மக்கா, புத்தாண்டு கொண்டாட்டம் எல்லாம் எப்படிப் போச்சு? இல்ல, இன்னும் போயிக்கிட்டே இருக்கா? :)
சரி, நேரா விசயத்துக்கு வாரேன்! திருப்பாவைப் போட்டியில் வெற்றி பெற்றது யார்? என்ன பரிசு? :)
மொதல்ல, போட்டிப் பதிவு இங்கே! சரியான விடைகள் இதோ!
இந்தப் போட்டியில் பலரும் ஆர்வங் காட்டிக் கலந்துக்கிட்டீங்க! ரொம்ப நன்றி!விஜய் ஒரு பின்னூட்டத்தில் அருமையாச் சொல்லி இருந்தாருங்க! அடியேனின் எண்ணத்தை அப்படியே பிரதிபலிச்சி இருந்தாரு!
//15க்கு விடை தெரியலை. ஆனா விடையை உங்க கிட்ட கேக்க போறது இல்ல.
முழு பாட்டையும் திரும்ப படிக்க ஒரு வாய்ப்பா எடுத்துக்க போறேன். உங்கள் சேவைக்கு என் வணக்கங்கள்//* திருப்பாவை என்னும் ஒரு அற்புதக் கவிதையைப் பல கோணங்களில் வாசிச்சிப் பாத்திருக்கேன்!
அதுவும் சிறப்புத் தமிழ்ச் சொற்கள்/வட்டாரத் தமிழ்ச் சொற்கள்! *
என் நண்பர்/நண்பிகளான நீங்களும் அந்த வாசிப்பு/சொல் தேடும் மகிழ்ச்சியைப் பெறணும்-ன்னு தான், இப்படி ஒரு ஓப்பன் புக் போட்டி!
*
பிடிச்சி இருந்துச்சா? :)
நூத்துக்கு நூறு வாங்குனவங்க இதோ (22/22):
முதன் முறையிலேயே சரியாகச் சொன்னவர்கள்:
1. குமரன்
2. சின்ன அம்மிணிதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தர்கள்:1. துளசி கோபால்
2. nAradA (சேதுராமன் சுப்ரமணியன்)

* வெற்றியாளர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!
*
வென்றவர் இல்லாமல், உடன் நின்றவர் எல்லார்க்கும் தொப்பி தூக்கல்! (Hats Off) :)
போட்டியைப் பற்றிச் சில குறிப்புக்கள்...
யோவ் பரிசை வாங்கிக் கொண்டு பிறகு கேட்கிறேன்! அதற்குள் என்னய்யா அவசரம்? மன்னா...பரிசு? பரிசு? பரிசு? :))
பொதுப் பரிசு: (அனைத்து நண்பர்களுக்கும்)
வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் அமெரிக்காவில் வந்து ஆற்றிய,அழகுத் தமிழ்-சமயப் பேருரையின் ஒலிக்கோப்பு:
* திராவிட வேதம் - ஆழ்வார் அறிமுகம்!
* தினப்படி வாழ்வில் கீதை: The Daily Gita! (This is in English)
சிறப்புப் பரிசு:
வென்றவர் நால்வரின் பேரைச் சொல்லி,
சென்னை வள்ளுவர் குருகுலத்தில் படிக்கும் சின்னஞ் சிறார்களுக்கு,
Rs.3000/- மதிப்புள்ள அமர்-சித்ர-கதா போன்ற படம் போட்ட புத்தகங்கள்!எங்கும் திருவருள் பெற்று இன்புறவ ரெம்பாவாய்!
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! :)
போட்டியின் ஹை-லைட்ஸ்
* முதன் முதலில் 21/22 சொன்ன ராகவ் - உங்களுக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்! ஏன் மீண்டும் ஆடலை?
* ஜீவ்ஸ் அண்ணன் கலக்கல்ஸ்! படம் புடிச்சி அனுப்பி இருந்தாரு புதின் விடைகளை!
* துளசி டீச்சர் கலக்கிங்ஸ்! நமீதா-ன்னு எல்லாம் விடை சொன்னாங்க! :)
திருப்பாவையை ரொம்பவும் சமய விளக்கமா இல்லாம, அன்றாட வாழ்வியலா, "லோக்கலா" எழுதிப் "புனிதத்தைக்" கெடுக்கறேன்-ன்னு ஏற்கனவே கம்ப்ளெயிண்ட்டு! இதுல நமீதா வேற ஒங்க பதில்ல வந்து ஹாய் சொன்னா எப்படி?:))
* குமரன், சின்ன அம்மிணி அக்கா - உங்க ரெண்டு பேருக்கும் டேங்கீஸ்! 22/22 வாங்கினாலும் ஒங்க பேரை உடனடியாச் சொல்லலை! Just for Others’ Participation! :)
* உற்சாக ஊற்று சேது சார் (nAradA) ஆட்டையில் பெரும் கலக்கு கலக்கினாரு! :) நீங்களே பாருங்க!
//It was Christmas Day. Still it counts for entry into KailAsam or VaikunTham as the case may be although it was neither SivarAtri nor VaikunTha EkAdasi. Get a print-out of this score to show at the gates. Ask KRS to sign it (verified by a notary public)!!//
* தத்துவ வித்தகர் ஜீவா, மற்றும் நண்பர் விஜய் = 21/22 வரை வந்து ஆடிக் கலக்கினாங்க!
* மார்கழி மாசக் கச்சேரி சீசன்-ல கூட, சிமுலேஷன் அண்ணாச்சி வந்து ஆடினாரு!
அனைவருக்கும் நன்றி & அட்வான்ஸ் பொங்க(ல்) வாழ்த்துக்கள்! :)
பந்தலில் திருப்பாவைப் பதிவுகள் பற்றிய ஒரு சிறு குறிப்பு:(என்னிடம் தனிமையில் கோபப்பட்ட சில "புனித ஆன்மீக உள்ளங்கள்", இதைப் படித்துப் பார்த்து, அடியேனைக் கருணையோடு மன்னிப்பீர்களாக!)
பெண் சுதந்திரம் இல்லாத ஒரு காலகட்டத்தில், பெண்ணொருத்தி சொன்ன அற்புதத் தமிழ்க் கவிதை!
ஆன்மீகத்தில் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த ஒரு நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பெண்கள்! ஆனால் யாரும் தலைவி அந்தஸ்துக்கு உயரவில்லை!
வேதங்களைப் பெண்கள் வாயால் ஓதக் கூடாது என்று சொன்ன ஆண்கள், இவள் எழுதியதை மட்டும் "வேதம் அனைத்துக்கும் வித்து" என்று கொண்டாடுகிறார்களே! எப்படி?
இவள் எப்படி ஜெயிச்சிக் காட்டினா என்பது தான் ஆச்சரியமா இருக்கு! இவளை எப்படி வளர விட்டாங்க-ன்னு தான் ஆச்சரியமா இருக்கு!இன்றைய அறிவியல் காலத்தில் கூட, சில "ஆன்மீக" நண்பர்கள் இத்தனை எதிர்ப்பு காட்டுகிறார்கள்! இறைவனின் அழகுத் திருப்படங்கள் இருக்கும் பதிவுகளில், இறையன்பர்களே தொடர்ந்து மைனஸ் குத்தவும் செய்கிறார்கள்! ஆனால் ஆர்வமாப் படித்தும் விடுகிறார்கள்! ஹா ஹா ஹா! :)))
துலக்கர் விழாவைச் சரணாகதியோடு ஒப்பிட்டு பந்தலில் போடுவது "கேவலம்/புறம் தொழல்" என்கிறார்கள்!
சினிமா பாஷையில் ஆன்மீகம் எழுதாதே, லோக்கலா எழுதாதே, மாதவிப் பந்தல் "அலர்ஜி/எங்கோ இடறுகிறது" என்கிறார்கள்!
* ஆனா இவளோ, "எலே, மச்சான், கண்ணாலம், கிரிசை, கீச்-கீச், அல்குல், பெண்டாட்டி, புனித எருமை"-ன்னு லோக்கல் சொற்களை எல்லாம் "வேதம் அனைத்துக்கும் வித்தில்" கொண்டாந்து வைக்கிறா! :)
* ஆற்ற+அனந்தல் என்று கர்மயோக/ஞானயோக கண்மூடித்தனமான பிடிப்பை, பிடி பிடிச்சி பாக்குறா! பத்மநாபனை, பற்பநாபன்-ன்னு தமிழில் மாத்தி வடமொழியாளர் கோவத்தை வேற வாங்கிக்குறா! :)
என்ன ஒரு துணிவு! தெளிவு! எளிமை! ஆழ்தல்!
வாய்ச் சொல் வீரி இல்லை இவள்!
வேதத்தில் சொன்னபடி பேசுபவள் அல்ல! "
நடப்பவள்"!!
இவள் வெற்றியே வெற்றி! - வாழ்க நீ கோதை! வாழ்க என் தோழீ! வாழ்க, வாழ்கவே!
அன்பர்களே,* அடியேன் திருப்பாவைக்கு வரி-வரி விளக்கம் சொல்லவில்லை! சமய ஆராய்ச்சியும் செய்யவில்லை! நான் சொல்வது திருப்பாவைக்கு கோனார் நோட்ஸும் அல்ல! புஸ்தகமாப் போட்டு, பாராயணம் பண்ணச் சொல்லி வினியோகம் செய்யப் போவதும் இல்லை! :)
* இந்தப் பதிவுகள் அனைத்தும், திருப்பாவை என்னும் அற்புதக் கவிதை என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் மட்டுமே! அதான் வரி விளக்கமா இல்லாம, தொடர்புடைய இன்ன பிற சேதிகளையும் சேர்த்தே சொல்கிறேன்!
* ஆன்மீக விளக்கங்களை முதன்மையா வைக்காது, அடியேன் லோக்கலா ஜாலியாச் சொல்லிக் கொண்டு போகிறேன்!
* "ஹை, இது என்ன புதுசா, ஜாலியான ஆன்மீகமா இருக்கே? " - என்று யாராவது ஒரு புதுமுகம் எம்பெருமானுக்கு ஆட்படாதா என்ன? :)
* பெரியவர்கள்/ஆச்சார்யர்களின் திருப்பாவை விளக்கங்கள் = பெருமாளுக்கு முன்பாக உள்ள குலசேகரன் படி போல!
* அடியேன் இப்படி "லோக்கல் பாஷையில்" எழுதுவது = ஆலயத்தின் மூலையில், இலவச மிதியடிக் காப்பகம் போல!
மாதவிப் பந்தலை இனி "செருப்பு வைக்கும் இடம்" என்று நினைத்துக் கொள்ளுங்கள், அன்பர்களே!Smile & Be Happy in the New Year :)))
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
நமசிவாய! ஹரி-ஓம் நமோ நாராயணாய! 
Results of the Poll:
