Tuesday, August 05, 2008

ஆடிப்பூரம்: ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்? - 2

மூனு பேரும் இங்கிட்டு வந்து நில்லுங்க! பார்த்து விடலாம், யார் தேறுகிறீர்கள் என்று! - சென்ற பதிவு இங்கே!
* திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்,
* மனம் மயக்கும் மதுரைக் கள்ளழகர்,
* எம்பெருமான், திருவேங்கடமுடையான்

105) உலகளந்த பெருமாள், திருக்கோவிலூர்
பராக்-பராக்-பராக்!
"என்ன கோதை? நான் தானே உனக்குப் பிடித்தமானவன்? ஓங்கி உலகளந்த "உத்தமன்"-ன்னு என்னைத் தானே பாடினாய்?"

"வாருங்கள், அளந்தவரே! வாருங்கள்! திருக்கோவிலூர்-ன்னாலே சும்மா "அளந்து" விடுவாங்க போல இருக்கே! நான் உத்தமன்-னு உங்களைச் சொல்லல! காஞ்சிபுரம் உலகளந்த பெருமாளைச் சொன்னேன்!"

"கோதை, யார் மேலயோ இருக்கும் கோபத்தை என் மேலே காட்டுகிறாயே! நியாயமா?"

"நியாயம் பற்றி நீங்க பேசறீங்களா? மாவலிக்குச் சிறு கால் காட்டி, பெரு கால் அளந்தீங்க தானே? போனால் போகட்டும்! ஆனா அளக்கும் போது இந்த மொத்த உலகத்தையும் சேர்த்து தானே அளந்தீங்க? அப்போ உங்க திருவடி, இந்தப் பூமி மேல மொத்தமாப் பட்டிருக்கணுமே? "

"ஆமாம்! பட்டதே; பட்டர் பிரான் கோதைக்கு பட்டதில் என்ன ஐயம்? பட்ட குறையா? பட்டு விட்ட குறையா? விட்டு தொட்ட குறையா?"

"ஐயா தமிழ்க் கடவுளே! போதும் உங்க அடுக்கு மொழி! திருவடிகள் பூமியில் மொத்தமா பட்டிருந்தா, பூமியில் உள்ள அத்தனை பேரும் இந்நேரம் மோட்சம் போயி இருப்பாங்களே? ஏன் போகலை? நீங்க என்னமோ சதி செஞ்சிருக்கீங்க! கேக்கறே-ன்னு தப்பா நினைச்சிக்காதீங்க! அப்படி என்ன திருவடியை விட நீங்க உசத்தியாப் போயிட்டீங்க?"

"அது இல்லை கோதை...வந்து....வந்து......என் திருவடிகள் என்னை விட..."

"போதும் உங்க திருக்கோவிலூர் தகிடு தத்தம்...உங்களையும் நிராகரிக்கிறேன்!...(Rejected...) அடுத்து..."


106) கள்ளழகர் என்னும் சுந்தரராஜப் பெருமாள், மதுரை-மாலிருஞ்சோலை!
பராக்-பராக்-பராக்! "ஆண்டாள்! My honey! தேனே, நலமா பொன் மானே?"

"வாருங்கள் அழகரே வாருங்கள்! பச்சைப் பட்டு உடுத்தி வந்திருக்கீங்க போல இருக்கே! அது எப்படி வருஷா வருஷம், உமக்கு மட்டும் பச்சைப் பட்டே வருது? இல்லை.....பெட்டி முழுக்கவே பச்சை தானா? ஹா ஹா ஹா! பச்சை மாமலை போல் பெட்டி! "

"ஆகா...உனக்கு என்ன உஷ்ணம்? என்ன உஷ்ணம்? மோர்ப் பந்தலில் மோர் தரச் சொல்லட்டுமா?"

"எனக்கு மோர்ப் பந்தல் எல்லாம் வேணாம்! என் தோழனோட மாதவிப் பந்தலே போதும்!" :)

"ஓ...அவன்ன்ன்ன்ன்னா? ......சரி, சரி...மாலையைச் சீக்கிரம் போடு! சோலை மலைக்குச் செல்ல வேண்டும்! நேரமாகிறது!"

"ஏதேது? பெண்ணைக் கட்டாயப்படுத்தி மாலை வாங்குறீங்க போல! சோலை மலை உங்க மலையா? போனால் போகட்டும் என்று என் மருமகன் முருகன், படைவீடு கீழே ஒரு வெளிவீடு (out house) கொடுத்திருக்கான்!  ஒதுங்க இடம் கொடுத்ததுக்கே இந்த ஆரவாரமா? வாடகை வீட்டில் குடியிருக்கும் போதே உமக்கு இம்புட்டு கோலாகலமா?"

"என்ன ஆண்டாள்? அடக்கமே உருவான மதுரைப் பெண் போலவா நீ பேசுகிறாய்? வெடுக்கெனப் பேசி நடுக்குறச் செய்தால், படுக்குறும் பரமன் மிடுக்கு அழிவேனே!
நூறு தடா பொங்கல், நூறு தடா வெண்ணெய்! பெருமாளிடம் உன்னைச் சேர்ப்பிப்பதற்காக எனக்கு நேர்ந்து கொண்டாய் அல்லவா?
அதான் நானே வந்துள்ளேனே! என்னிடம் சேர்ந்து விடு! பொங்கலையும் என்னிடமே சேர்த்து விடு!"

"கள்ள்ள்ள்ள் அழகா! பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனா நீ?
கூழும் வேண்டும், மீசையும் வேண்டும்! பெண்ணும் வேண்டும், பொங்கலும் வேண்டுமா?
மனத்துக்கினியான் என்னிடம் வந்து சேர்ந்தால் மட்டுமே உனக்குப் பொங்கல்! இல்லீன்னா போங்கல்! போங்கள்! உங்களையும் நிராகரிக்கிறேன்!...(Rejected...) அடுத்து..."


107) பாலாஜி, ஸ்ரீநிவாசன், வேங்கடேஸ்வரன் என்னும்...
திருவேங்கடமுடையான், திருவேங்கடம்!
பராக்-பராக்-பராக்!

ஜருகண்டி, ஜருகண்டி, பதண்டி-மா, பதண்டி...

"கோதை, என்ன இது? என்னை அழைத்தாய்? ஆனால் நான் வரும் போதோ ஓடுகிறாயே?"

"பின்ன என்னவாம்? வரும் போதே ஜருகண்டி, ஜருகண்டி-ன்னு சொன்னால் ஜருகாம என்ன செய்வார்களாம்?"

"ஹா ஹா ஹா! நீ அழைத்தாயே என்பதற்காகத் தான் வந்தேன்! தெழி குரல் அருவி பாயும், எம்பெருமான் பொன் மலையை விட்டு இறங்கி வந்தேன் பெண்ணே!"

"வேங்கடநாதா, உங்கள் மலையில் அருவி எல்லாம் இருக்கா? எனக்கு அருவின்னா ரொம்பவும் பிடிக்கும்!
மலை அருவியில் சாரல் தெளிக்க,
மனத்துக்கு இனியான் சேலை ஒளிக்க,
அவன் பரந்த மார்பில்,
விரிந்து குளிப்பது தான் எத்தனை சுகம்! ஆகா!
தினமும் இதே குளத்தில் குளித்துக் குளித்து எனக்குச் சலித்து விட்டது! இந்த மதுரையில் மருந்துக்கும் ஒரு அருவியும் இல்லை! குருவியும் இல்லை!"

(ஒரே ஒரு விநாடி தரிசனத்தில், ஒன்னுமே பேசாம, அருவியைக் காட்டி இப்படி மயக்கி விட்டானே வேங்கடவன்? - அத்தனை எம்பெருமான்களும் பொறாமை விழிகளால் பொன்மலையானைப் பார்க்கிறார்கள்!)

"வெறும் அருவி மட்டுமா கோதை? விண்ணீல மேலாப்பு விரித்தாற் போல் மேகங்காள்! தேன் கொண்ட மலர்ச்சிதறல் திரண்டேறிப் பொழிவீர்காள்! எல்லாம் இருக்கும் திருமலையில்!
அது திருமலை! இது தோள்மலை! - என் தோள்மலையில் உன் தோள்மாலை எங்கே? தோமாலை எங்கே?"

* தோமாலை சேவை! ஆண்டாள் வேங்கடவனுக்கு மாலையைச் சூட்ட மிக அருகில் வந்து விட்டாள்!
* கிட்டக்க வந்தால், அவன் பச்சைக் கர்ப்பூர நெடி, அவள் பச்சை உடம்பை என்னமோஓஓஓஓஓ பண்ணுகிறது!
* அத்தனை திவ்யதேச எம்பெருமான்களுக்கும் இதயம் தடக்-தடக் என்று அடித்துக் கொள்கிறது!
* அரங்கப் பள்ளி கொண்டான் மட்டும் கழிவிரக்கத்தில் கொஞ்சம் தள்ளிக் கொண்டான்! ஆனால்....ஆனால்....ஆனால்....


"தங்கச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

எதுக்கும் ஒரு முறைக்கு இரு முறை நல்லா யோசிச்சிகோம்மா! திருமலை மேலே தேவியர் யாரும் இருக்க முடியாது! எல்லாரையும் மலைக்குக் கீழே அனுப்பி விடுவான் வேங்கடவன்!
கேட்டால், குரு பரம்பரை.....தேவி பூமியில் குருவாய் இருக்கணும்......துணைக்குச் சேனை முதலியார், நம்மாழ்வார் என்று ஒவ்வொருத்தரா அனுப்பறேன்-னு கதை விடுவான்! திருமலை என்பது அ-பிராக்ருதமான மலை! அங்கே அவனும் அவன் அடியார்கள் மட்டுமே! அவன் அந்தரங்க அறையில் கூட அடியார்கள் தான் படியாய்க் கிடப்பார்கள்! வாசல் படியாய் கிடந்து, அவன் பவள வாய் காண்பார்கள்!
உனக்கு ப்ரைவசி கூட இருக்காது! ப்ரை-வசி இல்லாமல் வசிப்பாயா நீ? உனக்கு அந்தரங்கம் வேணுமா? இல்லை அந்த-ரங்கம் வேணுமா?"

"அண்ணா இராமானுசரே! நல்ல வேளை ஞாபகப்படுத்தினீர்கள்! இல்லீன்னா என் கதி என்ன ஆயிருக்கும்? பெரும்பூதூர் மாமுனிக்குப் பின் ஆனேன் வாழியே!"

.........வேங்கடவன் உடையவரை நோக்கி ஒரு பார்வை பார்க்க...அவரோ சிரிக்க, அவனோ முறைக்க...


108) நம்-பெருமாள் என்னும் நம்முடைய பெருமாள்,
அரங்கன், திருவரங்கம்!
பராக்-பராக்-பராக்!
பராக்-பராக்-பராக்!

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!
கூரிய விழிகள் கூறிக் கொண்டன!
கண்கள் கலந்தன! வாய்கள் மறந்தன! பேச்சே இல்லை!
அவள் மூச்சு இவன் மேலே! இவள் மூச்சு அவன் மேலே!

* அவன் எளியன்! அலங்காரம் கூட இல்லை! = வெறும் முத்து மாலை!
* இவள் அளியள்! அலங்காரம் தான் முழுதும்! = பூமாலை, பாமாலை! இவர்களுக்குள் எப்படி ஒத்துப் போகும்? திருக் கமல பாதம் வந்து........என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே!
சிவந்த ஆடையின் மேல்........சென்றதாம் என் சிந்தனையே!
உந்தி (தொப்புள்கொடி) மேல்......அதன்றோ உள்ளத்தின் உயிரே!
திருவயிற்று உதர பந்தனம்.........என் உள்ளத்துள் உலாகின்றதே!



பின்னிய கூந்தல் கருநிற நாகம்.. பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்

ஆர மார்பு அன்றோ............அடியேனை ஆட்கொண்டதே!
கண்டம் (கழுத்து) கண்டீர்.........அடியேனை உய்யக் கொண்டதே!
செய்ய வாய்......ஐயோ.........என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!
பெரிய வாய கண்கள்.....என்னைப் பேதைமை செய்தனவே!!!


தட்டொளி-கண்ணாடி சேவை

நீலமேனி.... ஐயோ..... நிறை கொண்டது என் நெஞ்சினையே!!!
சவுரித் திருமஞ்சனம்

என் அமுதினைக் கண்ட கண்கள், மற்று ஒன்றினைக் காணாவே!!!
என் அமுதினைக் கண்ட கண்கள், மற்று ஒன்றினைக் காணாவே!!!


* நம்மாழ்வார் திருமணத்தை நடத்தி வைக்க,
* பெரியாழ்வார் தம் ஆவியாம் திரு-மகளை, அரங்கனுக்குத் தாரை வார்க்க,

* ஆழ்வார்கள் பன்னிருவர் ஆழ்ந்தே தமிழ் இசைக்க,
* நாயன்மார்கள் மங்களப் பதிகம் பாடியே அருள,

* திவ்யதேச எம்பெருமான்கள் அத்தனை பேரும் அருளாசி வழங்க,
* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
* அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ,

** நம்பிக்கு மாலையிட்டாள் நங்கை!
** நம்பியிடம் சர்க்கரைப் பொங்கலில் நெய்யாய்க் கரைந்து விட்டாள் நங்கை!
** நம்பியின் பாம்புப் படுக்கையில், நம்பியை, நம்பி ஏறி விட்டாள் நங்கை!

 மெத்து என்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி...
குத்து விளக்கு எரியக், கோட்டுக் கால்
கட்டில் மேல் காதலனைச் சேர்ந்து விட்டாள் கோதை!

இன்றோ திரு ஆடிப் பூரம்! எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்! - குன்றாத
வாழ்வான, வைகுந்த வான்போகம் தனை இகழ்ந்து,
ஆழ்வார் திருமகளா ராய்!

திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள் வாழியே!
திருப் பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
செல்லமே வாழியே! என் உயிர்த் தோழி வாழியே!


(சென்ற ஆண்டு மெளலி அண்ணா, "திவ்ய சூரி சரிதம்" பற்றி எழுதுங்களேன் என்று நேயர் விருப்பம் வைத்தார்! அதற்குக் காலம் இப்போது தான் கனிந்தது!

கருடவாகன பண்டிதர் என்பவர் எழுதிய நூல் தான் திவ்ய சூரி சரிதம்! பழைய நூல்! அச்சில் அவ்வளவாகக் கிடைப்பதில்லை!

நம்மாழ்வார் ஆண்டாள் சுயம்வரத்தை நடத்துவார்; தோழி அனுக்ரகை கூவிக் கூவி அழைக்க, ஒவ்வொரு எம்பெருமானும் கோதை முன் தோன்றுவர்; அரங்கனை மட்டுமே அவள் கண்களால் தேர்ந்து எடுப்பதாகவும் வரும்!

ஒவ்வொரு பெருமாள் வரும் போதும், அவர் தலம், அதன் தல வரலாறு சொல்வதோடு நூல் நின்று விடும்!
மேலே நீங்கள் கண்ட உரையாடல்கள் எல்லாம் அடியேன் கற்பனையே!
கோதையின் பின்னால் ஒளிந்து கொண்டு, அடிப் பையன்-பொடிப் பையன், அனைத்து திவ்யதேச எம்பெருமான்களையும் கலாய்த்து விட்டேன்! :)

அனைத்து எம்பெருமான்களும் அடியேனை மன்னிக்க வேண்டும்!
"சிறு பேர்" அழைத்தனவும் சீறி அருளாதே! இறைவா நீ தாராய், பறையேலோ ரெம்பாவாய்! :)


அடியே கோதை...
உன் பிறந்த நாள் பரிசு தான், இந்தப் பதிவு!
பிடிச்சிருக்கா உனக்கு? :)
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

83 comments:

  1. Me The Firstuuu..

    Rangan Perumaiyai Short aga mudithu vitteergaley.

    Nandri

    Venkatesh

    ReplyDelete
  2. Me the First.

    Very Nice.

    Rangan Episode-i short aaga mudithu vitteergal.

    Oru thani padhivu podavum.

    Nandri

    ReplyDelete
  3. //ஐயா தமிழ்க் கடவுளே! போதும் உங்க அடுக்கு மொழி! //

    இதுவும் உங்க கற்பனை தானே அண்ணே? :p

    முருகா! முருகா! :))

    முந்தய பதிவும் சரி, இந்த பதிவிலும் சரி, படங்கள் (கள்ளழகர் கலக்குறார்) மிக அருமை. பதிவும் தான். :))

    ReplyDelete
  4. 107 ஐயும் ரிஜக்ட் செய்தால் 108 ஆவதை தேர்ந்து எடுக்காமல் வேறு வழி? :)) ச்சும்மா ! நல்ல பதிவு . நன்றி ரவி.
    ஷோபா

    ReplyDelete
  5. //போனால் போகட்டும் என்று என் மருமகன் முருகன், படைவீடு கீழே ஒரு வெளிவீடு (out house) கொடுத்திருக்கான்!//

    :)))

    //மலையருவியில் சாரல் தெளிக்க,
    மனத்துக்கினியான் சேலை ஒளிக்க,
    அவன் பரந்த மார்பில், விரிந்து குளிப்பது தான் எத்தனை சுகம்!//

    அடடா :))

    உங்கள் கற்பனை அதீதம், அருமை! நேயர் விருப்பம் வைத்த மௌலிக்கு நன்றி. ஆண்டாள் திருவடிகள் சரணம் சரணம்.

    ReplyDelete
  6. //ambi said...
    //ஐயா தமிழ்க் கடவுளே! போதும் உங்க அடுக்கு மொழி! //

    இதுவும் உங்க கற்பனை தானே அண்ணே? :p//

    அடுக்கு மொழியைத் தானே சொல்லுற அம்பி!
    அது என் கற்பனை தான்! :)

    தமிழ்க் கடவுள் = கேஆரெஸ் கற்பனை அல்ல!

    தொல்காப்பியர் அடிச்சி விட்ட கற்பனை-ன்னு தில் இருந்தா சொல்லுங்களேன் :)

    //முந்தய பதிவும் சரி, இந்த பதிவிலும் சரி, படங்கள் (கள்ளழகர் கலக்குறார்) மிக அருமை. பதிவும் தான். :))

    Dankees Pa!
    கள்ளழகர் எதைக் கலக்குறார்? கள்ளையா? :))

    சுந்தர-ராஜன் என்று வருகிறது!
    அழகர்-கோன் என்று சொல்லலாம்!
    எப்படி கள்-அழகர் ஆச்சு?
    பெயர்க்காரணத்தை மதுரை மக்கள் யாரச்சும் சொல்லுங்கப்பு!

    ReplyDelete
  7. //வாருங்கள் அழகரே வாருங்கள்! பச்சைப் பட்டு உடுத்தி வந்திருக்கீங்க போல! அது எப்படி அழகரே வருஷா வருஷம், உமக்கு மட்டும் பச்சைப் பட்டே வருது? பெட்டி முழுக்க பச்சை தானா? பச்சை மாமலை போல் பெட்டி! சரி தானே?" :)//

    அழகரின் பட்டு இன்றைக்கும் ஆண்டாளிடமிருந்து தான் வருகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் பட்டர் ஒருவரால் கண்களை மூடியவண்ணம் தேர்ந்தெடுக்கும் பட்டை உடுத்திக் கொண்டே அழகர் ஆற்றில் இறங்கிக் கொண்டிருக்கிறார் இன்றளவும், மற்றபடி கள்ளழகர் என்ற பெயர்க்காரணம் எல்லாம் எப்போவோ குமரன் சொல்லியாச்சுனு நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. //கீதா சாம்பசிவம் said...
    Vaanga Geethamma!

    //அழகரின் பட்டு இன்றைக்கும் ஆண்டாளிடமிருந்து தான் வருகின்றது//

    Content of this pinnottam is disputed :)))

    ReplyDelete
  9. //Venkatesh said...
    Me The Firstuuu..//

    Vaanga Venkatesh!

    //Rangan Perumaiyai Short aga mudithu vitteergaley//

    Naan ennanga pannattum!
    Andal thaan neela meni, karia vaai, nu ennanamo paathu, pesavae mattengiraale!
    Ava pesina thaane, naanum pesa mudiyum! :))

    ReplyDelete
  10. 'மாவலி மூவடி மண்' என்று நாக்குழறி உளரும் போது திருவை மறைத்துக் கொண்டு சென்றார் என்று தெரியும். கோதையைப் பார்க்கும் போது கூடவா திருவை மறைத்துக் கொண்டு சென்றார் கள்ளன்? திருமாலிருஞ்சோலை மணாளனார் வெறும் மாலிருஞ்சோலை என்று பராக் சொல்லிக் கொண்டு சென்றதன் மர்மம் அது தானோ? :-)

    திருவேங்கடமுடையானுக்கு மட்டும் இவ்வளவு பெரிய உரையாடலா? உங்கள் ஓரவஞ்சனை நன்றாகத் தெரிகிறது.

    மிக நன்றாக இருந்தது திவ்யசூரி சரிதம் இரவிசங்கர். மற்றவர்களிடம் எல்லாம் காரணங்களைக் கேட்ட கோதை நாச்சியார் திருவரங்கத்தமுதனைக் கண்டவுடனே காதல் கொண்டு மணந்து கொண்டாள் போலும். கண்கள் கலந்து விட்டால் வாய்ப்பேச்சிற்குத் தேவையின்றிப் போகின்றதோ?

    குன்றாத வாழ்வான வைகுந்த வான் போகத்தை விட்டுவிட்டு விட்டுசித்தர் திருமகளாராய் எமக்காகவன்றோ ஆண்டாள் அவதரித்தாள். ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடத்திலே ஆழ்ந்தவனாய் இருந்த கண்ணனுக்கு அவனுடைய ஆளுடைமையையும் தனது அடிமைத்தனத்தையும் நினைவுபடுத்தி, தான் அணிந்து அளித்த மலர்மாலையை அவன் விரும்பி அணியும் படியாகச் செய்து, அவன் வந்து அடைய வேண்டி இருக்கத் தானே அவனைச் சென்று கண்டு வற்புறுத்தி அவனை அடைந்த கோதைப் பிராட்டிக்கு அடியேனுடைய வணக்கங்கள் மீண்டும் மீண்டும் எக்காலத்தும் நிலைத்திருக்கட்டும்.

    ReplyDelete
  11. என்னப்பா! கள்ளழகருக்கெல்லாம் பேர் காரணம் கேக்கறாங்க! அவனை மாயோன் என்றுதானே 'தொல்'காப்பியம் அழைக்கிறது. மாயோன் என்றால் கள்வன்தானே! கண்ணன் கள்வன் என்று எல்லோரும் மாய்ந்து, மாய்ந்து பாட்டு எழுதிவிட்டனர். கோகுலத்தில் கண்ணனைத் திட்டவேண்டுமெனில் "நாராயணா" என்று சொன்னால் போதுமாம். அவன் சித்சோரன் (நெஞ்சக் கள்வன்) அல்லவோ? அதனால் கள்ளழகர். பின்னால் கள்ளர் ஜாதிக்கு குலபதியானதினாலும் கள்ளழகர். ஆண்டாள் மனதைக் கவர்ந்ததினாலும் கள்ளழகர்.

    கண்ணபிரான்! சூப்பர்! ஆண்டாள் ஆசீர்வாதம் உண்டு. பயமற்க!

    ReplyDelete
  12. //அவன் எளியன்! அலங்காரம் கூட இல்லை! - வெறும் முத்து மாலை! //

    அடடா...
    இது போதுமே நம்ம நாச்சியார் நம்ம கார்மெனி வண்ணனை தேர்ந்தெடுக்க....

    நல்ல தொகுப்பு கே.ஆர்.எஸ்.

    எழிலன்பு :-)

    ReplyDelete
  13. அருமை கண்ணபிரான்..

    ஒவ்வொரு பதிவையும் பொக்கிஷமாக பாதுகாத்து வைக்க வேண்டியது உங்களுடைய தளத்தில்தான்..

    வணங்குகிறேன்.. உங்களையும், அந்த ஆண்டாளையும், அந்த அரங்கனையும்..!

    ReplyDelete
  14. அண்ணே, கேஆரெஸ் அண்ணே,

    ஆஹா அற்புதம். என்ன சொல்ல? வார்த்தைகளே இல்லை. எவ்ளோ அழகா சொல்லியிருக்கீங்க கோதயை பற்றி.
    //ஒவ்வொரு பதிவையும் பொக்கிஷமாக பாதுகாத்து வைக்க வேண்டியது உங்களுடைய தளத்தில்தான்..//
    இது நிஜம் அய்யா.அப்படியே உருகித்தான் போனேன். அற்புதமான படங்களுக்கும் சேர்த்து தான் இந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. //குமரன் (Kumaran) said...
    கோதையைப் பார்க்கும் போது கூடவா திருவை மறைத்துக் கொண்டு சென்றார் கள்ளன்? திருமாலிருஞ்சோலை மணாளனார் வெறும் மாலிருஞ்சோலை என்று பராக் சொல்லிக் கொண்டு சென்றதன் மர்மம் அது தானோ? :-)//

    நான் ஒன்னு நினைச்சி எழுதினேன்! அதை யாராச்சும் கண்டுபுடிப்பாங்களா-ன்னு பாத்தேன்!
    "வ்ழக்கம் போல்" குமரன் தான் வந்து கண்டு பிடிக்கிறாரு! :)

    வெறும் மாலிருஞ்சோலை-ன்னு போட்டதுக்கு அது தான் காரணம் குமரன்! உங்க ஊரு கள்ளன், திரு-வை மறைத்துக் கொண்டு சென்றான்! ஏன்னா கோதை பூமிப் பிராட்டியின் அம்சம் அல்லவா? :)

    ReplyDelete
  16. //திருவேங்கடமுடையானுக்கு மட்டும் இவ்வளவு பெரிய உரையாடலா? உங்கள் ஓரவஞ்சனை நன்றாகத் தெரிகிறது//

    ஹா ஹா ஹா!
    வேங்கடத்தான் பேசவே இல்லையே குமரன்! கோதை தானே பேசுகிறாள்! முடிஞ்சா அவளைக் கொஞ்சம் வாய் மூடிக்கிட்டு இருக்கச் சொல்லுங்களேன்! :)

    //மிக நன்றாக இருந்தது திவ்யசூரி சரிதம் இரவிசங்கர்//

    நன்றி குமரன்!
    திடீர்-னு தோனியது! உடனே எழுதி விட்டேன்! இந்தப் பதிவை காலை 04:30 மணிக்குத் தான் எழுதத் துவங்கினேன்! சிற்றஞ் சிறு காலே! மெளலி அண்ணாவுக்கு ஒரு மெயில் அனுப்பிட்டு! :)

    ReplyDelete
  17. //மற்றவர்களிடம் எல்லாம் காரணங்களைக் கேட்ட கோதை நாச்சியார் திருவரங்கத்தமுதனைக் கண்டவுடனே காதல் கொண்டு மணந்து கொண்டாள் போலும். கண்கள் கலந்து விட்டால் வாய்ப்பேச்சிற்குத் தேவையின்றிப் போகின்றதோ?//

    * கள்ளழகர் மாலை போடு மாலை போடு-ன்னு அர்ஜென்ட் படுத்தினாரு! என்னமோ மீனாட்சி கல்யானத்துக்கு டயத்துக்குப் போயி கலந்துக்குறா மாதிரி! அதுனால அவரும் கோட்டை விட்டாரு!

    ** வேங்கடத்தான் கிட்டத்தட்ட வந்துட்டான்! ஜஸ்டு மிஸ்ஸூ!
    அழகான கண்ணை நாமம் போட்டு மறைச்சிக்கிட்டான்!
    வந்த சான்ஸைக் கோட்டை விட்டான்! :)

    ***அரங்கன்...பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே!
    பாக்க சிம்பிளாகவும் இருந்தான்! அதான் போல "கண்டவுடன் காதல்"! :)


    நான் என்ன சொல்ல!
    Simplicity wins the Love!
    - Simply krs!
    :))))

    ReplyDelete
  18. //குன்றாத வாழ்வான வைகுந்த வான் போகத்தை விட்டுவிட்டு விட்டுசித்தர் திருமகளாராய் எமக்காகவன்றோ ஆண்டாள் அவதரித்தாள். ஆண்டாள் திருவடிகளே சரணம்.//

    சரணம் சரணம்!

    //நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடத்திலே ஆழ்ந்தவனாய் இருந்த கண்ணனுக்கு//

    ஞாபகப்படுத்தினீர்கள்!
    நப்பின்னைப் பிராட்டி பற்றி குறிப்பு எடுக்க வேண்டும்!

    //அவன் வந்து அடைய வேண்டி இருக்கத் தானே அவனைச் சென்று கண்டு வற்புறுத்தி அவனை அடைந்த கோதைப் பிராட்டிக்கு//

    உண்மை! உண்மை!
    அவளுக்காகவோ அடைந்தாள்?
    நமக்காகவும் அல்லவா அடைந்தாள்!

    ReplyDelete
  19. //கோதைப் பிராட்டிக்கு அடியேனுடைய வணக்கங்கள் மீண்டும் மீண்டும் எக்காலத்தும் நிலைத்திருக்கட்டும்.
    //

    அப்படியே ஆகட்டும்!
    வர்த்ததாம், அபி வர்த்ததாம்!
    பல்லாண்டு பல்லாண்டு பல்லயிரத்தாண்டு நிலைத்திருக்கட்டும்!

    கோதை இந்தப் பதிவில் இருக்கும் தைரியத்தில் தான் உங்களை மிரட்டிக் கேட்க முடியும்!
    குமரன்,
    கோதைத் தமிழ் வலைப்பூக்கள் எங்கே?
    I want valai-poos for garland!
    :))

    ReplyDelete
  20. அசத்திட்டிங்க. நான் கூட நீங்க 108 பெருமாளோட உரையாடலையும் போடப் போறீங்கன்னு நினைச்சேன். செஞ்சிருக்கலாமே ரவி. நலலா இருந்திருக்கும்.

    //அவன் சித்சோரன் //

    ஓ! இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? 'சிபு' சோரன் -னு படிச்சேன். :-))

    கள்ளழகர் பத்தி திடீர்னு கேள்வி கேக்கறீங்களே எதுவும் புதுக் கதை இருக்கா?

    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் 'பட்டு' எடுத்து கொடுக்கிறாங்களா இல்லையா? Dispute-ஐ முடிங்கப்பா சீக்கிரமா.

    ReplyDelete
  21. //Shobha said...
    107 ஐயும் ரிஜக்ட் செய்தால் 108 ஆவதை தேர்ந்து எடுக்காமல் வேறு வழி? :))//

    ஷோபாக்கா! சேம் சைடு கோலா? கோதை வரா இருங்க குழாயடிச் சண்டைக்கு! :)

    //நல்ல பதிவு//
    நன்றிக்கா!

    ReplyDelete
  22. //கவிநயா said...
    //போனால் போகட்டும் என்று என் மருமகன் முருகன், படைவீடு கீழே ஒரு வெளிவீடு (out house) கொடுத்திருக்கான்!//

    :)))//

    இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?
    உ.குத்தா? வெ.குத்தா? :)

    //உங்கள் கற்பனை அதீதம், அருமை!//

    நன்றிக்கோவ்!

    //நேயர் விருப்பம் வைத்த மௌலிக்கு நன்றி//

    பஜே மெளலீசம்!
    பஜ்ஜியே கேஆரெஸீசம்!

    ReplyDelete
  23. //நா.கண்ணன் said...//

    வாங்க கண்ணன் சார்! நலமா?

    //என்னப்பா! கள்ளழகருக்கெல்லாம் பேர் காரணம் கேக்கறாங்க!//

    காரணம் கேக்கத் தானே பதிவர்கள் இருக்கோம்! :)

    //மாயோன் என்றால் கள்வன் தானே!//
    மாயம் என்றால் கருப்பு, இருட்டு, கார், கார் மேகக் கலர் இல்லீங்களா?

    //கோகுலத்தில் கண்ணனைத் திட்டவேண்டுமெனில் "நாராயணா" என்று சொன்னால் போதுமாம்//

    ஸ்ரீதர்- நாராயணா! :))

    //அவன் சித்சோரன் (நெஞ்சக் கள்வன்) அல்லவோ?//

    அதான் அவரு சிபு சோரனா-ன்னு கேக்குறாரு பாருங்க! :)

    //பின்னால் கள்ளர் ஜாதிக்கு குலபதியானதினாலும் கள்ளழகர். ஆண்டாள் மனதைக் கவர்ந்ததினாலும் கள்ளழகர்//

    சூப்பர்! சூப்பர் விளக்கம்!
    ஆனா இதுக்கு அக்மார்க்-மதுரை கீதாம்மா ஒத்துக்கிட்டாத் தான் நான் ஒத்துப்பேன்! :)

    //கண்ணபிரான்! சூப்பர்! ஆண்டாள் ஆசீர்வாதம் உண்டு.//

    நன்றி கண்ணன் சார்

    //பயமற்க!//

    பயமா?
    அடியேனுக்கா??
    எது எல்லாம் பழைய கேஆரெஸ்! :))

    ReplyDelete
  24. //கீதா சாம்பசிவம் said...
    //அழகரின் பட்டு இன்றைக்கும் ஆண்டாளிடமிருந்து தான் வருகின்றது//
    Content of this pinnottam is disputed :)))//

    கீதாம்மா
    ஆண்டாளிடம் இருந்து அழகருக்கு வருவது அவள் சூடிக் கொடுத்த மாலை! பாடிக் கொடுத்த கிளி! அம்புட்டு தான்!

    சும்மானாங்காட்டியும் பட்டு வருது, துட்டு வருது-ன்னு வழக்கம் போலச் சொல்றீங்க! :)
    அப்பறம் கேஆரெஸ் குழப்பிட்டாரு-ன்னு சொல்லித் தில்லைப் பதிவுல குழப்பப் போறீங்க! ஹா ஹா ஹா :)

    எங்க பொண்ணு எதுக்கு பட்டு எடுத்துக் கொடுக்கணும்?
    உங்க அழகர் சம்பாதிக்கலை? அவர் தான் பட்டுச் சீலை எடுத்துக் கொடுக்கணும்! :)

    எடுத்தும் கொடுக்குறாரு-ஆடிப்பூரத் தேருக்கு!

    ஆண்டாள் தன் மாலையும் கிளியும் ஒவ்வொரு ஆண்டும்..
    1. அழகருக்கு மட்டும் இல்லை!
    2. திருப்பதி பிரம்மோற்சவம் - ஐந்தாம் நாள் கருட சேவைக்கு அனுப்புவா!
    3. அரங்கன் இராப்பத்துக்கு அனுப்புவா!
    4. சொந்த ஊர் வடபத்ர சாயிக்கு தினமும் அனுப்புவா!

    ReplyDelete
  25. //எழிலன்பு said...
    //அவன் எளியன்! அலங்காரம் கூட இல்லை! - வெறும் முத்து மாலை! //
    அடடா...
    இது போதுமே நம்ம நாச்சியார் நம்ம கார்மெனி வண்ணனை தேர்ந்தெடுக்க....//

    எக்ஜாக்ட்லி எழிலன்பு!
    Simply Arangan!
    Simply krs!!
    :))

    ReplyDelete
  26. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஒவ்வொரு பதிவையும் பொக்கிஷமாக பாதுகாத்து வைக்க வேண்டியது உங்களுடைய தளத்தில்தான்..//

    ஆகா...
    பொக்கிஷத்துக்கு ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணப் போறேன்! :)
    சும்மா அண்ணாச்சி!
    அன்புக்கு நன்றி!

    //வணங்குகிறேன்.. உங்களையும், அந்த ஆண்டாளையும், அந்த அரங்கனையும்..!//

    ஆண்டாளை வணங்குங்கள்!
    ஆசாமியை வேண்டாம்!!
    -நான் என்னைச் சொல்லல! அரங்கனைச் சொன்னேன்! :)))

    ReplyDelete
  27. //Sumathi. said...
    அண்ணே, கேஆரெஸ் அண்ணே,//

    OMG! என்ன கொடுமை சுமதி அக்கா!
    நான் உங்களுக்கு அண்ணேவா?

    //ஆஹா அற்புதம். என்ன சொல்ல? வார்த்தைகளே இல்லை.//

    அதான் "அண்ணே" சொல்டீங்களே! அப்பறம் எங்க இருந்து வார்த்தை இருக்கும்? :))

    //இது நிஜம் அய்யா.அப்படியே உருகித்தான் போனேன்//

    அட, நீங்க ஒன்னுக்கா! இன்னிக்கி காலையில், வேள கெட்ட வேளையில் தூங்கி எழுந்திரிச்சி எழுதினேன்! மெளலி அண்ணாவைக் கேளூங்க, சொல்லுவாரு!

    ReplyDelete
  28. //அழகான கண்ணை நாமம் போட்டு மறைச்சிக்கிட்டான்! //
    "வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே" என்று சொல்லும் போது மட்டும் திருமண் தென்படவில்லையோ..

    இராமானுஜர் வேடத்தில் வந்து, ஆண்டாள் வேங்கடவனை மணப்பதில் குழப்பம் விளைவித்தவர் யாரென்று எங்களுக்கா தெரியாது...

    ரவி அண்ணா, கள்ளழகர் இங்கே வந்து சேரும் முன்னரே, கோதை தன் மணாளனை சேர்ந்ததை அறிந்து இராஜபாளையம் அருகில் காட்டழகராக தங்கி விட்டதாக கேள்விப்பட்டுள்ளேன். அடியேனுக்கு அதை பற்றி சற்று விளக்கக்கூடாதா?

    ReplyDelete
  29. ஒரு வருடம் முன் நான் கேட்டதை நினைவில் வைத்து பதிந்தமைக்கு நன்றி கே.ஆர்.எஸ். இந்த சரிதம் நான் படித்திருந்தாலும், உங்கள் எழுத்தில் பதிவாக இது வந்தால் நன்றாக இருக்கும் என்றே உங்களிடம் வேண்டுகோள் விடுத்தேன்...

    என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை...மிக அழக்கான படைப்பை தந்தமைக்கு நன்றிகள் பல.

    வேண்டுகோளை நினைவிலிருத்தி, பதிவிலும் கூறியதற்கும் நன்றி.

    ReplyDelete
  30. மெளலி அண்ணா, உங்களுக்கு என் நன்றி. நீங்க கேட்டுருக்காட்டி, இப்படி ஒரு அழகான பதிவு கிடைச்சிருக்குமா..

    ReplyDelete
  31. பெரிய சந்தேகம் :-)

    அரங்கனின் அனுஜர் (தம்பி) எப்படிய்யா ஆண்டாளை 'தங்கச்சிஈஈஈ'ன்னு கூப்பிடறார்? ரொம்ப குழப்பமா இருக்கு.

    பி.கு. உங்ககிட்ட கேள்வி கேக்குறதில ஒரு தனி இன்பம் இருக்கு. எப்படி கேட்டாலும் ஏதாச்சும் பதில் சொல்லி தப்பிச்சிடறீங்க பாருங்க. இதுக்கு என்ன சொல்றீங்கன்னு பாப்போம் :-)

    ReplyDelete
  32. //போனால் போகட்டும் என்று என் மருமகன் முருகன், படைவீடு கீழே ஒரு வெளிவீடு (out house) கொடுத்திருக்கான்! //

    @ஜி.ரா, இந்த வரிகள் இடம் பெறுவதற்காக கே.ஆர்.எஸ்ஸுக்கு நீங்க என்ன கொடுத்தீங்க :)

    ReplyDelete
  33. //ஸ்ரீதர் நாராயணன் said...
    பெரிய சந்தேகம் :-)

    அரங்கனின் அனுஜர் (தம்பி) எப்படிய்யா ஆண்டாளை 'தங்கச்சிஈஈஈ'ன்னு கூப்பிடறார்? ரொம்ப குழப்பமா இருக்கு.
    //

    அவர் இராமானுஜரே அல்ல, இராமனூஜர் வேடத்தில் வந்தவர். மற்றவர்களுக்கெல்லாம் 1 நிமிட தரிசனம், ஆனால் அவருக்கு 45 நிமிட தரிசனம் தந்தார். இருந்தும் வேங்கடவனை மணந்தால் தினமும் லட்டு கிடைக்கும், பணக்கார தம்பதியராக வலம் வரலாம் போன்ற நல்ல விஷயங்களை மறைத்தவர் அவர்.

    எங்கே நேரடியாக சொன்னால் வேங்கடவன் கோவித்துக் கொள்வானோ என்று, இராமானுஜர் வேடத்தில் வந்துள்ளார்.

    ReplyDelete
  34. 1. அழகருக்கு மட்டும் இல்லை!
    2. திருப்பதி பிரம்மோற்சவம் - ஐந்தாம் நாள் கருட சேவைக்கு அனுப்புவா!
    3. அரங்கன் இராப்பத்துக்கு அனுப்புவா!
    4. சொந்த ஊர் வடபத்ர சாயிக்கு தினமும் அனுப்புவா! //
    நம் ஆண்டாள் மாலைச் சரிதம் அருமை.
    என்ன ஒரு வார்த்தை விளையாட்டு.!!
    நன்றி ரவி.

    ReplyDelete
  35. //ஸ்ரீதர் நாராயணன் said...
    அசத்திட்டிங்க//

    Dankees Guruve!

    //நான் கூட நீங்க 108 பெருமாளோட உரையாடலையும் போடப் போறீங்கன்னு நினைச்சேன். செஞ்சிருக்கலாமே ரவி. நலலா இருந்திருக்கும்//

    நல்லா இருங்க சாமி! 108-ல எனக்கு ஒரு சீட்டு கூட கிடைக்கக் கூடாதுங்கிறதுல மக்களுக்கு எத்தினி ஆர்வம்-பா:)

    //'சிபு' சோரன் -னு படிச்சேன். :-))//

    அவன் எதுக்கு சிபு-சோரன்?
    வேணும்னா தபு-சோரன்-ன்னு வச்சிக்கலாம்!


    //ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் 'பட்டு' எடுத்து கொடுக்கிறாங்களா இல்லையா? Dispute-ஐ முடிங்கப்பா சீக்கிரமா//

    முடிச்சாச்சிப்பா!
    Geethamma gone to mel muraiyeedu! :)

    ReplyDelete
  36. @ராகவ்
    //"வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே"//

    அதான் விதியை மதியால் வென்னுட்டாங்க-ல்ல? :))

    //இராமானுஜர் வேடத்தில் வந்து, ஆண்டாள் வேங்கடவனை மணப்பதில் குழப்பம் விளைவித்தவர் யாரென்று எங்களுக்கா தெரியாது...//

    ஆகா...இது என்ன புதுக் கதை?
    அவர் இராமானுசர், இராமானுசர், இராமானுசரே தான்-பா!

    ReplyDelete
  37. "அந்தரங்கம் வேண்டுமா, அந்த ரங்கம் வேண்டுமா?" என்ற சிலேடையை மிகவும் ரசித்தேன். பிரமாதமான பதிவு!

    ReplyDelete
  38. //ஆகா...இது என்ன புதுக் கதை?
    அவர் இராமானுசர், இராமானுசர், இராமானுசரே தான்-பா! //

    அவர் இராமானுசரா இல்லை
    (ஜி)ராகவானுஜரா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  39. @ராகவ்
    //கள்ளழகர் இங்கே வந்து சேரும் முன்னரே, கோதை தன் மணாளனை சேர்ந்ததை அறிந்து இராஜபாளையம் அருகில் காட்டழகராக தங்கி விட்டதாக கேள்விப்பட்டுள்ளேன்//

    ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து செண்பகத்தோப்பு வழியாக காட்டழகர் கோவிலுக்குப் போவும் பாதை சூப்பரோ சூப்பர்!
    Western Ghats, Yaanais, Kallazhagar polave athe Noopura Gangai (Silambaaru)...ellaam irukkum!

    நீங்க சொன்ன தல வரலாறு சரி தான் ராகவ்!

    ரங்க மன்னாருக்குப் போட்டியாகக் கிளம்பும் கள்ளழகர், லேட்டா வந்து காட்டழகர் ஆயிருவாரு!
    பக்கத்து மதுரையில் இருந்தே இவர் லேட்டூ! ஆனா திருச்சியில் இருந்து ரங்க மன்னார் செம ஸ்பீடா வந்து அள்ளிக்கிட்டுப் போயிருவாரு! :)

    அழகர் எல்லாத்துலயுமே லேட்டு!
    ஒரு வேளை அழகரை தருமமிகு சென்னைக்கு ஷிப்ட் பண்ணாலாச்சும் மதுரைப் பழக்கத்தில் இருந்து திருந்துவாரோ? :)))


    எதுக்கும் கீதாம்மா, குமரன், தருமி சார், ராயல் ராம், சீனா ஐயா எல்லாரையும் ஒரு வார்த்தை கேட்டுக்குவோம்! :)

    ReplyDelete
  40. //அதான் விதியை மதியால் வென்னுட்டாங்க-ல்ல? :))//

    மதியால் அல்ல, இராமானுஜர் வேடத்தில் வந்தவர் சதியால்..

    ReplyDelete
  41. //அழகர் எல்லாத்துலயுமே லேட்டு! //
    அழகர் மீனாட்சிகல்யாணத்துக்கு லேட்டா வந்தத தானே சொல்றீங்க..

    ரவி அண்ணா, குமரன் ஐயா ஒரு சந்தேகம்.
    அழகர் அற்றில் இறங்கும் திருவிழா பற்றி பாசுரங்களில் உள்ளதா? ஆச்சார்யர்களோ இல்லை ஆழ்வார்களோ இதைப்பற்றி அருளியுள்ளனரா.? இல்லை இது பிற்காலத்தில் ஏற்பட்ட ஒரு வழக்கமா ?

    ReplyDelete
  42. // Blogger Raghav said...

    //போனால் போகட்டும் என்று என் மருமகன் முருகன், படைவீடு கீழே ஒரு வெளிவீடு (out house) கொடுத்திருக்கான்! //

    @ஜி.ரா, இந்த வரிகள் இடம் பெறுவதற்காக கே.ஆர்.எஸ்ஸுக்கு நீங்க என்ன கொடுத்தீங்க :) //

    என்னங்க இப்பிடிக் கேட்டுட்டீங்க...கொடுத்ததெல்லாம் கொடுத்தார்...அவர் யாருக்காகக் கொடுத்தார்? ஒருத்தருக்கா கொடுத்தார்.. இல்லை ஊருக்காகக் கொடுத்தார். அவருக்கு நான் கொடுப்பதா!!!!! இப்படியெல்லாம் பேசி எனக்கு அபச்சாரத்தை உண்டாக்காதீங்கன்னு கேட்டுக்க்கிறேன். வைணவ வாரியார் அனைத்தும் அறிவார். :)

    ReplyDelete
  43. கல்யாணத்தை நேரிலே பார்த்த மாதிரி மகிழ்ச்சி.... மிக மிக அழகான பதிவு... வாழ்த்துக்கள்.. .

    ReplyDelete
  44. //ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து செண்பகத்தோப்பு வழியாக காட்டழகர் கோவிலுக்குப் போவும் பாதை சூப்பரோ சூப்பர்! //

    ஒரு முழுநிலவு நாளன்று இந்தக் கோவிலுக்கு எங்கள் கல்லூரி பஜனைக்குழு நண்பர்களுடன் சென்று இரவு கோவிலுக்கு வெளியே இருக்கும் மண்டபத்தில் தங்கியிருந்து இரவு முழுவதும் நாமசங்கீர்த்தனம் செய்தது பசுமையாக நினைவில் இருக்கிறது. திருக்கோவில் பூட்டியிருந்ததால் அழகரைச் சேவிக்க இயலவில்லை. ஆனால் பூட்டிய கதவின் முன்னால் எல்லோரும் அமர்ந்து கொண்டு உரத்த குரலில் இறைநாமம் சொன்னது இன்னும் இனிக்கிறது.

    மறுநாள் காலை இரண்டு நண்பர்கள் தனித்தனியே என்னிடம் சொன்னவை இன்றும் புன்சிரிப்பை வரவழைக்கின்றன.

    1. நாம போடற கூச்சலுக்கு எங்கிருந்தாவது சிங்கம் புலி வந்து நம்மளை அடிச்சுப் போடப் போகுதுன்னே நினைச்சுக்கிட்டு சுத்தி முத்திப் பாத்துக்கிட்டு இருந்தேன் குமரா. அப்படி எதாச்சும் வந்திருந்தா உன்னைய முன்னாடி தள்ளி விட்டுட்டு ஓடிப் போயிறலாம்ன்னு நினைச்சேன்.

    2. இந்த மீரா படத்துல எல்லாம் வருமே அது மாதிரி நாம பாடிக்கிட்டு இருக்கிறப்ப டிங்கின்னு கோவில் கதவு திறந்து உள்ள இருக்குற விளக்கெல்லாம் தானா பத்திக்கிட்டு பெருமாள் நம்ம முன்னாடி வந்து நிக்கப்போறாருன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.

    :-))

    ReplyDelete
  45. //ரவி அண்ணா, குமரன் ஐயா ஒரு சந்தேகம்//

    அவர் அண்ணா நான் ஐயாவா? இதுக்காகவே பதில் சொல்லப் போறதில்லை இராகவரே. உங்கள் அருமை அண்ணாரே சொல்லுவார். :-)

    ReplyDelete
  46. V.Dhivakar Ayya's comments in e-mail (Author of the novel, Tirumalai Thirudan)

    Kannabiraan,
    Aaandal husband has transferable job. He has to go 108 places where he has branches. But Aaandal prefers to accompany Him mostly to Tirumala, Azhagar Malai, Thiruvilli. But He wanted Her to settle at Srirangam.

    But She loves more Tirumala Venkatavan than Srirangam. Again there He wanted to stay alone and only alone.

    Memorable writings, keep it up.

    Anbudan
    Dhivakar

    ReplyDelete
  47. //மாயோன் என்றால் கள்வன் தானே!//
    மாயம் என்றால் கருப்பு, இருட்டு, கார், கார் மேகக் கலர் இல்லீங்களா?//

    ஆம்! அதுதான் அகரமுதலிப் பொருள் (literal meaning). ஆயினும், "தொல்காப்பியர் தமிழ் நிலத்தை வகைப்படுத்தி முல்லையைப் பற்றிக் கூறும்போது, இப்பிரிவின் கடவுளாக ‘மாயோனை ‘க் குறிப்பிடுகிறார். நச்சினார்க்கினியர் ‘மாயோன் ‘ என்ற சொல்லுக்குக் ‘கடல் வண்ணன் ‘ என்று பொருள் எழுதுகிறார். பதிற்றுப் பத்து ஏழாம் பத்து பதிகத்திலும், ‘மாயவண்ணன் ‘ என்ற சொற்றொடர் வருகின்றது. ரிக்வேதம், ‘ஆயர்களின் தலைவன் விஷ்ணு ‘ என்று கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆயர்கள் மிகுதியான இடம் முல்லை. முல்லை நிலத்துக் கடவுள் ‘மாயோன் ‘ என்று தொல்காப்பியர் கூறுவதனால், ‘மாயோன் ‘ என்ற சொல் விஷ்ணுவைத்தான் குறிக்கின்றது என்பது வெளிப்படை. இ.பா". எனவே மாயோன் என்றவுடன் கண்ணன் நினைவில் நிற்க, அவன்தான் பெரிய திருடன் ஆயிற்றே என்று சொல்ல வர....:-)

    ReplyDelete
  48. ஆக்ஷன் ஹீரோ எல்லாம் வேண்டாம். அமைதியா அனந்த சயனம் செய்யும் ரங்கன் தான்னு கோதை முடிவெடுதது அழகுதான்.

    ReplyDelete
  49. ஆண்டாள் என்னையும் ஆண்டாள், உன்னையும் ஆண்டாள் அரங்க நாதனையும் ஆண்டாள் என்பார்கள் இப்பதிவு அனைவரையும் ஆண்டுவிட்டது.....

    ReplyDelete
  50. //அவர் அண்ணா நான் ஐயாவா? இதுக்காகவே பதில் சொல்லப் போறதில்லை இராகவரே. உங்கள் அருமை அண்ணாரே சொல்லுவார். :-)//

    ஏதோ அறியா பையன் தெரியாம (உண்மைய) சொல்லிட்டேன். அண்ணாவரு நம்ம அழகரைசொந்த வீடு இல்லாதவர்னு சொல்லிட்டாரே. அதனால மதுரை மைந்தன், அழகரின் நெருங்கிய சொந்தக்காரர் நீங்க சொன்னா தானே நல்லா இருக்கும்.

    ReplyDelete
  51. //வைணவ வாரியார் அனைத்தும் அறிவார். :)
    //

    வைணவ வாரியாரா இல்லை வைணவத்தை வாரி விடுபவரான்னு தெரியலையே. :)

    ReplyDelete
  52. ....அத்தனை பேரும் அருளாசி வழங்க,
    மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
    அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ,

    நம்பிக்கு மாலையிட்டாள் நங்கை!
    நம்பியிடம் சர்க்கரைப் பொங்கலில், நெய்யாய்க் கரைந்து விட்டாள் நங்கை!
    ////

    ஆமாம் ஜோதியாய் கல்ந்துவிட்டாள் என்பார்கள் இன்றும் அரங்கன் கோவிலில் நுழைந்ததும் இடப்புறம் முதல் சந்நிதி ஆண்டாளுக்குத்தான்! உள் ஆண்டாள் சந்நிதி என்பார்கள்.
    வெளி ஆண்டாள் சந்நிதி எனும் சிறுகோயில் சித்திரைவீதிக்குப்பின்னால் உள்ளவீதியில் இருக்கிறது இங்குதான் ஆண்டாள் அரங்கநகர்வந்ததும் வீதிச்சுற்றுமுடித்துவருகையில் சற்று நேரம் அமர்ந்த இடம் என்கிறார்கள்.
    அழகியமணவாளன் அரங்கன்!குழல் அழகர் வாய் அழகர் ...எங்க அரங்கரைக்கல்யாணம் பண்ணிக்க ஆண்டாள் முடிவெடுத்தது 100%சரிதான்! சிறந்த பதிவு ரவி!

    ReplyDelete
  53. இன்னிக்கி மொத தேங்காய் ஸ்ரீதர்-அண்ணாச்சிக்குத் தான்! :)

    //பி.கு. உங்ககிட்ட கேள்வி கேக்குறதில ஒரு தனி இன்பம் இருக்கு.//

    அடா, அடா, அடா
    என்னா ஒரு வில்லத்தனமான சிரிப்பு உங்க முகத்துல!
    வெவகாரமான கேள்வி கேட்டூ, வச்சாருய்யா ஆப்பு! எங்க சீதர் மாப்பு! :)

    //அரங்கனின் அனுஜர் (தம்பி) எப்படிய்யா ஆண்டாளை 'தங்கச்சிஈஈஈ'ன்னு கூப்பிடறார்? ரொம்ப குழப்பமா இருக்கு//

    அவரு இராமனுக்குத் தான் அனுஜர்!
    அரங்கனுக்கு அல்ல!

    அரங்கனை அந்த இராமனே வணங்கினானே! பின்னர் தானே வீடணனிடம் அரங்க விமானத்தைக் கொடுத்தான்!

    இப்போ மேட்டருக்கு ஒஸ்தாவு!
    ஆண்டாள் எப்படி இராமானுசர் தங்கச்சி ஆனா?
    அவளுக்கு அப்பறம் மூனு-நாலு நூற்றாண்டுகள் கழிச்சி வந்தவர் தானே இராமானுசர்?

    இந்தாங்க! படிச்சிப் போட்டுச் சொல்லுங்க! தங்கச்சி பட்ட ஆசை-அண்ணன் சுட்ட தோசை!

    ReplyDelete
  54. //மதுரையம்பதி said...
    என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை...மிக அழக்கான படைப்பை தந்தமைக்கு நன்றிகள் பல//

    நன்றி சொல்லவாச்சும் மீண்டும் வலையுலகத்துக்கு வந்த மெளலி அண்ணாவுக்கு ஜே! :)

    ReplyDelete
  55. //Raghav said...
    அவர் இராமானுஜரே அல்ல, இராமனூஜர் வேடத்தில் வந்தவர். மற்றவர்களுக்கெல்லாம் 1 நிமிட தரிசனம், ஆனால் அவருக்கு 45 நிமிட தரிசனம் தந்தார்//

    ஹா ஹா ஹா!
    45 நிமிட தரிசனம் தந்தவருக்கு நன்றியை மறந்துட்டியேடா பாவீ-ன்னு திட்டறீங்க! :)

    குமரன் என்னடான்னா நான் வேங்கடவனுக்கு ஓரவஞ்சனை பண்றேன்னு சொல்றாரு!

    உங்க ரெண்டு பேர்ல யாருப்பா உண்மை பேசறவங்க? :)

    ReplyDelete
  56. //வேங்கடவனை மணந்தால் தினமும் லட்டு கிடைக்கும், பணக்கார தம்பதியராக வலம் வரலாம் போன்ற நல்ல விஷயங்களை மறைத்தவர் அவர்//

    எங்க பொண்ணு ஆண்டாளுக்குத் திருப்பதி லட்டை விட சூப்பர் லட்டு சுடத் தெரியும்! பணங்காசு எல்லாம் அவளக்குத் தூசி!
    She is a free bird! gotcha? :)

    //எங்கே நேரடியாக சொன்னால் வேங்கடவன் கோவித்துக் கொள்வானோ என்று, இராமானுஜர் வேடத்தில் வந்துள்ளார்//

    அது சரி!
    உடையவர் வேடம் போடவும் ஒரு கொடுப்பினை வேண்டுமே!
    கூரத்தாழ்வான் போட்ட உடையவர் வேடமே வேடம்!

    ReplyDelete
  57. //Raghav said...
    @ஜி.ரா, இந்த வரிகள் இடம் பெறுவதற்காக கே.ஆர்.எஸ்ஸுக்கு நீங்க என்ன கொடுத்தீங்க :)//

    அடப்பாவிங்களா?
    எப்படி எல்லாம் கெளப்புறாங்கப்பா? :)

    ReplyDelete
  58. //வல்லிசிம்ஹன் said...
    நம் ஆண்டாள் மாலைச் சரிதம் அருமை.//

    ஆமாம் வல்லிம்மா!
    நம்ம ஆண்டாள் தான்!
    பின்ன மதுரைக்காரவுங்க ஆண்டாளா என்ன? :)

    ReplyDelete
  59. //Expatguru said...
    "அந்தரங்கம் வேண்டுமா, அந்த ரங்கம் வேண்டுமா?" என்ற சிலேடையை மிகவும் ரசித்தேன். பிரமாதமான பதிவு!//

    நன்றி தலைவரே!
    சிலேடை எல்லாம் ஷைலு அக்கா சென்ற பதிவில் குடுத்த இன்ஸ்பிரேசன்! :)

    ReplyDelete
  60. //Raghav said...
    அவர் இராமானுசரா இல்லை
    (ஜி)ராகவானுஜரா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.//

    ஆகா...இது என்ன விளையாட்டு?
    ஜி)ராகவானுஜர் நான் இல்ல!அவருக்கு நான் அனுஜன் இல்ல! ஒன்லி தோழன்! உற்ற தோழன்! தம்பிரான் தோழன்!

    ReplyDelete
  61. //G.Ragavan said..
    ஒருத்தருக்கா கொடுத்தார்.. இல்லை ஊருக்காகக் கொடுத்தார்//

    அவர் இராமானுசர்! :)

    //இப்படியெல்லாம் பேசி எனக்கு அபச்சாரத்தை உண்டாக்காதீங்கன்னு கேட்டுக்க்கிறேன். வைணவ வாரியார் அனைத்தும் அறிவார். :)//

    மீ தி எஸ்கேப்பூ :)

    அதுக்கு முன்னாடி...ஒரே கேள்வி!
    அது என்ன வைணவ வாரியார்?
    வாரியார் என்ன சைவர் மட்டுமா?
    வாரியார் வைணவம் பற்றியும் அருமையாச் சொல்லுவாரு! அவர் தரும் இராமாயண விருந்து மாதிரி வருமா?

    வாரியாருக்குப் பிடிச்ச பெருமாள் யாரு தெரியுமா?-திரு வேங்கடமுடையான்!
    திருத்தணியும் திருப்பதியும் என்ற ஒலிநாடா கேட்டுப் பாருங்கள்! படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று வாரியார், குலசேகராழ்வார் வரிகளைச் சொல்லச் சொல்ல,
    அந்தப் படி ஆகி விட மாட்டோமா என்ற பல முறை ஏங்கி இருக்கேன்! :)

    ReplyDelete
  62. //Natty said...
    கல்யாணத்தை நேரிலே பார்த்த மாதிரி மகிழ்ச்சி.... //

    நன்றிங்க!
    வள்ளித் திருமணம் மாதிரி ஆண்டாள் திருமணமா? சூப்பர்!

    சரி கல்யாணம் பாத்தீங்களே! மொய் எங்கே? :)))

    ReplyDelete
  63. //குமரன் (Kumaran) said...
    எங்கள் கல்லூரி பஜனைக்குழு நண்பர்களுடன் சென்று//
    பஜனைக் குழுவின் தலைவரு யாரு-ன்னு தெரியும் தானே மக்களே? :)

    //திருக்கோவில் பூட்டியிருந்ததால் அழகரைச் சேவிக்க இயலவில்லை//
    பட்டரை வில்லிபுத்தூர்-ல இருந்து கூட்டிக்கிட்டுப் போவனும் குமரன்! இப்ப எப்படியோ?

    //1. நாம போடற கூச்சலுக்கு எங்கிருந்தாவது சிங்கம் புலி வந்து //
    ஆமாம் குமரன்! அந்தக் காட்டு வழி கொஞ்சம் பயம் தான்! யானை நிறைய வரும்!

    //அப்படி எதாச்சும் வந்திருந்தா உன்னைய முன்னாடி தள்ளி விட்டுட்டு ஓடிப் போயிறலாம்ன்னு நினைச்சேன்//
    ரொம்ப நல்ல நண்பனா இருக்கானே! அவன் பேரு கேசவனா குமரன்? :)அப்போ கேஆரெஸ் மட்டும் உங்க கூட இருந்திருந்தேன்.....
    ....
    ....
    ....
    அவன் செஞ்சதையே தான் செஞ்சிருப்பேன்! :))

    //உள்ள இருக்குற விளக்கெல்லாம் தானா பத்திக்கிட்டு பெருமாள் நம்ம முன்னாடி வந்து நிக்கப்போறாருன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்//
    ஹா ஹா ஹா
    அதுக்கு நீங்க பஜனை-ல மீராக்களையும் கூட்டிக்கிட்டு போயிருக்கணும்!
    போனீங்களா? :))

    ReplyDelete
  64. // குமரன் (Kumaran) said...
    அவர் அண்ணா நான் ஐயாவா? இதுக்காகவே பதில் சொல்லப் போறதில்லை இராகவரே.//

    அப்போ குமரனுக்குப் பதில் தெரியும்!
    மிஸ்டர் ராகவ்! நோட் திஸ் பாயிண்ட்!

    எனக்குப் பதில் தெரியாது!
    ஆல்ஸோ, நோட் திஸ் பாயிண்ட்!

    மதுரை மாநகரம் வலைப்பூவில் கூட இது பத்தி ஒன்னும் சொல்லலை!
    அழகர் ஆற்றில் இறங்கல்-ஆழ்வார் பாடல் சம்பந்தம்-சொல்லுங்க குமரன் சொல்லுங்க!

    ReplyDelete
  65. //சின்ன அம்மிணி said...
    ஆக்ஷன் ஹீரோ எல்லாம் வேண்டாம். அமைதியா அனந்த சயனம் செய்யும் ரங்கன் தான்னு கோதை முடிவெடுதது அழகுதான்//

    யக்கா...
    உங்கள நினைச்சித் தான் பயந்து கிட்டே இருந்தேன்!
    போன பதிவுல, போர், போர்-னு பரணி பாடினீங்களே!


    நல்ல வேளை! தப்பிச்சேன்!
    சின்ன அம்மிணி அக்கா திருவடிகளே சரணம்! :)

    ReplyDelete
  66. //கிருத்திகா said...
    ஆண்டாள் என்னையும் ஆண்டாள், இப்பதிவு அனைவரையும் ஆண்டுவிட்டது.....//

    இந்தப் பதிவையும் ஆண்டாளே ஆண்டாள்!

    நன்றி கிருத்திகா! ரசிச்சிப் படிச்சதுக்கு!:)

    ReplyDelete
  67. //Raghav said...
    வைணவ வாரியாரா இல்லை வைணவத்தை வாரி விடுபவரான்னு தெரியலையே. :)//

    வாரி விடுபவன் தான்!
    தலை வாரி விடுபவன் தான்!
    :)

    தலை வாரி, பூச்சூட்டி, இருந்த பாடசாலைக்கு..போ என்று சொன்னாள்...பாட்டு மனசுல ஓடுது! :)

    ReplyDelete
  68. //நா.கண்ணன் said...
    //மாயோன் என்றால் கள்வன் தானே!//
    மாயம் என்றால் கருப்பு, இருட்டு, கார், கார் மேகக் கலர் இல்லீங்களா?//

    ஆம்! அதுதான் அகரமுதலிப் பொருள் (literal meaning). ஆயினும்,
    ....
    பதிற்றுப் பத்து ஏழாம் பத்து பதிகத்திலும், ‘மாயவண்ணன் ‘ என்ற சொற்றொடர் வருகின்றது.

    ரிக்வேதம், ‘ஆயர்களின் தலைவன் விஷ்ணு ‘ என்று கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    ஆயர்கள் மிகுதியான இடம் முல்லை. முல்லை நிலத்துக் கடவுள் ‘மாயோன் ‘ என்று தொல்காப்பியர் கூறுவதனால், ‘மாயோன் ‘ என்ற சொல் விஷ்ணுவைத்தான் குறிக்கின்றது என்பது வெளிப்படை. இ.பா//


    சூப்பர்...
    எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் வரிகளைக் கொடுத்தமைக்கு நன்றி கண்ணன் சார்!

    //எனவே மாயோன் என்றவுடன் கண்ணன் நினைவில் நிற்க, அவன்தான் பெரிய திருடன் ஆயிற்றே என்று சொல்ல வர....:-)//

    ஹிஹி
    மாயோன்
    கார் மேகக் கருப்பன்
    கண்ணன்
    கள்ளன்
    கள்ளழகன்....
    கனெக்சன் ஒச்சிந்தி!
    கனெக்சன் ஒச்சிந்தி!
    சால தாங்கஸண்டி! :))

    ReplyDelete
  69. கோதைப் பதிவில் வேணாமே-ன்னு தான் பார்த்தேன்...
    ஆனா விட மாட்டங்கறாரு! சரி...சபையிலேயே வைத்து விடலாம்!
    *********************

    அன்புள்ள (முன்னாள்)பிரபல பதிவரே,
    தனி மின்னஞ்சலில் மீண்டும் மீண்டும் என்னைச் சுடு சொற்களால் நெருக்காதீர்கள்!

    பொதுவில் வைத்தாலாவது உங்கள் நியாயமான சந்தேகம் தீர வழி கிடைக்கும்! வேற யாராச்சும் கூட உங்களுக்கு நல்ல விடை தரலாம்! இனி உங்கள் இன்-சொல் கேள்விகளை எல்லாம் இங்கேயே வைத்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்!


    //மலை அருவியில் சாரல் தெளிக்க,
    மனத்துக்கு இனியான் சேலை ஒளிக்க,
    அவன் பரந்த மார்பில், விரிந்து குளிப்பது தான் எத்தனை சுகம்!//

    //கட்டில் மேல், காதலனைச் சேர்ந்து விட்டாள் கோதை!//

    மக்களே,
    இந்த வரிகளில் ஆபாசம் தொனிக்குதா-ன்னு நீங்களே சொல்லுங்க! அந்த வரிகளை எடுத்து விடலாம்!

    ReplyDelete
  70. //மக்களே,
    இந்த வரிகளில் ஆபாசம் தொனிக்குதா-//

    இவை ஆபாச வரிகள் அல்ல, காதல் வரிகள். பெருமானிடத்திலே ஆழவார்கள் பக்தியுடன் இருந்தனர் என்றால் ஆண்டாளோ காதலுடன் இருந்தாள்.

    அந்த அன்புள்ள பிரபல பதிவரை ஒருமுறை நாச்சியார் திருமொழி பாசுரங்களை "வியாக்யானத்துடன்" படித்து விட்டு வரச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  71. //அழகர் அற்றில் இறங்கும் திருவிழா பற்றி //

    மாசி மாதத்தில் நடந்த மீனாட்சி திருக்கல்யாணத்தை, திருமலைநாயக்கர் காலத்தில் சித்திரைக்கு நகர்த்திக் கொண்டு போய், அழகரின் தீர்த்தவாரியோடு இணைத்தார்கள் என்று படித்திருக்கிறேன். (மதுரை மாசி வீதிகளில்தான் இப்பொழுதும் தேரோட்டம் நடக்கும்)

    ஆற்றில் கோபித்துக் கொண்டு இறங்குகிறார் என்பது பிற் சேர்க்கை என்று நினைக்கின்றேன்.

    மற்றபடி ஆன்றோர் சான்றோர் வந்து 'ராகவ்'-ஓட ஐயத்தை போக்குவார்கள் என்று சொல்லி விடைபெறுகிறேன். :-)

    ReplyDelete
  72. அண்ணன் சுட்ட தோசையையும் சுவைத்தேன் ரவி.

    பெரும்பூதூர் மாமுனி, திருப்பாவை ஜீயர் எல்லாம் சரி. ஆனாலும் ஆதிசேஷன் இப்படி டக் டக்குனு சைடு மாறி நம்மளை சுத்தி விட்டுர்றாரு பாருங்க. ஒரு இடத்தில் சீதையை அண்ணிங்கிறாரு. இன்னொரு இடத்தில் சத்தியபாமாவை தம்பி மனைவியா பாக்குறாரு. இங்கே ஆண்டாளை தங்கையாகவே சுவீகரிச்சிக்கிறாரு.

    ReplyDelete
  73. //மற்றபடி ஆன்றோர் சான்றோர் வந்து 'ராகவ்'-ஓட ஐயத்தை போக்குவார்கள்//

    குமரன் உங்களை தான் சொல்றார்.. அடியேன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  74. //மக்களே,
    இந்த வரிகளில் ஆபாசம் தொனிக்குதா-ன்னு நீங்களே சொல்லுங்க! அந்த வரிகளை எடுத்து விடலாம்! //

    ஆபாசம் தெரியலை; அதீத காதல்தான் எனக்குத் தெரியுது. ஆண்டாளை விட ஆண்டவனை காதலித்தவர் உண்டோ?

    ReplyDelete
  75. இராகவ்,

    உங்கள் கேள்விகள் இரு தளத்தில் இருக்கின்றன. திருமாலிருஞ்சோலையின் பழமையைப் பற்றிய கேள்வி. அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழாவின் பழமையைப் பற்றிய கேள்வி. தகுந்த தரவுகளுடன் பதில் சொன்னால் தான் நன்றாக இருக்கும். அதனால் தான் தயக்கம். சுருக்கமாக இங்கே சொல்கிறேன். விரிவாகத் தரவுகளுடன் பின்னர் அடியேனோ இரவிசங்கரோ சொல்கிறோம். (அடியேனை விட இரவிசங்கரே இவற்றை எழுதுவதற்குத் தகுதியானவர்).

    பழமுதிர்ச்சோலையைப் பற்றிய குறிப்பு திருமுருகாற்றுப்படையில் இருக்கிறது. மற்ற சங்க இலக்கியங்களிலும் இருக்கலாம். திருமாலிருஞ்சோலையைப் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் இருக்கிறது. பரிபாடலிலும் உண்டு என்று நினைக்கிறேன். மற்ற சங்க இலக்கியங்களிலும் இருக்கலாம்.

    அதனால் எது பழைய வீடு; எது வாடகை வீடு என்பது அவரவர் பார்வையைப் பொறுத்ததே. இரவிசங்கரின் பார்வை என்ன என்று அடியேனுக்குத் தெரியும். இங்கே அவர் அழகரைக் கலாய்ப்பதற்காக அப்படி சொல்லியிருக்கிறார். அதுவே அவரது கருத்து என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    திருவிழாக்களைப் பற்றிய குறிப்புகள் ஆழ்வார்களில் அருளிச்செயல்களில் இருக்கின்றன. சட்டென்று நினைவிற்கு வருவது திருவோணத் திருவிழாவைப் பற்றி பெரியாழ்வார் கூறுவது. சித்திரைத் திருவிழாவைப் பற்றிய குறிப்பு இருக்கிறதா என்பதை திருமாலிருஞ்சோலைப் பாசுரங்களில் தேடிப் பார்க்க வேண்டும். அந்தப் பார்வையில் பாசுரங்களை இது வரை அணுகாததால் சட்டென்று எனக்குத் தெரியவில்லை.

    ச்ரிதர் நாராயணன் சொன்னது போல் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நாயக்கர் காலத்திற்கு முன்பிருந்தே சித்திரையில் தான் நடந்து கொண்டிருந்தது. பிரம்மோற்சவம் சித்கிரையில் நடந்து அதன் பகுதியாக தீர்த்தவாரிக்கு வைகைக்கு வருவது வழக்கமாக இருந்தது. அப்போது தவளையாக இருந்த மண்டூக மகரிஷியின் சாபம் தீர்க்கும் வைபவமும் நடைபெற்றது. கள்ளழகரின் திருவிழா சுற்றுப்புற கிராமங்களில் இருக்கும் எளிய மக்களின் திருவிழாவாக இருந்ததால் கூட்டம் மிகுதியாக மதுரைக்கு வந்தது.

    வைணவரும் தெலுங்கரும் ஆன திருமலைநாயக்கர் தமிழுக்கும் சைவத்திற்கும் தலைநகரான மதுரையில் இருந்து ஆட்சி செய்வதில் சில நிர்வாக தடங்கல்கள் இருந்தன. மாசியில் நடக்கும் மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவில் தேரை இழுக்க வேண்டிய அளவிற்கு மக்கள் கூட்டம் வரவில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிப்பது போல் மாசியில் நடந்த தேரோட்டத்தைச் சித்திரைக்குக் கொண்டு சென்றதன் மூலம் தேரை இழுப்பதற்கு வேண்டிய அளவிற்கு மக்கள் கூட்டமும் மதுரையில் இருந்தது; சைவ வைணவ ஒற்றுமையும் மக்கள் மனத்தில் நிலைபெற முடிந்தது. (இதெல்லாம் படித்ததை வைத்துச் சொல்வது. தரவுகளைக் கேட்டால் என்னிடம் இல்லை).

    மதுரையில் அம்மனும் சுவாமியும் எந்த மாதத்தில் எந்த வீதியில் திருவுலா வருகிறார்களோ அந்த மாதத்தின் பெயரே அந்தத் திருவீதிக்கு இருக்கும். சித்திரைப் பெருவிழாவின் போது மட்டும் மாசி வீதிகளில் வலம் வருவார்கள். திருவிழாவை மாசியிலிருந்து சித்திரைக்குக் கொண்டு சென்ற பின்னரும் நடக்கும் முந்தைய வழக்கத்தின் தொடர்ச்சி இது. பெருவிழாவின் (பிரம்மோற்சவத்தின்) பகுதியான தீர்த்தவாரி இன்றைக்கும் மாசி மாதத்தில் தெப்பத் திருவிழாவாக நடைபெறுகின்றது.

    ReplyDelete
  76. மிக நீண்ட ஒரு விளக்கத்திற்கு நன்றி குமரன். திரூமாலிருஞ்சோலையின் பழமை பற்றி எனக்கு சந்தேகமில்லை. ரவி அண்ணா, கலாய்க்கிறார் என்பதும் புரிகிறது. என் சந்தேகம், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவைப் பற்றி ஏதாவது குறிப்பு உள்ளதா? மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக சுந்தரராஜனாக குதிரை மீதேறி வருகிறார் என்பதே நான் அறிந்த ஒன்று. அவருக்கு கள்ளழகர் என்ற திருநாமம் எப்படி ஏற்பட்டது?. தீர்த்தவாரி உற்சவம் ஆடி மாத பிரம்மோத்சவத்தில் உண்டு, சித்திரைத் திருவிழா பிரம்மோத்சவம் என்று சொல்ல மாட்டார்கள், சைத்ரோத்ஸவம் என்று சொல்வர்.

    மேல் விளக்கங்கள் நீங்களும், ரவி அண்ணாவும் தான் அளிக்க வேண்டும்.

    ReplyDelete
  77. குமரன் / ராகவ்,

    புதிய பல தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றிகள் பல.

    ராகவ் விடாமல் அழகரை ஆற்றிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார்.

    கவலைப்படாதீங்க அழகரே! நம்ம ரவி வந்து ஏதாவது 'உட்டாலக்கடி' அடி அடிச்சு உங்களை கரையேத்தி விட்டு விடுவாரு :-))

    ReplyDelete
  78. //கவலைப்படாதீங்க அழகரே! நம்ம ரவி வந்து ஏதாவது 'உட்டாலக்கடி' அடி அடிச்சு உங்களை கரையேத்தி விட்டு விடுவாரு :-))//

    பெருமாள் தான் நம்மைக் கரையேத்தி விடுவார். இப்போ அவரை "கரையேத்தி" விட நம்ம கே.ஆர்.எஸ் வர வேண்டி இருக்கு.. ம்ம் சீக்கிரம் வாங்க.. எவ்வளவு நேரம் தான் சித்திரை, கத்திரி வெயில்ல நிப்பார் அழகர்..

    ReplyDelete
  79. !!!! wow...annachi...pinni pedaladikareenga..kumudam bakthi padicha epect!!

    ReplyDelete
  80. அற்புதமாக வடித்திருக்கிறீர்கள்.
    வணக்கத்துடன் வாழ்த்துகிறேன்.
    பக்தியுடன்
    நா.தியாகராஜன்.

    ReplyDelete
  81. KRS எங்கள் ஊர் பரிமள அரங்கனை (திருஇந்தலூர், மயிலாடுதுறை) விட்டதற்கு கண்டனங்கள் :)

    ReplyDelete
  82. KRS எங்கள் ஊர் பரிமள அரங்கனை (திருஇந்தலூர், மயிலாடுதுறை) விட்டதற்கு கண்டனங்கள் :)

    ReplyDelete
  83. //Arun Nishore said...
    KRS எங்கள் ஊர் பரிமள அரங்கனை (திருஇந்தலூர், மயிலாடுதுறை) விட்டதற்கு கண்டனங்கள் :)
    //

    அருண்
    இப்போ தான் திருஇந்தளூர் பரிமளரங்கனைப் பத்தி ஒரு பதிவு எழுத உட்கார்ந்தேன். யாரோ எப்பவோ எங்கேயோ கண்டனம் சொன்னாங்களே-ன்னு ஞாபகம் வந்திச்சி! அதான் இந்த மறுமொழி! :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP