புதிரா? புனிதமா?? - மதுரை மீனாட்சி!
அன்னையின் குடமுழுக்கு அமைதியாக, அதே சமயம், எளிமையாக நடந்தேறியது குறித்து மகிழ்ச்சி! பன்னிரண்டு ஆண்டுக்கொருமுறை குடமுழுக்கு என்பது வீண் ஆடம்பரச் செலவு அன்று! வாழும் வீட்டின் மராமத்துப் பணி போலத் தான் இதுவும்!
கலைச் செல்வங்களைத் தொல்பொருள் நோக்கில் மட்டுமல்லாது, ஆன்மீக உயிர்ப்பு என்னும் நோக்கத்திலும் சேர்த்தே காப்பதற்கு குடமுழுக்கு மிகவும் உதவும்! 22 ஆண்டுகளாக இல்லாமல் இருக்கும் சைவத் தலைநகராம் தில்லையிலும் இதே போல் விரைவில் நடந்தேற வேண்டுவோம்!
கும்பாபிஷேகப் படங்கள் தான் இணையம்/பத்திரிகைத் தளங்களில் கூடச் சரியாகக் கிடைக்கவில்லை!
பேசாமல் பெரும் ஆலயங்கள் தாமே ஒரு வலைப்பூ துவங்கினால் என்ன?
உத்திரப்பிரதேச தேர்தல் அலுவலர் ஒருத்தரு இப்படித் துவங்கி, பெரும் வெற்றி கண்டுள்ளார். உடனுக்குடன் தன் பணியாளர்களையும் பொதுமக்களையும் கலந்து பேச முடிகிறது!
இதுக்கு மணி கட்டும் முகமாக, அடியேன் திருக்கோவிலூர் ஜீயர் மற்றும் குன்றக்குடி அடிகளாரிடம் தொடர்பு கொள்ள முயல்கிறேன்!
வெற்றியாளர்கள்:
1. குமரன்
2. முகிலரசி தமிழரசன்
3. ஸ்ரீதர் நாராயணன்
வென்றவர்கள், உடன் நின்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
பரிசு = எந்த மருதைக்காரரு-ப்பா ஸ்பான்சர்? உபயதாரர் யார்? :)))
கீதாம்மா, தாங்கள் அறிவித்தபடி, ஆயிரம் பொற்காசுகளை கேஆரெஸ்-க்கே வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் - நக்கீரர்! :)
வெற்றியாளர்களே! இந்தாரும்! பிடியும்! பரிசு! அடியவர் குழாங்களின் தலைவர், வெள்ளி நந்திகேஸ்வரர்!

(Added this actual picture of today's kumbabishekam. Thanks: Dinamalar)
![]() | ![]() |
மக்கள்ஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? புதிரா புனிதமா போட்டு ரொம்ப நாள் ஆச்சுது! மார்கழி மாசம் திருப்பாவை Crossword போட்டதோட சரி! ஆபீஸ்-ல ரெம்ப பொறுப்பு கூடிப் போச்சுங்க! பேசாம பந்தலை அவுட் சோர்ஸ் பண்ணீறலாமா-ன்னு பாக்குறேன்! Any Takers? :)
இன்னிக்கி ஸ்பெசல் தலைப்பு! = மதுரை மீனாட்சி!
பங்குனி உத்திரம், Apr-08, 2009, காலை 09:00-10:30 மணிக்கு, எங்க வீட்டுப் பொண்ணுக்கு திருக்குட முழுக்கு நடக்குதுல்ல? அதான் ஒரு ஜாலி! :-)

"எங்க வீட்டுப் பொண்ணா"? - யூ மீன் ஆண்டாள்?
ஹா ஹா ஹா! மீனாட்சியும் எங்கூட்டுப் பொண்ணு தாங்க!
என்ன...கோதை என்பவள் தோழி! அதுனால என்னாடீ-ன்னு செல்லமா "டீ" போட்டு கூப்புடுவேன்! ஆனா மீனாட்சியை அப்படியெல்லாம் மரியாதை இல்லாமக் கூப்பிட மனசு கேக்காதுங்க! நான் ரொம்ப மரியாதை தெரிஞ்ச பையன்! :)
என்ன இருந்தாலும், கோதைக்கே அக்கா மாதிரி (நாத்தனார்) மீனாட்சி! அதுனால நமக்கும் மீனாச்சி "அக்கா" தாங்கோ! :)
ரெண்டு பாண்டி நாட்டுப் பொண்ணுங்களும் பார்க்க அதே போலத் தான் இருப்பாங்க!
அதே கொண்டை! அதே தொங்கல் மாலை! அதே கிளி! அதே ஸ்டைலு! அதே கள்ளச் சிரிப்பு! :)
அப்போ, எப்படித் தான் வித்தியாசம் கண்டுபுடிக்கறதாம்?
* மீனாட்சி கையில் கிளி = வலக் கரத்தில் இருக்கும்! கோதை கையில் கிளி = இடக் கரத்தில் இருக்கும்!
ஏன்? காரணம் இருக்கு! மருதைக் காரவுக வந்து செப்பட்டும்! :)
* மீனாட்சி கரும் பச்சை! ஆண்டாள் பொன் சிகப்பி!
பச்சை மா மலை போல் மேனி! குடும்பக் கலரு அண்ணனுக்கும் தங்கச்சிக்கும்! :)
![]() | ![]() |
வாங்க ஆடுவோம், புதிரா புனிதமா!
மதுரை மீனாட்சி பத்தி, மதுரைக் காரவுகளுக்கே எம்புட்டு தெரியுது-ன்னு பாத்துருவோமா? :)))
தருமி சார் வேற வந்து "ம்ம்ம்ம், ம்ம்ம்ம்ம்" ன்னு உறுமிட்டுப் போயிருக்காரு, போன மீனாட்சி-Simple Pendulum பதிவுல! காப்பாத்துங்க மக்கா, காப்பாத்துங்க! :) விடைகள்: நாளை இரவு....நியூயார்க் நேரப் படி!
1 | அன்னை மீனாட்சி-க்கு பெற்றோர் வைத்த பெயர் என்ன? | 1 |
2 | மீனாட்சியைச் சொக்கநாதருக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் அண்ணன் யாரு? | 2 |
3 | மதுரை ஆயிரங்கால் மண்டபத்துக்கு எத்தனை கால்? :) | 3 |
4 | மதுரா விஜயம் = மதுரை மீனாட்சி ஆலயம் அன்னியர் கைகளுக்குள் சிக்கிச் சீரழிந்தது! ஏற்கனவே அகதி போலத் திரிந்து கொண்டிருந்த அரங்கன்-நம்பெருமாள் சிலையை முன்னே நிறுத்தி, போர் புரிந்து மதுரையை மீட்டதை இந்த நூல் சொல்லும்! | 4 |
5 | மீனாட்சியம்மன் கோயிலின் "உண்மையான" குளம் (தெப்பம் கண்டருளும் குளம்) எது? |
|
6 | மீனாட்சியம்மனைக் கல்வெட்டுகள் எந்தப் பெயரால் குறிக்கின்றன? | 6 |
7 | மீனாட்சியின் தந்தையார் பெயர் மலையத்துவச பாண்டியன்-ன்னு பலருக்கும் தெரிஞ்சிருக்கும்! அன்னையின் அன்னை பெயர் என்ன? | 7 |
8 | காந்தியடிகளின் அரிஜன-ஆலய நுழைவுப் போராட்டம்! அது தமிழ்நாட்டில் பின்னாளில் சட்டமாக்கப்பட்டது! சட்டமாக்கினாலும் உள்ளே நுழையும் போது எதிர் விளைவுகள் இருக்குமோ என்று பலரும் அஞ்சினர்! | 8 அ) தந்தை பெரியார்/ காமராசர் |
9 | திருஞான சம்பந்தருக்குப் பெரும் புகழும், வெற்றியும் ஏற்படுத்திக் கொடுத்தது-ன்னா அது மதுரை தான்! சிவன் கோயில் கொடிமரத்தில் பொதுவா விநாயகர்/முருகன் தான் இருப்பாங்க! | 9 |
10 | சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் மதுரையில் மட்டுமே நடந்தன! அதில் பிட்டுக்கு மண் சுமந்த கதை நம் எல்லாருக்கும் தெரியும்! | 10 |
கடைசியா ஒரு கேஆரெஸ் திருவிளையாடல்! பத்துக்கும் சரியான பதில் சொன்னாக் கூட, இந்த போனஸ் கேள்விக்கு மட்டும் நீங்க சரியான பதில் சொல்லலீன்னா, ஆள் மொத்தமாவே அவுட்டு! நோ சாய்ஸ்! பரமபத விளையாட்டு பாம்பு போல! என்ன ஓக்கேவா? :))
விறகு வெட்டியாக வந்து பாடும் சிவபெருமான், ஒரு வடநாட்டுப் பாடகனை, ராவோடு ராவாக மதுரையை விட்டே துரத்திய கதை பலருக்கும் தெரியும்!
* அந்த வடநாட்டுப் பாடகன் பெயர் என்ன? (பாலையா-ன்னு சொல்லக் கூடாது, சொல்லிப்பிட்டேன்) = ஹேமநாத பாகவதர்
* எந்த மதுரைக்கார பாடகருக்காக, அந்தப் பாடகரைத் துரத்தினார்? = பாணபத்திரர்
இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!
1 அ) மீனாட்சி ஆ) அங்கயற்கண்ணி இ) தடாதகை ஈ) மாதங்கி |
2 அ) கள்ளழகர் ஆ) கூடலழகர் இ) தல்லாக்குளம் பெருமாள் ஈ) பவளக்கனி வாய்ப் பெருமாள் |
3 அ) 985 ஆ) 1000 இ) 1004 ஈ) 996 |
4 அ) கோபண்ண உடையார்/ கம்பண்ண உடையார் ஆ) கோபண்ண உடையார்/ கங்கா தேவி இ) ஹரிஹரா/ புக்கா ஈ) கம்பண்ண உடையார்/ கங்கா தேவி |
5 அ) பொற்றாமரைக் குளம் ஆ) சொக்கிக் குளம் இ) வண்டியூர் மாரியம்மன் குளம் ஈ) வைகை ஆறு |
6 அ) தடாதகைப் பிராட்டியார் ஆ) திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சி இ) கோமகள் குமரித் துறையவள் ஈ) வழுதிமகள் மும்முலைப் பிராட்டி |
7 அ) பிரசுதி ஆ) மேனா இமவான் இ) மாதங்கி ஈ) காஞ்சனமாலை |
8 அ) தந்தை பெரியார்/ காமராசர் ஆ) பி.டி.ஆர்/ அறிஞர் அண்ணா இ) தந்தை பெரியார்/ இராஜாஜி ஈ) கக்கன்/இராஜாஜி |
9 அ) மேலூர் ஆ) திருவேடகம் இ) சமய நல்லூர் ஈ) அழகர் கோயில் |
10 அ) வரகுண பாண்டியன் ஆ) செண்பகப் பாண்டியன் இ) சுந்தர பாண்டியன் ஈ) அரிமர்த்தன பாண்டியன் |
11. வடநாட்டுப் பாடகர் = _____ மதுரைப் பாடகர் = _____
1.தடாதகைப் பிராட்டியார்
ReplyDelete2.பவளக்கனிவாய்ப் பெருமாள்
3.996
4.கம்பன்ன உடையார்- கங்கா தேவி
5.வண்டியூர் மாரியம்மன் குளம்
6.வழுதி மகள் மும்முலைப் பிராட்டி
7.காஞ்சனமாலை
8.கக்கன்/ராஜாஜி என்றாலும் மதுரை வக்கீல் திரு வைத்தியநாத ஐயர் தலைமையில் என்று இதை நேரில் கண்ட என்னோட அப்பா, பெரியப்பா, தாத்தாக்கள் சொல்லி இருக்காங்க. வைத்தியநாத ஐயர் தான் முன்னின்று நடத்தியதாகவும் கேள்வி.
9.திருவேடகம்
10.அரிமர்த்தன பாண்டியன்
இசை வாதில் போட்டிக்கு அழைத்த வடநாட்டுப் பாடகன் ஏமநாதன்(ஹேமநாதன்) பாணபத்திரனுக்காக ஈசனே வந்து பாட்டுப் பாடி பாடகனைத் துரத்தினார்.
அட,வழக்கமே இல்லையா, ஃபாலோ அப் கொடுக்க நினைச்சு மறந்துட்டேன், அதுக்காக இது! :))))))
ReplyDeleteவந்திட்டோம்ல :-)
ReplyDelete1. தடாதகை
2. பவளக் கனிவாய் பெருமாள்தான்
3. 985
4. கம்பண்ணர் / கங்கா தேவி
5. பொற்றாமரைக் குளம்
6. வழுதிமகள் மும்முலை பிராட்டி
7. காஞ்சனமாலை
8. கக்கன் / இராஜாஜி
9. சமயநல்லூர்
10. அரிமர்த்த பாண்டியன்
11. ஹேமந்த பாகவர் / பானபத்திரர்
கீதாம்மா...எ.கொ.இ! நான் பதிவே போடலை! அதுக்குள்ளாற எப்படி விடைகளைப் போட்டீங்க? :)
ReplyDelete3 & 6 தப்பு! மத்ததெல்லாம் சரி! குறிப்பா பரமபத பாம்புல எறங்காம தப்பிச்சீங்க! :)
= 8/10
1 ஆ. அங்கயற்கண்ணி
ReplyDelete2 ஆ) கூடலழகர்
3 அ) 985
5 இ) வண்டியூர் மாரியம்மன் குளம் ?
6 ஈ) வழுதிமகள் மும்முலைப் பிராட்டி?
7 ஈ) காஞ்சனமாலை
8 இ) தந்தை பெரியார்/ இராஜாஜி
9 ஆ) திருவேடகம்
10 ஈ) அரிமர்த்தன பாண்டியன்
11. வடநாட்டுப் பாடகர் =சோமநாத பாகவதர் மதுரைப் பாடகர் = பாணபத்திரர்
Vanakkam sir,
ReplyDeletesomanadha bhagavadhar and paanapathrar.ppanguni uthiram is a auspiciousday,Swamiramanujar saranagathi seitha dhinam. Ramanujar thiruvadigale saranam.
ARANGAN ARULVANAGA,
anbudan,
k.srinivasan.
ஃபட்டர்பிளை மேதை ஸ்ரீதர் அண்ணாச்சி! சொகமா இருக்கீயளா? :)
ReplyDeleteஆயிரங்கால் தூண் ஒவ்வொன்னா எண்ணிப் பாத்தீயளா என்ன? நெத்தியடி அடிச்சிருக்கீக! :)
ஆனா குளத்தில் கோட்டை விட்டுட்டீரு!
5,6,9 Thappu! Bonus Cheri!
= 7/10
985 தூண்கள். தப்பா எழுதிட்டேன். அவசரத்திலே. இப்போத் தான் கவனிச்சேன் மறுபடி!
ReplyDeleteம்ம்ம்ம்ம் மும்முலைப் பிராட்டி இல்லையா? அப்போ சரி,
தடாதகைப் பிராட்டினே வச்சுக்கலாம், ஆனால் இது சரியா இருக்கும்னு தோணலை! :)))))) மறந்துட்டேன், படிச்சிருக்கேன், காலை வாரிடுச்சு! :)))))))))
அறிவனும் ஆயிரங் காலைச் சரீயா எண்ணியிருக்காரு! :)
ReplyDelete1,2 thappu
4 no answer
6,8 thappu
=5/10
ஆனா போனஸ் கேள்வி பாதி தான் சரி! மொத அதைக் கரீட்டாச் சொல்லிட்டு, அப்பறமா மத்ததை அட்டெம்ப்ட் பண்ணுங்க! So 0/10 :))
ஆமாங்க ஸ்ரீநிவாசன் சார்! இன்னிக்கு பங்குனி உத்திரம், திருவரங்கத்தில் தாயார்-பெருமாள் சேர்த்தி சேவை தான்! அதான் தாயார் உடன் இருக்கும் இந்த நாளைச் சரியாத் தேர்ந்தெடுத்து உடையவரும் சரணாகதி கத்யம் (கத்ய த்ரயம்) பாடினார்!
ReplyDeleteஉங்க பின்னூட்டத்தில் போனஸ் கேள்விக்கு மட்டும் விடை சொல்லி இருக்கீக! அதான் பப்ளீஷ் பண்ண முடியலை! :))
கமெண்டு பெட்டி-ல ஏதோ மிஷ்டேக்கு! ஒவ்வொரு முறையும் பதிவின் ஆரம்பத்துக்கு கொண்டு போய் விடுது!
ReplyDeleteபழைய கமென்ட் பெட்டி ஈசியா, இது ஈசியா-ன்னு சொல்லுங்க மக்கா! அப்படியே மாத்திடறேன்!
கீதாம்மா
ReplyDeleteஇப்போ தூண் கணக்கு சரி! கண்ணை மூடிக்கிட்டு அம்பத்தூர்-ல இருந்தே எண்ணீங்களா? :)
கல்வெட்டு பேரு இப்பவும் தப்பு! எப்படி கல்வெட்டை நீங்க போயி மறக்கலாம்? eki! osi! eom!
=9/10
athan maranthu pokuthu :((((((( ninaivukku kondu vara try seyyaren.
ReplyDelete1, தடாதகை,
ReplyDelete2,கூடலழகர்
3,996
4,கம்பண்ணா/கங்கா தேவி
5,வண்டியூர்,
6,4
7,காஞ்சனமாலை
8,பி டி ராஜன்
9,மேலூர்
10,வரகுண பாண்டியன்(நினைக்கிறேன்)
:))
1 இ) தடாதகை 2 அ) கள்ளழகர் 3. அ) 985 4 ஈ) கம்பண்ண உடையார்/ கங்கா தேவி 5 ஆ) சொக்கிக் குளம் 6 ஈ) வழுதிமகள் மும்முலைப் பிராட்டி 7. ஈ) காஞ்சனமாலை 8. ஈ) கக்கன்/இராஜாஜி 9 அ) மேலூர் 10 ஆ) செண்பகப் பாண்டியன்
ReplyDelete11. வடநாட்டுப் பாடகர் =ஹேமநாத பாகவதர் _____ மதுரைப் பாடகர் = _____பாணபத்திரர்
பாணபத்திரர் சரியான விடையில்லையா??????
ReplyDeleteபோச்சுடா...
வாங்க வல்லீம்மா!
ReplyDelete1,4,5,7 cheriye! = 4 ans correct!
ஆனா பாம்பு கேள்விக்குப் பதில் சொன்னாத் தான் மார்க்கே போடப்படும்! :)
SK ஐயா வருக!
ReplyDelete2,5,6,9,10 thavaRu!
பாம்பு கேள்விக்குப் பதில் சரியே!
=5/10
கடைசி ரெண்டு கேள்வி உங்க ஐட்டமாச்சே SK! இன்னொரு கா ஆடுங்க! :)
@அறிவன்
ReplyDeleteமதுரைப் பாடகர் சரி தான்! வடநாட்டுப் பாடகர் தான் முதலெழுத்தில் மாத்தி, வேற ஏதோ சொல்லிட்டீங்க! :)
1. இ) தடாதகை
ReplyDelete2. ஈ) பவளக்கனி வாய்ப் பெருமாள்
3. அ) 985
4. ஈ) கம்பண்ண உடையார்/ கங்கா தேவி
5. இ) வண்டியூர் மாரியம்மன் குளம்
6. அ) தடாதகைப் பிராட்டியார்
7. ஈ) காஞ்சனமாலை
8. இ) தந்தை பெரியார்/ இராஜாஜி (இது பத்தி மாற்றுக் கருத்துக்கள் இருக்கே: http://periyaryouth.blogspot.com/2008/07/blog-post_23.html )
9. ஆ) திருவேடகம்
10. ஈ) அரிமர்த்தன பாண்டியன்
Bonus: ஹேமநாத பாகவதர், பாணபத்திரர்
பாம்பு கேள்விக்கு மட்டும் பதில் சொல்றேன். சரியான்னு சொல்லுங்க. அதைப் பொறுத்து மத்ததுக்கெல்லாம் பதிலை நாளைக்குச் சொல்ல முயல்றேன். :-)
ReplyDeleteமதுரைப்பாடகர்: பாணபத்திரர்
வடநாட்டுப் பாடகர்: சௌராஷ்ட்ர தேசஸ்தனான ஹேமநாத (ஏமநாத) பாகவதர்.
@குமரன்
ReplyDeleteபாம்புக் கேள்விக்கு விடை சரியே!
உம்...ஆரம்பிங்க அக்கவுண்ட்டை! :)
ஓ...வடநாட்டுப் பாடகர் "அந்த" தேசமா? உங்களுக்குத் தெரிஞ்ச ஆளு தான் போல! :)
கெபி அக்கா
ReplyDelete6,8 thappu-ka! bonus right
=8/10
8-ஆம் கேள்வியில் மாற்றுக் கருத்தே இல்லை! யார் முதலில் போனாங்க-ன்னு எல்லாம் கேட்கலை! அரசு உத்தரவு போட்ட பின்பு, அதை நிறைவேற்ற யார் போனாங்க என்பதே கேள்வி! ஸோ நோ கன்ஃபூயசன்! :)
10. ஈ) அரிமர்த்தன பாண்டியன்
ReplyDelete5.இ) வண்டியூர் மாரியம்மன் குளம்
6. அ) தடாதகைப் பிராட்டியார்
9.ஆ) திருவேடகம்
2. ஆ) கூடலழகர்
ஹேமநாத பாகவதர்?
ReplyDeleteதிருவிளையாடல் பார்த்துட்டுச் சொல்லவா:))
ReplyDelete1.இ) தடாதகை
ReplyDelete2.ஈ) பவளக்கனி வாய்ப் பெருமாள்
3.அ) 985
4.அ) கோபண்ண உடையார்/ கம்பண்ண உடையார்
5.இ) வண்டியூர் மாரியம்மன் குளம்
6.அ) தடாதகைப் பிராட்டியார்
7.ஈ) காஞ்சனமாலை
8.இ) தந்தை பெரியார்/ இராஜாஜி
9.) திருவேடகம்
10.சுந்தர பாண்டியன்
11.ஹேமநாத பாகவதர்
1.இ) தடாதகை
ReplyDelete2.ஈ) பவளக்கனி வாய்ப் பெருமாள்
3.அ) 985
4.அ) கோபண்ண உடையார்/ கம்பண்ண உடையார்
5.இ) வண்டியூர் மாரியம்மன் குளம்
6.அ) தடாதகைப் பிராட்டியார்
7.ஈ) காஞ்சனமாலை
8.இ) தந்தை பெரியார்/ இராஜாஜி
9.) திருவேடகம்
10.சுந்தர பாண்டியன்
11.ஹேமநாத பாகவதர்
still in a dilemma! so I give up, the other two names are???????? OK, count me out!
ReplyDelete1. ஆ. அங்கயற்கண்ணி
ReplyDelete2. ஆ. கூடலழகர்
3. அ. எட்டுக்கால் பூச்சிக்கு எத்தன கால்? 8 ஆனா,
ஆயிரங்கால் மண்டபத்துக்கு 985 கால்தான்.. ;((
4. ஈ. கம்பண்ணஉடையார்/ கங்காதேவி( துணைவியார், அவருக்கு)
5. இ.வண்டியூர் மாரியம்மன் குளம்
6. அ.(சத்தியமா என் பேரு இல்ல....) தடாதகைப் பிராட்டியார்
7. ஈ. அட நம்ம காதலிக்கநேரமில்லை முத்துராமன் சோடி..... காஞ்சன்; காஞ்சனமாலை
8. ஈ. கக்கன்/இராஜாஜி
இந்த பதில் எழுதும் போதுதான், 50, 60 வயசுல வர்ர பிரச்சனை எல்லாமே வந்துடுத்து..... ஒரே shivering, shivering...கை உதறல், தலை சுத்தல், high BP இன்னும் என்னென்னமோ..... சரியா தப்பா ன்னு தான் தெரியல ஒரே படப்படப்பா இருக்கு;(( தப்புன்னுதான் நினைக்கிறேன்... சொக்கா...!!! எனக்கில்ல, எனக்கில்ல..... ஒன்னே ஒன்னு, அதுக்குக் கூட பதில் தெரியாத மண்ணு.....
9. ஆ. திருவேங்கடம் என்னது திருவேங்கடமா??!!!
இப்படி ஒரு பதிலே இல்லயே... பதில் வந்து, திருவேடகம் (திரு+ஏடு+அகம்)
10. ஈ. அரிமர்த்தன பாண்டியன்
11. bonus:
வடநாட்டுக்காரவுகப் பேரு - ஹேமலதா ச்ச ச்ச இல்ல இல்ல.... ஹேமநாதர்ர்ர்....
மதுரக்காரவுகப் பேரு - பாணபத்ர ஓணாண்டி....
சாரி கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்... வெறும் பாணபத்ரர்தான்.... ஓணாண்டியும் இல்ல, கோணாண்டியும் இல்ல...
விடைக்கு வெயிட்டிங் தல ;))
ReplyDelete@SK
ReplyDelete2nd attempt la 5,9,10 cheri
=8/10
அறிவன்
ReplyDeleteஅப்பாடா! பாம்புக் கேள்விக்கு ஒரு வழியா விடை சொல்லிட்டீங்க! இனி ப்ரொசீட்! :)
@NONO
ReplyDelete4,6,8,10 thappu
ஆனால் பாம்புக் கேள்விக்கு ஒரு விடை தானே சொல்லி இருக்கீக? மதுரைப் பாடகர் பேரு என்ன? அதச் சொன்னா தான் ஆட்டமே ஆட முடியும்! :)
@தமிழ் - வாங்க, வாங்க! நலமா இருக்கீயளா?
ReplyDeleteபாம்புக் கேள்வி சரியே!
1,2,6 thappu thala! மத்ததுக்கு எல்லாம் சூப்பர் பதில் சொல்லிட்டு நீங்களே இப்படிப் பண்ணலாமா?
=7/10
good set of questions !
ReplyDeletebut no comments from my side, lets others answer those questions, Since I have written all those things in my blogs!
will catch you later!
நம்புவீர்களா. இன்று படம் திருவிளையாடல்.
ReplyDeleteமீனாட்சியம்மாவுக்கு அவ்வளவு ஆசையா நம்பேரில்.!!! விடை
மேகநாதன் பாட வந்தவர்,.
போட்டிக்கு மன்னர் ஆணையிட்டவர் பாணபட்டர்.
நன்றி ரவி.
வல்லீம்மா
ReplyDeleteமதுரைப் பாடகர் சரியே! வடநாட்டுப் பாடகர் பேரு கன்ஃப்யூசன் ஆயிட்டீக போல! :)
ஏதேது திருவிளையாடல் படமா பார்த்து தள்ளறீங்க? எந்த டிவி-ல வல்லீம்மா?
//சிவமுருகன் said...
ReplyDeletegood set of questions ! //
நன்றி சிவா!
//lets others answer those questions, Since I have written all those things in my blogs!//
யோவ்! பதிவுல எழுதிட்டா நீர் கலந்துக்க கூடாதா? இதெல்லாம் ஓவரு! ஒழுங்கா ஆடுங்க!
You have NOT written abt only "one thing", that is mentioned here :)
அது பாணபத்திரர்:)
ReplyDeletepanaputhirarukaga... sorry.. agathiyar thaane paana puthiraru. ivaru panapathiraru. avarukaga hemanatha bagavatharai thorkadithar.
ReplyDeleteஜிரா - பாம்பு பதில்ல தப்பிச்சிட்டீங்க! இப்போ ஆட்டம் ஆடுங்க! :)
ReplyDeleteகலக்கறிங்க கண்ணபிரான்!
ReplyDeleteஅகிலத்தையே ஆட்டுவிக்கும்அன்னை மீனாளுக்கு இந்த ஆட்டமெல்லாம் பிடிக்கும்
திவாகர்
1. இ) தடாதகை
ReplyDelete2. ஈ) பவளக்கனிவாய் பெருமாள்
3. அ) 985
4. ஈ) கம்பண்ண உடையார்/ கங்கா தேவி
5. இ) வண்டியூர் மாரியம்மன் 'தெப்பக்'குளம்
6. ஆ) திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சி'யார்'
7. ஈ) காஞ்சனமாலை
8. ஈ) கக்கன்/இராஜாஜி
9. ஆ) திருவேடகம்
10. ஈ) அரிமர்த்தன பாண்டியன்
1. இ) தடாதகை
ReplyDelete2. ஈ) பவளக்கனிவாய் பெருமாள்
3. அ) 985
4. ஈ) கம்பண்ண உடையார்/ கங்கா தேவி
5. இ) வண்டியூர் மாரியம்மன் 'தெப்பக்'குளம்
6. ஆ) திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சி'யார்'
7. ஈ) காஞ்சனமாலை
8. ஈ) கக்கன்/இராஜாஜி
9. ஆ) திருவேடகம்
10. ஈ) அரிமர்த்தன பாண்டியன்
கிளி கோதையின் இடக்கரத்திலும் மீனாளின் வலக்கரத்திலும் இருக்கும் காரணம் என்ன இரவி? ஏற்கனவே சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்; ஆனாலும் மறந்துவிட்டேன்.
ReplyDeleteஅம்மனைக் கல்வெட்டுகள் எந்தப் பெயரால் குறிக்கின்றன என்பதை இன்று தான் அறிந்தேன். நான் ஊகித்த திருப்பெயரே இணையத்தில் தேடிய போதும் கிடைத்தது. அதனால் அத்திருப்பெயரை முன்னரே படித்திருக்கிறேன்; ஆனால் நினைவில் நிறுத்த மறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். :-)
சுவாமி சன்னிதி கொடிமரத்தில் சம்பந்தப்பெருமான் திருவுருவம் இருப்பது இது வரை தெரியாது. அடுத்த முறை செல்லும் போது நினைவிருத்திக் கொண்டு பார்க்க வேண்டும்.
@kumaran - eki? osi! eom!
ReplyDeleteஇ) தடாதகை
ReplyDeleteஈ) பவளக்கனி வாய்ப் பெருமாள்
இ) 1004
அ) கோபண்ண உடையார்/ கம்பண்ண உடையார்
இ) வண்டியூர் மாரியம்மன் குளம்
அ) தடாதகைப் பிராட்டியார்
ஈ) காஞ்சனமாலை
ஈ) கக்கன்/இராஜாஜி
ஆ) திருவேடகம்
அ) வரகுண பாண்டியன்
Ans for spl qstn:
ஹேம நாத பாகவதர்
டி.ஆர் மஹாலிங்கம் :))
ஹிஹி, இதுக்கு நீங்க இப்படி சொல்லக் கூடாதுன்னு சொல்லலையே!
சரியான பதில் பாண பத்திரர்.
what does 'eki? osi! eom!' mean?
ReplyDeleteஓ அப்படின்னா என் பின்னூட்டம் வந்துடுச்சா? எனக்கு ஒரே டென்சனா இருந்துச்சு; பின்னூட்டம் போட்டது சரியா? இல்ல, தப்பா ஆகிடுச்சா? அப்படின்னு....
ReplyDeleteநல்லா இருக்கன்னுதான் நினைக்கிறேன்.... இருந்தாலும் நான் போட்டிக்குப் பதில் அனுப்பிட்டு அப்புறம் சொல்றேன்... அதுவரைக்கும் நான் கொஞ்சம் இழுபறி கேசுதான்..... ;)))
என்னதுஉஉஉஉஉஉஉஉ???? 1, 2, 6 தப்பாஆஆஆஆஆ??? ஆகா, நான் எதிர்பார்க்கவே இல்லயே......
1. இ. தடாதகை
2. ஈ. பவளக்கனிவாய்ப் பெருமாள்
6. ஆ. திருக்காமக் கோட்டத்து ஆளுடை நாச்சி
-முகிலரசிதமிழரசன்
எனக்குப் பழைய பின்னூட்ட பெட்டிதான் எளிமையா இருந்தது..... பரவாயில்ல, காலத்துக்கு ஏத்தமாதிரி நாமளும் நம்மல மாத்திக்க வேண்டியதுதானே!!
ReplyDeleteமுதல் பின்னூட்டம் போட்ட போது ஒன்னுமே புரியல, இப்ப எளிமையாகிடுச்சு... குழப்பிட்டேனா..... ஹா..ஹா....ஹா... ஒரு கருத்துக் கணிப்பு வெச்சுட்டா போச்சு....
-முகிலரசிதமிழரசன்
:D
ReplyDeletei dunno any answers ! and u wont give me the answers also..so i am not going to play this game :P
@அம்பி
ReplyDeleteஎன்னாது ஆயிரத்துக்கும் மேல காலா? நீ தான்யா மொத மொதல்ல இப்படிச் சொன்னது! :)
paambu kelvi cheri, ange jalli adichi irunthaalum..:)
3,4,6,10 thappu
= 6/10
தமிழ் has left a new comment on your post "புதிரா? புனிதமா?? - மதுரை மீனாட்சி!":
ReplyDeleteஓ அப்படின்னா என் பின்னூட்டம் வந்துடுச்சா? எனக்கு ஒரே டென்சனா இருந்துச்சு; பின்னூட்டம் போட்டது சரியா? இல்ல, தப்பா ஆகிடுச்சா? அப்படின்னு....
நல்லா இருக்கன்னுதான் நினைக்கிறேன்.... இருந்தாலும் நான் போட்டிக்குப் பதில் அனுப்பிட்டு அப்புறம் சொல்றேன்... அதுவரைக்கும் நான் கொஞ்சம் இழுபறி கேசுதான்..... ;)))
என்னதுஉஉஉஉஉஉஉஉ???? 1, 2, 6 தப்பாஆஆஆஆஆ??? ஆகா, நான் எதிர்பார்க்கவே இல்லயே......
1.
2.
6.
-முகிலரசிதமிழரசன்
@முகில்
ReplyDeleteவாங்க வாங்க! மொதல்ல வந்தது நீங்க இல்லை தானே? :)
இப்ப எல்லாமே சரி = 10/10! வாழ்த்துக்கள்!
ஆனா உங்களுக்கும் முன்பே கூடல் குமரன் = 10/10! வாழ்த்துக்கள் அ.உ.ஆ.சூ. ஸ்டாரே! :)
//குமரன் (Kumaran) said...
ReplyDeletewhat does 'eki? osi! eom!' mean?//
ஆகா! ஸ்டார் கேக்குற கேள்வியா இது?
eki=எ.கொ.இ
osi=ஒ.சொ.இ
eom=எ.ஒ.மு
1 இ) தடாதகை
ReplyDelete2 கூடலழகர்
3 1000
4 ஆ) கோபண்ண உடையார்/ கங்கா தேவி
5 இ) வண்டியூர் மாரியம்மன் குளம்
6 அ) தடாதகைப் பிராட்டியார்
7 ஈ) காஞ்சனமாலை
8 ஆ) பி.டி.ஆர்/ அறிஞர் அண்ணா
9 ஆ) திருவேடகம்
10 ஈ) அரிமர்த்தன பாண்டியன்
11. வடநாட்டுப் பாடகர் = Hema natha pahavathar_____ மதுரைப் பாடகர் = paana paththirar _____
by
Mani Pandi
i think this is some difficault then old style
ReplyDeleteMani Pandi
6 ஈ) வழுதிமகள் மும்முலைப் பிராட்டி
ReplyDelete8 ஈ) கக்கன்/இராஜாஜி
//இந்த நுழைவுப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னின்று நடத்தியது யார்?// என்பது நீங்க கொடுத்த கேள்வி.
ReplyDelete//அரசு உத்தரவு போட்ட பின்பு, அதை நிறைவேற்ற யார் போனாங்க என்பதே கேள்வி! // அப்படின்னு பின்னூட்டத்தில் சொல்லியிருக்கீங்க.
எதுவானாலும் புதசெவி: "'விடுதலை' - 13.7.1939: "1939 சூலை 8 அன்று வைத்திய நாத அய்யர், அமைச்சர் டி.எஸ்.எஸ். ராஜன் வருவதாகச் சொல்லி, குருக்களை இரவு இருக்கச் சொல்லியிருந்தார். இரவு 8.45 மணிக்கு 5 ஆதிதிராவிடர்களையும், ஒரு நாடாரையும் வைத்தியநாத அய்யர் (அய்ந்து ஆதிதிராவிடர்கள் : சுவாமி முருகானந்தம், பி. கக்கன், முத்து, சின்னையா, ஆர். பூவாலிங்கம், விருதுநகர் நகர மன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சண்முக நாடார்) அழைத்துச் சென்றார் (ஆதாரம் : "தமிழ் நாட்டில் காந்தி' பக். 624). அதற்குப் பிறகு வெளியில் வந்து "அரிசன ஆலயப் பிரவேசம்' நடந்துவிட்டதாக அறிவித்தார். "
4. ஈ) கம்பண்ண உடையார்/ கங்கா தேவி
ReplyDeleteஎன்னதூஉஉஉஉஉஉஉஉஉஉ... எல்லாமே சரியா???? அப்பாடா, எல்லாம் மதுரை மீனாள் மற்றும் திருவேங்கட நாதனின் அருள்... அண்ணனும் தங்கச்சியும் அசத்திட்டாங்க... அடியேன் ஒன்னும் செய்யலை....
ReplyDelete//அ.உ.ஆ.சூ. ஸ்டாரே! :)//
அப்படீன்னா என்னா? சுத்தமா ஒண்ணுமே பிரியலையே... நீங்க, குமரனுக்கு சொன்னதே ஏதோ சைனீஸ் மொழி ன்னு நினச்சேன்....
நாங்க நல்லா இருக்கோமுங்க... எல்லா பதிலுமே நான்தான் போட்டேன்.... ஆனா கடைசில பேரு போட மறந்துட்டேன்!! பதற்றத்துல... ;))
நீங்க எப்படி இருக்கீங்க??? நியூயார்க், நியூஜெர்ஸி ல்லாம் எப்படி இருக்கு??? அம்மா, அப்பாவ கேட்டதா சொல்லுங்க... அப்போ, அடுத்த புதிர்ல்ல சந்திக்கலாங்களா?? நன்றி வணக்கம்!
முகிலரசிதமிழரசன்
5. வண்டியூர் மாரியம்மன் குளம். இதுதான் தெப்பக்குளம்னு தெரியும். ஆனா மீனாட்சி கோயிலின் தெப்பக் குளம்னு கேட்டதினால கொஞ்சம் குழம்பிட்டேன்.
ReplyDelete5. முன்னாடி என்ன விடை சொன்னேன்னு மறந்திடுச்சு. ஹிஹி... இப்ப சரின்னு நினைக்கிற விடை - திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சி.
9. திருவேடகம்.
@kumaran...herez the beejatcharam!
ReplyDeleteithu theriyaama valai ulagil irukkeega neenga! omg! :))
eki = enna kodumai ithu
osi = onnum sollurathakku illa
eom = ennala onnum mudiyaathu
:))
@மணி பாண்டிண்ணே
ReplyDelete2,3,4,6,8 thappu
ஆனா பாம்பு கேள்விக்குப் பதில் சரி!
So = 5/10! :)
@கெபி அக்கா
ReplyDelete6 thappu! =9/10
நீங்க எழுப்பிய எட்டாம் கேள்விக்கான விளக்கத்தை விடை வெளியிட்ட பின்னர் விரிவாப் பார்க்கலாம்! :)
@மதுமிதாக்கா...
ReplyDeleteஎன்னாக்கா? வந்து மதுரா விஜயம் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போறீக? மத்த கேள்வீஸ்? :)
@ஸ்ரீதர் அண்ணாச்சி
ReplyDeleteகலக்கல்ஸ்! யாரு கிட்ட பிட்டு அடிச்சீங்க? மதுரையம்பதி அண்ணா கிட்டயா? :)
=10/10
மீனாட்சியுடைய தெப்பக் குளமும் அது தான்! மத்தபடி உள்ளாற இருக்கும் குளம் சும்மா தான்! :)
//DHIVAKAR said...
ReplyDeleteகலக்கறிங்க கண்ணபிரான்!
அகிலத்தையே ஆட்டுவிக்கும் அன்னை மீனாளுக்கு இந்த ஆட்டமெல்லாம் பிடிக்கும்//
அதானே திவாகர் சார்! அன்னை மீனாளுக்கு விளையாட்டு-ன்னா ரொம்பப் பிடிக்குமே!
ஊஞ்சல்-லயே சிம்பிள் பெண்டுலம் ஆடினவ அவ! :)
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteகிளி கோதையின் இடக்கரத்திலும் மீனாளின் வலக்கரத்திலும் இருக்கும் காரணம் என்ன இரவி? ஏற்கனவே சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்; ஆனாலும் மறந்துவிட்டேன்.//
ஆகா, உங்களுக்கே தெரியாதா?
தருமி சார், சீனா ஐயா, மெளலியம்பதி, கீதாம்மா - ஹெல்ப், ஹெல்ப்!
//அம்மனைக் கல்வெட்டுகள் எந்தப் பெயரால் குறிக்கின்றன என்பதை இன்று தான் அறிந்தேன். நான் ஊகித்த திருப்பெயரே இணையத்தில் தேடிய போதும் கிடைத்தது?//
காப்பியடிச்சேன் அப்படிங்கறதை இம்புட்டு நயமாக் கூட சொல்ல முடியுமா? வாவ்!:)
//சுவாமி சன்னிதி கொடிமரத்தில் சம்பந்தப்பெருமான் திருவுருவம் இருப்பது இது வரை தெரியாது. அடுத்த முறை செல்லும் போது நினைவிருத்திக் கொண்டு பார்க்க வேண்டும்//
கட்டாயம் பாருங்க குமரன்!
எது என்னமோ தெரியலை, இதெல்லாம் கரெக்ட்டா அடியேன் கண்ணுல தான் மாட்டுது! :)
மதுரை வந்தப்போ அம்மா கிட்ட கூப்பிட்டு காட்டினேன்! ஆச்சரியப் பட்டாங்க!
சைவக் கொடியை பறக்க விட்டவர் இல்லையா? கொடி மரம் சம்பந்தப் பெருமானுக்குச் சரியான இடம் தான்!
சிவமுருகன் வலைப்பூவில் தேடினா, படம் ஏதாச்சும் கூட கிடைக்கலாம்!
//υnĸnown вlogger™ said...
ReplyDelete:D
i dunno any answers ! and u wont give me the answers also..so i am not going to play this game :P//
அதுனால என்னம்மா? ஜிரா கொடுப்பாரு விடைகளை, வடைகளை! அவர் கிட்ட வாங்கிக்கிருவமா? :)
முகிலரசி, மற்றும் மணிபாண்டி அண்ணன் இன்னும் பலரின் கருத்தை ஏற்று, பின்னூட்டப் பெட்டியைப் பழையபடியே மாத்தியாச்சு! :)
ReplyDeleteகேள்விகளும், விடைகளுக்கான சாய்ஸும் ஒரே பக்கத்தில் இருந்தா எளிதா இருக்குமே-ன்னு பார்த்தேன்! ஆனா ஒவ்வொரு முறையும் பதிவின் ஆரம்பத்தில் போய் நின்னு சொதப்புது! ஸோ...மக்கள் தீர்ப்பே கேஆரெஸ் தீர்ப்பு! :)
//தமிழ் said...
ReplyDeleteஅண்ணனும் தங்கச்சியும் அசத்திட்டாங்க... அடியேன் ஒன்னும் செய்யலை....//
இது தமிழரசன்!
//
//அ.உ.ஆ.சூ. ஸ்டாரே! :)//
அப்படீன்னா என்னா? சுத்தமா ஒண்ணுமே பிரியலையே... நீங்க, குமரனுக்கு சொன்னதே ஏதோ சைனீஸ் மொழி ன்னு நினச்சேன்....//
அகில உலக ஆன்மீக சூப்பர் ஸ்டார்-ன்னு குமரனைக் கொண்டாடுவது எங்கள் வழக்கம்! அதான் அ.உ.ஆ.சூ!
//நீங்க எப்படி இருக்கீங்க??? நியூயார்க், நியூஜெர்ஸி ல்லாம் எப்படி இருக்கு??? அம்மா, அப்பாவ கேட்டதா சொல்லுங்க...//
இது முகிலரசி தான்!
மாதொரு பாகன் மேனியில் சரி பாதி கணவன்-மனைவின்னு தெரியும்!
பின்னூட்டப் பெட்டீல கூடவா? ஹா ஹா ஹா!
ஆங்.. விளக்கமா? முதல்ல நீங்க சொல்லுங்க விளக்கம்.
ReplyDelete//கெபி அக்கா, ஸ்ரீதர், குமரன் முதலான வெற்றியாளர்கள் //
இப்படி சொல்லிட்டு கீழே...
//வெற்றியாளர்கள்:
1. குமரன்
2. முகிலரசி தமிழரசன்
3. ஸ்ரீதர் நாராயணன்
//
இப்படி சொல்லியிருக்கீங்களே... அப்ப கெ.பி. அக்காவுக்கு பதில் சொல்லத் தெரியாது வெறும் விளக்கம் மட்டும்தான் சொல்வாங்கன்னு சொல்றீங்களா? இல்ல முகிலரசி / தமிழரசனுக்கு விளக்கம் எல்லாம் சொல்லத் தெரியாது ஃப்ளூக்-ல பதில் சொல்லிட்டாங்கன்னு சொல்றீங்களா?
அப்படியென்ன கெ.பி. அக்கா மட்டும் ஸ்பெசல்? கீதா ஆண்ட்டி (அப்படித்தான் சொல்லனும்னு அம்பி சொல்லியிருக்கார்), வல்லியம்மா-ன்னு நிறைய விசயம் தெரிஞ்சவங்க வந்திட்டுப் போயிருக்காங்களே... ஏன் அவங்கள எல்லாம் விட்டு கெக்கேபிக்கேன்னு பேசறவங்களுக்கு முன்னுரிமை குடுக்கறீங்க?
ஒருவேளை அவங்கதான் மு / த -ன்னு இன்னொரு ஐடி வச்சிகிட்டு இருக்காங்களோ?
அடேங்கப்பா! ஒரு புதிரா / புனிதமா போட்டியில ஏகப்பட்ட புதிர் புதுசா வருதப்பா. :)
சும்மா அங்கிட்டு இங்கிட்டு வேடிக்கை பாக்காதீங்க. ஏதாவது பரிசை விரசா குடுங்க. திருவள்ளுவரு காசை 'கூடல்'ல போட்ட மாதிரி இந்தப் பரிசையும் அங்கே போட்டா சூப்பரா இருக்கும்ல?
ReplyDelete1, 2 கேள்விகள் ஏற்கெனவே சின்ன வயசுல கதை கேட்டிருந்ததினால விடை தெரிஞ்சது. ஆனாலும் ஒரு சப்போர்டுக்கு கூகிளாண்டவர் வெரிஃபிகிஷன் செஞ்சு கொடுத்தார்.
ReplyDelete3 - 985 தூண்கள்ன்னு தெரியும். இருந்தாலும் 996 இருக்கலாமோன்னு ஒரு ஐயம். மீண்டும் தேடுபொறி வைத்து பிடித்தேன் சரியான பதிலை.
4 - கம்பண்ணருக்கு முன்னாடி மொகலாயர்கள் படையெடுப்பின்போது சிவலிங்கம் மறைத்து வைக்கப்பட்டு வேறு லிங்கம் வைக்கப்பட்டது என்றும். அது சேதப்படுத்தப்பட்டு பிறகு கம்பண்ணர் வந்து உண்மையான லிங்கத்தை வெளிப்படச் செய்தார் என்றும் கோவிலிலே படித்திருக்கிறேன். கங்கா தேவி பற்றி தெரியாது. தியரி ஆஃப் எலிமினேஷன் செய்து விடையை பிடித்தேன்.
5. மதுரையில் ஒரு தெப்பக் குளம்தான் உண்டு. ஆனால் மீனாட்சி அம்மனின் கோவில் குளம் என்று கேட்டதினால் கொஞ்சம் குழம்பிவிட்டேன். மாரியம்மன் தெப்பக்குளம் என்றே சொல்லி பழகியதால் கொஞ்சம் கன்ஃப்யூஷன் :)
6. இது கெஸ் வொர்க்தான். வழுதிமகள் மும்முலை பிராட்டி என்றுதான் முதலில் நினைத்தேன். இரண்டாவது முறை முயன்ற போது - மதுரைக்கு, காமகோட்டம் என்று ஒரு பெயருண்டு என்று நினைவிற்கு வந்தது.
7. கதை தெரியும். பெயரை உறுதிபடுத்த கூகிள்.
8. கக்கன் ஆலயப்பிரவேசம் செய்தார் என்று செய்திகள் சொன்னது. பதிலில் அவர் ஒரு ஆப்ஷனில்தான் இருந்தார். ஆகவே அதை செலக்ட் செய்தாகிவிட்டது :)
9. முதலில் மேலூர் என்றுதான் நினைத்தேன். அப்புறம் கோவி கண்ணன் ‘சைவ பின்லேடர்’ பதிவில் இதே நிகழ்ச்சி சொல்லப்பட்டிருந்தது. அங்கே ஊர்ப் பெயரும் இருந்ததினால் எழுதிவிட்டேன்.
10. எப்பொழுதோ படித்த கதைகள். மீண்டும் கூகுளில் ஊடாடி அரிமர்த்தன பாண்டியனை கண்டெடுத்தேன்.
11. அதான் பாலையாவும் அவர் சிஷ்யர்களும் பேசிக் கொள்வார்களே... பத்திரர் இல்லைங்க புத்திரருங்கன்னு... :) ஹேமநாத பாகவதர் மட்டும் தொண்டையில் நின்று கொண்டு வாயில் வராமல் சில நிமிடங்கள் அழிச்சாட்டியம் பண்ணினார். பின்னூட்டம் போடும்போது சட்டென நினைவில் வந்துவிட்டார் :))
மற்றபடி இந்த வலது கையில் கிளி / இடது கையில் கிளி போன்ற விவரமெல்லாம் புதிதாக தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி. விளக்கம் இன்னும் சொல்லவில்லை போல் இருக்கிறதே....
ஸ்ரீதர், என்கிட்ட எதுனாலும் (மாதவிப்)பந்தலை விட்டு வெளியே வந்து செட்டில் பண்ணுங்க. இந்த அடாவடித்தனம் எல்லாம் பாவம், பால்மணம் மாறா பச்சிளம்பாலகன் கே ஆர் எஸ் கிட்ட காட்டினா, அவர் சும்மா இருப்பாருன்னா நினைச்சீங்க? அவரு சிலம்பை எடுத்துட்டு வந்தாருன்னா.... இந்தாப்பா தம்பி கே ஆர் எஸ், ஸ்ரீதர் அடிக்கற ரவுசு தாங்கல, நீங்களே வந்து,
ReplyDelete\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
விளக்கத்தெல்லாம் சொல்லிடுங்க.
முகிலரசி தமிழரசன், பாருங்க, ஸ்ரீதர் சொல்றாரு //கெக்கேபிக்கேன்னு பேசறவங்களுக்கு முன்னுரிமை குடுக்கறீங்க? ஒருவேளை அவங்கதான் மு / த -ன்னு இன்னொரு ஐடி வச்சிகிட்டு இருக்காங்களோ?// அப்படின்னு நுண்ணரசியல் செய்றாரு, அதாவது உங்களை கெக்கெபிக்கேன்னு பேசறவங்கன்னு ஸ்ரீதர் சொல்றாரு. நீங்க கொஞ்சம் அவரை கவனிங்க.
ReplyDeleteசரி, நான் பின்னூட்டம் போட்டு முடியறதுக்குள்ள, மண்டகப்படி ஸ்ரீதர் செஞ்சாச்சு.
ReplyDeleteகக்கன்/ராஜாஜி பற்றின மற்ற மாற்றுக் கருத்து பற்றி கே. ஆர். எஸ் தான் சொல்லணும்.
"மற்றபடி", மதுரா விஜயம், கம்பண்ண உடையார் பற்றி ரொம்ப அருமையா ஸ்ரீவேணுகோபாலன் / புஷ்பா தங்கதுரையின் "திருவரங்கன் உலா" சொல்லும். (அவருடைய நடையைத் தவிர்த்து,) படிக்க வேண்டிய நூல்.
வைத்தியநாத ஐயர் தலைமையில் ஆலயப் பிரவேசம் நடந்ததை என் தந்தை நேரில் பார்த்திருக்கிறார். அதையே தான் எழுதினேன்.
ReplyDelete//அதுனால என்னம்மா? ஜிரா கொடுப்பாரு விடைகளை, வடைகளை! அவர் கிட்ட வாங்கிக்கிருவமா? :)
ReplyDelete//
he is too busy :(
anyways next time post podurathuku munnadi answers mattum mail pannidunga :D
சாரி மக்கா! கொஞ்சம் அந்தாண்ட இந்தளூர் பெருமாள் கிட்ட வேலை இருந்திச்சி! அதான் லேட்!
ReplyDeleteஸ்ரீதர் அண்ணாச்சி! பதிலைச் சொல்லச் சொன்னா கேள்வி கேட்டு பத்த வச்சிட்டயே பரட்டை! :)
//கெ.பி. அக்காவுக்கு பதில் சொல்லத் தெரியாது வெறும் விளக்கம் மட்டும்தான் சொல்வாங்கன்னு சொல்றீங்களா? இல்ல முகிலரசி / தமிழரசனுக்கு விளக்கம் எல்லாம் சொல்லத் தெரியாது ஃப்ளூக்-ல பதில் சொல்லிட்டாங்கன்னு சொல்றீங்களா?//
கொத்தனார் எப்போ ஸ்ரீதர் ஐடி-ல வர ஆரம்பிச்சாரு? இல்ல இலவசப் பூவோடு சேர்ந்து இந்த நாரும் மணக்குதோ? :)) உள்குத்து திலகமே வாழ்க நீ வாழ்க!
கெபி அக்கா 10/10 இல்லை! அதுனால அவங்க முழு வெற்றியாளர் இல்ல! அம்புட்டு தான்! ஆனா முகில் இத்தோட அடுத்த புதிர்-ல பிரிவோம் சந்திப்போம்-ன்னு நன்னி வணக்கம் சொல்லிப்புட்டாங்க!
அதான் அடுத்த நிலையில் இருந்த கெபி அக்காவை விளக்கத்துக்கு அழைத்தேன்!
ஸ்ஸ்ஸ்ஸ்...யெப்பா...எப்படியெல்லாம் வெளக்கம் கொடுக்க வேண்டி இருக்கு! அண்ணே, கெபி அக்காவுக்கும் தம்பிக்கும் ஆயிரம் டீலீங் இருக்கும்! அதைக் கேட்க நீரு யாரு? - அப்படின்னு ஒத்தை வரில முடிச்சிருக்கணுமோ? :))
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteசும்மா அங்கிட்டு இங்கிட்டு வேடிக்கை பாக்காதீங்க. ஏதாவது பரிசை விரசா குடுங்க//
மீனாச்சி! பரிசை மெரட்டி வாங்குறாங்கம்மா! கொஞ்சம் என்னான்னு கேளும்மா! :)
//திருவள்ளுவரு காசை 'கூடல்'ல போட்ட மாதிரி இந்தப் பரிசையும் அங்கே போட்டா சூப்பரா இருக்கும்ல?//
நந்திகேஸ்வரர் ஃபோட்டோ! போட்டுக்கோங்கோ! :))
//கெக்கே பிக்குணி said...
ReplyDeleteஸ்ரீதர், என்கிட்ட எதுனாலும் (மாதவிப்)பந்தலை விட்டு வெளியே வந்து செட்டில் பண்ணுங்க//
ஹா ஹா ஹா!
//இந்த அடாவடித்தனம் எல்லாம் பாவம், பால்மணம் மாறா பச்சிளம்பாலகன் கே ஆர் எஸ் கிட்ட காட்டினா//
அதானே! என் அக்காக்களின் கூட்டணி உங்க மேல பாய்ஞ்சுச்சு! ஸ்ரீதர் அண்ணே! நீங்க அம்புட்டு தான்! :))
//இந்தாப்பா தம்பி கே ஆர் எஸ், ஸ்ரீதர் அடிக்கற ரவுசு தாங்கல, நீங்களே வந்து//
தங்கள் உத்தரவுப்படியே ஸ்ரீதரை அடிச்சாச்சி-க்கா! இலவசப் பூவோடு சேர்ந்த நாரை, நார் நாரா, நாரா(யணன்) பேரைச் சொல்லிக் கிழிச்சிட்டேன்-க்கா! :)))
//ஒருவேளை அவங்கதான் மு / த -ன்னு இன்னொரு ஐடி வச்சிகிட்டு இருக்காங்களோ?//
ReplyDeleteஇதனால் சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னன்னா...
கெபி அக்கா வேற! முகிலரசி வேற! இருவரும் வெவ்வேறு களத்தில் புலமை உள்ளவர்கள்! ஸ்ரீதர் அண்ணாச்சியின் தேர்தல் நேரக் கோயபெல்ஸ் பிரசாரத்தை நம்ப வேணாம்-ன்னு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்! உங்கள் சின்னம் பந்தல் சின்னம்! உங்கள் வாக்கு மாதவிக்கே! :)
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteவைத்தியநாத ஐயர் தலைமையில் ஆலயப் பிரவேசம் நடந்ததை//
கீதாம்மா...
தனிப்பட்ட சம்பவங்கள் வரலாறு ஆகாது! முன்பே தில்லைப் பதிவிலும், தீட்சிதர்கள் "சொன்னாங்க"-ன்னு எல்லாம் தரவு வைத்த போது, இதை உங்க கிட்ட சொல்லியுள்ளேன்! :))
உதாரணத்துக்கு, நான் என் தனிப்பட்ட நண்பர்கள் நாலு பேரு கூட சும்மா யாரும் அறியாமல் ஆலயப் பிரவேசம் பண்ணியிருந்தா, நான் தான் மொதல்ல பண்ணேன்-ன்னு ஆயிருமா?
பொதுக் கருத்தை உருவாக்கிச் செய்யும் முயற்சிகளில் எது முதலோ, அதுவே முன்னிற்கும்!
//கெக்கே பிக்குணி said...
ReplyDeleteகக்கன்/ராஜாஜி பற்றின மற்ற மாற்றுக் கருத்து பற்றி கே. ஆர். எஸ் தான் சொல்லணும்//
அக்கா..
கீதாம்மாவுக்குச் சொன்னதையும் பாருங்க! கேள்வி என்னென்னா அரசு உத்தரவு போட்ட பின், யாரு செய்தாங்க என்பது தான்!
//சட்டமாக்கப்பட்டது! சட்டமாக்கினாலும் உள்ளே நுழையும் போது எதிர் விளைவுகள் இருக்குமோ என்று பலரும் அஞ்சினர்!
***அப்போது****, மீனாட்சியம்மன் கோயிலில் இந்த நுழைவுப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னின்று நடத்தியது யார்?//
மேலும் விடுதலைப் பத்திரிகையில் உள்ளபடி எல்லாம் ஆதாரம் கொள்ள முடியாது! அது கருத்து! அதற்கு மதிப்புண்டு! அவ்வளவு தான்! :)
அரசு சட்டம் போடலீன்னா வைத்தியநாத அய்யர் அழைச்சிப் போயிருப்பாரா? So he cant take credit! hez ruled out!
ஒரு இயக்கமாக நடத்திக் காட்டி வெற்றி பெற்றால் அப்போது அவர் பெயரைச் சொல்லிப் பாராட்டலாம்! மேலக்கோட்டை இராமானுசர், வைக்கம் பெரியார் என்று அப்படி அழைத்துச் சென்றார்கள்!
இங்கு அரசு உத்தரவை அமல்படுத்தினார்கள்! அதை முன்னின்று வெற்றிகரமாக அமல்படுத்தியது யாரு-ன்னா கக்கன்! அவ்வளவு தான்! அதான் முதல்வர் பேரையும் சேர்த்தே கேட்டிருந்தேன்!
//"மற்றபடி", மதுரா விஜயம், கம்பண்ண உடையார் பற்றி ரொம்ப அருமையா ஸ்ரீவேணுகோபாலன் / புஷ்பா தங்கதுரையின் "திருவரங்கன் உலா" சொல்லும்.//
ReplyDeleteஆமாம்-க்கா! எனக்கு மிகவும் பிடிச்ச வரலாற்றுப்-(புதின) நூல்!
இன்னிக்கி சி.என்.என் போல, அன்று ஒரு லைவ் ரிப்போர்ட்டர் எழுதன நூல் இல்லையா?
//(அவருடைய நடையைத் தவிர்த்து,) படிக்க வேண்டிய நூல்//
ஹா ஹா ஹா! அவர் நடை பிடிக்காதா-க்கா? அடியேனைப் போல் ரொம்ப லோக்கலா எல்லாம் எழுதியிருக்க மாட்டாரே! வைணவப் பரிபாஷை கூட இருக்குமே! :)
@ஸ்ரீதர் அண்ணாச்சி
ReplyDelete//கம்பண்ணருக்கு முன்னாடி மொகலாயர்கள் படையெடுப்பின்போது சிவலிங்கம் மறைத்து வைக்கப்பட்டு வேறு லிங்கம் வைக்கப்பட்டது என்றும். அது சேதப்படுத்தப்பட்டு பிறகு கம்பண்ணர் வந்து உண்மையான லிங்கத்தை வெளிப்படச் செய்தார் என்றும் கோவிலிலே படித்திருக்கிறேன்//
அந்த சேதப்படுத்தப்பட்ட லிங்கம் இன்றும் கோயிலில் இருக்கு! சொக்கர் சன்னிதிக்கு வலப்புறமா!
//மதுரையில் ஒரு தெப்பக் குளம்தான் உண்டு. ஆனால் மீனாட்சி அம்மனின் கோவில் குளம் என்று கேட்டதினால் கொஞ்சம் குழம்பிவிட்டேன். மாரியம்மன் தெப்பக்குளம் என்றே சொல்லி பழகியதால் கொஞ்சம் கன்ஃப்யூஷன்//
பொற்றாமரைக் குளத்தில் ஒரு விழாவும் நடப்பதில்லை! மீனாட்சி தெப்பமும் வண்டியூரில் தான்! அங்கு சென்று இருக்கும் போது, கோயில் சார்த்தப்பட்டு இருக்கும்!
//மதுரைக்கு, காமகோட்டம் என்று ஒரு பெயருண்டு என்று நினைவிற்கு வந்தது//
காமகோட்டம், காமகோடி-ன்னா காஞ்சிபுரம் அல்லவோ? :)
//அப்புறம் கோவி கண்ணன் ‘சைவ பின்லேடர்’ பதிவில் இதே நிகழ்ச்சி சொல்லப்பட்டிருந்தது. அங்கே ஊர்ப் பெயரும் இருந்ததினால் எழுதிவிட்டேன்//
கோவியண்ணன் அவரையும் அறியாமல் எப்படியெல்லாம் சைவத் தொண்டு செய்யறாரு பாருங்க! :))
Again @ Sridhar Anne!
ReplyDelete//மற்றபடி இந்த வலது கையில் கிளி / இடது கையில் கிளி போன்ற விவரமெல்லாம் புதிதாக தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி. விளக்கம் இன்னும் சொல்லவில்லை போல் இருக்கிறதே....//
சிவனாரின் இடப்பாகம் உமையாள்! அதாச்சும் அவளின் வலப்பக்கம் அவள் காதலன்! அதான் அதே வலப் பக்கத்திலேயே கிளியும் வைச்சிருக்கா!
பெருமாளின் வலமார்பில் திருமகள்! அதாச்சும் அவளின் இடப்பக்கம் அவள் காதலன்! அதான் அதே இடப் பக்கத்திலேயே கிளியும் வைச்சிருக்கா!
கிளி சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லும்! அதே போல் அவிங்களும், காதலிகள் சொல்லிக் கொடுத்ததையே ஒத்துக்கிட்டு ஒப்பிக்கணும்! புரிஞ்சுதா? :))
முந்தைய பின்னூட்ட விளக்கம் கொஞ்சம் ஜாலியா! இப்போ கொஞ்சம் சீரியசா!
ReplyDeleteஇடது/வலது கிளி = காதல் இருக்கும் இடத்திலேயே கிளியையும் வைப்பது மரபு! ஏன்னா கிளி = மனது! மனது காதலன்/காதலி இருக்கும் இடத்திலேயே இருக்கும்! அதான்!
கிளி என்பது ஒரு உள்ளுறை உருவகம்! குறியீட்டுக் கவிதை மாதிரி! (Icon Poetry)!
காதலன் பேரைச் சொல்லிக் கொண்டே இருக்கும் கிளி! ஒரு முறை சொல்லிக் கொடுத்தா, அதைக் கடைசி வரைக்கும் சொல்லும்! பிற்பாடு நீ மாறி-ன்னா கூட, கிளி மாறுவது கொஞ்சம் கடினம் தான்!
பண்டைக் காலத்தில் பெண்ணுக்கு, காதலில் ஒரு நல்ல தோழியாகவும் இருந்தது கிளி! காதலன் அன்று வராது போனாலும், கோபத்தையோ தாபத்தையோ கிளியிடம் காட்டுவாள்! அதுவும் அவன் பேரைத் தான் அவளிடம் சொல்லிக்கிட்டு இருக்கும்!
ஆனா எதுக்கு கிளி? அதை விட குயில் நல்லாப் பாடுமே! கிளி-க்கு கரகர Husky voice தானே? குயிலை வச்சிக்கலாமே?...என்றால்...
கிளி எதையும் மாற்றிச் சொல்லாது! தானாச் சொல்லாது! சரியோ/தவறோ சொல்லிக் கொடுத்ததைத் தான் சொல்லும்! அதே போல் தான் மனசும்! அதான் மனசு=கிளி! அதை இறைவன் மீதுள்ள காதலாய் கையில் ஏந்தியுள்ளனர் இருவரும்!
கிளி = சுகப் பிரம்மம்! மீனாட்சி கையில் உட்கார்ந்து கொண்டு அவள் காதில் வேதம் சொல்கிறது என்றெல்லாம் புராண நயத்துக்கு வேண்டுமானால் சொல்லலாம்! ஆனால் அதுவல்ல! அதையும் தாண்டிக் கிளி புனிதமானது!
பெண்ணின் உற்ற தோழி கிளி!
ReplyDeleteபெண்ணும் திரும்பத் திரும்ப அவனையே சொல்லிக்கிட்டு இருப்பா! கிளியும் திரும்பத் திரும்ப அவள் சொல்லிக் கொடுத்த அவனையே சொல்லிக்கிட்டு இருக்கும்! So they make good friends!
வேற யார்கிட்டவாச்சும் காதலன் பேரைச் சும்மா உளறிக்கிட்டே இருந்தா, ஒரு கட்டத்தில் வெறுத்துப் போயிருவாங்க! அடப் போம்மா வேற வேலையில்ல-ன்னு! ஆனா கிளி அப்படிப் பண்ணாது! அதான்!
அடியார்கள் கோவிந்தா கோவிந்தா என்று கத்துவதைக் கேட்டு, கோயில் நடை சாத்தின பின்பும் கிளி கோவிந்தா என்றே கத்திக்கிட்டு இருக்கும்! அது தானே அவளுக்கும் வேணும்? அதான் கையில் கிளி!
கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான். என் றுயரக்கூவும்,
நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
நன்மை யிழந்து தலையிடாதே,
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின்
-நாச்சியார் திருமொழி
கிளியைத் தூது விடலையே தவிர...ஆண்டாள் எல்லே இளங் கிளியே-ன்னு கிளியை நன்றி மறக்காமப் பாடுறா..
கிளிக்கு ஆச்சார்ய விளக்கமும் உண்டு!
ReplyDeleteஅதாச்சும் வேதங்களை அவரவர் புத்திக்கு வசதிப்பட்டா மாதிரி, சுயநலமா மாற்றிச் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க! தங்களுக்கு மட்டுமே வேதம் சொந்தம், தாங்கள் சொன்னதே அதற்குப் பொருள், அதன் கர்ம காண்டங்களை மட்டுமே வைத்து, வேள்வி என்பதைத் தம் சுயநலத்துக்கான தொழிலாகவே "சில பேர்" மாற்றி விட்டாங்க! ஞான காண்டங்கள் சொல்லும் "இறைவனே உபாயமாகவும், உபேயமாகவும் இருக்கான்" என்ற சரணாகதி வேத தத்துவத்தை மறைச்சி வச்சிட்டாங்க!
ஆனால் கிளி இப்படி எல்லாம் சுயமா பண்ணாது! இறைவன் சொல்லிக் கொடுத்த படி, வேதத்தை உள்ளபடியே உரைக்குமே தவிர, தானாக எல்லாம் அர்த்தம் பண்ணிச் சுயநலமாய் உரைக்காது!
அதான் சொந்தமாகப் பாடும் குயிலை கையில் வைக்காமல், சொன்னபடி சொல்லும் கிளியை வைத்துள்ளார்கள் என்பது ஆச்சார்ய விளக்கம்!
பிரம்ம சூத்திரங்களுக்கு அவரவர் புத்திக்கு ஏத்தபடி உரை செய்து வைத்து விட்டார்கள்! ஆனால் எல்லாரும் கடைத்தேறும் பொருட்டு கொடுக்கப்பட்ட, சரணாகதி சாரமான வேதத்தை, அதன் சாரமாக உரை செய்யவில்லை!
அதான் இராமானுசர் தோன்றி, உள்ளது உள்ளபடியே, பேத ஸ்ருதிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளாது, அபேத ஸ்ருதிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளாது,
அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஸ்ரீபாஷ்யம் செய்தார் என்று சொல்லுவார்கள்!
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின் "ஓர்ந்து" தாம் அதனைப் பேசாதே - தம் நெஞ்சில்
தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேச வரவு
ஆற்றது என்பார் மூர்க்கர் அவர்!
- மணவாள மாமுனிகளின் உபதேச இரத்தின மாலை
இதுவே கிளிக்கு ஆச்சார்ய (metaphysical) விளக்கம்!
கிளி மேட்டர்ல இம்புட்டு இருக்கா?
ReplyDeleteநான் கூட முதல்ல வரைஞ்சவர் நெகடிவ் பாத்து மாத்தி வரைஞ்சிட்டார்ன்னு நினச்சிட்டிருந்தேன். ஹிஹி...
இனிமே அந்த கிளி வந்து ஏதாவது விளக்கம் சொன்னாத்தான் உண்டு போல. அம்புட்டு மேட்டரையும் நீரே சொல்லிட்டீரு. அப்படியே அந்த சாய்ந்த கொண்டை ஏன் ஒரே சைடிலே இருக்குன்னு... அய்யோ... வேணாம். அடிக்க வராங்களே... :))