அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்!
இடம்: திருமலை-திருப்பதி
செய்தி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திருமலையில் வழிபாடு.
(pdf version of this post)
பைந்தமிழால் பாமாலை சூட்டி, ஆழ்வார்கள் உள்ளம் உருகிய இடம்.
தமிழிசையால் இறைவனைத் தாலாட்டி மகிழ்ந்த இடம்.
தெழி குரல் அருவித் திருவேங்கடம்!
- இன்று பணக்காரத் தோற்றம் காட்டினாலும், அதன் ஆன்மா என்றுமே எளிய பக்தி மட்டும் தான்!
"எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!" என்பது ஆழ்வாரின் உள்ளக் கிடக்கை!
இப்படி மானுடம், தமிழ் என்று இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் திருமலை நாயகன், நம் அப்துல் கலாம் ஐயாவையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லையே!
முன்பு ராபர்ட் க்ளைவ், தாமஸ் மன்றோ, பீவி நாஞ்சாரம்மா, பீதா பீவி என்று அனைவரையும் கவர்ந்தவன் தானே அவன்!
அதனால் தான் போலும், அவன் அனுபவத்தை நேரிலே பெறுவதற்காகத் திருமலைக்கு வருகை புரிந்தார் நாட்டின் முதற் குடிமகன்.
ஆனால் அடியவர்களுக்கும், பக்தர்களுக்கும் தன் வருகையின் படோபடத்தால், தொல்லை தர விரும்பவில்லை அவர்.
அதனால் விடியற்காலை, வைகறைப் பூசைகளில் மட்டும் கலந்து கொண்டார். நாட்டின் மன்னருக்கு அளிக்கப்படும் "இஸ்டி-கபால்" மரியாதைகள் தரப்பட்டு, ராஜகோபுரத்தின் அருகே வரவேற்கப்பட்டார்.
இனி என்ன? நேரே தரிசனம் தான்!
ஆனால் கலாம் தயங்கி தயங்கி நிற்கிறார்.
அதிகாரிகளே "அதை" மறந்து விட்டார்கள்!
ஆனால் இது பற்றி எல்லாம் முன்பே தெரிந்து கொண்டு வருபவர் தானே நம் தலைவர்!
"எங்கே... அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்" என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.
மாற்று மதத்தினராய் இருப்பதால், ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்!
இப்படி ஒரு வழக்கம் தேவையா?
இது போல் ஆகமங்களில் கூடச் சொல்லப்படவில்லையே! இது அவரவர் அந்தந்த ஆலயங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட விதிகள் தானே!
முன்பு முகம்மதிய மன்னராட்சிக் காலத்தில்....
திருவரங்கம் படையெடுப்பு, திருப்பதி கோவில் கொள்ளை, ஆலயங்களுக்குத் திறை வசூல், மறுத்தால் கோவில் உடைப்பு
என்றெல்லாம் இருந்த போது, ஆலய நிர்வாகிகள் அமைத்த சட்டதிட்டம்.
ஐயா சாமீ....நீ உள்ளே வந்து உயிரை வாங்காதே-உனக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைப் பக்தர்களிடம் வசூலித்துக் கட்டி விடுகிறோம், என்று "அக்ரீமெண்ட்" அவலம்!
அப்போது கூட ஜீயர்கள் என்னும் வைணவத் துறவிகள்,
இதனால் உண்மையான மாற்றுமத பக்தர்கள் உள்ளே வந்து பெருமானைச் சேவிக்க முடியாது போய் விடுமே என்று எண்ணினர்;
அதிகாரிகளிடம் சொல்லி ஒரு மாற்று ஏற்பாடு செய்தனர். அது தான் இந்தக் கையொப்பப் படிவம்! உறுதிமொழி வாங்கிக் கொண்டு உள்ளே விடுவது!
துலுக்கா நாச்சியார் என்ற இஸ்லாத்தின் பெண்மணி, இறைவனைக் கண்டு மோகித்த போது, உள்ளே அனுமதி மறுத்தாரா இராமானுசர்?
இல்லையே! அவளுக்குத் தனிச் சந்நிதி அல்லவோ கண்டார்!
அவர் வழி வந்த ஜீயர்கள், அரசியல் அவலத்தால் அன்பர்கள் அல்லல்படக் கூடாது என்று இந்த மாற்று வழி கண்டனர்!
பின்னர் காலம் உருண்டோடியது!
முகம்மதிய சுல்தான்களின் ஆட்சி எல்லாம் போயே போய் விட்டது! ஆனால் வழக்கத்தை மட்டும் மாற்ற யாருக்கும் தோன்றவே இல்லை! மறந்தே போனது!
மடத்தில், பூனையின் தொல்லை அதிகம் இருந்ததால், அதைத் தூணில் கட்டிவிட்டு பாடம் எடுத்தார் ஒரு குரு.
அவருக்குப் பின் வந்தவர்கள் காலத்தில், பூனைகள் தொல்லையே மடத்தில் சுத்தமாய் இல்லை.
இருந்தாலும் எங்கிருந்தோ தேடிப் பிடித்து, ஒரு பூனையைக் கொண்டு வந்து தூணில் கட்டி விட்டுத் தான் பூசைகளை ஆரம்பித்தார்களாம்:-)
அந்தக் கதை ஆகி விட்டது!
இது போன்ற விடயங்கள் இப்போது பெரும் பிரச்சனையாகக் கிளம்பி, ஆளாளுக்கு அரசியல் பண்ணத் துவங்கி விட்டார்கள்!
அரசியல் சட்டங்கள் கூட மாற்றமும் திருத்தமும் பெறுகின்றன.
ஆனால் அவை எப்போது செல்லும் என்றால்,....
அதை மக்கள் பிரதிநிதிகள், தாங்களாகவே அவையில் கொண்டுவர வேண்டும்.
அதே போல் தான், கால வழக்கமாக ஏற்பட்ட ஆலய விதிகளும்;
அவை திருத்தப்படலாம்.
ஆனால் அவற்றை வெளியில் இருந்து திணித்தால் வம்பு தும்புகள் தான் பறக்கும். அவரவரே செய்ய வேண்டும்!
ஆன்மிகப் பெரியவர்களும், மடங்களும், ஆலய நற்பணி மன்றங்களும் சேர்ந்து கலந்துரையாடினால் ஒரு நல்ல வழி கிடைக்கும்!
எல்லாரையும் கூட்டுவது சிரமம் என்றால்...பெருமைக்குரிய மடங்கள் ஒரு சிலவாவது, இதற்கு முன் முயற்சிகள் எடுக்க வேண்டும்!
ஒன்றைப் பார்த்து படிப்படியாக இன்னொன்றும் தெளிவு பெறும்!
இராமானுசர் வழியில், அனைத்துச் சாதி-அர்ச்சகர்கள் பயிற்சித் திட்டம் போன்ற நல்ல மறுமலர்ச்சிகளைக் காலம் காலமாகச் செய்து வரும் திரிதண்டி சின்ன நாராயண ஜீயர்,
முதல்வர் கலைஞரின் மதிப்பைப் பெற்ற திருவரங்கம் எம்பெருமானார் ஜீயர், மற்றும் பரனூர் அண்ணா கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் போன்றோர் இது போன்ற முன்முயற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும்!
- இவர்கள் எல்லாம் ஒரு unifying Force என்னும் ஒருங்கிணைப்பு சக்தியாகச் செயல்பட்டால், இதை எளிதில் தீர்த்து விடலாம்!
சரி, நாம் அப்துல் கலாமுக்குத் திரும்பி வருவோம்!
நல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை!
அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார்.
உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது! அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே!
ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்! இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்.
வரவேற்பு எல்லாம் முடிந்து, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை!
படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று பாடியது போல், படி அருகே நின்று விழிகளால் பரந்தாமனைப் பருகாதார் யார்?
கலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, நாம் அறியோம்!
சுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு.
முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார்.
அங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்!
திருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது!
மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா?
அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை! - இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்!
அதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள்!
அப்போது தான் அப்துல் கலாம் குண்டைத் தூக்கிப் போட்டார்! :-)
வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே!
அதை ஓதி வாழ்த்தும் போது, நம் தேசத்தின் பேரைச் சொல்லி, "இந்தியா" என்று வாழ்த்திக் கொடுங்களேன்! நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்...
யாருக்கும் முகத்தில் ஈயாடவில்லை! அருகில் இருந்த ஆளுநர் பர்னாலாவுக்கும், முதல்வர் நாயுடு காருவுக்கும் தான்!
அட, இந்த மனுசனுக்கு எப்படி இது தெரிந்தது என்ற வியப்பா!
இல்லை இது வரை யாரும் இப்படிக் கேட்டுப் பெற்றதில்லை என்ற திகைப்பா?
"இந்தியா" என்ற பெயருக்குத் திருமலைக் கோவிலில் நடந்த அர்ச்சனை இதுவே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்!
அருகில் சேஷாத்ரி என்ற அர்ச்சகர்/பாரபத்யகாரர் இருந்தார்.
அவரிடம் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.600 பணம் எடுத்துக் கொடுத்து, மூன்று சகஸ்ரநாம அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கச் சொன்னார் கலாம்.
இது போன்று அர்ச்சனை செய்ய 200 ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.
எங்கேயோ முகம் தெரியாமல் வறுமையில் வாடும் ஏழை இந்தியன் ஒருவன். அவனுக்குத் தன் பெயர் சொல்லி, தன் நல்வாழ்வுக்கு அர்ச்சனை செய்து கொள்ள முடியுமோ என்னவோ,....அதுவும் திருவேங்கடமுடையான் சன்னிதியில்!
பொத்தாம் பொதுவாக, அவர்களை எல்லாம் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சனை செய்து வைக்குமாறு சொன்னார் கலாம்!
அர்ச்சகர்களும் மறுநாள் காலை செய்து வைத்தனர்!
கோவில்களில் ட்யூப்லைட்-டில் கூட உபயம் என்று தன் பெயரை ஒட்டி வைத்து, வரும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் மங்கலாக்கும் ஆசாமிகள் எத்தனை பேர் உள்ளனர்! :-)
தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம். இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்!
ஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா? - அந்த நாள், கோவில் பட்டர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்!
பலரும் அப்துல் கலாமை,
ஒரு விஞ்ஞானி, தேசபக்தர், மனித நேயர், நல்ல மேலாளர்,
கல்வியாளர், குழந்தைப் பாசம் கொண்டவர், எளிமைப் பண்பாளர்,
இயற்கை ஆர்வலர், குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள்!
சற்றே வித்தியாசமாக,
திருவேங்கட மலையில் அப்துல் கலாமைக் கண்டதே இந்தப் பதிவு!
அவர் ஒய்வு பெறும் இந்த வேளையில்....
அவர் ஓய்வு தான் பெறுகிறாரா......இல்லை அவரை வைத்து இவர்கள் ஆட்டம் போட எண்ணுகிறார்களா....தெரியவில்லை!
எது எப்படியோ.....
அவர் முதலாம் பதவிக் காலத்துக்கு விடைகொடு விழா!
//"இந்தியா" என்ற பெயருக்குத் திருமலைக் கோவிலில் நடந்த அர்ச்சனை இதுவே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்!//
ReplyDeleteAHHAAAA....SUPER ! ASATHAL PATHIVU...VAZGA NII EMMAAN !
:)
(SORRY MY E-KALAPPAI NOT WORKING)
படிச்சதும், கண்ணுலே ...............காவிரிதான்.
ReplyDeleteஅருமையான செய்தி. சுவையான பதிவு. வாழ்த்துக்கள் ரவி.
ReplyDeleteஎ.சொ.அ.க மை?
ReplyDeleteஎன்ன சொல்வது அப்துல் கலாமை?
எண்ணத்தால்(இந்தியாவை முன்னேற்ற வேண்டும்) பெரியவர்கள் நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கும் என்பதற்காக ஒரு நிகழ்வு இது.
புல்லரிக்க வைக்கிறது.
அதே சமயத்தில் காவிரியை நைசாகா நியூசிலாந்துக்கு கடத்த முயற்சிக்கும் துளசியின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். :-))
நம்மவரின் பெருமையும் மகிழ்சியும் மேலெழுகிறது, வேறென்ன சொல்ல?
ReplyDeleteவெளிச்சத்திற்கும் நன்றிகள் ரவி!
சூப்பரு தலைவா!!
ReplyDeleteஅற்புதமான தகவல்,மிக அழகாக எழுதியுள்ளீர்கள் (எப்பவும் போல!)
வளரட்டும் உங்கள் தமிழ் தொண்டு!! :-)
நாட்டின் முதல் குடிமகன் அல்லவா? அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
//படிச்சதும், கண்ணுலே ...............காவிரிதான். //
ReplyDeleteரிப்பீட்டு!
அருமையான பதிவு.
ReplyDeleteஇந்த தகவலை எங்கிருந்து பெற்றீர்கள் ரவி?
அவர் நிஜமாகவே மிகவும் அரிய ஒரு மனிதர்தான். அவரை முதல் குடிமகனாக தொடர்ந்து பெற முடியாதது இந்த தேசத்தின் துரதிர்ஷ்டமே. :-(
இதற்கு என்னவென்று நான் பின்னூட்டம் போடுவது கண்ணபிரான்?
ReplyDeleteகண்ணீருடன்
செல்வன்
+
ReplyDeleteமிக அருமையான பதிவு. நல்ல தகவல்கள். எதை வைத்துதான் அரசியல் செய்யலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகள் மத்தியில், கலாம் நிச்சயம் போற்றப் பட வேண்டியவரே.
ReplyDelete//செல்வன் said...
ReplyDeleteஇதற்கு என்னவென்று நான் பின்னூட்டம் போடுவது கண்ணபிரான்?
கண்ணீருடன்
செல்வன்
//
செல்வன் பின்னூட்டம் என்ன போடுவதென்றே தெரியலையா ?
என்னங்க சொல்றிங்க ? குருவாயூர் கோவிலாவது இந்து பாரம்பரிய கட்டுப்பாட்டுகளுடன் தொடரட்டுமே, பிடிக்காதவர்களுக்கு ஆயிரம் கோவில்கள் இருக்கிறது என்று சொன்ன தாங்கள் திருப்பதியை ஆயிரத்தில் ஒன்றாக நினைத்திருக்கிறீர்கள் என அறிந்து மகிழ்கிறேன். சரியா ?
சர்வேசன் பதிவில் தாங்கள் இட்ட பின்னூட்டத்திற்கு இது முரண்பாடு உடையது அல்லது ஒத்தது ?
தெளிவு படுத்துங்களேன்.
//செல்வன் said...
ReplyDeleteஇதற்கு என்னவென்று நான் பின்னூட்டம் போடுவது கண்ணபிரான்?
கண்ணீருடன்
செல்வன்
//
செல்வன் அவர்களே,
தண்ணீரும் சாமியும் ஒன்று என்று சர்வேஷன் பதிவில் சொன்னீர்கள்.
இங்கே கண்ணீரை விடுகிறேன் என்றீர்கள். முன்னுக்குப்பின் முரணாகச் சொல்கிறீர்கள்.
உங்களை நான் வேறு ஒருமாதிரியாக கற்பனை செய்து வைத்திருந்தேன். சொதப்பி விட்டீர்கள்.
உங்களின் இந்த பதிலால் பலர்(முகமூடி) உங்களை பிராண்டுவார்கள்.
நல்ல பதிவு தோழரே.. இதுவரையிலும் இருந்திருந்த ஜனாதிபதிகளில் ஒரு புதிய முன் மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறார் நமது கலாம். கோவிலுக்குச் செல்வது ஆண்டவனை சேவிப்பதற்கு மட்டுமே.. என் கவுரவத்தை நிலை நாட்ட அல்ல என்று கலாம் சொல்லாமல் சொல்லியிருப்பதை மற்ற அரசியல்வாதிகள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய துரதிருஷ்டம் அவர் மறுபடியும் ஆசிரியப் பணிக்குச் செல்லப் போகிறார். ஆனாலும் அடுத்த வரக்கூடிய ஜனாதிபதிகளுக்கு கலாமின் எளிமையும், நடத்தையும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன்..
ReplyDeleteஅருமையான தகவல். அருமையான மனிதரைப் பற்றிய தகவல்
ReplyDeleteகலாம் கலாம்தான்....நன்றி KRS
ரவி சங்கர்!
ReplyDelete"ராஜ்ரபதி பவனில் மனிதனைக் கண்டேன்"...கவிஞர் வைரமுத்து கூறியது நினைவுக்கு வந்தது.
அருமையான மனதைத் தொட்டசெய்தி; அதை நீங்கள் கூறியவிதம்; படம் யாவும் பிரமாதம்.
இந்த அரசியல் கல்லெறியில் இவர் ஈடுபடாமல்; ஒருமனதாகத் மீண்டும் தேர்வாகாவிடில்
ஒதுங்கிவிட்டாராகில் நன்று
அண்ணே,
ReplyDeleteஉங்களை மாட்டிவிட்டுட்டேன்னு கோவிக்க கூடாது. இது எதோ எட்டு விளையாட்டாம். உங்களபத்தி 8 தகவல் வந்து சொல்லுங்க!!
இதோ பதிவ பாருங்க !!! நன்றி!!!
நல்ல பதிவு கேயாரெஸ். அப்துல் கலாம் என்ற மாமனிதர் பாரதத்தின் நிரந்தர குடியரசு தலைவராக இருக்கத் தகுதி வாய்ந்தவர்! அவருக்கு இரண்டாம் தவணை வழங்குவதைக் கூட எதிர்க்கின்ற செக்கியூலர் மற்றும் சீன அடிவருடிக் கட்சிகள். என்ன கொடுமை!
ReplyDeleteஇந்த வார திண்ணையில் ஐயன் காளியின் அருமையான கட்டுரை - கோவிலில் எம்மதத்தார் பாருங்கள் -
ஐயன் காளியின் முந்தைய 2 கட்டுரைகள் -
கோயில்களில் பிறமதத்தார் - ஒரு முரண் பார்வை - பாகம் 1
கோயில்களில் பிறமதத்தார் - ஒரு முரண் பார்வை - பாகம் 2
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteAHHAAAA....SUPER ! ASATHAL PATHIVU...VAZGA NII EMMAAN !
:)
(SORRY MY E-KALAPPAI NOT WORKING)//
நன்றி GK.
கலப்பை மக்கர் பண்ணிற்றா? - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்! :-)
//துளசி கோபால் said...
ReplyDeleteபடிச்சதும், கண்ணுலே ...............காவிரிதான்.//
எழுதும் போது எனக்கும் கண்ணில் கங்கை தான் டீச்சர்.
இந்த நிகழ்வைப் பற்றி அன்றைய செய்தித் தாள்களில் வந்திருந்தாலும்,
ஆலய ஊழியர் ஒருவர் இது பற்றிய தன் 1st hand informationஐ என்னிடம் ஒரு முறை பேசும் போது சொல்லி இருந்தார். அதைத் தான் பதிவாக்கி விட்டேன்!
கண்ணுலே காவிரின்னு சொல்லியிருக்கீங்க.
ஹூம்...கண்ணுலயாச்சும் பிரச்சனை இல்லாமல் காவிரி வருதே...அது வரைக்கும் மகிழ்ச்சி தான்! :-)))
தேசி பண்டிட் இணைப்புக்கு நன்றி டீச்சர்.
அண்ணே,
ReplyDeleteஉங்களை மாட்டிவிட்டுட்டேன்னு கோவிக்க கூடாது. இது எதோ எட்டு விளையாட்டாம். உங்களபத்தி 8 தகவல் வந்து சொல்லுங்க!!
இதோ பதிவ பாருங்க !!! நன்றி!!!
கண்ணில் நீர் வரச் செய்த பதிவு. அற்புதமான மனிதர், மனிதம் என்பதின் அர்த்தம் புரிந்து வாழ்பவர், இன்றைய நாட்களில் வடமொழியான சம்ஸ்கிருதத்தைச் செத்த பாஷை என்று சொல்லி இழிப்பார் மத்தியில் அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு அதன்படி பிரார்த்திக்கச் சொன்ன உத்தமர். திரும்பவும் அவரே வந்தால்? வரவிடுவாங்களா? :(((((((((((
ReplyDeleteபூனைக்கதைகள் எல்லாம், நமது அனைத்து முறைகளையும் அர்த்தமற்றவையாக்குவதற்காக மற்றவர்களினால் சோடிக்கப்பட்ட கதைகளே.
ReplyDeleteஎல்லோரும் கலாம் மாதிரி இருக்க மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்,
அப்படியிருக்க ஆலய முறைகளை மாற்ற நினைப்பதில் அர்த்தமில்லைதானே.
ஆண்டவன் அருள் எங்கும் பரவட்டும்.
ஆனந்தம் எங்கும் நிலைக்கட்டும்.
கோவிந்தா! கோவிந்தா!!
கண்கலங்காமல் படிக்கவேண்டும் என்ற எனது பிரயத்தனங்கள் தோல்வி.
ReplyDeleteஏன் இப்படி நல்லனவற்றைப் படிக்கும்போதே ஆனந்தக் கண்ணீர் வரும் அளவிற்கு அவ்வளவு அபூர்வமாகிப் போய்விட்டனவா நற்பண்புகள்?
தலைவர்கள் முன்மாதிரியாகத் திகழ்ந்தால் நமது நாட்டின் பெரும்பான்மையான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராக வராவிட்டாலும் (வரவிட மாட்டார்கள் சுயநலத்தில் கடைந்தெடுத்த அரசியல்வியாதிகள்), தமிழக அரசியலிலாவது தம்மை இணைத்துக்கொண்டு மற்ற தலைவர்களை தமது முன் மாதிரிச் செயல்பாடுகளால் வெட்கமுறச் செய்யவேண்டும்.
நாடும் மக்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று சதா சிந்திப்பவன் நல்ல தலைவன்; அரசன் - இறைவனுக்கு ஒப்பானவன். கலாம் கடவுள். அவருக்குத் தேவை சர்வ வல்லமை! அதை இறைவன் அருளட்டும்.
பதிவுக்கு நன்றி. பாராட்டுகள்.
oru nalla manithar anal averaiyum kindal pannurangale
ReplyDeleteoru eelathamilan
சிறப்பான இடுகை ரவி. சமயத்தைப் பற்றிய சரியான புரிதல்களே ஆன்மீகத்தை கொண்டுசெல்ல உதவும். அவ்வகையில் உங்கள் பணி சிறப்பானது.
ReplyDeleteகலாம் அவர்களின் மேன்மை சொல்லில் அடங்காது.
அருமையான நடையில் அருமையான கருத்தை வைத்து அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்க வளமுடன்
//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteஅருமையான செய்தி. சுவையான பதிவு. வாழ்த்துக்கள் ரவி.//
நன்றி கொத்ஸ்!
// வடுவூர் குமார் said...
எண்ணத்தால்(இந்தியாவை முன்னேற்ற வேண்டும்) பெரியவர்கள் நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கும் என்பதற்காக ஒரு நிகழ்வு இது. புல்லரிக்க வைக்கிறது//
சொல்லும் செயலும் ஒன்றாவது ஒரு சிலரிடத்தில் தான் குமார் சார்!
அவர்களால் மட்டுமே இப்படிச் சிந்திக்க முடியும்!
//ஜீவா (Jeeva Venkataraman) said...
ReplyDeleteநம்மவரின் பெருமையும் மகிழ்சியும் மேலெழுகிறது, வேறென்ன சொல்ல?//
நன்றி ஜீவா...
பெருமையோடு, இவரைப் பார்க்கும் போது பொறுப்பும் கூடிக் கொள்கிறது! :-)
//CVR said...
ReplyDeleteசூப்பரு தலைவா!!
வளரட்டும் உங்கள் தமிழ் தொண்டு!! :-)///
கிழிஞ்சுது போங்க! தமிழ்த் தொண்டா? நானா? துண்டு போடறேன்னு சொல்லுங்க; ஒப்ப்புதுக்கறேன்!
தொண்டு எல்லாம் நல்லன்பர்கள் செய்து வைத்தது.
தமிழுக்காக வாழ்வது ஒன்று!
தமிழால் வாழ்வது ஒன்று!
நான் இரண்டாம் பிரிவுன்னு கூடச் சொல்ல முடியுமான்னு தெரியல!
காலையில் செய்தித்தாளைப் பார்த்தா -
Kalam's game is over - Sharad Pawar-ன்னு போட்டிருந்துச்சு.
டென்சன் ஆயிட்டேன்! கேம் ஒவர் என்று சொல்வதெல்லாம் ஓவர்!
டீசென்டா சொல்லியிருக்கலாம்!
அதான் இப்படிக் கடகடவென்று பதிவு எழுதி விட்டேன்!
நல்லதொரு முன்மாதிரி. அப்துல் கலாம் அவர்கள் மிகச்சிறந்த மனிதர். அவருக்கு இரண்டாவது வாய்ப்புக் கொடுக்கக் கசக்குது பலருக்கு. என்ன செய்ய. அரசியல் விளையாடுது.
ReplyDeleteசரி. அவரும் ஓய்வெடுக்கட்டும். அதுதான் நல்லது.
என்னது? கோயில் ஒழுக்குகள் மாறனுமா? ஹா ஹா...அதெல்லாம் அவ்வளவு லேசுல நடக்காதுன்னுதான் தோணுது.
// இன்றைய நாட்களில் வடமொழியான சம்ஸ்கிருதத்தைச் செத்த பாஷை என்று சொல்லி இழிப்பார் மத்தியில் அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு அதன்படி பிரார்த்திக்கச் சொன்ன உத்தமர். //
ReplyDeleteசெத்த பாஷைக்கு உயிரூட்ட நினைப்பது பார்ப்பனர்களும் பாப்பாத்திகளும் மட்டுமே. கலாம் சொன்னது வடமொழியில் உள்ள பழைய இலக்கியங்களைப் பற்றி. இதுகூடத் தெரியாமல் வடமொழியை வளர்க்க வந்துட்டீங்க.
இங்கே உங்களுக்கு எழுதுவதற்கும் பின்னூட்டவும் தமிழ்தான் பயன்படுகிறது என்றாவது தெரியுமா? வடமொழியின்மீது அதிக பாசம் இருந்தால் வடமொழியில் பதிவு எழுத வேண்டியதுதானே கீதா சாம்பசவம் அவர்களே?
உடல் புல்லரிக்கவைக்கும் அரிய நிகழ்ச்சி. பலரும் சொன்னது போல், மானிடம், மாற்றார் மனம் புண்படாதவகையில், மரபுமாறா பண்பாடு இவற்றின் மொத்த உருவமாய்த் திகழும் காலாம், வாழிய பல்லாண்டு.
ReplyDeleteவேண்டாம் இவருக்கு இன்னுமொரு முறை, இந்த அரசியல் வீணர்களுடனான உறவு....அமைதியுடன் பிராத்தனை செய்து வரட்டும் அவர் இந்நாட்டிற்க்காக....
கண்கலங்காமல் படிக்கவேண்டும் என்ற எனது பிரயத்தனங்கள் தோல்வி.
ReplyDeleteஏன் இப்படி நல்லனவற்றைப் படிக்கும்போதே ஆனந்தக் கண்ணீர் வரும் அளவிற்கு அவ்வளவு அபூர்வமாகிப் போய்விட்டனவா நற்பண்புகள்// ரிப்பீட்.
என்ன சொல்வது ரவி..
அவரின் அறிவாற்றலை மெச்சுவதா.
அடக்கத்தைச் சொல்வதா.பெருமாளின் கிரௌபையை வியப்பதா.
இத்தனையையும் அக்கறையாகக் கேட்டுப் பதிவு செய்த உங்க உள்ளத்தைச் சொல்வதா.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.. எல்லோரும் படிக்கவேண்டும்.. எத்தனைதான் அரசியல்வாதிகள் மத்தியில் இருந்தாலும் ஒரு உண்மையான மனிதரை நம் காலத்தில் ஜனாதிபதியாக நாம் பெற்றிருந்தோம் என்பதே நமக்குப் பெருமை.
ReplyDeleteஅது சரி.. என்னுடைய 'திருமலைத் திருடன்' புதினம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அன்புடன்
திவாகர்.
//நன்றி ஜீவா...
ReplyDeleteபெருமையோடு, இவரைப் பார்க்கும் போது பொறுப்பும் கூடிக் கொள்கிறது! :-)//
நிச்சயமாக ரவி!
ஒரு உன் உதராணமாக செயல்படுகிறார். இளைய தலைமுறை இவரிடம் இருந்து கற்க வேண்டியவை ஏராளம்!
Excellent post.
ReplyDeletethanks for sharing the details.
Salute to Kalam!
நல்ல பதிவு நண்பரே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி,
ReplyDeleteஉங்ககிட்ட கேக்காம கொள்ளாம உங்களையும் எட்டு போட கூப்புட்டுடேன்.. கொஞ்சம் கோச்சிகாம ஒரு எட்டு
ReplyDeleteஎட்டிட்டு போயிடுங்க. இங்க என்னோட ஏரியாவுல கூப்பிட்டு இருக்கேன் உங்களை.
கலாம் கால் தூசியாக காலமெல்லாம் இருக்கமாட்டோமா என கண்ணீர் மல்க வைக்கும் இப்பதிவுக்காக தங்களுக்கு வணக்கங்கள்
ReplyDelete//Rajagopal said...
ReplyDeleteநாட்டின் முதல் குடிமகன் அல்லவா? அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது//
நன்றி இராசகோபால். கற்று்க் கொள்ள வேண்டும் என்று முதலில் தோன்றினாலே போதும் நம் அரசியல்வாதிகளுக்கு!
//ஜோ / Joe said...
//படிச்சதும், கண்ணுலே ...............காவிரிதான். //
ரிப்பீட்டு!//
நன்றி ஜோ!
//Sridhar Venkat said...
ReplyDeleteஇந்த தகவலை எங்கிருந்து பெற்றீர்கள் ரவி?//
வாங்க ஸ்ரீதர்.
இச்செய்தி எனக்கு திருமலைக் கோவிலில் பணி புரியும் ஒரு அன்பரால் நேரடியாகக் கண்டு சொல்லப்பட்டது.
எனினும் நவ 21, 2003 The Hindu Archive -இல் தேடினாலும் கிடைக்கிறது பாருங்கள். அங்கிருந்து தான் புகைப்படமும் எடுத்தேன்!
மற்றும் பல நாளிதழ்களின் ஆர்கைவிலும் கிடைக்கிறது! (NewsToday.net)
//செல்வன் said...
ReplyDeleteஇதற்கு என்னவென்று நான் பின்னூட்டம் போடுவது கண்ணபிரான்?
கண்ணீருடன்
செல்வன்//
எனக்கும் பதிவு எழுதும் போது அப்படித் தான் இருந்தது செல்வன்! பக்தி இயக்கத்தில் சைதன்யர், துக்காராம், இராமானுசரின் சீடர்கள், வள்ளலார் போன்ற பலரைப் பார்த்துள்ளோம். இங்கு கலாமுக்கும் அத்தகைய குணங்களே இருப்பது வியக்க வைக்கிறது!
நன்றி ramachandranusha
//நந்தா said...
எதை வைத்துதான் அரசியல் செய்யலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகள் மத்தியில், கலாம் நிச்சயம் போற்றப் பட வேண்டியவரே//
நன்றி நந்தா. போற்றுதலைக் காட்டிலும் நம் மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது தான் இன்னும் சிறப்பு!
GK, சதுர்வேதி
ReplyDeleteநன்றி.
மானுடம் வெளிப்படும் உயர்ந்த நிலையில் பலருக்கும் கண் கலங்குவது இயற்கை தான்! அதைத் தான் செல்வனும் சொல்லியுள்ளார் என்று நினைக்கிறேன்! மற்றபடி அவர் மேல் விளக்கம் வந்து சொன்னால் கேட்கலாம்!
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
கோவிலுக்குச் செல்வது ஆண்டவனை சேவிப்பதற்கு மட்டுமே.. என் கவுரவத்தை நிலை நாட்ட அல்ல என்று கலாம் சொல்லாமல் சொல்லியிருப்பதை//
கரெக்டாப் பிடிச்சீங்க உண்மைத் தமிழன்! மீண்டும் சொல்லிக் கொள்வதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி!
ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்!
இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்!
நன்றி ப்ரசன்னா
ReplyDelete//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ரவி சங்கர்!
"ராஜ்ரபதி பவனில் மனிதனைக் கண்டேன்"...கவிஞர் வைரமுத்து கூறியது நினைவுக்கு வந்தது.//
ஆமாங்க யோகன் அண்ணா, சரியாத் தான் சொல்லி இருக்கார் நம்ம வைரமுத்து!
//இந்த அரசியல் கல்லெறியில் இவர் ஈடுபடாமல்; ஒருமனதாகத் மீண்டும் தேர்வாகாவிடில் ஒதுங்கி விட்டாராகில் நன்று//
ஒதுங்கியே விட்டார் இப்போது! அதுவும் நன்மைக்கே! சென்னை அண்ணா பலகலைக்கு வந்து விடுவார்!
//குட்டிபிசாசு said...
அண்ணே,
உங்களை மாட்டிவிட்டுட்டேன்னு கோவிக்க கூடாது. இது எதோ எட்டு விளையாட்டாம். உங்களபத்தி 8 தகவல் வந்து சொல்லுங்க!!//
நன்றி குட்டிபிசாசு. இன்று எட்டு போட்டு விடுவேன். லைசன்ஸ் உடனே கொடுத்துடுங்க!
//ஜடாயு said...
ReplyDeleteஅப்துல் கலாம் என்ற மாமனிதர் பாரதத்தின் நிரந்தர குடியரசு தலைவராக இருக்கத் தகுதி வாய்ந்தவர்!//
அய்யோ வேண்டாங்க...அவரை விட்டு விடுவோம்! வெளியில் இருந்தாக்கா இன்னும் நிறைய சுதந்திரமாச் சொல்லவும் செய்யவும் முடியும்!
//இந்த வார திண்ணையில் ஐயன் காளியின் அருமையான கட்டுரை - கோவிலில் எம்மதத்தார் பாருங்கள்//
பார்த்தேன் ஜடாயு! அவருடைய கருத்துக்களைக் கோர்வையாக அழகாக முன் வைத்துள்ளார். பல கருத்துக்கள் உண்மையான அச்சத்தாலும், சமயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தாலும் எழுந்தவை தான். எனக்கு அவற்றில் சில மாறுபாடுகள் இருந்தாலும் அவர் வாதங்கள் சிறப்பானவையே!
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteமனிதம் என்பதின் அர்த்தம் புரிந்து வாழ்பவர்//
சத்தியமான வார்த்தை கீதாம்மா!
//Anonymous said...
பூனைக்கதைகள் எல்லாம், நமது அனைத்து முறைகளையும் அர்த்தமற்றவையாக்குவதற்காக மற்றவர்களினால் சோடிக்கப்பட்ட கதைகளே//
இருக்கலாம் நண்பரே! ஆனால் வள்ளலார் போன்ற மகான்களே இதை எடுத்தாண்டுள்ளனர்! கதையின் சாராம்சம் மட்டும் கண்டால் உண்மையை உணர்த்தும் ஒரு நகைச்சுவை தான்.
//எல்லோரும் கலாம் மாதிரி இருக்க மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், அப்படியிருக்க ஆலய முறைகளை மாற்ற நினைப்பதில் அர்த்தமில்லைதானே//
முற்றிலுமாக மாற்ற முடியாவிட்டாலும் உண்மையான பக்தர்களைத் தடுக்காமல் பக்தியில் திளைக்கவாச்சும் ஒரு மாற்று வழி காண்பது நலமல்லவா? இறைவனே திருப்பாணாழ்வாரை அழைத்த கதையாகத் தான் இது முடியுமோ?
//"வற்றாயிருப்பு" சுந்தர் said...
ReplyDeleteஏன் இப்படி நல்லனவற்றைப் படிக்கும்போதே ஆனந்தக் கண்ணீர் வரும் அளவிற்கு அவ்வளவு அபூர்வமாகிப் போய்விட்டனவா நற்பண்புகள்?//
வாங்க சுந்தர். நீங்க சொன்னது போலத் தான் ஆகி விட்டது! சின்ன நல்ல விடயங்களைக் கண்டாலே ஆகா என்று மனம் குதூகலிக்கும் நிலைமை தான்! :-)
//தமிழக அரசியலிலாவது தம்மை இணைத்துக்கொண்டு//
ஹூம்; இதற்கு நான் என்னத்த சொல்ல! அவருக்குத் தமிழக அரசியல் தவிர்த்து வேறு ஏதாவது நல்ல ரோல் கிடைத்தாலே போதும்! தொடர்ந்து மற்றவர்களை உற்சாகமோ இல்லை உறுத்தவாவது செய்யும்!
நன்றி eelathamilan
//மணியன் said...
சிறப்பான இடுகை ரவி. சமயத்தைப் பற்றிய சரியான புரிதல்களே ஆன்மீகத்தை கொண்டுசெல்ல உதவும்//
சரியான வார்த்தைகள் மணியன் சார்! மானுடம் அல்லாது சமயம் தெரிவது இல்லை! அடியார்கள் இல்லாது ஆண்டவன் தெரிவதில்லை!
நன்றி எழில் !
//G.Ragavan said...
ReplyDeleteசரி. அவரும் ஓய்வெடுக்கட்டும். அதுதான் நல்லது//
எடுக்க மாட்டார் என்று தான் நினைக்கிறேன் ஜிரா! வேறு ஏதாவது செய்து கொண்டு தான் இருப்பார் போல!
//என்னது? கோயில் ஒழுக்குகள் மாறனுமா? ஹா ஹா...அதெல்லாம் அவ்வளவு லேசுல நடக்காதுன்னுதான் தோணுது//
நல்லது என்னிக்குமே லேசுல நடந்ததில்லை ஜிரா!
தேவை: புரிதல், கூட்டு முயற்சி, இடைவிடாத உழைப்பு....
எல்லாவற்றுக்கும் மேலாகத் தியாகம்!
இராமானுசர் வரலாற்றை எழுதும் போது சொல்கிறேன் பாருங்கள், எப்படி தமிழ் திருவரங்கத்தில் கோலோச்சத் தொடங்கியது என்று! அதற்கு அவர் என்னென்ன தியாகங்களைச் செய்தார் என்று எண்ணிப் பார்க்கும் போது கண்ணீர் தான் வரும்!
இன்று பேசுவோரும் உரிமை நிலைநாட்டுவோரும் அதிகம்! ஆனால் உழைப்பு, தியாகம் என்று வரும் போது எல்லாம் சிட்டாய்ப் பறந்து விடுகிறார்கள்!
//எங்கேயோ முகம் தெரியாமல் வறுமையில் வாடும் ஏழை இந்தியன் ஒருவன்.
ReplyDeleteஅவனுக்குத் தன் பெயர் சொல்லி, தன் நல்வாழ்வுக்கு அர்ச்சனை
செய்து கொள்ள முடியுமோ என்னவோ,....அதுவும்
திருவேங்கடமுடையான் சன்னிதியில்!//
பேஷ்! பேஷ் !நிச்சயம் அவன் வயிறு நிறைந்திருக்கும் !
வெங்காயம்...வருகைக்கு நன்றி!
ReplyDeleteமொழி சர்ச்சை இங்கு வேண்டாமே! இது வெறும் கலாமின் வாழ்க்கை நிகழ்ச்சியில் ஒன்று!
//Anonymous said...
உடல் புல்லரிக்கவைக்கும் அரிய நிகழ்ச்சி. பலரும் சொன்னது போல், மானிடம், மாற்றார் மனம் புண்படாதவகையில், மரபுமாறா பண்பாடு இவற்றின் மொத்த உருவமாய்த் திகழும் காலாம்//
நன்றி அனானி. உங்களைப் போல் பலரின் உள்ளத்தையும் இந்நிகழ்ச்சி தொட்டிருக்கும்!
//வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஎன்ன சொல்வது ரவி..
அவரின் அறிவாற்றலை மெச்சுவதா.
அடக்கத்தைச் சொல்வதா.
பெருமாளின் கிரௌபையை வியப்பதா.
இத்தனையையும் அக்கறையாகக் கேட்டுப் பதிவு செய்த உங்க உள்ளத்தைச் சொல்வதா.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//
நன்றி வல்லியம்மா! அவரின் அடக்கம் அவருக்கு அழகு. பெருமாளின் கருணை பெருமாளுக்கு அழகு!
//DHIVAKAR said...
ReplyDeleteஅது சரி.. என்னுடைய 'திருமலைத் திருடன்' புதினம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?//
படித்தும் இருக்கிறேன் திவாகர் சார்.
நியூயார்க் நூலகத்தில் உங்க நூல் ஒரு காப்பி உள்ளது. எடுத்துப் படித்தேன். திருமலை-இராமானுசர் நிகழ்வுகளை ஒரு வரலாற்றுப் புனைவோடு படிக்க நன்றாகத் தான் உள்ளது!
அதுவும் சாளுக்கிய பின்புலத்தில், சைவ-வைணவ இணக்கம், திருச்சுகனூர் சபை என்று விறுவிறுப்பாகத் தான் இருக்கு!
உங்களுக்குத் தனி மடலும் அனுப்புகிறேன்!
நன்றி SurveySan
ReplyDeleteநன்றி வெங்கட்ராமன்
//சந்தோஷ் said...
உங்ககிட்ட கேக்காம கொள்ளாம உங்களையும் எட்டு போட கூப்புட்டுடேன்..//
கோபமா...பெருங்கோபம் உங்க மேல சந்தோஷ்! :-)
உங்க பதிவில் பின்னூட்டி கோவத்தைத் தீர்த்துக் கொண்டேன்! :-))
///அரவிந்தன் நீலகண்டன் said...
கலாம் கால் தூசியாக காலமெல்லாம் இருக்கமாட்டோமா என கண்ணீர் மல்க வைக்கும் இப்பதிவுக்காக தங்களுக்கு வணக்கங்கள்//
நன்றி அரவிந்தன் நீலகண்டன்!
கால் தூசியை விடுங்கள்
கால் வாசியாச்சும் அவரைப் போல் சிந்திக்க கத்துக்கணும்-னு எனக்கும் ஆசை தான்!:-)
//Anonymous said...
ReplyDeleteபேஷ்! பேஷ் !நிச்சயம் அவன் வயிறு நிறைந்திருக்கும் !//
ஹிஹி
வாங்க அனானி! வயிறு நிறைய இன்னும் பலது செய்ய வேண்டி உள்ளது...குறைந்த பட்சம் அவனைப் பற்றிச் சிந்திக்கும் எண்ணம் துளிர்ப்பதே நல்ல துவக்கம் தான்!
// கதையின் சாராம்சம் மட்டும் கண்டால் உண்மையை உணர்த்தும் ஒரு நகைச்சுவை தான்.//
ReplyDeleteஇக்கூற்றின் படி பார்த்தால், எமது வேதாகமங்கள், ஆசாரனுஷ்டானங்களேல்லாம் நகைச்சுவைக்கும் வேடிக்கைக்கும் உரியவையாகின்றனவே. அப்படியாயின் இவற்றை ஆண்டாண்டு காலமாக கடைப்பிடித்து, பக்தியை, தெய்வீகத்தை எமக்கு அளித்த நம்முன்னோர்கள் மூடர்களா!?
அப்படியாயிருந்திருப்பின் உங்களால் இவ்வளவு அருள்நிறைந்த அருமையான நல்ல பதிவுகளை எமக்கு கொடுத்திருக்க முடிந்திருக்குமா?
//உண்மையான பக்தர்களைத் தடுக்காமல் பக்தியில் திளைக்கவாச்சும்//
பக்தன் "உண்மையான பக்தனாக" இருந்தால், இந்த உலகத்தில் அவனுக்கு தடையாக
யாரும், எதுவும் இருக்க முடியாது.
//ஒரு மாற்று வழி காண்பது நலமல்லவா?//
மனிதம் வேறு, மார்க்கம் வேறு அல்லவா!.... மனிதத்துக்கு எல்லாம் ஒன்று. மார்க்கமென்று என்று வரும் போது (பாதை) பல ஒழுங்கு முறைகள் சட்டதிட்டங்கள் இருக்கத்தானே வேண்டும்.
// இறைவனே திருப்பாணாழ்வாரை அழைத்த கதையாகத் தான் இது முடியுமோ?//
இக்கதையை அறியத்தர முடியுமா?
மிக்க நன்றி.
மிகச்சிறந்த பதிவுகளில் ஒன்று.
ReplyDeleteமனிதம் தழைப்பதைக் கண்டு
மடை திறந்தன கண்கள்.
ஆனால் மாற்று மதத்தினரை நம் ஆலயங்களில் அனுமதிப்பது தொடர்பான ஒரு கருத்துப் பிழையை இங்கு உலவவிட்டிருக்கிறீர்கள்.
விதிகளை மாற்ற முடியாததால்தான் விதிவிலக்குகள் உருவாகின்றன. யேசுதாசையும் கலாமையும் துலுக்க நாச்சியாரையும் போல அனைத்து மாற்று மதத்தினரையும் கருத முடியுமா?
நம் மதத்து மக்களில் சிலரே ஆலயப் பிரவேசத்துக்கு ஏங்கி நிற்க
பரலோகமும் சுவனமும் வீடுபேறளிக்கக் காத்திருப்பவர்களுக்கு ஏன் கைலாயமும் வைகுண்டமும் காட்ட விரும்புகிறீர்கள்?
நாம் நம்மைக் கவனிப்போம்.
//"எங்கே... அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்" என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.
மாற்று மதத்தினராய் இருப்பதால், ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்!
இப்படி ஒரு வழக்கம் தேவையா?
இது போல் ஆகமங்களில் கூடச் சொல்லப்படவில்லையே! இது அவரவர் அந்தந்த ஆலயங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட விதிகள் தானே!//
நம் கோவில்களில் ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வழக்கம் என்பதை அறியாதவரா நீங்கள்? இவையெல்லாம் ஆகமங்களில் இருக்கிறதா? காசியில் கையால் தொட்டு வணங்குவதைப் போல் காஞ்சியில் செய்ய முடியுமா?
யேசுதாசுக்கும் கலாமுக்கும் இருந்த புரிதல் உங்களுக்கு இல்லை. அர்ச்சகரைத் திருத்திய கலாம் உங்களைப் போன்றவர்களை திருத்த வேண்டும்.
என்ன செய்திருக்கிறார் கலாம்? தான் முகமதியர் என்பதை வெளிப்படுத்தி, இது உங்கள் கோவில், இது உங்கள் சட்டம், நீங்கள் இதை மதிக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.
அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம் உங்களையும் திருத்தவேண்டும்.
நல்ல பதிவு.
ReplyDeleteஅப்துல் கலாமின் சிறப்பிற்கு மேலும் ஒரு எடுத்துக் காட்டு.
மிக மிக மிக நல்ல பதிவு. எங்க ஊர்க்காரரின் பெருமையை உலகுக்கு எடுத்து சொன்னதற்கு நன்றி!.
ReplyDeleteஇப்படியொருவர் நம் காலத்தில் வாழ்வதே நமக்குப் பெருமை !
நண்பர்களுக்கு இந்தப் பதிவை படிக்கச் சொல்லி மின்னஞ்சலில் பரிந்துரை செய்திருக்கிறேன் :)
கேயாரெஸ் - நகைச்சுவையுடன் கூடிய அருமையான பதிவு. திருமலையில், அப்துல் கலாம் இந்தியாவின் பெயரில் அர்ச்ச்னை செய்தார் - மூன்று டிக்கெட் காசு கொடுத்து வாங்கினார் - உள்ளே சொல்லுமுன் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார் என்ற செய்திகள் அவரைப் பற்றிய நல்ல எண்ணங்களை மேன் மேலும் ஏர்ப்படுத்தியது.
ReplyDeleteநெறைய மிஸ் பண்ணிருக்கேன்னு இப்பத் தான் தெரியுது. நல்ல பதிவு. வாழ்த்துகள்
ReplyDeleteஅருமையான ஒரு பதிவை தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteமனிதருல்மானிகங்கள்
ReplyDeleteபதிவின்படி அர்ச்சகர்கள் தவறேதும் செய்ததாகத் தெரியவில்லை; வழக்கத்துக்கு மாறான சில வேண்டுகோள்கள் கலாம் ஸாஹபின் தரப்பிலிருந்து...
ReplyDeleteஅதை அப்படியே நிறைவேற்றியதாகத் தெரிகிறது.
ஒரு நிரந்தரக் குடியரசுத் தலைவராகவே நீடிக்கத்தக்கவர் கலாம் ஜீ. அதில் மாற்றுக்கருத்து இல்லை
தேவ்
//பதிவின்படி அர்ச்சகர்கள் தவறேதும் செய்ததாகத் தெரியவில்லை;//
ReplyDeleteஅர்ச்சகர்கள் தவறு செய்ததாக அடியேனும் பதிவில் சொல்லவில்லை தேவ் ஐயா! "திருத்திய" என்ற சொல் அப்படி ஒரு பொருளைத் தருகிறதா? :) தவறை மட்டுமல்ல! எண்ணத்தையும் திருத்தலாம் அல்லவா! அர்ச்சகர்கள் இவ்வளவு இந்தியா என்ற பெயருக்கு அர்ச்சனை செய்யத் தோன்றி இருக்குமா? இப்படி எண்ணத்தைச் செப்பனிட்ட என்ற பொருளில் சொன்னேன்!
அருமையான பல செய்திகள் இருக்கிறது தங்களிடம்,
ReplyDeleteதங்களைப் பின் தொடர்ந்தாலும் சஸ்டி அன்று நீங்கள் கீச்சியதிலிருந்தே மேலும் கவரப்பட்டேன்
தங்களைக் காட்டிய முருகனுக்கு ஆயிரம் நன்றிகள் கண்ணபிரான் :))))))))))))
மேலும் தொடர முருகன் துணை இருப்பான் தங்களுடன் .