Thursday, December 25, 2008

மார்கழி-10: துளசி தளமா? தாமரை தளமா? - எது உசத்தி?

துளசியின் கதை என்ன? துளசி தளத்தை விட தாமரை தளம் உசத்தியாமே? பாக்கலாமா இன்னிக்கி? :)
புதிர்-10:
Thirupavai Crossword - குறுக்கெழுத்துப் புதிரை நீங்க ஆடித் தான் ஆகணும்! மொதல்ல அதைப் போயி ஆடுங்க! :)


"ஏல்-ஓர்" எம்பாவாய் என்றால் என்ன-ன்னு சொல்லியாச்சு சென்ற பதிவில்! அதை ஞாபகம் வச்சிக்கிட்டே இனி வரும் பதிவுகளை வாசியுங்கள்!
கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்,
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன்! நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால்! பண்டு ஒரு நாள்


கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்,
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற ஏல்-ஓர் எம் பாவாய்!



நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் = அம்மாடி, நோன்பு நோற்றுச் சுவர்க்கம் போறவளே!
இங்கு தோழியை அம்மா-ன்னே விளிக்கிறா ஆண்டாள்! ஏன்? அடியே பெரிய மனுஷி-ன்னு கூப்பிடுவோம்-ல? அதே போலத் தான்! ஏதோ மார்கழி நோன்பு நோற்று, ஐக்கிய மோட்ச நாடுகளுக்கு விசா வாங்கப் போறேன்னு சொன்னியேடீ-ன்னு கிண்டல் தொனிக்கத் தோழியைக் கலாய்க்கிறாள் கோதை!:)

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற = நோன்பு நோற்றால் தேவலோகம்/ சொர்க்கலோகம் கிடைக்கும்! அங்கே போய், ரம்பா-ஊர்வசி-மேனகா எல்லாம் டான்ஸ் ஆட, அதைப் பாத்துக்கிட்டே, கோப்பையில் குடிச்சிக்கிட்டே, ஜாலியா இருக்கலாம் என்றா கோதை சொல்கிறாள்? சேச்சே!

"சுவர்க்கம்" என்று இந்திரலோகத்தைச் சொல்லவில்லை ஆண்டாள்! ஒழுக்கங்கெட்ட இந்திரனைக் கண்ணனுக்கும் பிடிக்காது! அவன் காதலிக்கும் பிடிக்காதே!
வேள்வி மறையோர்கள் நிறுவி வைத்தார்கள் இந்திர பூஜையை!
அதைக் கேள்வி கேட்டு நிறுத்தி வைத்தான் கண்ணன்!
அதுவும் அத்தனை ஆண்டுகளுக்கு முன்பே! அப்போ, எத்தனை பேர் கண்ணன் மேல் பொங்கி இருப்பார்கள்? ஆனால் கண்ணன் அசைந்து கொடுத்தானா? வலுவான வாதங்களை முன் வைத்தான் அல்லவா! கோவர்த்தன கிரியைப் பூசைக்குரிய பொருளாக்கினான்!
வழிபாட்டில் புரட்சிக்கு வித்திட்டவன் கண்ணனே! சமுதாயத்துக்குப் பயன் தருமாறு ஆன்மீகம் வளர்த்தவன் கண்ணன்!

கண்மூடித்தனமான வழக்கங்களை எல்லாம் தள்ளி வைத்து, சமூக நோக்குள்ள ஆன்மீக வழியைக் காட்டியமைக்கு கண்ணனே முதல் குரு!
கண்ணனின் இதயம் அறிந்தவர்கள் ஆச்சார்யர்கள்! ஆச்சார்ய ஹ்ருதயம்! அதனால் தான் இராமானுசர், மாமுனிகள் போன்றவர்களால் சமூக-ஆன்மீகத்தை வளர்க்க முடிந்தது!

* சுவர்க்கம் <> இந்திரலோகம்!
யாருக்கு வேணும் அந்த இந்திரலோகம்? இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்! அரங்கமா நகருளானே!
* சுவர்க்கம் = சு+வர்க்கம்!!
நல்ல வர்க்கம்! நல்ல குலம்!
குலம் தரும், செல்வம் தந்திடும் = அடியார் குலம்! அதுவே சு+வர்க்கம்!
வைகுந்தம் என்னும் கைங்கர்ய சாம்ராஜ்ஜியம்! அதுவே நம்-அவன் வீடு! அதுவே சு+வர்க்கம்! அதைத் தான் கோதை குறிக்கிறாள்!


மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? = ஒருத்தர் குரல் கொடுத்தா, நாமளும் பதில் குரல் கொடுக்கணும்! ஒருத்தர் பின்னூட்டம் இட்டாங்கன்னா, அவர்களுக்குப் பதில் பின்னூட்டம் சொல்லணும்! :)
நாங்க உன்னைக் கூப்புடறோம்? நீ வாசக் கதவைத் தான் திறக்கலை! மாற்றமும் தர மாட்டியா? மாற்று பதில் கூடவா கொடுக்க மாட்டே? - என்று கேட்கிறாள் கோதை!

நாற்றத் துழாய் முடி நாராயணன்! = நாராயணன் நாற்றம் புடிச்சவன்! :)
ஹா ஹா ஹா! அப்படியா சொல்லுறா கோதை? முன்பே சொன்னது போல் பாட்டைக் கோதையின் மனசில் இருந்து படிக்கணும்! கோதையின் காலத்தில் இருந்து படிக்கணும்!
நாற்றம் = மணம்! துர்நாற்றம் = கெட்ட வாசனை! நன்னாற்றம் = நல்ல வாசனை!
இப்போ தான் நாற்றம் என்றாலே பொருள் மாறி விட்டது! இப்படி எத்தனையோ தமிழ்ச் சொற்களின் உண்மையான பொருள், கும்மியடிச்சி கும்மியடிச்சி, பொருளே மாறிப் போச்சி! :)

* பட்டை = விபூதி! ஆனா இன்னிக்கி கிண்டலா=சரக்கு! இன்னும் அரை நூற்றாண்டில் இதுவும் டோட்டலாவே மாறிடும்!
* நாமம் = திருமண் காப்பு! ஆனா இன்னிக்கி கிண்டலா= ஏமாந்து போதல்! இன்னும் அரை நூற்றாண்டில் இதுவும் டோட்டலாவே மாறிடும்!
மக்களே, இது தான் தொடர் கும்மியின் பவர்! தெரிஞ்சிக்கோங்க! :))

நாற்றத் துழாய் முடி நாராயணன் = வாசம் மிக்க துழாய் என்னும் துளசி தளம்! அதை முடிந்து கொள்ளும் (சூடிக் கொள்ளும்) நாராயணன்!

துழாய் = தமிழுக்கே உரிய ழகரம் துலங்கும் துழாய் = தமிழ்க் கடவுளான மாயோனுக்கு பிடித்தமான மலர் ஆகி விட்டது பார்த்தீர்களா?
அத்துழாய், பைந்துழாய், கருந்துழாய்-ன்னு வைணவ இலக்கியங்களில் தமிழ்த் துழாயின் வாசம் வீசும்!

ஏன் இந்தத் துளசி தளத்துக்கு மட்டும் இத்துனை மதிப்பு?
மற்ற செடிகள் போல், துளசிச் செடிக்குப் பூக்கள் பூத்துக் குலுங்காதே! அப்புறம் எப்படித் துளசியைப் போயி அழகு-ன்னு சொல்லலாம்?
சிறுசிறு சிரிப்பாய் கரும்பச்சை இலைகள். அந்தச் சிரிப்புக்கு மேலே ஒய்யாரக் கொண்டை போல், துளசி மலர்க்காம்பு காற்றில் ஆடும்.
அதில் பொடிப்பொடிக் கருநீல விதைகள், அந்தக் கருநீலனையே தாங்கிக் கொண்டு இருப்பது போல் அப்படி ஒரு பெருமிதம்!

மற்ற பூக்களை எல்லாம் கொய்யாமல் செடியில் விட்டால் கூட, ஒரு சில நாளில் வாடி விடும்! ஆனா வாடாத மலர் என்றால் அது துளசி மட்டும் தானே? ஒட்டு மொத்த செடியே ஒரு வாசனைக் கொடின்னா அது துழாய்ச் செடி மட்டும் தான்!

* கருங்குவளை! அதை விடப் புனிதமானது செந்தாமரை!
* அதை விடப் புனிதமானது நூறு இதழ் கொண்ட செந்தாமரை!
* அதை விடப் புனிதமானது ஆயிரம் இதழ் கொண்ட புண்டரீகம் என்னும் தாமரை!
* அதை விடப் புனிதமானது பொற்றாமரை என்னும் ஸ்வர்ண கமலம்!
* ஆனால் இவை அத்தனையும் தராசுத் தட்டில் வைத்து,
* அது கூடவே கண்ணனையும் வைத்தாலும்,
ஒரு சிறு துளசி தளம் எதிர்த் தட்டில் அனைத்தையும் சமன் படுத்தி விடும்! இது எப்படிச் சாத்தியம்? துளசி = அன்பு! அதனால் தான்! கிருஷ்ண துளசி என்றே பெயரும் வந்து விட்டது!

பொதுவாகச் சொல்லப்படும் ஜலந்திரன்-துளசி கதை! ஆனால் அதுவல்ல பெருமாள்-துளசி பந்தம்! ஜலந்திரன்-துளசி கதை வேறு! இந்தத் துளசி வேறு! இந்தத் துளசி ஆதித்துளசி! பின்னொரு நாள் விரிவாகச் சொல்கிறேன்!

திருப்பாற்கடலிலே தோன்றியது துளசி! மகாலக்ஷ்மிக்கும் முன்னால்!
அதுவே எம்பெருமானின் மார்பைச் சென்று சேர்ந்தது! அகலகில்லேன் என்று அலர்-மேல்-மங்கை உறையும் திருமார்பு! அந்த மார்பைத் துளசி அலங்கரிப்பதால் அன்னைக்கும்-அப்பனுக்கும் ஒருசேரக் கட்டக் கூடிய ஒரே மலர் இந்தத் துழாய் மலர்! பச்சைத் துளசி தாயாருக்கும், கருந்துளசி பெருமாளுக்கும் சார்த்தப்படும்!

ஆகம விதிகளிலும் துளசிக்கே ஏற்றம்! இன்னின்ன மலர்கள் தான் இந்திந்த பாகங்களில் அலங்கரிக்கணும் என்ற ஆகம விதி இருக்கு! ஆனா அதற்கு ஒரே விதி விலக்கு = துளசி!
எந்த மலரைச் சூட்டும் முன்னரும், துளசி மலரே முதலில் சார்த்தப்பட வேண்டும்! நைவேத்தியத்திலும் துளசி உண்டு! தீர்த்தத்திலும் துளசி உண்டு! வேள்விகளில் தர்ப்பைக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதே போல் பூசைகளில் துளசிக்கு முக்கியத்துவம்!

துளசி, துழாய், பிருந்தா, விருந்தை என்று பல நாமங்கள்! துளசி = இலை, மணி, கட்டை, வேர் என்று பல மருந்துகள்! இன்னும் சொன்னால் தனிப் பதிவு தான் இடணும்! "அகிலமுண்ட மாலுக்கு அணிகலம் தண்ணம் துழாய்" என்று அருணகிரியும் துளசீ மணத்தில் ஆட்படுகிறார்!

இன்று கிறிஸ்துமஸ் என்பதால் இதையும் சொல்கிறேன்!
* இயேசுநாதப் பெருமானின் சிலுவைக்கு அடிக் கீழ் வளர்ந்ததும் Holy Basil என்னும் துளசியே!
* துளசியின் அடிக் கீழ் தோன்றி வளர்ந்ததும், கோதை என்னும் துளசியே!
துளசி நாராயணப் பெருமாள் திருவடிகளே சரணம்!


நம்மால் போற்ற, பறை தரும் புண்ணியனால் = நாம் அவனைப் பாட, நமக்கு அவன் பறை தருவான்! என்ன பறை? மோட்சப் பாதைக்கு வேண்டிய உபகரணங்கள் (பறை) = சிந்தனை, சொல், செயல்! அதை நமக்குத் தருவான்! தயார் படுத்துவான்!

பண்டு ஒரு நாள், கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும் = அன்னிக்கி ஒரு நாள், எமன் வாயில் விழுந்து மாண்டு போனானே! கும்பகர்ணன்!

தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ? = அவன் தோற்றுப் போய், தன் தூக்கத்தை உனக்குக் கொடுத்திட்டுப் போயிட்டானோ? ஹா ஹா ஹா! கும்பகர்ணி! எழுந்திருடீ!
(இன்னொன்று கவனித்தீர்களா? கர்ணன் என்று பெயர் கொண்டவர்கள் பெரும்பாலும், செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவே, தீமை பக்கம் இருந்து, கூற்றத்தின் வாய் வீழ்வார்கள் போல! கும்ப-கர்ணன், கர்ணன், வி-கர்ணன், இன்னும் வேற யார்னா இருக்காங்களா?)

ஆற்ற+அனந்தல் உடையாய் = அனந்தல்-ன்னா என்ன-ன்னு சென்ற பாட்டிலேயே சொன்னேன்! ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?-ன்னு கேட்டாள்!
ஆற்ற(செயல்) = கர்மச் செருக்கு! அனந்தல் = ஞானச் செருக்கு!

விறகுக் கட்டையைக் கொளுத்திக் குளிர் காயலாம்! ஆனால் நாம் வாங்கிய கட்டை என்று இறுக்கி அணைத்துக் கொள்ள முடியுமா? அதே போலத் தான்!
* இறைவனை அறியத் தான் ஞானானுஷ்டானம் செய்கிறோம்!
* இறைவனை அறியத் தான் கர்மானுஷ்டானம் செய்கிறோம்!
ஆனால் பழகப் பழக, குளிரைப் போக்கத் தான் கட்டை என்பது மறந்து போய், கட்டையையே அணைத்துக் கொள்கிறோம்! அதுவே தடையாகப் போய்விடுகிறது!

கட்டைக்கு ரொம்ப தூரமும் போக முடியாது! ரொம்ப அருகிலும் போகக் கூடாது! அப்போது தான் வெப்பம் கிடைக்கும்! இதை உணர்ந்து கொண்டால் போதும்!

அருங்கலமே = தயாபாத்திரமே! தாயார்-பெருமாளின் கருணைக்கு உரிய பாத்திரமே!
(ஆற்ற+அனந்தல்) செருக்கு தந்த சுகத்தில், சுகமாத் தூங்குபவளே! போதும்! புரிஞ்சிக்கோ! விழிச்சிக்கோ!

தேற்றமாய் வந்து திற = தேற்றமாய் வா! வேகமாய் வா! வந்து கதவைத் திற! தேற்றம் = வேகம்/தேறுதல்! நீ தேறணும்-ன்னா தேற்றமாய் வா!
(ஆற்ற+அனந்தல்) மேல் உள்ள பிடிமானத்தை/செருக்கை விட்டுட்டுத் தேற்றமா வா!

ஏல்-ஓர் எம்பாவாய்! ஏல்-ஓர் எம்பாவாய்!!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

இயேசுக் குழந்தை பிறந்தநாள்! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!

35 comments:

  1. இந்தப் பதிவை...
    * எதையும் கலந்து பேசக் கூடிய மூத்த தோழி - ஆயினும் இனிய தோழி!
    * "துளசி தளம்" வலைத் தளத்துக்கு ஓனரம்மா
    * நம்ம டீச்சர் "துளசி" கோபால் அவர்களுக்குச் சமர்பிக்கின்றேன்!

    ReplyDelete
  2. இதை நான் பூரண மனதோடு ஆதரிக்கிறேன்.

    பதிவுத் துளசியும், நம்ம துளசியும் நல்லா இருக்கணும்.

    ReplyDelete
  3. Anna, thiruththuzhayin perumaiyai ippaasuram moolamaaha nandraha solliyulleer.

    ReplyDelete
  4. >>கர்ணன் என்று பெயர் கொண்டவர்கள் பெரும்பாலும், செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவே, தீமை பக்கம் இருந்து, கூற்றத்தின் வாய் வீழ்வார்கள் போல! கும்ப-கர்ணன், கர்ணன், வி-கர்ணன், இன்னும் வேற யார்னா இருக்காங்களா?)<<

    Does Sukarno (su + karnan) of Indonesia qualify for this category? Just kidding!

    ReplyDelete
  5. >>இயேசுநாதப் பெருமானின் சிலுவைக்கு அடிக் கீழ் வளர்ந்ததும் Holy Basil என்னும் துளசியே!<<
    Yes, basil (Ocimum sanctum) is holy to Catholics. However, the basil did not grow under the Cross but around the grave cave where his body was kept which disappeared on the Sunday following the Friday crucifixion. When some women went there to see, they found the basil bushes around the cave but the body was gone. That is what I remember to have read.

    ReplyDelete
  6. துழாய் = தமிழுக்கே உரிய ழகரம் துலங்கும் துழாய் = தமிழ்க் கடவுளான மாயோனுக்கு பிடித்தமான மலர் ஆகி விட்டது பார்த்தீர்களா?
    அத்துழாய், பைந்துழாய், கருந்துழாய்-ன்னு வைணவ இலக்கியங்களில் தமிழ்த் துழாயின் வாசம் வீசும்>>>>>>>>>>>>>>>
    <<<<<<<<<<


    வெறும்துழாய் அல்ல அது திருத்துழாய்! தாமரைக்குக்கூட திருத்தாமரை எனப்பெயர் இல்லை!

    ReplyDelete
  7. மிக நன்றாகச் சொன்னீர்கள் இரவி. அருமை.

    ReplyDelete
  8. அகலில் அகலும்; அணுகில் அணுகும் என்று சொன்னதை விட 'அகலாமல் அணுகாமல்' இருக்க வேண்டும் என்று சொல்வது அந்த இடத்திற்குப் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. வ‌ழ‌க்க‌ம் போல‌ அருமை. துள‌சி, தாமரை ஓப்பீட்டி விள‌ங்க‌ள்.... வார்த்தைக‌ளை தேடிக்கொண்டு இருக்கின்றேன் பாராட்ட‌. நிறைய‌ ந‌ல்ல‌ விசய‌ங்க‌ள் கிடைக்க‌ பெற்றேன்

    ReplyDelete
  10. //இதை நான் பூரண மனதோடு ஆதரிக்கிறேன்.
    பதிவுத் துளசியும், நம்ம துளசியும் நல்லா இருக்கணும்//

    நன்றி வல்லியம்மா!

    ReplyDelete
  11. //Raghav said...
    Anna, thiruththuzhayin perumaiyai ippaasuram moolamaaha nandraha solliyulleer//

    thiruththuzhayin pathivu maNathai patRi chonnamaikku nandri thiru.raghav :)

    ReplyDelete
  12. //nAradA said...
    Does Sukarno (su + karnan) of Indonesia qualify for this category? Just kidding!
    //

    வாங்க திரு சேதுராமன் சுப்ரமணியன்!

    சுகர்ணோ-ன்னு இப்போதைய இந்தோனேசிய அரசர்கள் கூட பேரு வச்சிக்கறாங்க போல! அவர்கள் வம்புக்கு வந்துடப் போறாங்க! :)

    தங்களின் எப்படிப் புனைந்தீரோ ராமய்யா கீர்த்தனையை ஜீவாவின் பதிவில் படித்து ரசித்தேன்! வருகைக்கு நன்றி! உங்கள் குறுக்கெழுத்து விடைகள் பின்னூட்டத்தையும் பார்த்தேன்! இதோ சரி பார்த்துச் சொல்லிடறேன்! :)

    ReplyDelete
  13. //nAradA said...
    Yes, basil (Ocimum sanctum) is holy to Catholics//

    Nice to know the botanical name. It contains "sanctum" :)

    //However, the basil did not grow under the Cross but around the grave cave where his body was kept//

    hmmm.I guess there are different versions of this. wiki says itz under the cross. but the bible can be more authoritative. have to read and figure out.

    ReplyDelete
  14. //ஷைலஜா said...
    வெறும்துழாய் அல்ல அது திருத்துழாய்!//

    ஒரு வாசகம்!

    //தாமரைக்குக்கூட திருத்தாமரை எனப்பெயர் இல்லை!//

    ஆமாக்கா! திரு அமர்ந்த தாமாரை தானே! திருக்கமலம், திருத்தாமரை, திருபங்கயம்-ன்னு சொல்லவே இல்லை-ல?

    ReplyDelete
  15. //குமரன் (Kumaran) said...
    மிக நன்றாகச் சொன்னீர்கள் இரவி. அருமை//

    நன்றி குமரன்!
    என்ன இது ஒத்த வரிப் பின்னூட்டம்? :)
    சான்டா நள்ளிரவு வந்தாரா? பேசினீர்களா? :)

    ReplyDelete
  16. //குமரன் (Kumaran) said...
    அகலில் அகலும்; அணுகில் அணுகும் என்று சொன்னதை விட 'அகலாமல் அணுகாமல்' இருக்க வேண்டும் என்று சொல்வது அந்த இடத்திற்குப் பொருந்தும் என்று நினைக்கிறேன்//

    ஆமாம் குமரன்! நீங்க சொல்றது சரி தான்!
    நான் அகலில் வெப்பம் அகலும், அணுகில் ஒரேயடியா வெப்பம் அணுகும்-னு தான் முதலில் சொல்ல வந்தேன்!

    ஆனா நீங்க சொன்ன பிறகு யோசிச்சிப் பார்த்தேன்! அது இறைவனைச் சொல்ல வந்த திருவாய்மொழி வரிகள்! அதை ஞான கர்ம உபாயங்களுக்குப் பொருத்திப் பார்ப்பது அவ்வளவு சரியா வரலை! பதிவில் நீக்கிடறேன்!

    ReplyDelete
  17. //மின்னல் said...
    வ‌ழ‌க்க‌ம் போல‌ அருமை//

    நன்றி மின்னல்!

    //துள‌சி, தாமரை ஓப்பீட்டி விள‌ங்க‌ள்.... வார்த்தைக‌ளை தேடிக்கொண்டு இருக்கின்றேன் பாராட்ட‌. நிறைய‌ ந‌ல்ல‌ விசய‌ங்க‌ள் கிடைக்க‌ பெற்றேன்//

    ஹிஹி! அதான் அருமை-ன்னு சொல்லிடீங்களே! அந்த வார்த்தையே போதும்! யாராச்சும் துளசி பற்றி மேலதிக தகவல்கள் சொல்லுங்க! ஜலந்திரன்-துளசி கதை கூட சுருக்கமாகச் சொல்லலாம்!

    ReplyDelete
  18. //தன் தூக்கத்தை உனக்குக் கொடுத்திட்டுப் போயிட்டானோ? //
    ஆனா, அவன் தூக்கம், 'அமர்ந்த துயில்'. நம்ம தூக்கம் 'அறியாத் துயில்'!

    இந்த துயில் எழுப்புதல், அவன் தூக்கத்தில் எழுப்புவதா, இல்லை அந்த சாக்கில் நம்மை அறியாமைத் தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கொள்வதா?!

    ReplyDelete
  19. துளசியின் பெருமைகளைப் படிக்கப் படிக்க 'ஆனந்தம்'தான்.

    //திருப்பாற்கடலிலே தோன்றியது துளசி! மகாலக்ஷ்மிக்கும் முன்னால்!//

    ஏம்ப்பா...... ஸ்ரீதேவிக்கு மூத்தவளா இவள். அடக் கடவுளே.......


    விவகாரமா இருக்கும்போல இருக்கே!!!
    (அதானோ காலையில் கண்விழிக்கவே முடியறதில்லை)

    //பின்னொரு நாள் விரிவாகச் சொல்கிறேன்!//

    அப்ப இங்கேயும் ஒரு அப்புறம் கதைகள் நூறு வரப்போகுதா?????

    துளசிதளத்துக்கு ஒரு விளம்பரம் ஆச்சு:-))))

    நல்ல நாளும் அதுவுமா நாராயணன் நினைவோடு சேர்ந்து வந்த நிகழ்வுகளுக்கு நன்றிப்பா கே ஆர் எஸ்.
    நன்றி வல்லி.

    ReplyDelete
  20. தளம் ரெண்டுக்கும் பொது இல்லை.
    ஒன்னு தளம், இன்னொன்னு குளம்:-))))

    ReplyDelete
  21. சுவர்க்கம் <> இந்திரலோகம்!
    யாருக்கு வேணும் அந்த இந்திரலோகம்? இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்! அரங்கமா நகருளானே!
    * சுவர்க்கம் = சு+வர்க்கம்!!
    நல்ல வர்க்கம்! நல்ல குலம்!
    குலம் தரும், செல்வம் தந்திடும் = அடியார் குலம்! அதுவே சு+வர்க்கம்!
    வைகுந்தம் என்னும் கைங்கர்ய சாம்ராஜ்ஜியம்! அதுவே நம்-அவன் வீடு! அதுவே சு+வர்க்கம்! அதைத் தான் கோதை குறிக்கிறாள்!>>>>>>>>>>>


    சுவர்க்கம் சு =நல்ல வர்க்கம் ==குலம் என்பது புது விவரம் நல்ல விவரமும்கூட...

    ReplyDelete
  22. அருங்கலமே = தயாபாத்திரமே! தாயார்-பெருமாளின் கருணைக்கு உரிய பாத்திரமே!
    (<>>>>>>>>>>>>>>>>>>






    கலம் என்றால் பாத்திரம்
    பாத்திரம் என்பது ஏற்பது அதில் என்ன வைக்கிறோமோ அதை ஏற்கும் பாத்திரம். அருங்கலமே என்கிற இந்த சொல் ஆண்டாளின் திருவாயினால் மிக அற்புதமாக இந்தப்பாட்டில் வந்து பொருந்தி இருக்கிறதை ரசித்தேன்

    ReplyDelete
  23. >>26-01-2008, 09:10 AM
    Effie Ganatsios
    Very Frequent Poster & Orthodox member (?)
    Church: Orthodox

    Join Date: Feb 2005
    Location: Greece
    Posts: 1,246

    Originally Posted by Olga 1 View Post
    Basil is even planted in front of Greek graves at cemeteries, often growing so luxuriously that the headstone is obscured.
    Olga, people here do this here because they believe that basil also grew above the spot where Jesus' grave was. They believe that basil is the Lord's herb.<<
    KRS:
    Look at the last line in the above. It is the Lord's herb!
    This is one of the searches upon googling for basil around Jesus' grave.
    Another site is:
    http://www.thebeadsite.com/PLA-HOLY.html
    where the penultimate paragraph (just one long line) mentions that the herb basil is believed to have grown around the grave of Jesus.
    Sometime last year or so I remember to have read a more detailed account about some women who went to look for the body of Jesus on that Sunday saw a lot of basil growing around the grave. Now as you recognize the grave site is different from the Cross site.
    You may even search for more details.

    ReplyDelete
  24. KRS:
    In the following site, I find the statements I am putting under quotes.
    http://en.wikipedia.org/wiki/Basil
    "The word basil comes from the Greek βασιλεύς (basileus), meaning "king", as it is believed to have grown above the spot where St. Constantine and Helen discovered the Holy Cross"
    Under Cultural aspects in the same article I find,
    "Holy Basil, also called 'Tulsi', is highly revered in Hinduism and also has religious significance in the Greek Orthodox Church, where it is used to prepare holy water. It is said to have been found around Christ's tomb after his resurrection"
    Well lot of this is belief since the people who first found it are not here to vouch for it anyway. We take it at the face value just like we believe our Hindu mythological stories.

    ReplyDelete
  25. //சிறுசிறு சிரிப்பாய் கரும்பச்சை இலைகள். அந்தச் சிரிப்புக்கு மேலே ஒய்யாரக் கொண்டை போல், துளசி மலர்க்காம்பு காற்றில் ஆடும்.
    அதில் பொடிப்பொடிக் கருநீல விதைகள், அந்தக் கருநீலனையே தாங்கிக் கொண்டு இருப்பது போல் அப்படி ஒரு பெருமிதம்!//

    திருத்துழாய் பற்றிய வர்ணனை அபாரம்.

    பின்னொரு நாள் விரிவாச் சொல்றேன்னு சொல்றதெல்லாம் குறிச்சு வச்சிருக்கீங்கதானே :)

    அருமையான பதிவுக்கும் கூடவே துளசிம்மாவுக்கும் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  26. //Now as you recognize the grave site is different from the Cross site//

    ஆமாங்க சேதுராமன் சார்! நீங்க சொல்வது சரியே! ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு! சிலுவை இடம் வேறு! கல்லறை வேறு! துளசி கல்லறையில் வளர்ந்தது என்றே பலரும் சொல்கிறார்கள்!

    //Sometime last year or so I remember to have read a more detailed account about some women who went to look for the body of Jesus on that Sunday saw a lot of basil growing around the grave//

    ஆமா! அந்தம்மா பேரு புனித ஹெலன்!
    Here u go!

    Deuteronomy 32:2 – “…My speech shall distil … as the small rain upon the tender herb…”

    Sweet basil (Ocimum basilicum) is the official flower of Orthodoxy. The word rihan in the Hebrew scriptures has been translated as myrtle in Syria and as basil in Artas.

    One legend says that, in 325 A.D., the basil plant helped St. Helen identify the location of the cross on which Jesus had been crucified. Basil is used in many major feast days of the church – most often when blessing homes or during those church services at which the blessing of the waters takes place

    http://www.ukrainianbookstore.com/ProductInfo.aspx?productid=BASIL'S%20BLESSING

    ReplyDelete
  27. // nAradA said...
    Well lot of this is belief since the people who first found it are not here to vouch for it anyway. We take it at the face value just like we believe our Hindu mythological stories//

    ஆமாங்க சேதுராமன் சார்.
    சிலது மரபு சார்ந்த நம்பிக்கைகள் தான்! ஆனால் நன் நம்பிக்கைகள்! மூட நம்பிக்கைகளா இல்லாத வரை சரியே!

    You are right! We cannot present current day contex sensitive proof for these! Even current day news channels tell different different versions on current affairs! :)

    If thatz the case, we can never vouch for incidents that happened when there was no proper recording notation! We have to weigh it against common good and take it!

    ஒரு பொருளின் இருப்புக்கு சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது! :)

    ReplyDelete
  28. >>//Sometime last year or so I remember to have read a more detailed account about some women who went to look for the body of Jesus on that Sunday saw a lot of basil growing around the grave//

    ஆமா! அந்தம்மா பேரு புனித ஹெலன்!<<

    Well, what I meant in my statement was "at the time of the crucifixion/resurrection". St. Helen and St. Constantine found the Cross (perhaps near the grave site) in 325 CE. Again this is all Faith. Was the wooden Cross (be it holy or not) that stable (without getting disintegrated by termites and nature) to last over 325 years? Faith and Reason never meet (just like the the railroad strands). But one can bridge them off and on.
    >>ஒரு பொருளின் இருப்புக்கு சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது! :)<<
    True, that is the difference between Faith and Reason. Faith accepts proclamations made in the past by a few religious leaders instantly (your "El" in tiurppAvai) without questioning the background. Reason has no quarrel with that but wants to arrive at it through investigation, analysis, and compilation. I agree it will take a long time and the path will be very asymptotic, like reaching the absolute zero (in temperature)..In my view one should not deny the opportunity for Reason to do so. Reason can always be questioned and argued with but Faith can never be questioned. That is the privilege Faith enjoys but rightfully denied to Reason. Sorry for the digression!
    P.S. I am an agnostic but not an atheist. I question everything in nature (--even gnostics occasionally question and criticize God for keeping them in misery but they eventually reconcile with Him!). If you have not read the book "The language of God" by Francis Collins (the guru of Human Genome Research Institute) you should read it. Even if you are not a biologist it is an easy read.

    ReplyDelete
  29. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    இந்த துயில் எழுப்புதல், அவன் தூக்கத்தில் எழுப்புவதா, இல்லை அந்த சாக்கில் நம்மை அறியாமைத் தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கொள்வதா?!
    //

    சந்தேகமே இல்லை ஜீவா! நம்மை எழுப்பிக் கொள்ளத் தான் துயில் எழுப்பல்! நம்மை எழுப்பத் தான் சுப்ரபாதம்! அவனை எழுப்ப அல்ல! :)

    ReplyDelete
  30. //துளசி கோபால் said...
    துளசியின் பெருமைகளைப் படிக்கப் படிக்க 'ஆனந்தம்'தான்.//

    கோபால் சார் படிக்கும் போது இன்னும் ஆனந்தம் டீச்சர்! :))

    //திருப்பாற்கடலிலே தோன்றியது துளசி! மகாலக்ஷ்மிக்கும் முன்னால்!
    ஏம்ப்பா...... ஸ்ரீதேவிக்கு மூத்தவளா இவள். அடக் கடவுளே.......//

    ஹா ஹா ஹா!
    அந்த "மூத்தவள்" இல்லை இவள்! :)

    //அப்ப இங்கேயும் ஒரு அப்புறம் கதைகள் நூறு வரப்போகுதா?????
    துளசிதளத்துக்கு ஒரு விளம்பரம் ஆச்சு:-))))//

    விளம்பரமா? சீரியல், மெகாத் தொடர்-ன்னு சொல்லுங்க! :)

    //நல்ல நாளும் அதுவுமா நாராயணன் நினைவோடு சேர்ந்து வந்த நிகழ்வுகளுக்கு நன்றிப்பா கே ஆர் எஸ்.//

    :)
    தன்யன் ஆனோம் டீச்சர்!

    ReplyDelete
  31. //துளசி கோபால் said...
    தளம் ரெண்டுக்கும் பொது இல்லை.
    ஒன்னு தளம், இன்னொன்னு குளம்:-))))//

    துளசி தளம்!
    தாமரைக் குளம்!
    டீச்சருக்கே உரியது தளம்! :)

    தளம் = இதழ்
    தாமரைத் தளம்-ன்னும் சொல்லலாம்! வில்வ தளம், தாமரைத் தளம், உதிரிப்பூ கூட தளம் தான்!

    ReplyDelete
  32. //ஷைலஜா said...
    சுவர்க்கம் சு =நல்ல வர்க்கம் ==குலம் என்பது புது விவரம் நல்ல விவரமும்கூட...//

    டேங்கீஸ்-க்கா! :)
    நீங்களும் எங்களுக்கு சு+வர்க்கம் தானே!

    ReplyDelete
  33. //ஷைலஜா said...
    கலம் என்றால் பாத்திரம்
    பாத்திரம் என்பது ஏற்பது அதில் என்ன வைக்கிறோமோ அதை ஏற்கும் பாத்திரம்//

    ஆமாம்-க்கா! வைப்பதைக் கொள்ளும் கலம்!

    //அருங்கலமே என்கிற இந்த சொல் ஆண்டாளின் திருவாயினால் மிக அற்புதமாக இந்தப்பாட்டில் வந்து பொருந்தி இருக்கிறதை ரசித்தேன்//

    நன்றிக்கா!
    தயாபாத்ரம்=அருங்கலம்!
    அதான் சொன்னேன்!

    ஸ்ரீசைலேச "தயா பாத்ரம்"
    தீபக்த் யாதி குணார்னவம்
    யதீந்த்ரப் பிரவணம் வந்தே
    ரம்ய ஜாமாத்ரு முனிம்!

    ReplyDelete
  34. //கவிநயா said...
    திருத்துழாய் பற்றிய வர்ணனை அபாரம்//

    நன்றி-க்கா! இதை முன்னரே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன்! மாதவிப் பந்தலில் துளசியைப் பார்த்தார்! மயக்கம் போட்டார்! - என்னும் பதிவில்!
    http://madhavipanthal.blogspot.com/2008/01/blog-post.html

    //பின்னொரு நாள் விரிவாச் சொல்றேன்னு சொல்றதெல்லாம் குறிச்சு வச்சிருக்கீங்கதானே :)//

    அச்சோ! மறந்து போச்சே! :)

    ReplyDelete
  35. //நல்ல நாளும் அதுவுமா நாராயணன் நினைவோடு சேர்ந்து வந்த நிகழ்வுகளுக்கு நன்றிப்பா கே ஆர் எஸ்//

    ஆகா...
    எங்கே பெருமாள் கோயில் போனாலும், மோவாயில் தயா சிந்து பார்த்தாலும் என்னை ஞாபகம் வச்சிக்கறீங்க!
    முருகன் கோயில்ல நண்பன் ராகவனையும், உண்மைத் தமிழனையும் ஞாபகம் வச்சிக்குறீங்க!

    உங்களுக்காக துழாய்-ன்னு வரும் போது, உங்களை மறப்போமோ டீச்சர்?

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP