Sunday, March 29, 2009

மதுரை மீனாட்சி & Simple Pendulum!

என்ன மக்கா, மருதையே தி்ருவிழாக் கோலமா களை கட்டுதே! ஏப்ரல்-08 ஆத்தா மீனாச்சி கோயில்ல குடமுழுக்கு! அதுக்குப் பந்தல்-ல பந்தல் போடலீன்னா எப்படி? முழுக்க முழுக்க மீனாட்சியம்மன் மேல் புதிரா புனிதமா ஒன்னு எட்டாம் தேதி போட்டுருவோம்! பதிவுலக மருதைக்காரவுக சாமார்த்தியத்தையும் பாத்துருவோம்! :))

ஆனால்.....இன்னிக்கி மதுரை மீனாட்சி & Pendulum Technique!

"எலே! எடுப்பட்ட பய புள்ள! Pendulum Technique-ஆ? அதுக்கும் ஆத்தா மீனாட்சிக்கும் என்னலே சம்பந்தம்? கோதையைத் தான் அப்துல் கலாம் கூட ஒப்பிட்டு பதிவு போட்டே! இப்போ மீனாட்சியையும் விடுறதா இல்லியா நீயி?"

"அட, பாண்டி நாட்டுப் பெண்களை ரசிக்காம விட முடியுமா? அவிங்க அழகென்ன? நறுவிசு என்ன? மயிலென்ன? ஒயிலென்ன? :)
கலர் வேணுமின்னா கொஞ்சம் கொறைச்சலா இருக்கலாம்! ஆனால் அந்தக் கலர்லயும் ஒரு காந்தம் இருக்குல்லே? என்ன நாஞ் சொல்லுறது? :)"

"அடப் பாவி மக்கா! பிள்ளைத் தமிழ்-ன்னு ஏதோ வலைப்பூ துவங்கினயே! ஏதோ கொழைந்தயளைப் பத்தித் தான் எழுதப் போறமில்ல-ன்னு நெனச்சோம்? பிள்ளைத் தமிழ்-ன்னா, பெட்டைப் புள்ளைக பிள்ளைத் தமிழா? வெளங்கிரும்!"

"ஹா ஹா ஹா! அட மக்கா, அதுவும் இருக்குல்லே! பெண்பாற் பிள்ளைத் தமிழ்-ன்னு புள்ளைக தமிழை அப்பவே பாடி வச்சிருக்காவ! அதைத் தான் இன்னிக்கி பாக்கப் போறம்! அதுல தான் Pendulum Technique! ஆத்தா மீனாச்சியை அறிவியல் பூர்வமா தரிசிக்கலாமா?" :)


சின்ன வயசுல இயற்பியல் பாடம் படிச்ச ஞாபகம் இருக்கா? ஆறாங் கிளாஸ்ல பெண்டுலம் பத்திச் சொல்லிக் கொடுப்பாய்ங்க! வகுப்புக்கே பெண்டுலம் எடுத்துக்கிட்டு வருவாரு வாத்தி!
அதன் நீள உசரங்களை அட்ஜஸ்ட் பண்ணி, Pendulum Bobஐ சுண்டி இழுத்து விட்டாக்கா அப்படியும் இப்படியும் அசையும்! பக்கத்துல நான் தான் நிப்பேன்!:)

Start = கையில ஒரு ஸ்டாப் வாட்ச் கொடுத்து, அதைப் பொசுக்குன்னு அழுத்தச் சொல்லுவாரு!
Stop = ஸ்டாப் வாட்ச்சில் முள்ளு இருக்கும் எண்ணை உரக்கச் சொல்லணும்! அதை அந்த மாங்காப் பையன் சரவணன் போர்ட்டில் எழுதுவான்!

இப்படியே மாறி மாறி, பெண்டுலம் வெளையாட்டு நடக்கும்! ஒரு பத்து ரீடிங் எடுத்தவுடன், வாத்தி என்னென்னமோ கணக்கெல்லாம் போட்டு, ஒரு Formula-வை உருவாக்கி,
This is Simple Harmonic Motion-ன்னு முடிச்சது தான் ஞாபகத்துல இருக்கு! அதுவும் பெண்கள் இல்லாத ஒரு வகுப்பில் எப்படி நுணக்கமா கான்சன்ட்ரேட் பண்ணுறது? அறிவியல் வகுப்பு நடத்துறவங்க இதைக் கூட அறியலீன்னா எப்படி? :)

அது முடிஞ்சதும், அடுத்து தமிழ் வகுப்பு! அதுல மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்! ஆரம்பிச்சுட்டாருய்யா டேனியல் ஐயா! கிறித்தவரா இருந்தாலும், சும்மா உருகி உருகிப் பாடம் எடுப்பாரு! பாடியே காட்டுவாரு! அதுவும் ஆழ்வார் பாசுரம்-ன்னா சொல்லவே வேணாம்! அவர் கண்களே பனிக்கும்! இப்போ தெரியுதுங்களா தி சீக்ரெட் ஆஃப் கேஆரெஸ்! :)



குமரகுருபரக் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை! வயசு அஞ்சு ஆகுது! பள்ளிக்குப் போற வயசில் பேச்சு வரலீன்னா எப்படி? என்னென்னமோ மருத்துவம் செஞ்சிப் பார்த்துவிட்டு, திருச்செந்தூர் முருகப் பெருமான் சன்னிதியில் கொண்டாந்து பிள்ளையைப் போடுறாங்க பெத்தவங்க!

செந்திலாண்டவன் அழகுத் தோற்றம் குழந்தையை இழுஇழு என்று இழுக்கிறது! இலைத் திருநீறு வாயில் கரைகிறது! பேசுகிறான் குமர குருபரன்...

பின்னாளில் அவுரங்கசீபின் அண்ணன் தாரா ஷூகோவிடமே தமிழின் மேன்மையை எடுத்துச் சொல்லப் போகும் குழந்தை அல்லவா! அவன் வாயில் பேச்சைக் கொடுக்க, தமிழ்க் கடவுள் முருகவேள் கடன்பட்டுள்ளானே! குழந்தை வளர்ந்து பெரும் கவிஞன் ஆகிறது! கவி-யோகியும் ஆகிறது!

தென்பாண்டித் தேசமாம் மதுரைக்கு வந்த குமரகுருபரர், அன்னை மீனாட்சியையும், அப்பன் அழகனையும் கண் குளிரத் தரிசிக்கிறார்!
மூன்று அழகர்கள் அல்லவா மதுரைக்கு! = கள்ளழகர், கூடலழகர், மதியழகர் (சோம சுந்தரர்)!

இப்படி அழகர்கள் கூடி இருப்பதால் தானே மதுரைக்கே ஒரு தனி கிறக்கம்! ஆனால் அத்தனை அழகுக்கும் ஆட்சியாள் யார்? அவள் மீது தான் பிள்ளைத் தமிழ் பாடுகிறார் நம் கவிஞர்! இன்றுள்ள பிள்ளைத் தமிழ் நூல்களில் எல்லாம் தலைசிறந்தது மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்!

மறுநாள் திருமலை நாயக்கர் சபையில் அரங்கேற்றம்! குமரகுருபரர் பாடப்பாட, மொத்த சபையும், துறைத் தீந் தமிழில் கட்டுண்டு கிடக்கிறது!
கடைசி வரிகள்! ஊசல் பருவம்! அன்னை மீனாள் சிறு பெண்ணாய் ஊஞ்சலாடும் அழகு!

எதிரே உள்ள மரத்தைக் காலால் உதைத்து, அன்னை, ஊஞ்சலில் இன்னும் உயர உயர எம்புகிறாள்! உதைத்த மரத்தில் இருந்து பூக்கள் சொரிகின்றன!
அன்னையின் ஊஞ்சல் வீசி வீசி ஆடுகிறது! காற்றைக் கிழித்து.....அவ்வளவு வேகம்!
ஆனால் அதையும் விட வேகமாய் இன்னொன்றும் ஆடுகிறது! எது? = மதுரை மீனாட்சியின் கம்மல்!


பசும்பொன்னில் தொங்க விட்ட கிளிக் கூண்டு போல் ஒரு காதணி! கீழே பாண்டி முத்துக்கள் பதித்த அந்த லோலாக்கு! அது ஊஞ்சலை விட வேகமாக ஆடுகிறதாம்!
ஊஞ்சல் அப்புறம் போய், இப்புறம் வருவதற்குள்...தொங்கட்டான் ஒரு சுற்று முடித்து விடுகிறது! அப்புறம் தான் ஊஞ்சலே ஒரு சுற்று முடிக்கிறது! ஆகா, இது எப்படிச் சாத்தியம்?

கற்பனை செய்து பாருங்கள்!
* ஊஞ்சல் ஒரு பெண்டுலம்!
* ஊஞ்சலில் உள்ளவள் காதில் ஒரு பெண்டுலம்!
ஊஞ்சல் பெண்டுலம் ஆட, ஊஞ்சலில் உள்ளவள் பெண்டுலமும் ஆட...
Both the pendulums are in Simple Harmonic Motion! :)

பெண்டுலத்தைத் தமிழில் ஊசல் என்று சொல்லுவார்கள்!
இரண்டு ஊசல்களை ஒரே நேரத்தில் ஒரே Plane-இல் இயக்கி விட்டால்...
இரண்டும் ஒரே சமயத்தில் கடக்கின்றன!
சமச்சீர் இயக்கத்தில் இயங்குகின்றன! (Simple Harmonic Motion)!
ஆனால் ஊசலின் நீளத்தைப் பொறுத்து தான் அதன் வேகமும் அமையும் என்பது இயற்பியல் சூத்திரம்! ஞாபகம் இருக்கா மக்கா? :)


* ஊஞ்சல் சங்கிலியின் நீளம் அதிகம்! அதனால் நேரமும் அதிகம்!
* கம்மல் சங்கிலியின் நீளம் குறைவு! அதனால் நேரமும் குறைவு!
Given the same acceleration due to gravity at the same place...
the time taken for oscillation
is directly proportional
to the length of the pendulum! :)

எப்படி இருக்கு அன்னை மீனாட்சி செய்யும் Pendulum Experiment (ஊசல் சோதனை)?
சுட்டிப் பொண்ணு மீனாட்சி, மாநிலத்திலேயே முதல் மாணவியா வந்துற மாட்டாளா என்ன? :)


ஊசல் பாடலைப் பார்ப்போமா?
இரு பதமும் மென்குரல் கிண்கிணியும் முறையிட்டு
இரைத்திடும் அரிச் சிலம்பும்
இறும் இறு மருங்கு என்று இரங்கு மேகலையும் பொன்
எழுது செம் பட்டு வீக்கும்


இரண்டு கால்களில் மெல்லிய ஜில்ஜில் எழுப்பும் கிண்கிணிக் கொலுசும்,
"அம்மா, தாயே, மீனாட்சி, அங்கயற்கண்ணி" என்று முறையிட்டு முனுகும் சிலம்பும்,
இற்று விடுமோ, இற்று விடுமோ என்னும் ஒயிலான இடுப்பு அணி மேகலையும்,
தங்க ரேக்கு நூலிழை ஓடும் பட்டுத் துணி, அதை இறுக்கி இடுப்பில் கட்டியிருக்கா மீனாட்சி!

திரு இடையும் உடை தாரம் ஒட்டி யாணமும்
செங்கைப் பசுங் கிள்ளையும்
திரு முலைத் தரள உத்தரீயமும் மங்கலத்
திரு நாணும் அழகு ஒழுக நின்


அவள் இடையில் உடையும் ஒட்டியாணமும் புரள...
அவள் கையில் பச்சைக் கிளி கீச் கீச் என்று கத்த...
அவள் முலைகளில் முத்து மாலை வரிசைகள் தவழ...
அவள் மங்கலத் திருக்காப்பை அணியுமாறு அழகாக ஆடிட...

அருள் பொழியும் மதிமுகமும் முகமதியின் நெடுநிலவு
அரும்பு குறு நகையும் ஞான
ஆனந்த மாக்கடல் குடைந்து குழை மகரத்
தோடு அமராடும் ஓடு அரிக்கண்


மீனாட்சியின் அருள் முகம், பூர்ண சந்திரன்! முழு மதி!
அதில் தோன்றும் குறு மென் புன்னகையோ, பிறை மதி!
ஞானாந்தம் என்னும் கடலைக் குடைந்து செய்த மகரத் தோடுகள், தொங்கட்டான்கள் ஆட...அந்த ஆட்டத்தின் வேகம் என்ன தெரியுமா? கண்கள் பாயும் வேகம்! அம்புட்டு வேகம்! ஊஞ்சலை விட வேகம்!
இப்படி மீனாளின் தோடுகளுக்கும், மீனாளின் கண்களுக்கும் இடையே வேகப் போட்டி!

பொரு கயலும் வடிவழகு பூத்த சுந்தர வல்லி
பொன்னூசல் ஆடியருளே!
புழுகு நெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி
பொன்னூசல் ஆடியருளே!


தோடு ஆடி, அதோடு கயல் கண் ஆடி, வடிவழகு பூக்கும் வடிவாம்பிகே! சுந்தரேசனின் சுந்தரவல்லி! பொன்னூஞ்சல் ஆடி அருளே!
புனுகும் நெய்யும் பூசிய சொக்கனின் அழகுக்குக் கொஞ்சமும் இளைச்சவள் அல்ல நீ! எங்கள் மீனாட்சிக் குழந்தையே! பொன்னூஞ்சல் ஆடி அருளே!


இதுவே, மீனாட்சி ஊஞ்சலின் வேகம்!
அதை விட, மீனாட்சி தோடு வேகம்!
அதை விட, மீனாட்சி கண்கள் வேகம்!
அதை விட, எங்கள் மனது வேகம் அம்மா!.....உன்னிடம் பறி கொடுத்த மீனாட்சி மனது வேகமோ வேகம்!

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் இறுதிப் பாடல் இது!

குமரகுருபரர் பாடி முடிக்கவும், எங்கிருந்தோ ஓடியே வருகிறாள் ஒரு சுட்டிப் பெண்!
திருமலை நாயக்கர் மடி மேலே பிஞ்சுப் பாதங்களால் ஏறுகிறாள்!
மன்னன் கழுத்தில் இருந்த முத்து மாலையைப் பிஞ்சுக் கரங்களால் பறிக்கிறாள்!
இறங்கி வந்து, குமரகுருபரர் கழுத்தில் போட்டு விட்டு.....ஓடியே போகிறாள்!

மதுரை அரசாளும் எங்கள் மீனாட்சி திருவடிகளே சரணம்!

59 comments:

  1. அட! இம்பூட்டு விசயம் இருக்கா..இதுல.
    நல்லாருக்குண்ணே.

    ReplyDelete
  2. மதுரை அரசாளும் எங்கள் மீனாட்சி திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  3. //சுட்டிப் பொண்ணு மீனாட்சி, மாநிலத்திலேயே முதல் மாணவியா வந்துற மாட்டாளா என்ன? :)//

    அது என்ன வந்துற மாட்டாளா?? அவளே முதல் மாணவி.. :)

    ReplyDelete
  4. //தோடு ஆடி, அதோடு கயல் கண் ஆடி, வடிவழகு பூக்கும் வடிவாம்பிகே! சுந்தரேசனின் சுந்தரவல்லி! //

    ஆமாம் ஆமாம்.. சில மாலை நேரங்களில் ஏதாவது ஒரு கோபுர வாசலுக்கு சென்றால் அன்னை ஒரு மின்னல் போல் வேகமாக செல்லும்போது, அவள் அழகைக் காண அற்புதமாக இருக்கும்..

    ReplyDelete
  5. //டக்ளஸ்....... said...
    அட! இம்பூட்டு விசயம் இருக்கா..இதுல//

    ஆமா! பேரு தான் பிள்ளைத் தமிழ்! மத்தபடி பெரிய தமிழ்! :)

    //நல்லாருக்குண்ணே//

    டாங்கீஸ்-ண்ணே!

    ReplyDelete
  6. //Raghav said...
    மதுரை அரசாளும் எங்கள் மீனாட்சி திருவடிகளே சரணம்!//

    ஐயா, தாங்கள் யார்? தங்கள் திருநாமம் யாதோ? :)

    ReplyDelete
  7. //Raghav said...
    அது என்ன வந்துற மாட்டாளா?? அவளே முதல் மாணவி.. :)//

    போட்டி பலமா இருக்கும்-ன்னு சொல்லி வைங்க! :))

    ReplyDelete
  8. //Raghav said...
    ஆமாம் ஆமாம்.. சில மாலை நேரங்களில் ஏதாவது ஒரு கோபுர வாசலுக்கு சென்றால் அன்னை ஒரு மின்னல் போல் வேகமாக செல்லும்போது, அவள் அழகைக் காண அற்புதமாக இருக்கும்..//

    என்னது, மீனாட்சி மின்னல் போல செல்வாளா? சூப்பர்!

    ஒரு சந்தேகம் சார்! :)
    சுவாமி, ஈசன் வீதியுலாவுக்கு எழுந்தருளப் பண்ணும் போது, முதலில் ஏளுவது யார்?
    மீனாட்சியா? சொக்கனா?

    ReplyDelete
  9. அன்னைக்கும் புரியலே இன்னைக்கும் புரியலே என்னைக்குத் தான் புரியுமோ? அன்னைக்கும் என் ஐக்கும் புரிந்திருக்கலாம். பெண்டுலம் பாடத்தைத் தான் சொல்றேன். :-)

    ReplyDelete
  10. //குமரன் (Kumaran) said...
    அன்னைக்கும் புரியலே இன்னைக்கும் புரியலே என்னைக்குத் தான் புரியுமோ?//

    ஹா ஹா ஹா! பெண்டுலம் பாடம் ரொம்ப ஈசி குமரன்! பக்கத்தில் உள்ள Science Museum போங்க! அங்கிட்டு, உங்க கையிலேயே நூலைக் கொடுத்து விளங்க வச்சிருவாங்க!

    //அன்னைக்கும் என் ஐக்கும் புரிந்திருக்கலாம். பெண்டுலம் பாடத்தைத் தான் சொல்றேன். :-)//

    அன்னை-என் ஐ யா?
    இது தான் புரியலை குமரன்!

    ReplyDelete
  11. அன்னைக்கும், இன்னைக்கும், என்னைக்கு - இது புரிஞ்சதுன்னு நினைக்கிறேன்.

    அன்னை என் ஐ = மீனாட்சி அன்னையும் என் ஐயனான மதியழகனும். :-)

    ReplyDelete
  12. //ஐயா, தாங்கள் யார்? தங்கள் திருநாமம் யாதோ? :) //

    அடியேன் இராகவன்.. காலனின் தலைநகராம் எமனேஸ்வரம் எனது ஊர். இது போதும் என்று நினைக்கிறேன் :)..

    ReplyDelete
  13. //போட்டி பலமா இருக்கும்-ன்னு சொல்லி வைங்க! :) //

    போட்டியா?? யாரைச் சொல்கிறீர்கள் என்று தெரிகிறது.. இதோ என் அன்னையின் சிறப்புகள்..

    1. அன்னை மீனாட்சி, ஐயனை மட்டும் ”ஆண்டாள்” என்று நினைத்தீரா?? அவள் அண்ட சராசரங்களையும் ”ஆண்டவள்”.. :)

    2. அப்பன் சோம சுந்தரரை பார்வையிலேயே மயக்கியவள், பாட்டு பாடியெல்லாம் மயக்கவில்லை.. :)

    இன்னும் சொல்வேன்.. :)

    ReplyDelete
  14. பொன்னூஞ்சலில் பூரித்து,
    பூஷனங்கள் தரித்து!
    பொன்னூஞ்சலில் பூரித்து,
    பூஷனங்கள் தரித்து!

    ஈசனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து
    கண்ணூஞ்சல் ஆடுகின்றாள்
    காஞ்சனமாலை மயிலாள்
    பொன்னூஞ்சல் ஆடுகின்றாள்...

    இப்படி பல தடவை பாடியிருக்கிறேன், இனி பாடும் போதெல்லாம் நீங்களும் இந்த பதிவும் ஞாபகம் வரப்போகுது :-)!

    நல்ல பதிவு.

    ReplyDelete
  15. //என்னது, மீனாட்சி மின்னல் போல செல்வாளா? சூப்பர்!//

    நம்ம தங்க ரதத்தில் செல்லும் போது விரைவாக செல்வதை குறிப்பிடுகிறீர்களா இராகவ்!

    //ஒரு சந்தேகம் சார்! :)
    சுவாமி, ஈசன் வீதியுலாவுக்கு எழுந்தருளப் பண்ணும் போது, முதலில் ஏளுவது யார்?
    மீனாட்சியா? சொக்கனா?//
    முதலில் அப்பனே எழுந்தருள்கிறார்!

    ReplyDelete
  16. //Raghav said...
    அடியேன் இராகவன்..//
    ராகவன்-ன்னா நல்ல பேராச்சே!

    //காலனின் தலைநகராம் எமனேஸ்வரம் எனது ஊர். இது போதும் என்று நினைக்கிறேன் :)..//
    ஆகா! அவனா நீயி! :)
    போதும்! போதும்! எனக்கு எமனேஸ்வரம்-ன்னாலே ஒரு பயம் கலந்த மரியாதை! :)

    ReplyDelete
  17. //போட்டியா?? யாரைச் சொல்கிறீர்கள் என்று தெரிகிறது..//

    யாரை ராகவ்? :)

    //1. அன்னை மீனாட்சி, ஐயனை மட்டும் ”ஆண்டாள்” என்று நினைத்தீரா?? அவள் அண்ட சராசரங்களையும் ”ஆண்டவள்”.. :)//

    என்ன இருந்தாலும் மீனாட்சியை நீங்க "ஆண்டவள்" என்று சென்ற காலத்தில் சொல்லலாமா? இப்போது ஆள்கின்றவள் இல்லையா என்ன? :)

    //2. அப்பன் சோம சுந்தரரை பார்வையிலேயே மயக்கியவள், பாட்டு பாடியெல்லாம் மயக்கவில்லை.. :)//

    மதியழகரைப் பார்வையால் மயக்கினாங்களோ, பாட்டு பாடி மயக்கினாங்களோ...விஷயம் அதுவல்ல! மயக்கினாங்களா? அது தான்! :)
    இங்கே பிறந்தவீட்டில் மட்டும் தான் பெருமை!
    அங்கோ பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் என்றும் பெருமை! :))

    //இன்னும் சொல்வேன்.. :)//

    சொல்லுங்கோ! சொல்லுங்கோ! காத்துக்கிட்டு இருக்கேன்! :)

    ReplyDelete
  18. //சிவமுருகன் said...
    கண்ணூஞ்சல் ஆடுகின்றாள்
    காஞ்சனமாலை மயிலாள்//

    காஞ்சனமாலை = மீனாட்சியா?
    புதசெவி! :)

    //இப்படி பல தடவை பாடியிருக்கிறேன், இனி பாடும் போதெல்லாம் நீங்களும் இந்த பதிவும் ஞாபகம் வரப்போகுது :-)!//

    ஹிஹி! மீனாட்சியை நினைக்கும் போது, அவ செல்லம் கேஆரெஸ்-ஸையும் ஒரு ஓரமா நினைச்சிக்கோங்க! :)
    பொன்னூசல் ஆடியருளே!
    பொன்னூசல் ஆடியருளே!

    ReplyDelete
  19. //இப்போது ஆள்கின்றவள் இல்லையா என்ன? :)//

    மதுரையில் என்றும் அவள் ஆட்சி தான். இப்பவும் வீடுகளில் மதுரை என்றால் மனைவி ராஜ்ஜியம், சிதம்பரம் என்றால் கணவன் ராஜ்ஜியம் என்று தானெ பொருள் கொள்கிறார்கள். :)

    ReplyDelete
  20. //சிவமுருகன் said...
    நம்ம தங்க ரதத்தில் செல்லும் போது விரைவாக செல்வதை குறிப்பிடுகிறீர்களா இராகவ்!//

    தோளுக்கினியான்-ல உலா வரும் போது, காட்டும் வேகத்தைச் சொல்கிறாரோ என்னவோ?

    //முதலில் அப்பனே எழுந்தருள்கிறார்!//

    சூப்பர் சிவா! மாப்பிள்ளைக்குத் தானே முதல் மரியாதை! நான் பயந்தே போயிட்டேன், எங்கே திருநறையூர் மாதிரி ஆயிருமோன்னு! :)

    ReplyDelete
  21. //இங்கே பிறந்தவீட்டில் மட்டும் தான் பெருமை!//

    இங்கே அன்னைக்கு ஏது புகுந்த வீடு.. சோம சுந்தரர் வீட்டு மாப்பிள்ளை ஆகி விட்டாரே.. :) இதில் இருந்து தெரியவில்லையா அன்னையின் சிறப்பு :)

    ReplyDelete
  22. //தோளுக்கினியான்-ல உலா வரும் போது, காட்டும் வேகத்தைச் சொல்கிறாரோ என்னவோ?//

    அதே அதே..

    ReplyDelete
  23. //சொல்லுங்கோ! சொல்லுங்கோ! காத்துக்கிட்டு இருக்கேன்! :)//

    இடக்கையில் வீரத்தை பறைசாற்றவும், திறம்பட ஆட்சி புரிவதைக் காட்டவும் செங்கோல்..

    வலக்கையில் தன்னைப் போன்ற மென்மையான கிளியைக் கொண்டு விளங்குகிறாள்.

    ReplyDelete
  24. //குமரன் (Kumaran) said...
    அன்னைக்கும், இன்னைக்கும், என்னைக்கு - இது புரிஞ்சதுன்னு நினைக்கிறேன்//

    இது புரிஞ்சுது குமரன்! :)

    //அன்னை என் ஐ = மீனாட்சி அன்னையும் என் ஐயனான மதியழகனும். :-)//

    ஐ = தலைவனா?
    அதுனாலத் தான் மதியழகரை என்-ஐ ன்னு சொன்னீங்களா!
    அன்னையும் என்னையும், என்னை என்னைக்கும் காக்கட்டும்! :)

    ReplyDelete
  25. //Raghav said...
    இங்கே அன்னைக்கு ஏது புகுந்த வீடு.. சோம சுந்தரர் வீட்டு மாப்பிள்ளை ஆகி விட்டாரே.. :)//

    அதெல்லாம் ஒத்துக்க முடியாது! சோமசுந்தரர் (மதியழகர்) என்ன தான் வீட்டோட மாப்பி ஆனாலும், கைலாசம் போறாருல்ல! அது புகுந்த வீடு தானே அன்னைக்கு? ஒழுங்கா புகுந்த வீட்டிலும் பாதிச் சொத்து எழுதித் தரச் சொல்லுங்க!

    அரங்கத்தைப் போலவே, உள் மீனாள் சன்னிதி, வெளி மீனாள் சன்னிதி-ன்னு கைலாசத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அன்னையின் கொடி பறக்கணும், ஆமா! :)

    ReplyDelete
  26. //Raghav said...
    இடக்கையில் வீரத்தை பறைசாற்றவும், திறம்பட ஆட்சி புரிவதைக் காட்டவும் செங்கோல்..//

    எப்பமே செங்கோல் இல்லையே! கிளி தானே இருக்கு! அலங்காரத்தில் மட்டும் தானே செங்கோல் குடுக்கறீங்க? :)

    ReplyDelete
  27. //Raghav said...
    //தோளுக்கினியான்-ல உலா வரும் போது, காட்டும் வேகத்தைச் சொல்கிறாரோ என்னவோ?//

    அதே அதே..//

    பாருங்க! உங்க ஆழ் மனசையும் அலசி சொல்லிப்புட்டேன்! :)
    நீ, எப்பப்போ, எப்படி எப்படி யோசிப்பே-ன்னு தெரியும் ராசா! :)

    ReplyDelete
  28. //அன்னையும் என்னையும், என்னை என்னைக்கும் காக்கட்டும்! :)//

    சொல் விளையாட்டா .. இந்த விளக்கெண்ணெய்க்கு (நான் மட்டும் தான்) ஒண்ணும் புரியல..

    ReplyDelete
  29. //ஒழுங்கா புகுந்த வீட்டிலும் பாதிச் சொத்து எழுதித் தரச் சொல்லுங்க! //

    நீங்களே சொல்லுங்க..நெஞ்சத்தின் ஓரத்தில் கொஞ்சூண்டு இடம் கொடுக்குறது பெருசா இல்ல.. தன் அங்கத்தில் பாதியைக் கொடுப்பது பெருசா :).. அதைக் கூட தன் அண்ணனுக்கு விட்டுக் கொடுக்கும் கருணை அன்னையைத் தவிர எவருக்கு வரும்..

    ReplyDelete
  30. //Raghav said...
    சொல் விளையாட்டா .. இந்த விளக்கெண்ணெய்க்கு (நான் மட்டும் தான்) ஒண்ணும் புரியல..//

    அட குமரன் ஆரம்பிச்ச விளையாட்டுங்க இது!
    அன்னையும் என்-ஐ-யும், என்னை(அடியேனை), என்னைக்கும் காக்கட்டும்! :)

    நீங்களாச்சும் விளக்கெண்ணெய்...வயித்து வலிக்கு கூட பயன்படுத்திக்கலாம்! அடியேன் மண்ணு-எண்ணெய் - பத்தை வைக்கத் தான்.... :)))

    ReplyDelete
  31. //Raghav said...
    நீங்களே சொல்லுங்க..நெஞ்சத்தின் ஓரத்தில் கொஞ்சூண்டு இடம் கொடுக்குறது பெருசா இல்ல..தன் அங்கத்தில் பாதியைக் கொடுப்பது பெருசா :)//

    அது நெஞ்சத்தின் ஓரத்தில் கொஞ்சூண்டு இடம் இல்ல! மொத்த நெஞ்சத்துக்கும் சொந்தம்!

    எந்தப் பொண்ணை வேணும்னாலும் கேட்டுப் பாருங்க! உனக்கு என் முழு இதயம் வேணுமா? இல்லை உடம்பில் பாதி வேணுமா-ன்னு? (இதைக் கேட்டு வேறு ஏதாச்சும் நீங்க வாங்கினா அதுக்கு நான் பொறுப்பில்லை) :)

    இதிலென்ன சந்தேகம்!
    பொண்ணு இதயத்தைத் தான் ச்ச்சூஸ் பண்ணுவா! :)

    போதாக்குறைக்கு திரு, ஸ்ரீ-ன்னு பொண்டாட்டி பேரை தன் பேருக்கு முன்னுறுத்தி, தன்னைப் பின்னிறுத்திக்கறாங்களே! இதுக்கு என்னா சொல்றீரு? :)

    ReplyDelete
  32. அற்புதமான பதிவு. படங்கள் அழகு. பிள்ளைத் தமிழ் வெகு அழகு. (நான் கூட அன்னை ஊஞ்சலாடுவது பற்றி இப்பதான் ஒரு பாட்டு எழுதினேன்; வந்து பார்த்தா இங்கேயும் ஊஞ்சல் :) உங்களுக்குதான் இப்படில்லாம் வித்தியாசமா சிந்திக்க வரும் :)

    அது சரி... எப்பதான் பிள்ளைத் தமிழை மீண்டும் தொடர போறீங்க???

    ReplyDelete
  33. //கவிநயா said...
    அற்புதமான பதிவு. படங்கள் அழகு. பிள்ளைத் தமிழ் வெகு அழகு//

    பிள்ளை-ன்னாலே ஒரு ஏகாந்த அழகு தானே-க்கா!
    இவ கிள்ளை வைத்த பிள்ளை! அதான் கூடல் (கூடுதல்) அழகு:)

    //நான் கூட அன்னை ஊஞ்சலாடுவது பற்றி இப்பதான் ஒரு பாட்டு எழுதினேன்; வந்து பார்த்தா இங்கேயும் ஊஞ்சல் :)//

    அக்காவும் தம்பியும் ஊஞ்சலா? சூப்பரு!
    தங்கச்சியை ஊஞ்சல் ஆட்டி விட்டிருக்கேன்! ஆனா இதுவரை அக்கா என்னை ஊஞ்சல் ஆட்டியதில்லை! :)

    //உங்களுக்குதான் இப்படில்லாம் வித்தியாசமா சிந்திக்க வரும் :)//
    t=2.pi.root of l/g ன்னா? மக்கள் அடிக்காம வுட்டாங்களே! அதுவே போதும்-க்கா! :)

    //அது சரி... எப்பதான் பிள்ளைத் தமிழை மீண்டும் தொடர போறீங்க???//
    இதை மட்டும் மறக்காம கேட்டுருவீங்களே! :))

    ReplyDelete
  34. ;-))

    அறிவியலும் ஆன்மீகத்தையும் கலந்து கலக்கிட்டிங்க தல ;))

    ReplyDelete
  35. ஆஹா என் அன்னை இங்கே வந்திருக்கிறாளா
    முதலில் அவள் தாள் வணங்கி எழுந்து பிறகு பின்னூட்டமிடறேன். கண் நிறைகிறது.

    ReplyDelete
  36. \\ஆனால்.....இன்னிக்கி மதுரை மீனாட்சி & Pendulum Technique!
    \\

    என்னப்பா புதுசு புதுசா சிந்திக்கிறீங்க

    ஆழ்ந்து படிச்சாதான் என்னை மாதிரி ஆர்டினரிமக்களுக்குபுரிபடும்....படிச்சிட்டு வரேன் என்ன!

    ReplyDelete
  37. \\எலே! எடுப்பட்ட பய புள்ள! Pendulum Technique-ஆ? அதுக்கும் ஆத்தா மீனாட்சிக்கும் என்னலே சம்பந்தம்? கோதையைத் தான் அப்துல் கலாம் கூட ஒப்பிட்டு பதிவு போட்டே! இப்போ மீனாட்சியையும் விடுறதா இல்லியா நீயி?"]\\\

    அதானே ஆண்டாளை டீ போட்டு அழைச்ச ஆன்மீகப்பதிவராச்சே இவரு:)

    \\"அட, பாண்டி நாட்டுப் பெண்களை ரசிக்காம விட முடியுமா? அவிங்க அழகென்ன? நறுவிசு என்ன? மயிலென்ன? ஒயிலென்ன? :)
    கலர் வேணுமின்னா கொஞ்சம் கொறைச்சலா இருக்கலாம்! ஆனால் அந்தக் கலர்லயும் ஒரு காந்தம் இருக்குல்லே? என்ன நாஞ் சொல்லுறது? :)"
    \\

    இல்லையா பின்ன காந்தலே ருசி
    கருப்பே அழகு!

    ReplyDelete
  38. \\
    அது முடிஞ்சதும், அடுத்து தமிழ் வகுப்பு! அதுல மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்! ஆரம்பிச்சுட்டாருய்யா டேனியல் ஐயா! கிறித்தவரா இருந்தாலும், சும்மா உருகி உருகிப் பாடம் எடுப்பாரு! பாடியே காட்டுவாரு! அதுவும் ஆழ்வார் பாசுரம்-ன்னா சொல்லவே வேணாம்! அவர் கண்களே பனிக்கும்! இப்போ தெரியுதுங்களா தி சீக்ரெட் ஆஃப் கேஆரெஸ்! :)
    \\\

    சமஜ்கயா!!!

    ReplyDelete
  39. \\
    இப்படி அழகர்கள் கூடி இருப்பதால் தானே மதுரைக்கே ஒரு தனி கிறக்கம்! ஆனால் அத்தனை அழகுக்கும் ஆட்சியாள் யார்? அவள் மீது தான் பிள்ளைத் தமிழ் பாடுகிறார் நம் கவிஞர்! இன்றுள்ள பிள்ளைத் தமிழ் நூல்களில் எல்லாம் தலைசிறந்தது மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்!

    \\\

    அன்னையைப்பத்தி என்ன சொன்னாலும் இனிக்கும் அதனால்தான் அவளது பாடல்கள் முன்னிற்கின்றன.
    குழந்தை மனசோடு இறைவனை அணுகவேண்டும் என்கிற உண்மையையும் பிள்ளைத்தமிழ் நமக்கு சொல்கிறது இல்லையா !

    ReplyDelete
  40. \\
    பசும்பொன்னில் தொங்க விட்ட கிளிக் கூண்டு போல் ஒரு காதணி! கீழே பாண்டி முத்துக்கள் பதித்த அந்த லோலாக்கு! அது ஊஞ்சலை விட வேகமாக ஆடுகிறதாம்!\\

    லோலாக்குன்னா ஜிமிக்கிதானே
    நமக்கு ரொம்பப்பிடிச்சது அது!!! கிளிக்கூண்டுபோல...ஓ மீனாட்சிக்கு அங்கயே கிளியா!!! நல்லகற்பனை!

    ReplyDelete
  41. காலையில் கம்பியூட்டரைத் திறந்ததும் மீனாட்சி தரிசனம் ,கண்கள் நிறைக்கிறது,அதெப்படி பெண்டுலம் டெக்னிக்கை மீனாட்சியின் ஊஞ்சல் ஆட்டத்துடன் ஒப்பிட முடிந்தது? அருமையான ஒப்பீடு,வித்யாசமாகவும் புதிதாகவும் இருக்கிறது .மீனாட்சியின் கருத்த அடர்ந்த பின்னலில் பிச்சோடாக்கள் அவள் ஊஞ்சலில் ஆடும்போது இதுவும் கூட சேர்ந்து தானே பெண்டுலம் போல ஆடியிருக்கக் கூடும் ...காது லோலாக்கு ஆடியது சரி அவளது பின்னல் கூட அசையத்தானே செய்திருக்கலாம் வேகமான ஊசலாட்டத்தில் அதை ஏன் மறந்தீர்கள் ?சுவற்றில் காலை உந்தி ஆடுகிறாள் என்கிறீர்களே பின் கூடவே அவள் அணிந்திருந்த மாலை ...கை வளை... கால் சலங்கை ...எல்லாம் தானே ஆடியிருக்கும் ஆளுக்கு ஒரு தினுஷாக ஒவ்வொரு விதமாக !?

    வாசிக்க வெகு அருமை .காலை நேரத்தில் மீனாட்சியின் ஊஞ்சல் ஆட்டம் கற்பனையில் கருத்தை நிறைக்கிறது.

    ReplyDelete
  42. \\ஊசலின் நீளத்தைப் பொறுத்து தான் அதன் வேகமும் அமையும் என்பது இயற்பியல் சூத்திரம்! ஞாபகம் இருக்கா மக்கா? :)


    >>>>>>>>>>>>>>>

    இருக்கே!அனா இங்க நீங்க சொன்ன விதமே அலாதிதான்!

    ReplyDelete
  43. //ஷைலஜா said...
    அதானே ஆண்டாளை டீ போட்டு அழைச்ச ஆன்மீகப்பதிவராச்சே இவரு:)//

    அச்சோ! உங்க புகுந்த வீட்டுப் பொண்ணை டீ-போட்டு கூப்பிட்டதை இன்னும் மறக்கலியா-க்கா? சாரி-க்கா :))

    //இல்லையா பின்ன காந்தலே ருசி! கருப்பே அழகு!//

    இந்த மாதிரி ஒரு அக்கா இருந்தாப் போதும்! சப்போர்ட்டு இருக்கும் தைரியத்தில், தைரியமாக் காதலிக்கலாம்! :)

    ReplyDelete
  44. //பதிவுலக மருதைக்காரவுக சாமார்த்தியத்தையும் பாத்துருவோம்! :))//

    ம்ம்,,,ம்..


    //வகுப்புக்கே பெண்டுலம் எடுத்துக்கிட்டு வருவாரு வாத்தி!//

    ம்ம்.. ம்..

    ReplyDelete
  45. //தருமி said...
    //பதிவுலக மருதைக்காரவுக சாமார்த்தியத்தையும் பாத்துருவோம்! :))//

    ம்ம்,,,ம்..

    //வகுப்புக்கே பெண்டுலம் எடுத்துக்கிட்டு வருவாரு வாத்தி!//

    ம்ம்.. ம்..//

    என்ன தருமி சார், இத்தனை ம்ம்...கொட்டறீங்க? :)
    போட்டியில் மீனாட்சி கேள்விகள் எல்லாம் tough-ஆ செட் பண்ணப் பாக்குறேன்! :)

    ReplyDelete
  46. //கோபிநாத் said...
    ;-))
    அறிவியலும் ஆன்மீகத்தையும் கலந்து கலக்கிட்டிங்க தல ;))//

    ரெண்டுமே நமக்கு ஒன்னு தான் மாப்பி கோபி! :)

    ReplyDelete
  47. //ஷைலஜா said...
    சமஜ்கயா//

    தமிழ் வாத்தியார் வகுப்பில் சமஜ்-கயாவா? கலக்குங்க-க்கா! :)

    ReplyDelete
  48. //ஷைலஜா said...
    குழந்தை மனசோடு இறைவனை அணுகவேண்டும் என்கிற உண்மையையும் பிள்ளைத்தமிழ் நமக்கு சொல்கிறது இல்லையா !//

    ஆமாக்கா! குழந்தைக்கு விளையாடத் தான் தெரியும்! விதிகள் சொல்லத் தெரியாது! அது போலவே தான் பகவத்-அனுபவம்! பிள்ளை-தமிழ்!

    பெரியவங்களா கூட இருந்துறலாம்! பிள்ளையா இருக்குறது தான் ரொம்ப கஷ்டம் போல! :)

    ReplyDelete
  49. //மிஸஸ்.தேவ் said...
    காலையில் கம்பியூட்டரைத் திறந்ததும் மீனாட்சி தரிசனம் ,கண்கள் நிறைக்கிறது//

    மீனாட்சி நிறைவானவள்! அதான் நிறைஞ்சிட்டா! :)

    //அதெப்படி பெண்டுலம் டெக்னிக்கை மீனாட்சியின் ஊஞ்சல் ஆட்டத்துடன் ஒப்பிட முடிந்தது? அருமையான ஒப்பீடு,வித்யாசமாகவும் புதிதாகவும் இருக்கிறது//

    நம்ம கோளாறே அதாங்க மிஸஸ் தேவ்! :)

    //அவள் ஊஞ்சலில் ஆடும்போது இதுவும் கூட சேர்ந்து தானே பெண்டுலம் போல ஆடியிருக்கக் கூடும்...காது லோலாக்கு ஆடியது சரி அவளது பின்னல் கூட அசையத்தானே செய்திருக்கலாம் வேகமான ஊசலாட்டத்தில் அதை ஏன் மறந்தீர்கள் ?//

    ஆகா! பதினாறடி பாயறீங்களே! பின்னல் கண்டிப்பா ஆடியிருக்கும்! ஆனால் பின்னல் ஆட்டம் பெண்டுலமாகாது! அதுக்கு அடியில் கனம் தேவை! சஸ்பெண்ட் பண்ணி தொங்க விடணும்! பின்னல் குஞ்சரம் அந்த நீளத்துக்கு அம்புட்டு கனம் இல்லை!

    //சுவற்றில் காலை உந்தி ஆடுகிறாள் என்கிறீர்களே பின் கூடவே அவள் அணிந்திருந்த மாலை ...கை வளை... கால் சலங்கை ...எல்லாம் தானே ஆடியிருக்கும் ஆளுக்கு ஒரு தினுஷாக ஒவ்வொரு விதமாக !?//

    எல்லாமே வேறு மாதிரி ஆடியிருக்கும்! நீங்க ஒரு கவிதை பாடணும்! :)

    //வாசிக்க வெகு அருமை .காலை நேரத்தில் மீனாட்சியின் ஊஞ்சல் ஆட்டம் கற்பனையில் கருத்தை நிறைக்கிறது.//

    நன்றி! நன்றி!

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. spelling mistake.. நான் படிச்ச ஸ்கூல்ல

    ReplyDelete
  52. மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களே!
    ஆன்மீக பதிவு அன்பரே!
    பள்ளிகளிலும் ஆழ்வார் பாசுரங்கள் சொல்லி கொடுப்படுந்தா!
    சமயம் சார்ந்த பள்ளிகளா!
    ஒரு குறிப்பிட்ட பூணூல் அணிந்தவர்களுக்கே அந்த பள்ளிகளா!
    சாதாரண மக்களும் அந்த பள்ளிகளில் பயில முடியுமா!
    அப்படிப்பட்ட பள்ளிகள் எவையோ!
    அடியார்க்கும் அடியேனாகிய யாம் அறிந்து கொள்ள ஆசைபடுகிறேன்!
    தாங்கள் சொல்வீர்களா! ப்ளீஸ்!
    Rajesh

    ReplyDelete
  53. KRS Said…,,
    பதிலை நீங்க தாராளமா எதிர்பார்க்கலாம்! எங்கே பதில்-ன்னு உரிமையுடன் கூடக் கேட்கலாம்! :)

    கேட்ருவோம்!
    எங்கே பதில் ?

    ReplyDelete
  54. //Sri Kamalakkanni Amman Temple said...
    கேட்ருவோம்!
    எங்கே பதில் ?//

    :)
    ஆகா! இப்படி, பழைய பதிவில் பின்னூட்டம் இட்ட கையோட, ஒரு மின்னஞ்சலும் தட்டி விடுங்க! அப்ப தானே என்னைப் போல மந்தமதிகளுக்கு ஏதோ எங்கேயோ கேட்டிருக்காக-ன்னு தெரியும்! :)

    ReplyDelete
  55. //Anonymous said...
    மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களே!
    ஆன்மீக பதிவு அன்பரே!//

    இப்படியெல்லாம் திட்டக் கூடாது...சொல்லிட்டேன், ஆமா! :)

    //பள்ளிகளிலும் ஆழ்வார் பாசுரங்கள் சொல்லி கொடுப்படுந்தா!
    சமயம் சார்ந்த பள்ளிகளா!//

    இல்லை!
    நான் சென்னை வந்து படிச்சது St Don Bosco பள்ளியில்!
    அங்கு தமிழாசிரியர் டேனியல் ஐயா! Fr. Principal, Rev. ரோசாரியோ கிருஷ்ணராஜ்! :)

    அவர் தான் பாசுரம் பாடிக் காட்டுவாரு! என்னையும் மீதியைப் பாடச் சொல்லுவாரு! :)
    இந்தப் பாசுரம் எல்லாம் தமிழ்ப் பாடப் புத்தகத்திலும் வரும்! சமய இலக்கியங்கள்-ன்னு கடைசியா வரும்! இப்பவும் வருது! மனப்பாடப் பகுதியாகவும் வரும்!

    முழுப் பாசுரமும் வராது! பதிகம், பாசுரம், தேம்பாவணி, சீறாப்புராணம்-ன்னு எல்லாச் சமயப் பாட்டும் ஒரு தொகுதியா கொடுத்திருப்பாய்ங்க! அதில் வரும் பதிகம்/பாசுரத்தைத் தான் இப்படிப் பாடிக் காட்டுவாரு!

    //ஒரு குறிப்பிட்ட பூணூல் அணிந்தவர்களுக்கே அந்த பள்ளிகளா!
    சாதாரண மக்களும் அந்த பள்ளிகளில் பயில முடியுமா!//

    :)
    பூநூல் அணிந்தவர்களும் சாதாரண மக்கள் தான்!
    "சாதாரண மக்களும்" சாதாரண மக்கள் தான்! :)

    நீங்க கேட்கும் பள்ளிகள், சமயக் கல்வியை அதிகம் போதிக்கும் குருகுலங்கள்! ஆலய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள்! அங்கு முழுப் பாசுரங்களும் சொல்லிக் கொடுப்பார்கள்! பாடுவதை விட ஓதுதல் தான் அதிகம் இருக்கும்!

    திருக்கோவிலூர் இராமானுச எம்பெருமானார் மடத்து வேத பாடசாலையில் சாதி பேதங்கள் கிடையாது! மதுராந்தகம், ஆழ்வார் திருநகரி, திருக்குறுங்குடி, திருவரங்கம்-ஜீயபுரம் இன்னும் பல பாடசாலைகளிலும் அப்படியே!

    //அப்படிப்பட்ட பள்ளிகள் எவையோ!
    அடியார்க்கும் அடியேனாகிய யாம் அறிந்து கொள்ள ஆசைபடுகிறேன்!
    தாங்கள் சொல்வீர்களா! ப்ளீஸ்!//

    மேற் சொன்னதெல்லம் Full Time பாடசாலைகள்!
    நீங்கள் உங்கள் ஓய்வு நேரத்தில், சும்மா ஆசைக்காக கற்கவென்றே, சில குழுமங்கள் சொல்லிக் கொடுக்கிறார்களே! அது சரியா வருமா என்று பாருங்கள்!

    சென்னையில், திருவல்லிக்கேணி வானமாமலை மடத்தில் பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடப்பதுண்டு! மயிலை பேயாழ்வார் ஆலயத்திலும் நடப்பதுண்டு!

    ஆனால்..அதை விட இன்னும் எளிமையா, ஓதுதல்+பாட்டோடு...சொல்லிக் கொடுக்கும் இடம் ஒன்னு இருக்கு! பள்ளிக்கரணை பக்கத்துல! முயன்று பாருங்கள்!
    Divya Prabandha Pathasala
    Jalladampet Village
    Chennai - 601 302
    Phone : 91 44 22460527

    ReplyDelete
  56. Hai krs
    Many thanks
    Many thanks
    Many thanks
    needful information.

    நீங்கள் உங்கள் ஓய்வு நேரத்தில், சும்மா ஆசைக்காக கற்கவென்றே, சில குழுமங்கள் சொல்லிக் கொடுக்கிறார்களே! அது சரியா வருமா என்று பாருங்கள்!::)))

    சரியா வராது என்று கருதுகிறேன்.

    நுங்கம்பாக்கத்தில் புக் வாங்கி ஹாயா! படிப்பதே சிறந்தது .


    rajesh

    ReplyDelete
  57. //நுங்கம்பாக்கத்தில் புக் வாங்கி ஹாயா! படிப்பதே சிறந்தது//

    :)
    Rajesh, Please allow to me share something with you...

    புக் வாங்கினால் தெரிஞ்சிக்கலாம்! ஆனா உணர்ந்துக்க முடியாது! :)
    பாசுரத்தின் ஓசை-சந்தம், ஒரு ஆசான் மூலமாகவோ, இல்லை அடியார் குழாத்திலோ பழகப் பழக உடனே வந்துடும்! நிலைச்சியும் நிக்கும்!

    Fast Food அப்பப்ப சாப்டுக்கலாம், தப்பில்லை! ஆனா, வெறும் ரசஞ் சோறே ஆனாலும் சமைத்துச் சாப்பிடுவதில் உள்ள ருசி தனி! :))

    நானும் இதே போலத் தான் இருந்தேன்! சுதர்சன மந்திரம் புக் பார்த்தே படிச்சிப்பேன்! ஆனா கோர்வையாச் சொல்ல வராது! சரி சிடி போட்டுக் கேட்பேன்! ஆனா தாத்பர்யம் புரியாது! ஸ்பீக்கரே சிடி வழியா எனக்கு மந்திரோபதேசம் பண்ணிருச்சி! :)))

    அப்பறம் கொஞ்ச நாள் Swimming Class போவது போல், ஓய்வு நேர பாசுர வகுப்புகளுக்குப் போகும் போது, பாசுரத்தில் உள்ள ஈரம் புரிந்தது...அடியவர் குழாத்தின் குணானுபவம் அப்படி!

    சொன்னா வியப்படைவீங்க...
    உன்றன்னோடு+உறவேல்+நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்ற கோதையின் வரிகள்...சும்மாத் தான் தெரியும் இவ்வளவு நாளும்!
    ஆனால்...அடியவர் குழாத்தில் ஒரு தலித் வாலிபன், திருவரங்கத்து நம்பெருமாள் சேவையில் இருந்த போது...நானும் அவனும் பேசிக்கிட்டு இருந்தோம்! அப்போது தான் உன்றன்னோடு+உறவேல்+நமக்கு = அ+உ+ம் = ஓம் என்பதே புரிய வந்துச்சி!

    இந்த விளக்கம் பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் வியாக்யானத்தில் கூடக் கிடைக்காது! ஆனால் இது போன்றவை குணானுபவத்தில் கிட்டும்! கொஞ்சம் உரிமை எடுத்துச் சொல்லிட்டேன்! தவறானால், ஏதோ சின்னப் பையன்-ன்னு என்னை மன்னிக்க! :)

    ReplyDelete
  58. அனுபவ பூர்வமா சொல்றீங்க!
    பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரின்னு சொல்வாங்க
    ஓய்வு நேர பாட சாலையை - யை தொடர்பு கொள்கிறேன் .

    நன்றி

    Rajesh

    ReplyDelete
  59. //Anonymous said...
    அனுபவ பூர்வமா சொல்றீங்க!
    பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரின்னு சொல்வாங்க//

    அகா! நான் சிறியவன்...சிறியவங்க சொன்னா சிறுமாள் சொன்னா மாதிரி-ன்னு வேணா வைச்சிக்கலாம்! :)
    Will send an email, cc Radha on it! He knows the place!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP