Saturday, December 27, 2008

மார்கழி-13: ஆண்டாளும் அப்துல் கலாமும்!

ஆண்டாளும், அப்துல் கலாமுமா? என்ன பேச்சு இது? ஆண்டாள் எப்போ ராக்கெட் விட்டா? ஏவுகணை விட்டா? விண்வெளி ஆராய்ச்சி பண்ணா? பாக்கலாம் வாரீயளா? :)


வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று! - அப்படின்னா என்ன?
அட, வெரி சிம்பிள்! வெள்ளிக் கிழமை வந்துருச்சி! வியாழக் கிழமை போயிருச்சி! இந்தப் பாட்டை வெள்ளிக்கிழமை அன்னிக்கு ஆண்டாள் எழுதி இருக்காளா என்ன? ஹிஹி! வாங்க இன்றைய பாசுர விளக்கத்தில் பார்க்கலாம்! கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!

* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


புள்ளின் வாய் கீண்டானைப், பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக், கீர்த்திமை பாடிப் போய்ப்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!!


புள்ளும் சிலம்பின காண்! போதரிக் கண்ணினாய்,
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய், நீ நன்னாளால்,
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏல்-ஓர் எம் பாவாய்!



வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று - இதைப் பார்த்து விட்டு அப்புறம் மற்ற விளக்கத்துக்குப் போவோம்!

வெள்ளி=Friday! வியாழன்=Thursday-ன்னு பொதுவா எடுத்துக்கலாம்!
வெள்ளிக்கிழமை பொறந்தாச்சி! வியாழக்கிழமை ஓடியே போச்சு! அப்படின்னு ஆண்டாள் சொல்ல வராளா? ஆனால் செவ்வாய் எழுந்து திங்கள் உறங்கிற்று-ன்னு எல்லாம் அவள் வேறெங்கும் பாடினா மாதிரி தெரியலையே!
அப்படின்னா இதுல வேற ஏதோ ஒன்னு இருக்கு! மேலும் இன்னும் சூர்யோதயம் வேற ஆகவில்லை! அதனால் (தமிழ்க் காலக் கணக்குப்படி) இன்னும் வெள்ளிக்கிழமை வரலை! அப்போ இது என்ன?

வெள்ளி=Venus! வியாழன்=Jupiter!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று = Venus rose as Jupiter set!


பொதுவா சூர்யோதயத்துக்கு முன்னுள்ள பிரம்ம முகூர்த்தம் என்னும் காலத்தில், வானிலே விடி வெள்ளி தெரியும்! இன்னிக்கிக் கூட புது வீட்டுக்குப் போகும் போதோ, சொந்த வீடு கட்டிக்கிட்டுப் போகும் போதோ, வெள்ளி எதிர்க்கே போகாதே-ன்னு பெரியவங்க சொல்லுவாய்ங்க!

* அதிகாலைச் சூரியன் உதயம் ஆவதற்கு முன்னால் வானில் வெளிச்சம் அதிகம் இருக்காது! அதனால் பூமிக்கு மிக அருகில் உள்ள வெள்ளிக் கிரகம் (Venus) ஒரு நட்சத்திரம் போல தெரியும்! வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்!
* ஆனால் வியாழன் (Jupiter) அவ்வளவு சீக்கிரம் தெரியாது! தன் சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வரும் போது மட்டுமே தெரியும்!

வியாழன் கிரகம் ஒரு பக்கமாய் மறைய, எதிரே வெள்ளிக் கிரகம் தோன்றும் வானியல் நிகழ்வு இது! வானில் சந்திரனும் இன்னும் மறையவில்லை! மேற்றிசையில் இருக்கு! சூரியன் இன்னும் ஒரு மணியில் இதோ உதிக்கத் துவங்கப் போகிறது!
பார்க்கிறாள் கோதை! அவள் காலத்தில் நடைபெற்ற ஒரு அதிசய வானியல் நிகழ்வை உடனே குறித்து வைக்கிறாள் அவள் திருப்பாவை டைரியில்! ஒரு கோதையின் டைரிக் குறிப்பு!

எப்போதெல்லாம் இப்படி அதிசய நிகழ்வு நடந்தது என்பதை விஞ்ஞானிகளின் துணையோடு, வானியல் குறிப்பை ஆராய்ந்தார்கள். அதை வைத்து ஆண்டாளின் காலம் கி.பி 855 என்றும் வரையறை கூடச் சிலர் செய்தார்கள்! நாம் அந்த ஆய்வுக்குள் போகாமல், இந்த நுட்பத்தை மட்டும் இப்போதைக்கு ரசிப்போம்!

ஆண்டாள் காலத்தில் மட்டும் தான் இப்படி நடந்ததா? அதுக்கு அப்பறம் இப்படி நடக்கவே இல்லையா? நம் காலத்தில் இவ்வாறு எல்லாம் நடந்துள்ளதா? இல்லீன்னா உனக்கு வைணவம் ரொம்பப் பிடிக்குமே-ன்னு கோதையை ரொம்பத் தான் ஓவராப் புகழறீயா? :)

Pic Shot on Dec-01-2008, during Venus-Jupiter Conjunction


ஹிஹி! அரண்டவன் கண்ணுக்கு அடியேன் தொட்டதெல்லாம் வைணவம்! :) ஒரு இனிய அதிர்ச்சி பார்த்தீங்களா? இது போன்ற அதிசய நிகழ்வு, வெள்ளி எழுந்து வியாழம் உறங்கல், இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடித் தான் நடந்திருக்கு! Nov 28 - Dec 01, 2008! இதோ செய்தி!

* நீங்க யாராச்சும் அன்னிக்கி இதைக் கண்டீர்களா?
* உடனே பாவையோடு தொடர்பு படுத்திப் பார்த்தீங்களா?
* டைரியில் குறிச்சி வச்சீங்களா?
* பதிவு ஏதாச்சும் போட்டு, பதிஞ்சு வச்சீங்களா? :)
ஹிஹி! அறிவியல் காலத்தில் வாழும் போதே நாமெல்லாம் இப்படின்னா, கிராமத்துப் பொண்ணு கோதை இது பற்றி அன்றே பதிஞ்சி வைப்பதைப் பாருங்கள்!
இப்போ தெரியுதா அவளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்? இனி இந்த நிகழ்வு வரப் போவது அடுத்த May-11-2011 இல் தான்! :)

மன்னர்களின் அந்தப்புர லீலைகளைச் அக்காலப் புலவர்கள் சிலர் உலாவாகப் பதிந்து வைத்தார்கள்! மானிடனைப் பாடாது, இறைவன் அருளை மட்டுமே பாட்டாக வடித்து வைத்தார்கள் இன்னும் சில அருட்கவிஞர்கள்! ஆனால் ஆண்டாள் இன்னும் ஒரு படி மேலே போய், அறிவியல்-வாழ்வியல்-இறையியல் என்று அத்தனையும் சமதளத்தில் கொண்டு வருகிறாள்!
இப்போ தெரிகிறது அல்லவா, அவள் பாவை மட்டும் தனித்து நிற்கக் காரணம் என்ன-ன்னு?

* அப்துல் கலாம் ஐயா விஞ்ஞானியாக இருந்து கொண்டு, கவிதையும்-இறையும் நேசித்தார்!
* கோதை கவிதாயினியாக இருந்து கொண்டு, விஞ்ஞானம் நேசித்தாள்!
Space Data Aggregator, Andal திருவடிகளே சரணம்! :)


புள்ளின் வாய் கீண்டானை = கொக்காக வந்த பகாசுரன் அலகைப் பிளந்தானை (கண்ணனை)
(பீமன் கொன்ற பகாசுரன் வேறு! இந்தக் கொக்குப் பகாசுரன் வேறு! அப்பவே பெயர்க் குழப்பங்கள் போல!) இந்தப் பகாசுரனின் அலகைப் பிளப்பதை, திருமலையில் எம்பெருமானுக்கு அலங்காரமாகச் செய்து, மீள் பதிந்து காட்டுகிறார்கள் (Re-enactment)!

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை = இந்தப் பொல்லா அரக்கன் இராவணன் என்று சொல்வாரும் உண்டு!
ஆனால் சென்ற பாட்டில் இராவணனைக் கோமான் (Gentleman) என்று பாடி விட்டாள்! மேலும் இராவணன் தலையை இராமன் கிள்ளிக் களையவில்லை! அப்போ இது யாரா இருக்கும்? சொல்லுங்க பார்ப்போம்!

கீர்த்திமை பாடிப் போய் = இப்படி மூர்த்தியின் கீர்த்தியை பாடிக் கொண்டு
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் = புள்ளைங்க (பொண்ணுங்க) எல்லாம் பாவை நோன்பு நடக்கும் படித்துறைக்குப் போகுதுங்க!
பாவைக் களம் என்றால் எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து நோன்புக்கு உண்டான சில சடங்குகளைச் செய்யும் படித்துறை! அப்பவே பொண்ணுங்களைப் புள்ளைக-ன்னு கூப்பிடும் பழக்கம் இருந்திருக்கு போல! :)

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று = வெள்ளிக் கிரகம் தோன்ற, அதன் முன் வியாழன் கிரகம் மறையுதே! இது என்ன அதிசயம்!


புள்ளும் சிலம்பின காண் = பறவைகள் பலவும் சிலம்ப ஆரம்பித்து விட்டன! இந்த அதிசய வானியல் நிகழ்வைப் பார்த்தா? இல்லை இது அதிகாலைப் பறவைச் சத்தமா? இப்போதும் கிரகணங்களின் போது பறவைகள் பலமாகக் கத்துவதைப் பார்க்கலாம்!

போதரிக் கண்ணினாய் = போது+அரிக் கண்ணை உடையவளே! போது=மலர்; அரி=வண்டு! வண்டு மேயும் மலர் போல இருக்குடி உன் கண்ணு!
பூப்போல விரிந்த கண், அதில் கருவண்டு போல உன் கருமணி நல்லாவே தெரியுது! இப்படியா விழிச்சிக்கிட்டே அரைத் தூக்கம் தூங்குவ? அடிச்சீ! எழுந்து வா! (ஆண்டாள் காட்டும் உவமையின் சக்தியைப் பாருங்க....முழிச்சிக்கிட்டே தூங்கும் கண் = போது அரிக் கண்)

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ? = ஆற்றிலும் குளத்திலும் முங்கி முங்கிக் குளிக்கும் சுகம் போல வருமா? அதுவும் சில்லுன்னு தண்ணி உடம்பில் படும் போது, முதலில் குளிரெடுத்தாலும், பிற்பாடு எவ்வளவு புத்துணர்ச்சியா இருக்கும்!

காக்காய் குளியல், யானைக் குளியல் போலவா குளிப்பது? நல்லா முங்கி முங்கி நீராட வேணாமா? திருநாமங்களைச் சொல்லிக்கிட்டே குடைந்து குடைந்து நீராடாமல், நீ ஏதோ அரைத் தூக்கம் தூங்கிக் கிட்டு இருக்கியே? போதும்!
குகுகு = குள்ள-குளிர-குடைந்து! :) இதை யாராச்சும் பின்னூட்டத்தில் விரித்துப் பேசுங்க!

பாவாய், நீ நன்னாளால் = பெண்ணே, நல்ல நாளு அதுவுமா இன்னிக்கி கூடவா தூக்கம்?
கள்ளம் தவிர்ந்து கலந்து = உன் கள்ளமான அரைத் தூக்கம் போதும்! வா, எங்களுடன் கலந்து விடு! எம்பெருமானிடத்தில் "கலந்து" விடு!

திருக் "கலந்து" சேரும் மார்ப தேவ தேவ தேவனே,
இருக் "கலந்த" வேத நீதி ஆகி நின்ற நின்மலா,
கருக் "கலந்த" காள மேக மேனி யாய நின்பெயர்,
உருக் "கலந்து" ஒழிவி லாது உரைக் குமாறு உரைசெயே
!

இப்படிக் கலந்து கலந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

37 comments:

  1. வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று.
    ஒவ்வொரு வெள்ளியன்றும், மற்றும் எல்லாக் காலை நேரங்களிலும் வாசல் கதைவைத் திறக்கும்போது கட்டாயம் வானத்தைப் பார்ப்பேன். மேகமில்லாதா நாட்களில் கண்ணைப்பறிக்கும் வெள்ளியைப் பார்க்கும்போது ஏதோ ஒரு நிறைவு.

    உங்கள் பதிவும் அதே நிறைவைத் தருகிறது ரவி.

    ReplyDelete
  2. அழகான பாடல். திருமலையான் அலங்காரப் படம் சூப்பர்! விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்து அஞ்ஞானம் அகற்ற அளித்திருப்பது அருமை.

    ReplyDelete
  3. //ஆண்டாள் இன்னும் ஒரு படி மேலே போய், அறிவியல்-வாழ்வியல்-இறையியல் என்று அத்தனையும் சமதளத்தில் கொண்டு வருகிறாள்.// அருமைய‌ப்பா அருமை

    //போது+அரிக் கண்ணை உடையவளே! போது=மலர்; அரி=வண்டு! வண்டு மேயும் மலர் போல இருக்குடி உன் கண்ணு// அழ‌கான‌ உவ‌மை. ர‌ச‌னைகாரிய‌ப்பா ந‌ம்ம‌ கோதை.

    ஆண்டாள் அர‌ங்க‌ன் திருவ‌டிக‌ளே ச‌ர‌ண‌ம்

    ReplyDelete
  4. அண்ணா, ஆண்டாளுக்கு நீங்க ஒவ்வொரு நாளும் என்னென்ன பட்டம் கொடுத்தீங்கன்னு ஒரு பட்டியல் கொடுக்கலாம்னு இருக்கேன்.. ஒரு கம்யூனிஸ்ட், விஞ்ஞானி, விவசாயி...

    ReplyDelete
  5. //ஆண்டாளின் காலம் கி.பி 855 என்றும் வரையறை கூடச் சிலர் செய்தார்கள்! //

    மு.ராகவய்யங்கார் தானே ஆராய்ந்து சொன்னது ? இந்த காலக் கணிப்பும் குரு பரம்பரை தகவலும் ஒத்துப் போகின்றனவா ?

    ReplyDelete
  6. //போதரிக் கண்ணினாய் //

    ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களின் வர்ணனையை பக்திக்கு அப்பாற்பட்டும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்..

    அதிலும் மனத்துக்கினியானை என்ற பதம் அடடா..

    ReplyDelete
  7. மாதவிப் பந்தல்..
    மாதவ(னின்) பந்தல்..
    மா தவ பந்தல்..

    ReplyDelete
  8. // Raghav said...
    //ஆண்டாளின் காலம் கி.பி 855 என்றும் வரையறை கூடச் சிலர் செய்தார்கள்! //
    மு.ராகவய்யங்கார் தானே ஆராய்ந்து சொன்னது ?//

    ஆமாம் ராகவ்! அட அவரும் ராகவ் தானா? :))

    ReplyDelete
  9. // Raghav said...
    //ஆண்டாளின் காலம் கி.பி 855 என்றும் வரையறை கூடச் சிலர் செய்தார்கள்! //
    மு.ராகவய்யங்கார் தானே ஆராய்ந்து சொன்னது ?//

    அவரும் சிலது கணித்தார்! ஆனால் அவர் ராகவ"ஐயங்கார்" என்பதால், வைணவ ஆழ்வார்களின் காலக் கணிப்புக்கு அவரின் நம்பகத்தன்மை குறித்து வினா எழும்!

    ஆனால் அவர் நேர்மையாகவே கணித்தார்! கிட்டத்தட்ட அதே காலத்தை TV மகாலிங்கம், KA நீலகண்ட சாஸ்திரியார், பேரா.நாகசாமி போன்றோர் உறுதி செய்கிறார்கள்!

    //இந்த காலக் கணிப்பும் குரு பரம்பரை தகவலும் ஒத்துப் போகின்றனவா ?//

    இல்லை!
    பெரும்பாலும் குரு பரம்பரை காலத்தைச் சொல்லாது! நாள், நட்சத்திரம் தான் சொல்லும்! ஆண்டு தெரியாமல் சிரமம்! சிலவற்றில் கலியுக ஆண்டைச் சொல்லும்! அது சற்று குழப்பமே!

    ReplyDelete
  10. //aghav said...
    //போதரிக் கண்ணினாய் //
    ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களின் வர்ணனையை பக்திக்கு அப்பாற்பட்டும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்..//

    எக்ஜாக்ட்லி!
    நண்பன் ஜி.ராகவன் ரசிப்பது போல! :)

    //அதிலும் மனத்துக்கினியானை என்ற பதம் அடடா..//

    ஹிஹி! Sweet Heart-ன்னு யாருக்காச்சும் சொல்ல ஆசைப்படுறீங்க போல! யார் அவிங்க? என் காதில் மட்டும் சொல்லுங்க! :)

    ReplyDelete
  11. //வல்லிசிம்ஹன் said...
    கட்டாயம் வானத்தைப் பார்ப்பேன். மேகமில்லாதா நாட்களில் கண்ணைப்பறிக்கும் வெள்ளியைப் பார்க்கும்போது ஏதோ ஒரு நிறைவு//

    ஆமாம் வல்லியம்மா! வானுக்குள் விரியும் அதிசயங்கள் பல அற்புதமானவை!

    //உங்கள் பதிவும் அதே நிறைவைத் தருகிறது ரவி//

    நன்றி-ம்மா!
    யாம் ஓதிய கல்வியும், எம் பதிவும்
    தாமே பெற மாலவர் தந்ததினால்!

    ReplyDelete
  12. //கவிநயா said...
    அழகான பாடல். திருமலையான் அலங்காரப் படம் சூப்பர்!//

    க்ளிக் பண்ணிப் பெருசா பாருங்க-க்கா! எனக்கும் ரொம்ப பிடிக்கும் இந்தப் படம்! :)

    //விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்து அஞ்ஞானம் அகற்ற அளித்திருப்பது அருமை//

    ஆண்டாள் பெருமை அது!

    ReplyDelete
  13. //மின்னல் said...
    //ஆண்டாள் இன்னும் ஒரு படி மேலே போய், அறிவியல்-வாழ்வியல்-இறையியல் என்று அத்தனையும் சமதளத்தில் கொண்டு வருகிறாள்.//

    அருமைய‌ப்பா அருமை//

    :)
    நன்றி மின்னல் நன்றி!
    ஆனா கேள்விக்கு பதிலே சொல்ல மாட்டேங்குறீங்களே! பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை யாரு?

    ReplyDelete
  14. //Raghav said...
    அண்ணா, ஆண்டாளுக்கு நீங்க ஒவ்வொரு நாளும் என்னென்ன பட்டம் கொடுத்தீங்கன்னு ஒரு பட்டியல் கொடுக்கலாம்னு இருக்கேன்..
    ஒரு கம்யூனிஸ்ட், விஞ்ஞானி, விவசாயி...//

    இவ்ளோ தானா? இன்னும் நிறைய கொடுத்தேன் போல இருக்கே! Starting from Valluvar Pathivu! :)

    ReplyDelete
  15. //ஆண்டாளின் காலம் கி.பி 855 என்றும் வரையறை கூடச் சிலர் செய்தார்கள்! //

    அருமையான செய்தி. கிரகங்களின் நிலையை வைத்து எழுதப்பட்ட பாடல் எப்படி பலவித ஆய்வுகளில் பலன் தருகிறது என்று நினைக்கையில் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.

    ReplyDelete
  16. ஆண்டாளும், அப்துல் கலாமுக்கும் உள்ள தொடர்பு அப்துல்காதருக்கும்,அமாவாசைக்கும் உள்ள தொடர்புக்கு சமம்

    ReplyDelete
  17. ஆண்டாள் ஜன்ம நட்சத்திரைத்தை வைத்து அவர் பிறந்த வருடம் கி.மு.23.06.3005 என்று நா.பொ.இராமதுரை தனது "வானியல் மூலம் வரலாறு காண்போம்" எனும் புத்தகத்தில் நிருவுகிறார். பொதுவாக இராகவைய்யங்கார் கணக்கைத்தான் இலக்கியவாதிகள் குறிப்பிடுகின்றனர்.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. அண்ணா நான் வந்துட்டேன் :D
    இந்த வெள்ளி வியாழன் எல்லாம் எங்கே அண்ணா பாக்குறது ?வானத்தில்தான்ன்னு கிண்டல் பண்ணதீங்க :))

    சூரியனையே உதிக்குறதைப் பார்த்து ரொம்பாஆஆஆஅ நாளாச்சு :D ஆகவே
    2011லில் பார்த்துக்குவோம் ;)நீங்க கையில் ஒரு தொலைநோக்கியுடன் சிங்கப்பூர் வந்துடுங்க ;)


    //போதரிக் கண்ணினாய் = போது+அரிக் கண்ணை உடையவளே! போது=மலர்; அரி=வண்டு! வண்டு மேயும் மலர் போல இருக்குடி உன் கண்ணு!//

    அடடா..இதுக்குள்ள இப்படி ஒரு விளக்கமா :)

    இன்னைக்கும் சத்தியமா நான் போஸ்ட் படிச்சேன்,படிச்சேன்,படிச்சேன்,என்னை நம்புங்க அண்ணா :D

    ReplyDelete
  20. "pollA arakkanaik kiLLik kaLaindAnai"
    Unless you deny severing the head with arrows, it can still be rAvaNan. I take the Thamizh word "koydal" for this. If by "kiLLi" you mean with hand, I will withdraw (ambEl).

    "ku ku ku"
    I know what KKK means but not ku ku ku.
    Good alliteration though!

    "ki pi"
    I prefer to use "po kA" (poduk kAlam) instead of ki pi. Even westerners are now using CE (common era) instead of AD (anno domini). To denote "ki mu" you could use "po.kA.mu" (poduk kAlattin mun)

    ReplyDelete
  21. >>கலியுக சித்தன் said...
    ஆண்டாளும், அப்துல் கலாமுக்கும் உள்ள தொடர்பு அப்துல்காதருக்கும்,அமாவாசைக்கும் உள்ள தொடர்புக்கு சமம்<<

    Actually I know the connection between abdul kAdar and amAvAsai. In my village one abdul kAdar used to sell vAzhaikkAy on that day (from his plantain garden) which is used in cooking on that day in brahmin households after the amAvAsai tarpaNam. Same thing with "tulukkar" and "dWadasi" when the former sells avattik keerai on dwAdasi day.
    Likewise, there is intimate connection between gulAm kAdar and gOkulAshTami. GulAm KAdar sells 'nAval pazham" on that day.

    Seriously, as KRS says, Abdul Kalam has lot more similarity with ANDAL. The former is a blend of Scientist and Artist simultaneously while the latter is a blend in the reverse order, as KRS suggests. Abdul Kalam is a good vaiNikA, a devout universal religionist like Bharathi, and a poet/composer. He even knew the Hindu religious tradition as demonstrated in his visit to Tiruppathi (he signed the register as was required by tradition at the temple while the temple authorities were ready to exempt him from that requirement)

    ReplyDelete
  22. Today's rendition by Sikkil Gurucaran in aTANA rAgam is very pleasant. aTANA is one of my favorite rAgams. By the way, in most of these TP renditions, MLV's renditions are curtailed significantly. You don't get to hear the full song in any of them. Did you notice?

    ReplyDelete
  23. //Raghav said...
    மாதவிப் பந்தல்..
    மாதவ(னின்) பந்தல்..
    மா தவ பந்தல்..//

    ஹா ஹா ஹா
    :)

    ReplyDelete
  24. //Sridhar Narayanan said...
    //ஆண்டாளின் காலம் கி.பி 855 என்றும் வரையறை கூடச் சிலர் செய்தார்கள்! //

    அருமையான செய்தி. கிரகங்களின் நிலையை வைத்து எழுதப்பட்ட பாடல் எப்படி பலவித ஆய்வுகளில் பலன் தருகிறது என்று நினைக்கையில் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது//

    ஆமாங்கண்ணே!
    ஆனா இந்த ஆய்வுக்கு வெறும் கிரகங்கள் வானில் நிலை கொள்வதை "மட்டுமே" வைத்து செய்ய முடியாது! ஏன்னா அவை பத்து வருடம் கழித்து மீண்டும் நிலை கொள்ளலாம் அல்லவா!

    எனவே வானியல்+இலக்கியம்+வரலாறு எல்லாமே வேணும்! இது போன்ற நிகழ்ச்சிகள் ஒன்றொக்கொன்று உறுதிப்படுத்த உதவும்!

    ReplyDelete
  25. //கலியுக சித்தன் said...
    ஆண்டாளும், அப்துல் கலாமுக்கும் உள்ள தொடர்பு அப்துல்காதருக்கும்,அமாவாசைக்கும் உள்ள தொடர்புக்கு சமம்//

    ஆமாங்க கலியுக சித்தன்!
    அமாவாசையில் இருந்து தானே பிறை தொடங்குது! பிறைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :)

    ReplyDelete
  26. //நா.கண்ணன் said...
    ஆண்டாள் ஜன்ம நட்சத்திரைத்தை வைத்து அவர் பிறந்த வருடம் கி.மு.23.06.3005 என்று நா.பொ.இராமதுரை//

    ஆகா! ஆச்சரியம் தான்! படிச்சிப் பார்க்க சுட்டி ஏதாச்சும் இருக்கா கண்ணன் சார்?

    ஆடி மாசம் பூரம் என்ற ஒரு தகவலே போதுமானதா?
    கண்ணனுக்கு முன்னரே ஆண்டாள் தோன்றியிருக்க முடியுமா என்ன? :)
    வள்ளுவர் காலத்துக்கு முந்தையவளா? இல்லை வள்ளுவர் 3005க்கே முந்தையவரா?

    //பொதுவாக இராகவைய்யங்கார் கணக்கைத்தான் இலக்கியவாதிகள் குறிப்பிடுகின்றனர்//

    :)
    நம்பும் படி இருப்பதாலோ என்னவோ?

    ReplyDelete
  27. ஆதி சங்கரர் காலத்தைக் கூட இப்படிக் கிமு-ன்னு சிலர் சொல்லுவாங்க!

    சிருங்கேரி பீட ஆசார்யர்கள் எண்ணிக்கையை வைத்து அப்படிச் சொல்வதா சொல்வாய்ங்க! 81st ஆசார்யர்-ன்னா, 81*100 வயது = 8100 ஆண்டுகளுக்கு முன் என்பது அவர்கள் கணக்கு! :))

    புத்த பகவான் தோன்றும் முன்னரே, புத்த மதத்தினர் கூட எப்படி சங்கரர் வாதாடி இருக்க முடியும்? :))
    இப்படியெல்லாம் அடியேன் கேட்டா, ஒரு மூலையில் கோவம் ஜிவ்வுன்னு பரவும்! :)

    ReplyDelete
  28. // (unknown blogger) said...
    அண்ணா நான் வந்துட்டேன் :D//

    அச்சச்சோ!
    பந்தல் இன்னிக்கி பிரிச்சி மேயப்படும்! :)

    //சூரியனையே உதிக்குறதைப் பார்த்து ரொம்பாஆஆஆஅ நாளாச்சு :D ஆகவே
    2011லில் பார்த்துக்குவோம் ;)நீங்க கையில் ஒரு தொலைநோக்கியுடன் சிங்கப்பூர் வந்துடுங்க ;)//

    ஹிஹி! தொலைநோக்கி எல்லாம் எதுக்கு துர்கா? நீ ஒருத்தியே போதும்! நோக்காததையும் நோக்கிருவேன்! இரு சிங்கை வரேன் :)

    //இன்னைக்கும் சத்தியமா நான் போஸ்ட் படிச்சேன்,படிச்சேன்,படிச்சேன்,என்னை நம்புங்க அண்ணா :D//

    நம்பிட்டேன்! நம்பிட்டேன்! நம்பிட்டேன் தங்கச்சி!
    உன்னைத் தான் எழுப்புறாங்க பாட்டில்...பேய்ப் பெண்ணே பாட்டு இல்லை....நற்செல்வன் தங்காய்! :))

    ReplyDelete
  29. //nAradA said...
    "pollA arakkanaik kiLLik kaLaindAnai"
    Unless you deny severing the head with arrows, it can still be rAvaNan.//

    //I take the Thamizh word "koydal" for this. If by "kiLLi" you mean with hand, I will withdraw (ambEl)//

    வாங்க சேதுராமன் சார்!
    இராவணனைத் தலையைக் கொய்து கொல்லவில்லை!
    அதான் தலைகள் தோன்றிக் கொண்டே இருந்தனவே! அப்புறம் எப்படிக் கிள்ளிக் "களைந்தான்"? அதான் களைய முடியவில்லையே!

    வயிற்றில் தான் அம்பு விட்டு கொல்லப் போந்தான்! அவன் உயிர் நிலை அமிர்த பாண்டம் என்னும் இடத்தில் இருந்தது என்றல்லவா சேதி!

    //"ku ku ku"
    I know what KKK means but not ku ku ku. Good alliteration though!//

    :))
    சும்மா அப்பப்போ! சுவைக்காக!

    //"ki pi"
    I prefer to use "po kA" (poduk kAlam) instead of ki pi. Even westerners are now using CE (common era) instead of AD (anno domini)//

    ஹூம்! நல்ல சேதி ஒன்னு சொல்லி இருக்கீங்க! படிச்சிப் பார்க்கிறேன்! Why CE is better than AD, to denote!

    ReplyDelete
  30. //nAradA said...
    Actually I know the connection between abdul kAdar and amAvAsai//

    ஹிஹி! இவ்ளோ விளக்கம் எல்லாம் கலியுக சித்தன் கேக்கலீங்க சேது சார்! அவர் சும்மா சீண்டிப் பார்க்க சொன்னாரு! :)

    //Seriously, as KRS says, Abdul Kalam has lot more similarity with ANDAL. The former is a blend of Scientist and Artist simultaneously while the latter is a blend in the reverse order//

    சரியாச் சொன்னீங்க! and both advocate unlimited imagination!

    //He even knew the Hindu religious tradition as demonstrated in his visit to Tiruppathi (he signed the register as was required by tradition at the temple while the temple authorities were ready to exempt him from that requirement)//

    இது பற்றிய அடியேன் பதிவு! கலாம் அர்ச்சகரையும் வேறொரு விஷயத்தில் திகைப்பில் ஆழ்த்தினார்
    http://madhavipanthal.blogspot.com/2007/06/blog-post.html

    ReplyDelete
  31. >>அப்புறம் எப்படிக் கிள்ளிக் "களைந்தான்"? அதான் களைய முடியவில்லையே!<<
    One of the meanings for "kaLaidal" is pluck out (tUkki eRidal or kazhaRRudal) or remove.
    Hence it is applicable to rAvaNan. ANDAL could still call rAvaNan as "pollA arakkan" because he carried away the avatAram of Sridevi. ANDAL must have been miffed at that. As for the "kOmAn" in song #12, it meant only "king" of LankA. not necessarily "great man". I can read ANDAL's mind!!!!!!!

    The abdul kAdar story that I gave is also for fun (counter sINDal). Now don't start another "suNDalukkum sultAnukkum enna sambhandam?" discussion!!!!. In my NIH days the late Dr. G. N. Ramachandran used to mention the gulAm kAdar and gOkulashTami nexus as a lead for making a connection between vitamin C and cancer.

    Regarding CE vs AD:
    Anno Domini (i.e., in the year of our Lord) did not strike well with Jews and other non-Christian folks because it meant Christ is the Lord (for all). So to be politically correct, it was agreed to make AD into CE and BC into BCE, where the word "common" was used to denote the period after Christ's birth since in modern history it is taken as a generally accepted starting point.

    ReplyDelete
  32. As I exit here another thought strikes me. Why did ANDAL say "tennilangaik kOmAn"? It is just for emphasis and not because there is a vaDa ilangai. Any comment?

    ReplyDelete
  33. MLV -ஸ்ரீவித்யா அவங்க அம்மா. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

    வெள்ளி எழுத்து வியாழம் உறங்கிற்றுக்கு விரிவான விளக்கத்துக்கு நன்றி.

    பதிவுகளை ரீடரில் தொடர்கிறேன் ;-))

    ReplyDelete
  34. //ஹிஹி! தொலைநோக்கி எல்லாம் எதுக்கு துர்கா? நீ ஒருத்தியே போதும்! நோக்காததையும் நோக்கிருவேன்! இரு சிங்கை வரேன் :)//

    எதை நோக்க போறீங்க அண்ணா ;)
    //உன்னைத் தான் எழுப்புறாங்க பாட்டில்...பேய்ப் பெண்ணே பாட்டு இல்லை....நற்செல்வன் தங்காய்! :))//

    என்னை தொந்தரவு பண்ணக்கூடாது :D
    நான் நிம்மதியாய் தூங்க போறேன்.அந்த குகுகு க்கு அர்த்தம் என்ன?

    ReplyDelete
  35. /As I exit here another thought strikes me. Why did ANDAL say "tennilangaik kOmAn"? It is just for emphasis and not because there is a vaDa ilangai. Any comment?//
    'தென்' என்ற சொல்லுக்கு 'அழகான' என்றொரு பொருளும் உண்டு.
    அழகான இலங்கை - பொருத்தமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  36. அருமையான இடுகை. அருமையான விளக்கங்கள். அருமையான பின்னூட்டங்கள். மொத்தத்தில் எல்லாமே அருமை. :-)

    ReplyDelete
  37. //"ku ku ku"
    I know what KKK means but not ku ku ku.
    Good alliteration though!//

    :))
    குகுகு = குள்ளக் குளிரக் குடைந்து!

    * குள்ள = உடலைக் குறுக்கிக் கொண்டு மூழ்கணும்!
    * குளிர = உடல் லேசா குளிரும்! உதறல் எடுக்கும்!
    * குடைந்து = கண்டுக்காம, மீண்டும் குடைந்து விடணும்! படக் படக்-ன்னு மீண்டும் மீண்டும் முங்கி விடணும்!

    ஏன்யா சும்மா நோண்டி நோண்டிக் குடையற-ன்னு கேப்போம்-ல்ல?
    குடைதல் = தொடர்ந்து இறங்குதல்...
    அப்படி இறங்கிட்டோம்-ன்னா வேகத்தின் உஷ்ணத்தில்/முனைப்பில் குளிர் போயிடும்!

    அதான் குகுகு! :)
    எப்படிக் குளத்தில் குளிக்கணும்-ன்னு டிப்ஸ் கொடுக்கறா என் தோழி!

    அடுத்த முறை எங்காச்சும் கோயில் குளத்தில், அதிகாலையில் குளிச்சீங்க-ன்னா...சில பேரு அங்கப் பிரதட்சணம் பண்ணும் முன்னாடி குளிப்பாங்களே...

    அப்போ, இந்த "குகுகு" ஞாபகம் வச்சிக்குங்க! குள்ளக் குளிரக் குடைந்து! :))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP