மார்கழி-08: கீழ்வானம் சிவக்குமா? வெளுக்குமா?
கண்ணன் தான் பொய் சொல்லுவான்? ஆண்டாளுமா? அடக்கடவுளே!
புதிர்-08:
இன்னிக்கு ஒரு தனிப் பதிவாகவே வரப் போவுது! பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய புதிர்! இன்னும் ஒரு மணி நேரத்தில்! வெயிட் மாடி :)
ஆண்டாள் என்னாங்க அப்படிப் பொய் சொல்லிட்டா?
கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு = கீழ்வானம் முதலில் சிவக்குமா? வெளுக்குமா?
ஹிஹி! நீங்களே சொல்லுங்க பார்ப்போம்! போயி வெளியில் பாத்துட்டு வேணும்னாலும் வாங்க! :) ச்சே ஆண்டாள் பொய் சொல்ல மாட்டா-லே! இதுக்கு வேற காரணம் இருக்கும்-லே! இந்த கேஆரெஸ் சும்மா வம்பு பண்றான்-லே!
கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)
கீழ் வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான், பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து, உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்! கோதுகலம் உடைய
பாவாய், எழுந்திராய்! பாடிப் பறை கொண்டு!
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய,
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்,
ஆ-வா என்று ஆராய்ந்து, அருள் ஏல்-ஓர் எம் பாவாய்!
கீழ் வானம் வெள்ளென்று = அதிகாலையில், கீழ் வானம் வெளுக்குது! எப்படி? சிற்றஞ் சிறு காலையில் சிவக்குமா? வெளுக்குமா?
எருமை சிறுவீடு மேய்வான், பரந்தன காண் = மாடுகள் மேய்ச்சலுக்கு அனுப்பப்படுகின்றன? எங்கிட்டு? வயலுக்கு அல்ல! அது மதியம் இல்லீன்னா மாலையில் தான்! இப்போ பக்கத்திலேயே இருக்கும் சிறு வீட்டுக்கு கழட்டி விடப்படுகின்றன!
சரி, அது என்ன சிறு வீடு? = கொல்லை! (out house)
கிராமத்து மக்களுக்குத் தெரியும் தானே! வீட்டின் பின் புறம் இருப்பது கொல்லை! அங்கிட்டு வைக்கோல் போட்டு வச்சிருப்பாங்க! சின்னதா செடிங்களும், புல்லும் கூட வளரும்!
காலங்கார்த்தால நமக்கு மட்டும் இல்ல, மாட்டுக்கும் சிற்றுண்டி தான்!
சிறிய+உண்டி தான்! அப்போ தான் ஒழுங்கா வேலை செய்ய முடியும்! சிற்றுண்டியா இல்லாம, பேருண்டி தின்னாக்கா பேஜாரு! :)
அதான் எருமைகளும் சிற்றுண்டியா கொல்லையில் புல்லை/வைக்கோலைத் தின்கின்றன! உச்சி வேளையில்/மாலையில் தான் பேருண்டி தின்ன, மேய்ச்சல் வயலுக்குப் போவும்! ஓக்கேவா? ஆண்டாள் விவசாயி வீட்டையெல்லாம் எப்படி நோட் பண்ணியிருக்கா பாருங்க! :)
எல்லாம் சரி? எதுக்கு எருமை மாட்டை மட்டும் சொல்லுறா கோதை?
ஹிஹி! பசு மாட்டை அவிழ்த்து விடணும்-ன்னு அவசியம் இல்லாமலேயே, வைக்கோலைப் போட்டாச் சிற்றுண்டி திங்கும்! பட் திஸ் எருமை மாடு நாட் லைக் தட்! :)
அவிழ்த்து விட்டே ஆவணும்! அதுக்கு மேய்ந்தே ஆகணும்! அப்போ தான் வேலை நடக்கும்! (போச்சு, வெளக்கஞ் சொல்லப் போயி, உண்மையெல்லம் வெளீல வருதா? என்னைய கிராமத்தான்-ன்னு முடிவே கட்டிட்டீங்களா? :))
மிக்குள்ள பிள்ளைகளும் = மீதி இருக்கும் பொண்ணுங்க எல்லாம் ரெடி!
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து = பாவம், நோன்புக்குக் கெளம்பிப் போக ரெடியா இருந்த அவிங்களையும, கொஞ்சம் இருங்கடீ-ன்னு வெயிட் பண்ண வச்சாச்சி!
உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் = எல்லாம் உனக்காகத் தான்! எல்லாரும் ஒன்னா போகலாம்-னு தான்! கம்பெனி கொடுக்க அவிங்க ரெடி! நீ ரெடியா?
அடுத்தவிங்களை வெயிட் பண்ண வைக்கக் கூடிய பாவத்தை விட பெரிய பாவம் உண்டா? உன் கட்டை பதறலை? எழுந்திரு டீ! Hey Girl, This is Team Work! How big or great you are, Sustain the Team Spirit ! :)
கோதுகலம் உடைய பாவாய், எழுந்திராய் = கோதுகலம்-ன்னா என்ன? சிறப்பு ப்ரியம்! சிறப்பு மகிழ்ச்சி! "குதூகலம்" என்ற வடமொழிச் சொல்லை, "கோதுகலம்" ஆக்குறாளோ ஆண்டாள்?
உன் பேரில் கண்ணனுக்கு கோதுகலம்! கண்ணன் பேரில் உனக்கு கோதுகலம்! அப்பறம் என்ன தூக்கம்? எழுந்திராய்!
பாடிப் பறை கொண்டு = பாடிக்கிட்டே எழுந்திருடீ ராசாத்தீ! அரி-அரி-ன்னு சொல்லிக்கிட்டே எழுந்திரு! நோன்புக்கு வேண்டிய பறையைப் பெற வேண்டுமே-ன்னு ஆசையோடு எழுந்திரு!
மாவாய் பிளந்தானை = மா (பறவை) = பறவையின் வாயைப் பிளந்தான் கண்ணன்! கொக்கு உருவத்தில் கொல்ல வந்த பகாசுரனை மூக்குடைச்சான்! பெரிய அலகைப் பிளந்தான்! (பீமன்-பகாசுரன் வேறு)
மல்லரை மாட்டிய = கம்சனின் அவையில், இரு பெரும் மல்லர்களை, மல்யுத்தத்தில் வென்றான்! "மல்"லாண்ட திண் தோள் மணிவண்ணா!
தேவாதி தேவனை = அனைத்து தேவதைகளையும் தன்னுள்ளே கொண்டவன்!
"பிற" தேவதைகளைத் தாழ்த்தாத "பர" தேவதை! முனியே, நான்முகனே, முக்கண் அப்பா என்று எல்லோரும் அவன் திருவடிவத்தில் இருக்கிறார்கள்!
விஸ்வரூப தரிசனம்! சிறு-கர்ம தேவதைகளான அக்னி முதற் கொண்டு, பெரும் புகழ் கொண்ட மகேஸ்வர சிவபெருமான் வரை, எல்லாரும் அவன் வடிவத்திலேயே இருக்கிறார்கள்!
விநாயகப் பெருமான், முருகப் பெருமான், சிவ பெருமான் என்று எல்லாப் பெருமான்களும் "எம்"பெருமானுக்குள் அடக்கம்!
தேவதைகளுக்கு எல்லாம் தேவதை! கடவுளர்க்கு எல்லாம் கடவுள்! பர+பிரம்மம்!
கட+உள் = எல்லாரையும் கடந்தும் உள்ளான்! எல்லார் உள்ளுக்குள்ளும் உள்ளான்!
தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால் = இந்தத் "தேவாதிதேவன்" தான் தேவராசப் பெருமாளாய், தேவப் பெருமாளாய், காஞ்சிபுரத்தில் நின்று சேவை சாதிக்கிறான்!
வரதராஜன், பேரருளாளன்! கச்சியம்பதியான்! அத்திகிரி நாதன்! கஜேந்திர வரதன்!
மனிதருக்கும், தேவருக்கும், அசுரருக்கும் அருள் செய்தால்? = அருளாளன்!
ஆனால் அரங்கனுக்கும், வேங்கடவனுக்குமே அருள் செய்தால்? = பேரருளாளன்!
* அரங்கனின் வீட்டில் தமிழ் ஓங்கியது யாரால்? = இராமானுசரால்!
* வேங்கடவனின் உண்மையான அடையாளம் நாரணனே என மீள் நிலைநாட்டியது யாரால்? = இராமானுசரால்!
* அனைத்து திவ்ய தேசங்களிலும், சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லிலும் செயலிலும் கொண்டு வந்தது யாரால்? = இராமானுசரால்!
இப்படி மற்ற பெருமாள்களின் பெருமைக்காக, தன்னுடைய இராமானுசரை விட்டுக் கொடுத்த பெருமாள், காஞ்சிபுரம் தேவப் பெருமாள்!
பெரிய பெருமாளான அரங்கனுக்கு விட்டுக் கொடுத்த பெருமாள் ஆகையாலே = "பெரிய-பெரிய பெருமாள்"! தேவாதி தேவன்! "நம்முடைய வரதன்"!
சென்று நாம் சேவித்தால் = அவனை நம்ம போயி இன்னிக்கி சேவிப்போம் வாருங்கள்! வாடா-ன்னா, அவன் நம்ம கிட்ட ஓடோடி வந்துருவான்! ஆனா நாமளே அடியெடுத்து வச்சி, அடியாரோடு அடியாராய்க் காத்துக் கிடந்து, அவனை எட்டி எட்டிச் சேவிக்கும் சுகம் வருமா?
ஆ-வா என்று = கூட்டத்தில் நம்மைப் பார்த்த மாத்திரத்தில் அவனுக்கு செம ஷாக்!
அடப்பாவி, நீயா வந்திருக்க? ரொம்ப தான் பிகு பண்ற ஆளாச்சே நீ? நீ எப்படிறா என்னைப் பாக்க வந்தே? "ஆ!" என்கிறான்! பின்னர் அன்போடு "வா!" என்கிறான்!
வீட்டுக்குள் திடீரென்று நம் நெருங்கியவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் வந்துட்டா "ஆ" என்கிறோம்-ல? உடனேயே, "ச்சே, வெளியவே நிக்க வச்சிப் பேசிக்கிட்டு இருக்கேன் பாரு! ஹே, உள்ளே வா" என்கிறோம்-ல? அதே தான்! "ஆ-வா" என்று பெருமாளும் சொல்கிறான்!
"ஆராய்ந்து" அருள் = திருவெம்பாவைப் பதிவில் லைட்டாகச் சொன்னேன்! இதை இன்னொரு பாசுரத்தில் பிற்பாடு விளக்குகிறேன்! இப்போதைக்கு சுருக்கமா...
லூசுத்தனமா கேட்டதையெல்லாம் கேட்டபடியே கொடுத்து விடாது, நாம் கேட்டது நல்லதா? உலகத்துக்கு நல்லதா? மற்றவர்க்கும் நல்லதா? ஏன், நமக்கே நல்லதா? என்று "ஆராய்ந்து" அருள்பவன்!
ஏல்-ஓர் எம் பாவாய் = தேவாதி தேவனை ஏல் (ஏற்றுக் கொள்ளுங்கள்)! தேவாதி தேவனை ஓர் (நினைத்துக் கொள்ளுங்கள்)!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
தேவாதி தேவன், தேவப் பெருமாள் திருவடிகளே சரணம்!
வரதா! வரதா! ஹரி ஓம்!

காஞ்சி வரதன் - கருட சேவை!

வட நாடுகள்ல, திருப்பள்ளியெழுச்சி, சுப்ரபாதம் காலைல 9 மணிக்கு மேல தான் பாடி கோவில் திறப்பாங்கலாம்.. ஏன்னா.. பனி அதிகமா இருக்குறதால பெருமாள் கொஞ்ச நேரம் தூங்கட்டுமேன்னு.. அதுமாதிரி.. மாதவிப்பந்தல்ல லேட்டா திருப்பாவை பாடுறதா நினைச்சுக்கிறேன். :)
ReplyDelete//அரங்கனுக்கும், வேங்கடவனுக்குமே அருள் செய்தால்? = பேரருளாளன்! //
ReplyDeleteஅருமையான விளக்கம் அண்ணா. முக்தி தரும் கச்சி தனில் காட்சி அளிக்கும் தேவாதி தேவன்.
Vanakkam sir,
ReplyDeletePerumalkovil means kancheepuram and Varam thadhadi Varadhaha endru Sri vaishnavam praising Devaperumal.Thirvengadavanukku enna arul seidhar?I am requesting u to write about it later.
ARANGAN ARULVANAGA.
anbudan
k.srinivasan.
இது நம்மாழ்வார் அவர்களை எழுப்புவதாக அமைந்துள்ள அருமையான பாசுரம், காஞ்சிபுரம் பேரருளாளன் பெயர்காரணம் மிகவும் அருமை கண்ணன்
ReplyDeleteMani pandi
காலையில நிறைய டைப் ரிஃப்ரெஸ் செய்து அப்பறம் விட்டுட்டேன். இப்போ பார்த்த பதிவு இருக்கு. சிறுவீடு விளக்கங்கள் அருமை.
ReplyDeleteமல்லரை மாட்டிய = கம்சனின் அவையில், இரு பெரும் மல்லர்களை, மல்யுத்தத்தில் வென்றான்! "மல்"லாண்ட திண் தோள் மணிவண்ணா! திருப்பல்லாண்டையும் சேர்த்ததும் சிறப்பு.
பெரிய பெருமாள் பத்தி தெரியும் அதென்ன பெரிய-பெரிய பெருமாள். உண்மையாகவே கஞ்சி வரதன் பெரிய-பெரிய பெருமாளா?
வாழ்த்துகள்
அண்ணா, காஞ்சி வரதர் கருட சேவை போட்டோ கிடையாதுன்னு நினைக்கிறேன். மயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தான சீனிவாசப் பெருமாள் கருட சேவை போட்டோன்னு நினைக்கிறேன்.
ReplyDelete//லூசுத்தனமா கேட்டதையெல்லாம் கேட்டபடியே கொடுத்து விடாது, நாம் கேட்டது நல்லதா? உலகத்துக்கு நல்லதா? மற்றவர்க்கும் நல்லதா? ஏன், நமக்கே நல்லதா? என்று "ஆராய்ந்து" அருள்பவன்!//
ReplyDeleteசரிதான். சின்னக் குழந்தை கேட்குதேன்னு கேட்கிறதெல்லாம் கொடுத்துட முடியுமா? அதே போலத்தான். அழகான விளக்கம்.
கிழக்குவெளுத்ததம்மா கீழ்வானம் சிவந்ததம்மா கதிரவன் வரவுகண்டு கமலமுகம் சிரித்ததம்மா!!
ReplyDeleteபதிவைப்படிச்சிட்டு இருக்கேன்...*கலசம் பார்த்துட்டு வந்து பின்னூட்டமிடறேன்!!!
(*ரம்யாக்ருஷ்ணன் நடிக்கும் மெகாதொடர்!!!)))
//Raghav said...
ReplyDeleteஅண்ணா, காஞ்சி வரதர் கருட சேவை போட்டோ கிடையாதுன்னு நினைக்கிறேன்//
தனிச் சேமிப்பில் இருந்த படம் அது, ராகவ்! க்ளிக் பண்ணி பெரிதாகப் பார்க்கவும்! வரத முகம் நல்லாத் தெரியும்! மேலும் காவி-வெள்ளை மாலை சார்த்துவது பெரும்பாலும் வரதனே!
நீ சொன்னியேன்னு இன்னொரு முறை செக் மாடினேன்-ப்பா!
அது காஞ்சி வரதன் படமே தான்!!
http://www.pbase.com/svami/aani-garudan
! பட் திஸ் எருமை மாடு நாட் லைக் தட்! :)
ReplyDeleteஅவிழ்த்து விட்டே ஆவணும்! அதுக்கு மேய்ந்தே ஆகணும்! அப்போ தான் வேலை நடக்கும்! (போச்சு, வெளக்கஞ் சொல்லப் போயி, உண்மையெல்லம் வெளீல வருதா? என்னைய கிராமத்தான்-ன்னு முடிவே கட்டிட்டீங்களா>>>>>>>
எருமைவிஷயத்தை இவ்ளோ அருமையா சொன்ன உங்க மகிமைதான் என்னே என்னே!!
மிக்குள்ள பிள்ளைகளும் = மீதி இருக்கும் பொண்ணுங்க எல்லாம் ரெடி>>>
ReplyDeleteகோவைல பிள்ளைன்னா பொண்ணு கேர்ல்!
பையன்னா பிள்ளை அதாவது பாய்.
ஒருதடவ என் தம்பிமனைவிக்கு ஆஸ்பித்ரில குழந்தைபிறந்து பாக்கப்போனேன்,பக்கத்து ரூம்ல இருந்த கவுண்டரம்மா ஒருத்தங்க என்னை விசாரித்துவிட்டு ஏனுங்க அம்மிணி அவங்களுக்கு என்னகுழந்தைபொறந்திருக்குங்க எனக்கேட்டாங்க
நான் பிள்ளை என்றேன்
உள்ளபோய்பார்த்துவந்து அம்மிணி தப்பா சொல்லிபோட்டீங்க.பையன்ல பொறந்துருக்குது ன்னாங்க!
நான் மரியாதையா(திரு)முழிச்சேன் அப்றோம் லோகல் தம்பி வந்து விளக்கினார்!
கோதுகலம் உடைய பாவாய், எழுந்திராய் = கோதுகலம்-ன்னா என்ன? சிறப்பு ப்ரியம்! சிறப்பு மகிழ்ச்சி! "குதூகலம்" என்ற வடமொழிச் சொல்லை, "கோதுகலம்" ஆக்குறாளோ !
ReplyDelete>>>>>
பத்துவயசுல இந்தகோதுகலத்துக்கு நான் கோதுமைமாவுவைக்கும் பாத்திரம்னு நினச்சிருந்தேன்! சிறப்புப்ரியம் என்பது அப்றோமா தான் தெரிஞ்சது!
பாடிப் பறை கொண்டு = பாடிக்கிட்டே எழுந்திருடீ ராசாத்தீ! அரி-அரி-ன்னு சொல்லிக்கிட்டே எழுந்திரு! நோன்புக்கு வேண்டிய பறையைப் பெற வேண்டுமே-ன்னு ஆசையோடு>>>
ReplyDeleteone ore paRai!
என்ன பொருளில் இங்கவர்துன்னு சொல்லுங்க யாராவது
தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால் = இந்தத் "தேவாதிதேவன்" தான் தேவராசப் பெருமாளாய், தேவப் பெருமாளாய், காஞ்சிபுரத்தில் நின்று சேவை சாதிக்கிறான்!
ReplyDeleteவரதராஜன், பேரருளாளன்! கச்சியம்பதியான்! அத்திகிரி நாதன்! கஜேந்திர வரதன்!
மனிதருக்கும், தேவருக்கும், அசுரருக்கும் அருள் செய்தால்? = அருளாளன்!
ஆனால் அரங்கனுக்கும், வேங்கடவனுக்குமே அருள் செய்தால்? = பேரருளாளன்!
>>>>>>
தேவாதிதேவ ஸ்ரீ வாசுதேவ எனும்பாடல் நினைவுக்குவருகிறது!
பரமபுருஷன்=தேவாதிதேவன்.
காஞ்சிவரதராஜரை தேவாதிதேவனாய் தங்கள் கற்பனையில் சொல்கிறீர்களா அல்லது அப்படித்தான் பாவை கருதியதாக எங்கும் விளக்கம் இருக்கிறதா ரவி!
ராமானுஜவிவரம் சிறப்பு.
கருடசேவை ஏகாதசி நாளில் கண்ணுக்குப்புண்ணியமாய் மனசுக்கு நிறைவாய் இருக்கிறது
//ஷைலஜா said...
ReplyDeleteஎருமைவிஷயத்தை இவ்ளோ அருமையா சொன்ன உங்க மகிமைதான் என்னே என்னே!!//
யக்கா
என்னை இப்பிடித் திட்டிப்புட்டீயளே!
எருமை மகிமையா நானு? EKI!
இந்தக் கொடுமையைக் கேப்பார் இல்லையா? :))
அதே தான்! "ஆ-வா" என்று பெருமாளும் சொல்கிறான்>>>>>>>>>>>>>>>>>>>>>
ReplyDeleteஆவ் ஹிந்தில வா
ஆவ் வாவா என்றும் இருக்கலாம்!
ஆராய்ந்து" அருள் = திருவெம்பாவைப் பதிவில் லைட்டாகச் சொன்னேன்! இதை இன்னொரு பாசுரத்தில் பிற்பாடு விளக்குகிறேன்! இப்போதைக்கு சுருக்கமா...
ReplyDeleteலூசுத்தனமா கேட்டதையெல்லாம் கேட்டபடியே கொடுத்து விடாது, நாம் கேட்டது நல்லதா? உலகத்துக்கு நல்லதா? மற்றவர்க்கும் நல்லதா? ஏன், நமக்கே நல்லதா? என்று "ஆராய்ந்து" அருள்பவன்!
>>>>>>>>>>>>>>>>>>
மெய்ப்பொருள் காண்பது அறிவு! அறிவே தெய்வம்! தெய்வம் ஆராய்ந்தே தரட்டும் அதுதான் நல்லது நமக்கும்!
//ஷைலஜா said...
ReplyDeleteகாஞ்சிவரதராஜரை தேவாதிதேவனாய் தங்கள் கற்பனையில் சொல்கிறீர்களா அல்லது அப்படித்தான் பாவை கருதியதாக எங்கும் விளக்கம் இருக்கிறதா ரவி!//
ஹிஹி
வியாக்யானம்-க்கா! வியாக்யானம்!
எந்தவொரு அடிப்படையிலும் முரண் ஆகாது, கவிதைச் சொற்களின் பொருளுக்குச் சுவை சேர்ப்பது தான் வியாக்யானம்!
அதில் வரலாற்றுப் பிழைகளும், சமயப் பிழைகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் போதுமானது!
கவிச் சுவைக்குத் தரவு எல்லாம் கிடையாது! வட(தென்) மதுரை உட்பட!
கவிதையில் சொல்லப்படும் வரலாறுக்கோ, இன்ன பிற செய்திக்கோ தான் தரவு!
ஆண்டாள் ஒவ்வொரு ஆழ்வாரை எழுப்புகிறாள் என்பதும் வியாக்யானமே! அதே போல் தேவாதிதேவனை என்று எழுதும் போது, தேவப்பெருமாள் தான் நெஞ்சில் சடேர்-ன்னு தோன்றினார்! தோனித்து! அஃதே! :)
தேவாதி தேவனை ஓர் (நினைத்துக் கொள்ளுங்கள்)!
ReplyDelete>>>>>>>>>>>>>>>
இந்த ஓர் தான் மலையாளத்தில் ஓர்மை யானதுபோல இருக்கு.
என் பாலக்காட்டுத்தமிழ்பேசும் தோழி ஒருத்தி அடிக்கடி ஓர்மை எனும் வார்த்தையை உபயோகிப்பாள். நல்லவேளை இப்போ எனக்கு ஓர்மை வந்தது!
வழக்கம்போல இந்தப்பாடலுக்கும் வேதாந்தக்கருத்து யாராவது வேண்டாம் விடுங்கன்னாலும் சொல்லாம விடப்போறதில்ல:):)
ReplyDeleteஅதாவதுங்க கீழ்வானம் இருக்கு இல்லயா அது நல்லா ரின் சோப்போட்டமாதிரி வெளுப்பது என்பது தமோகுணம்(இதுஎன்னனு யாராவது கேட்டா பந்தல் ஓனரே பதில் சொல்லணும் என்பது வேதாந்தக்கருத்தல்ல சாதாரண ஷைலஜா கருத்தே:))) நீங்கி சத்வகுணம் உதயாமாவது.
கொல்லைப்பக்கம் புல் சாப்பிடப்போனதா இரவிசங்கர் திருவாய்மலர்ந்தருளிய எருமை என்பது அஞ்ஞானம் .
சத்வகுணம் ஓங்கி மெய்ஞானம் பிறக்கும் போது அக்ஞானம் சிதறிப்பறந்து போகிறது.
அப்படி அக்ஞானம் பறந்தபோது பகவான் நமக்கு ஆ ஆ என இரங்கி அருள் புரிகிறான்!
என் பூனைக்குட்டி வெளியே வந்துதுன்னு முன்னாடி ஒரு தடவை சொன்னீங்களே. அப்ப கூட நான் 'ஆஆ என்று ஆராய்ந்து அருளு'க்கு என்ன சொல்லப் போறீங்கன்னு கேட்டேன். பெரியவங்க சொன்ன உரையில படிச்சது இது: 'இவர்களத் தான் தேடிச் சென்று அடைக்கலமாகக் கொள்ள வேண்டியிருக்க இவர்கள் நம்மைத் தேடி வரும் படி வைத்தோமே' என்று 'ஆஆஆஆஆ' என்று பதறி தன் செயலை ஆராய்ந்து இவ்வளவு நாள் அருள் செய்யாமல் விட்டதற்கு மன்னித்து அருள் செய்வானாம்.
ReplyDelete//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஎன் பூனைக்குட்டி வெளியே வந்துதுன்னு முன்னாடி ஒரு தடவை சொன்னீங்களே. அப்ப கூட நான் 'ஆஆ என்று ஆராய்ந்து அருளு'க்கு என்ன சொல்லப் போறீங்கன்னு கேட்டேன்//
இதை இன்னொரு பாசுரத்துக்கு ரிசர்வ்-ல வச்சிருக்கேன் குமரன்! பதிவிலும் சொல்லி இருக்கேன்! என்ன பாசுரம் என்பது உங்களுக்கு நல்லாவே தெரியும் குமரன்-அண்ணா! :)
//பெரியவங்க சொன்ன உரையில படிச்சது இது://
நன்றி! இது பற்றி கொஞ்சம் இன்னும் மேலதிகமா பேசுங்களேன்!
//இவர்களத் தான் தேடிச் சென்று அடைக்கலமாகக் கொள்ள வேண்டியிருக்க//
அருமை!
//இவர்கள் நம்மைத் தேடி வரும் படி வைத்தோமே' என்று 'ஆஆஆஆஆ' என்று பதறி//
அருமை!
//தன் செயலை ஆராய்ந்து//
வெகு அருமை!
//இவ்வளவு நாள் அருள் செய்யாமல் விட்டதற்கு மன்னித்து//
தன்னைத் தானே மன்னித்துக் கொண்டு!
//அருள் செய்வானாம்//
கோவிந்தா! கோவிந்தா!
ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நமஹ!
"ஆ ஆவா என்று ஆராய்ந்து அருள்லேலோ " பெருமான் நம்மை ரட்சிக்க பரமபதத்தில் இருந்து இறங்கி வந்துள்ளான். அவன் நம்மை வந்து கண்டு அருளவே வந்தான், அவ்வாறிருக்க நாம் அவனை சென்று கண்டால், அவன் மனதில் வேதனை யும் வெட்கமமும் அடைந்து ஆ ஆ என்று அரற்றி நமக்கு வேண்டியதை தந்து அருள்வான் . என்றும பொருள் கொள்ளலாம்
ReplyDeleteMani Pandi
// Raghav said...
ReplyDeleteஏன்னா.. பனி அதிகமா இருக்குறதால பெருமாள் கொஞ்ச நேரம் தூங்கட்டுமேன்னு.. அதுமாதிரி.. மாதவிப்பந்தல்ல லேட்டா திருப்பாவை பாடுறதா நினைச்சுக்கிறேன். :)//
ஹா ஹா ஹா
சொல்ல மாட்டீரு நீரு? இன்னும் இங்கன விடியவே இல்ல! நள்ளிரவு! அதுக்குள்ள எழுந்திராய் எழுந்திராய்-ன்னு பாடிப் பதிவு போடுறேன்! உங்க டைமுக்கு! :)