Sunday, December 21, 2008

மார்கழி-06: ஆண்டாள் ஒரு கம்யூனிஸ்ட்!

காலையில் எழுந்தவுடன் ஒங்க முதல் அசைவு என்னவா இருக்கும்? கொட்டாவி? காபி? பேப்பர்? காதலியின் ஃபோட்டோ? மீண்டும் போர்வை? கண்ணாடி? கழிப்பறை? எது? எது?? :)

புதிர்-06:
கோகுலத்தில் கண்ணனை அழிப்பதற்காக ஏவிவிடப் பட்ட "கொடிய அடியார்கள்" யார் யார்? :)
இந்தப் பாட்டிலேயே இரண்டு பேர் சொல்லப்படுகிறார்கள்!


காலையில் எழுந்தவுடன் சிலர் உள்ளங்கைகளைத் தேய்த்துப் பார்த்துக் கொள்வார்கள் போல! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல்! ஆண்டாளுக்கு என்ன ஸ்டைல்?

"அரி, அரி! அரி, அரி!" என்று அவன் பேரைச் சொல்லிக்கிட்டே எழுவது தான் அவள் ஸ்டைல்! அதை அவளே சொல்கிறாள்! - மெள்ள எழுந்து, அரி என்ற பேர் அரவம்! ஏன் இப்படி? என்ன காரணமா இருக்கும்?
நேற்று இரவு, இந்தக் காதலன் தொல்லை தாங்க முடியலை! படுத்தி எடுத்திட்டான்! அவன் இப்போ எழுந்திரிச்சா மீண்டும் அதோ-"கதி" தான்! "So Hurry, Hurry! Hurry, Hurry!" என்று வேகமாக எழுந்து விடுகிறாள் போல! :))

கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

புள்ளும் சிலம்பின காண்! புள் அரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய் முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி,

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து, "அரி" என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து, குளிர்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!



புள்ளும் சிலம்பின காண் = புள் என்றால் பறவை! பறவைகள் எல்லாம் சிலம்புகின்றன! கூவாமல் ஏன் சிலம்புகின்றன? திருவெம்பாவைப் பதிவிலேயே குறிப்பிட்டேன் அல்லவா?
சிலம்பில் பரல்கள் கம்மி! கொலுசு மாதிரி கிடையாது! அதுனால நடக்கும் போது சத்தம் வரும், ஆனா தொடர்ந்து ஜல்ஜல் வராது! விட்டு விட்டு வரும்!

* அதே போலத் தான், பறவைகளும் விட்டு விட்டுக் கூவுது! ஸோ, அது சிற்றஞ் சிறு காலை! இன்னும் பகலவன் எழவில்லை-ன்னு அர்த்தம்!
* ஆனா சூரியனின் சிவப்பை லைட்டா பார்த்த மாத்திரத்தில், இந்த சீனே மாறிப் போயிரும்! எல்லாப் பறவையும் வேகமாக் கூவ ஆரம்பிக்கும்!
அடுத்த முறை விடிகாலை-ல எழுந்து இதை நோட் பண்ணிப் பாருங்க! (அதெல்லாம் ரொம்ப கஷ்டம் கேஆரெஸ்; வேணும்-ன்னா உனக்குச் சிக்கன் பிரியாணி வாங்கித் தாரேன்; ஆளை வுடு! :)))

புள் அரையன் கோயிலில் = பட்சி+ராஜன் = புள்+அரையன்! எப்படி அழகா வடமொழியில் இருந்து தமிழுக்கு மாத்திடறா பாருங்க கோதை?
புள்+அரையன் = பறவைக்கு எல்லாம் அரசன் = கருடன்!
புள்+அரையரையன் = கருடனுக்கும் அரசன் = பெருமாள்!
அப்போ புள்ளரையன் கோயில்-ன்னா அது கருடன் கோயிலா? இல்லை பெருமாள் கோயிலா? :)

ஹிஹி! ஆண்டாள் ஒரு சூப்பர் காதலி-ங்க! பெருமாளைச் சுத்தி இருக்குறவங்க எல்லாரையும் இழுத்து இழுத்துப் பாடுவா!
பரமன் "அடி" பாடுவா! உத்தமன் "பேர்" பாடுவா! ஆனா அவனை மட்டும் பாடவே மாட்டா! வேணும்-ன்னே வெறுப்பேத்துவா! புள் அரையன் கோயில்-ன்னு, கருடன் கோயிலா மாத்திருவா கள்ளி! :)

இன்றைக்கும் வில்லிபுத்தூரில் அது புள்ளரையன் கோயில் தான்! பெருமாளுக்கும் கோதைக்கும் நிகராக, அதே ஆசனத்தில், கருடனும் சரி சமமாக நிற்கிறான்! பொதுவாக, கருடன் பெருமாளைப் பார்த்தவாறு, எதிர்ப்புறத்தில் சேவகனாய்த் தானே நிற்பான்? இங்கு மட்டும் அப்படி இல்லை! ஏன்?


அரங்கனில் கலந்து விட்டாள் கோதை! ஆனால் தந்தைக்கோ ஊரறிய மகளின் கண்ணாலம் பண்ணிப் பார்க்க ஆசை! ரங்க மன்னாராக வில்லி வந்து ஊரறியக் கரம் பற்றுகிறேன்-ன்னு சொல்லிட்டான் அரங்கன்! ஆனால் மண நாளன்றோ அரங்கன் வர லேட்டாகுது! அரங்க வாசிகள் அவனை விட்டால் தானே? சும்மா....ஊர் வேலையே பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி?

இங்கோ இந்த ஊர் வேற மாதிரி பேச ஆரம்பிக்குது! கருடன் வேத சொரூபம்! அவனுக்கு உண்மை விளங்கி விட்டது! ரங்க மன்னாரைப் பரபர-வென்று புயல் வேகத்தில் பறந்து அழைத்து வருகிறான்! அந்த வேகம் ரங்க மன்னாருக்கே பயத்தைக் கொடுத்ததாம்! கல்யாணத்துக்கு சீவிச் சிங்காரிச்சி வந்தான் அரங்கன்! அடியவன் கருடனோ வேர்த்து விறுவிறுத்து வந்தான்! பார்த்தாள் ஆண்டாள்! சேர்த்தாள் ஆசனத்தில்!
தன் வருங்காலக் கணவன் கண்ணன்! இன்னும் கண்ணாலமே ஆகலை! அவன் பணியாட்கள் மேல், அவனைக் காட்டிலும் அவளுக்குள்ள பரிவு தான் என்ன!
இன்றைக்கு முதலாளி-தொழிலாளி தோளோடு தோள் நிற்கும் கம்யூனிசம் பேசுகிறோம்! ஆனால் அதை ஆண்டாள் அன்றே செய்தாள்!
இன்றும் முதலாளி அம்மாவோடும், முதலாளி ஐயாவோடும், தொழிலாளி கருடன், ஒரே சிம்மாசனத்தில், தோளோடு தோள் நிற்கிறான்!

என் தோழீ கோதை! அம்மாடி! உனக்குத் தான் எத்தனை முகங்கள்! எத்தனை அகங்கள்! அதில் கம்யூனிஸ்ட்டும் ஒன்றோ? ஆண்டாள் திருவடிகளே சரணம்!


வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ = தூய்மையான வெள்ளை நிறச் சங்குகள்! அவையெல்லாம் நம்மை விளிக்கின்றன! அந்தச் சத்தம் கூடவா காதுல விழலை?
பிள்ளாய் எழுந்திராய் = அட, எழுந்திருடீ பொண்ணே!

பேய் முலை நஞ்சுண்டு = பூதனை என்னும் கம்சனின் பேய் அவனைக் கொல்ல வந்ததே! அவள் முலைப்பால் குடித்து மலைப்பால் அல்லவா மலைக்க வைத்தான்?
கள்ளச் சகடம் கலக்கு அழிய = வண்டிச் சக்கரமாய் வந்தான் சகடாசுரன்! அவன் கலக்கையும் ஒரு கலக்கு கலக்கினானே நம்ம கண்ணன்? "கலக்கு" என்பதை "லோக்கலா" ஆண்டாளும் பயன்படுத்தறா பாருங்க! சும்மா கலக்கறா-ல்ல? :)

கால் ஓச்சி = காலை ஓச்சினானாம் சக்கரமாய் வந்த சகடன் மீது!
அப்போ கண்ணனைக் காத்தது யார்? அவன் திருவடிகள் தானே! இதான் திருவடிப் பெருமை!
* நம்மையும் காத்து,
* அவனையும் காத்து,
* அவனுக்கும்-நமக்கும் பாலமே இந்தத் திருவடிகள் தான்! திருவடிகளே சரணம்-ன்னு வரிக்கு வரி சொல்வது இப்போ நல்லாப் புரிந்திருக்குமே?


வெள்ளத்து அரவில் = பாற்கடல் வெள்ளத்தில், அரவமான பாம்பின் மீது
துயில் அமர்ந்த வித்தினை = துயில்+"அமர்ந்த" மூல புருஷன்!
ஹா ஹா ஹா! உட்கார்ந்து கிட்டே தூங்குறான் போல பெருமாள்! செம காமெடி!:) சரி, அது எப்படிங்க துயில்+அமர முடியும்?

பரமபதத்தில் அமர்ந்த கோலம்! பாற்கடலில் கிடந்த கோலம்! அதான் ஒரு சேரப் பாடுகிறாள்!
வெள்ளத்து அரவில் = துயில்! வித்தாக இருக்கும் பரத்தில் = அமர்ந்து!

இறைவனின் நிலைகள் ஐந்து! (பின்னூட்டத்தில் யாராச்சும் சொல்லுங்கப்பா! பதிவு நீளுது)
1. பரத்தில் = அமர்ந்தும்,
2. வியூகத்தில் = கிடந்தும்,
3. விபவத்தில் = நடந்தும்,
4. அந்தர்யாமியான நம் உள்ளத்தில் = நின்றும்
5. அர்ச்சையில் = இந்த நாலையுமே காட்டி அருளும் எம்பெருமான்!

இந்தப் பாசுரத்தில் கருடனையும்-சேஷனையும் ஒருங்கே சொல்கிறாள் பாருங்கள்! புள்ளரையன் + வெள்ளத்து அரவு! இப்படிச் சேராத இரு பகைவரையும் கூடச் சேர்த்து வைக்கிறாள்!

அந்த வித்தினை "உள்ளத்தில்" கொண்டு, முனிவர்களும்+யோகிகளும்,
லேட்டாயிருச்சே-ன்னு அலறி அடிச்சிக்கிட்டு எழுந்திரிக்காம, சீக்கிரமாகவே விழித்துக் கொண்டு, "அரி" என்ற பேர் அரவம் = ஹரி ஓம்! ஹரி ஓம்!
அது உள்ளம் புகுந்து, குளிர்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!!


வாசகர்கள் அனைவரின் "உள்ளமும் புகுந்து", அவர்கள் மனங்களை எல்லாம் "குளிர்வித்து", அடியார்களுக்கு நலம் எல்லாம் "அருள" வேணுமாய், ஆண்டாள்-அரங்கனை, வேண்டிக் கொண்டு அமைகிறேன்! "அரி" என்ற பேர் அரவம்! ஹரி ஓம்!

35 comments:

  1. ஹய்யா இன்னிக்கு நான் மீ த பர்ஸ்டாய் வந்துட்டேனே! :))

    ReplyDelete
  2. //ஹிஹி! ஆண்டாள் ஒரு சூப்பர் காதலி-ங்க! பெருமாளைச் சுத்தி இருக்குறவங்க எல்லாரையும் இழுத்து இழுத்துப் பாடுவா!
    பரமன் "அடி" பாடுவா! உத்தமன் "பேர்" பாடுவா! ஆனா அவனை மட்டும் பாடவே மாட்டா! வேணும்-ன்னே வெறுப்பேத்துவா! //

    சூப்பர் காதலின்னு கரீக்ட்டாத்தான் சொல்லியிருக்கீங்க அண்ணாச்சி ! (அனுபவம் பேசுதா அண்ணாச்சி! வருத்தப்படாதீங்க உங்க புகழ் பாட நாங்க இருக்கோம்!)

    ReplyDelete
  3. //இறைவனின் நிலைகள் ஐந்து! (பின்னூட்டத்தில் யாராச்சும் சொல்லுங்க! பதிவு நீளுது)
    1. பரத்தில் = அமர்ந்தும்,
    2. வியூகத்தில் = கிடந்தும்,
    3. விபவத்தில் = நடந்தும்,
    4. அந்தர்யாமியான நம் உள்ளத்தில் = நின்றும்
    5. அர்ச்சையில் = இந்த நாலையுமே காட்டி அருளும் எம்பெருமான்!///

    அருமை!

    இங்கு இப்போது தெரிந்துக்கொண்டேன் முன்னாடியே வந்து முதல் முதலாய் ஒரு விசயம் புதுசா தெரிஞ்சுக்கிட்டாச்ச்ய்

    நன்றி அண்ணாச்சி! :)

    ReplyDelete
  4. //காலையில் எழுந்தவுடன் ஒங்க முதல் அசைவு என்னவா இருக்கும்? கொட்டாவி? காபி? பேப்பர்? காதலியின் ஃபோட்டோ? மீண்டும் போர்வை? கண்ணாடி? கழிப்பறை? எது? எது?? :)
    //

    ஒவ்வொரு நாள் ஒவ்வொன்னு. விழித்தும் விழிக்காத நிலையில் பல நாட்கள் கராக்ர வஸதே லக்ஷ்மி என்று தன்னிச்சையாக மனம் சொல்லிக் கொண்டிருக்க உள்ளங்கை பார்ப்பதும் நடந்திருக்கிறது - விடிந்தும் விடியாத காலை நேரத்தில் இருட்டில் உள்ளங்கை தெரிவதில்லை. :-)

    உள்ளங்கை பார்த்த பின்னர் சமுத்ர வஷனே தேவி என்று சொல்லத் தொடங்கி பூமியின் மேல் இடக்காலை வைத்து எழுந்திருப்பதும் பின்னர் ஹரிர் தாதா ஹரிர் போக்தா என்று சொல்லிக் கொண்டே நடப்பதும் தன்னிச்சையாக நடக்கின்றன. பழக்க தோசம். :-)

    ReplyDelete
  5. இன்னைக்கு போட்ட புதிருக்கும் இறைவனின் ஐந்து நிலைகள் என்ன என்ற கேள்விக்கும் நீங்களே பதில்கள் சொல்லிவிட்டீர்களே இரவிசங்கர். ஏன்? :-)

    வில்லிபுத்தூரில் மட்டுமே பார்க்கக் கூடிய சரியாசனத்தைப் பற்றி மிக அழகாகச் சொன்னீர்கள். அதே போல் புள்ளரையனையும் வெள்ளத்து அரவினையும் ஒரே பாசுரத்தில் சொன்னதை அழகாக எடுத்துச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  6. //குமரன் (Kumaran) said...
    இன்னைக்கு போட்ட புதிருக்கும் இறைவனின் ஐந்து நிலைகள் என்ன என்ற கேள்விக்கும் நீங்களே பதில்கள் சொல்லிவிட்டீர்களே இரவிசங்கர். ஏன்? :-)//

    ஆகா! நான் பதில் சொல்லலையே குமரன்! புதிரில் கேட்ட கேள்விக்கு நிறைய பேர் இருக்காங்களே! கோதை ரெண்டு பேரை மட்டும் தானே பாட்டில் காட்டுறா? மீதி இருக்கும் கொடி-அடியார் பேர் எல்லாம் சொல்லுங்க!

    பரம்/வியூகம் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க குமரன்! விபவம்-ன்னு தான் சொல்லி இருக்கேன்! அவதாரங்கள்=விபவம் ன்னு பல பேருக்குத் தெரியாது அல்லவா?

    ReplyDelete
  7. KRS,

    அருமை, ஆண்டாள் பாசுரத்தை நானும் வாசிச்சு இருக்கேன்...இந்த அளவுக்கெல்லாம் பொறுமையா அர்த்தம் தெரிஞ்சுதான் வாசித்தது இல்லை...

    உண்மையிலே அழகா விளக்கம் கொடுத்திருக்கீங்க... உங்களின் உழைப்பு வியப்பளிக்கிறது... :)

    ReplyDelete
  8. கோகுலத்தில் கண்ணனை அழிப்பதற்காக ஏவிவிடப் பட்ட "கொடிய அடியார்கள்" யார் யார்? :)
    இந்தப் பாட்டிலேயே இரண்டு பேர் சொல்லப்படுகிறார்கள்>>>>>>>>>>>>>>>>>

    பூதனையும் சகடாசுரனும்!

    (நேற்று கோழி சிலம்பல் இன்று புள்ளா?:) இந்த காற்சிலம்பிலிருந்துதான் சிலமபல் வந்திருக்குமோ?)

    ReplyDelete
  9. மெள்ள எழுந்து, அரி என்ற பேர் அரவம்! ஏன் இப்படி? என்ன காரணமா இருக்கும்?
    >>>>>..காலை தூங்கி எழுந்திருக்கும்போது மெதுவாகத்தான் எழுந்திருக்கணுமாம். விஞ்ஞானம்கூறுவது அதுதான் .இதயத்திற்கு நல்லதென்று..பாருங்க உங்க தோழி ஆண்டாள் எம் பி பிஎஸ்!

    ReplyDelete
  10. ஆண்டாள் ஒரு சூப்பர் காதலி-ங்க! பெருமாளைச் சுத்தி இருக்குறவங்க எல்லாரையும் இழுத்து இழுத்துப் பாடுவா!
    பரமன் "அடி" பாடுவா! உத்தமன் "பேர்" பாடுவா! ஆனா அவனை மட்டும் பாடவே மாட்டா! வேணும்-ன்னே வெறுப்பேத்துவா! புள் அரையன் கோயில்-ன்னு, கருடன் கோயிலா மாத்திருவா >>>>>>>>>>>>>>>>>


    ஆமா சாமிக்கு முன்னாடி பூசாரிகளைகவனிக்கவேண்டி இருக்கே! ஐஸ் வச்சி அவங்களை மஸ்கா பண்லேன்னா காரியம் ஆகுமா?:) ஆண்டாள் புத்திசாலிப்பெண்!

    ReplyDelete
  11. இன்றைக்கு முதலாளி-தொழிலாளி தோளோடு தோள் நிற்கும் கம்யூனிசம் பேசுகிறோம்! ஆனால் அதை ஆண்டாள் அன்றே செய்தாள்!
    இன்றும் முதலாளி அம்மாவோடும், முதலாளி ஐயாவோடும், தொழிலாளி கருடன், ஒரே சிம்மாசனத்தில், தோளோடு தோள் நிற்கிறான்>>>>>>>>>>>>>

    நல்ல சிந்தனை இது! உங்க தோழி ஆண்டாள் அன்பேஉருவான பெண்! அன்புதான் சமத்துவம் போதிக்கும்!

    ReplyDelete
  12. இந்தப் பாசுரத்தில் கருடனையும்-சேஷனையும் ஒருங்கே சொல்கிறாள் பாருங்கள்! புள்ளரையன் + வெள்ளத்து அரவு! இப்படிச் சேராத இரு பகைவரையும் கூடச் சேர்த்து வைக்கிறாள்<<<<<<<<<<<<<<<<<

    ஆஹா அருமை! பகைவனுக்கு அருளச்சொல்லும் பாவை உங்க ஆண்டாள்!

    ReplyDelete
  13. வித்து என்ற ஒரே சொல்லில் விருட்சமாக விஷயங்களைத்தருகிறாள் ஆண்டாள்!
    வள்ளல்மனம் இருந்தாலே ஒழிய இத்தகைய சொற்கள் வர வாய்ப்பில்லை! அவள் திருவடி சரணம்!

    இங்கு பேய்முலை நஞ்சு என்பது இயற்கையில் மனிதனுக்குள்ள அகங்காரம். கள்ளச்சகடம் என்பது காமம்.

    ம்னிதனின் வாழ்க்கைச்சக்கரத்தில்
    சுழலும் காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் என்ற அறுவகை துர்க்குணங்களை அறுத்துக்கொண்டு அரியென்ற நாமத்தை காதில் வாங்கிக் கொண்டால் நிரந்தரமான ஆனந்தத்தை அடைகிறான் என்பதை இப்பாடல் வேதாந்தக் கருத்தாக சொல்கிறது!

    ReplyDelete
  14. புள் அரையன் கோயிலில் என்ப‌த‌ற்கு இப்ப‌டி ஒரு விள‌க்க‌மா? அருமை கேஆர்எஸ்,

    //பரமன் "அடி" பாடுவா! உத்தமன் "பேர்" பாடுவா! ஆனா அவனை மட்டும் பாடவே மாட்டா! வேணும்-ன்னே வெறுப்பேத்துவா!//

    காத‌லில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம‌ப்பா

    //துயில்+"அமர்ந்த" மூல புருஷன்!
    ஹா ஹா ஹா! உட்கார்ந்து கிட்டே தூங்குறான் போல பெருமாள்! செம காமெடி!:) சரி, அது எப்படிங்க துயில்+அமர முடியும்?//

    குசும்பு ம்ம்ம்ம்

    //இந்தப் பாசுரத்தில் கருடனையும்-சேஷனையும் ஒருங்கே சொல்கிறாள் பாருங்கள்! புள்ளரையன் + வெள்ளத்து அரவு! இப்படிச் சேராத இரு பகைவரையும் கூடச் சேர்த்து வைக்கிறாள்!//

    அருமையான‌ யோசிப்பு.


    //1. பரத்தில் = அமர்ந்தும்,
    2. வியூகத்தில் = கிடந்தும்,
    3. விபவத்தில் = நடந்தும்,
    4. அந்தர்யாமியான நம் உள்ளத்தில் = நின்றும்
    5. அர்ச்சையில் = இந்த நாலையுமே காட்டி அருளும் எம்பெருமான்!
    //

    க‌ண்ணுக்கும் ம‌ன‌துக்கும் விருந்து.

    விய‌க்க செய்கின்ற‌து உங்க‌ள் ப‌திவு. வாழ்த்துக‌ள்

    ReplyDelete
  15. //வித்து என்ற ஒரே சொல்லில் விருட்சமாக விஷயங்களைத்தருகிறாள் ஆண்டாள்!
    வள்ளல்மனம் இருந்தாலே ஒழிய இத்தகைய சொற்கள் வர வாய்ப்பில்லை! அவள் திருவடி சரணம்! //

    ரிபிட்டோய்ய்ய்ய்ய்

    ஷைலாக்கா விள‌க்க‌ங்க‌ளும் அருமை

    ReplyDelete
  16. @ஷைலஜாக்கா
    //"உங்க" தோழி ஆண்டாள் அன்பே உருவான பெண்! அன்புதான் சமத்துவம் போதிக்கும்!//
    //பகைவனுக்கு அருளச்சொல்லும் பாவை "உங்க" ஆண்டாள்!//

    ஹா ஹா ஹா
    என்னாக்கா இது? வரிக்கு வரி, "உங்க" ஆண்டாள்?
    மொத்தமா தாரை வாத்துக் கொடுத்துட்டீங்க போல! :)

    அரங்கத்துக்குத் தானே நாங்க தாரை வார்த்துக் கொடுத்திருக்கோம்? "நம்ம" ஆண்டாள்-ன்னு சொல்லுங்க! :)

    ReplyDelete
  17. இது ரொம்ப தாமதம்.. நான் நேத்து ராத்திரி பாக்கும்போது இல்லை.. இப்போ பாத்தா.. ரெண்டு பதிவு..

    ஆண்டாளே கொஞ்சம் “கவனிம்மா”

    ReplyDelete
  18. //புள்+அரையன் = பறவைக்கு எல்லாம் அரசன் = கருடன்!//

    அப்போ கோவில்களில் அரையர் சேவை நடக்கும்லயா, அரையர் அப்புடின்னா என்ன அர்த்தம் ?

    ReplyDelete
  19. //கோகுலத்தில் கண்ணனை அழிப்பதற்காக ஏவிவிடப் பட்ட "கொடிய அடியார்கள்" யார் யார்? :) //
    பூதனை
    வத்ராசுரன்
    கபித்தாசுரன்
    சகடாசுரன்

    இதுக்கு மேலே ஆண்டாள கேட்டு தான் சொல்லணும்.

    ReplyDelete
  20. இந்தப் பாடலின் இராகம்:
    சங்கரா....
    பரணமு....!

    ReplyDelete
  21. //1. பரத்தில் = அமர்ந்தும்,
    2. வியூகத்தில் = கிடந்தும்,
    3. விபவத்தில் = நடந்தும்,
    4. அந்தர்யாமியான நம் உள்ளத்தில் = நின்றும்
    5. அர்ச்சையில் = இந்த நாலையுமே காட்டி அருளும் எம்பெருமான்! //

    ஸ்ரீமந் நாராயணனுக்கு 24 திருக்கோலங்கள்.

    கேசவன்
    நாராயணன்
    மாதவன்
    கோவிந்தன்
    விஷ்ணு
    ஹரி
    மதுசூதனன்
    திரிவிக்ரமன்
    வாமனன்
    ஷ்ரீதரன்
    ரிஷிகேசன்
    பத்மநாபன்
    தாமோதரன்
    சங்கர்ச்ஷணன்
    வாசுதேவன்
    பிரத்யும்னன்
    அநிருத்தன்
    புருஷோத்தமன்
    அதோஷன்
    நரசிம்மன்
    அச்சுதன்
    ஜனார்த்தனன்
    உபேந்திரன்
    கிருஷ்ணன்.

    ரவி அண்ணா, குமரன நீங்க தான் சரி பார்க்கணும்.

    ReplyDelete
  22. //கோதை ரெண்டு பேரை மட்டும் தானே பாட்டில் காட்டுறா? மீதி இருக்கும் கொடி-அடியார் பேர் எல்லாம் சொல்லுங்க!//

    பேயாக வந்த பூதனை, சக்கரமாக வந்த சகடாசுரன், கொக்காக வந்த பகாசுரன், கன்றாக வந்த வத்ஸாசுரன், விளா மரமாக நின்ற அரக்கன், குதிரையாக வந்த கேசி, கொக்காக வந்தான் பகாசுரன்.

    அனைவரும் கண்ணனின் திருவடி சம்பந்தம் பெற்று உய்ந்தனர்.

    ஆண்டாள் அரங்கமன்னார் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  23. //துயில் அமர்ந்த//
    தியானத்தில் அமர்தல்-ன்னு கேள்விப் பட்டிருக்கோம்!

    //வித்து//
    நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் - நாரணன்
    என்றுமெம் முக்திக்கு வித்து.

    //அரவம்//
    அரவம் - குண்டலினியைக் குறிப்பது என்றால்,
    இப்போ யோக மார்க்கமா கே.ஆர்.எஸ்?!

    ReplyDelete
  24. நம்ம ஆண்டாள் புகழைப் பாட இப்படி ஒரு பதிவரா? அடடா...ஸ்ரீவில்லிபுத்தூர் காரங்க நாங்க ஆஜராகலன்னா எப்படி? வந்தாச்சு...திருப்பாவை புக் தொலைஞ்சு போச்சேன்னு வருத்தமா இருந்துச்சு ...அதான் டெய்லி ஒரு பாசுரம் இங்க கிடைக்குதே பாடிட வேண்டியது தான் !

    ReplyDelete
  25. @ஜீவா
    //துயில் அமர்ந்த//
    தியானத்தில் அமர்தல்-ன்னு கேள்விப் பட்டிருக்கோம்!

    அட ஆமாம்! யோக நித்திரை-ன்னு சொல்றோமே!
    நித்திரைக்குத் = துயில்
    யோகத்துக்கு = அமர்தல்!
    நன்றி ஜீவா! சரியா எடுத்துக் கொடுத்தீங்க!

    ReplyDelete
  26. //அரவம் - குண்டலினியைக் குறிப்பது என்றால்,
    இப்போ யோக மார்க்கமா கே.ஆர்.எஸ்?!//

    இருக்கலாம் ஜீவா! ஆதிசேடன் தான் பதஞ்சலியாக வந்து ஈசனை வழிபட்டு யோகம் தந்தது! அதனால் அப்படிக் கொள்ளலாம்!

    மேலும் ஸ்ரீ வைணவருக்குச் செய்யப்படும் பஞ்ச சம்ஸ்காரங்களில், இந்த யோகத்தைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பார்கள்! சுமுஷ்ணா நாடி முதற்கொண்டு, தலைமேல் படமெடுத்து விரியும் அரவம் பற்றிய குறிப்புகள் வரும்!

    ஆனால் இந்தப் பாட்டில் குண்டலினி எழும்புவதாக ஆண்டாள் குறிக்கிறாளா-ன்னு தெரியலை!

    வெள்ளத்து அரவில் அமர்ந்த வித்து-ன்னு வரும் போது = குண்டலினியால் எழுந்த அரவில், இறைவன் வித்தாக வந்து அமர்ந்து கொள்கிறான் என்று வேண்டுமானால் கொள்ளலாம்! அடியேன் சொன்னது பொருந்துகிறதா?

    விநாயகர் அகவல் இதோ (ஒப்பு நோக்க):

    ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

    ஆறாதாரத்து அங்குச நிலையும்
    பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

    இடை பிங்கலையின் எழுத்தறி வித்துக்
    கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி

    மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
    நான்று எழுபாம்பின் நாவில் உணர்த்திக்

    குண்டலி அதனில் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

    மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்தறிவித்தே!

    ReplyDelete
  27. A place or two is offensive or vulgar to read. But you cant avoid, given you style which has no limits.

    Good attempt, over all.

    ReplyDelete
  28. நம்மையும் காத்து,
    * அவனையும் காத்து,
    ------------------------------------

    Your interpretation is surprising.

    Though it can be justified that an avatar had to face struggles, and prayed to the non-avatar God in heaven, in times of imminent dangers - like Raman praying to Sivan etc. before the battle on the shore of Ramnad- yet, dont you feel that it is strange that God should save himself?


    நம்மையும் காத்து,
    அவனையும் காத்து,

    The nature of காத்து (saving or protecting oneself from dangers) should be understood differenty.

    நம்மையும் காத்து - the word kaathu here -

    அவனையும் காத்து - the word kaathu here -

    should be taken not as similar - on the same wavelength. The nature applied to humans, and that applied to the Lord - are different.

    This is because, the Lord is beyond any danger from humans. Even if there are, during his avatars, they are not dangers in the same sense that they are to us.


    In writing together thus:

    நம்மையும் காத்து,
    அவனையும் காத்து,

    you seem to have clubbed them together; and given a meaning that brings down the Lord to the level of humans in a negative way.

    Kanndadassan is reported to have written in a film lyric:

    கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
    அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்.

    Immediately, he was asked: Can God be subject to birth and death?

    The poet thought it over and conceded he had committed a faux pas. He changed the word சாக வேண்டும்.

    கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
    அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்.

    So, we need to be delicate when we have to make reference to the so-called கலியாண குணங்கள் of the Lord.

    Am I correct, Mr blogger?

    ReplyDelete
  29. //karikkulam said.....//

    வாங்க கரிக்குலம்!

    //A place or two is offensive or vulgar to read//

    ஆகா, எங்கே? சொல்லுங்க!

    //But you cant avoid, given you style which has no limits//

    ஹா ஹா ஹா! இது என்ன வானமே எல்லை-ன்னு சொல்லுறாப் போலவே இருக்கே! எங்கே vulgarஆக தொனித்தது என்று சொல்லி உதவுங்கள்!

    //Good attempt, over all//

    நன்றி! உங்களுக்கு குறள்-ஆண்டாள் பதிவில் நீண்ட பதில் சொல்லியிருந்தேனே! பார்த்தீங்களா?

    ReplyDelete
  30. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    @ஷைலஜாக்கா
    //"உங்க" தோழி ஆண்டாள் அன்பே உருவான பெண்! அன்புதான் சமத்துவம் போதிக்கும்!//
    //பகைவனுக்கு அருளச்சொல்லும் பாவை "உங்க" ஆண்டாள்!//

    ஹா ஹா ஹா
    என்னாக்கா இது? வரிக்கு வரி, "உங்க" ஆண்டாள்?
    மொத்தமா தாரை வாத்துக் கொடுத்துட்டீங்க போல! :)

    அரங்கத்துக்குத் தானே நாங்க தாரை வார்த்துக் கொடுத்திருக்கோம்? "நம்ம" ஆண்டாள்-ன்னு சொல்லுங்க
    <<<<<<

    ச்சும்மா இந்தப்பதிவுக்குமட்டும் அவங்க உங்க ஆண்டாள் ஆனால் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் அவள் நம்ம ஆண்டாள்தான்!!

    ReplyDelete
  31. Raghav said...
    //புள்+அரையன் = பறவைக்கு எல்லாம் அரசன் = கருடன்!//

    அப்போ கோவில்களில் அரையர் சேவை நடக்கும்லயா, அரையர் அப்புடின்னா என்ன அர்த்தம் ?


    >>>>>>>>புள் அரையன் =பட்சிராஜன் ஆகிறதுன்னா வெறும் அரையர்=ராஜர் அதாவதுராஜா ஆகிறார்னு தோன்றது ராகவ்.

    எதுக்கும் சான்றோர்கள் இந்த சபைக்குவந்து விளக்கம் சொன்ன்னா தேவலை!

    ReplyDelete
  32. வாங்க கரிக்குலம்!//

    கரிக்குளம் என்க.

    It refers to the dockyard in harbours, the dock, to be exact, where coal loading and unloading is done. The dockyard labourers there have blackened faces and limbs, even their dress so.

    A symbol of proletariat to whom your azwaars are unknown today!

    I have not read your other replies to me in the other thread. Will do so; but wont reply. I feel I am an odd man out here and there.

    Vulgarity or otherwise is an individual perception. What is so to me, may not be so to others. Otherwise, I would have come across a lone voice or two pointint that out, wouldnt I?. The bridal mysticism of Andaal is not correcly understood and brought out, for e.g

    I dont want to elaborate. Sorry, Sir!

    Bye Blogger! Keep to your word of dealing with all stanzas in Thiruppavaiin the style you have announced for yourself in the sidebar of your opening page. I assure regular reading, but without commenting upon on them.

    ReplyDelete
  33. //சும்மா கலக்கறா-ல்ல? :)//

    அவ மட்டுமா? நீங்களும்தான்! :)

    ReplyDelete
  34. idhu dhan mudhal murai unga varennu nenakaren.. un sandhegathuku ellam arumaiyaa badhil kedaichiruku..thodarattum ungal paNi.

    koncha kaalamaa thiruppavai padichitu varen.."kalakku azhiya" - apdinnu en use pannangannu oru sandhegam??romba yosichen..
    inga vandhu paarthen..oru cm smile..aanaa purinjudhu..nandri.

    ReplyDelete
  35. //Maayaa said...
    sandhegathuku ellam arumaiyaa badhil kedaichiruku..thodarattum ungal paNi//

    நன்றி-ங்க மாயா!
    என் பணி இப்ப தொடருதோ இல்லையோ,
    இறை அருளால்...பந்தலில் பணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கு! :)

    //"kalakku azhiya" - apdinnu en use pannangannu oru sandhegam??romba yosichen..
    inga vandhu paarthen..oru cm smile..aanaa purinjudhu..nandri//

    :)
    Sorry, அப்போ, ஜாலியா பொருள் சொல்லிட்டுப் போயிட்டேன்!
    கலக்கு அழிய = அவன் கலக்கையும் ஒரு கலக்கு கலக்கினானே நம்ம கண்ணன்? :)

    விளக்கமான பொருள் இதோ:
    கலக்கு = கலக்கம்!

    ஏன் கலங்கினான் சகடன்?
    = கள்ளச் சகடன்!
    = அதனால் கலங்கினான்!

    கள்ளமாக அழிக்க வந்தான்! வண்டிச் சக்கரத்தின் உருவில் சுற்றிக் கொண்டு வந்தான்! தன் சாமார்த்தியம், தான் எப்படியும் இந்த விஷயத்தில் ஒரு கலக்கு கலக்கிருவோம் என்ற அதீத நம்பிக்கை!

    ஆனால் கலக்கலாம் என்று வந்தவன் கலங்கி விட்டான்!
    கலக்கம் என்றால் என்ன? நாம் எப்போ கலங்குவோம்?

    நாம் ஒன்று மிகவும் விரும்பி நினைக்க,
    ஆனால் இன்னொன்று நடக்கும் போது,
    அடுத்து என்ன செய்வது என்று தெரியாது கலங்குவோம்!

    அதான் கலக்கம்! ஒரே கலக்கமா இருக்கு-ன்னு சொல்றோம்-ல்ல? மயக்கமா? கலக்கமா?-ன்னு பாட்டு வேற ஞாபகம் வருது! :)

    கலக்கம் = குழப்பமான, மீண்டு வர முடியாத நிலைமை!
    ஒரே "கலங்கலா" இருக்கும் நிலைமை!

    அப்போது, கண்ணன் அந்தக் கள்ளச் சகடனை அழிக்கவில்லை!
    அவன் "கலக்கினை" மட்டுமே அழித்தான்!

    கலக்க வந்தவன், மாட்டிக் கொண்டு, கலங்கிப் போய் நிற்கிறான்!
    என்ன செய்வதென்று தெரியவில்லை!

    தன் அறிவின் எல்லை, ஆற்றலின் எல்லை அவ்வளவு தான் என்று தெரிந்து விட்டது!
    இனி என்ன செய்வது? கலக்கமாய் நிற்கும் அவனுக்கு....அவன் கலக்கு அழிக்கிறான்! எப்படி?

    = கால் ஓச்சி!
    = கள்ளச் சகடம், கலக்கு அழிய, கால் ஓச்சி!
    = கோலோச்சி என்பது போல் கால் ஓச்சி!
    = அரசன் கோலோச்சுதல் போல், அரசர்க்கு அரசன் காலோச்சுகிறான்!

    கால் ஓச்சி = திருவடிகளைத் தூக்கி இதோ என்று காட்டிக் கொடுக்கிறான்!
    எதற்கு?
    = தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது! அதனால் மாட்டிக் கொண்ட சகடனின் மனக்கவலை மாற்ற, அவன் கலக்கு அழிய...கால் ஓச்சி...இதோ திருவடிகள், இதோ திருவடிகள்!...

    இறைவன் அடியேனைப் போல உள்ள கள்ள உள்ளத்தினரைக் கூட அழிப்பதில்லை!
    கள்ள உள்ளத்தின் கலக்கினை(கலக்கத்தினை) மட்டுமே அழிக்கிறான்!

    கள்ளச் சகடம்
    கலக்கு அழிய
    கால் ஓச்சி
    ...
    உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ!

    ஹரி ஓம்!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP