Tuesday, July 01, 2008

வெட்டிப்பயல் ரீமேக்! சணல் கயிறு=Pointer to Pointer!

வெட்டிப்பயலின் மணல் கயிறு பதிவை ரீமேக் பண்ணா என்ன? எப்பவும் தெலுங்குப் படத்தையே தான் ரீமேக் பண்ணனுமா? ஃபார் ஏ சேஞ்ச், ஒரு தெலுங்குப் பதிவை ரீமேக் பண்ணா என்ன? :-) கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட் இதோ!

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணுங்க போடாத கண்டிஷனே இல்ல! இதுக்கு "வெட்டி"யோட அந்த வித்யாவே சாட்சி!
ஏன்.....நம்ம பசங்க கண்டிஷன் போட மாட்டானுங்களா? இல்ல கண்டிஷன் போடத் தான் தெரியாதா? பதிவு போடறானுங்க! மொக்கை போடறானுங்க! அட, கண்டீசன் போட மாட்டானுங்களாப்பா?

போட்ட கண்டிஷன்ல, அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கிப் போயி நம்ம நாரதர் நாயுடுவோட வொய்ஃப், சரோஜினி நாயுடு கிட்ட வராங்க.
அந்த பையனுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே? சரி, வித்யாவுக்கு ரைமிங்கா விக்ரம்-னு வெச்சிடுவோம்.


சரோஜினி நாயுடு: வாப்பா விக்ரம். நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா பிரியாணியே இறங்கலயாமே? எங்கே...அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லு! நானே உனக்கு நல்ல பொண்ணா பாக்கறேன்.

விக்ரம்: ஓ...அப்படியா நாயுடு ஆன்ட்டி! நான் BE Mechanical படிச்சிருக்கேன்.

ச.நா: அதுக்கென்னப்பா! அதுக்கேத்த மாதிரி ஒரு நல்ல பொண்ணா பார்த்துடலாம்.

விக்ரம்: BE Mechanical படிச்சாலும், நான் கம்ப்யூட்டர் கம்பெனி-ல தான் வேலை பாக்குறேன்!

ச.நா: அடடா! கம்ப்யூட்டர் கம்பெனி-ல கியர் பாக்ஸ் ஏதாச்சும் மாத்துற வேலையா தம்பி?

விக்ரம்: அட! அது இல்லீங்க! எலெக்டிரிக்கல் படிச்சவன் கூடத் தான் கம்ப்யூட்டர்-ல இருக்கான்! அவன் என்ன கலர் கலரா ஒயரையா புடுங்கிக்கிட்டு இருக்கான்?
எம்.எஸ்சி கணக்கு படிச்சவன் கூடத் தான் கம்ப்யூட்டர்-ல இருக்கான்! அவன் என்ன கலர் கலரா ஃபிகரையா கணக்கு பண்ணிக்கிட்டு இருக்கான்?
கம்ப்யூட்டர்-க்குள்ள யாரு வேணா வரலாம் ஆன்ட்டி! ஆனா இங்கிருந்து தான் வேற எங்கேயும் போக முடியாது!

ச.நா: ஏம்பா?

விக்ரம்: ஆடுன காலும், பாடுன வாயும், தட்டுன பொட்டியும் என்னைக்காச்சும் சும்மா இருக்குமா?
வொர்க் பிரம் ஃபாக்டரில, எப்படி வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணறதாம்? டயத்துக்கு வேலை பாத்தாவணும்! வேலை பாத்தே வெளங்காமப் போயிருவானுங்க ப்சங்க!

ச.நா: ஓ, அதானா சங்கதி?
அன்டர்வேர் கம்பெனிக்காரன் கூட, சாஃப்ட்வேர் கம்பெனி மாப்பிள்ளையா ஏன் கேக்குறான்-ன்னு இப்பல்ல புரியுது!
சரி, மேட்டருக்கா வா! உனக்கு எந்த வேலை செய்யற பொண்ணைப் பாக்கட்டும்? அதைச் சொல்லு ராசா!

விக்ரம்: எனக்கும் சாப்ட்வேர்-ல வேலை பாக்குற பொண்ணு தான் வேணும்!

ச.நா: ஏன்பா, ஒரே உறையில எப்படிப்பா ரெண்டு கத்தி இருக்கும்? நல்லா யோசிச்சிச் சொல்லு! இது வாழ்க்கைப்பா வாழ்க்கை!
அப்பறம் நீ பொட்டி தட்ட மாட்ட!
வாழ்க்கை ஃபுல்லா ரொட்டி தான் தட்டுவ!

விக்ரம்: அட...இதெல்லாம் நாங்க யோசிக்காம பேசுவமா? ஏதோ பதிவு எழுதறோம், பின்னூட்டம் போடறோம்-ங்கிறதுக்காக, யோசனையே பண்ண மாட்டோம்-னு நெனச்சிக்காதீங்க! நான் ஒரு டெவலப்பர்...அதனால...

ச.நா: அதனால என்னா இப்போ?

விக்ரம்: கண்டிஷன் நம்பர் 1: பொண்ணு சாப்ட்வேர்ல இருக்கணும்! ஆனா டெஸ்ட்டரா இருக்கக் கூடாது! டெவலப்பராத் தான் இருக்கணும்!

ச.நா: என்னாடா பொழைப்பு இது? ஏதோ ரியல் எஸ்டேட் டெவலப்பர் ரேஞ்சுக்குப் பேசறியே!

விக்ரம்: நல்லாக் கேட்டுக்கோங்க ஆன்ட்டி.
டெஸ்ட்டருங்களுக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!
யூசருக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!
அனலிஸ்ட்டுக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!
மேனேஜருக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!

ச.நா: அப்ப, யாருக்குத் தான் ஆகும்?

விக்ரம்: டெவலப்பருக்குத் தான் ஆகும்!
ஒரு டெவலப்பரோட மனசு ஒரு டெவலப்பருக்குத் தான் தெரியும்!
அதுனால எனக்கு வரப் போற பொண்ணு ஒரு டெவலப்பராத் தான் இருக்கணும்!

ச.நா: என்னமா அலசி, ஆராய்ஞ்சி, முடிவு எடுத்திருக்குற? மொதல் கண்டிஷனே சூப்பர்! மேல சொல்லு!


விக்ரம்: கண்டிஷன் நம்பர் 2. எனக்கு என் கெரியர் தான் முக்கியம்!

ச.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னபா நல்லதா பார்த்து வாங்கி தரச் சொல்றேன். ஆனா மத்தியானச் சாப்பாட்டுக்கு, டிபன் கெரியர்-ல தான் சாப்பாடு கொண்டாறணும்-னு எல்லாம் கண்டிஷன் போட்டுறாத ராசா! கண்ணகியோட கசின் பிரதர் கூட, இப்பல்லாம் இப்படிக் கேக்கறது கிடையாது!

விக்ரம்: ஆன்ட்டி. நான் சொல்றது என்னோட ப்ரஃபொஷன். எந்தக் காரணத்துக்காகவும் என் வேலையை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்! வொர்க் இஸ் வொர்சிப்! மத்ததெல்லாம் கர்ச்சீப்!

டெட்-லைன் போது, டேமேஜர் போட்டு நெருக்குனார்-னா வைங்க, வேலைய வீட்டுக்கு எடுத்துக்கிட்டு வருவேன்! அதைக் கூடமாட இருந்து அந்தப் பொண்ணு தான் முடிச்சிக் கொடுக்கணும்! என்னா சரியா?

ச.நா: அடடா! உன் ஆபீஸ் வேலையில கூட அவளுக்குச் சம உரிமை கொடுக்குறியேப்பா!

விக்ரம்: எக்ஜாக்ட்ல்லி! அப்பறம் இதுலயே ஒரு முக்கியமான சப் கண்டிசன்! 2b. நான் அப்பாவான பிறகு, குழந்தையை அந்தப் பொண்ணு தான் பாத்துக்கணும்! எனக்கு என் கெரியர் தான் முக்கியம்! வேணும்னா வாரத்துல அஞ்சு நாள் மட்டும், நான் வொர்க் ப்ரம் ஹோம் பண்ணிக்கிட்டே, டயாபர் மாத்த ரெடியா இருக்கேன்!

ச.நா: அடடா! ஆம்பளைப் புள்ளன்னா இப்பிடியில்ல இருக்கணும்! அந்த மாதிரி பொண்ணையே பாத்துடறேன் ராசா! அடுத்து?

விக்ரம்: கண்டிஷன் நம்பர் 3. அவ பாக்கறதுக்கு....ஒவ்வொரு கிழமையும், ஒவ்வொரு ஹீரோயின் மாதிரி இருந்தா தேவலாம்!
மண்டேன்னா மாளவிகா,
செவ்வாய்-னா செரீன்,
புதன்-னா பூமிகா,
வியாழன்-னா வேதிகா,
வெள்ளி-ன்னா, அந்தக் கள்ளி பாவனா மாதிரி இருக்கணும்!

ச.நா: ஹூம்! சனி, ஞாயிறு? அதை மட்டும் ஏன் வுட்டுட்ட?

விக்ரம்: அய்யய்யோ! வீக் என்ட் நாங்க அவுட்டிங் போவோம்-ல! என்னைப் பக்கத்துல வச்சிக்கிட்டே, அவனவன் அவளைச் சைட் அடிச்சிக்கிட்டு இருந்தானா? சேச்சே அதெல்லாம் வேலைக்காவாது! சனிக்கெழமை குஷ்பூ, சண்டே-ன்னா ராதிகா மாதிரி மேக்-அப் பண்ணிக்கிட்டாப் போதும்! நான் ரொம்பல்லாம் எதிர்பார்க்கல!

ச.நா: ரொம்ப நல்ல பையனா இருக்கியேப்பா! பொண்டாட்டியை யாருக்கும் தெரியாம, கைக்குள்ள வச்சித் தாங்கற பையன்-னா அது நீ தான்!


விக்ரம்: கண்டிஷன் நம்பர் 4. அவளுக்கு நல்லாச் சமைக்கத் தெரியணும்! அது வாய்க்கு ருசியா இருக்கணும்-னு எல்லாம் கேக்குற கொடுமைக்கார பையன் நான் இல்லீங்க!
பொண்ணுங்க என்ன பசங்களுக்கு சமைச்சிப் போடவா பொறந்து இருக்காங்க?

ச.நா: அடா! அடா! அடா! சாப்ட்வேர் தொறைல இப்படி ஒரு பாரதியார் இருக்காரா?......சரி, அப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ ராசா?

விக்ரம்: வாரம் ஃபுல்லா மைக்ரோவேவ்-ல போட்டுக் கொடுத்தாப் போதும்! நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்! ஆனா என்னைப் பாத்திரம் மட்டும் கழுவச் சொல்லக் கூடாது! எனக்குத் தண்ணில கண்டம் இருக்கு-ன்னு ஆன்மீகப் பதிவர்கள் எல்லாம் சொல்லி இருக்காங்க!

ச.நா: வெரி குட்! இதுல சப்-கண்டிசன், சப்பைக்-கண்டிசன் ஏதாச்சும் இருக்கா?

விக்ரம்: 4b. வீக் என்ட் ஆனா, அத்தையும் மாமாவும், எங்க வீட்டுக்கு வந்தே ஆகணும்!

ச.நா: அடடா! என்னா ஒரு மனசு! யாரு, அந்தப் பொண்ணோட அம்மா, அப்பா! அவங்க தானே?

விக்ரம்: அட, அவங்க எனக்கும் அம்மா அப்பா மாதிரி தானே!
அவங்க வரும் போது பெரிய டிபன் கேரியர்-ல சிக்கன் பிரியாணி, மட்டன் குருமா, வறுத்த எறா, பொரிச்ச மீனு-ன்னு ஏதாச்சும் லைட்டாப் பண்ணிக் கொண்டு வந்தாப் போதும். அப்படியே சாயங்காலம் டிபனுக்கு கொத்து பரோட்டா இருந்தாக் கூட ஓக்கே தான்!

ச.நா: சூப்பர் கண்டிசனா இருக்கே! அப்போ உங்க அம்மா, அப்பா?

விக்ரம்: எங்க அம்மா-அப்பா, என் பிரெண்ட்ஸ்...இவங்கெல்லாம் யாரும் வீட்டுக்கு வரவே மாட்டாங்க! நான் கியாரண்ட்டி! கவலைப்பட வேணாம்-னு பொண்ணு வீட்ல சொல்லுங்க!
அப்படியே பசங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னாக் கூட, "டேய் ஓட்டலுக்கு வாடா நாயே"-ன்னு சொன்னா, பிரெண்ட்ஸ் வராமயா போயிடுவானுங்க?

ச.நா: அடடா! என்னா ஒரு ஷிப்பு!
டைட்டானிக் ஷிப்பு கவுந்தாக் கூட உங்க ஃப்ரெண்ட்ஷிப்பு மட்டும் கவுறவே கவுறாதுடா! இவ்ளோ தானா? வேற எதாச்சும் இருக்கா?

விக்ரம்: கண்டிஷன் நம்பர் 5. எந்த காரணத்தை கொண்டும் எனக்கு ஆன்-சைட் கெடைச்சா கூடவே வருவேன்-ன்னு அடம் புடிக்கக் கூடாது!
நான் அங்க, யாரைப் பாக்கணுமோ பாத்து, நல்லாப் பேசிப் பழகி, "எல்லாத்தையும்" செட்டப் பண்ணனும்-ல? ஒரு வருசம் கூட ஆகலாம்!...அது வரைக்கும், அவ அவங்க அம்மா வீட்டிலயே கூட இருந்துக்கலாம்!
வேணும்னா ஒரு IP Phone வாங்கித் தாரேன்! அதுல டெய்லி எல்லாம் என்னைக் கூப்டாம, வாரா வாரம் என்னைக் கூப்டுறணும்!

ச.நா: என்னா பாசம்! என்னா பாசம்! போதும் ராசா!
அஞ்சு கண்டிசன் மேல போட்டீன்னா, பஞ்சாப் பறந்து, பஞ்ச்சராயிடுவ நைனா!

விக்ரம்: இருங்க! இருங்க! ரொம்ப முக்கியமான கண்டிஷன் ஒன்னு இருக்கு! எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆயிடுச்சின்னு வைங்க....

ச.நா: அட...ஏம்பா இப்படி அபசகுணமா பேசற? மொதல்ல வாயை கிங்-பிஷ்ஷர் ஊத்திக் கழுவுப்பா!

விக்ரம்: இருங்க ஆன்ட்டி.....சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனைன்னு வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவ கண்டிப்பா, ரெண்டே மாசத்துல வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

ச.நா: இது! இது! இங்க தாம்பா நீ ஒரு பெண்ணீயம் பேசும் பெருமகன்-னு நிரூபிக்குற.

விக்ரம்: அதெல்லாம் இல்லை ஆன்ட்டி. அதுக்கப்பறம் அவளுக்கு நான் மாசா மாசம், கப்பம் கட்ட வேணாம் பாருங்க! அதுக்குத் தான்!

சரோஜினி நாயுடு மயக்கம் போட்டு கீழே விழுகிறார்...
நாரதர் நாயுடு என்னும் வெட்டிப்பயல் ஆசை ஆசையா ஓடியாந்து சரோவுக்குக் கொஞ்சம் தண்ணி தெளிச்சி விடுகிறார்....

105 comments:

 1. :)))

  nalla panraangappa remakeu...

  ReplyDelete
 2. கனண்டிசன்ஸ் ஒன்னும் ஸ்பெஷலா இல்லையே.... ;)

  ReplyDelete
 3. கடவுளே! கடவுளே! பகவானே! தெய்வமே! நான் இந்த கொடுமையை எங்க போய் சொல்லுவேன்!

  நான் தான் முதன் முதலா இந்த பதிவ draft ல வெச்சிருந்தேன். அது எப்படியோ திருட்டுப் போயிடுச்சு. கடவுளே, நான் இப்ப என்ன பண்ணுவேன், எனக்கு ஒன்னுமே புரியலையே!

  ஆத்தா, நான் எழுதின பதிவு திருட்டுப் போயிடுச்சு...

  ReplyDelete
 4. இலவசக்கொத்தனார் said...
  //அபசகுணமா //
  யூ டூ?//

  ஓ சாரி கொத்ஸ்!
  அபச குணம்-ல? :-)

  வெட்டி கிட்ட கம்ப்ளெய்ன் பண்ணுங்க! ஒரே எழுத்துப் பிழை-ப்பாப் போச்சு!

  ReplyDelete
 5. // ஜி said...
  :)))
  nalla panraangappa remakeu...//


  வாப்பா ஜீயா!
  வெட்டி எட்டடி பாஞ்சா
  குட்டி நாலடி கூடப் பாயாதா என்னா? :-)

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. //தமிழ் பிரியன் said...
  கனண்டிசன்ஸ் ஒன்னும் ஸ்பெஷலா இல்லையே.... ;)//

  உங்க கண்டிசன் என்னன்னு சொல்லுங்க அண்ணாச்சி!
  போட்டுத் தாக்கிருவோம்!
  ....
  ஒன்னும் முடியலீன்னா
  தாங்கிக்குவோம்! :-)

  ReplyDelete
 8. கிட்டுமணிகள் தான் காலம் காலமாக கண்டீஷ்ன் போடறாங்களே. அதனால இது ஒண்ணும் புதுசாத் தெரியல. :)

  வெட்டிப்பயல் கூட இதைப் பத்தி பதிவு போட்டிருக்கிறாரா! நான் இன்னும் படிக்கலியே!

  நானும் இதைப் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேன்.

  ReplyDelete
 9. யப்பா தம்பி,

  வெட்டி... ஒட்டறதுலியே இம்புட்டு தப்பு! நான் ஆபிஸ் ஆணீஸ்ல முழுசா பதிவு படிக்கல:-)

  //2b. அப்பாவான பிறகு, குழந்தையை அந்தப் பொண்ணு தான் பாத்துக்கணும்! // அந்த பொண்ணு எப்படிப்பா அப்பாவாகும்? இல்ல, அந்த குழந்தை அப்பாவான பிறகா? குழப்புதே!

  //வீக் என்ட் அவுட்டிங் போவோம்‍ல! // இதுல வீக் என்ட், அந்த பொண்ணுக்கு அத்தையும் மாமாவும் வீட்டுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரணும். எதுக்கு தே"வூடு" காக்கவா?

  அப்பாலிக்கா வரலை. பொழைச்சுப் போங்க:-)

  ReplyDelete
 10. //தமிழரசன் said...
  கடவுளே! கடவுளே! பகவானே! தெய்வமே! நான் இந்த கொடுமையை எங்க போய் சொல்லுவேன்!//

  வெட்டி கிட்ட! :-)

  //நான் தான் முதன் முதலா இந்த பதிவ draft ல வெச்சிருந்தேன். அது எப்படியோ திருட்டுப் போயிடுச்சு.//

  100க்கு கால் போட்டீங்களா?

  //கடவுளே, நான் இப்ப என்ன பண்ணுவேன், எனக்கு ஒன்னுமே புரியலையே!//

  பதிவு எழுதுங்க!

  //ஆத்தா, நான் எழுதின பதிவு திருட்டுப் போயிடுச்சு...//

  அந்தத் திருடி யாரு? :-))

  ReplyDelete
 11. சரியான போட்டி..... :)

  கடைசி கண்டிசன் சூப்பரோ சூப்பர் !

  ReplyDelete
 12. உட்டா.. சரோஜினியும் நாரதரும் சேந்து ப்ளான் பண்ணி வித்யாவுக்கும் விக்ரமுக்கும் கல்யாணம் பண்ற மாதிரி அடுத்த பகுதி போட்ருவீங்க போல :)

  ReplyDelete
 13. //தமிழ் பிரியன் said...
  கனண்டிசன்ஸ் ஒன்னும் ஸ்பெஷலா இல்லையே.... ;) //  இது ரிமேக்கு. அவ்ளோ தான் வரும் போல. நீங்க வேணும்னா ஒரு பதிவு போடுங்களேன் பக்காவான கண்டிஷனோட:))

  ReplyDelete
 14. //G3 said...
  உட்டா.. சரோஜினியும் நாரதரும் சேந்து ப்ளான் பண்ணி வித்யாவுக்கும் விக்ரமுக்கும் கல்யாணம் பண்ற மாதிரி அடுத்த பகுதி போட்ருவீங்க போல :)//  அட இது நல்ல ஐடியாவா இருக்கே:)

  ReplyDelete
 15. KRS அங்கிள்... என்ன போஸ்ட் இது..ஒன்னுமே புரியல்லை..
  சணல் என்றால் என்ன மணல் என்றால் என்ன?

  ReplyDelete
 16. ///அப்பாவி சிறுமி said...
  KRS அங்கிள்... என்ன போஸ்ட் இது..ஒன்னுமே புரியல்லை..
  சணல் என்றால் என்ன மணல் என்றால் என்ன?///


  ஆஹா யாரிந்த அப்பாவி சிறுமி?

  ReplyDelete
 17. //அப்பாவி சிறுமி said...
  சணல் என்றால் என்ன மணல் என்றால் என்ன?//


  மணலில் 'ம' எடுத்துவிட்டு 'ச' போட்டால் சணல். சணலில் 'ச' எடுத்துவிட்டு 'ம' போட்டால் மணல். இது கூட தெரியாதா?

  ReplyDelete
 18. //நிஜமா நல்லவன் said...
  மணலில் 'ம' எடுத்துவிட்டு 'ச' போட்டால் சணல். சணலில் 'ச' எடுத்துவிட்டு 'ம' போட்டால் மணல். இது கூட தெரியாதா?//

  ஜூப்பரு!
  தல, கலக்கல்ஸ்!

  அப்பாவிச் சிறுமி
  பாத்துக்கோ! அறிவுல, என்னிக்குமே பசங்க பசங்க தான்! பொண்ணுங்க பொண்ணுங்க தான்!

  :-)

  ReplyDelete
 19. //புதுகைத் தென்றல் said...
  கிட்டுமணிகள் தான் காலம் காலமாக கண்டீஷ்ன் போடறாங்களே. அதனால இது ஒண்ணும் புதுசாத் தெரியல. :)//

  ரங்க மணி தெரியும்
  தங்க மணி தெரியும்
  கிட்டு மணி???

  //வெட்டிப்பயல் கூட இதைப் பத்தி பதிவு போட்டிருக்கிறாரா! நான் இன்னும் படிக்கலியே!//

  போச்சு! பதிவையே ஒங்களுக்குத் தான் சமர்ப்பணம் பண்ணி இருக்காரு! இப்பிடிச் சொல்ட்டீங்களே! அழுவப் போறாரு!

  //நானும் இதைப் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேன்//

  அது தான் இப்படி விதம் விதமா பத்திக்கிட்டு எரியுது யக்கோவ்! :-)

  ReplyDelete
 20. //G3 said...
  உட்டா.. சரோஜினியும் நாரதரும் சேந்து ப்ளான் பண்ணி வித்யாவுக்கும் விக்ரமுக்கும் கல்யாணம் பண்ற மாதிரி அடுத்த பகுதி போட்ருவீங்க போல :)//

  எப்படி யக்கா இம்புட்டு கரீட்டா யோஜிக்கறீங்க?

  வித்யா போட்ட கண்டிசனுக்கும் விக்ரம் போட்ட கண்டிசனுக்கும் ஒத்து வரும்-ங்கறீங்க?
  ஏன்கா ஒங்களுக்கு சின்ன பய புள்ளைக மேல இம்புட்டு கொல வெறி?

  ReplyDelete
 21. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
  யப்பா தம்பி,
  வெட்டி... ஒட்டறதுலியே இம்புட்டு தப்பு!//

  அலோ, இது வெட்டி ஒட்டலை! நான் ஒட்டுனது!

  //நான் ஆபிஸ் ஆணீஸ்ல முழுசா பதிவு படிக்கல:-)//

  அது நீங்க எப்பமே பண்றது தான! பர்வாயில்ல! அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்!

  //2b. அப்பாவான பிறகு, குழந்தையை அந்தப் பொண்ணு தான் பாத்துக்கணும்! // அந்த பொண்ணு எப்படிப்பா அப்பாவாகும்? இல்ல, அந்த குழந்தை அப்பாவான பிறகா? குழப்புதே!//

  நீங்க தான் குடும்பத்துல குழப்பத்தை உருவாக்கறீங்க!
  விக்ரம், இவிங்களுக்கு பத்திரிகை வைக்காதே! :-)

  //இதுல வீக் என்ட், அந்த பொண்ணுக்கு அத்தையும் மாமாவும் வீட்டுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரணும். எதுக்கு தே"வூடு" காக்கவா?//

  எக்ஜாக்ட்லி! வூட்டை வாரத்துக்கு ஒரு முறை க்ளீன் பண்ணனும்-ல?

  சாப்பாடு எல்லாம் பிரிட்ஜில் வச்சி, அடுத்த வாரம் ஃபுல்லாச் சாப்படணும்-ல?

  விக்ரம், விவரமான ஆளு! :-)

  ReplyDelete
 22. // கோவி.கண்ணன் said...
  சரியான போட்டி..... :)//

  அட, நீங்க எப்போ பி.எஸ்.வீரப்பா ஆனீங்க? :-)

  //கடைசி கண்டிசன் சூப்பரோ சூப்பர் !//

  ஹிஹி! பாவம் நம்ம ஆம்பிளைப் பசங்க! :-)

  ReplyDelete
 23. //கோபிநாத் said...
  ;-)))//

  என்ன கோபி!
  இது ஆனந்தக் கண்ணீரா? இல்ல வேற ஏதாச்சும் கண்ணீரா? :-)

  ReplyDelete
 24. //நிஜமா நல்லவன் said...
  //தமிழ் பிரியன் said...
  கனண்டிசன்ஸ் ஒன்னும் ஸ்பெஷலா இல்லையே.... ;) //
  நீங்க வேணும்னா ஒரு பதிவு போடுங்களேன் பக்காவான கண்டிஷனோட:))
  //

  கண்டீஷன் போடும் அளவுக்கு தமிழ் பிரியனுக்கு தில் இருக்கா-ன்னு டெஸ்ட் பண்றீங்களா அண்ணாச்சி? :-))

  ReplyDelete
 25. //Sen22 said...
  Ithuvum nalla Irukku....
  //

  நன்றிங்க தல!
  இன்னும் வரும்!
  ரீ-மேக் னா மேக்கிக்கிட்டே இருப்பாய்ங்க!

  ReplyDelete
 26. //அப்பாவி சிறுமி said...
  KRS அங்கிள்...//

  ஐ ஆம் நாட் அங்கிள்!
  ஐ ஆம் ஒன் அப்பாவிச் சிறுவன்!
  ப்லீஸ் சீ மை ஓர்க்குட் ப்ரொபைல்!

  //என்ன போஸ்ட் இது..ஒன்னுமே புரியல்லை..//

  ஆமா ஆமா!
  பசங்க கண்டிசன் போட்டா மட்டும் சஞ்சய் சீதா சாமி ஆயிடுவீங்களே பொண்ணுங்க!

  //சணல் என்றால் என்ன மணல் என்றால் என்ன?//

  சணல்-ல கயிறு திரிச்சா=பசங்க!
  மணல்-ல கயிறு திரிச்சா=பொண்ணுங்க!

  இதாச்சும் புரியுதா அப்பாவிச் சிறுமீ? :-)

  ReplyDelete
 27. பை தி வே, மேற்கண்ட பின்னூட்டத்தில் நான் திரி"ச்"சா-ன்னு தான் சொன்னேன்!
  வேற யாரையும் மனசில வச்சிக்கிட்டு தப்பா படிக்காதீங்க!

  திரிசா-வில் ஒற்று மிகும்! :-))

  ReplyDelete
 28. //வாரத்துல அஞ்சு நாள் மட்டும், நான் வொர்க் ப்ரம் ஹோம் பண்ணிக்கிட்டே, டயாபர் மாத்த ரெடியா இருக்கேன்!
  //

  அண்ணே திட்றத்தா இருந்தா நேரடியா திட்டுங்க. இப்படி உள்குத்து எல்லாம் வேணாம். வலிக்குது. அழுதுடுவேன். :)))

  ReplyDelete
 29. ////2b. அப்பாவான பிறகு, குழந்தையை அந்தப் பொண்ணு தான் பாத்துக்கணும்! // அந்த பொண்ணு எப்படிப்பா அப்பாவாகும்? இல்ல, அந்த குழந்தை அப்பாவான பிறகா? குழப்புதே!//

  நீங்க தான் குடும்பத்துல குழப்பத்தை உருவாக்கறீங்க!
  விக்ரம், இவிங்களுக்கு பத்திரிகை வைக்காதே! :-)//

  பதிவை விட இந்த மாட்டர் நல்லா இருக்குதே???

  ReplyDelete
 30. //வாரத்துல அஞ்சு நாள் மட்டும், நான் வொர்க் ப்ரம் ஹோம் பண்ணிக்கிட்டே, டயாபர் மாத்த ரெடியா இருக்கேன்!
  //

  அண்ணே திட்றத்தா இருந்தா நேரடியா திட்டுங்க. இப்படி உள்குத்து எல்லாம் வேணாம். வலிக்குது. அழுதுடுவேன். :)))//

  @அம்பி, ஜாலியா இருக்கே?? சந்தோஷத்திலே ஆடறதா, பாடறதா ஒண்ணும் பிரியலை!!!! அப்பா, இன்னிக்குச் சாப்பாடு ஜீரணமாயிடும்! :P

  ReplyDelete
 31. //வாரத்துல அஞ்சு நாள் மட்டும், நான் வொர்க் ப்ரம் ஹோம் பண்ணிக்கிட்டே, டயாபர் மாத்த ரெடியா இருக்கேன்!
  //
  //
  அண்ணே திட்றத்தா இருந்தா நேரடியா திட்டுங்க. இப்படி உள்குத்து எல்லாம் வேணாம். வலிக்குது. அழுதுடுவேன். :))) //

  :-))))

  ஆனாலும் சில பேர் ஜ்-டாக்ல ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டு ஏகப்பட்ட சிம்பதி வேவ் கிரியேட் பண்ணுவாங்க பாருங்க - 'தூக்கமில்லா ராத்திரிகள்' - அட டயப்பர் மாத்தறதுக்குதாங்க :-))

  முக்கியமான ஒரு கண்டிஷன் விட்டுப் போச்சே. பொண்ணு கட்டாயமா தமிழ்ல ப்ளாக்கராவோ அல்லது ரீடராவோ (கூகுள் ரீடர் இல்லைங்க) இருக்கக் கூடாது. அப்புறம் நாம போடற மொக்கை எல்லாம் படிச்சிட்டா இமேஜ் போயிடுமே. வேணும்னா இங்கிலிபீசில ப்ளாக்கட்டும். என்ன சரிதானே? :-))

  ReplyDelete
 32. இஞ்சரும் ரவித் தம்பி,
  அந்தக் காலத்தில ஆருமோனை கண்டிசன் போட்டது? ஆனா அந்தச் சனமும் கட்டி குடியும் குடித்தனமா, பிள்ளை, பூட்டப்பிள்ளை கண்டு இன்னமுந்தான் நல்லா இருக்குதுகள்.
  எங்கட பெத்தாச்சியை அப்பு மாடு வாங்க வீட்டுக்கு வந்து, மாடு பிடிச்சிருக்கு எண்டாராம்.பெத்தாச்சிக்கு பொத்தெண்டு கோவம் வந்திட்டு." அப்ப, நானெப்ப அந்த மாட்டைப் பாக்கிறத்ண்டு கேட்க,நீதானே அந்த மாட்டுக்கு இந்த மாட்டைக் காட்டினியாம் " எண்டாராம் அப்பு.
  இப்பெல்லாம் துட்டுக்காகத் ஹ்டான் எல்லாம்.:-))
  ரவி , நல்லாயிருக்கு எழுதினவிதம். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 33. ரங்கமணி கல்யாணம் ஆனவர்னா
  கிட்டுமணி பேச்சிலர். :))

  (பின் குறிப்பு: மணல்கயிறு படத்தில் ஹீரோ சேகரின் பெயர் கிட்டுமணி)

  ReplyDelete
 34. வெட்டியோட பதிவை படிச்சிட்டேன்.

  சும்மா கலக்கியிருக்காரு. நான் எதிர் பார்த்தது அதைத்தான்.

  :))

  ReplyDelete
 35. //அடடா! கம்ப்யூட்டர் கம்பெனி-ல கியர் பாக்ஸ் ஏதாச்சும் மாத்துற வேலையா தம்பி?//

  :)))

  //ரங்கமணி கல்யாணம் ஆனவர்னா
  கிட்டுமணி பேச்சிலர். :))//

  நான் நெனச்சேன், நீங்க சொல்லிட்டீங்க, புதுகைத் தென்றல் :))

  ReplyDelete
 36. சரித்திரம் படைக்கும் புதுகைத் தென்றல் தங்கச்சி, //ரங்கமணி கல்யாணம் ஆனவர்னா
  கிட்டுமணி பேச்சிலர். :))// நீங்க‌ உங்க‌ பெய‌ர்ல‌ "த்" போட்ட‌ப்ப‌வே ந‌ல்லா த‌மிழ் எழுதுவீங்க‌ன்னு தெரியும்:-) ஆனால், "கிட்டும்" அணி என்று ஊறுகாய் ரேஞ்சில் சொல்லுமாப்போது...எங்கியோ போயிட்டிங்க‌. இப்பிடி மானிட்ட‌ரையே காலா தொட்டுக்கிறேன், டீச்சர்.

  :-)

  ReplyDelete
 37. வித்யாவுக்கு ரைமிங்க் சத்யா தானே விக்ரமான்னு என் 5 வயசுப் பொண்ணு கேக்கறா. :-)

  வெட்டிப்பயல் எழுதுனது A+ன்னா இது A. க்ரேட் தான் குடுக்கிறேங்க. சென்சார் சர்டிபிகேட் இல்லை. :-)

  ReplyDelete
 38. கேயாரெஸ் அங்கிள்,

  //கண்டிஷன் நம்பர் 3. அவ பாக்கறதுக்கு....ஒவ்வொரு கிழமையும், ஒவ்வொரு ஹீரோயின் மாதிரி இருந்தா தேவலாம்!
  மண்டேன்னா மாளவிகா,
  செவ்வாய்-னா செரீன்,
  புதன்-னா பூமிகா,
  வியாழன்-னா வேதிகா,
  வெள்ளி-ன்னா, அந்தக் கள்ளி பாவனா மாதிரி இருக்கணும்! //

  ஆண்ட்டிக்கிட்ட இதைக் கட்டாயம் நான் காட்டியே ஆகணும்.

  ReplyDelete
 39. //சனிக்கெழமை குஷ்பூ, சண்டே-ன்னா ராதிகா மாதிரி மேக்-அப் பண்ணிக்கிட்டாப் போதும்! நான் ரொம்பல்லாம் எதிர்பார்க்கல! //

  ஏனுங்க அங்கிள்...இவங்க ரெண்டுபேரையும் விட வயசான நதியா,ரம்யா கிருஷ்ணன்,யுவராணி,ஸ்ரீதேவி இவங்க யாரும் உங்க கண்ல படலியா?

  ReplyDelete
 40. //ambi said...
  //வாரத்துல அஞ்சு நாள் மட்டும், நான் வொர்க் ப்ரம் ஹோம் பண்ணிக்கிட்டே, டயாபர் மாத்த ரெடியா இருக்கேன்!//

  அண்ணே திட்றத்தா இருந்தா நேரடியா திட்டுங்க. இப்படி உள்குத்து எல்லாம் வேணாம். வலிக்குது. அழுதுடுவேன். :)))//

  ஹா ஹா ஹா
  எப்படி அம்பி கரீட்டா கண்டுபுடிச்ச! அதை எழுதும் போது, என் ஞாபகத்துக்கு.....:-)

  ReplyDelete
 41. //கீதா சாம்பசிவம் said...
  நீங்க தான் குடும்பத்துல குழப்பத்தை உருவாக்கறீங்க!
  விக்ரம், இவிங்களுக்கு பத்திரிகை வைக்காதே! :-)//

  பதிவை விட இந்த மாட்டர் நல்லா இருக்குதே???//

  கீதாம்மா எப்பமே பதிவைப் படிக்காம பின்னூட்டம் மட்டும் படீப்பீங்களாக்கும்? :-))

  ReplyDelete
 42. //கீதா சாம்பசிவம் said...
  நீங்க தான் குடும்பத்துல குழப்பத்தை உருவாக்கறீங்க!
  விக்ரம், இவிங்களுக்கு பத்திரிகை வைக்காதே! :-)//

  பதிவை விட இந்த மாட்டர் நல்லா இருக்குதே???//

  கீதாம்மா எப்பமே பதிவைப் படிக்காம பின்னூட்டம் மட்டும் படீப்பீங்களாக்கும்? :-))

  ReplyDelete
 43. //கீதா சாம்பசிவம் said...
  @அம்பி, ஜாலியா இருக்கே?? சந்தோஷத்திலே ஆடறதா, பாடறதா ஒண்ணும் பிரியலை!!!!//

  என்னாது கீதாம்மா ஆடப் போறாங்க பாடப் போறாங்களா?
  ஆல் ஷோ ஹவுஸ் ஃபுல்!

  //அப்பா, இன்னிக்குச் சாப்பாடு ஜீரணமாயிடும்! //

  என்ன சாப்பாடு ஜெர்ரியம்மா, அக்கட?
  எனி ஸ்பெசல்?

  ReplyDelete
 44. //Sridhar Narayanan said...
  ஆனாலும் சில பேர் ஜ்-டாக்ல ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டு ஏகப்பட்ட சிம்பதி வேவ் கிரியேட் பண்ணுவாங்க பாருங்க - 'தூக்கமில்லா ராத்திரிகள்' - அட டயப்பர் மாத்தறதுக்குதாங்க :-))//

  ஓ...நீங்க யாரையோ "கொத்த" வரீங்களா ஸ்ரீதர்? :-)

  சரி சரி
  நான் அம்பியை நினைச்சு சொன்னது, உங்க பட்டர்பிளை எஃபெக்ட்டுல, கொத்தவரங்கா விக்கறவருக்கு பறந்துடுச்சு போல! :-)

  //பொண்ணு கட்டாயமா தமிழ்ல ப்ளாக்கராவோ அல்லது ரீடராவோ (கூகுள் ரீடர் இல்லைங்க) இருக்கக் கூடாது. அப்புறம் நாம போடற மொக்கை எல்லாம் படிச்சிட்டா இமேஜ் போயிடுமே. வேணும்னா இங்கிலிபீசில ப்ளாக்கட்டும். என்ன சரிதானே? :-))//

  Annachi
  Dankees for the jooper idea
  I am gonna start one english blog now! madhaviterrace.blogspot.com
  :-))

  ReplyDelete
 45. //புதுகைத் தென்றல் said...
  ரங்கமணி கல்யாணம் ஆனவர்னா
  கிட்டுமணி பேச்சிலர். :))//

  யக்கா...நீங்க எங்கேயோ போயிட்டீங்க! :-)

  //(பின் குறிப்பு: மணல்கயிறு படத்தில் ஹீரோ சேகரின் பெயர் கிட்டுமணி)//

  நான் ரொம்ப சின்னப்பையன் அக்கா! இந்தப் படம் எல்லாம் நீங்க சொல்லி இப்பத் தான் வீடியோதுனியா.காம்-ல பாக்குறேன்! இதுல பேரு எல்லாம் ஞாபகம் வச்சிக்க சொன்னா எப்படிக்கா?

  ReplyDelete
 46. //புதுகைத் தென்றல் said...
  வெட்டியோட பதிவை படிச்சிட்டேன்.
  சும்மா கலக்கியிருக்காரு.//

  ஆமாக்கா
  அவரு கலக்குறத்துக்குன்னே பொறந்தவரு!

  //நான் எதிர் பார்த்தது அதைத்தான்.
  :))//

  ஆமாமா! ஒங்களுக்குத் தான் பசங்க கன்டிசன் போட்டாலே புடிக்காதே! :-)

  ReplyDelete
 47. //கவிநயா said...
  //ரங்கமணி கல்யாணம் ஆனவர்னா
  கிட்டுமணி பேச்சிலர். :))//
  நான் நெனச்சேன், நீங்க சொல்லிட்டீங்க, புதுகைத் தென்றல் :))//

  இன்னிக்கி என்ன ஆல் அக்காஸ் கூட்டணியா?
  வெளீல் இருந்து கூட ஆதரவு கொடுக்காம இருக்க நீங்க என்ன இந்திய கம்யூனிஸ்ட்டா? :-)

  ReplyDelete
 48. //செல்லி said...
  இஞ்சரும் ரவித் தம்பி//

  செல்லியக்கா, வாங்கோ,
  நலமா இருக்கியளா?

  //அந்தக் காலத்தில ஆருமோனை கண்டிசன் போட்டது?//

  க.மு இல்லை
  க.பி...கன்டிசன் போட்டாங்களான்னு தெரியாது!
  மானைப் புடிச்சிக்கிட்டு வா,
  மயில் மேல வா
  இதெல்லாம் கன்டீசனா தெரியலயா உங்க கண்ணுக்கு? :-)

  //பெத்தாச்சிக்கு பொத்தெண்டு கோவம் வந்திட்டு." அப்ப, நானெப்ப அந்த மாட்டைப் பாக்கிறத்ண்டு கேட்க,நீதானே அந்த மாட்டுக்கு இந்த மாட்டைக் காட்டினியாம் " எண்டாராம் அப்பு//

  சூப்பரு-க்கா
  மாடு-ன்னா செல்வம்
  கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு
  மாடு அல்ல மற்றையவை!

  //இப்பெல்லாம் துட்டுக்காகத் ஹ்டான் எல்லாம்.:-))//

  :-(
  இல்லக்கா...இப்பவும் உனக்கு நான், எனக்கு நீ-ன்னு நிறையப் பேரு இருக்காங்க!
  ஆசை வைக்காம அன்பு வைச்சா போதும்! இனி எல்லாம் சுகமே!


  //ரவி , நல்லாயிருக்கு எழுதினவிதம். பாராட்டுக்கள்//

  dankees chelli-kaa!:-)

  ReplyDelete
 49. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
  சரித்திரம் படைக்கும் புதுகைத் தென்றல் தங்கச்சி, //ரங்கமணி கல்யாணம் ஆனவர்னா
  கிட்டுமணி பேச்சிலர். :))//

  அலோ, அவிங்க சொன்னது "பேச்சு" இலர்! இதுக்கு அவிங்களுக்கு நீங்க பாராட்டு விழா எடுக்கறீங்க! இந்தப் பாரை (உலகத்தை) எப்படி எல்லாம் ஆட்டுறாங்கப்பா! :-)

  //ஆனால், "கிட்டும்" அணி என்று ஊறுகாய் ரேஞ்சில் சொல்லுமாப்போது...எங்கியோ போயிட்டிங்க‌.//

  யம்மாடியோவ்!
  கிட்டுக கிட்டுமணி கிட்டினை, அக்கிட்டை
  கிட்டுக கிட்டு விடற்கு!

  //இப்பிடி மானிட்ட‌ரையே காலா தொட்டுக்கிறேன், டீச்சர்.//

  நானும் தான்!
  அடியேன் ரங்கராஜ நம்பி தாசன்! :-)

  ReplyDelete
 50. //குமரன் (Kumaran) said...
  வித்யாவுக்கு ரைமிங்க் சத்யா தானே விக்ரமான்னு என் 5 வயசுப் பொண்ணு கேக்கறா. :-)//

  நூறாயுசு!
  நானும் சத்யா-ன்னு யோசிச்சேன் குமரன்! ஆனா நம்ம சக பதிவர் பேராப் போச்சே-ன்னு விக்ரம்-னு அக்ரமமா மாத்தியாச்சி!

  வர வர சிவக்கொழுந்து இஸ் ஆஸ்கிங் டூ மச் கொஸ்டின்ஸ்! அதெல்லாம் அப்பா கிட்ட தான்! மாமா கிட்ட இல்ல-ன்னு சொல்லி வைங்க! எனக்குக் கேள்விக்குப் பதில் சொல்லவே தெரியாது! :-)

  //வெட்டிப்பயல் எழுதுனது A+ன்னா இது A.//

  ஓ...அவர் எழுதுனா A+ ரத்தம் சிந்துமா?

  என்ன குமரன் நீங்க?
  வெட்டி ரேஞ்சு என்ன, ரீச்சு என்ன?
  அவர் A+ ன்னா அடியேன் வெறும் C++ தான்!

  ReplyDelete
 51. //எம்.ரிஷான் ஷெரீப் said...
  புதன்-னா பூமிகா,
  வியாழன்-னா வேதிகா,
  வெள்ளி-ன்னா, அந்தக் கள்ளி பாவனா மாதிரி இருக்கணும்! //

  ஆண்ட்டிக்கிட்ட இதைக் கட்டாயம் நான் காட்டியே ஆகணும்//

  வாங்க ரிசான் மாமா
  நானே சரோஜினி நாயுடு ஆன்ட்டி கிட்ட தானே சொல்லிக்கிட்டு இருக்கேன்!

  ஓ நீங்க உங்க பெட்டர் ஹால்ஃப், என்னோட ஆன்ட்டி, அவிங்க கிட்ட காட்டப் போறீங்களா? ஜூப்பரு!
  எனிவே ஷி லைக்ஸ் மீ na! :-)

  ReplyDelete
 52. //எம்.ரிஷான் ஷெரீப் said...
  ஏனுங்க அங்கிள்...இவங்க ரெண்டுபேரையும் விட வயசான நதியா,ரம்யா கிருஷ்ணன்,யுவராணி,ஸ்ரீதேவி இவங்க யாரும் உங்க கண்ல படலியா?//

  நீங்க சொல்ற பேரு எல்லாம் நான் கேள்விப்பட்டது கூட இல்லையே ரிசான் அங்க்கிள்!

  இவங்கல்லாம் யாரு! உங்க பேத்திகளா? உங்க கூட சிவகவி-ல நடிச்சதா சொன்னீங்களே? அவிங்களா? :-))

  ReplyDelete
 53. கண்டிஷன் கண்ணபிரான், முக்கியமான கண்டிஷன், பொண்ணுக்கு கண்டிப்பா ஒரு அழகான தங்கை இருக்கனும்... (நோ தம்பி )

  ReplyDelete
 54. //வெட்டிப்பயல் said...
  :-)//

  நீங்க வெட்டியா? கப்பியா??
  கெட்டவரா? நல்லவரா??
  :-))

  ReplyDelete
 55. //கண்டிஷன் நம்பர் 3. அவ பாக்கறதுக்கு....ஒவ்வொரு கிழமையும், ஒவ்வொரு ஹீரோயின் மாதிரி இருந்தா தேவலாம்!
  மண்டேன்னா மாளவிகா,
  செவ்வாய்-னா செரீன்,
  புதன்-னா பூமிகா,
  வியாழன்-னா வேதிகா,
  வெள்ளி-ன்னா, அந்தக் கள்ளி பாவனா மாதிரி இருக்கணும்! //

  அட அட அடடடா...
  அதென்ன பாவனாவுக்கு மட்டும் செல்லமா அடைமொழி...:)

  ReplyDelete
 56. @எம்.ரிஷான் ஷெரீப்

  ///ஏனுங்க அங்கிள்...இவங்க ரெண்டுபேரையும் விட வயசான நதியா,ரம்யா கிருஷ்ணன்,யுவராணி,ஸ்ரீதேவி இவங்க யாரும் உங்க கண்ல படலியா?///

  ஹையையோ யுவராணிக்கு ராதிகாவ விட வயசு அதிகமாங்க, பாவம்க இது, ஆமா...யுவராணிங்கிறது செந்தூரப்பாண்டில விஜய்க்கு யோடியா நடிச்சவங்க தானே...?

  ReplyDelete
 57. அண்ணே வெட்டிப்பயலுக்கு பெங்களூர்ல இருந்து மிரட்டல்கடிதம் வந்திருக்காம் நீங்களும் அலர்ட்டாகிக்குங்க...-:))

  ReplyDelete
 58. //தமிழன்... said...
  புதன்-னா பூமிகா,
  வியாழன்-னா வேதிகா,
  வெள்ளி-ன்னா, அந்தக் கள்ளி பாவனா மாதிரி இருக்கணும்! //

  அட அட அடடடா...
  அதென்ன பாவனாவுக்கு மட்டும் செல்லமா அடைமொழி...:)//

  பிகாஸ் ஐ ஆம் ஒன் பாவனா செல்லம்! ஸோ அடைமொழியும் செல்லம்! :-)

  ReplyDelete
 59. //ஹையையோ யுவராணிக்கு ராதிகாவ விட வயசு அதிகமாங்க, பாவம்க இது, ஆமா...யுவராணிங்கிறது செந்தூரப்பாண்டில விஜய்க்கு யோடியா நடிச்சவங்க தானே...? //

  தமிழன் சார்,
  யுவராணி விஜய் கூடவெல்லாம் நடிச்சிருக்காங்களா என்ன?
  எனக்குன்னா தெரியாதுங்க..சித்தி சீரியல்ல ராதிகாவுக்கு வில்லியா வருவாங்களே..அந்த ஆண்ட்டிப்பா நான் சொல்றது...

  ReplyDelete
 60. //Raghavan said...
  கண்டிஷன் கண்ணபிரான், முக்கியமான கண்டிஷன், பொண்ணுக்கு கண்டிப்பா ஒரு அழகான தங்கை இருக்கனும்... (நோ தம்பி )//

  இப்பல்லாம் அக்கா-தங்கச்சிங்க கூட்டணி ரொம்ப ஸ்ட்ராங்காம்! அதுவும் கல்யாணத்துக்குப் பின், கல்யாணத்துக்கு முன் நடந்தது எல்லாம் மறந்துடறாங்களாம்!
  பாத்து ராகவா! :-)

  ReplyDelete
 61. //ஆத்தா, நான் எழுதின பதிவு திருட்டுப் போயிடுச்சு...//

  அந்தத் திருடி யாரு? :-))//

  ஈயம் இளிக்குது?

  ReplyDelete
 62. //Annachi
  Dankees for the jooper idea
  I am gonna start one english blog now! madhaviterrace.blogspot.com
  :-))//


  பேர் வைக்கக் கூடத் தெரியலை நீர் எல்லாம் இங்கிலிபீசு ப்ளாக் திறந்து என்னாத்த செய்யப் போறீரு?
  greatanxietybooth.blogspot.com

  இப்படி இருக்கணும். அதுதான் மா தவிப் பந்தல்!!

  நீர் என்னமோ மாதவிமாடி ன்னு பேர் வைக்கறீரு. ஒரு(க்)கால் போச்சுன்னா மீனிங்கே வேற....

  ReplyDelete
 63. //தமிழன்... said...
  @எம்.ரிஷான் ஷெரீப்
  ஹையையோ யுவராணிக்கு ராதிகாவ விட வயசு அதிகமாங்க, பாவம்க இது, ஆமா...யுவராணிங்கிறது செந்தூரப்பாண்டில விஜய்க்கு யோடியா நடிச்சவங்க தானே...?//

  யோவ் ரிசான் அங்க்கிள்
  அண்ணாச்சி கேக்குறார்-ல உஅங்க வயசுக்கேத்த கேள்வி? பதில் சொல்லு!

  தமிழன் அண்ணாச்சி
  யுவராணி ஏதோ சாண்டில்யன் நாவல்-ல வருவாங்கன்னு சொல்லிக் கேள்வி! அந்தக் காலத்து ஹீரோயின் பேர் எல்லாம் என்னைய போல் சின்ன பய புள்ளைக்குத் தெரியாதுன்னு, ரிசானைப் பாத்து கேட்ட உங்க அறிவுத் தெறமை தாங்க தெறமை! :-))

  ReplyDelete
 64. //தமிழன்... said...
  அண்ணே வெட்டிப்பயலுக்கு பெங்களூர்ல இருந்து மிரட்டல்கடிதம் வந்திருக்காம் நீங்களும் அலர்ட்டாகிக்குங்க...-:))//

  அய்யோடா!
  நான் பசங்களுக்கு ஆதரவாத் தானே பேசினேன்! அதான் ஆப்பு-ங்கறீங்களா? :-)

  ReplyDelete
 65. //தமிழன்... said...
  இதுவும் சூப்பரு...//

  நன்றி அண்ணாச்சி!

  ReplyDelete
 66. //இலவசக்கொத்தனார் said...
  பேர் வைக்கக் கூடத் தெரியலை நீர் எல்லாம் இங்கிலிபீசு ப்ளாக் திறந்து என்னாத்த செய்யப் போறீரு?
  greatanxietybooth.blogspot.com
  மா தவிப் பந்தல்!!//

  அடங்கொக்கமக்க!சும்மா கலக்கிப்புட்ட வாத்யாரே!
  சரி பந்தல்=பூத்???

  பூத் கேப்ச்சரிங் பண்ண மாட்டாங்களே?
  பூதத் ஆழ்வாரை வேணும்னா தொணைக்கு கூப்டுக்கலாமா? :-)
  (நீ திருந்தவே மாட்ட-ன்னு முணுமுணுக்கறீங்க போல)

  ReplyDelete
 67. @கொத்ஸ்
  //மாதவிமாடி ன்னு பேர் வைக்கறீரு. ஒரு(க்)கால் போச்சுன்னா மீனிங்கே வேற....//

  மாதவி மடி!
  இது ரொம்ப நல்லா இருக்கே!

  நீங்க பித்தளை தான்! ஆனா உங்க ஐடியா மட்டும் தங்கம் கொத்ஸ்! :-)

  மாதவி மடி!
  உடனே மாதவி மடிவாளா-ன்னு எல்லாம் கேக்கக் கூடாது!:-)

  அருஞ் ஜொல் பொருள்:
  மடி=lap
  மடி=சுத்தம்
  மடி=fold
  மடிதல்=அழிதல்
  மடிவாளா=செட் ஆவாளா
  மடிவாலா=பம்பாய் நகரம்
  :-))

  ReplyDelete
 68. //மடிவாலா=பம்பாய் நகரம்//

  எனக்கு பெங்களூர்ல இருக்கறது தான் தெரியும் :-)

  ReplyDelete
 69. //இலவசக்கொத்தனார் said...
  //ஆத்தா, நான் எழுதின பதிவு திருட்டுப் போயிடுச்சு...//

  அந்தத் திருடி யாரு? :-))//

  ஈயம் இளிக்குது?//

  ஹிஹி! :-)
  இப்படித் தானே கொத்ஸ்?

  ReplyDelete
 70. @ரிசான்
  //சித்தி சீரியல்ல ராதிகாவுக்கு வில்லியா வருவாங்களே..அந்த ஆண்ட்டிப்பா நான் சொல்றது...//

  அங்க்கிள்
  நீங்க மட்டும் எப்படி ஆன்ட்டிகளை எல்லாம் இப்படி கரெக்டா நோட் பண்ணறீங்க?

  ஆன்ட்டி-பயாடிக் ஏதாச்சும் சாப்புடறீங்களா? :-)

  ReplyDelete
 71. வெட்டிப்பயல் said...
  //மடிவாலா=பம்பாய் நகரம்//
  எனக்கு பெங்களூர்ல இருக்கறது தான் தெரியும் :-)//

  சாரி பாலாஜி
  மடி-ன்னதும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்!:-)
  மடிவாலா பெங்களூர் தான்!
  அங்க யாராச்சும் மடிவாளா? :-)

  ReplyDelete
 72. //ரம்யா ரமணி said...
  :)))//

  :))))

  ReplyDelete
 73. போட்டு தாக்கியிருக்கிறீங்க.....நல்லாயிருங்க கேஆர்ஸ்:(

  ReplyDelete
 74. போட்டுத் தாக்குங்க. சூப்பரா இருக்குது. நல்லா சிரிச்சேன்....

  ReplyDelete
 75. நான் இப்பவே துண்டு போட்டுடறேன். நாளைக்கு மதியம் 12 மணிக்கு - என்னோட ரீ-ரீமேக் பதிவு... அதுக்குள்ள யாராவது போட்டுட்டாங்கன்னா, அத செல்லாதுன்னு சொல்லிடுங்க நாட்டாமை.... அவ்வ்வ்வ்....

  ReplyDelete
 76. //பதிவு போடறானுங்க! மொக்கை போடறானுங்க! அட, கண்டீசன் போட மாட்டானுங்களாப்பா?//
  நீங்க வேற. இப்போவெல்லாம், அவனவன் எங்க ரிஜெச்ட் பண்ணிட போறாங்களோனு வயித்துல புளிய கரைச்சிட்டு இல்ல இருக்காங்க. இன்னும் கொஞ்ச நாள்ல பழைய படி சுயம்வரம் நடந்தா கூட ஆச்சர்யபடறதுக்கில்லை;)

  //வித்யாவுக்கு ரைமிங்கா விக்ரம்-னு வெச்சிடுவோம்//
  வித்யாவுக்கு ரைமிங் சத்யா தானே வரும்;) என்னோட ஒரு கண்டிசன் - டிவி ரிமோட்டுக்கும், கணினிக்கும் போட்டிக்கு வர கூடாது. அவ்வளோதான்;)

  //கம்ப்யூட்டர்-க்குள்ள யாரு வேணா வரலாம் ஆன்ட்டி! ஆனா இங்கிருந்து தான் வேற எங்கேயும் போக முடியாது!//
  நூற்றுக்கு நூறு உண்மை!

  //மாளவிகா, செரீன், பூமிகா, வேதிகா, பாவனா//
  இவ்வளோதானா இன்னும் இருக்கா? மனசுல இருக்கறத எல்லாம் அப்படியே புட்டு புட்டு வச்சு இருக்கீங்க:)

  ReplyDelete
 77. நான் போட்ட கமெண்ட் எங்க...இருந்தாலும் இதை பப்ளிஷ் பண்ற வரைக்கும் ஓய மாட்டேன்....

  //உட்டா.. சரோஜினியும் நாரதரும் சேந்து ப்ளான் பண்ணி வித்யாவுக்கும் விக்ரமுக்கும் கல்யாணம் பண்ற மாதிரி அடுத்த பகுதி போட்ருவீங்க போல :)//

  G3 ஏன் இந்த கொலை வெறி... :-)

  ReplyDelete
 78. //ஜூப்பரு!
  தல, கலக்கல்ஸ்!

  அப்பாவிச் சிறுமி
  பாத்துக்கோ! அறிவுல, என்னிக்குமே பசங்க பசங்க தான்! பொண்ணுங்க பொண்ணுங்க தான்!

  :-)//


  அப்பாவி சிறுமி தமிழ் இப்போதான் கத்துக்குறேன்.கொஞ்சம் தமிழில் வீக்குன்னு உங்ககிட்ட அர்த்தம் கேட்டால்,மணல் சணல்ன்னு எப்படி எழுதுறதுன்னு சொல்லி கொடுக்குறீங்களே...
  இந்த ஆம்பிள்ளைங்களே இப்படிதான் ஒன்னு சொன்னா வேற மாதிரி தப்பு தப்பா புரிஞ்சுக்குவாங்க :)
  இதுதானே சொல்ல வந்தீங்க கேஆர் எஸ் அங்கிள் ?

  ReplyDelete
 79. //ஆஹா யாரிந்த அப்பாவி சிறுமி?//

  அதான் அப்பாவி சிறுமின்னு சொல்லிட்டோம்ல..பின்ன என்ன யாருன்னு கேக்குறீங்க அங்கிள் :D

  ReplyDelete
 80. //ஐ ஆம் நாட் அங்கிள்!
  ஐ ஆம் ஒன் அப்பாவிச் சிறுவன்!
  ப்லீஸ் சீ மை ஓர்க்குட் ப்ரொபைல்!//

  உங்க blogger ப்ரொபைல் படத்துல இருக்குறது நீங்கதானே அங்கிள்..அதுவும் இந்த படம் 20 வருசத்துக்கு முன்னாடி எடுத்ததுன்னு ஊருல சொன்னாங்க.தாத்தா வயசுல இருக்குற நீங்களா அப்பாவி சிறுவன் ;)சரி பாவம்ன்னு அங்கிள்ன்னு கூப்பிட்டுறேன்..அடுத்த தடவை தாத்தான்னு கூப்பிட வைச்சுடாதீங்க


  //ஆமா ஆமா!
  பசங்க கண்டிசன் போட்டா மட்டும் சஞ்சய் சீதா சாமி ஆயிடுவீங்களே பொண்ணுங்க!//
  நான் இன்னும் சிறுமிதான் :D
  பொண்ணு ஆக இன்னும் ரொம்ப வருசம் ஆகும் அங்கிள்


  //
  சணல்-ல கயிறு திரிச்சா=பசங்க!
  மணல்-ல கயிறு திரிச்சா=பொண்ணுங்க!

  இதாச்சும் புரியுதா அப்பாவிச் சிறுமீ? :-)//

  ரொம்ப அப்பாவியா இருக்கேனா..ஒன்னுமே புரியல்லை அங்கிள்..அடுத்த தடவை மிக்கி மவுஸ் கதை சொன்னீங்கன்ன புரியும்.

  ReplyDelete
 81. ரொம்ப நல்லா இருக்கு!

  ReplyDelete
 82. nice mokkai.konjam over ah than iruku

  ReplyDelete
 83. பசங்க கண்டீஷன் போடறதைப் பத்தி இங்க பேச்சு இல்லையே கே.ஆர்.எஸ்.

  நான் தான் மணல்கயிறு படத்தை
  பொண்ணுங்க கண்டீஷன் போடுவது மாதிரி படம் எடுக்கச் சொல்லி பதிவு போட்டது என்பதை மறக்க வேண்டாம்.

  டிஸ்கி: அப்போ கிட்டுமணி கண்டீஷன் போட்டது தப்பு. இப்போ உமா கண்டீஷன் போடறதும் தப்பு. :(

  ReplyDelete
 84. ஐயோ உமா யாருன்னு கேள்வி வருமெ!

  விசுவின் அனைத்து படத்திலும் கதாநாயகியின் பெயர் உமாதான். ஆனால் இங்கு ”உமா” கல்யாணத்திற்கு கண்டீஷன் போடும் பெண்.

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 85. நானும் ரீ-மேக் பண்ணலாமின்னு இருந்தேன்... நீங்க முந்திக்கிட்டிங்க... :))

  ReplyDelete
 86. அங்க வெட்டிப்பயல்
  இங்க நீங்களா ரவி?::):)
  பெருமாளே பெருமாளே..இவங்களை யாரும் தட்டிக் கேக்க மாட்டாங்களா?:):) கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்திட்டு அப்படி என்ன சிரிப்பு என்று 2தடவை வீட்ல வாங்க்கிக்கட்டிக்கொண்டாச்சி:):)

  ReplyDelete
 87. //சணல்-ல கயிறு திரிச்சா=பசங்க!
  மணல்-ல கயிறு திரிச்சா=பொண்ணுங்க!

  இதாச்சும் புரியுதா அப்பாவிச் சிறுமீ? :-)//

  ரொம்ப அப்பாவியா இருக்கேனா..ஒன்னுமே புரியல்லை அங்கிள்..அடுத்த தடவை மிக்கி மவுஸ் கதை சொன்னீங்கன்ன புரியும்.
  ///

  எனக்கென்னவோ இந்த அப்பாவிச்சிறுமி ரவிக்கு மிகவும் வேண்டப்பட்ட வெ ..வெ...வெளிநாட்டுசிறுபயல் போல தெரியுது!!!

  3:45 AM, July 03, 2008

  ReplyDelete
 88. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  வெட்டிப்பயல் said...
  //மடிவாலா=பம்பாய் நகரம்//
  எனக்கு பெங்களூர்ல இருக்கறது தான் தெரியும் :-)//

  சாரி பாலாஜி
  மடி-ன்னதும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்!:-)
  மடிவாலா பெங்களூர் தான்!
  அங்க யாராச்சும் மடிவாளா? :-)

  >>>>>>>>>>>>>>

  ஐயோ ரவீஈஈஈ!!!! எல்லாத்துக்கும் உணர்ச்சிவசப்படணுமாக்கும்?:) வரவர பந்தல்ல லூட்டி அதிகமாயிடிச்சி...:):) மடிவாலா என்கிறது எங்க பெங்களூர்ல ஹோசூர் தாண்டி கர்னாடகா எல்லைல நுழையறப்போவே வந்துடும் பிரபல இடமாக்கும்.:)எங்க வீடும் அது பக்கமாக்கும்!!! அங்க மடிவாலா ஏரி இருக்கு வெள்ளம் அதிகமானா நீங்க கேக்கறாமாதிரி யாராவது மடிவா.போதுமா?:):):)

  ReplyDelete
 89. //இலவசக்கொத்தனார் said...  பேர் வைக்கக் கூடத் தெரியலை நீர் எல்லாம் இங்கிலிபீசு ப்ளாக் திறந்து என்னாத்த செய்யப் போறீரு?
  greatanxietybooth.blogspot.com>>>///
  அய்யோ கொத்ஸ்!!என்னால சிரிப்பை அடக்கமுடியல...

  இப்படி இருக்கணும். அதுதான் மா தவிப் பந்தல்!!

  நீர் என்னமோ மாதவிமாடி ன்னு பேர் வைக்கறீரு. ஒரு(க்)கால் போச்சுன்னா மீனிங்கே வேற..//

  சீ சீ..naughty guys எல்லாரும்!!!!!

  ReplyDelete
 90. //ஏதோ பதிவு எழுதறோம், பின்னூட்டம் போடறோம்-ங்கிறதுக்காக, யோசனையே பண்ண மாட்டோம்-னு நெனச்சிக்காதீங்க! நான் ஒரு டெவலப்பர்...அதனால...//

  அதானே அது எப்படி நினைக்கலாம் நாங்களும் கொஞ்சம் யோசனை செய்வமில்ல

  //அய்யய்யோ! வீக் என்ட் நாங்க அவுட்டிங் போவோம்-ல! என்னைப் பக்கத்துல வச்சிக்கிட்டே, அவனவன் அவளைச் சைட் அடிச்சிக்கிட்டு இருந்தானா?//

  ஆபிஸ்ல எவனாவது சைட் அடிச்சா அதனால நாட்டமை கண்டிஷன மாத்து
  வீட்டில மட்டும் ஹீரோயின் மாதிரி இருக்கனும்


  //"டேய் ஓட்டலுக்கு வாடா நாயே"-ன்னு சொன்னா, பிரெண்ட்ஸ் வராமயா போயிடுவானுங்க?//

  ங்ண்ணா எப்பங்ண்ணா hotel போவோம்

  //ஒரு IP Phone வாங்கித் தாரேன்! அதுல டெய்லி எல்லாம் என்னைக் கூப்டாம, வாரா வாரம் என்னைக் கூப்டுறணும்!//

  மாசத்துக்கு ஒரு தடவை கூப்பிட்டாலும் நோ பிரப்ளம்

  //அட...ஏம்பா இப்படி அபசகுணமா பேசற? மொதல்ல வாயை கிங்-பிஷ்ஷர் ஊத்திக் கழுவுப்பா!//

  kingfisher local brand அதனால Corona Extra ஊத்திக்கழுவுவாரு நம்ம விக்ரம்

  நல்லாத்தானேய்யா இருந்தீங்க எல்லா நம்ம வெட்டியால வந்தது.......

  ReplyDelete
 91. ஆனாலும் ஒரு ரீமேக் பண்ணி ஒரு 100!! அதுக்கு ரீ மேக் பண்ணி இன்னும் ஒரு 100!!

  நல்லா இருங்கடே!!

  ReplyDelete
 92. என்னது? இன்னும் 100 வரலையா?

  ReplyDelete
 93. இப்போ வந்திடும் பாருங்க!!

  ReplyDelete
 94. வந்தாச்சா!!

  சரி. இனிமே அடுத்த பதிவுக்குப் போகலாமா?!!

  ReplyDelete
 95. //நல்லாத்தானேய்யா இருந்தீங்க எல்லா நம்ம வெட்டியால வந்தது.......//

  அடடா இது வெட்டியால இல்லையா புதுகைத்தென்றல் அக்காதான் இதுக்கெல்லாம் காரணமா??

  ReplyDelete
 96. // இலவசக்கொத்தனார் said...
  வந்தாச்சா!!//

  யப்பா கொத்தனாரே! உன் மகிமையே மகிமை!

  //சரி. இனிமே அடுத்த பதிவுக்குப் போகலாமா?!!//

  எங்கே போறது? அதான் இதே ஒரு தொடர் விளையாட்டு கணக்கா ஆயிருச்சே!
  ரீ-ரீமேக் : பாசக் கயிறு : NULLல மாமனார்
  ஓடுங்க அங்க!ச்சின்னப் பையன் காத்து கெடக்காரு! :-)

  அவர் யாருக்குச் சங்கிலி போடப் போறாரோ? :-)

  ReplyDelete
 97. This comment has been removed by the author.

  ReplyDelete
 98. //ஏன்.....நம்ம பசங்க கண்டிஷன் போட மாட்டானுங்களா? இல்ல கண்டிஷன் போடத் தான் தெரியாதா? பதிவு போடறானுங்க! மொக்கை போடறானுங்க! அட, கண்டீசன் போட மாட்டானுங்களாப்பா?
  //

  அதானே:))

  ReplyDelete
 99. :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP