Friday, January 02, 2009

புபு: திருப்பாவைப் போட்டியில் வெற்றி பெற்றது யார்?

மக்கா, புத்தாண்டு கொண்டாட்டம் எல்லாம் எப்படிப் போச்சு? இல்ல, இன்னும் போயிக்கிட்டே இருக்கா? :)
சரி, நேரா விசயத்துக்கு வாரேன்! திருப்பாவைப் போட்டியில் வெற்றி பெற்றது யார்? என்ன பரிசு? :)


மொதல்ல, போட்டிப் பதிவு இங்கே! சரியான விடைகள் இதோ!

[crossword_answers.jpg]

இந்தப் போட்டியில் பலரும் ஆர்வங் காட்டிக் கலந்துக்கிட்டீங்க! ரொம்ப நன்றி!
விஜய் ஒரு பின்னூட்டத்தில் அருமையாச் சொல்லி இருந்தாருங்க! அடியேனின் எண்ணத்தை அப்படியே பிரதிபலிச்சி இருந்தாரு!
//15க்கு விடை தெரியலை. ஆனா விடையை உங்க கிட்ட கேக்க போறது இல்ல.
முழு பாட்டையும் திரும்ப படிக்க ஒரு வாய்ப்பா எடுத்துக்க போறேன். உங்கள் சேவைக்கு என் வணக்கங்கள்//


* திருப்பாவை என்னும் ஒரு அற்புதக் கவிதையைப் பல கோணங்களில் வாசிச்சிப் பாத்திருக்கேன்! அதுவும் சிறப்புத் தமிழ்ச் சொற்கள்/வட்டாரத் தமிழ்ச் சொற்கள்!

* என் நண்பர்/நண்பிகளான நீங்களும் அந்த வாசிப்பு/சொல் தேடும் மகிழ்ச்சியைப் பெறணும்-ன்னு தான், இப்படி ஒரு ஓப்பன் புக் போட்டி!

* பிடிச்சி இருந்துச்சா? :)


நூத்துக்கு நூறு வாங்குனவங்க இதோ (22/22):

முதன் முறையிலேயே சரியாகச் சொன்னவர்கள்:
1. குமரன்
2. சின்ன அம்மிணி

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தர்கள்:
1. துளசி கோபால்
2. nAradA (சேதுராமன் சுப்ரமணியன்)* வெற்றியாளர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!
* வென்றவர் இல்லாமல், உடன் நின்றவர் எல்லார்க்கும் தொப்பி தூக்கல்! (Hats Off) :)


போட்டியைப் பற்றிச் சில குறிப்புக்கள்...
யோவ் பரிசை வாங்கிக் கொண்டு பிறகு கேட்கிறேன்! அதற்குள் என்னய்யா அவசரம்? மன்னா...பரிசு? பரிசு? பரிசு? :))

பொதுப் பரிசு: (அனைத்து நண்பர்களுக்கும்)
வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் அமெரிக்காவில் வந்து ஆற்றிய,அழகுத் தமிழ்-சமயப் பேருரையின் ஒலிக்கோப்பு:
* திராவிட வேதம் - ஆழ்வார் அறிமுகம்!
Dravida_Vedam_Azhw...

* தினப்படி வாழ்வில் கீதை: The Daily Gita! (This is in English)
Daily_Gita.mp3


சிறப்புப் பரிசு:
வென்றவர் நால்வரின் பேரைச் சொல்லி,
சென்னை வள்ளுவர் குருகுலத்தில் படிக்கும் சின்னஞ் சிறார்களுக்கு,
Rs.3000/- மதிப்புள்ள அமர்-சித்ர-கதா போன்ற படம் போட்ட புத்தகங்கள்!


எங்கும் திருவருள் பெற்று இன்புறவ ரெம்பாவாய்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! :)


போட்டியின் ஹை-லைட்ஸ்
* முதன் முதலில் 21/22 சொன்ன ராகவ் - உங்களுக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்! ஏன் மீண்டும் ஆடலை?

* ஜீவ்ஸ் அண்ணன் கலக்கல்ஸ்! படம் புடிச்சி அனுப்பி இருந்தாரு புதின் விடைகளை!

* துளசி டீச்சர் கலக்கிங்ஸ்! நமீதா-ன்னு எல்லாம் விடை சொன்னாங்க! :)
திருப்பாவையை ரொம்பவும் சமய விளக்கமா இல்லாம, அன்றாட வாழ்வியலா, "லோக்கலா" எழுதிப் "புனிதத்தைக்" கெடுக்கறேன்-ன்னு ஏற்கனவே கம்ப்ளெயிண்ட்டு! இதுல நமீதா வேற ஒங்க பதில்ல வந்து ஹாய் சொன்னா எப்படி?:))

* குமரன், சின்ன அம்மிணி அக்கா - உங்க ரெண்டு பேருக்கும் டேங்கீஸ்! 22/22 வாங்கினாலும் ஒங்க பேரை உடனடியாச் சொல்லலை! Just for Others’ Participation! :)

* உற்சாக ஊற்று சேது சார் (nAradA) ஆட்டையில் பெரும் கலக்கு கலக்கினாரு! :) நீங்களே பாருங்க!
//It was Christmas Day. Still it counts for entry into KailAsam or VaikunTham as the case may be although it was neither SivarAtri nor VaikunTha EkAdasi. Get a print-out of this score to show at the gates. Ask KRS to sign it (verified by a notary public)!!//

* தத்துவ வித்தகர் ஜீவா, மற்றும் நண்பர் விஜய் = 21/22 வரை வந்து ஆடிக் கலக்கினாங்க!

* மார்கழி மாசக் கச்சேரி சீசன்-ல கூட, சிமுலேஷன் அண்ணாச்சி வந்து ஆடினாரு!

அனைவருக்கும் நன்றி & அட்வான்ஸ் பொங்க(ல்) வாழ்த்துக்கள்! :)பந்தலில் திருப்பாவைப் பதிவுகள் பற்றிய ஒரு சிறு குறிப்பு:
(என்னிடம் தனிமையில் கோபப்பட்ட சில "புனித ஆன்மீக உள்ளங்கள்", இதைப் படித்துப் பார்த்து, அடியேனைக் கருணையோடு மன்னிப்பீர்களாக!)

பெண் சுதந்திரம் இல்லாத ஒரு காலகட்டத்தில், பெண்ணொருத்தி சொன்ன அற்புதத் தமிழ்க் கவிதை!
ஆன்மீகத்தில் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த ஒரு நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பெண்கள்! ஆனால் யாரும் தலைவி அந்தஸ்துக்கு உயரவில்லை!
வேதங்களைப் பெண்கள் வாயால் ஓதக் கூடாது என்று சொன்ன ஆண்கள், இவள் எழுதியதை மட்டும் "வேதம் அனைத்துக்கும் வித்து" என்று கொண்டாடுகிறார்களே! எப்படி?

இவள் எப்படி ஜெயிச்சிக் காட்டினா என்பது தான் ஆச்சரியமா இருக்கு! இவளை எப்படி வளர விட்டாங்க-ன்னு தான் ஆச்சரியமா இருக்கு!

இன்றைய அறிவியல் காலத்தில் கூட, சில "ஆன்மீக" நண்பர்கள் இத்தனை எதிர்ப்பு காட்டுகிறார்கள்! இறைவனின் அழகுத் திருப்படங்கள் இருக்கும் பதிவுகளில், இறையன்பர்களே தொடர்ந்து மைனஸ் குத்தவும் செய்கிறார்கள்! ஆனால் ஆர்வமாப் படித்தும் விடுகிறார்கள்! ஹா ஹா ஹா! :)))
துலக்கர் விழாவைச் சரணாகதியோடு ஒப்பிட்டு பந்தலில் போடுவது "கேவலம்/புறம் தொழல்" என்கிறார்கள்!
சினிமா பாஷையில் ஆன்மீகம் எழுதாதே, லோக்கலா எழுதாதே, மாதவிப் பந்தல் "அலர்ஜி/எங்கோ இடறுகிறது" என்கிறார்கள்!

* ஆனா இவளோ, "எலே, மச்சான், கண்ணாலம், கிரிசை, கீச்-கீச், அல்குல், பெண்டாட்டி, புனித எருமை"-ன்னு லோக்கல் சொற்களை எல்லாம் "வேதம் அனைத்துக்கும் வித்தில்" கொண்டாந்து வைக்கிறா! :)
* ஆற்ற+அனந்தல் என்று கர்மயோக/ஞானயோக கண்மூடித்தனமான பிடிப்பை, பிடி பிடிச்சி பாக்குறா! பத்மநாபனை, பற்பநாபன்-ன்னு தமிழில் மாத்தி வடமொழியாளர் கோவத்தை வேற வாங்கிக்குறா! :)

என்ன ஒரு துணிவு! தெளிவு! எளிமை! ஆழ்தல்!
வாய்ச் சொல் வீரி இல்லை இவள்!
வேதத்தில் சொன்னபடி பேசுபவள் அல்ல! "நடப்பவள்"!!
இவள் வெற்றியே வெற்றி! - வாழ்க நீ கோதை! வாழ்க என் தோழீ! வாழ்க, வாழ்கவே!அன்பர்களே,
* அடியேன் திருப்பாவைக்கு வரி-வரி விளக்கம் சொல்லவில்லை! சமய ஆராய்ச்சியும் செய்யவில்லை! நான் சொல்வது திருப்பாவைக்கு கோனார் நோட்ஸும் அல்ல! புஸ்தகமாப் போட்டு, பாராயணம் பண்ணச் சொல்லி வினியோகம் செய்யப் போவதும் இல்லை! :)

* இந்தப் பதிவுகள் அனைத்தும், திருப்பாவை என்னும் அற்புதக் கவிதை என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் மட்டுமே! அதான் வரி விளக்கமா இல்லாம, தொடர்புடைய இன்ன பிற சேதிகளையும் சேர்த்தே சொல்கிறேன்!

* ஆன்மீக விளக்கங்களை முதன்மையா வைக்காது, அடியேன் லோக்கலா ஜாலியாச் சொல்லிக் கொண்டு போகிறேன்!
* "ஹை, இது என்ன புதுசா, ஜாலியான ஆன்மீகமா இருக்கே? " - என்று யாராவது ஒரு புதுமுகம் எம்பெருமானுக்கு ஆட்படாதா என்ன? :)

* பெரியவர்கள்/ஆச்சார்யர்களின் திருப்பாவை விளக்கங்கள் = பெருமாளுக்கு முன்பாக உள்ள குலசேகரன் படி போல!
* அடியேன் இப்படி "லோக்கல் பாஷையில்" எழுதுவது = ஆலயத்தின் மூலையில், இலவச மிதியடிக் காப்பகம் போல!

மாதவிப் பந்தலை இனி "செருப்பு வைக்கும் இடம்" என்று நினைத்துக் கொள்ளுங்கள், அன்பர்களே!

Smile & Be Happy in the New Year :)))
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
நமசிவாய! ஹரி-ஓம் நமோ நாராயணாய!Results of the Poll:

30 comments:

 1. குமரன், சின்ன அம்மிணி, துளசி டீச்சர், சேதுராமன் சார்.. வாழ்த்துக்கள் பல..

  என்னைப் போன்ற எளியோரை ஆர்வமுடன் கலந்து கொள்ளச் செய்த ரவி அண்ணாவிற்கு வணக்கங்கள் பல..

  அனைவருக்கும் நம்மாழ்வார் அமுதத்தை பருகத் தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 2. //பிடிச்சி இருந்துச்சா? :)//

  ரொம்ப பிடிச்சிருந்துச்சுண்ணா.. அவ்வப்போது இது மாதிரி போட்டி வையுங்கள், மிகவும் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 3. //(என்னிடம் தனிமையில் கோபப்பட்ட சில "புனித ஆன்மீக உள்ளங்கள்", இதைப் படித்துப் பார்த்து, அடியேனைக் கருணையோடு மன்னிப்பீர்களாக!)/

  போற்றுவார் போற்றலும் கோபப்படுவோர் கோபமும்
  கண்ணனுக்கே போகிறது என்று சொல்லி விடுங்களேன்.

  ReplyDelete
 4. திருப்பாவை முழுதும் மார்கழில படிக்க நல்லாவே இருந்தது உங்க புண்ணியத்தில. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. //அடியேன் திருப்பாவைக்கு வரி-வரி விளக்கம் சொல்லவில்லை! சமய ஆராய்ச்சியும் செய்யவில்லை! நான் சொல்வது திருப்பாவைக்கு கோனார் நோட்ஸும் அல்ல! புஸ்தகமாப் போட்டு, பாராயணம் பண்ணச் சொல்லி வினியோகம் செய்யப் போவதும் இல்லை! :) //

  அண்ணா, சிலரின் வருத்தம் என்னவென்றால், பிற்காலத்தில் இணையத்தில் திருப்பாவை குறித்து விளக்கம் தேடுபவர்களுக்கு மாதவிப்பந்தல் ஒரு ஆதாரமாக அமைந்து இதில் சொன்னதே சரி இல்லை தவறு என்று எடுத்துக் கொள்வர் என்ற பயம். உதாரணத்திற்கு வடமதுரை மைந்தன் என்பதற்கு தங்களின் விளக்கம் பிற்காலத்தில் குழப்பத்தை உண்டாக்க நேரிடலாம்.

  அது மட்டுமில்லாமல் ஆச்சார்யர்கள் சொன்ன பொருளிலிருந்து விலகி இருக்கும் எந்த ஒரு விளக்கமும் ஏற்புடையதன்று என்று வைராக்கியம் உடையோரும் உள்ளனர்.

  ReplyDelete
 6. நாளை திருவரங்கனை சேவிக்க செல்கின்றேன். அவரிடமே உங்களின் திருப்பாவை பதிவுகள் பற்றி விசாரித்து வந்து விடுகிறேன். :)

  ReplyDelete
 7. KRS:
  It was nice of you to donate Rs. 3000 to the Valluvar Gurukulam for the purchase of books for the young minds there. Let them enjoy the books, flourish, and become great in their own right in the future!

  ReplyDelete
 8. >>தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தர்கள்:<<

  ....or Gahzni(s)!!!!!

  ReplyDelete
 9. சபாஷ் கண்ணபிரான் ரவிசங்கர்

  மிக அதீதமான பொய்யான தன்னடக்கத்துடன் எழுதப்பட்ட இந்தப் பதிவும், இந்தப் பதிவின் தொனியும்... "புனித ஆன்மீக உள்ளங்கள்" என்று அடைப்புக்குறியிட்டு எழுதியுள்ள எள்ளலும் புல்லரிக்க வைக்கிறது.வேறு யார் என்ன சொன்னார்களோ தெரியாது ஆனால் எ அ பாலாவுடனான உங்கள் பின்னூட்ட உரையாடல் இன்னும் அவரது பதிவில் இருக்கிறது. நீங்களாக வந்து மாதவிப் பந்தல் பக்கம் ஏன் வருவதில்லை எனக் கேட்டதாலேயே மனதில் பட்ட உருத்தலைச் சொல்லியிருந்தார் . அவர் கருத்தைச் சரியென்றோ தவறேன்றோ எடுத்துக் கொள்வது உங்கள் இஷ்டம்.அதற்காக இப்படிப் பட்ட எள்ளல் நடைப் பதிவுகளும், விளித்தல்களும் தேவையே இல்லை.இதை நான் ஏன் எழுதுகிறேனென்றால் இதே கருத்தை நானும் ஒரிரு முறை உங்களிடம் சொல்லியிருப்பதனாலே, இது எனக்கும் சேர்த்தே என எடுத்துக் கொள்கிறேன்

  அதுவுமல்லாது "இறையன்பர்களே தொடர்ந்து மைனஸ் குத்தவும் செய்கிறார்கள்! ஆனால் ஆர்வமாப் படித்தும் விடுகிறார்கள்!" என்ற அறிய கண்டுபிடிப்பின் மூலம் என்னைப் போன்ற இறையன்பர் மற்றும் உங்கள் பதிவுகளைப் படிப்பவர்களையும் நன்றாக செருப்பாலடித்திருக்கிறீர்கள்.உங்கள் தன்னடக்க வார்த்தைகளில் சொல்லப் போனால் "செருப்பு வைக்கும் இடம்"தானே.அதனால்தான் வந்ததற்கு பரிசு கிடைக்கிறதோ என்னவோ.

  நன்றி.

  I WISH YOU ALL THE VERY BEST IN 2009

  ReplyDelete
 10. //Raghav said...
  என்னைப் போன்ற எளியோரை ஆர்வமுடன் கலந்து கொள்ளச் செய்த ரவி அண்ணாவிற்கு வணக்கங்கள் பல..//

  ஹா ஹா ஹா
  நீங்க எளியோரா?
  நீங்க தான் பெரியோர்!
  பெரியோரில் எளியோர்-ன்னு வேணும்னா சொல்லுங்க! :)
  21/22 Score முதலில் உனது தான்-பா ராகவ்! :)

  //அனைவருக்கும் நம்மாழ்வார் அமுதத்தை பருகத் தந்தமைக்கு நன்றி//

  அது அனைத்து ஆழ்வார்களின் அறிமுகம், ராகவ்!
  திராவிட வேதம் பற்றியும் சொல்கிறார் சுவாமிகள்!

  ReplyDelete
 11. //Raghav said...
  ரொம்ப பிடிச்சிருந்துச்சுண்ணா.. அவ்வப்போது இது மாதிரி போட்டி வையுங்கள், மிகவும் நன்றாக இருக்கும்//

  நன்றி!
  அதான் அப்பப்போ புதிரா புனிதமா வருதே! :)

  ReplyDelete
 12. வேளுக்குடி சுவாமிகளின் திராவிட வேதம் சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தேன். நன்றி இரவிசங்கர்.

  சிறுவர்களுக்கு சித்திரக் கதைகளை வாங்கித் தருவது மிக நல்ல வேலை. மிக்க நன்றி.

  ReplyDelete
 13. //அண்ணா, சிலரின் வருத்தம் என்னவென்றால், பிற்காலத்தில் இணையத்தில் திருப்பாவை குறித்து விளக்கம் தேடுபவர்களுக்கு மாதவிப்பந்தல் ஒரு ஆதாரமாக அமைந்து இதில் சொன்னதே சரி இல்லை தவறு என்று எடுத்துக் கொள்வர் என்ற பயம். உதாரணத்திற்கு வடமதுரை மைந்தன் என்பதற்கு தங்களின் விளக்கம் பிற்காலத்தில் குழப்பத்தை உண்டாக்க நேரிடலாம்.

  அது மட்டுமில்லாமல் ஆச்சார்யர்கள் சொன்ன பொருளிலிருந்து விலகி இருக்கும் எந்த ஒரு விளக்கமும் ஏற்புடையதன்று என்று வைராக்கியம் உடையோரும் உள்ளனர்.
  //

  நேற்று நானும் இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது தோன்றிய எண்ணம் ஒன்று. பதிவில் இப்போது நீங்கள் போட்டிருக்கும் டிஸ்கியை ஒவ்வொரு திருப்பாவை இடுகைக்கும் கீழே போட்டுவிடுங்கள் இரவிசங்கர். அதன் மூலம் எதிர்காலத்தில் யாராவது திருப்பாவை விளக்கங்கள் படிக்க நினைத்து உங்கள் இடுகைகள் கிடைத்தால் இவை திருப்பாவை உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமே என்று அறிந்து கொள்வர். அதற்கு மேலும் இவையே மரபார்ந்த விளக்கங்கள் என்று அவர்கள் எடுத்துக் கொண்டால் அது பெருமாள் திருவுள்ளம் என்றே நினைத்துக் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 14. //Raghav said...
  போற்றுவார் போற்றலும் கோபப்படுவோர் கோபமும்
  கண்ணனுக்கே போகிறது என்று சொல்லி விடுங்களேன்//

  ஹா ஹா ஹா
  அடியேனுக்கு எப்பமே கிருஷ்ணார்ப்பணம் தான் ராகவ்! :)

  இங்கு போற்றலுக்கோ, தூற்றலுக்கோ எந்த வருத்தமும் இல்லை!
  அனைவரையும் அடியார்களாகவே அடியேன் பார்க்கிறேன்! அதனால் தான் அடியார் புரிதலை அடியேன் வேண்டுகிறேன்!

  அடியவர் சபையில் ஆச்சார்ய ஹிருதயத்தை வைக்க வேண்டும்! ஆச்சார்யன் மாறன் சடகோபன் சொல்வதும் இது தான்!

  "சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ!
  என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே!"

  ReplyDelete
 15. //சின்ன அம்மிணி said...
  திருப்பாவை முழுதும் மார்கழில படிக்க நல்லாவே இருந்தது உங்க புண்ணியத்தில//

  நன்றி-க்கா!
  இன்னும் திருப்பாவை முடியல! அதுக்குள்ள "முழுதும்"-ன்னு சொல்லீறாதீங்க! தொடர்ந்து வாங்கக்கா! :)

  உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. //மிக அதீதமான பொய்யான தன்னடக்கத்துடன் எழுதப்பட்ட இந்தப் பதிவும்//

  repeateeee....

  ReplyDelete
 17. நீங்கள் எத்தனை முறை அடியார் புரிதலைக் கேட்டாலும் அவர்கள் மனம் புண்படும் படி ஏதேனும் பேசிக் கொண்டிருந்தால் அந்தப் புரிதல் கிடைக்காது. இனி சில நாட்களுக்கு அவர்கள் புரிதலைப் பற்றியோ ஏற்றுக் கொள்ளலைப் பற்றியோ பேசுவதில்லை என்று உறுதி கொள்ளுங்கள். உங்கள் திருப்பாவை கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்யுங்கள்.

  சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ என்பது உங்கள் திருப்பாவை அனுபவங்களுடன் நிற்கட்டும். அடியார்களின் புரிதலைக் கேட்பதிலும் புனித ஆன்மிக உள்ளங்கள் என்று பேசுவதிலும் இருக்க வேண்டாம்.

  ReplyDelete
 18. //Raghav said...
  அண்ணா, சிலரின் வருத்தம் என்னவென்றால்,
  பிற்காலத்தில் இணையத்தில் திருப்பாவை குறித்து விளக்கம் தேடுபவர்களுக்கு மாதவிப்பந்தல் ஒரு ஆதாரமாக அமைந்து//

  ஹா ஹா ஹா!
  எது ஆதாரம் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை!
  திருப்பாதாரமே ஆதாரம்! அதுவே தீர்மானிக்கும்!

  //இதில் சொன்னதே சரி இல்லை தவறு என்று எடுத்துக் கொள்வர் என்ற பயம்//

  கோதை சொன்னதே ஆதாரமென்று எடுத்துக் கொள்வார்களோ என்று அன்று "பயப்பட்டு" இருந்தால், வாய் அமுதம் தா போன்ற நாச்சியார் திருமொழிகள் கிடைத்திருக்காது!

  //உதாரணத்திற்கு வடமதுரை மைந்தன் என்பதற்கு தங்களின் விளக்கம் பிற்காலத்தில் குழப்பத்தை உண்டாக்க நேரிடலாம்//

  வடமதுரை மைந்தன் விளக்கம் ஆபத்தானதும் அல்ல! தகாததும் அல்ல! கோதையின் கற்பனையின் கற்பனை என்றே சொல்லி விட்டேன்!

  //அது மட்டுமில்லாமல் ஆச்சார்யர்கள் சொன்ன பொருளிலிருந்து விலகி இருக்கும் எந்த ஒரு விளக்கமும் ஏற்புடையதன்று என்று வைராக்கியம் உடையோரும் உள்ளனர்//

  அது வைராக்யம் அல்ல! மமதை!

  ஆச்சார்யர் ராமானுசர் சொன்ன ஒரு ஸ்ரீபாஷ்ய விளக்கத்தையே அமைதியாக ஆனால் உறுதியாக எழுத மறுத்தார் கூரத்தாழ்வான்! பிற்பாடு இராமானுசர் தன் தவறை உணர்ந்து இறைஞ்சினார்!

  ஆச்சார்யர்கள் சொன்ன பொருளிலிருந்து எங்கே விலகியது என்று சொல்லலாமே! :)

  ReplyDelete
 19. //Raghav said...
  நாளை திருவரங்கனை சேவிக்க செல்கின்றேன்//

  அருமை! அருமை!
  நன்றாகச் சேவித்து விட்டு வாருங்கள்!
  அடியேன் இப்போது வரவில்லை! கோதையுடன் பிறகு வருகிறேன் என்றும் சொல்லி விடுங்கள்! :)

  //அவரிடமே உங்களின் திருப்பாவை பதிவுகள் பற்றி விசாரித்து வந்து விடுகிறேன். :)//

  அடியேன் நற்பயன்! அப்படியே தென் அரங்கன் பிரசாதித்து அருளட்டும்!

  இங்கு நியூயார்க் பொமோனா வட அரங்கன் பிரசாதித்து விட்டான்! :)

  ReplyDelete
 20. //nAradA said...
  KRS:
  young minds there. Let them enjoy the books, flourish, and become great in their own right in the future!//

  ததாஸ்து! ஆமென்! அப்படியே ஆகட்டும்! நன்றி சேது சார்!

  ReplyDelete
 21. //nAradA said...
  >>தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தர்கள்:<<

  ....or Gahzni(s)!!!!!//

  ஹிஹி! உங்கள் ஊக்கமே ஊக்கம் சேது சார்!
  கஜினி இந்திப் படம் பார்த்த எஃபெக்ட்டோ? :))

  ReplyDelete
 22. //ச.சங்கர் said...//

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ச.சங்கர் (அண்ணே!)

  //மிக அதீதமான பொய்யான தன்னடக்கத்துடன் எழுதப்பட்ட இந்தப் பதிவும்//

  என் தன்னடக்கம் பொய்யா என்பதைத் தாங்கள் தீர்மானிக்கத் தேவையில்லை! அது அரங்கன் பணி!

  //ஆனால் எ அ பாலாவுடனான உங்கள் பின்னூட்ட உரையாடல் இன்னும் அவரது பதிவில் இருக்கிறது//

  ஆகா! அதான் "ஆப்தரான" நீங்க வந்து பேசறீங்க போல!:)

  //நீங்களாக வந்து மாதவிப் பந்தல் பக்கம் ஏன் வருவதில்லை எனக் கேட்டதாலேயே மனதில் பட்ட உருத்தலைச் சொல்லியிருந்தார்//

  அதற்கு அங்கேயே பதில் சொல்லியாகிவிட்டது! அதை பாலாவும் படித்து விட்டார்!
  அவர் வராவிட்டால் என்ன, கோதை அங்கும் இருக்கிறாளே, அடியேன் அங்கும் வந்து களிப்பேன் என்று பாலாவிடம் மகிழ்வுடன் அப்போதே சொல்லி விட்டேனே!

  பாவம், அவரை இதில் தேவையில்லாமல் தொடர்புபடுத்தி, உங்கள் மன ஓட்டத்துக்காக, அவருக்கு சங்கடம் உருவாக்காதீர்கள்!

  பதிவில் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன்!
  //என்னிடம் "தனிமையில்" கோபப்பட்ட//
  * பாலா சொன்னது பதிவில்! அவர் தனிமையிலும் சொல்லவில்லை!
  * பாலா என்னிடம் கோபப்படவும் இல்லை!

  எதையும் கருத்தாகப் பார்க்காமல், அவரைச் சொன்னாரோ, இவரைச் சொன்னாரோ-ன்னு ஆட்களுடன் மட்டுமே பொருத்திப் பொருத்திப் பார்க்கும் இது போன்ற அதீத பழக்கம் மறையட்டும்!

  ReplyDelete
 23. @ச.சங்கர்
  //அதற்காக இப்படிப் பட்ட எள்ளல் நடைப் பதிவுகளும், விளித்தல்களும் தேவையே இல்லை//

  அது உங்களுக்கு எள்ளலாகப் பட்டால் எள்ளல்! மனத்து-உள்ளலாகப் பட்டால் உள்ளல்!

  நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புட்பம் சார்த்தியே
  ...
  நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்?
  என்ற சித்தரின் வாக்கு எள்ளல் இல்லை! அவர் ஆலயங்களை எள்ளவில்லை!
  இல்லை, அவர் எள்ளினார் தான் என்று நீங்கள் துள்ளினாலும், அவருக்கு அதில் வருத்தமும் இல்லை!

  //என்னைப் போன்ற இறையன்பர் மற்றும் உங்கள் பதிவுகளைப் படிப்பவர்களையும் நன்றாக செருப்பாலடித்திருக்கிறீர்கள்//

  மிக அதீதமான பொய்யான வருத்தம் என்று உங்களைப் போலவே நானும் சொல்லட்டுமா? :)

  அடியேன் யாரையும் செருப்பால் அடிப்பவனும் இல்லை! அதிர்ந்து பேசுபவனும் இல்லை! இதை இங்குள்ள பலரும் அறிவார்கள்! உங்கள் மனச்சாட்சியும் அறியும்!
  அதே சமயம் ஆச்சார அனுஷ்டான எதிரி என்று யாரையும் கைநீட்டுபவனும் இல்லை!

  உங்களை அடிக்காத முன்பே அடித்தேன் என்று சொன்னாலும், அதற்கும் அடியேன் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்!

  //உங்கள் தன்னடக்க வார்த்தைகளில் சொல்லப் போனால் "செருப்பு வைக்கும் இடம்"தானே. அதனால் தான் வந்ததற்கு பரிசு கிடைக்கிறதோ என்னவோ//

  செருப்பு வைக்கும் இடம் = பாத ரட்சை! ரட்சிக்கும் இடம்! பாதுகா சகஸ்ரம்! ஸ்ரீ பாத தூளி! தொண்டர்-அடிப்-பொடி!
  அங்கு சுயநலச் சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்ட பகவத் பிரசாதம் மட்டுமே கிட்டும்! அதுவே பரிசு!

  இங்கு இப் "பரிசு" உரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
  செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால்
  எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

  ReplyDelete
 24. //குமரன் (Kumaran) said...
  வேளுக்குடி சுவாமிகளின் திராவிட வேதம் சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தேன். நன்றி இரவிசங்கர்//

  ஆகா! அதற்குள்ளாகவா? சூப்பர்!
  Daily Gita-வும் கேளுங்க! உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்! சுவாமிகள் ஆங்கிலத்திலும் வெளுத்துக் கட்டுகிறார்! :)

  //சிறுவர்களுக்கு சித்திரக் கதைகளை வாங்கித் தருவது மிக நல்ல வேலை. மிக்க நன்றி//

  தருவது வெற்றி பெற்ற நீங்க தான்!
  ஸோ, உங்களுக்குத் தான் நன்றி!:)

  ReplyDelete
 25. //குமரன் (Kumaran) said...
  பதிவில் இப்போது நீங்கள் போட்டிருக்கும் டிஸ்கியை ஒவ்வொரு திருப்பாவை இடுகைக்கும் கீழே போட்டுவிடுங்கள் இரவிசங்கர்//

  இந்தப் பதிவுகளை ஆரம்பிக்கும் போதே, பெரிய எழுத்தில், நிரந்தரமாக, இடப் பக்கப் பக்கப் பட்டையில் (Side Bar) போட்டு விட்டுத் தான் ஆரம்பித்தேன் குமரன்!

  //இவையே மரபார்ந்த விளக்கங்கள் என்று அவர்கள் எடுத்துக் கொண்டால் அது பெருமாள் திருவுள்ளம் என்றே நினைத்துக் கொள்ள வேண்டும்//

  ஆகா! எம்பெருமான் திருவுள்ள உகப்பே உகப்பு! :)

  ReplyDelete
 26. //குமரன் (Kumaran) said...
  பதிவில் இப்போது நீங்கள் போட்டிருக்கும் டிஸ்கியை ஒவ்வொரு திருப்பாவை இடுகைக்கும் கீழே போட்டுவிடுங்கள் இரவிசங்கர்//

  இந்தப் பதிவுகளை ஆரம்பிக்கும் போதே, பெரிய எழுத்தில், நிரந்தரமாக, இடப் பக்கப் பக்கப் பட்டையில் (Side Bar) போட்டு விட்டுத் தான் ஆரம்பித்தேன் குமரன்!

  //இவையே மரபார்ந்த விளக்கங்கள் என்று அவர்கள் எடுத்துக் கொண்டால் அது பெருமாள் திருவுள்ளம் என்றே நினைத்துக் கொள்ள வேண்டும்//

  ஆகா! எம்பெருமான் திருவுள்ள உகப்பே உகப்பு! :)

  ReplyDelete
 27. //Anonymous said...
  //மிக அதீதமான பொய்யான தன்னடக்கத்துடன் எழுதப்பட்ட இந்தப் பதிவும்//
  repeateeee....//

  ரிப்பீட்டே! :)
  அடியேன் விளக்கத்துக்கும் ரிப்பீட்டே! :)

  பொய்யான கும்மியில் களித்துக் கொண்டிருங்கள் அனானி அவர்களே! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 28. //Anonymous said...
  நீங்கள் எத்தனை முறை அடியார் புரிதலைக் கேட்டாலும் அவர்கள் மனம் புண்படும் படி ஏதேனும் பேசிக் கொண்டிருந்தால் அந்தப் புரிதல் கிடைக்காது//

  அதை அடியார்கள் சொல்லட்டும்! நல்ல அனானிகள் சொல்லட்டும்! (போலியான)அனானிகள் அல்ல!

  "நட்ட கல்லும் பேசுமோ?" என்ற சித்தர் வாக்குகளில் உண்மையான அடியார்கள் மனம் புண்படுவது இல்லை! ஏனென்றால் அதில் புண்படுத்தலும் இல்லை! ஆனாலும் அதில் புண்படுபவர்களும் இருக்கிறார்கள்! அவர்கள் மனம் புண்படுவதில்லை! வேறு ஏதோ புண்படுகிறது! பதைக்கிறது! :)

  //உங்கள் திருப்பாவை கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்யுங்கள்//

  நன்றி!

  //சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ என்பது உங்கள் திருப்பாவை அனுபவங்களுடன் நிற்கட்டும்//

  ஆழ்வாரின் வேத வரிகள் என் அனுபவங்களுடன் மட்டும் நிற்காது! அது காட்டாறு! அடியேன் அடியார் புரிதலை மட்டுமே கேட்டேன்! ஏனையோர் புரிதலை அல்ல!

  அடியார்களின் புரிதல் ஏற்கனவே இருக்கு! இது போன்ற சமயங்களில் அந்தப் புரிதல் மேம்படும்!

  ReplyDelete
 29. புத்தாண்டு அதுவுமா, பத்து பேர் தனிப்பட்ட முறையில் சூழ்ந்து கொண்டு, "பதிவுகள்" பற்றிக் கோபம் காட்டினால், ஒவ்வொருத்தருக்கும் தனியாகப் பேசிக் கொண்டிருக்க முடியாது! பதிவைப் பற்றிய கோபம் என்பாதாலும் தான் பதிவிலேயே அதைச் சொன்னேன்!

  இனி...
  1. நியாயமான கருத்து எதுவாயினும் பதிவிலேயே சொல்லுங்கள்!
  இனி ஜி-டாக்கில் சூழ்தல், வீணான விவாதங்கள் இதெல்லாம் கிடையவே கிடையாது!
  பதிவில் முறையான விவாதத்திற்குப் பின்னரே ஏற்றுக் கொள்ளல் இருக்கும்!

  அன்பர்கள் குமரன், ஜீவா, சேது சார், கெபி அக்கா, சிவத் தமிழோன் இன்னும் பலப் பலர், மாறுபட்ட கருத்துகளையும் அருமையாகச் சொல்கிறார்களே! குணானுபவமான விவாதம் நடைபெறுகிறதே!

  கோவி. கண்ணன் உட்பட படு தீவிரமான எதிர்க் கருத்துக்களுக்கும் இந்த வலைப்பூவில் என்றுமே மதிப்பு இருந்திருக்கு! நாத்திகக் கருத்துக்கே மதிப்பு உண்டு என்றால் ஆத்திகக் கருத்துக்கு கண்டிப்பாக உண்டு! வாக்கெடுப்பிலும் எனக்கு எதிரான ஆப்ஷனையும் நானே வைப்பேன்! அந்த நேர்மையும் உண்டு!

  ஆனால் ஆச்சார/அனுஷ்டானம் இல்லாத அலர்ஜி/இடறல் இடம்,
  துலுக்க/கிறித்துவப் பதிவுகள் போடும் வீம்பு/அசுத்த இடம் = இப்படியெல்லாம் பேசும் ஆச்சாரக் கைகாட்டல்களுக்கு இங்கே இனி அனுமதி கிடையாது! Big No!

  2. அனானி ஆப்ஷனைத் தூக்கப் போவதில்லை! பல நல்ல அனானி நண்பர்கள், தங்கள் பெயரைக் கீழே குறித்து எழுதுகிறார்கள்!

  ஆனால்
  போலியான அனானிகளின் ரிப்பீட்டே கும்மி,
  சைவ/வைணவக் கும்மி,
  ஆச்சார-அனுஷ்டான கும்மி,
  நீங்க முன்பு மாதிரி இல்ல; ரொம்ப மாறிட்டீங்க போன்ற கும்மி,
  உங்களுக்கு ஆபிசார ஹோமம் செய்யணும், திரிகரண சுத்தி செய்யணும் போன்ற கும்மி,
  தமிழ் அர்ச்சனைக்கு எதிரான கும்மி
  = இவை எல்லாம் கண்டிப்பாக மட்டுறுத்தப்படும்! அந்த அனானிகளுக்கு பதிலும் சொல்லிக் கொண்டிருக்கப் போவதில்லை!

  3. சமயத்தில் உள்ள நிறைகளைப் பேசி மகிழும் அதே நேரத்தில், சமயத்தில் உள்ள குறைகள், அதைக் களைதலுக்கான யோசனைகள், பலதரப்பட்ட பார்வைகள் தொடரும்!- நம் வீட்டை நாமே சுத்தம் செய்து கொள்வது போல தெரிந்து தெளிதல்!

  இது பரபரக்குக்காகச் செய்யப்படுவதில்லை! அதற்காகத் தான் செய்யப்படுகிறது என்று சிலர் மட்டும் தவறாக நினைத்தாலும், அதனால் கவலையும் இல்லை!

  ஆன்மீகம் என்பது சுயநலம், சுயமோட்ச ஆன்மீகம் மட்டுமே இல்லை! சமூக, சமூக மோட்ச ஆன்மீகமும் கூட! இது போன்ற ஆக்கங்கள் தொடர்ந்து தொடரும்! :)
  All The Best! நல் வாழ்த்துக்கள்!

  அஸ்மத் குருர் பகவதோஸ்ய "தயைஏஏஏஏஏஏக சிந்தோ"
  ராமானுஜஸ்ய சரணெள சரணம் ப்ரபத்யே!
  (சுபமஸ்து)

  ReplyDelete
 30. >>ஹிஹி! உங்கள் ஊக்கமே ஊக்கம் சேது சார்!
  கஜினி இந்திப் படம் பார்த்த எஃபெக்ட்டோ? :))<<

  Who, me?
  kabhi nahi!. main hindi nahi jAnthA hUn, nahi bOlthA hUn, aur hindi cinema nahi dEkthA hUn
  sub such hi!

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP