மகளிர் வட்டம்: இலட்சுமணனுக்குப் போடுவோம் சீதா ரேகா!
உலக மகளிர் தின வாழ்த்துக்கள்! மகளிர் தினத் தொடர் விளையாட்டுக்கு, நம்ம ஷைலஜா அக்கா கோலம் போட்டு, மூனு பேரைக் கூப்பிட்டு இருக்காக!
ஒரே பயமாப் போயிரிச்சி! எங்கே நம்மளையும் கோலம் போடச் சொல்லீருவாங்களோ-ன்னு! :)
ஆனால் அவிங்க மட்டும் தான் கோலம் போடணுமாம்! நாம கோலத்துக்கு பார்டர்/வட்டம் மட்டும் போட்டாப் போதும்-ன்னு சொல்லிட்டாங்க! :)
இந்தப் பெண்கள் எப்பமே இப்படித் தான்! கஷ்டமான காரியங்களைத் தானே எடுத்துக்கிட்டு, நம்ம கிட்ட கொடுக்கவும் கொடுக்காம, தானே கஷ்டப்பட்டு செஞ்சதாக் காட்டிக்கறதுல அப்படி என்ன தான் ஒரு சுகமோ? ஹா ஹா ஹா! :)
நாம கோலத்துக்கு பார்டர்/வட்டம் மட்டும் போடுவோமா? ஹிஹி! பெண் வட்டம்! அதான் கவிதைத் தலைப்பு!
அக்கா என்ன சொல்றாங்க-ன்னா: //நேற்று இந்தக் கோலத்தை வாசலில் போடும் போது பெண்ணுருவத்தை மட்டும் முதலில் போட்டு வண்ணப் பொடிகளில் அலங்கரித்தேன்,பிறகு யாரும் காலில் மிதித்து விடுவார்களோ என பெண்ணைச் சுற்றிலும் வட்டம் இட்டேன் ! என்றைக்கும் பெண்ணிற்கு ஒரு கோடு !லட்சுமண ரேகா போல! இந்தக் கோடு அதாவது பெண்வட்டம் பற்றி கவிதை எழுத மூன்று ஆண்களை அழைக்கிறேன்//
இப்படி ஒரு பெண்ணே, பெண்ணைச் சுற்றிலும் வட்டம் போட்டுட்டு, ஆண்கள் மட்டுமே கவிதையை எழுதணும்-ன்னு அடம் புடிச்சா? :)
இந்த அடாவடி அக்காவைப் பழி தீர்க்க, சரியான சந்தர்ப்பம்...இதோ...
பெண் வட்டம் - இலட்சுமண ரேகை?
எத்தனை எத்தனை வட்டங்கள் இந்தப் பெண்ணுக்கு மட்டும்?
உச்சந் தலையில் துவங்கும் பொட்டும் வட்டம்!
உள்ளங் கால் விரல் மெட்டியும் வட்டம்!
அழகிய வட்டமும் உண்டு! அழுகிய வட்டமும் உண்டு!
*****************
குழந்தையாய் இருந்தவளின் நட்பு வட்டம் பெரிதா?
குமரியாய் ஆன பின் போட்ட கற்பு வட்டம் பெரிதா?
*****************
தோழியர் வட்டம், காளையர் வட்டமாய் ஆனது!
காளையர் வட்டம், நண்பர் வட்டமாய் ஆனது!
நண்பர் வட்டம், குடும்ப வட்டமாய் ஆனது!
குடும்ப வட்டம், குழந்தை வட்டமாய் ஆனது!
குழந்தை வட்டம், பாச வட்டமாய் ஆனது!
பாச வட்டமோ ஓர் நாள் காணாமல் போனது!
வட்டம் அதனுள் வளைய வந்தவள், வட்டம் காணாது வாட்டம் ஆனாள்!
வட்டம் போனால் நல்லது தானே? வட்டம் போனால் வருத்தம் ஏனோ?
*****************
வட்டத்துக்குக் கூர் முனை இல்லை பெண்ணே!
குத்தினாலும் வலி உடன் தெரிவதும் இல்லை!
ஆனால் முனை இல்லா ஆயுதமும் ஆயுதம் தானே! - வேண்டுமா உனக்கு?
வேண்டும் என்று ஒரு ஆணாய்ச் சொல்கிறேன்!
பெண்ணுக்கு வட்டம் வேண்டும் தான்!
வட்டம் இனி "நீ" உன் கையில் எடுத்துக் கொள்!
*****************
வாசகர் வட்டம், ரசிகர் வட்டம், பதிவர் வட்டம்,
சமூக வட்டம், இசையின் வட்டம், சேவை வட்டம்
....என்று அவரை வட்டமாய் ஆக்கி விடு!
வட்டங்கள் மாறும் காலம் இது!
மாறி விடு! வட்டத்தை அவருக்கு மாட்டி விடு!
இலக்ஷ்மணா, நலமா?
பதிவர் வட்டத்துக்குள் இருந்து எனக்குப் பின்னூட்டு மைத்துனா!
கோலம் போடும் கைக்கு, ரேகை போடவா தெரியாது?
உன்னைச் சுற்றி....இதோ...
சீதை வரைகிறாள்.....
சீதா ரேகா! சீதையின் ரேகை!
அடுத்து மூன்று ஆண்களை அழைக்கணுமாம்-ல? யாரைப் பழி வாங்கலாம்?? :))
1. செல்ல மகள் அபி கவிதை எழுதுவாள்! அப்பா எழுதுவாரா? தேறுவாரா? பார்த்து விடலாமா? - வ.வா.ச அட்லாஸ் சிங்கம்...அபி அப்பா! :)
2. பெண் ஈயம், பித்தளைக்கு வலையுலகில் பேர் போன நம்ம இலவசக் கொத்தனார்! குறுக்கெழுத்தாய்யா போடுற? கவுஜ போடு பாப்போம், வெண்பாக் கவுஜ? வட்டம், வட்டமாப் போடணும்! :)
3. வட்டத்தை வச்சி PIT-ல ஃபோட்டோ போட்டி நடத்தலாம்! போட்டா போட்டி நடத்த முடியுமா? ஜீவ்ஸ் அண்ணே! :)

ஒரு வட்டம் இட அழைத்தேன்
ReplyDeleteமா வட்டம் அளித்துவிட்டீர்!
\\\வட்டத்துக்குக் கூர் முனை இல்லை பெண்ணே!
குத்தினாலும் வலி உடன் தெரிவதும் இல்லை!
ஆனால் முனை இல்லா ஆயுதமும் ஆயுதம் தானே! - வேண்டுமா உனக்கு?
>>>>
ஆஹா அருமையான கண்ணோட்டம்!
\\\வட்டம் அதனுள் வளைய வந்தவள், வட்டம் காணாது வாட்டம் ஆனாள்!
வட்டம் போனால் நல்லது தானே? வட்டம் போனால் வருத்தம் ஏனோ?\\\
வட்டம்வாட்டம்..ரவிஎங்கயோபோய்ட்டீங்க!
பாராட்டுக்கள்!சொன்ன உடனே கவிதை எழுதியதற்கு!
வட்டத்துக்குள் கண்ணனை மாட்டி விட்ட ஷையக்காவுக்கும், மாட்டிக்கிட்ட தம்பிக்கும் வாழ்த்துகள் :)
ReplyDelete//வட்டம் போனால் நல்லது தானே? வட்டம் போனால் வருத்தம் ஏனோ?//
"வாட்டம் போனால் வருத்தம் ஏனோ"ன்னு இருக்கணுமோ?
//வட்டத்துக்குக் கூர் முனை இல்லை பெண்ணே!
குத்தினாலும் வலி உடன் தெரிவதும் இல்லை!
ஆனால் முனை இல்லா ஆயுதமும் ஆயுதம் தானே! - வேண்டுமா உனக்கு?//
இந்த வரிகளே எனக்கும் பிடிச்சவை.
நல்ல கவிதையைப்பாராட்ட கவிநயாதவிர ஏன் யாருமே இங்க படையெடுக்கல!
ReplyDelete// ஷைலஜா said...
ReplyDeleteஒரு வட்டம் இட அழைத்தேன்
மா வட்டம் அளித்துவிட்டீர்!//
மா வட்டம், மாவாட்டம்-ன்னு மாவாட்ட கூப்ட்டுறாதீங்க-க்கா! உங்கூர்ல அம்பி-ன்னு ஒருத்தர் இருக்காரு! அவர் இட்லி-தோசை, அரிசி-உளுந்து ன்னு நல்லாவே மாவாட்டுவாரு! அவரைக் கூப்புடுங்க! :))
//வட்டம்வாட்டம்..ரவிஎங்கயோபோய்ட்டீங்க!
பாராட்டுக்கள்!சொன்ன உடனே கவிதை எழுதியதற்கு!//
அடித்த கவுஜ, யூத்ஃபுல் விகடன்-ல தான்! :)
//கவிநயா said...
ReplyDeleteவட்டத்துக்குள் கண்ணனை மாட்டி விட்ட ஷையக்காவுக்கும், மாட்டிக்கிட்ட தம்பிக்கும் வாழ்த்துகள் :)//
அதானே! தம்பி மாட்டிக்கிட்டா அல்வா சாப்பிடற மாதிரி இருக்குமேக்கா உங்களுக்கு? :)
//"வாட்டம் போனால் வருத்தம் ஏனோ"ன்னு இருக்கணுமோ?//
இல்லக்கா! வட்டம் தான்!
பாச வட்டம் தானே ஆயுதம்? அதான் போகுது-ல்ல? போனா வருத்தம் எதுக்கு? -ன்னு கேட்பது போல் எழுதினேன்!
//வட்டத்துக்குக் கூர் முனை இல்லை பெண்ணே!
குத்தினாலும் வலி உடன் தெரிவதும் இல்லை!
ஆனால் முனை இல்லா ஆயுதமும் ஆயுதம் தானே! - வேண்டுமா உனக்கு?//
இந்த வரிகளே எனக்கும் பிடிச்சவை//
எனக்கும்! :))
//ஷைலஜா said...
ReplyDeleteநல்ல கவிதையைப்பாராட்ட கவிநயாதவிர ஏன் யாருமே இங்க படையெடுக்கல!//
ஹிஹி!
அதான் 2 akkas came na?
ஞாயிற்றுக் கிழமை போட்டதுக்கா! நிறையப் பேருக்குத் தெரியாது!
ப்ளஸ் அது ஆன்மீகம் அல்ல! "பெண்"மீகம்! அதுனாலயும் இருக்கலாம்! :))
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//ஷைலஜா said...
நல்ல கவிதையைப்பாராட்ட கவிநயாதவிர ஏன் யாருமே இங்க படையெடுக்கல!//
ஹிஹி!
அதான் 2 akkas came na?
ஞாயிற்றுக் கிழமை போட்டதுக்கா! நிறையப் பேருக்குத் தெரியாது!
ப்ளஸ் அது ஆன்மீகம் அல்ல! "பெண்"மீகம்! அதுனாலயும் இருக்கலாம்! :))
11:44 PM, March
>>>>>>>
ஓ பெண்மீகம்னா நிலமை இப்படித்தானா சரிசரி:):):)என்ன 33% போங்கப்பா:)
...please where can I buy a unicorn?
ReplyDelete