Friday, January 09, 2009

மார்கழி-25: திரு+தக்க+செல்வம்=பிள்ளை+இல்லாத+பெற்றோர்!

பேரறிஞர் அண்ணா "ஓர் இரவு" என்ற நாடகத்தை ஒரே இரவில் எழுதியதாய்ச் சொல்லுவாய்ங்க! இங்கே ஆண்டாளும் "ஓர் இரவு" எழுதறா! ஆனா இது பெற்றோர்-பாசமுள்ள ஓர் இரவு! பெற்றோர் புலம்பும் ஓர் இரவு!
இந்தப் பாட்டைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு மனசை என்னவோ செய்கிறது! அதனால் அதிக விளக்கங்கள் கொடுக்காது, மேலோட்டமாகச் சொல்லி முடிக்கிறேன்!

* பிள்ளை இருந்தும்-இல்லாமல், பறிகொடுத்த பெற்றோர்கள், வாடும் பெத்தவங்க, இவங்க எல்லாருக்கும் - இந்தப் பாசுரத்தைக் கோதையின் பேர் சொல்லி அடியேன் காணிக்கை ஆக்குகிறேன்!
* ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில், ஒருத்தி மகனாய் "ஒளிந்து" வளர்ந்தாலும், அவர்கள் எல்லாரின் வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் - என்று காணிக்கை ஆக்குகிறேன்!

பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்,
தரிக்கிலான் ஆகித், தான் தீங்கு நினைந்த,
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்! பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி,
வருத்தமும் தீர்ந்து, மகிழ்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!ஒருத்தி மகனாய்ப் பிறந்து = பிறந்ததோ தேவகியின் மகனாய்!
ஓர் இரவில் = ஒரே ராத்திரியில்....
ஒருத்தி மகனாய் = யசோதை மகனாய் மாறி விட்டான்!
ஒளித்து வளரத் = ஊர் அறியாமல் ஒளிக்கப்பட்டு வளர்ந்த குழந்தை!

இரவு = இன்பம்! இந்த இரவு, குழந்தை உருவாக்கத்துக்கும் காரணமாய் இருக்கு! குழந்தை பிரிவாக்கத்துக்கும் காரணமா இருக்கு!
எப்படி இருக்கும் அந்தத் தேவகிக்கு? கண் முன்னே தூக்கிக் கொடுத்தாள்! தனக்கு மகிழ்ச்சி இல்லீன்னாலும், கண் காணாத இடத்தில், கம்சன் காணாத இடத்தில், நல்லபடியா வளர்ந்தாலே போதும்...

* குழந்தைக்காக, தாய் ஸ்தானத்தையும் விட்டுக் கொடுப்பவளே தாய்!
* இறைவனுக்காக, மோட்ச ஸ்தானத்தையும் விட்டுக் கொடுப்பவனே பக்தன்!

வடகலை-தென்கலை, சைவம்-வைணவம்-ன்னு வல்லடி செய்தால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா, இல்லை அவன் மனசு வாடுமா-ன்னு எண்ணிப் பார்க்காதவன் பக்தன் அல்ல!
வெறுமனே பஞ்சபாத்திரம் வைத்துக் கொண்டு ஜலம் விடுபவனே அவன்! அனுட்டான சீலன்! அவனுக்குத் தாய் மனது இல்லை! பக்த மனது இல்லை!!


தரிக்கிலான் ஆகித் = தாங்க மாட்டாதவன் ஆகி
தான்-தீங்கு நினைந்த = தனக்குத் தானே கெட்டது நினைத்துக் கொண்டான்! கம்சன்!

அழுக்காறு உடையான் கண் ஆக்கம் போன்றில்லை என்கிறார் ஐயன் வள்ளுவன்! சதா பொறாமை பிடித்து, தாங்க மாட்டாமல், அலைந்து கொண்டிருந்தால் என்ன ஆகும்?
தான்-தீங்கு நினைந்த கதையாய் முடியும்! தனக்குத் தானே தீங்கு நினைத்துக் கொண்ட கதையாய் முடியும்!

* சொ.செ.சூ (சொந்த செலவில் சூன்யம்)-ன்னு, இப்போ வலையுலக மக்கள் மாத்திட்டாய்ங்க!
* தா.தீ.நி (தான்-தீங்கு நினைந்த)-ன்னு, ஆண்டாள் அன்றே இதைச் சொல்கிறாள் பாருங்கள்! அவளும் அக்காலத்து வலைப்பதிவர் தான்! Kothai was a Blogger!:)

கருத்தைப் பிழைப்பித்துக் = கம்சனின் எண்ணத்தை, பிழை எனக் காட்டினான்! அவன் நினைத்ததை நடக்க ஒட்டாமல் செய்தான்!
கம்சன் கருத்தைப் பிழைப்பித்தான்! நம்மைப் பிழைக்க-வைத்தான்!

கஞ்சன் வயிற்றில் = கம்சனின் வயிற்றில் (கம்ஸன் என்பதைத் தமிழாக்குகிறாள் கோதை = கஞ்சன் என்று ஆகுகிறது!:)
கம்சன் கஞ்சன் தான்! பிறர்க்கும் நல்லபடியா கொடுக்க எண்ணாது, தானும் நல்லபடியா வச்சிக்க எண்ணாது, கண்ணனைப் பூட்டிப் பூட்டியே வச்சிக்கிட்ட கஞ்சன்! கண்ணனின் எண்ணங்களை (கெட்ட எண்ணமே ஆனாலும்) பூட்டி பூட்டி வச்சிக்கிட்டான்! :)

நெருப்பென்ன நின்ற நெடுமாலே = அவன் வயிற்றில் நெருப்பாய் நின்ற பெருமாளே! என்ன அழகான சொல்லாட்சி, கருத்தாட்சி பாருங்க!
வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறியே-ன்னு நாட்டுப்புறத்தில் சொல்வதை, கோதை எப்படித் தமிழ் ஆக்குறா பாருங்க! வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறியே = நெருப்பென்ன நின்ற!

மெய்யாலுமே நல்லவங்க, "வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறியே"-ன்னு, மனம் நொந்து சொல்லும் போது என்ன ஆகுது?
யாரும் தீயோரை அழிக்க வேணாம்! தீயோரின் அழிவை அவங்களே விதைச்சிக்கிறாங்க! நெருப்பைத் தங்களுக்குள் தானே விதைச்சிக்கிறாங்க! அது ஒரு குறிப்பிட்ட பக்குவம் வரும் போது, பெரும் ஜூவாலையாய் மாறி, அடங்கி, தானே ஒடுங்கி விடுகிறது!

உன்னை அருத்தித்து வந்தோம் = உன்னை (சென்ற பாசுரத்தில்) அர்ச்சனை செய்தவாறே வந்தோம்!
பறை தருதியாகில் = எங்களுக்கு நோன்புப் பொருளான பறை தரணும்-னு நீ நினைச்சீன்னா,திருத்தக்க செல்வமும், சேவகமும் = பிள்ளையை இழந்து துடிக்கும் ஒரு பாட்டில், பணமா பெருசா கேப்பாய்ங்க? இல்லீன்னா வளமான செல்வம் கேப்பாய்ங்களா? இங்கே செல்வத்தைக் கேட்கிறாளே கோதை? என்ன இது விசித்திரம்?
திருத்தக்க செல்வம்-ன்னா என்ன? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க! ஏற்கனவே "நீங்காத செல்வம்"-ன்னு மூன்றாம் பாசுரத்திலும் பொருள் சொல்லி இருக்கேன்!

ஆண்டாள் காட்டும் செல்வம் = "நீங்காத செல்வம்", "திருத்தக்க செல்வம்"!
(இனி வருபவை ஆதவன் போல் ஒளிரும் ஆச்சார்ய விளக்கங்கள் அல்ல!
அகல் விளக்கு போல அலைபாயும் அடியேனின் விளக்கங்கள் தான்!)

எவ்வளவோ சம்பாதிக்கறோம்! பணம்-ன்னு மட்டும் இல்லை, நல்ல பேரு, புகழ், கல்வி, கலை-ன்னு எத்தனையோ செல்வங்கள்! ஆனால் யாருக்காக?
நமக்காகத் தான், நம் அபிமான-அகங்காரத்துக்காகத் தான் என்றாலும் கூட, ஒரு கட்டத்தில் இதெல்லாம் மாறி விடுகிறதே! எவ்ளோ சம்பாதிச்சாலும், என்ன நினைக்கிறோம்?
* குழந்தைகள் நல்லபடியா இருந்தாப் போதும்-ப்பா என்று நம்மை மறக்கடிக்கச் செய்வது யாரு?

தான், தான், தான்-ன்னு பிறந்ததில் இருந்து சுயநலமா இருந்த மனுசன், பெத்த அம்மா-அப்பா கிட்ட கூட ஓரளவு சுயநலம் காட்டும் மனுசன், தான் அம்மா-அப்பா ஆவும் போது மட்டும் எப்படி மாறுகிறான்?
கொஞ்ச நாளைக்கெல்லாம் இந்தப் புத்தி வந்து விடுகிறதே! "புள்ளைங்க நல்லா இருந்தாப் போதும்" - இந்த ஞானம் எப்படித் தானா வருது?
எந்த மரத்தின் கீழேயும் உட்காரலை! எந்த குருவும் சொல்லிக் கொடுக்கலை! எப்படி இப்படி ஒரு ஆத்ம ஞானம்?


அதான் செல்வத்துள் செல்வம் = மழலைச் செல்வம்! தான் கொண்டு வந்த உயிர்...தன்னைத் தனக்கே, "நம்மை நமக்கே", உணர்த்துகிறது!
* செல்வத்துக்கே தக்க செல்வம் = "திரு"வுக்கே தக்க செல்வம் = திரு+தக்க+செல்வம்!
இது வரை சேர்த்து வச்ச செல்வத்துக்கே, செல்வம் என்றால் என்ன-ன்னு உணர்த்துகிறது! சம்பாதிச்சு வச்ச செல்வத்துக்கே, செல்வமாயும், செல்லமாயும் வந்து அமைகிறது = மழலைச் செல்வம்!

அது மட்டுமா? மனிதனுக்கு ஆத்மா தான் உண்மையான செல்வம்! அது தான் எப்பவும் கூட வரப் போவுது! அந்த ஆத்மாவை அறியணும்-ன்னா முதல் படி என்ன? "தான்" என்பதை நீக்கணும்! "என்னை" இழந்த நலம்-ன்னு சொல்லுவாரு அருணகிரி!
இப்படி யாருமே சொல்லிக் கொடுக்காமல், "தான்" என்பதை, வாழ்க்கையில் தானாகவே நீக்க வைக்கும் 1st step செல்வம் = மழலைச் செல்வம்!

* ஃபாங்க் அக்கவுண்ட் செல்வத்துக்கும் அது தான் செல்வம்!
* ஆத்ம அக்கவுண்ட் செல்வத்துக்கும் அது தான் செல்வம்!
* செல்வத்தையே உணர வைக்கும் செல்வம் ஆகையாலே = திரு-வுக்கே தக்க செல்வம் ஆகையாலே திரு+தக்க+செல்வம்!

இந்த மழலைச் செல்வத்துக்கான சேவகம் செய்வதில் நாம வெட்க மானம் பார்ப்பதில்லை! மலத்தையும் துடைத்து விடுகிறோம், ஆய் கழுவி விடுகிறோம்! ரொம்பவும் அலுத்துக் கொள்வதும் இல்லை! சம்பளம் வாங்காம கூடச் சேவகம் செய்கிறோம் அல்லவா?
அதான் திரு+தக்க+செல்வமும், சேவகமும் என்கிறாள் கோதை! இந்தப் பாட்டு முழுதும் தேவகி-யசோதை-குழந்தை மனநிலை தான்! "மணநிலை"க் கோதை, "மனநிலை" பேசுகிறாள்!

*** இல்லாத குழந்தைக்கு எங்கிருந்து சேவகம் செய்வாள் தேவகி? ஆனாலும் செய்தாளாம்! எப்படி-ன்னு கேக்கறீங்களா? இல்லாத குழந்தைக்குத் தாலாட்டு பாடுவாளாம்! அச்சோ.......

வேணாங்க, நான் சொல்லலை! தேவகி புலம்பல்-ன்னு ஆழ்வார் தனியாகவே பாசுரம் பாடி கண் கலங்கி இருக்காரு!
அப்படித் திருத்தக்க செல்வத்துக்குத் தாலாட்டு பாடிப் பாடி, வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தாள்!

தேவகிக்கும், யதோதைக்கும் தக்க செல்வமாய் வந்தவன்=திரு+தக்க+செல்வம்!
தேவகிக்கும், யசோதைக்கும் செல்வத்துள் செல்வம் என்றால் என்ன என்று உணர வைத்தவன்=திரு+தக்க+செல்வம்!
அவன் சேவகத்தை, தேவகி, யசோதை இருவருமே செய்தார்கள்!
அவன் சேவகத்தை, யாமும் "பாடி"...வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

பிள்ளையைப் பறிகொடுத்து நிற்கும் பெற்றோர்கள் பலருக்கும் இந்தப் பாசுரம் ஆறுதல் தரட்டும்! வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!


திரு என்பவள் ஸ்ரீ சப்த மாத்திரத்தாலே குறிக்கப்படுபவள்! அன்னை மகாலக்ஷ்மி! செல்வத்துக்கு எல்லாம் செல்வம் அவள்! ஆனால் அவளுக்கே செல்வம் எது?
* ஸ்ரீ-க்கே செல்வம் எது? = ஸ்ரீ-மன்-நாராயணன்!
* திருவுக்கே செல்வம் = திரு+தக்க+செல்வம்!
இப்படித் த்வய மந்திரமான பொருளும் இங்கே இதற்குக் கொள்ள வேணும்! அப்போ தான் முழுமை பெறும்!

நம்மை நமக்கு உணர்த்தும் 1st Step செல்வம் = மழலைச் செல்வம்!
நம்மை நமக்கு உணர்த்தும் Final Step செல்வம் = ஸ்ரீ = திருத்+தக்க+செல்வம்!

* ஸ்ரீ இல்லாத நாராயணன் = வெறும் நாராயணன்!
* நாராயணன் இல்லாத ஸ்ரீ = கற்பனை கூடப் பண்ணிப் பாக்க முடியாது! அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
இப்படி இந்தச் செல்வத்துக்கு, அந்தச் செல்வம்!
அந்தச் செல்வத்துக்கு இந்தச் செல்வம்! = திரு+தக்க+செல்வம்!


திரு+தக்க+செல்வமும், சேவகமும் யாம் பாடி = இந்த இரு செல்வங்களுக்கான "சேவகமே" = கைங்கர்யம்! திருத்தொண்டு!
அதைப் பாடினால், செய்தால், வருத்தம் தீரும்! வருத்தம் தீர்ந்தால் மகிழ்ச்சி தானாய் வரும்! அதான் வருத்தமும் தீர்ந்து+மகிழ்ந்து!

1. சேவகமும் யாம் பாடி,
2. வருத்தமும் தீர்ந்து,
3. மகிழ்ந்து,
4. ஏல்-ஓர் எம் பாவாய்!
எங்கள் சேவகங்களை ஏற்றுக் கொண்டு, எங்களையும் ஏல் கொள் பெருமாளே! ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

42 comments:

 1. எங்கள் கைங்கர்யங்களை ஏற்றுக் கொண்டு, எங்களையும் ஏற்றுக் கொள் பெருமாளே !!

  எம் ரவி அண்ணாவிம் வருத்தமும் தீர்த்து அருளேலோ எம் பெருமானே!!

  உன் சேவடிக்கே நாம் ஆட்செய்வோம்!!

  ReplyDelete
 2. //வடகலை-தென்கலை, சைவம்-வைணவம்-ன்னு வல்லடி செய்தால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா, இல்லை அவன் மனசு வாடுமா-ன்னு எண்ணிப் பார்க்காதவன் பக்தன் அல்ல!//

  மிகவும் சரி!

  ReplyDelete
 3. //அகல் விளக்கு விளக்கம் போல அலைபாயும் அடியேனின் விளக்கங்கள் தான்//

  கோவிலில் எம்பெருமான் கருவறையில் ஏற்றப்பட்டுள்ள குத்து விளக்கு.

  ReplyDelete
 4. எனக்கும் இந்த பதிவு படிச்சுட்டு மனசு என்னம்மோ பண்ணுது அண்ணா..இன்னைக்கு கோதை blogger ஆகியாச்சா?நாளை என்ன பட்டம் அண்ணா :)
  நேத்து பதிவும் சூப்பர் :)
  ஆனா கும்மியடிக்க ஓடி வர முடியவில்லை.
  சரி அண்ணா take care :)

  ReplyDelete
 5. * பிள்ளை இருந்தும் இல்லாமல் பறிகொடுத்த பெற்றோர்கள், வாடும் பெத்தவங்க எல்லாருக்கும் - இந்தப் பாசுரத்தைக் கோதையின் பேர் சொல்லி அடியேன் காணிக்கை ஆக்குகிறேன்!
  * ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில், ஒருத்தி மகனாய் "ஒளிந்து" வளர்ந்தாலும், அவர்கள் எல்லாரின் வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் - என்று காணிக்கை ஆக்குகிறேன்!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  வருத்தமும் தீர்ந்து மகிழும்காலம் எல்லாருக்கும் வரட்டும் இந்தபுத்தாண்டில்.

  ReplyDelete
 6. இந்த ஒருத்திக்கு மகாபெரிய அர்த்தம் உண்டு ரவி
  ஆயிரத்தில் ஒருத்தி லட்சத்தில் ஒருவன் இப்படி

  அதனாலதான் வேற ஒருத்திமகனாய் வளர்ந்து என ஆண்டாள் சொல்லவில்லை
  ஏனெனில் யசோதாவும் தேவகியைப் போல கோடியில் ஒருத்தி.
  சொல்லின் செல்வி ஆண்டாள்!

  ReplyDelete
 7. ஒரே இரவில் தேசிகர் ஆயிரம்பாடல்களை பாதுகாசஹஸ்ரம் என எழுதினதையும் இங்கே நினைவில் கொள்வோம்

  ReplyDelete
 8. * தா.தீ.நி (தான் தீங்கு நினைந்த)-ன்னு, ஆண்டாள் அன்றே இதைச் சொல்கிறாள் பாருங்கள்! அவளும் அக்காலத்து வலைப்பதிவர் தான்! Kothai was a Blogger!:)
  >>>>>>>>>>>>>>>>>>>>>


  யுஆரெல் என்னவோ ரங்கமன்னார்.காம் ஆக இருக்கும்!

  ReplyDelete
 9. நெருப்பென்ன நின்ற நெடுமாலே = அவன் வயிற்றில் நெருப்பாய் நின்ற பெருமாளே! என்ன அழகான சொல்லாட்சி, கருத்தாட்சி பாருங்க!
  வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறியே-ன்னு நாட்டுப்புறத்தில் சொல்வதை, கோதை எப்படித் தமிழ் ஆக்குறா பாருங்க! நெருப்பென்ன நின்ற என்கிறாள்!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  நெருப்புதானே நாக்குகள் கொண்டது அதனால் இருக்கலாம். கருணாமூர்த்தி தயாசாகரனே நெருப்பாகிப்போனான் என்றால் அந்தக்கம்சன் தான் எத்தனை கொடியவனாயிருக்கணும்

  ReplyDelete
 10. அதான் செல்வத்துள் செல்வம் = மழலைச் செல்வம்! தான் கொண்டு வந்த உயிர்...தன்னைத் தானே, தனக்குத் தன்னையே உணர்த்துகிறது!
  * செல்வத்துக்கே தக்க செல்வம் = திரு+தக்க+செல்வம்!
  சேர்த்து வச்ச செல்வத்துக்கே, செல்வம்-ன்னா என்ன-ன்னு உணர்த்துகிறது! சம்பாதிச்சு வச்ச செல்வத்துக்கே செல்வமாயும், செல்லமாயும் வந்து அமைகிறது! மழலைச் செல்வம்!
  >>>>>>>>>>>>>>>>>>
  புதுமையான அதே நேரம் நெகிழ்ச்சியான விளக்கமும் கூட.

  ReplyDelete
 11. திரு+தக்க+செல்வமும், சேவகமும் யாம் பாடி = இந்தச் செல்வங்களுக்கான "சேவகமே" = கைங்கர்யம்! திருத்தொண்டு! அதைப் பாடினால், செய்தால், வருத்தம் தீரும்!
  வருத்தம் தீர்ந்தால் மகிழ்ச்சி தானாய் வரும்! அதான் வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து!
  >>>>>>>>>>>>>>>>>>>
  எளிய வார்த்தைகளால் ஆண்டாள் நம்மை எங்கோ அழைத்துச்சென்றுவிடுகிறாள் இந்தப்பாடலில்.
  வழக்கம்போல சிறப்பான பதிவுரவி

  ReplyDelete
 12. நல்லபெரிய பெரியவிஷயங்கள் எல்லாம் அழகா எழுதறீங்க கேஆரெஸ், நான் பார்க்க ஆசைப்படும் நபர்களில் நீங்க முக்கியமானவர்ங்க! எப்போ இந்தியா வந்தாலும் சொல்லுங்க, நான் அங்கிருந்தா கண்டிப்பா வந்து சந்திக்கிறேன்!

  ReplyDelete
 13. ///இந்த மழலைச் செல்வத்துக்கான சேவகம் செய்வதில் நாம வெட்க மானம் பார்ப்பதில்லை!
  மலத்தையும் துடைத்து விடுகிறோம், ஆய் கழுவி விடுகிறோம்! ரொம்பவும் அலுத்துக் கொள்வதும் இல்லை!
  சம்பளம் வாங்காம கூடச் சேவகம் செய்கிறோம் அல்லவா?//

  அது மட்டுமா! அந்த மழலைக்கு ஒரு திருமணம் ஆகி அதற்கு ஒரு மழலை பிறக்கும்போது அதன் ஆயையும்
  கழுவி விடுகிறோம் !!

  அத்தனையும் செய்துவிட்டு வாங்கியும் கட்டிக்கிறோம் !!

  எப்பேர்ப்பட்ட உண்மை !!

  மீனாட்சி பாட்டி.

  ReplyDelete
 14. //sury said...//

  வாங்க மிஸஸ் & மிஸ்டர் சூரி சார்! :)
  பதிவுலகத் தம்பதியர்க்கு அடியேன் வந்தனங்கள்!

  //அது மட்டுமா! அந்த மழலைக்கு ஒரு திருமணம் ஆகி அதற்கு ஒரு மழலை பிறக்கும்போது//

  ஹா ஹா ஹா! மிகவும் ரசிச்சேன்!

  //அத்தனையும் செய்துவிட்டு வாங்கியும் கட்டிக்கிறோம் !!//

  :)
  பித்தா-ன்னு திட்டித் தான் தேவாரம் ஆரம்பிக்கிறார் சுந்தரர்!
  ஈசன் வாங்கிக் கட்டிக்கலையா? ஹா ஹா ஹா!

  ReplyDelete
 15. //அபி அப்பா said...
  நல்லபெரிய பெரியவிஷயங்கள் எல்லாம் அழகா எழுதறீங்க கேஆரெஸ்//

  ஆகா! வாங்க அபி அப்பா! நலமா இருக்கீயளா? ரொம்ப நாளாச்சி உங்க கிட்ட மின்னஞ்சல்-ல கூட உரையாடி!

  //நான் பார்க்க ஆசைப்படும் நபர்களில் நீங்க முக்கியமானவர்ங்க!//

  :)

  //எப்போ இந்தியா வந்தாலும் சொல்லுங்க, நான் அங்கிருந்தா கண்டிப்பா வந்து சந்திக்கிறேன்!//

  கண்டிப்பா!
  சொன்னா அடிக்கப் போறீங்க!
  அக்டோபர்-ல தான் மயிலாடுதுறை போயிருந்தேன்! ஓங்களயும் சீமாச்சு அண்ணனையும் தான் நினைச்சிக் கிட்டேன்!

  அம்மா-அப்பா மணிவிழா, திருக்கடவூரில்! :)

  ReplyDelete
 16. //υnĸnown вlogger™ said...
  எனக்கும் இந்த பதிவு படிச்சுட்டு மனசு என்னம்மோ பண்ணுது அண்ணா..//

  ooops..no feelingsuuu

  //இன்னைக்கு கோதை blogger ஆகியாச்சா? நாளை என்ன பட்டம் அண்ணா :)//

  அதை இங்க ராகவ்-ன்னு ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டர் கணக்கு எடுத்து வச்சிக்கிட்டு இருக்காரு! :)

  //நேத்து பதிவும் சூப்பர் :)
  ஆனா கும்மியடிக்க ஓடி வர முடியவில்லை. சரி அண்ணா take care :)//

  இன்னிக்கு மாலை சாட்டறேன்! :)

  ReplyDelete
 17. //Raghav said...
  எங்கள் கைங்கர்யங்களை ஏற்றுக் கொண்டு, எங்களையும் ஏற்றுக் கொள் பெருமாளே !!
  எம் ரவி அண்ணாவிம் வருத்தமும் தீர்த்து அருளேலோ எம் பெருமானே!!//

  ஆகா!..."எல்லாரும்" திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

  ReplyDelete
 18. //Raghav said...
  //வடகலை-தென்கலை, சைவம்-வைணவம்-ன்னு வல்லடி செய்தால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா, இல்லை அவன் மனசு வாடுமா-ன்னு எண்ணிப் பார்க்காதவன் பக்தன் அல்ல!//

  மிகவும் சரி!//

  :)
  புரிதலுக்கு நன்றி ராகவ்!

  ReplyDelete
 19. //Raghav said...
  //அகல் விளக்கு விளக்கம் போல அலைபாயும் அடியேனின் விளக்கங்கள் தான்//

  கோவிலில் எம்பெருமான் கருவறையில் ஏற்றப்பட்டுள்ள குத்து விளக்கு//

  குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் :)))

  ReplyDelete
 20. //ஷைலஜா said...
  வருத்தமும் தீர்ந்து மகிழும் காலம் எல்லாருக்கும் வரட்டும் இந்த புத்தாண்டில்//

  நன்றிக்கா!
  அரங்கப்ரியா சொன்னா அரங்கனே சொன்ன மாதிரி! :)

  ReplyDelete
 21. //ஷைலஜா said...
  இந்த ஒருத்திக்கு மகாபெரிய அர்த்தம் உண்டு ரவி
  ஆயிரத்தில் ஒருத்தி லட்சத்தில் ஒருவன் இப்படி//

  வாவ்!
  ஊழி முதல்வனாய் நின்ற "ஒருவனை"-ம்பாரு மாணிக்கவாசகர்! அவர் ஒருவனை-ன்னு சொல்ல, இவ ஒருத்தி-ங்கிறா :)

  //அதனாலதான் வேற ஒருத்திமகனாய் வளர்ந்து என ஆண்டாள் சொல்லவில்லை//

  அட, ஆமாம்!

  //ஏனெனில் யசோதாவும் தேவகியைப் போல கோடியில் ஒருத்தி//

  ஒரு கொடியில் இரு மலர்கள்!
  இங்கே இரு கொடியில் ஒரு கண்ணன் மலர்!

  ReplyDelete
 22. //ஷைலஜா said...
  ஒரே இரவில் தேசிகர் ஆயிரம்பாடல்களை பாதுகாசஹஸ்ரம் என எழுதினதையும் இங்கே நினைவில் கொள்வோம்//

  ஆம்! அது ஒரே இரவில் கூட இல்லை! விடியற்காலை முகூர்தத்தில் தான்!

  பாதுகா சஹஸ்ரம் பற்றி குமரனும் சொல்லிக்கிட்டு இருக்காரு! நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்! ஆனா யாரும் எழுதலை! கடைசீல ஜிரா வந்து எழுதப் போறாரு! :)

  ReplyDelete
 23. //ஷைலஜா said...
  யுஆரெல் என்னவோ ரங்கமன்னார்.காம் ஆக இருக்கும்!//

  பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை-ன்னு கட்டாயம் அப்பா பேரைச் சொல்லிக்கிடுவா...
  So...it is...
  http://vishnuchitthan.blogspot.com/

  :))

  ReplyDelete
 24. //ஷைலஜா said...
  நெருப்புதானே நாக்குகள் கொண்டது அதனால் இருக்கலாம்.//

  கம்சன் தாய்மைக்கு எதிரானவன்.
  ஒரு தாயுள்ளத்திடம் இருந்து தான் குழந்தையைப் பறித்தான் என்றால்...
  இன்னொரு தாயுள்ளத்திடம் இருந்தும் குழந்தையைக் கொல்லப் பார்த்தான்! அதான் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டான்! நெருப்பென்று நின்னான்!!

  இறைவனிடம் மோதிய இராவணன் முதலானோர்கள் கூட இப்படித் தாயுள்ளத்தைத் தாழ்மைப்படுத்தியது இல்லை! இராவணனைக் கோமான் என்றவள், இவனை மட்டும் தரிக்கில்லான், தான்-தீங்கு நினைத்தான், கஞ்சன்-ன்னு வையறா கோதை! :)

  ReplyDelete
 25. //புதுமையான அதே நேரம் நெகிழ்ச்சியான விளக்கமும் கூட//

  புதுமை-ல்லாம் இல்லக்கா! ஆச்சார்யர்களும் இந்தப் பாட்டில் இருக்கும் குழந்தைப் பாசத்தை, மாதுர்ய பாவத்தைத் தொட்டுச் சென்றிருக்கிறார்கள்!
  தேவகி புலம்பல் என்ற ஆழ்வாரின் நிலையைக் குமரன் வந்து சொல்வாரு!

  ReplyDelete
 26. //ஷைலஜா said...
  எளிய வார்த்தைகளால் ஆண்டாள் நம்மை எங்கோ அழைத்துச்சென்றுவிடுகிறாள் இந்தப்பாடலில்//

  கோதையின் சிறப்பே எளிமை தான்-கா!
  அவனுக்கு வாய்ச்சவ எப்படி இருப்பா? நீர்மை, செளலப்பியமாத் தான் இருப்பா!

  //வழக்கம்போல சிறப்பான பதிவுரவி//

  நன்றிக்கா! இது ரொம்ப வேகமா எழுதுன பதிவு! இன்னிக்கி காலையில்! உணர்ச்சி வசப்படக் கூடாது-ன்னு பரபர-ன்னு வேகமா எழுதித் தள்ளீட்டேன்!

  ReplyDelete
 27. இந்தப் பாட்டும், அன்னை என்ற திரைப்படத்தில் வரும் பாட்டும்( அன்னை என்பவள் நீ தானா?) மனசை என்னவோ செஞ்சுரும்.

  கேட்கும்போது கண்ணில் நீர் பெருகுவதைக் கட்டுப்படுத்தவே முடியாது.

  ReplyDelete
 28. பதிவை படித்து கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு. யாசோதையும் தேவகியை ஒத்த அளவு பாவபட்டவள் தான். கண்ணனை வளர்க்க அவள் செய்த தவம் தன் மகளை கண்ணால் காணமல் கூட இழந்தது. அந்த குழந்தைக்கு ஈமகடன் கூட செய்யாதது. அது ஒரு பக்கம் இருக்க,

  பதிவு அருமையாக வந்திருக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 29. //மின்னல் said...
  அது ஒரு பக்கம் இருக்க,
  பதிவு அருமையாக வந்திருக்கு வாழ்த்துகள்//

  நன்றி மின்னல்!
  எனக்கு இந்த ஒரே ஒரு கோதைப் பாசுரம் மட்டும் தான் தனிப்பட்ட முறையில் மிகவும் பயம், கலக்கம், மன நெகிழ்ச்சி!

  //கண்ணனை வளர்க்க அவள் செய்த தவம் தன் மகளை கண்ணால் காணமல் கூட இழந்தது. அந்த குழந்தைக்கு ஈமகடன் கூட செய்யாதது//

  இறைவனே காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறான்!
  யசோதையின் இழப்புக்கு பின்னாளில் திருவேங்கட மலையில் ஈடு செய்வான்!
  இன்றும் சன்னிதானத்தில், பொற் கிணற்றுக்கு அருகே, அக்னி காரியமாக, யசோதை சன்னிதி இருக்கு! பார்த்து இருக்கீங்களா?

  ReplyDelete
 30. //துளசி கோபால் said...
  இந்தப் பாட்டும், அன்னை என்ற திரைப்படத்தில் வரும் பாட்டும்( அன்னை என்பவள் நீ தானா?) மனசை என்னவோ செஞ்சுரும்//

  ஆமாங்க டீச்சர்...
  அன்னை என்பவள் நீ தானா?..வேணாம் ஞாபகப் படுத்தாதீங்க! :(

  இந்தப் பாசுரம் சொல்லும் போது கூட முதல் ரெண்டு வரி வேகமா ஸ்கிப் பண்ணுவேன்!

  ReplyDelete
 31. அருமை ஷைலஜா அக்கா. உண்மை - ஒருத்தி ஒருவன் என்றெல்லாம் சொல்லும் போது நீங்கள் சொன்ன பொருள் தான் வரும். சங்க இலக்கியத்தில் இருந்து ஒரு பாடலை எடுத்து அதற்குப் பொருள் எழுதி ஒரு இடுகை போட்டிருக்கிறேன். அந்தப் பாடலில் ஒருவன் என்று வருகிறது. அங்கே இதே பொருளைத் தான் கொண்டேன்.

  ReplyDelete
 32. உண்மை தான். யசோதை பிராட்டியார் பெற்ற இன்பங்களை தேவகி பிராட்டியார் பெறவில்லை. தேவகி பிராட்டியார் பெற்ற இன்பங்களை யசோதை பிராட்டியார் பெறவில்லை. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர என்ற பாசுர வரிகளைப் படிக்கும் போது இடம் மாறி இவன் வளர்ந்ததே இது வரை நினைவில் நினறது. இன்று தான் இந்த இரண்டு 'ஒருத்தி'களும் பெற்ற இன்ப துன்பங்களைப் பற்றிய எண்ணம் தோன்றுகிறது. உண்மை தான். தேவகிபிராட்டியாரின் எம்பெருமான் வசுதேவரின் துயரங்களை கோதைபிராட்டியார் இந்த வரிகளில் சொல்கிறாள்.

  சிறுவயதில் கோபாலன் எப்படி இருந்தான் என்று பார்க்க ஆசைப்பட்ட தேவகிபிராட்டிக்காக மத்துடன் நிற்கும் பாலகோபாலன் உருவத்தைக் காட்டினான் கண்ணன்; அந்த திருவுருவே இப்போது உடுப்பியில் நிற்கின்றது. வளர்த்தேன் தான்; ஆனால் உனக்குத் திருமணம் செய்து வைத்துப் பார்க்க இயலவில்லையே என்ற யசோதை பிராட்டியாரை வகுளமாலிகையாகப் பிறக்கச் செய்து பத்மாவதி கல்யாணம் நடத்திக் கொண்டான் வேங்கடவன்.

  ReplyDelete
 33. ஓர் இரவில் என்று அவள் தமிழில் சொல்லும் போது பொருள் சொல்ல வந்த நீங்கள் ஒரே ராத்திரியில் என்று சொல்வது ஏனோ? :-)

  ReplyDelete
 34. அகல்விளக்கம் மன இருளை அகல வைக்கும் விளக்கம்....

  ஆதவன் ஒளியைப் போல் கண்களைக் கூச வைக்கவில்லை.

  ReplyDelete
 35. அம்மா செண்டிமெட் பாசுரம்..அருமை!.

  ReplyDelete
 36. //குமரன் (Kumaran) said...
  ஓர் இரவில் என்று அவள் தமிழில் சொல்லும் போது பொருள் சொல்ல வந்த நீங்கள் ஒரே ராத்திரியில் என்று சொல்வது ஏனோ? :-)//

  இரவு->இரா->ரா->ரா+த்திரி ஆனது குமரன் :))

  ReplyDelete
 37. //குமரன் (Kumaran) said...
  அருமை ஷைலஜா அக்கா. உண்மை - ஒருத்தி ஒருவன் என்றெல்லாம் சொல்லும் போது நீங்கள் சொன்ன பொருள் தான் வரும்//

  ஊழி முதல்வனாய் நின்ற "ஒருவன்"-ன்னு சொல்லி இருக்கேனே! பார்க்கலையா குமரன்? :)

  ReplyDelete
 38. //குமரன் (Kumaran) said...
  இடம் மாறி இவன் வளர்ந்ததே இது வரை நினைவில் நினறது. இன்று தான் இந்த இரண்டு 'ஒருத்தி'களும் பெற்ற இன்ப துன்பங்களைப் பற்றிய எண்ணம் தோன்றுகிறது//

  எனக்கும் முதலில் எல்லாம் இப்படிப் பொருள் யோசிக்கத் தோன்றியது இல்லை!
  அண்மைக் காலமாகத் தான் குமரன்! புரிந்திருக்கும்-ன்னு நினைக்கிறேன்!

  ஒருத்தி, ஒருத்தி-ன்னு அதே சொல்லைப் பாசுரத்தில் இரண்டு முறை அழுத்துவதன் நோக்கமும் அதான் குமரன்! இப்பாசுரத்தில் வேற ஒரு செய்தியும்/கதையும் கூட வரவில்லை பாருங்கள்! இது முழுக்க முழுக்க தேவகி-யசோதைப் பிராட்டிகளின் மனநிலைப் பாசுரம்!

  சென்ற பாசுரத்தில் அர்ச்சனையெல்லாம் முடிந்து, இப்போ கண்ணனை அண்மையில் சேவிக்கும் போது, தன்னையும் அறியாமல் நெகிழ்கிறாள் கோதை!
  அச்சோ, தாயிருந்தும், தாயில்லாப் பிள்ளையாச்சே இவன் என்ற கழிவிரக்கம் மிகுகிறது! ஆனால் அடுத்த பாடலில் ஆலின் இலையாய் என்று சொல்லி, இவன் குழந்தையே என்றாலும், மாயக் குழந்தை என்று மனம் தேறுகிறாள்!

  //சிறுவயதில் கோபாலன் எப்படி இருந்தான் என்று பார்க்க ஆசைப்பட்ட தேவகிபிராட்டிக்காக மத்துடன் நிற்கும் பாலகோபாலன் உருவத்தைக் காட்டினான் கண்ணன்; அந்த திருவுருவே இப்போது உடுப்பியில் நிற்கின்றது//

  ஆம்!

  //வளர்த்தேன் தான்; ஆனால் உனக்குத் திருமணம் செய்து வைத்துப் பார்க்க இயலவில்லையே என்ற யசோதை பிராட்டியாரை வகுளமாலிகையாகப் பிறக்கச் செய்து பத்மாவதி கல்யாணம் நடத்திக் கொண்டான் வேங்கடவன்//

  ஆம்!
  விரித்துச் சொன்னமைக்கு நன்றி குமரன்! வகுளமாலிகை சன்னிதிக்குப் போயிருக்கீங்களா? பெரிய பொட்டு, அன்னப் பிரசாத பொட்டு என்னும் சமையலறைப் பக்கமா இருக்கும்!

  ReplyDelete
 39. //குமரன் (Kumaran) said...
  அகல்விளக்கம் மன இருளை அகல வைக்கும் விளக்கம்...
  ஆதவன் ஒளியைப் போல் கண்களைக் கூச வைக்கவில்லை//

  :)
  நன்றி குமரன்!
  ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
  அகல் ஏற்றுதும்! அகல் ஏற்றுதும்!

  ReplyDelete
 40. //கோபிநாத் said...
  அம்மா செண்டிமெட் பாசுரம்..அருமை!//

  அம்மா-ன்னாலே அருமை தானே கோப்பி! அம்மாவைத் தொட்டுச் செல்லும் எல்லாமே அருமை தான்!

  ReplyDelete
 41. //அண்மைக் காலமாகத் தான் குமரன்! புரிந்திருக்கும்-ன்னு நினைக்கிறேன்! //

  இப்பத் தான் சோமாஸ்கந்தனைப் பற்றி இடுகை இட்டுவிட்டு வந்தேன். வந்து இந்தப் பின்னூட்டத்தைப் படித்தவுடன் கண்கள் கலங்கிவிட்டது.

  என்ன சொல்வது? தெரியவில்லை.

  ReplyDelete
 42. அபிஅப்பா1:48 PM, January 11, 2009

  ##கண்டிப்பா!
  சொன்னா அடிக்கப் போறீங்க!
  அக்டோபர்-ல தான் மயிலாடுதுறை போயிருந்தேன்! ஓங்களயும் சீமாச்சு அண்ணனையும் தான் நினைச்சிக் கிட்டேன்!

  அம்மா-அப்பா மணிவிழா, திருக்கடவூரில்! :)

  ###

  ஆண்டவா! அக்டோபர்ல சீமாச்சு அண்ணா அங்க தான் இருந்தாங்க, நான் நவம்பர் 9 முதல் 45 நாள் அங்க தான் இருந்தேன். நாங்க அங்க இருந்தாலும், இங்க இருந்தாலும் ஒரு சின்ன தகவல் சொல்லியிருந்தா திருக்கடையூர்ல எல்லா வசதியும் செஞ்சு குடுத்து இருக்கலாமே!

  வீட்டு பக்கம் போயிருந்தா அபியும் நட்ராஜும் ரொம்ப சந்தோஷப்பட்டு இருந்திருப்பாங்க, அது போல சீமாச்சு அண்ணாவின் அப்பாவும் தான் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க!

  அடுத்த முறை கண்டிப்பா போய் வாங்க!எல்லேராம் சாரை அழைத்து போன குதிரைவண்டியின் அஜீத் குதிரை முதல் பழங்காவிரி நமீதா வரை, மூக்கு சுந்தரின் சின்னகடை தெரு முதல், மயிலாடுதுரை சிவாவின் திருவிழந்தூரு வரை, மாயவரத்தானின் ஸ்கூல் முதல்,ராமச்சந்திரன்(உஷா)அவர்களின் விளையாட்டு இடம் முதல் அடடடா எத்தனை இடம் இருக்கு எங்க ஊர்ல பார்க்க:-)))

  அன்புடன்
  அபிஅப்பா

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP