Wednesday, August 20, 2008

புதிரா? புனிதமா?? - நட்சத்திரப் பதிவர் குமரனின் கிசு கிசுக்கள்!!!

மக்கள்ஸ்! இந்தப் புதிரா புனிதமா-வில் அஞ்சா நெஞ்சுடன், வீரமாகப் பதில் சொன்னது ரெண்டே பேரு தான்! சிவமுருகன் & ஸ்ரீதர் அண்ணாச்சி!
மற்ற அத்தனை பேரையும் நட்சத்திரப் பதிவர் குமரன் திரைமறைவில் மிரட்டியுள்ளதாக, திரைமறைவுத் தகவல்கள் வெளியாகியுள்ளன!

இருப்பினும், இதில் அதிக கிசுகிசு கேள்விகளுக்குப் பதில் சொல்லி, சாதனை படைச்ச சிவாவைப் பாராட்டி, குமரன், இந்தப் பரிசை வழங்குகிறார்!
சிவாவுக்கு வெகு விரைவில், இதே போன்று மாலை சூடி, திருமணம் நடைபெறவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்(றோம்)! :)

விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன! விரிவான விளக்கங்களைக் குமரனே வந்து சொல்லுவார்!


மக்கள்ஸ்! இன்று புதிரா புனிதமா ஒரு வரலாறு படைக்கப் போகிறது! தமிழ்ப் பதிவுகளிலேயே முதல் முறையாக....ச்சே....சன் டிவி பாக்காதே, கலைஞர் டிவிக்கு மாறு-ன்னு சொன்னாக் கேட்டா தானே?....ஒரு பதிவரைப் பற்றிய வினாடி வினா! அதான் யாருன்னு தலைப்புல சொல்லியாச்சே!

கிசுகிசு என்பது கூடிய சீக்கிரம் தமிழ் இலக்கியத்தில் ஒரு வகை ஆனாலும் ஆகி விடும்!
உலா, கலம்பகம், பள்ளு போல ஜொள்ளு, கலாய்த்தல், கிசுகிசு!
அந்த அளவுக்கு, மக்கள் அடுத்தவர் விஷயத்தில் காட்டும் ஒரு பொது அறிவு ஆர்வம்! ஒருத்தரைப் போட்டு வாங்க இதை விட ஒரு நல்ல சான்ஸ் கிடைக்குமா?
நம்ம நட்சத்திரப் பதிவர் குமரனை அடிச்சி ஆடுவமா? :)

இந்த முறை குமரன் ஐயாவே சொந்த செலவுல பரிசை வழங்குவாரு!
தங்கக் காசா கூட இருக்கலாம்! திருப்பரங்குன்றம் கோயில் கஜானாவுக்கே மேனேஜர்-ன்னா பாத்துக்குங்க!
மதுரை-ல மேல மாசி வீதியில அண்ணாச்சிக்கு சொந்தமா ஒரு வளையல் கடை! பிரபல முன்னணி நடிகைகள் எல்லாம் அங்கிட்டு தான் வளையல் வாங்க வருவாங்களாம்!

கிசுகிசு நம்பர் ஒன்:
நம்ம தங்கமான பதிவர் ஒருத்தருக்கு மரம் வளர்க்கறதுல ரொம்பவே ஆர்வம்!
தூத்துக்குடி உப்புச் சத்தியாகிரகத்துல அப்பப்ப உப்பு காய்ச்சுவாரு! அப்பல்லாம் ரஜினா உப்பு-மா மட்டுமே சாப்பிட்டு உண்ணாவெரதம் இருப்பாராம்!
அவரு சென்னை திரும்பி வரும் வழியில், மதுரைல எப்பமே ஒரு ஹால்ட் போடுவாராம்! எதுக்குங்கிறீங்களா? மேற்படி வளையல் கடைல, வளையல் போட்டு விடத் தான்! :)

குமரன் ரெடி! நீங்க ரெடியா?....
விடைகள், நாளை இரவு (மின்னசோட்டா நேரப்படி)!


1

பதிவர் குமரனின் அகவை - நல்லா கவனிக்கவும், அங்கவை இல்ல! - அகவை! அகவை!

பதிவுச் சான்றிதழ் வயது என்ன?

1

அ) 15-3/4

ஆ) 1330

இ) 1036

ஈ) 133

2

குமரன் வலைப்பூவில், தன்னைப் பற்றிய ஒரு குறிப்பில், இந்த பாட்டைக் கொடுத்துள்ளார்!

மதுரைக்காருல்ல! மண்டபத்துல யாரோ எழுதிக் கொடுத்து, அதைத் தான் எடுத்துக்கிட்டு வந்திருக்காரு! யாரு எழுதிக் கொடுத்த பாட்டு?

அடியேன் சிறிய ஞானத்தன்
அறிதல் யார்க்கும் அரியானை
அடியேன் காண்பான் அலற்றுவன்
இதனில் மிக்கோர் அயர்வுண்டே!

2

அ) ஆண்டாள்

ஆ) வெட்டிப்பயல்

இ) அபிராமி பட்டர்

ஈ) நம்மாழ்வார்

3

போறாளே பொன்னுத் தாயன், பொல பொலவென்று கண்ணீர் விட்டு! அப்படின்னு ஒரு பாட்டைக் கேட்டிருக்கீங்க தானே? குமரன் தமிழ்மணத்தை விட்டு விலகறேன்-ன்னு அறிவிப்பு வுட்டாருல்ல! அப்ப பாடுன பாட்டு தான் அது!

அப்படிப் போறப்போ, எந்தப் பதிவுகளை (வலைப்பூக்களை) மட்டும் தமிழ்மணத்துல இருந்து தூக்குனாரு?

3

அ) அபிராமி அந்தாதி

ஆ) கூடல்

இ) மதுரை மாநகரம்

ஈ) ஏதோ ஒரு செளராஷ்ட்டிர வலைப்பதிவு

4

கஷ்டமான கேள்வி!

குமரனோட கஷ்ட தெய்வம்...ச்சே...இஷ்ட தெய்வம் யாரு? :)

4

அ) முருகன்

ஆ) கண்ணன்

இ) மீனாட்சி

ஈ) குமரன் - ஆத்திகர் போல் சீன் போடும் நாத்திகர் :))

5குமரனின் பாடல் குரல், முதலில் அரங்கேறின வலைப்பூ எது? அதைக் கேட்டுவிட்டுச் சரியில்லை என்று சொன்ன பதிவர் யார்?

5

அ) கண்ணன் பாட்டு - ஜி.ராகவன்

ஆ) முருகனருள் - சர்வேசன்

இ) சிவன் பாட்டு - இலவசக் கொத்தனார்

ஈ) கண்ணன் பாட்டு - சர்வேசன்

6

குமரன் எழுதியதில் எந்தத் தொடர் அதிக நீளமானது? (ஒவ்வொரு பதிவுமே அப்படித் தான்-ன்னு புலம்பல்ஸ் நாட் அலவுட் :)

நான் கேக்குறது, அதிக பதிவு எண்ணிக்கை கொண்ட தொடர்கள்!

6

அ) உடுக்கை இழந்தவன் கை

ஆ) புல்லாகிப் பூண்டாகி

இ) சொல் ஒரு சொல்

ஈ) கோளறு பதிகம்

7

இந்த நண்பர், குமரனின் ஊருக்குப் போகும் போதெல்லாம், குமரன் ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி, ஊரை விட்டு ஓடிருவார்! பார்க்க வரவே மாட்டார்!

இத்தனைக்கும் இந்தப் பதிவரிடம் குமரன் கடன் கூட வாங்கலை! யார் அந்த அப்பாவிப் பதிவர்?

7

அ) KRS

ஆ) VSK

இ) இலவசக் கொத்தனார்

ஈ) விடாதுகருப்பு

8

குமரனின் புல்லாகிப் பூண்டாகி தொடர் கதைக்கு (சுயசரிதை-ன்னும் சில பேர் பேசிக்கறாங்கப்பா!), பலர் விமர்சனம் எழுதினாங்க! அதுல ஒரே ஒரு விமர்சனம் மட்டும் மாபெரும் சூட்டைக் கிளப்பியது!

கிட்டத்தட்ட குமரனை ஒரு போதைப் பொருளாளர் (Drug Addict) ரேஞ்சுக்கு வர்ணித்த அந்த வீரமிகு பதிவர் யார்? :)

8

அ) கோவி. கண்ணன்

ஆ) வவ்வால்

இ) ரத்னேஷ்

ஈ) டிபிசிடி

9

குமரனுக்குத் திடீர்-னு இயற்கை மேல் ஆர்வம் வந்து, பதிவுல, மரம் செடி கொடி எல்லாம் வளர்க்க ஆரம்பிச்சாரு ஒரு காலத்துல! எந்த மரம்/செடி?

9

அ) கொன்றை

ஆ) கடம்பு

இ) துளசி

ஈ) முல்லை

10

கடைசிக் கேள்வி: வெவகாரமான கேள்வி!

குமரனுக்கு ஒரு ராசி உண்டு! அவர் கூட எழுதும் கூட்டுப் பதிவர்கள் எல்லாம் கொஞ்ச நாளில் பதிவுலகத்தை விட்டே ஓடிருவாங்க! (உஷார் உஷார்-ன்னு உஷா அக்கா கூவுறது எனக்கு இங்க வரைக்கும் கேட்குது :)

அப்படி விட்டுப் போன பதிவர், இவர்களில் யாரு?

10

அ) கீதா சாம்பசிவம்

ஆ) சிவமுருகன்

இ) நாமக்கல் சிபி

ஈ) சிவபுராணம் சிவா* என்னாங்க, கிசுகிசு போதுங்களா? இல்லை, கொசுறு ஏதாச்சும் வேணுங்களா? உங்களுக்குத் தெரிஞ்ச கிசுகிசு-க்களைக் கூட நீங்க பின்னூட்டத்தில் சொல்லலாம்! "ஆண்மீகப் பதிவாளர்" - என்று உங்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்! :)

** இதுக்கு மேல வெவகாரமான கேள்விக்கு எல்லாம் நம்ம சின்னத் தலையைத் தான் கூப்டோணும்! யப்பா ராயலு! ராமு! அம்மூருகாரவுக, நம்ம ததா-வைப் பத்தி நல்ல சீட்டா நாலு எடுத்துப் போடு ராசா! :)

*** அப்படியே அந்த மேல மாசி வீதி, வளையல் கடை சமாச்சாரத்தை, மதுரையம்பதி-மெளலி அண்ணாவோ இல்லை நீயோ, களத்தில் இருந்து நேரடித் தகவல் கொடுத்தா, ப்ரைம் டயம் வெளம்பரம் காசு தேறும்! :))


இது காப்பி பேஸ்ட் செய்யும் கழகக் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) 15-3/4 ஆ) 1330 இ) 1036 ஈ) 133

2 அ) ஆண்டாள் ஆ) வெட்டிப்பயல் இ) அபிராமி பட்டர் ஈ) நம்மாழ்வார்

3 அ) அபிராமி அந்தாதி ஆ) கூடல் இ) மதுரை மாநகரம் ஈ) ஏதோ ஒரு செளராஷ்ட்டிர வலைப்பதிவு
4 அ) முருகன் ஆ) கண்ணன் இ) மீனாட்சி ஈ) குமரன் - ஆத்திகர் போல் சீன் போடும் நாத்திகர் :))
5 அ) கண்ணன் பாட்டு - ஜி.ராகவன் ஆ) முருகனருள் - சர்வேசன் இ) சிவன் பாட்டு - இலவசக் கொத்தனார் ஈ) கண்ணன் பாட்டு - சர்வேசன்
6 அ) உடுக்கை இழந்தவன் கை ஆ) புல்லாகிப் பூண்டாகி இ) சொல் ஒரு சொல் ஈ) கோளறு பதிகம்
7 அ) KRS ஆ) VSK இ) இலவசக் கொத்தனார் ஈ) விடாதுகருப்பு
8 அ) கோவி. கண்ணன் ஆ) வவ்வால் இ) ரத்னேஷ் ஈ) டிபிசிடி
9 அ) கொன்றை ஆ) கடம்பு இ) துளசி ஈ) முல்லை
10 அ) கீதா சாம்பசிவம் ஆ) சிவமுருகன் இ) நாமக்கல் சிபி ஈ) சிவபுராணம் சிவா

39 comments:

 1. அடடா. எனக்கு நிறைய கேள்விகளின் விடை தெரியவில்லையே? :-(

  ReplyDelete
 2. வரலாறு தெரியாததால பாதிக்கு மேல பதில்களும் தெரியலை :( ஹ்ம்.. பொறுத்திருந்து பாத்துக்கறேன்.

  ReplyDelete
 3. //ஈ) குமரன் - ஆத்திகர் போல் சீன் போடும் நாத்திகர் :))//

  ச்சேச்சே! இது நீங்களாச்சே!! அவரைப் போய் எப்படி!! :)

  ReplyDelete
 4. //இ) சிவன் பாட்டு - இலவசக் கொத்தனார்//

  யோவ் என்னை ஏன்யா வம்புக்கு இழுக்கறீங்க? நான் 'பாட்டு'க்கு 'சிவனே'ன்னு இருக்கேன்! :))

  ReplyDelete
 5. 1 What is this? options are not relavent, weeks or months or days.
  என்னமோ திருக்குறள் அதிகாரன் குறள் கணக்கு மாதிரி இருக்கு? பு.த.செ.வி.

  2 ஈ) நம்மாழ்வார்
  3 ஆ) கூடல்
  4 அ) முருகன்
  5 அ) கண்ணன் பாட்டு - ஜி.ராகவன்
  6 இ) சொல் ஒரு சொல்
  7 இ) இலவசக் கொத்தனார்
  8 ஈ) டிபிசிடி
  9 அ) கொன்றை
  10 ஈ) சிவபுராணம் சிவா (மற்றவர்கள் இன்னும் பதித்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதுவும் இந்த Option ’ஆ’ இருக்கே எல்லாரையும் ’ஆ ஆ ஆ’ சொல்ல வைக்கமா விட மாட்டார்பா சரியான இடத்துல தான் வச்சுருக்கீங்க :-).)

  ReplyDelete
 6. தலைவரே! எவ்ளோ பிழை இருக்கோ அவளோ பொற்காசுகளை குறைத்துக்கொள்ளுங்கள்!

  ReplyDelete
 7. வாப்பா சிவமுருகா
  மொத கேள்விய பாத்து பயந்துட்டீரா? ஹா ஹா ஹா! போயி குமரனைத் தேடிப் பாரும்! தெரியும்!
  2 ok
  3 half ok! - u need to answer all
  4,5 thappu
  6,7 ok
  8 thappu
  9,10 ok

  =5.5/10

  ReplyDelete
 8. ////ஈ) குமரன் - ஆத்திகர் போல் சீன் போடும் நாத்திகர் :))//

  ச்சேச்சே! இது நீங்களாச்சே!! அவரைப் போய் எப்படி!! :) //

  அதானே!
  சரியாச் சொன்னீங்க கொத்ஸ்!
  :))

  ReplyDelete
 9. இவ்வளவு ஈசியான கேள்விகளா??? ஆனால் நம்ம பேரு வந்திருக்கே?? அதனாலே கலந்துக்கலை! :P

  ReplyDelete
 10. இது நியாயமா.. பழைய சிலபஸ்ல இருந்து கேள்வி கேட்டா எப்புடி பதில் சொல்ல முடியும்.. நீங்களே யார் மூலமாவது பதில் சொல்லி ஜோடி வளையல லவட்டலாம்னு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. யார் யாருப்பா இதுக்கு ரிப்பீட்டு சொல்றது ??

  ReplyDelete
 11. //குமரன் (Kumaran) said...
  அடடா. எனக்கு நிறைய கேள்விகளின் விடை தெரியவில்லையே? :-(
  //
  கே.ஆர்.எஸ் அண்ணாச்சி எங்களை வெச்சி காமெடி கீமெடி செய்யலையே... அப்படி ஏதாவது தெரிஞ்சது.. ஊர் பக்கம் வரும் பொழுது.. பரிசுத்தொகைக்கு இணையா இழப்பு இருக்கும் சொல்லிட்டோம்.. :)) மத்தபடி உங்களுக்கே தெரியும் இந்த புதிரா புனிதமாவுக்கும் நமக்கு ரொம்ப தூரம்.. வரட்டா

  ReplyDelete
 12. //பழைய சிலபஸ்ல இருந்து கேள்வி கேட்டா எப்புடி பதில் சொல்ல முடியும்//

  திருப்பி சொல்லிக்கிறேன்! :-))

  ReplyDelete
 13. ஆஜர் சார்..:)

  இந்த புதிரா-புனிதமா எல்லாம் எனக்கு அவ்வளவா தெரியாதுங்களே...:(

  ReplyDelete
 14. இருந்தாலும் ஒரு முயற்சி. முக்காலும் guesswork-தான். தவறாக இருந்தால் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் :-))

  1. இ
  2. ஈ - நம்மாழ்வார்
  3. ஆ
  4. அ முருகன்
  5. அ (அ) ஈ :-))
  6. ஆ
  7. அ
  10. ஆ (அ) இ

  ReplyDelete
 15. இது வரைக்கும் ரெண்டே பேர் தான் முயற்சி செஞ்சிருக்காங்க!
  ஆகா...என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை!

  ReplyDelete
 16. ஸ்ரீதர் அண்ணாச்சி
  தமிழ்ச் சங்கம் தீர்த்து வைக்காத புதிரை, தனியொரு புலவனாக வந்து தீர்த்து வைத்த தருமியே! வாழ்க!!!

  1 2 cheri
  3 paathi correct! there is one more option
  4 thappu
  5 la umakku vilayaatta? cheri :))
  6,7,10 thappu

  =3.5/10

  ReplyDelete
 17. 1. 35 years is the correct answer
  3. அ) அபிராமி அந்தாதியையும் சேத்துக்கோங்க!
  மற்ற இரு பதிவுகளில் ஒன்று குழு பதிவு மதுரை மாநகரம், ப்ளாக் தேசத்தில் இருக்கும் சௌராஷ்ட்ர பதிவு!
  4. ஆ) கண்ணன்
  5. ஆ) முருகனருள் - சர்வேசன்
  8. இ) ரத்னேஷ்

  ReplyDelete
 18. சிவா
  1 thappu
  3,4,8 chari
  5 meendum thappu
  =8/10

  பத்துக்குப் பத்து யாருமே இல்லியா? வாட் இஸ் திஸ்! ஒலிம்புக்ஸ்-ல புதிரா புனிதமா-வைச் சேர்க்கப் போறாங்க! அப்பறம் தெரியும்! :)

  ReplyDelete
 19. VSK said...
  //ஈ) குமரன் - ஆத்திகர் போல் சீன் போடும் நாத்திகர் :))//

  ச்சேச்சே! இது நீங்களாச்சே!! அவரைப் போய் எப்படி!! :) //

  அதானே!
  சரியாச் சொன்னீங்க கொத்ஸ்!
  :))
  //

  அடா அடா அடா...
  என்னா ஒரு சிரிப்பு, கொத்ஸ் மற்றும் SK ஐயா முகத்துல? :)
  நான் தான் நாத்திகன்-னு ஊருக்கே தெரியுமே!

  கடவுள் தனது அரசாங்கத்தில் ஆத்திக சென்சஸ் எடுத்தாராம்! மக்கள் தொகை=0 ன்னு வந்துச்சாம்ல! ஹா ஹா ஹா!

  ReplyDelete
 20. //குமரன் (Kumaran) said...
  அடடா. எனக்கு நிறைய கேள்விகளின் விடை தெரியவில்லையே? :-(//

  நீங்க தானே விடை!
  உங்களுக்கு எப்படி உங்களையே தெரியும் குமரன்? :)

  ReplyDelete
 21. //கவிநயா said...
  வரலாறு தெரியாததால பாதிக்கு மேல பதில்களும் தெரியலை //

  என்னக்கா சாக்கு போக்கு இது! பிட் அடிக்க மாட்டீங்களா? :)

  ReplyDelete
 22. //இலவசக்கொத்தனார் said...
  யோவ் என்னை ஏன்யா வம்புக்கு இழுக்கறீங்க? நான் 'பாட்டு'க்கு 'சிவனே'ன்னு இருக்கேன்! :))
  //

  ஏன்?
  நான் 'பாட்டு'க்கு 'கண்ணனே'ன்னு இருக்குறது?
  Birthday Boy! உங்க பூனைக்குட்டி இன்னிக்கும் வெளியே வந்துருச்சி! பூனைக்குட்டிக்கும் ஒரு ட்ரீட் குடுங்க! :)

  ReplyDelete
 23. //சிவமுருகன் said...
  தலைவரே! எவ்ளோ பிழை இருக்கோ அவளோ பொற்காசுகளை குறைத்துக்கொள்ளுங்கள்!//

  நோ பொற்காசு!
  ஒன்லி வளையல்! :)

  ReplyDelete
 24. //கீதா சாம்பசிவம் said...
  இவ்வளவு ஈசியான கேள்விகளா???//

  ஆமாம்!

  //ஆனால் நம்ம பேரு வந்திருக்கே?? அதனாலே கலந்துக்கலை! :P//

  ஓ...உங்க பேரு சாய்ஸ்-ல தான வந்திருக்கு! சாய்ஸ்-ல விடுங்க! :))

  ReplyDelete
 25. //Raghav said...
  இது நியாயமா.. பழைய சிலபஸ்ல இருந்து கேள்வி கேட்டா எப்புடி பதில் சொல்ல முடியும்..//

  வாய்யா வா!
  சில பஸ்ஸோ பல பஸ்ஸோ...
  பஸ்ஸைப் புடி மொதல்ல!

  //நீங்களே யார் மூலமாவது பதில் சொல்லி ஜோடி வளையல லவட்டலாம்னு//

  நாங்க வளையலை எல்லாம் லவட்ட மாட்டோம்! ஒன்லி ஜோடி! :)

  ReplyDelete
 26. //சந்தோஷ் = Santhosh said...
  கே.ஆர்.எஸ் அண்ணாச்சி எங்களை வெச்சி காமெடி கீமெடி செய்யலையே... //

  அதெல்லாம் நம்ம வெட்டி பண்ணுவாரு!

  //அப்படி ஏதாவது தெரிஞ்சது.. ஊர் பக்கம் வரும் பொழுது.. பரிசுத்தொகைக்கு இணையா இழப்பு இருக்கும் சொல்லிட்டோம்.. :))//

  பரிசு "தொகை" ன்னு முடிவே கட்டிட்டியா சந்தோசு? :)
  குமரன் - மக்கள் ஆர்வத்தைப் பாத்தீங்களா? மாலையில் கனமான வாலட்டோடு வாங்க!

  //மத்தபடி உங்களுக்கே தெரியும் இந்த புதிரா புனிதமாவுக்கும் நமக்கு ரொம்ப தூரம்.. வரட்டா//

  அடுத்த புபு உனக்குத் தான்-பா! :)

  ReplyDelete
 27. //ஸ்ரீதர் நாராயணன் said...
  //பழைய சிலபஸ்ல இருந்து கேள்வி கேட்டா எப்புடி பதில் சொல்ல முடியும்//

  திருப்பி சொல்லிக்கிறேன்! :-))//

  எதைத் திருப்பி எதைச் சொல்லிக்கறீங்க அண்ணாச்சி?
  வாங்குன கடனைத் திருப்பறீங்களா என்ன? :)

  ReplyDelete
 28. //மதுரையம்பதி said...
  ஆஜர் சார்..:)//

  தெரியுமே!
  கிசுகிசு-ன்னா படிக்க மட்டும் ஆஜர் ஆவீங்க! ஆனா கிசுகிசு கர்மானுஷ்டானம் மட்டும் பண்ணமாட்டீங்க! :(

  அந்த வளையல் கடைத் தகவலைச் சொல்லுங்கண்ணா! :)

  ReplyDelete
 29. இந்த பதிவு எப்போ வந்தது ?தமிழ்மணத்தில் பார்க்கவே இல்லையே !

  ReplyDelete
 30. //கோவி.கண்ணன் said...
  இந்த பதிவு எப்போ வந்தது ?தமிழ்மணத்தில் பார்க்கவே இல்லையே !
  //

  இப்போ பாக்க முடியுதுங்களா, கோவி அண்ணா? :)
  விடைகளைப் போட்டாச்சி என்பதற்கான பி.க தான் இது! :)

  ReplyDelete
 31. //இருப்பினும்,//

  ஹேய் அதென்னப்பா இருப்பினும்,

  //இதில் அதிக கிசுகிசு கேள்விகளுக்குப் பதில் சொல்லி, சாதனை படைச்ச சிவாவைப் பாராட்டி, குமரன், இந்தப் பரிசை வழங்குகிறார்!//

  யாருய்யா இது, தனையனை பற்றி தம்பிக்கு தெரியாதா? மொதல்ல என்னை கலந்துக்க கூடாதுன்னு ஒரு டிஸ்கி போட்றுக்கனும்! ;-).அதை கோட்ட விட்டுட்டேள், நான் சரியா புடுச்சுட்டேன்!

  (இதே, ஒரு சில தொடர் பற்றி கேட்டு இருந்திருந்தால் டங்கு டணால் ஆயிருக்கும்)

  //சிவாவுக்கு வெகு விரைவில், இதே போன்று மாலை சூடி, திருமணம் நடைபெறவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்(றோம்)! :)//

  அதுக்குள்ள இங்கயும் சொல்லிட்டாங்களா! (எங்கே போனாலும் இதே கேள்வி தான், ஜாதகம் விட்டாச்சா?, பொண்ணு பார்க்குறாங்களான்னு, கேள்வி பல தினுசுல வரும், சாராம்சம் என்னமோ கல்யாணம் தான்) கொஞ்சநாள் விடுங்கப்பா நிம்மதியா இருந்துக்குறேன்.

  ReplyDelete
 32. சிறப்பு புதிரா புனிதமா போட்டதற்கு மிக்க நன்றிகள் இரவிசங்கர். பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிய நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.

  சிவமுருகன், உங்களுக்குத் தந்த பரிசு பொருத்தமானது என்று நம்புகிறேன். பிடித்ததா அந்த பரிசும் வலைப்பதிவர்கள் தந்த ஆசியும். :-)

  இனி பதில்களுக்கான விளக்கங்கள்.

  ReplyDelete
 33. 1. குமரனின் பதிவுச் சான்றிதழ் வயது என்ன? விடை: 1036.

  பதிவுச் சான்றிதழ் வயது என்றவுடன் பிறப்புச் சான்றிதழ் வயது என்று நினைத்திருந்தீர்கள் என்றால் இந்தக் கேள்விக்குச் சரியான விடையைத் தந்திருக்க முடியாது. இவர் கேட்டது வலைப்பதிவுச் சான்றிதழ் வயது. என்னுடைய ப்ளாக்கர் ப்ரொபைலைப் பார்த்திருந்தால் இந்தக் கேள்விக்குப் பதில் சரியாகத் தெரிந்திருக்கும். வலைப்பதிவு சான்றிதழான ப்ளாக்கர் ப்ரொபைலின் படி என் வயது 1036. என்னுடைய உண்மையான வயதுடன் சும்மா ஒரு 1000 வருடங்கள் தான் கூட்டிச் சொல்லியிருக்கிறேன். :-)

  ReplyDelete
 34. 2. அடியேன் சிறிய ஞானத்தன் பாசுரம் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம். இந்தப் பாசுரத்திற்கு கூடலில் விளக்கத்துடன் ஒரு இடுகை இருக்கிறது. தேடிப்பார்த்தால் கிடைக்கும்.

  3. தமிழ்மணத்தை விட்டு விலகுகிறேன் என்று வீராவேசமாக இடுகை இட்டு வெளியேறிய போது நான் கூட்டாக இயங்கிய குழுப்பதிவுகள் எதுவுமே தமிழ்மணத்தை விட்டு விலக்கவில்லை. தனிப்பதிவுகளை மட்டுமே விலக்கினேன். அந்த வகையில் கூடலும் அபிராமி அந்தாதியும் சரியான விடைகள்.

  4. இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி தான். என் தங்கமணி டக்குன்னு 'முருகன்'னு சொல்லிட்டாங்க. ஏன் அப்படி சொன்னீங்கன்னு கேட்டா குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறப்ப முருகன் பேராத் தானே தேடினோம்ங்கறாங்க. :-) அவங்களுக்கே அப்படின்னா மத்தவங்களுக்கு எப்படி இருக்கும்?! :-)

  கூடல்ல ரெண்டு மூணு தடவை என் இஷ்ட தெய்வம் எதுன்னு சொல்லியிருக்கேன்.

  ReplyDelete
 35. 5. நான் பாடுனது என்னமோ வீட்டுல பயந்துக்கிட்டு கமுக்கமா பாடுன மாதிரி இருந்ததுன்னு சர்வேசன் சொல்லியிருந்தாரு. ஆனா அதுக்கு முன்னாடி நானும் இரவிசங்கரும் - ரெண்டு பேரும் பாடுனது கொடுமைங்கற மாதிரி சொல்லியிருந்தாரு. இரவிசங்கர் கமுக்கமா அவரைச் சொன்னதை மட்டும் மறைச்சுட்டு என்னமோ சர்வேசன் நான் பாடுனது மட்டும் சரியில்லைன்னு சொன்னா மாதிரி இந்தக் கேள்வியைக் கேட்டிருக்காரு.

  6. இதுக்கு சரியான விடை எனக்கும் தெரியாது. கூடல்ல 'வகைகள்' பகுதியைப் பார்த்தா 'சொல் ஒரு சொல்' 40 இடுகைகளோட இருக்குன்னு சொல்லுது. ஆனா அதுல நிறைய இடுகைகள் மத்தவங்க எழுதுனது. அதனால அது தான் சரியான விடையான்னு தெரியாது. இரவிசங்கர் அது தான் சரின்னு சொன்னா சரி தான். :-)

  7. கொத்ஸ் ஒரே ஒரு முறை தான் எங்க ஊருக்கு வந்திருக்காரு. அப்ப பார்த்து நான் அமெரிக்க மேலக்கடற்கரைக்குச் சுற்றுலா போய்விட்டேன். அப்ப இருந்து கொத்ஸ் இதைச் சொல்லி ஓட்டிக்கிட்டே இருக்காரு. :-)

  ReplyDelete
 36. 8. அந்த சூட்டைக் கிளப்புன இடுகையைப் படிக்கணும்ன்னா இரத்னேஷுடைய பதிவுக்குச் சென்று பாருங்கள். மத்தவங்க விமர்சனம் எல்லாம் கூடல்ல இருக்கு. இது மட்டும் இல்லை. :-)

  9. நண்பர் வெற்றி கேட்டுக்கிட்டதுக்கு இணங்க 'கடம்பு'ன்னு வர்ற சில பழந்தமிழ் இலக்கியப் பாடல்களைத் தொகுத்து ஒரு தொடர் தந்தேன். அதனைத் தான் சொல்றார் இரவிசங்கர்.

  10. என்னோட கூட்டாக எழுதுபவர்களுக்கு இருக்கும் இராசி - தொடர்ந்து எழுதுவது தான். சிவபுராணம் சிவாவோட கதை வேற. பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவர். அந்தப் பாவத்துக்குப் பரிகாரமா அவர் எழுதுறதையே விட்டுட்டார். :-)

  ReplyDelete
 37. //என்னுடைய உண்மையான வயதுடன் சும்மா ஒரு 1000 வருடங்கள் தான் கூட்டிச் சொல்லியிருக்கிறேன். :-)//

  பல்லாண்டு பல்லாண்டு பல்-1000-த்தாண்டா குமரன்? :)

  //திருவாய்மொழிப் பாசுரம். இந்தப் பாசுரத்திற்கு கூடலில் விளக்கத்துடன் ஒரு இடுகை இருக்கிறது. தேடிப்பார்த்தால் கிடைக்கும்.
  //

  சுட்டி கொடுங்க சுட்டி!

  //இரவிசங்கர் கமுக்கமா அவரைச் சொன்னதை மட்டும் மறைச்சுட்டு என்னமோ சர்வேசன் நான் பாடுனது மட்டும் சரியில்லைன்னு சொன்னா மாதிரி இந்தக் கேள்வியைக் கேட்டிருக்காரு.//

  அலோ, புதிரா புனிதமா ஒங்க மேல!
  அது தமிழ் அர்ச்சனையோ, வடமொழி அர்ச்சனையோ, இங்கிலீஷ் அர்ச்சனையோ.....
  எல்லா அர்ச்சனையும் குமரனுக்கே! :)

  ReplyDelete
 38. //இதுக்கு சரியான விடை எனக்கும் தெரியாது. கூடல்ல 'வகைகள்' பகுதியைப் பார்த்தா 'சொல் ஒரு சொல்' 40 இடுகைகளோட இருக்குன்னு சொல்லுது. ஆனா அதுல நிறைய இடுகைகள் மத்தவங்க எழுதுனது.//

  அப்படின்னா மத்தவங்க எழுதன இடுகை எல்லாம் நீங்க எப்படிக் கூடல்-ல போட்டுக்கலாம்?
  நீங்க என்ன திருவிளையாடல் தருமியா? நக்கீரரா? இல்லை சாரு நிவேதிதாவா? :))

  //இரவிசங்கர் அது தான் சரின்னு சொன்னா சரி தான். :-)//

  அது! :)


  //8. அந்த சூட்டைக் கிளப்புன இடுகையைப் படிக்கணும்ன்னா இரத்னேஷுடைய பதிவுக்குச் சென்று பாருங்கள். மத்தவங்க விமர்சனம் எல்லாம் கூடல்ல இருக்கு. இது மட்டும் இல்லை. :-)//

  கோவி அண்ணா,
  ரத்னேஷை என்ன செஞ்சீங்க? இப்பல்லாம் அதிகம் காண முடிவதில்லையே! எல்லாம் (கோவி) கண்ணன் சதி வேலையாத் தான் இருக்கும்! :)

  நாத்திகம் பேசி ஆத்திகம் வளர்க்கும் கோவி hidden agenda எங்களுக்குத் தெரியாதா என்ன?

  நீங்க நாத்திகர் போல் சீன் போடும் ஆத்திகர் என்பது யாருக்குத் தெரியுதோ இல்லையோ, SK ஐயாவுக்கு நல்லாவே தெரியும்! :)))

  ReplyDelete
 39. //சிவமுருகன், உங்களுக்குத் தந்த பரிசு பொருத்தமானது என்று நம்புகிறேன். //

  இது சிவமுருகனுக்கு

  பொருத்தமானதா?
  பரிசுத்த(ன)மானதா? - ன்னு

  ஒரு மாபெரும் பட்டி மன்றம் நடத்தலாம் அவ்ளோ நல்லா இருக்குது நீங்கள் அளித்த கண்ணன் படம். இதே மாதிரி பல படங்கள் என்னிடம் இருந்தது, ஆனால் இந்த படம் இருந்ததில்லை. மிக்க நன்றி.

  இதை நிகழ்வுகளில் கெஜெட் டேக் செய்து விட்டேன்.

  //பிடித்ததா அந்த பரிசும் வலைப்பதிவர்கள் தந்த ஆசியும். :-)//

  ரொம்ப பிடிச்சிருச்சி. மறுபடியும் டேங்க்ஸ் :-})

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP