சொன்னது பொய் தானே//

    அனானி ஐயா!
    கேரளாவுல பட்டத்திரி பட்டத்திரி-ன்னு ஒருத்தர் இருந்தாரு! குருவாயூரப்பன் பக்தரு! பல சாஸ்திரங்களைக் கரைச்சிக் குடிச்சவரு! உங்களைப் போல-ன்னு வச்சிக்குங்களேன்!

    பூந்தானம்-ன்னு இன்னொரு பக்தரு! இவருக்கு அவ்வளவா விஷயம் போதாது! ஆனா விஷ்ணு சகஸ்ரநாமத்தை எங்கேயோ காதால கேட்டுப்பிட்டு, அதுல வர "பத்மநாபோமரப் பிரபு" மட்டும் இவர் வாயில் ஒட்டிக்கிச்சி!

    பத்மநாபோ அமரப் பிரபு(தேவர் தலைவன்)-ன்னு பிரிச்சிப் படிக்க அவருக்குத் தெரியலை! மரப் பிரபு (மரத் தலைவன்)-ன்னு நினைச்சிக்கிட்டு கோயில் வெளிய இருந்த அஸ்வத்த மரத்துக்கு (அரசமரம்) பிரதட்சிணம் பண்ணினாரு!

    இதைப் பாத்த சாஸ்திர விற்பன்னர், உங்களைப் போலவே கோவப்பட்டு கத்த, அமரப் பிரபு-ன்னு திருத்தி விட்டாரு! பூந்தானமும் திருத்திக்கிட்டு மரத்தைச் சுத்தறதை நிறுத்திக்கிட்டாரு!

    பகவான், சாஸ்திர விற்பன்னரான பட்டத்திரி கனவில் தோன்றி...
    "ஏலே! உம்மை எவன்-யா திருத்தச் சொன்னது? பெரிய சமஸ்கிருதப் புலி-ன்னு நினைப்போ? இப்போ உம்மால அஸ்வத்த பிரதட்சிணம் நின்னு போச்சே! மரங்களில் நான் அஸ்வத்தமா இருக்கேன்னு சொல்லி இருக்கேனே! அப்படின்னா மரப்-பிரபு என்பதும் பொருந்தும் தானே? நல்ல காரியத்தைக் கெடுத்தீரே"-ன்னு ஒரு அதட்டு அதட்டினாப் பொறவு தான், புத்தி வந்துச்சாம்!

    அந்த மரப்-பிரபுவை தான் இங்கு எடுத்தாண்டேன்! கதையில் மரக்குச்சி ரங்கன் வருவதால்!
    நானா ஏதோ வார்த்தை விளையாட்டு விளையாடி, "நைசா", என் கருத்துக்களை உள்ளே நுழைச்சிடலை சாரே! ஷமிக்கணும்! :)))

    அதட்டு அதட்டினாப் பொறவு தான், புத்தி வந்துச்சாம் - அவருக்கு!
    உமக்கு?

    ReplyDelete
  61. பாவம், வேங்கடேஷ் சார் வேற அழகான பதில்களையெல்லாம் உமக்குக் கொடுத்திருக்காரு! உற்சவ காலங்களில் எம்பெருமான் ஸ்ரீபாதம் தாங்குபவர் அவர்! வீண் பேச்சு மட்டுமல்ல! தொண்டும் கைங்கர்யமும் உண்டு! அவர் சொன்னதைச் சும்மாவாச்சும் ஆய்ந்து பாருங்கள்!

    //வேத சாஸ்திரம், மனு தர்ம சாஸ்திரம் என்றெல்லாம் சொல்வார்களே தவிர பாசுர சாஸ்திரம் என்று யாராவது சொல்லிக் கேட்டு இருக்கீங்களா? அப்புறம் எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை?//

    பாசுர சாஸ்திரம்-ன்னு யாருமே சொல்லமாட்டாய்ங்க!
    ஆனால் பாசுரத்தை தான் திராவிட வேதம், உபய வேதாந்தம், ரஹஸ்ய த்ரயம், உபகார சங்கிரஹ சாஸ்திரம் என்றெல்லாம் போற்றுவார்கள்! அவையும் சாத்திரம் தான்! அதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை! சாஸனாத் இதி சாஸ்த்ர! As simple as that!

    இப்போ சொல்லுங்க? எதுக்கு "எங்களுக்கு" இந்த வேண்டாத வேலை? :)

    ReplyDelete
  62. //இவ்வளவு பேசறீங்களே? முதலில் நீங்கள் சொன்ன மரக்குச்சி ரெங்கனையெல்லாம் போய் கர்ப்பக்ருஹத்தில் வைச்சிப் பாருங்க. ஒருத்தணும் கோயிலுக்கே வரமாட்டான்//

    பூரி ஜகன்னாதர் இருக்காரு-ல்ல? அவரு வெறும் மரக்கட்டை தான்! சும்மா இத்தினி வருஷத்துக்கு ஒரு முறை-ன்னு கோலாகலமா மரத்தில் இருந்து வெட்டியாந்து, கண்ணெல்லாம் பெருசு பெருசா எழுதி, கருவறைக்குள்ளாற வைப்பாங்க!

    ஸோ, மரக்குச்சியானது கர்ப்ப கருஹத்துக்குள்ள வந்தாச்சா? பூரி கோயிலுக்கு ஒருத்தனும் போறதே இல்லையா? ஈ ஓட்டிக்கிட்டு இருக்காங்களா? :)

    //தங்க விமானம், வாஹனம் ஒன்னும் அமையாது//

    ஹிஹி! தேவையே இல்லை! பகவான் தங்க விமானம் கேட்கலையே! தங்க விமானம் இல்லாதது எல்லாம் கோயில் இல்லை-ன்னு ஆயிருமோ? :)

    //உங்களைப் போல லிபெரல் ஆன்மீகவாதிகளைக் கண்டிச்சித் தான் தெய்வத்தின் குரலில் ஆசார்யாள் எடுத்துச் சொல்லி இருக்கார்//

    சூப்பரு! பேச்சு மட்டுமல்லாமல் அனுஷ்டானச் சக்ரவர்த்தியா இருந்தாரே காஞ்சிப் பெரியவர்! அவர் கையால கண்டிப்பும் குட்டும் வாங்கிக்கறது எனக்குச் சந்தோஷம் தான்! அப்படியாச்சும் ஆச்சார்ய சம்பந்தம் ஏற்படுதே!

    இன்னொன்னு தெரியுமா? அதே தெய்வத்தின் குரலில் ஒவ்வொரு சமயத்தையும் எப்படி எப்படி எல்லாம் கிண்டல் பண்ணி எழுதி இருக்காரு! நகைச்சுவை தொனிக்க-ன்னு எடுத்து தரட்டுமா?
    http://www.kamakoti.org/tamil/3dk17.htm

    வைணவத்தைக் கிண்டல் பண்ணி நகைச்சுவையா எழுதி இருக்காரு! உடனே பரமாச்சாரியர் வைஷ்ணவ எதிரி-ன்னு முத்திரை குத்திட்டு வரலாம்! வரீங்களா? :)))

    ReplyDelete
  63. //கிருஷ்ணமூர்த்தி said...
    குமரன் சார் சொல்லி இருக்கும் கருத்து சரியானது.
    பெயரிலியாகவும், பொருத்தமில்லாமலும் இருக்கிற பின்னூட்டத்தை புறந்தள்ளிவிடுதலே சரி.//

    வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்! உண்மை தாங்க! ஆனால் பாருங்க நம்ம குமரனே ரெண்டொரு பதில் சொல்ல வேண்டியதாப் போயிருச்சி!

    இந்த மாதிரி ஆளுங்க சமயம் என்னும் போர்வையில் ஒளிஞ்சிக்கிட்டு வருவதால், சில சமயம், Not for Persons, But for Issues என்ற அளவிலே பதிலுரைக்க வேண்டியதாப் போயிடுது!

    இவர்கள் கேள்வியைக் கேக்க வேணாம்-ன்னு கூட சொல்லலை! தாராளமாக் கேட்கட்டும்! கண்ட பசங்களுக்கும் இராமானுசர் பூநூல் போட்டு விட்டாரு-ன்னு கூடச் சொல்லட்டும்! No Problems!

    ஆனால் சக மனிதர்களை/பதிவர்களை, "ஜால்ரா, நீங்களும் இவர் சப்போர்ட்டு தானே?"-ன்னு எல்லாம் சாஸ்திரக் கேள்வி கூடவே, இதையும் கலந்து அடிச்சிக் கோக்குறது தான் தவறு!

    நானும் பல முறை சொல்லிட்டேன்! கருத்தைக் கருத்தாக மட்டுமே வளர்த்து எவ்வளவு கடுமையான வாதம் வேணுமாலும் வையுங்கள்! என் பதிவில் இடமுண்டு! ஆனால் அது கூடவே தனிப்பட்டதை இழுத்துக்கிட்டு வராதீங்க-ன்னு! ஹூஹூம்! அடங்க மாட்டேங்குறாங்க! :(

    //மதுரையம்பதியில், மெனக்கெட்டு இந்தப் பெயரிலிக்காக ஒரு பதிவை இட்டிருப்பதைப் பார்த்த பிறகு தான் இங்கே தேடி வந்தேன்.//

    மெளலி அண்ணாவின் பதிவை இப்போ தான் பார்த்தேன்!
    உம்ம்ம்ம்! சங்கரர் என்பதால் அவரும் உள்ளே இழுக்கப்பட்டுட்டாரா? பாவம்!

    ஆனாலும் எங்க மெளலி அண்ணாவைப் பந்தலுக்கு ஏளப் பண்ணிய புண்ணியம் இந்த அனானிக்குப் போகட்டும்! :))

    //"The defenders of the truth are often worse than the enemies of the truth."//

    நச்!

    ReplyDelete
  64. //Kailashi said...
    //* முதல் தீர்த்தம் = பிரதமம் கார்ய சித்தயர்த்தம்...//

    உங்களுடைய ஒவ்வொரு பதிவிலும் ஏதோ ஒரு செய்தி இருக்கும். தங்கள் சேவை சிறக்க இரு ஆச்சாரியர்களையும் வேண்டுகின்றேன்.//

    நன்றி கைலாஷி ஐயா! மூன்று தீர்த்தச் செய்தியைச் சொன்னால் நல்லா இருக்குமே-ன்னு தோன்றியது! பட்-டுன்னு சொல்லிட்டேன்! :)

    ReplyDelete
  65. //Kailashi said...
    தாங்கள் கூறியபடி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலிலும், திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திலும் இந்த சொப்பு விளையாட்டை அடியேன் திரிசித்துள்ளேன்.//

    ஆகா! மயிலை SVDD-இல் கூட உண்டா! அருமை! தகவலுக்கு நன்றி கைலாஷி ஐயா!

    ReplyDelete
  66. //கோபிநாத் said...
    நானும் கூட விளையாடிட்டேன் தல ;;))//

    இனி இந்த மாதிரி அனானிங்க வந்தா சொல்லி அனுப்பறேன்! வந்து விளையாடி ஒரு காட்டு காட்டு கோபி! :)

    ReplyDelete
  67. //வல்லிசிம்ஹன் said...
    பதிவு ஒரு பந்தல்.
    அதில் விதானம் பின்னூட்டங்கள்.
    என்ன ஒரு இரு விருந்தும்மா. நன்னாளீல் இந்த சத்சங்கம் நடந்தது//

    சாரி வல்லியம்மா! நீங்கள் லயித்துப் படிக்கறீங்க! உங்களைப் போல வாசகர்களுக்குத் தான் இடைஞ்சல்!

    சத்சங்கம் சில சமயம் சத்த சங்கமா ஆயிடுது! :)
    அதுவும் பந்தலை மட்டும் தேடி வந்து குறி வைக்கறாங்க! சங்கரரை ஏன் எழுதலை? அது...இது-ன்னு! கொஞ்ச நாள் இல்லாம இருந்துச்சி! இப்போ ரீ-என்ட்ரி போல! :)

    எவ்ளோ பாத்துட்டோம்! இதைப் பாத்துக்க மாட்டோமா என்ன? :))

    ReplyDelete
  68. //Venkatesh said...
    எங்கள் ஊர் (திருவல்லிக்கேணி) பிள்ளைகளின் ப்ரம்மோற்சவமே அழகுதான்.//

    சொல்லவும் வேணுமோ?
    http://www.pbase.com/svami/brahmorchavampartha2009
    சுட்டியில் ஸ்ரீபாதம் தாங்கும் படத்தில் நீங்களும் இருக்கீங்களா-ன்னு கேட்டு மின்னஞ்சல் தட்ட இருந்தேன்! நீங்களே வந்துட்டீங்க! :)
    You stole the show with your razor sharp comments! :)

    //ஆனால் இச்சிறுவர்களோ நிதானமாக நின்று அனைவர் இல்லத்திலும், பெரிய பெருமாளுக்கு அமுது செய்யமுடியாத ஏக்கத்தை, இந்த "குட்டி"ப் பெருமாளுக்கு செய்வித்துத் தணித்தனர்.//

    ஆகா! குட்டிப் பெருமாள் இப்படியெல்லாம் கூட உதவி செய்கிறாரா? அருமை! கண்ணனும் குட்டிப் பையனா இருக்கும் போது செய்த உதவிகள் தான் அதிகம்! பெருசா ஆனப் பிறகு வம்பு பண்றதே வழக்கமாப் போச்சு! குட்டீஸ் இஸ் தி பெஸ்ட் :)

    //"எங்கும் உளன் கண்ணன்", "தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுரும் தானே" போன்ற பாசுரங்களின் சுவை வடமொழியில் இல்லாததால் அவரால் இதை புரிந்து கொள்ளவும் முடியாது, இரசிக்கவும் முடியாது//

    :)
    இது போல பந்தலில் அப்பப்போ சில பேருக்குப் பொறுக்க மாட்டாமல் வந்து போகும்! ஃப்ரீயா விடுங்க!

    //அருமையான தங்களின் சேவையைத் தொடருங்கள்//

    நல்லடியார் நியமனம் எவ்வண்ணமே, அடியேன் அவ்வண்ணம்!

    ReplyDelete
  69. @வேங்கடேஷ்
    //அவனைப் பற்றிய சிந்தனையில்லாது செய்யும் சந்த்யாவந்தனாதிகளால் பயன் என்னவிளையும்? என்கிறார் தம்முடைய பாசுரத்தில்//

    இப்படிச் சொல்வதால் ஏதோ சந்தியாவந்தனத்தை எல்லாம் டோட்டல் வேஸ்ட்! தூக்கி கடலில் வீசி எறிங்க என்று அர்த்தம் இல்லை! அப்படி நானோ வேங்கடேஷோ குமரனோ வேறு யாருமே என்றுமே சொல்வதில்லை!
    சொல்வதெல்லாம்..."பகவானை முன்னிறுத்தி, கர்மாவைப் பின்னுறுத்தி செய்தல் நலம் பயக்கும்" என்பது மட்டுமே!

    இது எளிய கருத்து தான்! ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஏன் சங்கரரே நஹி நஹி ரக்ஷதி டுக்ருண் கரணே என்று சொன்ன கருத்து தான்!

    ஆனால் இதை நாம் சொன்னால் மட்டும், கருத்தைக் கருத்தாகப் பார்க்காமல்...ஏதோ தனிப்பட்ட பகைமையாகவும் மனக் கசப்பாகவும் பார்ப்பது ஏன்? என்பது தான் இது நாள் வரை புரியவில்லை!

    அதை ஏன் சொல்கிறாய்? திரும்பத் திரும்பச் சொல்கிறாய்? அடக்கி வாசிக்கலாமே என்று சிலர் கேட்கலாம்! நஹி நஹி ரக்ஷதி டுக்ருண் கரணே என்று தினப்படியே பாராயணம் பண்ணுகிறார்கள்! ஏன் தினமும் பண்ணுகிறாய் என்று அவர்களைக் கேட்போமா?

    இந்த சிம்ப்பிள் புரிதல் இல்லாமல், ஆசார்ய ஹ்ருதயத்தை, சங்கர ஹ்ருதயத்தைப் புரிந்து கொள்ளாமல், என்ன பேசி என்ன பயன்?
    புரிந்தால் மனக் கசப்பு இராது! புரிஞ்சிக்க கூடாது-ன்னா மனக் கசப்பு இருக்கும்! அவ்வளவு தான்!

    //காரேய் கருணை இராமாநுச! இக்கடலிடத்தில்
    ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை?//

    அவ்ளோ தான்! இதுக்கு மேல ஒன்னுமே இல்லை!

    ReplyDelete
  70. //Venkatesh said...
    இதை இவ்வாறு கேட்கவே எண்ணியிருந்தேன். ஆனால் திரு. கண்ணபிரான் அனுமதிப்பாரா என்ற குழப்பம் இருந்ததினால் அவ்வாறு எழுதவில்லை.//

    ஹிஹி! உங்களுக்கு இல்லாத அனுமதியா வேங்கடேஷ்? அனானிக்கே அனுமதி அளிக்கும் போது, அடியாருக்கு என்ன குறைச்சல்?

    ஒரு முறை, புரிந்து கொள்ளாமல் மெய்யன்பர்க்கு மன வருத்தம் ஏற்பட்டதால் பந்தலையே மூடியும் வைத்திருந்தேன் ஓரிரு நாள்!

    இது என்றும், கூடி இருந்து குணானுபவத்தில் திளைக்கும் பந்தல் மட்டுமே! மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயில் இனங்களான அடியார்கள் கூவின காண்!

    //அடியேன், பூணூல் போட்ட ப்ராமணன் தான். குறிப்பாக, அத்வைதியாக இருந்து, இராமாநுசரால் வாதில் வெல்லப்பட்டு, அவருடைய சீடரானவரின் வம்சத்தில வந்தவன் தான் அடியேன்//

    :)
    இதை நீங்க ஒரு கதையா எழுதுங்க வேங்கடேஷ்! உரையாடல் நடையில்! நல்லா இருக்கும்!

    //பிறருக்கு,
    இதை அடியேன் மமதையுடன் கூறவில்லை. பூணூல் போட்டதனால் மட்டும் ஒருவன் உயர்ந்து விடுவதில்லை//

    கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்
    ஈசன் எங்கும் எனாதவர்க்கு இல்லையே! - அப்பர் சுவாமிகள்!

    பாதியாய் அழுகிய கால் கையரேனும்
    பழி தொழிலும் இழி குலமும் படைத்தாரேனும்
    ஆதியாய் அரவணையாய் என்பார் ஆகில்
    அவர் கண்டீர் நாம் வணங்கும் அடிகள் ஆவார்!

    சாதியால் ஒழுக்கத்தால் மிக்கோரேனும்
    சதுர் மறையால் வேள்வியால் தக்கோரேனும்
    போதில் நான்முகன் பணிந்து போற்றும்
    பொன்னரங்கம் "பணியாதார்" புலையர் தாமே!

    ReplyDelete
  71. and the final word for such anonys :)

    பதிவரல்லாத வாசகர்களைக் கைவிட முடியாது! அதனால் அனானி ஆப்ஷனைத் தூக்கப் போவதில்லை!
    மாறாக இப்படிப்பட்ட அனானிகளையே இனித் தூக்கி அடிக்கிறேன்!

    இராமானுசரோ சங்கரரோ தான் கோவமாப் பேசக் கூடாது! ஆனால் கொடுவாள் எடுக்கும் பிள்ளையுறங்கா வில்லிதாசன் அடிச்சி மிதிச்சி என்ன வேணும்னா பேசலாம்! அதனால்....இது வரை பேசாத கேஆரெஸ்-ஐத் தான் இனி பார்க்கப் போறீங்க!

    //இது போன்ற கற்பனைப் பதிவுகளை நிறுத்துங்க//

    நிறுத்தலீன்னா என்னடா பண்ணுவ? அடியேன் அடியேன்-ன்னு பேசிக்கிட்டு இருப்பேன்-ன்னு நினைச்சியா?

    தில்லு இருந்தா இந்தப் பதிவிலும், இதுக்கு முன்னுள்ள பல பதிவுகளிலும், தமிழ் அர்ச்சனை முதற் கொண்டு, நான் கேட்ட ஒவ்வொரு நேரடியான கேள்விக்கும் பதில் சொல்லுடா! அதுக்குத் துப்பு இல்ல? வந்துட்டானுங்க வாலாட்ட!

    இனி உங்களை மாதிரி அத்தனை பேருக்கும் வாடா-போடா ட்ரீட்மென்ட் தான்!

    வயசுல எத்தனை பெரியவனா வேணும்ன்னாலும் இருந்துக்கோ! சகாதேவன் சொன்ன மாதிரி, கண்ணனுக்கா அக்ரபூஜை?-ன்னு சபையில் நினைத்த அத்தனை பேர் தலையிலும் என் இடது காலை வைத்தேன்!

    மவனே நீ அடுத்த கமென்ட்டைப் போடும் முன் ஷைலஜா அக்கா, ராகவ், குமரன்-ன்னு இவிங்கள குறிப்பட்டுச் சொன்ன தனி மனித வார்த்தைக்கு மன்னிப்பு-ன்னு சொல்லிட்டு, வேற என்ன வேணும்னாலும் பேசு!

    இல்ல...குலம் கோத்திரம்-ன்னு ஒன்னு விடாமல் இழுத்து விட்டு, உன்னை அடிக்கப் போயி, ஒட்டு மொத்தத்தையும் தோலை உரிச்சிக் காட்டுவேன்...
    நீ எதுக்கு மல்லு கட்டறியோ, அந்த மொதலுக்கே மோசமாப் போயிடும்! ஞாபகம் வச்சிக்கோ!

    ReplyDelete
  72. திரு. கண்ணபிரான்,

    "மரக்குச்சிப் பெருமாள்" - ஏன், சற்றேறகுரைய 100 வருடங்களுக்கு முன் வரை காஞ்சி வரதராஜப் பெருமாளும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர்தான். பழுதானதால், மாற்றும் பொழுது, கல்லில் செய்துவிட்டனர்.


    ////தங்க விமானம், வாஹனம் ஒன்னும் அமையாது//

    ஹிஹி! தேவையே இல்லை! பகவான் தங்க விமானம் கேட்கலையே! தங்க விமானம் இல்லாதது எல்லாம் கோயில் இல்லை-ன்னு ஆயிருமோ? :)//

    நம் அனானியார், ஆதி சங்கரரின் பகவத் கீதா பாஷ்யத்தை படித்ததில்லை போலும். "பத்ரம், புஷ்பம், பலம், தோயம், யோ மே பக்த்யா ப்ரயச்சதே" என்ற கண்ணனின் வாக்கியம் தெளிவில்லை போலும். இதையே நம்மாழ்வாரும் "பூசும் சாந்து - என் நெஞ்சமே, புனையும் கண்ணி - எனதுயிரே, வாசகம் செய்(தல்) - மாலையே, வான் பட்டாடையும் அஃதே" என்று போயினார். இங்கு முதன்மை நம்முடைய நினைவுதான்.

    "அவனிவன் என்று கூழேன்மின், நெஞ்சினால் நினைப்பான்யவன் அவனாகும் நீள்கடல் வண்ணனே". இதுவும் காதலில் திளைத்த நம்மாழ்வார் வாக்கு. "தமருகந்தது எவ்வுருவம்.." பாசுரத்தை ஒட்டி வருவது.

    அடியேன்
    வேங்கடேஷ்

    ReplyDelete
  73. திரு. கண்ணபிரான்

    //சொல்லவும் வேணுமோ?
    http://www.pbase.com/svami/brahmorchavampartha2009
    சுட்டியில் ஸ்ரீபாதம் தாங்கும் படத்தில் நீங்களும் இருக்கீங்களா-ன்னு கேட்டு மின்னஞ்சல் தட்ட இருந்தேன்! நீங்களே வந்துட்டீங்க! :)
    //

    இருக்கிறேன். இந்த சுட்டியைப் பாருங்கள். இதில் பல்லக்கின் வலது புறத்தில், கடைசியாக பல்லக்கின் அருகில், "இளிச்ச" வாயுடன் இருக்கும் உருவம்தான் அடியேனுடையது. :-)

    http://www.pbase.com/svami/image/111585367

    ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையோம்.

    அடியேன்
    வேங்கடேஷ்

    ReplyDelete
  74. திரு. கண்ணபிரான்

    //ஆகா! குட்டிப் பெருமாள் இப்படியெல்லாம் கூட உதவி செய்கிறாரா? அருமை! கண்ணனும் குட்டிப் பையனா இருக்கும் போது செய்த உதவிகள் தான் அதிகம்! பெருசா ஆனப் பிறகு வம்பு பண்றதே வழக்கமாப் போச்சு! குட்டீஸ் இஸ் தி பெஸ்ட் :)//

    ஆம். இது போன்ற நிகழ்வுகளால், "தமருகந்தது" பாசுரம் வலுப்பெறுகிறது.

    அனானியாருக்கு,

    மேலும் ஒரு கேள்வி. அத்வைதிகளுக்கு, முதலில் எதற்கு கோயில், அதில் சாந்நித்யத்துடன் ஒரு விக்ரஹம்? "அஹம் ப்ரம்மாஸ்மி" தானே அவர்களின் கொள்கை.

    சரி தனக்குத் தானே கோயில் கட்டிக் கொண்டேன் என்றாலும், அனுஷ்டானங்கள் எதற்கு. தங்களைத் தாங்களே அடைய அனுஷ்டானம் தேவையா?

    முதலில் இதற்கு விடையிறுத்துவிட்டுப் பிறரைத் திட்டுங்கள்.

    அடியேன்
    வேங்கடேஷ்

    ReplyDelete
  75. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    இப்போ மேட்டர்!
    //பத்மனாபோ மரப் ப்ரபுன்னு சொன்னது பொய் தானே//

    அனானி ஐயா!
    கேரளாவுல பட்டத்திரி பட்டத்திரி-ன்னு ஒருத்தர் இருந்தாரு! குருவாயூரப்பன் பக்தரு! பல சாஸ்திரங்களைக் கரைச்சிக் குடிச்சவரு! உங்களைப் போல-ன்னு வச்சிக்குங்களேன்
    >>>>>>>>>>>>>>>>>>>>>

    hahaa!!!! good joke!! சான்றோர்க்கழகு அறிமடம்!

    ReplyDelete
  76. \\
    Venkatesh said...
    அனானி சார்,



    இங்கு அனைத்தும் அவனே. பக்தி என்ற காதல் மிகுந்திருக்கும் நிலை. நாம் அவனுடைய அடிமை என்று தெளிந்திருக்கும் நிலை. "ஞானாந் மோக்ஷ:" என்றவிடத்தில் காதல் வெளிப்படுவதில்லை. ஆனால் "ப்ரபத்தி" நிலையில் அவனைத் தாயாய், தந்தையாய், சிசுவாய், தோழனாய், காதலனாய்ப் பாவிக்கும் ஒரு உன்னத நிலை உண்டாகிறது. ///
    >>>>>>>>>>>>>>>>>


    நன்றாகசொன்னீர்கள் வெங்கடேஷ்.

    ’கல்யாணகுணங்கள் கொண்ட கடவுளிடம் பக்தி செய்வது என்பதில் சுத்த பக்தி எனப்படுவது வைதீ என்றும் ராகானுகா என்றும் இரண்டுவகை உண்டு.
    வைதீகமுறைப்படி ஹோமம் த்யானம் ஜ்பம் ஆகியவை வாயிலாகப்பல பொருட்கள்கொண்டு வழிப்பட்டுக்கிடைக்கும் பக்தி வைதீ எனப்படும்.
    இந்த வைதீ பக்தியே தீவிர அன்புடன் பரிணமிக்கும்போது ராகானுகா ஆகிறது, இந்த பக்தி வளருகையில் பரமன் நமக்கு மிகவும் பிரியனாகவும் அருகில் இருப்பவனாகவும் தோன்றுகிறான்.அவனை பக்தன் தனது மகனாய் எஜமானனாய் சேவகனாய் காதலனாய்க்கருதுகிறான்.இதனை அன்றுபெரியாழ்வாரும் தற்காலத்திய பாரதியுமே நிரூபித்துள்ளனர்.

    இதைவிட சிறந்த பக்தி ஏதுமில்லை. இதன் உச்சநிலையே ப்ரேமபக்தி எனப்படும்.
    பக்தனின் உள்ளத்தில் அன்பு ஒளி வீசும்போது அவன் இஷ்ட தெய்வத்தைக்காண்கிறான்.
    இந்த அன்பு வழிபாடு ஆகியவற்றின் ஆற்றலினால் சர்வ சக்தி உள்ள எங்கும் நிறைந்துள்ள உண்மை அறிவு ஆன்ந்தவடிவினனான பரமன் மனித வடிவுகொண்டு பக்தனுக்கு அவன் தோழனாய் எஜமானனாய் காதலனாய் சேவகனாய் வசமாகிறான். அன்பின் வாயிலாகவும் வழிபாட்டின் வாயிலாகவும் பரமனைப்பெறுவதற்கு வழி இது ஒன்றுதான்! பிற நெறிகளை வெறுத்து அவற்றைச்சேர்ந்த வர்களை வருத்துவது என்பது தங்கள் நெறியின் ஓர் அங்கம் என்று சிலர் அறியாமையினால் கருதுகின்றனர்.
    பகவான் ராமக்ருஷ்ணர் இதை உணர்ந்து,” எல்லாச்சமயங்களுமே பரமனின் திருவடியை அடைவிக்கும் வெவேறுபாதைகள்” என்றார்.’


    (நானாக இங்க எதையும் சொல்லவில்லை.சுவாமி ராமகிருஷ்ணானந்தர் எழுதிய ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கைவரலாறுபுத்தகம்.. பக்கம் 195 196ல் உள்ள மணிவாசகங்கள் இவைகள்)

    ReplyDelete
  77. மரப்ரபு......

    இதோ இன்னும் சில உதாரணங்கள்.

    1. கலிய பெருமாள் கோயில் என்னும் ஊரில், இன்றும் ஒரு மரத்தூணையே திருவேங்கடமுடையானாக பாவித்து வணங்கி வருகிறார்கள்

    2. தஞ்சை, தென் ஆற்காடு, திருச்சி மாவட்டங்களில், 50 வருடங்கள் முன் வரை, வருடத்தில் ஒரு நாள், சில பெருமாள் கோயில்களில், ஒரு மரத்தூணை நட்டு, அதில் கோயிலில் உள்ள பெருமாளை ஆவாஹனம் செய்து, ப்ரமாதமாக அமுதுபடி செய்வித்து வணங்கி வருகிறார்கள்.

    3. திருநெல்வேலி அருகில் ஒரு ஊர். பெயர் சரியாகத் தெரியவில்லை. இன்றளவும், அங்கே மலை மேல் உள்ள மரத்தையே திருவேங்கடமுடையானாக வணங்கி வருகிறார்கள்.

    திருமதி ஷைலஜா,

    அருமையான சுட்டு. அவன் பரமன் என்னும்பொழுது அவனை எவ்வாறு ஒரு மதத்தில மட்டும் கட்டுப்படுத்த இயலும்?

    அடியேன்
    வேங்கடேஷ்

    ReplyDelete
  78. @கிருஷ்ணமூர்த்தி சார்
    //KRS ஐயா, உங்களுடைய முந்தைய பதிவுகளைப் படிச்ச போது, வேற மாதிரி அபிப்பிராயம் அல்லவா இருந்தது! நீங்களும் கையில அரை ப்ளேடை வச்சு, "கீசிடுவேன் கீசி"ன்னு இறங்கிட்டீங்களே?//

    ஹா ஹா ஹா!
    நானே என்னை இப்படிப் பார்த்ததில்லை சார்! இது புதிய அவதாரம்! :)

    பந்தலைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்குத் தெரியும்! இது போன்ற தொல்லைகள் அப்பப்போ வந்து கொடுப்பார்கள்! சில சமயம் பேர் சொல்லியே கூட!

    அப்போதெல்லாம் புரிய வைக்கணுமே-ன்னு அடியேன், அடியேன்னு விளக்கம் தான் கொடுப்பேன்! ஆனால் அது வேலைக்கு ஆகாது போல! பாம்பு-ன்னா கொத்தலைன்னாலும் அப்பப்போ சீறினால் தான் ஒரு தார்மீக ஒழுங்கு கிடைக்கிறது!

    இது, இனி இவ்வாறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மட்டுமே! சாது மிரண்டால் என்னவாகும்-ன்னு இப்போ தெரிஞ்சிக்கிட்டு இருப்பாய்ங்க! :)

    ReplyDelete
  79. @வேங்கடேஷ்
    //கடைசியாக பல்லக்கின் அருகில், "இளிச்ச" வாயுடன் இருக்கும் உருவம்தான் அடியேனுடையது. :-)
    http://www.pbase.com/svami/image/111585367
    //

    ஹா ஹா ஹா
    கண்டோம்! கண்டோம்! கண்டோம்!
    கண்ணுக்கு இனியன கண்டோம்!

    மக்களே வேங்கடேஷை எல்லாரும் பார்த்தீங்களா? பார்த்தனைச் சுமந்தவனையே சுமப்பதில் என்ன ஒரு கம்பீரம்! முகமலர்ச்சி! சூப்பர்! :)

    பல மரப் பிரபுக்களை எடுத்துக் கொடுத்தமைக்கும் நன்றி வேங்கடேஷ்!

    BTW, புகைப்படம் பார்த்த பிறகு பார்த்தால், அடியேன் உங்களை விடச் சின்னப் பையன் தான்! :)
    அதனால் இனி சார் விளிப்பு வேண்டாம்! சும்மா பேரிட்டே கூப்புடுங்க! :)

    ReplyDelete
  80. @ஷைலஜா-க்கா
    //அன்பின் வாயிலாகவும் வழிபாட்டின் வாயிலாகவும் பரமனைப்பெறுவதற்கு வழி இது ஒன்றுதான்!//

    //பிற நெறிகளை வெறுத்து அவற்றைச்சேர்ந்த வர்களை வருத்துவது என்பது தங்கள் நெறியின் ஓர் அங்கம் என்று சிலர் அறியாமையினால் கருதுகின்றனர்//

    நச்!
    சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல்-ன்னு சொன்னீங்க-க்கா!

    Adding one more point to this!
    The root cause for all this hatred is very simple = Pride & Prejudice!

    மற்ற சம்பிரதாயங்களின் நல்லனவைகள் தம்மை விட ஒரு படி அடங்கியே இருக்க வேண்டும் என்ற அடி மன எண்ணம் தான் இத்தனைக்கும் காரணம்!

    இவர்களும் பிற சம்பிரதாயங்களை வெறுப்பவர்கள் அல்லர்!
    ஆனால் பிற சம்பிரதாயங்களின் மேம்பட்ட நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும் போது, அது தான் இவர்களுக்கு கோபம் கொள்ள வைக்கிறது!

    நாமும் அது போல் ஆக்கங்களைக் கை கொள்வோம் என்ற எண்ணம் வராமல், ஏன் அதை மட்டும் இப்பிடி "மாய்ஞ்சி மாய்ஞ்சி" பிரஸ்தாபிக்கிறாய்? என்ற ஒரு வித ஏதேச்சாதிகாரம்!

    அன்றிலிருந்து இன்று வரை...
    சமயங்கள் என்றுமே ஒற்றுமை கொண்டவை தான்!
    (எவ்வளவு படித்திருந்தாலும்) ஆட்களின் ஆட்டம் தான் அதிகமோ அதிகம்!

    நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
    உண்மை அறிவே மிகும்!

    அழுக்காறு உடையான் கண் ஆக்கம் போன்று இல்லை
    ஒழுக்கம் இலான் கண் உயர்வு!

    ReplyDelete
  81. திரு கண்ணபிரான்,

    ஹா ஹா ஹா. நன்றாக மிகைப் படுத்திவிட்டீர்கள். அந்த சிரிப்பின் பின் ஒருவரின் comment இருந்தது. புகைப்படம் எடுக்கவிருக்கும் தருணத்தில், கோயில் மணியகாரர், " அதோ பார்டா, Photo எடுக்கறான்னவுடனே வேங்கடேஷ், தண்டுல தோள ஒட்டிட்டான்". அடியேன் சிரித்து பிறர் சிரிப்பதற்குள் புகைப்படமும் எடுக்கப்பட்டுவிட்டது.

    இருப்பினும், ஒருவகையில் அவன் அருளால் அவனை எழுந்தருளப் பண்ணுவதில் ஒரு உவகையே.


    //BTW, புகைப்படம் பார்த்த பிறகு பார்த்தால், அடியேன் உங்களை விடச் சின்னப் பையன் தான்! :)
    அதனால் இனி சார் விளிப்பு வேண்டாம்! சும்மா பேரிட்டே கூப்புடுங்க! :)//

    அடியேன் தங்களைவிட சற்று வயதானவன்,என்று தங்கள் புகைப்படத்தைப் பார்த்தவுடனேயே அறிந்துகொண்டேன். இங்கு "மரியாதை" வார்த்தைகள், வயதைக் கொண்டு அல்ல, விஷயபூர்த்தியை வைத்து.

    இருப்பினும், ஒருமையில் அழைப்பது ஒருவித நெருக்கத்தைக் காட்டுவதால், (அதனால் தானே இறைவனை அவன் இவன் என்று கூறுகிறோம்!!) அடியேன் அவ்வாறே அழைக்கிறேன்.

    அடியேனையும் அவ்வாறே பெயரிட்டழைக்குமாறு விண்ணப்பிக்கிறேன்.

    அடியேன்
    வேங்கடேஷ்

    ReplyDelete
  82. நேற்றுதான் நண்பனுடைய ஊர் ஆற்காடு மாவட்டத்ததில் உள்ள சக்கரமல்லுர் (திரு சக்கர அமுதூர் ) கிராமத்தில் உள்ள அருள்மிகு சுந்தரவல்லி தாயார் சமேத வெகு சுந்தர்ராஜ பெருமாளின் பிரமோற்ச்சவத்தில் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவையை பார்த்துட்டு வந்தா இங்கையும் கருட சேவை ரொம்ப நிறைவா இருக்கு கண்ணன், மேலும் இதுவரை பெருமாளை தரிசனம் செய்து கொண்டுளேனே தவிர ஏழ பண்ணிணது இல்லை, கடந்த மூன்று நாளா பெருமாளை ஏழ பண்ணி சாமியை திரும்ப நிலைக்கு கொண்டு வரும் வரை உடன் இருந்து சாமியை தோள்ள தூக்கி வரும் போது உடம்பு வலிச்சது ஆனா கோவிந்தா சொல்லும் போது மனசெல்லாம் நிறைஞ்சு போச்சு கண்ணன், அதை இப்போ நினைச்சாலும் சந்தோசத்துல தொண்டை அடைக்குது கண்ணன், இங்கையும் கருட சேவைனதும் திரும்பவும் தொண்டை அடைக்குது.....................

    ReplyDelete
  83. மக்களுக்கு ஒரு அறிவிப்பு:

    இங்கு குழப்பம் செய்த அனானி யார் என்று கண்டுபிடித்தாகி விட்டது!
    I sent the web logs to Kumaran and based on he IP address, service provider & City (Bangalore), we were able to squarely identify, who this anony is!

    அடுத்த முறையும் இப்படியே தனிப்பட்ட தாக்குதலில் இறங்கினால், அன்னார் யார் என்று weblogஐ அப்படியே பொதுவில் வைக்க நேரிடும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

    படித்தவர், ஆன்மிகமும் ஆர்வம் கொண்டவர் - அவருக்கு இதெல்லாம் தேவையா? தன்னிலை அறிந்து இதைத் தவிர்ப்பதே அன்னாருக்கு நன்மை பயக்கும்!

    மாற்றுக் கருத்தைத் தாராளமாகச் சொல்லலாம்! அது இராமானுசரைப் பற்றியே ஆனாலும் என் பதிவில் தாராளமாகச் சொல்லலாம்! கருத்து வேறுபாட்டுக்கெல்லாம் கோபித்துக் கொள்ளும் பழக்கம் என்னிடம் இல்லை!

    ஆனால் தனிப்பட்ட முறையில் பிறரை "ஜால்ரா" என்றெல்லாம் சொல்லி உரையாடுவதைத் தவிர்க்கவும்! இத்தனைக்கும் இங்கு பின்னூட்ட மட்டுறுத்தல் கூட இல்லை! அதை உணர்ந்து செயல்படுங்கள் அனானியாரே!

    ReplyDelete
  84. //Mani Pandi said...
    நேற்றுதான் நண்பனுடைய ஊர் ஆற்காடு மாவட்டத்ததில் உள்ள சக்கரமல்லுர் (திரு சக்கர அமுதூர் ) கிராமத்தில் உள்ள அருள்மிகு சுந்தரவல்லி தாயார் சமேத வெகு சுந்தர்ராஜ பெருமாளின் பிரமோற்ச்சவத்தில் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவையை பார்த்துட்டு வந்தா இங்கையும் கருட சேவை ரொம்ப நிறைவா இருக்கு கண்ணன்//

    ஆகா! வாங்க மணிபாண்டி-ண்ணே!நம்மூரு பக்கம் தான்!ராணிப்பேட்டை கிட்டக்க தானே சக்கரமல்லூர்? லாடாவரம் இன்னும் கிட்டக்க!

    //கடந்த மூன்று நாளா பெருமாளை ஏழ பண்ணி சாமியை திரும்ப நிலைக்கு கொண்டு வரும் வரை உடன் இருந்து சாமியை தோள்ள தூக்கி வரும் போது உடம்பு வலிச்சது ஆனா கோவிந்தா சொல்லும் போது மனசெல்லாம் நிறைஞ்சு போச்சு//

    ஆகா! கைங்கர்யத்தின் உவகையே அது தான்! இன்னிக்கி பந்தலில் ஒரே ஸ்ரீபாதம் தாங்கிகளா இருக்காங்க! ராகவ், வேங்கடேஷ், நீங்க, அடியேன்! :)
    பல்லாண்டும் பரமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே!

    ReplyDelete
  85. This comment has been removed by the author.

    ReplyDelete
  86. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    மக்களுக்கு ஒரு அறிவிப்பு:

    இங்கு குழப்பம் செய்த அனானி யார் என்று கண்டுபிடித்தாகி விட்டது!I>>>

    அப்படியா? கண்டிபிடித்தும் அவர் பெயரைப்போடாமல் விட்ட உங்க பெருந்தன்மை பாராட்டத்தக்கது.

    sent the web logs to Kumaran and based on he IP address, service provider & City (Bangalore), we were able to squarely identify, who this anony is!>>>\\\\

    who is the black sheep Ravi?






    ]]அடுத்த முறையும் இப்படியே தனிப்பட்ட தாக்குதலில் இறங்கினால், அன்னார் யார் என்று weblogஐ அப்படியே பொதுவில் வைக்க நேரிடும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

    படித்தவர், ஆன்மிகமும் ஆர்வம் கொண்டவர் - அவருக்கு இதெல்லாம் தேவையா? தன்னிலை அறிந்து இதைத் தவிர்ப்பதே அன்னாருக்கு நன்மை பயக்கும்!

    மாற்றுக் கருத்தைத் தாராளமாகச் சொல்லலாம்! அது இராமானுசரைப் பற்றியே ஆனாலும் என் பதிவில் தாராளமாகச் சொல்லலாம்! கருத்து வேறுபாட்டுக்கெல்லாம் கோபித்துக் கொள்ளும் பழக்கம் என்னிடம் இல்லை!

    ஆனால் தனிப்பட்ட முறையில் பிறரை "ஜால்ரா" என்றெல்லாம் சொல்லி உரையாடுவதைத் தவிர்க்கவும்! இத்தனைக்கும் இங்கு பின்னூட்ட மட்டுறுத்தல் கூட இல்லை! அதை உணர்ந்து செயல்படுங்கள் அனானியாரே!

    >>>><<>>>////

    ஜால்ராக்கெல்லாம் கவலைப்படல ரவி. பெரும்பூதூர் மாமுனியை அரங்கனின் அன்புக்கு உடையவரை தராதரமில்லாமல் பேசினால் சும்மா இருப்போம்னு நினச்சிட்டாரே சுனாமியா வீசி அடிப்போம்னு எச்சரிப்போம்.

    ஷைலஜா


    6:45 AM, May 04, 2009

    ReplyDelete
  87. //
    who is the black sheep Ravi?
    //

    baa baa black sheep have you any comments?

    No sir No sir no more comments :)

    ReplyDelete
  88. daiii KRS!Be careful..why are you always writing long winded posts?Dont ya know that I am too busy to read it?Next time write short or I will hack you blogger id and delete all your posts

    ReplyDelete
  89. //Anonymous said...
    baa baa black sheep have you any comments?
    No sir No sir no more comments :)//

    ஹிஹி!
    வாம்மா கண்ணு! அண்ணன் பதிவில் அனானி விளையாடி ஓய்ஞ்ச பிறகு இப்போ நீயா? :)

    //daiii KRS!Be careful..//

    டாய்-ன்னு கூப்பிட்டாச்சா? சந்தோஷமா?? :)

    //Next time write short or I will hack you blogger id and delete all your posts
    //
    இதை நீ ராகவன் கிட்ட தான் சொல்லணும்! என் பதிவை எழுதித் தரது எல்லாம் அவரு தான்! :)

    ReplyDelete
  90. //ஹிஹி!
    வாம்மா கண்ணு! அண்ணன் பதிவில் அனானி விளையாடி ஓய்ஞ்ச பிறகு இப்போ நீயா? :)//


    Neega thaane en blog la vanthu ippadi ellam comment podunu idea koduthinga?ippo onnume theriyatha mathiri acting??

    //டாய்-ன்னு கூப்பிட்டாச்சா? சந்தோஷமா?? :)//

    athu everyday kopidurathuthaane ;)
    Naan kopidalaina veru yaaru kopiduvaa ;)?


    ////
    இதை நீ ராகவன் கிட்ட தான் சொல்லணும்! என் பதிவை எழுதித் தரது எல்லாம் அவரு தான்! :)//

    i know ur evil plans.u want everyone to attack ragava instead of u right?I will be there to protect him!

    ReplyDelete
  91. //Anonymous said...
    Neega thaane en blog la vanthu ippadi ellam comment podunu idea koduthinga?ippo onnume theriyatha mathiri acting??//

    :)
    Ithukku naan enna chollattum sis?

    //athu everyday kopidurathuthaane ;)
    Naan kopidalaina veru yaaru kopiduvaa ;)?//

    Nanbanum koopduvaan! :)

    //i know ur evil plans.u want everyone to attack ragava instead of u right?//

    no way! ellarum supoort thaane panraanga! neeye paatha la? :)

    //I will be there to protect him!//

    hmmmm...ennai protect panna maatiya? naan avlo thaana? enakku orphanage thaana? :((

    ReplyDelete
  92. //hmmmm...ennai protect panna maatiya? naan avlo thaana? enakku orphanage thaana? :((//

    hehe.athaan ithanai peru supportku varangale :D
    pinna naan ethuku?

    ReplyDelete
  93. //no way! ellarum supoort thaane panraanga! neeye paatha la? :)//

    avanga support pannurathuku yean vanthanga nu flash back la kaatanuma?

    ReplyDelete
  94. This comment has been removed by the author.

    ReplyDelete
  95. This comment has been removed by the author.

    ReplyDelete
  96. //
    Nanbanum koopduvaan! :)//

    hehe gf kuda koopiduvangale anna :D?

    ReplyDelete
  97. //Anonymous said...
    hehe gf kuda koopiduvangale anna :D?//

    he he...gf ethu kooptaalum ok :)
    cheri, neeya comment podara, neeya delete pannra, enna thiruvilayaadal going on? :)

    ReplyDelete
  98. 100.!
    .சதமடிச்சி நிறுத்திட்டு நரசிம்ம அவதாரம் எடுங்க பதிவரே! வருகிறது
    சுவாதி நட்சத்திரம்!

    ReplyDelete
  99. //
    he he...gf ethu kooptaalum ok :)
    cheri, neeya comment podara, neeya delete pannra, enna thiruvilayaadal going on? :)//


    no la..just trying to reach 100 :P
    but Shailaja maami hit 100 :D

    next post podungo :D
    naane ellam anony comments poduren.ungala nalla thittanum nu aasaiya irruku..

    ReplyDelete
  100. Hi KRS... DO U REALLY KNOW" WHAT IS THE MEANING FOR "JAGATGURU"..JHA+AGHAT+ +GU+RU...SPECIALITY OF SANSKRIT IS ...EACH SANSKRIT WORD AS A UNIQUE MEANING....ASK SOME MAMA'S ABOUT THE REAL MEANING OF "JAGAT GURU"....
    The JAGAT GURU'S ARE "BUDDHA...JESUS...AND MOHAMMED"...I DON'T WANT TO DISCUSS ABOUT THEM...WHY THEY ARE CALLED JAGADGURU...THEIR GOSPELS...THERE WORDS ABOUT GOD....SPREAD THROUGHOUT THE WORLD...
    YOU WONDER HOW " BUDDHA IS A JAGAD GURU...HE SAID LOVE IS GOD....ANBEY SHIVAM...
    jesus said....NOT ONLY ME, ALL ARE SON OF GOD....REFER JOHNS CHAPTER...
    WHEN YOU READ BHAGAVAD GITA...IT SAYS.."ALL CAME IN FROM ME(all are sons and daughter of god) AND I AM FORM AND FORMLESS (allah),I RESIDE IN THE HEART WHICH IS FILLED WITH LOVE (BUDDHA)..

    MOHAMMED...SAID GOD IS FORMLESS AND PREACHED BROTHERHOOD...ARUVAI..URVAI PERUMANAY...

    They live for god,suffered for god and prayed to god....

    WHAT SANKARA AND RAMANUJA DID...SANKARA...THEY ARE DEVOTEES LIKE YOU AND ME....

    SO THEY ARE NOT "JAGAT GURUS....
    CALL THEM AS
    GURU..... PLEASE

    ReplyDelete
  101. //அப்பா டக்கர் அமீர்பர் said...
    Hi KRS... DO U REALLY KNOW" WHAT IS THE MEANING FOR "JAGATGURU"..JHA+AGHAT+ +GU+RU...SPECIALITY OF SANSKRIT IS ...EACH SANSKRIT WORD AS A UNIQUE MEANING....ASK SOME MAMA'S ABOUT THE REAL MEANING OF "JAGAT GURU"....//

    ஹிஹி! உங்க அளவுக்கு ஜகத்குரு-ன்னு என்னான்னு தெரியாதுங்கோ!
    ஜகத்குரு = உலகாசான்!
    உலகம் = மக்கள்!
    உலக மக்களுக்கு ஆசான் = ஜகத் குரு!

    கு+ரு ன்னு எல்லாம் பண்டிதர்கள் போல பிரிக்கலாம்! பிரிக்கட்டுமா?
    கு-சப்த அந்தகாரஸ்ய
    ரு-சப்த தந்நிரோதஹ
    அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுபவன் குரு!

    //The JAGAT GURU'S ARE "BUDDHA...JESUS...AND MOHAMMED"...I DON'T WANT TO DISCUSS ABOUT THEM...WHY THEY ARE CALLED JAGADGURU...THEIR GOSPELS...//

    Very true! They are "also" Jagad Gurus! No one denied that fact here!

    //WHAT SANKARA AND RAMANUJA DID...SANKARA...THEY ARE DEVOTEES LIKE YOU AND ME....//

    They lived for god's people, suffered for god's people and prayed for god's people...

    Sire...Pl understand...
    Jagath Guru is "For the people" and NOT "For the Lord"!

    Jagath does not mean world renowned...Everybody were serving only in their local areas at their times...
    But they really "served"!

    Sankara & Ramanuja are definitely "Jagath Gurus"! "Jagath Gurus"! "Jagath Gurus"!

    ReplyDelete
  102. From your words - u accepted shankara and ramanuja are not jagat gurus. THANK YOU FOR THAT..

    "ஹிஹி! உங்க அளவுக்கு ஜகத்குரு-ன்னு என்னான்னு தெரியாதுங்கோ!
    ஜகத்குரு = உலகாசான்!
    உலகம் = மக்கள்!
    உலக மக்களுக்கு ஆசான் = ஜகத் குரு"

    How many people in this world are following "your jagatgurus"..only few in Tamilnadu..but in case of JESUS AND MOHAMMED millions are following them...SANKARA IS GURU FOR BRAHMINS NOT FOR YOU, BRAHMINS CALL HIM AS JAGAT GURU BECAUSE THEY SPREAD THROUGHOUT THIS WORLD....

    You can call "ramanuja as jagat guru..bcoz are the only one among his follower, now in newyork...because u R in states..ramanuja became JAGADGURU...HE..HHE..

    கு+ரு ன்னு எல்லாம் பண்டிதர்கள் போல பிரிக்கலாம்! பிரிக்கட்டுமா?
    கு-சப்த அந்தகாரஸ்ய
    ரு-சப்த தந்நிரோதஹ
    அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுபவன் குரு!

    Pandit RAVISHANKARJI..LET YOUR "GURU" ENLIGHT WISDOM IN YOU" PLEASE PRAY FOR IT....

    Ask "ANONY BRAHMANA" to give u a "KALLAPOONAL".......
    //தராதரம் தெரியாமல் போகிறவன் வருபவனுக்கெல்லாம் பூனூல் போட்டு ஏத்தி விட்ட ராமானுஜரை பற்றி தானே மாய்ஞ்சி மாய்ஞ்சி..//

    ReplyDelete
  103. //அப்பா டக்கர் அமீர்பர் said...
    From your words - u accepted shankara and ramanuja are not jagat gurus. THANK YOU FOR THAT..//

    Mr. அப்பா டக்கர் அமீர்பர்
    Do u have selective amnesia? :)
    I said in the end..."Sankara & Ramanuja are definitely "Jagath Gurus"! "Jagath Gurus"! "Jagath Gurus"!"

    //Ask "ANONY BRAHMANA" to give u a "KALLAPOONAL".......//

    I dont need one :)
    If you are in need, you could directly ask him! :)

    //You can call "ramanuja as jagat guru..bcoz are the only one among his follower, now in newyork...because u R in states..ramanuja became JAGADGURU...HE..HHE..//

    நல்லாச் சிரிக்கிறீங்களே? எப்படிங்க இம்புட்டு அறிவாளித்தனமா பேச முடியுது? எல்லாம் நீங்க பெற்ற ஞானம் தான் போல! :)

    //How many people in this world are following "your jagatgurus"..only few in Tamilnadu..but in case of JESUS AND MOHAMMED millions are following them...//

    ஓ...ஆட்கள் எண்ணிக்கையை வச்சித் தான் இந்த அரசியல் விளையாட்டா?

    புத்த பகவான், இயேசு நாதர் இவர்களும் ஜகத்குரு என்று தான் சொல்லி இருந்தேன்! ஆனால் அதை நீங்களே மறுத்துடுவீங்க போல இருக்கே! :)

    புத்தரும், இயேசு பிரானும், தாங்கள் வாழ்ந்த காலத்தில் உலகெங்கும் பரவி ஞானம் அளிக்கவில்லை! அவர்கள் இருந்த ஊருக்கு மட்டும் தான் அவர்கள் எல்லை இருந்தது! அப்புறம் எப்படி அவர்கள் "ஜகத்" குரு ஆவார்கள் என்று கேட்கும் உங்கள் லாஜிக்-கை நினைச்சி சிரிப்பு தான் வருது!

    எத்தனை உலக மக்கள் வள்ளுவரை ஃபாலோ பண்ணுறாங்க? அதனால
    வள்ளுவரர் உலகாசான் இல்லை-ன்னு ஆயிருமா?

    ஜகத்=உலகம்
    உலகம் என்பது உயர்ந்தோர் மற்றே!-ன்னு தமிழ் மறைமொழி!
    ஜகத் குரு = உலகாசான்! உயர்ந்தோர் மற்றே-ன்னு உயரச் செய்பவர் ஜகத் குரு! மறைந்த பின்னரும் மறையாது உயரச் செய்பவர் ஜகத் குரு!

    இத்தனை ஆளுங்க, இத்தனை கோயில்/கட்டடம் என்பதையெல்லாம் வச்சி ஜகத்குரு இல்லை! உலகத்துக்கு என்றும் எடுத்துக்காட்டாக இருப்பவர் ஜகத்குரு!

    உலகப் பிரசத்தி, ஜகத் பிரசத்தி பெற்றவர்கள் தான் ஜகத்குரு-ன்னு, ஹிட்லரைக் கூட ஜகத்குரு-ன்னு சொல்லீறலாம்! :)
    மக்களை உலகத்துக்குப் பயன்படும் வண்ணம் வாழத் தொண்டு புரிந்தவர்கள் உலகாசான், ஜகத்குரு!

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்!

    உலகாசான்களின் பெருமையை அவர்கள் மறைமொழியே காட்டி விடுது!
    உங்களின் "பெருமையை" உங்க லூசுத்தனமான வாய்மொழியே காட்டி விடுது! :))

    மொதல்ல நல்ல தமிழில், ஆங்கிலத்தில் எழுத முடியுதா-ன்னு பாருங்க! அப்பாலிக்கா உங்க ஜகத்குரு ஆராய்ச்சியை வச்சிக்கலாம்! உங்களின் அடுத்த பின்னூட்டத்தை மட்டுறுத்துவேன்!

    ReplyDelete
  104. //மொதல்ல நல்ல தமிழில், ஆங்கிலத்தில் எழுத முடியுதா-ன்னு பாருங்க! அப்பாலிக்கா உங்க ஜகத்குரு ஆராய்ச்சியை வச்சிக்கலாம்! உங்களின் அடுத்த பின்னூட்டத்தை மட்டுறுத்துவேன்!/


    :))

    ReplyDelete
  105. காரசாரமான விவாதம், அனானியின் திருவிளையாடல் இப்பதான் பார்த்தேன்.

    பாவம் தராதரத்தையும் பூணூலில் முடிய முயற்சி செய்து இழிந்து போய்விட்டார்.

    அப்படி தராதரம் இல்லாமல் பூணூல் போட்டுக்கிட்டவங்க தானே இப்ப நாங்க தான் அக்மார்க் வெண்ணை என்கிறார்கள். அந்த எண்ணிக்கையும் இல்லை என்றால் இன்றைக்கு பார்பனர்களை விரல் விட்டே எண்ணிவிடலாம். எண்ணிக்கைக்காவது மகிழ்ந்திருக்கலாம். வைணவ பார்பனர்களாக மாறிய அவர்கள் மீது அனானிக்கு என்ன வெறுப்போ தெரியல. ஹிட்லரை நம்மவா என்று சொல்லும் போது பூணூல் போட்டுக் கொண்டவர்களை நம்மவாக நினைப்பதை தடுப்பது எது ? தோலின் நிறமா ? - அந்தோ பரிதாபம்.

    *****

    கேஆர்எஸ்,

    ஆன்மிகப் பயிரின் நடுநடுவே இருக்கும் களைகளை பிடுங்க முடியும் என்று நம்புகிறீர்கள். அப்படி பிடிங்கினாலும் ஒன்றிரண்டு தப்பி தப்பி வளரும், அவற்றை மருந்திட்டு அழிப்பதே நல்லது என்கிறார்கள் நாத்திகர்கள்.

    எவ்வளவு தான் அழித்தாலும் களைகள் தான்தோன்றிகள் அவற்றை முற்றிலும் அழிக்க முடியாது என்பதே காலம் காலமாக பார்த்துவரும் வரலாற்று உண்மை.

    ReplyDelete
  106. //கோவி.கண்ணன் said...
    ஹிட்லரை நம்மவா என்று சொல்லும் போது பூணூல் போட்டுக் கொண்டவர்களை நம்மவாக நினைப்பதை தடுப்பது எது ? தோலின் நிறமா ? - அந்தோ பரிதாபம்//

    :))

    வைணவத்தில் துறவிகளுக்கு கூட பூணூல் உண்டு!
    அது திருவாராதனம் செய்வதற்கு உண்டான ஒரு படி! அவ்வளவு தான்! அதனால் ஒரு இம்மி கூட கூடுதலான உயர்ச்சியோ/தாழ்ச்சியோ இல்லை!

    ஆனால் அதை உயர்ச்சியின் அடையாளமாகக் கருதி ஒரு சிலர் ஆட முற்பட்ட போது, அதற்கு செக் வைத்தார் இராமானுசர்! தகுதி வளர்த்து கொள்ளாமல், சும்மானா பரம்பரை பரம்பரையாக உரிமை கொண்டாடிய போது, அதற்கு செக் வைத்தார் இராமானுசர்!

    திருவாராதானம் மனித குலத்தில் யார் வேண்டுமானாலும் செய்யலாமே! முறையாகத் தெரிந்து, பயின்று வரும் யார் வேண்டுமானாலும் செய்யலாமே!
    அதனால் பரம்பரை பரம்பரையாக மட்டும் இல்லாது, பல பேரைப் பயிற்றுவித்து, யார் தகுதி வளர்த்துக் கொண்டார்களோ, அவர்களுக்கும் அதை அணிவித்து ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டினார்.

    கல்வி தராமல் தாழ்த்தப் பட்டவர்களுக்கு கல்வி தருவது போல, திருவாராதனம் தராமல் தாழ்த்தப் பட்டவர்களுக்கு அதைத் தர ஏற்பாடு செய்தார்! பயின்று வந்தார்க்கு பட்டம் தருவது போலத் தான் பூணூல்!

    இன்றைய அறிவியல் காலத்தில் செய்தாலே அது தலைப்புச் செய்தி ஆகிறது! பதிவுகள் பறக்கிறது! ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு?

    கட்டாவாக வருணாச்சிரம தர்மம் இருந்த போது? அக்ரகாரங்கள் எல்லாம் அப்படி ஒரு கட்டுப்பாட்டில் இருந்த போது? - இதைச் செய்ய முடிந்தது என்றால்...?

    இதற்கு உயிர்கள் மீது இருந்த "கருணையே" காரணம்! அதனால் தான் "காரேய்க் கருணை" இராமானுசா என்றும், அஸ்மத் குருர் "தயை"க சிந்தோ என்றும் அவரைப் பாடி வைத்தார்கள்!

    "வைகுந்தத்திலேயே அவர்களை விலக்காத போது...வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே...என்று சாஸ்திரம் இருக்கும் போது, கோயிலில் மட்டும் எப்படி அவர்களை விலக்க முடியும்?" என்று எதிர்க் கேள்வி கேட்டு, அத்தனை பேரையும் திகைக்க வைத்தார்!

    இதற்காக, திருவரங்க ஆலய ஆகமத்தையே, ஸ்ட்ரிக்ட்டான வைகானசத்தில் இருந்து எளிமையான பாஞ்சராத்திரம் என்னும் முறைக்கு மாற்றி அமைத்தார்!

    இதனால் பல எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டாலும்,அசைந்து கொடுப்பதாயில்லை! அவர் உயிருக்கே உலை வைக்க நடந்த சம்பவங்களும் உண்டு!

    இறைப் பணியில் "அனைவரையும்" ஈடுபடுத்த அவர் செய்த தொண்டுகள், பெரியாருக்கே முன்னோடியாய் இருந்தது!
    பெரியார் வெளியில் இருந்து எதிர்த்துக் கொண்டு செய்தார்!
    இவர் உள்ளில் இருந்தே அரவணைத்துச் செய்தார்!
    - அது தான் வித்தியாசம்!

    இறைப் பணியில் பிற சாதியினர் பூணூல் போட்டது இப்படித் தான் ஆரம்பம் ஆனது!
    பூணூல் போடாமல், வெளிக் கைங்கர்யங்கள் மட்டுமே செய்த பிற சாதியினரையும் "சார்த்தாத முதலிகள்" என்று கோயில் பணிக்குள் கொண்டு வந்தார்!

    திருவாராதனம் செய்யத் தான் பூணூல், சாதிக்காக இல்லை என்பது கொஞ்சம் நடைமுறைக்கு வந்தது!

    அதனால் தான், இப்படி வந்த ஆலய அர்ச்சகர்களை, ஒரு சில மேலாதிக்க மனப்பான்மையினர் "தம்மவராக" கருதுவதில்லை! ஆனால் என்ன செய்வது? இப்படி வந்த அர்ச்சகர்களைக் கோயில் பணியில் இருந்து விரட்டியடிக்கவும் முடியாதே! இராமானுச கோயில் ஒழுகு சட்டங்கள் சாசனம் போல் ஆகி விட்டதே! - இந்த "எரிச்சல்" ஒரு சிலருக்கு இன்றும் உண்டு! (அவர்கள் படித்தவர்களாகவே இருந்தாலும்)! இந்த "எரிச்சல்" அவ்வப்போது வெளிப்படும்! :))))

    ReplyDelete
  107. @கோவி அண்ணா
    //ஆன்மிகப் பயிரின் நடுநடுவே இருக்கும் களைகளை பிடுங்க முடியும் என்று நம்புகிறீர்கள். அப்படி பிடிங்கினாலும் ஒன்றிரண்டு தப்பி தப்பி வளரும், அவற்றை மருந்திட்டு அழிப்பதே நல்லது என்கிறார்கள் நாத்திகர்கள்//

    ஹிஹி!
    இந்தக் காலத்தில் கெமிக்கல் மருந்துகளை விட Organic Farming தான் சிறந்தது-ன்னு ஆராய்ந்து முடிவுக்கே வந்துட்டாங்க! ஸோ, நாத்திகர்களும் தங்கள் முடிவை மாத்திக்கறது நல்லது! :))

    அரசாங்க சட்டம் போட்டும் அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் திண்டாட வேண்டி இருக்கு இந்தக் காலத்திலும்! ஆனால் அன்றே, எந்த அரசாங்கச் சட்டமும் இன்றி எப்படி இதைச் சாதிக்க முடிந்தது-ன்னு யோசிச்சிப் பாருங்க!

    சட்டங்கள் போட்டும் தமிழ் அர்ச்சனை நடக்கிறதா?
    எந்த மாற்றமும் வெளியில் இருந்து தூண்டினாலும், உள்ளில் இருந்து தான் வர வேணும்!
    அப்போ தான் அது நீண்ட காலம் நிலைத்து நிற்கும்!

    இராமானுசரின் சட்டம்=அடியவர் கைங்கர்யம்
    இராமானுசரின் ஆயுதம்=கடல் போல் கருணை
    இராமானுசரின் உத்தி=பரந்துபட்ட நிர்வாகம்!

    ReplyDelete
  108. //திருநெல்வேலி அருகில் ஒரு ஊர். பெயர் சரியாகத் தெரியவில்லை. இன்றளவும், அங்கே மலை மேல் உள்ள மரத்தையே திருவேங்கடமுடையானாக வணங்கி வருகிறார்கள்.//

    கருங்குளம்

    தேவ்

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP