Friday, December 26, 2008

மார்கழி-12: Sweet Heart = மனத்துக்கினியான்!

ஆண்டாள் கண்டுபுடிச்சது தான் "Sweet Heart" என்னும் சொல்! இன்னிக்கி அந்த மந்திரச் சொல் இல்லாம ஒரு காதலும் இல்லை! :) நற்செல்வன் தங்கையே-ன்னு வேற பாட்டில் வருது! யார் இந்த நற்செல்வன்? அவன் தங்கச்சி யாரு? அவளுக்கும் கோதைக்கும் என்ன தொடர்பு? பார்க்கலாமா?


இன்னிக்காச்சும் ஒன்-லைனர் விளக்கம் சொல்லிட்டு வேகமா எஸ்கேப் ஆக முடியுதா-ன்னு பார்க்கிறேன்! :)
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


கனைத்து, இளம் கற்றெருமை, கன்றுக்கு இரங்கி,
நினைத்து, முலை வழியே, நின்று பால் சோர,
நனைத்து, இல்லம் சேறாக்கும்! நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ, நின் வாசற்கடை பற்றிச்,


சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற,
மனத்துக்கு இனியானைப் பாடவும், நீ வாய் திறவாய்!
இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேர் உறக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!



கனைத்து, இளம் கற்றெருமை, கன்றுக்கு இரங்கி = மாஆஆஆஆ என்று கனைக்கிறது! இந்த எருமையே ஒரு இளமை எருமை! அதற்கு ஒரு கன்று! அந்தக் கன்றின் மேல் அம்புட்டு பாசம்! தலைச்சன் கன்றாக இருக்குமோ?

நினைத்து, முலை வழியே நின்று பால் சோர = அந்தக் கன்றை நினைத்த மாத்திரத்தில், பால் தானாகச் சொரிகிறது!
நனைத்து, இல்லம் சேறாக்கும்! = பால் கறக்க ஆளில்லாத வேளை! இப்படித் தானாகவே பால் கசிந்தும் சொரிந்தும் கொண்டு இருந்தால்? அந்த வீடே சேறாகி விட்டது! பால் சேறு! பாற்கடல் தெரியும்! இது பாற்சேறு! அம்புட்டு வளமை அந்த வீட்டில்!
நற் செல்வன் தங்காய் = நல்ல செல்வனின் தங்கையே!
யாரும் அண்ணனைப் தன் முன்னே பப்ளிக்கா புகழவும் கூடாது! அதே போல "தன்னைத் தவிர" வேறு யாரும் அண்ணனைத் திட்டவும் கூடாது! - இதில் சில தங்கச்சிங்க, தங்கச் சங்கிலிகளா நிப்பாங்க! :)
அதான் அண்ணனை "நல்ல அண்ணா"-ன்னு கூப்பிடறா! அதைக் கேட்டாச்சும், இவ சுருக்குன்னு எழுந்துக்கறாளா-ன்னு பாக்குறா கோதை! :)

இந்த நற்செல்வன் யார்? கண்ணனுக்கு மிக மிக நெருக்கமானவன்! இராமனுக்கு இலக்குவன் போல! அவன் போயும் போயும் உனக்கு அண்ணனா வந்து வாய்ச்சானே! இவ்வளவு சாதகமான சூழல் இருக்கேடீ உனக்கு? எங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இருந்தா, அந்தக் கண்ணனை எப்பவோ மடக்கிப் போட்டு இருப்போம்! :)


நற்செல்வன் = நப்பின்னையின் அண்ணன்! அவள் நற்+பின்னை! இவன் நற்+செல்வன்!
குழந்தைகளுக்குச் சூட்ட அழகான தமிழ்ப் பெயர்கள் அல்லவா - நப்பின்னை, நற்செல்வன்!
இவனை ஸ்ரீதாமன் என்றும் வடமொழியில் சொல்லுவார்கள்! ராதையின் அண்ணன்! ஸ்ரீதாமன் = நற்செல்வன்! அதே பொருள் தான் வருகிறது ரெண்டு பேருக்குமே!

இந்த நற்செல்வன் கண்ணனின் மனத்துக்கு அவ்வளவு பிடித்தமானவன்! மிகவும் மென்மையான பையன்!
கண்ணன்-நற்செல்வன் உறவு வெறும் ஆருயிர்த் தோழமை மட்டுமே அல்ல! அதையும் தாண்டி ஒரு ஜென்ம-ஜென்ம பந்தம் இருவருக்குள்ளும்!

வெண்ணெய் களவாடும் போது எப்பமே உடன் இருப்பவன் ஸ்ரீதாமன் (எ) நற்செல்வன்! கண்ணன் மாட்டிக் கொள்ளும் போது, அவனைத் தப்புவிக்க, தான் அடி வாங்கிக் கொள்வானாம்! வெண்ணெய்க் கட்டியின் மேல் சில சமயம் காரம் தடவி வைப்பார்களாம் சில அம்மணிகள்! அன்றிலிருந்து தான் தின்று பார்த்துவிட்டு, அப்புறம் தான் அந்த எச்சில் கட்டியைக் கண்ணனுக்குத் தருவானாம் நற்செல்வன்! இப்படி ஒரு பந்தம்!:)

இந்த நற்செல்வன்-நப்பின்னையை ஏனோ வடமொழி இலக்கியங்கள் அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை! :(
ஆனால் நற்செல்வன் (எ) ஸ்ரீதாமனை இஸ்கான் நிறுவனத்தினர் மிகவும் போற்றுகிறார்கள்! சைதன்ய மகாபிரபு ஸ்ரீதாமனைக் கொண்டாடி அவனுக்கு பாண்டீரவடம் என்னும் இடத்தில் ஆலயமும் எழுப்பினார்!

ஊரெல்லாம் கண்ணனைத் தூக்க, கண்ணனோ ஸ்ரீதாமனைத் தன் தோள் மேல் தூக்கி அன்பு பாராட்டுவானாம்! இவர்கள் நட்புறவு மிக மிக அலாதியானது! ஆனால் அவனையும் கண்ணன் பிரிந்தான்! அந்தப் பிரிவு பெரும் பிரிவு! சோகமான பிரிவு! :(

துழாய்க்காட்டை (பிருந்தாவனத்தை) விட்டு, கண்ணன் மதுரைக்குப் போகிறான்! எல்லாக் கோபிகைகள் கிட்டேயும் விடைபெற்றாகி விட்டது! ஆனா இந்த நற்செல்வனை மட்டும் அன்னிக்குன்னு பார்த்து எங்கு தேடியும் காணோம்!
கண்ணன் மனசு அடிச்சுக்குது! தன் "உயிர்" கிட்ட சொல்லாம கொள்ளாம எப்படிப் போவது? இந்த அண்ணன் பலராமன் வேறு அவசரப்படுத்துகிறான்! ஆற்றங்கரைக்கு வந்தாகி விட்டது!

ஆகாஆஆஆ! ஆங்கே நற்செல்வன்! மரத்தின் அடியில் கலங்கிய கண்களுடன்!
கண்ணன் ஓடியே போய் செல்வனைக் கட்டிக் கொள்கிறான்!
பிரிய வேண்டுமே என்ற பிரிவு ஆற்றாமை இரு தோழர்களின் நெஞ்சிலும்! கண்ணன் வழமை போல பொய் சொல்கிறான்!

"நாளைக்கே திரும்பி வந்துடுவேன் நற்செல்வா!"

"பொய்! கம்சன் பொல்லாதவன்! அவனை ஒரே நாளில் எல்லாம் உன்னால் ஒன்னும் செய்ய முடியாது! என்னைக் கூட அழைத்துப் போ என்றாலும், அதுக்கு வந்திருக்கும் மதுரைப் பெரியவர் முட்டுக்கட்டை போடுகிறார். நான் என்ன செய்ய கண்ணா?"

"டேய், நாளை இல்லீன்னா நாளன்னைக்கு! இல்லீன்னா இன்னும் ஒரு நாள்! எப்படியும் வந்துருவேன்-டா!"

"சரி, உனக்காக இந்தக் கரையில் தினமும் வந்து வந்து காத்துக்கிட்டே இருப்பேன்! சரியா?"
போனவன் போனவன் தான்! காத்துக்கிட்டு இருந்தவன், காத்துக்கிட்டு இருந்தவன் தான்!
பெற்றோர், உற்றோர், ஏன் கோபியரே விட்டுவிடு என்று சொன்ன போதும், விடாமல் கண்ணனுக்குக் காத்துக் கொண்டே இருந்தான்! பலப்பல ஆண்டுகள் ஓடி விட்டன! இறுதியில் கண்ணனால் ஆட்கொள்ளப்பட்டான்!

கோபிகைகளைக் காட்டிலும் அதிக ப்ரேமை கொண்டவன் நற்செல்வன்! கோபிகைகளாவாது கண்ணனிடத்தில் மயங்கி அவன் தீண்டலை வேண்டி நின்றார்கள்! ஆனால் இவனுக்கோ அந்த முகாந்திரமும் இல்லை! கைங்கர்ய ப்ரேமை! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
அதனால் தான் சென்ற பாட்டில் "கறந்து" என்று கோபிகைகளைக் காட்டிய கோதை, இந்தப் பாட்டில் பால் "தானாகவே சொரிகிறது" என்று சொல்லி நற்செல்வனைக் காட்டுகிறாள்!

* கோவலர் பொற்கொடியான கோபிகைக் "காதல்" = கற்றுக் கறவை கணங்கள் பல "கறந்து"
* நற்செல்வன் "அன்பு" = நினைத்து, முலை வழியே, நின்று பால் "சோர"

அன்"பால்" சொரியும் நற்செல்வன்-ஸ்ரீதாமன் திருவடிகளே சரணம்!



பனித் தலை வீழ, நின் வாசற் கடை பற்றி = காலை இளம் பனி எங்க தலை மேல வந்து விழுகிறது! இருந்தாலும் உன் வாசற்கடையில் வந்து நிக்குறோம்! இதுக்காக வாச்சும் எழுந்திருடீ!

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற = இராவணப் பெருந்தகை! அரக்கன் என்றோ அசுரன் என்றோ அவனை ஆண்டாள் வையவில்லை! இராவணனைக் கோமான் என்கிறாள்! கோமான் = Gentleman! ஹா ஹா ஹா! ஏன்?
ஆண்டாள் ரொம்ப ஓப்பன் டைப்பு-ங்க! உள்ளது உள்ளபடித் தான் பேசுவாள்! ஹிஹி, நீங்க நீட்டும் புனிதம்-ஆன்மீகச் சட்டம் எல்லாம் அவகிட்ட எடுபடாது! :)

* இராவணன் ஒரு பெண்ணிடம் வலிய முடியாது! அவன் வாங்கிய சாபம் அப்படி! ஆனால் காமம் தலைக்கேறினாலும், அவன் பிராட்டியிடம் "அபசாரப்" படவில்லை! போகப் பொருளாக மட்டுமே அவளைக் கருதவில்லை! போற்றவே எண்ணினான்!
* ஆனால் தேவேந்திரன் மகன் ஜெயந்தனோ, போகம் மட்டுமே கருதினான்! பிராட்டியிடம் "அபசாரப்" பட்டான்! அதனால் "தேவனாய்" பிறந்தாலும் "காகாசுரன்" ஆனான்!
அதான் இராவணன்=கோமான், ஜெயந்தன்=அசுரன்! இதையே கோதை காட்டுகிறாள்!

இராமன் இராவணனைச் "சினத்தினால்" செற்றானாம்! அதாச்சும் பெரும் கோபத்தால் அழித்தானே தவிர வஞ்சனையாலோ, மாய மந்திரத்தாலோ அழிக்கவில்லை! இன்று போய் நாளை வா என்றே நடந்து கொண்டான்! Gentleman-lism!
இராவணனை Gentleman என்றவள், இராமனை Gentle-Gentleman என்கிறாள்!
மனத்துக்கு இனியான் என்று போற்றுகிறாள்! Sweet Heart என்று சொல்லிக் காதலன் கண்ணனை இன்னும் வெறுப்பேத்துகிறாள்!:)

மனத்துக்கு இனியானை = இராமன் மனத்துக்கு இனியான்! ரம்மியம்=ராமன்!
ரம்யதி இதி ராமஹ: ரமந்தே அஸ்மின் இதி ராமஹ: மனிதனாய் இராமனும் தவறுகள் செய்தான்! ஆனால் மறைக்கவில்லை! ஒப்புக் கொண்டு கழுவாய் தேடினான்!
* ஊருக்கு உபதேசம் செய்யப் போகிறான் கிருஷ்ணாவதாரத்தில் = கீதை!
* முதலில் ராமாவதாரத்தில் தான் நடந்து காட்டிவிட்டு, பிற்பாடு ஊருக்கு உபதேசம்!
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ? என்கிறார் நம்மாழ்வார்! உண்மை விளிம்பியான மாறனே அப்படிச் சொல்கிறார் என்றால் அது சும்மா இல்லை!

பாடவும், நீ வாய் திறவாய்! = அவனைப் பாடுகிறோம்! நீ வீட்டு வாயையும் திற! உன் வாயையும் திற! திறந்து எங்களுடன் சேர்ந்து பாடுவாய்!

இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேர் உறக்கம்? = இன்னுமா எழவில்லை? அப்படி என்ன உனக்குப் பெரும் தூக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்து = அக்கம் பக்கம் எல்லா வீட்டுக்கும் தெரியப் போவுது உன் தூக்க மகாத்மியம்! உன் வருங்கால மாமியார் கிட்ட உன்னைத் தூக்கராணி, கும்பகர்ணி-ன்னு போட்டுக் கொடுக்கப் போறாங்க! :)

பாடவும், நாம் வாய் திறப்போம்! பாடும் பணியே பணியாய் அருள்வாய்!
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

30 comments:

  1. மனத்துக்கினிய இராமபிரானை, எம் மனத்துக்கினிய மாதவிப்பந்தலில் படிக்க வந்தோமே !

    ReplyDelete
  2. அண்ணா, ஒரு பொருத்தத்தை பாத்தீங்களா? இன்னைக்கு ஸ்ரீராமதூதனான ஆஞ்சனேயன் திருந‌க்ஷ்த்ரம். நாம் அவன் மனத்துக்கினியானை பாடும் பாசுரமும் இன்று அமைந்துள்ளது.

    ReplyDelete
  3. //துழாய்க்காட்டை (பிருந்தாவனத்தை) விட்டு, கண்ணன் மதுரைக்குப் போகிறான்! //

    மதுரையா இல்லை மதுராவா ?? :)
    இரண்டு இடங்களில் வந்துள்ளதே!!

    ReplyDelete
  4. //Raghav said...
    //துழாய்க்காட்டை (பிருந்தாவனத்தை) விட்டு, கண்ணன் மதுரைக்குப் போகிறான்! //

    மதுரையா இல்லை மதுராவா ?? :)
    இரண்டு இடங்களில் வந்துள்ளதே!!//

    இது ஆண்டாளின் காதல் கற்பனை அல்ல! அதில் தான் வட(தென்) மதுரை!
    இது ஸ்ரீதாமன் கதை. எனவே கண்ணன் போவது வட-மதுராவே!

    புரிகிறது அல்லவா? :)

    ReplyDelete
  5. //Raghav said...
    மனத்துக்கினிய இராமபிரானை//

    இது சரி!

    //மனத்துக்கினிய மாதவிப்பந்தலில்//

    இது எப்போத்தில் இருந்து? :))

    ReplyDelete
  6. //Raghav said...
    அண்ணா, ஒரு பொருத்தத்தை பாத்தீங்களா? இன்னைக்கு ஸ்ரீராமதூதனான ஆஞ்சனேயன் திருந‌க்ஷ்த்ரம். நாம் அவன் மனத்துக்கினியானை பாடும் பாசுரமும் இன்று அமைந்துள்ளது//

    அந்தப் படத்திலும் அனுமன் இருக்காரு! :)

    இனிய அனுமத் ஜெயந்தி வாழ்த்துக்கள் அனைவருக்கும், ராகவ்-க்கும்!

    ReplyDelete
  7. ம‌ன‌துக்கினியாய் நீங்க‌ள் சொல்லும் விள‌ங்க‌ங்க‌ள் அருமை. ஆண்டாள் ம‌ன‌துகினியான் ம‌கிழ்வான், க‌ண்ண‌ன் ந‌ற்செல்வ‌ன் ப‌ற்றிய‌ க‌ருத்துக‌ளும் அருமை. "பனித் தலை வீழ, நின் வாசற் கடை பற்றி " அழ‌கான‌ வாக்கிய‌ம், இராவணனை Gentleman என்றவள் ஆஹா ஆஹா. "மனத்துக்கு இனியானை" :) ந‌ன்று. எல்லா விள‌ங்களும் அருமை.

    ஆண்டாள் அர‌ங்க‌ன் திருவடிகளே சரணம்!‌

    ReplyDelete
  8. //மின்னல் said...
    ம‌ன‌துக்கினியாய் நீங்க‌ள் சொல்லும் விள‌ங்க‌ங்க‌ள் அருமை//

    வாங்க மின்னல்! தினமும் உங்கள் உற்சாகம் கூடத் தான் கூடுகிறது! தொடர்ந்த வாசிப்புக்கும், வருகைக்கும் நன்றி!

    //ஆண்டாள் ம‌ன‌துகினியான் ம‌கிழ்வான்//

    அடியேன்!

    //இராவணனை Gentleman என்றவள் ஆஹா ஆஹா//

    ஆமாம்! கோமான் = கோமகன்!
    ஒரு உயர்ந்த அரசனைத் தான் கோமகன் என்பார்கள்! ஆண்டாள் இப்படி இராவணனைக் கோமகன் என்று விளித்ததற்கு அவள் காலத்தில் யாரேனும் அவளோடு சண்டை போட்டாங்களா-ன்னு தெரியலை! :)) போட்டாலும் போட்டிருப்பாங்க சில "புனிதப் பேரன்பர்கள்"! :))

    ReplyDelete
  9. வாழ்த்துகள் கேஆரெஸ், தினமும் இடும் பதிவுகளுக்கும், இனிய புத்தாண்டுக்கும் முன் கூட்டிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. இது மார்கழி மாசமா இல்லை KRS திட்டு வாங்கும் மாசமா :D
    அப்படின்னு நானும் ஒரு புதிர் போடலாம் போல இருக்கு :)

    இப்போதான் எல்லாம் மார்கழி பதிவையும் படிச்சு முடிச்சேன்.இதுக்கே எனக்கு 3 நாள் போச்சு :)எப்படி அண்ணா அன்றாடம் எழுதி தள்ளுறீங்க?


    நீங்க மனுசனே இல்லை அண்ணா...நீங்க....நீங்க...அது நான் இங்கே சொல்ல மாட்டேன் :D
    அப்புறம் எனக்கும் அடி விழும்...

    ஹாப்பி மார்கழி அண்ணா :))

    ReplyDelete
  11. >>மதுரையா இல்லை மதுராவா ?? :)
    இரண்டு இடங்களில் வந்துள்ளதே!!//
    இது ஆண்டாளின் காதல் கற்பனை அல்ல! அதில் தான் வட(தென்) மதுரை!<<

    Yes, it is Mathura (on the other bank of Yamunai) across from Gokulam (BrindAvanam) referred to as vaDamadurai in Thamizh literature. ANDAL herself refers to it as vaDAmadurai (mAyanai mannu vaDamadurai maindanai... TP#5) since she lived close to (ten) madurai. But why the "ten" is mentioned parenthetically by KRS?

    As for "naRcelvan tangAy" referring to "nappinnai", I am confused. I have a couple of questions here.
    1. I understand Yasoda's brother had only daughters of which one of them is nappinnai. Did nappinnai have a real brother (SritAman)?
    2, Assuming naRcelvan tangai is nappinnai, why does ANDAL wake her up in song #12 while the entire set of songs from 6 to 15 revolves around waking up other gOpis? As you see later on , in songs 17-21 ANDAL wakes up the entire gang in nandagopan's household including Krishna, Balaraman, nandagopan, yasoda, and the most important person, i.e., nappinnai. She knows to get to Krishna she has to pass through the "gatekeeper" (or pUsAri to get to sAmi) nappinnai first. nappinnai is very special. She is not one of the gOpis, as far as ANDAL is concerned. Hence the interpretation that naRcelvan tangai (in #12) is nappinnai is a subjective interpretation, I think. I think naRcelvan is just another gopi's brother who is a prosperous cowherd. nappinnai lives in the nandagopan mansion and not in just another house. Please elaborate.

    ReplyDelete
  12. //கீதா சாம்பசிவம் said...
    வாழ்த்துகள் கேஆரெஸ், தினமும் இடும் பதிவுகளுக்கும்//

    நன்றி கீதாம்மா :)

    //இனிய புத்தாண்டுக்கும் முன் கூட்டிய வாழ்த்துகள்//

    2009 இனிதே மலர இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. //(unknown blogger) said...
    இது மார்கழி மாசமா இல்லை KRS திட்டு வாங்கும் மாசமா :D
    அப்படின்னு நானும் ஒரு புதிர் போடலாம் போல இருக்கு :)//

    திட்டு வாங்கலா? யார் என்னைய திட்டுறாங்க தங்கச்சி? :)
    பேரைச் சொல்லு! ஒரு பிடி பிடிச்சிறலாம்! :)

    //இப்போதான் எல்லாம் மார்கழி பதிவையும் படிச்சு முடிச்சேன்//

    இப்படியெல்லாம் பப்ளிக்கா பொய் சொல்லக் கூடாது! :)

    //இதுக்கே எனக்கு 3 நாள் போச்சு :)எப்படி அண்ணா அன்றாடம் எழுதி தள்ளுறீங்க?//

    உன்னை நினைச்சேன்! கை தானா எழுதுதும்மா! :)

    //நீங்க மனுசனே இல்லை அண்ணா...நீங்க....நீங்க...அது நான் இங்கே சொல்ல மாட்டேன் :D
    அப்புறம் எனக்கும் அடி விழும்...//

    உன்னையும் அடிப்பாங்களா? யாரு? யாரு?

    //ஹாப்பி மார்கழி அண்ணா :))//

    சேம் டு யூ ஜிஸ்டர்! :)

    ReplyDelete
  14. //nAradA said...
    since she lived close to (ten) madurai.//

    ஹா ஹா ஹா!

    //But why the "ten" is mentioned parenthetically by KRS?//

    ஓ...உங்களுக்கு விஷயமே தெரியாதா சேதுராமன் சார்? இதை வைத்து ஒரு கச்சேரியே இப்ப தான் நடந்து முடிஞ்சிச்சு! இங்கே பாருங்க!
    http://madhavipanthal.blogspot.com/2008/12/05.html

    ReplyDelete
  15. //இராமனை...//
    கண்ணன் என்று சொல்லியும் எழுந்திருக்கக் காணோம், சரி இராமன் எனச் சொல்லிப் பார்ப்போமோ, என்றாளோ கோதை. நல்ல தந்திரம் தான்!

    ReplyDelete
  16. //நற்செல்வன் தங்காய்//
    இப்படியாக ஒவ்வொரு பாடலில், வெவ்வேறு ஆன்ம முதிர்ச்சியில் இருக்கும் பெண்களை எழுப்புகிறாள் போலும்.
    எப்படிப்பட்ட முதிர்ச்சியில் இருப்பவரும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார். அவர்களிடம் உள்ள வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் எல்லோரையும் அழைக்கிறாள் கோதை. எப்படிப்பட்ட முதிர்ச்சியில் இருந்தாலும், அறியாமை அவர்களை ஓரளுவுக்கேனும் மறைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
    அவ்வறியாமையை அகற்றிட, எழுந்து வாராய், எம்பெருமானைப் பாடித் துதித்திட, என எழுப்புகிறாளோ, கோதை!

    ReplyDelete
  17. //1. I understand Yasoda's brother had only daughters of which one of them is nappinnai. Did nappinnai have a real brother (SritAman)?//

    பதிவில் சொல்லி இருக்கேன் பாருங்க!
    ராதையின் அண்ணன் ஸ்ரீதாமன்.
    நப்பின்னையின் சகோதரன் நற்செல்வன்!

    இருவரும் வெவ்வேறா இல்லை மாயோன்-கிருஷ்ணன் என்ற இரு கலாச்சாரங்களின் தழுவலில் விளைந்தவயா என்பது ஆய்வுக்கு உரியது!

    நப்பின்னை நீளா தேவி என்று ஆனாள்! நற்செல்வன் ஸ்ரீதாமன் என்று ஆனானோ?

    //why does ANDAL wake her up in song #12//

    No; She doesnt wake up Nappinnai here!

    //As you see later on , in songs 17-21 ANDAL wakes up the entire gang in nandagopan's household including Krishna, Balaraman, nandagopan, yasoda, and the most important person, i.e., nappinnai//

    ஆம்! இங்கு தான் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் என்று பாடுகிறாள்!

    //I think naRcelvan is just another gopi's brother who is a prosperous cowherd.//

    ஆனால் ஆச்சார்யர்களும் நற்செல்வன்=ஸ்ரீதாமன் என்றே வியாக்யானங்களில் குறிப்பிடுகிறார்கள்!

    //nappinnai lives in the nandagopan mansion and not in just another house. Please elaborate//

    நப்பின்னை வாழ்வது நந்தகோபன் இல்லத்தில் தான்! அவளுக்கு மணமாகி விட்டது!
    இந்தப் பாடலில் நப்பின்னையை எழுப்பவில்லை!

    பதிவில் சொல்லி உள்ள வரிகளைப் பாருங்கள்!
    //அவன் போயும் போயும் உனக்கு அண்ணனா வந்து வாய்ச்சானே! இவ்வளவு சாதகமான சூழல் இருக்கேடீ உனக்கு? எங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இருந்தா, அந்தக் கண்ணனை எப்பவோ மடக்கிப் போட்டு இருப்போம்! :)//

    நப்பின்னையைக் குறிப்பிடவில்லை! ஆனால் நற்செல்வன் தங்காய் என்று குறிப்பிடுகிறாள்! அப்படின்னா என்னவா இருக்கும்?

    நற்செல்வனின் இன்னொரு தங்கையாகவும் இவள் இருக்கலாம் அல்லவா? இன்னும் மணமாகாத ஒரு கோபிகையாய் இருக்கலாம் தானே!

    நப்பின்னையும் ஆயர்குலப் பெண் தான்! ஆனால் அவள் கண்ணனை அடைந்து விட்டாள்! மற்ற ஆயர் குலப் பெண்கள் இன்னும் அடையவில்லை! அதனால் தான் எல்லாரும் ஒன்றாகக் கலந்து, நோன்பு நோற்று, கண்ணன் மாளிகைக்குச் சென்று, நப்பின்னையைக் கேள்வி கேட்கிறார்கள்! அடியே நப்பின்னை, நீயும் எங்களைப் போல் ஒரு ஆய்ச்சி தானே! மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனை போது துயில் எழ ஒட்டாயோ? தத்துவம் அன்று! தகவேலோ! -ன்னு எல்லாம் பாடுகிறார்கள்!

    தங்களைப் போல் இருந்த ஒரு ஆயச்சியான நப்பின்னை அவனை அடைந்து விட்டாள்! அவள் உதவி கொண்டு (புருஷகாரம்), நாங்களும் அவனை அடைவோம் என்பதே உள்ளுறைக் கருத்து!

    ReplyDelete
  18. KRS:
    We are not far off from each other in the overall discussion. What I emphasize is that in song #12, "naRcelvan tangAy" does not address nappinnai and hence naRcelvan tangai (in #12) is NOT nappinnai (which you tend to agree saying it could be another sister of nARcelvan). So we are saying the same thing. Only in the songs 18-20 the wake-up call is for nappinnai and that too for gaining her favor rather than admonishing her over-sleeping as attributed to the other gOpis in #6-15. In song #12 it is yet another gOpi friend.

    It is difficult to rationalize with certainty who is who because there are so many vyakyAnams by so many people. "Faith" blocks me from entering the portal with "Reason". I wrote some 3 articles on nappinnai for chennaionline.com a few years ago but I generally toed the line that was presented by earlier religious scholars in summarizing the situation rather than questioning their logic.

    ReplyDelete
  19. //nAradA said...
    "naRcelvan tangAy" does not address nappinnai and hence naRcelvan tangai (in #12) is NOT nappinnai (which you tend to agree saying it could be another sister of nARcelvan). So we are saying the same thing.//

    yes sir! we do! :)

    //I wrote some 3 articles on nappinnai for chennaionline.com a few years ago//

    ஆகா! சுட்டி இருந்தால் கொடுங்களேன்! நப்பின்னையை வாசிக்கப் பிடிக்குமே!

    //"Faith" blocks me from entering the portal with "Reason"//

    ஹா ஹா ஹா!
    Both are mutually complimentary to each other!
    It all depends whatz the final objective of this whole exercise!

    This NOT being a scientific experiment with tangible product outcome, we can overlap both faith and rationale! Only the objective matters and that is குணானுபவம்! :)

    ReplyDelete
  20. நற்செல்வன்,மனத்துக்கினியான்...கலக்கல்தல ;))

    ReplyDelete
  21. //கோபிநாத் said...
    நற்செல்வன்,மனத்துக்கினியான்...கலக்கல்தல ;))//

    வா மாப்பி!
    இவங்க ரெண்டு பேரும் உனக்கு கலக்கலா? சரி! கலக்கிருவோம்! :)

    ReplyDelete
  22. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    கண்ணன் என்று சொல்லியும் எழுந்திருக்கக் காணோம், சரி இராமன் எனச் சொல்லிப் பார்ப்போமோ, என்றாளோ கோதை. நல்ல தந்திரம் தான்!//

    ஆமாம் ஜீவா!
    பெண்களுக்கு இராமன்-ன்னா ஒரு மதிப்பு! கண்ணன்-ன்னா ஒரு உரிமை! நல்ல தந்திரமே தான்! :)

    ReplyDelete
  23. ஸ்ரீதாமன் கதை இப்போதான் தெரிஞ்சிக்கிட்டேன். கண்பனிக்க வைக்கும் அன்பு.

    எல்லா விளக்கங்களும் அருமை. மனதுக்கினியான், இராவணன், எல்லாமே...

    //பெண்களுக்கு இராமன்-ன்னா ஒரு மதிப்பு! கண்ணன்-ன்னா ஒரு உரிமை!//

    அட, உங்களுக்கெப்படி இதெல்லாம் தெரியும்? :) கரீட்டா சொல்றீங்க? :)

    ReplyDelete
  24. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    இப்படியாக ஒவ்வொரு பாடலில், வெவ்வேறு ஆன்ம முதிர்ச்சியில் இருக்கும் பெண்களை எழுப்புகிறாள் போலும்//

    Yes!

    //எப்படிப்பட்ட முதிர்ச்சியில் இருப்பவரும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார்//

    Very True!

    //அவர்களிடம் உள்ள வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் எல்லோரையும் அழைக்கிறாள் கோதை//

    கூடி இருந்து குளிர்தல்!

    நல்ல சிந்தனை ஜீவா!
    ஒவ்வொரு பெண்டிரும் ஒரு வகையான சாதகர் போலத் தான்!

    6. பிள்ளாய் எழுந்திராய் -அரி என்ற பேரரவம், "உள்ளம் புகுந்து"!
    = இவரை எழுந்திருன்னு சொன்னாலே போதும். ஏன்னா இறைவனை உள்ளத்தில் இருத்திக் கொள்பவர்!

    7. பேசின பேச்சரவம் கேட்டிலையோ? தயிர் அரவம் கேட்டிலையோ? "கேட்டே" கிடத்தியோ?
    = இப்படி கேள்வி நிலையில் உள்ள சாதகர்! செவிச் செல்வம் மிக்கவர்!

    8. உன்னைக் "கூவு"வான், "பாடிப்" பறை கொண்டு
    = நாம சங்கீர்த்தன சாதகர்

    9. மாமீர் அவளை எழுப்பீரோ? ஊமையோ? செவிடோ? மந்திரப் பட்டாளோ? அனந்தலோ?
    = ஞானச் செருக்கு (அனந்தல்) உள்ள சாதகர்! மந்திரப்பட்டவர்! இன்னொருத்தர் தேவைப்படுது இவரை எழுப்ப (மாமீர்=குரு)

    10. ஆற்ற+அனந்தல் உடையாய், பெருந்துயில் தான் தந்தானோ?
    = கர்மச் செருக்கு (ஆற்ற) + ஞானச் செருக்கு (அனந்தல்) ரெண்டுமே கொண்டவர்! பெருந்துயிலில் இருப்பவர்! அருங்கலமே = பாத்திரம் கிடைத்து விட்டால், இவரும் எழுந்து கொள்வார்!

    11. குற்றமொன்றில்லாத கோவலர் பொற்கொடி, முற்றம் புகுந்து
    = இவர் அதிக குற்றம் இல்லாதவர்! கோவலர் போல் எளிமையான வழி வந்தவர்! அதனால் உரிமையுடன் முற்றம் வரை வந்து "கறந்து" ஆட்கொள்ளப்படுகிறார்!

    12. நற்செல்வன் தங்காய்
    = இவர் பரம்பரை/வழிவழிச் சாதகர். நினைத்த மாத்திரத்தில் பால் சொரிய வல்லவர்! அனுட்டானம் என்று தனியாக இல்லாதவர்!

    13. இன்றைய பாசுரம்! போட்டாச்சி! நீங்க வந்து சொல்லுங்க ஜீவா! :)

    ReplyDelete
  25. //கவிநயா said...
    ஸ்ரீதாமன் கதை இப்போதான் தெரிஞ்சிக்கிட்டேன். கண்பனிக்க வைக்கும் அன்பு//

    ஆமாம்-க்கா! ஸ்ரீதாமன் ராதையைக் காட்டிலும் அன்புன்னு சொல்வாய்ங்க! இஸ்கான் தலைமையகம் மாயாப்பூரில் இருக்கு! அதுக்குப் பேரே ஸ்ரீதாமம்!

    //எல்லா விளக்கங்களும் அருமை. மனதுக்கினியான், இராவணன், எல்லாமே...//

    நன்றிக்கோவ்! :)

    //
    \\பெண்களுக்கு இராமன்-ன்னா ஒரு மதிப்பு! கண்ணன்-ன்னா ஒரு உரிமை!\\
    அட, உங்களுக்கெப்படி இதெல்லாம் தெரியும்? :) கரீட்டா சொல்றீங்க? :)//

    ஹா ஹா ஹா!
    சைக்கிள்-ஆலஜி க்கா! :)

    ReplyDelete
  26. //6. பிள்ளாய் எழுந்திராய் -அரி என்ற பேரரவம், "உள்ளம் புகுந்து"!
    = இவரை எழுந்திருன்னு சொன்னாலே போதும். ஏன்னா இறைவனை உள்ளத்தில் இருத்திக் கொள்பவர்!

    7. பேசின பேச்சரவம் கேட்டிலையோ? தயிர் அரவம் கேட்டிலையோ? "கேட்டே" கிடத்தியோ?
    = இப்படி கேள்வி நிலையில் உள்ள சாதகர்! செவிச் செல்வம் மிக்கவர்!

    8. உன்னைக் "கூவு"வான், "பாடிப்" பறை கொண்டு
    = நாம சங்கீர்த்தன சாதகர்

    9. மாமீர் அவளை எழுப்பீரோ? ஊமையோ? செவிடோ? மந்திரப் பட்டாளோ? அனந்தலோ?
    = ஞானச் செருக்கு (அனந்தல்) உள்ள சாதகர்! மந்திரப்பட்டவர்! இன்னொருத்தர் தேவைப்படுது இவரை எழுப்ப (மாமீர்=குரு)

    10. ஆற்ற+அனந்தல் உடையாய், பெருந்துயில் தான் தந்தானோ?
    = கர்மச் செருக்கு (ஆற்ற) + ஞானச் செருக்கு (அனந்தல்) ரெண்டுமே கொண்டவர்! பெருந்துயிலில் இருப்பவர்! அருங்கலமே = பாத்திரம் கிடைத்து விட்டால், இவரும் எழுந்து கொள்வார்!

    11. குற்றமொன்றில்லாத கோவலர் பொற்கொடி, முற்றம் புகுந்து
    = இவர் அதிக குற்றம் இல்லாதவர்! கோவலர் போல் எளிமையான வழி வந்தவர்! அதனால் உரிமையுடன் முற்றம் வரை வந்து "கறந்து" ஆட்கொள்ளப்படுகிறார்!

    12. நற்செல்வன் தங்காய்
    = இவர் பரம்பரை/வழிவழிச் சாதகர். நினைத்த மாத்திரத்தில் பால் சொரிய வல்லவர்! அனுட்டானம் என்று தனியாக இல்லாதவர்!//

    இது ரொம்ப நல்லாருக்கே!

    ReplyDelete
  27. //கவிநயா said...
    இது ரொம்ப நல்லாருக்கே!//

    எல்லாம் நம்ம ஜீவா தூண்டி விட்டது! :)

    ReplyDelete
  28. ஒவ்வொரு பாவைக்கும் ஒரு விளக்கமா, அருமை!

    கல்லூரியில் படிக்கும்போது, டூயட் படம் வந்தது என நினைக்கிறென். அதில் அஞ்சலி, அஞ்சலி பாடல் வரியில் வரும். "அமுதென்பதா, விஷமென்பதா, உனை அமுத விஷம் என்பதா...?" என்று. அப்போது நண்பர் ஒருவர் கேட்பார்: இது எப்படி சாத்தியம் - ஒரு துளி விஷம் கலந்தாலும், அமுதென்றாலும் - அது விஷமல்லவோ என்று.
    அவருக்கு நான் அப்போது சொல்வேன் - ஒரு துளி அமுது கலந்தாலும், விஷமும் அமுதாகும் என்று!

    இப்போது இது நினைவுக்கு வந்த காரணம் உங்கள் விளக்கம்!
    மாந்தர் பல்வேறு நிலைகளில் இருந்தாலும் - தூங்கினாலும், விழித்துக்கொண்டிருந்தாலும், கண்ணனின் குணானுபவங்களில் ஒருதுளி பருகி இருந்தாலும் போதும் - அது அமுதை உண்டது போலத்தான் போலிருக்கிறது!

    ReplyDelete
  29. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    ஒவ்வொரு பாவைக்கும் ஒரு விளக்கமா, அருமை!//

    உங்க தூண்டுதல் தான் ஜீவா! :)
    நேயம் "சத் ஜன" சங்கே சித்தம்!

    //மாந்தர் பல்வேறு நிலைகளில் இருந்தாலும் - தூங்கினாலும், விழித்துக்கொண்டிருந்தாலும், கண்ணனின் குணானுபவங்களில் ஒருதுளி பருகி இருந்தாலும் போதும் - அது அமுதை உண்டது போலத்தான் போலிருக்கிறது!//

    ரத்தினம் பதித்தாற் போல் சொல்லிட்டீங்க!
    ஒரு உள்ளார்ந்த துளிக்குத் தான் concentration அதிகம்!

    ReplyDelete
  30. அருமையான விளக்கங்களும் பின்னூட்டங்களும். நன்றி இரவி. நன்கு இரசித்துப் படித்தேன்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP