நெல்லைச் சீமை! சங்கரன் கோயில்! ஆடித் தபசு! கோமதி அம்மன்! புற்று மண்ணு!
என்னலே என்று ஒருவர் பேசினாலே அவர் தின்னலே(Tinneley)-ன்னு ஈசியாச் சொல்லிறலாம்! உலகத் தமிழர்களில் பரந்து கிடப்பது Tins & Tans! Tins=Tinnevely & Tans=Tanjore! :)
நெல்லுக்கு இறைவனே வேலி வேய்ந்த சீமை தான் நெல்லைச் சீமை!
ஊரும், பேரும், ஆறும், சீரும் சொல்லி மாளாது! இருந்தாலும் நெல்லை-ன்னாலே இரண்டு மறக்க முடியாத விஷயங்கள் என்ன-லே? ஒன்னு அல்வா! இன்னொன்னு ஆடித் தபசு!
இப்போ பலரும் அல்வா குடுக்கறாங்க! ஆனா சீமை அல்வா, சீமை அல்வா தான்! :)
அதே போல் பலரும் விழாக்கள் எடுக்குறாங்க! ஆனால் ஆடித் தபசு, ஆடித் தபசு தான்!
இன்னிக்கி (Aug-14) நெல்லையில் ஆடித் தபசு! பாக்கலாம், வாரீயளா?
* இந்தச் சிவன் கோயிலில் சொர்க்க வாசல் உண்டு; வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாட்டம்!
* பெருமாள் குளிர்ச்சி பொருந்தியவர் என்பதால், சிவனுக்கு அபிஷேகம் கிடையாது!
* பிரசாதமாக விபூதியும், துளசி தீர்த்தமும் ஒன்றாகத் தரப்படுகிறது!
இத்தனையும் எங்கேன்னு வித்தியாசமா பாக்குதீயளா? நம்ம நெல்லைச் சங்கரன்கோயில் டவுன்-ல தான்-லே! அட நம்மூரு சங்கரநயினார் கோயிலை மறந்துட்டீயளா?
வியப்பா இருக்கா? மேலே படிங்கல்லே!
* அது என்னாங்க தபசு? = தபசு-ன்னா தவம்!
* யாரு செய்யற தவம்? = சிவனாரின் இல்லத்தரசி கோமதி செய்கின்ற தவம்!
* எதுக்கு அவிங்க போயி தவம் செய்யறாங்க? = எல்லாம் பொறந்த வீட்டுப் பாசம் தேன்!
* அது என்ன கோமதி? = அவிங்க ஊரு கோ-குலம்; தொழில் கோ-பாலம்; அண்ணன் கோ-விந்தன்; தங்கச்சி் கோ-மதி!
கோமதி! செந்தமிழில் ஆவுடையாம்பிகை! பசுக்களைக் காப்பவள்!
கோவில்பட்டில எப்படி ஒரு செண்பகமோ, அது போல சங்கரன்கோவில்-ல ஒரு கோமதி! வீட்டுக்கு வீடு ஒரு கோமதி இருப்பாள்!
ஆடித் தபசே அவள் திருவிழா தான்! அம்பாளைத் தரிசிக்கும் முன்னர் கொஞ்சம் கதை என்னான்னு பார்க்கலாமா?
சங்கன், பத்மன்-ன்னு ரெண்டு நாக அரசர்கள், நெருங்கிய நண்பர்கள்! ஆனா ஒரே ஒரு விஷயத்துல மட்டும் அடிச்சிக்குவாங்க! ஆனா அப்பறம் கூடிக் குலவிப்பாங்க!
சங்கன் வீர சைவன்! பத்மனோ பழுத்த வைணவன்! இருவரும் சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா-ன்னு, பதிவுகள் எல்லாம் வராத காலத்திலேயே கூட, பின்னூட்டம் போட்டுக்குவாங்க போல!:)
உலகத்துக்கே அம்மா! அவளிடம் தானே வழக்கு வர வேண்டும்? வந்தது! கொண்டு வந்தது பத்மன்! சங்கன் செய்யும் வம்புகளை அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விட்டான்!
அம்பாள் யாரைப் பார்ப்பாள்? பிறந்த வீடா? புகுந்த வீடா?
எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்! வேத கோஷம் ஓதிப் பார்த்தாள்! அரியும் சிவனும் ஒன்னு-ன்னு சொல்லிப் பார்த்தாள்! அதிலும் அரியைத் தானே முதலில் சொல்றீங்க-ன்னு வம்பு பண்ணுகிறார்கள்! சொல்லுக்குச் சொல் பிடிச்சிக்கிட்டா, சோதரி என்ன செய்வாள் பாவம்?
வாயால மட்டுமே எடுத்துச் சொன்னால், இவிங்க எல்லாம் கேட்க மாட்டாங்க-ன்னு அவளுக்கு நல்லாப் புரிஞ்சி போச்சி!
அம்பாள் தபசில் உட்கார்ந்து விட்டாள்! ஆடி மாசம்! அதான் ஆடித் தபசு!
காதல் கணவன் சிவபெருமான் கோமதியின் முன்னால் தோன்றினான். அவனிடம் இது வரை யாருமே கேட்காத வரத்தைக் கேட்டாள் அன்னை! ஆடிய பாதனே ஒரு கணம் ஆடிப் போய் விட்டான்!
"நல்லா யோசிச்சித் தான் கேட்கிறியா கோமதீ?"
"ஆமாம் ஐயனே! நான் கேட்கும் வரத்தை உங்கள் அன்பு மனைவிக்குத் தர மாட்டீங்களா?"
"அதில்லை! வாம பாகம் என்னும் என்னுடைய இடப் பாகம் உனக்கு உரியதாச்சே! அதையே நீ விட்டுக் கொடுக்கும் அளவுக்கு அப்படி என்ன வந்தது?"
"பரவாயில்லை! என் இடமே போனாலும் பரவாயில்லை ஐயனே! நான் கேட்கும் வரத்தைத் தாருங்கள்!"
"சரி...முறையாக ஜபித்து வேண்டுவதைக் கேள்"
"சர்வ வியாபி என்று என் ஆசை அண்ணனுக்குப் பெயர்! அவரோட மாயா ரூபம் தானே நான்! நிறம் முதற்கொண்டு எல்லாவற்றிலும் நாங்கள் ஒன்றல்லவா! பச்சை மாமலை போல் மேனி அல்லவா!"
"ஆமாம்!"
"விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தவன் என்று தானே பொருள்! அவன் உங்க கிட்டேயும் நீக்கமற நிறைந்து உள்ளான் அல்லவா!"
"ஆமாம்!"
"அதை நீங்கள் உலகத்துக்கு வெளிப்படையாகக் காட்டியருள வேண்டும்! அப்போது தான் இந்த ஊர் வாயை அடைக்க முடியும்!"
"ஊர் வாயை, ஆல-வாயாலும் அடைக்க முடியாது தேவி!"
"பரவாயில்லை ஐயனே! ப்ரத்யட்சம் ப்ரமாணம்!
கண்டதே காட்சி என்று இருப்பவர்களுக்கு, சங்கரன்கோயிலில் கண்டதே காட்சி என்று மாறட்டும்!
கொண்டதே கோலம் என்று இருப்பவர்களுக்கு, சங்கரன்கோயிலில் நீங்கள் கொண்டதே கோலம் ஆக ஏறட்டும்!"
"ஹா ஹா ஹா"
"எனக்குச் சொந்தமான இடப் பாகத்திலேயே அண்ணனைக் காட்டி அருளுங்கள்! தூணிலும் துரும்பிலும் எங்கெங்கும் வியாபித்து இருப்பவனை உங்கள் வாம பாகத்திலும் காட்டி அருளுங்கள்! சங்கர நாராயணனாக காட்சி கொடுத்து சாட்சி கொடுங்கள்!!!"
ஹரி-ஓம்-நம சிவாய!
ஈசன் காட்சி கொடுத்து விட்டான்! ஈசன் சாட்சி கொடுத்து விட்டான்!
இறைவன் திருமேனி இடப்பாகத்தில் யமுனைத்
துறைவன் தோன்றி விட்டான்!
ஈசன் திருமேனி இடப்பாகத்தில் இலக்குமி
நேசன் தோன்றி விட்டான்!
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து விட்டான்!
தாழ் சடையும் = நீள் முடியும்; ஒண் மழுவும் = சக்கரமும்; சூழ் அரவும் = பொன் ஞானும்!
* ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம்!
* ஒரு புறம் கங்கை-சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர-மாணிக்க மகுடம்!
* ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு!
* ஒரு புறம் புலித்தோல், மறு புறம் பீதாம்பரம்!
* ஒரு புறம் ருத்திராட்சம், மறு புறம் துளசீ மாலை!
* ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான்; மறு புறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்கிறான்!
முனியே நான்முகனே முக்கண்ணப்பா! என் பொல்லாக் கனிவாய் தாமரைக்கண் கருமாணிக்கமே!
* சன்னிதியில் விபூதிப் பிரசாதம், துளசீ தீர்த்தம் உண்டு!
* வில்வார்ச்சனை, துளசி அர்ச்சனை இரண்டுமே உண்டு!
* இரண்டையும் இணைக்கும் அம்பாளின் குங்குமார்ச்சனையும் உண்டு!
குளிர்ந்த கண்ணன் ஈசன் திருமேனியில் எழுந்தருளியதால், அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது! அலங்காரம் மட்டுமே!
அதனால் சந்திர மெளலீச்வரர் என்னும் லிங்கத்தை முன்னே நிறுத்தி, அதற்கு மட்டும் திருமுழுக்காட்டுதல், அன்னாபிஷேகங்கள் உண்டு!
எப்போதுமே அருவத்தில் லிங்கமாகக் காட்சி தரும் ஈசன், கருவறையில் உருவமாக காட்சி அளிப்பது மிக மிக விசேடம்!
எனினும் ஆகம வழக்கப்படி லிங்க உருவத்தில் மட்டுமே பூசை நடக்க வேண்டி, சங்கரலிங்கம் என்று இன்னொரு தனிச் சன்னிதியிலும் எழுந்தருளி உள்ளார் ஈசன்! அவர் நாயகியாக கோமதி அம்மன்!
புற்று சூழ்ந்த சங்க-பத்மன்! நாக நண்பர்கள் வழிபட்டதால் புற்று மண்ணே பிரசாதம்!
ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்! உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்தாள் அல்லவா? அதனால் அவளுக்கென்று தனித்தேர்! அவள் மட்டுமே சிறப்பாக வலம் வருவாள்!
இறுதி நாளன்று, ஆடித் தபசு மண்டபம் மண்டபத்தில் அவள் தவம் நடித்துக் காட்டப்படுகிறது! ஒரு கையில் விபூதிப் பை! ஒரு காலில் தவம்! சங்கர நாராயணர் அவள் முன் தோன்றி வரம் அருளும் காட்சி!
அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம்! பொதுவாக ஸ்ரீசக்ர பிரதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்! ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு! மன மாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம்!
ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு அன்னை நமக்கு! ஆனால் எல்லாப் பிறவியிலும் வரும் ஒரே அன்னை யார்?
தன் குழந்தைகளின் புத்தி தெளிய வேண்டி, தன் பாகத்தையே விட்டுக் கொடுத்த திருமதி! அவள் ஒரு வெகுமதி! அவளே அன்னை கோமதி!
மாதே, மலையத் தவஜ பாண்டிய சஞ்சாதே!
மாதங்க வதன குக மாதே!
சகோதரி சங்கரி! சங்கரி! சங்கரி!
சாமுண்டீஸ்வரி, சந்திர கலாதரி, தாயே கெளரி!
உலகன்னை! ஜகன்மாதா!
தர்ம சம்வர்த்தினி! அறம் வளர்த்த நாயகி!
அவளுக்கு எந்தக் குழந்தையிடமும் பேதம் பார்க்கத் தெரியாது!
சைவக் குழந்தையோ, வைணவக் குழந்தையோ, சாக்தக் குழந்தையோ, புத்தக் குழந்தையோ, சமணக் குழந்தையோ, முகம்மதியக் குழந்தையோ, கிறித்துவக் குழந்தையோ.....எதுவுமே இல்லாத குழந்தையோ.....
என்னிக்குமே, குழந்தை குழந்தை தான்! அம்மா அம்மா தான்!
நம சிவாய!
ஓம் நமோ நாராயணாய!
கோமதித் தாய் திருவடிகளே சரணம்!!!
நெல்லுக்கு இறைவனே வேலி வேய்ந்த சீமை தான் நெல்லைச் சீமை!
ஊரும், பேரும், ஆறும், சீரும் சொல்லி மாளாது! இருந்தாலும் நெல்லை-ன்னாலே இரண்டு மறக்க முடியாத விஷயங்கள் என்ன-லே? ஒன்னு அல்வா! இன்னொன்னு ஆடித் தபசு!
இப்போ பலரும் அல்வா குடுக்கறாங்க! ஆனா சீமை அல்வா, சீமை அல்வா தான்! :)
அதே போல் பலரும் விழாக்கள் எடுக்குறாங்க! ஆனால் ஆடித் தபசு, ஆடித் தபசு தான்!
இன்னிக்கி (Aug-14) நெல்லையில் ஆடித் தபசு! பாக்கலாம், வாரீயளா?
* இந்தச் சிவன் கோயிலில் சொர்க்க வாசல் உண்டு; வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாட்டம்!
* பெருமாள் குளிர்ச்சி பொருந்தியவர் என்பதால், சிவனுக்கு அபிஷேகம் கிடையாது!
* பிரசாதமாக விபூதியும், துளசி தீர்த்தமும் ஒன்றாகத் தரப்படுகிறது!
இத்தனையும் எங்கேன்னு வித்தியாசமா பாக்குதீயளா? நம்ம நெல்லைச் சங்கரன்கோயில் டவுன்-ல தான்-லே! அட நம்மூரு சங்கரநயினார் கோயிலை மறந்துட்டீயளா?
வியப்பா இருக்கா? மேலே படிங்கல்லே!
* அது என்னாங்க தபசு? = தபசு-ன்னா தவம்!
* யாரு செய்யற தவம்? = சிவனாரின் இல்லத்தரசி கோமதி செய்கின்ற தவம்!
* எதுக்கு அவிங்க போயி தவம் செய்யறாங்க? = எல்லாம் பொறந்த வீட்டுப் பாசம் தேன்!
* அது என்ன கோமதி? = அவிங்க ஊரு கோ-குலம்; தொழில் கோ-பாலம்; அண்ணன் கோ-விந்தன்; தங்கச்சி் கோ-மதி!
கோமதி! செந்தமிழில் ஆவுடையாம்பிகை! பசுக்களைக் காப்பவள்!
கோவில்பட்டில எப்படி ஒரு செண்பகமோ, அது போல சங்கரன்கோவில்-ல ஒரு கோமதி! வீட்டுக்கு வீடு ஒரு கோமதி இருப்பாள்!
ஆடித் தபசே அவள் திருவிழா தான்! அம்பாளைத் தரிசிக்கும் முன்னர் கொஞ்சம் கதை என்னான்னு பார்க்கலாமா?
சங்கன், பத்மன்-ன்னு ரெண்டு நாக அரசர்கள், நெருங்கிய நண்பர்கள்! ஆனா ஒரே ஒரு விஷயத்துல மட்டும் அடிச்சிக்குவாங்க! ஆனா அப்பறம் கூடிக் குலவிப்பாங்க!
சங்கன் வீர சைவன்! பத்மனோ பழுத்த வைணவன்! இருவரும் சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா-ன்னு, பதிவுகள் எல்லாம் வராத காலத்திலேயே கூட, பின்னூட்டம் போட்டுக்குவாங்க போல!:)
உலகத்துக்கே அம்மா! அவளிடம் தானே வழக்கு வர வேண்டும்? வந்தது! கொண்டு வந்தது பத்மன்! சங்கன் செய்யும் வம்புகளை அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விட்டான்!
அம்பாள் யாரைப் பார்ப்பாள்? பிறந்த வீடா? புகுந்த வீடா?
எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்! வேத கோஷம் ஓதிப் பார்த்தாள்! அரியும் சிவனும் ஒன்னு-ன்னு சொல்லிப் பார்த்தாள்! அதிலும் அரியைத் தானே முதலில் சொல்றீங்க-ன்னு வம்பு பண்ணுகிறார்கள்! சொல்லுக்குச் சொல் பிடிச்சிக்கிட்டா, சோதரி என்ன செய்வாள் பாவம்?
வாயால மட்டுமே எடுத்துச் சொன்னால், இவிங்க எல்லாம் கேட்க மாட்டாங்க-ன்னு அவளுக்கு நல்லாப் புரிஞ்சி போச்சி!
அம்பாள் தபசில் உட்கார்ந்து விட்டாள்! ஆடி மாசம்! அதான் ஆடித் தபசு!
காதல் கணவன் சிவபெருமான் கோமதியின் முன்னால் தோன்றினான். அவனிடம் இது வரை யாருமே கேட்காத வரத்தைக் கேட்டாள் அன்னை! ஆடிய பாதனே ஒரு கணம் ஆடிப் போய் விட்டான்!
"நல்லா யோசிச்சித் தான் கேட்கிறியா கோமதீ?"
"ஆமாம் ஐயனே! நான் கேட்கும் வரத்தை உங்கள் அன்பு மனைவிக்குத் தர மாட்டீங்களா?"
"அதில்லை! வாம பாகம் என்னும் என்னுடைய இடப் பாகம் உனக்கு உரியதாச்சே! அதையே நீ விட்டுக் கொடுக்கும் அளவுக்கு அப்படி என்ன வந்தது?"
"பரவாயில்லை! என் இடமே போனாலும் பரவாயில்லை ஐயனே! நான் கேட்கும் வரத்தைத் தாருங்கள்!"
"சரி...முறையாக ஜபித்து வேண்டுவதைக் கேள்"
"சர்வ வியாபி என்று என் ஆசை அண்ணனுக்குப் பெயர்! அவரோட மாயா ரூபம் தானே நான்! நிறம் முதற்கொண்டு எல்லாவற்றிலும் நாங்கள் ஒன்றல்லவா! பச்சை மாமலை போல் மேனி அல்லவா!"
"ஆமாம்!"
"விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தவன் என்று தானே பொருள்! அவன் உங்க கிட்டேயும் நீக்கமற நிறைந்து உள்ளான் அல்லவா!"
"ஆமாம்!"
"அதை நீங்கள் உலகத்துக்கு வெளிப்படையாகக் காட்டியருள வேண்டும்! அப்போது தான் இந்த ஊர் வாயை அடைக்க முடியும்!"
"ஊர் வாயை, ஆல-வாயாலும் அடைக்க முடியாது தேவி!"
"பரவாயில்லை ஐயனே! ப்ரத்யட்சம் ப்ரமாணம்!
கண்டதே காட்சி என்று இருப்பவர்களுக்கு, சங்கரன்கோயிலில் கண்டதே காட்சி என்று மாறட்டும்!
கொண்டதே கோலம் என்று இருப்பவர்களுக்கு, சங்கரன்கோயிலில் நீங்கள் கொண்டதே கோலம் ஆக ஏறட்டும்!"
"ஹா ஹா ஹா"
"எனக்குச் சொந்தமான இடப் பாகத்திலேயே அண்ணனைக் காட்டி அருளுங்கள்! தூணிலும் துரும்பிலும் எங்கெங்கும் வியாபித்து இருப்பவனை உங்கள் வாம பாகத்திலும் காட்டி அருளுங்கள்! சங்கர நாராயணனாக காட்சி கொடுத்து சாட்சி கொடுங்கள்!!!"
ஹரி-ஓம்-நம சிவாய!
ஈசன் காட்சி கொடுத்து விட்டான்! ஈசன் சாட்சி கொடுத்து விட்டான்!
இறைவன் திருமேனி இடப்பாகத்தில் யமுனைத்
துறைவன் தோன்றி விட்டான்!
ஈசன் திருமேனி இடப்பாகத்தில் இலக்குமி
நேசன் தோன்றி விட்டான்!
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து விட்டான்!
தாழ் சடையும் = நீள் முடியும்; ஒண் மழுவும் = சக்கரமும்; சூழ் அரவும் = பொன் ஞானும்!
* ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம்!
* ஒரு புறம் கங்கை-சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர-மாணிக்க மகுடம்!
* ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு!
* ஒரு புறம் புலித்தோல், மறு புறம் பீதாம்பரம்!
* ஒரு புறம் ருத்திராட்சம், மறு புறம் துளசீ மாலை!
* ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான்; மறு புறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்கிறான்!
முனியே நான்முகனே முக்கண்ணப்பா! என் பொல்லாக் கனிவாய் தாமரைக்கண் கருமாணிக்கமே!
* சன்னிதியில் விபூதிப் பிரசாதம், துளசீ தீர்த்தம் உண்டு!
* வில்வார்ச்சனை, துளசி அர்ச்சனை இரண்டுமே உண்டு!
* இரண்டையும் இணைக்கும் அம்பாளின் குங்குமார்ச்சனையும் உண்டு!
குளிர்ந்த கண்ணன் ஈசன் திருமேனியில் எழுந்தருளியதால், அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது! அலங்காரம் மட்டுமே!
அதனால் சந்திர மெளலீச்வரர் என்னும் லிங்கத்தை முன்னே நிறுத்தி, அதற்கு மட்டும் திருமுழுக்காட்டுதல், அன்னாபிஷேகங்கள் உண்டு!
எப்போதுமே அருவத்தில் லிங்கமாகக் காட்சி தரும் ஈசன், கருவறையில் உருவமாக காட்சி அளிப்பது மிக மிக விசேடம்!
எனினும் ஆகம வழக்கப்படி லிங்க உருவத்தில் மட்டுமே பூசை நடக்க வேண்டி, சங்கரலிங்கம் என்று இன்னொரு தனிச் சன்னிதியிலும் எழுந்தருளி உள்ளார் ஈசன்! அவர் நாயகியாக கோமதி அம்மன்!
புற்று சூழ்ந்த சங்க-பத்மன்! நாக நண்பர்கள் வழிபட்டதால் புற்று மண்ணே பிரசாதம்!
ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்! உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்தாள் அல்லவா? அதனால் அவளுக்கென்று தனித்தேர்! அவள் மட்டுமே சிறப்பாக வலம் வருவாள்!
இறுதி நாளன்று, ஆடித் தபசு மண்டபம் மண்டபத்தில் அவள் தவம் நடித்துக் காட்டப்படுகிறது! ஒரு கையில் விபூதிப் பை! ஒரு காலில் தவம்! சங்கர நாராயணர் அவள் முன் தோன்றி வரம் அருளும் காட்சி!
அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம்! பொதுவாக ஸ்ரீசக்ர பிரதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்! ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு! மன மாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம்!
ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு அன்னை நமக்கு! ஆனால் எல்லாப் பிறவியிலும் வரும் ஒரே அன்னை யார்?
தன் குழந்தைகளின் புத்தி தெளிய வேண்டி, தன் பாகத்தையே விட்டுக் கொடுத்த திருமதி! அவள் ஒரு வெகுமதி! அவளே அன்னை கோமதி!
மாதே, மலையத் தவஜ பாண்டிய சஞ்சாதே!
மாதங்க வதன குக மாதே!
சகோதரி சங்கரி! சங்கரி! சங்கரி!
சாமுண்டீஸ்வரி, சந்திர கலாதரி, தாயே கெளரி!
உலகன்னை! ஜகன்மாதா!
தர்ம சம்வர்த்தினி! அறம் வளர்த்த நாயகி!
அவளுக்கு எந்தக் குழந்தையிடமும் பேதம் பார்க்கத் தெரியாது!
சைவக் குழந்தையோ, வைணவக் குழந்தையோ, சாக்தக் குழந்தையோ, புத்தக் குழந்தையோ, சமணக் குழந்தையோ, முகம்மதியக் குழந்தையோ, கிறித்துவக் குழந்தையோ.....எதுவுமே இல்லாத குழந்தையோ.....
என்னிக்குமே, குழந்தை குழந்தை தான்! அம்மா அம்மா தான்!
நம சிவாய!
ஓம் நமோ நாராயணாய!
கோமதித் தாய் திருவடிகளே சரணம்!!!
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎன்னாது? Tins & Tans-ஆ? நாங்க மரியாதைப்பட்ட மதுரைக்காரய்ங்க இல்லாத இடம் ஏதுன்னேன்?
ReplyDeleteவெட்டி வீறாப்பு பேசும் தின்னவேலிக்காரய்ங்களையும், வீண் ஜம்பம் பேசும் தஞ்சாவூர்க்காரயங்களையும் விட்டுத் தள்ளூங்கப்பு. மண் மணக்கும் மதுரையிலதான் பெண்ணீயத்தின் எழுச்சியைப் பார்க்கலாம். மனம் கவரும் மீனாட்சியைப் பார்க்கலாம்.
சீக்கிரமா சொக்கநாதரைப் பத்தியோ சுந்தர்ராஜரைப் பத்தியோ ஒரு பதிவப் போட்டு உங்க நல்லப் பெயரைக் காப்பாதிக்குங்கப்பு. அம்புட்டுதேன் சொல்வேன்.
என்னதான் நீங்க சங்கரா, சங்கரா என்று சொன்னாலும் ஈசனுக்கு பக்கத்துல இறைவன்னுதானே சொல்றீரு. ஈசனுக்கு பக்கத்துல மாலன்னு சொல்ல மனசு வர மாட்டேங்குதே :-)
//என்னலே என்று ஒருவர் பேசினாலே அவர் தின்னலே-ன்னு ஈசியாச் சொல்லிறலாம்! //
ReplyDeleteஎன்னடே இது? இப்படிச் சொல்லிப்புட்ட?
சரி போவட்டும்.
@ஸ்ரீதர் அண்ணாச்சி
ReplyDelete//என்னதான் நீங்க சங்கரா, சங்கரா என்று சொன்னாலும் ஈசனுக்கு பக்கத்துல இறைவன்னுதானே சொல்றீரு. ஈசனுக்கு பக்கத்துல மாலன்னு சொல்ல மனசு வர மாட்டேங்குதே :-)//
ஹா ஹா ஹா!
மொத்தப் பதிவுல ஒத்த வார்த்தைய என்னமா கேட்ச் பண்றாங்கப்பா!:)
//நம சிவாய!
ஓம் நமோ நாராயணாய!//
என்று முதலில் சிவபெருமானைச் சொல்லி விட்டு அப்புறம் தான் மால் என்றும் மால் வெட்டி இருக்கேன்!
ஈசனுக்கு பக்கத்துல மாலன்னு சொல்ல அடியேனுக்கு மனசு வருதோ இல்லையோ,
அப்படிச் சொல்லி இருக்குறதைப் பார்க்க பலருக்கு கண்ணு வர மாட்டங்குதே! :))
சொல்ப வெயிட் மாடி! இன்னும் ரெண்டு பேரு ஒஸ்துன்னாரு! :))
அரியும் சிவனும் ஒண்ணு.. அறியாதவன் வாயில "அல்வா" தந்து விளங்க வைத்த அன்னையின் தபசு அறிய நன்றாக இருந்தது.
ReplyDeleteஅருமையான பதிவு. காந்திமதி காத்து வரும் நெல்லைதான் எனக்கும். கோமதியாய் அவர் சங்கரன்கோவிலில் அருள் பாலிக்கும் அழகையும் தன் பாகத்தையே விட்டுக் கொடுத்து சங்கரநாரயணனாக தன் நாதனைக் காட்சியளிக்க வைத்த கதையையும் ஆடித் தபசின் மகிமையையும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி நான் அறிந்திராத பல தகவல்களை அறிந்திட முடிந்ததற்கு.
ReplyDelete//"எனக்குச் சொந்தமான இடப் பாகத்திலேயே அண்ணனைக் காட்டி அருளுங்கள்! தூணிலும் துரும்பிலும் எங்கெங்கும் வியாபித்து இருப்பவனை உங்கள் வாம பாகத்திலும் காட்டி அருளுங்கள்! சங்கர நாராயணனாக காட்சி கொடுத்து சாட்சி கொடுங்கள்!!!"//
ReplyDeleteஅன்னை அப்படியே நேரில் பேசுவது போல உணர்ந்தேன். ஆடி தப்சை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.
நன்றி, வாழ்த்துக்கள், வளர்க தங்கள் தொண்டு.
//சொல்ப வெயிட் மாடி! இன்னும் ரெண்டு பேரு ஒஸ்துன்னாரு! :))//
ReplyDeleteஎப்புடிலே ரெண்டு பேரு.. சங்க(ர)ன் நீ இருக்க பதுமன் மட்டும் தானே வரவேண்டி கிடக்கு..
//காதல் கணவன் சிவபெருமான் கோமதியின் முன்னால் தோன்றினான். அவனிடம் இது வரை யாருமே கேட்காத வரத்தைக் கேட்டாள் அன்னை! ஆடிய பாதனே ஒரு கணம் ஆடிப் போய் விட்டான்!//
ReplyDeleteஇடப்பாகமெல்லாம் சரி, சக்தியும் சிவனும் ஒண்ணு இல்லையா ?
பின்பு ஏன் தனக்கான வரத்தை சிவனிடம் கேட்டுப் பெற வேண்டும் இந்த சக்தி ? வரம் கொடுக்கும் சக்தியெல்லாம் சிவனிடம் மட்டும் தான் இருக்கா ?
புரியல்ல, தயவு செய்து விளக்குங்க !
//அவளுக்கு எந்தக் குழந்தையிடமும் பேதம் பார்க்கத் தெரியாது!//
ReplyDelete//என்னிக்குமே, குழந்தை குழந்தை தான்! அம்மா அம்மா தான்!//
உண்மை! இன்னோருக்கா சொல்லிக்கிறேன். அம்மான்னா அம்மாதான். அவளைபோல எவருண்டு? அவள் அன்பைப் போல் எவர்க்குண்டு? ஆடித்தபசையும் அன்னையின் அருமையையும் அற்புதமாத் தந்ததற்கு நன்றிகளும், வாழ்த்துகளும்.
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteபுரியல்ல, தயவு செய்து விளக்குங்க !//
ஓ...புதசெவி-ன்னு சொல்லக்கூடாதோ? காப்பிரைட் ஆயிருச்சோ? :)
//வரம் கொடுக்கும் சக்தியெல்லாம் சிவனிடம் மட்டும் தான் இருக்கா ?//
ஜூப்பர்! ஐ லைக் திஸ் கேள்வி!
கோவி அண்ணாவுக்கு யாராச்சும் பதில் சொல்லுங்களேன்! நான் பைய வாரேன்! :)
This comment has been removed by the author.
ReplyDelete//வெட்டிப்பயல் said...
ReplyDeleteபதிவு சூப்பர்...//
ஆங்...இப்போ தான் சரி! என் இன்னொரு தம்பியைப் போலவே! :)
ஆனா அவன் தெலுங்குல பின்னூட்டம் போட்டு நான் பாத்ததே இல்ல! ஒரு நாளாச்சும் தெலுங்குல போடச் சொல்லணும்!
சின்ன வயசில் தெக்குவீதியில் இந்தக் கோலத்தைப் பாத்த நினைவு இன்னமும் பசுமையா இருக்கு.
ReplyDeleteஎங்க வீட்டு மாடியில ஆளுக்கு நாலணா கட்டணம்!!
மேலே சென்று பாக்கறதுக்கு!
நான் தான் கட்டண வசூலிப்பாளன்!
சரி, கேள்விக்கு வருவோம்!
அறியும் சிவனும் ஒண்ணு!
அவ்ளோதான்!
சிவனை அறிந்தால் எல்லாம் ஒண்ணாகும்!
புரிஞ்சா சரி!
இப்போ கோவியார் கேள்விக்கு!
வலக்கை அருளும் கை!
இடக்கை அணைக்கும் கை.
அதான் அம்மா ஐயா கிட்ட வரம் கேட்டாங்க!
//சிவனை அறிந்தால் எல்லாம் ஒண்ணாகும்!
ReplyDeleteபுரிஞ்சா சரி!
இப்போ கோவியார் கேள்விக்கு!
வலக்கை அருளும் கை!
இடக்கை அணைக்கும் கை.
அதான் அம்மா ஐயா கிட்ட வரம் கேட்டாங்க!
11:23 PM, August 14, 2008
//
சக்தியை அறிந்தால் எல்லாம் ஒண்ணாகும் என்று சொல்ல வரலையே ? என்ன ஆணாதிக்க சிந்தனையோ, இதுல 'புரிஞ்சா சரி' என்கிற ஆதங்கம் வேறு ! ஹூம்
ஹலோ, சிவனும் சக்தியும் ஒன்னுதான் என்றாகிவிட்டதைத் தான் அர்தநாரீ உருவம் காட்டுது, மனசு மட்டும் தனியோ ? அது என்ன வலது கை அருளும் கை ? இடது கை கழுவதால் தூய்மையற்றதா ? இடது கை ஏன் அருளக் கூடாது ?
நீங்கள் விளக்கம் என்ற பெயரில் எதையோ கூறினால் மேற்படிதான் நான் கேட்கவேண்டி இருக்கும்.
உங்கள் விளக்கம் ஏற்புடையது அல்ல, அதற்கான சரியான விளக்கமாகவும் அது அமையவில்லை.
நான் கேட்பதைப் புரிந்து கொள்ளுங்கள், ஆணும் பெண்ணும் சமம் என்று காட்டுவதே அர்தநாரியின் நோக்கம் என்று பட அளவுக்குக் காட்டினாலும், சக்தி சிவனிடம் (கெஞ்சி அல்லது உரிமையில்)கேட்டுப் பெறும் நிலையில் தான் இருக்கிறாள்.... என்பதையே சக்தி சிவனிடம் வரம் பெறும் கதைகள் மறைமுக மாக காட்டுகின்றன.
ஆணிடம் கேட்டு தான் பெண்கள் எதையும் செய்ய வேண்டும் என்ற ஆணாதிக்க சிந்தனையாகவே இத்தகைய கதைகள் இருக்கின்றன. இல்லை என்று மறுப்பவர் சரியான விளக்கம் அளிக்க வேண்டும், வலது கை, இடது கை, சுண்டுவிரல் விளக்கமெல்லாம் தவிர்க்கவும்.
நல்ல பதிவு...
ReplyDelete//அது என்ன கோமதி? = அவிங்க ஊரு கோ-குலம்; தொழில் கோ-பாலம்; அண்ணன் கோ-விந்தன்; தங்கச்சி் கோ-மதி!
கோமதி! செந்தமிழில் ஆவுடையாம்பிகை! பசுக்களைக் காப்பவள்!//
அழகான, கோர்வையால எண்ணங்கள் :)
ஆவுடையாக இருப்பவள், ஆ-உடையாள், ஆவினங்களுக்கும் தாய்.
//மண் மணக்கும் மதுரையிலதான் பெண்ணீயத்தின் எழுச்சியைப் பார்க்கலாம். மனம் கவரும் மீனாட்சியைப் பார்க்கலாம். //
ஆஹா, ஸ்ரீதரண்ணா, நீங்க நம்மவிங்களா? :)
நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட நான் இது வரை ஆடித்தபசுக்கு சங்கரன் கோவில் போனது கிடையாது. ஆனால், ஆடித்தபசு விழாவையும் பூஜைகளையும் எங்கள் கண் முன்னே கொண்டுவந்ததற்கு கோடி நன்றி.
ReplyDeleteஆகா ஆகா - அருமையான பதிவு - பற்பல விளக்கங்கள் - பல புதிய செய்திகள்(எனக்கு).
ReplyDeleteநான் பிறந்த ஊர் தஞ்சை - டான்ஸ் என்பதில் பெருமை அடைகிறேன். எனக்கு என் தாத்தாவின் பெயர் வைத்ததனால், அக்கால வழக்கப்படி, என் பாட்டி என் பெயரைக் கூற இயலாத காரணத்தால் எனக்கு சங்கரன் என மற்றொரு பெயரிட்டி என்னை சங்கரன் சங்கர் என அன்புடன் அழைத்தார்கள். இப்பெயரினைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் -எனது வீட்டின் அருகிலேயே ( தஞ்சாவூர் - மேல வீதி ) சங்கர நாராயணர் கோவில் இருந்ததுதான். எனது மலரும் நினைவுகளை - தஞ்சையில் கழித்த இளமைப் பருவங்களை அசை போட வைத்தமைக்கு நன்றி
//இலவசக்கொத்தனார் said...
ReplyDelete//என்னலே என்று ஒருவர் பேசினாலே அவர் தின்னலே-ன்னு ஈசியாச் சொல்லிறலாம்!//
என்னடே இது? இப்படிச் சொல்லிப்புட்ட? //
ஹா ஹா!
கொத்ஸ்...நான் சொல்ல வந்தது Tinneley-Tinneveliன்னு தான்!
தின்னவில்லைன்னு சொல்ல வரல! :)
பதிவுல மாத்திட்டேன்! நோடு ரீ!
தெரியாத பல தகவல்களை அளித்தமைக்கு நன்றி.
ReplyDelete//சிவனும் சக்தியும் ஒன்னுதான் என்றாகிவிட்டதைத் தான் அர்தநாரீ உருவம் காட்டுது, மனசு மட்டும் தனியோ ?//
சிவன், சக்தி, திருமால் எல்லாம் வெவ்வேறு தெய்வங்கள் என்று நினைப்பதினால் தான் இந்த சந்தேகம் வருகிறது என்று நினைக்கிறேன். சக்தி சிவனிடம் வரம் கேட்பதும் சிவன் அந்த வரத்தை கொடுப்பதும் மனிதர்களாகிய நமக்காக நடத்தப்பட்ட ஒரு திருவிளையாடல் தான். சிவன் என்றால் புலித்தோலில் இருப்பான், திருமால் என்றால் சங்கு சக்கரத்துடன் இருப்பான் என்று மனிதன் தானே வர்ணித்திருக்கிறான்? அந்த இறைவனை ஏன் ஒரு கரடியாகவோ முதலையாகவோ தவளையாகவோ வர்ணிக்கவில்லை? மனிதன் போல ஒரு உருவத்தை கடவுளுக்கு கொடுத்தால்தான் மனித மனம் இறைவனிடம் லயிக்கும் என்பதால் தானே? உண்மையில் அந்த பரம்பொருளுக்கு உருவமே கிடையாது. நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படியே அந்த இறைவன் தோன்றுவான். அதனால், சிவன், சக்தி, திருமால் ஆகிய மூவரும் ஒன்றே என்று எடுத்துக்கொள்ள வேண்டும். தனித்தனி தெய்வங்கள் என்று நினைப்பதனால் தான் ஒருவர் கொடுக்கிறார், மற்றொருவர் எடுத்துக்கொள்கிறார் என்ற மாயை உருவாகிறது.
ஏதோ என் சிற்றறிவுக்கு தெரிந்ததை கூறினேன்.
//ஸ்ரீதர் நாராயணன் said...
ReplyDeleteஎன்னாது? Tins & Tans-ஆ? நாங்க மரியாதைப்பட்ட மதுரைக்காரய்ங்க இல்லாத இடம் ஏதுன்னேன்?//
அதை மதுரையம்பதி கிட்ட கேளும்-ன்னேன்! :)
//வெட்டி வீறாப்பு பேசும் தின்னவேலிக்காரய்ங்களையும்//
கொத்ஸ்...நோட் திஸ் பாயின்ட், யுவர் ஹானர்!
வெட்டி, நீங்களும் நோட் திஸ் பாயின்ட், யுவர் ஹானர்! :)
//வீண் ஜம்பம் பேசும் தஞ்சாவூர்க்காரயங்களையும் விட்டுத் தள்ளூங்கப்பு//
Tan யாருப்பா? அபி அப்பா, பக்கத்தூரு! ஓடியாங்க!
//மனம் கவரும் மீனாட்சியைப் பார்க்கலாம்//
நாங்க மீனாட்சியையும் சொக்கனையும் மட்டும் பாத்துக்கறோம்! நாட் அதர் பீப்பிள்!:)
//சீக்கிரமா சொக்கநாதரைப் பத்தியோ சுந்தர்ராஜரைப் பத்தியோ ஒரு பதிவப் போட்டு//
அதானே பாத்தேன்!
அழகரைப் பத்தி எழுதினா சொக்கனை வச்சி வைணவக் கும்மி கும்முவீங்க!
சொக்கனைப் பத்தி எழுதினா அழகரை வச்சி சைவக் கும்மி கும்முவீங்க!
கும்மியடி மதுரை மக்கா குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி! :)))
//Raghav said...
ReplyDeleteஅரியும் சிவனும் ஒண்ணு.. அறியாதவன் வாயில "அல்வா"//
ஜூப்பரு...
அறியாதவன் வாயிலே மண்ணுக்குப் பதிலா இனிப்பை வைத்துச் சண்டைக்கு உற்சாகமூட்டறீங்கல்ல? உங்கள் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது ராகவ்! :)))))
//ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅருமையான பதிவு. காந்திமதி காத்து வரும் நெல்லைதான் எனக்கும்.//
ஆகா, ராமலக்ஷ்மி யக்கா
நீங்க காந்திமதியா? அப்படியே உங்க மூலமா காந்தியம்மாவுக்கு ஒரு ஹாய் சொல்லிக்கிறேன்! :)
ஆளுயர விளக்குகள் பக்கத்தில் ஜொலிக்க காந்திமதியின் காந்தி அழகோ அழகு!
//பாகத்தையே விட்டுக் கொடுத்து சங்கரநாரயணனாக தன் நாதனைக் காட்சியளிக்க வைத்த கதை//
என்னை மிகவும் யோசிக்க வைத்த/உள்ளம் கவர்ந்த கதையும் கூட! அதான் மெளலி அண்ணா கிட்ட முன்னமே சொல்லியிருந்தேன் இந்தப் பதிவு பற்றி!
//Kailashi said...
ReplyDeleteஅன்னை அப்படியே நேரில் பேசுவது போல உணர்ந்தேன்//
நன்றி கைலாஷி ஐயா!
ஒரு இடத்தில் நம்மை மனசாரப் பொருத்திப் பார்த்துக் கொண்டால், பேதமாவது ஒன்றாவது?
//ஆடி தப்சை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்//
வீடியோ ஒன்னு கிடைச்சிருக்கு! பதிவில் இதோ இடுகிறேன்!
//நன்றி, வாழ்த்துக்கள், வளர்க தங்கள் தொண்டு//
எம்பெருமானைப் பாடும் பணியே பணியாய் அருள்வாய்!
//Raghav said...
ReplyDeleteஎப்புடிலே ரெண்டு பேரு.. சங்க(ர)ன் நீ இருக்க பதுமன் மட்டும் தானே வரவேண்டி கிடக்கு..//
ஓ...அந்தப் பத்மன் நீங்க இல்லீங்களா ராகவ்? :)
//கவிநயா said...
ReplyDeleteஉண்மை! இன்னோருக்கா சொல்லிக்கிறேன். அம்மான்னா அம்மாதான்//
அதே அதே! அடியேன் அம்மா பதே!
நன்றிக்கா!
//அறியாதவன் வாயிலே மண்ணுக்குப் பதிலா இனிப்பை வைத்துச் சண்டைக்கு உற்சாகமூட்டறீங்கல்ல? உங்கள் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது ராகவ்! :)))))//
ReplyDeleteஹி.. ஹி.. இது திருநெல்வேலி அல்வா கிடையாது.. பீம புஷ்டி அல்வா.. சண்டை போடுறதுக்கு மட்டுமுல்ல எதுக்குமே வாயத் திறக்க முடியாது..
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteபின்பு ஏன் தனக்கான வரத்தை சிவனிடம் கேட்டுப் பெற வேண்டும் இந்த சக்தி ? வரம் கொடுக்கும் சக்தியெல்லாம் சிவனிடம் மட்டும் தான் இருக்கா ?//
கோவி அண்ணாவின் கேள்விக்கு நியாயமான விடை தேடுவோமா?
அதுக்கு முன்னாடி அவர் ஆதங்கம் என்னான்னு கொஞ்சம் புரிஞ்சிக்குவோம்! அது ஏன் ஒவ்வொரு முறையும் அம்பாள் மட்டும் தவம் இருக்கணும்? ஈசன் அம்பாளை நோக்கித் தவம் இருக்க மாட்டாரா? இருக்கக் கூடாதா?
இதுக்கு மெளலி அண்ணாவிடம் இருந்து மேலான தகவல்களை எதிர்பார்க்கிறேன்!
//ஓ...அந்தப் பத்மன் நீங்க இல்லீங்களா ராகவ்? :) //
ReplyDeleteஹி ஹி..உங்களோட சண்டை போடற அளவுக்கு நான் பெரிய "ஆன்மீக" பதிவராயிடலே.. நான் பத்மன் இல்ல பக்தன்..
//பதிவுகள் எல்லாம் வராத காலத்திலேயே கூட, பின்னூட்டம் போட்டுக்குவாங்க போல!:)//
ReplyDeleteஹிஹிஹிஹிஹி!!! சொ.செ.சூ??????
//ஸ்ரீதர் நாராயணன் said...
என்னாது? Tins & Tans-ஆ? நாங்க மரியாதைப்பட்ட மதுரைக்காரய்ங்க இல்லாத இடம் ஏதுன்னேன்//
அதானே, நம்மளை விட்டுப்புட்டுப் பேச முடியுமான்னேன்!!! வரிஞ்சு கட்டிக்கிட்டுக் கிளம்பிருவோமில்ல????
அட, அட, ஸ்ரீதர் நாராயணன், இத்தனை நாள் தெரியாமப் போச்சே!!
//மண் மணக்கும் மதுரையிலதான் பெண்ணீயத்தின் எழுச்சியைப் பார்க்கலாம். மனம் கவரும் மீனாட்சியைப் பார்க்கலாம். //
எழுதும்போதே கை மணக்குதே!!!
//சீக்கிரமா சொக்கநாதரைப் பத்தியோ சுந்தர்ராஜரைப் பத்தியோ ஒரு பதிவப் போட்டு உங்க நல்லப் பெயரைக் காப்பாதிக்குங்கப்பு. அம்புட்டுதேன் சொல்வேன். //
அது!!!!!!!!!!
//வீண் ஜம்பம் பேசும் தஞ்சாவூர்க்காரயங்களையும் விட்டுத் தள்ளூங்கப்பு//
ReplyDeleteஹிஹிஹி, இதுக்குப் பேச முடியாது, புகுந்த இடம், அதனாலே ஜூட்!!!!!!!
//ஸ்ரீதர் நாராயணன் said...
ReplyDeleteவெட்டி வீறாப்பு பேசும் தின்னவேலிக்காரய்ங்களையும், வீண் ஜம்பம் பேசும் தஞ்சாவூர்க்காரயங்களையும் விட்டுத் தள்ளூங்கப்பு.
//
எலேய்... எல்லாரும் அருவாவ எடுத்துட்டு ஓடி வாங்கலே... :))
அன்னை தபஸ் இருந்து இறைவனை அடைவது என்பது அன்னைக்கு முக்கியத்துவம் இல்லை என்று ஆகி விடாது. யாராக இருந்தாலும், இந்த பூமியில் வந்து தோன்றி விட்டால், பூமிக்கு என்று உள்ள சில நியமங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். அந்த வகையிலேயே அன்னை, உலகுக்கே அன்னையாக இருந்தும், அவளும் கணவனுக்கு மரியாதை கொடுப்பவள் என்று அனைவருக்கும் உணர்த்தவே தவமும் இருக்கின்றாள், ஈசனிடம் வரமும் கேட்கின்றாள்.
ReplyDeleteநம் வீட்டிலேயே நாம் அப்பாவை விட, அம்மாவிடம் தான் சலுகை, வேண்டுகோள், ஏதாவது அப்பாவிடம் வேலை ஆகவேண்டும் எனில் அம்மா மூலமாய்க் கேட்பவர் எத்தனை பேர் உண்டு?? அதேதான் இங்கேயும், இந்தப்பூவுலக மக்கள் அனைவருக்காக வேண்டி, தன்னில் ஒரு அங்கமான ஈசனிடம் தான் உறைந்திருப்பது உண்மையே எனினும், தான் சக்தி சொரூபமே என்றாலும், அன்னை தனியாக வடிவெடுத்துத் தன் அண்ணன் என்னும் மாயக் கண்ணனைத் தன் கணவனுக்குச் சரிபாதியாக்குகின்றாள். இது அன்னையின் மாயாசக்தியே ஆகும். நாராயணனும், அவனே! நாராயணியும் அவளே, சிவன் கோயில் எல்லாவற்றிலுமே, சிவனின் கர்ப்பக் கிரஹத்தில், மூலஸ்தானத்துக்கு நேர் பின்னே கட்டாயமாய் விஷ்ணு இடம் பெறுவார். வேண்டும்போது விஷ்ணுவாகவும், வேண்டும்போது சக்தியாகவும் இடம் பெறுவது ஒருவரே என்றும், அனைத்திலும் உறைந்திருக்கும் சக்தியே என்றும் புரிந்தால், இது ஆணாதிக்கம் என்னும் கேள்வியோ, சிவனைக் கேட்டுத் தான் சக்தியே பெறவேண்டி இருக்கின்றது என்ற கேள்வியோ பிறக்காது. வைஷ்ணவனும், அவளே! வைஷ்ணவியும் அவனே! சிவ, சக்தி சொரூபமே அவர்கள் இருவரும் தான். லாஜிகலாய் யோசித்தால் புரியாது. அனுபவமும், உணர்வுகளுமே புரியவைக்கும், கட்டாயமாய்ப் புரியும்!
@கோவி அண்ணா
ReplyDeleteஆண் தெய்வங்களை நோக்கித் தான் ஒவ்வொரு முறையும் பெண் தெய்வங்கள் தவம் இருப்பது என்பது மேலோட்டமான புரிதல்.
பார்வதியை நோக்கி ஈசன் செய்த தவம் பற்றி மெளலி அண்ணா பதிலுக்கு வெயிட் மாடுவோம்!
அடியேன் அறிந்ததை மட்டும் தற்சமயம் பகிர்ந்து கொள்கிறேன்!
கொல்லாபுரத்தில் இலக்குமி தனியாக வந்துவிட, சேஷாச்சலம் என்னும் திருமலையில், பெருமாள் தன் மனைவியை நோக்கித் தவம் இயற்றுகிறான். அவளோ அவனை நெடுநாள் காக்க வைத்துப் பின்னரே வரம் தருகிறாள்!
என்ன வரமா? குரு பரம்பரைக்குத் தோற்றமாய் தானே மண்ணில் தலைமை ஏற்பதாக வரம் தருகிறாள்!
அதன்படியே சேனை முதலியாருக்குக் குருவாய் இருந்து கற்பித்துக் கொடுக்கிறாள்! முதலியாருக்குப் பின் வந்த மொத்த குரு பரம்பரையும், தன் ஆணி வேரை, இலக்குமியில் கொண்டு தான் முடிக்கிறது!
எனவே பெண்கள் தவம் செய்யவே பிறந்தவர்கள், ஆண்கள் வரம் கொடுக்கவே பிறந்தவர்கள் என்ற மனப்பான்மையை நம் தத்துவங்கள் காட்டவில்லை! இதை மட்டும் அடியேனால் துணிபுடன் சொல்ல முடியும்!
நான் எடுத்துக் காட்டியது நான் அறிந்த வைணவத்தில் இருந்து!
சைவத்தில் மெளலி அண்ணா வந்து சொல்லட்டும்!
வள்ளி மட்டும் தான் தவம் செய்ய வேண்டுமா? முருகனுக்கு அவள் வரம் கொடுத்தாளா என்பதை ராகவன் வந்து விளக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்!
ஆனால் வள்ளியின் காலை முருகன் பற்றுவதாக அருணகிரியார் பல இடங்களில் பாடுவார் என்பதை மட்டும் அடியேன் சொல்லிக் கொள்கிறேன்!
நான் மேலே சொன்ன விளக்கங்கள் தெய்வங்களிடையே ஆண்-பெண் தாழ்ச்சி உயர்ச்சி இல்லை என்பது தான்!
ReplyDeleteஆனால் மனிதர்கள் என்று வரும் போது, மதத்தில் உள்ள ஆண்கள் பெண்ணுரிமையை நடைமுறையில் முழுமையாகப் பேணவில்லை என்பதையும் இங்கே ஓப்பனாகச் சொல்லிக் கொள்கிறேன்!
உண்மையைச் சொல்ல அடியேன் வெட்கப்பட்டது கிடையாது!
இது குறித்து, தேவாரப் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதி இதோ:
//
பெண்ணுக்கு நுட்பமான உரிமைகள் பலவற்றைச் சமயம் கொடுத்துள்ளது தான்!
ஆனால் அதுவே இன்று "பெண்ணை மட்டும் ஏன் புனிதப் படுத்துகிறீர்கள்?-தேவையில்லை அப்படி ஒரு புனிதம்" என்று வேறு கேள்வியாய் மாறி விட்டது! :)
புனிதம் என்றவுடன் புனிதவதி நினைவுக்கு வருகிறார்கள்! காரைக்கால் அம்மையாரை அவர் புனிதமாக உள்ளார் என்று தானே அவர் கணவன் ஒதுக்கி வைத்தான்?
* ஏன் இல்லறத்தில் புனிதம் கூடாதா?
* சமயம் பேசும் பெண், கணவனோடு இல்லறம் பேண முடியாதா?
* சமயம் பேசிய ஆண்களோடு மட்டும், பெண்கள் இல்லறம் பேணி உள்ளார்களே?
- இவை எல்லாம் நியாயமான கேள்விகளே! :)
சமயங்கள் தங்களையும் சமைத்துக் கொள்ள வேண்டும்! இது போன்ற பிரச்சனைகள் வரும் போது, தெளிவாகத் தீர்த்து வைக்க வேண்டும்!
//
மீண்டும் @கோவி அண்ணா
ReplyDeleteஉங்கள் கேள்விக்கு, "இந்தப் பதிவை மட்டும் ஒட்டிய" விடை இது தான்!
அன்னையின் உடலில் பாதி, சிவன் இல்லை!
சிவனின் உடலில் பாதி, தான் அன்னை!
அந்த உடலில் இன்னொருவர் தோன்ற வேண்டும் என்றால் அந்த உடல்காரரைக் கேட்டுக் கொள்வது தானே முறை! அதான் அன்னை ஐயனைக் கேட்க வேண்டி வந்தது!
மேலும் என்ன தான் அண்ணனாக இருந்தாலும்,
அன்னையின் உடலில் நாரணன் தோன்றுவது உலக வழக்குக்கு நன்றாக இருக்காது! ஈசனின் உடலில் தான் தோன்ற வேண்டும்! அதனால் தான் எந்த உடல்காரரோ, அந்த உடல்காரரை நோக்கித் தவம்! As simple as that! :)
//VSK said...
ReplyDeleteஎங்க வீட்டு மாடியில ஆளுக்கு நாலணா கட்டணம்!!
மேலே சென்று பாக்கறதுக்கு!
நான் தான் கட்டண வசூலிப்பாளன்!//
ஹா ஹா! விளையும் பயிர் முளையிலேயே கட்டணம் வசூலிக்கும் :))
ஆசிரமம் ஆரம்பிச்சிரலாம்! வெட்டியும் சொல்லிக்கிட்டே இருக்காரு! கோவிக்கு என்ன ரோல்? :)
//அறியும் சிவனும் ஒண்ணு!//
றியா? ரியா? :))
அறிந்தால் சிவன் ஒருவன்-ன்னு சொல்லி நோ சமாளிப்பிகேசன் ப்ளீஸ்! :)
//இப்போ கோவியார் கேள்விக்கு!
வலக்கை அருளும் கை!
இடக்கை அணைக்கும் கை.
அதான் அம்மா ஐயா கிட்ட வரம் கேட்டாங்க!//
உங்க விளக்கம் அடியேனுக்குப் புரிகிறது SK!
ஆனா, இடக்கைன்னு சொன்னா இடக்கர் தான் பண்ணுவாரு கோவி அண்ணா! :))
//மதுரையம்பதி said...
ReplyDeleteநல்ல பதிவு...//
அம்பாள் திவ்ய தரிசனம் ஆச்சா மெளலி அண்ணா!
எங்க கோமதியம்மன் உற்சவ அலங்காரம் எப்படி இருக்கு?
//அழகான, கோர்வையால எண்ணங்கள் :)//
எல்லாம் கோ-மதி அருள்!:)
//ஆஹா, ஸ்ரீதரண்ணா, நீங்க நம்மவிங்களா? :)//
ஆரம்பிச்சிட்டாங்கப்பா! ஆரம்பிச்சிட்டாங்க! :))
//விஜய் said...
ReplyDeleteஆனால், ஆடித்தபசு விழாவையும் பூஜைகளையும் எங்கள் கண் முன்னே கொண்டுவந்ததற்கு கோடி நன்றி//
அடியார் இன்புற்று இருப்பதுவே இன்பம்!
Dankees விஜய் :)
ஒரு முறை ஆடித் தபசுக்குப் போய்த் தான் வாருங்கள்!
சென்னையில் இருந்து நான் ஒரு-கா சென்று சேவித்துள்ளேன்!
அப்பா LTC போட்டு எங்களை அழைத்து சென்ற பசுமையான ஞாபகம்! அம்பாளின் ஆக்ஞா சக்கரத்தில் உட்கார்ந்து விட்டு வரவே மாட்டேன்-ன்னு அடம் புடிச்சேனாம்! அது என்ன ஸோஃபாவா என்று என்னை ஒரு போடு போட்டு இழுத்து வந்தாங்க போல! :)))
//cheena (சீனா) said...
ReplyDeleteநான் பிறந்த ஊர் தஞ்சை - டான்ஸ்//
:)
//என்னை சங்கரன் சங்கர் என அன்புடன் அழைத்தார்கள். இப்பெயரினைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் -எனது வீட்டின் அருகிலேயே ( தஞ்சாவூர் - மேல வீதி ) சங்கர நாராயணர் கோவில் இருந்ததுதான்//
ஜூப்பரு!
சீனா ஐயா நீங்களும் சங்கரன், நானும் சங்கரனா! எழுதும்போதே கை மணக்குதே!!! :))
//எனது மலரும் நினைவுகளை - தஞ்சையில் கழித்த இளமைப் பருவங்களை அசை போட வைத்தமைக்கு நன்றி//
பதிவாப் போடுங்க சீனா சார்!
தஞ்சை மேல வீதி, பங்காரு காமாட்சி, தஞ்சை அங்காடி எல்லாம் பதிவாப் போடுங்க!
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteமீண்டும் @கோவி அண்ணா
உங்கள் கேள்விக்கு, "இந்தப் பதிவை மட்டும் ஒட்டிய" விடை இது தான்!
அன்னையின் உடலில் பாதி, சிவன் இல்லை!
சிவனின் உடலில் பாதி, தான் அன்னை!//
KRS,
நீங்கள் இதைத்தான் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஹூம் :(
என்னில் பாதி என்றால் என்ன பொருள், நான் வேறு நீ வேறு இல்லை என்பது தானே ? இல்லை அவை வெறும் பொருளற்ற அல்லது தற்காலிக பொருள் கொண்ட சொற்களா ?
நீங்கள் கொடுத்த விளக்கம் உங்களுக்கு நிறைவை அளிக்கிறதா ?
இறைவனுக்கு உருவமோ, பால் (ஆண் / பெண் ) உண்டா ? ஆணை சிவனாகவும், பெண்ணை சக்தியாகவும் உருவ(க) வழிபாடாக வைத்துக் கொண்டாலும், பெரும்பாலன சிவன் கதைகளில் சிவனுக்கு அடக்க முடியாத கோவம் வருவதும், பின்பு சக்தியை சாபம் இடுவதும், பிறகு சக்தி பார்வதி அவரை நோக்கி கடும் தவமிருப்பதும், பிறகு சேருவதும் போன்ற கதைகள் தானே ? இந்த சிவன் கதைகள் அனைத்திலும் அந்த கால குடும்பம் போலவே ஆணாதிக்க சிந்தணையால் பெண்ணை அடிமை போன்றே (குடிகாரன் மனைவியை அடிப்பது போல்) சித்தரித்து இருக்கிறார்கள்.
விஷ்னு கதைகளும் மிகவும் புனிதமாக பெண்ணை வைக்கவில்லை. வெங்கடேசனாக இருமனைவிகளுக்கும் இதயத்தில் இடம் கொடுத்தார் என்று பெருமையாக சொல்லிக் கொண்டாலும், பள்ளி கொண்ட பெருமாளின் காலை தூங்கும் போதும் தொடர்ந்து அமுக்கி விட்டுக் கொண்டே இருப்பது தானே லட்சுமியின் முக்கிய பணி ? திருவிளையாடல் படத்தில் ஏபி நாகராஜன் வசனத்தில்... தட்சன் (தகப்பன்) வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லியும் சென்றதற்கு பார்வதியை சிவன் கோபப்பட்டு எறித்துவிடும் காட்சிக்குப் பிறகு, பார்வதி பேசுவது "பெண்புத்தி பின்புத்தி என்ற பழமொழிக்கு இலக்கணமாக நானே இருந்துவிட்டேன்' என்று சொல்லி சிவனிடம் மன்னிப்பு வேண்டுவிட்டு மீண்டும் சிவனை அடைவாராம். அபத்தமாக இல்லையா ?
சிவனுக்கு மூடு சரியில்லை என்றால் உடலில் சரிபாதியான சக்தியை உடனே வெளியேற்றி இருவர் ஆகி சண்டை போட்டு சாபம் கொடுத்து அனுப்புவாரா ? :) அப்போ அர்தநாரீ என்பது ஒரு தற்காலிக தோற்றம் மட்டும் தான் ? எப்போதும் இருவரும் அப்படி சேர்ந்து இருப்பது இல்லை ?
விடுங்க, அந்த காலத்து நடைமுறையில் அமைக்கப் பட்ட கதைகளை நவீனப்படுத்த வேண்டுமென்றால் விளக்கம் என்ற பெயரில் திணறல் தான் மிச்சம். அல்லது இவையெல்லாம் வெறும் கதைகள் தான் என்று சொல்வதற்கும் மனது வராது :) வேறு என்ன செய்ய முடியும் ? இந்து மதமும் பெண்ணை எப்போதுமே உயர்வாகக் காட்டவில்லை என்பதையாவது ஒப்புக் கொள்ள மனமிருந்தால் சரி.
pathivu super
ReplyDeletekannabiran nm aagi vittathu
neenga sankarankoila?
kovilukku oruthadavai vandu ponga?
koil kodiyavargalin koodarm aagi vittadu. koil unnla 6 idathil neyvillakku(dalda) jodi 10 rs
prasatha stall over attuliyam. china vaasthu saman than vikran
gurukkal aniyayam over.
oru archanikku ticket poga 10 rs
oru family koilukku poganumna minimum 250 rs including entrance venum
aana kudikka kooda nalla thanni kidaiyadu
sari nennga yaaru
nan snr school student 87 -94 batch
//மேலும் என்ன தான் அண்ணனாக இருந்தாலும்,
ReplyDeleteஅன்னையின் உடலில் நாரணன் தோன்றுவது உலக வழக்குக்கு நன்றாக இருக்காது! ஈசனின் உடலில் தான் தோன்ற வேண்டும்! அதனால் தான் எந்த உடல்காரரோ, அந்த உடல்காரரை நோக்கித் தவம்! As simple as that! :)//
மோகினி அவதாரம் - சிவன் கூடல், ஐயப்பன் பிறப்பு இதையெல்லாம் விழுங்கிவிட்டு இப்படியா சொல்வது ?
:)
வீஎஸ்கே ஐயா,
சொல்வது போல் 'உனக்குத்தான் நம்பிக்கை இல்லையே, எதுக்கு இதெல்லாம் ?' என்று அபத்தமாக பதில் சொல்லாதவரை உங்களைப் பாராட்டுகிறேன்.
:)
//என்னலே என்று ஒருவர் பேசினாலே அவர் தின்னலே(Tinneley)-ன்னு ஈசியாச் சொல்லிறலாம்!//
ReplyDeleteஎன்னலே, தின்னலே எகனை மொகனையா இருந்தாலும் அப்படி எல்லாம் எங்க ஊர் பேரைச் சொல்லப்புடாது. அது தின்னேலி. ஆமாம்.
Tin என்றால் Can என்றுதானே பொருள். எதையுமே முடியும் என்று செய்து காட்டும் ஆட்களை அப்படிச் சொல்வதில் தவறே இல்லை.
அது மட்டுமில்லாது டின்னில் இருக்கும் பொருட்கள் கெடாது. அது போல கெடாத மனதைக் கொண்டவர்கள் நம்ம நெல்லை மக்கள் அதனாலவும் அது சரி.
ஒரு வேலையும் செய்யாமல் வெய்யிலில் படுத்துக் கொண்டு tan செய்பவர்கள் பற்றி நான் சொல்ல முடியாது! :))
அப்புறம் இன்னும் ஒரு மேட்டர். நீங்க சொன்ன மாதிரி நெல்லைன்னா ரெண்டு இல்லை மூணு விஷயங்கள் இருக்கு. அல்வா, ஆடித்தபசு மற்றும் அருவா!!
அந்த மூணாவது மேட்டரை பத்தி இங்க சிலவங்களுக்குச் சொல்ல வேண்டியதா இருக்கும் போல இருக்கு!!
//வள்ளி மட்டும் தான் தவம் செய்ய வேண்டுமா? முருகனுக்கு அவள் வரம் கொடுத்தாளா என்பதை ராகவன் வந்து விளக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்!
ReplyDeleteஆனால் வள்ளியின் காலை முருகன் பற்றுவதாக அருணகிரியார் பல இடங்களில் பாடுவார் என்பதை மட்டும் அடியேன் சொல்லிக் கொள்கிறேன்!
//
கே ஆர் எஸ்,
முற்பிறவியில் வள்ளி தெய்வயானை சகோதரிகளாக இருந்தார்களாம், இதில் தெய்வயானை நாள் தோறும் முருகனை நினைப்பவளாம், அதனால் தான் அவள் தேவேந்திரனுக்கு (பிராமண பெண்ணாக) மகளாக பிறந்து எளிதில் அடைந்தாளாம். வள்ளி கார்திகைக்கு மட்டும் தான் முருகனை நினைப்பாளம் அதனால் அவள் குறவர் குலத்தில் பிறந்து தவம் செய்தே முருகனை அடைய முடிந்ததாம். வள்ளியின் காலை ஏன் முருகன் பிடிக்க வேண்டும் ? வள்ளியாக வேஷம் கட்டியது புரட்சி தலைவி ஆயிற்றே ! :) அண்மையில் தான் கந்தன் கருணை படம் சன் தொலைக்காட்சியில் பார்த்தேன். அதில் சொல்லப்பட்ட கதைதான் என்னுடைய இடைச் சொருகல் புரட்சித்தலைவி மட்டுமே :) அந்த படத்தில் புரட்சிதலைவி வள்ளியாகத்தான் நடித்து இருப்பார்.
//Expatguru said...
ReplyDeleteதெரியாத பல தகவல்களை அளித்தமைக்கு நன்றி//
வாங்க Expatguru! அழகான விளக்கம் சொல்லி இருக்கீங்க! நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்!
//சக்தி சிவனிடம் வரம் கேட்பதும் சிவன் அந்த வரத்தை கொடுப்பதும் மனிதர்களாகிய நமக்காக நடத்தப்பட்ட ஒரு திருவிளையாடல் தான்//
நீங்க என்ன தான் சொன்னாலும், ஏன் ஒவ்வொரு முறையும் சிவனே திருவிளையாடல் பண்ணனும்? சக்தி பண்ணக்கூடாதா என்று கேள்வி கட்டாயம் வரும்! ஹா ஹா ஹா:))
வரட்டும்! கேள்விகள் வர வரத் தான் புரிதல்கள் மேம்படும்!
கேள்வியே வேள்வி!
ஸோ, கோவி அண்ணாவும் ஒரு வேள்வி தான் செய்யறாரு! :))
உங்கள் மூலமாக ஒன்று சொல்லிக் கொள்ள விழைகிறேன்! எனக்கும் பெருசா ஒன்னும் தெரியாது!
நண்பர்கள் பதிவுகளில், நான் அறியாத ஒன்றைக் கேள்வியாக் கேட்கும் போது, சிலர் உடனே கோச்சிக்கறாங்க!
நீங்க இப்படிக் கேட்கலாமா? உங்களை ஃபாலோ பண்ணி எல்லாரும் கேள்வி கேப்பாய்ங்க என்று அங்கே ஒரு கேள்வி ஃபோபியா வந்து விடுகிறது!
கேள்விகளை எத்துணை பணிவாகக் கேட்டாலும், அது எதிர்ப்பாளர் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது!
இது துரதிருஷ்டவசமானது! வேறு என்ன சொல்ல! :(
ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்!
அடியேனைப் பொறுத்த வரையில்
* அபத்தமான கேள்வி என்ற ஒன்று இல்லவே இல்லை!
* அடியேன் பதிவிலே கேள்விகளுக்கு என்றும் தடையில்லை!
//அடியேனைப் பொறுத்த வரையில்
ReplyDelete* அபத்தமான கேள்வி என்ற ஒன்று இல்லவே இல்லை!
* அடியேன் பதிவிலே கேள்விகளுக்கு என்றும் தடையில்லை! //
இது போதும் எனக்கு..
//பதிவாப் போடுங்க சீனா சார்!
ReplyDeleteதஞ்சை மேல வீதி, பங்காரு காமாட்சி, தஞ்சை அங்காடி எல்லாம் பதிவாப் போடுங்க! //
http://cheenakay.blogspot.com/2007/08/1.html
பாருங்களேன் - போட்டிருக்கேனே
@Expatguru
ReplyDelete//மனிதன் போல ஒரு உருவத்தை கடவுளுக்கு கொடுத்தால்தான் மனித மனம் இறைவனிடம் லயிக்கும் என்பதால் தானே?//
மிகவும் உண்மை!
//உண்மையில் அந்த பரம்பொருளுக்கு உருவமே கிடையாது.//
இதில் மட்டும் மாறுபடுகிறேன்!
லைட்டாத் திருத்தியும் அமைக்கிறேன்!
***பரம்பொருளுக்கு இது தான் உருவம் என்று கிடையாது***
//நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படியே அந்த இறைவன் தோன்றுவான்//
மிகவும் உண்மை!
யத் பாவம் தத் பவதி!
அவரவர் தமதமது அறிவறி வகைவகை!!
//தனித்தனி தெய்வங்கள் என்று நினைப்பதனால் தான் ஒருவர் கொடுக்கிறார், மற்றொருவர் எடுத்துக்கொள்கிறார் என்ற மாயை உருவாகிறது//
சொல்வது எளிது! ஆனால் மனித மனம் ரொம்பவே விசித்ரமானது! :)
என்ன தான் உபாசனை செய்பவராகட்டும், யோகம் செய்பவராகட்டும்...
கொள்கையை நடைமுறை வாழ்வில் காட்டாதவர் நாத்திகம் பேசி என்ன? ஆத்திகம் பேசி என்ன? பகுத்தறிவு பேசி என்ன? பக்தி பேசி என்ன?
//Raghav said...
ReplyDeleteஹி.. ஹி.. இது திருநெல்வேலி அல்வா கிடையாது.. பீம புஷ்டி அல்வா.. சண்டை போடுறதுக்கு மட்டுமுல்ல எதுக்குமே வாயத் திறக்க முடியாது..//
போட்டுத் தாக்கிருவேன் என்பதைச் சொல்லாம சொல்றீங்களா?
மக்களே உஷார்! ராகவ் என்னும் மல்யுத்த வீரர் பராக் பராக் பராக் :))
//Raghav said...
ReplyDeleteஹி ஹி..உங்களோட சண்டை போடற அளவுக்கு நான் பெரிய "ஆன்மீக" பதிவராயிடலே.. நான் பத்மன் இல்ல பக்தன்..//
பெரிய "ஆன்மீகப்" பதிவனா? நானா?
கிழிஞ்சுது போங்க! நீங்கனாச்சும் பக்தன்! அடியேன் அது கூட கிடையாது! :)
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteஹிஹிஹிஹிஹி!!! சொ.செ.சூ??????//
உண்மையச் சொல்ல அடியேன் எப்பமே அஞ்சறதில்லை கீதாம்மா!
அது தில்லையாகட்டும் இல்ல திருப்பதியாகட்டும்! :))
//அட, அட, ஸ்ரீதர் நாராயணன், இத்தனை நாள் தெரியாமப் போச்சே!!//
மருத செட்டு இங்கேயும் சேக்க ஆரம்பிச்சாச்சா? ஜூப்பரு! :))
//எழுதும்போதே கை மணக்குதே//
பூரிக்கட்டை உருட்டும் போது வந்த வாசனையா, கீதாம்மா? :)
//கீதா சாம்பசிவம் said...
ReplyDelete//வீண் ஜம்பம் பேசும் தஞ்சாவூர்க்காரயங்களையும் விட்டுத் தள்ளூங்கப்பு//
ஹிஹிஹி, இதுக்குப் பேச முடியாது, புகுந்த இடம், அதனாலே ஜூட்!!!!!!!//
அடா அடா அடா!
அம்பி, நோட் திஸ் பாயிண்ட்! கீதாம்மாவை எங்கே மடக்கணும்-னு தெரிஞ்சி வச்சிக்கோங்க! :))
//ஜி said...
ReplyDeleteஎலேய்... எல்லாரும் அருவாவ எடுத்துட்டு ஓடி வாங்கலே... :))//
ஜியா வந்துட்டான்லே...எல்லாரும் ஓடியாங்கலே! ஒரு பய புள்ள வுடாம அத்தனை பேரும் ஓடியாங்கலே!
ஜியா
ஒரு டெக்னிக்கல் டவுட்டு:
திருப்பாச்சி அருவா மதுரைக்குச் சொந்தமா? நெல்லைக்குச் சொந்தமா??
//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteஎன்னலே, தின்னலே எகனை மொகனையா இருந்தாலும் அப்படி எல்லாம் எங்க ஊர் பேரைச் சொல்லப்புடாது. அது தின்னேலி. ஆமாம்.//
சரிங்கண்ணே, தின்னேலியண்ணே! இதுக்கு எதுக்கு அருவா தூக்கறீய? பாதாம் அல்வா தூக்கிய கை அருவா தூக்கலாமாண்ணே? :)
//Tin என்றால் Can என்றுதானே பொருள்//
தோடா!
எல்லா Tinஉம் Can ஆவாது!
எல்லா Canஉம் Tin-ல பண்ணலை!
Tin சிம்பல் Sn; அடாமிக் நம்பரு 50! ஞாபகம் வச்சிக்கோங்க! :))
//அது மட்டுமில்லாது டின்னில் இருக்கும் பொருட்கள் கெடாது//
அண்ணாச்சி Tinned Food-ey வாங்குறதில்லை போல! கேன்-ல வந்த ராட்டன் சால்மன் கேஸ் எக்கச்சக்கம்! கேன் துருப்பிடிக்கும் வேற! :)
//ஒரு வேலையும் செய்யாமல் வெய்யிலில் படுத்துக் கொண்டு tan//
வாய் விட்டுச் சிரித்தேன்!
கொத்ஸ் & ஒன்லி கொத்ஸ்! :))
//அந்த மூணாவது மேட்டரை பத்தி இங்க சிலவங்களுக்குச் சொல்ல வேண்டியதா இருக்கும் போல இருக்கு!!//
ஹா ஹா
ஸ்ரீதர் அண்ணாச்சி, பட்டாம்பூச்சி பறக்குதா? :))
//krishna2607 said...
ReplyDeletepathivu super//
நன்றி கிருஷ்ணா!
//neenga sankarankoila?//
இல்லீங்க! நான் வடார்க்காடு மாவட்டம் வாழைப்பந்தல் கிராமம்! தோஸ்து கூட்டத்துல தின்னேலி மக்கள், கோயம்புத்தூர் மக்கள் தான் சாஸ்தி! :)
//kovilukku oruthadavai vandu ponga//
ரெண்டு மூனு முறை வந்திருக்கேங்க!
//koil kodiyavargalin koodarm aagi vittadu.//
கோயிலும் ஒரு சமூக வளாகம் தானே! எல்லாம் அங்கேயும் இருக்கும்!
குறைந்தபட்சம் நம் வீட்டை நாம நல்லபடியா வச்சிக்கறோம்! அது போல ஆலயத்தைத் திருமடங்கள் வச்சிக்கிடணும்! யாரும் உணர்ந்தாற் போல் தெரியலை! :(
//gurukkal aniyayam over//
:)
//oru family koilukku poganumna minimum 250 rs including entrance venum//
அடக் கொடுமையே! உண்மையாவாச் சொல்றீங்க!
பத்து இருபது ஓக்கே...அர்ச்சனை அதுக்கு இதுக்கு! நீங்க ஸோ கால்டு "சிறப்புத் தரிசனம்" சொல்றீங்களா? சென்னை-ல கூட இம்புட்டு ஆகாதே?
//sari nennga yaaru
nan snr school student 87 -94 batch//
சென்னைக்கு வந்தாச்சுங்க!
பள்ளி, ஊரிலும் சென்னை டான் போஸ்கோவிலும்! அண்ணா பல்கலை 99!
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteயாராக இருந்தாலும், இந்த பூமியில் வந்து தோன்றி விட்டால், பூமிக்கு என்று உள்ள சில நியமங்களைக் கடைப்பிடிக்கவேண்டும்//
கீதாம்மா...
நீங்க கோவியின் கேள்வியைச் சரியா புரிஞ்சிக்கலை போல!
பூமியின் நியமம் காப்பாற்ற அன்னை தவம் இருந்தது பற்றியெல்லாம் அவர் ஒன்னும் சொல்லலை!
அவர் கேள்வி: ஏன் ஒவ்வொரு முறையும் அன்னையே பூமிக்கு வந்து தவம் செய்யணும்? ஈசனும் வந்து அவளை நோக்கிச் செய்யட்டுமே என்பது தான்! :))
//அப்பாவிடம் வேலை ஆகவேண்டும் எனில் அம்மா மூலமாய்க் கேட்பவர் எத்தனை பேர் உண்டு??//
பெண்கள் அம்மாவிடம் வேலையாகணும்னா அப்பா மூலமாகவும் கேட்பார்கள் இல்லையா?
அது போல் அன்னை உமையவளிடம் முறையிட ஏன் இங்கு அப்பா மூலமாகக் கேட்க மாட்டேங்கிறாங்க?-கோவி லாஜிக் இது தான்! :))
தயவு செய்து யாரும் கோச்சிக்காதீங்க! பதில் தர நாம் கடமைப்பட்டுள்ளோம்!
அவர்களுக்குத் தரும் பதிலில் நம் தேடல் இன்னும் கெட்டிப்படும் என்று நம்பினால் ஆத்திக உள்ளத்துக்கு கோபம் வராது! ஆற்றாமை வராது!
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆகா, எங்கூரு நெல்லையைப்பத்தி எழுதி இருக்கீயளோன்னு ஓடி வந்தா நான் பொறந்த ஊர பத்தி எளுதியிருக்கீக. அதுவும் கோமதியம்மனைப்பத்தி. ஆடித்தபசு பாத்தது இல்லை. அம்மா அடிக்கடி சொல்லக்கேள்விதேன். ஆனா நெறையதடவை கோயிலுக்கு போயிருக்கேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவெட்டி - தப்பு மேல் தப்பு பண்ணறயேப்பா!!
ReplyDeleteமுதலில் நான் என்ன கேள்வி கேட்டேன்?
இரண்டாவது பாம்பு பிடிப்பது இருளர்கள், குறவர்கள் இல்லை!
மூன்றாவது முக்கியமானது, பெண்ணீயம் என்று அகராதியில் இல்லாத வார்த்தை எல்லாம் யூஸ் பண்ணற! ஆண் ஈயம் பித்தளை எல்லாம் உண்டு. அதைத் தவிர மத்தது எல்லாம் நார்மல். இது கூடப் புரியாமல் இருப்பதால்தான் நீயே பாஸ்தா, எக் கறி எல்லாம் பண்ணிக்க வேண்டியதா இருக்கு.
நன்றி வணக்கம்!
This comment has been removed by the author.
ReplyDelete//கொத்ஸ் அது உங்க அகராதியில இல்லையா? எங்க அகராதில இருக்கே. நீங்க எந்த அகராதி யூஸ் பண்றீங்க?//
ReplyDeleteவெட்டி, எனக்கு ஒரு சந்தேகம் நிறைய அகராதி படிச்சவங்களைத் தான் அகராதி பிடிச்சவன்னு சொல்றாய்ங்களா ??
ரெண்டு அகராதியும் ஒண்ணா?
Again @ Geethamma
ReplyDelete//சிவன் கோயில் எல்லாவற்றிலுமே, சிவனின் கர்ப்பக் கிரஹத்தில், மூலஸ்தானத்துக்கு நேர் பின்னே கட்டாயமாய் விஷ்ணு இடம் பெறுவார்.//
எப்பமே அப்படி இல்லை கீதாம்மா!
லிங்கோத்பவரும் பல இடங்களில் இடம் பெறுவார்!
//லாஜிகலாய் யோசித்தால் புரியாது. அனுபவமும், உணர்வுகளுமே புரியவைக்கும், கட்டாயமாய்ப் புரியும்!//
100% உங்களை வழிமொழிகிறேன் கீதாம்மா!
//வேண்டும்போது விஷ்ணுவாகவும், வேண்டும்போது சக்தியாகவும் இடம் பெறுவது ஒருவரே என்றும், அனைத்திலும் உறைந்திருக்கும் சக்தியே என்றும் புரிந்தால்//
புரிந்தால்....
புரிந்தால்....
புரிந்தால்....
தில்லையில் பெருமாளைக் கடலில் தூக்கிப் போடும் போது, ஐயோ அம்பாளைக் கடலில் தூக்கிப் போடுகிறோமே என்று நெஞ்சு பதபதைத்து இருக்கும் அல்லவா! பதபதைத்ததா??? :((
அதை இன்றும் தில்லைப் பதிவுகளில் வரிந்து கட்டிக் கொண்டு நியாயம் தானே கற்பிக்கிறோம்? - நாமக்காரப் பசங்க கொடுத்த தொல்லையில் தான் ராஜா கடல்ல போட்டான் என்று!
ஐயோ அம்பாளைக் கடலில் வீசிட்டாங்களே-ன்னு பதிவில் வருத்தப்பட்டோமா? அத்தனை பேர் எடுத்துச் சொல்லி தரவு வைத்த பின்பும்???
வேண்டும் போது விஷ்ணுவாகவும், வேண்டும் போது சக்தியாகவும் இடம் பெறுவது ஒருவரே என்ற கான்செப்ட் அப்போ எங்கே போனது? :(
இப்படிப் பேசுவதற்கு என்னை மன்னிக்கவும்!
அது ஈசனோ, பெருமாளோ, இல்லை வேறு யாரோ, எவரும் அடியேனுக்குப் பொருட்டு அல்ல!
நியாயம் எப்பமே எல்லாருக்கும் ஒன்னு தான்!
அடியேனைப் பொறுத்த வரை சொல்லில் இருக்கும் அந்த நியாயம் செயலில் வர வேண்டும்!
பி.கு: இப்படி எல்லாம் நிலைப்பாடு எடுத்தால் சிலருக்கு என் மீது கோபம் வருகிறது. இழப்புகளும் ஏற்பட்டு உள்ளன! :)
ஆனால் சமயத்துக்கு ஏற்றாற் போல் நியாயம் என் சுபாவத்தில் இல்லையே! என்ன செய்ய! அடியேனை மன்னியுங்கள்!
தர்மோ ரகஷாதி ரக்ஷிதாஹ!
//கொத்ஸ் அது உங்க அகராதியில இல்லையா? எங்க அகராதில இருக்கே. நீங்க எந்த அகராதி யூஸ் பண்றீங்க? //
ReplyDeleteஅது உம்ம அகராதியில் இருக்கிறதுனாலதான் பாஸ்தா எக் கறின்னு எல்லாம் நீர் செய்ய வேண்டியதா இருக்கு அப்படின்னு சொன்ன பின்னாடியும் உமக்கு புரியாம அது இருக்கு இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருந்தீரானால் நான் என்ன செய்ய!!
தங்கமணியே இவர்கள் அப்பாவிகள். பாவம் செய்கிறோம் என்று உணராதவர்கள். இவர்களை மன்னியும் அப்படின்னு வேண்டதான் முடியும். :)
சரி...சீரியஸ்-ஸை கொஞ்ச நேரம் நிப்பாட்டிக்குவோம்!
ReplyDelete//கொத்ஸ் அது உங்க அகராதியில இல்லையா? எங்க அகராதில இருக்கே. நீங்க எந்த அகராதி யூஸ் பண்றீங்க?//
சேச்சே! எங்க கொத்ஸ் ஒன்லி கோனார் நோட்ஸ் தான் யூஸ் பண்ணுவாரு!
தமிழ்-ல அவருக்குப் புடிச்ச ஒரே வார்த்தை விக்கி! புடிக்காத வார்த்தை அகராதி! :)))
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteஎல்லாரும் கேள்வி கேளுங்க கேளுங்கனு அண்ணன் ஃபீல் பண்றாரு//
அடப்பாவி!
கேள்வி கேக்குறது தப்பிலை-ன்னு தானே சொன்னேன்! அவ்வ்வ்
//அதனால இப்ப ஒவ்வொரு கேள்வியா வருது...//
கேள்வி கேக்குறது தப்பில்லை-ன்னு தான் சொன்னேன்
பதில் சொல்லாம இருக்கிறது தப்பு-ன்னு எங்கேயும் சொல்லலப்பா! :))
//இந்த கேள்வி எல்லாம் கேக்கறது நான் இல்லை.. கொத்ஸ், கோவி, ஸ்ரீதர், ராகவ், ஜி.ரா.. இவுங்க எல்லாம் தான்...//
பதிவர் விட்டு பதிவர் பாஞ்சீங்களோ? :)
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteபாம்பு ரெண்டும் அட்டகாசம் பண்ணுச்சுனா, கீரியை விட்டா ரெண்டும் ஹரியாவது சிவனாவது ஓட போகுதுங்க. அதை விட்டுட்டு இது எல்லாம் தேவையா?//
இத நீங்க கோமதி கிட்ட தான் கேக்கணும் மிஷ்டர் கோவிப்-பயல்!
வேர் இஸ் யுவர் கோமதி? :)
//இது பாம்பு பிடித்து தொழில் செய்யும் குறவர்களை அவமானப்படுத்த பாம்பை தெய்வமாக்கி, கயவர்களால் கட்டமைக்கப்பட்ட கதை என்பதை தங்களால் மறுக்க முடியுமா?//
கொத்ஸ் இதுக்குப் பதில் சொல்லியாச்சே!
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//Sathia said...
ReplyDeleteஆகா, எங்கூரு நெல்லையைப்பத்தி எழுதி இருக்கீயளோன்னு ஓடி வந்தா நான் பொறந்த ஊர பத்தி எளுதியிருக்கீக//
வாங்க சத்தியா வாங்க! பொறந்த ஊரு சங்கரன் கோயிலா? சூப்பரு! எத்தினி அல்வா பாக்கெட் சின்ன பய புள்ளையா இருக்கச்சொல்ல வாங்கிச் சாப்புட்டு இருக்கீய?
//ஆடித்தபசு பாத்தது இல்லை//
பதிவில் வீடியோவில் பாருங்க! :)
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteஇது முழுக்க முழுக்க பெண்ணாதிக்க சிந்தனை கொண்ட பதிவு//
நன்றியோ நன்றி!
கொடுத்து வச்சிருக்கணும் இப்படி ஒரு பட்டம் வாங்க! :)
//அது என்ன இளகிய மனம் பெண்களுக்கு மட்டுமே இருக்குற மாதிரியும், ஆண்கள் எல்லாம் காட்டுமிராண்டிங்க மாதிரியும் பதிவு எழுதறீங்க?//
ஆடு-புலி-ஆட்டம்
http://vettipaiyal.blogspot.com
//ஆண் கடவுளுக்கு எல்லாம் கருணையே இல்லையா?//
கருணைக் கிழங்கு எல்லாம் நைவேத்தியம் பண்ணுறது இல்லை பாலாஜி! :)
//இங்கயும் கோமதி அம்மா ஃபீல் பண்ணி தன்னோட பங்கையும் விட்டு கொடுக்கறாங்களாம். ஆம்பிளைங்க எங்கயும் விட்டு கொடுத்ததே இல்லையா?//
அதான் சரணாகதில மொத்தமா மொதல்லயே கொடுத்துடறாங்கல்ல! மிச்சம் மீதி இருந்தாத் தானே விட்டுக் "கொடுப்பதற்கு"? :))
மேற் சொன்ன பதிலைச் சொன்னது உங்க மனசாட்சி :-)
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteஅது என்ன பொண்ணுங்களுக்கு பொறந்த வீட்டு மேல அம்புட்டு பாசம். புருஷனோட உடம்புல பாதி அண்ணனுக்கு கொடுக்கனும்னு தவம் வேற. நல்லா இருக்குது கதை//
இதைக் கேட்பது கோவி.கண்ணனா? இல்லை கோவி.கண்ணியா?? இல்லை கோவிப்பயலா? :))
//"அண்ணா, நீயும் அவரும் ஒண்ணு தானே,...வலப்பக்கத்தை சிவன்னு பெருமாள் (இறைவன்) காட்ற மாதிரி பண்ணியிருக்க வேண்டியது தானே?//
ஹா ஹா ஹா!
இதே கேள்வியை நானும் கேஆரெஸ்ஸைக் கேக்கணும்னு யோசிச்சேன்!
கோவிக்கு சொன்ன பதில்ல
//உலக வழக்குக்கு நன்றாக இருக்காது! ஈசனின் உடலில் தான் தோன்ற வேண்டும்!// -ன்னு சொன்னாருல்ல!
அது என்ன ஈசனின் உடலில் தான் தோன்ற வேண்டும்? பெருமாளின் உடலில் தோன்றக் கூடாதா??-அப்படின்னு இன்னும் கொஞ்ச நேரத்துல நானே கேட்டிருப்பேன்! அதுக்குள்ள எனக்குள் இருந்து நீயே கேட்டுட்ட! ஜூப்பரு!
பதில் சொல்லுலே! எலே கேஆரெஸ்ஸூ! பதில் சொல்லுலே! :))
//பதில் சொல்லுலே! எலே கேஆரெஸ்ஸூ! பதில் சொல்லுலே! :))//
ReplyDeleteஎனக்கு இன்னொரு சந்தேகம்.. இந்த பதிவு எழுதுனவரும் கே.ஆர்.எஸ்ஸும் ஒண்ணா? இல்ல வேற வேறயா.. இல்ல அவருக்குள் இவர் பாதியா? அதுவும் இல்லன்னா ஏதாவது மாயையா?
இந்த வெள்ளிக்கிழமைக்கு நீங்கள் புண்ணியம் கட்டிக் கொண்டீர்கள் ரவி.
ReplyDeleteகோமதியம்மன் ஆடித்தபசுக்கு அம்மா ப்பணம் அனுப்புவார். பூச்சி பொட்டு ஒண்ணும் கண்ல படக்கூடாதுன்னு.
அப்படியே நினைவு படுத்திவிட்டீர்கள் ரொம்ப நன்றிம்மா.
தின்னவேலியை நாங்களும் இன்னும் விடவில்லை. எங்க வயசான மாமா இன்னும் ஏட்டி,ஏலேன்னு தான் அழைப்பார்:)
// கோவி.கண்ணன் said...
ReplyDeleteKRS,
நீங்கள் இதைத்தான் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஹூம் :(//
சொல்லப் போவதை முன்னாடியே எதிர்பார்த்தால் எப்படிண்ணா? அதுக்கு கேள்வியே கேக்க வேணாமே!:))
//என்னில் பாதி என்றால் என்ன பொருள், நான் வேறு நீ வேறு இல்லை என்பது தானே?//
உடலில் சரி பாதி என்பதற்காக, என் நண்பனை நான் தழுவிக் கொண்டால் நீயும் தழுவிக் கொள்-னு சொல்றா மாதிரி இருக்கு! :(
நிஜமாலுமே புரிஞ்சிக்கிட்டு தான் பேசறீங்களா? இல்லை சும்மா.....
அதான் சொன்னேனே! இந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு மட்டும் அன்னை தான் தவம் இருக்கணும்! சிவன் தவம் இருந்து, அம்பாளே உன் உடலில் பாதி நாரணனைக் காட்டு-ன்னு கேக்க முடியாது! என்ன தான் தங்கையானாலும் அவள் உடலில் அண்ணன் ரூபத்தைக் காட்டலாகாது!
இதுக்கு மேல எப்படிண்ணா பச்சையா சொல்லுறது? :(
ஆனா மற்ற விஷயங்களுக்கும் அன்னையே தான் தவம் இருக்கிறாள் என்ற குற்றச்சாட்டுக்கு மெளலி வந்து விடை தரட்டும்-னு தான் சொல்லி இருந்தேனே!
சரி...இவ்வளவு சொல்றீங்களே!
மனைவியை நோக்கி பெருமாள் இருந்த தவத்தைப் பற்றிச் சொன்னேனே! அதுக்கு பேச்சையே காணோம்? சந்தடி சாக்குல மறந்துட்டீங்களா?
சமயம் பெண்ணை உயர்வாகவும் காட்டி இருக்கு என்று தரவுடன் எடுத்துச் சொன்னால் அதை மட்டும் ignore பண்ணும் செலக்டிவ் அம்னீஷியா தானே நீங்களூம் செய்கிறீர்கள்? :(((
சமயம் ஒட்டு மொத்தமாகப் பெண் குலத்தையே தாழ்த்திக் காட்டவில்லை என்பதையாவது ஒப்புக் கொள்ள உங்கள் பகுத்தறிவுக்கும் மனமிருந்தால் சரி!
//நீங்கள் கொடுத்த விளக்கம் உங்களுக்கு நிறைவை அளிக்கிறதா?//
முழுமையான நிறைவைத் தருகிறதே! :)
SK ஐயா தந்ததைக் கட்டுக் கதை என்றீர்கள்! அடியேன் சொன்ன விளக்கத்தை என்ன சொல்லப் போறீங்க?
This comment has been removed by the author.
ReplyDelete//பெரும்பாலன சிவன் கதைகளில் சிவனுக்கு அடக்க முடியாத கோவம் வருவதும், பின்பு சக்தியை சாபம் இடுவதும்//
ReplyDeleteஇதெல்லாம் தமிழ் சினிமா எஃபெக்ட்டு!
சிவாஜி-சாவித்ரி நடிப்பைப் பாத்துட்டு மட்டுமே பேசினா எப்படி?
சிவபெருமானையே ஆசனமாக்கி அவன் மேல் அன்னை உட்கார்ந்து இருக்கும் கோலம் பற்றித் தெரியுமா உங்களுக்கு?
ஈசனுக்கே மந்திர உபதேசம் செய்த ஞானப் பிரசுன்னாம்பிகை பத்தி தெரியுமா உங்களுக்கு?
மெளலி அண்ணா சொன்னா இன்னும் பொருத்தமா இருக்கும் என்று தான் அவரை அழைத்தேன்! அவர் வருவதாய்க் காணோம்! எனக்கு காமாலை-ன்னு வரத் தயங்குறாரு போல! :(
குடிகாரன் பொண்டாட்டிய அடிச்சி காசு புடிங்கிக்கிட்டு போவான்! சிவபெருமான் எதை அடிச்சி, எதைப் புடுங்கிட்டுப் போனாரு?
ஏதோ ஒரு குடிகாரன் ரேஞ்சுக்கு ஈசனைப் பேசறீங்களே! தரவுகளோடு பேசுங்கள்! தராதரம் இல்லாமல் பேசாதீர்கள்!
//விஷ்னு கதைகளும் மிகவும் புனிதமாக பெண்ணை வைக்கவில்லை//
ReplyDeleteவைணவம் என்பதால் அதைப் பயின்ற தைரியத்தில், 100% தரவுகளை என்னால் முன் வைக்க முடியும்! நீங்க சினிமா ஜல்லி எல்லாம் அடிக்காம தூய்மையான பகுத்தறிவு மட்டும் கொண்டு ஒண்டிக்கு ஒண்டி விவாதிக்க வரீங்களா?
//பள்ளி கொண்ட பெருமாளின் காலை தூங்கும் போதும் தொடர்ந்து அமுக்கி விட்டுக் கொண்டே//
இதுக்கு முன்னமே உங்களுக்குப் பதில் சொல்லி இருக்கேன்! இருந்தாலும் பொய்யைப் பத்து வாட்டிச் சொல்லி உண்மையாக்கப் பாக்கறீங்க!
கால் மாட்டில் இருப்பதால் கால் அமுக்கி விடும் பணி அல்ல!
கால் அமுக்கி விடறது எல்லாம் சினிமாவில் கற்பனையில் தான்!
புதுகைத் தென்றல் அக்கா பதிவிலும் சொல்லி இருக்கேன் பாருங்க!
காலடியில் இருப்பது, இறைவன் இறைவியையும் கடந்த உயர்ந்த திருவடிகளை அடியவர்க்கு காட்டிக் கொடுக்கத் தான்!
அன்னை தலைமாட்டில் உட்கார்ந்த வடிவத்தை இன்னிக்கும் வில்லிபுத்தூரில் பார்க்கலாம்! அன்னை எப்படி குரு பரம்பரைக்கே தலைவி ஆனார்கள் என்றும் முன்னரே சொல்லி இருந்தேன்!
நீ காலை மட்டூம் அமுக்கி விடு!
மீதி அறிவுப் பூர்வமான குரு வேலையெல்லாம் நானே அமுக்கி விட்டுக்கறேன்-னு இறைவன் எங்கேயும் சொல்லலை! அன்னையை எங்கும் தடுக்கவும் இல்லை!
அதைத் தரவோடு எடுத்துச் சொன்ன பிறகும், இப்படிப் பொய் வழக்காடுவது பகுத்தறிவுக்கு நீங்கள் செய்யும் துரோகம் என்பதை மறந்து விடாதீர்கள்! :(
//விளக்கம் என்ற பெயரில் திணறல் தான் மிச்சம்//
திணறல் உங்களுக்கா? எனக்கா??
I have answered:
The Wife is the Chief Guru for the whole lineagae of gurus in the whole world!
What is your say on this? No diversion plz! Can you give me an honest answer directly on this?
//இவையெல்லாம் வெறும் கதைகள் தான் என்று சொல்வதற்கும் மனது வராது :)//
பொய்யைப் பொய் என்று சொல்லும் அறத் துணிவு எனக்கு உண்டு! அதான் தத்துவத்தில் உள்ளது நடைமுறையில் இல்லை! காரைக்கால் அம்மையாருக்கு ஒரு நீதி, ஆண்களுக்கு ஒரு நீதி என்று ஓப்பனாக என்னால் சொல்ல முடிந்தது!
அதே போல் குரு பரம்பரையின் தலைவியாக ஒரு பெண்ணை முன்னிறுத்தியது சமயம் செய்த நல்ல செயல் தான் என்பதை உங்களால் ஓப்பனாகச் சொல்ல முடியுமா? அதற்கான அறத் துணிவு இருக்கா உம்மிடம்??
This comment has been removed by the author.
ReplyDelete//வள்ளி கார்திகைக்கு மட்டும் தான் முருகனை நினைப்பாளம் அதனால் அவள் குறவர் குலத்தில் பிறந்து தவம் செய்தே முருகனை அடைய முடிந்ததாம்//
ReplyDeleteஇதுக்கு மட்டும் நீங்க தமிழிலோ, வடமொழியிலோ தரவு கொடுங்களேன், பாத்துருவோம், நீங்களா நானான்னு!
எங்க ராகவன் மட்டும் இப்ப இங்க இருந்தாரு, நீங்க அம்புட்டு தான்!
This comment has been removed by the author.
ReplyDelete@வெட்டி & எலே வெண்ணை கேஆரெஸ்ஸூ
ReplyDelete//அது என்ன ஈசனின் உடலில் தான் தோன்ற வேண்டும்? பெருமாளின் உடலில் தோன்றக் கூடாதா??//
* ஒவ்வொரு விஸ்வ ரூபத்திலும் பெருமாள், ஈசனைத் தன் உடலில் காட்டி அருள்வதையும்
* முனியே நான்முகனே முக்கண்ணப்பா என்று தோன்றுவதையும்
* பெருமாளின் உடலில் ஈசனே வந்து தோன்றியதையும்...
* இன்றளவும் பெருமாள், தன் நெற்றியிலே ஊரறிய உலகறிய திருநீறு என்னும் விபூதியை பூசிக் கொள்வதையும்
தனிப் பதிவில் சொல்கிறேன்! அப்போது தெரிந்துவிடும் நியாயஸ்தர்களின் நியாயம்!
This comment has been removed by the author.
ReplyDelete//G.Ragavan said...
ReplyDeleteஎடுத்துக்காட்டா ஒங்க நெஞ்சுல (அல்லது ஒடம்புல பாதீல) அவருக்கு எடங்குடுங்கன்னு கேட்டிருக்கலாம்ல//
அதைத் தான் வெட்டி கேட்டு, பின்னர் நானே கூட கேட்டிருக்கேனே!
பின்னூட்டத்தைப் பாக்கலீங்களா இல்லை படிக்கலீங்களா? :)
//சமத்துவம்னா எப்பவுமே ஒரு பக்கமிருந்தே வருது//
சமத்துவம் எல்லாம் ரெண்டு பக்கம் இருந்தும் சேர்ந்து தான் வருது!
இதற்கு முன்பே குமரனும் பதிவிட்டிருந்தார் - நம்மாழ்வாரின் பெருமானும் அருணகிரிநாதரின் பெருமாளும்...என்று!
http://koodal1.blogspot.com/2007/11/blog-post.html
ஆனால் கண்ணையும் காதையும் மூடிக் கொள்வதோடு மட்டுமில்லாமல்,
இதயத்தையும் இழுத்துப் பூட்டிக் கொண்டால்?...
எந்தப் பக்கத்திலிருந்து எது வருதுன்னு தெரிய வாய்ப்பில்லை தான்! :(
பெருமாள் திருமேனியில் ஈசன் உறைவதும், பெருமாள் திருநெற்றியில் திருநீறு துலங்குவதும், அந்த விழாவின் போது, தனிப் பதிவில் சொல்கிறேன்!
//திருந்தேலோர் எம்பாவாய்//
நன்றி! திருந்திக் கொள்கிறேன்!
திருத்தம் உடையது தான் தேடலும், வாழ்வும்! திருத்திக் கொள்வதில் அடியேனுக்குத் தயக்கமோ, வெட்கமோ, போலி கெளரவமோ என்றுமே இருந்ததில்லை!
பாழ் வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே!
//G.Ragavan said...
ReplyDeleteரொம்பச் சரி. இன்னமும் விஷ்ணு கோயில்கள்ள...பெருமாள்னும் சொல்லலாம். ஆனா அவர் ஒருத்தர் மட்டும் பெருமாள் இல்லையே//
இது என்ன ஆதிக்கச் சிந்தனை?-புதசெவி!
ஸ்கந்தன்-னும் சொல்லலாம்!
அவர் ஒருத்தர் மட்டும் முருகன்-அழகன் இல்லையே - இப்படித் திருப்பிச் சொல்ல எம்புட்டு நேரம் ஆகும்? ஆனால் அப்படிச் சொல்ல மாட்டேன்! :((
//இன்னும் விஷ்ணு கோயில்கள்ள மருமகனை உள்ள விடாம இருக்கோமேன்னு யாருக்காச்சும் நெஞ்சு பதைபதைக்குதா?//
கொஞ்சம் அறிவோட பேசணும்!
எதோட எதை முடிச்சிப் போடறீங்க?
1. யார் மருகனை உள்ளே விட மாட்டோம்-ன்னு சொன்னாங்க? மருகன் கூடவே கூடாது-ன்னு சொன்னது யாரு?
2. அப்படியும் உள்ளே வந்த மருகனை, கூடவே கூடாது என்று வேரொடு பெயர்த்தெடுத்து யார் கடலில் வீசினாங்க?
இது ரெண்டுத்துக்கும் தரவுகளோடு பதில் சொல்லுங்க! மீதியைப் பாத்துக்கலாம்!
//அதை இன்றும் தில்லைப் பதிவுகளில் வரிந்து கட்டிக் கொண்டு நியாயம் தானே கற்பிக்கிறோம்?//
ஆலய அமைதிக்காக மருகனை அப்புறப்படுத்தியது சரியே! - என்று எந்தப் பதிவில் சொல்லி உள்ளேன்? வரிந்து கட்டிக் கொண்டு நியாயம் கற்பித்தேன்?
நேர்மைத் திறம் இருப்பின், சுட்டியோடு தாருங்களேன் பார்ப்போம்! I dare you to give this link & reference!
//அத்தனை பேர் எடுத்துச் சொல்லி வரவு கேட்ட பின்பும்???//
எத்தனை பேர், எத்தனை புலவர், எத்தனை பெருமக்கள் வரவு கேட்டார்கள்! சொல்ல முடியுமா? இங்கே சபையில் வைக்க முடியுமா?
//அது பெருமாளோ (முருகனோ), பெருமாளோ (விஷ்ணுவோ)//
அது முருகனோ (அழகரோ), முருகனோ (கந்தனோ),
இல்லை வேறு யாரோ,
எவரும் அடியேனுக்குப் பொருட்டு அல்ல!
//அறம் செய விரும்பு!//
சாதி தாழ்த்தாமல், தமிழ் தாழ்த்தாமல், அறங்கள் பேச்சளவில் இல்லாமல், செயல் அளவில் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கு!
மற்றவரை அறம் செய்யச் சொல்லும் முன்னர்....
தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் ஆலயத்தில் ஆறு காலமும் தமிழ் இடையறாது ஒலிக்க ஏற்பாடு செய்து விட்டு, பின்னர் அடுத்தவனைச் "செய்" என்று கட்டளையிடலாம்!
//அறம் செய விரும்பு!//
இது எனக்குத் தனிப்பட்ட முறையில் சொன்னீர்களே ஆனால்...
அடியேன் இங்கு வெறும் விளக்கங்களும் பொருளுரையும் பொழிப்புரையும் மட்டுமே போட்டுக் கொண்டு இருக்கவில்லை!
செயலில் நிலைபடுத்தும் அறங்களைத் தனிப்பட்ட முறையில் செய்து கொண்டு இருப்பதைச் சபையில் வைக்க வேண்டும் என்றால் சொல்லுங்கள்! வைத்து விடலாம்!
//G.Ragavan said...
ReplyDeleteபழந்தமிழர்கள் கிட்ட ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்திருந்து...அதை எதாச்சும் ஒரு மன்னன் ஆதரிக்க விரும்பி//
:(((((((((((((((((((((((((((((
விடுதலைத் திருநாள் இன்று!
ReplyDeleteவேற்றுமையில் ஒற்றுமை-ன்னு சொல்லுவாங்க!
இது ஒற்றுமைக்காக எழுதிய பதிவு!
ஆனா இப்போ "ஒற்றுமையிலும் வேற்றுமை"-ன்னு ஆகிப் போச்சு!
ஆடித் தபசு நிறைவேறவில்லை!
பதிவின் நோக்கம் நிறைவேறவில்லை!
எனவே இந்தப் பதிவை அழித்து விடலாம் என்று இருக்கிறேன்!
(இப்போ மணி அதிகாலை 3:02!
உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பளித்து தான் இது வரை பதிலும் சொல்லிக் கொண்டிருந்தேன்!
கோவி அண்ணா சிவபெருமானைப் பற்றிச் சொன்ன போதும், அடியேன் வரிந்து கட்டிக்கொண்டு, ஈசனின் அருளை எடுத்து முன் வைத்தேன்!
ச்சே...எனக்குச் சமத்துவம்னா எப்பவுமே ஒரு பக்கம் இருந்து தான் வருமல்லவா?
காலை எழுந்ததும் உங்களில் யாரேனும் ஒருவரின் கருத்தைப் பார்த்து விட்டு, இந்த ஆடித் தபசு பதிவை அழித்து விடுகிறேன்!
"திருந்தேலோர் எம்பாவாய்" என்று உறங்கச் செல்கிறேன்! அன்பான நற்சொற்களுக்கு நன்றி!
@வல்லியம்மா
ReplyDeleteமன்னிக்கவும்! வெறுமனே நன்றி-ன்னு மட்டும் இப்போதிக்குச் சொல்லிக்கறேன்! ஆமா பூச்சிப் பொட்டு கடிக்காம இருக்க புற்று நாகாத்தம்மனான கோமதித் தாயிடம் வேண்டிக் கொள்வாங்க!
பின்னூட்ட மட்டுறுத்தலை நீக்கி விட்டேன்! யார் எந்த சொற்களை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்! குட் நைட்!
ReplyDeleteநண்பர்கள் பலர் தனி மடலில் கேட்டுக் கொண்ட படியால்...
ReplyDeleteபதிவை அழிக்காமல், பதிவைக் கோடு மட்டும் போட்டு அடித்து விடுகிறேன்!
ஒற்றுமைக்காக வந்த பதிவில் ஒற்றுமை பற்றிப் பேச மனமில்லை!
ReplyDeleteஈசனை ஆணாதிக்கன்!
முருகப் பெருமானை வள்ளி நினைக்கவில்லை! - என்று எதிர் தரப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள்!
அதைக் கூட கண்டுக்க மனமில்லை! அதை அணைக்கவும் மனமில்லை!
தன் வீட்டில் நெருப்பு வைத்தாலும் பரவாயில்லை, பக்கத்து வீட்டில் நெருப்பு வைக்கப்பட்டுவிட்டதா என்று பார்ப்பதே பான்மை! :(
மாணிக்க வாசகர் கரெக்டாத் தான் சொல்லி இருக்காரு - "பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்????"
ஆடித் தபசும் பதிவின் நோக்கமும் நிறைவேறாதபடியால் தான், பதிவை அடித்து விட்டேன்! வேறு காரணங்கள் இல்லை! அன்பர்கள் அடியேனை மன்னிக்கவும்!
This comment has been removed by the author.
ReplyDelete//வெட்டிப்பயல் said...
ReplyDeletemothala intha pathivai paaratavangaluku Mariyathai koduthu.. antha kodu ellathaiyum Neekunga//
பதிவின் தாத்பர்யத்தையும், அம்பாளின் தியாகத்தையும் உணர்ந்து கொள்பவர்களுக்கு மதிப்பு அளித்துத் தான் பதிவை நீக்கவில்லை! பதிவை இப்போதும் வாசிக்க முடியும்!
//Gi.Ra ketta kelviyum enaku thappa padala//
(பொதுவில்) தப்பாகப் படாது தான்!
கேள்வியில் அம்பாளின் தியாகம் முன்னிறுத்தப்பட்டதா?
இல்லை மன்னனைச் சொல்லிப் பின்னிறுத்தப்பட்டதா?
//antha maathiri oru mannan iruntha athukum saathiyam iruku thaan//
இந்த மாதிரி ஒரு அம்பாள் இருந்தா இதுக்கும் சாத்தியம் இருக்கு தான்!
//Publish panniruka thevai illai//
மனிதர்கள் யாரையும் தரம் தாழ்த்தாத எந்தப் பின்னூட்டமும் மட்டுறுத்தப்படமாட்டாது!
//Ambaloada thiyagathuku solra intha pathivuku munnadi naanga ellam Kaal thoosi kooda kidayathunu neenga unarunga....//
அம்பாள் திருவடித் தூசாக இருப்பதில் அடியேனுக்கு என்றென்றும் மகிழ்ச்சியே! அதான் "கோமதித் தாய் திருவடிகளே சரணம்" என்று சொல்லி இருந்தேன்!
உணர்பவன் உணர்ந்து கொண்டேன்!
உணர்பவர்கள் உணர்ந்து கொள்ளுங்கள்!!
//intha kodai neenga neekanum... That's it//
ஈசனை அடித்த கோடுகள் அனைவர் முதுகிலும் விழும்!
அம்பாளை அடித்த கோடுகள் பதிவிலும் விழும்!
That's it!
ஸ்ரீதர் அண்ணாச்சி
ReplyDeleteநீங்க சொன்னது விளையாட்டுக்குத் தான்! எனக்கும் தெரியும்! மன்னிக்கவும்! ஆனால் தெளிவுபடுத்த வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது!
//ஈசனுக்கு பக்கத்துல இறைவன்னுதானே சொல்றீரு. ஈசனுக்கு பக்கத்துல மாலன்னு சொல்ல மனசு வர மாட்டேங்குதே :-)//
ஈசன்-ன்னாலும் இறைவன் தான்!
இறைவன்-ன்னாலும் ஈசன் தான்!
வேங்கடேசன்-ன்னா வேங்கடத்துக்கு ஈசன்! வேங்கடத்துக்கு இறைவன்-ன்னு பொருள்!
ஈ, இ - என்று எதுகை/மோனை ரைமிங்குக்காகச் சொல்லப்பட்டதே ஈசன்-இறைவன்!
மாலைப் பக்கத்தில் வைக்கக் கூடாதே-ன்னு எனக்கு எண்ணமா?
இருவரின் உடைமைகளையும் மழு-சங்கு என்று பக்கத்து பக்கத்தில் வைத்துச் சொல்லி உள்ளேனே!
சங்கர-நாராயணன் கோயில்-ன்னு தானே எழுதி இருக்கேன்!
இருவரும் பக்கத்து பக்கத்தில் இருக்கும் படத்தையும் போட்டுள்ளேனே! படம் கிடைக்க எம்புட்டு கஷ்டம்-ன்னு தெரியுமா? போயித் தேடிப் பாருங்க!
சரி...இதே போல் நானும் யோசிச்சா என்னவாகும்? சாம்பிளுக்கு யோசிக்கட்டுமா?
ReplyDeleteசங்கர-நாராயணன் கோயில் என்று தானே பேரு?
எப்போத்தில் இருந்து நாராயணனை கட் பண்ணி வெறும் "சங்கரன் கோயில்"-ன்னு ஆச்சி? எந்த மன்னன் செஞ்ச சதி?
இப்படி எல்லாம் கேட்கறது ஈசி தான்! ஆனா எனக்கு இப்படி எல்லாம் கேட்க வராது!
**** இதை யார் கேட்பது-ன்னும் ஒரு வரைமுறை இருக்கு! ****
வேறு எந்தத் தூண்டி விடும் கேள்விகளும் என் பதிவில் ஓக்கே தான்! தடை இல்லை! கோவி அண்ணன் என்னென்னமோ எல்லாம் கேட்டாரே! தவறில்லை!
ஆனால் அம்பாள் செய்த தபசுக்கே களங்கம் வராப் போல் பேசுவது - BIG NO!
அதுவும் அதை, "மேன்மை கொள் சைவ நீதி உலகமெலாம் தழைக்க வேண்டும்" என்று பின்னூட்டத்தில் சொல்கிறவர்கள் களங்கமாகப் பேசுவது - BIG BIG NO!
அம்பாள்/அன்னை/அம்மா
அவள் செய்த செயலுக்குக் களங்கம் வராமல் பேச முனைய வேண்டும்!
வாழை ஆடினாலும், முள் ஆடினாலும், சேதம் என்னவோ வாழைக்குத் தான்! :(
ஹரி ஓம்!
கண்ணா... இங்கு நடப்பதெல்லாம் பார்த்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. தெய்வீகக் கதைகள் சில காரணங்களுக்காக ஏற்பட்டன. நமக்கு வேண்டிய அன்பையும் பக்தியையும் பாடத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றைத் தள்ளி விடுவதே உத்தமம். ஏன் எதற்காக யார் அந்தக் கதைகளைக் கட்டினார்கள் என்று யோசிப்பது வேண்டாத வேலை - என்னைப் பொறுத்த வரை. இதுக்காக என்னை யாரும் போட்டுத் தாக்க வேண்டாம்! :) இறைவன் ஒருவனே. அவனை ஒவ்வொருவரும் அவரவர் விரும்பும் வண்ணம் பார்த்துக் கொள்கிறோம். இது யாருக்கும் தெரியாத விஷயமில்லை. அதனால் நல்ல நோக்கத்துடன் இட்ட பதிவை பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள். பின்னூட்டப் பெட்டியை வேண்டுமானால் (இந்த பதிவிற்கு) மூடி விடுங்கள். இறையின் அருள் உங்களுக்கு என்றும் இருக்கும்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete//ஈசனை அடித்த கோடுகள் அனைவர் முதுகிலும் விழும்!
ReplyDeleteஅம்பாளை அடித்த கோடுகள் பதிவிலும் விழும்!//
மெளலி அண்ணா சக்தி உபாசகர்!
இது கோமதித் தாய் பதிவு!
பதிவில் //என்னிக்குமே, குழந்தை குழந்தை தான்! அம்மா அம்மா தான்!// என்ற வரிகளுக்கு மட்டும் கோடு போடாமல் இருந்தேன்!
அவரிடம் தொலைபேசிய போது,
கோடுகளை எப்போது எடுக்கலாம் அண்ணா என்று கேட்டேன்!
இப்போதே எடுத்து விடுங்களேன் என்று சொன்னார்!
அவர் சொன்னபடிக்கு, பதிவில் கோடுகளை எடுத்து விட்டேன்!
சிவ சிவ சங்கரி, சக்தி மகேச்வரி, திருவருள் தருவாய் அம்மா!
//இப்போதே எடுத்து விடுங்களேன் என்று சொன்னார்!
ReplyDeleteஅவர் சொன்னபடிக்கு, பதிவில் கோடுகளை எடுத்து விட்டேன்!//
அம்மாடி, இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு. என் கண்ணில் நீர் வந்து விட்டது.
மௌலி, கண்ணன், இருவருக்கும் நன்றி.
ReplyDeleteஎன் வார்த்தையை ஏற்று அடித்த கோடுகளை நீக்கியதற்கு நன்றி கே.ஆர்.எஸ்...
ReplyDeleteஇந்த கோடுகளை நீக்கியது போல நான் சொன்ன மற்ற சில கருத்துக்களையும் நினைவிருத்திக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன் :)))
//மெளலி அண்ணா சக்தி உபாசகர்! //
இது கொஞ்சம் பெரிய வார்த்தை...உபாசகனாக முயலும் என்று வேணாச் சொல்லலாம்...
சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய எல்லோருக்கும் மேலாக பராசக்தியை வைத்து ஆதிசங்கரர் மூன்று-நாலு பாடல்கள் செளந்தர்ய லஹரியில் பாடியிருக்கார்.
சக்தியின்றி சிவமில்லை என்பது சினிமா வாசகம் மட்டுமல்ல...'சிவோபிசவதாம் யாதி குண்டலின்யா' என்பதில் குண்டலினி சக்தியில்லாத சிவனை சவம் என்றே கூறியிருக்கின்றனர்.
ஆனானப்பட்ட கோவி அண்ணாவே கூட அன்னை மட்டுமே எப்போதும் ஏன் தபசு பண்ணனும்-னு தான் கேட்டாரே தவிர...
ReplyDeleteஇது தபசே இல்ல! எவனோ அரசன் டண்டணக்கா செஞ்சி வந்த எஃபெக்ட்டு-ன்னு அம்மாவின் தபசை இழிவுபடுத்தலை!
அம்மாவையோ, அம்மா ஸ்தானத்தில் இருப்பவர்களையோ யாராவது இப்படிப் பேசினால், பொங்காத நானும் பொங்கும் படி ஆயிற்று!
இப்போ, கொஞ்சம் நீர் அருந்தியதும் பரவாயில்லை! ஓக்கே!
பாலாஜி, கவி அக்கா, மெளலி அண்ணா, ராகவ் - நன்றி!
மெளலி அண்ணா, அடியேன் சொன்ன கருத்துக்களையும் நினைவிருத்திக் கொள்ளுங்கள்!
குணானுபவம் என்னும் தீபம் அறையில் வைப்பது மட்டுமே முக்கியம்!
அது அவருக்கா, இவருக்கா, எதற்கு, ஏன் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை!
This comment has been removed by the author.
ReplyDeleteகேஆர்எஸ்,
ReplyDeleteஎன்னுடைய பின்னூட்டத்தினால் இவ்வாறு நிகழ்ந்துவிட்டது என்று கருதினால் அதற்காக வருத்தப்படுகிறேன். சிவ - விஷ்ணு பேதம் பார்த்து அந்த கேள்வியை நான் கேட்கவில்லை. பெண்ணுரிமை குறித்ததே. உருவ வழிபாடுகள் அவ்வப்போது இருக்கும் கலச்சார அடிப்படையிலானவை, நாட்டார் தெய்வ வழிபாட்டில் இந்த மாற்றம் உடனடியாக தெரியும். எடுத்துக்காட்டு சென்னையில் இருக்கும் 'பாடிகாட் முனீஸ்வரன்' அது போன்று பல கிராமதெய்வங்கள் வீச்சறிவாளை எரிந்துவிட்டு துப்பாக்கிக்கு மாறியுள்ளன. இறைவழிபாடு நம்பிக்கை என்றாலும் வழிபாட்டு முறைகள் வாழும் காலத்திற்கு ஏற்ப மாற்றத்தை ஏற்றுக் கொண்டிருப்பதும் வரவேற்கத்தக்கதே. அப்படி இருப்பது தான் இயற்கையானது, ஈடுபாட்டுடன் அதைச் செய்வதுமாகும். 'பாடிகாட் முனீஸ்வரன்' என்பது அபத்தமென்றால் பழமையும், மூடநம்பிக்கைகள், உருவ வழிபாடு என எல்லாமும் அபத்தமே.
பக்திக்கதைகள் வெறும் கதைகள் என்று சொல்வதற்கு இல்லை, அது இளைய தலைமுறையினருக்கு வழிபாட்டின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். பலதார மணம் என்ற ஒன்றே மக்கள் மனதில் மறைந்துவிட்ட ஒரு காலத்திற்கு நாம் செல்லும் போது வள்ளி - முருகன் - தெய்வயானை சிலையாக வடித்துக் கும்பிடும் பழக்கம் அந்த காலத்தில் கேலிப் பொருளாகிவிடும். நான் பதிவை புரிந்து கொள்ளாமலோ, உங்களை சங்கடப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலோ கேள்வி கேட்கவில்லை. கணவனிடம் மனைவி ஒரு விருப்பத்தைச் சொல்வதைக் கூட கடும் தவம் செய்து, வரமாக அதைக் கேட்டாள் என்று இங்கு சொல்லப்படுபவை காலத்திற்கு ஒவ்வாத கருத்தாக தெரிந்தது, அதற்கு சரியான விளக்கம் என்ற பெயரில் எதைச் சொன்னாலும் அது சப்பைக்கட்டுதானே ? அந்த கால பழக்கவழக்கப் படி பெண்கள் கணவர்களிடம் எதைக் கேட்டாலும் சுவாமி வரம் கொடுப்பது போலவே அதைச் செயற்கரிய செயலாவே சித்தரிக்கப்படும், சாதாரண குடும்பங்களில் அப்படிதானே இருந்தது, கதவிடுக்கில் மறைந்து கொண்டு கணவனிடம் பயந்து பயந்து பேசுவதுதானே பாட்டிகாலத்து நடைமுறை, அவர்காலத்தில் வரம் கேட்டக் கதை அபத்தமே இல்லை. ஏனென்றால் அன்றைய நிலை அப்படி.
நான் நீங்கள் சொல்லவேண்டும் என்று எதிர்பார்த்த பதில்...'இந்த கதை அன்றைய வாழ்வியல் நிலையை பிரதிபலிக்கிறது... கணவனிடம் அனுமதி கேட்டுப் பெரும் நிலையில் தான் அன்றைய பெண்கள் இருந்தார்கள், பெண் தெய்வமாக இருப்பதால் கொடுப்பவர் ஆண் தெய்வமாக இருப்பதால் கேட்பதன் முயற்சி தவமாகவும், கொடுப்பதை வரமாகவும் உயர்த்திக் கூறியிருக்கிறார்கள்' என்று சொல்லுவீர்கள் என எதிர்பார்த்தேன்.
ஓரிறை அல்லாது உருவவழிபாடு என்று வந்துவிட்டால் எனக்கு சிவனும் - விஷ்னுவும் ஒன்று தான். நான் ஒன்றை உயர்வாகவும் மற்றதைத் தாழ்வாகவும் இங்கே சொல்லவில்லை.
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteஇதுக்கு மட்டும் நீங்க தமிழிலோ, வடமொழியிலோ தரவு கொடுங்களேன், பாத்துருவோம், நீங்களா நானான்னு!
எங்க ராகவன் மட்டும் இப்ப இங்க இருந்தாரு, நீங்க அம்புட்டு தான்!
//
கந்தன் கருணைப் படத்தில் நாரதர் சொல்லுவார் அதை ! படத்தைப் பார்த்துட்டு சொல்லுங்க. ஏபிநாகராஜன் வசனம் தான், அவர் பொய் சொல்லி இருக்கலாம் !
:)
வேறொரு நண்பர் சுட்டிக் காட்டியதால்,
ReplyDeleteஇன்னும் ஒரு விளக்கம் சொல்ல வேண்டி வந்திருக்கு! :)
ஓரினச் சேர்க்கை ஒவ்வாமை கொண்டு எல்லாம் வெறுத்துக் கோடிடவில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்!
அது அவரவர் மனோ தர்மம்!
ஒவ்வாமை, காழ்ப்பு எல்லாம் அடியேனுக்கு இல்லை!
அன்னையின் தபசு பொய்யாகி, அதுவும் மேற்சொன்ன காரணத்தால் பொய்யாகிப் போனதே என்ற மெய்யான வருத்தம் தான் கோடிட வைத்தது! வேறெதுவும் இல்லை!
நமது உயிராகிய ஜீவாத்மாயே பரமாத்மா என்பதை உணர்வதே நமது சமயங்களின் லட்சியம்.
ReplyDeleteஅதற்காகவே உடல் என்னும் சடப்பொருளை சிவனாகவும்
ஜீவன் என்னும் உயிர்ப் பொருளை சக்தியாகவும் வைத்து
இவ்வளவு விளையட்டுக்கள், வேடிக்கைகள்
இவ்வண்ணம் சிந்திதுப் பார்த்தால் வாழும் ஒவ்வொரு உயிரினமும் ஒரு சிவசக்தி தான் என்பதை கொஞ்சம் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்பது எனது எண்ணம்.:)
//அவர்களுக்குத் தரும் பதிலில் நம் தேடல் இன்னும் கெட்டிப்படும் என்று நம்பினால் ஆத்திக உள்ளத்துக்கு கோபம் வராது! ஆற்றாமை வராது!//
நிஜம். இவர்களே நமது தூண்டு கோல்.
//சமயங்கள் தங்களையும் சமைத்துக் கொள்ள வேண்டும்!//
சமயங்கள் என்பது நம்மை சமைப்பதுக்குத் (பக்குவப் படுத்துவதற்கு) தான்.
நாம் சமைந்து சத்தியத்தை உணர்வதற்குத் தான்.
சத்தியத்தை உணர்வது நமது சாமர்த்தியத்தைப் பொறுத்தது.
எமக்குப் புரியவில்லை என்பத்ற்காக மேடை கோணல் என்பது சரியா?
சக்தியும் சிவனும் ஒண்ணு இல்லையா ?
கதைகள் என்பது நம்மைக் கட்டி வைப்பத்ற்குதான்.
உயிரும் உடலும் ஒண்ணு கில்லையா?
//சக்தி சிவனிடம் (கெஞ்சி அல்லது உரிமையில்)கேட்டுப் பெறும் நிலையில் தான் இருக்கிறாள்.... என்பதையே சக்தி சிவனிடம் வரம் பெறும் கதைகள் மறைமுக மாக காட்டுகின்றன//
உடலுன்றி உயிரினால் என்ன செய்யமுடியும்.
//அது ஏன் ஒவ்வொரு முறையும் அம்பாள் மட்டும் தவம் இருக்கணும்?//
உயிருக்கு உண்மையை அறியும் வரை உடல் அவசியம்.
///பள்ளி கொண்ட பெருமாளின் காலை தூங்கும் போதும் தொடர்ந்து அமுக்கி விட்டுக் கொண்டே இருப்பது தானே லட்சுமியின் முக்கிய பணி ?//
நீங்கள் பள்ளி கொள்ளும் போது உங்கள் உயிரான சக்தி இதயத்தை அமுக்கி இயங்க பண்ணுகிறதல்லவா!
எமது சத்தியாகிய ஆன்மாவை உணரும் வரை சிவனாகிய உடலை சரணடைந்தே தீர வேண்டும்.__/\__
//எப்போதுமே அருவத்தில் லிங்கமாகக் காட்சி தரும் ஈசன், கருவறையில் உருவமாக காட்சி அளிப்பது மிக மிக விசேடம்!
ReplyDelete//
மதுரையில் 'இம்மையில் நன்மை தருவார் திருக்கொவில்' இருக்கிறது. மேல மாசி வீதியில். தலபுராணத்தின் படி அன்னை மீனாட்சியும் அப்பன் சொக்கனும் இங்கே சிவ பூசை செய்ததாகச் சொல்வார்கள். அதனால் கருவறையில் இலிங்கத் திருமேனியும் உண்டு. பூசிக்கும் பாவனையில் அம்மையப்பர் திருவுருவங்கள் உண்டு.
பெருமாள் (இராமன்) வணங்கிய பெருமாள் (திருவரங்கன்) பெரிய பெருமாள் ஆவது போல் இத்திருக்கோவில் இறைவரைப் பெரிய பெருமான் என்று சொல்ல வேண்டும். :-)
//ஆனால் வள்ளியின் காலை முருகன் பற்றுவதாக அருணகிரியார் பல இடங்களில் பாடுவார் என்பதை மட்டும் அடியேன் சொல்லிக் கொள்கிறேன்!
ReplyDelete//
தேவயானையின் காலைப் பற்றிக் கொண்டு செவ்வேள் கெஞ்சுவதாக சங்க இலக்கியம் சொல்கிறது. முடிந்தால் இந்த வாரம் அதனைப் பற்றி எழுதுகிறேன்.
//தலபுராணத்தின் படி அன்னை மீனாட்சியும் அப்பன் சொக்கனும் இங்கே சிவ பூசை செய்ததாகச் சொல்வார்கள். //
ReplyDeleteஅப்போ சொக்கநாதர் வேறு...சிவலிங்கம் வேறு !
சரியா ?
@கோவி அண்ணா
ReplyDelete//நான் நீங்கள் சொல்லவேண்டும் என்று எதிர்பார்த்த பதில்//
இப்படி எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது! ரொம்ப தப்பு! :)
ஆளுக்கேத்த பதில்-ன்னு ஒன்னும் கிடையாது!
நுட்பமும் உண்மையும் தான் பதிலாக் கொடுக்க முடியும்!
அப்படி எனக்குத் தெரியலீன்னா தெரியாது-ன்னு சொல்லிருவேன்! பதில் கொடுக்க மாட்டேன்! :)
Again @ Govi anna
ReplyDelete//கேட்பதன் முயற்சி தவமாகவும், கொடுப்பதை வரமாகவும் உயர்த்திக் கூறியிருக்கிறார்கள்' என்று சொல்லுவீர்கள் என எதிர்பார்த்தேன்//
இந்த ஜல்லி தானே வேணாங்கிறது!
எத்தினி வாட்டி உம்மைக் கேக்கறது?
இருங்க போல்டு பண்ணறேன்!
I have answered:
The Wife is the Chief Guru for the whole lineagae of gurus in the whole world!
What is your say on this? No diversion plz! Can you give me an honest answer directly on this?
அதே போல் குரு பரம்பரையின் தலைவியாக ஒரு பெண்ணை முன்னிறுத்தியது சமயம் செய்த நல்ல செயல் தான் என்பதை உங்களால் ஓப்பனாகச் சொல்ல முடியுமா?
******************************
- இதுக்கு நீங்க பதில் சொன்னா மட்டுமே, உங்களுக்கு மேற்கொண்டு ரிப்ளை செய்யப்படும்! :)
அது வரை குமரன், பாலாஜி, அனானி, மெளலி அண்ணா....
யாரும் கோவிக்கு ரிப்ளை செய்ய லேது! ஆர்டர்! ஆர்டர்! ஆர்டர்! :))
//பெருமாள் (இராமன்) வணங்கிய பெருமாள் (திருவரங்கன்) பெரிய பெருமாள் //
ReplyDeleteஇதன் படி இராமனும் திருவரங்கனும் வேறு வேறு தானே. :-)
இது கோவி.கண்ணனுக்கு நான் சொல்ற பதில் இல்லை. இரவிசங்கரின் கட்டளையை மீறி பதில் சொல்வேனா என்ன? :-)
//அதே போல் குரு பரம்பரையின் தலைவியாக ஒரு பெண்ணை முன்னிறுத்தியது சமயம் செய்த நல்ல செயல் தான்//
ReplyDeleteஇதுல தயக்கத்திற்கு ஒன்றும் இல்லை KRS,
நீங்க சொல்வது யாருன்னு எனக்கு தெரியாது. இன்றைக்கு நிறைய பெண் சாமியாரிணிகளும் இருக்கிறார்கள். நிறைய ஆன்மிக அமைப்புகள் பெண்களின் தலைமையில் இருக்கிறது. முதன் முதலில் பெளத்த மதத்தில் தான் பிக்குணிகள் எனப்படும் பெண் துறவிகள் ஏற்பட்டனர். இந்து சமயங்கள் பெண்களை ஓரு சில உயர்வாக காட்டி இருப்பதை வைத்து பெண்களை இழிவு படுத்தவே இல்லை என்றெல்லாம் உங்களிடம் எதிர்வாதம் செய்ய மனமில்லை. அதில் உயர்வாக காட்டி இருப்பதைவிட தாழ்வாக சித்தரிப்பதும் அடிமையாக சித்தரிப்பதுமே மிகுதியானவை. நீங்கள் சொல்வது போல் நிலை இருந்திருந்தால் தாய்மைத் தவிர்த்து, தன் தாயைப் தவிர்த்தி பிற பெண்களையும் போற்றத் தொடங்கி இருக்கும் சமூகம். எல்லாம் இந்திய சமயத்தில் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளுங்கள், ஆனால் பெண்களைப் சமமாக மதிப்பதற்கு பாடம் வெளிநாட்டினரிடமும், பெரியாரிடமும் தான் படிக்க வேண்டி இருக்கிறது.
இதுபற்றி இனி விவாதம் செய்வதும் வீன் தான். நீங்க நல்லவரு நல்லதையே பார்க்கிறீர்கள். !
//குமரன் (Kumaran) said...
ReplyDelete//பெருமாள் (இராமன்) வணங்கிய பெருமாள் (திருவரங்கன்) பெரிய பெருமாள் //
இதன் படி இராமனும் திருவரங்கனும் வேறு வேறு தானே. :-)
இது கோவி.கண்ணனுக்கு நான் சொல்ற பதில் இல்லை. இரவிசங்கரின் கட்டளையை மீறி பதில் சொல்வேனா என்ன? :-)
//
தலபுராணத்தின் படி அன்னை மீனாட்சியும் அப்பன் சொக்கனும் இங்கே சிவ பூசை செய்ததாகச் சொல்வார்கள். -
இதைப்படிததும்..."தேவரும் மூவரும் காணாச் சிவபெருமான் பாடல் நினைவுக்கு வந்தது...." மூம்மூர்த்திகள் தேடிக்கிடைக்காத சிவபெருமான் என்ற பொருள். சொக்கநாதர் மும்மூர்த்திகளில் ஒருவர் தானே !
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete//நான் இங்கு இட்ட பின்னூட்டங்களை நீக்கிக் கொள்கிறேன் //
ReplyDeleteஅடடா. ஏற்கனவே ஒருத்தர் நான் படிக்கும் முன்னரே அவருடைய பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறார். நீங்களும் நீக்கிவிடாதீர்கள். நான் படித்து முடித்த பின்னர் சொல்கிறேன். அப்புறம் நீக்கலாம். :-)
Comment Moderation Re-enabled!
ReplyDeleteபின்னூட்ட மட்டுறுத்தலைத் தயக்கமின்றித் தூக்கி எறியும் நாள் எந்நாளோ?
அனானி அவர்களே
நீங்கள் ஒப்பிடும் போது, பன்னாட்டு பண்பாடுகளை மட்டும் ஒப்பிடுங்கள்!
தலைவர்களையோ, தனி மனிதர்களையோ இழுக்க வேண்டாம், ப்ளீஸ்!
கோவி அண்ணா
உணர்ச்சி வசப்படாதீர்கள்! பதிலுக்குப் பதில் என்று வார்த்தை மறு கொட்டல்கள் தான் நடக்கும்! அறிவு சால் கலந்துரையாடல் நடக்காது! பின்னூட்ட மட்டுறுத்தல் மீண்டும் செய்யப்பட்டு விட்டது!
அனானி ஐயா வின் பெரியார் பற்றிய தனிப்பட்ட வாழ்வின் வரிகள் நீக்கப்பட்டு,
ReplyDeleteஇதோ, அவர் பின்னூட்டத்தின் மற்றைய பகுதிகள்
Anonymous said...
//இந்து சமயங்கள் பெண்களை ஓரு சில உயர்வாக காட்டி இருப்பதை வைத்து பெண்களை இழிவு படுத்தவே இல்லை என்றெல்லாம் உங்களிடம் எதிர்வாதம் செய்ய மனமில்லை. அதில் உயர்வாக காட்டி இருப்பதைவிட தாழ்வாக சித்தரிப்பதும் அடிமையாக சித்தரிப்பதுமே மிகுதியானவை. நீங்கள் சொல்வது போல் நிலை இருந்திருந்தால் தாய்மைத் தவிர்த்து, தன் தாயைப் தவிர்த்தி பிற பெண்களையும் போற்றத் தொடங்கி இருக்கும் சமூகம். எல்லாம் இந்திய சமயத்தில் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளுங்கள், ஆனால் பெண்களைப் சமமாக மதிப்பதற்கு பாடம் வெளிநாட்டினரிடமும், பெரியாரிடமும் தான் படிக்க வேண்டி இருக்கிறது.
//
1950-களுக்கு அப்புறம்தான் பிரிட்டனில் பெண்களுக்கு ஓட்டுரிமை வந்தது. கறுப்பினத்தவரை அடிமை வியாபாரம் செய்தவர்களை எதிர்த்துதான் அமெரிக்க சிவில் வார் நிகழ்ந்தது.
பெரியார் 1920-களில் *****
இந்து சமயத்தில் மட்டுமே, மட்டுமே, மட்டுமே 'சக்தி வழிபாடு' ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆபிரகாமிய மதங்களில் பெண்கள் என்றும் தெய்வமாக இருந்ததில்லை. ஈவ்-னால்தான் மனிதன் துன்பமுறும் நிலைக்கு வந்தான் என்பது கிருத்துவம். கன்னி மேரி தேவகுமாரனை சூல் கொண்டதன்மூலம் பெண்ணினம் அதற்கு பிராயசித்தம் தேடிக் கொண்டதாகவும் கதைகள் உண்டு.
கோவி ஐயா கொஞ்சம் படிச்சிட்டு கேள்விகளை முன் வைக்கலாம்.
கோவி, பெரியாரைப் பற்றிய வரிகளை மார்க் செய்து பதில் சொல்லி இருந்தார்!
ReplyDeleteஅந்த மார்க் செய்த பகுதிகளையும் நீக்குகிறேன்! அவரின் மற்ற பின்னூட்ட வரிகள் இதோ!
கோவி.கண்ணன் said...
எனக்கும் ஹார்லிக்ஸ் சியாமளா கதைகள் தெரியும். கேஆர்எஸ் பதிவாச்சேன்னு பார்க்கிறேன்.
பெண்களை எந்த நாட்டிலும் உடன்கட்டை ஏற்றவில்லை. ஒரு மடையானால் மட்டுமே இந்தியாவில் பெண்கள் நிலை உயர்ந்தே இருந்தது என்று வாதிட முடியும். எதுனாலும் எழுதிக் கொள்ளுங்கள், இது இந்துத்துவ பதிவு இல்லை என்பதாலேயே இங்கே பின்னூட்டினேன். இதை இந்துத்துவா பதிவாக கண்ணபிரான் நினைத்து இதுபோன்ற இழிவுகளை அனுமதித்தால் நான் இங்கு இட்ட பின்னூட்டங்களை நீக்கிக் கொள்கிறேன்
//குமரன் (Kumaran) said...
ReplyDelete//நான் இங்கு இட்ட பின்னூட்டங்களை நீக்கிக் கொள்கிறேன் //
அடடா. ஏற்கனவே ஒருத்தர் நான் படிக்கும் முன்னரே அவருடைய பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறார்//
குமரன்
அவர் எதேச்சையாக ஆனால் தவறுதலாக ஒரு கருத்துக்கு உடன்படுவது போல பின்னூட்டி விட்டார்! சிறிது நேரத்துக்கு எல்லாம் தன் Inadvertent Errorஐ உணர்ந்து, மனம் வருத்தப்பட்டு போனார்!
தாமா இப்படிச் சொல்லி விட்டோம் என்ற ஆதங்கத்தில் தான், தன் இதர பின்னூட்டங்களையும் நீக்கி விட்டார்!
அவர் மேல் தவறொன்றும் இல்லை! விட்டு விடுவோம்! :)
//கோவி.கண்ணன் said...
ReplyDelete//அதே போல் குரு பரம்பரையின் தலைவியாக ஒரு பெண்ணை முன்னிறுத்தியது சமயம் செய்த நல்ல செயல் தான்//
இதுல தயக்கத்திற்கு ஒன்றும் இல்லை KRS,
நீங்க சொல்வது யாருன்னு எனக்கு தெரியாது.
//
அடக் கடவுளே!
விடிய விடிய கந்த புராணம் கேட்டுட்டு...
அதான் சொல்லி இருக்கேனே! பார்க்கலையா? படிக்கலையா? கோவி அண்ணா!
நீங்க சொன்ன அந்தக் கால் அமுக்கி விடுவது ஒன்றையே தொழிலாக இருக்கும் இலக்குமி தான் குரு பரம்பரையின் தலைவி!
அப்படி அவிங்களை இருக்கணும்-னு தவம் செஞ்சி வேண்டிக் கிட்டது "ஆணாதிக்க" பெருமாளு சாமி! :))
வரவர பின்னூட்டம் படிக்காமலேயே எதிர்ப் பின்னூட்டம் போடறீங்க! சிங்கை சிருங்கார சபா-வுல சொல்லி, நமீதாவை வுட்டு உங்களுக்கு மந்திரிச்சி வுடச் சொல்லணும்! :))
கோ denotes Sun and Soul
ReplyDeleteமதி denotes Moon and Mind
Mother goddess as Energy rules over Sun and Moon....Soul and Mind that always exist....they co exist in mother goddess name as she help us rule over soul and mind to cross the cycle of sin (life)
Co existence of Sankaran and Narayanan denotes inseparable aspect of body and desire....Aging nature of body that destroys it and craving nature of desire co-exist to move the cycle bound by sin (life)
She is illustrated as one who seeks because our Consciousness centers around body (biological urge) and desire (relative affinity) instead of raising above to level of Soul and Mind
Bow to mother goddess to cross the Ocean of Sin (life)....she provides prosperity to help us raise above cycle of sin rather than have us bound with base urge and relative affinity
Co existence aptly symbolizes relativity of life...at each stage of ones life affinity to others raises and falls...mother, father, friend, lover or spouse, children, grand children.
Our culture prods us to step in with right and symbolically the body that brings desire on left.