மார்கழி-05: யார் தமிழ்க் கடவுள்? கோதையின் மதுரை பக்தி!
யார் தமிழ்க் கடவுள்??? யார் வீட்டில் தமிழ் மொழி, அன்றும்/இன்றும்/என்றும் இடையறாது ஒலிக்குதோ, யார் தமிழுக்குப் பெரும் மதிப்பு கொடுக்கறாங்களோ, யார் தமிழ் முன்னே செல்ல, தான் பின்னே செல்றாங்களோ, யார் தமிழை ஏட்டில் மட்டும் இல்லாமல், நாட்டிலும் வளர்க்கிறாங்களோ.....அவர்களே தமிழ்க் கடவுள்! தமிழர் கடவுள்!
புதிர்-05:
யமுனைத் துறைவன் என்ற ஒரு அரசர்/குரு இருந்தார்! அவரின் பிரபலமான இன்னொரு பெயர் என்ன? மாலை கட்டும் மண்டபமாக அவருடைய நினைவு இன்னிக்கும் ஒரு திவ்ய தேசத்தில் போற்றப்படுகிறது! எந்தத் தலம்?
முருகப் பெருமானைப் போல் கண்ண பெருமானும் தமிழ்க் கடவுளே! பழந் தமிழரின் கடவுளே! இதை ஆண்டாளும் உறுதி செய்கிறாள்! அதை நாமும் புரிந்து கொண்டு விட்டோம்! இது பற்றிய முந்தைய விவாதப் பதிவு இங்கே! அதுனால, இன்னிக்கி நாம நேராப் பாட்டுக்குப் போயிறலாம், வாங்க! :)
கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)
மாயனை, மன்னு வட, மதுரை மைந்தனைத்,
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்,
தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித், தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்கப்,
போய பிழையும், புகு தருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பு ஏல்-ஓர் எம் பாவாய்!
மாயனை = மாயோன் என்னும் தமிழ்ப் பெரும் தெய்வம்!
அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் முதற் பெரும் பதிவு எது? தமிழின் கண்ணாடி எது? தமிழில் எழுதப்பட்ட முதல் பதிவு எது? = தொல்காப்பியம்!
இதில் மாற்றுக் கருத்தே இல்லை! அது தன் பொருளதிகாரத்தை எப்படித் துவங்குகிறது?
மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்,
...
இப்படித் தமிழ் இலக்கணத்தின் துவக்கமே மாயோன்! ஆண்டாளும் இந்தப் பாசுரத்தை "மாயனை" என்றே துவக்குகிறாள்!
இயற்கை வழிபாட்டின் படி, மாயோன் முல்லை நிலக் கடவுள் ஆனான்!
முல்லை நிலத்தின் கருப்பொருள்/உரிப்பொருளைக் கொஞ்சம் கவனிச்சிப் பாருங்க! தமிழ் வகுப்பில் படிச்ச நினைவிருக்கா? இல்லை சாய்ஸில் வுட்டுட்டீங்களா? :-)
முல்லை: காடும் காடு சார்ந்த இடமும் = காடு பச்சைப் பசேல்-ன்னு தானே இருக்கும்? = பச்சை மாமலை போல் மேனி!
முல்லை: பெரும்பொழுது = கார் காலம்! அதனால் கார் மேனி வண்ணன்!
முல்லை: சிறுபொழுது = மாலை! = மால்! திருமால்!
முல்லை: ஆயர்கள் நிலம்! = ஆயர் தம் கொழுந்தே!
முல்லை: தொழில் = ஆநிரை மேய்த்தல்! அதனால் தான் பசுக்களை மேய்த்தான்!
முல்லை: விளையாட்டு = ஏறு தழுவுதல் = காளைகளை அடக்கி நப்பின்னைப் பிராட்டியை மணம் புரிந்தான்!
முல்லை நிலத்தில் காதல் மிகுதி! அதனால் தான் இவன் காதல் மன்னன்! :-)
இப்படி எல்லாமே இயற்கையை ஒட்டிய வழிபாடு தான்! இயற்கைக் கடவுளாகத் தான் மாயோன்/திருமால் அறிமுகமானான்!
தொல்காப்பியருக்குப் பின் வந்த காலம்....சிலப்பதிகாரத்தில் வேங்கட மலை மேல், திருமால் சங்கு சக்கரங்களோடு நிற்கும் காட்சியை இளங்கோ வர்ணிக்கிறார்! திருவரங்கக் காட்சிகள் தனியாகச் சொல்லப்படுகின்றன!
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
என்று வேங்கடத்தானை இளங்கோ பாடுகிறார்! கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே! என்றும் கேட்கிறார்! மணிமேகலையும் அப்படியே! மாயோனின் கூத்து = ஆய்ச்சியர்கள் ஆடும் குரவைக் கூத்து! இதைப் பற்றியும் பேசுகின்றன! இப்படிப் பொது மக்களின் அன்றாட வாழ்விலும், கூத்திலும், வீட்டிலும் திருமாலைக் காட்டுகின்றன தமிழ் இலக்கியங்கள்!
புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, முல்லைப்பாட்டு, பரிபாடல் என்ற எல்லாச் சங்க நூல்களிலும் திருமாலைப் பற்றிய பலப்பல குறிப்புக்களைக் காணலாம்.
"ஆனானப்பட்ட" மறைமலை அடிகளே, மாதாங்கு மார்வன் = திருமகளை மார்பில் தாங்கும் மார்பன் என்று பொருள் கொள்ள வேணும் என்று உரைக்கிறார்!
(*** தமிழ்க் கடவுளுக்கான தரவு முடிந்தது! அடுத்து கோதையின் சொந்த ஊர்ப் பாசத்தால் விளையும் சுவையான கற்பனைகளைப் பார்ப்போம்!)
மன்னு வட மதுரை மைந்தனை = ஹா ஹா ஹா! "வட" மதுரை மைந்தனாம்! வடக்குய்யா வடக்கு! ஆண்டாள் வச்சாய்யா ஆப்பு உனக்கு! - அப்படின்னு சில பேரு ரொம்பவே சந்தோஷப் பட்டுக்கலாம்! ஆனால் கோதை அவர்களை எல்லாம், ஏளனமாகச் சிரிக்கிறாள்! :)
சில பேருக்கு இந்த வடை-ன்னாலும் அலர்ஜி! "வட"-ன்னாலும் அலர்ஜி!
வட- என்று பேர் வருவதாலேயே அது ஆரியம்-ன்னு "பகுத்தறிவா" யோசிக்க ஆரம்பிச்சிருவாய்ங்க!
வட-பழனியில் "வட" வருதே-ன்னு கூட யோசிக்க மாட்டாய்ங்க! :) வடபழனி, வடபெண்ணை, வடவாறு, வட காவேரி, வடக்குவாசல்-ன்னு தமிழில் இல்லாத வடக்குகளா? வட-கயிலை கயிலை மலையும், வடவெற்பு என்னும் கந்த வெற்பும், இவர்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா ஆகி விடும்! கருத்தில் நேர்மையாளர்கள் அல்லவா? அதான்! :)
தமிழரின் முதல் நூலான தொல்காப்பியமே "வட" என்பதில் தான் துவங்குது-ன்னு தெரியாது இந்த செலக்டிவ் மக்களுக்கு!
வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி - என்பதே தொல்காப்பியத் துவக்கம்! தொல்காப்பியர் என்ன வடக்கத்தி வித்தகரா? :)
நாம நம்ம கற்பனைச் சுவை "வட"-மதுரை மைந்தனுக்கு வருவோம்!
இங்கே எத்தனை பேர் மதுரையின் மைந்தர்கள்? மண்ணின் மைந்தர்கள்?
மதுரை = வஞ்சனை இல்லா நெஞ்சினை!
அவர்கள் போயி வஞ்சமாப் பேசுவாகளா? மதுரைக்காரியான எங்கள் கோதைக்கா வஞ்சனை? மதுரை-ன்னு சொல்லைக் கேட்டாலே அவள் இதயம் களிக்குமே! தமிழ் வளர்த்த தனிக்குடி அல்லவா மதுரைக் காரவுக! கோபம் இருக்கும் இடத்தில் குணமும் இருக்குமே!
NH-208ஆ? NH-7ஆ? மறந்து போச்சு! அடியேனுக்குச் சொல்லுங்கப்பு! கோதையோட ஊரு தெரியும்! சீவில்லி புத்தூரிலிருந்து, தி.கல்லுப்பட்டி, திருமங்கலம், திருப் பரங்குன்றம்-ன்னு....அப்படியே வடக்கால வாங்க!
வில்லியில் இருந்து வடக்கால வந்தாக்கா "வட" மதுரை!
அந்த மண்ணின் மைந்தன் யாரு? = அட, நம்ம அழகரு!
இப்போ விளங்குதுங்களா?
மாயனை, மன்னு, வட மதுரை மைந்தன் = கள்ளழகர்!
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை = ஆகா, மதுரையில் எங்கேப்பா யமுனை வந்திச்சி? இப்போ மாட்டினியா? வட-மதுரைக்கு ஏதோ கப்சா விட்டியே! இப்போ யமுனையில் மாட்டினியா? :)
நான் மாட்டலையே! ஹா ஹா ஹா! பாட்டைப் படிக்கும் போது எப்படிப் படிக்கணும்? நம்ம "கால்குலேஷன் போடும்" மனசில் இருந்து படிக்கக் கூடாது! :)
ஆண்டாள் மனசில் இருந்து படிக்கணும்! ஏன்னா பாட்டுக்குச் சொந்தக்காரி அவ!
கோதையின் இப்போதைய நிலைமை என்ன? = இப்போ அவள் கோபிகையா ஆயிட்டா! கண்ணன் கூட ஆடுறா, பாடுறா, ஒடுறா, சண்டை போடுறா :)
அவள் கோபிகையா ஆனாளே தவிர, பாண்டி நாட்டை விட்டு ஓடினாளா? காதலனே முக்கியம்-ன்னு தேசத்தை விட்டுக் கொடுத்தாளா?
சேச்சே! அவ ரத்தத்துல அது கிடையாது! அம்புட்டு தேச பக்தி எங்க கோதைக்கு!
கண்ணாலம் கட்டிக்கிட்டும் கயிலைக்குப் போவாம, மருதையில் ஆட்சி செய்யும் மீனாட்சி வழியில் வந்த பொண்ணுப்பா அவ! தன் காதலனை பாண்டி நாட்டுக்கு வரச் சொல்லுறா! அவன் தொடர்பான எல்லாமும் எங்க பாண்டிக்கு ஓடி வாங்கடே!
கண்ணன், கோபிகைகள், படகு = இப்படி அத்தனையும் அவளுக்காக மதுரைக்கு/தென் பாண்டி நாட்டுக்கு வருகிறது! யமுனையும், யமுனைத் துறையும் கூட பாண்டிக்கு வருகிறது! சேலை விளையாட்டு மதுரைக்கு வருது! சேலை ஒளிக்க கண்ணனும் மதுரை வருகிறான்! இப்போ புரியுதுங்களா? தூய பெருநீர் யமுனைத் துறைவன் = யாமுனத்துறைவன் = மதுரை மைந்தன் = கள்ளழகன்!
அட இன்னமும் மனசு ஒப்பலையா? ஹா ஹா ஹா! மனசுல வேற எதையோ வச்சிக்கிட்டு இருந்தா ஒப்பாது தான்! காதல் நேர்மையை வச்சிக்கிட்டு இருந்தா ஒப்பும்! :)
சரி, பரவாயில்லை! ஒரே ஒரு நாச்சியார் திருமொழி! எப்படி அது "வட"மதுரை ஆச்சு? எப்படி அது யமுனைத் துறை ஆச்சு?-ன்னு, அடியேன் சொல்லிக் கேட்க வேணாம், ஆண்டாளே அவள் வாயால் சொல்லிக் கேளுங்க!
* பாண்டி "வட"த்து என்னை உய்த்திடு மின்!
* யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடு மின்!
* சோலை மலைப் பெருமான் = துவராபதி எம் பெருமான்,
ஆலின் இலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே!
பாருங்கள், சோலை மலைப் பெருமான் (கள்ளழகர்) = துவராபதி எம் பெருமான் என்று சொல்லி விடுகிறாள்! "வட" பாண்டி தேசமாம்! வில்லி புத்தூருக்கு வடக்காம் வட மதுரை! உள்ளத்தை அழிக்கும் கள்ளழகன்! ஆங்கே யமுனைக் கரைக்கு என்னை உய்த்து விடுங்கள்! - இப்படி, காதலிலும் தென் பாண்டியை விட்டுக் கொடுக்காது, கோகுலத்தையும், ஆயர்பாடியும் மதுரைக்கு ஷிஃப்டு செய்கிறாளே! கோதையின் மதுரைப் பக்தி தான் என்னே! என்னே! ஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆயர் குலத்தினில் "தோன்றும்" அணி விளக்கை = பால் உணவை அடிப்படைத் தொழிலாக வைத்திருக்கும் ஆயர் குலம்! பால் போல அவிங்க மனசும் வெள்ளை! அந்த ஆயர் குலத்துக்கே விளக்கேற்ற வந்தவன் கண்ணன்! ஆயர் குலத்தில் "தோன்றினான்"!
அவன் பிறக்கவில்லை! கர்ப்பத்தில் வந்து "தோன்றினான்"!
முருகனை "உதித்தான்" என்கிறார் கச்சியப்பர்! கண்ணனைத் "தோன்றினான்" என்கிறாள் ஆண்டாள்! ஒரு திருக் கண்ணன் வந்து, உதித்தனன் உலகம் உய்ய! :)
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை = தாய்க்கும், தாய் மண்ணுக்கும் பெருமை தேடித் தந்தவன் கண்ணன்! தாயின் குடலை (வயிறை) விளங்கச் செய்தான்!
தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் அல்லவா யசோதையும், தேவகியும்!
நம்மைப் பெத்த அம்மா, வயிறு குளிர்ந்து பேசுவதை எப்பவாச்சும் கேட்டு இருக்கீங்களா? பேச்சே வராது! நீர் தான் வரும் பேதையாம் அம்மாவுக்கும்!
தாமோதரன் = தாம+உதரன் = கயிறு+வயிறான்!
தன் வயிற்றைக் கயிற்றால் கட்டிய தாயின் வயிற்றை விளங்கப் பண்ணியவன் திருவடிகளே சரணம்!
தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித், தொழுது = நல்ல மனசோட வந்து, நல்ல மலர்களைத் தூவித் தொழுவோம்! (அது என்ன நல்ல மலர்? மொத்தம் எட்டு மலர்கள் நல்ல மலர்கள்! தனிப் பதிவில்! :)
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க = இதுக்குப் பேரு தான் உண்மையான தொழுகை!
தூவித் தொழுது-ன்னு இதைத் தான் சொல்லுறா ஆண்டாள்! வாயினால் மந்திரம் ஜபம் பண்ணா மட்டும் போதாது! வாயால் திருப்பாவை பாடினால் மட்டும் போதாது! மனத்தினால் "சிந்திக்கணும்"! இறைவனையும், அவன் அடியார்களையும், அவர்கள் இருக்கும் இந்தச் சமூகத்தையும் சிந்திக்கணும்!
போய பிழையும்/புகு தருவான்/நின்றனவும், தீயினில் தூசாகும் = இப்படி வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால்.....
* இது வரை மூட்டை கட்டி வைத்துள்ள பாவங்களும் (சஞ்சிதம்),
* அதிலிருந்து, இந்தப் பிறவிக்கு மட்டும் எடுத்த வந்த கட்டுச்சோறு பாவங்களும் (பிராரப்தம்),
* இனி மேல் Fixed Deposit-இல் போட்டுக் கொள்ளப் போகும் பாவங்களும் (ஆகாம்யம்)
என்று அத்தனையும்...தீயினில் தூசாகும்! தீயினில் தூசாகும்! பொலிக பொலிக! போயிற்று வல்லுயிர் சாபம்! செப்பு ஏல்-ஓர் எம் பாவாய்!
தென்-வில்லி ஆண்டாள் திருவடிகளே சரணம்!
வட-மதுரைக் கள்ளழகன் திருவடிகளே சரணம்!
அன்னை மீனாச்சி, அப்பன் சுந்தரன் திருவடிகளே சரணம்! ஹரி ஓம்!

//யமுனைத் துறைவன் என்ற ஒரு அரசர்/குரு இருந்தார்! அவரின் பிரபலமான இன்னொரு பெயர் என்ன? //
ReplyDeleteஆஹா.. தெரியாமல் இருக்குமா என்ன.. எம்பெருமானாரை நமக்கெல்லாம் காட்டி அருளிய யாமுனாசாரியர் ஆகிய ஸ்ரீ ஆளவந்தார்.
நண்பருக்கு வணக்கம் , இதில் சொன்ன மதுரை "மதுராபுரி" யோட தமிழாக்கம் தான்நு உபன்யாசத்துல கேட்டு இருக்கேன், பெரியவாச்சான் பிள்ளை அவர்களோட உரையிளையும் படிச்சு இருக்கேன் , இப்ப நீங்க நம்ம தென் மதுரையை வடமதுரை ஆக்கிட்டீங்க , வைகையை "யமுனையா" ஆ உருவக படுத்தி இருக்கீங்க நல்லா இருக்கு ஆனாலும் என்ன நோக்கம் மட்டும் புரியல
ReplyDelete( தமிழ் படுத்தனும்னு விரும்பியதால வா அல்லது வேறேதும் பொருள் உள்ளதா)
Mani Pandi
//மணி said...
ReplyDeleteவாங்க மணி!
//நல்லா இருக்கு ஆனாலும் என்ன நோக்கம் மட்டும் புரியல (தமிழ் படுத்தனும்னு விரும்பியதால வா அல்லது வேறேதும் பொருள் உள்ளதா)//
ஹா ஹா ஹா!
நோக்கம்: ஆண்டாள் தந்ததை அப்படியே தரணும் என்பது தான்! எதையும் "படுத்தனும்"-ன்னு எண்ணம் எல்லாம் இல்ல! :)
//இப்ப நீங்க நம்ம தென் மதுரையை வடமதுரை ஆக்கிட்டீங்க , வைகையை "யமுனையா" ஆ உருவக படுத்தி இருக்கீங்க//
நான் ஆக்கலீங்க! ஆண்டாள் ஆக்கி இருக்கா! வெறுமனே என் நயவுரையாக இதைப் பேசாமல், வட-பாண்டி என்றும், யமுனை-ன்னு வரும் நாச்சியார் திருமொழியை ஆதாரமா வச்சிருக்கேனே! பார்க்கலையா?
ஒரு காதகாலட்சேபம் கேட்ட மாதிரி இருக்கு. நல்ல விளக்கங்கள். கண்ணனை முல்லை நிலத்தோடு ஒப்பிட்ட விதம் அருமை.
ReplyDeleteதுணைக்கு தொல்காப்பியத்தையும், சிலப்பதிகாரத்தையும் அமைத்தவிதமும் அருமை. மொத்தில் திருப்பாவை படிக்கும் கண்களுக்கு விருந்தாக்கி இருப்பதற்கு நன்றி
//"மதுராபுரி" யோட தமிழாக்கம் தான்நு உபன்யாசத்துல கேட்டு இருக்கேன், பெரியவாச்சான் பிள்ளை அவர்களோட உரையிளையும் படிச்சு இருக்கேன்//
ReplyDeleteவியாக்யானச் சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அவர்களுக்கு மாறாகப் பேசணும்-ன்னு எண்ணம் அடியேனுக்கு இல்லை! ஆனால் ஆண்டாளின் இன்னொரு பாட்டிலேயே ஆதாரம் இருக்கும் போது, அதுவும் அது நம் கண்ணுக்கும் படும் போது, அதைப் பணிவுடன் முன் வைத்து எதிர்வாதம் செய்வது தவறே இல்லை!
இராமானுசர் யாதவப் பிரகாசரிடம் வாதம் செய்ததும் இவ்வாறே!
சங்கரர் மண்டன மிஸ்ரருடன் செய்ததும் இவ்வாறே!
************************
மணி சார், உங்களை முன்னிட்டு, பதிவுலகத்துக்குப் பொதுவாக ஒன்னு சொல்லிக்கறேன்!
அது சைவமோ/வைணவமோ, அடியேனுக்கு எல்லாம் ஒன்னு தான்! இங்கே வைணவச் சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் வியாக்யானத்துக்கு மாறாக ஒன்றைச் சொல்லி இருக்கேன்!
இங்கே ஒரு கும்மி கும்பல் வரும் பாருங்க!
இது போன்று வைணவத்தில் உள்ள மாறுபாடுகளையும் சொல்வது எல்லாம் அவிங்க கண்ணுக்குப் படவே படாது! எங்கேனா சைவ மாறுபாடுகள் பற்றிப் பேசும் போது மட்டும் "வைஷ்ணவ பிராண்ட் முத்திரை" குத்துவாங்க! கும்மியைச் சூப்பரா அடிப்பாங்க! அவிங்க "நேர்மை" தான் காரணம்! :)
அடியேனைப் பொறுத்தவரை ஆன்மீக நேர்மை காணலில், அது இறைவனே ஆயினும், குற்றம் குற்றமே என்று சொல்லலாம்! அதுவும் அவனுக்குத் திருவுள்ள உகப்பே! :)
ஆளவந்தார் தான் யமுனைத்துறைவர். மும்மண்டபங்கள் என்று சொல்லப்படும் திவ்ய தேசங்களில் போக மண்டபம் திருவரங்கம், தியாக மண்டபம் காஞ்சிபுரம், புஷ்ப மண்டபம் திருமலை. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் திருமலை போல் தோன்றுகிறது.
ReplyDelete//முருகப் பெருமானைப் போல் கண்ண பெருமானும் தமிழ்க் கடவுளே!//
ReplyDeleteஅப்படியா!
என்னங்க! எங்க முருகனுக்கு போட்டியா இன்னொருத்தரு இருக்காரா :-))
முருகன் பற்றிய பதிவு உங்களுடையது இருந்தால் (கண்டிப்பா இருக்கும்) எனக்கு தொடுப்பு கொடுங்களேன்!
எனக்கு பக்தி பதிவுகளில் ஆர்வம் இல்லை அது பற்றி எதுவும் எனக்கு தெரியாது, இருந்தாலும் நீங்கள் ஆர்வமாக இது பற்றி பதிவுகள் போடுவதை பார்த்து, ஆச்சர்யபட்டே உங்கள் பதிவுகளை தற்போது அவ்வப்போது படிக்கிறேன்! அப்படி என்ன தான் எழுதறீங்கன்னு ;-)
இன்னும் உங்களோட யார் தமிழ் கடவுள் என்ற பதிவு இன்னும் படிக்கவில்லை, படித்து விட்டு கூறுகிறேன். உங்கள் பதிவுகளின் பலமே எளிமை தான் என்று நினைக்கிறேன். பக்தி பதிவுகள் என்றாலும் படிக்க சுவாராசியமாக தருகிறீர்கள்.
வாழ்த்துக்கள் KRS
அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் முதற் பெரும் பதிவு எது? தமிழின் கண்ணாடி எது? தமிழில் எழுதப்பட்ட முதல் பதிவு எது? = தொல்காப்பியம்!
ReplyDeleteஇதில் மாற்றுக் கருத்தே இல்லை! அது தன் பொருளதிகாரத்தை எப்படித் துவங்குகிறது?
மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்,
...
இப்படித் தமிழ் இலக்கணத்தின் துவக்கமே மாயோன்! ஆண்டாளும் இந்தப் பாசுரத்தை "மாயனை" என்றே துவக்குகிறாள்>>>>>>>>>>>>>>>>>
ம்ம் நல்ல துவக்கமே உங்களுதும்!
//துவக்குகிறாள்!
இயற்கை வழிபாட்டின் படி, மாயோன் முல்லை நிலக் கடவுள் ஆனான்!
முல்லை நிலத்தின் கருப்பொருள்/உரிப்பொருளைக் கொஞ்சம் கவனிச்சிப் பாருங்க! தமிழ் வகுப்பில் படிச்ச நினைவிருக்கா? இல்லை சாய்ஸில் வுட்டுட்டீங்களா? :-)
முல்லை: காடும் காடு சார்ந்த இடமும் = காடு பச்சைப் பசேல்-ன்னு தானே இருக்கும்? அதனால் பச்சை மாமலை போல் மேனி...//
ஆஹா இப்படியெல்லாம் கற்பனை செய்து பார்க்கலையே!மார்க் வாங்க மனப்பாடம் செஞ்சதோட சரி!
..
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ReplyDeleteஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
என்று வேங்கடத்தானை இளங்கோ பாடுகிறார்! கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே! என்றும் கேட்கிறார்! மணிமேகலையும் அப்படியே! மாயோனின் கூத்தான, ஆய்ச்சியர்கள் ஆடும் குரவைக் கூத்து பற்றியும் இவை பேசுகின்றன! இப்படிப் பொது மக்களின் அன்றாட வாழ்விலும், கூத்திலும், வீட்டிலும் காணலாகும் தெய்வம் என்றே திருமாலைக் காட்டுகின்றன தமிழ் இலக்கியங்கள்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அரியதகவல் அறியவேண்டியதும் கூட!
@ராகவ், குமரன்...
ReplyDeleteவிடையின் முதல் பாகம் சரியே! = ஆளவந்தார்!
இரண்டாம் பாகம், இன்னும் யாரேனும் வந்து சொல்லட்டும், பிறகு விடைகள்!
தி.கல்லுப்பட்டி, திருமங்கலம், திருப் பரங்குன்றம்-ன்னு....அப்படியே வடக்கால வாங்க! வில்லியில் இருந்து வடக்கால வந்தாக்கா வட மதுரை! அந்த மண்ணின் மைந்தன் யாரு? = அட, நம்ம அழகரு! இப்போ விளங்குதுங்களா?
ReplyDeleteமாயனை, மன்னு (பெருமை மிக்க), வட மதுரை மைந்தன் = கள்ளழகர்!
>>>>>>>>>>>>>>>>>>
அரங்கனும் தெற்குபக்கம் இருக்கிற
ஸ்ரீவில்லிபுத்தூர் திக்கினைநோக்கிதான்
பார்வையிட்டபடி படுத்திருக்கிறார்!
ஊரின் ராஜகோபுரமே தெற்குநோக்கித்தான் இருக்கிறது!
/நின்றனவும், தீயினில் தூசாகும் = இப்படி வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால்.....
ReplyDelete* இது வரை மூட்டை கட்டி வைத்துள்ள பாவங்களும் (சஞ்சிதம்),
* அதிலிருந்து, இந்தப் பிறவிக்கு மட்டும் எடுத்த வந்த கட்டுச்சோறு பாவங்களும் (பிராரப்தம்),
* இனி மேல் Fixed Deposit-இல் போட்டுக் கொள்ளப் போகும் பாவங்களும் (ஆகாம்யம்)
என்று அத்தனையும்...தீயினில் தூசாகும்! தீயினில் தூசாகும்! பொலிக பொலிக! போயிற்று வல்லுயிர் சாபம்! செப்பு ஏல்-ஓர் எம் பாவாய்!
>>>>>>>>>>>>>>அருமை!
நெருப்பில் விழுந்த தூசி போல உருத்தெரியாமல்போகுமாம் நமதுபாவங்கள்! சப்ஜாடா காலி என்பதை இதைவிட வேறுவார்த்தையில் சொல்லமுடியுமா எனத்தெரியவில்லை !
இந்தப்பாசுரத்திலும் ஒரு உட்கருத்து உண்டு.
ReplyDeleteஜோதிர்மயமாயிருக்கும் பகவானை மனோ வாக்கு காய பரிசுத்தத்துடன் வழிபடும் பாகவதர்களுக்கு கர்மவசத்தால் ஏற்பட்டபாவங்களும் அந்த ஜன்மத்தில் அறியாமல் செய்தபாவங்களும் அந்தப்பெரிய ஜோதியில் பஸ்பமாகி விடும்.
இந்தப்பாடலில் கண்ணனின் திருநாம(பெயர்)ச்சிறப்பு சொல்லப்பட்டிருக்கிறது!
என்ற ஒரு அரசர்/குரு இருந்தார்! அவரின் பிரபலமான இன்னொரு பெயர் என்ன? மாலை கட்டும் மண்டபமாக அவருடைய நினைவு இன்னிக்கும் ஒரு திவ்ய தேசத்தில் போற்றப்படுகிறது! எந்தத் தலம்?
ReplyDelete>>>>>>>>>>>>>>காஞ்சீபுரமாயிருக்குமோ?
இந்தப் பாடலின் இராகம் - ஸ்ரீராகம்.
ReplyDelete"தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித், தொழுது" -
ReplyDeleteஇந்தப் பகுதிதான் இந்தப் பாட்டின் முக்கிய இடம்.
எந்த மதுரை என்கிற ஆராய்சியெல்லாம் வீண்!
//வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க//
வாயைத் திறந்து உரக்கப் பாடுமீர்,
நையப் பிறவாமல் ஐயன் அடி சேரப் பாடுமீர்
,
மனமெலாம் ஆயன் வசமாய்
ஆகப் பாடுமீர்,
மனமெலாம் கோபாலன் கோபாலம் எனக் குழைவீர்!
KRS'ண்ணே,
ReplyDeleteநம்மூரூ பத்தி எழுதிருக்கீங்கன்னு படக்கென்னு வந்தேன்... நெம்ப நல்லா எழுதியிருக்கீங்க... இன்னும் பழச'ல்லாம் படிச்சிட்டு வாறேன்... :)
//தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித், தொழுது,
ReplyDeleteவாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க//
ரொம்பப் பிடிச்ச வரிகள். அப்படியே சித்திக்கணும்.
ஆண்டாள் திருவடிகள் சரணம்.
//மின்னல் said...
ReplyDeleteஒரு காதகாலட்சேபம் கேட்ட மாதிரி இருக்கு//
ஹா ஹா ஹா!
நம்ம தொழிலையே மாத்திருவீங்க போல! :)
//நல்ல விளக்கங்கள். கண்ணனை முல்லை நிலத்தோடு ஒப்பிட்ட விதம் அருமை//
நன்றி மின்னல்!
//மொத்தில் திருப்பாவை படிக்கும் கண்களுக்கு விருந்தாக்கி இருப்பதற்கு நன்றி//
திருப்பாவையே மும்மைக்கும் விருந்து தான்! நான் விருந்து ஆக்க வில்லை! வாழையிலை மட்டும் தான் போடுகிறேன்! :)
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteமும்மண்டபங்கள் என்று சொல்லப்படும் திவ்ய தேசங்களில் போக மண்டபம் திருவரங்கம், தியாக மண்டபம் காஞ்சிபுரம், புஷ்ப மண்டபம் திருமலை//
சும்மா பின்னூட்டத்தில் பின்னுறீங்க குமரன்!
//நீங்கள் சொல்வதைப் பார்த்தால் திருமலை போல் தோன்றுகிறது//
ரைட் ஆன்சர்! :)
//கிரி said...//
ReplyDeleteவாங்க கிரி
//என்னங்க! எங்க முருகனுக்கு போட்டியா இன்னொருத்தரு இருக்காரா :-))//
ஹா ஹா ஹா! இல்லையில்லை! "நம்ம" முருகனுக்குப் போட்டியாத் தான் இந்த இன்னொருத்தரு இருக்காரு! :)
//முருகன் பற்றிய பதிவு உங்களுடையது இருந்தால் (கண்டிப்பா இருக்கும்) எனக்கு தொடுப்பு கொடுங்களேன்!//
அது என்ன கண்டிப்பா இருக்கும்?அம்புட்டு நம்பிக்கையா? ஹிஹி! சரி, இங்கிட்டு ஜாலியா தொடங்குங்க!
http://madhavipanthal.blogspot.com/2008/05/blog-post.html
கந்தரலங்காரம் = http://murugaperuman.blogspot.com/
இனியது கேட்கின் = http://iniyathu.blogspot.com/
முருகனருள் (குழுப்பதிவு) = http://muruganarul.blogspot.com/
//எனக்கு பக்தி பதிவுகளில் ஆர்வம் இல்லை அது பற்றி எதுவும் எனக்கு தெரியாது//
எது எதுல எப்பப்ப ஆர்வம் வரும்-ன்னே சொல்ல முடியாது கிரி!
செந்தமிழால் பகர் "ஆர்வம்" ஈ ன்னு ஆர்வத்தைக் கேட்டு வாங்குவாரு அருணகிரி!
//ஆச்சர்யபட்டே உங்கள் பதிவுகளை தற்போது அவ்வப்போது படிக்கிறேன்! அப்படி என்ன தான் எழுதறீங்கன்னு ;-)//
ஹா ஹா ஹா! தேறுதா ஏதாச்சும்?
//உங்கள் பதிவுகளின் பலமே எளிமை தான் என்று நினைக்கிறேன். பக்தி பதிவுகள் என்றாலும் படிக்க சுவாராசியமாக தருகிறீர்கள்//
நன்றி கிரி!
அதான் வலைப்பூவின் மேலே சொல்லி இருக்கேனே!
* அடியேன் ஒரு இலவச மிதியடிக் காப்பகம்!
* பெரியவர்கள் விளக்கங்கள் எல்லாம் கருவறை வாசல்!
* கிரியின் பின்னூட்டத்தைப் படித்துப் பார்த்து,
ReplyDelete* அடியேன் மேல் ஏதேனும் உள்ளுக்குள் கோபம் இருந்தால்,
* அதை விட்டுவிட்டு அன்புடனே இருக்குமாறு,
* போய பிழையும், புகுதருவான், நின்றனவும் பாசுரமான இங்கேயே
* வலையுலக ஆன்மீகப் பெரியவர்களையும், சிவனடியார்களையும், முருக தாசர்களையும், சக்தி உபாசகர்களையும், வைணவ அடிகளையும் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்!
//ஷைலஜா said...
ReplyDeleteஆஹா இப்படியெல்லாம் கற்பனை செய்து பார்க்கலையே!மார்க் வாங்க மனப்பாடம் செஞ்சதோட சரி!//
ஆமாம்-க்கா!
ஆனா எக்ஸாம் முடிஞ்ச பிறகு சில தமிழ் பாடப் புத்தகத்தை எடுத்துப் படிச்சோம்னா, அப்போ வேற மாதிரி ஃபீல் பண்ணுவோம் இல்லையா? எனக்கு இப்படிப் பல முறை ஆகி இருக்கு! :)
//ஷைலஜா said...
ReplyDeleteஅரங்கனும் தெற்குபக்கம் இருக்கிற
ஸ்ரீவில்லிபுத்தூர் திக்கினைநோக்கிதான்
பார்வையிட்டபடி படுத்திருக்கிறார்!//
குடதிசை முடியை வைத்து
தென்றிசை இலங்கை நோக்கி இல்லையா?
வீடணனுக்கு கொடுத்த வாக்கை கோதை பறிச்சிட்டாளோ? :)
//ஊரின் ராஜகோபுரமே தெற்குநோக்கித்தான் இருக்கிறது!//
ஆமாம்-க்கா! தெற்குப் பக்கமா பார்க்க பயப்படுவாங்க! எமனின் திசை என்பதால்! ஆனா அரங்கன் தான் எம-காதகப் பயலாச்சே! :)
//நெருப்பில் விழுந்த தூசி போல உருத்தெரியாமல்போகுமாம் நமதுபாவங்கள்! சப்ஜாடா காலி என்பதை இதைவிட வேறுவார்த்தையில் சொல்லமுடியுமா எனத்தெரியவில்லை !//
ReplyDeleteஅதான் நீங்க "சப்ஜாடா" சொல்லிட்டீங்களே! வரவர நீங்களும் "லோக்கல்" ஆயிக்கிட்டு வரீங்க! பாத்து! BTM Layout காரரு கோச்சிக்கப் போறாரு! :))
//இந்தப்பாசுரத்திலும் ஒரு உட்கருத்து உண்டு.
ReplyDeleteஜோதிர்மயமாயிருக்கும் பகவான...அந்தப்பெரிய ஜோதியில் பஸ்பமாகி விடும்//
நன்றிக்கா! ஒவ்வொரு நாளும் பந்தலுக்கு வந்திருந்து, லோக்கல் விளக்கங்களுக்கு இடையே, நல்ல நுட்பமான ஆச்சாரிய உட்கருத்துகளும் எடுத்து வைப்பதற்கு!
நீங்க/ஜீவா/குமரன்/ராகவ் உற்சாகத்தைப் பாத்து தான் நானே உற்சாகமாகி பதிவு போடறேன்! :)
//ஷைலஜா said...
ReplyDeleteகாஞ்சீபுரமாயிருக்குமோ?//
காஞ்சி வரதன் ஒரு அப்பாவிச் சிறுவன்! என்னைய போல!
தனக்கு இருக்குறதையும் அரங்கனுக்குக் கொடுத்துருவான்! தியாக மண்டபம்-ன்னு சொல்லி இருக்காரே குமரன்! பாக்கலையா? :)
புதிர்-05 இன் விடை:
ReplyDeleteயமுனைத் துறைவர் = யாமுனாச்சாரியர் = ஆளவந்தார்
இவர் அரசராய் இருந்து பின்னாளில் ஆச்சார்யர் ஆனார்! இராமானுசரின் மானசீக குரு!
இவர் நினைவாக திருமலை திருவேங்கடமுடையான் சன்னிதியில், யாமுனைத் துறை என்ற பெயரில் மலர் தொடுக்கும் மண்டபம் இருக்கு! அனந்தாழ்வான் அமைத்தது!
திருமலை எம்பெருமான் சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்க, ஆளவந்தார் தான், தன் சீடரான பெரிய திருமலை நம்பிகளை முதன் முதலில் திருமலைக்கு அனுப்பி வைப்பார். அவர் அடியொற்றி இராமானுசரும் அனந்தாழ்வானை அனுப்பி வைப்பார்!
உண்டியலில் காசு போட்டுட்டு வரும் போது, இடப் பக்கம், நரசிம்மர் சன்னதி. அவருக்கு இடப்பக்கம் யாமுனைத் துறை! அடுத்த தபா போகும் போது பாருங்க! அப்படி ஒரு மணம் வீசும்! :)
// ஜீவா (Jeeva Venkataraman) said...
ReplyDeleteஇந்தப் பாடலின் இராகம் - ஸ்ரீராகம்//
நன்றி ஜீவா!
எந்தரோ மகானுபாவுலு ராகமா? சூப்பரு! :)
// ஜீவா (Jeeva Venkataraman) said...
ReplyDelete//வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க//
வாயைத் திறந்து உரக்கப் பாடுமீர்,
நையப் பிறவாமல் ஐயன் அடி சேரப் பாடுமீர்//
ஆகா...இது யார் கீர்த்தனை ஜீவா? அப்படியே வாயினால்/மனத்தால்-ன்னு இருக்கே?
//இந்தப் பகுதிதான் இந்தப் பாட்டின் முக்கிய இடம்.
ReplyDeleteஎந்த மதுரை என்கிற ஆராய்சியெல்லாம் வீண்!//
மன்னியுங்கள் ஜீவா!
"வீண்" என்பது பெரிய வார்த்தை!
வாயினால் பாடல், தூமலர் தூவல் எல்லாம் கூட "வீண்" என்று சிலர் சொல்லலாமே!
"வீண்" என்பது அவரவர் அப்போது இருக்கும் நிலையைப் பொறுத்தது! ஒரே ஒருத்தருக்கே கூட அப்போது "வீணா" இருக்கும்! சில நாள் கழிச்சிப் பயன்படும்!
வட மதுரை/தென் மதுரை ஆய்வுகளும் அப்படியே! அவையும் கள்ளழகனிடம் இட்டுச் செல்லுமே!
ஞானம்/கர்மம்/பக்தி எல்லாம் ஒன்றோடொன்று இயைபவை, எதுவுமே தனியாக வீண் அல்ல என்று நாமே சொல்லிவிட்டு, இப்படிச் சொல்லலாமா?
ஆண்டாள் பாட்டில் சமயம் மட்டுமே ஆயப்படவில்லை!
மொழி, கலை, காதல், தமிழ், இயற்கை, நண்பர்களுக்குள் கலாய்த்தல் பேச்சு-ன்னு எல்லாமே இருக்கு! அதனால் "வீண்" இல்லை-ன்னே அடியேன் கருதுகிறேன்!
அதிகத்தனமாகப் பேசி இருந்தால், அடியேனை மன்னியுங்கள்! :)
//இராம்/Raam said...
ReplyDeleteKRS'ண்ணே,
நம்மூரூ பத்தி எழுதிருக்கீங்கன்னு படக்கென்னு வந்தேன்//
அதானே பார்த்தேன்! சங்கத்துச் சிங்கம் பந்தலில் முழங்குதேன்னு! :)
//நெம்ப நல்லா எழுதியிருக்கீங்க...//
நன்றிப்பா நன்றி!
//இன்னும் பழச'ல்லாம் படிச்சிட்டு வாறேன்... :)//
போச்சு! அது வேறயா? :)
//அடியேனை மன்னியுங்கள்! :)//
ReplyDeleteநீங்கள் தான் என்னை மன்னிக்கணும், இப்படி உங்களை எழுத வைத்தமைக்கு! :-)
//"வீண்" என்பது அவரவர் அப்போது இருக்கும் நிலையைப் பொறுத்தது! // நியாயமானது.
ஒரு பார்வையில் பட்டதினை சொல்ல விழைந்தேன் அவ்வளவே. மற்றபடி, இங்கே மதுரையினைப்பற்றிக் குறிப்பிடுவதின் அருமையினையும், அதனால் ஏற்படும் வாசக ஈர்ப்பினையும், அதனால் ஏற்படும் பயனையும் நன்கு அறிவேன்.
இந்த இடுகையில் முக்கால்வாசி, அச்செய்தி அடைத்துக் கொண்டு, முக்கிய செய்தி சென்றடைவதினை தடை செய்வதுபோல் உணர்ந்தேன். அதனாலேயே அப்படிச் செல்ல வேண்டியதானது, மன்னிக்கவும்!
//ஆகா...இது யார் கீர்த்தனை ஜீவா? அப்படியே வாயினால்/மனத்தால்-ன்னு இருக்கே?//
ReplyDeleteகீர்த்தனையெல்லாம் இல்லை, இப்பாசுரத்தை வைத்து அடியேன் கிறுக்கியது தான்.
//வட மதுரை/தென் மதுரை ஆய்வுகளும் அப்படியே! அவையும் கள்ளழகனிடம் இட்டுச் செல்லுமே! //
ReplyDeleteசென்றால் நல்லது. அதே சமயம் ஆய்வில் இறங்கி, எது சரி என்கிற ஆராய்ச்சியில் மூழ்கி, அதைத் தாண்டா நிலையில் சிக்காமல் இருந்தால் நலம்.
@ஜீவா
ReplyDelete//இந்த இடுகையில் முக்கால்வாசி, அச்செய்தி அடைத்துக் கொண்டு, முக்கிய செய்தி சென்றடைவதினை தடை செய்வதுபோல் உணர்ந்தேன். அதனாலேயே அப்படிச் செல்ல வேண்டியதானது, மன்னிக்கவும்!//
அதெல்லாம் மன்னிக்க முடியாது! நீங்க "கிறுக்கிய" கீர்த்தனையை ஒரு செய்யுளா ஒழுங்கு பண்ணி, அழகாப் பாடி அனுப்புங்க! அப்போ தான் நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள் :)))))
//இந்த இடுகையில் முக்கால்வாசி, அச்செய்தி அடைத்துக் கொண்டு//
ReplyDeleteஹா ஹா ஹா
ஒரு சுவையான நிகழ்ச்சி சொல்லட்டுமா ஜீவா?
வாரியார் பெருமானை "வேல் முருகன்"-ன்னு தலைப்பில் பேச அழைச்சிருக்காங்க எங்கூரு பக்கம் இருக்கும் செய்யாறில் (திருவத்திப்புரம்)! அவரும் வழக்கம் போல வாரிதியா பல தகவல்களைக் கொடுத்திருக்காரு!
வேலைப் பத்தியும் பேசணும், முருகனைப் பத்தியும் பேசணும்!
வேல், அதன் வடிவு, அதை எப்படிச் செய்வாங்க? அதன் குறியீடு என்ன? ஞானம் எப்படி அளிக்கும்? அதை எப்படி விடணும்? தமிழ் இலக்கியத்தில் எங்கே வேல் வருது? வேலூர்-ன்னு ஏன் பேரு? - இப்படி சுவாமிகள் வேலைப் பத்தியே கிட்டத்தட்ட ஒன்னே முக்கா மணி நேரம் பேசிப்புட்டாரு! மருந்துக்குக் கூட முருகன்-ன்னு ஒரு சொல்லே வரலை!
இன்னும் கால் மணி நேரம் தான்! அடுத்த ட்ரையினைப் புடிக்கணும் சுவாமிகள்! சில அதி தீவிர முருக பக்தர்கள் டென்சன் ஆயிட்டாங்க! அம்மையிடம் சக்தி வேல் வாங்கியதைக் கூடவா இந்தாளு சொல்ல மாட்டாரு-ன்னு வாரியார் மேல ஒரே கோவம்! குறிப்பு எழுதி மேடைக்கு அனுப்பினாங்க!
அவரு பதிலுக்கு, சக்தியிடம் வாங்கினத பத்தித் தான் உங்களுக்கே தெரிஞ்சிருக்கே! அதையே எதுக்கு நான் வேற சொல்லணும்-னு எதிர்பாக்குறீங்க-ன்னு ரிப்ளை நோட் அனுப்பிச்சிட்டாரு! :)
கடேசி அஞ்சு நிமிஷம்!
இவ்வளவு பெருமை மிக்க வேல்! அதைப் பேசவே ரெண்டு மணி நேரம் ஆச்சுது!
அப்பேர்ப்பட்ட வேலைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான், அழகன் முருகப் பெருமான், வேலூர் ரத்னகிரி மலை மேலே! வேல்முருகனின் பெருமையைப் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி-ன்னு உருவாய் அருவாய் பாட ஆரம்பிச்சிட்டாரு! :))
அவன் கையில் இருப்பதைப் பேசியது, எப்படி அவனைப் பேசியது ஆகியதோ, அதே போலத் தான் ஜீவா!
மதுரையும், மாயோனும், தமிழ்க்கடவுளும் என்று முக்கால்வாசி இடுகையாகப் பேசினாலும், அப்போதும் மாயனை "வாயினால் பேசி, மனத்தினால் சிந்தித்தோம்" அல்லவா? :)))
நல்லா இருக்கா வாரியார் சம்பவம்? :)
நல்லா இருந்தது வாரியார் கதை!
ReplyDelete//அப்போதும் மாயனை "வாயினால் பேசி, மனத்தினால் சிந்தித்தோம்" அல்லவா? :)))//
அது உங்களுக்குச் சரி, Whether it worked for Targeted Audience...?
//அது என்ன கண்டிப்பா இருக்கும்?அம்புட்டு நம்பிக்கையா? ஹிஹி! சரி, இங்கிட்டு ஜாலியா தொடங்குங்க!//
ReplyDeleteசுட்டிகளுக்கு நன்றி
//எது எதுல எப்பப்ப ஆர்வம் வரும்-ன்னே சொல்ல முடியாது கிரி!//
உண்மை தாங்க. வழிமொழிகிறேன்
//* கிரியின் பின்னூட்டத்தைப் படித்துப் பார்த்து,
* அடியேன் மேல் ஏதேனும் உள்ளுக்குள் கோபம் இருந்தால்,
* அதை விட்டுவிட்டு அன்புடனே இருக்குமாறு,
* போய பிழையும், புகுதருவான், நின்றனவும் பாசுரமான இங்கேயே
* வலையுலக ஆன்மீகப் பெரியவர்களையும், சிவனடியார்களையும், முருக தாசர்களையும், சக்தி உபாசகர்களையும், வைணவ அடிகளையும் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்!//
என்னங்க இப்படி கூறி பீதிய கிளப்புறீங்க... நான் எதுவும் தவறா கேட்டு விட்டேனா.!!
நானா தான் வந்து சிக்கிகிட்டனா! :-(( தவறா எதுவும் கேட்டு இருந்தா மன்னிக்கவும்.
//உண்டியலில் காசு போட்டுட்டு வரும் போது, இடப் பக்கம், நரசிம்மர் சன்னதி. அவருக்கு இடப்பக்கம் யாமுனைத் துறை! அடுத்த தபா போகும் போது பாருங்க! அப்படி ஒரு மணம் வீசும்! :)//
ReplyDeleteகோதை நாச்சியாரின் திருப்பாவையோடு கலந்து பல அருமையான தகவல்களையும் கொடுப்பதற்க்கு நன்றி KRS ஐயா.
இன்றைய பதிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
சளைக்காமல் எப்படி இவ்வளவு பின்னூட்டத்திற்க்கும் பதில் இடுகின்றீர்கள். ஆச்சிரியப்பட வைக்கின்றீர்கள் ஐயா.
வளர்க தங்கள் தொண்டு.
இரவிசங்கர்,
ReplyDeleteஇந்த இடுகையில் தேவரீர் கோதையின் திருவுள்ளத்தைக் கண்டு சொன்ன சில செய்திகளைப் பற்றி அடியேனின் தாழ்மையான கருத்துகளை கூடலில் ஒரு தனி இடுகையாக இட்டிருக்கிறேன். திருக்கண் சாத்தியருளவேண்டும்.
http://koodal1.blogspot.com/2008/12/blog-post_9531.html
அடியேன்.
:-)
குமரன் (Kumaran) said...
ReplyDeleteஇரவிசங்கர்,
இந்த இடுகையில் தேவரீர் கோதையின் திருவுள்ளத்தைக் கண்டு சொன்ன சில செய்திகளைப் பற்றி அடியேனின் தாழ்மையான கருத்துகளை கூடலில் ஒரு தனி இடுகையாக இட்டிருக்கிறேன். திருக்கண் சாத்தியருளவேண்டும்.
http://koodal1.blogspot.com/2008/12/blog-post_9531.html
அடியேன்.
:-)
>>>>>>>>>
குமரன்! தங்கள் ஒரு திருமடல் இங்கு இட்டு
என்னைத்திரும்பத்திரும்ப வாசிக்கவைத்துவிட்ட்டீர்கள்! இரவிசங்கரர் ரசித்தாரோ இல்லையோ திருவரங்கப்ரியா மிகவும் ரசித்தேன்! நன்றி! என்ன திருக்குமரரே, கூடல்நகருக்கு வரசொல்லி அரங்கநகர்க்காரர்களுக்கு அழைப்புகிடையாதோ?:):)
புள்ளும் சிலம்பினகாண் இரவிசங்கரே!
ReplyDeleteகள்நிகர்த் தமிழில் பாவைஉரையதனை
மெல்லத்தரஎண்ணமோ? எழுந்திராய்
பிள்ளாய்! ஈதென்னபேருறக்கம்?:):):)
ஆகா. திருவரங்கபிரியா அக்கா. கூடலுக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அழைப்பு தனியாக வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா?
ReplyDeleteஇங்கே புது வெள்ளை மழை பொழிகிறது. புதுயார்க்கிலும் பெய்கிறது என்று நினைக்கிறேன். அந்த அடைமழையில் எங்காவது மாட்டிக் கொண்டாரோ என்னவோ? அது தான் புள்ளும் சிலம்பின ஓசை இன்னும் கேட்கவில்லை.
இத்தனை தூய தமிழ் இங்க புகுந்து புறப்படும்போது அதைப் படித்து ருசிக்கவே எனக்குத் தோன்றுகிறது.
ReplyDeleteரவி,ஷைலஜா,,குமரன்,ராகவ்,கைலாஷி,ஜீவா அனைவருக்கும் நன்றி.
@ஜீவா
ReplyDelete//அது உங்களுக்குச் சரி, Whether it worked for Targeted Audience...?//
I dont wilfully target any audience! :)
Did variyaar swamigal target any audience? What he spoke abt Vel for the most of the time amounts to speaking abt Murugan only!
What I spoke abt Tamizh Kadavul & Then Madurai for the most of the pathivu, amounts to speaking abt Kannan only!
//கிரி said...
ReplyDelete//* கிரியின் பின்னூட்டத்தைப் படித்துப் பார்த்து,//
என்னங்க இப்படி கூறி பீதிய கிளப்புறீங்க... நான் எதுவும் தவறா கேட்டு விட்டேனா.!!//
சேச்சே! தவறா எல்லாம் ஒன்னும் கேக்கலை கிரி!
//பலமே எளிமை தான் என்று நினைக்கிறேன். பக்தி பதிவுகள் என்றாலும் படிக்க சுவாராசியமாக தருகிறீர்கள்// -ன்னு சொன்னீங்களே! அதைச் சொன்னேன்!
ஆன்மீகத்தை டைல்யூட் எல்லாம் செய்யக் கூடாது! அது அது அப்படியே கெட்டியா இருக்கணும் என்பது சில வலையுலக ஆன்மீகப் பெரியவர்களின் கருத்து! அதனால் அவ்வப்போது "செல்லமா" என் மேல கோவப் படுவாங்க! :))
அதான் உங்க பின்னூட்டத்தைப் படிச்சிப் பார்க்கச் சொல்லி சொன்னேன்!
குருவின் ஆணையையும் மீறி இராமானுசர் ஊரையே கூட்டிச் சொல்லவில்லையா?
துக்காராமும், கபீரும் மந்திரங்களை எளிமையாக்கி, நாம சங்கீர்த்தனம்-ன்னு ஆக்கலையா?
அது போல எடுத்துக்கிட்டு, கோவப்படாம இருக்கணும்-னு பெரியவர்களைக் கேட்டுக் கொண்டேன்! அவ்வளவு தான்!
நீங்க ரென்சன் ஆவாதீங்க! ஜாலியாவே படிங்க! :)))
I remember reading somewhere that former Indian President Dr.Sarvepalli Radhakrishnan, had come to the conclusion that Vaishnavism travelled from the South to the North. If I come across that article I will let you know.
ReplyDeleteAnother note. I was surprised to find that kanan is another name for Krishna in Gujarat. A Gujarati friend also told me that sometimes
Krishna is referred to as kannaiya!
ஆயர்களே பிற்காலத்தில் மேற்குதொடர்ச்சி மலை வழியாக இந்தியா முழுக்க பரவி வாழ்கின்றனர். அப்பொழுது இந்திய முழுக்க ஒரே மொழி தான். காஷ்மீரிலிருந்து குமரி வரை ஒரே மக்கள் தான் பாரதம் முழுவதும் வாழ்ந்தனர் நாம் அனைவரும் பாரத தேசத்தை சேர்ந்தவர்வர்கள் நமக்குள் பிரிவினை இல்லை தமிழ் தெலுங்கு மலையாளம் என்ன மொழி பேசினாலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
ReplyDelete