Sunday, March 22, 2009

பக்தி For Dummies - Part 3!

"I am Unfit"-இதைப் பத்தி இந்தப் பதிவில் கட்டாயம் பாத்துறலாம்! சஸ்பென்ஸ் போதும்! மக்கள் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க! :) சென்ற பதிவு இங்கே!

"எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிஞ்சிக்கிட்டா, இன்னிக்கே மோட்சம்!" என்று "விளையாட்டாகவும்", "சீரியசாகவும்" சென்ற பதிவுகளில் சொல்லி இருந்தேன்!

அறிவினால் மட்டுமே இறைவனை அளந்துற முடியுமா?
"அறிவே தெய்வம்"-ன்னு வேணும்னா சில பேரு சொல்லிக்கலாம்! அதுக்கு பாரதியார் பாட்டு வேற இருக்கு! ஆனால் ஒருக்காலும் அறிவு தெய்வம் ஆகி விடாது! (டிஸ்கி: நம்ம சக பதிவர் பெயரைச் சொல்லலீங்கோ) "அறிவே தெய்வம் இல்லை" என்கிற அறிவே தெய்வம்! :)


பெற்றோர்கள் சொல்லித் தானே, நாம் அவர்களின் பிள்ளை என்றே நமக்குத் தெரிகிறது?
தினம் தினம் அம்மா-அப்பாவை ஆயிரம் கேள்வி கேக்குறோமே? ஆனால் "அந்தக்" கேள்வியைக் கேட்போமா? :) அதே போலத் தான் இறைவனும்!

நாம் இன்னாருக்குத் தான் பிறந்தோம் என்று நம்மில் எத்தனை பேர் "உறுதியாகச்" சொல்ல முடியும்? ஒவ்வொருவரும் பயாலாஜிக்கல் எவிடென்ஸ் கேட்டுக் கொண்டும், காட்டிக் கொண்டும் இருக்க முடியுமா? இப்படி, நம்மையே நாம் 100% அறியாத போது, நாம எப்படி இறைவனை 100% அறிய முடியும்? :)

அட, டெக்னாலஜி ரொம்ப முன்னேறிப் போச்சு, உலகம் ரொம்ப பின்னேறிப் போச்சுப்பா! யாரை நம்பறதுன்னே தெரியலை! அதுனால பள்ளியில் சேர்க்கும் முன்போ, கல்யாணத்துக்கு முன்போ, எல்லாரும் Genetic Test என்னும் மரபியல் சோதனை செஞ்சிக்கிட்டு அவங்கவங்க பெற்றோரை "உறுதிப்படுத்திக்கணும்"-ன்னு சட்டமா கொண்டாற முடியும்? :) அதே போலத் தான் இறைவனை "உறுதிப்படுத்திக்" கொள்வதும்!

அரியவனை - அரி அவனை, அறிவினால் "மட்டுமே" உறுதிப் படுத்த முடியாது!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!


சிறு வயதில் இருந்தே, இவங்க தான் உண்மையான அம்மா-அப்பா என்று எப்படி ஏற்றுக் கொள்கிறோம்? சினிமாவில் வேண்டுமானால், கர்ணன் போல கைவிட்ட குழந்தை, தத்து கொடுத்த குழந்தை-ன்னு க்ளைமாக்ஸில் கொஞ்சம் சூடு பிடிக்கும்!
* திடீர் என்று ஒரு நாள், "உண்மை" தெரிய வந்தாலும், "உண்மை இல்லாத" அம்மா அப்பாவை உதற முடிவதில்லையே! - ஏன்?
* தத்துக் குழப்பம் இல்லாத நிஜமான பெற்றோரைக் கூட, இவங்க தான் அம்மா-அப்பா என்று "உறுதிப்படுத்திக்" கொள்ளாமலேயே உறுதிப்படுத்திக் கொள்கிறோமே? - எப்படி?

அறிவே தெய்வம் இல்லீங்க! அன்பே தெய்வம்!
Knowledge is God என்று யாரும் சொல்லலை! Love is God-என்று தான் மேலை நாட்டவனும் சொன்னான்! இந்தப் பலன் கருதா அன்பினால் தானே அம்மா-அப்பா என்று "உறுதிப்படுத்திக்" கொள்கிறோம்? இல்லை அறிவினாலா? நீங்களே சொல்லுங்க!


ஆக, ஞான விசாரணையால் இறைவனை "உறுதிப்படுத்த" முடியாது!
கர்ம சாதனையால் இறைவனை "உறுதிப்படுத்த" முடியாது!


* கர்ம யோகம் = சடங்கு, மந்திர ஜபம், தந்திர பூஜை, "விதிச்சதைப் பண்ணுறது" ...
* தியான யோகம் = யமம், நியமம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், சமாதி...
* ஞான யோகம் = சாதகம், சத்-சம்பத்து, விவேகம், வைராக்கியம், ஜீவன் முக்தி...
என்றெல்லாம் விதம் விதமா அடுக்கிட்டு போகலாம்!

ஆனால் அத்தனையும் "சம்சார துக்க நிவர்த்தி" என்ற ஒரு பொருளின் மேல் கண் வைச்சு தான் பின்னியிருக்கு! அதிலும் "சுயநலம்" உண்டு!
பற்று அறுத்துட்டேன், பற்று கொஞ்சம் கொஞ்சமா போயிரிச்சி-ன்னு சொல்லிக்கலாமே ஒழிய, இருக்குற பற்றெல்லாம் அங்க தான் இருக்கு! :))

சென்ற பதிவில் ஹோமம், சம்ஸ்காரம்-ன்னு கர்மா பண்ணுறதை ரொம்ப கிண்டல் அடிச்சிட்டேன்-ன்னு சில நண்பர்கள் தனிமையில் குறைபட்டுக் கொண்டார்கள்!
ஒரு அனானி அன்பர் கேட்கவே கேட்டுட்டாரு! தியான யோகம், ஞான யோகம், 5 Watts Bulb-ன்னு சொன்னது மட்டும் சிரிப்பா இருந்துச்சாம்! ஆனால் கர்ம யோகம் பற்றி மட்டும் தவிர்த்து இருக்கலாமே என்று கேட்டு இருந்தார்! :)

அந்த உரையாடல் அடியேன் சொன்னது இல்லீங்க!
கர்மவாதிகள் உட்பட இன்னிக்கி பலரும் போற்றும் பரனூர் அண்ணா (என்னும்) கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் சொன்னதைத் தான் பதிவில் கொடுத்து இருந்தேன்!
என்னிடம் வழக்கமாக கோபித்துக் கொள்ளும் சில அனுட்டான சீலர்கள், இப்போ பரனூர் அண்ணா கிட்டே போய் கோபித்துக் கொள்ள முடியுமா? :))

மக்களே...யாரையும் குற்றம் சொல்லணும்-ன்னு அடியேன் நோக்கம் அன்று!
கர்மப் பிடிப்பில் கெட்டியாக ஒட்டிக் கொண்டால் ஆத்ம சாஷாத்காரம் தான் தளும்பும்!
பரமாத்ம சாஷாத்காரம் வராது! உள்ளத்தில் பகவத் கருணை ஊறாது என்பதற்காகத் தான் அத்தனை விளக்கங்களும்!
அது உங்களுக்குக் கோபம் ஏற்படுத்தி இருந்தால், வீழ்ந்தெழுந்து கொள்கிறேன்! அடியேனை மன்னிப்பீர்களாக!



சொல்லப் போனால்...நீங்க கிருஷ்ண பரமாத்மாவைத் தான் மன்னிக்கணும்! :)

நானாச்சும் ஏதோ லைட்டாச் சொல்லிட்டுப் போயிட்டேன்! ஆனா அவர் சும்மா பிச்சிப் பிச்சி வாங்குறாரு இந்த ஸோ கால்டு ஆச்சாரத்தை!
சிலர் தனக்குச் சாதகமாகக் காட்டும் அதே பகவத் கீதையில் தான் இதுவும் இருக்கு! :))

யாம் இமாம், புஷ்பிதாம் வாசம், ப்ரவதந்தி அவிபாஸ்சித:
வேத வேத ரதா: பார்த்தா, நான்யத் அஸ்திதி வாதினா 2:42

வேதம் விதிச்சபடி நடக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், அலங்கார புஷ்பம் போல வெறும் கோஷம் தான் இடுவார்கள்! தங்களுக்குப் பிடித்தமான வேத வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, சுயநலமாகக் கையாளுவார்கள்!

காமாத்மனா, சொர்க்க பரா, ஜன்ம-கர்மா-பலப்ரதாம்
க்ரியா விசேஷ பகுலாம், போக ஐஸ்வர்ய, கதிம் ப்ரதி! 2:43

சொர்க்கம், கர்மா, இஷ்டி, ஹோமம்-ன்னு, உலகாயுதமாக, விதம் விதமான சடங்குகளையும் கர்மாக்களையும் செய்து கொண்டு, வீணே காலம் கழிப்பார்கள்!

(அதாச்சும் வேத சாகைகளில் உள்ள கர்ம காண்டங்களிலேயே உட்கார்ந்து கொள்வார்கள்! சடங்கு தாண்டி, அடுத்து, ஞான காண்டத்துக்கு, "பகவானே எல்லாம்" என்று வரவே மாட்டார்கள்! பேச மட்டும் செய்வார்கள்! ஆனால் நடைமுறைப் படுத்த மாட்டார்கள்!)

ந வேத! யக்ஞ தியாய-னைர், ந தனைர், ந ச க்ரியா-பிர்!
ந தபோ-பிர் உக்ரை! ஏவம் ரூப சாக்ய அகம்! 11:48

வேதப் படிப்பாலேயோ, யாக ஹோமங்களாலேயோ,
தட்சிணை மற்றும் கிரியைகளாலோ, தன்னலமான தான தவங்களாலோ,
என்னைக் காண முடியாது! அடைய முடியாது!
(ஏக பக்திர் விசிஷ்யதே என்னும் "ஏக பக்தி" கொண்ட உன்னால்(பக்தனால்) மட்டுமே காண முடியும்!)

உடன் பிறவா சகோதரிகள், உடன் பிறந்த அரசியல்வாதிகள்...எத்தனையோ பூஜை, ஹோமம்-ன்னு விதம் விதமாப் பண்ணுறாங்களே! "விதிச்சபடி" ஆஹூதி எல்லாம் சூப்பராக் கொடுக்கறாங்க தானே? ஆனால்.....

* ஹோமம் செய்பவர்களுக்கும் தெரியும் = ஆசாமிகள் பகவானை அண்ட முடியாது-ன்னு!
* ஹோமம் செய்து வைப்பவர்களுக்கும் தெரியும் = ஆசாமிகள் பகவானை அண்ட முடியாது-ன்னு!
இருந்தாலும் மாங்கு மாங்கு-னு செஞ்சிக்கிட்டு தான் இருப்பாய்ங்க! :))

ஆக, இந்தக் கீதையின் சுலோகங்களில் இருந்து தெரிகிறது அல்லவா?
* ஞான-கர்ம யோகங்கள் தன்னை மட்டுமே உணர்த்தும்! இறைவனை உணர்த்தாது!
* பக்தி யோகம் என்னும் இறை அன்பே பகவானை உணர்த்தும்! அதுவே "உண்மையான" கீதா சாரம்!


இப்போ "லாயக்கில்லை", "Unfit'-க்கு வருவோம்! :)

* ஞான காண்டம் அத்தனையும் எப்போ படிச்சி, கர்ம காண்டம் அத்தனையும் எப்போ பண்ணி, நீ எப்பப்பா மலையேறது?
* நம் பிறப்பையே நாம் 100% அறியாத போது, இதை எல்லாம் படிச்சா அறியப் போகிறோம்?
* அப்படியே அறிஞ்சாலும், அதையெல்லாம் 100% பண்ணவா போகிறோம்? நம்மைப் பத்தி நமக்குத் தெரியாதா? பேச்செல்லாம் பதிவில் தானே? :) பேசும் போது நல்லா இலக்கணமாப் பேசீருவோம்! பாட்டெழுதும் போது கரெக்ட்டா கோட்டை விட்டுற மாட்டோமா என்ன? :))

அதனால் தான்.....
நான் ஒன்றுக்கும் லாயக்கு இல்லை! I am Unfit - என்று "சொல்லிச் சொல்லி"ச் சரணாகதி செய்கிறார் மாறன் என்னும் நம்மாழ்வார்! அவரே இப்படிச் சொன்னா, நாம எல்லாம்? :))

* நோற்ற நோன்பிலேன் = கர்ம யோகம் இல்லேன்!
* நுண்ணறிவு ஒன்றிலேன் = ஞான யோகம் இல்லேன்!
* ஒன்றும் ஆற்ற கின்றிலேன் = தியான யோகம் இல்லேன்!

தெரியேன் பாவியனாய், பல தீமைகள் செய்து விட்டேன்!
பெரியேன் ஆயின பின், பிறர்க்கு உழைத்தே ஏழை ஆனேன்!


இப்படி ஒன்றுக்கும் லாயக்கில்லா நான்...
* அகலகில்லேன் = உன்னை அகல மாட்டேன்!
* புகல் ஒன்று இல்லா அடியேன் = போக்கிடம் வேறொன்று இல்லை!

ஞான-கர்ம-தியான யோகம்-ன்னு ஒரு யோகமும் இல்லை!
அகல மாட்டேன் என்ற அன்பு யோகம் மட்டும் தான் இருக்கு!

* எனக்கு வேற போக்கு கிடையாது! = எனக்கு நீ, உனக்கு நான்!
* உன் தன்னோடு+உறவேல்+நமக்கு = அ+உ+ம் = ஓம்! இங்கு ஒழிக்க ஒழியாது!

புகல் ஒன்று இல்லா அடியேன்...உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே! = இதுவே பரிபூர்ண சரணாகதி!
இனி வரும் பதிவுகளில் கேள்வி கேட்டு, கேள்வி கேட்டு, இது சாத்தியாமா-ன்னு பார்ப்போம்!


லைட்டாப் புரிஞ்சி இருக்கும்-ன்னு நினைக்கிறேன்! அட, ஒன்னுத்துக்கும் லாயக்கில்லா எனக்கே புரியுது! உங்களுக்குப் புரியாதா? இன்னொரு தபா பதிவை வாசிச்சா போச்சு! :)

டேய் கேஆரேஸ்ஸ்...வார்த்தை ஜாலமாப் பேசிட்டாப் போறுமா? ஆழ்வார் பாட்டில் இருந்து எடுத்துக் காட்டி, ஞான-கர்ம யோகம் எல்லாம் இல்லைன்னு சொல்லிட்டாப் போறுமா?
எங்களுக்கு வேதங்கள் தான் அடிப்படை! வேதாந்தம் தான் அடிப்படை!
ஏதோ லாயக்கு இல்லை, Unfit, இன்னிக்கே மோட்சம்-ன்னு "அ-வைதீகமாப்" பேசுகிறாயே! இதுக்கெல்லாம் ஒரு சுலோகத்தையாச்சும் உன்னால் காட்ட முடியுமா? :)

ந தர்ம நிஷ்டோஸ்மி = நியம நிஷ்டை இல்லை!
நச் ஆத்ம வேதி = வேத வழியில் ஆத்ம ஞானம் இல்லை!
ந பக்திமானு = பெருசா நான் பக்திமானும் இல்லை!
த்வத் சரணார விந்தே = ஆனால் "அன்பினால்" சரணார விந்தம், திருவடிகளைப் பற்றிக் கொண்டேன்!

அகிஞ்சனக: = எனக்கு வேறு கைம்முதல் இல்லை!
அனன்ய கதி: = எனக்கு வேறு கதியும் இல்லை!

எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு புரிந்து கொண்ட நம் ஆழ்வாருக்கு மோட்சம் என்றால்.....அப்படியே புரிந்து கொள்ளும் நமக்கும் இன்னிக்கே மோட்சம்! :))


பொதுவாக வேதங்கள் தான் ஞான பரமானவை! ஞானம் கொடுக்கும்! பேத ஸ்ருதி, அபேத ஸ்ருதி-ன்னு புத்திக்குத் தீனி போடுவது போல் பேசும்!
இந்த ஆழ்வார்-நாயன்மார்களின் பாசுரம் எல்லாம் ஒரே "பாவமா"-ன்னா இருக்கு? "ஞானமா" இதுல ஒன்னும் இல்லையே!

ஆழ்வார் அழுவறாரு! தூது விடறாரு! காதல் அது இது-ன்னு "லோக பரமா"-ல்ல பேசுறாரு? இதுல பெருசா தத்துவம் இல்லேயேப்பா!
சரி, போனாப் போவுது, இதுவும் இருக்கட்டும்! நம்ம பகவானை அவங்களும் பாடிட்டாங்க! வேற வழியில்ல!

* ஆரம்ப நிலை = ஆழ்வார்/நாயன்மார்கள்!
* இறுதி நிலை = வேதம்-ன்னு இருக்கட்டும்!
"மூட" பக்தியில் ஆரம்பிச்சி...படிப்படியா ஞானம், கர்மா-ன்னு முன்னேறி வரட்டும் = இப்படிச் சொல்பவர்களைப் போல பேதைகள் வேற யாருமே இருக்க முடியாது!

வேதாந்த தேசிகர் = பெரிய மகான்! சகல வேத சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்! தமிழில் நூல்கள் சில எழுதி இருந்தாலும், வடமொழியில் பெரும் பெரும் வித்தகர்! சுலோகம்-ன்னாலே ஆயிரம் ஆயிரமாகத் தான் வந்து விழும் இவருக்கு!

இன்னிக்கி ஆச்சாரம் பேசும் பல பேர், இவரைத் தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவார்கள்! வடமொழியில் பல பனுவல்கள் செய்து விட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக, இவரையும் நியம நிஷ்டை என்னும் வளையத்துக்குள்ளே அடைத்து வைத்து விட்டார்கள்! :(

ஆனால் இவரைப் போல உள்ளம் கனிந்த அன்பரைக் காண முடியாது! அப்பேர்ப்பட்ட வேத வித்து!
அவருக்கே வேத வேதாந்தம் படித்து மிஞ்சியது என்னவாம்? = குழப்பம் தான் மிஞ்சியதாம்! ஹா ஹா ஹா! நான் சொல்லலைங்க! அவரே சொல்கிறார்!
"செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!"


தெளியாத மறை நிலம் = வேதம்! தெளிவே ஏற்படவில்லையாம்!
அப்புறம் ஆழ்வார்களின் ஈரப் பாசுரங்களை, ஈரமாகவே வாசித்த போது தான், "ஆகா...அதுக்குப் பொருள் இதுவா?" - என்ற தெளிவே ஏற்பட்டுச்சாம்!
இப்படிச் சொன்னதற்காக "வேதத்தைக் குறைச்சிப் பேசிட்டாரு", "வேத மாதாவை மதிக்கலை" என்று அவரைத் தள்ளியா வைக்கிறோம்? இல்லை அல்லவா? அதை நம் அன்பர்களும் மனசாட்சியால் "உணர்ந்து" பார்க்க வேணும்!

* வேதங்கள் இறைவனின் பரத்துவத்தை நிலைநாட்டும்!
அவன் ரொம்ப பெரியவன் என்று அவனை "அங்கு" வைத்து, " அங்கு" போக வழியைக் காட்டிச் சொல்லும்!
* பாசுரங்கள் இறைவனின் செளலப்யத்தை நிலைநாட்டும்!
இவன் ரொம்ப எளியவன் என்று இவனை "இங்கு" வைத்து, "இங்கு" போக வழியைக் காட்டிக் கொடுக்கும்!


மக்களே...நினைவில் வையுங்கள்!
வீர-தீர சாகசங்கள், ஞான-கர்ம சாகசங்களை வைத்து...
மற்ற சாம்ராஜ்யத்தைப் வேணும்-ன்னா பிடிக்கலாம்! ஆனால் பக்தி சாம்ராஜ்யத்தைப் பிடிக்க முடியாது!
சுய சாகசங்களால் பிடித்த சாம்ராஜ்யங்கள் கூட, கொஞ்ச தலைமுறைக்குத் தான்! ஆனால் பிரகலாத பக்தி சாம்ராஜ்யம் அப்படி அல்ல!

மோட்சம் என்னும் மந்திரச் சொல்லில் மயங்கி விடாதீர்கள்!
மோட்சம் = அப்பாடா! பிறவிக் கஷ்டமே இல்லாம ஜாலியா இருக்கலாம்-ன்னு சுயநலத்தில் கண் வைத்து ஏமாந்து போகாதீர்கள்!
சுயநலம் இருப்பது தெரிஞ்சிச்சோ...இந்தக் கர்மா செய்யுங்கள், அந்த யாகம் செய்யுங்கள்-ன்னு,
உங்கள் சுயநலத்துக்கு, சுயநலத்தைத் தான் தூக்கிக் கொண்டு வருவார்கள்! மோட்சம் அதுவல்ல!

சம்சார துக்க நிவர்த்தி என்பதே மோட்சம் ஆகி விடாது! சரி, கொஞ்சம் மாற்றி, அந்தமில் பேரின்பம் தான் மோட்சம் என்றும் சொல்லிப் பார்த்தார்கள்!
வெறுமனே அந்தமில் பேரின்பம் தான் மோட்சமா? நல்லா இல்லையே-ன்னு அதற்கும் இறைவன் ஒப்புக்கலையாம்! :)

அப்புறமா, அந்தமில் பேரின்பத்து, "அடியவர்களோடு"...கைங்கர்ய நித்ய நிரைதிஹி-ன்னு மாற்றி எழுதினாப் பிறகு தான் பாடல் ஓக்கே ஆச்சாம்! :)
கூடும் "அன்பினால்" கும்பிடலே அன்றி, வீடும் வேண்டா விறலில் விளங்கினார்!

இறை அன்பா? = அப்படின்னா என்ன? அதை எப்படிப்பா செய்யறது?
நாங்க இறைவன் கிட்ட ஏற்கனவே அன்பாத் தானே இருக்கோம்?
சுப்ரபாதம், திருப்பாவை, அலங்காரம், அந்தாதி, கந்தர் அனுபூதி, ஹ்ருதயம்-ன்னு டைப் டைப்பா எத்தனை பதிவு போடறோம்? :)
பெருசா சொல்ல வந்துட்ட? இறை அன்பு-ன்னா என்ன? சொல்லேன் பார்ப்போம்!

ஒவ்வொன்றிலும்,
* இதைச் செய்தால் எம்பெருமான் திருவுள்ளம் உவக்குமா?
* இல்லை அவன் திருமுகம் வாடுமா?

என்று எண்ணுவதே இறை அன்பு!



* தென்கலை/வடகலை, சைவம்/வைணவம், ஆலயத்தில் இந்துக்கள்/இந்துக்கள் அல்லாதார்-ன்னு விதம் விதமா கோஷ்டி கட்டறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...

* தங்கத்தைப் புழு என்று தரையில் வீசிய வேதாந்த தேசிகருக்கு, தங்கக் கவசம் சாத்த காசு வசூலிக்கறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...

* பதிகங்களை அம்பலத்தில் பாட ஆகமத் தடைன்னு சும்மானா சொல்லிட்டு, அம்பலத்தில் வழுக்கி விழுமாறு நாமே எண்ணெய் ஊற்றுகிறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...

* கோயிலில் மற்ற அடியார்கள் எல்லாம் கால் கடுத்து நின்று கொண்டிருக்க, நாம் மட்டும் செல்வாக்கு காட்டுறோமே! நம்மைக் கூசும் கண்களால் சக அடியார்கள் பார்க்க, சட்டையே பண்ணாமல் சிறப்புத் தரிசனம் செய்கிறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...

* கொல்லாமை என்பது புத்த பகவான் "விதிச்சதாச்சே"! நமக்குப் பிடிக்கலை, நம்முடன் ஒத்து வரலை என்பதற்காக, ஒரு இனத்தையே ரத்தத்தில் மிதக்க விடுகிறோமே = இதனால் புத்த பகவான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...

நாம் செய்யும் பல செயல்களில்,
* இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?
என்று பகவானைப் பாவிக்கப் பழகுங்கள்!


உங்களோடு கூட பாவிக்க, பாவிக்க....திருவாய்மொழி: பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே! அவனைக் கூடுவது தானே மோட்சம்?

(பக்தி For Dummies...தொடரும், எம்பெருமான் உள்ளம் உவக்குமா?...)

18 comments:

  1. \\மக்களே...யாரையும் குற்றம் சொல்லணும்-ன்னு அடியேன் நோக்கம் அன்று\\

    இதை புரிந்து கொண்டு நண்பர்கள் படித்தால் அன்பு,சரணாகதி எல்லாம் எளிதாக புரியும்.தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  2. //எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிஞ்சிக்கிட்டா, இன்னிக்கே மோட்சம்//

    இப்போது புரிகிறது கே.ஆர்.எஸ். சென்ற இரண்டு பதிவுகளாக பலத்த யோசனை. இந்த பதிவில் தீர்ந்தது. மரபியல் சோதனை-தாய் தந்தையர் மூலம் விளக்கியது நன்றாக இருந்தது. பலதரப்பட்ட ஞானத் தேடல்கள் இருந்தாலும், தேடல் நிலையில் தான் ஒவ்வொருவனும் இருக்கிறான். முழுக்க அறியவில்லை. அந்த ஞாபகம் இருந்தால், (நீங்கள் சொன்னது போல் லாயக்கில்லை என்ற பிரக்ஞையோடு), அப்போது இறைவன் புரிவான் என்று மிக எளிமையாகவும் அழகாகவும் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.

    சென்ற பதிவில் கர்ம யோகக் கேள்விக்கு மன்னிக்கவும். உங்களைக் குறையாகக் கேட்கவில்லை.நீங்கள் மரபை மதிப்பீர்கள், மூடமான நம்பிக்கையைத் தான் எள்ளலாக எழுதுவீர்கள் என்று தெரியும்.

    ReplyDelete
  3. //இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...//

    இது மிகவும் பிடித்து இருந்தது.
    இப்படியே ஒவ்வொன்றிலும் நடந்து விட்டால் வீண் சண்டை சச்சரவு தான் ஏது?

    //பக்தி For Dummies...தொடரும், எம்பெருமான் உள்ளம் உவக்குமா?//

    உவக்கும். தொடருங்கள்.

    ReplyDelete
  4. //Anonymous said...
    பக்தி For Dummies...தொடரும், எம்பெருமான் உள்ளம் உவக்குமா?//

    உவக்கும். தொடருங்கள்//

    நன்றி அனானி அவர்களே! காலங்கார்தால உங்க ஒத்தை வரியைப் பார்த்ததும் இதமாக இருந்தது! :)

    //இது மிகவும் பிடித்து இருந்தது.
    இப்படியே ஒவ்வொன்றிலும் நடந்து விட்டால் வீண் சண்டை சச்சரவு தான் ஏது?//

    ஹிஹி!
    மதச் சண்டை-ன்னு ஒன்னுமே கிடையாதே!
    மதம் பிடித்த "ஆட்கள்" சண்டே தானே அன்னிக்கும், இன்னிக்கும், என்னைக்கும்! :)

    ReplyDelete
  5. //Anonymous said...
    இப்போது புரிகிறது கே.ஆர்.எஸ். சென்ற இரண்டு பதிவுகளாக பலத்த யோசனை. இந்த பதிவில் தீர்ந்தது//

    மகிழ்ச்சிங்க!

    //பலதரப்பட்ட ஞானத் தேடல்கள் இருந்தாலும், தேடல் நிலையில் தான் ஒவ்வொருவனும் இருக்கிறான். முழுக்க அறியவில்லை. அந்த ஞாபகம் இருந்தால், (நீங்கள் சொன்னது போல் லாயக்கில்லை என்ற பிரக்ஞையோடு)//

    சரியாக எடுத்துக் கொடுத்தீர்கள்!
    தேடிக் கொண்டே இருக்கிறான் என்று நீங்கள் சொன்னீர்கள்! லாயக்க்கில்லை என்று நான் சொன்னேன்! அவ்வளவு தான் வித்தியாசம்! :)

    //சென்ற பதிவில் கர்ம யோகக் கேள்விக்கு மன்னிக்கவும்.//

    ஆகா! அப்படீல்லாம் இல்லீங்க! அடியேன் பதிவில் ஆத்திகமோ, நாத்திகமோ என்ன கேள்வியும் கேட்கலாம்! நீங்க முன்பும் பார்த்திருப்பீங்களே!

    //உங்களைக் குறையாகக் கேட்கவில்லை.நீங்கள் மரபை மதிப்பீர்கள், மூடமான நம்பிக்கையைத் தான் எள்ளலாக எழுதுவீர்கள் என்று தெரியும்//

    புரிதலுக்கு நன்றி!
    எள்ளல் இல்ல! துள்ளலாத் தான் எழுதினேன்! :))))

    ReplyDelete
  6. //அறிவே தெய்வம் said...
    இதை புரிந்து கொண்டு நண்பர்கள் படித்தால் அன்பு,சரணாகதி எல்லாம் எளிதாக புரியும்.தொடர்ந்து எழுதுங்கள்..//

    நன்றி அறிவே தெய்வம்!

    உங்க பெயரைப் பதிவில் சொல்லும் போதே டிஸ்கி போட்டுட்டேன்-ல? :))

    ReplyDelete
  7. இறையன்பு என்பது இறைவனுக்கு பிடித்த வண்ணம் நடந்து கொள்வதே என்பதை அழகாகச் சொன்னீர்கள். "உறுதிப் படுத்திக் கொள்வது" குறித்து நீங்கள் திறம்பட விளக்கியிருப்பதன் மறு பெயர்தான் "நம்பிக்கை". முழு நம்பிக்கையும் தூய அன்பும் இருந்து விட்டால் வேறென்ன வேண்டும்?

    நன்றி கண்ணா.

    ReplyDelete
  8. தல...வந்துட்டேன்...ஒவ்வொரு பதிவாக வந்துக்கிட்டு இருக்கேன்..ஒரே வியப்பு..!!

    தொடருங்கள் ;)

    ReplyDelete
  9. Good Arguments. :-)

    But dont know whether I understood every word in every sentence. :-)

    ReplyDelete
  10. // பக்தி For Dummies...தொடரும், எம்பெருமான் உள்ளம் உவக்குமா?//

    கேட்டுச் சொல்லுங்க. :-)

    ReplyDelete
  11. //குமரன் (Kumaran) said...
    Good Arguments. :-)//

    Argument-aa? யார் கூட? :)

    //But dont know whether I understood every word in every sentence. :-)//

    எங்கெங்கே புரியலை-ன்னு சொன்னீங்கனா எங்க குமரனைக் கேட்டுச் சொல்வேன்!
    கீதை சுலோகத்தை அவர் தான் வந்து பார்த்து குடுத்து, விளக்குவாரு! :)

    ReplyDelete
  12. //கவிநயா said...
    இறையன்பு என்பது இறைவனுக்கு பிடித்த வண்ணம் நடந்து கொள்வதே என்பதை அழகாகச் சொன்னீர்கள்//

    ஒரு சின்ன திருத்தம்-க்கா!
    இறைவனுக்குப் பிடித்த மாதிரி எல்லாம் நடந்து கொள்ளணும்-ன்னு அவனும் கேட்கலை! (ஒரு நல்ல அம்மா-அப்பா மாதிரியே)

    நமக்கு நாமே கெடுதல் செஞ்சிக்கிடற மாதிரி நடந்துக்க வேணாம்-ன்னு தான் கேக்குறான்! அப்போ தான் அவன் முகம் வாடுது! குழந்தையின் கெடுதல் பார்த்தா வாடாதா? அதைத் தான் குறிப்பிட வந்தேன்!


    //"உறுதிப் படுத்திக் கொள்வது" குறித்து நீங்கள் திறம்பட விளக்கியிருப்பதன் மறு பெயர்தான் "நம்பிக்கை"//

    :)
    நம்பிக்கை என்ற வார்த்தை பல பேருக்கு பிடிக்கிறதில்ல-க்கா! அறிவுப் பூர்வமா-ன்னு சொன்னாத் தான் பிடிச்சிருக்கு! :)

    //முழு நம்பிக்கையும் தூய அன்பும் இருந்து விட்டால் வேறென்ன வேண்டும்? நன்றி கண்ணா//

    நன்றி-க்கா!
    நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவன் அவன் தான்!
    கண்டுபிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் புவியீர்ப்பு எப்பமே இருக்கு! :)

    ReplyDelete
  13. //கோபிநாத் said...
    தல...வந்துட்டேன்...ஒவ்வொரு பதிவாக வந்துக்கிட்டு இருக்கேன்..ஒரே வியப்பு..!!//

    வியப்பாஆஆஆ???? எதுக்கு கோப்பி? எது மேல கோப்பி? :)

    //தொடருங்கள் ;)//

    தொடர்ந்துருவோம்!
    நீயே சொல்லிட்ட! வேற என்ன வேணும்? :)

    ReplyDelete
  14. திரு கண்ணபிரான்,

    இதுக்குப் பேர்தான் "நச்". அருமையான விளக்கங்கள். ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம் ஸ்லோகம் அருமையான விளக்கம்.

    "அறிவிலேனுக்கு அருள்வாய்" என்றுதான் நம்மாழ்வாரும் பாடியிருக்கிறார்.

    "அறியாக்காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து" என்றும் கூறிப்போகிறார்.

    வேதாந்த தேசிகரின் திருவுள்ளத்தை நன்றாக விளக்கியுள்ளீர்கள். அவரேதான் "அமலனாதிபிரான்" பாசுர உரையில் "காரண வஸ்து இன்னதென்று அறுதியிட முடியாத க்ருபா கடாக்ஷத்தாலே" என்று இறைவனுடைய காருண்யத்தை விளிக்கிறார்.

    மேலும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    அடியார் தம் அடியார் எம் அடிகளே
    வேங்கடேஷ்

    ReplyDelete
  15. Vanakkam sir,
    The child in womb seeing Arangan photo simply says poigaiazhwarin Karuvarangathul kindanden,kaithozhuden kanden,Thiruvaranga meyaan thisai.pls read Swamidesikanin Nyasadhasakam,you will get some good infirmation related to this subject.
    ARANGAN ARULVANAGA.
    k.srinivasan.

    ReplyDelete
  16. //குமரன் (Kumaran) said...
    // பக்தி For Dummies...தொடரும், எம்பெருமான் உள்ளம் உவக்குமா?//

    கேட்டுச் சொல்லுங்க. :-)//

    யாரை? அதை மொதல்ல சொல்லுங்க குமரன்! :)
    குமரனுக்கு உவக்குமா? அப்படின்னா ராகவப் பெருமாளுக்கும் உவக்கும்!

    ReplyDelete
  17. //Anonymous said...
    Vanakkam sir,
    The child in womb seeing Arangan photo simply says poigaiazhwarin Karuvarangathul kindanden,kaithozhuden kanden,Thiruvaranga meyaan thisai.//

    ஆகா! இப்படி ஆளாளுக்கு பாசுர மழையைக் கொட்டறீங்களே! இதுக்காகவே தொடரை இன்னும் எழுதலாம் போலிருக்கே! நன்றி ஸ்ரீநிவாசன் சார்!

    ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்,
    இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
    கருவரங்கத்து உட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்
    திருவரங்க மேயான் திசை!

    கருவரங்கம்-திருவரங்கம்-ன்னு என்ன ஒரு கருத்தாட்சி, சொல்லாட்சி!

    கருவில் இருக்கும் குழந்தை படம் பலதையும் நினைவுபடுத்தும்!
    பிரகலாதன், பரீட்சித்து, ஆன்மா கருவில் உருப் பெறுதல், கோயில் கருவறை...இன்னும் எத்தனை எத்தனை?

    //pls read Swamidesikanin Nyasadhasakam,you will get some good infirmation related to this subject//

    கண்டிப்பா! அடுத்த பகுதியும், சரணாகதி தீபிகையும் தேசிகர் தான் ஏற்றப் போகிறார்! :)

    ReplyDelete
  18. //Venkatesh said...
    திரு கண்ணபிரான்,
    இதுக்குப் பேர்தான் "நச்". அருமையான விளக்கங்கள்//

    நன்றி வேங்கடேஷ்! உங்க Profile படத்தில் இருக்கும் மணவாள மாமுனிகள் வந்து சொன்னது போல் ஒரு மகிழ்ச்சி! :)

    //ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம் ஸ்லோகம் அருமையான விளக்கம்//

    ஆமாங்க! ஆளவந்தார் அருளிச் செய்தது தான் அந்த "ந தர்ம நிஷ்டோஸ்மி" சுலோகம்! விசிட்டாத்வைதம் கொள்கைகளின் ஆணி வேர் போல் உள்ள ஒரு சுலோகம்!

    பலரும் ஏதோ இராமானுசர் தான் விசிட்டாத்வைதம் கண்டுபிடித்தது போல் பேசுவார்கள்! ஆனால் அவருக்கும் முன்பே இப்படி ஒரு கொள்கை நிலவியது பலரும் அறிந்திலர்!

    //"அறியாக்காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து" என்றும் கூறிப்போகிறார்//

    ஆமாம்! ஆனால் இந்தப் பாசுரம் தானே குருவான திருமாலை ஆண்டானுக்கும், சீடர் இராமானுசருக்கும் கருத்து மாறுபடும்? "ஆச்சார்ய விளக்கமாகச் சொல்லாமல், நீயாக ஏதேதோ சொல்கிறாயே! நீ ஒரு விசுவாமித்ர சிருஷ்டி"-ன்னு இராமானுசரைக் கடிந்து கொள்ளுவார் ஆண்டான்! :))

    //வேதாந்த தேசிகரின் திருவுள்ளத்தை நன்றாக விளக்கியுள்ளீர்கள்//

    நன்றி வேங்கடேஷ்! தேசிகர் சொன்ன ரகசிய த்ரய சாரத்தின் கருத்துக்கள் பலவும் இவ்வண்ணமே அமையும்!

    //"காரண வஸ்து இன்னதென்று அறுதியிட முடியாத க்ருபா கடாக்ஷத்தாலே" என்று இறைவனுடைய காருண்யத்தை விளிக்கிறார்//

    ஆம்! கீதாசாரத்தை ஒரே பாட்டில் சொல்லி இருப்பார்! அடுத்த பதிவில் தருகிறேன்!

    //மேலும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்//

    தொடர்ந்து வாசித்து, குணானுபவத்தில் கலந்து கொள்ளுங்கள்!

    //அடியார் தம் அடியார் எம் அடிகளே//
    :)
    அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ...
    இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP