Friday, December 12, 2008

Happy Birthday: எட்டு உதை-பத்துப் பாட்டு! - 1

எட்டுத் தொகை-பத்துப் பாட்டு, தெரியும் = தமிழ் இலக்கியம்! அது என்ன எட்டு உதை-பத்துப் பாட்டு??
என்ன மக்களே? கார்த்திகை தீபம் எப்படிப் போச்சு? தீபாவளிக்கு வெடிக்காத பட்டாசை, இன்னிக்காச்சும் பத்த வச்சீங்களா? இல்லை வழக்கம் போல பதிவுல பத்த வைக்கிறதோட சரியா? ஹிஹி! என் பங்குக்கு நானும் கொஞ்சம் பத்த வைக்கிறேன்!

* ஆழ்வார்களிலேயே மிகவும் குறைஞ்ச அளவு பாடல்கள் பாடியது யார்?=மொத்தம் பத்தே பாட்டு!
* அதுவும் கோயிலில் பணி செய்யும் ஒரு அந்தணரிடம் உதை வாங்கிய பின்!=எட்டு உதை!
ஆக, எட்டு உதை-பத்துப் பாட்டு!
இன்னிக்கி திருப்பாணாழ்வாரின் பிறந்த நாள் (Dec-12,2008)!
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்துக்கு அடுத்த நாள்! கார்த்திகை மாசம் ரோகிணியில் பிறந்த நாள்!
* திருமங்கையாழ்வார் சிவ தீபத்தில் பிறந்தவர்! (கார்த்திகையில் கார்த்திகை)
* திருப்பாணாழ்வார் விஷ்ணு தீபத்தில் பிறந்தவர்! (கார்த்திகையில் ரோகிணி)


என்னாது? ஆழ்வார் உதை வாங்கினாரா? அதிலும் ரொம்ப மென்மையான ஆழ்வார்! அவரையா அடிச்சாங்க? ஏன்? எதுக்கு?

கீழ்க்குலம் என்று கருதப்பட்ட பாணர் சாதியில் வளர்ந்தவர்! பாணர்கள் பொதுவா இசை வாணர்கள்; இசைக் கருவிகளும் செய்பவர்கள்! இசைக் கருவி செய்யணும்னா மாட்டுத் தோல், விலங்கு நரம்பு-ன்னு எல்லாம் தேவைப்படுமே! அதை எல்லாம் செய்ய ஆளு வேணாமா?
மாட்டுத் தோலில் இசைக் கருவி செய்பவர் = கீழ்க் குலம்!
மாட்டுத் தோலைத் தட்டித் தட்டி இசை வாசிக்கறவர் = மேல் குலம்! :)

தர்ம சாத்திரங்களில் சொல்லாதவற்றையும், தம் சொந்த சுயநலத்துக்காகச் சொல்லி, அதுவும் இறைவன் பேரால் சொல்லி, காலம் கடத்தியவர்கள் சில-பல பேர்!
நமக்குப் பழி வந்தால் நாம் துடைப்போம்! முடியலைன்னா இறைவன் துடைப்பான்!
இறைவனுக்கே பழி வந்தால்? இறைவன் தானே துடைத்துக் கொள்ள வேண்டும்?
இது போன்ற அதீத சிந்தனைகளுக்கு வெளிப்படையாக முடிவு கட்ட அரங்கன் திருவுள்ளம் கொண்டான் போலும்! என்னிக்கு அரங்கன் இதுக்கு மனசு வைச்சானோ தெரியலை...
அன்றிலிருந்து, ஒன்றன் பின் ஒன்றாய், சமூகச் சீர்திருத்தம் ஆகட்டும், ஆலயச் சீர் திருத்தம் ஆகட்டும், மொழிச் சீர்திருத்தம் ஆகட்டும்...
எல்லாம் அரங்கத்தில் இருந்து தான் ஆரம்பிக்கணும்-ன்னு ஒரு ராசி ஏற்பட்டு விட்டது போல!
எதிர்த்தவர்களும் அரங்கத்தில் தான் பலமாக எதிர்த்தார்கள்! எதிர்ப்பை மீறி வெற்றிகளும் அரங்கத்தில் தான் பலமாகக் குவிந்தன!

இந்த ஒரே காரணத்துக்காகவே பெரியார் சிலையைத் தாராளமாகத் திருவரங்க ஆலயத்து முகப்புச் சாலையில் வைத்துக் கொள்ளலாம்! இது நம்பெருமாளுக்குத் திருவுள்ள உகப்பே!
இதை எதற்குச் சென்ற ஆண்டு ஒரு கூட்டம் எதிர்த்தது என்பது தான் இன்னும் புரியவில்லை!

இப்படித் திருப்பாணாழ்வாரில் தொடங்கிய சீர்திருத்தம், பின்னாளில் இராமானுசர் காலத்தில் கெட்டிப்பட்டு, மாமுனிகள் காலத்தில் தங்கள் பெயர்களை எல்லாம் தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொள்ளும் அளவுக்குப் போய் விட்டது! ரம்ய+ஜாமாத்ரு முனிகள்=அழகிய மணவாள மாமுனிகள் என்று மாற்றிக் கொள்ளும் அளவுக்கு!


திருவரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஊர் உறையூர். சோழர்களின் தலைநகரமாகவும் இருந்த ஊர்! அங்கு பிறந்தான் பாணன்! இசை வாணன்!
மிகவும் மென்மையானவன்! பெண்களும் தோற்றுப் போவார்கள் இவன் மென்மையில்!
கருப்பிலும் அழகானவன்! கவின் குரலிலும் அழகானவன்! வீணையும் வாசிப்பான்!
கொண்டை போட்டு பூமுடித்த ஆழ்வான் இவன் ஒருவனாகத் தான் இருப்பான் போல!
இவன் உள்ளத்து மென்மையைக் கருதியோ என்னமோ, வைணவ இலக்கியங்கள் இவனை, திருமார்பு-மச்சத்தின் (ஸ்ரீவத்சம்-திரு மறு) அம்சமாகச் சொல்கின்றன!

பாணர் குலமாச்சே! பெருமாள் கோயிலுக்குள் போக முடியாதே! அது சைவமோ வைணவமோ, என்ன தான் சமயங்கள் நல்லனவாக இருந்தாலும், அதை ஆதிக்கம் செலுத்துவோர் வைத்தது தானே சட்ட திட்டம்! வைணவத்திலும் இது போன்ற இழிவுகள் விதிவிலக்கு அல்லவே!

திருவிழாக்களில் வெளியில் வரும் உற்சவ மூர்த்தியான நம்பெருமாளைப் பார்த்து பார்த்தே உள்ளம் பறி கொடுத்து விட்டான்! நம்பெருமாள் நடை அழகு அல்லவா!
சீரங்கம் நடையழகு! திருப்பதி வடையழகு! காஞ்சிபுரம் குடையழகு!
நம்பெருமாள் நடை அழகில், வலைக்குள் சிக்கிய இதயம் ஆனான் பாணன்!

"நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்! திருக்கோயிலே ஓடி வா!" - என்பது தான் அவன் சிந்தனை!
பெருமாளின் கதைகளில் கிறங்கி உறங்குவான்! உறங்கிக் கிறங்குவான்!
அவன் வேலையும் இசைக்கருவி என்று ஆகி விட்டதால், பகல்-வேலையிலும் சரி, இரவு-வேளையிலும் சரி, முழுநேரப் பதிவன் - இறைப் பதிவன் ஆகி விட்டான் நம்ம பாணன்! :)

கூட்டத்தோடு கூட்டமாக வீணையில் பாட்டு!
அடுத்தவர் பாடிய பாடல்களை எல்லாம் வீணையில் பாடிக் கொண்டிருந்தவனுக்கு, இன்னும் கொஞ்ச நாளில் சொந்தப் பாட்டு பாடப் போவது தெரிந்திருக்க நியாயமில்லை தான்!



அன்று சிற்றஞ் சிறு காலை! சீரங்க அம்மா மண்டபம், தென் காவிரிக் கரை! அங்கிருந்து நீர் முகந்து அரங்கன் திருமுழுக்காட்டுக்குக் (திருமஞ்சனம்/அபிஷேகம்) கொண்டு செல்வார்கள்!
அதுவும் எல்லாரும் திருக்குடம் சுமந்து விட முடியுமா? பரசுராமரின் அம்மா ரேணுகையைப் போல் கற்புள்ளவர்கள் தான் சுமக்க முடியுமாம்! அபிஷேக ஜலம், பரமம் பவித்ரம் அல்லவா?

சாஸ்திர விற்பன்னர்கள், சந்தியா வந்தனம் செய்து முடித்து, ஜல பாத்திரம் அர்க்கியம் முதலானவைகளைக் கொடுத்து முடித்து, லோக க்ஷேமத்துக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன் என்று மனதாரச் சங்கல்பம் செய்து கொண்ட பின்னர் தான் எடுத்துச் செல்வார்கள். இது போன்ற நித்ய கர்மானுஷ்டானங்களில் (தினப்படிச் செயலொழுகு) பல நல்ல உண்மைகள் புதைந்துள்ளன!
ஹூம்...ஆனால்...செய்பவரைப் பொறுத்து தானே செயலும்?...

லோக சாரங்கர் என்பவர் அரங்கன் ஆலயத்தின் பெருந்தன அர்ச்சகர்! அரங்கனையே தீண்ட வல்ல சக்தி படைத்தவர்! முப்போதும் திருமேனி தீண்டுவார்! இல்லறவாசியாய் இருந்தாலும் அவரின் கர்மானுஷ்டானங்களைக் கண்டு வியந்து, "முனிகள்" என்ற பட்டம் கொடுத்திருந்தனர்! லோக சாரங்க முனிகள்!

சந்தியை முடித்து, லோக க்ஷேமத்துக்காக என்னையே அர்ப்பணித்துக் கொள்கிறேன் என்று "மனதார" (மந்திரமார?) சங்கல்பம் செய்து கொள்கிறார்!
பின்னர் வெள்ளிக் குடத்தில் "காவேரி ஜலேஸ்மின் சன்னிதம் குரும்" என்று மந்திரம் சொல்லி நீர் முகந்து கொள்கிறார்! திரும்பிப் படியேறினால்.....

"கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்...அரங்கத்து அம்மா...பள்ளி எழுந்து அருளாயே!" என்று வீணையில் பாடிக் கொண்டும், உலாத்திக் கொண்டும் இருக்கிறான் பாணன்! தூக்கத்தில் நடக்கும் வியாதியா என்ன அவனுக்கு? அவன் கெட்ட நேரம், என்னிக்கும் இல்லாம இன்னிக்குன்னு பார்த்து, இவ்வளவு அதிகாலையில் காவிரிக்கு வந்து விட்டான்!

வந்தது தான் வந்தான்! குறுகலான படித்துறைக்கா வர வேண்டும்? அதான் அவ்ளோ பெரிய ஆறாச்சே? அகண்ட காவேரியாச்சே? ஹிஹி! அம்மா மண்டபத்தில் இருந்து பார்த்தால் அரங்க கோபுரங்கள் அத்தனையும் தெரியும்!

அதைத் தினப்படி பார்க்கும் அல்ப ஆசை அவனுக்கு! பரீட்சைக்கு நடந்து கொண்டே படிப்பது போல், படிகளில் குறுக்கும் நெடுக்குமாய்...


"அடே பாணா! விலகு விலகு!"

காதில் விழவில்லை!

"அடேய்! என்ன ஆணவம்! சொல்லியும் நகராமல், கண்ட பாட்டு பாடிக்கிட்டு, கூத்தாடிக்கிட்டு இருக்கே?"

காதில் விழவில்லை!

"அரங்கனின் திருமஞ்சனக் குடத்தை மறிக்கிறாயா? விலகடா!"

காதில் விழவில்லை!

அதிகாலை வேளையில் அதிகம் பேர் இல்லை! அவனை விலக்க ஆளும் இல்லை! இவரும் அவனைத் தொட்டு விலக்க முடியாது! "அரங்கத்து அம்மா"!
அட, தான் சொல்லும் பேரைத் தானே அவனும் பாடிக்கிட்டு இருக்கான்?
சரி ஒழியட்டும் என்று பக்கத்துப் படித்துறைப் பக்கமாக இவர் போகலாம் தான்! ஆனால்?

சில நிமிடங்களுக்கு முன், லோக க்ஷேமத்துக்காக என்னையே அர்ப்பணித்துக் கொள்கிறேன் என்று "மனதார" (மந்திரமார?) சங்கல்பம் எடுத்துக் கொண்டிருக்கிறாரே!
ஆற்றில் கிடந்த சரளைக் கல்லை எடுத்துப் பாணன் மேல் வீசுகிறார் லோக சாரங்க முனிகள்!

சடாக்! குறி தப்பலை! நெற்றி மேல! நெத்தியடி! இரத்தம் கொட்டுகிறது பாணனுக்கு!
வீசினவர் அவன் நெற்றியில் இருக்கும் திருவடிக் காப்பைக் (நாமத்தை) கூடவா பாக்கலை? திருவடிக் காப்பையுமா சேர்த்து அடிப்பது? நின் செவ்வடி செவ்வித் திருக்காப்பு!


விழிப்பு வந்த பாணன், அப்போ தான் கோபுர தரிசன மயக்கம் தெளிஞ்சி, சுத்தி முத்தி பாக்குறான்! எதிரிலே தலைமை அர்ச்சகர் நிக்குறாரு!
ஆகா, என்ன புண்ணியமோ இம்புட்டு காலைல ஒத்தை வேதியர் தரிசனம்! நிமிடத்தில் நிலைமை புரிந்து விடுகிறது!
"ஐயா மன்னிச்சிருங்க, ஐயா மன்னிச்சிருங்க, பாட்டோட இனிமையில் மயங்கிப் போயி, படிக்குக் குறுக்கால வந்துட்டேன்! மன்னிச்சிருங்க!"

"ஆனால், தலை என்னமோ கிர்ர்ர்ர்ர்ர்ருன்னு சுத்துதே! யம்மா...வலிக்குதே! ஐயோ இதென்ன இரத்தப் போக்கு?" மென்மையான ஆளு வேற இல்லையா? பயந்து போய் விட்டான்! பிடிமானம் இல்லாமல், பிச்சைக்காரர்கள் வழக்கமாக உட்காரும் சுவற்றின் படியோரம் தன்னையே குறுக்கிக் கொள்கிறான்! சரி, விட்டுது பீடை-ன்னு லோக சாரங்க முனிகள் கிளம்பி விட்டார்! இருட்டிக்கிட்டு வருது கண்கள்! யாருக்கு? ஹா ஹா ஹா! இருவருக்கும் தான்!

வயதானாலே பார்வை கூசுமோ?-ன்னு எண்ணிக் கொண்டே, லோக சாரங்கர் தன் சகாவைப் பிடிச்சிக்கிட்டு ஒருவாறு உள்ளே வருகிறார்!

"அட, கருடன் சன்னிதி ஏன் மூடி இருக்கு? இந்நேரம் தொறந்து இருக்கணுமே? அவனை எழுப்பாமல் பெருமாளை எப்படி எழுப்புவது? என்ன இன்னிக்கி எல்லாமே தலை கீழே நடக்கிறது?" - ஆர்ய படாள் வாசல் தாண்டி, காயத்ரீ மண்டபம், இதோ பிரணவாகார விமானம் வந்தாகி விட்டது! ஜய விஜயர்களிடம் சாவியை வைத்து, திருக்கடைக் காப்பை (பூட்டை) விலக்கி.....

காவேரி தீர வாசாய! கர்த்தவ்யம் தைவ மான்னிஹம்!
உத்தி்ஷ்டோ உத்திஷ்ட, ரங்கேச உத்திஷ்ட.....அய்யய்யோ!


அச்சோ! அச்சோ! அச்சோ!

ரங்கா! ரங்கா! ரங்கா!

"செய்ய வாய் ஐயோ" என்று சொல்வது போய், "செய்ய நெற்றி ஐயோ"-ன்னு இருக்கே!

ஆண்டாண்டு கால அரங்கன் திருமேனி!.....ஆண்டாளை ஆண்ட அரங்கன் திருமேனி!
அந்த நெற்றியில், இதென்ன இம்புட்டு இரத்தம்? இப்படிக் கொட்டுதே!
ஐயோ! எல்லாரும் வாங்கோ! யாராச்சும் வாங்கோ! பெரிய துண்டா எடுத்துக்கிட்டு வாங்கோ!

பாம்பணை இம்புட்டு வெப்பமா? ஆதிசேடன் ஆத்திர சேடன் ஆனானோ?
சூடிக் களைந்த பீதக ஆடை, முல்லைப் பூ மாலை, முத்தங்கி சேவை, துளசி தளத்தில் கூடவா இத்தனை சிவப்பு இருக்கும்?
பச்சை மாமலை போல் மேனி...சிவப்பு மாமலை போல் மேனியாகி விடுமோ?

அச்சச்சோ! கருவறைக்குள் இரத்தம் வந்தா தீட்டாச்சே!
அதுக்காக ரத்தம் வழியும் ரங்கனை அப்புறப்படுத்தவா முடியும்?

ரங்கா! ரங்கா! ரங்கா!

(தொடரும்...)

22 comments:

  1. //ஆலயச் சீர் திருத்தம் ஆகட்டும், மொழிச் சீர்திருத்தம் ஆகட்டும்...
    எல்லாம் அரங்கத்தில் இருந்து தான் ஆரம்பிக்கணும்-ன்னு ஒரு ராசி ஏற்பட்டு விட்டது போல!
    எதிர்த்தவர்களும் அரங்கத்தில் தான் பலமாக எதிர்த்தார்கள்! எதிர்ப்பை மீறி வெற்றிகளும் அரங்கத்தில் தான் பலமாகக் குவிந்தன//

    ReplyDelete
  2. அற்புதம்.. திருப்பாணாழ்வார் சரித்திரத்தை அற்புதமாக ஆரம்பிச்சிருக்கீங்க..

    பதிவு மழையா பொழியுதே.. :)

    ReplyDelete
  3. நட்சத்திர வாரத்தில் ஒரு சிலர் தேவையில்லாமல் அடித்த கும்மி!

    அதன் காரணமாக மாதவிப் பந்தலில் இனி அரங்கன் மட்டும் வர மாட்டான் என்று சொல்லி இருந்தேன்.....

    இன்று திருப்பாணாழ்வார் அரங்கனைத் தர தரவென்று இழுத்துக் கொண்டு வந்து விட்டார்!

    ReplyDelete
  4. நெடுநாள் கழித்து வந்த அரங்கனை ரத்த வெள்ளத்தில் காட்ட வேண்டிய சூழல்-கதை! அதில் கொஞ்சூண்டு வருத்தம்.....

    இருந்தாலும், வா ரங்கா, வா!

    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் அரங்கா!

    ReplyDelete
  5. //Raghav said...
    அற்புதம்.. திருப்பாணாழ்வார் சரித்திரத்தை அற்புதமாக ஆரம்பிச்சிருக்கீங்க..//

    பாணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

    //பதிவு மழையா பொழியுதே.. :)//

    அந்தி மழை பொழிகிறது
    ஒவ்வொரு துளியிலும் அவன் முகம் தெரிகிறது! :)

    ReplyDelete
  6. Kailashi said...
    //ஆலயச் சீர் திருத்தம் ஆகட்டும், மொழிச் சீர்திருத்தம் ஆகட்டும்...
    எல்லாம் அரங்கத்தில் இருந்து தான் ஆரம்பிக்கணும்-ன்னு ஒரு ராசி ஏற்பட்டு விட்டது போல!
    எதிர்த்தவர்களும் அரங்கத்தில் தான் பலமாக எதிர்த்தார்கள்! எதிர்ப்பை மீறி வெற்றிகளும் அரங்கத்தில் தான் பலமாகக் குவிந்தன//

    வாங்க கைலாஷி ஐயா!
    எதுக்கு இதை மார்க் மட்டும் பண்ணி இருக்கீக? :)

    ReplyDelete
  7. Vanakkam sir,
    ARANGAN needhivaanavan endru Aranganai paadiyavar,swami desikan also wrote munivahanabodham about this azhwar,in srivaishnavam you should not get bhaagavathapacharam,Arangan Arangane endru unara vaitha sambavam.
    PAATINAL KANDU VAZHUM PAANAR THAL PARAVINOME.
    ARANGAN ARULVANAGA,
    Anbudan,
    k.srinivasan.

    ReplyDelete
  8. பாணப்பெருமானைப்பற்றிய பதிவா ஆஹா! இத, இதத்தானே ரொம்ப நாளா நான் உங்ககிட்ட எதிர்பார்த்தேன் சகோதரரே! தேசிகர் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் வியாக்கியானம் எழுதியது அமலனாதி பிரபந்தம் ஒன்றிர்க்கே! ;முனிவாஹனபோகம்; என்னும் இந்த வியாக்கியானம் லோக சாரங்கமுனிவரை வாஹனமாகக்கொண்டு(இனிதானே இதையெல்லாம் நீங்க எழுதப்போறீங்க பதிவில் இல்லையா) சந்நிதிக்குள் சென்று திருப்பாணாழ்வாரின் மகிமையையும் அவர் பிரபந்தத்தின் தனிப்பெரும் சிற‌ப்பையும் காட்டுகிறது
    ......பாண்பெருமாள் செய்த பாடல்பத்தும்
    பழமறையின் பொருளென்று பரவுமின்கள் என்கிறார் சுவாமி தேசிகன்.

    பாணர்குலத்தில்பிறந்து வளர்ந்து ஆண்டவனின் அருளுக்கு அன்பே அவசியம் என்கிற அரும்பெரும் கொள்கையை உலகுக்கு எடுத்துக்காட்ட பழமறையின் பொருளைத்தித்திக்கும் தமிழ்மொழியில் பாடியவரைப் பற்றிய பதிவு என்றால் படிக்கப்படிக்க அவர் மகிமை நம்மை மேலும் மதிக்க வைக்கும்! அன்னாரின் சந்நிதி அரங்கன்கோயிலில் நுழைந்ததும் மூன்றாவது சந்நிதியாக இருக்கும். (முதலில் குருபக்தியில் சிறந்த கூரத்தாழ்வாருடையது அடுத்து தொண்டரடிப்பொடி ,அடுத்து பாணரின் திருசந்நிதி!)!

    ReplyDelete
  9. //Anonymous said...
    Vanakkam sir,
    ARANGAN needhivaanavan endru Aranganai paadiyavar//

    ஆமாம் ஸ்ரீநிவாசன் சார்!
    நீதிவான் அவன் = என்ன அருமையான சொல்லாட்சி!
    Honble Justice என்கிறோமே! ஆகா...பத்தே பாட்டு தான் என்றாலும், ஒவ்வொன்னும் ஒரு முத்து, பாணன் செஞ்ச பாட்டு!

    //swami desikan also wrote munivahanabodham about this azhwar//

    ஆம்! ஷைலஜாக்கா ஆல்ஸோ டெல்லிங் திஸ்!

    //in srivaishnavam you should not get bhaagavathapacharam,Arangan Arangane endru unara vaitha sambavam//

    வைணவம் மட்டுமல்ல! எதிலுமே பாகவத அபசாரம் பெரும் பிழை!
    மெய்ப்பொருள் நாயனார் ஒப்புக்கு நீறு பூசி வந்தவனையும் அதனால் தான் வணங்கினார்!

    //PAATINAL KANDU VAZHUM PAANAR THAL PARAVINOME//

    தனியன் சொன்னமைக்கு நன்றி!

    காட்டவே கண்ட பாத கமல நல்லாடை உந்தி
    தேட்டரும் உதரபந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்
    வாட்டமில் கண்கள் மேனி முனி ஏறித் தனி புகுந்து
    பாட்டினால் கண்டுவாழும் பாணர்தாள் பரவினோமே!!

    ReplyDelete
  10. //ஷைலஜா said...
    பாணப்பெருமானைப்பற்றிய பதிவா ஆஹா! இத, இதத்தானே ரொம்ப நாளா நான் உங்ககிட்ட எதிர்பார்த்தேன் சகோதரரே!//

    சீரங்கம்-ன்னு தெரிஞ்சவுடன், மின்னஞ்சல் கூட அனுப்பும் முன்னே, தானா வந்து நிக்கறீங்களே-க்கா! சூப்பரு!

    //தேசிகர் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் வியாக்கியானம் எழுதியது அமலனாதி பிரபந்தம் ஒன்றிர்க்கே! ;முனிவாஹனபோகம்; என்னும் இந்த வியாக்கியானம்//

    ஆமாம்! அதைப் போகம்-ன்னு சொல்றாரு பாருங்க!

    //லோக சாரங்க முனிவரை வாஹனமாகக்கொண்டு(இனிதானே இதையெல்லாம் நீங்க எழுதப்போறீங்க பதிவில் இல்லையா)//

    ஹிஹி! மேலோட்டமான கதை எல்லாருக்கும் தெரியும் தான்! ஆனால் - the sequence of events - அதைச் சொல்லத் தான் எனக்கு ஆசை! புனிதப்படுத்தறேன் பேர்வழி-ன்னு இல்லாம, உள்ளதை மறைக்காமச் சொல்லும் வரலாறு தான் ஆன்மீகத்தில் வெற்றி பெறும்! லோக சாரங்கரைக் காப்பாற்றும் பொருட்டு வேறு மாதிரி சொல்லாமல், கல்லால் பலமா அடிச்சார்-ன்னு ஒளிவு மறைவு இல்லாம சொல்லும் நேர்மை பிடிச்சிருக்கு!

    //அன்னாரின் சந்நிதி அரங்கன்கோயிலில் நுழைந்ததும் மூன்றாவது சந்நிதியாக இருக்கும்//

    விட்டா கூகுள் மேப் போட்டுருவீங்க போல! :)
    ரெங்கா ரெங்கா கோபுரம் தாண்டியவுடன் வலப்பக்கம், முதல் சன்னிதி தானே?

    //(முதலில் குருபக்தியில் சிறந்த கூரத்தாழ்வாருடையது அடுத்து தொண்டரடிப்பொடி ,அடுத்து பாணரின் திருசந்நிதி!)!//

    தொண்டரடிப்பொடி birthday dec-26

    ReplyDelete
  11. அடியேன் அமலன் ஆதிப்பிரான் அடியார்க்கு அடியேன்.

    ReplyDelete
  12. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    \>>>>சீரங்கம்-ன்னு தெரிஞ்சவுடன், மின்னஞ்சல் கூட அனுப்பும் முன்னே, தானா வந்து நிக்கறீங்களே-க்கா! சூப்பரு!
    >>>>>>>>பின்ன திருவரங்கப்ப்ரியாவா சும்மாவா!!!!:)


    >>>>>>>{அன்னாரின் சந்நிதி அரங்கன்கோயிலில் நுழைந்ததும் மூன்றாவது சந்நிதியாக இருக்கும்}//

    **விட்டா கூகுள் மேப் போட்டுருவீங்க போல! :)
    ரெங்கா ரெங்கா கோபுரம் தாண்டியவுடன் வலப்பக்கம், முதல் சன்னிதி தானே?***
    >>>>>>>>>>>ரங்கா ரங்கா மெயின் கோபுரம் தாண்டினதும் முதல்ல கூரத்தாழ்வார்தான் வலப்பக்கம்...மூணாவதாதான் பாணர் சந்நிதி!! எங்கு சுற்றினாலும் மனம் ரங்கனையே நினைப்பதால் கோயில்முழுவதும் அத்துப்படி!!! மத்தபடி கூகுளம்மன் நானில்லைப்பா!!!!!

    தொ.பொடி பெர்த்டே டிசம்பர்26 ஆ,,,ம்ம்ம்...என்ன திட்டம்,திருப்பள்ளி எழுச்சியை அலசுங்க...எத்தனை எளீமையான பாடல்க‌ள் அவை!

    ReplyDelete
  13. //குமரன் (Kumaran) said...
    அடியேன் அமலன் ஆதிப்பிரான் அடியார்க்கு அடியேன்//

    அடியார்க்கு அடியேனான குமரனின், அடியேன்!

    முனி வாகன போகம் பத்தி கொஞ்சம் பேசுங்க குமரன்!

    அரங்கனின் ரத்தச் சிவப்பைக் கண்டீர்களா?

    ReplyDelete
  14. //ரங்கா ரங்கா மெயின் கோபுரம் தாண்டினதும் முதல்ல கூரத்தாழ்வார்தான் வலப்பக்கம்...மூணாவதா தான் பாணர் சந்நிதி!!//

    நன்றி-க்கா!

    //எங்கு சுற்றினாலும் மனம் ரங்கனையே நினைப்பதால் கோயில் முழுவதும் அத்துப்படி!!! மத்தபடி கூகுளம்மன் நானில்லைப்பா!!!!!//

    அந்த ரங்கம் தான் உங்க அந்தரங்கம்! ஆகா! அருமை!

    ReplyDelete
  15. முனிவாகனபோகம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது - சுவாமி தேசிகன் அப்படி ஒரு நூலை எழுதியிருக்கிறார் என்பதைத் தவிர. :-)

    ReplyDelete
  16. //குமரன் (Kumaran) said...
    முனிவாகனபோகம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது - சுவாமி தேசிகன் அப்படி ஒரு நூலை எழுதியிருக்கிறார் என்பதைத் தவிர. :-)//

    அடியேனுக்கும் அப்படியே! இப்போ தான் ஓப்பன் பண்ணிப் படிச்சிக்கிட்டு இருக்கேன்! :)

    ReplyDelete
  17. இன்னிக்கு குமரனைப் பேச வைக்காம வுடப் போறதில்லை!

    குமரன்,
    ஸ்ரீ வத்சம்-ன்னு சொல்லுறாங்களே? திரு-மறு! மார்பு-மச்சம்!

    1. அது வலமார்பா? இடமார்பா?

    2. அந்த மச்சத்தில் தான் மகாலட்சுமித் தாயார் இருக்காங்களா? இல்லை...மச்சமும் இருக்கு, தாயாரும் தனியா இருக்காங்களா?

    3. ஒவ்வொரு அவதாரம் எடுக்கும் போதும், அதுவும் கூடவே வருமா?

    4. அப்போ திருப்பாணன் மட்டும் தான் தாயாரின் அம்சமான ஆழ்வாரா?
    ஆண்டாள்=பூமி தேவி!
    பாணன்=ஸ்ரீ தேவி?

    ReplyDelete
  18. //தேசிகர் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் வியாக்கியானம் எழுதியது அமலனாதி பிரபந்தம் ஒன்றிர்க்கே! ;முனிவாஹனபோகம்//

    இதற்கும் ஓர் சரித்திரமுண்டு.
    தேசிகன் சாஸ்திர ஞானம் மிகக்கொண்டவர். அவருக்கு மனதுள் சிறுதுளி வேர்ப்பற்று இருந்திருக்கிறது. ஆனால், ஞானஸ்தரான அவருக்கு அது உறுத்தியிருக்கிறது. பெரியவாச்சான் பிள்ளையிடம் சென்று தன் மனதைக் கண்டு குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார். பெரியவாச்சான்பிள்ளை இவர் கண்களைக் கட்டிவிட்டு அங்கிருந்த 12 ஆழ்வார்களில் ஒருவரைத் தொடச்சொல்லியிருக்கிறார். தேசிகன் கையில் கிடைத்தவர் பாணர். உயர் அந்தணரான தேசிகருக்கு பாணர் பிரபாவம் பாட வேண்டும் என்பது அரங்கன் திருவுள்ளம். அதுதான் நடந்தது.

    எவ்வளவு பெரிய ஆச்சார்யனாக இருந்தாலும் வேர்ப்பற்றறுத்தல் என்பது எளிதல்ல. மேலும் அவர் கிரகஸ்தன் வேறு.

    ReplyDelete
  19. //நா.கண்ணன் said...
    ஆனால், ஞானஸ்தரான அவருக்கு அது உறுத்தியிருக்கிறது. பெரியவாச்சான் பிள்ளையிடம் சென்று தன் மனதைக் கண்டு குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார்//

    ஹூம். வேர்ப்பற்று லேசா இருக்கு, ஆனா அது தவறு-ன்னாச்சும் உணர்ந்து இருந்தாரே சுவாமி தேசிகன்! அதைப் பாராட்டியே ஆகணும்!

    //பெரியவாச்சான்பிள்ளை இவர் கண்களைக் கட்டிவிட்டு அங்கிருந்த 12 ஆழ்வார்களில் ஒருவரைத் தொடச்சொல்லியிருக்கிறார். தேசிகன் கையில் கிடைத்தவர் பாணர்//

    வாவ்!

    //உயர் அந்தணரான தேசிகருக்கு பாணர் பிரபாவம் பாட வேண்டும் என்பது அரங்கன் திருவுள்ளம். அதுதான் நடந்தது//

    பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவிய இரகசியம் இது தானோ? அருமை!

    ReplyDelete
  20. அருமையான படைப்பு.

    அந்தக் காலத்திலேயே ஆண்டவனை வணங்க சாதி குறுக்கீடு கூடாது என்றவிதத்தில் நடந்த சம்பவம்.

    அரங்கனைக் கண்ட கண்கள் கொண்ட மகாத்மாவைப் பற்றி எத்தனை முறை படித்தாலும் இனிக்குமே..
    தொடர்க உங்கள் நற்பணி..

    அவர்தம் உறையூர் கோவில் சென்று வந்த பாக்கியசாலி அடியேன்,

    திவாகர்

    ReplyDelete
  21. //DHIVAKAR said...
    அருமையான படைப்பு.
    அந்தக் காலத்திலேயே ஆண்டவனை வணங்க சாதி குறுக்கீடு கூடாது என்றவிதத்தில் நடந்த சம்பவம்.//

    வாங்க திவாகர் சார்!
    உண்மை! எட்டாம் நூற்றாண்டில் இப்படின்னா, அது பெரிய விடயம் அல்லவா?

    //அரங்கனைக் கண்ட கண்கள் கொண்ட மகாத்மாவைப் பற்றி எத்தனை முறை படித்தாலும் இனிக்குமே..
    தொடர்க உங்கள் நற்பணி..//

    நன்றி!

    //அவர்தம் உறையூர் கோவில் சென்று வந்த பாக்கியசாலி அடியேன்//

    உம்..உறையூரில் ஆழ்வாருக்கு மோகினித் திருக்கோலம் உண்டு! :)

    ReplyDelete
  22. அற்புதம்.

    உங்கள் பதிவுகள் மூலம் ஆன்மீக ஈடுபாடு பெற்றேன்.

    திருப்பாணாழ்வாரின் தொடர் பதிவுக்காக காத்திருக்கிறேன்,

    மிக்க ஆவலுடன்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP