Friday, June 27, 2008

புதிரா? புனிதமா?? - தமிழ் சினிமாவில் கண்ணன்!

Update:
முதல் வெற்றியாளர் என்று பார்த்தால், 1st 10/10 (2nd attempt)=ஜிரா!

குமரனுக்கு அவர் விடை தவறு என்று முன்பே சொல்லப்பட்டிருந்தால்,
ஒரு வேளை அவர் ஜிரா வருவதற்கு முன்பே,
1st 10/10 (2nd attempt) செய்து இருக்க வாய்ப்புண்டு!

குமரனுக்கு அவர் மதிப்பெண்ணைச் சரியாகச் சொல்லாதது அடியேன் தவறு!
எனவே பரிசுத் தொகையைக் கூட்டி,
குமரன், இராகவன் இருவர் பெயரிலும்,
குழந்தைகளுக்குக் கூடுதல் புத்தகங்கள் வழங்கி விடலாம் என்று எண்ணம்!
இது, எல்லாருக்கும் ஓக்கே-வா?


இதுவும் கண்ணன் திருவிளையாடல் போலும்!:-)
எப்படியோ, குழந்தையின் சிரிப்பே இறைவனின் சிரிப்பூ!
குருகுலத்தைக் கேட்டுவிட்டு, என்னென்ன கதைப் புத்தகங்கள் என்றும் சில நாட்களில் இங்கு பதிக்கிறேன்!


முடிவுகள் ரிலீஸ் பண்ணியாச்சே!
விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன!
அனைவருக்கும் கண்ணனின் வாழ்த்துக்கள்! :-)

வெற்றிப் பட்டியல்! - இதோ சில நிமிடங்களில்!
குமரன் முதலில் 9/10! ஆனால் அதில் ஒரு சின்ன தவறு வந்து விட்டது!
ஸோ, என்ன செய்யலாம் மக்களே?
ஐடியாஸ் ப்ளீஸ்!

பரிசு எப்படித் தரலாம் மக்கா?
*குமரன், ஜிரா இருவரும் ரெண்டாம் ஆட்டத்தில் 10/10
*குமரன், ப்ரசன்னா முதல் ஆட்டத்திலேயே 9/10

Here are the scores.
geethamma=6, 8
gopi=5, 7, 10
kumaran=9, 10
prasanna=9
gnana raja 8, 9
tamizh priyan 8, 9, 10
kepi akka 7
gira 9, 10
kappi 7.5
chinna ammini=9
anatha loganathan 9
nijama nallavan 7
tamizharasan 7



மக்கள்ஸ்! இன்று கண்ணன் பாட்டின் நூறாவது பதிவை முன்னிட்டு ஒரு "சிறப்புப்" புதிரா? புனிதமா?? - இந்த முறை மெய்யாலுமே பரிசு உண்டு! பரிசு என்னவா? சொல்லட்டுமா?
வள்ளுவர் குருகுலம் குழந்தைகளுக்கு, அமர்-சித்ர-கதா! படம் போட்ட கதைப் புத்தகங்களின் தொகுப்பு (ஆயிரம் ரூபாய்க்கு), முதல் வெற்றியாளரின் பெயரில் வழங்கப்படும்! - குட்டிக் குழந்தைக் கண்ணன்களை, அந்தக் குழந்தைக் கண்ணனே மகிழ்விக்கட்டும்! :-)
சரி....புதிரா புனிதமா ஆடுவமா?
கண்ணன், நம்ம கோலிவுட்டில் எடுத்த அவதாரங்கள் தான் இன்னிக்கி தலைப்பு!
நாங்க ரெடி, நீங்க ரெடியா?....விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!

1

தமிழ் சினிமாவில் கவிஞர் என்றால், அது பெரும்பாலும் கண்ணனின் தாசன், கண்ணதாசனையே சிறப்புடன் குறிக்கும்!

நம் கவிஞரின் இயற்பெயர் என்ன? (நோ சாய்ஸ்)

1

முத்தையா

(முருகனின் பெயர் கொண்டு கண்ணனின் தாசன் ஆன கவிஞர்; முத்தைத் தரு பத்தித் திருநகை - முத்தையா, கவி மழை பொழிந்ததில் வியப்பேதும் இல்லை தான்!)

2

பகுத்தறிவுக் கவிஞர் வைரமுத்துவையும், நம் கண்ணன் கவர்ந்துள்ளான்! அது சரி, யாரைத் தான் அவன் கவராமல் போனான்?

ராதையின் மனதில் கண்ணன் உண்டாக்கும் கிளர்ச்சிகளை எல்லாம் காதல் ரசம் சொட்டச் சொட்ட வர்ணித்து, கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டு பிடிக்க என்று பாடுவார்! அருமையான பாட்டு! என்ன படம்? யார் இசை??

2

அ) ரெண்டு-இமான்

ஆ) சிநேகிதியே-வித்யாசாகர்

இ) ரெண்டு-யுவன் சங்கர் ராஜா

ஈ) ஆழ்வார்-ஸ்ரீ காந்த் தேவா

3

தான் கண்ணனின் அவதாரம் என்று வேஷம் கட்டிக் கொண்டு வந்து, சாமியாரிணி ஒருவரின் பொண்ணை, இந்த ஹீரோ ஏமாத்துவாரு!

படத்தின் பெயர் உங்களுக்கே தெரியும்? ஹீரோ (கண்ணன்) யார்? ஹீரோயின் (ராதை) யார்?

3

அ) ஜீவன்-நமீதா

ஆ) அஜீத்-மாளவிகா

இ) ஜீவன்-கீர்த்தி சாவ்லா

ஈ) ஆஜீத்-ஜோதிர்மயீ

4

காத்திருப்பான் கமலக் கண்ணன் என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடல்! உத்தம புத்திரன் படத்தில் வருவது! பத்மினி ஆடுவாங்க!

Alexander Dumas எழுதிய The Man in the Iron Mask-ஐத் தழுவி எடுத்த படம்! இந்தப் பாட்டைப் பாடியது யார்? இசை அமைத்தது யார்?

4

அ) சுசீலா-MSV

ஆ) லீலா-ஜி.ராமநாதன்

இ) சுசீலா-கேவி மகாதேவன்

ஈ) வாணி ஜெயராம்-MSV

5

சங்கராபரணம் படத்தில் வரும் ஒரு கண்ணன் பாட்டு மிகவும் இனிமையான மெலடி பாடல்! நிசப்தமான இரவில் சிஷ்யன் பாட, அவனுக்குப் பாட்டு பாதியில் மறந்து போக, மீதிப் பாட்டை சோமையாஜூலு தூங்கிக்கிட்டே கன்டினியூ பண்ணுவார்!

அந்தப் பாட்டை எழுதியது யார்? இசை அமைப்பாளர் யார்?

5

அ) தியாகராஜர்-கேவி மகாதேவன்

ஆ) புரந்தரதாசர்-கண்டசாலா

இ) புரந்தரதாசர்-புரந்தரதாசர்

ஈ) சதாசிவ பிரம்மேந்திரர் -கேவி மகாதேவன்

6

அலைபாயுதே படத்தில் வரும் அலைபாயுதே கண்ணா, என் மனம், அலை பாயுதே - இந்தப் பாடல் அனைவருக்கும் தெரியும்!

இதைப் படத்தில் எழுதியவர் யார்? பாடியது யார் யார்?

6

அ) வாலி-ஹரிணி

ஆ) பாபநாசம் சிவன்-கல்யாணி மேனன், சைந்தவி

இ) ஊத்துக்காடு-ஹரிணி, கல்யாணி மேனன், ராமலட்சுமி

ஈ) வாலி-ஹரிணி, சுதா ரகுநாதன், ராமலட்சுமி

7

கண்ணன்-குசேலனின் உயர்ந்த நட்பைப் போலவே ஒரு நடிகன்-முடி திருத்தும் தொழிலாளி, இவர்களின் நட்பை இந்தப் படம் சொல்லப் போகிறது!

என்ன படம், யாரு ஹீரோ-ன்னு எல்லாம் உங்களுக்கே தெரியும்! ஆனா இது ஒரு மலையாளப் படத்தின் ரீ-மேக்! மலையாளப் படத்தின் பேர் என்ன?

7

அ) கத பறையும்போல்

ஆ) கத ஸ்நேகம்போல்

இ) குசேலோபாக்ய கதா

ஈ) ஒரு வடக்கன் வீர கதா

8

கண்ணன் வேசம் என்றால் அது சினிமாவில், by default, என்.டி.ராமாராவ் தான்!

ஆனால் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், ஒரு சில படங்களில் கண்ணன் வேசம் கட்டியுள்ளார்! ஏதாச்சும் ஒரு படம் சொல்லுங்க பார்ப்போம்! (அந்த வேடம் வரும் context-உம் சேர்த்து சொன்னா, பரிசு கொடுக்க நல்லா இருக்கும் :-)

8

படிக்காத மேதை (ரங்காராவுக்கு எங்கிருந்தோ வந்தான்-இடைச் சாதி நான் என்றான் என்ற பாட்டில், கண்ணனாய்த் தெரிவார், ஒரு சிகிரெட் டப்பாவின் மீது)

மூன்று தெய்வங்கள்

9

நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா! - கண்ணே கனியமுதே படத்தில் அருமையான பாரதியார் பாடல்!

MSV இசையில் இதைப் பாடினவங்க யார்?

9

அ) யேசுதாஸ்-சித்ரா

ஆ) மனோ-சித்ரா

இ) மனோ-ஷைலஜா

ஈ) யேசுதாஸ்-சசிரேகா

10

கர்ணன் படத்தில் என்.டி. ராமராவ் கெளரவர்களின் சபைக்குத் தூது பேச வருவார்! அப்போது நடக்கும் விவாதத்தில், சூதாட ஒப்புக் கொண்டது மட்டும் யோக்கியமான செயலா என்ற கேள்வி கேட்கப்படும்!

அப்போது, "விதி விட்டு விலகிச் சதி செய்ததை மறக்காதே; இப்போது நீதி செய்யவும் மறுக்காதே", என்று ராமாராவ் வசனம் பேசுவார்.

இது யாரை எதிர்த்துப் பேசப்படும் வசனம்?

10

அ) சகுனி-நம்பியார்

ஆ) கர்ணன்-சிவாஜி

இ) துரியோதனன்-அசோகன்

ஈ) சகுனி-வி.எஸ்.ராகவன்





இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1

2 அ) ரெண்டு-இமான் ஆ) சிநேகிதியே-வித்யாசாகர் இ) ரெண்டு-யுவன் சங்கர் ராஜா ஈ) ஆழ்வார்-ஸ்ரீ காந்த் தேவா

3 அ) ஜீவன்-நமீதா ஆ) அஜீத்-மாளவிகா இ) ஜீவன்-கீர்த்தி சாவ்லா ஈ) ஆஜீத்-ஜோதிர்மயீ
4 அ) சுசீலா-MSV ஆ) லீலா-ஜி.ராமநாதன் இ) சுசீலா-கேவி மகாதேவன் ஈ) வாணி ஜெயராம்-MSV
5 அ) தியாகராஜர்-கேவி மகாதேவன் ஆ) புரந்தரதாசர்-கண்டசாலா இ) புரந்தரதாசர்-புரந்தரதாசர் ஈ) சதாசிவ பிரம்மேந்திரர்-கேவி மகாதேவன்
6 அ) வாலி-ஹரிணி ஆ) பாபநாசம் சிவன்-கல்யாணி மேனன், சைந்தவி இ) ஊத்துக்காடு-ஹரிணி, கல்யாணி மேனன், ராமலட்சுமி ஈ) வாலி-ஹரிணி, சுதா ரகுநாதன், ராமலட்சுமி
7 அ) கத பறையும்போல் ஆ) கத ஸ்நேகம்போல் இ) குசேலோபாக்ய கதா ஈ) ஒரு வடக்கன் வீர கதா
8
9 அ) யேசுதாஸ்-சித்ரா ஆ) மனோ-சித்ரா இ) மனோ-ஷைலஜா ஈ) யேசுதாஸ்-சசிரேகா
10
அ) சகுனி-நம்பியார் ஆ) கர்ணன்-சிவாஜி இ) துரியோதனன்-அசோகன் ஈ) சகுனி-வி.எஸ்.ராகவன்

87 comments:

  1. எப்போதும் போல மீ த வெயிட்டிங் ஃபார் ஆன்ஸர்ஸ்.... :-)

    ReplyDelete
  2. தல

    கொஞ்சம் கஷ்டம் தான்...

    1. முத்தைய்யா
    2. ஆ
    3. இ
    4. ஆ
    5. -
    6. ஆ
    7. கதை பரையும் போல்
    8. -
    9. ஆ
    10. ஈ

    அப்பறம் காப்பி பேஸ்ட் இடத்துல ரெண்டு இடத்துல ஒரே கேள்வி வருது...அதையும் சரி பாருங்கள் ;)

    ReplyDelete
  3. மாப்பி கோபி
    நீ தாம்மா இன்னிக்கி மொத போணி!
    5,8=no attempt
    6,9,10=wrong
    =5/10

    கூகுள்-ல ஈசியா அடிச்சிறலாம் கோபி!இன்னொரு தபா அடிச்சி ஆடுங்க!

    காப்பி பேஸ்ட் எரர் கரெக்டியாச்சி! நன்றி! :-)
    என்னாது, கேள்வி எல்லாம் கஷ்டமா? இசை பிஸ்து உனக்கேவா? ஓ நோ!

    ReplyDelete
  4. என்னத்தைச் சொல்றது??? எல்லாப் பாட்டும் கேட்டிருந்தாலும் சினிமா விஷயமா?? யார், யார், எதைப் பாடினாங்க, பாடலைனு கவனிக்காம போயிட்டேனே?? நச், நச், நச்,
    7-க்கு மட்டும் விடை தெரியும்,

    "கதை பறையும் போள்" மலையாள சினிமாவைத் தழுவி, குசேலன் எடுக்கப் படுகிறது. வரேன், :((((((((((((((

    ReplyDelete
  5. அட, முதல் கேள்விக்குத் தெரியுமே??
    கவிஞரின் இயற்பெயர் முத்தையா!!!

    ReplyDelete
  6. 4-க்கு பி.லீலா, ஜி. ராமநாதன்,

    5-க்கு புரந்தரதாஸர், கண்டசாலா

    சரியா, தப்பா, தெரியலை!

    ReplyDelete
  7. 6-ம் கேள்விக்கு, வாலி-ஹரிணி
    8-ம் கேள்விக்கு மூன்று தெய்வங்கள் படம்,

    ReplyDelete
  8. 9-ம் கேள்விக்கு யேசுதாஸ்-சசிரேகா,
    10-ம் கேள்விக்கு கர்ணன் - சிவாஜி

    ஏதோ எழுதி இருக்கேன், பார்த்துக் கொடுங்க, வாங்கிக்கறேன். :P

    ReplyDelete
  9. தல

    2வது முறை

    6. இ
    8. முன்று தெய்வங்கள்
    9. இ
    10. இ

    ReplyDelete
  10. \\\என்னாது, கேள்வி எல்லாம் கஷ்டமா? இசை பிஸ்து உனக்கேவா? ஓ நோ!\\\\\

    இன்னாது...நான் இசை பிஸ்தா!!!...இதெல்லாம் ஒவரு ஆமா ;))

    ReplyDelete
  11. எல்லாம் சினிமாவாப் போச்சுதே!! நமக்குத் தெரியாத சப்ஜெக்ட். ஓரமா இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  12. முயன்று பார்க்கிறேன் இரவிசங்கர்.

    1. சுப்பையா (நம்ம வாத்தியார் பேரு தான் அவருக்கும்)
    2. ஆ) சிநேகிதியே-வித்யாசாகர்
    3. இ) ஜீவன்-கீர்த்தி சாவ்லா
    4. ஆ) லீலா-ஜி.ராமநாதன் (Is there a Wordpress kannan songs blog also? Google gave me the link)
    5. ஈ) சதாசிவ பிரம்மேந்திரர் -கேவி மகாதேவன் (did not google for this. I knew the answer for sure. Original song is everyone's favorite and this song from the movie is G.Raa's favorite)
    6. இ) ஊத்துக்காடு-ஹரிணி, கல்யாணி மேனன், ராமலட்சுமி (did not google for this too. Correct thAnnE?)
    7. அ) கத பறையும்போல்
    8. படிக்காத மேதை படத்தில் பாரதியாரின் 'எங்கிருந்தோ வந்தான்' பாடலின் போது சிவாஜி கணேசன் கண்ணன் வேடத்தில் வருவார்.
    9. ஈ) யேசுதாஸ்-சசிரேகா
    10. ஆ) கர்ணன்-சிவாஜி

    ReplyDelete
  13. 6வது கேள்வியை சற்றே மாற்றிப் போட வேண்டுமோ?

    ReplyDelete
  14. 1. Muthaiah
    2. ஆ) சிநேகிதியே-வித்யாசாகர்
    3. இ) ஜீவன்-கீர்த்தி சாவ்லா
    4.ஆ) லீலா-ஜி.ராமநாதன்
    5. ஈ) சதாசிவ பிரம்மேந்திரர் -கேவி மகாதேவன்
    6.இ) ஊத்துக்காடு-ஹரிணி, கல்யாணி மேனன், ராமலட்சுமி
    7. அ) கத பறையும்போல்
    8. Padikkadha Medhai - In engirundho Vandhan Song.
    9.ஈ) யேசுதாஸ்-சசிரேகா
    10.அ) சகுனி-நம்பியார்

    ReplyDelete
  15. சாரி மக்கா...
    ஆபீஸ்-ல புது அறை எனக்கு!
    எல்லாம் வாஸ்து தான்!:-)
    அதான் வந்தவுடன் Blog பக்கம் வரமுடியலை! இதோ...ஆரம்பிச்சாச்சு!..

    ReplyDelete
  16. Geethamma
    1,4,7,9,10 correct!
    =5/10

    Jooper, meethi anji?

    ReplyDelete
  17. Again @ Geethamma
    Sorry, unga sivaji as kannan answer paakala!
    correctaaa cholli kavuthiteenga!:-)
    Awesome=6/10

    ReplyDelete
  18. Again @Gopi
    6&8 correct!
    9&10 retry! :-)
    =7/10

    Nee thaan pa ippothikku leadinguuu!
    Vidaama aadu! :-)

    ReplyDelete
  19. @Kumaran
    K for Kalakkal! K for Kumaran
    =10/10

    ReplyDelete
  20. ப்ரசன்னா
    கலக்கல்ஸ்!
    All correct except 10.
    =9/10

    இன்னொரு தபா? :-)

    ReplyDelete
  21. இங்கேயும் குமரனருள் தப்பு தப்பு முருகனருள் தான் முன்னிற்குதா? முருகன் குமரன் பெயர்ல குழந்தைகளுக்குப் பரிசு குடுங்க. கண்ணனுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். :-)

    ReplyDelete
  22. 1 Muthiah
    2 ஆ) சிநேகிதியே-வித்யாசாகர்
    3 இ) ஜீவன்-கீர்த்தி
    4 ஆ) லீலா-ஜி.ராமநாதன்
    5. ஈ) சதாசிவ பிரம்மேந்திரர்-கேவி மகாதேவன்
    6 இ) ஊத்துக்காடு-ஹரிணி, கல்யாணி மேனன், ராமலட்சுமி
    7 அ) கத பறையும்போல்
    9 ஈ) யேசுதாஸ்-சசிரேகா
    10
    அ) சகுனி-நம்பியார்

    Waiting for answer for Question 8 from you

    ReplyDelete
  23. Gnanaraja
    8=no attempt
    10=wrong
    =8/10

    எட்டு ரொம்ப ஈசிங்க! கோபியும் கீதாம்மாவும் கொஞ்சம் கஷ்டமான ஆனால் சரியான பதிலைச் சொல்லி இருக்காங்க!
    குமரன் பலரும் விரும்பிய படத்தில் இருந்து ஈசியான பதிலைப் புடிச்சிட்டாரு!

    ReplyDelete
  24. 9 தப்பா??? அட, அதான் சரின்னு நினைச்சேனே??? :((( மத்ததெல்லாம் படம் பேரே புதுசு!! :))))))))

    ReplyDelete
  25. //அலைபாயுதே படத்தில் வரும் அலைபாயுதே கண்ணா, என் மனம், அலை பாயுதே - இந்தப் பாடல் அனைவருக்கும் தெரியும்!

    இதைப் படத்தில் பாடியது யார் யார்? எழுதியவர் யார்?//

    எழுதினவர் யாருங்கிற கேள்வியைப் பார்க்காமல் போனேன்,. இ. தான் சரியான பதில், 6-வது கேள்விக்கு!!!
    6


    இ) ஊத்துக்காடு-ஹரிணி, கல்யாணி மேனன், ராமலட்

    ReplyDelete
  26. //சங்கராபரணம் படத்தில் வரும் ஒரு கண்ணன் பாட்டு மிகவும் இனிமையான மெலடி பாடல்! நிசப்தமான இரவில் சிஷ்யன் பாட, அவனுக்குப் பாட்டு பாதியில் மறந்து போக, மீதிப் பாட்டை சோமையாஜூலு தூங்கிக்கிட்டே கன்டினியூ பண்ணுவார்!

    அந்தப் பாட்டை எழுதியது யார்? இசை அமைப்பாளர் யார்?
    5


    ஈ) சதாசிவ பிரம்மேந்திரர் -கேவி மகாதேவன்//

    இசை அமைப்பாளர் கே.வி.சார், தான், ஆனால் எழுதினதுதான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு!! என்றாலும் இம்முறை சரின்னே நினைக்கிறேன்.

    //கோபியும் கீதாம்மாவும் கொஞ்சம் கஷ்டமான ஆனால் சரியான பதிலைச் சொல்லி இருக்காங்க! //

    ஹிஹிஹி, மூன்று தெய்வங்களை முந்நூறு முறையாவது பார்த்துச் சரித்திரம் படைச்சிருக்கோமில்ல???

    மத்தது நிச்சயமாத் தெரியாதுங்கோ!!! ஜூட்!!!!!!!!!

    ReplyDelete
  27. 8. Engiruntho vandan song from Padikatha Methai
    righta??

    ReplyDelete
  28. //கீதா சாம்பசிவம் said...
    9 தப்பா??? அட, அதான் சரின்னு நினைச்சேனே??? //

    என்னாச்சு கீதாம்மா!
    வரவர பின்னூட்டத்தைப் படிக்காமலேயே பதில் கொடுக்கத் துடிக்கறீங்க! "அங்கேயும்" அப்படித் தான் ஆச்சு! :-))

    நல்லாப் பாருங்க
    //Geethamma
    1,4,7,9,10 correct!//

    Who is the blacksheep whoz bothering you?
    அ. Ambi??
    ஆ. Tata Indicom?
    இ. KRS???
    :-))))

    ReplyDelete
  29. Please check Q10 it is nambiyar i got it from the below blog

    http://marathamizhan.blogspot.com/2007/01/geethopadesam-scene-from-karnan.html

    ReplyDelete
  30. 1. முத்தையா
    2. ஆ) சிநேகிதியே-வித்யாசாகர்
    3. இ) ஜீவன்-கீர்த்தி சாவ்லா
    4. ஆ) லீலா-ஜி.ராமநாதன்
    5. ஈ) சதாசிவ பிரம்மேந்திரர்-கேவி மகாதேவன்
    6. இ) ஊத்துக்காடு-ஹரிணி, கல்யாணி மேனன், ராமலட்சுமி
    7. அ) கத பறையும்போல்
    8.
    9. ஈ) யேசுதாஸ்-சசிரேகா
    10. இ) துரியோதனன்-அசோகன்

    ReplyDelete
  31. 1. முத்தையா
    2. ஆ) சிநேகிதியே-வித்யாசாகர்
    3.
    4. ஆ) லீலா-ஜி.ராமநாதன்
    5. ஈ) சதாசிவ பிரம்மேந்திரர் -கேவி மகாதேவன்
    6. இ) ஊத்துக்காடு-ஹரிணி, கல்யாணி மேனன்
    7 அ) கத பறையும்போல்
    8.
    9. ஈ) யேசுதாஸ்-சசிரேகா
    10.

    10ல ஏழு விடை சொல்லியிருக்கேன். இதுல இரண்டு படம் தான் (கர்ணன், அலைபாயுதே) பார்த்துருக்கேன். மத்த எல்லாம் ஆண்டவர் அருள்:-) மத்த மூன்று விடைகளும் நேரம் இருந்தா ஆண்டவரைச் சுத்தி வந்து சொல்கிறேன்.

    ReplyDelete
  32. //என்னாச்சு கீதாம்மா!
    வரவர பின்னூட்டத்தைப் படிக்காமலேயே பதில் கொடுக்கத் துடிக்கறீங்க! "அங்கேயும்" அப்படித் தான் ஆச்சு! :-))//

    ஹிஹிஹி, படிச்சேன், ஆனால் சந்தேகமா இருந்துச்சு, அதான்!!! இப்படியா சபையிலே வச்சு மானத்தை வாங்கறது?????? விடுங்க ஆளை!!! வரேன், அதான் பாஸ் பண்ணிட்டேன் இல்லை????? :P

    ReplyDelete
  33. Again @ Geethamma
    5&6 correct

    ம்ம்ம்ம் ஒரு மார்க் குறையுதே??? மறு மதிப்பீடுக்குப் போகணுமோ???
    ஏற்கெனவே
    1,4,7,9,10 correct! அடுத்து 8-ம் சரி, அப்புறம் இரண்டாம் முறை, மேலதிக மதிப்பெண்ணுக்காகக் கொடுத்த பரிட்சையில் 5,6 சரி, கூட்டிப் பாருங்க வாத்தியாரே!
    வாத்தியார் இப்படி இருந்தால், என்னத்தைப் பண்ணறது?? :P :P :P

    ReplyDelete
  34. Again @ Gnanaraja
    Sivaji as Kannan answer correct!
    10. Nambiyaar padauthla nadichaara enna? Sakuni is NOT Nambiyar!

    Sivaji answers to that question posed by some other person, not nambiyaar! :-)

    ippo Gnanaraja=9/10

    ReplyDelete
  35. 1. முத்தையா
    2. ஆ) சிநேகிதியே-வித்யாசாகர்
    3. இ) ஜீவன்-கீர்த்தி சாவ்லா
    4. ஆ) லீலா-ஜி.ராமநாதன்
    5. ஈ) சதாசிவ பிரம்மேந்திரர்-கேவி மகாதேவன்
    6. இ) ஊத்துக்காடு-ஹரிணி, கல்யாணி மேனன், ராமலட்சுமி
    7. அ) கத பறையும்போல்
    8.
    9. ஈ) யேசுதாஸ்-சசிரேகா
    10. இ) துரியோதனன்-அசோகன்

    ReplyDelete
  36. Again Again @ Geethamma

    Che Che; Kochikatheenga Geethamma! Venumnaa, Unga perla naan paattu paadi tharen! :-)

    //கூட்டிப் பாருங்க வாத்தியாரே!
    வாத்தியார் இப்படி இருந்தால், என்னத்தைப் பண்ணறது?? :P :P :P//

    பலே! சபாஷ்! கீதாம்மாவா? கொக்கா?
    பின்னறீங்களே! :-)
    மறு மதிப்பீடு செஞ்சாத் தானே காசு பாக்க முடியும்! அதான்! :-)
    =8/10

    ReplyDelete
  37. @தமிழ்ப்ரியன்
    8,10 தவிர அனைத்தும் சரி!
    =8/10

    ReplyDelete
  38. @கெபி அக்கா
    சொன்ன ஏழு வடையும் சரி!
    =7/10

    மத்த மூனுக்கு, மூனு சுத்து சுத்தி வாங்க உங்க கூகுள் ஆண்டவரை!
    ஆனாப் பழம் புள்ளையாருக்கு எப்பவோ போயிரிச்சி! பாவம் முருகா நீயி! :-)

    ReplyDelete
  39. 9. ஆ) கர்ணன்-சிவாஜி கண்டிப்பாக சகுனி இல்லை. சகுனியாக நடித்தது முத்தையா... ;))

    ReplyDelete
  40. தமிழ்ப்ரியன்!
    சூப்பரு! 10th answer cheriye!
    appdiye oru 8 pottu, 8kkum answer chollirunga! :-)
    =9/10

    ReplyDelete
  41. //குமரன் (Kumaran) said...
    இங்கேயும் குமரனருள் தப்பு தப்பு முருகனருள் தான் முன்னிற்குதா?//

    எங்கும் முருகனுருள் தான் முன்னிற்கும் குமரன்!
    இதுல என்ன சந்தேகம்?

    கண்ணனருளை நோக்கிச் செல்ல முருகன் அருள் தான் முன்னே நிற்கும்!

    //முருகன் குமரன் பெயர்ல குழந்தைகளுக்குப் பரிசு குடுங்க. கண்ணனுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். :-)//

    ஆயிரம் மரியாதை வந்தாலும், மருகனுக்கு மாமன் வீட்டு மரியாதை போல் வருமா?

    ReplyDelete
  42. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    6வது கேள்வியை சற்றே மாற்றிப் போட வேண்டுமோ?//

    ஜீவா!
    டேங்கீஸ்! மாத்தியாச்சே! :-)

    ReplyDelete
  43. @Kumaran

    Manasa Sancharare! Tamizh version already done! Credit: Shylaja akka!

    Wordpress Kannan Songs was done as backup, sometime back, when new blogger was out!

    ReplyDelete
  44. Thanks for updating my scores. i agree with you for Q10. i have noticed your reply to my posts are in English :( i cant use tamil fonts since this is office PC. But you can reply in Tamil right? what is meant by Madhavipandhal? i know madhavi 2nd w/o Kovalan. I know wahat Pandhal meant in tamil. but what is the connection? it is time to leave office. take care happy weekend.

    ReplyDelete
  45. //Manasa Sancharare! Tamizh version already done! Credit: Shylaja akka!
    //

    I knew the first part. Now I know who translated. Thanks Thiruvarangapriya akkaa.

    I am planning to sing this song only next. :-)

    ReplyDelete
  46. //பழம் புள்ளையாருக்கு எப்பவோ போயிரிச்சி! // நீங்க யாரை பிள்ளையாருங்கறீங்க? :-)

    படமே பாக்காம இம்புட்டு சொல்லியிருக்கேன்! It's all about Participation!

    ReplyDelete
  47. //Gnana Raja said...
    i have noticed your reply to my posts are in English :(//

    மன்னிக்கவும் ஞான ராஜா!
    சில சமயம் அலுவலக நெருக்கடிகளில், இது போன்று ஆங்கிலத்திலேயே டைப்பி விடுவேன் பலருக்கும்! அதுவும் ஸ்கோர் சொல்லும் பதிவுகளில், எண்-எழுத்து ன்னு மாற்றி மாற்றித் தட்டச்சும் போது!
    தப்பா எடுத்துக்காதீங்க! :-)

    //what is meant by Madhavipandhal? i know madhavi 2nd w/o Kovalan. I know wahat Pandhal meant in tamil. but what is the connection?//

    ஐயகோ! கண்ணகி-மாதவி கன்பூசன் ஆயிருச்சா இது? :-)
    இதுக்கு ஒரு முறை நகைச்சுவை விளக்கம் கொடுத்திருக்கேன், கவுண்டமணி ஐயா மூலமாக! இங்கிட்டுப் பாருங்க!
    http://vavaasangam.blogspot.com/2007/08/2_08.html

    திருப்பாவை வரிகள்:
    "மாதவிப் பந்தல்" மேல் பல் கால் குயில் இனங்கள் கூவின காண்!

    மாதவிக் கொடி என்பது செண்பகப் பூச்செடி போல ஒரு வாசனைச் செடி வகை! கண்ணன் வீட்டில் படரும் இந்தக் கொடி மேல் குயில் எல்லாம் கூவுது! இன்னுமா உறக்கம், வாங்க போகலாம்-ன்னு ஆண்டாள் தம் தோழீஸைக் காலிங்! வில்லிபுத்தூர் ஆலயத்திலும் இந்தப் பந்தல் உண்டு!

    இங்கு என் பதிவுகளிலும், பல பதிவர்கள், நண்பர்கள் எல்லாம் குயில் போல் கூவி, கானம் பாடுகிறார்கள்! இறைவனின் குணானுபவங்களைப் பகிர்ந்து மகிழ்கிறார்கள்! அதான் அப்படி பேரு வச்சேன்!

    Blog வந்த புதுசு! எழுத முடியுமா என்று அச்சம்! பல பதிவர்களின் எழுத்தழகைப் பார்த்து ஏக்கம்! வெறுமனே பராக்கு பார்த்துக் கொண்டிருந்தேனா?

    அப்போ வலைப்பூவுக்கு ஒரு நல்ல தலைப்பா எடுத்துக் கொடுப்பா ராசா-ன்னு கிளி கிட்ட கேட்டேன்!
    அவள் தோளுக்கினிய கிளி எடுத்துக் கொடுத்த சீட்டே "மாதவிப் பந்தல்"!

    //it is time to leave office. take care happy weekend//

    இனிய வாரயிறுதி! என்சாய் மாடி!:-)

    ReplyDelete
  48. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  49. ஜிரா
    All correct except 10!
    அந்த வசனம் வேறு ஒரு நல்லவனை நோக்கி!
    ரெண்டாம் தபா ஆடுங்க
    =9/10

    ReplyDelete
  50. 1. முத்தையா
    2. சிநேகிதியே - வித்யாசாகர்
    3. ஜீவன் - கீர்த்தி சாவ்லா
    4. ஆ .லீலா- ஜிராமநாதன்
    5. அ) தியாகராஜர்-கேவி மகாதேவன்??
    6. ஊத்துக்காடு-ஹரிணி, கல்யாணி மேனன், ராமலட்சுமி
    7. அ) கத பறையும்போல்
    8. தசாவதாரம்? :))
    9. ஈ. ஜேசுதாஸ்,சசிரேகா
    10. இ) துரியோதனன்-அசோகன்??

    ReplyDelete
  51. @kappi
    இது எங்க கப்பி தானே? இல்ல போளியா?
    5=1/2 thappu(tyagarajar paattu romba paduveengalo?)
    8=dasavatharaama? nakkala? sivaji vedathula kamal nadikka idea kodukkariyee nee? :-))
    10=thappu

    = 7.5/10

    ReplyDelete
  52. மை ஃபிரெண்டு வூட்ல சாப்பிடக் கூப்டுருக்காங்கோவ்!
    ஸோ, மீ ஈட்டிங் & கம்மிங் & ரிசல்ட் ஒட்டிங்!
    வெயிட் மாடி மக்களே! :-))

    ReplyDelete
  53. 8. படிக்காத மேதை படத்தில் வரும் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் என்ற பாடலில் ரங்காராவ் சிவஜியின் குணங்களை கண்ணனுக்கு ஒப்பிட்டு பாடுவார். அதில் வரும் பாரதி புத்தகத்தில் கண்ணனாக சிவாஜி தோன்றுவார்.

    ReplyDelete
  54. 8. படிக்காத மேதை படத்தில் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் என்ற பாடலில் ரங்காராவுக்கு சிவாஜி உதவுவதை அவர் நினைத்து, சிவாஜியை கண்ணனுக்கு ஒப்பிட்டு பாடுவார். பாரதியின் நூலில் ரங்கன் சிவாஜி கண்ணன் வேடத்தில் வருவார்.

    ReplyDelete
  55. 1. முத்தையா
    2. ஆ) சிநேகிதியே-வித்யாசாகர்
    3. இ) ஜீவன்-கீர்த்தி சாவ்லா
    4. ஆ) லீலா-ஜி.ராமநாதன்
    5.அ) தியாகராஜர்-கேவி மகாதேவன்
    6.இ) ஊத்துக்காடு-ஹரிணி, கல்யாணி மேனன், ராமலட்சுமி
    7. அ) கத பறையும்போள்
    9.ஈ) யேசுதாஸ்-சசிரேகா
    10. ஆ) கர்ணன்-சிவாஜி

    ReplyDelete
  56. //நீங்க யாரை பிள்ளையாருங்கறீங்க? :-)//

    கெ.பி.

    வேற யாரைச் சொல்லியிருப்பாருங்கறீங்க? நேருல பாத்தீங்கன்னா நீங்களும் சொல்லுவீங்க. ஆனா யாரைன்னு மட்டும் சொல்ல மாட்டேன். :-)

    ReplyDelete
  57. தமிழ்ப்ரியன்
    கலக்கல்!
    10/10

    நீங்க சொன்ன சிவாஜி படம் ஈசி! கஷ்டமான விடையும் ஒன்னு இருக்கு! :-)

    ReplyDelete
  58. என்னோட 8 வது கேள்விக்கான பதில் படிக்காத மேதையில் வரும் எங்கிருந்தோ வந்தான் என்ற பின்னூட்டம் கிடைக்கலையா.... :(((((

    ReplyDelete
  59. சின்ன அம்மிணி அக்கா
    All correct, except 5
    Athu Thiyagarajara?
    Wanna try again?
    I will wait for half hour, before publishing! :-)

    =9/10

    ReplyDelete
  60. ஈ) சதாசிவ பிரம்மேந்திரர் -கேவி மகாதேவன்
    கேரெஸ், இப்பயும் நான் 9\10 தான், ஏன்னா சிவாஜி போட்ட கண்ணன் வேஷம் என்னன்னு யோசிச்சுட்டிருக்கேன்

    ReplyDelete
  61. இப்படி ராத்திரி தூங்காம புதிர் விடை போடறதுக்கு, வைகுண்ட ஏகாதசிக்கு கண்விழிச்ச பலன் கிடைக்கட்டும் உங்களுக்கு

    ReplyDelete
  62. @குமரன்
    என்னை மன்னித்து விடுங்கள்!
    கவிஞரின் இயற்பெயருக்கு உங்களின் விடை தவறு! அவசரத்தில் "ஐயா" என்று முடிவதை மட்டும் பார்த்து சரி என்று சொல்லி விட்டேன்!

    ரெண்டாம் ஆட்டம் ஆடுறீங்களா?
    தூங்கிட்டீங்க-ன்னா, can wait until saturday morning!

    Really Sorry!

    ReplyDelete
  63. 1) Muthiah
    2) ஆ) சிநேகிதியே-வித்யாசாகர்

    3) இ) ஜீவன்-கீர்த்தி சாவ்லா

    4) Kaathiruppaan
    Singer : லீலா-ஜி.ராமநாதன்
    Lyrics : Sundara Vadyar T K

    5) Lyricist: Sadasiva Brahmendra
    Singer: Vani Jairam , SPB
    Music Director: Mahadevan KV


    6) Singer : Harini, Kalyani Menon, Neyveli Ramalakshmi
    Lyrics : Oothukkadu Venkatasubbier

    7) "கத பறையும்போல்"
    8)# Uruvangal Maaralam ( Correct answer will be provided later :) ) .

    9) M.S.Viswanathan K.J.Yesudas , B.S.Sasirekha
    10) ஆ) கர்ணன்-சிவாஜி

    ReplyDelete
  64. //என்னை மன்னித்து விடுங்கள்!
    கவிஞரின் இயற்பெயருக்கு உங்களின் விடை தவறு! அவசரத்தில் "ஐயா" என்று முடிவதை மட்டும் பார்த்து சரி என்று சொல்லி விட்டேன்!//

    ஹா,ஹா, அப்போ குமரனும் இல்லை/// :))))))

    ReplyDelete
  65. 10. அப்ப விடை கர்ணன் - நடிகர் திலகம்தான்.

    ReplyDelete
  66. தல

    கடைசி முறை

    9. ஈ

    10. ஆ

    ReplyDelete
  67. பத்தாவது கேள்விக்குத் திரும்பவும் பதில் சொன்னேனே.. வந்திருச்சா? வரலையா?

    ReplyDelete
  68. 1.முத்தையா
    2.ஆ) சிநேகிதியே-வித்யாசாகர்
    3.அ) ஜீவன்-நமீதா
    4.ஆ) லீலா-ஜி.ராமநாதன்
    5.ஆ) புரந்தரதாசர்-கண்டசாலா
    6.இ) ஊத்துக்காடு-ஹரிணி, கல்யாணி மேனன், ராமலட்சுமி
    7.அ) கத பறையும்போல்
    8. படிக்காத மேதை
    9.ஈ) யேசுதாஸ்-சசிரேகா
    10.இ) துரியோதனன்-அசோகன்

    ReplyDelete
  69. 1. muththaiyaa
    2. சிநேகிதியே-வித்யாசாகர்
    3. ஜீவன்-கீர்த்தி சாவ்லா
    4. லீலா-ஜி.ராமநாதன
    5. சதாசிவ பிரம்மேந்திரர் -கேவி மகாதேவன்
    6. ஊத்துக்காடு-ஹரிணி, கல்யாணி மேனன், ராமலட்சும
    7.
    8. veera abimanyu.
    9. யேசுதாஸ்-சசிரேகா
    10. துரியோதனன்-அசோகன

    ReplyDelete
  70. இரவிசங்கர்.

    இப்பத் தான் உங்க பின்னூட்டம் பார்த்தேன். தப்பா சொல்லியிருக்கேனா? சரி. கூகிளாண்டவரே சரணம். இப்ப சரியா சொல்றேன். ஆனா பரிசு குடுக்குறப்ப பார்த்து குடுங்க. ஒரே தடவையில பத்தும் சரியா சொன்னவங்க இருந்தா அவங்க தான் வெற்றியாளர்.

    1. முத்தையா

    முத்தையனோ சுப்பையனோ இரண்டுமே முத்துக்குமரன் சுப்பிரமணியனைக் குறிப்பதால் குழம்பிவிட்டேன் போல. :-)

    ReplyDelete
  71. இப்ப என்னத்த சொல்றது? பிள்ளையாரை பிடிச்சுட்டு எங்களை குரங்கு ஆக்கிட்டீங்கன்னா?

    எல்லாருக்கும் ஜிரா கமென்ட் வேற ரிலீஸ் பண்ணியாச்சு. எனவே, யார் வேண்ணா பிள்ளையார் ஆகலாம், ஜனநாயக உலகம்.

    நடக்கட்டும். முருகனருள் முன்னிற்கும்:-)

    ReplyDelete
  72. ஆல் மக்கள்ஸ், சாரீ...
    நண்பர் வீட்டிலேயே நேற்று இரவு தங்கி விட்டதால், இப்போ தான் வீடு வந்து சேர்ந்தேன்!
    இதோ...முடிவுகள், சில நிமிடங்களில்!

    ReplyDelete
  73. @அனந்த லோகநாதன்!
    எல்லாம் சரி! 8 ஐத் தவிர!

    நீங்க சொன்ன படத்தில் சிவாஜி, கண்ணன் வேடத்தில் வருகிறாரா என்ன?

    =9/10

    ReplyDelete
  74. ஜிரா
    கலக்கல்!
    =10/10

    பாருங்க ரெண்டாம் ஆட்டத்தில் ஒரு நல்லவனை கரெக்டா அடையாளம் கண்டுக்கிட்டீங்க!:-)

    ReplyDelete
  75. @கோபி
    ஜூப்பரு
    =10/10

    மூனு ரவுண்டா? :-)

    ReplyDelete
  76. @நிஜமா நல்லவன்
    3,5,10 thappu-nga
    =7/10

    அட, நமீதா எங்க அந்த ரோல்ல வந்தாங்க? எப்பவும் நமீ ஞாபகம்? :-)

    ReplyDelete
  77. @தமிழரசன்
    7,8,10 தப்புங்க!
    =7/10

    ReplyDelete
  78. பரிசு எப்படித் தரலாம் மக்கா?

    குமரன், ஜிரா இருவரும் ரெண்டாம் ஆட்டத்தில் 10/10

    குமரன், ப்ரசன்னா முதல் ஆட்டத்திலேயே 9/10


    Here are the scores.
    geethamma=6, 8
    gopi=5, 7, 10
    kumaran=9
    prasanna=9
    gnana raja 8, 9
    tamizh priyan 8, 9, 10
    kepi akka 7
    gira 9, 10
    kappi 7.5
    chinna ammini=9
    anatha loganathan 9
    nijama nallavan 7
    tamizharasan 7

    ReplyDelete
  79. ஜிராவின் விடைகள்

    G.Ragavan has left a new comment on the post "புதிரா? புனிதமா?? - தமிழ் சினிமாவில் கண்ணன்!":

    1. முத்தைய்யா
    2. சிநேகிதியே - வித்யாசாகர்
    3. ஜீவன் - கீர்த்தி சாவ்லா
    4. லீலா - ஜி.ராமநாதன்
    5. சதாசிவ பிரம்மேந்திரர் - கே.வி.மகாதேவன் - வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். மானச சஞ்சரரே...
    6. ஊத்துக்காடி, ஹரிணி, கல்யாணிமேனன், ராமலட்சுமி
    7. கத பறயும்போழ்
    8. எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான்...இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்... ஆகா...தன்னை வீட்டில் வைத்து வேலைக்காரனாக வளர்த்தாலும் ரங்காராவின் அன்புக்குத் துணையாக எங்கும் எதிலும் கண்ணனாக வருவாரே..
    மூன்று தெய்வங்கள் படத்திலும் வருவார். ஆனால் அதில் விஷ்ணுவாக வருவார்.
    9. பி.எஸ்.சசிரேகா - கே.ஜே.யேசுதாஸ்
    10. துரியோதனன் - அசோகன்

    ReplyDelete
  80. நாக்கு ஒக்க சந்தேகம்...ஏமண்ட்டே... நேனு முதட்லோ உத்தரம் செப்பேப்புடே 9/10 செப்பேனுகா? அட்லுண்ணேப்புடு..

    // குமரன், ப்ரசன்னா முதல் ஆட்டத்திலேயே 9/10 // அண்ட்டே......... :-) நா பேரு அக்கட ராவலிகாதா? :D

    இது கண்ணன் பாடல் பதிவு என்பதால் குமரன் பெயரிலேயே பரிசைக் குடுத்து விடுங்கள். அதுவே பொருத்தம்.

    ReplyDelete
  81. ///படம் போட்ட கதைப் புத்தகங்களின் தொகுப்பு (ஆயிரம் ரூபாய்க்கு), முதல் வெற்றியாளரின் பெயரில் வழங்கப்படும்///
    முதல் வெற்றியாளர் ????????? (முதலில் பத்துக்கும் விடை சொல்பவர்)
    முதல் மதிப்பெண் எடுக்கும் வெற்றியாளர் !!!!!!!!! (குறைந்த முறைகளில் பத்துக்கும் விடை சொல்பவர்)...........
    கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை... :))))
    ///இது கண்ணன் பாடல் பதிவு என்பதால் குமரன் பெயரிலேயே பரிசைக் குடுத்து விடுங்கள். அதுவே பொருத்தம்.////
    இதுக்கு ஒரு பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  82. ///kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    @நிஜமா நல்லவன்
    அட, நமீதா எங்க அந்த ரோல்ல வந்தாங்க? எப்பவும் நமீ ஞாபகம்? :-)
    //


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  83. @ஜிரா
    // குமரன், ப்ரசன்னா முதல் ஆட்டத்திலேயே 9/10 // அண்ட்டே......... :-) நா பேரு அக்கட ராவலிகாதா? :D

    ஹிஹி!
    நூ பேரு அக்கட, இக்கட, எக்கட, பூக்கடை, அன்னி கடைலையும் ஒஸ்துன்னானண்டி!

    ஷமிஞ்சண்டி ராகவ ராவ்!
    ராவோட ராவா நிறைய வேலை!
    அதான் ப்ளாக் பக்கம் வர முடியலை!

    மொத ரெண்டு பேரு மட்டும் தான் shortlist செஞ்சேன்!
    முதல் வெற்றியாளர் தானே எடுக்கப் போறோம்! அதான் ரெண்டோட நிப்பாட்டிக்கிட்டேன்!

    1st 9/10 kumaran, prasanna
    2nd attempt 10/10 gira, kumaran

    உங்க பேரைத் தான் தினமும் சொல்லிக்கிட்டு இருக்கேனே! ராமா, ராகவா-ன்னு தியாகராஜர் கணக்கா! ஸோ, கோச்சிக்காதீங்கண்டி!
    :-)))

    ReplyDelete
  84. @ தமிழ்ப்ரியன்
    //முதல் வெற்றியாளர் ????????? (முதலில் பத்துக்கும் விடை சொல்பவர்)
    முதல் மதிப்பெண் எடுக்கும் வெற்றியாளர் !!!!!!!!! (குறைந்த முறைகளில் பத்துக்கும் விடை சொல்பவர்)...........

    கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை... :))))//

    நம்மள கரீட்டாப் புரிஞ்சிக்கிட்டீங்கண்ணே!

    போரில் கூட, கண்ணன் அடிக்கும் டகால்டிகளுக்கு இப்ப காரணம் புரியுதா? :-))))

    ReplyDelete
  85. neenga sonna mathiri paatha, naan kooda innum oru try panna vaayipu kidaichu irukkume...

    athu enna kumaranukku matum, spl vaayipu.... irunthalum kulatheivathu mela ungalukku rombathan baya bakthi...

    ReplyDelete
  86. அட. நான் செஞ்ச தப்பால இப்படியும் ஒரு நன்மையா? வாழ்க கண்ணன் அருள். வாழ்க முருகன் அருளும். :-)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP