மார்கழி-09: விஞ்ஞானி Dr.ஆண்டாள்! 1st Accept, Then Analyze!
ஏல்-ஓர்! = ஏற்றுக் கொள்! பிறகு ஆய்வு செய்! இது என்ன காமெடியா இருக்கே? ஆய்வு செய்த பின் தானே ஏற்றுக் கொள்ள முடியும்? அதானே சரியான அறிவியல் பார்வை! Dr. கோதை என்னும் விஞ்ஞானி எதுக்கு இப்படித் தலை கீழே மாத்திச் சொல்லுறா? :)
புதிர்-09:
அதான் Thirupavai Crossword - குறுக்கெழுத்துப் புதிர் போட்டாச்சே! அதை அடிச்சி ஆடுங்க மக்கா! பாவை நோன்பு பொண்ணுங்களுக்கு மட்டுமில்லை! ஆடவரெல்லாம் ஆட வரலாம்!:) BTW, பழைய புதிர் எல்லாத்துக்கும் விடைகள் அறி-விச்சிட்டேனா? :)
இன்னிக்கு பதிவின் இறுதியில் "ஏல்-ஓர்" எம்பாவாய் என்பது சரி தானா? 1st Accept, Then Analyze-ஆ என்று பார்க்கப் போகிறோம்! :)
கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)
தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரியத்,
தூபம் கமழத், துயிலணை மேல் கண் வளரும்,
மாமான் மகளே! மணிக் கதவம் தாழ் திறவாய்!
மாமீர், அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏல்-ஓர் எம் பாவாய்!
தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய = தூய்மையான மணி மாடம் உள்ள வீடு! அதில் வரிசையா விளக்குகள் கண் சிமிட்டுகின்றன!
மாடம், மாடம்-ன்னு பேசுறோம்! மாட மாளிகை-ன்னு அடிக்கடி சொல்லுவோம்! ஆனா மாடம்-ன்னா என்னாங்க? பார்த்து இருக்கீங்களா?
கிராமத்து வீடுகளிலும், ரேழிகளிலும், மாடம் வச்சித் தான் சுவர் கட்டியிருப்பாங்க! சுவரைக் குடைந்தாற் போல இருக்கும்! விதம் விதமான ஸ்டைல்! விளக்கு வைப்பதற்கென்றே அந்தக் காலத்தில் கட்டப்பட்டவை மாடங்கள்! பொழுது ஆச்சுன்னா இல்லப் பெண்கள் ஒவ்வொரு மாடமா விளக்கு வைப்பாங்க! இப்பல்லாம் கிராமத்து மாடங்களில் கூட ஸ்டிக்கர் பொட்டு, லிப்ஸ்டிக் தான்! :) கார்த்திகைக்கு மட்டும் மாட விளக்குகளைப் பார்க்கலாம்!
இது இல்லாம சாமி மாடம், விபூதி மாடம், கோவிந்த மாடம், துளசி மாடம், புறா மாடம்-ன்னு நிறைய இருக்கு! வீட்டுல மாடம், ஆபீஸ்ல மேடம்! என்னைய பொறுத்த வரை ரெண்டுமே பிரகாசமாத் தான் இருக்கு :)
தூபம் கமழத் = அகிற் புகை, சாம்பிராணிப் புகை, (கொசுவர்த்திப் புகை?) என்று தூபம் வீடு ஃபுல்லா பரவிக் கிடக்க
துயிலணை மேல் கண் வளரும் மாமான் மகளே = நல்ல திம்மென்ற கட்டில் மேல் தூங்குறா நம்ம மாமன் மகள்! ஆண்டாள் தோழியின் அப்பாவை மாமா-ன்னு கூப்பிடுவா போல! இப்பல்லாம் நண்பர்களின் அம்மா/அப்பா என்றால், by default, ஆன்ட்டி/அங்கிள் ஆயிடறாங்க!
மணிக் கதவம் தாழ் திறவாய் = மணிகள் தொங்கும் கதவின் தாழ் திறவாய்! இப்பவும் சில பேரு வீட்டுக் கதவில் மணி உண்டு! குறைந்த பட்சம் பூசை அறைக் கதவிலாவது மணிகள் கட்டித் தொங்க விடுகிறார்கள்! பூங்கதவே தாழ் திறவாய்-ன்னு சினிமாப் பாட்டும் நினைவுக்கு வருதுல்ல?
மாமீர், அவளை எழுப்பீரோ? = Auntie, Please wake up that lazy girl of yours! :)
உம் மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? = உங்க பொண்ணு என்ன ஊமையா? இல்லை செவிடா? எத்தனை முறை எழுப்ப? மகராணிக்கு அப்படி என்ன தூக்கம்?
இதே, தன் பொண்ணை ஊமை/செவிடு-ன்னு வேற யாராச்சும் சொல்லி இருந்தா, "எவ அவ?"-ன்னு கேட்டிருப்பாங்க மாமி! ஆனா கோதை-ங்கிறதால சும்மா விடறாங்க! :)
அனந்தலோ? = சோர்வோ?
இதைப் படிப்பால் வரும் செருக்குச் சோர்வோ? என்றும் பொருள் கொள்வார்கள் பெரியோர்கள்! இரவெல்லாம் கண் விழித்துப் படிக்கிறோம்-ல? ஏதோ பல மந்திரங்களையும், புராணங்களையும், ஜபதபங்களையும் படித்து விட்டதாலேயே இறைவனை அளந்து விடலாம் என்ற ஒரு தீங்கில்லாச் செருக்கு! ஞானச் செருக்கு!
உலகு அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்! இதயத்தில் கொள்ளத் தான் முடியும்!
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ? = யாராச்சும் மந்திரிச்சி கிந்திரிச்சி விட்டுட்டாங்களோ இந்தப் பொண்ணை? இப்படிப் பேய்த் தூக்கம் தூங்குறாளே! ஏமம்=இன்பம்! ஏமப் புணையைச் சுடும் என்பது குறள்!
ஏமம்=யாமம் (இரவு) என்ற பொருளும் உண்டு!
இவள் தூக்கம் இன்ப மயமான ராத்தூக்கம்! கன்னிப் பெண்கள் கனவுகளோடு நல்லாவே தூங்குவாங்க! கல்யாணம் ஆச்சோ தூக்கம் போச்சோ! குழந்தை வாய்ச்சோ! தூக்கம் போச்சே போச்சோ! :))
* மாமாயன் = மா+மாயன் = மாமகளுடன் கூடிய மாயோன் என்னும் தமிழ்க் கடவுள்!
* மாதவன் = மா+தவன் = அன்னை-பிதா!
நம் தவத்தின் பயன் என்ன? = வீடு-பங்களா-கார்-அமேரிக்கா-பேரிக்கா?:) அரசியலில் சர்வ சக்தி? மேலும், கீழும், உள்ளும், வெளியும், அங்கும், இங்கும் மரணமில்லை - இது மாதிரி வரங்கள் தான் தவத்தின் பயனா? இல்லை! இல்லவே இல்லை!
தவத்தின் பயனே அவன் தான்! அதனால் அவன் தவன்! அவளோடு கூடி, மா+தவன்!
* வைகுந்தன் = நம்முடைய வைகுந்த வீட்டுக்குத் தலைவன்!
என்றென்று "நாமம் பலவும்" நவின்று ஏல்-ஓர் எம் பாவாய்! = இப்படி பெருமாளை விடத் தித்திப்பான அவன் நாமங்கள் பலவற்றையும் சொல்லுவோம்! சொல்லுவோம்!
நல்வகையாலே நமோ நாராயணா என்று "நாமம் பல" பரவி
பல்வகையாலே பவித்திரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே!
அப்பாவும் "நாமம் பல பரவி"-ன்னு நாம சங்கீர்த்தனம் பாடுறாரு; பொண்ணும் "நாமம் பலவும் நவின்று"-ன்னு நாம சங்கீர்த்தனம் செய்கின்றாள்! நல்ல அப்பா! நல்ல பொண்ணு! :)
அது என்னாங்க ஏல்-ஓர் எம் பாவாய்-ன்னு வித்தியாசமா பிரிச்சிப் பிரிச்சி எழுதறீங்க? அது ரெம்பாவாய் கிடையாதா?
ஹிஹி! கிடையாது! மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் அப்படின்னா = மகிழ்ந்து ஏல்+ஓர், எம் பாவாய்! - அப்படின்னு படிக்கணும்! சரி, அது என்ன ஏல்+ஓர்?
ஓர்தல் = ஆராய்ந்து அறிதல்! தெரிந்து தெளிதல்! ஓர்மையுண்டோ?-ன்னு மலையாளத்தில் கேப்பாங்க!
ஏல் = ஏற்றுக் கொள்ளல்! மனமறிய அவனை ஏற்றுக் கொள்ளல்!
எம் பாவாய் = என் பெண்ணே, நண்பியே...அவனை ஏற்றுக் கொள், தெரிந்து தெளி!
அட, என்னாங்க இது?
* ஏல்-ஓர் = ஏற்றுக் கொண்டு, அப்பறமாவா ஆராய்ச்சி பண்ணுவாங்க?
* ஓர்-ஏல் ன்னு தானே இருக்கணும்? ஆராய்ச்சி பண்ணிட்டு, அப்பறம் தானே ஏற்க முடியும்?
இது என்ன வித்தியாசமா ஏல்-ஓர்? இந்த கோதை மாதிரி மதுரைப் பொண்ணுங்களே வித்தியாசமானவங்க தான் அப்பு! பாக்கலாமா விளக்கத்தை? :)
மனிதனுக்கு கடவுள்-ன்னு ஒருத்தர் இருக்காரு-ன்னு அடி மனசுல நல்லாவே தெரியும்! எல்லாமே தன்னால முடியாது! தன் புத்தி/செயல் முடிஞ்சி போன எல்லையில், இன்னொரு பெரிய செயல் இருக்கு-ன்னும் நல்லாவே தெரியும்! ஆனா, ஆனா, ஆனா...
அதை ஒப்புக் கொள்ள மட்டும் மனசே வராது! :)
அது கடவுள் செயல் அல்ல! அதெல்லாம் எனர்ஜி, மேட்டர், ஆற்றல், அணுக்கள்-ன்னு அடுக்கிக்கிட்டே போவான்! நல்லது தான்! அறிவியல் பூர்வமா சிந்திக்கிறது மிகவும் நல்லது தான்! அப்போ தான் மனித குலம் வளரும்!
ஆனா அணுவுக்குள் ஆற்றல் எப்படிப் போச்சி-ன்னு கேட்டா, இயற்கை-ன்னு சொல்லீருவான்! இயற்கை-ன்னா என்ன-ன்னு கேட்டா, இயல்+கை, அது தானா இருக்கு-ன்னு சொல்லீருவான்! :)
சரி, எல்லாமே அணுக்கள் தான்! அணுவுக்குள்ளும் என்ன இருக்கு-ன்னு கேட்டா,
* போன நூற்றாண்டில் Proton, Neutron, Electron-ன்னு சொன்னான்!
* இந்த நூற்றாண்டில், அதுக்குள்ளேயும், Fermion, Boson, Lepton-ன்னு Sub Atomic Particles இருக்கு-ன்னு சொல்லுறான்!
* அடுத்த நூற்றாண்டில் என்ன சொல்லப் போறான்னு தெரியாது!
கேட்டால் Infinite Divisibility-ன்னு ஜூப்பராப் பேசுவான்! அவன் பேசுறது பொய் இல்ல! அதுவும் உண்மை தான்! ஆனா, ஆனா, ஆனா....
இந்த Infinite Divisibility-க்குள்ள இருக்கும் பரம ஆற்றல், "பரம்"பொருளின் ஆற்றல்-ன்னு சொல்லிப் பாருங்க! அம்புடு தான்! அழிஞ்சீங்க!
நீங்க ஒரு நம்பிக்கையாளர் ஆயிருவீங்க! அவிங்க அறிவியலாளர் ஆயிருவாங்க! ஒப்புக் கொள்ள மட்டும் மனசே வராது! :)
அணுவுக்குள் அணுவாய், அப்பாலுக்கு அப்பாலாய், கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி-என்றாள் ஒளவை! அவள் வழி வந்த தமிழ் மறத்தி/அறத்தி அல்லவா எங்கள் கோதை! அதான் ஏல்-ஓர் என்று மாற்றிப் பாடுகிறாள்! முதலில் ஏல்! அப்புறம் ஓர்! ஏன்?
ஆராய்ச்சி துவங்கும் முன்னரே நம் மனசில் சொல்லிக் கொள்ளணும்! என்னான்னு?
நான் ஒன்னை இப்படி இருக்குமோ?-ன்னு இது வரை நம்பிக்கிட்டு இருக்கேன்!
இப்போ ஆராய்ச்சி ஸ்டார்ட்!
ஆனால் ஆராய்ச்சியின் முடிவில் வேற ரிசல்ட் வந்துச்சின்னா....?
அப்போ அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் நேர்மையும் வேணும்-ன்னு சொல்லிக்கிட்டு ஆராய்ச்சியை ஆரம்பிக்கணும்! - பக்குவத்தை ஏல்! ஆராய்ச்சியை ஓர்!
* உலகம் தட்டை என்பது ஒரு காலத்து நம்பிக்கை! ஆனால் ஆராய்ச்சிக்குப் பின் உலகம் உருண்டை! தட்டை என்று சொன்ன விஞ்ஞானி, பிற்பாடு அதையே பிடிச்சித் தொங்கிக்கிட்டு இருப்பாரா? ஆய்வுக்குப் பின் முடிவை மாற்றிக் கொள்வார் அல்லவா!
* ஒளி நேர்க்கோட்டில் தான் பயணிக்கிறது-ன்னு நியூட்டன் நம்பிக்கிட்டு இருந்தாரு! (Light travels in straight line)! ஆனால் ஒளி ஓரங்களில் வளைவதைப் பார்த்த பின்னர் (Refraction/Diffraction), அவருக்கே சந்தேகம்! ஆய்வின் முடிவில், ஒளி அலை வடிவானது (Light is a wave) என்று தன்னோட தீர்மான விதியை தானே மாற்றிக் கொண்டார் அல்லவா!
* இந்திய-பாகிஸ்தான் பிரிவினை கூடவே கூடாது என்பது காந்தியடிகளின் கொள்கை! ஆனால் ஒரு கட்டத்தில் அது தவிர்க்க முடியாது என்ற நிலை வரும் போது, ஏல்-ஓர் என்று ஏற்றுக் கொண்டார் அல்லவா! "போங்கடா, நான் சொன்னபடி நீங்க யாரும் செய்யலை, ஸோ நான் ஆட்டைக்கு வரல"-ன்னு சொன்னாரா? பிரிவினைக்குப் பின் ஏற்பட்ட கலவரத்தை முடிக்க அவரும் துணை நின்றார் அல்லவா?
* சேயோன் முருகன் தமிழ்க் கடவுள்! மாயோன் மாலவன்-அவனும் தமிழ்க் கடவுளே என்கிற ஆய்வுக்கும் இதை மனசுக்கு சொல்லிக்கிட்டே ஆரம்பிக்கலாம்! ஆய்வின் முடிவில் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை ஏல்! ஆய்வினை ஓர்! :)
அதான் ஏல்-ஓர் எம் பாவாய்!
* முதலில் முடிவின் நேர்மையை = ஏல்!
* அப்புறம் செய்யும் ஆராய்ச்சி = ஓர்!!
மற்றை நம் காமங்கள் மாற்று! ஏல்-ஓர் எம்பாவாய்! தீயினில் தூசாகும் செப்பு! ஏல்-ஓர் எம்பாவாய்!
கோதையின் முப்பது கவிதைகள்-ஒவ்வொன்றின் கடைசி வரிகளை மட்டும் ஒரு லிஸ்ட்டு போட்டுப் பாருங்க! அத்தனை ஏல்-ஓர் லிஸ்ட்டையும் வரிசையாப் பார்த்தா, சூப்பரா விளங்கும்! நீங்களே செஞ்சி பாருங்க!
நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்!
அவனை ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

//வீட்டுல மாடம், ஆபீஸ்ல மேடம்! என்னைய பொறுத்த வரை ரெண்டுமே பிரகாசமாத் தான் இருக்கு :) // இங்கேயும் அப்படித்தான் :)
ReplyDeleteஎளிமையான தமிழில் பதிவும், விளக்கங்களும் அருமை,
//வீட்டுல மாடம், ஆபீஸ்ல மேடம்! என்னைய பொறுத்த வரை ரெண்டுமே பிரகாசமாத் தான் இருக்கு :) //
ReplyDeleteஎன்ன பார்வை உந்தன் பார்வை!!
டிபன் மாடி வரேன் பின்னூட்டமிட:)
ஏல் ஓர் எம் பாவாய். கேஆரெஸ் சொல்லுவதை எல் தென் ஓர். :)
ReplyDeleteரொம்ப நல்லா பதிஞ்சிருக்கீங்க வாழ்த்துகள்
தூமணி மாடத்துக்கு இத்தனை விளக்கமா, உ(ந)ம்ம பிரண்டு கோதை நெகிழ்து போவா இதை படிச்சா
//பூங்கதவே தாழ் திறவாய்-ன்னு சினிமாப் பாட்டும் நினைவுக்கு வருதுல்ல?//
எப்போ திருப்பாவை சொல்லும் போதும் இந்த வரிக்கு அந்த பாடல் நினைவு வரும். இப்போ தெரியுதா எந்த லட்சணத்துல திருப்பாவை படிக்கின்றேன்னு.
//அனந்தலோ? = சோர்வோ?//
நான் ஜீரத்துல அனத்துரளோன்னு நினைச்சேன்
ஏல்-ஓர் ஆராச்சி அணுவை வைத்து செய்த தானை தலைவர் கேஆரெஸ் வாழ்க. வாழ்க :)
தொடரட்டும் நிம் பணி.
ஆண்டாள் அரங்கன் திருவடி சரணம்.
ரெம்பாவாய் என்றே சொல்லி வந்துள்ளேன்.. அதன் அர்த்தத்தை தெளிவா சொல்லிருக்கீங்கண்ணா..
ReplyDelete\\கோதையின் முப்பது கவிதைகள்-ஒவ்வொன்றின் கடைசி வரிகளை மட்டும் ஒரு லிஸ்ட்டு போட்டுப் பாருங்க! அத்தனை ஏல்-ஓர் லிஸ்ட்டையும் வரிசையாப் பார்த்தா, சூப்பரா விளங்கும்! நீங்களே செஞ்சி பாருங்க!\\
ReplyDeleteநானே கேட்க வேண்டும்னு நினைச்சேன் நீங்களே சொல்லிட்டிங்க...அருமையான விளக்கம் தல ;))
நன்றி ;)
//அதை ஒப்புக் கொள்ள மட்டும் மனசே வராது! :)//
ReplyDeleteநல்லா சொன்னீங்க. நம்பிக்கை - அது சுலபமில்லை. இருக்கவங்களுக்குக் கூட ஊசலாடிக்கிட்டே இருக்கும்.
ஏல் ஓர் எம்பாவாய் விளக்கம் அருமை!
//Logan said...
ReplyDelete//வீட்டுல மாடம், ஆபீஸ்ல மேடம்! என்னைய பொறுத்த வரை ரெண்டுமே பிரகாசமாத் தான் இருக்கு :) //
இங்கேயும் அப்படித்தான் :)//
வீட்டுக்கு வீடு மாடம் படி :)
//எளிமையான தமிழில் பதிவும், விளக்கங்களும் அருமை//
நன்றி லோகன்! திருப்பாவைப் புதிர் ஆடினீங்களா?
//ஷைலஜா said...
ReplyDeleteஎன்ன பார்வை உந்தன் பார்வை!!//
யக்கா...நான் எதுவும் பாக்கலை-க்கா!:)
//டிபன் மாடி வரேன் பின்னூட்டமிட:)//
இன்னுமா டிபன் மாடறீங்க? அடேங்கப்பா! அவ்ளோ இட்லி வடை பொங்கலா? :))
//மின்னல் said...
ReplyDeleteஏல் ஓர் எம் பாவாய். கேஆரெஸ் சொல்லுவதை எல் தென் ஓர். :)//
ஹிஹி!
நீங்க தான் பெஸ்ட் மின்னல்! ஐ லைக் இட்! :)
//ரொம்ப நல்லா பதிஞ்சிருக்கீங்க வாழ்த்துகள்
தூமணி மாடத்துக்கு இத்தனை விளக்கமா, உ(ந)ம்ம பிரண்டு கோதை நெகிழ்து போவா இதை படிச்சா//
நன்றிங்க! கோதையின் பார்வை ஒரு பரந்துபட்ட பார்வை! பாரதி கண்ட புதுமைப் பெண் அவள்! அவள் தொடாத உலக விஷயமில்லை!
//எப்போ திருப்பாவை சொல்லும் போதும் இந்த வரிக்கு அந்த பாடல் நினைவு வரும். இப்போ தெரியுதா எந்த லட்சணத்துல திருப்பாவை படிக்கின்றேன்னு.//
ஹிஹி!
நீங்களும் நம்ம கேஸ் தானா? :)
//ஏல்-ஓர் ஆராச்சி அணுவை வைத்து செய்த தானை தலைவர் கேஆரெஸ் வாழ்க. வாழ்க :)//
அட என்னாங்க
என்னை அணு ஆராய்ச்சிக் கழகத் தலைவர் ஆக்கிருவீங்க போல! :)
தூமணி மாடம்: நம் உடல்
ReplyDeleteசுற்றும் விளக்கு: நம் புலன்கள்
மாமான் மகள்: நம் மனம்
இப்படியெல்லாம் ஜீவா தான் சொல்லணுமா? நான் ஒரு தடவை சொல்கிறேனே. :-)
//Raghav said...
ReplyDeleteரெம்பாவாய் என்றே சொல்லி வந்துள்ளேன்.. அதன் அர்த்தத்தை தெளிவா சொல்லிருக்கீங்கண்ணா..//
சூப்பர்! அப்புறம் என்ன? இனி ஏல்-ஓர் தான் ராகவ்-க்கு! :)
மின்னல். நீங்க சொன்ன மாதிரி தான் நானும் செய்றேன். இரவிசங்கர் சொல்வதை முதலில் ஏல் பின்னர் ஓர். :-)
ReplyDelete//கோபிநாத் said...
ReplyDeleteநானே கேட்க வேண்டும்னு நினைச்சேன் நீங்களே சொல்லிட்டிங்க...அருமையான விளக்கம் தல ;))//
மாப்பி கோப்பி
இப்படி எல்லாம் எஸ் ஆவக் கூடாது
உடனே முப்பது ஏல்-ஓர் லிஸ்ட்டையும் பின்னூட்டமாப் போடு! அப்ப தான் உனக்குப் பரிசு! :)
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteதூமணி மாடம்: நம் உடல்
சுற்றும் விளக்கு: நம் புலன்கள்
மாமான் மகள்: நம் மனம்//
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே!
//இப்படியெல்லாம் ஜீவா தான் சொல்லணுமா? நான் ஒரு தடவை சொல்கிறேனே. :-)//
ஜீவா சொன்னா தான் அது வாசகம்!
நீங்க, நானெல்லாம் சொன்னா அது புதரகம்! :))
//கவிநயா said...
ReplyDelete//அதை ஒப்புக் கொள்ள மட்டும் மனசே வராது! :)//
நல்லா சொன்னீங்க. நம்பிக்கை - அது சுலபமில்லை//
ஆமாக்கா!
நம்பிக்கை பற்றணும்!
நம்பி, கைப் பற்றணும்!
நாரணன் நம்பி கைப் பற்றணும்!
:)
//இருக்கவங்களுக்குக் கூட ஊசலாடிக்கிட்டே இருக்கும்//
ஹிஹி!
உலகில் 100% ஆத்திகர் யாருமே கிடையாது! 100% நாத்திகரும் யாருமே கிடையாதுக்கா!
//ஏல் ஓர் எம்பாவாய் விளக்கம் அருமை!//
நன்றி! நன்றி!
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteமின்னல். நீங்க சொன்ன மாதிரி தான் நானும் செய்றேன்//
ஆகா...
//இரவிசங்கர் சொல்வதை முதலில் ஏல் பின்னர் ஓர். :-)//
இரவிசங்கர் சொல்வதை முதலில் Yell பின்னர் ஓர். :-)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//ஷைலஜா said...
என்ன பார்வை உந்தன் பார்வை!!//
யக்கா...நான் எதுவும் பாக்கலை-க்கா!:)
//டிபன் மாடி வரேன் பின்னூட்டமிட:)//
இன்னுமா டிபன் மாடறீங்க? அடேங்கப்பா! அவ்ளோ இட்லி வடை பொங்கலா? :))
10:51 AM, December 24, 2008
>>>>
அதையேன் கேக்கறீங்க இன்றுமாலைவரை சமையலறையே சாம்ராஜ்யமாகப்போய்விட்டது! இதோ இனி எமது மகத்தான பின்னூட்டங்கள் பராக்!
தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய = தூய்மையான மணி மாடம் உள்ள வீடு! அதில் வரிசையா விளக்குகள் கண் சிமிட்டுகின்றன!
ReplyDeleteமாடம், மாடம்-ன்னு பேசுறோம்! மாட மாளிகை-ன்னு அடிக்கடி சொல்லுவோம்! ஆனா மாடம்-ன்னா என்னாங்க? பார்த்து இருக்கீங்களா
<<<<>.பிறை மாடம் எல்லாம் ஒண்ணுதான்..
அதுசரி ஏன் மார்கழில காலங்கார்த்தலை விளக்கு ஏத்தி வாசல்மாடத்துல வைக்கிறோம் தெரியுமா
ஏன்னா கார்த்திகைல மாலைல இருட்டு சீக்கிரம் வரும் அதனால பூச்சிபொட்டு(இந்தப்பொட்டு என்னனு தெரியாது கேட்டு மாட்டவைக்காதீங்க:)ஏதோ பேச்சுவழக்குல இருக்குன்னுதான் தெரியும்:):)வரும்னு வைப்பாங்க
மார்கழில காலைல வைக்கறது எதுக்குன்னா சிற்றம் சிறுகாலை ஒரே பனிமூட்டமா(பனி இல்லாத மார்கழியா பாட்டு நினைவுக்கு வரணுமே:)))
இருக்குமா அதனால ஒண்ணூம் கண்ணுக்குத்தெரியாதா அதான் வெளிச்சத்துக்கும் பூ.பொ வராமல் இருக்கவும் விளக்கு ஏத்தறோம் இப்போ மின்விளக்குவந்தாலும் கூட பழக்கம் விடவில்லை நமக்கு!
மணிக் கதவம் தாழ் திறவாய் = மணிகள் தொங்கும் கதவின் தாழ் திறவாய்! இப்பவும் சில பேரு வீட்டுக் கதவில் மணி உண்டு!
ReplyDeleteமணி=அழகு என்றுவரும்னு நினைக்கிறேன்.
மணிமணியா குழந்தைகள்னு சொல்வாங்களே!
>>>>>>>>>>>>>>
ஆண்டாளை சயின்டிஸ்ட் ஆக்கிய பதிவர் கேஆரெஸ் வாழ்க! அதுக்கு நீங்க இத்தனை ஆராய்ச்சிபண்ணி பிச்சிபிரிச்சி மேஞ்சி அற்புதமா கொடுத்துட்டீங்க வாழ்த்துகள்!
ReplyDeleteஇதன் வே.க என்னவென்றால்....
இங்கு தூமணி மாடத்தில சுத்தி எரியற விளக்குதான் ஞானஒளி(சினிமா அல்ல:))) அந்த ஞானஒளியில மூழ்கி பகவத் அனுபவத்தில் இருப்பவர்கள்
பெருந்துயில்கொண்டது போலவும் மந்திரப்பட்டதுபோலவும் செவிடு ஊமைபோலவும் உலகைமறந்துகிடப்பார்கள் என்பது பொருள்.
அத்தகைய ஒருவரின் அருள் பெற விரும்பும் மற்றவர்கள் அவரை ஞான நித்திரையிலிருந்து எழுப்பமுயலுகிறார்கள்!
தூமணிமாடத்து விளக்கிலிருந்து தொடர்ந்து கோலவிளக்கு அணிவிளக்கு குத்துவிளக்கு மற்றும் குலவிளக்கு என வரும்விளக்குகளை எல்லாம் பளிச்சென விளக்கிவைக்கவும் பதிவர் அவர்களே!
//தூமணிமாடத்து விளக்கிலிருந்து தொடர்ந்து கோலவிளக்கு அணிவிளக்கு குத்துவிளக்கு மற்றும் குலவிளக்கு என வரும்விளக்குகளை எல்லாம்//
ReplyDeleteஅக்கா
திருப்பாவை-ல இத்தினி விளக்குகள் இருக்காக்கா? தெரியாமப் போச்சே! வாவ்! நீங்களே விளக்குகள்-ன்னு ஒரு பதிவு போடலாம்! நல்ல ஐடியா கொடுத்து இருக்கீங்க!
//அந்த ஞானஒளியில மூழ்கி பகவத் அனுபவத்தில் இருப்பவர்கள்
ReplyDeleteபெருந்துயில்கொண்டது போலவும் மந்திரப்பட்டதுபோலவும் செவிடு ஊமைபோலவும் உலகைமறந்துகிடப்பார்கள் என்பது பொருள்//
உம்ம்ம்ம்!
//அத்தகைய ஒருவரின் அருள் பெற விரும்பும் மற்றவர்கள் அவரை ஞான நித்திரையிலிருந்து எழுப்பமுயலுகிறார்கள்!//
அக்கா, சில வேதாந்த விளக்கங்கள் புரியலைக்கா! சில கேள்விகள் கேட்கிறேன், உங்க அனுமதியோடு!
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?-ன்னு எல்லாம் உரிமையா திட்டுறா மாதிரி நண்பர்களைப் பேசலாம்! ஞானிகளைப் பேச முடியுமா?
அவர் தான் இறைவனோட ஏகாந்தமா இருக்காரே! அது நல்லது தானே! தங்கள் சுயநலத்துக்காக எதுக்கு அவரைப் போயி எழுப்பணும்? கொஞ்சம் விளக்குங்க-க்கா!
அன்பு கேஆரெஸ்,
ReplyDeleteவெகுநாட்களுக்குப் பின் வருகிறேன்.
நல்லதொரு விளக்கம். அர்த்த புஷ்டியுடன், சுவையும் கூடவே. நடத்துங்க! நல்ல புண்யம் வருது! நல்ல புண்யம் வருது!
விஜய்.
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete!//
அக்கா, சில வேதாந்த விளக்கங்கள் புரியலைக்கா! சில கேள்விகள் கேட்கிறேன், உங்க அனுமதியோடு!
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?-ன்னு எல்லாம் உரிமையா திட்டுறா மாதிரி நண்பர்களைப் பேசலாம்! ஞானிகளைப் பேச முடியுமா?
அவர் தான் இறைவனோட ஏகாந்தமா இருக்காரே! அது நல்லது தானே! தங்கள் சுயநலத்துக்காக எதுக்கு அவரைப் போயி எழுப்பணும்? கொஞ்சம் விளக்குங்க-க்கா!>>>>>>>>>>>>>
எல்லாம் ஒரு அன்புகலந்த உரிமைலதான் இருக்கணும்.:) இறைவனையே நாம் அன்பு உரிமையா பேசறோமே அப்படி இருக்கலாம்.
வே.க எல்லாம் நான் கேள்விப்பட்டுப்படிச்சதுதான் ரவி.ஆகவே என் சொந்தக்கருத்து இல்லையென்பதால் என்னால் இதுபற்றி அதிகம் விளக்க இயலவில்லை!
12:16 PM, December 24, 2008
//vijay said...
ReplyDeleteஅன்பு கேஆரெஸ்,
வெகுநாட்களுக்குப் பின் வருகிறேன்//
வாங்க விஜய்! நலமா?
//நல்லதொரு விளக்கம். அர்த்த புஷ்டியுடன், சுவையும் கூடவே//
ஹிஹி! புஷ்-டி யா? ஓபாமா-டி-ன்னு சொல்லுங்க! :))
// நடத்துங்க! நல்ல புண்யம் வருது! நல்ல புண்யம் வருது!//
வரட்டும்! வரட்டும்!
//மார்கழில காலைல வைக்கறது எதுக்குன்னா சிற்றம் சிறுகாலை ஒரே பனிமூட்டமா இருக்குமா அதனால ஒண்ணூம் கண்ணுக்குத்தெரியாதா அதான் வெளிச்சத்துக்கும் பூ.பொ வராமல் இருக்கவும் விளக்கு ஏத்தறோம்//
ReplyDeleteஷைல்ஸ் அக்கா! சூப்பர்! இதெல்லாம் சென்னை-பெங்களூர்ல ரொம்ப ஏத்த முடியாது! வாழைப்பந்தல் வாங்க-க்கா! மனம் போல ஏத்துங்க! :)
//ஷைலஜா said...
ReplyDeleteமணிக் கதவம் தாழ் திறவாய் = மணிகள் தொங்கும் கதவின் தாழ் திறவாய்!
மணி=அழகு என்றுவரும்னு நினைக்கிறேன்.
மணிமணியா குழந்தைகள்னு சொல்வாங்களே!//
இரண்டுமே பொருந்தும்-க்கா! மணி = ஒளி, மாணிக்கம், மணிகள், அழகு எல்லாம் தான்!
மணிக் கதவம் திறக்கும் போது அந்த ஜல்-ஜல் சத்தம் சூப்பரு!! ;)
//ஷைலஜா said...
ReplyDeleteஆண்டாளை சயின்டிஸ்ட் ஆக்கிய பதிவர் கேஆரெஸ் வாழ்க!//
ஆண்டாள் தான் என்னைச் சயின்டி(வி)ஸ்ட் ஆக்கினா! :)
//அதுக்கு நீங்க இத்தனை ஆராய்ச்சிபண்ணி பிச்சிபிரிச்சி மேஞ்சி அற்புதமா கொடுத்துட்டீங்க வாழ்த்துகள்!//
நன்றி-க்கா! என் கடன் பிரிச்சி மேய்ந்து கிடப்பதே! :))