Sunday, January 11, 2009

மார்கழி-27: பெண்களுக்கு நகை! ஆண்களுக்குச் சக்கரைப் பொங்கல்!

இன்னிக்கி ரொம்பவே தித்திப்பான பாசுரம்! ஆண்கள்-பெண்கள் ரெண்டு பேருக்குமே பிடிச்ச பாசுரம்! ஆண்களுக்குச் சாப்பாட்டு ஐட்டம் இருக்கு! பெண்களுக்கு நகை ஐட்டம் இருக்கு! அதுவும் விதம் விதமான ஸ்டைல் நகைகள்! அதையெல்லாம் போட்டுக்கிட்டு, பொங்கல் வரும் நேரத்தில் ஜிலு ஜிலு-ன்னு மின்ன, நம்ம காளைப் பயலுக எல்லாம் சர்க்கரைப் பொங்கலை ஒரு வெட்டு வெட்ட....பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!

* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

கூடாரை வெல்லும் சீர், கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு, யாம் பெறும் சம்மானம்,
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே!

பாடகமே என்று அனைய, பல்கலனும் யாம் அணிவோம்!
ஆடை உடுப்போம்! அதன் பின்னே பாற் சோறு!
மூட நெய் பெய்து, முழங்கை வழி வாரக்,
கூடி இருந்து குளிர்ந்து! ஏல்-ஓர் எம்பாவாய்!


போன பாசுரத்தில் நோன்புச் சாமானை எல்லாம் கேட்டு வாங்கிக்கிட்டாங்க-ல்ல? பாவை நோன்பு நோற்றாகி விட்டது! இதோ, பாவை நோன்பு முடியப் போகுது! தன் தோழிகளுக்கு எல்லாம் கண்ணனிடம் சொல்லி, பரிசு வாங்கிக் கொடுக்குறா கோதை!
அவளுக்கு எல்லாரையும் சந்தோஷப்படுத்தி பாக்கணும்-ன்னு ஒரு ஆசை! A Simple Girl Who puts a Smile on Your Face :)

ஆண்டாள் ஒரு மிகச் சிறந்த பெண் மேலாளர்! Team Player! பக்தி-பிரபத்தி நிறுவன CEO!
* பாசுரங்கள் 1-5 = நோன்பின் விதிகளைச் சொன்னாள்! Vision Statement! Specifications! அதைக் கொடுத்தாத் தானே நாமும் தெளிவாக வேலை பாக்க முடியுது! Spec இல்லீன்னா எம்புட்டு குழம்ப வேண்டி இருக்கும்?
* பாசுரங்கள் 6-15 = நோன்பு ஆரம்பம்! அத்தனை பேரையும் வீடு வீடாகப் போய் எழுப்பி, தன்னுடன் சேர்த்துக் கொண்டாள்! Human Resource = Mobilization, Optimization & Motivation! (HR-MOM)

* பாசுரங்கள் 16-25 = கண்ணன் வீட்டில் பிராஜெக்ட் நடக்குது! வாயிற் காப்போன், நந்த கோபன், யசோதை, பலதேவன், நப்பின்னை-ன்னு மொத்த டீமும் இருக்கு!
* பாசுரம் 26 (நேற்றைய பாசுரம்) = Project Delivery! கருவிகள் எல்லாம் கேட்டு வாங்கி, டெஸ்டிங் எல்லாம் முடிச்சி.....SUCCESS!!!

* பாசுரம் 27 (இன்றைய பாசுரம்) = Success! அதனால் இன்னிக்கி PROJECT PARTY! :) - பாற் சோறு, மூட நெய் பெய்து...முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோ....


* நோன்பு ஆரம்பிக்கும் போது நெய்யுண்ணோம், பாலுண்ணோம்-ன்னு சொன்னாங்க-ல்ல? - இப்போ "பாற் சோறு, மூட நெய் பெய்து"...
* நோன்பு ஆரம்பிக்கும் போது மையிட்டு எழுதோம், மலரிட்டு முடியோம்-ன்னு சொன்னாங்க-ல்ல? - இப்போ "பல்கலனும் யாம் அணிவோம்"...


இப்போ நோன்பு முடிகிறது அல்லவா? அதனால், நன்றாக அலங்காரங்கள் செய்து கொண்டு, அலங்காரப் ப்ரியனை ஆசை ஆசையாக அணுகுகிறார்கள்!
மையிட்டு, மலர் இட்டுக் கொள்கிறார்கள்! அவன் அலங்காரத்துக்கு ஒப்பாக, அவன் கண்ணுக்கு இனிமையாக, கண்ணனைச் சூழ்ந்து கொள்கிறார்கள்!

பாற் சோறும், பொங்கலும் பொங்கிப் பொங்கி,
உள்ளமும் மகிழ்ச்சியால் பொங்கிப் பொங்கி,
பொங்கலை அவனுக்கும் ஊட்டி, தாமும் உண்டு மகிழும்.....அந்தக் காட்சியைக் கற்பனை பண்ணிக்குங்க! எப்படி இருக்கு?

இந்த 27ஆம் நாளுக்கு கூடாரவல்லி என்று பெயர்! அன்னிக்கிப் பல வீடுகளிலும் இந்தக் காட்சி உண்டு! நீங்க யாரெல்லாம், யார் யாருக்கு எல்லாம் ஊட்டி விட்டீங்க-ப்பா? :))


இது மிக மிக விசேடமான பாசுரம்! இனிமேல் "கோவிந்த" கோஷம் தான் அடுத்தடுத்த பாசுரங்களில்!
கோவிந்த கோஷம் எங்கெல்லாம் அடுத்தடுத்து வரப் போகுது-ன்னு நீங்களே சொல்லுங்க பார்ப்போம்!
* கோ = பசு, உலகம், உயிர், அரசன், தலைவன், துறவி! கோ-விந்த = இந்தக் கோவினை எல்லாம் காப்பவன்! சகலத்தையும் காப்பவன்!
* இப்படிக் காத்தல் பூர்வமாய், அபய ரட்சாகாரமாய் இருக்கும் திருநாமம் "கோவிந்தா"! மிக மிக மங்களமான திருநாமம்!


அதான் மலையேறும் போது, "கோவிந்தா, கோவிந்தா" என்று சொல்லிக் கொண்டே திருமலை ஏற அடியவர்க்கு உத்தரவிட்டார் இராமானுசர்!
நோன்பு முடிந்து நிறையப் போகும் க்ளைமாக்ஸ் பாசுரங்கள் அல்லவா? நாமும் கோவிந்தா, கோவிந்தா என்று சொல்லிக் கொண்டே பதிவு ஏறுவோமா?

* ஆபாட மொக்குலவாடா, அடுகடுகு தண்ணலவாடா = கோவிந்தா கோவிந்தா!
* வட்டிகாசுல வாடா, வேங்கட ரமணா = கோவிந்தா கோவிந்தா!
* ஏடு கொண்டல வாடா, வேங்கட ரமணா = கோவிந்தா கோவிந்தா!
* ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா = கோவிந்தா கோவிந்தா!


பாசுர விளக்கத்துக்குப் போவோமா?

கூடாரை வெல்லும் சீர், கோவிந்தா = உன்னோடு இணங்காதவரையும் இணங்க வைத்து, வணங்க வைக்கும் கோவிந்தா!

யாரெல்லாம் கூடார்? கூடாதவர்கள்?
* இறைவனைப் பற்றிய ஆர்வமே இல்லாதவர்கள்! (ஞானம், கர்மம், பக்தி இல்லீன்னா கூட, சரி பரவாயில்லை, ஓக்கே தான்! ஆனால் ஆர்வம் வேணும்! அந்த ஆர்வம் = போற்றும் ஆர்வம்/தூற்றும் ஆர்வம், ரெண்டுமே :)))

* உலகுழல் ஆசாமிகள் = சமூகப் பொறுப்பே இல்லாதவர்கள்! உலகியலில் "மட்டுமே" செக்கு மாடு போல உழல்பவர்கள்!
(தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு விடு, சம்பாத்யம் இவையுண்டு, தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்
- என்பார் பாவேந்தர் பாரதிதாசன்)

* தப்புக் கணக்கு போடுபவர்கள் = இறைவனின் எளிமை/ நீர்மை/ செளலப்யம்/ எல்லாருடனும் எளிதாகப் பழகும் தன்மை - இதைப் பார்த்துட்டு, இவனைச் சுலபமா டபாய்ச்சிடலாம் என்று தப்புக் கணக்கு போடுபவர்கள்!

* இறைவனை வெறுப்பவர்கள் = இறைவனின் வைபவம், பெருமைகளை வெறுக்கும் துவேஷிகள்! அவன் பெருமையால் தங்கள் பெருமைகள் மறையுமோ? என்னும் சுயநலமிகள்! இதில் தூற்றுவோர் வரமாட்டார்கள்! அவர்கள் சமூகக் காரணங்களுக்காகவோ, இல்லை வேறு எதற்காகவோ தூற்றுபவர்கள்! அவ்வளவு தான்! ஆனால் உள்ளுக்குள் வெறுப்பு வைத்துக் கொண்டு அலைய மாட்டார்கள்!

துவேஷிகள், ஆத்திகர்-நாத்திகர் இருவரிலுமே உண்டு!
ஆத்திகரில்: ருக்மி = துவேஷி, துரியோதனன் = தூற்றுவோன்!
நாத்திகரில்: கம்சன் = துவேஷி, சிசுபாலன் = தூற்றுவோன்!
இப்படிக் கூடாதாரையும் கூட்டும் கோவிந்தன்! கூடாரை வெல்லும் கோவிந்தன்! எதிரியையும் தன் மோகனத்தால் கிறங்கடிக்கும் கோவிந்தன்!


உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு = உன்னைப் பாடித் தானே, நாங்க நோன்புப் பொருளான பறையைப் பெற்றோம்! அந்தக் கருவியைக் கொடுத்தவனும் நீயே! உழைப்பு மட்டுமே எங்களது!
ஆனா நாங்களே உன்னுடைய கருவியாச்சே! அப்படிப் பார்த்தா, எங்க உழைப்பும் ஒரு வகையில் உன்னுடைய உழைப்பு தான்!

யாம் பெறும் சம்மானம் = அந்த உழைப்பினால், இப்போது நாங்கள் சன்மானங்கள் பெறுகிறோம்!

நாடு புகழும் பரிசினால் நன்றாக = அந்தச் சன்மானம், சும்மானா சன்மானம் இல்லை! மோட்ச சன்மானம்! இறையன்புச் சன்மானம்! ஏதோ விருப்பப்பட்டவங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுத்துக்கிட்ட சன்மானம் இல்லை! நாடே புகழும் சன்மானம்!

சூடகமே-தோள் வளையே!


* சூடகமே = கை வளைகள் (Bracelet)
* தோள் வளையே = வங்கி என்னும் தோள் வளை (பரதநாட்டிய கை வங்கி)

தோடே-செவிப் பூவே!


* தோடே = பெண்கள் காதணி (ஆண்கள்=கடுக்கண்)
தோடுடைய செவியன் பதிகத்தையும் ஒப்பு நோக்குங்கள்!
சம்பந்தப் பெருமான் உமை அன்னையைத் தான் முதலில் தோடு-ன்னு பாடி, அப்புறம் செவியன், அது, இது-ன்னு ஈசனைப் பாடுகிறார்! :)

* செவிப் பூவே = காதின் ஓரத்தில் மாட்டிக் கொள்ளும் சின்ன பூப் போல மின்னும் ஆபரணம்! (கேள்வி: இதையும் கம்மலையும் கனெக்ட் பண்ணும் செயின் சமாச்சாரம் தானே மாட்டில்?)பாடகமே!


* பாடகமே என்று அனைய = கால்களில் மாட்டிக் கொள்ளும், மெல்லிய ஜல்-ஜல் ஆபரணங்கள்!

* பல்கலனும் யாம் அணிவோம் = இப்படிப் பல விதமான அணி கலனும் அணிவோம்!
* ஆடை உடுப்போம் = நல்ல ஆடைகளை உடுப்போம்!

அதன் பின்னே பாற் சோறு = நீருக்குப் பதில், பாலால் சோறு பொங்கி
மூட நெய் பெய்து = அதில் வாசனையான நெய்யை, விட மாட்டோம்-பெய்வோம், அருவி போலப் பெய்வோம்! :)

முழங்கை வழி வாரக் = பொங்கலில் நெய் வழியுதா? நெய்யில் பொங்கல் வழியுதா? :)
இப்படி பொங்கலும் நெய்யும், முழங்கை வரை வழியுது! அந்த அளவுக்கு வளப்பமாக, மகிழ்ச்சியாக (இன்று மட்டும்) உண்போம்!

தினமுமே இப்படி உண்ண முடியுமா? உடல் நலம் தானே குறைவற்ற செல்வம்! இன்னிக்கு மட்டும் விதி விலக்கு! ஏன்?
* 16ஆம் பாசுரம் = உன் வீட்டு வாசல், வாயிற் காப்போனில் இருந்து ஆரம்பித்தோம்!
* 26ஆம் பாசுரம் (நேற்று) = 16-ஆம் பாசுரத்தில் இருந்து எண்ணினால் பதினோராம் நாள் = ஏகாதசி! எனவே விரதம்!
* 27ஆம் பாசுரம் (இன்று) = துவாதசி! விருந்து! துவாதசி பாரணை-ன்னு சொல்வோமே! அது!

இத்தனை நாள் நோன்பிருந்தோம்! அதனால் தான் இன்று கொண்டாட்டம்!
கூடி இருந்து, குளிர்ந்து = இந்தக் கொண்டாட்டங்களில்,
எல்லாரும், ஒருவர் விடாமல், எந்தச் சாதி-மத-சமய-பண-கொள்கைப் பேதங்களும் இன்றி,
அடியவர்களாய்-அன்பர்களாய் ஒன்றாகக் கூடி இருப்போம்!
குளிர்ந்து இருப்போம்! மனம் குளிர்ந்து இருப்போம்!

டேய் கண்ணா, ஏதோ கட+உள்=கடந்து உள்ளவன்-ன்னு, நீ கடந்து நிக்காதே! உன்னையும் சேர்த்து தான் சொல்லுறோம்! நெய் வழிந்து மிதக்கும் சர்க்கரைப் பொங்கலை எங்களுடன் வந்து ஒரு வெட்டு வெட்டு!

நீயும் எங்களுடன் கூடி, நாங்களும் உன்னுடன் கூடி.....
மனம் குளிர்ந்து, குளிர்ந்து.....ஏல்-ஓர் எம்பாவாய்! ஏல்-ஓர் எம்பாவாய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

Be Happy! Eat Happy! Feel Happy - Today! Every Day!

24 comments:

 1. கூடாரைவல்லின்னாலே அக்காரடிசில் தான் ஞாபகம் வருது.. பாசுரத்தை பார்த்தவுடன் அக்காவிடம் செய்து தர சொல்லியுள்ளேன்..

  ReplyDelete
 2. //மலையேறும் போது, "கோவிந்தா, கோவிந்தா" என்று சொல்லிக் கொண்டே திருமலை ஏற உத்தரவிட்டார் இராமானுசர்!
  //

  திரு. T.M. செளந்தரராஜன் அவர்கள் செளராஷ்ட்ர மொழியில் ஒரு பாடல் பாடியுள்ளார் “கோவிந்த நாமமு மெல்லே சலோ”ன்னு அதாவது கோவிந்த நாமத்தை சொல்லிக் கொண்டே நடங்கள் என்று கேட்க மிக அருமையாக இருக்கும்.

  ReplyDelete
 3. இன்னைக்கு பாசுரம் கடகடன்னு முடிஞ்சுருச்சே.. சர்க்கரை பொங்கல் சாப்பிட போகும் அவசரமோ? :)

  ReplyDelete
 4. //பொங்கலும் நெய்யும், முழங்கை வரை வழியுது! அந்த அளவுக்கு வளப்பமாக, மகிழ்ச்சியாக (இன்று மட்டும்) உண்போம்!//

  எங்க ஊர்ல பெருமாள் கோவில்ல தினமுமே இப்படி தான் உண்போம்.. பெருமாளுக்கு பாசுரம், நமக்கு சர்க்கரை பொங்கலும் சுண்டலும். :(

  ReplyDelete
 5. கோவிந்த நாமத்துடன் துவங்கும் இந்தப்பாடலில்தான் ஆண்டாளுக்கு என்ன ஒரு பொது நல அக்கறை!கூடி இருந்து சூடானசக்கரைப்பொங்கலை குளிரக்குளிர சாப்பிட அழைக்கிறாள்!
  பொங்கலுக்கு நாலுநாள்முன்னாடி வரும் கூடாரவல்லிக்கு பெரும்பாலான வீடுகளில் பாற்சோற்றில் செய்து விடுவோம். நெய்யையும் ஆண்டாள் வழியில்மழைபோல தாராளமாய் பெய்துசெய்தால்தான் நிகுநிகுவென வெல்லம் சேர்ந்து பொன்கரைசலாய் ஜொலிக்கும் அது!முழங்கைவழிவார தயாராக இருக்கும்! இங்கயும் தயாராகிவிட்டது!!

  ReplyDelete
 6. * செவிப் பூவே = காதின் ஓரத்தில் மாட்டிக் கொள்ளும் சின்ன பூப் போல மின்னும் ஆபரணம்! (கேள்வி: இதையும் கம்மலையும் கனெக்ட் பண்ணும் செயின் சமாச்சாரம் தானே மாட்டில்?)
  >>>>>>> செவிப்பூ என்பது காது மடல்களில் ---(சின்னத்திரை தீபாவெங்கட்நிறையப்போட்ருப்பாங்க அவங்களுக்கு அழகா இருக்கும்) சின்னதாய் பூப்போல இருக்கும் அணிகலன்..அதுக்கும் மாட்டலுக்கும் நோ கனெக்‌ஷன் என்பதை உங்க செவிலபோட்டு வைக்கறேன் ரவி!!!

  ReplyDelete
 7. டக் டக்குனு நகைகள் படமெல்லாம் எங்கபிடிச்சிபோடறீங்களோப்பா:) அழகு!நியூயார்க்கோயில்ல மார்கழிமாத சொற்பொழிவுதானே செய்யபோறீங்க இல்ல காமிராவும் கையுமா போயிடறீங்களா?:):)

  ReplyDelete
 8. அதென்ன கோவிந்த நாமத்திற்குமட்டும் அத்தனை மகிமை? ஆயிரம் நாமங்களில் பெரும்பாலும் பக்தர்களால் அதிலும் பாமரர்களால் அதிகமாய் உச்சரிக்கபடுவது அந்த நாமமே அதற்கு சிறப்புக்காரணம் இருக்கணும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

  ReplyDelete
 9. Vanakkam sir,
  Koodarai velvan,then what about koodiavarai? Koodiavarkku ananyas chinthayathomam.and kulam tharum,like to hear from you more and more later.Got your sarkaraipongal.
  ARANGAN ARULVANAGA,
  Anbudan
  k.srinivasan.

  ReplyDelete
 10. சக்கரைப்பொங்கல் பாக்கவே சூப்பரா இருக்கே.

  ReplyDelete
 11. இதுக்கு எங்கப்பா ஆச்சாரிய விளக்கம், ஒவ்வொரு சொல்லுக்கும் இந்த பாசுரத்தில் அற்புதமான விளக்கம் இருக்குமே, சொல்லுங்க கண்ணன் காத்திருக்கிறேன் கேட்பதற்க்கு...........

  Mani Pandi

  ReplyDelete
 12. //A Simple Girl Who puts a Smile on Your Face :)//
  :(((

  இந்த கொடுமைக்கு பதில் சொல்லாட்டின்னா உங்களை சும்மா விட போறது இல்லை.
  தனியா பேசிக்கிறேன்.மார்கழி முடிஞ்சா பொங்கல் வருதோ இல்லையோ உங்களுக்கு போகி பண்டிகை கண்டிப்பாக இருக்கு அண்ணா

  இப்படிக்கு,
  அன்பு தங்கை

  ReplyDelete
 13. //ஷைலஜா said...
  டக் டக்குனு நகைகள் படமெல்லாம் எங்கபிடிச்சிபோடறீங்களோப்பா:) அழகு!//

  உஷ்ஷ்ஷ்...
  உரக்கப் பேசாதீங்க-க்கா! பாவனா விஷயமெல்லாம் வெளிய வரப் போவுது! :))

  //நியூயார்க்கோயில்ல மார்கழிமாத சொற்பொழிவுதானே செய்யபோறீங்க இல்ல காமிராவும் கையுமா போயிடறீங்களா?:):)//

  சொல் பொழிவா இல்லை ஜொள் பொழிவா-ன்னு நண்பன் கேக்குறான்! :)

  ReplyDelete
 14. //சின்ன அம்மிணி said...
  சக்கரைப்பொங்கல் பாக்கவே சூப்பரா இருக்கே//

  அலோ...அதான் நகை கொடுத்திருக்கோம்-ல?
  பொங்கலையாச்சும் ஆண்களுக்கு விட்டு வைங்க-க்கா! :)))

  ReplyDelete
 15. //Raghav said...
  இன்னைக்கு பாசுரம் கடகடன்னு முடிஞ்சுருச்சே.. சர்க்கரை பொங்கல் சாப்பிட போகும் அவசரமோ? :)//

  பின்னே?

  இன்னிக்கி ஆண்டாளுக்கு கொடுத்திருக்கும் CEO பட்டம் பத்தி ஒன்னும் சொல்லலையா? உங்க கணக்குப் புத்தகத்தில் மறக்காம எழுதிக்குங்க ராகவ்! :)

  ReplyDelete
 16. //Raghav said...
  கூடாரைவல்லின்னாலே அக்காரடிசில் தான் ஞாபகம் வருது.. பாசுரத்தை பார்த்தவுடன் அக்காவிடம் செய்து தர சொல்லியுள்ளேன்..//

  இன்னுமா சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க? வேர் இஸ் மை ஷேர் ஃப்ரம் வேலூர்? :)

  ReplyDelete
 17. //திரு. T.M. செளந்தரராஜன் அவர்கள் செளராஷ்ட்ர மொழியில் ஒரு பாடல் பாடியுள்ளார் “கோவிந்த நாமமு மெல்லே சலோ”ன்னு அதாவது கோவிந்த நாமத்தை சொல்லிக் கொண்டே நடங்கள் என்று கேட்க மிக அருமையாக இருக்கும்//

  கண்ணன் பாட்டில் பொருள் போட்டு இடுங்களேன்!
  இது வரை கண்ணன் பாட்டில் செளராஷ்ட்ரம் வந்ததே இல்லை!
  தெலுங்கு, கன்னடம் வந்திருக்கு!

  ReplyDelete
 18. //Raghav said...
  //பொங்கலும் நெய்யும், முழங்கை வரை வழியுது! அந்த அளவுக்கு வளப்பமாக, மகிழ்ச்சியாக (இன்று மட்டும்) உண்போம்!//

  எங்க ஊர்ல பெருமாள் கோவில்ல தினமுமே இப்படி தான் உண்போம்..//

  ஆகா! நோ நோ!
  சேஞ்ஜ் இட்! :)

  ReplyDelete
 19. //ஷைலஜா said...
  தீபாவெங்கட்நிறையப்போட்ருப்பாங்க அவங்களுக்கு அழகா இருக்கும்)//

  உங்களுக்கும் தான்! :))

  //சின்னதாய் பூப்போல இருக்கும் அணிகலன்..அதுக்கும் மாட்டலுக்கும் நோ கனெக்‌ஷன் என்பதை உங்க செவிலபோட்டு வைக்கறேன் ரவி!!!//

  ஹிஹி! இந்த நகை போன்ற பெரிய பெரிய தத்துவ விஷயமெல்லாம் எனக்கு எப்படிக்கா தெரியும்? மீ ஒன் அப்பாவிச் சிறுவன்!
  நகை பாஷ்யம் எழுதிய நீங்க தானே இதுக்கெல்லாம் விளக்கம் சொல்லணும்? :))

  ReplyDelete
 20. //A Simple Girl Who puts a Smile on Your Face :)//
  :(((//

  ஹா ஹா ஹா

  //இந்த கொடுமைக்கு பதில் சொல்லாட்டின்னா உங்களை சும்மா விட போறது இல்லை//

  பொறாமையா என் தம்பி மேல?
  அவன் slogan ஆண்டாளுக்கும் பொருந்தும்! ஓக்கேவா? :)

  //தனியா பேசிக்கிறேன்//

  அச்சச்சோ! இது வேறயா?
  உனக்கு நீயே ஏம்மா தனியா பேசிக்கற? :)

  //மார்கழி முடிஞ்சா பொங்கல் வருதோ இல்லையோ உங்களுக்கு போகி பண்டிகை கண்டிப்பாக இருக்கு அண்ணா//

  பொங்கலை பொங்கலை வச்சி
  மஞ்சளை மஞ்சளை எடு
  தங்கச்சி தங்கச்சி தங்கச்சி!

  ReplyDelete
 21. //அச்சச்சோ! இது வேறயா?
  உனக்கு நீயே ஏம்மா தனியா பேசிக்கற? :)
  //

  aww vittha ennai loosunu intha ulagame kopida neegathaan karanam pola :D


  //பொங்கலை பொங்கலை வச்சி
  மஞ்சளை மஞ்சளை எடு
  தங்கச்சி தங்கச்சி தங்கச்சி!//

  hehe ponggal annaiku ponggal kidaikuthaane theriyalaiyeee..

  ReplyDelete
 22. கூடாரவல்லி வாழ்த்துகள். சக்கரை பொங்கல் போல இனிக்கும் பதிவு.

  ReplyDelete
 23. ஆர்வத்தைப் பற்றி பேசும் போது 'பகர் ஆர்வம் ஈ' என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே அருணகிரிநாதரின் வாக்கு அது நினைவிற்கு வந்தது இரவி. :-)

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP