Monday, August 04, 2008

ஆடிப்பூரம்: ஆண்டாளைக் கட்டிக்க 108 பேர் போட்டா போட்டி! - 1

கோதை பிறந்த நாள் அன்று ஒரு சுவையான நாடகம் பார்ப்போமா? அவளைக் கல்யாணம் கட்டிக்க, நீ...நான்-ன்னு ஒரே போட்டா போட்டி! யாரு போட்டி போடறாங்க? மொத்தம் 108 பேரு போட்டி போடறாங்க! அவனவன் பெருமையை, அவனவன் அளந்து விடுறான்! ஸ்டைல் பண்ணிக்கிட்டு வந்து நிக்குறான்! ஆனால் இவ யாருக்கு மாலை சூட்டப் போகிறாளோ?...

வாங்க மக்களே வாங்க! இன்னிக்கு Aug-04; ஆடிப் பூரம்! நம் கோதைக்குப் பிறந்த நாள்!
ஹேப்பி பர்த்டே சொல்லிருவமா? கேக்குக்குப் பதில் கொஞ்சம் கெட்டியா சக்கரைப் பொங்கல், Candle-க்குப் பதிலா ஆடி மாச மாவிளக்கு!:)

கோதையைப் பற்றி உங்களுக்குச் சொல்லித் தான் தெரியணும்னு இல்ல! சரியான அடாவடிப் பொண்ணு! பாரதி கண்ட புதுமைப் பொண்ணு! அன்பாகவும் இருப்பா! அலேக்கா தூக்கியும் பந்தாடிடுவா! அவ கேக்குற கேள்விக்கு, ஒரு பய புள்ள முன்னாடி நிக்க முடியாது! ஆமாம்!

* மற்ற பதினோரு பேரும் அவனுக்குள்ளே தாங்கள் ஆழ்ந்தார்கள்! = அவர்கள் ஆழ்வார்கள்! அவன் ஆண்டான்!
* ஆனால் இவ ஒருத்தி மட்டும், தனக்குள்ளே அவனை ஆழ்த்தினாள்! = இவள் ஆண்டாள்! அவன் ஆழ்வான்!
இப்படி ஆண்டவனையே ஆழ்வார் ஆக்கிய பெருமை கோதைக்கு மட்டுமே உண்டு!

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம் செயலை "விஞ்சி நிற்கும்" தன்மையளாய், என்று அதனால் தான் அவளுக்குத் தனிப் பாடல்! வாங்க கதைக்குப் போவோம்!


அன்னிக்கு பெரியாழ்வாருக்கு ஒரே கவலையாப் போச்சு! பொண்ணு இம்புட்டு புத்திசாலியா இருக்கா! தினுசு தினுசா கண்டிஷன் போடுறா? எங்கிட்டு போயி வரன் தேடுவாரு அவரு? பாண்டியன் சபையில் வேதங்களோதி விரைந்து கிழி அறுத்தவர், இன்னிக்கி கதி கலங்கிப் போயி நிக்குறாரு! பாசத்தைக் கொட்டோ கொட்டோ-ன்னு கொட்டி வளர்த்த அப்பன் கதை எல்லாம் இப்படித் தான் ஆகும் போல! :)
உடனே அவருக்கு ஒரு யோசனை தோனுது! அன்று திருவடி பட்டு ஒரு கல்லே பெண்ணானதே! இன்று திருவடி பட்டு, நம் பெண்ணுக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்காதா என்ன? யாரு திருவடி? - நம்மாழ்வார் தான் திருவடி!
பெண்ணைக் கூட்டிக்கிட்டு, திருக்குருகூர் என்னும் நெல்லை மாவட்டம் ஆழ்வார் திருநகரிக்கு ஓடுகிறார்! கூடவே ஆண்டாளின் தோழி அனுக்ரகை!

அங்கே குருகூர் புளியமரத்தின் கீழ், அந்த மாறன் என்னும் குழந்தை உட்கார்ந்து கிட்டு இருக்கு! விட்டு சித்தன் என்னும் பெரியாழ்வாரைக் கண்டதும்........படார் என்று எழுந்து கொண்டது! என்ன இருந்தாலும் "பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆழ்வார்" அல்லவா? அவருக்குப் பின்னாடி தொங்கல் மாலையில், பாவாடைத் தாவணியில், ஒரு அழகு தேவதை!
...இப்போது கையும் கூப்பிக் கொண்டது அந்தக் குழந்தை! ஆண்டாள் என்றால் அப்படி ஒரு பரவசம் அல்லவா?

"நம்மாழ்வாரே! எங்களைப் பார்த்து நீங்கள் கை கூப்பலாமா? தகுமா? நீங்கள் திருப்பாத அம்சம்! திருப் பாதங்கள் கை கூப்பலாமா??
நாங்கள் எல்லாம் பக்திப் பயிர் மட்டுமே வளர்த்தோம்! நீங்கள் அல்லவா நம் வைணவ தர்மத்துக்குத் தத்துவக் கரையைக் கட்டி வைத்தீர்கள்! பயிருக்கு நீர் தடையின்றிக் கிடைக்க அணை கட்டினீர்கள்!"

"ஆகா! தங்கள் புகழ்ச் சொற்களுக்கு அடியேன் தகுதி இல்லை! அடியேன் சிறிய ஞானத்தன்!"

"வேதத்தை மறைத்து வைத்திருந்த கால கட்டம்! அனைவரும் அறியத் தமிழில் ஆக்க வேண்டும் என்று நீங்கள் அல்லவா முடிவு கட்டினீர்கள்!
ஒரே மூச்சாக, திருவாய்மொழி ஆக்கி, வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன், தாங்கள் அல்லவா?"

"ஆழ்வாரே! பெரிய பெருமாள், பெரிய பிராட்டி, பெரிய திருவடி...இவர்கள் வரிசையில் பெரிய-ஆழ்வார்! அடியேன் சிறிய-ஆழ்வார் தான்!
வர வேணும்! வர வேணும்! குருகூரைத் தேடித் தாங்களே வந்த காரணம் என்னவோ? அருகில் யாரது? அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் வந்துதித்த நம் கோதைப் பெண் தானே இவள்?"
"அவளே தான்! ஆனால் அவளால் தான் இன்று வருத்தமும் தீராது, மகிழாதே ரெம்பாவாய்-ன்னு இருக்கிறேன்! ஒருமகள் தன்னை உடையேன்! உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்!
திருமகள் போல் வளர்த்தவளோ, இன்னிக்கி திருமகள் தலைவனைத் தான் கட்டுவேன் என்று அடம் செய்கிறாள்! அழிச்சாட்டியம் செய்கிறாள்! தாயில்லாத பெண்ணாக வேறு போய் விட்டது! திட்டவோ அடிக்கவோ மனம் வரவில்லை!"

"ஆகா...என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்? உங்கள் பாரத்தை என்னிடம் இறக்கி வைத்து விட்டீர்கள் அல்லவா? மனக் கவலை விடுங்கள்!
தனக்குவமை இல்லாதான் ”தாள்” நான்! - சேர்ந்தார்க்கு
மனக்கவலை மாறும் நாள் இன்று தான்!""கோதை! யாரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாய் அம்மா? என்னிடம் சொல்! நான் ஆவன செய்கிறேன்! பாவம்! அப்பாவின் கவலையைப் பார்த்தாய் அல்லவா?"

"இது என்ன கேள்வி மாறனாரே? மானிடர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று எத்தனை முறை தான் சொல்லுவது? பெருமாளை மணம் செய்யத் தான் விரும்புகிறேன்! விரும்புகிறேன்! விரும்புகிறேன்!!"

"அட! அதான் எனக்குத் தெரியுமே! எந்தப் பெருமாளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாய்? அதைச் சொல்! பேரையும் ஊரையும் சொல்லாமல், கட்டி-வை கட்டி-வை என்றால், பாவம் என்ன செய்வார் ஒரு தந்தை? எந்தை, தந்தை, தந்தை தம் மூத்தப்பனாலும் முடியாதே!"

(ஆண்டாளே ஒரு கணம் அரண்டு விட்டாள்! ஏதேது! இந்தப் புளியமரக் குழந்தை நம்மையே மடக்குகிறது?)
"அதெல்லாம் எனக்குத் தெரியாது மாறனாரே! எனக்குப் பெருமாளைத் தான் தெரியும்! அவன் எந்த ஊர், என்ன பேர் என்பதை எல்லாம் தெரிந்து வச்சிக்கிட்டா காதல் செய்ய முடியும்?
வேண்டுமானால் பெருமாளை இங்கு வரவழையுங்கள்! அவர் வந்து சொல்லட்டும், தான் எந்த ஊர்? என்ன பேர்-னு? கோதைக்காக ஊரும் பேரும் சொன்னால் ஒன்னும் குறைந்து விட மாட்டார்!
கோதைத் தமிழ் ஐ-ஐந்தும்-ஐந்தும் அறியாத பெருமாளை வையம் சுமப்பதும் வம்பு! - இப்படிச் சொல்லி, நான் வரச் சொன்னதாக சொல்லுங்க! வருகிறாரா-ன்னு பார்ப்போம்!"

(இப்போது, நம்மாழ்வாரே அரண்டு மிரண்டு போய் விட்டார்! பெருமாளைச் சுமப்பதும் வம்பா? அம்மாடியோவ்! பாவம் பெரியாழ்வார்! இந்தப் பொண்ணை இம்புட்டு நாள் எப்படி வளர்த்தாரோ...தெரியலையே! :)
பளீர் என்று ஒரு யோசனை, ஆழி போல் மின்னுகிறது, ஆழ்வாருக்கு!)

"அனுக்ரகை, இங்கே வா! நீ தானே கோதையின் தோழி? நான் சொல்வது போல் செய்ய வேண்டும்! சரியா? இதோ...ஓலை! இதில் மொத்தம் 108 பேர்களை எழுதி வைத்து இருக்கிறேன்!
அத்தனை பேரும் வீராதி வீரர்கள்! சூராதி சூரர்கள்! அழகு கொஞ்சும் கட்டிளங் காளைகள்! திண் புயத்து மார்பும், திடலெனத் திருமேனியும் கொண்டவர்கள்! மல்லாண்ட திண் தோள் மணி வண்ணர்கள்! அத்தனை பேருக்கும் ஓரே நொடியில் சுயம்வர ஓலை அனுப்பி இருக்கிறேன்!"

"ஆகா, எப்படி அடிகளே?"

"மனத்துளானுக்கு, மன ஓலையே, மண ஓலையாகப் போனது! மனோ வேகத்தின் வேகம் நீ அறியாதவளா? இல்லை கோதை தான் ஹரி-யாதவளா?
இந்தப் பட்டியலில் உள்ள பேர்களை எல்லாம் நீ கூப்பிடக் கூப்பிட,
ஒவ்வொருவராய் கோதையின் முன்னர் வருவார்கள்! கோதைக்கு யாரைப் பிடிச்சிருக்கோ, அவனுக்கு மாலை சூட்டிக் கொள்ளலாம்! சரியா?"

"அப்படியே ஆகட்டும் குருவே!"

"சரி, இந்தா, பட்டியல்! சுட்டிப் பெண், சுயமாக வரன் தேடிக் கொள்ளும் "சுயம்"-வரம் துவங்கட்டும்! மங்கல வாத்தியங்கள் முழங்கட்டும்!"


1) பரமபத நாதன், ஸ்ரீமன் நாராயணன்! திருப் பரமபதம்! பராக்-பராக்-பராக்!
எம்பெருமான்! பரப் பிரம்மம்! உருவம், அருவம், அருவுருவம் எல்லாம் கடந்தவன்! மோட்ச சாம்ராஜ்ஜியத்துக்கு அதிபதி! பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகளும், மூவரும், தேவரும், ஏவரும் துதிக்க நின்றவன்!

அப்பேர்பட்டவன், உருவம் கடந்தவன்.....வந்த வேகத்தில் எங்கே தலை கலைந்து விட்டதோ, என்று மீண்டும் தன்னை அழகு படுத்திக் கொள்கிறான்! :)
பிரம்மனி மானச சஞ்சரரே என்று மனதில் மட்டுமே சஞ்சரிப்பவன், மயிற் பீலியும், சாயக் கொண்டையுமாய்...இன்று ஆண்டாளின் முன்னே...

"வாருங்கள் நாராயணரே! என்னோடு என் தோழிமார்கள், அடியவர்கள் எல்லாம் புகுந்த வீடான பரமபதம் வருவார்கள்! சம்மதம் தானே?"

"அச்சோ..."

"என்ன அச்சோ? வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே-ன்னு சொன்னீங்களாம்? இப்ப என்ன அச்சோ சொல்றீங்க?
புகுந்த ’வீட்டில’ புகுவது மண்ணவர் விதியே இல்லையா?"

"அப்படியல்ல கோதை! எல்லாரும் புகுவார்கள் தான்! ஆனால்...அப்படிப் புக வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்ற வேண்டும்! தோன்றினால் தடையேதும் இல்லை! புகுந்து விடுவார்கள்! ஆனால் அது வரை புக மாட்டார்கள்!

"ஓ! நல்ல சட்ட திட்டம்!...அடியவர்களை ஒதுக்க ஆயிரம் காரணங்கள் சொல்லும் உம்மை நிராகரிக்கிறேன்!...(Rejected...)"

"கோதை....கோதை....நான் என்ன சொல்ல வரேன்னா..."

"Nextttttttttt..."

2) ஒப்பிலி அப்பன் என்னும் உப்பிலியப்பன், திரு விண்ணகரம் பராக்-பராக்-பராக்!
"வேண்டவே வேண்டாம்! என்னால் உப்பில்லாமல் எல்லாம் சாப்பிட முடியாது! நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று தான் பாடினேன்! உப்பிட்டு உண்ணோம்-ன்னு எல்லாம் பாடலை...தூத்துக்குடி தெக்கத்திச் சீமை உப்பைப் பத்தி என்ன நினைச்சுப்புட்டீங்க?
மன்னிக்கவும்...உங்களையும் நிராகரிக்கிறேன்!...(Rejected...)

அடுத்து..."

3) பார்த்தசாரதி என்னும் வேங்கட கிருஷ்ணன், திருவல்லிக்கேணி பராக்-பராக்-பராக்!

(மீசையுள்ள ஆயர் கோன், பயந்து பயந்து வருகிறான்)
"வாருங்கள் பார்த்த சாரதி! நலம் நலம் தானா முல்லை நிலனே? சுகம் சுகம் தானா சின்னக் கண்ணனே?"

"கோதை, என் மனங் கவர்ந்த பேதை! நீ எப்படி இருக்காய் கண்ணே?"

"கண்ணாலம் ஆகும் முன்னர், இந்தக் கண்ணே, மணியே எல்லாம் வேண்டாம்! இந்த வித்தை எல்லாம் அப்பாவி கோபிகைகளோடு மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்! என்னிடம் செல்லாது!"

"அடேயப்பா, என்ன ஒரு பொய்க் கோபம் இந்தக் கள்ளிக்கு?"

"சரி...தேரோட்டிக் கொண்டு ஒன்றும் அறியாத பையனுக்கு ஏதோ கீதை சொன்னீர்களே! வள-வள-ன்னு எத்தனை எத்தனை சுலோகம்? எத்தனை எத்தனை அத்தியாயம்?
போரில் ஒருத்தன் தர்மம் அறியாது குழம்பிப் போய் உள்ளான்! நான் இருக்கேன்டா உனக்கு-ன்னு தைரியம் சொல்லாமல்...அவனை மேலும் குழப்பி...வெட்டியாய் வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டு இருந்தீர்கள்! நீங்க என்ன வெட்டிப் பயலா? :)"

"ஆகா...என்ன கோதை இப்படிச் சொல்லி விட்டாய்? அதான் மாம் ஏகம் சரணம் வ்ரஜ! என்னையே சரணம் எனப் பற்று, உனக்கு வீ்டு அளிக்கிறேன்-ன்னு சொன்னேனே பெண்ணே!"

"ஆமாம் சொன்னீர்கள்! ஆனால் எப்போது சொன்னீர்கள்? ஒருவனை நல்லாக் குழப்பி விட்டுட்டு....கடைசியாகச் சொன்னீர்கள்! அவன் கலங்கிய மண்டையில், நீங்க சொன்னது ஏறுமா?
இதே என்னைப் பாருங்கள்...எடுத்த எடுப்பிலேயே, முதல் பாட்டிலேயே சொல்லி விட்டேன்! - நாராயண*னே* நமக்*கே* பறை தருவான்! இப்படித் தெளிவாகப் பேசவே உமக்குத் தெரியாதா?

உம்மையும் நிராகரிக்கிறேன்!...(Rejected...)"


இப்படியாக ஒவ்வொருவரும் நிராகரிக்கப் பட்டுக் கொண்டே வருகிறார்களே ஒழிய, யாரும் தேறுவதாய்க் காணோம்!
நம்மாழ்வார், பெரியாழ்வாருக்கே கூட உதறல் எடுக்கிறது! என்ன பெண் இவள்?
* குடந்தை சாரங்கபாணி வேண்டாமாம்!
* நாகை அழகியார் வேண்டாமாம்!
* பத்ரீ நாதன் வேண்டாமாம்!
* மலையாளத் திவ்ய தேசப் பெருமாள் ஒருத்தனும் வேண்டாமாம்!

* திருக்குறுங்குடி பெருமாள் வேண்டாமாம்! என்னமா அழகு அந்த வடிவழகிய நம்பி?
* சொந்த ஊர் திருவில்லிபுத்தூர் பெருமாள் கூட வேண்டாமாம்!

அடுத்து யாருப்பா? உம், இனி ஒருத்தரா வந்து பயனில்லை! ரெண்டு ரெண்டு பேரா வாங்க! அச்சோ...தவறு தவறு! நல்ல காரியம்! ஒத்தைப் படையா இல்ல வரணும்! மூனு மூனு பேரா வரச் சொல்லுங்க! அடுத்து.....

* திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்,
* மனம் மயக்கும் மதுரைக் கள்ளழகர்,
* எம்பெருமான், திருவேங்கடமுடையான்
மூனு பேரும் இங்கிட்டு வந்து நில்லுங்க! பார்த்து விடலாம் யார் தேறுகிறீர்கள் என்று!
...
(நாளை தொடரும்....)

39 comments:

 1. மீ த பர்ஷ்டு...சீக்கிரம் தொடர்ச்சிய வெளியிடுங்கள். எங்கள் ரங்கனை பற்றி சொல்லுங்கள். ரங்கராஜன் மணமுடித்த கோதை ஆண்டாளுக்கு பிறந்த நாள் வணக்கங்கள்!

  - மணிகண்டன்

  ReplyDelete
 2. எழிலன்பு2:00 AM, August 04, 2008

  சூடித் தந்த சுடர் கொடியை பற்றிய அருமையான பதிவு கே. ஆர். எஸ். ரெங்கா ரெங்கா என்று அவனையே நினைத்து அவன் ஜோதியிலே கலந்த அந்த கோதையின் கதையை சீக்கிரம் எதிர்பார்க்கின்றோம்...

  எழிலன்பு :-)

  ReplyDelete
 3. அரங்கனைத்தேர்ந்தெடுத்தது மட்டும் வலுவான காரணம் இல்லாட்டி மத்தவங்க சார்பா நான் போர் தொடுப்பேன் ஆமாம்

  ReplyDelete
 4. 108 லையும் அரங்கன் முதலாயிருக்க வேறு காரணம் வேண்டுமோ? அரங்கனிடம் சிபாரிசு செய்வதற்குத்தானே அழகருக்கு நூறு தடா சர்க்கரைப்பொங்கலும் நூறு தடா வெண்ணையும் வேண்டிக்கொண்டது ! அந்த லஞ்சத்தைக்கொடுக்க பெரும்பூதூர் மாமுனி வேறு வரவேண்டியிருந்தது. என்னவோ போங்கள், கோதைக்கு நடந்தது போல் இப்போது யாருக்கு நடக்கும்?
  அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
  ஷோபா

  ReplyDelete
 5. அடுத்த பதிவு எப்போது? ஆவலை அதிகப்படுத்தி விட்டீர்களே!

  ReplyDelete
 6. <<>>>>வேண்டவே வேண்டாம்! என்னால் உப்பில்லாமல் எல்லாம் சாப்பிட முடியாது!
  நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று தான் பாடினேன்! நல்ல வேளை, உப்பிட்டு உண்ணோம்-ன்னு எல்லாம் பாடலை...தெக்கத்திச் சீமை உப்பைப் பத்தி என்ன நினைச்சுப்புட்டீங்க?
  மன்னிக்கவும்...உங்களையும் நிராகரிக்கிறேன்!...(Rejected...)>>>>>


  மகா குறும்பு ஆண்டாளுக்கும் ரவிக்கும்!!!:)

  வழக்கம்போல கலக்கல் பதிவு...ஆன்மீக இழையை நகைச்சுவையோட சொல்ல கண்ண‌பிரான் ரவிசங்கரால்மட்டுமே முடியும் !!! ஆண்டாளின் அந்த ரங்கம்(ன்) யாம் அறிவோம் ஆனாலும் நெய்யுண்ணாமல் பாலுண்ணாமல் மையிட்டெழுதாமல் இங்க வந்து படிக்கக்காத்திருக்கோம்!!!

  ReplyDelete
 7. கோதைக்கு அடியேனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  நினைத்துக் கொண்டே இருந்தேன், இன்று ஆடிப்பூரம் ஆயிற்றே, நம் கோதையின் பிறந்த தினமாயிற்றே என்று. காலை எழுந்தவுடன் பார்த்தால் கோதை என் கண் முன்னே மாதவிப்பந்தலில் வந்து நிற்கிறாள்.

  ReplyDelete
 8. மாறன் சடகோபன் உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லா திவ்ய தேசத்து எம்பெருமான்களையும் தரிசித்து மங்களாசாசனம் செய்தார் என்று படித்திருக்கிறேன் இரவிசங்கர். கோதையின் சுயம்வரத்திற்கு இந்த 108 பேரும் வந்தார்கள் என்றும் படித்திருக்கிறேன். ஆனால் நினைவில் நிறுத்தவில்லை. ஒருவேளை இப்போது தான் மறந்து போயிற்றோ? கோதைத்தமிழில் அவள் கதையைச் சொன்ன போது எழுதியிருக்கிறேனோ? மறந்து போய்விட்டது. சென்று பார்க்க வேண்டும்.

  மறையை உண்மையாகவே மறைத்துத் தான் வைத்திருந்தார்களா என்பதில் ஐயமுண்டு. மூவர்ணர்த்தாருக்கு மட்டுமே உரியது என்று மறைத்து வைக்கபப்ட்ட மறை நான்காம் வர்ணத்தாராகிய நம்மாழ்வார் மாறன் சடகோபருக்கு எப்படி தெரிந்தது? எப்படி அவர் 'வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்' ஆனார்?

  //தனக்குவமை இல்லாதான் ”தாள்” நான்! - சேர்ந்தார்க்கு
  மனக்கவலை மாறும் நாள் இன்று தான்!"
  //

  அதனால் தான் இவர் பெயர் 'மாறனோ'? :-)

  //பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகளும்,//

  நீங்கள் உலக வழக்கின் படி மூவர் என்றவுடன் மும்மூர்த்திகளைக் குறித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். வைணவ ஆசாரியர்களின் கூற்றுப்படி மூவர் என்றால் 'இந்திரன், பிரம்மன், சிவன்' என்ற மூவர்; அல்லது 'இமையோர் தலைவனான சேனைமுதலியார், பிரம்மன், சிவன்' என்ற மூவர். சரி தானா?


  //தெக்கத்திச் சீமை உப்பைப் பத்தி என்ன நினைச்சுப்புட்டீங்க?
  //

  தூத்துக்குடி உப்பைச் சொல்றீங்களா? சரி தான். :-)

  திருவல்லிக்கேணியன் முல்லைநாதனா? என்ன சொல்கிறீர்கள்? அவன் நெய்தல்நாதனல்லவா? கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் தானே? இலக்கணம் மாறுதோ?

  நாகை அழகியார் தேறலை. எங்க ஊர் கள்ளழகர் தேறுவாரா? நாளை பார்க்கலாம்.

  சின்ன அம்மணியைப் போல் நானும் அரங்கனைத் தேர்ந்தெடுத்த வலுவான காரணத்திற்காகக் காத்திருக்கிறேன். சரியான காரணம் இல்லாவிட்டால் நானும் போர் தொடுப்பேன் கோதையின் மீது. முதல் மூவரை சொத்தையான காரணங்களால் நிராகரித்துவிட்டாள்; திருவல்லிக்கேணியனுக்கு சொன்னது என்னவோ கொஞ்சம் உருப்படியான காரணம் என்றாலும்.

  ReplyDelete
 9. 108 திருப்பதி திவ்ய தரிசனம் நடக்குது போலும், நன்றே நடக்கட்டும்!

  ReplyDelete
 10. சூப்பர் பதிவு. சூடித் தந்த சுடர்க்கொடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். எனக்கு அவள் மேலும், மணாளனைத் தேர்ந்தெடுத்த அவளுடைய காரணத்தின் மேலும் நம்பிக்கை இருக்கிறது :)) கண்ணன் காத்தருள்வான் :))

  ReplyDelete
 11. //சின்ன அம்மிணி said...
  அரங்கனைத்தேர்ந்தெடுத்தது மட்டும் வலுவான காரணம் இல்லாட்டி//

  அடேங்கப்பா! சின்ன அம்மிணி அக்கா! ஒரு பொண்ணு மனசு இன்னொரு பொண்ணுக்குத் தானே தெரியும்! இப்படி நீங்களே கோதையைக் கைவிடலாமா? :)

  //மத்தவங்க சார்பா நான் போர் தொடுப்பேன் ஆமாம்//

  நீங்க தான் பையன் சைடு அக்காவா?
  நாத்தனார் தொல்லைய இப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா? :))

  ReplyDelete
 12. //வசீகரா said...
  மீ த பர்ஷ்டு...சீக்கிரம் தொடர்ச்சிய வெளியிடுங்கள்.//

  நன்றி மணிகண்டா! அடுத்த பாகம் இன்னிகி நைட்டு!

  //எங்கள் ரங்கனை பற்றி சொல்லுங்கள்//

  அதென்ன உங்க ரங்கன்? :)
  ஷைலஜாக்கா சண்டைக்கு வரப் போறாங்க!

  //ரங்கராஜன் மணமுடித்த கோதை ஆண்டாளுக்கு பிறந்த நாள் வணக்கங்கள்!//

  Happy Birthday Kothai! :)
  En innoru thambikkum, innikki thaan pirantha naal :) Happy Birthday da!

  ReplyDelete
 13. //எழிலன்பு said...
  சூடித் தந்த சுடர் கொடியை பற்றிய அருமையான பதிவு கே. ஆர். எஸ்//

  நன்றிங்க எழில்!

  //கதையை சீக்கிரம் எதிர்பார்க்கின்றோம்...//

  இங்க ரெண்டு பேரு போர் தொடுக்கக் காத்துக் கிட்டு இருக்காய்ங்க! :)

  ReplyDelete
 14. //அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் //

  சற்றே விளக்க வேண்டும் பிள்ளாய் ..

  ReplyDelete
 15. //Shobha said...
  108 லையும் அரங்கன் முதலாயிருக்க வேறு காரணம் வேண்டுமோ?//

  என்ன ஷோபாக்கா, இப்படிச் சொல்லிட்டீங்க?

  ஆண்டாள் எது சொல்றாளோ அதான் காரணம்! ஏன்னா அவ தான் காதலி! அவ சொல்றதே வேத வாக்கு! :)

  //அரங்கனிடம் சிபாரிசு செய்வதற்குத் தானே அழகருக்கு நூறு தடா சர்க்கரைப்பொங்கலும் நூறு தடா வெண்ணையும் வேண்டிக்கொண்டது !//

  Waitees for next part! :)

  //என்னவோ போங்கள், கோதைக்கு நடந்தது போல் இப்போது யாருக்கு நடக்கும்?//

  ha ha ha!

  ReplyDelete
 16. //Expatguru said...
  அடுத்த பதிவு எப்போது? ஆவலை அதிகப்படுத்தி விட்டீர்களே!
  //

  இன்று இரவு அண்ணாச்சி! :)

  ReplyDelete
 17. //ஷைலஜா said...
  மகா குறும்பு ஆண்டாளுக்கும் ரவிக்கும்!!!:)//

  ஹிஹி!
  குறும்புன்னா என்னாக்கா? அது ஒரு எறும்பா?

  //ஆன்மீக இழையை நகைச்சுவையோட சொல்ல கண்ண‌பிரான் ரவிசங்கரால்மட்டுமே முடியும் !!!//

  நோ வே!
  ஏற்கனவே மக்கள் என் மேல கோவமா இருக்காங்க, Diluting Boy-ன்னு! நீங்க வேற!

  //ஆண்டாளின் அந்த ரங்கம்(ன்) யாம் அறிவோம்//

  இந்தச் சொல் விளையாட்டுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!
  அந்தரங்கம்-அந்த ரங்கம்ன்னு!

  எங்கி ஜிராவும், குமரனும் கூட சொல்லால சும்மா வெளையாடுவாங்க தெரியும்-ல?

  வெட்டி கூட சொல்லாலே வெட்டி வெள்ளாடுவாரு! :))

  //ஆனாலும் நெய்யுண்ணாமல் பாலுண்ணாமல்//

  இன்னிக்கு பூரா காபி குடிக்கலையாக்கா? :)

  ReplyDelete
 18. //Raghav said...
  நினைத்துக் கொண்டே இருந்தேன், இன்று ஆடிப்பூரம் ஆயிற்றே, நம் கோதையின் பிறந்த தினமாயிற்றே என்று//

  உம்ம்ம்ம்

  //காலை எழுந்தவுடன் பார்த்தால் கோதை என் கண் முன்னே மாதவிப்பந்தலில் வந்து நிற்கிறாள்//

  ஆகா...ராகவ்!
  நீங்க என்ன இராமானுசரா?
  பதினெட்டாம் பாசுரம் சொல்லிக்கிட்டே வர, மாதவிப்பந்தல்-ல கோதை வந்து நிற்க, சீரார் வளை ஒலிக்க, கதவைத் திறந்து விடுவதற்கு? :)))

  ReplyDelete
 19. @குமரன்
  பதில் சொல்லலாமா, வேணாமா-ன்னு பாக்குறேன்!
  குமரனைக் கண்டா பயமா இருக்கு! மருத திருப்பாச்சி அருவா-ன்னு எதுனா வெவகாரம் கெளப்புவாரோ?

  பாத்து இருந்துக்கோம்மா, கோதை!
  இப்பல்லாம் உன் பதிவே வேற அவர் போடுறதில்லை! :)

  ReplyDelete
 20. // ஜீவா (Jeeva Venkataraman) said...
  108 திருப்பதி திவ்ய தரிசனம் நடக்குது போலும், நன்றே நடக்கட்டும்!//

  ஆமாங்க ஜீவா!
  ஆனா தரிசனம் கொடுக்குறது ஆண்டாள்!
  க்யூவுல நிக்குறது பெருமாள்கள்! :))

  ReplyDelete
 21. //கவிநயா said...
  சூப்பர் பதிவு.//

  நன்றிக்கா!

  //அவள் மேலும், மணாளனைத் தேர்ந்தெடுத்த அவளுடைய காரணத்தின் மேலும் நம்பிக்கை இருக்கிறது :))//

  Hurrah! Kavi akka en katchi!

  //கண்ணன் காத்தருள்வான் :))//

  athe athe!!

  ReplyDelete
 22. //குமரன் (Kumaran) said...
  மாறன் சடகோபன் உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லா திவ்ய தேசத்து எம்பெருமான்களையும் தரிசித்து மங்களாசாசனம் செய்தார் என்று படித்திருக்கிறேன் இரவிசங்கர்//

  ஆமாம் குமரன்! அதான் பெரியாழ்வார் கரெக்டான ஆளாகத் தேடிப் போயிருக்கார்!

  //கோதையின் சுயம்வரத்திற்கு இந்த 108 பேரும் வந்தார்கள் என்றும் படித்திருக்கிறேன். ஆனால் நினைவில் நிறுத்தவில்லை. ஒருவேளை இப்போது தான் மறந்து போயிற்றோ?//

  http://godhaitamil.blogspot.com

  என் நண்பரோட அருமையான வலைப்பூ இது! போய்ப் பாருங்க! :)

  //மறையை உண்மையாகவே மறைத்துத் தான் வைத்திருந்தார்களா என்பதில் ஐயமுண்டு//

  எழுதாக் கிளவி/ஸ்ருதி (கேட்கப் படுவது)

  ரகஸ்யம் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டு, வெளிப்படையாகச் சொல்லக் கூடாது என்று தானே இடைப்பட்ட காலத்தில் மறைக்கப்பட்டது?

  உடையவர், திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம், ரகஸ்யம்=நுட்பம் என்று சொல்லித் தானே அனைவருக்கும் மறைக்காது கருத்துப் பரிமாறுவார்!

  //மறைத்து வைக்கபப்ட்ட மறை நான்காம் வர்ணத்தாராகிய நம்மாழ்வார் மாறன் சடகோபருக்கு எப்படி தெரிந்தது?//

  ஜூப்பர் கேள்வி!
  வேளாள மாறனுக்கு மறையைப் பயிறுவித்தவர் யார்? அவரே சொல்கிறாரே!
  மயர்வற மதிநலம் அருளினன் எவனவன்!

  பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்
  ஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட
  மனுவும் சுருதி மறை நான்கும் மாயன் தன்
  மாயை யிற்பட்ட தற்பு.

  குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி,
  மறை ஆங்கு என உரைத்த மாலை - இறையேனும்
  ஈயுங்கொல் என்றே இருந்தேன்
  எனைப் பகலும்,
  மாயன் கண் சென்ற வரம்!

  ReplyDelete
 23. //அதனால் தான் இவர் பெயர் 'மாறனோ'? :-)//

  இருக்கலாம்! எங்க ராகவனைக் கேட்டுச் சொல்கிறேன்! :)

  //நீங்கள் உலக வழக்கின் படி மூவர் என்றவுடன் மும்மூர்த்திகளைக் குறித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
  வைணவ ஆசாரியர்களின் கூற்றுப்படி மூவர் என்றால் 'இந்திரன், பிரம்மன், சிவன்' என்ற மூவர்; அல்லது 'இமையோர் தலைவனான சேனைமுதலியார், பிரம்மன், சிவன்' என்ற மூவர். சரி தானா?//

  உம்...வைணவ வழக்குப்படி சரி தான்!
  ஆனால் விஷ்ணு என்னும் ரூபத்தையும் தாண்டிய பரப்ப்ரும்மம், பரவாசுதேவன்-நாராயணன் என்று கொண்டதால் அப்படிச் சொன்னேன்!

  அந்தச் சங்கரனும் அப்படி தானே சொல்லி இருக்காரு, அத்வைதத்தில்? :)

  //தூத்துக்குடி உப்பைச் சொல்றீங்களா? சரி தான். :-)//

  ஓ...அதான் ஒப்பிலியப்பனுக்கே அந்த உப்பைக் கண்டால் கொஞ்சம் பயம் போல! :)

  ReplyDelete
 24. //திருவல்லிக்கேணியன் முல்லை நாதனா? என்ன சொல்கிறீர்கள்? அவன் நெய்தல் நாதனல்லவா? கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் தானே? இலக்கணம் மாறுதோ?//

  இலக்கணம் படிக்கவில்ல-ன்னு சிந்து பைரவியில் சிந்து பாடுறது தான் நினைவுக்கு வருது குமரன்! :))

  மீசையுள்ள ஆயன் கண்ணன் முல்லை நாதன் தானே!
  அதான் தமிழ்க் கடவுள் யார்? என்ற பதிவுலயே பார்த்தோமே! :)

  காடும் காடு சார்ந்த ஈடம் தானே, பச்சை மேனியான் இச்சையுடன் உறையும் நிலம்! அது தானே முல்லை!

  கடலோரத்தில் ஒரு கோயில் இருக்கு அல்லிக்கேணியில்! உடனே நெய்தலுக்குச் சொந்தம் கொண்டாட முடியுங்களா?
  அப்படிப் பார்த்தா கடலோரத்தில் ஒரு கோயில் இருக்கு திருச்செந்தூரில்! உடனே எங்க முருகன் நெய்தல் ஆயிடுவானா?


  நெய்தலுக்குச் சொந்தக்காரன் ஆவணும்-னா, செம்படத்தி ஒருத்தியைக் கட்டணும்! தெரிஞ்சிக்கோங்க! என்ன முருகா, ரெடியா? :))

  ReplyDelete
 25. //நாகை அழகியார் தேறலை. எங்க ஊர் கள்ளழகர் தேறுவாரா? நாளை பார்க்கலாம்//

  உங்க கள்ளழகரா? உம்...பார்ப்போம், பார்ப்போம்! :)

  //சரியான காரணம் இல்லாவிட்டால் நானும் போர் தொடுப்பேன் கோதையின் மீது//

  What? How dare?
  Gothai, Get Ready! Letz get set go! :)

  //முதல் மூவரை சொத்தையான காரணங்களால் நிராகரித்துவிட்டாள்;//

  சொத்தையா?
  சொத்தான காரணங்கள்! முத்தைத் தரு முத்தான காரணங்கள் அத்தனையும்!

  //திருவல்லிக்கேணியனுக்கு சொன்னது என்னவோ கொஞ்சம் உருப்படியான காரணம் என்றாலும்//

  ஹிஹி!
  அன்புடன் பாலா, உங்க ஜூனியர் குமரன் ட்ரிப்ளீக்கேனைக் கவுத்துட்டாரு! ஓடியாங்க! :)

  ReplyDelete
 26. தமிழ்ச் சுவை பொங்கி வழிந்தோடுகிறது போங்கள். இவ்வளவு சுவையாக எழுத எங்கே கற்றுக் கொண்டீர்கள் ஐயா?

  அடுத்த பகுதிகளுக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 27. //Raghav said...
  //அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் //

  சற்றே விளக்க வேண்டும் பிள்ளாய் ..//

  பிள்ளாய் = நான் தான்!
  ஆனால் பிள்ளைக்கும் குருவான எங்க குமரன் வந்து விளக்குவாரு!

  குமரன், ராகவ்-வை கொஞ்சம் கவனியுங்க! :)

  ReplyDelete
 28. தெக்கத்தி உப்பா:)

  ஆண்டாளுக்கென்னய்யா குறைச்சல்.

  பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்.
  அவள் பேர் சொல்லி சர்க்கரைப் பொங்கல் இன்று.

  ஆகவே ஆடிப்புரம் அமைந்த திரு வாழியே.
  அவள் கைக்கிளி செய்யும் முறையோ படமோ போடுங்கள் ரவி.

  ReplyDelete
 29. //பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்
  ஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட
  மனுவும் சுருதி மறை நான்கும் மாயன் தன்
  மாயை யிற்பட்ட தற்பு.

  குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி,
  மறை ஆங்கு என உரைத்த மாலை - இறையேனும்
  ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப் பகலும்,
  மாயன் கண் சென்ற வரம்!
  //

  இதெல்லாம் எந்த மொழி? புரியவில்லையே?

  ReplyDelete
 30. //எங்க ராகவனைக் கேட்டுச் சொல்கிறேன்! :)
  //

  எந்த இராகவன்? எமனேஸ்வரத்தாரா? அவர் உங்களையே திருப்பிக் கேட்பார் பிள்ளாய்! :-)

  ReplyDelete
 31. மாயோன் முல்லை நிலத்தான் தான். அதில் ஐயமே இல்லை. அந்த வகையில் பார்த்தால் ஒப்பிலியப்பனும் முல்லை நாதன் தானே? திருவல்லிக்கேணியில் ஒண்டுக்குடித்தனம் செய்யும் அவனை மட்டும் முல்லை நாதன் என்றது ஏன்? அவனைக் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அவன் நெய்தல் நாதன் என்று சொல்லலாம். மற்றபடி முல்லை நாதன் என்ற பெயர் அவனுக்கு மட்டும் உரியதில்லை; 108 பேரும் போட்டிக்கு வருவார்கள்.

  பாவம் இந்த பார்த்தசாரதி. நெய்தல் நாதன் என்றாவது சொல்லலாம் என்றால் அதற்கும் ஜெயந்திபுரத்தான் போட்டிக்கு வருகிறான். :-)

  ReplyDelete
 32. //நெய்தலுக்குச் சொந்தக்காரன் ஆவணும்-னா, செம்படத்தி ஒருத்தியைக் கட்டணும்! //

  அப்பன் சொத்து பிள்ளைக்கு. அதான் அப்பன் ஒரு செம்படவப் பெண்ணைக் கட்டினதா திருவிளையாடல் புராணம் சொல்லுதே. சேந்தன் நெய்தல் நாதன் ஆவதில் பிறகு என்ன தடை?

  நாகப்பட்டினத்துக்காரர் போட்டிக்கு வருவாரோ? அவரும் ஒரு செம்படவப் பெண்ணைக் கட்டிக் கொண்டார் என்று நினைக்கிறேன். :-)

  ReplyDelete
 33. //குமரன் (Kumaran) said...
  //எங்க ராகவனைக் கேட்டுச் சொல்கிறேன்! :)
  //

  எந்த இராகவன்? எமனேஸ்வரத்தாரா? அவர் உங்களையே திருப்பிக் கேட்பார் பிள்ளாய்! :-)//

  நோ வே!
  எங்க ராகவன் மீன்ஸ் ஜிரா ஜிரா ஜிரா!
  என்ன மீன்ஸ்? சீலா மீன்ஸ் தான்! :)

  அதான் புதுசா வந்தவருக்கு பேரு மாத்திட்டம்-ல! ராகவ்! :)

  ReplyDelete
 34. அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 35. சேந்தன் நெய்தல் நாதனா. நான் அவர் மின்னியாபோலீஸில் இருப்பதாக அல்லவா நினைத்தேன்:)

  ReplyDelete
 36. நீங்க வேற வல்லியம்மா குடும்பத்துல குழப்பத்தை உண்டுபண்ணிடுவீங்க போலிருக்கே. சேந்தனோட அப்பா செம்படவப் பெண்ணைக் கட்டிக்கிட்டு இருக்காருன்னு சொல்லியிருக்கீங்களே; எங்க எப்ப கட்டிக்கிட்டீங்கன்னு தங்கமணி சண்டைக்கு வரப் போறாங்க. அவங்க பதிவெல்லாம் படிக்கிறதில்லையா நான் தப்பிச்சேன். :-)

  ReplyDelete
 37. மாதவிப்பந்தலாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 38. dear Friend!

  Now only i read u Andal suyamvaram,
  I am really happy and mingled with suyamvaram.

  athukkaaha unkalai manathaara vanangukiren Mr.Kannabiran

  Nanri

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP