மார்கழி-02: திருக்குறளைப் படிக்காதே! ஆண்டாளா சொல்கிறாள்?
என்னாங்க அடுத்த ஆட்டத்துக்கு ரெடியா? எனக்கு இங்க மூச்சு முட்டுது பதிவு போடறதுக்குள்ள! பாற்கடல் ஆழம் தெரியாம காலை வச்சிட்டேனோ?-தினம் ஒரு பதிவு-ன்னு? ஹிஹி! இன்னிக்கு, பாற்கடல் பீச்சுக்குப் போகத் தான் ஆண்டாள் லக்கேஜ் எல்லாம் பேக் பண்றா! அப்படியே நைசா நம்மையும் நோன்புக்கு பேக் பண்ணி வைக்கிறா! பார்க்கலாமா என்னன்னு?
புதிர்-02:
போன பதிவில்/பாட்டில் "பறை" தருவான்-னு வந்துச்சி! நானும் ரொம்ப சொல்லலை! இன்னொரு பாட்டில் சொல்லிக்கலாம்-ன்னு விட்டுட்டேன்!
* பொண்ணுங்க அப்பவே பறை எல்லாம் அடிச்சி, குத்துப் பாட்டு/குத்து டான்ஸ் எல்லாம் ஆடுவாங்களா என்ன? :) பறை என்றால் என்ன?
* எந்தப் பாட்டில் அப்பறமா சொல்லிக்கலாம்-ன்னு நான் விட்டு விட்டேன்?
மெரீனா பீச்சில் தான் காதல் செய்வாங்களா என்ன? இன்னிக்கி பாற்கடல் பீச்சுக்குப் பயணம்! ரொம்ப தொலைவு தான்! ஆனாலும் காதலனை அங்கு வரச் சொல்லியிருக்கா கோதை! அதுக்கு பேக்கிங் மற்றும் ஏற்பாடுகள் நடக்குது! கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ? பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன், "அடி" பாடி,
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக் குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி,
உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்து, ஏல்-ஓர் எம் பாவாய்.
ஆண்கள் எல்லாம் வெளியே கிளம்பணும்-ன்னா, மொதல்ல என்ன செய்வாங்க? = கூகுள் மேப்! பாக்கெட்டில் பர்ஸ்!
பெண்கள் எல்லாம் வெளியே கிளம்பணும்-ன்னா, மொதல்ல என்ன செய்வாங்க? = அலங்காரம்! அலங்காரம்! அலங்காரம்! :)
அதுக்கு வேட்டு வைக்கிறாள் கோதை! மை இட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்! ஏன்? அவளே ஒரு அழகான பெண் தானே! ஆண்டாள் கொண்டை எம்புட்டு ஃபேமஸ்? ஏன் அலங்காரம் வேண்டாம்-னு சொல்லுறா?
புற அலங்காரத்தில் அதிக நேரம் செலவழிக்காமல், அக அலங்காரம் செய்து பார்க்கச் சொல்லுறா! அதான்!
அலங்காரம் எப்பமே மத்தவங்க பாத்து வியக்கணும்-னு தானே செஞ்சிக்கறீங்க? சரி தான்! தப்பில்லை! ஆனா அலங்காரத்தை உங்களுக்காகவும் செஞ்சிக்கலாமே?-ன்னு கேக்குறா!
* மையிட்டு எழுதோம் = கண்ணில் மை பூசிக்காம, மை வண்ணனைப் பூசிப்போம்!
* மலரிட்டு நாம் முடியோம் = இதயத்தில் ஒரு துளசி தளம் போதாதா! ஜென்ம ஜென்மத்துக்கும் மணக்குமே!
மத்தவங்களுக்காக வருஷம் முழுக்க அலங்காரம் செஞ்சிக்கறீங்க! மார்கழியிலாவது, நோன்பிலாவது, உங்களுக்காகவும் அலங்காரம் செஞ்சிக்குங்க! உங்களை நீங்களே மதிச்சாத் தானே! - என்று சொல்கிறாள்!
இதோ கோதை தரும் அலங்கார டிப்ஸ்..............
* நெய்யுண்ணோம் பாலுண்ணோம் = நெய்யும் பாலும் ஆயர்களின் அடிப்படை உணவு! அதையே உண்ண மாட்டோம், நோன்பு முடியும் வரை-ன்னு சொல்லுறாளே! ஏன்?
நெய் சூடு! பால் குளிர்ச்சி! ரெண்டும் கலந்து கலந்து அடிச்சா, நாம மிதப்புல தான் இருப்போம்! ஒன்னும் ஏறாது! அதான் முதலில் உடலைத் தயார் பண்ணுறா கோதை! :)
(மேலும், பாலைக் கறந்து, கடைந்து கடைந்து தயிராக்கி, வெண்ணையாக்கி, உருக்கி உருக்கி நெய்யாக்கி...பொழுது விடிஞ்சிரும்! அப்புறம் எங்க நோன்பு நோற்பது?
அதான் ஆயர் பொண்ணுங்க ஒரு மாசத்துக்கு அதெல்லாம் தள்ளி வைக்குதுங்க! கீரை போன்ற மற்ற உணவைச் சாப்பிடுதுங்க! நாமும் அதனால் தான் மார்கழியில் கல்யாணம் போன்றவற்றைத் தள்ளி வைக்கிறோம்! நோன்புக்கு நேரம் ஒதுக்கணுமே-ன்னு தான்! ஆனா நோற்கிறோமா? :))
* நாள் காலே நீராடி = சிற்றஞ் சிறு காலையிலேயே சுளீர்-ன்னு நீராடினா ஒரு சுகம்! லிரில் சோப் விளம்பரம் போல அன்னிக்கு ஃபுல்லா ஒரு ஃப்ரெஷ்னஸ்! குளிச்சாப் பாத்தாத் தான் தெரியும்! அதுனால நான் சொல்லப் போவதில்லை! :)
ஆனா நாளைத் துவக்கும் போதே புத்துணர்ச்சியா துவங்கிட்டா, அது யோகா மாதிரி தான்! ஆபீஸ்-ல பிரச்சனை-ன்னாலும் சிரிச்சிக்கிட்டே எதிர் கொள்வோம்! அதான் அடுத்த முக்கியமான நீதிகளைச் சொல்லு முன்னர், நம்மை ஃப்ரெஷ் ஆக்கிடறா ஆண்டாள்!
* செய்யாதன செய்யோம் = எது செய்யத் தகாதது-ன்னு அடி மனசுக்கு நல்லாவே தெரியும்! ஆனா மேல் மனசு தான் வலிந்து வலிந்து நியாயம் கற்பிச்சிக்கும்! ஹிஹி! ஏன்?
ஏன்னா மேல் மனசில் நாம இருக்கோம்! அடி மனசில் அவன் இருக்கான் (அந்தர்யாமி, உள்ளத்துள்ளான்)!
அதனால் எப்பவாச்சும் ஒரு முறையாவது, அடி மனது என்ன தான் சொல்லுது-ன்னு காது கொடுத்தாச்சும் கேப்போம்! அது செய்யாதே-ன்னு சொல்வதைச் செய்யாம இருக்க முயற்சிப்போம்!
* தீக் குறளை சென்று ஓதோம்!
ஆகா! திருக்குறளை ஓதாதே-ங்கிறாளா கோதை? அவளும் ஒரு தமிழச்சியா? சேச்சே! ஹிஹி! அவசரப்பட்டு பதிவு கிதிவு போட்டுறாதீங்க! பொருள் முழுக்கத் தெரியலைன்னாலும், என்ன சொல்ல வரா-ன்னு கொஞ்சமாச்சும் தெளிவு படுத்திக்கிட்டு அப்புறம் பதிவு போடலாம்! மேல் மனசுப் பதிவை விட, அடி மனசுப் பதிவு தான் உண்மை பேசும்! :)
குறளை = குறுகிய
* பாக்களில் குறுகிய வடிவம் உள்ள பா = குறள் பா!
* அவதாரங்களில் குறுகிய வடிவம் உள்ளவன் = குறள் அப்பன் (வாமனன்)!
* அதே போல் குணங்களில், குறுகிய குணம் = குறளை-கோள் சொல்லுதல்!
குறளி என்பது பாண்டி நாட்டு வட்டார வழக்கு! குறடு-ன்னு எங்கூர்ல சொல்லுவாய்ங்க! திண்ணைக்கும் குறடு-ன்னு ஒரு பேரு! நம்ம வீட்டை விட திண்ணை குறுகலா இருக்குல்ல! அதான் குறடு! இப்படி ஒரே வேர்ச்சொல்லில் பல முகம் காட்டவல்ல பெருமை செந்தமிழுக்கே உண்டு!
கோள் சொல்லுதல் மிகவும் கெட்ட குணம்!
சனிக் கோள் கூட ஏழரை ஆண்டில் ஓடி விடும்!
ஆனால் இந்தக் கோள் மனசுக்குள் வந்து உட்கார்ந்து விட்டால்...?
ஒருவரின் வளர்ச்சியை எதிர்க்கவும் துப்பில்லை! வளரவும் முயற்சி இல்லை!
இப்படித் தன்னையும் தாழ்த்தி, அவரையும் தாழ்த்தி, யாருக்குமே எந்தப் பயனும் இல்லாமல் போவதற்கு முதல் படி தான் இந்தக் "கோள்" சொல்லுதல்!
அவர் சொல்லாதவற்றை எல்லாம் சொன்னதாக ஏற்றிச் சொல்லுதல்!
உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசல்! இந்த உறவு நம்முள் கலவாமை வேண்டும்!
"கோள்" சொல்பவரைக் கோள்கள் எல்லாம் சூழ்ந்து வாட்டும்! கோளறு பதிகங்களும் கைவிட்டு விடும்! அதான் "செய்யாதன செய்யோம்" என்று பொதுவாகச் சொன்ன ஆண்டாள், இதை மட்டும் "கோளைக் கொள்ளாதே"-ன்னு குறிப்பிட்டுச் சொல்கிறாள்!
* ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி = ஐயம்= நம்மை ஒத்தவர்களுக்குக் கொடுப்பது!
பிச்சை= நம்மை விட மேல் நிலையில் உள்ள (துறவிகள்)/ கீழ் நிலையில் உள்ள இரப்பவர்களுக்குக் கொடுப்பது! ஆக மொத்தம் கொடுக்கணும்!
அன்பு வேணும் வேணும்-ன்னா அன்பு வராது!
அன்பைக் "கொடுத்தா" அன்பு "வரும்"!
அதனால் ஆந்தனையும், ஆகும் தனையும், முடிஞ்ச வரை, கொடுக்கவும் செய்வோம்! நல்ல செயலைக் கொடுக்கலீன்னா கூட, நல்ல சொல்லையாவது கொடுப்போம்!
இவ்வளவு தான் அக அலங்கார டிப்ஸ்! அக-அலங்காரம் செஞ்சிக்கிட்டா அக(அல)ங்காரம் அகன்று விடும்!
உய்யும் ஆறு என்று எண்ணி = இது நமக்கு உய்யும் வழி!
உகந்து = அதனால் விதியே-ன்னு (நோன்புக்காக மட்டும்) செய்யாது, உகந்து செய்வோம்!
ஏல்-ஓர் எம் பாவாய் = பொண்ணுங்களா (எம் பாவாய்), என்ன ஓக்கேவா? :)
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு, செய்யும் கிரிசைகள் கேளீரோ? = உலக மக்களே, எங்கள் நோன்புக்கு வேண்டிய சமாச்சாரங்களை (கிரியை) நாங்கள் சொல்லிட்டோம்! எங்கள் வார்த்தையைக் கேளீரோ? (கேட்டு, உதவிகளும் செய்யீரோ?)
கிரிசை = கிரியை = கர்ம யோகம் = என்ன அழகா கிரிசை-ன்னு நாட்டுப்புறத் தமிழா ஆக்கிட்டா பாருங்க இந்தப் பொண்ணு? கண்ணன் கீதையில் கர்ம யோகம் பற்றிக் கத்தோ கத்து-ன்னு கத்திட்டான்! இவளோ கிரிசை-ன்னு ஒரே போடா போட்டுட்டா! :))
ஆன்மீகத்துக்கு வாய்ப் பேச்சு மட்டும் போதாது! கிரிசையும் வேணும்! செயலும் செய்யணும்!
* பக்தி என்னும் சோறு!
* அது கூட ஞானம், கர்மம் (அனுஷ்டானம்) ரெண்டுமே தொட்டுக்கணும்!
* ஆனால் அதையே பிடிச்சித் தொங்கிக்கிட்டு இருக்காம, நீயே கதி! சரணா கதி! அவ்ளோ தான்! ஸோ சிம்ப்பிள்! :))
பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் = பாற்கடல் பீச்சில் நைசாத் தூங்கறானாம் அவன்! பைய = மெல்ல
(தென்பாண்டித் தமிழ் தான் திருப்பாவை முழுக்க...பெரும் புலவர்கள் எல்லாம் யாப்பு செய்ய, அவர்களுக்கு ஆண்டாள் ஆப்பு செய்கிறாள் :)
அவள் அடியொற்றித் தான் அடியேனும், இப்படி "லோக்கலா" எழுதறேன்! எங்காச்சும் தவறாப் பட்டாக்கா, அன்பர்களான நீங்கள் உடனே ஆண்டாளைச் சுட்டிக் காட்டுங்கப்பா :)
பையத் துயின்ற "பரமன்" = அவன் தான் "பரமன்"! "பரம்"பொருள்! "பர"ப்பிரும்மம்!
நாராயண "பரோ" தேவம், விஸ்வம் நாராயணம்!
விஸ்வம் நாராயணம் தேவம்! அக்ஷரம் "பரமம்" பதம்!
அக்ஷரம் "பரமம்" பதம் = அகர "முதல" எழுத்தெல்லாம்....
* இப்படி தமிழர் மறையும், வட வேதமும், ஒருங்கே சொன்னதை ஆண்டாள் சொல்ல,
* ஆண்டாள் சொன்னதையே, மூன்று ஆச்சார்யர்களும் (சங்கரர், இராமானுசர், மாத்வர்) "பரம்"பொருளாகச் சொல்கிறார்கள்.
பரமன் "அடி" பாடி = அவனைப் பாடாது, அவன் "அடி"யைப் பாடுவோம்!
ஏன்னா அவனைக் காப்பதே அவன் அடிகள் தான்!
நாம் தான், அவன் திருவடிகளை, நெத்தியில் (நாமம்) போட்டுக்கறோம்-ன்னா,
அவனும் தன் திருவடிகளை, தானே நெத்தியில் போட்டுக்கறான்! :)
ஏன் இப்படி? பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு...உன் செவ் "அடி", செவ்வித் திருக்காப்பு!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

Vanakkam sir,
ReplyDeleteReally very hard work,reading with full enthusiasm,my grandfather recites thiruppavai at very early morning,afterhis period no one following.Even my eyes were opened, after I saw a old person reciting divyaprabandham in THIRUNANGOOR garuda seva festival.Paramanadi kaatum vedam ,arulich cheidha ANDAALUKU PALLANDU.
ARANGAN ARULOVANAGA,
Anbudan
srinivasan.
ஒரு வாரம் தமிழ்மண நட்சத்திரமா இருந்து ஒரு நாளைக்கு ஒரு இடுகைன்னு போடறதே மூச்சு முட்டும் போது ஒரு மாசத்துக்குத் தொடர்ந்து ஒரு நாளுக்கு ஒரு இடுகைன்னா? பெரியா ஆளு தான் நீங்க. :-)
ReplyDeleteபுதிர் 2க்கு என்ன விடைன்னு விரைவா சொல்லுங்க. வேந்தன் அரசு ஐயாவும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கார் இன்னொரு இடத்துல. நீங்க சொன்னீங்கன்னா அதை அப்படியே அங்கே கொண்டு போய் ஒத்திப்போடுவேன். :-)
மலரிட்டு நாம் முடியோம்ன்னு சொன்னதுக்கு ஒரு ஆசாரியார் சொன்ன விளக்கமாம் இது: 'நாங்களா' மலரிட்டு முடிய மாட்டோம்; நீ எங்கள் கூந்தலில் மலரிட்டு முடிந்தால் சரி என்று சொல்லத் தான் 'மையிட்டு எழுதோம் மலரிட்டு முடியோம்'ன்னு சொன்னாலே போதுமாக இருக்க மலரிட்டு 'நாம்' முடியோம்ன்னு சொன்னாளாம்.
ஒரு பிழை இருக்கு. தீக்குறளை சென்றோதோம் தான் சரி. சகர ஒற்று மிகாது. தீயதாகிய குறளையைச் சென்றோதோம் என்பதில் ஐ என்னும் வேற்றுமை உருபு தொக்கி வரும் போது தீய குறளை சென்றோதோம் என்று வரும். ச் மிகாது.
தீயதாகிய குறளைச் சென்றோதோம் என்னும் போது ஐ என்னும் வேற்றுமை உருபு தொக்காமல் வந்ததாக ஆகும். அது குறள்+ஐ சென்றோதோம் என்று ஆகி தீய குறள் - அதனைச் சென்றோதோம் என்று பொருள்படும்.
ஆண்டாள் எழுதியது தீக்குறளை சென்றோதோம் தான். பாட வேறுபாடுகளும் இதில் இல்லை.
தீக்குறளை சென்றோதோம் பற்றி தெளிவாகச் சொன்னதற்கு நன்றி - ஆனாலும் இது திருக்குறளைத் தான் சென்றோதக்கூடாது என்று ஆண்டாள் சொல்லிவிட்டாள் என்று இனி மேலும் எழுதிக் கொண்டிருப்பார்கள். திராவிட சிசுவைப் பற்றி எழுதுவது போல. (ஓ குறளை சொன்னது போல் ஆகிவிட்டதோ?)
குமரன்
ReplyDeleteசுட்டிக் காட்டியமைக்கு நன்றி! "ச்"-ஐ பதிவில் இருந்து எடுத்து வேற இடத்தில் கொடுத்து விட்டேன்! :))
இதோ ஓங்கி உளகளந்துட்டு வாரேன்...சென்ற பதிவுகளின் பதில்களுக்கு! சொல்ப வெயிட் மாட்ரீ! :)
According to Yappu ilakkanam (maathirai and all), does it fit with a 'ch' after Thirukkuralai or without a 'ch'?
ReplyDelete- Sriram
Sorry, I meant 'Theekuralai'... hehehe!!! :)
ReplyDeleteI am asking this because this will decide if Andal meant Kol solludhal or the Thirukkural.
-Sriram
@Kumaran - 'theekkuralai sendru' thaan oadha koodaadhu... neenga vandhu thaaney oadhi irukeenga... so paravayillai!! ;-)
ReplyDelete//Anonymous said...
ReplyDeleteVanakkam sir,
Really very hard work//
ஹா ஹா ஹா!
பிடிச்ச பணி என்றால் கடினப் பணியும் கற்கண்டுப் பணியே! :)
//reading with full enthusiasm//
நன்றி ஸ்ரீநிவாசன் சார்!
//my grandfather recites thiruppavai at very early morning,afterhis period no one following.//
ஹூம்...அதான் இங்க ஜாலியா படிக்கறாங்கல்ல? ஓக்கே தான்! :)
தாத்தாவிடம் கேட்ட பாசுரப் பொருள் நயங்களை நீங்களும் பின்னூட்டத்தில் எடுத்து முன் வைங்க ஸ்ரீநிவாசன் சார்!
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஒரு இடுகைன்னு போடறதே மூச்சு முட்டும் போது ஒரு மாசத்துக்குத் தொடர்ந்து ஒரு நாளுக்கு ஒரு இடுகைன்னா? பெரியா ஆளு தான் நீங்க. :-)//
ஹிஹி!
பெரிய ஆளு கோதை!
பெரிய ஆழ்வாரு அவ அப்பா!
பெரிய பெருமாளு அவ காதலன்!
அடியேன் சிறிய சிறிய ஞானத்தன், குமரன்! :)
//புதிர் 2க்கு என்ன விடைன்னு விரைவா சொல்லுங்க. வேந்தன் அரசு ஐயாவும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கார் இன்னொரு இடத்துல. நீங்க சொன்னீங்கன்னா அதை அப்படியே அங்கே கொண்டு போய் ஒத்திப்போடுவேன். :-)//
ஆகா! குமரனுக்குத் தெரியாத விடையா?
கேஆரெஸ்-க்குத் தெரிஞ்ச வடையா?:)
//மலரிட்டு நாம் முடியோம்ன்னு சொன்னதுக்கு ஒரு ஆசாரியார் சொன்ன விளக்கமாம் இது: 'நாங்களா' மலரிட்டு முடிய மாட்டோம்; நீ எங்கள் கூந்தலில் மலரிட்டு முடிந்தால் சரி//
ReplyDeleteஹிஹி!
யூ மீன் ராகவாச்சாரியார்? :)
//ஐ என்னும் வேற்றுமை உருபு தொக்கி வரும் போது தீய குறளை சென்றோதோம் என்று வரும். ச் மிகாது//
சரி தான் குமரன்! corrected! :)
//தீக்குறளை சென்றோதோம் பற்றி தெளிவாகச் சொன்னதற்கு நன்றி - ஆனாலும் இது திருக்குறளைத் தான் சென்றோதக்கூடாது என்று ஆண்டாள் சொல்லிவிட்டாள் என்று இனி மேலும் எழுதிக் கொண்டிருப்பார்கள். திராவிட சிசுவைப் பற்றி எழுதுவது போல//
ஹா ஹா ஹா!
அவர்கள் கடன் வெறுப்பு காட்டிக் கிடப்பதே!
நம் கடன் பணி செய்து கிடப்பதே!
//(ஓ குறளை சொன்னது போல் ஆகிவிட்டதோ?)//
திராவிட சிசு = சின்ன வயசுல குறளையாத் (குள்ளமா) தானே இருந்திருப்பாரு! :)
ஞான சம்பந்தர் திருவடிகளே சரணம்!
// Anonymous said...
ReplyDeleteAccording to Yappu ilakkanam (maathirai and all), does it fit with a 'ch' after Thirukkuralai or without a 'ch'?//
ஸ்ரீராம்...கலக்கிட்டீங்க!
I know u meant thee-kuraLai only! :)
As kumaran pointed out, no otRu migal! coz itz not 2nd vetRumai urubu! itz a proper name!
சீதை செய்தாள்-ன்னு தான் வரும்!
சீதையைச் செதுக்கினார்கள்-ன்னும் போது "ச்" வரும்!
அதே போல்
குறளை சென்று ஓதோம்!
குறளையைச் சென்று ஓதோம்!
என்னாங்க அடுத்த ஆட்டத்துக்கு ரெடியா? எனக்கு இங்க மூச்சு முட்டுது பதிவு போடறதுக்குள்ள! >>>>>>
ReplyDeleteகண்டிப்பா இதுக்கு ஒரு பரிசு நான் தரேன் அருமைத்தம்பியே! பின்னூட்டம் எழுதவே எனக்கு மூச்சு வாங்குது! காலைல முதல்ல ஓடிவரலாம்னு நினச்சா இன்னிக்கு பொங்கல் குக்கரோடு குழைந்துவிட அதை சரிக்கட்டி வீட்டில் எல்லார் தலையிலும்கட்டவே நேரம் போய்விட்டது!!:)
என்னாங்க அடுத்த ஆட்டத்துக்கு ரெடியா? எனக்கு இங்க மூச்சு முட்டுது பதிவு போடறதுக்குள்ள! >>>>>>
ReplyDeleteகண்டிப்பா இதுக்கு ஒரு பரிசு நான் தரேன் அருமைத்தம்பியே! பின்னூட்டம் எழுதவே எனக்கு மூச்சு வாங்குது! காலைல முதல்ல ஓடிவரலாம்னு நினச்சா இன்னிக்கு பொங்கல் குக்கரோடு குழைந்துவிட அதை சரிக்கட்டி வீட்டில் எல்லார் தலையிலும்கட்டவே நேரம் போய்விட்டது!!:)
போன பதிவில்/பாட்டில் "பறை" தருவான்-னு வந்துச்சி! நானும் ரொம்ப சொல்லலை! இன்னொரு பாட்டில் சொல்லிக்கலாம்-ன்னு விட்டுட்டேன்!
ReplyDelete* பொண்ணுங்க அப்பவே பறை எல்லாம் அடிச்சி, குத்துப் பாட்டு/குத்து டான்ஸ் எல்லாம் ஆடுவாங்களா என்ன? :) பறை என்றால் என்ன?
* எந்தப் பாட்டில் அப்பறமா சொல்லிக்கலாம்-ன்னு நான் விட்டு விட்டேன்?>>>>>>>
பறை=பேச்சு அதாவது வாக்கு
இங்கே ஆண்டாள் சொல்வது நாராயணனே நமக்கு எல்லாசெல்வமும் தருவதாய் வாக்கு அளிப்பான்.(இப்படித்தான் தோன்றுகிறது... இதுக்குமட்டும் பரிசு கிடச்சா பறை(இது வேறபறை) அடிச்சி சொல்லனும் ரவி!!!
மலையாளப்பறை இதுதானே!
ஆண்கள் எல்லாம் வெளியே கிளம்பணும்-ன்னா, மொதல்ல என்ன செய்வாங்க? = கூகுள் மேப்! பாக்கெட்டில் பர்ஸ்!
ReplyDeleteபெண்கள் எல்லாம் வெளியே கிளம்பணும்-ன்னா, மொதல்ல என்ன செய்வாங்க? = அலங்காரம்! அலங்காரம்! அலங்காரம்>>>>>>>>>>>>>>>>
அலங்காரம்னா அழகினை மேலும் செம்மைப்படுத்துதல் இதுல என்ன தப்பு எதுக்கு 3அலங்காரம்போடணும் இந்தபந்தல் ஓனர்னு தெரியலப்பா!
அலங்காரம் எப்பமே மத்தவங்க பாத்து வியக்கணும்-னு தானே செஞ்சிக்கறீங்க? சரி தான்! தப்பில்லை! ஆனா அலங்காரத்தை உங்களுக்காகவும் செஞ்சிக்கலாமே?-ன்னு கேக்குறா!
ReplyDelete* மையிட்டு எழுதோம் = கண்ணில் மை பூசிக்காம, மை வண்ணனைப் பூசிப்போம்!
* மலரிட்டு நாம் முடியோம் = இதயத்தில் ஒரு துளசி தளம் போதாதா! ஜென்ம ஜென்மத்துக்கும் மணக்குமே!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>உண்மை...அழகா சொல்லிட்டிங்க
பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் = பாற்கடல் பீச்சில் நைசாத் தூங்கறானாம் அவன்! பைய = மெல்ல
ReplyDelete(தென்பாண்டித் தமிழ் தான் திருப்பாவை முழுக்க...பெரும் புலவர்கள் எல்லாம் யாப்பு செய்ய, அவர்களுக்கு ஆண்டாள் ஆப்பு செய்கிறாள் :)
அவள் அடியொற்றித் தான் அடியேனும், இப்படி "லோக்கலா" எழுதறேன்! எங்காச்சும் தவறாப் பட்டாக்கா, அன்பர்களான நீங்கள் உடனே சுட்டிக் காட்டுங்கப்பா :)
>>>>>>>>>>>>>>>
பையத்துயின்ற....இது அரவணைத்துயில் எனும் நாகம்மேல படுத்துறங்கும் என இருக்கலாமோன்னு எனக்கு தோன்றுகிறது தவறாகவும் இருக்கலாம்
பரமன் "அடி" பாடி = அவனைப் பாடாது, அவன் "அடி"யைப் பாடுவோம்!
ReplyDeleteஏன்னா அவனைக் காப்பதே அவன் அடிகள் தான்>>>>>>
இந்த அடிகளைத்தாங்கிய பாதுகையை ராமாவதாரத்திலேயே பரதன் போற்றியதை மறக்கமுடியுமா ஸ்ரீரங்கநாதபாதுகாப்யாம் நமஹ என்றேதான்
வைணவவீடுகளில் சொல்வார்கள்.
நிறைவான பதிவு ரவி பாராட்டுக்கள்!
//ஷைலஜா said...
ReplyDeleteகண்டிப்பா இதுக்கு ஒரு பரிசு நான் தரேன் அருமைத்தம்பியே!//
அக்கா உடையான் பதிவுக்கு அஞ்சான்! :)
//பின்னூட்டம் எழுதவே எனக்கு மூச்சு வாங்குது!//
:))
//காலைல முதல்ல ஓடிவரலாம்னு நினச்சா இன்னிக்கு பொங்கல் குக்கரோடு குழைந்துவிட அதை சரிக்கட்டி வீட்டில் எல்லார் தலையிலும்கட்டவே நேரம் போய்விட்டது!!:)//
ஆகா...குக்கர் பொங்கலா! அதான்! பாவம் மக்கள்! அவிங்க தலையில் கட்டின நீங்க, உங்களுக்கு என்ன செஞ்சி சாப்டீங்க? அதைச் சொல்லுங்க! :)
//ஷைலஜா said...
ReplyDeleteபறை=பேச்சு அதாவது வாக்கு
இங்கே ஆண்டாள் சொல்வது நாராயணனே நமக்கு எல்லா செல்வமும் தருவதாய் வாக்கு அளிப்பான்//
கலக்கல்! வித்தியாசமான சிந்தனை!
எந்தா நான் பறையறது! :)
//இதுக்குமட்டும் பரிசு கிடச்சா//
Shortlisted!
Kumaran's view plz! Makkalz view plz!
//ஷைலஜா said...
ReplyDeleteஅலங்காரம்னா அழகினை மேலும் செம்மைப்படுத்துதல் இதுல என்ன தப்பு//
அட! நான் தப்பே சொல்லலீயேப்பா!
//அலங்காரம் எப்பமே மத்தவங்க பாத்து வியக்கணும்-னு தானே செஞ்சிக்கறீங்க? சரி தான்! தப்பில்லை!// - இப்படித் தானே தப்பில்லைன்னு சொன்னேன்? :))
//எதுக்கு 3அலங்காரம்போடணும் இந்தபந்தல் ஓனர்னு தெரியலப்பா!//
கண்ணன் அலங்காரம்
கந்தன் அலங்காரம்
அம்மன் பாட்டு
All "three" touched 100 posts! :)
//பையத்துயின்ற....இது அரவணைத்துயில் எனும் நாகம்மேல படுத்துறங்கும் என இருக்கலாமோ//
ReplyDeleteஅப்போ பைய என்பதற்குப் பொருள் என்ன-க்கா? நாகமா?
பைய வா-ன்னு, மெல்ல வா-ன்னு பொருள்! ஆனா பைய=நாகமா? தெரியாதே!
அருமையாக இருக்கு கண்ணபிரான்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteSriram,
ReplyDeleteஒற்றெழுத்துகளுக்கு அரை மாத்திரை என்றாலும் யாப்பில் நேர் நிரை என்றெல்லாம் பிரிக்கும் போது ஒற்றெழுத்துகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அதனால் யாப்பிலக்கணப்படி ஒற்று மிகுமா மிகாதா என்று சொல்ல இயலாது. அதனால் ஆண்டாளின் திருவுள்ளத்தையும் யாப்பிலக்கணத்தை வைத்து உறுதி செய்ய இயலாது.
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//பையத்துயின்ற....இது அரவணைத்துயில் எனும் நாகம்மேல படுத்துறங்கும் என இருக்கலாமோ//
அப்போ பைய என்பதற்குப் பொருள் என்ன-க்கா? நாகமா?
பைய வா-ன்னு, மெல்ல வா-ன்னு பொருள்! ஆனா பைய=நாகமா? தெரியாதே!
5:03 AM, December 18, 2008
>>>>>>>>>>>>>>>..பைநாகப்பாய சுருட்டிக்கொண்டு என்று காஞ்சிப்பெருமாள் கனிவண்ணன் பாடலில் இந்தவரிகள் படித்த நினைவு......ஐயாம் நாட் ஷ்யூர் ரவி! யாராவது விளக்கினால் நலம்.
பைநாகப்பகைகொடியானுக்கு என்ற சொற்றொடரை வைத்து அப்படி சொல்லியிருப்பீங்கன்னு நினைச்சேன் திருவரங்கப்ரியா அக்கா. நீங்க திருமழிசையாரின் பாசுரத்தைச் சொல்லியிருக்கீங்க. ரெண்டு இடத்துலயும் பைநாகம் என்னும் போது படமெடுத்த அரவு தான் சொல்லப்படுகின்றது. ஆனால் பையத் துயின்ற என்னும் போது எந்த வித ஆரவாரமும் இன்றி ஆசுவாசமாக யோக நித்திரை செய்யும் நிலை சொல்லப்படுகின்றது. அந்த நிலையில் அவன் அமைதியாகத் தூங்குவதைப் பார்த்தாலே நமக்கும் அமைதி தானாக வந்துவிடும் என்பது போல் அமைதியுடன் தூங்குகின்றானாம் - அதனை 'பையத் தூங்கும்' என்றாள் கோதை.
ReplyDelete'Has Andaal said, 'Dont read thirukkural?'
ReplyDeleteThis lured me to your blog to know the answer.
You have said that the word 'theekkural' does not refer to Thirukkural.
Ok. But I would have liked to see a clear point as to whether the book Thirukkural was referred to in any of the alzwaar's passuram, especially, the azwaar by name Periyaazwaar and this Andaal, who is said to be his adopted daughter.
If they had referred to the book anywhere in their ouvre, it would be crystal clear to us that they read it leading us to a firm conclusion.
If they hadn't too, and other contemporaries had referred to, even then, it would be obvious to us that father-daughter duo would have read it.
Because, they were erudite scholars in ancient Tamil literature, which helped them acquire a deep mastery of the language, which, in turn, served them as an ideal vehicle for bakti outpourings.
Why didn’t you do that search? You seem to be au fait with the oeuvre of all azwaars; and it would have been just a labour of love to you (You said that in a reply to a feedbacker here, didnt you?).
Please come up with your results: Have these two saints, or any other azwaar referred to the book called Thirukkural in their oeuvre?
You will understand the importance of my query if you appreciate the fact that being an erudite schlar herself, she wouldn’t have written a word like தீக் குறளை சென்று ஓதோம், because, anyone could be misled to take it to mean that she is indeed referring to the book and forbidding people from reading it.
Why should she do that? What did she get from it? Is the book against the worship of Thirumaal, her God? Can a scholar deprecate a Tamil book like Thirukkural?
Such misgiving, however tiny it is, or misleading impression, however insignificant it may be, is a good prod for a sensitive soul like her, to be alert enough to redraft her poetry.
She is impeccable. She has a snow-white character. She is beyond reproach or criticism. She is above board. With such qualities, do you think, she was so careless to leave a negative impression, which has been exploited by you in this blog?
Definitely not.
I, for one, can’t say she is not aware of the book. Because, she is not far away in historical chronlogoy. But the book is far away. And it must have been a household name then; and must have been in the shelves of her father.
I am not a scholar. You are. So, you need to rise to the occasion.
My next letter tomorrow on Kumaran feedback and yours rejoinder.
/ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி.../
ReplyDeleteகிட்டதட்ட அருணகிரியாரும் இப்படிச் சொல்லறாரு:
ஈதலும், பல கோலால புஜையும், ஓதலும் குண ஆசார நீதியும், ஈரமும், குரு சீர்பாத சேவையும்...
/கிரிசை = கிரியை = கர்ம யோகம் //
ReplyDeleteகிரியை -ன்னா செயல் மட்டும் தானே - இதிலே எங்கே 'யோகம்' வந்தது?
இதைத்தான் reverse order ன்னு சொன்னீங்களா!
reverse order ன்னு ஒத்துக்க முடியாது -
சரணம் அடைதலும் செயல்தானே - அதுவும் கர்மயோகம் தானே - அப்படிப்பட்ட பார்த்தா எல்லாமே செயல்தான் - ஆனா அது, ஒரு யோகமா செய்யப்படும் செயலா இருப்பின் - கர்மம் கர்மயோகம் ஆகிறது - சரணம் அடைதலும் அப்போ கர்ம யோகம்!
கண்ணன் (கீதை (3.5)) செல்லுவான்:
ந ஹி கச்சித் க்ஷணம்பி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்| : (ஒருகணமும் செயலில் ஈடுபடாமல் யாராலும் இருக்க இயலாது)
செயல் இல்லாத நிலை அது பரமனை அடைந்தபின் தான்!
//பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்//
ReplyDeleteஇப்படி செயலில்லாமல் துயில்வதனால்தானோ பரமன்!?!
வேலை கொடு
ReplyDeleteவேலைக் கொடு
இந்த எடுத்துக்காட்டு இன்னும் எளிதாக மேலே சொன்ன இலக்கண விதியை விளக்கும் என்று நினைக்கிறேன்.
வேலை கொடு என்னும் போது பணி செய்யும் வாய்ப்பைக் கொடுக்க வேண்டுகிறார்கள் என்ற பொருள் வரும் - தீக்குறளை சென்றோதோம் என்னும் போதும் இதே பொருள்.
வேலைக் கொடு என்னும் போது வேல் + ஐ + கொடு என்று பிரிந்து கூரிய ஆயுதமாகிய வேல் என்னும் ஆயுதத்தைக் கொடு என்று பொருள் தரும். இங்கு வேலை'க்' கொடு என்று ககர மெய் மிகுந்திருப்பதைக் காணலாம்.
பையத்துயின்றபபரமன்....யோகநித்திரையில் ஆழ்ந்திருக்கும் நிலை எனவும் கேள்விப்பட்டேன்!
ReplyDeleteகுமரன் (Kumaran) said...
ReplyDeleteபைநாகப்பகைகொடியானுக்கு என்ற சொற்றொடரை வைத்து அப்படி சொல்லியிருப்பீங்கன்னு நினைச்சேன் திருவரங்கப்ரியா அக்கா. நீங்க திருமழிசையாரின் பாசுரத்தைச் சொல்லியிருக்கீங்க. ரெண்டு இடத்துலயும் பைநாகம் என்னும் போது படமெடுத்த அரவு தான் சொல்லப்படுகின்றது. ஆனால் பையத் துயின்ற என்னும் போது எந்த வித ஆரவாரமும் இன்றி ஆசுவாசமாக யோக நித்திரை செய்யும் நிலை சொல்லப்படுகின்றது. அந்த நிலையில் அவன் அமைதியாகத் தூங்குவதைப் பார்த்தாலே நமக்கும் அமைதி தானாக வந்துவிடும் என்பது போல் அமைதியுடன் தூங்குகின்றானாம் - அதனை 'பையத் தூங்கும்' என்றாள் கோதை.
7:29 AM, December 18, 2008
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.....
குமரன் !! உங்க தகவல் மிகச்சரி..நான் சந்தேகமாயும் இப்படி இருக்கலாமோ என்வும் பைய என்பதை குழப்பிவிட்டேன் ... மன்னிக்கணும்
ஆமாம் பையன் என்கிற தமிழ்சொல் இதிலிருந்து வந்ததா
பையன்_ பொண்ணுதான் கவனிங்க:)
//karikkulam said...
ReplyDelete'Has Andaal said, 'Dont read thirukkural?'
This lured me to your blog to know the answer.//
ஹா ஹா ஹா!
வாங்க karikkulam! Sorry for a bit late reply!
//But I would have liked to see a clear point as to whether the book Thirukkural was referred to in any of the alzwaar's passuram//
Why u wanna see this in letter?
If thatz the case, every poet should be in a compulsion to quote yester year's poet...which is kinda mind boggling!
//Why didn’t you do that search? You seem to be au fait with the oeuvre of all azwaars//
ஹா ஹா ஹா!
//You said that in a reply to a feedbacker here, didnt you?)//
புரியலையே! யாருக்கு என்ன சொன்னேன்?
//You will understand the importance of my query//
Yes, I do! Thatz why I named the post like this, to wipe out misunderstanding if any! and to put in proper light!
//She is impeccable. She has a snow-white character. She is beyond reproach or criticism//
No one is beyond criticism, even The Lord! Constructive Criticism is the key! Emperumaan likes it, in fact!
முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான்!
சிறு-பேர் அழைத்தனவும் சீறி "அருளாதே"!
//I am not a scholar. You are. So, you need to rise to the occasion//
ஹா ஹா ஹா!
I am not a scholar! I am just a schooler! :)
அடியேன் சிறிய சிறிய ஞானத்தன்!
//If they had referred to the book anywhere in their ouvre, it would be crystal clear to us that they read it leading us to a firm conclusion//
ReplyDeleteNo way!
ஆண்டாள் சொன்ன குறளையில் ச்-என்பது வரவில்லையே! அது ஒன்றே போதாதா?
ஆனாலும் உங்க மனசு கேக்கலை! வெளக்கம் ரொம்ப கேக்குது! அதானே! :))
ஆழ்வார்கள் திருக்குறளைப் போற்றி உள்ளார்கள்! சொல்லப் போனா சில குறட்பாக்களை அப்படியே எடுத்து ஆண்டும் உள்ளார்கள்!
அந்தப் பாசுரங்கள் உங்களுக்கு வேணுமா?
நீங்களே தேடிப் பார்த்தீர்களா? இல்லை அடியேனோ, குமரனோ தான் தர வேண்டுமா? :)
ஜிராவையும் உதவி கேட்கிறேன்! அவரும் தேடித் தருவார்!
அல்லது அன்பர்கள் யார் தந்தாலும் உகப்பே!
//அக-அலங்காரம் செஞ்சிக்கிட்டா அக(அல)ங்காரம் அகன்று விடும்!//
ReplyDeleteசூப்பர்.
உங்களுக்கு எழுத - ஷையக்காவுக்கு பின்னூட்டமிட - ஆனா எனக்கோ படிக்கவே மூச்சு வாங்குதப்பா :)
//ஜீவா (Jeeva Venkataraman) said...
ReplyDelete/ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி.../
கிட்டதட்ட அருணகிரியாரும் இப்படிச் சொல்லறாரு:
ஈதலும், பல கோலால புஜையும், ஓதலும் குண ஆசார நீதியும், ஈரமும், குரு சீர்பாத சேவையும்...//
சூப்பர் ஜீவா!
ஆமா...கிட்டத்தட்ட அதே தான்!
பிச்சை = ஈதலும், சரி!
ஐயம் = ?
ஐயத்துக்கு அருணையார் ஆளும் சொல் என்ன?
ஜீவா (Jeeva Venkataraman) said...
ReplyDelete/கிரிசை = கிரியை = கர்ம யோகம் //
கிரியை -ன்னா செயல் மட்டும் தானே - இதிலே எங்கே 'யோகம்' வந்தது?//
ஜீவா
சரியை, கிரியை, ஞானம், யோகம்-ன்னு நீங்க பாக்குறீங்க!
ஆனால் கோதை கிரியை+யோகம் இணைக்கிறாளே!
"செய்யும் கிரிசைகள்" என்கிறாள்! கிரிசை-ன்னாலே செயல் தானே! அப்பறம் என்ன செயல்-செயல்கள் ன்னு சொல்லணும்?
யோகம் = ஆனந்தம், உவப்பு!
உய்யும் ஆறு என்று எண்ணி, "உகந்து"
செய்யும் "கிரிசைகள்" கேளீரோ?
கிரிசை+உகந்து=கர்ம+யோகம்!
//reverse order ன்னு ஒத்துக்க முடியாது//
இப்போ ஒத்துக்குவீங்களா? :)
//சரணம் அடைதலும் செயல் தானே//
ReplyDeleteஇல்லை!
உன்னருளன்றி, என்னால் தனியாகச் செயல் எதுவும் செய்ய முடியாது என்று "உணர்வது" சரணாகதி!
உணர்வது வேறு, செய்வது வேறு!
//சரணம் அடைதலும் அப்போ கர்ம யோகம்!//
இல்லை!
சரணம் = யோகம்!
இதில் கர்மா இல்லை!
"உணர்தல்" மட்டுமே!
"உணர்ந்து", கர்மாக்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும்!
சர்வ தர்மா (incl. கர்மா) - பரித்யஜ்ய...
மாம் ஏகம் சரணம் வ்ரஜ!
கர்மாவை விடச் சொல்லலை!
வாழ்வதே கர்மா தானே! உண்ணாமல் உறங்காமல் எப்படி இருக்க முடியும்? ஜீவன் முக்தர்களும் வாழ்தல் என்னும் கர்மாவைச் செய்கிறார்களே!
கர்மாவை விடச் சொல்லலை!
கர்மாவைத் தியாகம் செய்யச் சொல்கிறார் (பரித்யஜ்ய)!
கர்மாவை இறைவன் பொருட்டு செய்யச் சொல்கிறார்! இறைவன் திருவுள்ள உகப்புக்கு கர்மாக்கள் அமையணும்!
//செயல் இல்லாத நிலை அது பரமனை அடைந்தபின் தான்!//
அப்போதும் செயல் indirect-ஆ உண்டு! சொல்லட்டுமா? :))
//சரியை, கிரியை, ஞானம், யோகம்-ன்னு நீங்க பாக்குறீங்க!//
ReplyDeleteஇல்லை, கே.ஆர்.எஸ் - என் பார்வை - இவையெல்லாம் ஒன்றில்லாமால் இன்னொன்றில்லை என்பது - அதில் ஒரு asc order அல்லது desc order இல்லை என்பது! (அது உங்கள் வார்த்தை விளையாட்டு என்றாலும் :))
@ஜீவா
ReplyDelete//இவையெல்லாம் ஒன்றில்லாமால் இன்னொன்றில்லை என்பது//
மிகவும் சரியே ஜீவா! ஒன்று இன்னொன்றுக்கு அடி கோலும்!
ஞான, கர்ம, பக்திகளும் அப்படித் தான்!
பக்தி செய்யும் போது ஒருவருக்கு அப்பர் குருபூசை பார்த்து ஞானம் உதிக்கலாம்!
கர்மா செய்யும் போது, ஒருவருக்கு, மிகவும் குவிந்து போய் பக்தி வரலாம்!
ஆனால் இவை அத்தனையும் இறைவனின் சரணம் என்ற நிலைக்கு இட்டுச் செல்லும் வரையிலான உபாயங்கள்! உபேயம் என்பது இறைவன் என்று தெளிந்து விட்டால், உபாயங்களை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்க மாட்டோம்! ஞானம்/கர்மம்/பக்தி-யையும் பரித்யஜ்ய என்று சொல்லிவிடுவோம்! :)
//(அது உங்கள் வார்த்தை விளையாட்டு என்றாலும் :))//
ஹா ஹா ஹா! கண்ணன் தீராத வார்த்தை விளையாட்டுப் பிள்ளை!
//அதில் ஒரு asc order அல்லது desc order இல்லை என்பது!//
ஓ...நான் சென்ற பதிவு பதிலில் தெளிவாச் சொல்லலை போல! மன்னிக்கவும்! asc order அல்லது desc order என்று சொன்னது ஞானம்=1, கர்மம்=2, பக்தி=3 என்ற பொருளில் அல்ல!
கண்ணன் விட்ட இடத்தில் இருந்து கோதை துவங்கறா-ன்னு சொன்னீங்களே! அதுக்குச் சொன்னேன்!
விட்ட இடத்தில் துவங்கினா, அதுக்கும் மேலே தானே கன்டினியூ பண்ணியிருப்பா? எதுக்கு திருப்பியும் கண்ணன் சொன்னதையே திரும்பவும் ரிவர்ஸ்-ல வந்து ரிப்பீட் பண்ணுறா? -என்ற பொருளில் கேட்டேன்! அதான்!
What I meant saying was, Kothai didnt continue from where Kannan stopped, but rather changed the approach of educating people, by putting herself in their shoes! :)
//நீங்க திருமழிசையாரின் பாசுரத்தைச் சொல்லியிருக்கீங்க//
ReplyDeleteWhere is that paasruam, Kumaran?
In fact, he sang:
பைநாகப்பாய் சுருட்டிக்கொள்
பைநாகப்பாய் விரித்துக்கொள்.
These two paasurams are very famous, but not included in the NDP, which gave him the title பிரான்.Because, he gave orders to his God.
திருமழிசைப் பிரான்.
The God, who obyed his two orders, is today called சொன்ன வண்ணம் செய்த பெருமாள்.
Thus, we can say he has used a special word, பாய் to mean படம்.
Does such meaning exist in the simple பைநாகம் or பையத்துயின்ற? I wonder.
//பையத்துயின்ற....இது அரவணைத்துயில் எனும் நாகம்மேல படுத்துறங்கும் என இருக்கலாமோன்னு எனக்கு தோன்றுகிறது தவறாகவும் இருக்கலாம்
ReplyDelete//
தயக்கம் தேவையில்லை. யார்யாரோ அவர்களுக்குத் தோன்றிய பொருளைத் தேடி அநுபவிக்கும்போது, நீங்கள் செய்தால் என்ன?
இறையனுபவம் இறுதியில் அவரவர் சொந்த அநுபவ்மே.
பிறர் சொன்ன பொருளை விரும்பினால் எடுத்த்துக் கொள்ளலாம்.
//தீக்குறளை சென்றோதோம் பற்றி தெளிவாகச் சொன்னதற்கு நன்றி - ஆனாலும் இது திருக்குறளைத் தான் சென்றோதக்கூடாது என்று ஆண்டாள் சொல்லிவிட்டாள் என்று இனி மேலும் எழுதிக் கொண்டிருப்பார்கள். திராவிட சிசுவைப் பற்றி எழுதுவது போல//
ReplyDeleteஹா ஹா ஹா!
அவர்கள் கடன் வெறுப்பு காட்டிக் கிடப்பதே!
நம் கடன் பணி செய்து கிடப்பதே!//
You, the blogger, treat the Thiurppavai both as literature and religion.
If you say, 'No.only as lit.', that, too, is acceptable to me now.
Treating it as lit., you interpret it word for word, as much as you know - either on your own, or on hearsay.
Thus, what is being done here is literary criticism.
You have interpreted that Andal is not referring to the book; and many have agreed with you here. And, further, to me, you have replied that Andaal and her passurams are not beyond criticism.
Thus, you enjoy the liberty of free expression.
But your rejoinder to Kumaran, or, your tom-toming him, is rather impatient of others criticising it the way they want, and can.
Dont you think they, too, should enjoy the liberty (and in their case, they take it 100 percent lit.) to say that indeed, the poet has a dig at the famous book of maxims.
Why cant they say that?
விருப்பு, வெறுப்பு - இரண்டுமே, கடன்களாகும்.
விருப்பைக் காட்டுவது நுங்கள் கடப்பணி என்றால், வெறுப்பைக் காட்டுவது அவர் கடப்பாடே!
Literary criticism can be both negative and positive.
For e.g. I can say, on reading Thirukkural, I dont find it good. You can say, on reading the same book, you find it good.
Both are literary criticism. Any doubt? One should not feel superior to other!
An outsider like me, is eager to read both!
தீக்குறளை சென்றோதோம் பற்றி தெளிவாகச் சொன்னதற்கு நன்றி - ஆனாலும் இது திருக்குறளைத் தான் சென்றோதக்கூடாது என்று ஆண்டாள் சொல்லிவிட்டாள் என்று இனி மேலும் எழுதிக் கொண்டிருப்பார்கள். திராவிட சிசுவைப் பற்றி எழுதுவது போல//
ReplyDeleteThis is kumaran.
No last word can be said on interpretation of a paasuram whose authoress left the world thousands of years ago.
All that we can do, is interpret it the way we like and can.
This blogger is doing that. And you called it தெளிவு. That is your liberty. Ok.
Why do you pass saracastic comments on other interpreations?
Pl read this again, blogger!
ReplyDeleteWhy should she do that? What did she get from it? Is the book against the worship of Thirumaal, her God? Can a scholar deprecate a Tamil book like Thirukkural?
Such misgiving, however tiny it is, or misleading impression, however insignificant it may be, is a good prod for a sensitive soul like her, to be alert enough to redraft her poetry.
She is impeccable. She has a snow-white character. She is beyond reproach or criticism. She is above board. With such qualities, do you think, she was so careless to leave a negative impression, which has been exploited by you in this blog?
---------------------------------------
You took it to mean I am finding fault with your way of treating a saint as you like. You replied that she is not beyond criticism. No. that is not relevant to my point.
My point is:
Dont you think a scholar like her will leave room for doubt as to her intentions, which can lend itself to a negative interpretation of taking a dig at a fellow Tamil sage-poet like Valluvar, who, as you hve written in your new blog entry, was read and cherished by her and her contemporaries including her adopted father?
This is my question. We cant reply authortiatively. Because, all conjectives based on own likes and dislikes. But you can attempt, why not?
பறை=பேச்சு அதாவது வாக்கு
ReplyDeleteஇங்கே ஆண்டாள் சொல்வது நாராயணனே நமக்கு எல்லாசெல்வமும் தருவதாய் வாக்கு அளிப்பான்.
மலையாளப்பறை இதுதானே!
This is Sailaja.
பறை is a verb in Tamil, now not popular. But it retains its ancient meaning in Malaylam, and is a common currency in their daily conversations.
Here, Andaal uses it as noun. Ravi can say, has the word been used as noun by another Tamil poet?
He will give you பறை. Sailaja interprets it to mean 'wealth'
I request her to go the blog maintained by one N.Ganesan of NASA. A few days ago, he interprets the word amazingly, using a number of references from ancient lit, unlike her who bases hers just on conjectures of her own.
Ganesan has also arrived at the same meaning of Wealth i.e the God will her wealth. But he arrived at via different route.
Enjoy reading him, Sailaja!
@karikkulam
ReplyDeleteஉங்க பேர் மிகவும் நல்லா இருக்கு!
கரிக்குலம்? or கரிக்குளம்??
கரிக்குளம்=குளத்தில் அன்று அரிக்கு கரி "ஆதிமூலமே" என்பதுவோ?
கரிக்குலம்=இல்லை அந்த வேழவேந்தன்(கஜேந்திரன்) வழியில், வழி வழி வந்து ஆட்செய்வதாலோ?
இல்லை...ஆனைமுகப் பெம்மானுக்கு ஆட்பட்ட குலமோ?
இல்லை...ஏதேனும் இயக்கப் பெயர், ஊர்ப் பெயர், இலக்கியப் பெயரோ...அறியத் தாருங்களேன் :)
@karikkulam
ReplyDelete//You, the blogger, treat the Thiurppavai both as literature and religion//
தவறு இல்லையே! ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை!
இலக்கியம்/ஆன்மீகம் என்று கத்தி வைத்து வெட்டிப் பிரிக்க நான் யார்?
ஆண்டாள் இலக்கியமாத் தான் எழுதினாளா? சமயமா எழுதலியா?
இல்லை சமயமாத் தான் எழுதினாளா? இலக்கியமா எழுதலையா? - சொல்ல முடியுமா?
ஒரு கவிஞன் பிரசவித்த குழந்தை=கவிதை!
அதை எப்படி வேண்டுமானாலும் அடுத்தவர் கொஞ்சலாம்!
ஆனால் அதன் "ஜீவனை மட்டும்" அந்தக் கவிஞன் பார்வையில் தான் பார்க்க வேண்டும்!
ஆண்டாளுக்கு இலக்கியம்/ஆன்மீகம்-ன்னு வெட்டிப் பிரிக்கத் தெரியாது!
அவள் காதலில் காமமும் உண்டு! கடவுளும் உண்டு!
//But your rejoinder to Kumaran, or, your tom-toming him//
ஹா ஹா ஹா...
என்னங்க கோவம் உங்களுக்கு? :)
//Dont you think they, too, should enjoy the liberty (and in their case, they take it 100 percent lit.) to say that indeed, the poet has a dig at the famous book of maxims//
இங்கே யாரும் எதிர்க் கருத்தை அவமதிக்கவில்லையே!
குறளை = திருக்குறள் தான் என்று சொல்லுங்கள்! வேணாம்-ன்னு சொல்லலை! ஆனால் அதற்குத் தக்க தரவுகளை/உறுதிகளையும் சேர்த்தே தர வேண்டும்!
சும்மா போகிற போக்கில் பேசிவிட்டுச் செல்லக் கூடாது அல்லவா? அதுக்குப் பேரு கருத்துச் சுதந்திரம் அல்ல! கருத்துப் பொறுப்பின்மை! :)
எப்படி, ஆழ்வார்கள் குறளைப் பற்றி வேறு இடங்களில் பேசி உள்ளார்களா என்று எங்களை ஆதாரம் தரச் சொல்கிறீர்களோ, அதே போல், நீங்களும் குறளை=குறள் தான் என்பதையும் நிரூபிக்க வேண்டும்!
நான் நிரூபிக்க மாட்டேன்! குற்றம் மட்டுமே சுமத்துவேன்!
நீங்கள் நிரூபிக்க வேண்டும்! பதில்கள் மட்டுமே தர வேண்டும்!
= இதுவா ஆரோக்கியமான கருத்துரையாடல்? யோசித்துப் பாருங்கள்!
//விருப்பைக் காட்டுவது நுங்கள் கடப்பணி என்றால், வெறுப்பைக் காட்டுவது அவர் கடப்பாடே!
Literary criticism can be both negative and positive//
Yes and I have answered this in my previous sentence! Please do criticize, negatives are welcome! Thatz what we are asking too!
Criticize, just dont Accuse! :)
//An outsider like me, is eager to read both!//
Me too!
Though, I am the author of this post, I usually stand aside after posting and read it as an outsider...oru blogger anna enakku cholli kodutha tip ithu! :)
//You took it to mean I am finding fault with your way of treating a saint as you like//
ReplyDeleteசேச்சே...இல்லீங்க!
//...who, as you hve written in your new blog entry, was read and cherished by her and her contemporaries including her adopted father?//
yes, antha new post vaasicheengala?
But, there, I havent given the exact pasurams which are the replica of kuraL!
Word by word replica of kuraL in Thiruvaaimozhi can be a next topic for exploration!
//Because, all conjectives based on own likes and dislikes//
Not necessarily! There are great people who give the conjectives from an author's stand point than their own stand point!
If your read Sri Bhashyam, you can know more of advaita, than reading an advaita follower himself :)
//But you can attempt, why not?//
Exactly!
Karikulam ayya! you can attempt too, why not? :)
Pl do "prove" that kuRaLai=Thirukkural!
//karikkulam said...
ReplyDeleteHere, Andaal uses it as noun. Ravi can say, has the word been used as noun by another Tamil poet?//
சாமீ...எதுக்கு என்னைய இழுக்குறீங்க இங்கன? ரவி கேன் சே-வா? ரவிக்குப் பெருசா ஒன்னும் தெரியாதுங்க! இது ஒரு வம்பாப் போச்சுப்பா! வரவர, எல்லாரும் இப்படியே சொல்றாங்க :)
//he interprets the word amazingly, using a number of references from ancient lit, unlike her who bases hers just on conjectures of her own//
Totally wrong karikkulam.
Shylaja akka is only guessing in a comment. She is not writing a post on this and drawing references. Had she done so, then u can tell "conjectures of her own"!
Why this sarcasm? Why this rushing to criticize? he he! neenga chonnathu thaan! ungalukkum porunthum! :))
BTW,
Thanks for the Na.Ganesan ayya's post! Awesome! Enjoyed quikly reading & commenting on it!
Herez the link:
http://nganesan.blogspot.com/2008/12/parai-etymology.html
ஷைல்ஸ்!
பறையை வாசிச்சிப் பாருங்க! :)
நல்லா இருக்கு கணேசன் ஐயா விளக்கம்!
********
//பறை தானியத்தில் படிந்து அளக்கும் அளவைக்கருவி. அதை நம் முன்னோர்கள் தாளக்கருவி ஆக்கினர்//
குடம், கடம் ஆக வில்லையா?
கப், ஜலதரங்கம் ஆக வில்லையா?
ஹா ஹா ஹா!
அதே போல பறையோ? ரசித்தேன்! :)
********
கரிக்குலம் ஐயா
ReplyDeleteஇன்னிக்கி ஏதோ இந்தப் பக்கம் வந்த போது, ஆழ்வார்கள்-திருக்குறள் பற்றிய உங்கள் கேள்வியை மீண்டும் கண்டேன்! இதோ நீங்கள் கேட்ட திருக்குறள் பாசுரம்!
ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னைசொல் நீர்மடுத்து
- நம்மாழ்வார்
ஊரவர் கவ்வை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்
- திருக்குறள்
இது போல் இன்னும் ஆங்காங்கே அருளிச் செயல்களில் இருக்கு! திருக்குறள் சொற்களை, தம் பாசுரங்களில் அப்படியே எடுத்து ஆளுகிறார்கள்! ஆழ்வார்களிடத்தில் திருக்குறள் தாக்கம் நிறையவே உண்டு!
http://madhavipanthal.blogspot.com/2008/02/blog-post.html
திருக்குறளில் முதல் அதிகாரமே திருவடிகள் தான்!
திருவாய்மொழியில் முதல் பத்தே திருவடிகள் தான்!
இப்படி வள்ளுவர் வாழ்வியலை...
அறத்தால்->பொருள்
பொருளால்->இன்பம்
இன்பத்தால்->வீடு
என்பதை ஆழ்வார்கள் வாழ்ந்தே காட்டிச் சென்றார்கள்! காமத்தை ஒதுக்காது, கண்ணனுக்கே உரியது காமம் என்று அதையும் புருஷார்த்தமாக (மானுட நோக்கம்) காட்டிச் சென்றனர்!
இதே போல் தோழி கோதையும், கன்று குணிலா என்று சிலப்பதிகார வரிகளை எல்லாம் அப்படியே எடுத்தாளுவாள்! அவளுக்குத் தமிழிலக்கியம் மேலுள்ள காதலைப் பல இடங்களில் காணலாம்!