Tuesday, December 09, 2008

பக்ரீத் புராணம் - சரணாகதி பார்வை!

நல்லன்பர்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் என்னும் பக்ரீத் வாழ்த்துக்கள்!
மாதவிப் பந்தலில் மரியன்னையும், யேசு நாதப் பெருமானும் முன்பு வீதியுலா வந்துள்ளார்கள்! ஆனால் முகம்மது நபிகள் உலா எழுந்து அருளுவது இது தான் முதன் முறை என்று நினைக்கிறேன். தகவற் பிழைகள் காண்பீராயின் எடுத்துக் காட்டிச் செவ்வி செய்யுங்கள்! :)

பல நாட்களாக, சீறாப் புராணமும் சரணாகதியும், என்று ஒரு பதிவை எழுத நினைத்திருந்தேன்!
உமறுப் புலவரின் காவியமான சீறா சீரானது! சீர்ந்து நேரானது! நேர்ந்து வீறானது!

அதில் காணலாகும் பல கருத்துக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்து வியந்துள்ளேன்! அதுவும் "வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்", "அவன் அல்லால் வேறெவரும் இல்லை கண்டீர் சரண்" என்று பல வரிகள் பாசுரங்களோடு ஒப்பு நோக்கிப் பார்க்கும் போது வியப்பு தான் மேலிடும் எனக்கு!

இன்னிக்கி பக்ரீத் சிறப்புப் பதிவாக ஒரு சின்ன கதையைப் பார்க்கலாம் வாங்க! தத்துவத்தைக் கூட கதையாச் சொல்லித் தானே இந்தக் கேஆரெஸ் பொழைப்பு ஓடுது! :))



பக்ரீத் என்றால் என்ன?

இறைத் தூதர் இப்ராஹிம்! (நபிகள்)!
(நபி என்று சொன்னாலும் இவர் வேறு! முகம்மது நபிகள் வேறு! முகம்மது நபி இறைவனின் கடைசித் தூதர்)
ஆபிரஹாம் என்று கிறித்தவமும், யூதமும் கூட இவரைப் பற்றிப் பேசுகின்றன! புனித விவிலியத்தில் (பைபிளில்) இவரைப் பற்றிய கதைகளும் வருகின்றன!

"கல்லில் உள்ள உருவம் மட்டுமே கடவுள்! அதற்கே தலை வணங்கு" என்று தம் தந்தையும் சுற்றமும் சொன்ன போதும், சிறு வயதிலேயே மறுத்தவர் இப்ராஹிம்! படைத்தவனைத் தொழுவதை விடுத்து, படைக்கப் பட்டவைகளைத் தொழுகிறீரே என்பது அவர் ஆதங்கம்!
சமூகம் சின்னக் குழந்தை இப்ராஹீமைத் தீயில் தள்ளியது! (இஸ்லாமிய பிரகலாதனோ?)

நெருப்பே, நீ நம் இப்ராஹிமுக்குச் சாந்தமாகவும் குளுமையாகவும் ஆகிடுவாய் - என்று இறைவன் திருவுள்ளத்தால், தீயோரின் தீ, தீஞ்சுவைப் பிஞ்சைத் தீய்க்கவும் இல்லை!
இப்ராஹிம் தம் சுற்றத்தைத் துறந்து ஊரை விட்டே வெளியேறினார்!
பெரியவனான இப்ராஹிம், ஹாகர் என்பாரை மணம் செய்து கொண்டு இல்லறம் நடாத்தினார்! பல நாள் கழித்துத் தான் குழந்தைச் செல்வம் கிட்டியது! இஸ்மாயில் என்று பெயரிட்டார்கள்! (ஈசாக்கு என்று பைபிள் சொல்கிறது)

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தான் இஸ்மாயில்! எட்டாம் வயதில் இவன் எட்டாக் கனியாக ஆகப் போகிறான் என்று தெரியாதோ? (இஸ்லாமிய மார்க்கண்டேயனோ?)


நபிகளுக்கு ஒரு கனவு!
குழந்தை இஸ்மாயிலை இறைவனுக்குப் பலி இடுகிறார் இப்ராஹிம்! அடச்சே என்று ஒதுங்கிப் படுத்தாலும், இதே கனவு தினமுமே தொடர்கிறது! பயந்து போன இப்ராஹிம், பையனிடம் தன் கனவைக் கூற...
குழந்தையோ இறைவன் திருவுள்ளம் அதுவானால், தயங்காமல் உடனே செய்யச் சொல்கிறது தந்தையை! (பிள்ளைக்கறிச் சிறுத்தொண்டரோ?)

ஊருக்கெல்லாம், "இறைவனிடம் அர்ப்பணியுங்கள்" என்று உபதேசம் செய்த இப்ராஹிம், இப்போ என்ன செய்யப் போகிறார்?

இஸ்மாயிலைப் பலி பீடத்தில் ஏற்றி வாளை ஓங்க...
மும்மலங்கள் (சைத்தான்) தோன்றி, வேண்டாம் என்று மூன்று முறை ஆசை காட்டியது! தாயிடம் போட்டுக் கொடுத்தது! ஆனால் தாய் அசைந்து கொடுக்கவில்லை!
தந்தையும் மகனும், கல்லெறிந்து, மும்மலங்களையும் விரட்டினார்கள். (இன்றும் புனித ஹஜ் பயணத்தில் இந்தக் கல்லெறி உண்டு)

வாளை மீண்டும் ஓங்க...
நில்லு இப்ராஹிம், நில்லு...
இறைவன் தடுத்தாட் கொண்டான்! இறை அர்ப்பணத்தில் பாசம் குறுக்கே வரவில்லை என்று காட்டினான்! மாறாக, பலிபீடத்தில் ஆட்டைப் பலி தரச் சொன்னான்!
இந்தத் திருநாளே பக்ரீத் என்னும் ஈத்!
வாய் அர்ப்பணம் பேசாது, வாழ்க்கை அர்ப்பணம் செய்த தந்தை-மகனின் தியாகத் திருநாள்!
இன்றும் குர்பானி கொடுத்து, இதே போன்று இஸ்லாமிய நல்லன்பர்கள் கொண்டாடுகிறார்கள்!


சீர் மிகு சீறாப் புராணத்துக்கு வருவோம்!

ஈமான் = இஸ்லாமியரின் மந்திரச் சொல்! அசைக்க முடியாத நம்பிக்கை-ன்னு பொருள்!
வேறு கதியே இல்லை! நின் சரணா கதியே கதி! என்ற நம்பிக்கை!

இதை உமறுப் புலவர் எவ்வளவு அழகாச் சொல்றாரு பாருங்க!
பேதம் அற்று உரைத்தீர்! சோதி பெருகு "தீன்" விளக்கே இந்தப்
கோது அற மனத்துள் "ஈமான்" கொள்வது திண்ணம் என்றே!!
இதைப் படிக்கும் போது, உடனே எனக்குள் பொறி தட்டிய அதே "திண்ணம்" வரிகள் = எண்ணும் திருநாமம்! திண்ணம் நாரணமே! கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர்!

ஈமான் = சரணாகதி!
இதைப் பற்றி இஸ்லாமிய நண்பன் ஒருவனுடன் சுவையாகச் சிறிது உரையாடல்! இறையாடல்!
இரண்டின் நுட்பங்களையும் இன்னொரு நாள் தனிப் பதிவாய் இடுகிறேன்!
இப்போதைக்கு ஈமான் பாசுர வரிகளை மட்டும் சும்மா பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்!
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்! = அல்லா அல்லால் இல்லை கண்டீர் சரண்!

குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
உற்றோமே ஆவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம்
=
பாத பங்கயத்தைக் கண்டு, பரிவுடன் ஈமான் கொண்டு,
போதலே அன்றி, நின்னைப் புறத்தினில் அகற்றி வாழேன்!


நபிகள் (முகம்மது நபிகள்) இப்படிப் பலருக்கு ஈமானை (சரணாகதியைச்) செய்து வைக்கிறார்!
புலி ஒன்று துரத்த, அதனிடம் தப்பி, வேடனிடம் மாட்டிக் கொள்கிறது ஒரு பெண் மான்! வீட்டிலோ பிறந்து கொஞ்ச நாளே ஆன கன்று மான்!
நபிகள் காட்டு வழியில் வேடனையும் மானையும் பார்க்கிறார்! ஒரு மான் அழுது அவர் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை! விசித்திரமாக உணர்கிறார்!

மானோ தன் நிலையைச் சொல்லி, வீட்டுக்குப் போய் பால் கொடுத்து, வேறு ஏற்பாடுகளைப் பண்ணி விட்டு வருவதாகக் கெஞ்சுகிறது! மானோட்டம் அறியாத மடையனா வேடன்?
ஆபத்தில், சொந்த மானவரே வராத போது அந்த மானா வரப் போகிறது?
சிரிக்கிறான் வேடன்! ஆனால் நபிகளோ பிணைக் கைதியாக நின்று விடுகிறார்!

போன மானை மற்ற மான்கள் மீண்டும் போக விடவில்லை! ஆனால் தாய் மானுக்கோ கோமான் தான் நினைவுக்கு வருகிறார்! நபிகளை விட்டுப் போன மான், நபிகளிடமே திரும்பி வருகிறது!
போன மான் இரண்டு மானாகத் திரும்பி வருகிறது! தாயும் குட்டியுமாய்!
வேடன் உள்ளம் ஒடிந்து உள்ளத்தில் கருணை கூர்கிறான்!
விலங்கின் மனசாட்சியிலும் சாட்சியாய் நின்ற நபிகள் அவனுக்கு ஈமான் செய்து வைக்கிறார்! (அப்படியே இங்கு சொன்ன கைசிக ஏகாதசி கதை போலவே இருக்குல்ல? :)

மானைக் கொண்டு, ஈ-மானைக் கொண்டான் என்று தமிழும் இஸ்லாமியமுமாய் விளையாடுகிறார் உமறுப் புலவர்!

மாதவம் பெற்று, நின் போல் முகம்மது நபி தான் செய்ய
பாத பங்கயத்தைக் கண்டு, பரிவுடன் ஈமான் கொண்டு,
போதலே அன்றி, நின்னைப் புறத்தினில் அகற்றி வாழேன்!
விதயம் உற்று ஓதி, வேடன் இனிதினின் ஈமான் கொண்டான்!

ஈமான் = சரணாகதி என்று தெரிகிறதா?
இம்-மானின் கதை கேட்டோம்! ஈ-மானின் கதை கேட்போம்! கோமானின் கதை கேட்போம்!
இனிய பக்ரீத் வாழ்த்துக்கள்! கூடி இருந்து குளிர்ந்து ஏல்-ஓர் எம்பாவாய்!
(பதிவுக்கு உதவி செய்த என் நண்பர் Iniyan Hafiz-க்கு என் வாழ்த்தும், நன்றியும்)

40 comments:

  1. நல்லா எழுதியிருக்கீங்க கே ஆர் எஸ். நானும் இந்தக் கதையை பைபிளில் படிச்சிருக்கேன் :-)

    தியாகத் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. //Sridhar Narayanan said...
    நல்லா எழுதியிருக்கீங்க கே ஆர் எஸ்.//
    நன்றி அண்ணாச்சி!

    //நானும் இந்தக் கதையை பைபிளில் படிச்சிருக்கேன் :-)//
    நாராயண! நாராயண! :)
    அடுத்த பதிவு போடும் முன் உம்ம கிட்ட தான் ஐடியா! :)

    ReplyDelete
  3. :)

    நீங்களுமா ?

    கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் இரண்டிற்கும் ஒரே வேர் தான். இப்ராஹிம் என்று இஸ்லாமில் சொல்லப்படுவரே கிறித்துவத்தில் ஆப்ரஹாம் எனப்படுகிறார்.

    பலியிடும் கதை இரண்டு மதத்திலும் உள்ளது. சிங்கையில் குர்பானி ஆடுகள் ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. ஒரு ஆடு 350 வெள்ளி.

    பலி இடும் நிகழ்ச்சியை பண்டிகையாக கொண்டாடும் இஸ்லாமியர்களில் சில நண்பர்கள், இந்து மதம் மூட நம்பிகைகள் நிறைந்த மதம் எனக் காட்ட சிவன் சிறுதொண்டரின் மகனைக் கேட்டான், பிள்ளைக் கறி கேட்டான் என்பதை சுட்டிக் காட்டி தூற்றுவார்கள். இக்கரை மட்டுமே பச்சை என்பதாகவே மதப்பற்றாளர்கள் எப்போதும் நினைக்கிறார்கள்.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  4. தெரியாதவை நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி இரவிசங்கர்.

    ReplyDelete
  5. //அப்படியே இங்கு சொன்ன கைசிக ஏகாதசி கதை போலவே இருக்குல்ல? :)//

    தேவதத்தன் அம்பில் அடிபட்ட அன்னப்பறவை, அதைக் காப்பாற்றும் புத்தர் நினைவுக்கு வரவில்லையா ?
    :)

    ReplyDelete
  6. //கோவி.கண்ணன் said...
    தேவதத்தன் அம்பில் அடிபட்ட அன்னப்பறவை, அதைக் காப்பாற்றும் புத்தர் நினைவுக்கு வரவில்லையா ?
    :)//

    ஹிஹி! போச்சு, புத்தரின் கதையும் ஒங்களுக்குத் தெரியாதா-ண்ணே? :)

    நான் சொன்னது என்ன? கைசிக ஏகாதசி கதை! அதில் தான், பிரம்ம ராட்சசனிடம் மாட்டிய நம்பாடுவான் என்னும் பஞ்சமர் குலத்தவன், பிணைக் கைதி போல நடந்து கொள்வான்! பெருமாள் கோயிலில் போல் கைசிகப் பண் பாடி விட்டு வந்து விடுகிறேன்! அப்பறம் சாப்பிட்டுக்கோ-ன்னு சொல்லுவான்! கோயிலில் திருப்பிப் போக வேண்டாம் என்று நம்பாடுவான் மனசைக் கலைச்சாலும், சொன்னபடியே வருவான்!

    இங்கு மான் அதே போல் சொன்னபடியே வருது! அதான் ஒரு ஒப்பு நோக்கு!

    இப்போ நீங்க சொன்ன புத்தர் கதை என்ன?
    சகோதரன் தேவதத்தன் விட்ட அம்பு, அன்னத்தைத் துளைக்க, ஓடிச் சென்று புத்தர் அம்பை நீக்குறார்! தேவதத்தன் அன்னம் தனது-ன்னு சொல்ல, நீதிமன்றமோ காப்பாற்றியவருக்குத் தான் உயிர் சொந்தம்-ன்னு தீர்ப்பு சொல்லுது!

    இதுல எங்க பிணைக் கைதி, மனசைக் கலைத்தது, ஆனாலும் திரும்ப வந்தது, சரணாகதி (ஈமான்) செஞ்சது எல்லாம் வருது?

    எத்தை எத்தோட கம்பேர் பண்றீங்க-ன்னு வரவர உங்களுக்கே புரிய மாட்டேங்குது! இளா கிட்ட சொல்லி aanmeega blog-o-graphy போடட்டுமா ஒங்களுக்கு? :))

    ReplyDelete
  7. //துளசி கோபால் said...
    வாழ்த்து(க்)கள்.//

    நன்றி டீச்சர்!
    உங்களுக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. //குமரன் (Kumaran) said...
    தெரியாதவை நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி இரவிசங்கர்//

    நன்றி இனியன் ஹஃபீசுக்குத் தான்!

    இடுகையைக் கொஞ்சம் பிரிச்சி மேயுங்க குமரன்! சரணாகதி ஆங்கிள்-ல இருந்து!

    ReplyDelete
  9. //கோவி.கண்ணன் said...
    :)
    நீங்களுமா ?//

    இதுக்கு என்னா அர்த்தம்-ண்ணே! புதசெவி!

    //சிங்கையில் குர்பானி ஆடுகள் ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. ஒரு ஆடு 350 வெள்ளி//

    ஜூப்பரு! விலை எல்லாம் சொல்றதைப் பாத்தா ஏதோ வியாவாரம் பண்ணுறாப் போல இருக்கே! :)

    //பலி இடும் நிகழ்ச்சியை பண்டிகையாக கொண்டாடும் இஸ்லாமியர்களில் சில நண்பர்கள், இந்து மதம் மூட நம்பிகைகள் நிறைந்த மதம் எனக் காட்ட சிவன் சிறுதொண்டரின் மகனைக் கேட்டான், பிள்ளைக் கறி கேட்டான்//

    கோவியா இப்படிப் பேசுவது? ஹா ஹா ஹா!
    ஏதிலார் குற்றம் போல், தன் குற்றம் காண்கிற், பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு?

    //நல்ல பதிவு//

    அப்பாடா!
    இப்பவாச்சும் பாராட்டுறீங்களே! நன்றி-ண்ணே! :)

    ReplyDelete
  10. there r so many stories like this with them.publish that stories so other people can understand and be aware of them who criticise hinduism.

    ReplyDelete
  11. கே.ஆர்.எஸ்!

    சீறாப்புராணம் இஸ்லாமியக் கருத்துக்களுக்கு பல இடங்களில் முரண்படுகிறது. உமறுப்புலவர் பல இடங்களில் தன் கற்பனைக் குதிரையை தாராளமாக ஓட விட்டிருக்கிறார். நீங்கள் சொன்ன மான் கதையும் நான் கேள்விப் படாததாக உள்ளது. மற்றபடி நீங்கள் எழுதிய பக்ரீத் பற்றிய வரலாறு மட்டுமே உண்மையான வரலாறு. இந்து மத கதைகளையும் இஸ்லாமிய வரலாறுகளையும் ஒப்பிட்டு எழுதியுள்ளது படிக்க சுவாரசியமாக இருந்தது.

    இஸ்லாத்தை பற்றி முழுமையாக அறிய தமிழ் குர்ஆனையும் ஆதாரபூர்வமான நபி மொழிகளையும் (புகாரி,முஸ்லிம் போன்ற) படியுங்கள். பல விளக்கங்கள் கிடைக்கும்.

    பதிவு நன்றாக இருந்தது.

    ReplyDelete
  12. dear krs,

    good post.
    As Suvanapriyan said, seerappuranam is not an authenticated story of prophet mohammed and has many imaginative episodes.
    Ibrahim(Abraham)had two sons. Issac (through Sara) and Ismail (through Hajar).

    ReplyDelete
  13. //Anonymous said...
    there r so many stories like this with them//

    with who?

    //publish that stories//

    why should I do that?

    //so other people can understand and be aware of them who criticise hinduism//

    மன்னிக்கவும் ஐயா!
    அடுத்தவர் நோக்கங்களுக்காக அடியேன் பதிவிடுவதில்லை!
    அடுத்தவர் நோக்கத்தை விட நம் ஆக்கமே பெரிது!

    என்றுமுள தென்தமிழும் சமயமும் என்றும் உள!

    ReplyDelete
  14. // சுவனப்பிரியன் said...
    கே.ஆர்.எஸ்!
    சீறாப்புராணம் இஸ்லாமியக் கருத்துக்களுக்கு பல இடங்களில் முரண்படுகிறது. உமறுப்புலவர் பல இடங்களில் தன் கற்பனைக் குதிரையை தாராளமாக ஓட விட்டிருக்கிறார்//

    வாங்க சுவனப்பிரியன்!

    ஓ! அடியேன் சீறாப் புராணம் வாசிப்பதுண்டு! ஆனால் இது தெரியாது!

    //நீங்கள் சொன்ன மான் கதையும் நான் கேள்விப் படாததாக உள்ளது//

    பதிவுக்காக கலந்து பேசிய என் நண்பர் ஹஃபீசும் இதையே தான் சொன்னார்! அப்புறம் உமறுவின் வரிகளைக் காட்டினேன்! அவர் அப்போதும் நம்பலை! :)

    Poetic Justice சமயம் கடந்த ஒன்று போல! :)

    //மற்றபடி நீங்கள் எழுதிய பக்ரீத் பற்றிய வரலாறு மட்டுமே உண்மையான வரலாறு//

    நல்லது! சரியாகத் தான் படித்துள்ளேன் போல!

    //இந்து மத கதைகளையும் இஸ்லாமிய வரலாறுகளையும் ஒப்பிட்டு எழுதியுள்ளது படிக்க சுவாரசியமாக இருந்தது//

    "இந்து மத கதைகளையும் இஸ்லாமிய வரலாறுகளையும்" என்பதை "இந்து மத வரலாறுகளையும் இஸ்லாமிய வரலாறுகளையும்" என்று சற்றே மாற்றி அமைத்துக் கொள்ளட்டுமா, உங்க அனுமதியோடு? :)

    இரண்டிலுமே கதைகள், வரலாறு இரண்டுமே உண்டு!
    சமயக் கதையும் வரலாறும் சேர்ந்தே நம்மைச் சமைக்கின்றன! சமைத்துப் பண்படுத்துகின்றன!

    //இஸ்லாத்தை பற்றி முழுமையாக அறிய தமிழ் குர்ஆனையும் ஆதாரபூர்வமான நபி மொழிகளையும் (புகாரி,முஸ்லிம் போன்ற) படியுங்கள். பல விளக்கங்கள் கிடைக்கும்//

    இணையத்தில் தமிழ் குர்-ஆனைப் படிக்க நல்லதொரு சுட்டி தாருங்களேன்!

    //பதிவு நன்றாக இருந்தது//

    நன்றி சுவனப்பிரியன்!

    ReplyDelete
  15. //Anonymous said...
    dear krs,
    good post//

    நன்றிங்க!

    //As Suvanapriyan said, seerappuranam is not an authenticated story of prophet mohammed and has many imaginative episodes//

    ஹூம்! உமறு தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்றவாறு சில இலக்கிய மாறுதல்கள் செய்தாரோ?

    //Ibrahim(Abraham)had two sons. Issac (through Sara) and Ismail (through Hajar)//

    ஓ...பைபிள் சொல்லும் ஈசாக்கு வேற இஸ்மாயில் வேறயா?

    ReplyDelete
  16. //இறைவன் தடுத்தாட் கொண்டான்! இறை அர்ப்பணத்தில் பாசம் குறுக்கே வரவில்லை என்று காட்டினான்! மாறாக, பலிபீடத்தில் ஆட்டைப் பலி தரச் சொன்னான்!
    //

    So Goat's life is sooo cheaper which is also a creature of God.

    Good Justification!

    who gave the right to kill another god's creature..?

    தியாகத் திருநாள் - for Goats..?

    So mercilessly lakhs of goats are killed every year. :(

    ReplyDelete
  17. கே.ஆர்.எஸ்!

    //Poetic Justice சமயம் கடந்த ஒன்று போல! :)//

    புலவர்கள் பாடலை சுவையுள்ளதாக ஆக்க சில மிகைப்படுத்தலை செய்வதுண்டு. 'கவிதைக்கு பொய்யழகு' என்று வைரமுத்துவும் அழகாக சொல்லியுள்ளார். சீறாப்புராணததில் முகமது நபியை புகழ்கிறேன் என்ற பெயரில் பல கதைகளை தன் சொந்த கற்பனையில் எழுதியுள்ளார் உமறுப் புலவர். தன்னை மிகையாக புகழ்வதை முகமது நபி பல முறை கண்டித்தும் உள்ளார்.

    //"இந்து மத கதைகளையும் இஸ்லாமிய வரலாறுகளையும்" என்பதை "இந்து மத வரலாறுகளையும் இஸ்லாமிய வரலாறுகளையும்" என்று சற்றே மாற்றி அமைத்துக் கொள்ளட்டுமா, உங்க அனுமதியோடு? :)//

    ஓ... இரண்டையும் வரலாறு என்றே குறிப்பிட்டிருக்க வேண்டும். சரி செய்தமைக்கு நன்றி. இந்து மதத்தையே மிஞ்சும் அளவுக்கு இஸ்லாத்திலும் நிறைய கட்டுக்கதைகள் உண்டு. ஆனால் அவை எல்லாம் கட்டுக்கதைகள் என்று இனம் கண்டறியப்பட்டு அறிஞர்களால் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் சீறாப்புராணம். தமிழ் இலக்கியம் என்ற வகையில் அதற்கு மதிப்பளிக்கலாம். ஆனால் இஸ்லாத்தை தெரிந்து கொள்ள சீறாப்புராணம் ஒரு அளவு கோல் அல்ல என்பதை மீண்டும் இங்கு பதிக்கிறேன்.

    //இணையத்தில் தமிழ் குர்-ஆனைப் படிக்க நல்லதொரு சுட்டி தாருங்களேன்!//

    www.onlinepj.com

    இங்கு சென்று 'தமிழில் குர்ஆன்' என்ற தலைப்பில் சென்றால் குர்ஆனை பல தலைப்புகளில் அழகாக தொகுத்துள்ளதைப் பார்வையிடலாம். தகவலுக்கு உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  18. //Buddha said...//

    எப்படி எப்படி எல்லாம் அவதாரம் எடுத்து கெளம்பி வராங்கப்பா! :))

    //So Goat's life is sooo cheaper which is also a creature of God.
    Good Justification!//

    புத்த பகவானே!
    இது ஒரு நூலில் உள்ள குறிப்பு! அம்புட்டு தான்!

    இறைவன் ஆட்டைச் சாப்பிடுவதில்லை! ஆட்டைச் சாப்பிடுபவர்கள், அவனுக்குக் கண்டருளப் பண்ணி, தாங்கள் சாப்பிடுகிறார்கள்!
    ஆடோ, அகத்திக் கீரையோ, அவரவர் உண்பதை அவரவர் இறைவனிடம் காட்டிக் கொள்கிறார்கள்!

    //who gave the right to kill another god's creature..?//

    கொல்லாமை உயர்ந்த நெறி!
    உலகம் உயர்ந்தவர்களைப் போற்றும், ஆனா பின்பற்றாது! :)
    இயற்கையின் படைப்பும் ஒன்றைச் சார்ந்த மற்றொன்றாகத் தான் இருக்கு!

    மனிதன் மட்டுமே கொல்லாமை என்பதை ஒரு நெறி என்றாவது உணர்ந்து கொண்டுள்ளான்!

    //So mercilessly lakhs of goats are killed every year. :(//

    எனக்கும் வருத்தம் தான்!
    ஆனால் இதில் சமயம் அல்லது மதம் எங்கே வந்தது?

    எங்கூரு படையல் திருவிழாவில் லைன் லைனா வெட்டுவாங்க! பாத்து பயந்து போயி தான், சமணப் பள்ளிக்கூடத்தில் படைக்கும் போது மாறிப் போனேன்! வீட்டுல அல்லாரும் அசைவம்! அடியேன் சைவம்! இப்போ அதுக்கும் நண்பன் ஒருத்தன் உலை வைக்கத் துடியா துடிக்கான்! :)

    உங்கள் கோபம்
    * ஒரு குறிப்பிட்ட மதத்தின் மேலா?
    இல்லை...
    * உயிர்களைக் கொல்லும் மனித வியாபாரிகள் மீதா?

    ReplyDelete
  19. //கோபிநாத் said...
    நல்ல பதிவு தல ;))//

    மாப்பி கோபி, வர வர ரொம்ப குறும்பு பண்ற நீயி! :)

    ReplyDelete
  20. in their stories mann enna ellama varum.

    ReplyDelete
  21. //Anonymous said...
    in their stories mann enna ellama varum//

    ஹிஹி! மான் என்பது உமறுவின் கற்பனை என்று சொல்லி இருக்கார் பாருங்க!

    ReplyDelete
  22. //சுவனப்பிரியன் said...
    கே.ஆர்.எஸ்!
    புலவர்கள் பாடலை சுவையுள்ளதாக ஆக்க சில மிகைப்படுத்தலை செய்வதுண்டு//

    ஆமாங்க! சேக்கிழார் சுவாமிகள் செய்த பெரிய புராணத்தில் கூட இப்படிச் சில உண்டு என்று காரைக்கால் அம்மையார் பதிவுகளில் பேசினார்கள்!

    //தன்னை மிகையாக புகழ்வதை முகமது நபி பல முறை கண்டித்தும் உள்ளார்//

    ஆகா!
    பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே - என்பதற்கு வாழும் உதாரணமா இருந்திருக்காரு போல நபிகள்!

    //ஓ... இரண்டையும் வரலாறு என்றே குறிப்பிட்டிருக்க வேண்டும். சரி செய்தமைக்கு நன்றி//

    புரிதலுக்கு நன்றி சுவனப்பிரியன்! இப்படியே எல்லாரும் சரியாப் புரிஞ்சிக்கிட்டா எவ்ளோ நல்லா இருக்கும்-ன்னு யோசிச்சிப் பாக்குறேன்! :)

    //இந்து மதத்தையே மிஞ்சும் அளவுக்கு இஸ்லாத்திலும் நிறைய கட்டுக்கதைகள் உண்டு. ஆனால் அவை எல்லாம் கட்டுக்கதைகள் என்று இனம் கண்டறியப்பட்டு அறிஞர்களால் ஒதுக்கப்பட்டுள்ளது//

    சமயம் தன்னிடத்தில் சேரும் சக்கைகளைக் களைந்து கொண்டே இருந்தால் தான் ஆறு அழகாய் ஓடும்! இஸ்லாத்தில் அறிஞர்கள் இதைச் செய்கிறார்கள் என்றால் அது மகிழ்ச்சி தான்! இந்து மதத்திலும் இது அவசியம் செய்யப்பட வேண்டும்! வெளியில் இருந்து செய்வதை விட, சமய அறிஞர்களே உள்ளிருந்து செய்வது தான் நீண்ட நாள் பலனைத் தரும்! எ.கா: இராமானுசர், சங்கரர்.

    //www.onlinepj.com//

    நன்றிங்க!
    பயனுள்ளதா இருக்கும் போல! பல ஒப்பீட்டுப் பார்வைகளுக்கு!
    ஈமான் குறித்து ரொம்ப நேரம் தேடி, அப்பறமா அந்த நண்பர் தான் உதவி செஞ்சாரு!

    ReplyDelete
  23. வழிகள்தாம் வெவ்வேறு. சேருமிடம் ஒன்றுதான். சுவையாரமாக சொல்லியிருக்கீங்க. பக்ரீத் பண்டிகை பற்றியும் புதிய செய்திகள் தெரிந்து கொண்டேன். நன்றி கண்ணா.

    ReplyDelete
  24. //கவிநயா said...
    வழிகள்தாம் வெவ்வேறு. சேருமிடம் ஒன்றுதான்//

    கரீட்டாச் சொன்னீங்க-க்கா!

    //சுவையாரமாக சொல்லியிருக்கீங்க
    பக்ரீத் பண்டிகை பற்றியும் புதிய செய்திகள் தெரிந்து கொண்டேன்//

    நன்றி-க்கா! இனி இஸ்லாத்தின் ஆற்றங்கரையிலும் அடியேன் உலா வருவேன்! :)

    ReplyDelete
  25. எல்லாம் சரிதான். ஆனா ஈமான் என்பது சரனாகெதி என்று சொல்லும் நீங்கள், அது போல அவங்க மற்ற கருத்துகளில் சைவக் கருத்துகள் இருக்கா என்று எல்லாம் கூட எழுதலாமே? வைஷ்ணவத்தை மட்டும் தான் மற்ற மதங்களோடு ஒப்பீடுவீங்களா?

    ReplyDelete
  26. அனானி ஐயா. இரவிசங்கர் வந்து உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்னால் எனக்குத் தோன்றும் பதிலைச்/பதில்களைச் சொல்லலாம் என்று சொல்கிறேன்.

    1. சரணாகதி என்பது வைணவக் கருத்து மட்டும் தானா? சைவத்தில் சரணாகதி என்ற கருத்து இல்லையா?

    2. இரவிசங்கர் வைணவத்தை மற்ற மதங்களோடு ஒப்பிடும் போது அவர் செய்யும் தொண்டில் நீங்களும் இணைந்து கொண்டு 'அவங்க மற்ற கருத்துகளில்' இருக்கும் சைவக் கருத்துகளைப் பற்றி எழுதலாமே. அதை விட்டு விட்டு ஏன் வீண் சவால்? அதுவும் அனானியாக வந்து.

    ReplyDelete
  27. //Anonymous said...
    அது போல அவங்க மற்ற கருத்துகளில் சைவக் கருத்துகள் இருக்கா என்று எல்லாம் கூட எழுதலாமே?//

    ஓ எழுதலாமே! நீங்க எழுதலாமே!
    எப்பமே உங்க வாய் தான் பேசிக்கிட்டே இருக்குமா திருவாளர் சைவ.அனானி அவர்களே?

    //வைஷ்ணவத்தை மட்டும் தான் மற்ற மதங்களோடு ஒப்பீடுவீங்களா?//

    பார்வைக் கோளாறு ஏதுமில்லையே உங்களுக்கு? எதுக்கும் நல்ல மருத்துவரா பாருங்க! பதிவில் சொல்லப்பட்ட இதெல்லாம் என்ன?

    //(இஸ்லாமிய மார்க்கண்டேயனோ?)
    (பிள்ளைக்கறிச் சிறுத்தொண்டரோ?)
    நில்லு இப்ராஹிம், நில்லு...//
    சைவம்-ன்னா என்னான்னு தெரியும் தானே?

    //வைஷ்ணவத்தை மட்டும் தான் மற்ற மதங்களோடு ஒப்பீடுவீங்களா?//

    இதுக்கு நான் "ஆமாம்"ன்னு சொன்னா, என்ன பண்ணுவீங்க?

    ReplyDelete
  28. //குமரன் (Kumaran) said...
    அனானி ஐயா. இரவிசங்கர் வந்து உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்னால் எனக்குத் தோன்றும் பதிலைச்/பதில்களைச் சொல்லலாம் என்று சொல்கிறேன்//

    அட விடுங்க குமரன்!
    தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ் சிறு கதைகள் பேசிக்கிட்டுத் தான் இருப்பாங்க! :(

    //1. சரணாகதி என்பது வைணவக் கருத்து மட்டும் தானா? சைவத்தில் சரணாகதி என்ற கருத்து இல்லையா?//

    அதெல்லாம் தெரிஞ்சா இப்படிப் பேசிக்கிட்டு இருப்பாங்களா? சைவத்தில் "சரனாகெதி" இருக்கா-ன்னு அதையும் நீங்க தான் பாத்துச் சொல்லணும்-ம்பாங்க! :)

    ReplyDelete
  29. கேஆர்எஸ்,

    ஞானசம்பந்தர் பாண்டிய நெடுமாறனுக்கு சாபமிட்டு வெப்பு நோய் வரவழைத்தப் பாடலின் சுட்டி இணைத்திருக்கிறேன்

    சுட்டி 1

    வாதவூராருக்கு மாணிக்க வாசகர் என்ற பெயரை சிவன் சூட்டியதாகச் சொல்லும் இன்னொரு சுட்டி

    சுட்டி 2

    இரண்டுமே பக்தியாளர்கள் எழுதிய நூல்களில் இருந்த மேற்கோள்கள் தான்

    ReplyDelete
  30. கோவி அண்ணா
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

    தரவெல்லாம் ஸ்கேன் பண்ணிக் கொடுத்திருக்கீங்க! இதே போல ஒவ்வொரு முறையும் பண்ணீங்கன்னா எம்புட்டு நல்லா இருக்கும்? :)))

    சரி...கோதையிடம் மூச்சு வாங்கிட்டு வரேன்! பிறந்தநாள் கழித்து! அது வரை வெயிட்டீஸ்!

    ReplyDelete
  31. கோவி.கண்ணன்,

    பாண்டியர்க்காகவே என்ற சம்பந்தர் தேவாரத்தை எடுத்துக் காட்டினீர்களே. இது முதல் தரமான தரவு. ஏனெனில் நேரடியாக அவர் பாடியதையே எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்; நீங்கள் சொன்ன கருத்தினை ஏற்பவர்களும் மறுப்பவர்களும் இந்தத் தரவினை தாங்களே நேரடியாக உரசிப் பார்த்துக் கொள்ளலாம்.

    வாதவூரருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை சிவபெருமான் தந்தார் என்பது பெரும்பாலான பேர்களுக்குத் தெரிந்த ஒன்று. அதற்கு ஏன் இரவிசங்கர் தரவு கேட்டார் என்று தெரியவில்லை. சம்பந்தரின் பாடலைப் போல் நேரடியான தரவை இதற்குத் தர இயலாது; நீங்கள் தந்தது போன்ற தரவையோ பெரியபுராணச் செய்யுளையோ தான் தரமுடியும். அந்த வகையில் இந்தத் தரவையும் எல்லோரும் ஏற்றுக் கொள்ள இயலும் என்று நினைக்கிறேன்.

    இப்படி இன்றி 'அவர் அப்படி சொன்னதாக இவர் சொன்னார்', 'அந்தக் காலத்தில் அப்படி இருந்ததே இல்லை என்று இவர் சொல்கிறார்' என்று சொல்லும் போது இவர் சொன்னதை விட அவர் சொன்னதே நேரடியான தரவு; அதைக் காட்டுங்கள் என்றும்; அந்தக் காலத்தில் அப்படி இருந்ததில்லை என்பது இவர் கருத்தாகவும் ஊகமாகவும் இருக்கலாம்; அப்படி இருந்ததில்லை என்பதற்கு நேரடியான தரவு தரவும் என்றும் கேட்கிறோம். அப்படி தர இயலாத போது அந்த ஊகத்திற்கும் கருத்திற்கும் எதிரான தரவுகளை வைக்கிறோம் - அவை நேரடியான தரவுகளாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்கிறோம்; அப்போது யார் வேண்டுமானாலும் உரசிப் பார்த்து அதன் தரத்தைத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

    தரவு தாருங்கள் தரவு தாருங்கள் என்று கேட்கிறீர்களே தர முடியாது என்று ஒரு முறை சலித்துக் கொண்டீர்கள். ஏன் கேட்கிறோம் என்பதற்கான விளக்கம் இது. அவ்வளவு தான்.

    ReplyDelete
  32. @குமரன், கோவி அண்ணா!
    //வாதவூரருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை சிவபெருமான் தந்தார் என்பது பெரும்பாலான பேர்களுக்குத் தெரிந்த ஒன்று. அதற்கு ஏன் இரவிசங்கர் தரவு கேட்டார் என்று தெரியவில்லை//

    ஹா ஹா ஹா! சும்மா தான் கேட்டேன்! எளிய தரவுகளாவது தேடிக் கொடுக்குறாரா-ன்னு பார்க்கத் தான் கேட்டேன்! :)

    கோவி தரவுகளோடு பேசணும், சும்மா மறைமலை சொன்னாரு, அவரு சொன்னாரு, தீட்சிதர் சொன்னாரு-ன்னே சொல்லாம, முதல் தர, நேரடியான ஆதாரங்களோடு அலசணும் என்ற பழக்கம் வழக்கத்தில் வருவது நல்லது தானே!

    வாழ்த்துக்கள் கோவி அண்ணா!
    your tharavu on manickavasagar is accepted! :)

    The other tharavu on sambandar sending the soolai disease to pandiyan needs discussion! :)

    சம்பந்தர் சூலையை அனுப்பவில்லை! மன்னனின் ஆட்கள் மடத்துக்கு வைத்த தீ அவர்களையே சென்று சுடும்-ன்னு தான் சொல்றாரு!

    பட்டினத்தார், தன் வினை தன்னைச் சுடும், ஒட்டப்பம் வீட்டைச் சுடும்-என்று பாடினால், அவர் தான் வீட்டுக்குத் தீ வச்சாரு-ன்னு ஆயிடுமா என்ன?

    பட்டினத்தாருக்கு இவனுங்க விஷம் வச்சது பற்றி எப்பமே பேச்சு வராது!
    ஆனால் அவர் விஷச் சோற்றை வீட்டின் மேல் எறிந்தாருல்ல? அதைத் தான் தீயே வச்சதா பேசுவாங்க!

    அவனுங்க ஆயிரம் பண்ணலாம்! ஆனா நல்லவன் எப்பமே நல்லவனாத் தானே இருக்கணும்? இதானே உலக நியதி? :))

    எக்ஜாம்பிள்: கேஆரெஸ் எப்பமே அடியேன் அடியேன்-ன்னு பணிவாத் தானே பேசணும்! பின்னூட்டத்தில் அனானிகள் ஜல்லியடித்தாலும் பொங்கவே கூடாது அல்லவா? அதைப் போல! :)))

    ReplyDelete
  33. //சம்பந்தர் சூலையை அனுப்பவில்லை! மன்னனின் ஆட்கள் மடத்துக்கு வைத்த தீ அவர்களையே சென்று சுடும்-ன்னு தான் சொல்றாரு!
    //

    இதெல்லாம் உச்சகட்ட அவதூறு என்று தாங்கள் ஏன் உணரவே இல்லை. சமண மதம் இன்றும் இருக்கிறது, பெண்களுக்கான வழிபாட்டு உரிமை, பெண் சந்நியாசிகள், உயர்வு தாழ்வு இல்லாத நிலை என அனைத்தையும் வலியுறுத்திய மதத்தை ஞான சம்பந்தர் அண்ட் கோ நாத்திகனாக வலிந்து வலியுறுத்தையதை ஒப்புக் கொள்ள முடியாது. ஒருவரை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கு அரசின் ஆதரவும் இருந்தால் சும்மா வீடு கொளுத்தி அதைச் செய்வாங்க என்பதை எப்படித் தான் ஒப்புக் கொள்கிறீர்களோ தெரியவில்லை. சமணமதம் பற்றிய இந்த தூற்றல் தமிழ்நாட்டுக்குள் மட்டும் தானே நடந்தது. இன்றும் சமணம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்றும் அதனை மக்கள் விரோத மதம் என்று எவராலும் சொல்ல இயலுமோ ? ஆனால் சம்மந்தரின் செயலைப் போற்றுபவர்கள் அதை மறைமுகமாகச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    //பட்டினத்தார், தன் வினை தன்னைச் சுடும், ஒட்டப்பம் வீட்டைச் சுடும்-என்று பாடினால், அவர் தான் வீட்டுக்குத் தீ வச்சாரு-ன்னு ஆயிடுமா என்ன?
    //

    அது காளமேக சித்தரின் செயல், சித்துவிளையாட்டு என்று சொல்லுவார்கள், சமணர்கள் மதம் மக்களைக் கெடுக்கிறது என்று சிவன் நினைத்தால் அதற்கு ஒரு சிறுவனை கருவியாக பயன்படுத்துவாரா ?

    ஒதுக்கவேண்டிய தகவல்களை ஒதுக்குங்கள், புனிதம் நற்செயல், தெய்வீகம், இறைச் சித்தம் என்ற சப்பைக் கட்டுகள் தேவையற்றது. ஞானசம்பந்தருக்கு பிறகு எந்த குழந்தைக்கும் தெய்வீகத் தன்மையே இல்லையா ? பார்வதிக்கு அதன் பிறகு பால் சுரக்கவே இல்லையா ?

    ReplyDelete
  34. //தரவு தாருங்கள் தரவு தாருங்கள் என்று கேட்கிறீர்களே தர முடியாது என்று ஒரு முறை சலித்துக் கொண்டீர்கள். ஏன் கேட்கிறோம் என்பதற்கான விளக்கம் இது. அவ்வளவு தான்.//

    நன்றி குமரன்,

    தரவுகள் எல்லாவற்றிற்கும் காட்ட முடியாது. முழுமுதற் கடவுள் மேட்டரையே எடுத்துக் கொள்ளுங்கள், இதற்கு எப்படி தரவுகள் தரமுடியும் ? நம்ம கேஆர்எஸ் நாராயணனே முழுமுதற்கடவுள் என்பார், அதற்கு ஆதாரமாக சங்கரர் முதல் பிறர் வரை பரப்பிரம்மம் என்றால் நாராயணன் எனவே அதுதான் முழுமுதல் கடவுள் என்பர். பரம்பிரம்மம் என்பது ஒரு கான்சப்ட் தான், அதை வைத்து முழுமுதற்கடவுள் நாராயணன் என்று ஒப்புக் கொள்ள முடியுமா ? நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதே போல் சங்கரனும், சிவனும் வேறு என்றே நான் நினைக்கிறேன். அதுபற்றிய தெளிவான விளக்கங்கள் எனக்குத் தெரியும், இருந்தாலும் அவற்றிற்கான தரவு என்று வைத்தால் எதுவும் நம்புவதற்கு கடினமானது என்பதால் வைப்பது இல்லை. தரவுகளின் காலம் பழமையானதாக இருந்தால் உண்மையாக இருக்கும் என்ற கருத்துக்களையும் நான் ஒப்புக் கொள்வதில்லை, அவரவர் எண்ணத்தில் தோன்றியதை எழுதி வைத்தனர், அவற்றை எப்படி தரவாகக் கொள்ளமுடியும் என்பது எனக்கு தெரியவில்லை.

    அத்வைதம், த்வைதம், விசிட்டாத்வைதம் என்னும் மூன்றும் வெவ்வேறானவை, அவற்றிற்கு தொடர்புகள் என்று இணைத்துப் பார்க்கும் நிலையில் இன்று இருக்கிறோம், இவற்றைப் போற்ற வேண்டிய நிலையில் இருக்கும் நமக்கு, இவற்றை இணைத்துப் பார்பதைத் தவிர்த்து வேறு வழி இல்லை. காரணம் இவற்றின் வலியுறுத்தல்கள் எதுவும் இன்று இல்லை. ஆனால் இவை மூன்றும் உண்மையில் ஒன்றா ?

    பெற்றான், படைத்தான் பற்றிய உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது, ஆனால் எதைப் பேசினாலும்... நெற்றிக் கண்ணுக்கு பயந்து பேசாமல் இருந்துவிட்டேன்.

    எனக்கு தெரிந்த விளக்கங்கள் படி நாராயணன் - பிரம்மன் - சங்கரன் தொடர்புகள் சரிதான். இவர்கள் மூவரில் எப்போதும் யாராவது ஒருவர் மட்டுமே பணியாற்றுவர், அதாவது படைப்பு இருக்கும் போது காத்தல் இருக்காது, காத்தலின் போது அழிப்பு இருக்காது

    ReplyDelete

  35. Thanks for educating the readers. I have learnt a lot from your blog - keep writing..

    Just a correction
    according to the Bible (Old Testament)

    Hagar is a slave of Sarai (sarah) wife of Abraham
    Ishmael is son of Hagar & Abraham - Ishmael is older than Issac (he was born when Abraham was 86 years old)
    link: New International Version - easy to read bible
    https://www.biblegateway.com/passage/?search=Genesis+16&version=NIV

    Issac is son of Abraham & Sarah (Abraham was 100 year old when Issac was born)
    Read the birth of Issac (Genesis chapter 21)
    https://www.biblegateway.com/passage/?search=Genesis%2021&version=NIV

    ReplyDelete
  36. Thanks for educating the readers. I have learnt a lot from your blog - keep writing..

    Just a correction
    according to the Bible (Old Testament)

    Hagar is a slave of Sarai (sarah) wife of Abraham
    Ishmael is son of Hagar & Abraham - Ishmael is older than Issac (he was born when Abraham was 86 years old)
    link: New International Version - easy to read bible
    https://www.biblegateway.com/passage/?search=Genesis+16&version=NIV

    Issac is son of Abraham & Sarah (Abraham was 100 year old when Issac was born)
    Read the birth of Issac (Genesis chapter 21)
    https://www.biblegateway.com/passage/?search=Genesis%2021&version=NIV

    ReplyDelete
  37. Thanks for educating the readers. I have learnt a lot from your blog - keep writing..

    Just a correction
    according to the Bible (Old Testament)

    Hagar is a slave of Sarai (sarah) wife of Abraham
    Ishmael is son of Hagar & Abraham - Ishmael is older than Issac (he was born when Abraham was 86 years old)
    link: New International Version - easy to read bible
    https://www.biblegateway.com/passage/?search=Genesis+16&version=NIV

    Issac is son of Abraham & Sarah (Abraham was 100 year old when Issac was born)
    Read the birth of Issac (Genesis chapter 21)
    https://www.biblegateway.com/passage/?search=Genesis%2021&version=NIV

    Saba-Thambi

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP