Sunday, January 25, 2009

தேவாரம்! ஸ்ரீரங்கம்! கருவூர் சித்தர்! இராஜராஜ சோழன்!

வாங்க மக்களே! இனிய குடியரசு நாள் வாழ்த்துக்கள்! அங்கோ, உங்களுக்கு நீண்ட விடுமுறை வார இறுதி! இங்கோ, எங்களுக்கு ஓயாத உழைப்பு! :)
வாங்க, தேவாரப் பதிவுகளின் தொடர்ச்சியாக, இன்னிக்கி ஒரு சூப்பர் தேவாரம் பார்க்கலாம்! கூடவே பாடவும் சொல்லிக் கொடுக்கறரு ஒருத்தரு! அதோட ஒரு சூப்பர் கதையும் பார்ப்போம்!

தேவாரப் பதிவுகளில்....இது வரை
* சம்பந்தர் - முதல் தேவாரம்,
* அப்பர் - ஆணும் பெண்ணுமாய் பூசை,
* சுந்தரர் - நண்பனை மறந்தாயோ?,
* மணிவாசகர் - தமிழ் அர்ச்சனை!,
* காரைக்கால் அம்மையார் - பெண் தேவாரம் - Icon Poetry!
என்று சில பதிகங்களைப் பார்த்தோம்!

அப்படியே...
* தமிழ் ஈழம் பற்றிப் பாடிய நாயன்மார்கள்!
* நாயன்மார்கள் 63 or 72?
என்றும், தொகையடியார் பற்றிய சில குறிப்புகளையும் பார்த்தோம்! மாணிக்க வாசகர் அறுபத்து மூவருள் ஒருவர் இல்லை என்ற ஒரு தகவலும், அதற்கு சில பெரியோர்கள் அளித்த விளக்கமும் இன்னும் பல் சுவை கூட்டின!

இன்னிக்கி பார்க்கப் போறது, கருவூர் சித்தரின் தேவாரம்!

ஆகா...கருவூர் சித்தரா? அவர் தேவாரம் எல்லாம் கூடப் பாடியிருக்காரா என்ன? சித்த புருஷர்கள், பொதுவாகக் கோயில் பற்றி எல்லாம் பாட மாட்டாங்களே? நட்ட கல்லும் பேசுமோ?-ன்னு, "இடறுவது போலவும், அலர்ஜி போலவும்" தானே அவங்க பாடுவாங்க? "குழப்பவாதம்" போல் தொனிக்குமே அவங்க ஆன்மீகம்? அவங்க எப்போ தேவாரம் எல்லாம் பாடினாங்க? ஹா ஹா ஹா! :)

அட, கருவூர் சித்தர் தேவாரம் பாடியிருக்காருங்க! பார்க்கலாமா?
ஆனால் அதற்கு முன்னாடி ஒரு சிறு குறிப்பை மனசில் வாங்கிக்குங்க! முன்பே சொன்னது போல்...
* நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாடிய அத்தனை பேரும் ஆழ்வார்கள் பட்டியலில் இடம் பெற்று இருப்பார்கள்! (அமுதனார் என்ற பின்னாளைய கவிஞரைத் தவிர)!
* ஆனால், 63-உள் இருப்பவர்கள் அத்தனை பேரும், தேவாரம் பாடி இருக்கணும்-ன்னு அவசியமில்லை! அதே போல தேவாரம் பாடியதாலேயே, 63-உள் வைக்கப்படணும் என்ற அவசியமும் இல்லை!

* பாடணும் என்ற அவசியம் இல்லாமல், தொண்டு மட்டுமே செய்தவர்களும், 63 நாயன்மார்களுள் வைக்கப்பட்டது சிறப்பு! = எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது தான்!
* அதே போல், சேந்தனார், கருவூர் தேவர் போன்றவர்கள் 63-உள் இல்லை! ஆனால் இவர்கள் தேவாரம் பாடி உள்ளார்கள்!அன்றைய சோழ/சேர நாடுகளின் பெரிய ஊர் கருவூர்! இன்னிக்கி கரூர்! திருச்சியில் இருந்து ஒன்னரை மணி நேரப் பயணத்தில் போயிறலாம்!
அங்கு பிறந்தவர் தான் நம்ம கருவூரார்! சிற்பங்கள் செய்யும் விஸ்வகர்மா குலத் தம்பதியர்க்கு மகவாய்ப் பிறந்தார்! தில்லை நடராஜப் பெருமானின் திருவுருவம் இவர் செய்ததே என்று சொல்லும் ஒரு சுவையான கதையும் உண்டு! இன்று சொல்லப் போவதில்லை! இன்னொரு நாள்!

* இவர் குரு = போகர் சித்தர்! (நவபாஷாண முருகனைத் தந்தவர்)
* இவர் சீடர் = இடைக்காட்டுச் சித்தர்! (தாண்டவக் கோனே என்று பாடல்கள் பாடியவர்)

குருவான கருவூரார், சீடரான இடைக்காடர் இருவருமே சித்தர்கள் அல்லவா! சித்தர்கள் யோக மயமான சிவபெருமானைத் தானே வணங்குவார்கள்? பெருமாளை வணங்குவார்களா என்ன? :)
நம்மாழ்வார் திருவாய் மொழியைத் "தமிழ் வேதம்" என்று முதலில் பாராட்டியதே, சிவச் செல்வரான இடைக்காட்டுச் சித்தர் தான்! இதோ!

சைவ நூல்களையோ, ஏனைய வைணவ நூல்களையோ சொல்லாது, நம்மாழ்வாரை மட்டும் "தமிழ் வேதம்" என்றார்கள் சித்தர்கள்! வேதத்தை, அதன் சாரம் மாறாமல், தமிழ்ப் படுத்தியதால் தான், "தமிழ் வேதம்" என்று இதை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னார்!
கருவூர் சித்தரும், திருவரங்கத்து நம்பெருமாளைப் போற்றிப் பாடி, அவர் கையால் பிரசாதம் வாங்கினார்! அப்படியே ஒரு வம்பிலும் சிக்கிக் கொண்டார்! பதிவின் இறுதியில் பார்ப்போம் :)அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்)! மாமன்னன் இராசராசன், இனி வரப் போகும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் சேர்த்தே தந்த கலைப் பொக்கிஷம்!

ஆனால் அன்று பார்த்து, சிவலிங்கம் நிறுவனம் ஆகவில்லை! (பிரதிஷ்டை)!

பெருவுடையார் = பேருக்கு ஏற்றாற் போலே பெரிய பெரிய உடையார் தான்! பெரிய சிலை அல்லவா! அதற்கு முன்பு அப்படி ஒரு சிலையைச் சிற்பிகளும் செய்ததில்லை! அப்படியே செய்தாலும், அதைக் கருவறைக் குழியில் இறக்கியதும் இல்லை! அனுபவம் இன்மை! ஆனால் கும்பாபிஷேக (மூர்த்தி ஸ்தாபன) நாள் அதுவுமா இப்படி ஒரு தடங்கலா?

சிவலிங்கத்தை உள்ளே இறக்கிய சில நிமிடங்களில், கனம் தாங்காமால், சிவலிங்கம் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விட்டதே! கோணலான சிவலிங்கமா?
ஐயகோ! இராஜராஜனுக்கு நெஞ்சே வெடித்து விடும் நிலைமை! கோயிலைப் பார்த்துப் பார்த்துக் கட்டியது இதற்குத் தானா?
அஷ்ட பந்தனம் என்னும் அந்தக் கலவை கெட்டிப் பட மாட்டேங்கிறது! தலைமைச் சிற்பி, இராஜராஜப் பெருந்தச்சரான குஞ்சரமல்லனும் எவ்வளவோ போராடிப் பார்க்கிறார்! ஹூஹூம்!

இதோ, கருவூரார் வந்து நிற்கிறார்! இராஜராஜனின் பெருமதிப்பைப் பெற்றவர்!

தாம் கொண்டு வந்த மூலிகைப் பொருட்களைக் காய்ச்சி, கலவை செய்கிறார் கருவூரார்! அந்தணர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களையும் பணியில் ஈடுபடுத்துகிறார்! புதிய கலவை காய்ச்சப்பட்டு, தொட்டி தொட்டியாக ஊற்றப்படுகிறது! கொதிக்கக் கொதிக்க, கருவறைக் குழிக்குள் ஊற்றப்படுகிறது!
ஆகா! சிவலிங்கத்தின் மேலேயே கால் வைத்து ஏறிவிட்டாரே கருவூரார்! அதை முட்டி, மோதி, கட்டி, இழுத்துச் சமநிலைப் படுத்த...மருந்து இறுக, இறுக...

தஞ்சைப் பெருவுடையார் நின்று விட்டார்! அஷ்டபந்தன மருந்து நின்று விட்டது! அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்!!
மன்னன் மனங்குளிர, மக்கள் மனங்குளிர, அடியார்கள் மனங்குளிர, ஆண்டவனும் மனங்குளிர்ந்தான்!


பல காலம் கழித்து, தஞ்சையில் இருந்து கிளம்புகிறார் சித்தர்! பூலோக வைகுந்தம் என்ற போற்றப்படும் திருவரங்கம் நோக்கிச் செல்கிறார் கருவூர் சித்தர்! தன் சீடன் இடைக்காட்டுச் சித்தன், திருவாய்மொழி நூலை அப்படிச் சிலாகிக்கிறானே! தமிழ் வேதம்-ன்னு வேற சொல்லுறான்!

அதுவும் வேதம் ஓத, குல உரிமை வேண்டும்-ன்னு சொல்லப்படுகிறதே! அப்படி இருக்க, ஒரு வேளாளச் சிறுவன்-மாறன் நம்மாழ்வான், தமிழ் வேதம் செய்தானா? அப்படி என்ன தான் இருக்கு அதுல? இன்னிக்கு அதையும் பார்த்து விடலாம்!

அவர் திருவரங்கம் வந்து சேர்ந்தது தான் தாமதம்.......
* தமிழோசை வேகமாய் முன் செல்ல,
* இறைவன் பரபரத்து, தமிழின் பின் செல்ல,
* இவர்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்க மாட்டாமல், வேத கோஷ்டி இறைவன் பின்னால் ஓடி வர...

வீதியுலாவில், நம்மாழ்வாரின் சந்த ஓசையில் பெருமாளே மயங்கி, மாறனுக்குப் பின்னாலே செல்கிறான்! தொண்டர்கள் தலைவனைப் பின் தொடர்வார்கள்! இங்கே தலைவனோ, பயபக்தியுடன், தொண்டர்களைப் பின் தொடர்கிறானே?
அநதக் காட்சியைக் கண்ணுக்கு நேராகப் பார்க்கிறார்! காதுக்கு நேராகக் கேட்கிறார் சித்தர்!

அடங்கெழில் சம்பத்து -- அடங்கக் கண்டு "ஈசன்"
அடங்கெழில் அஃதென்று -- அடங்குக உள்ளே!
உள்ளம் உரை செயல் -- உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை -- உள்ளில் ஒடுங்கே!!
அற்றது பற்றெனில் -- உற்றது வீடு, உயிர்
செற்றது மன்னுறில் -- அற்றிறை பற்றே!!!

ஈரடிகளில் ஈர்த்து விட்டதே! சகல வேத ஞானமும் சட்டென்று புரிந்து விட்டதே! அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை கருவூராருக்கு!
அரவணைத் துயிலும் மாயோன் அரங்கனைக் கண்குளிரத் தரிசிக்கிறார்!

தரிசித்து முடித்து வெளியே வந்தால், அவர் காலடிகளில் ஒரு தாசி விழுகிறாள்...பேரு அபரஞ்சி! பேரழகி! அரங்கனைத் தரிசித்த மாத்திரத்தில், இப்படித் தான் ஆளனுப்பிக் கள்ளத்தனம் செய்வானோ? :) அவளோ சிரிக்கிறாள்!

கரு ஊரில் சிக்காத கருவூரார், என்ன விஷயம்? என்பது போல் ஒரு பார்வையை வீசுகிறார்! சற்று முன் கேட்ட வேத கோஷத்தில், யோக சாதனையில், தனக்குள்ள சில ஐயங்களைத் தீர்க்கச் சொல்லிக் கேட்கிறாள் இவள்! ஆகா! இப்படியும் ஒரு தாசியா?
பாட்டுக்கு நடனம் மட்டுமே ஆடாமல், அதன் பொருளையும் கேட்ட விதம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது! அவள் ஆர்வத்தைப் பாராட்டி ஐயத்தை அங்கேயே தீர்த்து வைக்கிறார்!

அடங்குக உள்ளே! உள்ளில் ஒடுங்கே!-ன்னு சித்த புருஷ லட்சணத்தை இப்படி ரெண்டே சொல்லில் சொல்லவும் முடியுமோ?
அவளுக்கு விளக்கத்தை எடுத்துச் சொல்லச் சொல்ல, சித்தருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி! மகிழ்வில் கடவுளையே அதட்டுபவர் அல்லவா கருவூரார்! முன்பு நெல்லையப்பர் படாத பாடு பட்டாரே இவரிடம்! இப்போதும் அதே தொனியில் கருவூர் சித்தர்..."ரங்கா, உன் கழுத்து மாலையை என்னிடம் கொடு"!


தஞ்சைப் பெரிய கோயிலில், கருவூரார்-இராசராசன் ஓவியம்


திருக்கழுத்து மாலை! பவழ வாய் கமலச் செங்கண்ணனின் பவழ மாலை கருவூரார் கைகளில் வந்து விழுகிறது!
"அபரஞ்சி, என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டாய்! இதை என் பரிசாக வைத்துக் கொள்! நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார்! சித்தர்கள் தான் ஓரிடத்தில் இருக்க மாட்டார்களே!

மறுநாள் காலை... கோயிலுக்குள் வந்த அபரஞ்சியின் கழுத்தில் அரங்கப் பழவம்! அவள் மீது ஆளுக்கு ஒன்றாய் குற்றச்சாட்டு அடுக்குகிறார்கள்! பஞ்சாயத்து நடக்கிறது!
கருவூரார் கொடுத்த பரிசு என்பதை அவள் சொல்ல...பிடி கருவூராரை! ஹா ஹா ஹா! காற்றைப் பிடிக்கத் தான் முடியுமா?

அபரஞ்சி, கருவூராரை மனதால் வேண்டி, "இப்படி விளக்கம் சொல்லி இக்கட்டு கொடுத்து விட்டீர்களே சுவாமி", என்று அழுகிறாள்! கருவூரார் அங்கே மீண்டும் வந்து, மாயக் கள்வனைச் சாட்சிக்கு அழைக்கிறார்!
அரங்கன் அசரீரியாய்ச் சாட்சி உரைக்க...திருவரங்கக் கோயில் ஸ்தனத்தார்கள், கருவூராரை நிற்க வைத்துப் பேசியமைக்கு மன்னிப்பு கேட்கிறார்கள்! கருவூரார் பின்னர் கருவூருக்கே திரும்புகிறார்!

கருவூர் சித்தர் காட்டில் போய் இருக்காமல், சமூகத்திலேயே இருந்து விட்டார்! அவர் சொல்லும் கருத்துக்கள் வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டாக இருக்கு!
ஆன்மீகப் போலித்தனங்களை அவர் சாடச் சாட, அவர் மேல் வெறுப்பும், பொறாமையும், பகையும் சொந்த ஊரிலேயே எழுகிறது! குறிப்பாகப் போலியாக நியமங்கள் செய்யும் சைவ அந்தணர்கள் சில பேர், அவர் மேல் அதீத பகைமை கொள்கின்றனர்!

கருவூரார் ஒரு துர்வேத நிபுணர் என்று குறுநில மன்னனிடம் ஓதி ஓதி, மனதைக் கரைக்கிறார்கள்! மது-மாமிச படையல் வைப்பவர், வாம பூஜை செய்பவர் என்றெல்லாம் காட்ட வேண்டி, சில அத்வைதிகளே அவர் வீட்டில், மது-மாமிசம் ஒளித்து வைக்கின்றனர்! ஆனால் சோதனையில் அவை யாகத் திரவியங்களாக மாறி இருப்பது தெரிய வர, அந்த வைதீகர்களுக்குப் பெருத்த அவமானம்!

அதிக ஆள் பலம், சிஷ்ய பலம் இல்லாத கருவூராரை எளிதாக அடித்துத் துவைத்து விடலாம் என்று அந்தப் போலி அந்தணர்கள் சிலர் கிளம்ப, சித்தர் சிரிக்கிறார்! பயந்து ஓடுவது போல் நடித்து ஆட்டம் காட்டுகிறார்! கரூர் ஆனிலையப்பர் கோயிலுக்குள் ஓடுகிறார்! பசுபதீஸ்வரர் = ஆனிலையப்பர்!
அவர் கருவறைக்கு உள்ளேயே நுழைவதைக் கண்டு இவர்கள் இன்னும் சீற்றம் அடைய, "ஆனிலையப்பா!" என்று கூவிச் சிவலிங்கத்தை இறுக்கித் தழுவிக் கொள்கிறார் கருவூரார்!

தஞ்சைப் பெரிய கோயிலில், கருவூர் சித்தர் சன்னதி!


கருவில் ஊறாக் கருவூரார், இறைவனுடன் கலந்து மறைந்த காட்சி!
இன்றும் ஆனிலையப்பர் கோயிலில் கருவூராரின் சிற்ப வடிவம் உள்ளது!
தஞ்சை பெரிய கோயிலிலும் அவரது சிலை வடிவம் பின்னாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது!


வாங்க, கதை முடிந்து, தேவாரத் தமிழிசை கேட்போம்! தேவாரத் தொகுப்பில், கருவூரார் பாடல்கள் ஒன்பதாம் திருமுறை!

பத்து சிவத் தலங்களைப் பாடுகிறார் சித்தர்! இராஜராஜ சோழன் பால் வைத்த அன்பால், தஞ்சை இராச ராசேச்சரம், கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகிய தலங்களையும் பாடியுள்ளார்! மெட்டும், ராகங்களும் தானாகவே அமையும் இனிய இசைப் பாடல்கள்! "திருவிசைப்பா" என்று போற்றப் படுகிறது!

அதில் ஒன்றைக் காண்போம்! கேட்போம்! இதோ சொல்லிக் கொடுக்கிறாரு, கூடவே சொல்வோம்!பவளமே மகுடம்! பவளமே திருவாய்!
பவளமே திருவுடம்பு! அதனில்

தவளமே களபம்! தவளமே புரிநூல்!
தவளமே முறுவல் ஆடு அரவம்!


துவளுமே கலையும்! துகிலுமே ஒருபால்!
துடியிடை இடமருங்கு ஒருத்தி!
அவளுமே ஆகில், அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே!


* ஈசனின் ஜடா மகுடம், செவ்விதழ், உடம்பு = மூன்றுமே பவளம்! அப்படிச் செக்கச் சிவந்த சிவப்பு!
* ஈசனின் மேனியில் பால் வெண்ணீறு, முப்புரி நூல், சிரித்து வளையும் பாம்பு = மூன்றுமே தவளம் (வெண்மை)! அப்படிப் பால் வெளுத்த வெளுப்பு!
இப்படிச் சிவப்பும் - வெளுப்புமான கலவையில் சிவபெருமான் ஒரு பக்கமாய் மின்ன....

* துவளும் மேகலை (ஒட்டியாணம்), சேலைத் துகில், துடிக்கும் இடுப்பு = இப்படி மூன்றுமான முக்கண்ணி, "ஒருத்தியாய்" நிற்கிறாள்! = அவள் இந்தப் புறம், அவனின் அந்தப் புரம்!
* அவளே நின்று விட்ட படியால், இனி அவரும் நின்று விடுவார்! எங்கே?
திருக்களந்தை என்னும் ஆதித்தேச்சரம்! நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊர்! அதுவே திருக்களந்தை!

அங்கு தான் இப்படி ஒரு சிவ-சக்தி தரிசனத்தை நமக்குக் காட்டுவிக்கிறார் கருவூர் சித்தர்!
பவளமே மகுடம்! தவளமே களபம்!!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!


கருவூர் சித்தர் திருவடிகளே சரணம்!!

56 comments:

 1. அருமையா இருக்குங்க. கருவூர்ச் சித்தரைப் பற்றித் தெரியாத தகவல்கள். நல்ல இசைக் கோர்ப்பு. நீங்க புதிய பதிவரா? தமிழிஷ்ல உங்களைப் பார்த்தது இல்லையே?

  ReplyDelete
 2. அருமை, கே.ஆர்.எஸ்! அரவம் என்றால் பாம்பு என்று புரிகிறது. அது என்ன "முறுவல் ஆடு "?

  ReplyDelete
 3. அப்பர்,சம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர்பாடிய பாடல்கள் மட்டுமே "தேவாரம்" என்கின்ற சிறப்புப் பெயர்பெறும். இந்தத்தேவாரங்களோடு பிறவற்றையும் சேர்த்தே திருமுறைப்பாடல்கள என நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டன. பிற்காலத்தில் சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணமும் பன்னிரண்டாந்திருமுறையாக சேர்க்கப்பட்டது.

  ReplyDelete
 4. மிக அழகாக சொல்லிருக்கீங்கண்ணா..

  ReplyDelete
 5. நண்பர் ரவி,
  கருவூர்த்தேவர் லிங்கத்தை நிறுத்திய செய்திக்கான இலக்கிய வரலாற்று சான்று ஏதாவது உள்ளதா?

  உடையாரில் பாலகுமாரன் இதை எழுதியிருந்தாலும் அவர் எழுதவதை வரலாற்று சான்றாகக் கருத முடியாது என்பதால் அப்போதே இது பற்றிய சிந்தனை வந்தது...

  ReplyDelete
 6. //Anonymous said...
  அருமையா இருக்குங்க. கருவூர்ச் சித்தரைப் பற்றித் தெரியாத தகவல்கள்//

  நன்றிங்க!

  //நல்ல இசைக் கோர்ப்பு//

  பாடுவது சத்குருநாத ஓதுவார்!

  //நீங்க புதிய பதிவரா?//

  ஆமாங்க! அடியேன் புதிய பதிவர் தான்! :)
  ....தமிழிஷில்!

  ReplyDelete
 7. //Expatguru said...
  அருமை, கே.ஆர்.எஸ்!//

  வாங்க Expatguru! நலமா?

  //அரவம் என்றால் பாம்பு என்று புரிகிறது. அது என்ன "முறுவல் ஆடு "?//

  தவளமே முறுவல் ஆடு அரவம் = முறுவல் என்றால் புன்முறுவல் போன்று மென்மை/லேசாக! மெலிதாய் நெளியும் பாம்பைத் தான் அப்படிச் சொல்கிறார்!

  //தவளமே களபம்//
  களபம் = பூசும் சாந்து/நறுமணம்...சீதக் களபச் செந்தாமரைப் பூம் என்ற விநாயகர் அகவல் ஞாபகப் படுத்திக்குங்க!

  ReplyDelete
 8. மிக நல்ல பதிவு. என் சிறு வயதில் கரூரில் இருந்தேன். நீங்கள் தந்திருக்கும் தகவல் மிகவும் நன்றாகவும், புரியும்படியும் உள்ளது. வியந்தேன். பசுபதீஸ்வரர் கோவில் இவ்வளவு சங்கதிகள் நிறைந்ததா என்று.

  ReplyDelete
 9. //துடிக்கும் இடுப்ப//

  துடி இடை என்பதற்கு உடுக்கை போன்ற இடை என்று தமிழாசிரியோர் சொல்லித் தந்ததாக ஞாபகம்.

  ReplyDelete
 10. தஞ்சை ராஜ ராஜனுடன் இருந்த கருவூர் தேவரும்,கரூரில் சித்தியடைந்த கருவூர் சித்தரும் ஒருவரா அல்லது வேறு வேறா? எது உண்மை என்பதை தெரிவிக்கவும்

  ReplyDelete
 11. //ஆதித்தன் said...
  அப்பர்,சம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர்பாடிய பாடல்கள் மட்டுமே "தேவாரம்" என்கின்ற சிறப்புப் பெயர்பெறும்//

  வாங்க ஆதித்தன்!
  நீங்க சொல்வது டெக்னிக்கலா சரி தான்! ஆனால் பொது மக்களின் பேச்சு வழக்கில் தேவாரம் என்பது அனைத்து திருமுறைப் பாடல்கள் என்று ஆகி விட்டது!
  தேவார, திருவாசக வகுப்புகள்-ன்னு தான் சொல்றாங்க! ஆனால் மூவர் பதிகங்கள் மட்டுமில்லாது, பிறர் பதிகங்களும், திருக்கோவையாரும் கூடச் சொல்லித் தராங்க அல்லவா!

  //இந்தத்தேவாரங்களோடு பிறவற்றையும் சேர்த்தே திருமுறைப்பாடல்கள என நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டன//

  இன்னொரு வியப்பான சேதி தெரியுமா ஆதித்தன்?
  அப்பர் சுவாமிகள் செய்தது மட்டும் தான் "தேவாரம்" என்பது!
  சம்பந்தர் செய்தது திருக்கடைக்காப்பு! சுந்தரர் செய்தது திருப்பாட்டு!

  அப்புறம் "தேவாரம்" என்பது மூவருக்கும் பொதுவாகி, இப்போ பன்னிரு திருமுறைக்கும் அதுவே பொதுப்பெயர் ஆகி விட்டது! :)

  திருமுறை
  1,2,3=திருக்கடைக்காப்பு (சம்பந்தர்)
  4,5,6=தேவாரம்(அப்பர்)
  7=திருப்பாட்டு(சுந்தரர்)
  8=திருவாசகம்/திருக்கோவையார் (மாணிக்கவாசகர்)

  9=திருவிசைப்பா/திருப்பல்லாண்டு(சேந்தனார், கருவூரார், கண்டராதித்தர்...முதலானோர்)
  10=திருமந்திரம்(திருமூலர்)
  11=பிரபந்தம்(காரைக்கால் அம்மை, நம்பியாண்டார் நம்பி, சேரமான் பெருமாள்...முதலானோர்)
  12=பெரிய புராணம்(சேக்கிழார்)

  ReplyDelete
 12. //Raghav said...
  மிக அழகாக சொல்லிருக்கீங்கண்ணா..//

  நன்றி ராகவ்!
  அழகாச் சொல்லி இருப்பது கருவூரார்! பவளம்-தவளம்-கவளம்-ன்னு அவர் தானே பாடி இருக்காரு! :)

  ReplyDelete
 13. //அறிவன்#11802717200764379909 said...
  நண்பர் ரவி,
  கருவூர்த்தேவர் லிங்கத்தை நிறுத்திய செய்திக்கான இலக்கிய வரலாற்று சான்று ஏதாவது உள்ளதா?//

  உம்...
  இலக்கியத்தில் இருக்கான்னு தேடிப் பார்க்கணும் அறிவன்!
  ஒன்பதாம் திருமுறையில் பெரிய கோயில் பற்றி பத்து பதிகங்கள் பாடுகிறார் கருவூரார்! அதில் ஏதாச்சும் சொல்லி இருக்காரா?

  //உடையாரில் பாலகுமாரன் இதை எழுதியிருந்தாலும் அவர் எழுதவதை வரலாற்று சான்றாகக் கருத முடியாது என்பதால் அப்போதே இது பற்றிய சிந்தனை வந்தது...//

  பாலகுமாரனும் சில ஆய்வுகளைச் செய்து தான் எழுதினார்! அந்த ஆய்வுகளை, வரலாற்றுக் கட்டுரைகளின் ஆசிரியர்களை, நூலின் முன்னுரையில் சொல்லியிருப்பார்! அங்கும் தேடலாம்!

  பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தில் இதற்குத் தனியாக ஒரு இழை ஓடியது!

  ReplyDelete
 14. //ராது said...
  மிக நல்ல பதிவு. என் சிறு வயதில் கரூரில் இருந்தேன். நீங்கள் தந்திருக்கும் தகவல் மிகவும் நன்றாகவும், புரியும்படியும் உள்ளது வியந்தேன்.//

  நன்றி ராது!

  //பசுபதீஸ்வரர் கோவில் இவ்வளவு சங்கதிகள் நிறைந்ததா என்று//

  ஹா ஹா ஹா! உங்கூரு கோயிலுங்க!
  ஆனிலையப்பரான பசுபதீஸ்வரர் கருவூரார் மனம் கவர்ந்தவர்! சைவ சித்தாந்தக் கொள்கை பசு-பதி-பாசம் என்பதற்கு வடிவமாய் விளங்குபவர்!

  ஒரு முறை திருச்சியில் இருந்து, முக்கொம்பு அணைக்கு வந்து, உங்க கரூர் ஆலயம் வந்திருக்கேன்! :)

  ReplyDelete
 15. //நான் விஜய்கோபால் said...
  //துடிக்கும் இடுப்ப//

  துடி இடை என்பதற்கு உடுக்கை போன்ற இடை என்று தமிழாசிரியோர் சொல்லித் தந்ததாக ஞாபகம்//

  வாங்க விஜய்கோபால்!
  துடி என்பதற்குப் பல பொருட்கள் இருக்குங்க!
  துடி = கொட்டும் கருவி (முரசு போல), முருகன் மேல் ஆடும் ஆட்டம், வளைந்த தூதுவளைக் கொடி!

  நான் இக்காலத்துக்கு ஏற்ற மாதிரி "துடிதுடிப்பான துடியிடை"-ன்னு பொருள் கொண்டேன்! சினிமாவில் துடிக்கும் துடியிடையை காட்டுவாங்களே! :)

  ReplyDelete
 16. //enpaarvaiyil said...
  தஞ்சை ராஜ ராஜனுடன் இருந்த கருவூர் தேவரும்,கரூரில் சித்தியடைந்த கருவூர் சித்தரும் ஒருவரா அல்லது வேறு வேறா? எது உண்மை என்பதை தெரிவிக்கவும்//

  ஹா ஹா ஹா!
  இந்தச் சந்தேகம் உங்களுக்கு வரக் காரணம் என்னங்க?

  சித்தர்கள் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் சதுரகிரி புராணம், மற்றும் பதினெண் சித்தர் பெரிய ஞானக்கோவை போன்ற இன்ன பிற நூல்களின் படி...இருவரும் ஒருவரே!

  இராஜராஜனின் சமகாலத்தவர் தான், கருவூரிலும் சித்தி அடைந்த சித்தர்!

  இது பற்றிய பல விதமான வரலாற்று உரையாடல்களை பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தில் படிச்சிப் பாருங்க! உங்களைப் போலவே இன்னும் சிலரும் இதே கேள்வியை எழுப்பி இருக்காங்க! :)

  ReplyDelete
 17. இரவி, தேவாரம் = திருமுறைகள் என்ற கேள்வியைக் கேட்க வந்தேன். ஏற்கனவே அதைப் பற்றி பேசியிருக்கிறீர்கள்.

  தஞ்சை பெரிய கோவிலில் முதலில் இலிங்கத் திருவுருவை நிறுவிவிட்டு அப்புறம் தான் திருக்கோவிலை அதனைச் சுற்றி கட்டினார்கள் என்று படித்த நினைவு. பிராண பிரதிட்டை வேண்டுமானால் குடமுழுக்கின் போது நிகழ்ந்திருக்கலாம்; ஆனால் அட்டபந்தனம் கோபுரத்தை எழுப்புவதற்கு முன்னரே நடந்துவிட்டது என்று படித்த நினைவு. இல்லையேல் குறுகிய கருவறை வாசல் வழியே இலிங்கத்தை உள்ளே கொண்டு செல்ல இயன்றிருக்காது.

  ReplyDelete
 18. அறியாதனவற்றை அருமையாக அறிய வைக்கும் அரிய தம்பீ வாழ்க!

  ReplyDelete
 19. //குமரன் (Kumaran) said...
  தஞ்சை பெரிய கோவிலில் முதலில் இலிங்கத் திருவுருவை நிறுவிவிட்டு அப்புறம் தான் திருக்கோவிலை அதனைச் சுற்றி கட்டினார்கள் என்று படித்த நினைவு//

  எங்கே படித்தீர்கள் குமரன்? கொஞ்சம் விவரம் தாருங்களேன்!

  //பிராண பிரதிட்டை வேண்டுமானால் குடமுழுக்கின் போது நிகழ்ந்திருக்கலாம்;ஆனால் அட்டபந்தனம் கோபுரத்தை எழுப்புவதற்கு முன்னரே நடந்துவிட்டது என்று படித்த நினைவு//

  அப்படிச் செய்ய சிவாகமங்களில் இடம் உண்டா?
  அட்டபந்தனம் செய்த பின், பூசையில்லாமல் இருக்கலாமா?
  சிற்பிகளும், பலரும், வேலையின் பொருட்டு செய்யும் பூச்சுகள், மேல் ஏறி நிற்றல், குப்பை போன்றவை எல்லாம் நடக்குமே! எப்படிச் சமாளித்தார்கள்?

  //இல்லையேல் குறுகிய கருவறை வாசல் வழியே இலிங்கத்தை உள்ளே கொண்டு செல்ல இயன்றிருக்காது//

  பெரிய கோயில் வாசல் பெருசாச்சே! படத்தில் பாருங்களேன்!

  மேலும், பெருவுடையார் முழு உருவச் சிலை இல்லை! இலிங்கம் தனி! ஆவுடையார் தனித் துண்டுகள் ஒன்றிணைத்துப் பூட்டியது! அதனால் பார்ட் பை பார்ட் ஆகவும் கொண்டு சென்றிருக்க முடியும் அல்லவா?

  ReplyDelete
 20. @குமரன்...
  நீங்க சொன்னதை இன்னொரு இடத்திலும் கேள்விப்பட்டிருக்கேன்!
  அதனால் தான்...
  //ஆனால் கும்பாபிஷேக (மூர்த்தி ஸ்தாபன) நாள் அதுவுமா// -ன்னு அடைப்புக் குறிக்குள்ளும் போட்டு விட்டேன்! :))

  ReplyDelete
 21. எங்கே படித்தேன் என்று நினைவில்லை இரவி.

  //அறியாதனவற்றை அருமையாக அறிய வைக்கும் அரிய தம்பீ வாழ்க!//

  இதுக்கு 'வழிமொழிகிறேன்' போடலாம்ன்னு பாத்தா 'தம்பீ'ன்னு இருக்கே. :-( பரவாயில்லை. அந்த இடத்துல மட்டும் 'ஆன்மீக சுப்ரீம் ஸ்டார்'ன்னு மாத்தி வழிமொழிகிறேன். :-)

  ReplyDelete
 22. //கவிநயா said...
  அறியாதனவற்றை அருமையாக அறிய வைக்கும் அரிய தம்பீ வாழ்க!//

  அக்கா, நான் அரிய தம்பி இல்ல! உங்க சிறிய தம்பி! அவ்ளோ தான்! :) பாருங்க உங்க பாயிண்ட்டைக் குமரன் அண்ணா புடிச்சிக்கிட்டு எப்படி விளையாடறாரு! :)

  ReplyDelete
 23. //குமரன் (Kumaran) said...
  இதுக்கு 'வழிமொழிகிறேன்' போடலாம்ன்னு பாத்தா 'தம்பீ'ன்னு இருக்கே. :-(//

  ஏன், நான் உங்க தம்பி போலத் தானே குமரன்? அண்ணா-ன்னு கூப்பிடலை! பேர் இட்டுக் கூப்புடறேன்னு தானே கோவம்? :)

  //பரவாயில்லை. அந்த இடத்துல மட்டும் 'ஆன்மீக சுப்ரீம் ஸ்டார்'ன்னு மாத்தி வழிமொழிகிறேன். :-)//

  யோவ் செல்வன்! எல்லாம் உம்மால வந்ததுய்யா! இப்போ எங்கே என்ன செஞ்சிக்கிட்டு இருக்கீரோ? :)

  ReplyDelete
 24. அறியாதனவற்றை அருமையாக அறிய வைக்கும் அரிய தம்பீ வாழ்க! ஆன்மீக சுப்ரீம் ஸ்டார் வாழ்க வாழ்க!

  :-)

  ReplyDelete
 25. தமிழிஷ்ல நான் இன்னும் இல்லை, எனவே நான் இன்னும் பிறக்கலை; எனவே, கே ஆர் எஸ் எனக்கு அண்ணா.

  ReplyDelete
 26. //கெக்கே பிக்குணி said...
  தமிழிஷ்ல நான் இன்னும் இல்லை, எனவே நான் இன்னும் பிறக்கலை; எனவே, கே ஆர் எஸ் எனக்கு அண்ணா//

  ஹா ஹா ஹா!
  அது எப்படிக்கா, குமரன் இங்க ஒன்னு சொல்ல, உங்களுக்கு வேர்த்து, கருட வாகனத்தில் பறந்து என்னை ஓட்ட வரீங்க?

  பதிவைப் படிச்சீங்களா? :))

  ReplyDelete
 27. கே.ஆர்.எஸ் இந்த பதிவில் முடிக்கும் போது அந்தணர்களை எதுக்கு தப்பாக காட்டியிருக்கீங்க? ஒரு சிலர் தப்பு செஞ்சியிருக்கலாம்.அதுக்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் இறக்கி பேசறது நல்லதா? நீங்களே இப்படி எழுதலாமா?குறை சொல்லவதற்குன்னே எழுதினாப் போலத்தான் தெரியறது.

  ReplyDelete
 28. ஸ்ரீரங்கம்னுபார்த்தேன் இதோ வந்திட்டே இருக்கேன்ன்ன்ன்ன்ன்ன்!

  ReplyDelete
 29. //பாருங்க உங்க பாயிண்ட்டைக் குமரன் அண்ணா புடிச்சிக்கிட்டு எப்படி விளையாடறாரு! :)//

  குன்றேறி விளையாடும் குமரன் பந்தலேறி விளையாடுவதில் அதிசயம் என்ன அரிய தம்பியே? :)

  ReplyDelete
 30. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 31. @கெபி அக்கா!
  மன்னிக்கவும்! உங்க பின்னூட்டத்தை மட்டுறுத்துகிறேன்!

  சைவ-வைணவ பேதம் தொனிக்கும் கும்மிக்கு,
  இனி மேல் என் பதிவில் அனுமதி கிடையாது என்று முன்னரே திருவெம்பாவைப் பதிவில் சொல்லி இருக்கேன்!

  உங்கள் பின்னூட்டத்தின் மற்ற கருத்துகளை அடுத்த பின்னூட்டமாய் வெளியிடுகிறேன்! புரிதலுக்கு நன்றி!

  ReplyDelete
 32. கெக்கே பிக்குணி has left a new comment on your post "தேவாரம்! ஸ்ரீரங்கம்! கருவூர் சித்தர்! இராஜராஜ சோழ...":

  தம்பியண்ணா கே ஆரெஸ், பதிவைப் படிச்சாச்சு. நல்லா இருந்தது, அறியாதன (கருவூர்ச் சித்தரின் தஞ்சை கதை தெரியும், பசுபதீஸ்வரர் / ஸ்ரீரங்கத்து கதை தெரியாது) அறியத் தரும் ஆ.சூ.ஸ்!

  அன்பின் அனானி, ///குறை சொல்லவதற்குன்னே எழுதினாப் போலத்தான் தெரியறது.// லிருந்து நீங்க யாருன்னு புரியுது. //ஒட்டு மொத்த சமூகத்தையும் இறக்கி பேசறது நல்லதா?// உண்மையில், தம்பியண்ணா கே ஆரெஸ் என்றைக்கும் ஒட்டு மொத்த சமூகத்தை இறக்கி வச்சுப் பேசினது இல்லை. *** *****. இப்படிக்கு, நல்லா பதிவைத் திரும்பப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளும் சைவ பதிவர் கெ.பி.

  ReplyDelete
 33. இந்த ரெண்டாவது பாரா தொனியே தலைகீழா மாறிப் போச்சேப்பா!

  2007இல் எழுதப்பட்ட இந்த பதிவிலியும் கருவூரார் கதை இருக்கிறது:-) கருவூரார் சிலை வைத்தவர்கள் யார்னு எழுதியிருக்காங்க. தரவு எதுன்னு தெரியத் தரலை.

  ReplyDelete
 34. //Anonymous said...
  கே.ஆர்.எஸ் இந்த பதிவில் முடிக்கும் போது அந்தணர்களை எதுக்கு தப்பாக காட்டியிருக்கீங்க?//

  எங்கே தப்பாக் காட்டியிருக்கேன்?

  //ஒரு சிலர் தப்பு செஞ்சியிருக்கலாம்.அதுக்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் இறக்கி பேசறது நல்லதா?//

  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயி!
  அனானி-வாள் கண்ணுக்கோ?

  இன்னொரு தபா வாசிங்கோ...
  //குறிப்பாகப் போலியாக நியமங்கள் செய்யும் சைவ அந்தணர்கள் "சில பேர்", அவர் மேல் அதீத பகைமை கொள்கின்றனர்!//

  //நீங்களே இப்படி எழுதலாமா?குறை சொல்லவதற்குன்னே எழுதினாப் போலத்தான் தெரியறது//

  அந்தச் "சில பேரில்" நீங்களும் ஒருத்தரோ? அதான் கோபம் வருகிறதா? எத்தனை நாள் இப்படியே கேம் ஆடிக்கிட்டு இருக்கப் போறீங்க? கண்ணைத் தொறங்க! பதிவைப் பதிவில் இருந்து படிங்க! உங்க மனசில் இருந்து அல்ல!

  இன்னொரு சாய்ஸ் வேணும்னா கொடுக்கறேன்!
  கருவூராரின் "அந்தப் பகுதியை" மட்டும் நீங்களே எழுதிக் கொடுக்கறீங்களா? பேரே சொல்லாம என்னன்னு எழுதிக் கொடுப்ப்பீங்க?

  ReplyDelete
 35. KRS,

  //கருவூராரின் "அந்தப் பகுதி//யை பலரும் "குறிப்பிடாமல்" எழுதியிருக்காங்க. தனிமடலிலும், இங்கே பின்னூட்டத்திலும் நான் கொடுத்த சுட்டியைப் பாருங்க.

  நன்றி.

  ReplyDelete
 36. //கெக்கே பிக்குணி said...
  KRS,
  //கருவூராரின் "அந்தப் பகுதி//யை பலரும் "குறிப்பிடாமல்" எழுதியிருக்காங்க//

  உங்க சுட்டியைப் பார்த்தேன்-க்கா!
  "அந்தப் பகுதி" யைக் குறிப்பிட்டு இருக்காரே! இதோ "அந்தப்" பகுதிகள்!

  //அவ்வூர் அந்தணர்கள் பொறாமை கொண்டனர். அவரை வம்பில் இழுத்துவிட நினைத்து மதுவையும், மாமிசத்தையும் அவர் இல்லத்தில் மறைத்து வைத்தனர்//
  //அவமானம் அடைந்த வேதியர்களுக்கு கருவூராரின் மீது கடும் சினம் ஏற்பட்டது. வேதியர்கள் ஒன்று கூடி அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துரத்தினர்//

  நானாச்சும் பரவாயில்லை! "கொலை செய்யும் நோக்கத்துடன் துரத்தினர்"-ன்னு எல்லாம் நான் எழுதலையே! :)

  //தனிமடலிலும், இங்கே பின்னூட்டத்திலும் நான் கொடுத்த சுட்டியைப் பாருங்க//

  சுட்டிக்கு ஸ்பெஷல் நன்றிக்கா!
  தனி மடல் வீட்டுக்குப் போய் தான் பாக்கணும்! ஆபீசில் ஜி-மெயில் கிடையாது! ஒன்லி ஒ-மெயில்! :)

  ReplyDelete
 37. //ஷைலஜா said...
  ஸ்ரீரங்கம்னு பார்த்தேன் இதோ வந்திட்டே இருக்கேன்ன்ன்ன்ன்ன்ன்!//

  வாங்கக்கா...பைய வாங்க! உண்டு முடித்து ஸ்ரீரங்கத்துக்கு வாங்க! :)

  ReplyDelete
 38. //கவிநயா said...
  குன்றேறி விளையாடும் குமரன் பந்தலேறி விளையாடுவதில் அதிசயம் என்ன அரிய தம்பியே? :)//

  சூப்பர்! சூப்பர்!
  பல முறை பந்தல் ஏறி விளையாடி இருக்காரு அண்ணன்!
  அதைத் தனியா ஒப்புத்துக்கிட்டும் இருக்காரு! :))

  ReplyDelete
 39. //கெக்கே பிக்குணி has left a new comment
  தம்பியண்ணா கே ஆரெஸ், பதிவைப் படிச்சாச்சு. நல்லா இருந்தது//

  நன்றிக்கா!

  //அறியாதன (கருவூர்ச் சித்தரின் தஞ்சை கதை தெரியும், பசுபதீஸ்வரர் / ஸ்ரீரங்கத்து கதை தெரியாது) அறியத் தரும் ஆ.சூ.ஸ்!//

  ஸ்ரீரங்கம் பற்றிய குறிப்பு - கருவூரார் பெருமாளைச் சேவித்தது, நீங்க தந்த சுட்டியிலும் இருக்கு! :)

  கருவூரார் மாணாக்கர் இடைக்காடர் திருவாய்மொழி ரசிகர்-க்கா! சித்தர் பாடல்களில் நம்மாழ்வார் வரிகள் கூட அப்படியே வரும்! இன்னொரு நாள் தனிப் பதிவாய் போடறேன்!

  //உண்மையில், தம்பியண்ணா கே ஆரெஸ் என்றைக்கும் ஒட்டு மொத்த சமூகத்தை இறக்கி வச்சுப் பேசினது இல்லை//

  சரியான புரிதலுக்கு நன்றி-க்கா!
  அக்கா உடையான் படைக்கு அஞ்சான்! :)

  ReplyDelete
 40. கெபி அக்கா உட்பட இன்னும் பல பேரின் கவனத்துக்கு:

  ஆழ்வார்கள் பட்டியலைக் காட்டிலும் சைவ நாயன்மார்கள் தொகுப்பு பிடிச்சிருக்கு! என்று சொல்லும் அற நேர்மையும் என்னிடம் உண்டு!

  //பாடணும் என்ற அவசியம் இல்லாமல், தொண்டு மட்டுமே செய்தவர்களும், 63 நாயன்மார்களுள் வைக்கப்பட்டது தான் சிறப்பு!//-ன்னு என்னால் காய்தல் உவத்தல் இன்றி ஓப்பனாச் சொல்ல முடியும்!

  அப்படி எத்தனை சைவர்கள் இங்கே சொல்வீர்கள்? சொல்லுங்க பார்ப்போம்!

  குறுகிய வளையக் கும்மி, இனி இங்கே செல்லவே செல்லாது!
  அது நான் பெரிதும் மதிக்கும் கெபி அக்காவுக்கே செல்லவில்லை என்னும் போது...
  மற்றவர்கள், அனானிகள் எல்லாம் இனி விழிப்பாக இருக்குமாறு சொல்லிக் கொள்கிறேன்!

  ReplyDelete
 41. அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்...குறிப்பாக ஒரு சாராருக்கும் சொல்லிக் கொள்கிறேன்:

  திருப்பாணாழ்வாரைக் கல்லால் அடிச்சி, ரத்தம் கொட்டியது! அடிச்சவர் ஒரு வைணவ அந்தணர்! லோக சாரங்க பட்டர்! கோயில் பட்டர்!

  இதை மறைக்காமல் ஒப்புக் கொண்டு, தவறுக்கு வருந்தும் நேர்மை வைணவத்தில் இருக்கு!
  சேச்சே, லோக சாரங்கர் அடிக்கலை, கோவமாப் பேசினாரு, அப்பறம் வருந்தினாரு-ன்னு எல்லாம் கதை கட்டலை! வைணவத் தலைமை அந்தணரைக் "காப்பாற்றும்" முயற்சியிலும் இறங்கலை!

  அடிச்சவரும் அவரே, பிற்பாடு உணர்ந்து, தன் தோள் மேல் தூக்கி வந்தவரும் அவரே! அதனால் முனி வாகனம்-ன்னு பேரே வந்துடிச்சி! - பாணர் குலத்தானுக்கு, ஒரு அந்தணன் வாகனமா?-ன்னு யாரும் சங்கோஜப் படுவது இல்லை! "போலியான தன்னடக்கம்"-ன்னும் சொல்வதில்லை!

  மனசாட்சிக்கு உண்மையா யோசிச்சிப் பாத்தா புரியும்!
  இப்படியான அற நேர்மை இருந்தா ஆன்மீகம் தழைக்கும்!


  குறுகிய மனசுல, எதையோ காப்பாத்துவதாய் நினைச்சிக்கிட்டு, திருக்கதைகளில் புனைவு ஏத்திக்கிட்டே இருந்தா நந்தனார் கதை போலத் தான் முடியும்! இங்கே கேட்டாரு பாருங்க ஒரு அனானி, அது போலப் பூசி மெழுகிடலாம்!

  அப்பறம் ஒரு தந்தை பெரியார் தான் வந்து எல்லாத்தையும் ஒடைச்சிப் போடுவாரு! அதைச் சைவப் பெருமக்கள் கொஞ்சம் யோசிச்சிப் பார்க்கணும்!

  * அப்படியெல்லாம் யோசிச்சா,
  * அன்பே சிவம்-ன்னு யோசிச்சா,
  * சைவம்-ன்னு நாம ஏற்படுத்தியதை விட, நம் சிவபெருமான் பெரியவர்-ன்னு யோசிச்சா...
  * சிவனுக்காகச் சைவம், சைவத்துக்காகச் சிவன் இல்லை-ன்னு யோசிச்சா...

  அப்போ "சிவாலயக் கருவறைக்கு உள்ளேயும்" தமிழ் முழங்கும்!
  மேன்மை கொள் சைவ நீதி உலகெலாம் தழைக்கும்!

  அந்த நாளும் வந்திடாதோ?

  இப்படிக்கு,
  "சிவ" கோத்திரம், சுவாதீ நட்சத்திரம், KRS!

  ReplyDelete
 42. கருவூர் சித்தரா? அவர் தேவாரம் எல்லாம் கூடப் பாடியிருக்காரா என்ன? சித்த புருஷர்கள், பொதுவாகக் கோயில் பற்றி எல்லாம் பாட மாட்டாங்களே? நட்ட கல்லும் பேசுமோ?-ன்னு, "இடறுவது போலவும், அலர்ஜி போலவும்" தானே அவங்க பாடுவாங்க? "குழப்பவாதம்" போல் தொனிக்குமே அவங்க ஆன்மீகம்? அவங்க எப்போ தேவாரம் எல்லாம் பாடினாங்க? ஹா ஹா ஹா>>>>>>>


  சித்தர்கள் பாடினது எல்லாமே சிவதேவனுக்கு ஆரம் பிறகென்ன தனியாய் தேவாரம்? அவர்கள் குழம்பினதே இல்லை நாம்தான் பலநேரம் புரிஞ்சிக்காமல் குழம்பிடறோம்!!


  \\\
  * பாடணும் என்ற அவசியம் இல்லாமல், தொண்டு மட்டுமே செய்தவர்களும், 63 நாயன்மார்களுள் வைக்கப்பட்டது சிறப்பு! = எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது தான்\\\


  இது போற்ற வேண்டிய விஷயமும் கூட~


  \\\சித்தரும், திருவரங்கத்து நம்பெருமாளைப் போற்றிப் பாடி, அவர் கையால் பிரசாதம் வாங்கினார்! அப்படியே ஒரு வம்பிலும் சிக்கிக் கொண்டார்! பதிவின் இறுதியில் பார்ப்போம் :)
  \\\


  நீங்க வம்புல மாட்டிக்காம இருக்கணுமேன்னு கவலையா இருக்கு ரவி!!!

  ReplyDelete
 43. தாம் கொண்டு வந்த மூலிகைப் பொருட்களைக் காய்ச்சி, கலவை செய்கிறார் கருவூரார்>>>>>>>>>>>>>>>


  அவர் இந்தக்கலையை போகர்கிட்டேருந்து கத்துக்கொண்டிருகக்ணும் இல்லையா?

  ReplyDelete
 44. பல காலம் கழித்து, தஞ்சையில் இருந்து கிளம்புகிறார் சித்தர்! பூலோக வைகுந்தம் என்ற போற்றப்படும் திருவரங்கம் நோக்கிச் செல்கிறார் கருவூர் சித்தர்! தன் சீடன் இடைக்காட்டுச் சித்தன், திருவாய்மொழி நூலை அப்படிச் சிலாகிக்கிறானே! தமிழ் வேதம்-ன்னு வேற சொல்லுறான்!
  >>>>>>>

  அப்போ இடைக்காடர் முன்னேயேபோயிருக்கிறாரா திருவரங்கத்துக்கு?

  ReplyDelete
 45. அடங்கெழில் சம்பத்து -- அடங்கக் கண்டு "ஈசன்"
  அடங்கெழில் அஃதென்று -- அடங்குக உள்ளே!
  உள்ளம் உரை செயல் -- உள்ள இம் மூன்றையும்
  உள்ளிக் கெடுத்து இறை -- உள்ளில் ஒடுங்கே!!
  அற்றது பற்றெனில் -- உற்றது வீடு, உயிர்
  செற்றது மன்னுறில் -- அற்றிறை பற்றே<<>>>

  அருமையான பாடல்~ நம்மாழ்வாரின் இந்த ஒரு பாசுரம்போதும் மனசெல்லாம் நிறைந்துவிடும்!

  ReplyDelete
 46. தரிசித்து முடித்து வெளியே வந்தால், அவர் காலடிகளில் ஒரு தாசி விழுகிறாள்...பேரு அபரஞ்சி! பேரழகி! அரங்கனைத் தரிசித்த மாத்திரத்தில், இப்படித் தான் ஆளனுப்பிக் கள்ளத்தனம் செய்வானோ? :) அவளோ சிரிக்கிறாள்!
  >>>>>>>>>>>>>>>
  எல்லாம் காரணமாகத்தான் இருக்கும்.

  ம்ம் தெரிந்த கதை என்றாலும் இப்படி சுவாரஸ்யமாக எழுதறதினால படிக்க ஆர்வம் வருகிறது!

  \\ஆனிலையப்பர் கோயிலுக்குள் ஓடுகிறார்! பசுபதீஸ்வரர் = ஆனிலையப்பர்!
  அவர் கருவறைக்கு உள்ளேயே நுழைவதைக் கண்டு இவர்கள் இன்னும் சீற்றம் அடைய, "ஆனிலையப்பா!" என்று கூவிச் சிவலிங்கத்தை இறுக்கித் தழுவிக் கொள்கிறார் கருவூரார்\\ ஆஹா அன்பேசிவமாயிற்றே! ஆண்டவன் அவரைக்கைவிடுவானா என்ன?


  \\\
  [Photo]
  பவளமே மகுடம்! பவளமே திருவாய்!
  பவளமே திருவுடம்பு! அதனில்
  தவளமே களபம்! தவளமே புரிநூல்!
  தவளமே முறுவல் ஆடு அரவம்!

  துவளுமே கலையும்! துகிலுமே ஒருபால்!
  துடியிடை இடமருங்கு ஒருத்தி!
  அவளுமே ஆகில், அவரிடம் களந்தை
  அணிதிகழ் ஆதித்தேச் சரமே\\\


  iஇங்கு தமிழ் சிலம்பாட்டம் ஆடுகிறது! அருமை!

  ReplyDelete
 47. நல்ல பதிவு ரவி! சித்தர்கள் பற்றி கலந்துரையாடலில் நாங்கள் கருவூரார்பற்றி பேசி இருக்கிறோம். ஆனாலும் உங்களின் இந்தப்பதிவில் மேலும் பல தகவல்கள் வழக்கம்போல எளிய நடையில் அழகுதமிழில் புதிதாகத்தெரிகின்றன.
  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 48. //ஷைலஜா said...
  நீங்க வம்புல மாட்டிக்காம இருக்கணுமேன்னு கவலையா இருக்கு ரவி!!!//

  ஹா ஹா ஹா!
  நன்றி-க்கா! கவலைப்படாதீங்க! எந்த வம்பிலும் சிக்கிக்க மாட்டேன்!
  "சித்தத்தைச்" "சிவன் பாலே" வைத்தார்க்கு அடியேன்!

  நல்லன சொல்லிட நடுக்கம் இல்லை!
  அல்லன அகற்றிட தயக்கம் இல்லை!
  வெற்றி வேல்! வீர வேல்!

  ReplyDelete
 49. //ஷைலஜா said...
  சித்தர்கள் பாடினது எல்லாமே சிவதேவனுக்கு ஆரம் பிறகென்ன தனியாய் தேவாரம்? அவர்கள் குழம்பினதே இல்லை நாம்தான் பலநேரம் புரிஞ்சிக்காமல் குழம்பிடறோம்!!//

  நச்-ன்னு சொன்னீங்க-க்கா!

  \\\
  * பாடணும் என்ற அவசியம் இல்லாமல், தொண்டு மட்டுமே செய்தவர்களும், 63 நாயன்மார்களுள் வைக்கப்பட்டது சிறப்பு! = எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது தான்\\\

  இது போற்ற வேண்டிய விஷயமும் கூட//

  இப்படிச் சொல்லவும் ஒரு மனசு வேணும்-க்கா!
  சிவபெருமான் மாற்றான் இல்லை! அவன் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு!

  ReplyDelete
 50. //ஷைலஜா said...
  அவர் இந்தக்கலையை போகர்கிட்டேருந்து கத்துக்கொண்டிருகக்ணும் இல்லையா?//

  இருக்கலாம்-க்கா! சித்தர்களும் ஆச்சார்ய சம்பந்தம், குரு-வருள் கொண்டவர் தாமே!
  கருவூரார் குரு = போகர் = கலவை கற்றல்
  கருவூரார் சீடர் = இடைக்காடர் = திருவாய்மொழி கற்றல்

  ReplyDelete
 51. //ஷைலஜா said...
  அப்போ இடைக்காடர் முன்னேயேபோயிருக்கிறாரா திருவரங்கத்துக்கு?//

  இடைக்காடர் திருவரங்கம் போனாரா-ன்னு தெரியலை-க்கா!
  அவர் திருவாய்மொழியைப் போற்றுவதும், சில வைணவக் கோட்பாடுகளை ஆதரிப்பதும் தான் இப்போது அறியக் கிடைக்கிறது!

  ஆனால் கருவூரார் திருவரங்கம் போயிருக்கார்!

  நீங்கள் கலந்து கொண்ட தொலைக்காட்சி உரையாடலில், இடைக்காடர் பற்றி வருமே! அவர் எப்படிச் சாதுர்யமா வீடு தேடி வந்த நவக்கிரகங்களை இடம் மாற்றி, பஞ்சத்தில் மழை பெய்ய வச்சார் என்று! உங்க தொலைக்காட்சி உரையாடலும் பதிவெழுதும் போது நினைவுக்கு வந்தது!

  ReplyDelete
 52. //ஷைலஜா said...
  அருமையான பாடல்~ நம்மாழ்வாரின் இந்த ஒரு பாசுரம்போதும் மனசெல்லாம் நிறைந்துவிடும்!//

  ஆமாம்-க்கா! ரெண்டே வரி-ன்னாலும் எப்படி அடக்குறார் பாருங்க!

  சித்தர்கள் அவ்வளவு சீக்கிரம் எதையும் கொண்டாட மாட்டார்கள்! இடைக்காடர் இப்படிக் கொண்டாடுறார்-ன்னா, நம்மாழ்வார் யாரு?
  * ஆழ்வாரா?
  * சித்தரா?
  * நாயனாரா?
  * தீர்த்தங்கரரா?
  * தத்துவ ஞானியா?
  * பிரம்ம ஞானியா?
  * கர்ம யோகியா?
  * பக்த சிகாமணியா?
  * சரணாகத - பிரபன்ன ஜன கூடஸ்தரா?

  ReplyDelete
 53. //ஷைலஜா said...
  நல்ல பதிவு ரவி! சித்தர்கள் பற்றி கலந்துரையாடலில் நாங்கள் கருவூரார்பற்றி பேசி இருக்கிறோம்.//

  நான் உங்களைத் தொலைக்காட்சியில் பார்த்தேனே! பார்த்தேனே! :)

  //ஆனாலும் உங்களின் இந்தப்பதிவில் மேலும் பல தகவல்கள் வழக்கம்போல எளிய நடையில்//

  இல்லக்கா! நீங்க பேசினதில் தான் அதிக ஆராய்ச்சி மேட்டர்!
  நான் சும்மா வெத்து வேட்டு!
  இங்கே நான் சொன்னது ஆர்வலர்க்கு மட்டும் தான்! அறிஞர்க்கு அல்ல-க்கா!

  எளிமை தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! செளலப்யம் இஸ் தி பெஸ்ட்! :)

  ReplyDelete
 54. மகாரம் அறிந்த ஞானி லிங்கத்தை கட்டிப் பிடித்து காப்பாற்ற சொன்னதாக கதை எழுதாதிர்கள்.நிங்கள் இப்படி தவறாக எழுதுவது கேன்சருக்கு மருந்து கேசரி என்பது போல உள்ளது. தேவாரம் படித்த நீங்கள் தயவு செய்து சித்தர் பாடல்களை படியுங்கள்.ஞானம் கிட்டும்

  ReplyDelete
 55. //raja said...
  மகாரம் அறிந்த ஞானி லிங்கத்தை கட்டிப் பிடித்து காப்பாற்ற சொன்னதாக கதை எழுதாதிர்கள்//

  ராஜா
  மொதல்ல பதிவைப் பதிவில் இருந்து படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! உங்கள் மனத்தில் கருவூரார் பற்றி ஒரு அடையாளம் உருவாக்கி வைத்துக் கொண்டு, அதில் இருந்து படித்தால் இப்படித் தான் ஆகும்! :)

  //பயந்து ஓடுவது போல் நடித்து ஆட்டம் காட்டுகிறார்!
  //"ஆனிலையப்பா!" என்று கூவிச் சிவலிங்கத்தை இறுக்கித் தழுவிக் கொள்கிறார் கருவூரார்!//

  இப்படி விளையாடல் செய்கிறார்-ன்னு சொன்னது உங்க கண்ணில் படவில்லையா? :)

  மகாரம் உணர்ந்த ஞானி-ன்னா, இறைவனை அப்பா-ன்னு கூப்பிடக் கூடாதா? கண்களில் நீர் தளும்பக் கூடாதா? இதெல்லாம் யார் போட்ட சட்டம்? மகாரம் உணர்ந்த ஞானி-ன்னா இப்படித் தான் இருக்கணும்-ன்னு வரையறை செய்வது அந்த ஞானியா? நீங்களா?

  //நிங்கள் இப்படி தவறாக எழுதுவது கேன்சருக்கு மருந்து கேசரி என்பது போல உள்ளது//

  மொதல்ல சன்னிதானத்தில் கேன்சரே இல்ல! அப்பறம் எதுக்கு கேசரி பூசரி-ன்னு தப்பான உவமானங்கள்?

  //தேவாரம் படித்த நீங்கள் தயவு செய்து சித்தர் பாடல்களை படியுங்கள்.ஞானம் கிட்டும்//

  தங்கள் அறிவுரைக்கு நன்றி! அடியேனுக்குச் சித்தர் பாடல்களைப் "படிக்கப்" பிடிக்காது!
  படிப்பதை விட பிடிப்பதே பிடிக்கும்!

  ReplyDelete
 56. ippothuthan intha valaipoo enakkup paarkkak kidaithathu.naan ondrum theriyamal oru kananiyai vaithukkondu thindadukiren nirka. ungal valaipoo vilakkangal migavum nandragave irukkindrana. muraiyagath therithu kondu ungaludan pinnuttuven vaalga.valarga. velga.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம் கடவுளுக்கு அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009
* யாவையும் யாவரும் தானாய்,
* அவரவர் சமயம் தோறும்,
* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,
* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
* "பாவனை அதனைக் கூடில்,
* அவனையும் கூட லாமே
"!!!

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP