கைசிகம்: விபூதி பூசிக் கொள்ளும் பெருமாள்!
என்னாது?....பெருமாள் விபூதி பூசிக் கொள்கிறாரா? என்னாது?....அவர் கூடவே மக்களும், மறந்தும் புறம் தொழா சில வைணவர்களும் விபூதி பூசிக் கொள்கிறார்களா?
என்னய்யா கனவு கினவு கண்டீர்களா? இல்லை ஒற்றுமை என்கிற பேரில், கேஆரெஸ் செய்யும் பல "மிக்சிங் சதி வேலைகளில்" இதுவும் ஒன்றா? ஹா ஹா ஹா! மேலே படிங்க!
"மன்னா, இந்தச் சட்டம் போட்டீர்களேயானால், தேவையில்லாத பூசல்களும், சமயச் சண்டையும் தான் உருவாகும்! எதற்கும் உங்கள் உத்தரவை மறு பரிசீலனை செய்யுங்கள்!"
"அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை! இனி என் தேசத்தில் எழுதப்படும் பாடல்களில்....அது எதைப் பற்றி இருந்தாலும், கட்டாயம் சிவனைப் பற்றிய துதிகள் இருக்க வேண்டும்! இதை அரச ஆணையாக உத்தரவிடப் போகிறேன்!"
"விபரீதம் தான் விளையும்! இதற்குப் பதிலாக, மற்ற மதத் தலைவர்களை மட்டும் கூப்பிட்டு, அவர்களிடம் சிவபிரானைப் பற்றி நாலு வரி எழுதி வாங்கி விடலாம்! ஏன் இதில் இவ்வளவு முனைப்பு காட்டுகிறீர்கள் அரசே?"
"இந்த வைணவப் பதர்கள் எங்கேயாச்சும் சிவபெருமானை மதித்துப் போற்றுகிறார்களா? சிவனின் நாமத்தை அவர்கள் பாடல்களில் பாடியுள்ளார்களா? மறந்தும் புறம் தொழோம் என்று தானே திமிர் பிடித்துப் பேசுகிறார்கள்? கேட்டால் கற்பாம்! கற்பு?"
"ஒரு சிலர் தானே அப்படி! நம்மிலும் அது போல பல பேர் இருக்கிறார்களே மன்னா! அவர்கள் அவர்களாக இருந்து கொள்ளட்டுமே! நம்மைத் தாழ்த்தாத வரை, அவர்கள் எப்படி வேண்டுமானுலும் இருந்து விட்டுப் போகட்டுமே!"
"அதெல்லாம் எனக்குத் தெரியாது! நம்மில் இருக்கலாம்! ஆனால் அவர்களில் இருக்கக் கூடாது! நான் பாட மாட்டேன்! ஆனால் அவர்கள் பாட வேண்டும்!
இங்கு நான் தானே அரசன்! நான் கட்டிக் காப்பதால் தானே, இங்கு அவர்களால் பயமின்றி உலா வர முடிகிறது!
ஆற்றிலே நீர் ஓட அணை கட்டியது நான் தானே? ஆற்று நீர் மட்டும் வேண்டும்! அரச ஆணை வேண்டாமா?"
"சமயங்களே ஆறுகள் போலத் தான் மன்னா! அவை நம்மால் ஓடுவதில்லை! அணை கட்டினாலும் தேக்கத் தான் முடியுமே ஒழிய தடுக்க முடியாது!
மக்கள் மனங்களில் பாய்ந்து வந்தால், அணையாவது, ஒன்றாவது?"
"அப்போது என் சொல்லுக்கு இங்கே என்ன மதிப்பு? நீரே ஒரு வைணவர் தானே! உம்மிடம் நான் யோசனை கேட்பது முட்டாள்தனம்! ஏதோ சிறந்த மதியூகி என்பதால், உம்மை அமைச்சருள் ஒருவராக விட்டு வைத்துள்ளேன்! ஆனால் இப்போது நீங்கள் பேசும் பேச்செல்லாம் பார்க்கும் போது........"
"ஐய்யய்யோ, மன்னா, உங்கள் கலக்கம் தான் என்ன? அவர்கள் யாரும் ஈசனைப் பாடவில்லை என்பது தானே?"
"ஆமாம்! அதுவும் ஒன்று!..."
"அதான் கூரத்தாழ்வான் பொதுவில் சில பதில்களைச் சொல்லியுள்ளாராமே! அவர்கள் தரப்பு பாடல்களில் எங்கெங்கு எல்லாம் ஈசன் பேசப்படுகிறார் என்று!"
"பேசினால் மட்டும் போதுமா? அவர்கள் தொழ வேண்டாமா? அவர்களின் எல்லா ஆலயங்களிலும் ஈசனை வைப்பார்களா? அப்படி வைக்க உத்தரவு போடட்டுமா?"
"(மனதிற்குள்: அய்யோ, வாய் கொடுத்து நானே மாட்டிக் கொள்கிறேன் போல இருக்கே!)
பொறுங்கள்! பொறுங்கள்! நான் அறிந்த ஒன்றைச் சொல்லட்டுமா?
நாரணனையும், சங்கரனையும் ஒன்றாக மனத்துள் வைத்து,
அவரை எண்ணி எண்ணி, அவா அறுத்து, வீடு புகுந்ததாக,
அவர்கள் குல முதல்வரான மாறன் பாடியுள்ளாராம்!
"பிறைத் தங்கு சடையானை வலத்தே வைத்து" என்று வேறு பாடி இருக்கிறாராம் ஆழ்வார்!"
"கதை விடுகிறீர்களா? எங்கு பாடி இருக்கார்? சொல்லுங்கள் பார்ப்போம்?"
"ஒன்றென, பலவென, அறிய அரும் வடிவினுள் நின்ற,
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் எனும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து, உள்ளி நும் இரு பசையறுத்து,
நன்று என நலம் செய்வது, அவனிடை நண்ணினம் நாமே! - இது திருவாய்மொழியில் இருக்காம்!"
"இதெல்லாம் உமக்கு எப்படித் தெரியும்?"
"கேள்வி ஞானம் தான் மன்னா! என் பழைய குருநாதர் கூரத்தாழ்வான் தந்த பதில்களில் இதுவும் ஒன்று!"
"அதானே பார்த்தேன்! எனக்குப் பயந்து போய், இவர்களாக எழுதிக் கொண்டிருப்பார்கள்! இந்த ஒரு பாட்டை மட்டுமே வைத்து நம்பி விடுவேன் என்று நினைத்தீரோ?"
"இல்லையில்லை! இன்னும் நிறைய இருக்காம்! எனக்குத் தெரிந்தது இவ்வளவு தான்! அதான் அவர்கள் நாராயணன் என்னும் உருவத்திலேயே ஈசனும் இருக்காராமே! தாழ் சடையும் நீள் முடியும்....இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து-ன்னு பாடுறாங்களாமே! சேர்த்தே வழிபட்டு விடுகிறார்களாமே! பேசாமால் விட்டு விடுவோம்! இந்த வன்முறைகளை நம் சைவ சமயம் கூட ஒப்பாதே!"
"நாலூரா! சப்பைக் கட்டு கட்டுகிறாயா? நம் சமயமா? எங்கள் சமயம் என்று சொல்! உன் சமயம் எது என்று தான் எனக்குத் தெரியுமே! இப்படி ஒட்டி உறவாடிக் காப்பாற்றி விடலாம் என்று பார்க்கிறாயா? அது தான் நடக்காது!"
"இல்லை மன்னா! அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில்......."
"அடேய்! என் வாயில் மண்ணா? என்ன திமிர்?"
"ஐயோ! அப்படி இல்லை அரசே! மக்கள் பொதுவாகச் சொல்வதைச் சொன்னேன்!"
"அப்போது கூட அரியும் சிவனும் ஒன்னு என்று அரியைத் தானே முதலில் சொல்கிறார்கள்? இதை நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன்!"
"வேண்டுமானால் சிவனும் அரியும் ஒன்னு என்று மாற்றிச் சொல்லச் சொல்லி விடுவோம்! எதற்கு இந்தத் தேவையில்லாத அரசாணைகள் எல்லாம்? அதான் நாராயண உருவத்திலும் சிவன் இருக்கிறார்-ன்னு தான் தெரிந்து விட்டதே! நாம் அதில் இருக்கும் சிவனை மட்டும் வணங்கி விட்டால் போகிறது?"
"நாலூரா! மூளைச் சலவை செய்கிறாயா? அந்த நெற்றியில் நாமம் தானே இருக்கிறது? நான் எப்படி அதைச் சிவனாய் நினைக்க முடியும்? வழிபட முடியும்?"
(மெளனம்)
"இதோ, குதிரைகள் ஓட்டிக் கொண்டே, இந்த ஊருக்கு வந்து விட்டோம்! என்ன ஊர் இது?"
"திருக் கண்ணங்குடி, அரசே!"
"ஓ...வைணவ ஊராச்சே! இங்கேயே நம் கட்டளையைத் தொடங்கி விடலாமா?"
"ஐயோ! வேண்டாம் அரசே, வேண்டாம்! மிகவும் அமைதியான கிராமம்! திரை-வரிகளை எல்லாம் ஒழுங்காகச் செலுத்தும் கிராமமும் கூட!"
"அங்கு என்ன பல்லக்கு? யார் வருகிறார்கள்? நானே புரவியில் வரும் போது, ஊரில் பல்லாக்கில் வர யாருக்குத் தைரியம்?"
"மன்னா, அது கோயில் பல்லாக்கு! பெருமாளை வீதியுலா கொண்டு வருகிறார்கள் போல! ஊர்த் தலைவருக்குத் தங்கள் வருகையைச் சேதி சொல்லி, சேவகனை இதோ அனுப்புகிறேன்!"
"தேவையில்லை! திடீர் விஜயத்தில் தான் உண்மை தெரியும்! பெரிதாகச் சொன்னீரே! அந்த நாரயணன் உருவத்திலேயே சிவனை வணங்கி விடுகிறார்கள் என்று? அதோ அந்தப் பல்லாக்கில் வருவது நாரயணன் தானே?"
"ஆமாம் மன்னா! கரியமேனிக் கண்ணபெருமாள் (சியாமள மேனிப் பெருமாள்) என்று இந்த ஊர் இறைவனுக்குப் பெயர்!
அதான் ஊர் பேரும் திரு-கண்ணன்-குடி! அந்த உற்சவரைத் தான் தூக்கிக் கொண்டு வருகிறார்கள்!"
"கரிய மேனியோ, கட்டெறும்பு மேனியோ!
அந்த உருவத்திலேயே இவர்கள் சிவனையும் வழிபடுகிறார்கள் என்று கதை அளந்தீரே! அந்த உருவத்தில் இப்போது சிவனைக் காட்டுங்கள் பார்ப்போம்!
நீங்கள் காட்டாவிட்டால், நான் யார் என்று உமக்குக் காட்டுகிறேன்!"
வெலவெலத்துப் போகிறான் நாலூரான்! பயம் கப்பிக் கொண்டது! முன்னாள் குருவான கூரத்தாழ்வான் அவ்வப்போது சொல்லும் சமய விரிவுரைகளில் இருந்து ஒன்னை எடுத்து விட்டது தப்பாகப் போச்சோ? மன்னனை இப்போது என்ன சொல்லி மடக்க முடியும்? நாரணன் உருவத்தில் ஈசனுக்கு எங்கே போவது?....
தொலைவில் மக்களும் கண்டு விட்டார்கள்! ஆகா! திடீர் விஜயமா?
சொல்லக் கூட இல்லையே! ஏதேனும் ஆபத்தா? கலவரமா? இந்த மன்னனிடம் பேசக் கூட முடியாதே! காது கொடுத்தும் கேட்க மாட்டானே!
நடுநடுங்குகிறார்கள் அடியவர்களும், பல்லக்குத் தூக்கிகளும்!
"ஸ்ரீ பாதம் தாங்குவோர்" என்று தூக்கிகளுக்குப் பெயர்! அந்த ஸ்ரீ பாதம் தாங்குவோர், இப்போது ஸ்ரீ பாதம் ஏங்குவோர் ஆகி விட்டார்கள்!
மேள தாள சப்தங்கள் படக் என்று நின்று விட்டன!
பெருமாளை ஏளப் பண்ணும் போது ஏளனம் பண்ணி விடக் கூடாதே என்ற கவலை வந்து விட்டது அனைவருக்கும்!
கட்டியம் கூறுதலும், வீடுகளின் முன் நின்று ஆரத்தி பெறுவதும் நிறுத்தி விட்டார்கள்! வேகம் வேகமாக, அரசனைக் கடந்தால் போதும் என்றாகி விட்டது இவர்களுக்கு!
வியர்த்து ஊத்துகிறது! பல்லாக்கு நலுங்கிக் குலுங்கி, குலுங்கோ குலுங்கோவென்று குலுங்குகிறது!
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!
பல்லாக்கும் குலுங்கி நடம் புரிகுவையோ பரமே?
கார்மேனி வண்ணன் குலுங்குகிறான்! சியாமள மேனியான் சலம்புகின்றான்!
தானாட, தன் மார்பாட, மார்பிலே மங்கை ஆட... கோனாட, கொள் கரத்தில் ஆழியும் சங்கும் ஆட ஆட...
இடையாட, நடையாட, உடையாட, குடையாட....
பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா!
உன் செவ்வடி செவ்வித் திருக்"காப்பு"! திருக்"காப்பு"!
என்று முனகி முனகி, அவனுக்குப் காப்பிட்டு, பாது-காப்பிட்டு ஓட்டமும் நடையுமாய்....
அச்சோ...........
இடையாட, நடையாட, உடையாட, குடையாட.... அவன் நாமும் ஆட ஆட,
செவ்வடி திருக்காப்பு என்று சொன்ன மாத்திரத்தில்,
செவ்வடியான அந்த நாமமும் ஆடியதே! ஆடியதே!
நாமம் திரும்பிக் கொள்ள, ஒரே வினாடியில், நாமம் விபூதியாக விட்டதே! திருமண் காப்பு, திருநீற்றுக் காப்பாகி விட்டதே!
எம்பெருமான் திருமுக மண்டலத்தில் திருநீறா?
இது எப்படிச் சாத்தியம்? இது எப்படிச் சாத்தியம்??
திருவாய்மொழியில் நம்மாழ்வார் பெருமாள் மேல் "நீறு" என்று பாடினாரே! அது இது தானோ?
கரிய மேனிமிசை "வெளிய நீறு" சிறிதே இடும்,
பெரிய கோலத் தடங் கண்ணன், விண்ணோர் பெருமான் தன்னை,
ஹர ஹர மகாதேவ! ஹரி ஓம்! ஹரி ஓம்!
பல்லாக்கு அரசனைக் கடக்கிறது.............................
பெருமாளைக் கண்ட பேரரசனுக்குப் பேர் அதிர்ச்சி! நாலூரானுக்கு நா அதிர்ச்சி!
மன்னனுக்கு முகமன் சொல்லி, ஆரத்தி காட்ட எண்ணிய நம்பிமாருக்கோ, நாலாயிரம் இடி இறங்கிய அதிர்ச்சி!
* என்னவாயிற்று? எப்படிவாயிற்று??
* நாமம் எப்படி விபூதி ஆயிற்று?
* இது எப்படிச் சாத்தியம்? இது எப்படிச் சாத்தியம்??
எவருக்கும் பேசக் கூடத் தோன்றவில்லை! ஆசா நிகளம் துகள் ஆயின் பின், பேசா அநுபூதி பிறந் ததுவே!
எம்பெருமானுக்கு நவநீத ஆரத்தி காட்டப் படுகிறது! நெற்றிக்கு நேராகவும் தீபம் மின்னுகிறது!
சுந்தரமாவது நீறு, சுந்தர-ராஜன் மேலதும் நீறு!
மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு!
முனியே நான்முகனே "முக்கண்-அப்பா"....என் பொல்லாக் கனிவாய் கரு மாணிக்கமே! என்று பாசுரம் ஓதுகிறார்கள்!
அரசன் இயந்திரம் போல் ஆரத்தியை வாங்கிக் கொள்கிறான்! சடாரி சார்த்தப்படவில்லை! பல்லாக்கு பரபரவென்று பாதையைத் தொடர்கிறது!
மந்திரித்து விட்ட கோழியாக, திருக்கோழிக்கு (உறையூருக்குத்) திரும்பிச் செல்கிறான் மன்னன்!
தந்திரமாவது நீறு! சமயத்தில் உள்ளதும் நீறு! - தந்திரமோ இது? தந்திரம் பண்ணி இருப்பார்களோ? என்று எண்ணிய மன்னன், சில நாட்களிலெல்லாம்.....பழைய குருடி, கதவைத் திறடி....
நாலூரான் பெருமூச்சு விடுகிறான்! ஆனால் தற்காலிகப் பெருமூச்சு தான்! அவன் வாயால் அவனே வாய் விட்டு உளறப் போவதை அவன் அப்போது அறியவில்லை!
மன்னா, அரசாணை போட்டு ஊர் ஊராக வம்பு செய்வதைக் காட்டிலும்....ஒரே ஒருவர் மட்டும் கையெழுத்து போட்டால் போதுமே?
அந்த உளறல்...பல பிளிறல்களுக்கு இட்டுச் செல்லப் போகிறது பின்னாளில்...
திருக்கண்ணங்குடி என்பது தான் அந்த ஊர். நாகப்பட்டினம்-சிக்கல்-கீவளூர் மார்க்கத்தில் உள்ளது! 108 திவ்ய தேசங்களில் ஒன்று!
காயா மகிழ்-உறங்காப் புளி-தோலா வழக்கு-உறாக் கிணறு-திருக் கண்ணங் குடி என்பது சிறப்பு!
இன்றும், ஒவ்வொரு ஆண்டும், கண்ணபுரம்/கண்ணங்குடியில் திருநீறு அணி விழா கொண்டாடப்படுகிறது!
இறைவனின் கல்யாண குணங்களில் மிகவும் முக்கியாமானது நீர்மை!
கொள்ளும் கலத்தைப் பொறுத்து, நீர் எந்த வடிவமும் எடுத்துக் கொள்ளும்!

அரசன் ஊரில் இருந்த அந்த மூன்றே முக்கால் நாழிகை! இன்றும் அதே நேரத்தில் பெருமாளுக்கு பட்டை விபூதிக் காப்பு போடப்படுகிறது!
திருவாரூர் தியாகராஜர் போலவே சிவ அலங்காரம் பெருமாளுக்குச் செய்கிறார்கள்.
திருமால் போல் நளின நடனம் ஆடாது, சிவனைப் போலவே வீறுமிகு நடனம் ஆடி எழுந்தருளப் பண்ணுகிறார்கள்.
அர்ச்சகர்களும் தங்கள் நாமத்தின் மேல் முப்பட்டை திருநீறு பூசிக் கொள்கிறார்கள்! மறந்தும் புறம் தொழாதவர்களும், மகேசன் நீறினை, நெற்றியில் புனைந்து கொள்கிறார்கள்!
"பொடி" புனை நெற்றியைப் புனிதவேல் காக்க!
காக்க காக்க! கண்ணங்குடி கண்ணபிரான் காக்க!
அர்ச்சகர்களும் தங்கள் நாமத்தின் மேல் முப்பட்டை திருநீறு பூசிக் கொள்கிறார்கள்! மறந்தும் புறம் தொழாதவர்களும், மகேசன் நீறினை, நெற்றியில் புனைந்து கொள்கிறார்கள்!
"பொடி" புனை நெற்றியைப் புனிதவேல் காக்க!
காக்க காக்க! கண்ணங்குடி கண்ணபிரான் காக்க!
இறைவனின் கல்யாண குணங்களில் மிகவும் முக்கியாமானது நீர்மை!
கொள்ளும் கலத்தைப் பொறுத்து, நீர் எந்த வடிவமும் எடுத்துக் கொள்ளும்!
நார+யண = நீரான் என்பதை முன்னரே சுப்ரபாதப் பதிவில் ஒரு முறை சொல்லியுள்ளேன்!
நீரில் கலந்து தீர்த்தம் என்று கொடுப்பதும் இதனால் தான்!
கொள்ளும் கலத்தைப் பொறுத்து, நீர் எந்த வடிவமும் எடுத்துக் கொள்ளும்! சிவ வடிவமும் எடுத்துக் கொள்ளும்!
நீரான், திரு-நீறான் வடிவம் கொண்டதும் இவ்வாறே!
நாதன் நாமம் நம-சிவாயவே!
நாடினேன், நாடி நான் கண்டு கொண்டேன், நாராயணா என்னும் நாமம்!
அரி ஓம்!
மக்களே, இன்று கைசிக ஏகாதசி!(Dec 9, 2008)! பக்ரீத் என்னும் தியாகத் திருநாளும் கூட!
கைசிக ஏகாதசி அன்று, ஸோ கால்டு ஐந்தாம் ஜாதி, நம்பாடுவானின் கதையை அரங்கன் சன்னிதியில் அப்படியே நடித்துக் காட்டுவார்கள்!
ஸோ கால்டு உயர் சாதி அந்தணனுக்கு, ஒரு தாழ்ந்த குலத்தானே, எப்படி மோட்சம் பெற உதவி செய்தான் என்று! சென்ற ஆண்டுப் பதிவு இங்கே!
அதே பதிவை ஒவ்வொரு ஆண்டும் இடாமல்,
அதான் இந்த முறை கைசிக ஏகாதசிக்கு, விபூதி பூசிக் கொள்ளும் பெருமாளை இட்டேன்!
இனிய ஏகாதசி, பக்ரீத் வாழ்த்துக்கள்!

கதை புதுசு. ஆனால் கலக்கலா இருக்கு.
ReplyDeleteஇனிய விழாக்கால வாழ்த்து(க்)கள்.
//இனிய ஏகாதசி, பக்ரீத் வாழ்த்துக்கள்!//
ReplyDeleteரிப்பீட்டே :-)
அப்படியே பக்ரீத் பத்தியும் விலாவாரியா எழுத முயற்சி பண்ணுங்களேன். நல்லா இருக்கும்.
//துளசி கோபால் said...
ReplyDeleteகதை புதுசு. ஆனால் கலக்கலா இருக்கு//
டேங்கீஸ் டீச்சர்!
அடுத்த தபா மாயவரம்-நாகப்பட்டினம் போகும் போது சென்று பாருங்கள்! :)
//இனிய விழாக்கால வாழ்த்து(க்)கள்//
Happy Hols :)
//Sridhar Narayanan said...
ReplyDeleteஅப்படியே பக்ரீத் பத்தியும் விலாவாரியா எழுத முயற்சி பண்ணுங்களேன். நல்லா இருக்கும்//
அண்ணாச்சி! ஞான திருஷ்டியா உமக்கு?
இங்கே நான் சீறாப் புராணம் பத்தி எழுதுறது உமக்கு எப்படி தெரியும்? :)
Nandri THALA,
ReplyDeletehappy to read a different but riviting post adout KASISIKA.
does this event coincide with this ekadasi or takes place on different occassion.
SRIRANGAPANGAJAM carries the PURANAM in pdf format.
recollected ur friends brush with ihe lord at SRIRANGAM in his post two yrs back.
very very nice post as usual.
sundaram
சூப்பர். எங்கிருந்து ஐயா பிடிக்கீறீர்? என்னமா அந்த காலத்துல கதை பண்ணியிருக்காங்க! சீரிதர் பக்ரீத் பற்றி "எப்படி" எழுதுதணும்னு கொஞ்சம் சொல்லிடுங்க :-)
ReplyDeleteஆல் இன் ஒன் சாமியில் பெண் சாமிகளையே காணுமே ? இருக்கிறதா எனக்குத்தான் தெரியவில்லையா ?
ReplyDeleteநாலூரான் அப்ப நல்லவர் தானா? அவருடைய அடங்காத் தூண்டுதலால் தான் உடையவர் திருநாராயணபுரத்திற்கு எழுந்தருள வேண்டி வந்தது என்று தான் இதுவரை படித்திருந்தேன்.
ReplyDeleteதிருகண்ணங்குடி பத்தி கேள்விப்பட்டிருக்கேன். (திரு)நீறு பூத்த (திரு)மண்ணா?! இவ்வளவு விலாவாரியா:-) கொடுத்தமைக்கு நன்றி.
ReplyDeleteதிருநீறு கண்ட சோழன், அதுக்கு துணை போன ரவான்னு அடுத்த பின்னூட்டம் இருக்கும்னு பாத்தேன்.
:-)))
//Anonymous said...
ReplyDeleteNandri THALA//
வாங்க சுந்தரம் சார். நலமா?
//happy to read a different but riviting post adout KASISIKA//
ரிவிட்டிங் போஸ்ட்டா? பந்தலைப் படிச்சி படிச்சி, உங்க பாஷையே மாறிப் போச்சி! :)
//does this event coincide with this ekadasi or takes place on different occassion//
இது ஏகாதசியின் போது இல்லை! வைகாசி மாசம்-ன்னு நினைக்கிறேன்.
//SRIRANGAPANGAJAM carries the PURANAM in pdf format//
பார்த்தேன்! ஸ்ரீரங்கபங்கஜம் திருவரங்க வலைத்தளம் ஆச்சே! இல்லாமல் இருக்குமா? மிக அருமையான வலைத்தளம்!
//recollected ur friends brush with ihe lord at SRIRANGAM in his post two yrs back.//
ஹா ஹா ஹா
//ramachandranusha(உஷா) said...
ReplyDeleteசூப்பர். எங்கிருந்து ஐயா பிடிக்கீறீர்?//
:)
//என்னமா அந்த காலத்துல கதை பண்ணியிருக்காங்க//
யக்கா, இது கதையல்ல! நிஜம்! :)
இன்றும் கோயில் கல்வெட்டில் காணலாம்! இன்றும் இதே உற்சவம் நடக்குது!
//சீரிதர் பக்ரீத் பற்றி "எப்படி" எழுதுதணும்னு கொஞ்சம் சொல்லிடுங்க :-)//
அவர் பிரியாணி சாப்பிட்டுக்கிட்டு இருக்காரு! நீங்க அவரைப் போயி டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு! :)
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteஆல் இன் ஒன் சாமியில் பெண் சாமிகளையே காணுமே ? இருக்கிறதா எனக்குத்தான் தெரியவில்லையா ?//
உங்களுக்குத் தான் தெரியலை! :)
படத்தில் தேடினா எப்படி? வழி
தடத்தில் தேடினா கிடைக்கும்! :)
திருமார்பில் பாருங்க! ஒருபாகத்தில் பாருங்க!
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteநாலூரான் அப்ப நல்லவர் தானா?//
:))
//அவருடைய அடங்காத் தூண்டுதலால் தான் உடையவர் திருநாராயணபுரத்திற்கு எழுந்தருள வேண்டி வந்தது என்று தான் இதுவரை படித்திருந்தேன்//
நாலூரான் கூரத்தாழ்வானின் முன்னாள் சீடன்! மன்னனிடம் தன்னைக் காத்துக் கொள்ள அறிவாளித்தனமா எதையோ உளறப் போய், அது அரசனின் கல் நெஞ்சில் செதுக்கினாற் போல் பதிந்து விட்டது!
பின்னாளில் இராமானுசருக்கும், அரங்கநகரில் அத்தனை அடியவர்களுக்கும் பின்னாளில் இதுவே பெரும் தொல்லை ஆகிப் போய் கொடூரங்கள் நடந்தேறின!
ஆனால் நாலூரானை மன்னித்து, அவனுக்கும் வீடு அளிக்க வேண்டும் என்று பின்னாளில் கூரத்தாழ்வார் வரதனிடம் வேண்டிக் கொள்வார்! இதைக் கண்டு இராமானுசரே திகைத்துப் போய் விடுவார்!
பதிவில் மன்னனின் பெயரை எங்கும் அடியேன் சொல்லவில்லை! மன்னனின் வழங்கலாகும் பெயர் கிருமி-கண்ட சோழன்!
ReplyDeleteவைணவ பரம்பரை வரலாறும், மன்னனின் மேல் உள்ள அத்தனை வெறுப்பில், இவன் பேரைக் கூட வாயால் சொல்லாது, கருமி கண்ட சோழன் என்றே குறிக்கும்!
இன்னும் பின்னாளில் முகம்மதியப் படையெடுப்புகளின் போது வந்த மாலிக் காபூர், உலுக்கான், மற்ற தளபதிகளின் பெயரை எல்லாம் சொல்லும் குருபரம்பரை...இவனை மட்டும் பேர் சொல்லி அழைக்கக் கூட அத்துணை வெறுப்பு!
உலுக்கான் அழியும் செல்வத்தை மட்டுமே கொள்ளையடிக்க வந்தான்! அழியாச் செல்வமான நித்ய விபூதியை கொள்ளை கொள்ள வரவில்லை! சோழனை விட உலுக்கானே மேல் என்றும் பேசும்!
ஆண்டவன் ஆலயத்தை அலற விட்டதை விட, அடியார்களை அலற விட்டதால் தான் சோழன் மேல் அத்துணை வெறுப்பு!
ஒரு கட்டத்தில் பெரியநம்பிகளுக்குக் கண் பிடுங்கப்பட்ட சேதி கேட்டு, காரேய்க் கருணை இராமானுசரே பொங்கி விடுவார்! திருவேங்கடமுடையானுக்குத் தான் அளித்த சக்கரம் உண்மையானால் சோழன் கழுத்தைச் சற்றேனும் கீற வேண்டும் என்றே நீரில் அர்க்கியம் விடுவார் உடையவர்! அப்படியே கழுத்தில் வெட்டு ஏற்பட்டு, புழுத்து, சிலகாலம் கழித்து மாண்டு போவான் சோழன்! கிருமிகள் கழுத்தில் (கண்டம்) புழுத்ததால் கிருமி-கண்ட சோழன் என்றே ஆகி விட்டான்!
இவன் யார் என்பது குறித்த வரலாற்று ஆய்வுகள் நுணுக்கமாக நடைபெற்றது!
எந்த நிலையும் சாராத சில வரலாற்று அறிஞர்கள்,
* இராமானுசர் வாழ்வியல் நிகழ்ச்சிகள்,
* மூவர் உலா போன்ற நூல்கள்
* சோழதேச அரசியல் நிகழ்வுகள்/கல்வெட்டுகள்
* ஆந்திர தேச யாதவராயன் நிகழ்வுகள்/கல்வெட்டுகள்
- எல்லாவற்றையும் வைத்து ஆய்வு செய்து கண்டதன் முடிவு:
* இவன் அதி ராஜேந்திர சோழன் என்பதே! (1067–1070)
* சில அறிஞர்கள் மட்டும் கால அளவுகளால், இவனுக்கு அடுத்து வந்த முதலாம் குலோத்துங்கன் என்றும் சொல்கிறார்கள்!
ஆனால் பலரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆய்வுகள், அதி ராஜேந்திர சோழனையே சுட்டுகின்றன!
மேலதிக தகவல்களுக்கு கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார், டிவிஎஸ் பண்டாரத்தார் போன்றோரின் ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்கவும்!
http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_3/introduction.html
http://vamsadhara.blogspot.com/2005_11_01_archive.html
கார்மேனி வண்ணன் குலுங்குகிறான்! சியாமள மேனியான் சலம்புகின்றான்!
ReplyDeleteதானாட, தன் மார்பாட, மார்பிலே மங்கை ஆட... கோனாட, கொள் கரத்தில் ஆழியும் சங்கும் ஆட ஆட...
//இடையாட, நடையாட, உடையாட, குடையாட....
பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா!
உன் செவ்வடி செவ்வித் திருக்"காப்பு"! திருக்"காப்பு"! //
அருமை அருமை KRS ஐயா.
திருக்கண்ணங்குடியில் பெருமாள் வெள்ளை சாத்தி திருநீறு அணிகிறார் என்று அடியேன் அறிந்திருந்தேன் ஆனால் ஏன் என்று தெரியாமல் இருந்தது, அதை அற்புதமாக கொடுத்ததற்க்கு நன்றி.
ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய, ஓம் நமசிவாய.
மக்கள்ஸ்
ReplyDeleteஉஷாக்கா கதையை எல்லாரும் ஒரு எட்டு போயி படிச்சிட்டு வாங்க!
கதை சூப்பர்! செம கதைக் களன்!
அங்கே உஷாக்காவுக்கு இட்ட ஒரு பின்னூட்டத்தை மட்டும், இங்கும் மீள் பதிக்கிறேன்!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சரி பதிவுக்கு வாரேன், நல்ல கதை! நல்ல கதைக்களன்!
ஆனா இதுக்கும், என் பதிவுக்கும் என்ன தொடர்பு?
என் பதிவில் சொல்லப்பட்ட கதை, வரலாற்று மன்னன், அவன் அமைச்சனை வைத்து சொன்னதாயிற்றே!
வெறுமனே தல புருடாணம் என்று அதை எழுதி வைக்கலையே!
In fact it is NOT even in thala puranam of the thirukkannangudi temple! This is just observed year after year by the local folks, after that incident took place!
இன்றும் அந்த ஊரில் இந்தத் திருநீறு அணி விழா நடக்கிறதே!
தலபுராணம் எழுதுவது ஒரு ஃபேஷன் என்று பின்னாளில் ஆகி இருக்கலாம்! லோக்கல் பாலிடிக்ஸ் பண்ணி இருக்கலாம்!
மதுரை தானே? தருமி சாரைக் கேளுங்களேன்!
பிட்டுக்கு மண் சுமந்தது, அழகர் முனிவருக்கு சாப விமோசனம் தந்தது, நக்கீரர் புலவர்களைக் குகையில் காத்து ஆற்றுப்படை எழுதியது - இதெல்லாம் தல புராணமா இல்லை புருடாணமா? :))
அப்பொருள் "மெய்ப் பொருள்" காண்பது அறிவு!
//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ReplyDeleteதிருகண்ணங்குடி பத்தி கேள்விப்பட்டிருக்கேன். (திரு)நீறு பூத்த (திரு)மண்ணா?!//
ஜூப்பருக்கா!
பதிவுக்குத் தலைப்பை இப்படி வச்சிருக்கணுமோ?
திரு)நீறு பூத்த (திரு)மண்
//இவ்வளவு விலாவாரியா:-) கொடுத்தமைக்கு நன்றி//
அது என்னா விலாவாரி பக்கத்துல ஜிரிப்பான்? :)
//திருநீறு கண்ட சோழன், அதுக்கு துணை போன ரவான்னு அடுத்த பின்னூட்டம் இருக்கும்னு பாத்தேன்//
திருநீறு கண்ட சோழனா? அது யாரு?
திருமுறை கண்ட சோழன் தான் இருக்கான் = இராசராசன்!
//"அதுக்கு" துணை போனரவான்னு//
எதுக்கு?
திருநீறு கண்ட சோழன்னு கிருமி கண்டவனை சைவி நான் மீள்பெயர் இடட்டுமா?
ReplyDeleteயப்பா, இதுக்கு மேல நான் அருஞ்சொற்பொருள் கொடுத்தேன்னா, நவீன நாலூராளாகிடுவேன். எஸ்ஸூ!
//Kailashi said...
ReplyDeleteஅருமை அருமை KRS ஐயா//
ஆகா! கைலாஷி...வெறும் KRS தான்! நோ ஐயா ப்ளீஸ்! மீ ஒன் அப்பாவிச் சிறுவன்! :)
//திருக்கண்ணங்குடியில் பெருமாள் வெள்ளை சாத்தி திருநீறு அணிகிறார் என்று அடியேன் அறிந்திருந்தேன் ஆனால் ஏன் என்று தெரியாமல் இருந்தது, அதை அற்புதமாக கொடுத்ததற்க்கு நன்றி.//
அடியார்கள் அறிந்து மகிழ்வது தான் இன்பமும் தொண்டும்!
நன்றி கைலாஷி (ஐயா?) :)
//ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய//
சிவஸ்ச ஹிருதயம் விஷ்ணோர்
விஷ்ணூச ஹிருதயம் சிவம்!
பெருமாளின் திருநீறணிந்த கோலத்தை மனதில் காணும் போதே மனம் பரவசத்தில் மூழ்கி விடுகிறது அருமை நண்பரே தங்களின் படைப்பு
ReplyDeleteஆஹா.. இதுதானா.. பெருமாள் திருநீறு அணிந்த நிகழ்வா?? நான் சின்னக் குழந்தையா இருக்கும் போது உடம்பு சரியில்லாமப் போச்சுன்னா பாட்டி சுதர்ஷனாஷ்டகம் சொல்லிக்கிட்டு நெத்தியில விபூதி பூசி விடுவாங்க..
ReplyDeleteதிருநீறு தான் பாட்டி எங்களுக்கு தந்து விட்டுப் போன ஒரே சொத்து.
இப்ப வெறும் பாழ் நெற்றி தான்.. திருநீறும் இல்லை திருமணும் இல்லை.
வந்துட்டேன்...படிச்சிட்டேன் ;)
ReplyDeleteநன்றி தல ;)
//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ReplyDeleteதிருநீறு கண்ட சோழன்னு கிருமி கண்டவனை//
அடா அடா அடா
என்னா ஒரு வெறி! :)
//சைவி நான்//
ஓ...நீங்க சைவியா?
உலகமே கேட்டுக்கோ!
கெபி அக்கா இஸ் சைவி
//யப்பா, இதுக்கு மேல நான் அருஞ்சொற்பொருள் கொடுத்தேன்னா, நவீன நாலூராளா கிடுவேன். எஸ்ஸூ!//
நவீன நாலூராளா? நோ வே!:)
நீங்க நவீன சோழி! சைவி கண்ட சோழி :))
//Mani Pandi said...
ReplyDeleteபெருமாளின் திருநீறணிந்த கோலத்தை மனதில் காணும் போதே//
சூப்பர்-ண்ணே!
அப்படியே மனத்தில் தொடர்ந்து காணுங்க!
//அருமை நண்பரே தங்களின் படைப்பு//
நன்றி மணிபாண்டியண்ணே!
//Raghav said...
ReplyDeleteஆஹா.. இதுதானா.. பெருமாள் திருநீறு அணிந்த நிகழ்வா??//
அதே அதே!
//பாட்டி சுதர்ஷனாஷ்டகம் சொல்லிக்கிட்டு நெத்தியில விபூதி பூசி விடுவாங்க..//
நல்ல காம்பினேஷன்! :)
இதைச் சுந்தர் அண்ணா கிட்ட சொன்னீரா?
//திருநீறு தான் பாட்டி எங்களுக்கு தந்து விட்டுப் போன ஒரே சொத்து//
விபூதி=செல்வம்
பெருமாள் தருவதே நித்ய விபூதி தானே!
//இப்ப வெறும் பாழ் நெற்றி தான்.. திருநீறும் இல்லை திருமணும் இல்லை//
எனக்குத் திருநீறு தான்பா!
நெத்தியிலும் நாமம் இல்லை!
புத்தியிலும் நாமம் இல்லை! :)))
//கோபிநாத் said...
ReplyDeleteவந்துட்டேன்...படிச்சிட்டேன் ;)//
உன் பின்னூட்டத்தைப்
பாத்துட்டேன், கோத்துட்டேன்!
என்னா கோபி ஆச்சு? :)
//இடையாட, நடையாட, உடையாட, குடையாட.... அவன் நாமும் ஆட ஆட,
ReplyDeleteசெவ்வடி திருக்காப்பு என்று சொன்ன மாத்திரத்தில்,
செவ்வடியான அந்த நாமமும் ஆடியதே! ஆடியதே!//
சூப்பர். அருமையா சொல்லியிருக்கீங்க. போன வருஷப் பதிவையும் இப்பதான் படிச்சேன். லிங்க் கொடுத்ததுக்கு நன்றி கண்ணா.
Vanakkam sir,
ReplyDeleteThanks,pudhiya thagaval,you wrote in ur own style,perumal looks like kanchi devaperumal.Arangan arulal, I hope that,I will go to this temple.one more request, please write some temples sthalapuranam.
ARANGAN ARULVANAGA.
Anbudan,
k.srinivasan.
//Vanakkam sir,
ReplyDeleteThanks,pudhiya thagaval,you wrote in ur own style//
:)
நன்றி ஸ்ரீநிவாசன் சார்!
//perumal looks like kanchi devaperumal//
ஆமாம்! அது படம் மட்டுமே! இடுகைக்குத் தொடர்பான கண்ணங்குடி படம் அல்ல!
//one more request, please write some temples sthalapuranam
ARANGAN ARULVANAGA//
கண்டிப்பா! நல்ல தகவல்கள் கொண்ட தல புராணங்களைக் கொஞ்சம் கொஞ்சமா சொல்லலாம்!
ஆனால் இந்தப் பதிவிற் சொன்னது கோயில் தல புராணத்தில் இல்லை!
இது ஒரு நிகழ்வு! அதை ஒட்டி ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கம்!
கவிநயா said...
ReplyDelete//இடையாட, நடையாட, உடையாட, குடையாட.... அவன் நாமும் ஆட ஆட,
செவ்வடி திருக்காப்பு என்று சொன்ன மாத்திரத்தில்,
செவ்வடியான அந்த நாமமும் ஆடியதே! ஆடியதே!//
சூப்பர். அருமையா சொல்லியிருக்கீங்க.//
நன்றிக்கா
//போன வருஷப் பதிவையும் இப்பதான் படிச்சேன். லிங்க் கொடுத்ததுக்கு நன்றி கண்ணா//
அப்பப்போ மீள் பதிவு இடுவதால் வரும் நன்மை இதுக்கா!
>>>>>என்னாது?....பெருமாள் விபூதி பூசிக் கொள்கிறாரா? என்னாது?....அவர் கூடவே மக்களும், மறந்தும் புறம் தொழா சில வைணவர்களும் விபூதி பூசிக் கொள்கிறார்களா?
ReplyDeleteஎன்னய்யா கனவு கினவு......>>>>>>>>>
அப்படிகனவெல்லாம் காணமாட்டோம் எங்க அரங்கர் கைலி கட்டிக்கிறார் ரொட்டிதான் காலைல நிவேதனம் அப்றோம் இதெல்லாம் என்ன பெரியவிஷயம் ! ஹரியும் சிவனும் ஒண்ணுன்னு நாங்க சிலர் அறிவோம்!
காஞ்சில ஏகாம்பரேஸ்வரர் சந்நிதில 108திவ்யதேசப்பெருமாளில் ஒருவர் தன்வந்திரிவைத்யநாராயணராக இருக்கிறாரே! மூர்த்திகள் இருவரும் ஆல்வேஸ் மூழ்காதப்ரண்ட்ஸ்ஷிப்ல தான் பயணிக்கிறார்கள்.மனிதர்கள்தான் அவர்களைப்பிரித்துப்பார்க்கிறோமோன்னு தோணுது இல்லையா ரவி!
ஆனாலும் ராஜேஷ்குமார் நாவலைப்போல விறுவிறுன்னு ஆரம்பிக்கிறீங்கப்பா ரவி!!! அது மக்களை இங்க இழுக்கறது நிஜம்!!!
>>>>"சமயங்களே ஆறுகள் போலத் தான் மன்னா! அவை நம்மால் ஓடுவதில்லை! அணை கட்டினாலும் தேக்கத் தான் முடியுமே ஒழிய தடுக்க முடியாது!
மக்கள் மனங்களில் பாய்ந்து வந்தால், அணையாவது, ஒன்றாவது>>>>>
மிகப்பெரிய தத்துவார்த்தமான உண்மையை ரொம்ப சாதாரணமா போறபோக்குல சொன்னாலும் அதுக்கு பாராட்டியே ஆகணும்
திருக்கண்ணங்குடி விஷயம் நானும் அறியாத ஒன்றுதான் அதனால் ஆவலுடன் படித்தேன்...தகவல் சுரங்கமா இருக்கீங்களேப்பா தம்பி! நியூயார்க் கோயில்ல மார்கழிமாச உபந்நியாசத்துக்கு அழைச்சிடப்போறாங்க!
பாராட்டுக்கள் பதிவுக்கும் இட்ட அழகழகான படங்களுக்கும்!(வீட்ல ஏகப்பட்ட விருந்தாளிகள் ஆகவே தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்க!)
மா ரமணன் உமா ரமணன்
ReplyDeleteமலரடி பணி மனமே தினமே!
//ஜீவா (Jeeva Venkataraman) said...
ReplyDeleteமா ரமணன் உமா ரமணன்
மலரடி பணி மனமே தினமே!//
மாற ஜனகன், குமார ஜனகன்,
மலைமேல் உறைபவன்- பாற்கடல்
அலைமேல் உறைபவன்
மா ரமணன் உமா ரமணன்
மலரடி பணி மனமே தினமே
//ஷைலஜா said...
ReplyDeleteஅப்படிகனவெல்லாம் காணமாட்டோம் எங்க அரங்கர் கைலி கட்டிக்கிறார் ரொட்டிதான் காலைல நிவேதனம் அப்றோம் இதெல்லாம் என்ன பெரியவிஷயம் !//
யக்கா...
அரங்கன் கைலி-ரொட்டி எல்லாம் பொம்பள சமாச்சாரம்! துலுக்கா நாச்சியார்! அதுனால செய்யறான்! :)
//காஞ்சில ஏகாம்பரேஸ்வரர் சந்நிதில 108திவ்யதேசப்பெருமாளில் ஒருவர் தன்வந்திரிவைத்யநாராயணராக இருக்கிறாரே!//
அது சிவன் இடம் கொடுத்தார் அவர் கோயில்ல!
அது போல இவன் இடம் கொடுப்பானா? :)
அரங்கன் சைவத்தைத் தாங்குவானா? -அதான் சில வீர சைவப் பதிவர்களின் மீண்டும் மீண்டும் எழுப்பும் கேள்வி!
அதான் இப்பதிவை இட்டேன்! :)
//மூர்த்திகள் இருவரும் ஆல்வேஸ் மூழ்காதப்ரண்ட்ஸ்ஷிப்ல தான் பயணிக்கிறார்கள்.மனிதர்கள்தான் அவர்களைப்பிரித்துப்பார்க்கிறோமோன்னு தோணுது இல்லையா ரவி!//
சூப்பராச் சொன்னீங்க-க்கா!
சிவத்தைப் போற்றுவதை விட, இவர்களின் சொந்த சைவக் கட்டமைப்பைக் காப்பாத்திக்கத் தான் மெனக்கெடறாங்க நிறைய பேர்!
ஒன்றில் இருக்கும் நல்ல விசயங்களை எடுத்துச் சொன்னா இவிங்க பல பேருக்கு உடம்பெரிச்சல்! இன்னொன்றைத் தாழ்ச்சியா பேசினா அப்போ சண்டைக்கு வரலாம்! ஆனா இந்த சீலர்கள், ஒன்றின் நல்லவைகளைக் கூடச் சத்தமாப் பேசாதே! அப்படியே அமுக்கி வை! - என்று மறைமுக ஆட்டமே ஆடுவாங்க! ஆடியிருக்காங்க! :))
இவர்களைத் தான் மாணிக்கவாசகர் கன்ன பின்னான்னு திட்டறாரு!
பாசம் பரஞ்சோதிக்கா வைத்தாய்? வேற எதுக்கோ வைத்தாய்-ன்னு ஒரே அடியா அடிக்கிறாரு! :)
//ஆனாலும் ராஜேஷ்குமார் நாவலைப்போல விறுவிறுன்னு ஆரம்பிக்கிறீங்கப்பா ரவி!!! அது மக்களை இங்க இழுக்கறது நிஜம்!!!//
ஹா ஹா ஹா!
//மிகப்பெரிய தத்துவார்த்தமான உண்மையை ரொம்ப சாதாரணமா போறபோக்குல சொன்னாலும் அதுக்கு பாராட்டியே ஆகணும்//
நன்றி-க்கா!
//திருக்கண்ணங்குடி விஷயம் நானும் அறியாத ஒன்றுதான் அதனால் ஆவலுடன் படித்தேன்...//
அடுத்த முறை போகும் போது பாத்துட்டு வாங்க-க்கா!
//தகவல் சுரங்கமா இருக்கீங்களேப்பா தம்பி!//
அதான் வெட்டத் தயாரா இருக்காக! :)
//நியூயார்க் கோயில்ல மார்கழிமாச உபந்நியாசத்துக்கு அழைச்சிடப்போறாங்க!//
ஹிஹி! ஒங்களுக்கு விசயம் தெரியாதா? மெளலி அண்ணன் சொல்லலையா?
ஆல்ரெடி கூப்டாச்சி! போயி பேசிட்டும் வந்தாச்சி! :)
bristola utkarnthu thamil padikka nallairuku perumalukku thanks
ReplyDelete