Thursday, December 25, 2008

மார்கழி-11: புற்று அரவு "அல்குல்" என்றால் என்ன?

"எலே பெண்டாட்டி! சிற்றாதே பேசாதே!"-ன்னு மனைவிமார்களை எல்லாம் அதட்டுகிறாளோ கோதை? கணவன்மார்களுக்கு எதிராக வாய் திறக்கக்கூடாது என்று வாய்ப்பூட்டு போடுகிறாளோ ஆண்டாள்? இவளா புதுமைப் பெண்? :) அப்படியே "அல்குல்" என்ற சூடான சொல்லையும் கையாளுகிறாளே ஆண்டாள்! பார்க்கலாமா இன்னிக்கி? :)

புதிர்-11:
"தோத்தாத்ரி"-ன்னு பேரு கேள்விப்பட்டு இருக்கீங்க தானே? அப்படின்னா என்ன பொருள்? அதுக்கு "வானமாமலை" என்பது நேர்த் தமிழ்ப் பெயர்! ஜீவாவின் பதிவில் க்ளூ இருக்கு! இங்கே செல்லவும்!


"ஏல்-ஓர்" எம்பாவாய் விளக்கம் ஞாபகம் இருக்கு தானே? இந்தப் பதிவுக்கும் அது ரொம்ப ரொம்ப பொருந்தும்! :) கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறல் அழியச், சென்று செருச் செய்யும்,
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்று அரவு அல்குல் புனமயிலே, போதராய்!


சுற்றத்து, தோழிமார் எல்லாரும் வந்து, நின்
முற்றம் புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட,
சிற்றாதே, பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏல் ஓர் எம் பாவாய்!கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து = கறவை மாடுகளை எப்படி கறக்கணும்? கன்றோடு கறக்கணும்! கற்றுக்+கறவை = கன்று+கறவை! இலக்கணப் புணர்ச்சி விதி!
சில பேரு "கற்று" என்பதற்குப் பால் கறப்பதைக் கற்றுக் கொண்டு வரணும்-ன்னு பொருள் கொள்வார்கள்! ஹிஹி! பால் கறப்பதற்கு ட்யூஷன் எல்லாமா வைக்க முடியும்? பால் கறப்பது மிகவும் எளிது! ஒரு முறை கண்ணு பார்த்தா அடுத்த முறை கை செய்யும்! சொல்லுங்கப்பு, யாராச்சும் கறந்து இருக்கீயளா? காசை அல்ல! பாலை! :))

மாட்டைத் தடவிக் கொடுத்து, அன்பு காட்டி, கெஞ்சம் வைக்கோல் போட்டா போதும்! கறக்கும் போது கன்று அருகில் இருந்தாக்கா இன்னும் தானா சுரக்கும்! நீங்க காலால் பாத்திரத்தைக் பிடிச்சிக்கிட்டு, கையால் சும்மா இழுத்தாலே போதும்! பால் பெருகும்!
அதுக்காக கடேசி சொட்டு வரை இழுக்கக் கூடாது! அது சுயநலம்! பெரும் பாவம்! மாட்டின் மடியில் கொஞ்சமாச்சும் பால் தங்கணும்! கன்றுக்கு இரவு பசிக்கும் போது, இந்தப் பால் தேவைப்படும்!

கறவை கரவாது கொடுக்கும்! கறந்துக்கிட்டே இருப்போம்! என்பது அறமும் அன்று! ஆண்மையும் அன்று!

இந்த தர்மம் "புனிதப்" பசு மாட்டுக்கு மட்டுமல்ல! எல்லா மாட்டுக்கும் பொருந்தும்! இந்தப் "புனிதம்" என்பதெல்லாம் மனிதன் தன் சொந்த பிசினஸ்-க்காக உருவாக்கிக் கொண்டது தான்! மாடுகளுக்குத் தெரியப் போவதில்லை, தாங்கள் "புனிதப் பசு" என்று!
மனுஷன் தான், தன்னைத் திரும்பிக் கேள்வி கேட்காத எதையும் "புனிதம்" ஆக்கி விடுவான்! அது பசுவாகட்டும்! இல்லை பதி ஆகட்டும்! புனிதமாக்கிப் புனிதமாக்கியே, எட்டக்க கொண்டு போய் நிறுத்தியும் விடுவான்! :)

எல்லாக் கறவை மாடும் புனிதமானது தான்! பசு மட்டுமே புனிதம் அல்ல! கோ-சம்ரட்சணம் என்னும் ஆநிரை காத்தல் மிகவும் உயர்ந்தது! அது பசுக்களுக்கு மட்டும் அல்ல! எல்லா மாடுகளுக்கும் தான்! அதனால் தான் ஆண்டாள் எருமைச் சிறு வீடு-ன்னு எருமையையும் பாடுகிறாள், கூடவே பசுவையும் பாடுகிறாள்!


செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = இப்படிக் கறவைகளைப் போற்றாமல் அதுகளுக்குக் கொடுமைகள் செய்யும் பகைவர்கள்! அவர்கள் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்!

கோ-சம்ரட்சணம் என்பது ஏதோ வடநெறி என்று எண்ணி விட வேண்டாம்! புனிதப் பசு, புனிதமில்லாக் கொசு-ன்னு கேலியும் பேச வேண்டாம்! (குறிப்பாகப் பகுத்தறிவாளர்கள்)
ஆநிரை காத்தல் = பண்டைத் தமிழரின் அறங்களுள் ஒன்று!
போரின் போது, முல்லை நிலத்தின் பசுக்களைத் தான் முதலில் கவர்ந்து, மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்துவார்கள்! இதுக்கு-ன்னு கோனார்களையும் கூடவே போர்க்களத்துக்குக் அழைத்துப் போவார்கள்! போரெல்லாம் அப்புறம் தான் துவங்கும்! இப்படி முல்லைநில மாயோன் நெறியை மிகவும் மதித்து வாழ்ந்த சமுதாயம் பண்டைத் தமிழ்ச் சமுதாயம்!

பசுக்களைக் காக்கும் முல்லை மறவர்களுக்குக் கோவலர் என்று பெயர்! கோவலன் என்ற பெயரும் இங்கிருந்தே தோன்றியது தான்! கோவலன் = கோவிந்தன் = கண்ணன்!
ஆயன், கோனான், கோவலன் என்றே குலப் பெயர்களும் உண்டு! இன்றும் திருக்கோவிலூர் நாச்சியாருக்கு பூங்+"கோவல்" நாச்சியார் என்றே திருப்பெயர்!

சிலப்பதிகாரக் கோவலன் ஆயர் குலம் இல்லை என்றாலும், கோவலன் என்னும் பேர் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்க வேண்டும்! அதை ஒரு வணிகர் தலைவரான மாசாத்துவான் மகனுக்குச் சூட்டி இருப்பார்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்!

இப்படி முல்லையும், மாயோனும், ஆயர்களும், ஆநிரைகளும் தமிழ்ப் பண்பாட்டின் பிரிக்க முடியாத பெருஞ்சொத்து! தமிழ்ச் சொத்தில் அவர்களுக்கும் சம உரிமையுண்டு என்பதை ஏகபோகக் குறிஞ்சிக் காவலர்களும், சில முருகப்பாக்களும் முனைந்து பார்க்க வேணும்! :))

குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே = இப்படிக் குற்றமே இல்லாத நற்குடிக் கோவலர்கள்! அந்த ஆயர்கள் வீட்டுப் பொற்கொடியே! பெண்ணே!


புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் = புற்றில் வாழும் பாம்பு படமெடுத்தாற் போலே, அழகிய வளைவுகள் (Curves) கொண்ட "அல்குலை" உடையவளே! காட்டு மயிலே! வா போகலாம்!

(*** திருப்பாவை-புனிதம்-ஆன்மீகம் என்று சற்றே மெல்லியலாய் நினைப்பவர்கள், அடுத்த சில பத்திகளைத் தவிர்த்து விட்டு, பத்தி Resume-இல் வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...நன்றி!)

ஆண்டாள் இச்சொல்லைக் கையாள்வது என்னவோ நிஜம்! இதற்காக அவளை யாரும் தள்ளியும் வைக்க முடியாது! அவள் பதிவும் பாடலும் இடறவும் இடறாது! :)

இந்த "அல்குல்" என்னும் சொல், மிக மிகச் சூடான குறிச் சொல்! :)
அண்மைக் காலங்களில் பெரும் சச்சரவுக்குள்ளான சொல்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிஞ்சிக்கிட்டு, ஆனா மொத்தமா புரிஞ்சிக்காம, வீண் கும்மி அடித்த ஒரு மாபெரும் சொல்!
கவியரசர் கம்பரை இதை வைத்துக் கொண்டே பேரறிஞர் அண்ணா அவர்கள் கிழிகிழி-ன்னு கிழித்த சொல்! அப்படி என்னாங்க இருக்கு இந்த மந்திரச் சொல்லுல? ஹிஹி! மேலப் படிங்க!

அல்குல் = இடை (அ) பெண்குறி (அ) பக்கம்! மொத்தம் மூனு பொருள்!
இலக்கியத்தில் பெரும்பாலும் இடை என்ற பொருளில் தான் வருது! ஆனால் பெண்குறி என்ற ஒரு பொருளும் இருப்பதால், பல விவாதங்களில் இது பத்திக்கிட்டு எரியுது! :)
அப்படியே பெண்குறியைக் குறித்தாலும் அதனால் பாதகமில்லை! உடற் கூறு வகுப்பில் சொல்லித் தருகிறோமே! அதே போல் தானே இலக்கியம்! அவ்வளவு தானே?

ஆனால் ஆன்மீக இலக்கியத்தில் வருதே? வரட்டுமே! பகுத்தறிவாளர் நீங்க தானே சொல்லுறீங்க வறட்டு ஆன்மீகம் கூடாது-ன்னு? இது வரட்டும் ஆன்மீகமா வரட்டுமே? :)
ஆன்மீகம் என்பதனாலேயே இச்சொல்லைத் தவிர்த்து விடவேண்டுமா என்ன? தேவை இல்லை! ஆன்மீகம் உடற்கூறு பேணுதல் பற்றியும் பேசுகிறதே!

"வாம மேகலை இற, வளர்ந்தது அல்குலே!" என்பது கம்ப ரசம்! ஆனால் சில பேரின் எண்ணத்தில் அது காம ரசம்! சோம ரசம்! பீம ரசம்! :)
இராமன் வில்லை முறித்து விட்டான் என்ற செய்தி கேட்டு, சீதையின் மேகலை இற, அவள் அல்குல் வளர்ந்ததே-ன்னு கம்பர் பாடினாலும் பாடினாரு! பாவம் மனுசன்! அதோ கதியாகி நிக்குறாரு!

மேகலை = இடையைச் சுற்றிச் சற்றுத் தாழ்வாக அணியும் (ஒட்டியாணம் போல) ஒரு நகை! மணிமேகலை என்கிறோம் அல்லவா?
மகிழ்ச்சிக் களிப்பில் சீதையின் ஒட்டியாணம் இடையோடு இறுகியது! நல்லா சாப்பிட்டாக்கா, பெல்ட் இறுகும்ல? இறுகினா என்ன ஆகும்? உங்க பெல்ட்டை இறுக்கி விட்டுக்கிட்டு அடியில் பாருங்க!

தொப்பை இருக்கிறாப் போலத் தெரியும்! இடுப்புல ஒரு கயிறு/பெல்ட் கட்டி இறுக்கினா, இடுப்பின் மேலும், கீழும் சதை விரியும்ல? அதே தான் கம்பர் பாடினாரு! மேகலை இறுக்க, இடை வளர்ந்ததே! ஆனாப் பாவம், சர்ச்சைக்குரிய சொல்லைப் பயன்படுத்திட்டாரு! நம்ம மக்கள் சூடாக்கிட்டாய்ங்க! :)

அல்குல் பெண்களுக்கு மட்டும் தானா என்றால், அதுவும் இல்லை! இரு பாலருக்கும் பொது! இடையும், தொப்புள்/இடைக் கீழுள்ள வளைந்த சதைப் பகுதியும் அல்குல் என்று வழங்கப்படும்! முருகனுக்கும் அல்குல் உண்டு! ஹா ஹா ஹா! யாராச்சும் பழனியாண்டியின் திருமுழுக்கைப் பார்த்து இருக்கீங்களா? அப்படிப் பார்த்து இருந்தா, இப்படிவே பேசவே மாட்டீங்க!

ஒரு பெண்ணின் இடையை விட, அம்புட்டு வளைவு, அம்புட்டு Curves, எங்க முருகனோட இடுப்பு! வள்ளியின் இடை கொடியிடை மட்டுமே! ஆனா முருகனின் இடை, புற்று அரவு இடை! பாம்பு போல் நெளிந்து வளைந்து மேலே செல்லும் உயிர்ப்புள்ள இடை! கோலி,பாலி,ஹாலி எல்லா வுட்டும் பிச்சை வாங்கணும் இப்பேர்ப்பட்ட இடுப்பு அழகுக்கு!
அவன் முதல்-இடை-கடை என்னும் முச்சங்கத்துக்கும் உரியவன் என்றாலும், எனக்குப் பிடித்தது முருகனின் "இடைச்" சங்கம் மட்டுமே! :))

அதுக்காக இலக்கியத்தில் வரும் அல்குல் எல்லாமே இடை-ன்னு சொல்ல வரலை! அந்த Contextக்கு ஏற்றவாறு பொருள் கொள்ள வேணும்! அவ்ளோ தான்! சிம்பிள்! :)
சென்ற பாட்டில் நாற்றத் துழாய்-ன்னு பார்த்தோம் அல்லவா? நாத்தம் புடிச்ச துளசியைச் சூடும் நாராயணன்-ன்னா பொருள் கொண்டோம்? நாற்றம்=மணம் என்று தானே கொண்டோம்! அதே போலத் தான்!

பெரியாழ்வாரும் அல்குல் என்று பாடுகிறார்! குழந்தையைத் தன் அல்குலில் ஏற்றி அமர்த்திக் கொள்கிறாளாம் தாய்! அப்படின்னா அல்குல் இங்கே என்ன பொருள்? இடை தானே!!!
இரு மலை போல் எதிர்ந்த மல்லர்,
இருவர் அங்கம் எரி செய்தாய்! உன்
திரு மலிந்து திகழும் மார்வு
தேக்க வந்து என் "அல்குல்" ஏறி
ஒரு முலை வாய் மடுத்து உண்ணாயே!


ஆண்டாளும் அப்படியே தான் பாடுகிறாள்! புற்றில் வாழும் பாம்பு படமெடுத்தாற் போலே, அழகிய வளைவுகள் (Curves) கொண்ட "அல்குலை" உடையவளே!
வளைந்த "இடுப்பு" கொண்டவளே! காட்டு மயிலே! வா போகலாம்! - இதுக்கு மேல Curves பத்தி கல்லூரி மாணவர்கள் கிட்ட கேட்டுக்கோங்கப்பா! இதுக்கே ஆன்மீக பேரன்பர்கள் சிலர் என் மேல் படு பயங்கரக் கோபமா இருக்காங்க-ன்னு இப்போ தான் சேதி வந்துச்சி :))

அடியேன் நோக்கம்: ஆண்டாள் பயன்படுத்தும் இந்தத் தமிழ்ச் சொல், கோதையின் தெய்வத் தமிழ் - இதனால் எந்த "இடறலும்" இல்லை என்று காட்டவே, இதை விளக்கப் புகுந்தேன்! அடுத்த முறை இந்தப் பாசுரத்தை ஓதும் போது, மன நெருடல் இல்லாமல், வாய்விட்டு, உரக்கவே ஓதலாம்! ஆண்டாள் தேவை இல்லாமல் இப்படி ஒரு சொல்லைப் போட மாட்டாள்!

(திருப்பாவை-புனிதம்-ஆன்மீகம்-பரிசுத்தம்! ஆன்மீகத்தை அன்றாட வாழ்வியலோடு கலக்கக் கூடாது! அது பத்தடி தள்ளியே வைக்கப்படணும்! தேவைப்படும் போது அதை எடுத்து யூஸ் பண்ணிக்கனும் என்பது ஆண்டாளும் அறியாத ஒன்னு! அடியேனும் அறியாத ஒன்னு! தனிமையில் என்னிடம் சினந்தவர்கள் அடியேனை மன்னிக்கவும்! முடிந்தால் இச்சொல்லுக்குக் கோதையையும் மன்னிக்கவும்!)


(*** திருப்பாவை-புனிதம்-ஆன்மீகம் என்று சற்று மெல்லியலாய் நினைத்தவர்கள்...Resume here...இங்கே தொடருங்கள்! புரிதலுக்கு நன்றி)

சுற்றத்து, தோழிமார் எல்லாரும் வந்து = உன் சுற்றப் பெண்டிரும், தோழிகள் என்று இரு சாராரும் வந்து கூவறோமே!
நின் முற்றம் புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட = உன் வீட்டின் முன்வாசலில் நின்று, மேகவண்ணன் கண்ணனைப் பாடுறோமே!
முற்றம் = முன்றில், முன்வாசல்! இந்தக் கண்ணன் என்னும் காதலனைக் காண, பின் வாசல் வழியா பயந்தாங்கொள்ளி போல் ஓடத் தேவையில்லை! தைரியமா முன் வாசல் வழியாகவே வா! போகலாம்!

சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி! = சிற்றாதே (முணுமுணுக்காதே)! பேசாதே (கத்தாதே)! என் செல்லப் பெண்ணே!
சிற்றுதல் = சிணுங்குதல்; முணுமுணுத்தல்; எவ்வளவு அழகான தமிழ்ச் சொல் இல்லீங்களா?
ஹும், ஹும்...நான் இப்போ வெளியில் வர மாட்டேன்...தூக்கம் வருது...நீங்க போயிக்கோங்க....என்னைப் ஃப்ரீயா விடுங்க! ஹூம்...என்று சிணுங்குவது, அப்படியே நம் கண் முன் தெரிகிறது பாருங்கள்!:)

பெண்டாட்டி = பெருந்தனக்காரி! பெருமாட்டி! கொஞ்சம் மிதப்புல இருப்பவ!
மிதப்பு என்றவுடன் பெண்டாட்டி=மனைவி-ன்னே எல்லா ஆண்களும் அர்த்தம் எடுத்துக்காதீங்கப்பா சாமீகளா!:)

நீ எற்றுக்கு உறங்கும் பொருள்? = இப்படி நீ தூங்கிக்கிட்டே இருந்தா என்ன தான் அர்த்தம்? வாடீ வெளியே! :)
ஏல் ஓர் எம் பாவாய்! ஏல் ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

52 comments:

 1. முதல் பத்து நாட்கள் வந்து சிறப்பித்த பலப்பலர், நண்பர்கள் மட்டுமில்லாது புதிய பல அறிமுகங்களும் வந்து களித்து இருந்தார்கள்!

  அனைவருக்கும் நன்றி! அதே உற்சாகத்துடன் மார்கழி ஐ-ஐந்தும்-ஐந்துக்கும் வந்திருந்து, இந்தத் திருப்பாவை யக்ஞத்தை நடத்திக் கொடுக்கணும்-னு கேட்டுக்கறேன்!

  முதல் பத்து நாள் மார்கழிப் பதிவுகளில் பெஸ்ட் பின்னூட்டம் எது?
  Shortlist பண்ணிச் சொன்னா, பரிசு கொடுக்க ஈசியா இருக்கும்! :)
  யாராச்சும் சொல்லுங்கப்பு! ரெடி, ஸ்டார்ட், மீஜிக்!

  ReplyDelete
 2. இன்னைக்கு சீக்கிரமே திருப்பாவை பாடியாச்சு போல.. நீங்காத செல்வன் நிறைந்து வாழுங்கள் ரவி அண்ணா..

  ReplyDelete
 3. // யாராச்சும் கறந்து இருக்கீயளா? காசை அல்ல! பாலை! :))
  //

  நான் காசையும் கறந்ததில்லை.. பாலையும் கறந்ததில்லை.. :)

  ReplyDelete
 4. //முற்றம் = முன்றில், முன்வாசல்! //

  முற்றம் வீட்டின் நடுவில் அல்லவா இருக்கும். வீட்டு வாயில் வழியாக முற்றம் வரை ஆண்டாள் வந்து விடுகிறாளோ ?

  ReplyDelete
 5. //Raghav said...
  முற்றம் வீட்டின் நடுவில் அல்லவா இருக்கும்//

  அதுக்குப் பேரு கூடம்! :)

  //வீட்டு வாயில் வழியாக முற்றம் வரை ஆண்டாள் வந்து விடுகிறாளோ ?//

  முற்றம் "புகுந்து"? :)))

  ReplyDelete
 6. //Raghav said...
  இன்னைக்கு சீக்கிரமே திருப்பாவை பாடியாச்சு போல..//

  அன்னிக்கி நீங்க லேட்டாச்சின்னு திட்டினிங்க-ல்ல! அதான்! :)

  //நீங்காத செல்வன் நிறைந்து வாழுங்கள் ரவி அண்ணா..//

  நன்றி-ப்பா!
  "செல்வன்"? :)

  ReplyDelete
 7. ஜீவாவின் பதிவில் கண்டது இதைத்தான்...

  //நம்மாழ்வாரின் இப்பாசுரம் துதிப்பது நாங்குநேரியில் வீற்றிருக்கும் 'தோத்தாத்ரி நாதன்' எனும் திருநாமம் கொண்ட திருமாலை. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்தலத்திற்கு இதர பெயர்கள் வானமாமலை, திருசிரீவரமங்கை ஆகியவை//

  தலத்தின் பெயர்தான் வானமாமலை என்று சொல்கிறார். தோத்தாத்ரி என்றால் வானமாமலைதானா? ஒரு சின்ன விளக்கம் கொடுங்களேன் :-)

  அப்புறம் சிறந்த பின்னூட்டத்திற்கு பரிசெல்லாம் கொடுக்கிறீர்கள் போல? கலக்குங்க தல :-)

  ReplyDelete
 8. //Sridhar Narayanan said...//

  என்னடா இது, தலைவரைக் காணோமே-ன்னு பார்த்தேன்! தலைவரை "தலைப்பு" இழுத்து வந்திருக்கு போல! :))

  //தோத்தாத்ரி என்றால் வானமாமலைதானா? ஒரு சின்ன விளக்கம் கொடுங்களேன் :-)//

  அலோ! அது புதிர்! நீங்க தான் வெளக்கம்ஸ் கொடுக்கணும்! :)

  //அப்புறம் சிறந்த பின்னூட்டத்திற்கு பரிசெல்லாம் கொடுக்கிறீர்கள் போல? கலக்குங்க தல :-)//

  நான் கொடுக்கலை, ஆண்டாள் கொடுக்குறா அண்ணாச்சி!
  ஆண்டாள் சொல்றாள்! அடியேன் செய்றேன்! :)

  ReplyDelete
 9. @ஸ்ரீதர் அண்ணாச்சி!
  நீங்க இன்னும் திருப்பாவைக் குறுக்கெழுத்து ஆடலையா?

  ReplyDelete
 10. முதல் பத்து நாள் மார்கழிப் பதிவுகளில் பெஸ்ட் பின்னூட்டம் எது?
  Shortlist பண்ணிச் சொன்னா, பரிசு கொடுக்க ஈசியா இருக்கும்! :)
  யாராச்சும் சொல்லுங்கப்பு! ரெடி, ஸ்டார்ட், மீஜிக்!

  8:56 PM, December
  >>>>>>>>>>>>>>>>>>>>>
  எல்லாருதுமே பெஸ்ட்தான் ! பிரிக்கவேணாம் யாரையும்! பரிசும் எல்லார்க்கும் கொடுங்க பதிவரே!

  ReplyDelete
 11. சிற்றாதே சீறாதே! செல்லத்தம்பியே! இரவியே!
  எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் எங்களுக்கு
  உற்ற இடமே மடப்பள்ளியாயிருப்பதால்
  கற்றவித்தையை அங்கே இட்டுவிட்டு இங்கு
  சற்றுநேரத்திலே வந்து பின்னூட்டமிடுவேன் காண்!!:)

  ReplyDelete
 12. ஆரம்பத்திலிருந்து உங்க பதிவுப்பக்கம் வராம 'இடை'யில் வந்தாலும் ரொம்ப குழப்பமான வார்த்தையை தெளிவா தெரிஞ்சிக்க முடிஞ்சுது அண்ணாச்சி...:)

  ReplyDelete
 13. சிற்றாது பேசாது கிடக்கப் போகிறேன். :)

  மௌனமே சிறந்த மொழின்னு சொன்னாங்க. பேசாம இருக்குற பின்னூட்டத்துக்குத் தானே பரிசு தரப் போறீங்க. அதனால தான். :-)

  ReplyDelete
 14. நிறைய‌ விச‌ய‌ங்க‌ள் பின்னூட்ட‌ம் இட‌ நேர‌மில்லை. ஆனால் ப‌டித்து விட்டேன். நேர‌ம் கிடைத்தால் க‌ண்டிப்பாக‌ விரிவான‌ பின்னூட்ட‌ம். ந‌ன்றி

  ReplyDelete
 15. //குமரன் (Kumaran) said...
  சிற்றாது பேசாது கிடக்கப் போகிறேன். :)//

  சிற்றாது = அது உறக்கத்தில் மட்டும் தான்!
  வாயினால் பாடி, நவின்றேலோ-ன்னு எல்லாம் வேற சொல்லியிருக்கா! மறந்திடாதீங்க குமரன்! :)

  //பேசாம இருக்குற பின்னூட்டத்துக்குத் தானே பரிசு தரப் போறீங்க. அதனால தான். :-)//

  பின்னூட்டத்தைத் தேர்ந்தெடுக்கப் போகும் நீதிபதியே பரிசுக்கு ஆசைப்படலாமா குமரன்? :)

  ReplyDelete
 16. ரவி, அந்நாட்களில் எல்லாம் வெளிப்படையாகவே பேசப்ப்பட்டன. கோதை திருவேங்கடவர்க்கு விதிக்க்கப்பட்டவள் என்று ட்தன்னைப் பிரகடனம் படுத்திக் கொண்டவள். அவள் மாஅனிடருக்கு வாழ்க்கைப் படேன் என்றும் சொல்வாள். வரவில்லையானால்.....அறுத்தும் எறிந்து விடுவேன் எப்ன்றும் சொல்லுவாள்.
  அந்த நூற்றாண்டில் இவையெல்லாம் பேசப்பட்டபோது அல்குல் பெரிய விஷயமே இல்லை. அல்லவா. அபிராமி அந்தாதியிலும் இந்த வார்த்தைகள் நிறைய வருமே.

  கோதையை யார் எதற்காக மன்னிக்க வேண்டும்.

  அவள் அந்த நாளைய பெண்ணிய வாதி;)

  ReplyDelete
 17. ரவி, அந்நாட்களில் எல்லாம் வெளிப்படையாகவே பேசப்ப்பட்டன. கோதை திருவேங்கடவர்க்கு விதிக்க்கப்பட்டவள் என்று ட்தன்னைப் பிரகடனம் படுத்திக் கொண்டவள். அவள் மாஅனிடருக்கு வாழ்க்கைப் படேன் என்றும் சொல்வாள். வரவில்லையானால்.....அறுத்தும் எறிந்து விடுவேன் எப்ன்றும் சொல்லுவாள்.
  அந்த நூற்றாண்டில் இவையெல்லாம் பேசப்பட்டபோது அல்குல் பெரிய விஷயமே இல்லை. அல்லவா. அபிராமி அந்தாதியிலும் இந்த வார்த்தைகள் நிறைய வருமே.

  கோதையை யார் எதற்காக மன்னிக்க வேண்டும்.

  அவள் அந்த நாளைய பெண்ணிய வாதி;)

  ReplyDelete
 18. கன்று+கறவை! இலக்கணப் புணர்ச்சி விதி!>>>>

  எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் கூட இதே தானே! என்றைக்கும் என வரவேண்டும் அங்கும் இலக்கணப்புணர்ச்சி சரிதானே

  ReplyDelete
 19. புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் = புற்றில் வாழும் பாம்பு படமெடுத்தாற் போலே, அழகிய வளைவுகள் (Curves) கொண்ட "அல்குலை" உடையவளே! காட்டு மயிலே! வா போகலாம்!
  >>>>>>>>>>>>>>இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் சொல்கிறார்கள்.உங்கள் விவரமும் வித்தியாசமாய் இருக்கிறது.

  ReplyDelete
 20. Raghav said...
  //முற்றம் = முன்றில், முன்வாசல்! //

  முற்றம் வீட்டின் நடுவில் அல்லவா இருக்கும். வீட்டு வாயில் வழியாக முற்றம் வரை ஆண்டாள் வந்து விடுகிறாளோ ?

  9:23 PM, December 25, 2008
  <>>>>>ராகவ் சொல்றமாதிரி முற்றம் என்பது (பேச்சுவழக்கில் முத்தம் அல்லது மித்தம் என ஆகிவிட்டது!:):)) வீட்டு நடுலதான் இருக்கும், திண்ணை ரேழி தாண்டி முற்றம்வரை எல்லாரும் போகலாம் கிராமங்களின் வீடுகளில் அதனால் ஆண்டாள் இப்படி சொல்லீருக்கலாம்

  ReplyDelete
 21. இப்பாடலில் பாம்பும் வருகிறது மயிலும் வருகிறது. இதற்கு ஏதோ உட்கருத்து இருக்கணும் யோசிக்கணும்..மொத்தத்துல உங்க விவரமான பொழிப்புரை மிகவும் சிறப்புவழக்கம்போல! பாராட்டுக்கள்!

  ReplyDelete
 22. //வல்லிசிம்ஹன் said...
  ரவி, அந்நாட்களில் எல்லாம் வெளிப்படையாகவே பேசப்ப்பட்டன//

  ஆமாம் வல்லியம்மா! போலியான முகத்திரைகளை நம் ஆச்சார்யர்கள் போட்டுக்கலை! ஆன்மீகத்தைக் கோயில்ல மட்டுமே ஒதுக்கி வச்சிக்கலை அவங்க!

  //அந்த நூற்றாண்டில் இவையெல்லாம் பேசப்பட்டபோது அல்குல் பெரிய விஷயமே இல்லை. அல்லவா. அபிராமி அந்தாதியிலும் இந்த வார்த்தைகள் நிறைய வருமே//

  ஆமாம் வல்லியம்மா!
  ஆனா அதைப் பாராயணம் பண்ணும் சில நண்பர்கள் இந்த வரிகள் வரும் போது மட்டும் கொஞ்சம் நெளிவதைப் பார்த்து இருக்கேன்! உரக்கச் சொல்லிக்கிட்டே வருவாங்க! இந்த இடத்தில் அப்படியே முழுங்கிருவாங்க! :)

  அப்புறம் அவிங்க கிட்ட, இந்த சஞ்சலமே தேவையில்லை-ன்னு எடுத்து சொன்ன பின், இப்போ பல பேரு, கம்பீரமாகவே பாடுறாங்க! :)

  அதான் பதிவிலும் சொல்லி, திருப்பாவை ஓதும் எல்லாரையும் சென்று அடையட்டுமேன்னு இப்படி வெளிப்படையா சொன்னேன்!

  //கோதையை யார் எதற்காக மன்னிக்க வேண்டும்.
  அவள் அந்த நாளைய பெண்ணிய வாதி;)//

  ஹிஹி!
  அப்போ என்னை மட்டும் மன்னிச்சி விட்டுறலாம்-ன்னு சொல்றீங்களா? :))

  ReplyDelete
 23. இந்தப் பதிவுக்கு ஆன்மீக நல்லன்பர்கள், மெல்லிய இதயம் கொண்டவர்கள், குறிப்பாகப் பெண்கள் பலரும் வருவாங்க-ன்னு தெரியும்!

  அதனால் தான் மிகவும் கவனமாக இதை எடுத்துச் சொன்னேன்! இருந்தாலும் நம்ம "புனித" மக்கள் பலர் எப்படி எடுத்துக்குவாங்களோ-ன்னு கொஞ்சம் அச்சமாத் தான் இருந்திச்சி!

  ஆனால் வல்லியம்மா, ஷைலஜா அக்காவின் பின்னூட்டங்களைப் பார்த்த பின், வந்த அச்சம் போயே போச்சு! இது போன்று அனைத்து ஆன்மீக அன்பர்களுமே நன்முறையில் புரிஞ்சிக்கிட்டா எவ்ளோ நல்லா இருக்கும்!

  வல்லிம்மா, ஷைல்ஸ் அக்கா - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

  ReplyDelete
 24. \\ தாங்கள் "புனிதப் பசு" என்று!
  மனுஷன் தான், தன்னைத் திரும்பிக் கேள்வி கேட்காத எதையும் "புனிதம்" ஆக்கி விடுவான்! அது பசுவாகட்டும்! இல்லை பதி ஆகட்டும்! புனிதமாக்கிப் புனிதமாக்கியே, எட்டக்க கொண்டு போய் நிறுத்தியும் விடுவான்! :)\\

  சும்மா நச்னு சொல்லிட்டிங்க தல ;)))

  ReplyDelete
 25. அன்பு ரவி,

  மெல்லிய இதயம், மங்கைகள் வந்து பதிலிடுவார்களா:)
  நல்ல கதையா இருக்கே.

  உங்களையும் மன்னிக்க நாங்கள் மிகப் பெரியவர்கள் இல்லை.

  இந்த மட்டும் பாவை நோன்புக்கு அழகா விவரம் சொல்லிப்
  புண்ணியம் தேட வழி சொல்கிறீர்கள்.

  கோதை என்றால்,
  அந்த நாள் புரட்சிப்பெண் இல்லையா.

  அவளை மன்னிக்க நமக்கு ஏது தகுதி என்றுதான் பின்னூட்டம் இட்டேன்.

  மற்றபடி தவறேதும் நீங்கள் செய்யவில்லை நீங்கள் மன்னிப்புக் கேட்பதற்கு.
  இப்படிக்குப் பிள்ளையைக் கண்டுகொண்ட அம்மா.
  .

  ReplyDelete
 26. >>kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //Raghav said...
  முற்றம் வீட்டின் நடுவில் அல்லவா இருக்கும்//

  அதுக்குப் பேரு கூடம்! :) <<
  As Shailaja said "muRRam" is in the middle of the house (after tiNNai and rEzhi) before you proceed to the backyard (kollaippuram) and in most houses in the villages it is open to the sky. Some affluent households used to install an iron grid-work to protect against nocturnal robbers jumping in. From the muRRam you climb a little step into "tAzhvAram" which leads to "kUDam", the latter two being closed (by the tiles, i.e., ODU) spaces. I grew up in a typical ThanjAvur village, so I know first hand.

  As for the use of "alkul" in religious literature (tiruppAvai, NDP, abhirAmi andAdi,etc.,) the poets in those days thought only of the "waist area" when they said alkul, especially to denote the narrowing of the hood at the bottom (like the thin waist).. abhirAmi bhaTTar used that word to describe goddess abhirAmi in song #42.. Could that word have been co-opted for the alternate anatomical area in later times? If one has a mature mind one doesn't have to squirm (neLidal/kUsudal) when uttering that word.

  ReplyDelete
 27. //Raghav said...
  //முற்றம் = முன்றில், முன்வாசல்! //
  முற்றம் வீட்டின் நடுவில் அல்லவா இருக்கும். வீட்டு வாயில் வழியாக முற்றம் வரை ஆண்டாள் வந்து விடுகிறாளோ ?//

  ராகவ்!
  வீட்டின் அமைப்பு:
  நுழைவாசல்-ரேழி-முன்வாசல்-முன்றில்-(கூடம் முதலான பல அறைகள்)-பின் வாசல்-கொல்லை.

  இதுல முன்றில் என்பது பெரும்பாலும் open space! no ceiling! பொங்கல் வைப்பாங்க! பந்தல் போடுவாங்க! இன்னும் பல!
  முன்றிலில் இருந்து ஒவ்வொரு அறையாகப் போக வேண்டியது தான்!

  ReplyDelete
 28. // Sridhar Narayanan said...
  தலத்தின் பெயர்தான் வானமாமலை என்று சொல்கிறார். தோத்தாத்ரி என்றால் வானமாமலைதானா? ஒரு சின்ன விளக்கம் கொடுங்களேன் :-)//

  புதிருக்கான விடை:
  தோதாத்ரி = தோத+அத்ரி
  அத்ரி=மலை
  தோத=தூத=விலக்கும்
  கர்மங்களை விலக்கும் மலை=தூத+அத்ரி=தோதாத்ரி!


  ஆழ்வாரும் கர்மம் விலகியே, நோற்ற நோன்பு இலேன் என்று பாடுகிறார்! வானமாமலை, ஸ்ரீவரமங்கை, நாங்குனேரி (நான்கு ஏரி) என்று வேறு பெயர்களும் உண்டு! இங்கிருக்கும் எண்ணெய்க் கிணற்றில் எண்ணெய் சேந்தித் தான் திருமஞ்சனம் செய்விப்பார்கள்!

  மணவாள மாமுனிகளின் வழி வந்த ஜீயர்கள் வானமாமலை ஜீயர்கள்! அவர்களிடம் இன்றும் மாமுனிகளின் முத்திரை மோதிரமும் உள்ளது!

  பெருமாள்-தாயார்களுக்கு கவரி வீசுவது போல் ரம்பை/திலோத்தமை கருவறையில் இருப்பார்கள்! நின்றால் குடையாம் ஆதிசேடனும் குடையாகவே இங்கு இருப்பான்!

  நம்மாழ்வாரின் சரணாகதிப் பாசுரம் இங்கு தொடங்கி, பரிபூர்ண சரணாகதி திருவேங்கடம் எம்பெருமான் காலடியில் நடக்கிறது!
  இங்கு துவங்கியதால், இங்கு மட்டும் வித்தியாசமாக, சடாரியில் நம்மாழ்வார் உருவம் பொறிக்கப்பட்டு இருக்கும்!

  ReplyDelete
 29. //ஷைலஜா said...
  எல்லாருதுமே பெஸ்ட்தான் ! பிரிக்கவேணாம் யாரையும்! பரிசும் எல்லார்க்கும் கொடுங்க பதிவரே!//

  எல்லாருக்கும் பரிசு கொடுக்கணும்னா அது ஆன்லைன் பரிசாகத் தான் இருக்கும்! அப்படியே செஞ்சிடுவோம்-க்கா!

  ReplyDelete
 30. //ஷைலஜா said...
  சிற்றாதே சீறாதே! செல்லத்தம்பியே! இரவியே!
  எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் எங்களுக்கு
  உற்ற இடமே மடப்பள்ளியாயிருப்பதால்//

  ஹா ஹா ஹா!
  மடப்பள்ளி நாச்சியார் தெரியும்! அவங்க தான் கவிதாயினி ஷைலஜா-ன்னு இப்ப தான் தெரிஞ்சிக்கிட்டோம்! :)

  ReplyDelete
 31. //நிஜமா நல்லவன் said...
  ஆரம்பத்திலிருந்து உங்க பதிவுப்பக்கம் வராம 'இடை'யில் வந்தாலும்//

  நிநி...
  நீங்களும் இடைக் கட்சி தானா? :))

  //ரொம்ப குழப்பமான வார்த்தையை தெளிவா தெரிஞ்சிக்க முடிஞ்சுது அண்ணாச்சி...:)//

  அதான் வேணும்ங்க! அதுக்குத் தான் அந்த விளக்கத்தை இட்டேன்! யாருக்கும் இனி இடறக் கூடாது, இந்தப் பாவையை ஓதும் போது!

  ReplyDelete
 32. //மின்னல் said...
  நிறைய‌ விச‌ய‌ங்க‌ள் பின்னூட்ட‌ம் இட‌ நேர‌மில்லை. ஆனால் ப‌டித்து விட்டேன். நேர‌ம் கிடைத்தால் க‌ண்டிப்பாக‌ விரிவான‌ பின்னூட்ட‌ம்//

  :)
  ந‌ன்றி மின்னல்!
  பாவைக்கு வெறும் வரி விளக்கமாச் சொல்ல மனம் ஒப்பலை!
  மற்றவற்றோடு தொடர்பு காட்டி விளக்கத் தான் நல்லா இருக்கு!

  இதில் அன்பர்கள் கருத்து என்ன?
  மேலோட்டமான வரி விளக்கமே போதும்-ன்னா அதையே தருகிறேன்!

  ReplyDelete
 33. //ஷைலஜா said...
  கன்று+கறவை! இலக்கணப் புணர்ச்சி விதி!>>>>
  எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் கூட இதே தானே!//

  ஆமாம்-க்கா!
  கனைத்து இளம் கற்று எருமை-க்கும் இதே தான்!
  "ன"-கர ஒற்று, "ற" ஒற்றாய் மாறும்!

  ReplyDelete
 34. //ஷைலஜா said...
  புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்!
  >>>>>>>>>>>>>>இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் சொல்கிறார்கள்.உங்கள் விவரமும் வித்தியாசமாய் இருக்கிறது//

  :)
  என் விளக்கம் தமிழ்ப் பாட்டின் நேரடி விளக்கம்-க்கா! உள்ளுறை எல்லாம் நான் இங்கு சொல்லவில்லை!

  ReplyDelete
 35. //ஷைலஜா said...
  இப்பாடலில் பாம்பும் வருகிறது மயிலும் வருகிறது. இதற்கு ஏதோ உட்கருத்து இருக்கணும் யோசிக்கணும்..//

  யோசிங்க-க்கா யோசிங்க!
  பாம்பும் மயிலும் எங்க முருகன் கிட்ட தான் இருக்கு! :)

  //மொத்தத்துல உங்க விவரமான பொழிப்புரை மிகவும் சிறப்புவழக்கம்போல! பாராட்டுக்கள்!//

  நன்றிக்கோவ்! :)

  ReplyDelete
 36. //கோபிநாத் said...
  \\ தாங்கள் "புனிதப் பசு" என்று!
  மனுஷன் தான், தன்னைத் திரும்பிக் கேள்வி கேட்காத எதையும் "புனிதம்" ஆக்கி விடுவான்! அது பசுவாகட்டும்! இல்லை பதி ஆகட்டும்! புனிதமாக்கிப் புனிதமாக்கியே, எட்டக்க கொண்டு போய் நிறுத்தியும் விடுவான்! :)\\

  சும்மா நச்னு சொல்லிட்டிங்க தல ;)))//

  ஹிஹி! ஆமாம் மாப்பி!
  நச்சென்று நீயும் நவின்றேலோ ரெம்பாவாய்! :))

  ReplyDelete
 37. //வல்லிசிம்ஹன் said...
  இந்த மட்டும் பாவை நோன்புக்கு அழகா விவரம் சொல்லிப்
  புண்ணியம் தேட வழி சொல்கிறீர்கள்//

  அழகா விவரமா? வல்லிம்மா, தினம் ஒரு பதிவா, மூச்சு முட்டுதும்மா! :))

  //கோதை என்றால்,
  அந்த நாள் புரட்சிப்பெண் இல்லையா//

  ஆமாம் வல்லிம்மா! கோதை பாரதி கண்ட கண்ணம்மா! பாரதி கண்ட புதுமைப் பெண்!

  //மற்றபடி தவறேதும் நீங்கள் செய்யவில்லை நீங்கள் மன்னிப்புக் கேட்பதற்கு//

  :)
  சரிம்மா//

  //இப்படிக்குப் பிள்ளையைக் கண்டுகொண்ட அம்மா//

  மிகவும் நன்றிம்மா!
  தங்கள் ஒரு பின்னூட்டம், பதிவின் நோக்கத்தைத் தூக்கி நிலை நிறுத்திவிட்டது!

  ReplyDelete
 38. இரவி,

  இந்த எண்ணெய்க்கிணற்றைப் பற்றி எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. இந்தக் கிணற்றில் இருந்து எண்ணெய் எடுத்துத் தான் தினசரி திருமஞ்சனம் நடக்கிறதா? தினசரி திருமஞ்சனம் ஆன நல்லெண்ணெயையும் சந்தன எண்ணெயையும் (சந்தன எண்ணெய் என்றால் எது?) இந்தக் கிணற்றில் ஊற்றுகிறார்களா? சௌம்யா பாடிய இந்தத் திருத்தல பாசுரங்கள் உள்ள இசைவட்டில் முன்னுரையாகப் பேசிய ஜீயர் சுவாமிகள் திருமஞ்சனம் ஆகும் எண்ணெயை இந்தக் கிணற்றில் ஊற்றுவதாகச் சொல்வார். அதனால் தான் கேட்கிறேன்.

  ReplyDelete
 39. /வானமாமலை, ஸ்ரீவரமங்கை, நாங்குனேரி (நான்கு ஏரி) என்று வேறு பெயர்களும் உண்டு! //
  ஸ்ரீவரமங்கை - ஸ்ரீ - திருமகள் இங்கு வளர்ந்து திருமாலை மணந்துகொண்டதால்.
  வானமாமலை - வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலால்
  .
  நாங்குனேரி - திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால்.
  நாகணைச்சேரி - ஆதிசேஷன் - நாகம், அணையாகும் பேறு பெற்ற சேரி என்பதால்.

  எனப் பெயர்க்காரணங்கள் படித்தேன். அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 40. //குமரன் (Kumaran) said...
  இரவி,
  இந்த எண்ணெய்க்கிணற்றைப் பற்றி எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது//

  அடியேன் அறிந்த வரையிலும், நேரில் பார்த்தவரையிலும் சொல்கிறேன் குமரன்!

  வானமாமலை கலியன் ஜீயர் சுவாமிகள் சொல்வது சரியே!

  இந்த தலத்து எம்பெருமானுக்கு மட்டும் நித்தியப்படி தைலக் காப்புத் திருமஞ்சனம் உண்டு! ஆறு படி எண்ணெயில் நடக்கும்! அதை இந்தக் கிணற்றில் ஊற்றி விடுவார்கள்!

  பக்தர்கள் எந்த அளவுக்கு திருமஞ்சன எண்ணெய் தருகிறார்களோ, அதே அளவுக்கு கிணற்றில் இருந்து சேந்தி எடுத்துத் தருவார்கள்! சேந்தித் தந்த பின்னரே திருமஞ்சனம் செய்விப்பார்கள்! அவர்கள் தந்த எண்ணெய் திருமஞ்சனம் ஆகி, அடுத்த நாள் பக்தர்களுக்குச் சேந்தித் தரப்படும்! - இதுவே அடியேன் சென்ற போது கண்டு கேட்டது!

  ReplyDelete
 41. //சந்தன எண்ணெய் என்றால் எது?//

  வீரப்பனைக் கூடக் கேக்க முடியாதே! :))

  சந்தன எண்ணெய் = சந்தனத் தைலம்! தைலக் காப்பு அல்லவா? கொஞ்சம் போல் மணத்துக்குச் சேர்ப்பார்கள்! மற்றபடி நல்லெண்ணெய் தான்!

  ReplyDelete
 42. //ஜீவா (Jeeva Venkataraman) said...
  /வானமாமலை, ஸ்ரீவரமங்கை, நாங்குனேரி (நான்கு ஏரி) என்று வேறு பெயர்களும் உண்டு! //

  நன்றி ஜீவா பெயர்களைப் பகிர்ந்தமைக்கு!

  வானமாமலை = வானவன் என்னும் பாண்டியன் எடுப்பித்த மலைக்கோயில் என்பதாலும் என்றும் சொல்கிறார்கள்!

  வானவன் மாதேவி-ன்னு வருமே பொன்னியின் செல்வனில்! ராஜராஜ சோழனின் அம்மா!
  வானவன் = பாண்டியனா???

  ReplyDelete
 43. வாங்க சேதுராமன் சார்!
  தஞ்சை மேல்கட்டு வீட்டை அப்படியே கண்ணுக்குக் கொண்டாந்துட்டீங்க! :)

  //As for the use of "alkul" in religious literature (tiruppAvai, NDP, abhirAmi andAdi,etc.,) the poets in those days thought only of the "waist area" when they said alkul//

  பெரும்பாலும் ஆமாம்!
  ஆனால் "இடை" அல்லாத மற்ற பொருட்களிலும் சில உலாக்களை உல்லாசப் புலவர்கள் பாடி இருக்காங்க போல! :)

  //If one has a mature mind one doesn't have to squirm (neLidal/kUsudal) when uttering that word//

  சரியாச் சொன்னீங்க! தெய்வத் தென்தமிழ் பாடும் போது அந்த ஒவ்வாமை வேண்டாம் என்று தான் விளக்கப் போந்தேன்!

  ReplyDelete
 44. //வானவன்//
  பொதுவா இலக்கியங்கள் வானவன் - என்றால் அமரன், தேவன் என்றெ குறிக்கிறது.

  வானமாதேவி - மலையமான் மகள் அல்லவா! - அதிலும் மலை இருக்கிறது (அத்ரி)!

  ReplyDelete
 45. வரி விளக்கமாய் இல்லாமல் தொடர்பு காட்டி இடுவதே நன்றாக இருக்கிறது கண்ணா.

  ReplyDelete
 46. //ஜீவா (Jeeva Venkataraman) said...
  பொதுவா இலக்கியங்கள் வானவன் - என்றால் அமரன், தேவன் என்றெ குறிக்கிறது//

  ஆமாம் ஜீவா!
  நீதி "வானவன்", நீள் மதில் அரங்கத்தமான்! :)

  //வானமாதேவி - மலையமான் மகள் அல்லவா!//
  ஆமா, திருக்கோவிலூர் மலையமான்!

  //அதிலும் மலை இருக்கிறது (அத்ரி)!//
  சூப்பர்! :)

  ReplyDelete
 47. //கவிநயா said...
  வரி விளக்கமாய் இல்லாமல் தொடர்பு காட்டி இடுவதே நன்றாக இருக்கிறது கண்ணா//

  சரி-க்கா!
  அப்படியே செய்கிறேன்! (கொஞ்சம் மூச்சு முட்டினாலும் பரவாயில்லை, ஜோடா குடிக்க அங்க வந்துடறேன்! :)

  ReplyDelete
 48. romba azhagaana vilakangal. neraiya kathikiteen. indha "alkul" vishayathuku ivlo matter irukunnu ippo dhan puriyudhu..ungal pani thodarattum..

  oru sandhegam? "sitraadhe pesaadhe..etrukku urangum porulerlor embaavaay" - idhula "sinungaamal pessamal en urangukiraay"nnu dhan naan porul konden...(adhatalaaga porul kolla villai). ungal vilakkam apdi illa.. unga karuthu enna.. neenga en apdi eduthukiteenga??
  naalai vandhu paakren..

  ReplyDelete
 49. itha padingka,
  "http://www.tamilauthors.com/01/90.html"

  ore kulapamalla irukku..

  ReplyDelete
 50. Senthu:
  There is no confusion. As you know in any language every word has different meanings. Each meaning has to be reckoned with the context. When poets describe the "algul" of women it does not mean they were describing the invisible/inner anatomy. It was mainly about the visible/external because it can be seen by anybody. The poet did not intend for the reader to go and examine the invisible anatomy. Also when poets/composers describe the algul of goddesses you know they mean the external beauty. Per this article it is one interpretation--the eyebrows. The other interpretation is the waist. Usually poets describe the waist of young women as "minnaaniya nuNNiDai" (slender as a lightning). The waist resembling the spread hood of a cobra can also a valid description. Only the curves are described in that case. Both explanations are valid.

  As for the modern day meaning (one of the meanings) of the genital area, it probably has been co-opted by a few imagninative lexicographers. If so let it be one of the meanings. But to use that meaning for all the occurrences of that word in Thamizh literature is foolhardy at best.

  ReplyDelete
 51. // Senthu VJ said...
  itha padingka,
  "http://www.tamilauthors.com/01/90.html"
  ore kulapamalla irukku..//

  செந்து
  படித்தேன்! குழப்பமாகவே இல்லையே! :)

  அந்தக் கட்டுரை ஆசிரியர் பொன். சரவணன், பல மேற்கோள்களைச் சும்மானா பயன்படுத்துகிறாரே அன்றி, அந்த மேற்கோள்கள், அல்குல்=கண் புருவம் தான் என்பதைக் காட்டவே இல்லை!

  எல்லாமே பொதுமையாகத் தான் காட்டுகிறார்! = அகலமானது, மேல் நோக்கிய வளைவுகள் உடையது, தேமல்/புள்ளி உடையது என்பதெல்லாம் பொதுமை தானே அன்றி, புருவம் குறித்ததாக ஆகாது!

  பொன்னாலான காசு மாலைகள், பூந்தழை மாலைகள் உடையது அல்குல்-ன்னு அவரே மேற்கோள் காட்டுகிறார்!
  கண் புருவத்தில் எப்படி காசு மாலை, பூ மாலை எல்லாம் கட்டுவாங்க? :)

  எனவே,
  அல்குல் = இடை (அ) பெண்குறி (அ) பக்கம்! மொத்தம் மூனு பொருள்!

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP