Sunday, December 07, 2008

தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ?

மொத்தம் எத்தனை நாயன்மார்கள்? 63ஆ or 72ஆ? நல்லா யோசிச்சி பதில் சொல்லுங்க!
மயிலை அறுபத்து மூவர் விழாவுக்குப் போயிருக்கீங்க தானே? நாயன்மார்கள் மொத்தம் 63ஆ or 72ஆ? ஹிஹி! இது என்ன புதுக்கதை? பார்க்கலாம் வரீங்களா?

நாயன்மார்கள் - தொண்டில் பழுத்த சிவனடியார்கள்!
ஆழ்வார்கள் பட்டியலை விட நாயன்மார்கள் தொகுப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்! ஏன்?
ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர் தான்! அத்தனை பேரும் பாசுரம் பாடி இருக்கணும்! அப்படித் தான் பட்டியலைத் தொகுத்துள்ளார்கள்!

ஆனால் நாயன்மார்களில் அப்படி இல்லை! இவர்கள் அத்தனை பேர்களுமே பாடலோ பதிகங்களோ எழுதியிருக்கணும் என்பது அவசியம் இல்லை!

சுமார் இருபது பேர் தான் பதிகங்கள் செய்திருப்பார்கள்! மீதமுள்ளவர் எல்லாம் சிவபிரானின் தொண்டு புரிந்தவர்கள் மட்டுமே!
அவர்களையும் பட்டியலில் சேர்த்து விட்டதால், இன்னும் பல அடியவர்களின் கதை, நமக்குத் தெரிய வருகிறது அல்லவா? அதனால் தான் நாயன்மார்களின் தொகுப்பு முறை எனக்கு மிகவும் பிடிக்கும்!

ஆழ்வார்கள் பன்னிருவர் மட்டுமே! இறைவனின் ஒவ்வொரு அம்சமாய் ஒவ்வொருவர் தோன்றினர் என்பதாலும், துவா+தச ரூபமாய், பன்னிரெண்டிலேயே நின்று போய் விடுகிறது!
அடியேன் முன்பே சொன்னது போல, உலக மக்கள் தொகையான 660 கோடி பேரும் ஆழ்வார்கள் தான்! இறைவனை எண்ணி, வாழ்வில் ஒரு முறையேனும் கண்ணீர் சிந்தி இருப்பார்கள் அல்லவா! ஆழ்ந்து இருப்பார்கள் அல்லவா! ஆக மொத்தம் 660 கோடி ஆழ்வார்கள்!

இறைவனிடம் ஆழ்ந்தவர்கள் அனைவரையும் "ஆழ்வான்" என்று சொல்லும் மரபு உள்ளது! கருடாழ்வார், இளையாழ்வான், பரதாழ்வான், சத்ருக்கனாழ்வான், விபீஷணாழ்வான் முதற்கொண்டு கூரத்தாழ்வான், கம்ப நாட்டாழ்வான் வரை பலப்பல ஆழ்வார்கள்!
ஆனாலும் இவர்களைப் பன்னிருவர் பட்டியலில் பொதுவாகச் சேர்ப்பதில்லை! அடியார்கள் என்ற தனிப்பட்டியலில் தான் சேர்ப்பார்கள்!
வேதங்களைத் தமிழ் செய்து, பாசுரங்களாகப் "பாடியவர்கள்" மட்டுமே பன்னிரு ஆழ்வார்களில் சேர்த்தி!

ஆனால் நாயன்மார்களை மட்டும் யார் இப்படி அழகாகத் தொகுத்து வைத்தார்கள்? பதிகம் பாடியவர்கள்/பாடாதவர்கள் என்று எல்லாரையும் அரவணைத்துத் தொகுத்தவர் யார்?
* தம்பிரான் தோழர்!
* முன்னூட்டமோ, பின்னூட்டமோ....இறைவனுடனே சண்டை போடக் கூடியவர்!
* வன் தொண்டர்! இறைவனையே பித்தா என்று "டகால்ட்டியாகப்" பேசக் கூடியவர்! :)
சுந்தரமூர்த்தி நாயனார் தான் இப்படித் தொகுத்தது! அவர் காலத்தில் நாயன்மார்களின் எண்ணிக்கை 60+9!திருவாரூர் பரவை நாச்சியார் வீட்டிலிருந்து, ஆலயத்துக்குச் செல்கிறார் புது மாப்பிள்ளை சுந்தரர்! வீதி விடங்கப் பெருமானைத் தரிசிக்க உள்ளே நுழைகிறார்!
அப்போது அங்கு தேவாசரிய மண்டபத்தில் உள்ள சிவனடியார்களை பலரைக் காண்கிறார்!
இவர்களை விடத் தான் மட்டும், அப்படி என்ன பெருசா பக்தியில் சிறந்து விட்டோம்? இறைவன் நம் மீது மட்டும் இவ்வளவு கருணை காட்டுகிறாரே? என்ற எண்ணம் அவர் சிந்தையில் ஓடுகிறது! அந்த ஓட்டத்தில், அடியார்களுக்கு வெளிப்புற வணக்கம் சொல்லாது, ஆழ்ந்த யோசனையில் உள்ளே சென்று விடுகிறார்!

ஆனால் இதைத் தவறாகப் புரிந்து கொண்டார் அங்கிருந்த விறன்மிண்டர்!
"இனி சுந்தரர் எங்கள் குழுவில் இல்லை, அவருக்கு அருள் செய்யும் ஈசனும் எங்கள் குழுவில் இல்லை"-ன்னு ஒரு கமென்ட் அடிச்சிட்டாரு! :)

இறைவன் பதறிப் போய் சுந்தரருக்கு அடி எடுத்துக் கொடுக்க...சுந்தரர் அத்தனை பேரையும் மனதாலேயே வணங்கிக் கொள்கிறார்!
இவர்களுக்கு எல்லாம் நான் "அடியேன்" ஆக மாட்டேனா என்று நினைக்கிறார்!
அதாச்சும் தொண்டர்களுக்கு எல்லாம் அடியேன்! தொண்டரடிப்பொடி!

சைவத் தொண்டரடிப்பொடியாழ்வார் அல்லவோ சுந்தரமூர்த்தி சுவாமிகள்!

ஈசன் அடியார்கள் பற்றி முதலடி எடுத்துக் கொடுக்க,
"தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று பாடத் துவங்குகிறார்!
அதாச்சும் தில்லை இறைவனுக்குத் தன்னை "உண்மையாலுமே" அர்ப்பணித்துக் கொண்ட தில்லை வாழ் அந்தணர்கள்! அவர்களுக்கு அடியேன் என்று துவங்குகிறார்! பின்னாடியே
* திருநீலகண்டர்,
* இயற்பகை நாயனார்,
* இளையான்குடி மாற நாயனார்,
* மெய்ப்பொருள் நாயனார்,
* விறன்மிண்ட நாயனார்,
* அமர்நீதி நாயனார்
என்று...பட்டியல் அழகாய்த் தொடர்கிறது!

பாட்டைப் பார்க்கலாம் வரீங்களா? அப்படியே ஒரு ஓதுவார் நமக்குப் சொல்லியும் கொடுக்குறாரு! தாளம் தப்பினால் மென்மையா கண்டிக்கறாரு! :)
தமிழிசை கேட்போமா? (கொல்லிக் கெளவாணம் என்ற திருமுறைப் பண்ணில்)! அப்படியே கேட்டுக்கிட்டே படிங்க!


Powered by Podbean.com


தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்!
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்!
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்!
இளையான்றன் குடி மாறன் அடியார்க்கும் அடியேன்!


வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்!
விரிபொழில் சூழ் குன்றையார் விறன் மிண்டர்கு அடியேன்!
அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்!
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே!!

இப்படி உருவானது தான் திருத்தொண்டத் தொகை என்னும் நூல்! சைவத்தில் அடியார்களின் முதல் நூல்! மொத்தம் 60+9 மக்களை, பேர் சொல்லிப் பாடுகிறார் சுந்தரர்!

பின்னாளில், இராசராசன் காலத்தில், நம்பியாண்டார் நம்பிகள் என்பவர் தேவாரப் பதிகங்களைத் தில்லைச் ச(ன்னி)தியில் இருந்து மீட்டார் அல்லவா?
அப்போது, திருமுறைகள் எல்லாம் தொகுக்கப்பட்டன! நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்று ஒரு நூலைப் பாடினார்!

அதில் சுந்தரரும் ஒரு நாயன்மாராக வைக்கப்பட்டார்! அவர் பெற்றோர்கள் சடையனார்-இசைஞானியார் இருவரும் நாயன்மார்களாக வைக்கப்பட்டார்கள்!
60 என்பது 63 ஆகியது! அதனால் இப்போ 63+9!
பின்னால் வந்த சேக்கிழாரும் இதை ஒட்டியே 63+9 என்று பெரிய புராணம் பாடினார்!

எல்லாம் சரி தான்! அது என்னங்க 60+9-ன்னு சொல்றீங்க? அப்புறம் 63+9-ன்னு சொல்றீங்க?
இது என்ன சினிமா படத்தில் வருமே, குடும்பமே +2 ஆகி விட்டது என்பது போல, இங்கு +9 ஆகி விட்டதா என்ன? :) அது என்ன 63+9?தனியடியார் = 63!
தொகையடியார் = 9!


* அதாச்சும் ஊர், பேர் என்று அனைத்து தகவலும் உள்ளவர்கள்; தனிப்பட்ட மனிதர்கள் = தனியடியார் = 63!
* இது தான் ஊர், இது தான் பேர் என்றில்லாது, பொதுவாகப் பல பேர்களும் செய்யும் தொண்டை வைத்துப் போற்றுவது = தொகையடியார் = 9!

யார் யாரெல்லாம் இந்த ஒன்பது தொகையடியார்? சுந்தரர் சொல்வதையே கேளுங்களேன்!

1. தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்!
2. பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
3. பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்!
4. பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்!
5. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்!
6. திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்!
7. முப்போதுந் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்!
8. முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்!
9. அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்!

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே! ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே!

கொஞ்சம் விளக்கமாய்ப் பார்க்கலாமா தொகையடியார்களை?

1. தில்லை வாழ் அந்தணர் = இறைவனின் ஆலயப் பூசைக்கு/பணிக்கும் மட்டுமே தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்கள்! இறைவனின் அம்பலத்தையே இறைவனாகக் கருதிக் காப்பாற்றுபவர்கள்! அந்தணர் என்போர் அறவோர்! தில்லை வாழ் அந்தண சிவாச்சாரியார்கள்! (சிதம்பரம் தீட்சிதர்கள் என்போர் வேறு!)

2. பொய்யடிமை இல்லாத புலவர் = இறைவன் மேல் பொய் இல்லாத பாக்களை எழுதும் புலவர்கள்! சமயம் காக்கும் பொருட்டும் கூட, பொய் கலவாது, மெய் மட்டுமே எழுதுவோர்! பொய்யிலாப் புலவர்கள்!

3. பத்தராய்ப் பணிவார்கள் = ஆணவம் இல்லாது பணிவு ஒன்றே தகுதியாகக் கொண்ட பக்தர்கள்!
இன்ன பிற அடியார்களைக் குலம்/மொழி/பால்/வேறு சமயம் என்று வெறுக்காது, பணிவை மட்டுமே உடையவர்கள்!

4. பரமனையே பாடுவார் = இசைக் கலையில் தேர்ந்து, பரமனை மட்டும் தென்தமிழும் வடகலையும் தேசிகமும் பேசிப் பாடுவார்கள்!
நாக்கொண்டு மானிடம் பாடாதவர்கள்! நாமார்க்கும் குடி அல்லோம்! நமனை அஞ்சாதவர்கள்!

5. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் = சதா சர்வ காலமும் சிவன் என்றே இருக்கும் சித்தர்கள்! பிரம்ம ஞானிகள்! சதா சிவத்தவர்கள்!

6. திருவாரூர்ப் பிறந்தார்கள் = திருவாரூரிலே புற்றிடம் கொண்ட பெருமானின் "தொண்டுக்கென்றே" பிறந்தவர்கள்!

7. முப்போதும் திருமேனி தீண்டுவார் = இறைவனின் ஆலயத் திருமேனியை முக்காலங்களிலும் தீண்ட வல்ல சிவாச்சாரியார்கள்! கருவறையையே கயிலாயமாகக் கருதி ஒழுகுபவர்கள்! கருவறைக்குள் ஆதியை அல்லாது அன்னிய வார்த்தைகள் பேசாதவர்கள்! ஆதிசைவ முனிவர்கள்!

8. முழுநீறு பூசிய முனிவர் = திருநீறு முழுதும் பூசிய முனி புங்கவர்கள்! திருநீற்றினை உருவாக்கி ஊருக்குத் தரும் உத்தம நம்பிகள்! கற்பம், அனுகற்பம், உபகற்பம் என்னும் மூன்று வகையான விபூதிகளைத் (திருநீற்றை) தயாரிப்பவர்கள்!

9. அப்பாலும் அடிச்சார்ந்த அடியார் = நம் நாட்டு நில எல்லைகளையும் கடந்து, நிலம்/மொழி/மதம்/திணை என்று அதற்கு அப்பாலும் இறைவனின் திருவடியைச் சார்ந்தவர்கள்!

இறைவனின் அடி-முடி தேடிய போது, ஈசனின் அடியைப் பற்றிய பெருமாளும் அப்பாலும் "அடிச் சார்ந்தவர்" தான்!

ஆணவத்தால் தேடினால் தலையும் தலைமையும் தெரியுமா?
பணிவால் பெருமாள் ஈசனின் அடியைத் தொட்ட போது, பதறிப் போனார் ஈசன்! எம்பெருமானா எம்மடியைத் தொடுவது?
படக்கென்று குனிந்து ஈசன் பெருமாளைத் தூக்க...ஈசனின் தலை தெரிந்தது...
அடியைத் தொட்டார்! தலை தேட அவசியம் இல்லாமல், பொய் சாட்சித் தாழம்பூவுக்குத் தேவையே இல்லாமல், தலை தானே தெரிந்தது!

பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து!இந்தத் தொகையடியார் 9 பேருக்குள்ளேயே, மற்ற 63 நாயன்மாரையும் அடக்கி விடலாம்! அப்படிப் பார்த்தால் ஒன்பதே நாயன்மார்கள் தான்! :)

ஏனென்றால் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொண்டு செய்தவர்கள் தான்!
அவ்வளவு ஏன்? நீங்கள் சிவாலயத்துக்குப் பக்தியுடன் பூக்கள் கொடுப்பவரா? உங்களைக் கூடத் தொகையடியாரில் அடக்கி, நாயன்மார்களில் ஒருவராக குறித்து விடலாம்! :)

ஆக மொத்தம் நாயன்மார்கள் உலக வழக்கத்துக்கு 63 தான் என்றாலும்,
தொகையடியார்களும் சேர்த்து 63+9=72!

தொகையடியார்கள் ஒவ்வொருவரையும் அவிங்க பேர் சொல்லி அடுக்கப் போனால், அடியேன் முன்பே சொன்ன ஆழ்வார்களின் தொகை தான் வரும்! மொத்தம் 660 கோடி நாயன்மார்கள்!

நான் அத்தனை சிவனடியார்க்கும் அடியேன் என்று பாடுவதில் ஒரு தனி மகிழ்ச்சி! ஆனாலும் இந்த அடியேனுக்கு ஒரே ஒரு வருத்தம்!

* திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்னும் பெருமை பெற்றவர்!
* தமிழ்ச் சைவத்தைத் திருமூலருக்குப் பின் போற்றி வளர்த்த ஒரே சைவ சித்தாந்த பெருமகன்!
* "திருவாதவூரன் சொல்ல திருச்சிற்றம்பலத்தான் எழுதியது" - என்று இறைவனே திருக்கடைக்காப்பு இட்ட நூலை உடையவர்!

* இப்படித் தில்லைச் சிற்றம்பலத்தில், இறைவனே உட்கார்ந்து கொண்டு, தமிழை எழுதியும், ஓதியும் உள்ளான்!
ஆனால் இன்னமும் கூட, தில்லைத் தீட்சிதர்கள், "தமிழை நந்திக்கு முன்னால் இருந்து ஓதக் கூடாது, பின்னால் இருந்து தான் ஓதணும்! அதான் சிற்றம்பலத்தில் பாட வேண்டாம் என்று சொன்னோம்" என்று லாஜிக் பேசிக் கொண்டு உள்ளனர்! :(

இத்துணை சிறப்பு வாய்ந்த எங்கள் மாணிக்க வாசகப் பெருந்தகை!
ஆனால், நால்வருள் மற்ற மூவரை 63-இல் வைத்துவிட்டு,
மாணிக்கவாசகரை மட்டும் 63 நாயன்மார்களுள் ஒருவராக வைக்காதது ஏனோ? ஏனோ? ஏனோ?

சைவப் பெருமக்கள் யாருக்கேனும் விடை தெரிந்திருந்தால் அறியத் தருமாறு அடியேன் விண்ணப்பித்துக் கேட்டுக் கொள்கிறேன்!

திருவாசகம் ஈந்த மணி வாசகத்துக்கு அடியேன்!
திருவாத வூரன் உரை தண் தமிழுக்கு அடியேன்!

என்று சுந்தரர் பாடிய வரிகளில் இன்னும் இரண்டு வரிகள் சேர்த்துப் பாட மனம் விரும்புதே!

திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!!
சிவோஹம்!

67 comments:

 1. 63 அல்ல, 72 என்று புதியதாய்த் தெரிந்து கொண்டேன். அதுக்கும், "தொகையடியாராய் இல்லாமல் தனியடியாராய் மாணிக்கவாசகர் ஆக வேண்டும்"னு (அப்படியா?) நீங்க சொல்வதுக்கு யாராவது மறுமொழி கொடுத்தால் அந்த மறுமொழிக்குமாய் நன்றி.

  ReplyDelete
 2. மீ த ஃபர்ஸ்டு & செகண்டு:‍-)

  ReplyDelete
 3. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
  மீ த ஃபர்ஸ்டு & செகண்டு:‍-)
  //

  மீ தி தர்டு! :)
  என்னாக்கா ஆச்சு ஒங்களுக்கு? நீங்களும் மீ த ஃபர்ஸ்டு ஆட்டமெல்லாம் ஆடறீங்க? :)

  ReplyDelete
 4. //63 அல்ல, 72 என்று புதியதாய்த் தெரிந்து கொண்டேன்//

  உலக வழக்கப்படி 63 தான்!

  //"தொகையடியாராய் இல்லாமல் தனியடியாராய் மாணிக்கவாசகர் ஆக வேண்டும்"னு (அப்படியா?)//

  நச்-ன்னு பாயின்ட்டைப் புடிச்சீங்க-க்கா! ஆள் அட்ரெஸ் எல்லாம் ஸ்பெசிஃபிக்கா இல்லாதவர்கள் தான் தொகையடியார்! மாணிக்கவாசகர் அப்படி அல்லவே!

  அவரைத் தனி அடியாருக்குள் கொண்டு வருதல் வேண்டும்!

  சுந்தரர் செய்த 60ஐ நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் மாற்றி 63 ஆக்கவில்லையா?
  மணிவாசகருக்கும் 64 ஆக்கினால் என்ன?

  அப்படி ஒருங்கிணைந்து செய்து, சைவத் திருமடங்கள் பெருமை தேடிக் கொள்ள வேண்டும்!
  இல்லை, மாணிக்கவாசகரை இதில் சேர்க்கத் தேவையில்லை என்றால் ஏன் என்றாவது விளக்கிச் சொல்லலாமே!

  //நீங்க சொல்வதுக்கு யாராவது மறுமொழி கொடுத்தால் அந்த மறுமொழிக்குமாய் நன்றி//

  மாணிக்கவாசகரை ஏன் சேர்க்கவில்லை என்பதை யாராச்சும் சொல்லுவாங்க-ன்னு தான் நானும் காத்துள்ளேன்!

  ReplyDelete
 5. இங்கேயும் 660 கோடி நாயன்மார்கள்-ன்னு சொல்ல வேண்டியதா தான்.

  ReplyDelete
 6. //சிவமுருகன் said...
  இங்கேயும் 660 கோடி நாயன்மார்கள்-ன்னு சொல்ல வேண்டியதா தான்.
  //

  அதான் சொல்லிட்டேனே சிவா!
  இப்போ கேள்விக்குப் பதில் சொல்லுங்க! ஏன் மாணிக்கவாசகர் 63-இல் இல்லை? :)

  ReplyDelete
 7. மகாகவி பாரதியாரே நாயன்மார் ஆகி இருக்கிறார், (அவரை ஏன் ஆழ்வார் ஆக்கிக் கொள்ளவில்லை என்பது வேறு கேள்வி) மாணிக்கவாசகர் ஆகததற்கு 'தகுதி' தான் காரணம் என்று தெரியவில்லையா ?

  இதச் சொன்னா காழ்ப்புணர்வும்பா :)

  ReplyDelete
 8. //கோவி.கண்ணன் said...
  மகாகவி பாரதியாரே நாயன்மார் ஆகி இருக்கிறார்//

  இல்லையே!

  //(அவரை ஏன் ஆழ்வார் ஆக்கிக் கொள்ளவில்லை என்பது வேறு கேள்வி)//

  ஆக்கவே முடியாது!

  //மாணிக்கவாசகர் ஆகததற்கு 'தகுதி' தான் காரணம் என்று தெரியவில்லையா ?//

  புதசெவி

  //இதச் சொன்னா காழ்ப்புணர்வும்பா :)//

  ஏன்? யார்?
  மணிவாசகரே ஒரு அந்தணர் தாமே?

  ReplyDelete
 9. மாணிக்கவாசகர் காலத்தைப் பற்றி உறுதியான தகவல்கள் இல்லை. சிலர், இவரே சமயக்குரவர்களில் மூத்தவர் - வாழ்ந்தது 3 முதல் 5ஆம் நூற்றாண்டு என்கிறார்கள். இதனால் நாயன்மார் பட்டியலில் இல்லாமல் போனதாக இருக்கலாம். நரி பரியான நிகழ்சியை, அப்பர் குறிப்பிட்டாலும், மாணிக்கவாசகரை, நேரடியாக குறிப்பிடாமல் போனது, அந்தக் காலத்தில், இவரை இப்பெயரால், அறியப்படாமல் இருக்கலாம். தொகையிலும் விட்டுப்போனது.

  மாணிக்கவாசகர் - இவர் எப்போதுமே தனிப்பெரும் பெருமை பெற்றவர். சமயக் குரவரில் நால்வரில் ஒருவராகவும், நால்வரின் முதன்மையானவரும் மாணிக்கவாசகர் பெரிதும் கருதப்படுகிறார். திருமுறைகளிலும் திருவாசகம் இடம்பெற்றுள்ளது. நாயன்மார்கள் என்று சொல்லி முடித்துவிடாதபடி. நாயன்மார்களும், மாணிக்கவாசகரும் என இவரைத் தனியாகச் சொல்லி சிறப்பிக்க வேண்டி உள்ளது, சிறப்புதானே!

  பரசு ராகத்தில் - "ஆளாவது எந்நாளோ, சிவமே, ஆளாவதென்னாளோ, உன் அடியார்க்கு, அடியார்க்கு அடியனாய்..." என்றொரு அற்புதமான பாடல் உண்டு. ஊத்துக்காடார் அப்பாடலில் எல்லா நாயன்மார்களையும் சொல்லி இருப்பார் - மணிவாசகரும் உண்டு!. பாடல் வரிகளை இங்கு பார்க்கலாம்.

  ReplyDelete
 10. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //கோவி.கண்ணன் said...
  மகாகவி பாரதியாரே நாயன்மார் ஆகி இருக்கிறார்//

  இல்லையே!

  //

  சில கோவில்களில் நாயன்மார் வரிசையில் பாரதியார் சிலை இருக்கிறது, சென்னை கபாலிஸ்வரர் கோவிலில் பார்த்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

  நாயன்மார் தகுதி கொடுப்பவர்கள் யார் ? புதசெவி

  ReplyDelete
 11. //கோவி.கண்ணன் said...
  சில கோவில்களில் நாயன்மார் வரிசையில் பாரதியார் சிலை இருக்கிறது//

  ஹா ஹா ஹா!
  அடிச்சி விடறது-ன்னா இது தானா? :)
  கோயில் பேரு சொல்லுங்க! தரவு ப்ளீஸ்!

  //சென்னை கபாலிஸ்வரர் கோவிலில் பார்த்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்//

  இல்லை! தவறான தகவல் கோவி அண்ணா!
  பாரதியார் வாழ்ந்த வீடு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பின்னாடி உள்ளது! அவ்ளோ தான்! அவரை ஆழ்வாராகவோ, நாயன்மாராகவோ யாரும் ஆக்கலை!

  //நாயன்மார் தகுதி கொடுப்பவர்கள் யார் ? புதசெவி//

  இது என்ன கல்லூரிச் சான்றிதழா? :)
  சமய வல்லுனர்கள், திருமடங்கள், பல்வேறு காலகட்டங்களில் ஒருங்கிணைந்து, ஒருமித்த கருத்தாக இப்படிப் பட்டியல் செய்கிறார்கள்!
  சமய வளர்ச்சி, ஆன்மீகத் தொண்டு, சித்தத்தைச் சிவன் பாலே வைத்தல்! இவையே தகுதிகள்!

  ReplyDelete
 12. //ஜீவா (Jeeva Venkataraman) said...
  சிலர், இவரே சமயக்குரவர்களில் மூத்தவர் - வாழ்ந்தது 3 முதல் 5ஆம் நூற்றாண்டு என்கிறார்கள்//

  நல்லது ஜீவா! ஒரு சிலர் 3-5 நூற்றாண்டு என்கிறார்கள்! வரலாற்று அறிஞர்கள் கிபி 863 என்று கணக்கிடுகிறார்கள்! (வரகுண பாண்டியனின் கால கட்டத்தைக் கொண்டு)

  //இதனால் நாயன்மார் பட்டியலில் இல்லாமல் போனதாக இருக்கலாம்//

  நாயன்மார் பட்டியல் மிகவும் பிற்பட்ட காலமாச்சே!
  மாணிக்கவாசகர் வாழ்ந்தது, 3 முதல் 5ஆம் நூற்றாண்டு என்று ஒரு பேச்சுக்கு கொண்டாலும்...அப்போது அவர் தானே முதலில் பட்டியலில் இருக்க வேண்டும்? அவருக்குப் பின்னால் வந்த மற்ற மூவரும் உள்ள போது, அவர் இல்லாதது தான் ஏன் என்று தான் புரியவில்லை!

  3-5 நூற்றாண்டோ, இல்லை கிபி 863யோ...
  மூவருக்கும் முன்னரோ, பின்னரோ...
  பட்டியல் தொகுக்கப்பட்டது நம்பியாண்டர் நம்பி மற்றும் சேக்கிழார் காலம் அல்லவா? கிபி 1014-க்கும் அப்புறம்!

  சுந்தரர் தன் பெயரைத் திருத்தொண்டத் தொகையில் சொல்லிக் கொள்ளா விட்டாலும், பின்னாடி தொகுத்தவர்கள் சுந்தரரைச் சேர்த்தார்கள்! அது போல், மாணிக்கவாசகரைச் சேர்க்காததன் காரணம் தான் புரிபடவில்லை!

  //மாணிக்கவாசகர் - இவர் எப்போதுமே தனிப்பெரும் பெருமை பெற்றவர். சமயக் குரவரில் நால்வரில் ஒருவராகவும்//

  மிகவும் சரி!

  //நாயன்மார்கள் என்று சொல்லி முடித்துவிடாதபடி. நாயன்மார்களும், மாணிக்கவாசகரும் என இவரைத் தனியாகச் சொல்லி சிறப்பிக்க வேண்டி உள்ளது, சிறப்புதானே!//

  :)

  //ஊத்துக்காடார் அப்பாடலில் எல்லா நாயன்மார்களையும் சொல்லி இருப்பார் - மணிவாசகரும் உண்டு!//

  அருமையான பாடல்! பெரிய புராணக் கீர்த்தனை-ன்னு பேரு கொடுத்திருக்காரு வேங்கட கவி!
  மாணிக்கவாசகரை முதல் வரியிலேயே சேர்த்திருக்காரு! அருமை! பாடலைத் தந்தமைக்கு நன்றி ஜீவா!

  ReplyDelete
 13. அருமையான பதிவு, முழுவதுமாக பாடி இருந்தால் நன்றாக இருக்கும்...

  சுந்தரர் பாடிய திருதொண்டகத் தொகையில் அவரையும், சடையர், இசைஞானியர் சேர்த்து மொத்தம் 77 அடியார்கள் வருகிறார்கள். இதிலும் மாணிக்கவாசகர் வரவில்லை...

  தெரிந்தவர்கள் விளக்கவும்?

  புத்தகம் : ராமநாதன் எழுதிய அறுபத்து முவர் கதைகள் ( Total editions 15 from 1967 to 2005)

  ReplyDelete
 14. //Logan said...
  அருமையான பதிவு, முழுவதுமாக பாடி இருந்தால் நன்றாக இருக்கும்...//

  நன்றி லோகன்.
  இது தேவாரம்.ஓர்க் தளத்தில் உள்ள ஒலிக்கோப்பு! பயிற்சி தானே! அதான் முழுக்க இல்லை!

  //சுந்தரர் பாடிய திருதொண்டகத் தொகையில் அவரையும், சடையர், இசைஞானியர் சேர்த்து மொத்தம் 77 அடியார்கள் வருகிறார்கள்//

  77ஆ? இருக்காது! சரி பாருங்கள்!
  With three of them = 60+9+3

  77 என்றால் இன்னும் ஐந்து பேர் யார்? சுந்தரர் பாடிய எவரையுமே நம்பியோ, சேக்கிழாரோ விட்டுவிடவில்லை! எனவே 77ஆக இருக்காது! எதற்கும் சரி பார்க்கவும்!

  //இதிலும் மாணிக்கவாசகர் வரவில்லை...//

  அப்போது மாணிக்கவாசகர் அறியப்படவில்லையோ, அவருக்கு சற்றே முன்னர்/பின்னர் காலமோ என்னவோ?
  ஆனால் சேக்கிழாராச்சும் சேர்த்து இருக்கலாம்!

  ReplyDelete
 15. நீங்க கணக்கு சொன்னா/பண்ணினா சரியாத்தான் இருக்கும்

  ReplyDelete
 16. //நீங்க கணக்கு சொன்னா/பண்ணினா சரியாத்தான் இருக்கும்//

  வழிமொழிகிறேன். ஒரே ஒரு திருத்தத்துடன்.

  நீங்க கணக்கு பண்ணினா சரியாத்தான் இருக்கும் :)

  ReplyDelete
 17. ஆழ்வார்களைப் பற்றி அறிந்த அளவிற்கு நாயன்மார்களைப் பற்றி அறியேன் இரவி. அதனால் இந்த இடுகையும் நாயன்மார்களைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. நன்றி.

  ReplyDelete
 18. திருவாரூரில் சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையைப் பாடுவதற்குக் காரணமான நிகழ்ச்சியை சிறிது மாற்றத்துடன் படித்ததாக நினைவு.

  ----

  //
  தில்லை வாழ் அந்தண சிவாச்சாரியார்கள்! (சிதம்பரம் தீட்சிதர்கள் என்போர் வேறு!)//

  இது புரியவில்லை.

  ----

  //"தமிழை நந்திக்கு முன்னால் இருந்து ஓதக் கூடாது, பின்னால் இருந்து தான் ஓதணும்! //

  இது தில்லையில் மட்டும் இருக்கும் நடைமுறையா? எல்லாச் சிவாலயங்களிலும் இதே நடைமுறை தானா?

  ----

  மாணிக்கவாசகர் ஏன் நால்வரில் மட்டும் இருக்கிறார் நாயன்மாரில் இல்லை என்று தெரியவில்லை. திருவாசகத் தேனைத் தந்த திருவாதவூர் அடிகளை நாயன்மாரிலும் சேர்க்காமல் நால்குரவர்களிலும் சேர்க்காமல் இருந்திருந்தால் அது பெரும் குறையாகத் தோன்றியிருக்கும். நால்வரில் ஏற்கனவே அவர் இருப்பதால் நாயன்மார்களிலும் சேர்ப்பதால் அவருக்கு இன்னும் பெருமையும் புகழும் கூடும் என்று தோன்றவில்லை - அதே நேரத்தில் நாயன்மார்களிலும் அவரைச் சேர்ப்பதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

  நல்ல வேளை; எல்லாவற்றையும் குதர்க்கமாகவே பார்த்துப் பழகியவர்கள் அரசியல் பண்ண இயலாத மாதிரி மாணிக்கவாசகப் பெருமான் அமைந்தார். இல்லையேல் இதை வைத்தும் ஒரு பெரிய அரசியல் செய்வர்.

  ReplyDelete
 19. //நசரேயன் said...
  நீங்க கணக்கு சொன்னா/பண்ணினா சரியாத்தான் இருக்கும்//

  வாங்க நசரேயன்! ஆன்மீகப் பதிவுக்கு எல்லாம் வந்திருக்கீங்க!:)
  நல்வரவு!

  ஹா ஹா ஹா
  நான் கணக்கைச் சொல்லுறேன்! நீங்க பண்ணுங்க சாமீகளா? :)

  ReplyDelete
 20. //குமரன் (Kumaran) said...
  வழிமொழிகிறேன். ஒரே ஒரு திருத்தத்துடன்.
  நீங்க கணக்கு பண்ணினா சரியாத்தான் இருக்கும் :)//

  போச்சுடா!
  அ.உ.ஆ.சூ இப்படிச் சொன்னா என் கணக்கு என்ன ஆவறது? :)

  ReplyDelete
 21. //குமரன் (Kumaran) said...
  ஆழ்வார்களைப் பற்றி அறிந்த அளவிற்கு நாயன்மார்களைப் பற்றி அறியேன் இரவி.//

  எனக்கு முதலில் அறிமுகமானதே நாயன்மார்கள் தான் குமரன்! முன்பே சொல்லி உள்ளேனே! அத்தை/அம்மா திருவண்ணாமலைக் கோயில்-ல தான் கதை சொல்லிச் சோறு ஊட்டியிருக்காக! :)

  என் நல்ல நண்பர்கள் பலர், பழுத்த சைவர்கள்! அவர்களுக்கே இன்று வரை மாணிக்கவாசகர் 63-வரில் இல்லை-ன்னு தெரியாதாம்! :)

  //அதனால் இந்த இடுகையும் நாயன்மார்களைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. நன்றி.//

  நாயன்மார்கள் கதையை இன்னும் நிறைய எடுத்துச் சொல்லணும் குமரன்!

  ஆழ்வார்கள் புலமையும் பக்தியும் மிக்க எளிய மக்கள்! ஆனால் நாயன்மார்கள் பலரோ, புலமை இல்லாவிடினும், பக்தி மட்டுமே மிக்க எளிய மக்கள்!

  நம்மில் பலர், பதிவும் தத்துவங்களும், வெறுமனே வாயால் பேசி விட்டுச் செல்கிறோம்! அதுக்கே ஆயிரம் கோபம், முறைப்புகள், கருத்து தீவிரங்கள்! ஆனால் தொண்டு?

  இந்த நாயன்மார்கள் பலர், ஆன்மீகத் தொண்டர்கள்/பதிவர்கள் எப்படி இருக்கணும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்கள்! மாற்றுக் கருத்துக்கள் உள்ள நாயன்மார்களும் சக அடியார்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைப் படிக்கப் படிக்க...அவ்வளவு அருமை! பதிவுகளில் சண்டை வரும் போது, அன்றைய இரவு, இந்தக் கதைகளைத் தான் புரட்டிக் கொள்வேன்! :)

  //புத்தகம் : ராமநாதன் எழுதிய அறுபத்து முவர் கதைகள் ( Total editions 15 from 1967 to 2005)//

  This book is good one to start with! தம்பி பாலாஜி ஊரை விட்டுப் போகச் சொல்ல, பல புத்தகங்களைக் கொடுத்து விட்டுச் சென்றான்! இதுவும் ஒன்னு! :)

  ReplyDelete
 22. நீங்க படிச்சாச்சுன்னா அந்த பொத்தகத்தை எனக்கு அனுப்புங்க. :-)

  ReplyDelete
 23. எங்க மெய்ப்பொருள்நாயனாரை விட்டுருவீங்களோன்னு ஒரு டச்சு பண்ணி பாத்துக்கிட்டேன்...

  ரைட்டு உடு...

  ReplyDelete
 24. எங்க மெய்ப்பொருள்நாயனாரை விட்டுருவீங்களோன்னு ஒரு டச்சு பண்ணி பாத்துக்கிட்டேன்...

  ரைட்டு உடு...

  ReplyDelete
 25. //குமரன் (Kumaran) said...
  திருவாரூரில் சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையைப் பாடுவதற்குக் காரணமான நிகழ்ச்சியை சிறிது மாற்றத்துடன் படித்ததாக நினைவு//

  என்னான்னு சொல்லுங்களேன்!
  நான் அறிந்தவரை அந்த தேவாசிரிய மண்டபக் காட்சி தான்!

  //
  //"தமிழை நந்திக்கு முன்னால் இருந்து ஓதக் கூடாது, பின்னால் இருந்து தான் ஓதணும்! //

  இது தில்லையில் மட்டும் இருக்கும் நடைமுறையா? எல்லாச் சிவாலயங்களிலும் இதே நடைமுறை தானா?//

  கீதாம்மாவைக் கேட்டால் விளக்கங்கள் கிடைக்கலாம்! தில்லையில் இந்த நடைமுறை தான் காரணம் என்று அவர் சொல்லித் தான் எனக்கும் தெரியும்!

  //
  //
  தில்லை வாழ் அந்தண சிவாச்சாரியார்கள்! (சிதம்பரம் தீட்சிதர்கள் என்போர் வேறு!)//

  இது புரியவில்லை//

  :)
  யாருக்குத் தான் புரிஞ்சிருக்கு தில்லைத் தீட்சித மகாத்மியம்? :)

  தில்லை வாழ் அந்தணர்கள் என்று ஈசனும் இன்ன பிற அடியாரும் குறிப்பிட்டது நால் வேதம்/ஆறங்கங்களை மனதில் அமைதி கொண்டு ஓதும் சிவாச்சாரியார்கள்!

  தீட்சிதர்கள், சேர தேசத்து முன் குடுமி அந்தணர்கள், பின்னாளில் தில்லைக்கு வந்தவர்கள் என்ற வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளிலும், புதினங்களிலும் வாசித்துள்ளேன் குமரன்! முனைவர்கள் யாரேனும் சொன்னால் இன்னும் தெளிவாகும்!

  ReplyDelete
 26. @குமரன்
  //மாணிக்கவாசகர் ஏன் நால்வரில் மட்டும் இருக்கிறார் நாயன்மாரில் இல்லை என்று தெரியவில்லை//

  எனக்கும் தான்!

  //திருவாதவூர் அடிகளை நாயன்மாரிலும் சேர்க்காமல் நால்குரவர்களிலும் சேர்க்காமல் இருந்திருந்தால் அது பெரும் குறையாகத் தோன்றியிருக்கும்//

  ஆமாம்! சமயக் குரவர் நால்வருள் அவரைச் சேர்த்தது மனதுக்கு அறுதல்!

  //நால்வரில் ஏற்கனவே அவர் இருப்பதால் நாயன்மார்களிலும் சேர்ப்பதால் அவருக்கு இன்னும் பெருமையும் புகழும் கூடும் என்று தோன்றவில்லை//

  அப்படியில்லை குமரன்!
  திருத்தொண்டர் கதைகள் என்று அனைத்தும் ஒருங்கே தொகுத்த நூல் அல்லவா பெரிய புராணம்!

  அதில் மற்ற மூவரின் கதைகளைச் சொல்லி, இவரின் கதை மட்டும் இல்லை என்றால் தனியாகப் போய் அல்லவா படிக்க வேண்டும்? தொகுப்பு என்பதே அனைவர் திருக்கதையையும் ஒருங்கே படிப்பதற்குத் தானே?

  அடியேன் இங்கே கேட்பது மாணிக்கவாசகர் பெருமைக்காகவும் புகழுக்காகவும் இல்லை!
  அடியவர் கதைக்காகவும், பின்வரும் தலைமுறைகள் ஒருங்கே படிக்கவும் தான்!


  63-இல் சேர்த்துத் தானா அவர் புதிதாகப் புகழ் பெறப் போகிறார்? இறைவனே கையொப்பமிட்டவருக்கு புகழ்ப் பட்டியல் எதற்கு? அடியேன் கேட்பது அடியவர் பொருட்டும், நம் பொருட்டும் மட்டுமே!

  //அதே நேரத்தில் நாயன்மார்களிலும் அவரைச் சேர்ப்பதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை//

  இதைச் சைவத் திருமடங்கள் ஒருங்கிணைந்து செய்யுமா? மின்னஞ்சல் தட்டிப் பார்க்கலாமா?

  //நல்ல வேளை; எல்லாவற்றையும் குதர்க்கமாகவே பார்த்துப் பழகியவர்கள் அரசியல் பண்ண இயலாத மாதிரி மாணிக்கவாசகப் பெருமான் அமைந்தார். இல்லையேல் இதை வைத்தும் ஒரு பெரிய அரசியல் செய்வர்//

  ஹா ஹா ஹா!
  நல்ல வேளை அவர் சமயக் குரவர் நால்வருள் வைக்கப்பட்டார்!
  இல்லீன்னா...:)

  ஆனா நான் அப்படி நினைக்கலை குமரன்! யாரும் பெரிதாக அரசியல் செய்திருக்க மாட்டார்கள்! மாணிக்கவாசகர் பிறப்பால் அந்தணர் வேறு! அதனால் அவர் புகழ் பாடும் முயற்சிகளை அரசியல் செய்வோர் எடுப்பார்கள் என்று தோன்றவில்லை!

  ReplyDelete
 27. //செந்தழல் ரவி said...
  எங்க மெய்ப்பொருள்நாயனாரை விட்டுருவீங்களோன்னு//

  ஹா ஹா ஹா!
  வாங்க ரவி! அது என்ன "உங்க" மெய்ப்பொருள் நாயனார்?

  திருக்கோவிலூர் எங்களுக்கும் தான் ஊரு! மூனு பதிவு ஊரைப் பத்தியே போட்டிருக்கேன்! :)
  கோயிலூர் ஜீயரிடம் பாடம் கேட்ட பல அந்தணர் அல்லாதாரில் அடியேனும் ஒருவன்!

  //ஒரு டச்சு பண்ணி பாத்துக்கிட்டேன்...ரைட்டு உடு...//

  :))
  வெல்லுமா மிக வல்ல "மெய்ப்பொருளுக்கு" அடியேன்!

  பதிவுல வந்திருக்கே! நான் முதல் பத்தி மட்டுமே கொடுத்தேன்! அதுல எதேச்சையா மெய்ப்பொருள் வந்துட்டாரு! இல்லாக்காட்டி என்னைய ஒரு வழி பண்ணி இருப்பீங்களோ? :))

  ReplyDelete
 28. @குமரன்
  பாட்டைக் கேட்டிங்களா?
  பிடிச்சி இருந்துத்தா? பாடலைக் கேக்கும் போது ஒங்களையும் இன்னொருத்தரையும் தான் நினைச்சிக்கிட்டேன்! :)

  ReplyDelete
 29. //ஹா ஹா ஹா!
  அடிச்சி விடறது-ன்னா இது தானா? :)
  கோயில் பேரு சொல்லுங்க! தரவு ப்ளீஸ்! //

  தரவு இருக்கிறது தேடித் தருகிறேன். இல்லை என்றால் சமயக் காவலர்களின் சொல்லடிக்கு கிருஷ்ண பருந்துகள் கூட இறக்கை ஒடிந்து விழுந்துவிடும்.

  ReplyDelete
 30. மாணிக்க வாசகர் என்று பெயர் வைத்தது சிவபெருமானாம். ஞானசம்பந்தரைப் போன்று மாணிக்க வாசகரின் கதையும் ஆராய்ச்சிக்குரியதுதான்.

  ReplyDelete
 31. //நான் அறிந்தவரை அந்த தேவாசிரிய மண்டபக் காட்சி தான்!
  //

  தேவாசிரிய மண்டபக் காட்சி தான். கொஞ்சமே மாற்றம் தான் நான் படித்தது. தேவாசிரிய மண்டபத்தில் இருக்கும் அடியார்களை எல்லாம் கண்டும் காணாமல் சுந்தரர் சன்னிதிக்குச் செல்வதாகவும் அங்கே மண்டபத்தில் இருந்த நாயன்மார்களில் ஒருவர் (கழற்சிங்க நாயனார்?) அதனால் மிகவும் கோவித்துக் கொண்டதாகவும் பெருமானின் அறிவுறுத்தலின் படி அந்த நாயன்மாரின் கோவத்தினைத் தீர்க்க சுந்தரர் திருத்தொண்டத் தொகையைப் பாடியதாகவும் படித்த நினைவு. நினைவிலிருந்து எழுதுவதால் தவறாக இருக்கலாம்.

  ReplyDelete
 32. கேஆர்எஸ்,

  தில்லைவாழ் அந்தணர் என்றால் சிவபெருமானா ? அவரையும் சேர்த்து தான் தில்லைவாழ் அந்தணர்கள் பட்டியலில் 1000 உறுப்பினர்கள் என்று புராணம் காட்டுகிறார்கள்.

  ஏனென்றால் 63 நாயனார்கள் பட்டியலில் தில்லைவாழ் அந்தணர் பெயரே முதலில் இருக்கிறது.

  பார்பனர்க்கு அடியேன் என்று ஒரு பார்பனரே பாடி இருக்க மாட்டார் இல்லையா ? ஞானசம்பந்தரும் புனல்வாதத்தில் தில்லைவாழ் அந்தணர் வாழ்க என்றே முதல்வரியை எழுதினாராம்.

  ReplyDelete
 33. //குமரன் (Kumaran) said...
  அங்கே மண்டபத்தில் இருந்த நாயன்மார்களில் ஒருவர் (கழற்சிங்க நாயனார்?)//

  ஓ...அதைச் சொல்றீங்களா?
  அவர் பேரு விறன்மிண்டர்!

  (கழற்சிங்கர் வேற! அவரு மன்னரு! இறைவனின் பூமாலையை முகர்ந்த தன் மனைவியின் மூக்கை அறுத்த செறுத்துணை நாயனார் கால்களில் வீழ்வார்)

  சுந்தரர் வழக்கமாச் சிரிச்சி வணங்கிட்டுத் தான் போவாரு! அன்னிக்கி மட்டும் ஒரே சிந்தனை! பதிவில் சொன்னபடி தான்! அடியார்களைக் குறித்து ஏதாச்சும் நல்லதா பண்ணனுமே-ன்னு யோசனையில், அடியார்களைப் பார்க்காமலே போயிருவாரு!

  இதைப் பார்த்த விறன்மிண்டர், விஷயம் புரியாம, "இனி சுந்தரர் எங்கள் குழுவில் இல்லை, அவருக்கு அருள் செய்யும் ஈசனும் எங்கள் குழுவில் இல்லை"-ன்னு ஒரு கமென்ட் அடிப்பாரு! :)

  அது கூடக் காதில் விழாம உள்ளே போன சுந்தரருக்கு, இறைவன் அடி எடுத்துக் கொடுப்பாரு! சுந்தரர் பாடத் துவங்கியவுடன், விறன்மிண்டர் புரிஞ்சிக்கிருவாரு!

  பதிவில் இதையும் சேர்க்கட்டுமா? நீண்டுடுமே-ன்னு பார்த்தேன்! அதான் அப்போ எழுதலை! :)

  ReplyDelete
 34. தேன் கூடு ஸ்கிரிப்ட் உள்ளே இருக்கு எடுத்துவிடுங்க, அது இருப்பதால் பின்னூட்டம் காட்ட நேரம் எடுக்குது

  ReplyDelete
 35. //கோவி.கண்ணன் said...
  கேஆர்எஸ்,
  தில்லைவாழ் அந்தணர் என்றால் சிவபெருமானா ? அவரையும் சேர்த்து தான் தில்லைவாழ் அந்தணர்கள் பட்டியலில் 1000 உறுப்பினர்கள் என்று புராணம் காட்டுகிறார்கள்.
  ...
  ...
  ஞானசம்பந்தரும் புனல்வாதத்தில் தில்லைவாழ் அந்தணர் வாழ்க என்றே முதல்வரியை எழுதினாராம்//

  அண்ணே! மீ தி அப்பீட்டு!
  இதெல்லாம் சைவ ஆன்மீகப் பதிவர்களைக் கேளுங்கண்ணா!
  நான் தான் ஸோ கால்டு வைணவர் ஆச்சே! எனக்கென்ன தெரியும்? :))

  ReplyDelete
 36. //கோவி.கண்ணன் said...
  தேன் கூடு ஸ்கிரிப்ட் உள்ளே இருக்கு எடுத்துவிடுங்க, அது இருப்பதால் பின்னூட்டம் காட்ட நேரம் எடுக்குது//

  ஓ..அப்படியா? இப்புடே சேஸ்தானு!
  இதுக்குத் தான் கீதை சொல்ல ஒரு (கோவி)கண்ணன் தேவை! :)

  ReplyDelete
 37. புதினங்களில் படித்ததை உண்மையென்று சொல்ல இயலாது. அதே போல் நம்பூதிரிகளும் முன் குடுமி அந்தணர்கள் என்பதால் தீட்சிதர்களும் சேர தேசத்திலிருந்து வந்தவர்கள் என்று சொல்ல இயலாது. அப்படியென்றால் அதே காரணத்தைக் கொண்டு முன் குடுமி சோழிய பிராமணரான பெரியாழ்வாரையும் சேர தேசத்தவர் எனலாம். அப்படி எந்த வரலாற்றிலும் படித்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். சேர தேசத்தவர் மட்டுமே முன் குடுமி வைத்திருப்பவர் என்று நீங்கள் எண்ணவில்லை என்று நம்புகிறேன். நம்பத்தகுந்த 'வரலாற்று ஆய்வுக் கட்டுரை'யைத் தானே வாசித்தீர்கள்? அல்லது மேலோட்டமாக கிடைத்த தோற்றத்தை வைத்துக் கொண்டு ஆய்வுக் கட்டுரை எழுதிக் கொண்டு திரிகிறார்களே சிலர் - அவர்கள் எழுதியதைப் படித்தீர்களா?

  -----

  இதுவரை 'தில்லை மூவாயிரவர்' என்று சைவ, வைணவப் பனுவல்களில் சொல்லப்படுபவர்களின் வழி வந்தவர்கள் தான் இன்னும் தில்லையில் சிவத்தொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற புரிதலில் இருக்கிறேன். அது தவறென்று 'தகுந்த', 'தரவுகளுடன் கூடிய', 'நம்பக்கூடிய' ஆய்வுகள் இருந்தால் ஏற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. நக்கீரன் காட்டிய வழி அது தானே. :-)

  ReplyDelete
 38. //திருத்தொண்டர் கதைகள் என்று அனைத்தும் ஒருங்கே தொகுத்த நூல் அல்லவா பெரிய புராணம்!

  அதில் மற்ற மூவரின் கதைகளைச் சொல்லி, இவரின் கதை மட்டும் இல்லை என்றால் தனியாகப் போய் அல்லவா படிக்க வேண்டும்? //

  சரி. சைவ ஆதினத்தார் மாணிக்கவாசகரையும் ஒரு நாயன்மார் என்று அறிவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பெரிய புராணத்தைத் திருத்தி எழுதப் போகிறீர்களா? :-)

  நீங்கள் எழுதவில்லை என்றால் 'அப்படி திருத்தப்படவேண்டும்' என்றும் ஒரு கடிதம் அனுப்பப் போகிறோமா? :-)

  ReplyDelete
 39. தேவாசிரிய மண்டபத்தில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி சொன்னதற்கு நன்றி இரவி. பதிவில் சேர்க்கத் தேவையில்லை. நான் படித்தது சரி தானா என்று தெரிந்து கொள்ளவே கேட்டேன்.

  ReplyDelete
 40. வணக்கம் கேஆர்எஸ் அண்ணா, அருமையான பதிவு. மாணிக்கவாசகர் பெருமானை கண்டிப்பாக நாயன்மார்கள் வரிசையில் சேர்க்க வேண்டும்.
  பரசுராமர் பிராமணர்களை பாதுகாத்து கொள்வதற்காக அவர்களுக்கு அதர்வண வேத ஷரத்துக்களை சொல்லிக்கொடுக்க தமிழக காவிரியாற்றங்கரை பிராமணர்களையும், கன்னட மற்றும் ஆந்திர பிராமணர்களையும் அழைத்தார். அவர்கள் கற்றுக்கொண்டு அங்கேயே தங்கி அடுத்த சந்ததிக்கு கற்றுகொடுத்து வாழவேண்டும் என விரும்பினார். மற்ற பிராமணர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காக அவர்களின் பழக்க வழக்கம், சின்னங்களில் சிலவற்றை மாற்றினார். அவைகளுள் ஒன்றுதான் முன்குடிமி. செழிப்பாக உண்டுகளித்த காவிரியாற்றங்கரை பிராமணர்களால் மலைநாட்டில் (கேரளா) காலம் தள்ள முடியாமல் கற்றுக்கொண்டு மறுபடி காவிரிக்கரைக்கே வந்துவிட்டனர். பரசுராமர் அவர்களின் சின்னங்களில் சிலவற்றை மட்டுமே மாற்றியதால் அவர்கள் மற்ற பிராமணர்களுடன் கலந்துவிட முடிந்தது. அதன் பின் வந்தவர்களுக்கு பழக்க வழக்கங்களை முற்றிலும் மாற்றி அவர்கள் மறுபடி திரும்பி செல்லாதவாறு செய்தார். இப்படித்தான் தமிழகத்தில் முன்குடுமி சோழியர்கள் தோன்றினர் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

  அடியேன்,
  மணிகண்டன்

  ReplyDelete
 41. //குமரன் (Kumaran) said...
  சரி. சைவ ஆதினத்தார் மாணிக்கவாசகரையும் ஒரு நாயன்மார் என்று அறிவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பெரிய புராணத்தைத் திருத்தி எழுதப் போகிறீர்களா? :-)//

  ஹா ஹா ஹா!
  எழுதட்டுமா? அடியேனுக்கு அனுமதி உண்டா?
  இது சிவன் பாட்டா, இராமன் பாட்டா-ன்னு வந்து நிக்க மாட்டீக தானே? :)

  //நீங்கள் எழுதவில்லை என்றால் 'அப்படி திருத்தப்படவேண்டும்' என்றும் ஒரு கடிதம் அனுப்பப் போகிறோமா? :-)//

  நீங்கள் நக்கல் அடித்தாலும், நான் ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?
  Esteem Value ன்னு ஒன்னு இருக்கு! மணிவாசகர் நாயன்மார் என்பதுவும் அது போல!

  சேக்கிழாரை மாத்தி எழுத வேணாம்! ஆனால் இனி பப்ளிஷ் ஆகும் அத்தனை நாயன்மார்கள் புத்தகங்களிலும், மாணிக்கவாசகரும் இடம் பெறுவார் அல்லவா?

  அப்படி யோசித்துப் பாருங்கள்!

  ReplyDelete
 42. //குமரன் (Kumaran) said...
  தேவாசிரிய மண்டபத்தில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி சொன்னதற்கு நன்றி இரவி. பதிவில் சேர்க்கத் தேவையில்லை. நான் படித்தது சரி தானா என்று தெரிந்து கொள்ளவே கேட்டேன்//

  தங்கள் சித்தம், எங்கள் பாக்கியம், குமரன்! :)

  ReplyDelete
 43. // கோவி.கண்ணன் said...
  தரவு இருக்கிறது தேடித் தருகிறேன்//

  சூப்பர்!
  அறுபத்து மூவர் விழாவில் பாரதியாரும் ஒரு நாயன்மாராய் உலா வரும் கண்கொள்ளாக் காட்சியைப் பாக்க ஆவலாய் உள்ளேன்! :)))

  //இல்லை என்றால் சமயக் காவலர்களின் சொல்லடிக்கு கிருஷ்ண பருந்துகள் கூட இறக்கை ஒடிந்து விழுந்துவிடும்//

  ஹிஹி!
  சமயக் காவலரா? யாரு அவிங்க?

  ReplyDelete
 44. 72 நாயன்மார்கள் பட்டியல் இங்கே கொடுத்து இருக்கிறார்கள்.

  http://www.othuvar.com/nayanmar/list_nayanmar.html

  ReplyDelete
 45. //கோவி.கண்ணன் said...
  72 நாயன்மார்கள் பட்டியல் இங்கே கொடுத்து இருக்கிறார்கள்.
  http://www.othuvar.com/nayanmar/list_nayanmar.html//

  டேங்கீஸ்-ண்ணா!
  ஆனா இதுல நீங்க சொன்ன பாரதியார் பேரு இல்லீயே? :)

  ReplyDelete
 46. //கோவி.கண்ணன் said...
  கேஆர்எஸ்,
  தில்லைவாழ் அந்தணர் என்றால் சிவபெருமானா?//

  இல்லை! சிவபெருமான் அவர்களுள் முதல்வர்! அவ்வளவு தான்!

  //அவரையும் சேர்த்து தான் தில்லைவாழ் அந்தணர்கள் பட்டியலில் 1000 உறுப்பினர்கள் என்று புராணம் காட்டுகிறார்கள்//

  அது ஆயிரம் இல்லை! தில்லை மூவாயிரவர்!

  //பார்பனர்க்கு அடியேன் என்று ஒரு பார்பனரே பாடி இருக்க மாட்டார் இல்லையா ?//

  ஹா ஹா ஹா!
  ஏன்? பாடி இருக்கவே முடியாதா?
  சம்பந்தருக்கு அடியேன் என்று சுந்தரர் பாடுகிறாரே!

  முன்பே சொன்னது தான்! படக் படக்-ன்னு தாவாமல் நீங்களே யோசிச்சிப் பாத்துட்டு அப்பறம் கேள்வியும் கேளுங்க! :)

  இன்னும் சொல்லப் போனா வேளாள நம்மாழ்வாருக்கு அடியேன்-ன்னு பார்ப்பன மதுரகவி பாடுறாரே!

  //ஞானசம்பந்தரும் புனல்வாதத்தில் தில்லைவாழ் அந்தணர் வாழ்க என்றே முதல்வரியை எழுதினாராம்//

  தவறான தகவல்!
  வாழ்க அந்தணர்! வானவர் ஆனினம்!
  வீழ்க தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
  வாழ்க அந்தணர்-ன்னு தான் பாடுகிறார்! வாழ்க தில்லை வாழ் அந்தணர்-ன்னு பாடலை!

  ReplyDelete
 47. //கோவி.கண்ணன் said...
  மாணிக்க வாசகர் என்று பெயர் வைத்தது சிவபெருமானாம்//

  இதுக்காச்சும் தரவு கொடுங்க! ஈசி தான்! :)

  ReplyDelete
 48. //வசீகரா said...
  வணக்கம் கேஆர்எஸ் அண்ணா, அருமையான பதிவு//

  வணக்கம் மணிகண்டா! நன்றி!

  //மாணிக்கவாசகர் பெருமானை கண்டிப்பாக நாயன்மார்கள் வரிசையில் சேர்க்க வேண்டும்.//

  நன்றியோ நன்றி!

  //பரசுராமர் பிராமணர்களை பாதுகாத்து கொள்வதற்காக அவர்களுக்கு அதர்வண வேத ஷரத்துக்களை சொல்லிக்கொடுக்க தமிழக காவிரியாற்றங்கரை பிராமணர்களையும், கன்னட மற்றும் ஆந்திர பிராமணர்களையும் அழைத்தார்//

  உம்...எங்கேயோ படிச்சிருக்கேன்!

  //மற்ற பிராமணர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காக அவர்களின் பழக்க வழக்கம், சின்னங்களில் சிலவற்றை மாற்றினார். அவைகளுள் ஒன்றுதான் முன்குடிமி//

  ஓ!

  //செழிப்பாக உண்டுகளித்த காவிரியாற்றங்கரை பிராமணர்களால் மலைநாட்டில் (கேரளா) காலம் தள்ள முடியாமல் கற்றுக்கொண்டு மறுபடி காவிரிக்கரைக்கே வந்துவிட்டனர்...இப்படித்தான் தமிழகத்தில் முன்குடுமி சோழியர்கள் தோன்றினர் என கேள்விப்பட்டிருக்கிறேன்.//

  ஓ!
  Do u have any reading material on this?

  ReplyDelete
 49. //குமரன் (Kumaran) said...
  புதினங்களில் படித்ததை உண்மையென்று சொல்ல இயலாது//

  புதினத்தில் மட்டுமே என்று சொல்லவில்லை குமரன்!

  //அதே போல் நம்பூதிரிகளும் முன் குடுமி அந்தணர்கள் என்பதால் தீட்சிதர்களும் சேர தேசத்திலிருந்து வந்தவர்கள் என்று சொல்ல இயலாது//

  நான் இப்படிச் சொல்லலை!
  கேரளத்திலும் முன் குடுமி அல்லாத (பட்டத்திரி/நம்பூதிரி அல்லாத) அந்தணர்கள் இருக்காங்களே!

  //அப்படியென்றால் அதே காரணத்தைக் கொண்டு முன் குடுமி சோழிய பிராமணரான பெரியாழ்வாரையும் சேர தேசத்தவர் எனலாம். அப்படி எந்த வரலாற்றிலும் படித்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்//

  முன் குடுமியை மட்டும் வைத்துச் சொல்லவில்லை!
  நான் சொன்னது, தீட்சிதர்கள் =
  1. சேர தேசத்தில் இருந்து வந்தவர்கள்!
  2. முன் குடுமி உள்ளவர்கள்
  3. இங்கு சிவாச்சாரியார்களோடு (தில்லைவாழ் அந்தணர்) கலந்து விட்டவர்கள்
  4. தாந்த்ரீக வழிபாடு செய்பவர்கள்

  //நம்பத்தகுந்த 'வரலாற்று ஆய்வுக் கட்டுரை'யைத் தானே வாசித்தீர்கள்? அல்லது மேலோட்டமாக கிடைத்த தோற்றத்தை வைத்துக் கொண்டு ஆய்வுக் கட்டுரை எழுதிக் கொண்டு திரிகிறார்களே சிலர் - அவர்கள் எழுதியதைப் படித்தீர்களா?//

  ஹா ஹா ஹா!
  ஈழத்து ஆறுமுக நாவலர் முதலான சைவப் பெரியார்கள் சிலரின் கட்டுரை!
  அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நீங்க தான் சொல்லணும்! அவர்களிடம் வாசித்ததை முன் வைத்தேன்! அவ்வளவே!

  அவர்களும் கட்டுரையை முழுமை செய்யவில்லை!
  தில்லை தனி ஆகம வழிபாடு பற்றிப் பல கேள்விகள் எழுப்பியும் உள்ளனர்! குறிப்பாக, பதஞ்சலி யோக முறை என்று சொல்லிக் கொண்டு தினமும் உச்சி கால வேளையில் செய்யப்படும் லஜ்ஜா ஹோமம் போன்றவை கேரள ஆலயங்களில் மட்டுமே உண்டு!

  //இதுவரை 'தில்லை மூவாயிரவர்' என்று சைவ, வைணவப் பனுவல்களில் சொல்லப்படுபவர்களின் வழி வந்தவர்கள் தான் இன்னும் தில்லையில் சிவத்தொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற புரிதலில் இருக்கிறேன்//

  திருமங்கையாழ்வாரும் மூவாயிரவரைப் பற்றிப் பாடியுள்ளாரே!
  ஆனால் எல்லாருமே தில்லை வாழ் அந்தணர்கள் என்று தான் குறிக்கின்றனர்! யாராவது தீக்ஷிதர் என்று குறித்து உள்ளார்களா?


  //'தகுந்த', 'தரவுகளுடன் கூடிய', 'நம்பக்கூடிய' ஆய்வுகள் இருந்தால் ஏற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. நக்கீரன் காட்டிய வழி அது தானே. :-)//

  மீ டூ!
  சைவச் செம்மல்கள் இது குறித்து அறியத் தர வேணும்! அவர்கட்கு அந்தச் சிறு பொறுப்பாச்சும் இருக்கு!

  ReplyDelete
 50. ஓக்கே, கும்மி அடிக்க ரொம்ப நேரமா வெயிட்டிங்கு; பூனைக்குட்டீஸ் அவுட்:-) தரவு:

  1. ஆழ்வார்கள் படம் தான் முதலில். ஈஸ்ட்மன் கலரில் ஆழ்வார்கள்.

  2. நாயன்மார்களின் படம் கறுப்பு வெள்ளை, சைடுபக்கத்தில் எடுக்கப்பட்டது:-)

  3. மற்ற கட்சி கூட்டணியில் ஆள் சரியில்லை, முக்கியமானவரை முதலில் வைக்கலைன்னு போட்டு குடுத்தாச்சு.

  :-)

  ReplyDelete
 51. // கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
  ஓக்கே, கும்மி அடிக்க ரொம்ப நேரமா வெயிட்டிங்கு; பூனைக்குட்டீஸ் அவுட்:-) தரவு://

  ஹா ஹா ஹா
  ஜூப்பரு-க்கா! ஜூப்பரு! எல்லாரும் ஓடியாங்க! கேஆரெஸ் முகத் திரையைக் கிழித்த ஜான்சி ராணி கெபி அக்கா வாழ்க! வாழ்க!

  எலே கேஆரெஸ்! என்னலே பாக்குற? பதில் சொல்லுலே பதிலு! யக்கா உன்னைச் செங் கையாப் புடிச்சி இருக்காக! :)

  ReplyDelete
 52. வித்யாகுமரன் அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. அவுக சொன்னாப்ல 'வித்யா'சமாதான் சிந்திக்கிறீக :)

  ReplyDelete
 53. ////கோவி.கண்ணன் said...
  மாணிக்க வாசகர் என்று பெயர் வைத்தது சிவபெருமானாம்//

  இதுக்காச்சும் தரவு கொடுங்க! ஈசி தான்! :) //

  இதுக்கும் தரவா ? மாணிக்கவாசகர் பற்றி படித்துவிட்டு எழுதி இருப்பீர்கள், கண்டிப்பாக தெரியுமென்றல்லவா நினைத்தேன். நாளை ஸ்கேன் செய்து அனுப்புகிறேன். இல்லாவிடில் காலம் காலமாக பொய்யாக பே(ஏ)சுவதாக ஆகிவிடும். :)

  //தவறான தகவல்!
  வாழ்க அந்தணர்! வானவர் ஆனினம்!
  //

  அந்தணர் என்றால் பார்பனர் என்று ஞான சம்பந்தர்காலத்தில் சுறுங்கிவிட்டதால், தில்லைவாழ் / அல்லாத அந்தணராக இருந்தாலும் எல்லாம் ஒன்றுதான். :)

  ஞானசம்பந்தர் கதையில் பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய்வரவேண்டும் என்று ஞான சம்பந்தர் சாபம் கொடுத்தபிறகு தான் வந்ததாமே. (அதற்கு பாடலே உள்ளது) அதையும் பெரும்தன்மையாக அவரே நீறு கொண்டு நீக்குவாராம், அப்பறம் தான் அனல், புணல் வாதமெல்லாம். :)

  ReplyDelete
 54. //கவிநயா said...
  வித்யாகுமரன் அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. அவுக சொன்னாப்ல 'வித்யா'சமாதான் சிந்திக்கிறீக :)//

  ஹிஹி! "வித்யா" சமா :)

  ஏதோ சிந்திக்கறேனே! அது வரை சந்தோஷம்-க்கா! :))

  ReplyDelete
 55. //கோவி.கண்ணன் said...
  இதுக்கும் தரவா ? மாணிக்கவாசகர் பற்றி படித்துவிட்டு எழுதி இருப்பீர்கள், கண்டிப்பாக தெரியுமென்றல்லவா நினைத்தேன்//

  நீங்களும் தெரிஞ்சிக்கிட்டு தான் பின்னூட்டறீங்க-ன்னு டெஸ்ட் பண்ண வேணாம்? அதுக்குத் தான் கேட்டேன்! :))

  //இல்லாவிடில் காலம் காலமாக பொய்யாக பே(ஏ)சுவதாக ஆகிவிடும். :)//

  காலம் - அதில் பேசப்படுவதெல்லாம் பொய்யா?
  ஐயகோ! Eki! Eki! Eki!

  //ஞானசம்பந்தர் கதையில் பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய்வரவேண்டும் என்று ஞான சம்பந்தர் சாபம் கொடுத்தபிறகு தான் வந்ததாமே (அதற்கு பாடலே உள்ளது)//

  பாடலைக் கொடுங்க ப்ளீஸ்! :)
  மு.மேத்தா பாட்டைக் கொடுக்கக் கூடாது! சொல்லிப்புட்டேன்! :))

  ReplyDelete
 56. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
  ஓக்கே, கும்மி அடிக்க ரொம்ப நேரமா வெயிட்டிங்கு; பூனைக்குட்டீஸ் அவுட்:-)//

  என்னக்கா உங்க சைவக் கும்மிக்கு ஆளைக் காணோம்?
  இனிமேல், கேஆரெஸ் பதிவில் சைவக் கும்மி அடிக்க முடியாது-ன்னு ஒலகத்துக்கே தெரிஞ்சிருக்கு பாத்தீங்களா? ஹா ஹா ஹா! :)

  சரி...உங்க விருப்பத்தை நான் தீத்து வைக்கிறேன்!
  //1. ஆழ்வார்கள் படம் தான் முதலில். ஈஸ்ட்மன் கலரில் ஆழ்வார்கள்//

  எல்லாருமே சும்மா உற்சவர்கள்! அதுவும் ஒரு செட்டப் டேபிள் மேல! பதிவுல வேற ஆழ்வார்கள் லிஸ்ட்டை விட நாயன்மார் லிஸ்ட்டு தான் புடிக்கும்-ன்னும் சொல்லிட்டேன்! :)

  //2. நாயன்மார்களின் படம் கறுப்பு வெள்ளை, சைடுபக்கத்தில் எடுக்கப்பட்டது:-)//

  அத்தனையும் மூலவர் சிலை! கறுப்பு வெள்ளை படங்கள் காலா காலத்துக்கும் நிற்பவை! PIT-ல கேளுங்க! சொல்லுவாய்ங்க! :)

  //3. மற்ற கட்சி கூட்டணியில் ஆள் சரியில்லை, முக்கியமானவரை முதலில் வைக்கலைன்னு போட்டு குடுத்தாச்சு.//

  ஓ...அதுக்குப் பேரு போட்டுக் கொடுத்தலா?
  ஒரு பெரும் சிவனடியார்க்குச் சிறப்பு செய்யுங்க-ன்னு சொன்னா ஒங்களுக்குக் கோவம் வருதா?
  இதிலிருந்தே தெரியலை? கெபி அக்காவின் பூனைக்குட்டி வெளியில் வந்துரிச்சி டோய்! :))

  ReplyDelete
 57. அன்பின் நண்பர் இரவிசங்கர்,

  அருமையானதோர் கட்டுரை.
  மிக்க மகிழ்ச்சி.

  மாணிக்கவாசகப் பெருமான் ஏன் நாயன்மார்களில் இல்லை என்ற
  தேட்டம் எனக்கும் இருந்தது.
  சில மாதங்களுக்கு முன்னர்தான் அடியேனுக்கு ஒரு பழுத்த சிவனடியார்
  விளக்கம் தந்தார்.

  அதனைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

  மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்களில் தன்னை நாயகியாகவே வரித்து எழுதுகிறார்.

  ஆகவே, மாணிக்கவாசகர் பெருமான்
  நாயன்மார்களிலும் உயர்த்தப் பட்டு
  அம்மைக்கு இணையாக மதிக்கப் படுகிறார்.

  திருப்பெருந்துறையில் அம்மைக்கு சமமான பூசைகள் மாணிக்கவாசகப் பெருமானுக்கும் செய்யப் படுகிறதாகவும்
  அறிந்தேன். வேறும் ஒரு திருத்தலம் சொன்னார்; அது நினைவில் இல்லை.

  சிவநெறியில் மாணிக்கவாசகர் அம்மைக்குச் சமமாக போற்றப்படுவதால்
  நாயன்மார்களில் அவர் இல்லை.

  இனிமையான எழுத்துக்களைத் தொடருங்கள்.

  அன்புடன்
  நாக.இளங்கோவன்

  பி.கு: பார்ப்பனன் பார்ப்பனல்லாதவன் வாதத்தில் நண்பர்கள் நாயன்மார்களையும் மாணிக்கவாசகரையும் இழுப்பது வருத்தமாக இருக்கிறது.
  இவர்கள் இந்தச் சில்லரைச் சாதிகளுக்கு அப்பாற்பட்ட உயர்ந்தவர்கள். அவர்களை சாதிவளையத்துள் போடாமல் உரையாடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 58. //அன்பின் நண்பர் இரவிசங்கர்,
  அருமையானதோர் கட்டுரை.
  மிக்க மகிழ்ச்சி//

  வாங்க நாக.இளங்கோவன் ஐயா! நன்றி, தாங்கள் மகிழ்ந்து வாசித்ததற்கு!

  //மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்களில் தன்னை நாயகியாகவே வரித்து எழுதுகிறார்.
  ஆகவே, மாணிக்கவாசகர் பெருமான்
  நாயன்மார்களிலும் உயர்த்தப் பட்டு
  அம்மைக்கு இணையாக மதிக்கப் படுகிறார்//

  ஆகா! மிகவும் அருமை!
  அம்மைக்கு இணையாகவா?
  இது குறித்து அந்தச் சிவனடியார் பார்வை மட்டும் தானா?
  இல்லை சிவாகமங்கள், சைவப் பெரியார்களின் நூல்கள் ஏதேனும் இது பற்றிச் சொல்கின்றனவா? (ஏன் கேட்கிறேன் என்றால்...ஒருவர் மட்டுமன்றி, பலரும் மணிவாசகப் பெருமானை அப்படியே போற்ற வேண்டும் என்பதால் தான்)

  //திருப்பெருந்துறையில் அம்மைக்கு சமமான பூசைகள் மாணிக்கவாசகப் பெருமானுக்கும் செய்யப் படுகிறதாகவும் அறிந்தேன்//

  ஆவுடையார் கோயில்-ன்னு தற்போதைய பேரு! மேலே லிங்கம் கிடையாது! ஆவுடையார் மட்டுமே இருக்கும்! இங்கு மாணிக்க வாசகருக்குத் தான் சிறப்புப் பூசைகள்! உற்சவங்கள்! ஆனால் அம்மைக்கு இணையாக நாயகி பாவத்தில் வைத்துப் போற்றப்படுகிறாரா-ன்னு தெரியாது!

  //இனிமையான எழுத்துக்களைத் தொடருங்கள்.
  அன்புடன்
  நாக.இளங்கோவன்//

  நன்றி நாக.இளங்கோவன் ஐயா!
  தங்களைப் போன்ற அறிஞர்களின் பின்னூட்டமும் ஒரு சிறந்த ஊட்டம்!

  ReplyDelete
 59. //பி.கு: பார்ப்பனன் பார்ப்பனல்லாதவன் வாதத்தில் நண்பர்கள் நாயன்மார்களையும் மாணிக்கவாசகரையும் இழுப்பது வருத்தமாக இருக்கிறது.
  இவர்கள் இந்தச் சில்லரைச் சாதிகளுக்கு அப்பாற்பட்ட உயர்ந்தவர்கள். அவர்களை சாதிவளையத்துள் போடாமல் உரையாடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்//

  அப்படியே ஐயா!
  நால்வரைச் சாதிக்குள் அடைக்கும் கொடுமைகளுக்கு என் பதிவில் இடம் கிடையாது! அது போன்ற பின்னூட்டங்களும் மட்டுறுத்துவேன்!

  இங்கு தில்லை வாழ் அந்தணர் பற்றிய பேச்சு தான் அதிகம் வந்தது போலும்! சம்பந்தப் பெருமானைப் பற்றிய சொற்கள் எல்லை தாண்டவில்லை!

  எப்படி இருப்பினும் இது பதிவுலகப் பெருஞ்சிக்கல் தான் ஐயா! அடியேன் பதிவில் அப்படிப்பட்ட பின்னூட்டங்கள் அறியும் விழைவில் கேட்டால் பதில் உண்டு! நேர்மை இன்றிக் கேட்டால், நால்வரைச் சீண்டவென்றே கேட்டால், delete the spam தான்! :)

  ReplyDelete
 60. Hi Kannbiran:
  I came here after Jeeva directed me in his Margazhi Sowmya performance blogpost. Yes, I am one of those who is miffed by the non-inclusion of Manickavacagar in the count of 63+1. From what I read it was Sekkizhar who made the count to 63 by including Sundarar and his parents. My guess is Sekkizhar was the prime minister of Kulottunga sozhan and upon the king's direction he wrote periyapuranam. As for Manickavacagar's time period they only say it is in the first millenium. If it was after Sundarar's period, Sekkizhar must have thought that Manickavacagar was relatively a "baby" in the list of servitors who came before him. As you see Manickavacagar did not have the "vintage" during Sekkizhar's period (just like wines even people have vintage--think about how we extol musicians of yesteryears as opposed to the current ones). Secondly Manickavacager served as the prime minister for the Pandya king while Sekkizhar was the same for the sOzha king. That inter-kingdom rivalry might have played a part too. Who says "politics" and "royal rivalry" did not exist in the olden days? Having said that the number 63 is so sacred that no AdhInam in Thamizhnadu would touch the volatile subject to amend the number. But it is only a numerical honor which Manicakavacager overcome by his individual greatness allotted to him by including his works in the 8th tirumuRai. Being one in 4 is better than one in 64. That is my take.

  As for the dIkshitars, I read that Adisankarar after his north India trip brought the brahmin priests from there and appointed them at various temples including Cidambaram. The current day "dixits" of the North are supposed to be the descendants of those dIkshit(ar)s of the past.
  //ஞானசம்பந்தர் கதையில் பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய்வரவேண்டும் என்று ஞான சம்பந்தர் சாபம் கொடுத்தபிறகு தான் வந்ததாமே (அதற்கு பாடலே உள்ளது)//

  பாடலைக் கொடுங்க ப்ளீஸ்! :)
  மு.மேத்தா பாட்டைக் கொடுக்கக் கூடாது! சொல்லிப்புட்டேன்! :))
  I understand that the Jain advisors of the Pandya King set fire to the building where Sambandar was staying in Madurai. He escaped and with the Lord's consent he directed the fire to enter the king's stomach with the subsequent "mandiramAvadu nIRu.." episode. I do not have the song handy but I believe it exists in the first three tirumuRais or in periyapuranam.

  ReplyDelete
 61. //nAradA said...
  வாங்க சேதுராமன்..

  //From what I read it was Sekkizhar who made the count to 63 by including Sundarar and his parent//

  இல்லை; அதுக்கும் முன்னரே நம்பியாண்டர் நம்பி தன் திருத்தொண்டர் திருவந்தாதியில் இப்படிச் செய்து வைத்தார். ராஜராஜ சோழனுக்கு தில்லை இருட்டறையில் தேவார பதிகங்கள் இருக்கு-ன்னு அறிவிப்பாரே! அவரே தான்!

  //If it was after Sundarar's period, Sekkizhar must have thought that Manickavacagar was relatively a "baby" in the list of servitors who came before him//

  சேக்கிழார் தம் திருத்தொண்டர் புராணத்தில் (பெரிய புராணம்), நம்பியாண்டார் நம்பிகளை ஒட்டியே பட்டியல் இட்டார்!

  மாணிக்கவாசகர் அப்போது தான் தோன்றிய அண்மைக் கால பக்தர் என்றால், மணிவாசகருக்காக நரியைப் பரியாக்கிய குறிப்புகள் எல்லாம் ஏன் பாடலில் தர வேண்டும்?
  If his reason was to ignore a relatively "small devotional baby", then he would have ignored him uniformly.
  There might be some other reason why he is not in the list of 63. Did u see Naga. Elangovan's reply of equating Manivasagar with Umai Annai? Any thoughts?

  //Secondly Manickavacager served as the prime minister for the Pandya king while Sekkizhar was the same for the sOzha king//

  yea, but manickavasagar was tortured by the pandya king. so sekkizhar cud have adopted the "enemy's enemy is my friend" approach. but he didnt do that too! :)

  //number 63 is so sacred that no AdhInam in Thamizhnadu would touch the volatile subject to amend the number//

  ha ha ha!
  very true!
  but people should think beyond numbers or atleast an effort to be made in that direction.
  do u know that ramanusar changed the whole agamam of srirangam from one to another, in spite of stiff opposition?
  he did this just to include tamizh worship and ppl from other castes to participate in temple services.
  such should be the spirit of present day mutts & atheenams.

  //Being one in 4 is better than one in 64. That is my take//

  very true!
  but ppl who read the stories of 63 might not read abt manivasagar. they have to hunt for his stories separately.

  //As for the dIkshitars, I read that Adisankarar after his north India trip brought the brahmin priests from there and appointed them at various temples including Cidambaram//

  May be!
  What i mentioned was that the current day deekshitars are not the aadhi saiva sivacharyal what the thirumurai speaks as thillai vaazh anthanargal.

  //I understand that the Jain advisors of the Pandya King set fire to the building where Sambandar was staying in Madurai//

  yes!

  //He escaped and with the Lord's consent he directed the fire to enter the king's stomach with the subsequent "mandiramAvadu nIRu.." episode//

  sambandar just sings: let the fire initiated by the king go to the owner itself...hez not cursing the king.

  //I do not have the song handy//
  Govi anna has given the song already in his comments! see his link in the comments!

  பாண்டியற் காகவே என்று முடியும் பதினோரு பதிகங்கள் பாடுவார்!
  சூலை நோயைக் கொடு-ன்னு எல்லாம் சபிக்க மாட்டார்!
  அவன் வைத்த தீ அவனையே சேரட்டும் என்பதே அவர் கருத்து!

  செய்யனே திரு ஆலவாய் மேவிய
  ஐயனே அஞ்சல் என்றருள் செய்யெனைப்
  பொய்யராம் அமணர் கொளு வுஞ்சுடர்
  பையவே சென்று பாண்டியற் காகவே.

  ReplyDelete
 62. தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்குமடியேன் என்னும் பாடல் கேட்டேன்.
  மிகவும் நன்றாக உள்ளது. ஒரு ப்யூரிடன் பாயின்ட் ஆஃப் வ்யூவிலே.
  இதே மெட்டிலே தான் பாடப்படுகிறது, எல்லாக் கோவில்களிலேயும்.
  இருந்தாலும், அடியார்க்கு அடியேன் என்று சொல்லும்போது
  ஒரு தாஸ்ய பாவம் (தான் தாசன் என்று )ஒலிக்கவேண்டாமோ என்று எனக்குத் தோன்றியது.

  ஓல்டு மேன் நான். சங்கீத ஞானமோ வித்வத்தோ அல்லது குரலோ அதில் வளமோ ஒரு விழுக்காடு கூட‌
  நாட் ஈவன் ஒன் பர் சென்ட் கிடையாது.
  இருந்தாலும் ஒரு ஆர்வத்தில் எனக்குத் தெரிந்த ராகத்தில் பாடி இருக்கிறேன்.
  இப்படித்தான் இந்தப் பண்ணில்தான் பாடவேண்டும் அப்படின்னு இருக்கிறதோ என்னவோ
  அதுவும் தெரியாது. தமிழ்ப்பண் என்று எடுத்துக்கொண்டால் மேகராகக் குறிஞ்சி என்ற ஒன்று
  ( நம்ம நீலாம்பரி மாதிரி ..கொஞ்சம் ஆனந்த பைரவி மாதிரியும் ) அதில் பாடி இருப்பதாக நினைக்கிறேன்.

  படங்கள் உங்கள் பதிவிலிருந்து தான் எடுத்தேன். நன்றி.

  http://uk.youtube.com/watch?v=njQE-7oRq4E

  சுப்பு ரத்தினம்.
  http://arthamullavalaipathivugal.blogspot.com

  ReplyDelete
 63. //sury said...
  ஒரு ப்யூரிடன் பாயின்ட் ஆஃப் வ்யூவிலே.
  இதே மெட்டிலே தான் பாடப்படுகிறது, எல்லாக் கோவில்களிலேயும்//

  :)))

  //இருந்தாலும், அடியார்க்கு அடியேன் என்று சொல்லும்போது
  ஒரு தாஸ்ய பாவம் (தான் தாசன் என்று )ஒலிக்கவேண்டாமோ என்று எனக்குத் தோன்றியது//

  அருமை! தவறே இல்லை சூரி சார்! இலக்கண விதிகள் பக்திக்கு இல்லை! தாராளமாக மனங் கசிந்து மரபை மீறலாம்! :)

  //ஓல்டு மேன் நான். சங்கீத ஞானமோ வித்வத்தோ அல்லது குரலோ அதில் வளமோ ஒரு விழுக்காடு கூட‌
  நாட் ஈவன் ஒன் பர் சென்ட் கிடையாது//

  அதனால் என்ன? ஆர்வமே போதும்!
  அன்பு ஈனும் ஆர்வம் உடைமை!

  //மேகராகக் குறிஞ்சி என்ற ஒன்று
  ( நம்ம நீலாம்பரி மாதிரி ..கொஞ்சம் ஆனந்த பைரவி மாதிரியும் ) அதில் பாடி இருப்பதாக நினைக்கிறேன்//

  அதானே பார்த்தேன்...வித்தியாசமா தாலாட்டுச் சாயலும் பாட்டில் கேக்குதே-ன்னு!

  //படங்கள் உங்கள் பதிவிலிருந்து தான் எடுத்தேன். நன்றி.
  http://uk.youtube.com/watch?v=njQE-7oRq4E//

  அழகிய முயற்சி! அதைச் செய்து பார்த்து, மறக்காமல் இங்கு இட்டமைக்கும் நன்றி சூரி சார்!

  இந்தப் பதிவின் பயன் நிறைவேறியது!
  திருச்சிற்றம்பலம்!

  ReplyDelete
 64. புதுமையான முயற்சி ....வாழ்த்துக்கள் .....
  தேவாரதிருமுறைகள் பதிவிறக்கம் செய்ய மற்றும் 63 நாயன்மார்களின் வாழ்கைசரிதிரம் வீடியோவில் காண

  www.devarathirumurai.wordpress.com

  ReplyDelete
 65. மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
  நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
  இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
  ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

  இங்கே சொடுக்கவும்

  ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
  அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

  அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
  தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  ReplyDelete
 66. Mr. Ravi Sir,
  May be this feedback is too late.
  Last week i visited Thiruperumthurai i.e., Avudayarkoil where Thiruvasagam born.
  There is one Adiyar gives different explanation for our doubt.
  ie., why Manikavasagar wasnt added in this list.
  He said
  1. "The period of manikavagar is 3rd Cenutry. The proof is the information about him in Thevaram also."
  2."Other Adiyars worship Manikavasagar next or more than Lord Siva. No other Adiyar visited to Thiruperumthurai coz of their respect on Manikavasagar.Proof is Padhigagal on near Padal Petra Sathaganal."
  3. He added "Manikavasagar is more than these 63 + 9 people"
  But, i dont know how far it is true.
  Just i want to share this msg with u.
  That why feedback.
  Thank You and Wishes
  Thiyagarajan

  ReplyDelete
 67. மிகவும் அருமை

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP