Sunday, March 15, 2009

தமிழில் பட்டர்ஃபிளைக்கு பெயர் இருக்கா?

ஓ பட்டர்ஃபிளை பட்டர்ஃபிளை! ஏன் கொடுத்தாய் விருதை?-ன்னு மாத்திப் பாடலாமா? ஹிஹி! மகரந்தத்தைத் தேடித் தானே பட்டர்ஃபிளை வரும்? ஆனால் மகரந்தமோ, பட்டர்ஃபிளையை என்னிடம் அனுப்பி வைச்சிருக்கு! :)பட்டாம்பூச்சி விருது அளித்த மகரந்தன், நண்பன் ராகவனுக்கு நன்றி! :)

இந்த மாஆஆஆசம் என்ன விருது மாசமா? தமிழ்மணத்தின் இரண்டு விருதுகளோடே, தமிழ் மணக்கும் ராகவன் இன்னொரு விருதும் அடியேனுக்குத் தந்து ஹாட் ட்ரிக் ஆக்கி இருக்கான்! :)
யார் இந்த பட்டாம்பூச்சியைப் பறக்க விட்டாங்களோ தெரியலை....ஆனால் துள்ளித் திரிந்த காலங்கள் கணக்கா, ஒவ்வொரு வலைப்"பூ"வுக்கும் அழகாப் பறந்துக்கிட்டே இருக்கு!


"சரி..... தமிழில் பட்டர்ஃபிளைக்கு என்ன பெயர்???"

"அட மாங்கா கேஆரெஸ், உன்னைப் போயி தமிழ் கொஞ்சும் பதிவு-ன்னு சொல்லுறாங்க பாரு! இது கூடவா தெரியாது?....குழந்தைக்குக் கூடத் தெரியுமே...பட்டர்ஃபிளைக்குத் தமிழ்ப் பேரு = பட்டாம்பூச்சி, வண்ணத்துப் பூச்சி! இது என்னடா கேள்வி?"

"எலே! வண்ணான் பூச்சி, வண்ணாத்திப் பூச்சி-ன்னு எனக்கும் தெரியும்! அதெல்லாம் இப்போ நாம ஜாலியா சொல்றது!
ஆனால் இவ்வளவு அழகான, காதலர்களின் பட்டாம்பூச்சியை, தமிழ் இலக்கியப் பாடல்களில் யாரும் பாடினா மாதிரியே தெரியலையே! அதான் என் கேள்வி! நீயே யோசிச்சிப் பாரு! சினிமாப் பாட்டு தவிர, வேற எங்காச்சும் பட்டர்ஃபிளை பறந்திருக்கா?"

"அட, ஆமாம்-ல? சினிமாவில் பட்டர்ஃபிளை பாட்டு இருக்கு! ஆனா இலக்கியத்தில் வண்ணத்துப் பூச்சி பத்தி யாரும் பாடலை போலிருக்கே!
எத்தனை எத்தனை காதல் இருக்கு தமிழ் இலக்கியத்தில்? ஆனால் ஒருத்தர் கூடவா நம்ம பட்டாம்பூச்சியைப் பாடலை? எ.கொ.ச?"

"ஹா ஹா ஹா! ஒரு வேளை...இந்த வண்ணத்துப் பூச்சி, "தமிழ்க் கடவுள்" மாதிரி, "தமிழ்ப் பூச்சியா" இல்லாம இருந்திருக்குமோ? அதான் இலக்கியத்தில் பின்னாளைய புலவர்கள் பாடலையோ?"

"டேய்....வேணாம்! ஒதை படுவ கேஆரெஸ்ஸு! ஒழுங்காச் சொல்லிரு! இப்ப எதுக்கு இதைக் கெளப்பி விட்ட நீயி? தமிழில் வண்ணாத்திப் பூச்சிப் பாட்டு இருக்கா? இல்லையா? அதச் சொல்லு!"

"இருக்கு! இருக்கு!....ஒவ்வொன்னா எடுத்து விடவா? அடா, அடா, அடா....காதல்-ல்ல தான் எத்தனை எத்தனை பட்டாம்பூச்சி பாட்டு இருக்கு?
1. வண்ணத்துப் பூச்சி...வயசென்ன ஆச்சி?
2. ஒரு பட்டாம் பூச்சி நெஞ்சுக்குள்ள சுத்துகின்றதே!
3. ஓ...பட்டர்ஃபிளை...பட்டர்ஃபிளை, ஏன் விரித்தாய் சிறகை?"


"டேய்....தமிழ் இலக்கியத்தில் ஏன் பட்டாம் பூச்சி இல்லை-ன்னு கேட்டா, நீ என்னமோ சினிமாப் பாட்டை எல்லாம் காட்டுற?"

"அட ராசா, சினிமாப் பாட்டு இலக்கியம் ஆவாதா என்ன? இன்றைய பாட்டு, இன்னும் இருநூறு வருசத்துல இலக்கியம் ஆயிரும்-டா! தெரிஞ்சிக்கோ" :)

"யாரு கண்டா? ஒன்னை மாதிரி, ஜிரா மாதிரி, கானா பிரபா மாதிரி ஆளுங்க இருந்தாக்கா, ஆனாலும் ஆயிரும்! :) ஆனாலும் வண்ணத்துப் பூச்சி, வயசென்ன ஆச்சி பாட்டு எனக்கும் ரொம்ப புடிக்கும்-டா கேஆரெஸ்!"

"அப்படி வா வழிக்கு! இன்னும் நிறைய பாட்டு இருக்கு! நடு நடுவுல வண்ணத்துப் பூச்சி வரும்! - விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே....அதுல கூட, நீ பட்டுப் புடைவை கட்டிக் கொண்டால், பட்டாம் பூச்சிகள் மோட்சம் பெறும்-ன்னு வரிகள் வரும்! செம கிக்கா இருக்கும்-ல?"

"சரி, நீ மேட்டருக்கு வா! தமிழ் இலக்கியத்தில் பட்டாம் பூச்சி இருக்கா? இல்லையா?"


பட்டாம் பூச்சி வேற! பட்டுப் பூச்சி வேற! பட்டுப் பூச்சி, மின்மினிப் பூச்சி, பட்டாம்பூச்சி, வண்டு, தும்பி-ன்னு நிறைய இருந்தாலும், மகரந்தம் தேடிப் பறப்பது...மூனே மூனு தான்! = பட்டாம்பூச்சி, வண்டு, தும்பி!

இதுல வண்டு, தும்பி = இந்த இரண்டு பத்தியும் இலக்கியத்தில் நிறையவே இருக்கு!
கோத்தும்பீ என்று மாணிக்கவாசகர் தனியாகவே ஒரு தொகுப்பு போட்டு இருக்காரு! சங்க காலத்திலேயே, கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் "தும்பி" தான் திருவிளையாடல் புகழ் பெற்றதாச்சே!

வண்டு பற்றியும் இலக்கியத்தில் உண்டு! திரையிசைப் பாடல்களும் உண்டு!
பூவில் வண்டு கூடும் கண்டு, பூவும் கண்கள் மூடும் என்பது என்னவொரு அழகிய சினிமாப் பாடல்! அதில் இலக்கிய அழகு இல்லீயா என்ன?

"வண்டினம்" முரலும் சோலை என்பது ஆழ்வார் பாசுரம்! வண்டார் குழலி/சுரும்பு ஆர் குழலி என்று இரத்தினகிரி முருகன் கோயிலில் உள்ள அம்பாளுக்குப் பேரு!
இப்படி வண்டும் தும்பியும் இலக்கியத்தில் நிறையவே இருக்கு! ஆனால்.....

* அழகிய வண்ணம் வண்ணமாய்ப் பறக்கும் பட்டாம் பூச்சி...
* காதல் தேனை உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கும் பட்டாம் பூச்சி...
* "I Love U" என்ற மந்திரச் சொல் சொல்லும் போது இளசுகளின் கண்கள், உள்ளமெல்லாம் பறக்கும் பட்டாம் பூச்சி....
தமிழ் இலக்கியத்தில் கிட்டத்தட்ட இல்லை-ன்னே சொல்லிறலாம்! :(((



"அடடா......அப்படியா சேதி? பட்டாம் பூச்சிக்குத் தமிழ் இலக்கியத்தில் இடம் இல்லையா? கேட்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கேஆரெஸ்!"

"என்னாங்க பண்றது? பின்னாளைய தமிழ்ப் புலவர்கள் மனசு வைக்கணும்! அவிங்க யாரும் வைக்கலை போல இருக்கே! தமிழ்க் கடவுளான திருமாலையே தமிழ்க் கடவுள்-ன்னு பாடாத சில பின்னாள் புலவர்களா, பட்டாம் பூச்சிக்கு எல்லாம் மனசு இரங்கப் போறாங்க?"

"அது என்னமோ சரி தான்! அறுபது வயசு ராஜா அந்தப்புர உப்பரிகையில் நடந்து வருவதைப் பார்த்துட்டு, வீதி இளம்பெண் வயசுக்கு வந்துட்டா-ன்னு "உலா" எழுதினானுங்க சில பேரு! சில பேரு ராஜாவுக்கு கூஜா தூக்க, வலிந்து போய் காதல் பாடல்களை எழுதுவாங்க! உலா, கலம்பகம்-ன்னு பின்னாளைய சிற்றிலக்கியம்! அதில் எல்லாம் செயற்கைக் காதல் தான்! என்ன இருந்தாலும், சங்க இலக்கியத்து உண்மைக் காதல் மாதிரி வருமா? அரசனுக்குப் பயப்படாம, உள்ளது உள்ளபடி இயற்கையாகப் பாடின காதல் ஆச்சே அது?"

"இதுக்குத் தான் காதலர்களே பெரும் தமிழ்ப் புலவர்களா ஆயிரணும்! அப்போ தான் காதலர்களுக்கு எல்லாம் ஒரு கெத்தா இருக்கும்! பட்டாம் பூச்சிக்கும் ஒரு மதிப்பு!" :)

"ஆமாம்! அப்படி யாராச்சும் ஆகியிருக்காங்களா கேஆரெஸ்ஸூ? பட்டாம் பூச்சிக்கு விடிவு கொடுக்க, ஒருத்தர் கூடவா இல்ல, தமிழ் இலக்கியத்தில்?"

"ஏன் இல்லை? அதுவும் என் தோழி இருக்கும் போது....."

"ஆகா! கோதையா? அவளா?....அந்தக் காதலி பெரிய புலவர் தான்! ஆனால் அவளாச்சும் பட்டாம் பூச்சியைப் பாடுறாளா என்ன?"

"சிந்துரச் செம்பொடி போல்
திருமாலிருஞ் சோலை எங்கும்,
இந்திர கோபங்களே
எழுந்தும் பறந்து இட்டனவால்,
மந்தரம் நாட்டி அன்று
மதுரக் கொழுஞ் சாறு கொண்ட
சுந்தரத் தோள் உடையான்
சுழலையின் இன்று உய்துங் கொலோ"

"ஆகா! ஆகா! அருமை! அருமை! காதலர்கள் விரும்பும் பட்டாம் பூச்சியைப் பாடிட்டாளா? இதுக்கு விளக்கம் ப்ளீஸ்!


தமிழ்ப் பட்டாம் பூச்சியைப் பாக்கணும்-ன்னா மதுரைக்குத் தான் போவோணும்! மதுரை அழகர் கோயில்-ல தான், அவள் காதலன், சுந்தரத் தோள் உடையான் இருக்கான்! சூப்பர் அழகன்! கள்ளழகன்! - அவனுக்கு ஏன் சுந்தரத் தோள்-ன்னு பேரு? மருதைக் காரவுங்களே வந்து சொல்லட்டும்!

அவன் என்ன பண்ணுறானாம் என் தோழியை?
மந்தர மத்தினை நட்டு, மதுரமான வெள்ளமுதம் தந்தவன் அவன்! மந்தரம் நாட்டி, அன்று மதுரக் கொழுஞ் சாறு கொண்ட சுந்தரத் தோள் உடையான்!
அவன் ஏற்படுத்திய சுழலில் சிக்கித் தவிக்கிறாள் தோழி! பட்டாம்பூச்சி பறக்குது அவளுக்கு! :)

திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் கோயில்! அங்கு சிந்தூரப் பொடிகள் தூவினாற் போலே, இந்திர கோபங்கள் என்னும் வண்ணத்துப் பூச்சிகள், ஒரேயடியாக எழுந்து, ஒட்டு மொத்தமாகப் பறக்கின்றன! Butterfly Effect in Love! :) சிந்துரச் செம்பொடி போல், திருமாலிருஞ் சோலை எங்கும், இந்திர கோபங்களே எழுந்தும் பறந்து இட்டனவால்....

இந்திர கோபம் என்னும் வண்ணத்துப் பூச்சி வகையினைச் சார்ந்தவை! சில பேரு தம்பலப் பூச்சி-ன்னும் சொல்லுவாய்ங்க!
எது என்ன இந்திர கோபம்? ரொம்ப கோவமா இருக்குமா? ஹிஹி! லவ்வுல ஏதுங்க கோவம்?

வண்ண வண்ண வானவில்லை இந்திர தனுசு என்று சொல்வது போல், வண்ண வண்ண வண்ணாத்திப் பூச்சியை இந்திர கோபம்-ன்னு சொல்லுறது வழக்கம்! - அவன் கோபாலன்! அவள் கோபிகை! அது "கோ"பம்!

திருமாலின் பலப்பல உருவொளியைக் காட்டுகின்றீர்! அவன் கிட்ட சொல்லி வைங்க! - திருமாலிருஞ் சோலை நம்பி, அவன் வரி வளையில் புகுந்து, வந்தி பற்றும் வழக்குளதே!
என் வளையல் எல்லாம் கழண்டு கழண்டு விழுது! எல்லாம் அவனால் தான்! என்னமோ பண்ணிட்டான் என்னை! என் வளை விழக் காரணமான அந்த மதுரைக்காரன் மேல் கேஸ் போடுவேன்! = வழக்கு உளதே! :)

நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்,
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்,
ஏறு திரு உடையான், இன்று வந்து இவை கொள்ளும் கொலோ?

மந்தர மத்திலே மதுரமான வெள்ளமுதம் தந்தவன் அவன்!
பதிலுக்கு நானும் வெண்மையான வெண்ணையும், அக்கார அடிசிலும் அவனுக்குத் தருவேன்!
நூறு பானை வெண்ணையும், நூறு பானை சர்க்கரைப் பொங்கலும் அவனுக்கு நேர்ந்து வச்சேன்! ஒழுங்கு மரியாதையா வந்து வாங்கிக்கச் சொல்லுங்க! :)

இப்படி காதலர்களுக்குப் பறக்கும் பட்டாம்பூச்சிகளை, பாட்டிலே காட்டும் ஒரே தமிழ்க் கவிஞர் = கோதை!
காதல் இளவரசி கோதைப் பொண்ணு திருவடிகளே சரணம்!" :)


அப்பாடா...பட்டாம்பூச்சி பதிவு எழுதியாச்சு! அடுத்து மூனு பேருக்கு இந்த விருதைக் குடுத்துப் பதிவுக்கு அழைக்கனுமாமே! யார் அங்கே....?

1. இம்சை அரசி = வாம்மா தங்காச்சி! நீ இம்சை அரசின்னா, என் தோழீ காதல் அரசி! கோதை கூடவே சண்டை போட நீ தான் சரியான ஆளு! புது கல்யாணப் பொண்ணு :)

2. சுவாமி ஓம்கார் = சுவாமிகளைப் பற்றி அடியேன் என்ன சொல்ல? மந்திரம், யோகம் என்பதையெல்லாம் வறட்டு வேதாந்தமாக இல்லாமல்...திரட்டு வேதாந்தமாக, திரட்டி வேதாந்தமாகப் பேச முடியும் என்று வெற்றிகரமாகக் காட்டி வருபவர்!
சந்திராயன் வெற்றிக்கு ஜாதகம் கணித்தவர்! வாழ்க நீர் எம்மான்! உங்க கிட்ட கேட்க பல கேள்விகள் இருக்கு சுவாமி! புருவ மத்தியில் தோன்றிய பல கேள்விகள் :)

3. இலவசக் கொத்தனார் = பொருளாதாரப் பின்னடைவு ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது! இப்பல்லாம்....இலவசம் ரெம்ப கம்மி ஆயிருச்சி! :)
குறுக்கெழுத்துப் போட்டி மட்டும்-ன்னே ஆகிப் போச்சி! இவருக்கு விருது கொடுத்தாவது, நம்ம பழைய கொத்தனாரை இஸ்துக்கினு வருவோம்! We want the Old & Gold Kothanar :)

4. குமரன் = சூரியனுக்கு நான் எப்படிங்க டார்ச் லைட்டு அடிக்க முடியும்? இவருக்கு விருது கொடுத்தாலாச்சும், கோதைத் தமிழுக்கு இவரு பதில் விருது கொடுக்கிறாரா பார்ப்போம்! :)
தமிழமுதம் தரும் செஞ்சொற் கொண்டலே வருக!
எளியோன் தரும் பட்டாம்பூச்சி விருதினைப் பெறுக!

5. நா.கணேசன் = அன்னாரின் பன்முகத் தமிழைப் பருகாதவர்கள் உளரோ? நாசா முதல் நற்றமிழ் வரை...One of The Coolest Blog I ever know!


பட்டாம் பூச்சி பறக்கும் முறை:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

39 comments:

  1. //சிந்துரச் செம்பொடி போல்
    திருமாலிருஞ் சோலை எங்கும்,
    இந்திர கோபங்களே
    எழுந்தும் பறந்து இட்டனவால்//

    அருமை, அருமை. பட்டாம்பூச்சிப் பதிவை அமர்க்களப்படுத்திட்டீங்க :) விருது வாங்கியவர்களுக்கும் வழங்கியவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. :)

    வண்ணத்துப் பூச்சியை எங்கூரில் பாப்பாத்தி ன்னும் சொல்லுவாங்க, அந்த பெயர் காரணம் தெளியேது.

    ReplyDelete
  3. //கவிநயா said...
    இந்திர கோபங்களே
    எழுந்தும் பறந்து இட்டனவால்//

    அருமை, அருமை. பட்டாம்பூச்சிப் பதிவை அமர்க்களப்படுத்திட்டீங்க :)//

    அமர்க்களப்படுத்தியது ஆண்டாளும் பட்டாம்பூச்சியும்! நான் சிவனே-ன்னு இருக்கேன்! :)

    //விருது வாங்கியவர்களுக்கும் வழங்கியவருக்கும் வாழ்த்துகள்//

    ரிப்பீட்டே! :)

    ReplyDelete
  4. //கோவி.கண்ணன் said...
    :)
    வண்ணத்துப் பூச்சியை எங்கூரில் பாப்பாத்தி ன்னும் சொல்லுவாங்க, அந்த பெயர் காரணம் தெளியேது//

    ஹா ஹா ஹா!
    சின்ன வயசுல கொழுப்பு ஆயிருக்கும் அண்ணே உமக்கு! பட்டாம்பூச்சி மாதிரி அவங்களை அப்பவே சைட் அடிச்சிருக்கீங்க! உம்ம்ம்ம்ம்....

    ReplyDelete
  5. "Nee pattu pudavai katti kondal *pattu* poochigal motcham perum". Not pattam poochi!! :)
    - Sriram.

    ReplyDelete
  6. தல உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருதை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  7. இங்கேயும் உங்களுக்குத்துணையா தோழி வந்தாச்சா! படங்களோடு பதிவு ஜிவுனு பட்டாம்பூச்சியா பறக்குது ரவி!

    ReplyDelete
  8. மாதவிப்பந்தல்ல குருவிகள் தான் வரும்னு பாத்தா.. பட்டாம்பூச்சியும் வந்து உக்காந்தாச்சா.. :)ம்ம்..

    மாதவிப்பந்தல் மேல் பல் வண்ண பட்டாம்பூச்சி அமர்ந்தது காண்

    ReplyDelete
  9. //வண்ணத்துப் பூச்சியை எங்கூரில் பாப்பாத்தி ன்னும் சொல்லுவாங்க, அந்த பெயர் காரணம் தெளியேது.//

    "பாப்பாத்தி " மழைக் காலத்துல சிவப்பு நிறத்துல பஞ்சு போல திரியற பூச்சி வகை இல்லையா? எங்க ஊர்ல அதை தான் "பாப்பாத்தி" ன்னு சொல்வாங்க .

    பட்டாம்பூச்சி பதிவு வெகு அருமை. கே.ஆர்.எஸ் கருத்துல பதியற எல்லா விசயங்களோடும் அருமைப்பெண் ஆண்டாளை அழகாக நினைவு படுத்தி விடுவார் போல.ஆண்டாள் எனக்குப் பக்கத்து ஊர். அவள் பெருமை சொல்ல சொல்ல இனிக்காதோ?!

    ReplyDelete
  10. //Anonymous said...
    "Nee pattu pudavai katti kondal *pattu* poochigal motcham perum". Not pattam poochi!! :)//

    ஓ...நன்றி ஸ்ரீராம்! மாத்திருவோம்! :)

    பட்டுப் புடைவை-ன்னா பட்டுப் பூச்சிகள் தானே! ஏதோ மோட்சத்துக்குப் போனா சரி! :)

    ReplyDelete
  11. //கோபிநாத் said...
    தல உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருதை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)//

    மாப்பி கோபி! விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து, சரி!
    விருது கொடுத்த எனக்கு எதுக்கு வாழ்த்து மாப்பி? :))

    விருது வாங்குறதை விட, விருது கொடுக்கறது சந்தோசமா இருக்கு! :)

    ReplyDelete
  12. //ஷைலஜா said...
    இங்கேயும் உங்களுக்குத்துணையா தோழி வந்தாச்சா!//

    வாங்க ஷைல்ஸ் அக்கா..
    எனக்குத் துணையா தோழி எங்கே தான் வர மாட்டா? சண்டை போடன்னே வருவாளே! :)

    //படங்களோடு பதிவு ஜிவுனு பட்டாம்பூச்சியா பறக்குது ரவி!//

    ஆண்டாள் கையில் கிளி! கண்ணில் பட்டாம்பூச்சி! அதான் பறக்குது! :)

    ReplyDelete
  13. //Raghav said...//

    அகோ வாரும் பிள்ளாய்! :)
    எப்படி இருக்கீங்க ராகவ்? போன வருசம் பார்த்தது! :)

    //மாதவிப்பந்தல்ல குருவிகள் தான் வரும்னு பாத்தா.. பட்டாம்பூச்சியும் வந்து உக்காந்தாச்சா.. :)ம்ம்..//

    குருவியா? அது பல் கால் குயில் இனங்கள் கிடையாதா? :)
    சரி ஏதோ ஒன்னு! ஆனைச் சாத்தன், குருவி, குயில்! :)

    //மாதவிப்பந்தல் மேல் பல் வண்ண பட்டாம்பூச்சி அமர்ந்தது காண்//

    மாதவிப்பந்தல் மேல் பட்டாம்பூச்சி பறந்தது காண்-ன்னு சொல்லுங்க ராகவ்! காதலர்களுக்கு புண்ணியமாப் போவும்! :)

    ReplyDelete
  14. //மிஸஸ்.டவுட் said...
    "பாப்பாத்தி " மழைக் காலத்துல சிவப்பு நிறத்துல பஞ்சு போல திரியற பூச்சி வகை இல்லையா?//

    ஓ..தம்பலப் பூச்சி-யா! எங்கூர்ல அப்படித் தான் சொல்லுவாய்ங்க!

    //பட்டாம்பூச்சி பதிவு வெகு அருமை//

    நன்றி மிஸஸ்.டவுட்! :)

    //கே.ஆர்.எஸ் கருத்துல பதியற எல்லா விசயங்களோடும் அருமைப்பெண் ஆண்டாளை அழகாக நினைவு படுத்தி விடுவார் போல//

    ஆயிரம் சண்டை போட்டாலும் தோழியை விட்டுக் கொடுக்க முடியுமா?

    //ஆண்டாள் எனக்குப் பக்கத்து ஊர். அவள் பெருமை சொல்ல சொல்ல இனிக்காதோ?!//

    ஆகா! வில்லிபுத்தூருக்கு பக்கத்தூரா? திருவண்ணாமலையா? வத்திராயிருப்பா? ராஜபாளையமா?

    ReplyDelete
  15. கோரிக்கையை ஏத்துக்கிட்டு பதிவிட்டமைக்கு நன்றி. நன்றி. நன்றி.

    வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

    ஆக...ஆண்டளைத் தவிர வேறு எந்தக் கவிஞரும் வண்ணத்துப்பூச்சியைப் பத்தி எழுதலையே. எனக்கென்னவோ அவங்கள்ளாம் உண்மையிலேயே தமிழ்க்கவிஞர்களான்னு சந்தேகமா இருக்கு.

    ReplyDelete
  16. // தமிழ்ப் புலவர்கள் மனசு வைக்கணும்! அவிங்க யாரும் வைக்கலை போல இருக்கே! தமிழ்க் கடவுளான திருமாலையே தமிழ்க் கடவுள்-ன்னு பாடாத சில பின்னாள் புலவர்களா, பட்டாம் பூச்சிக்கு எல்லாம் மனசு இரங்கப் போறாங்க?" //

    அப்படித் தமிழ்ப்புலவர்கள் மனசு வெக்காமத்தான் அப்படிச் சொல்லாம இருந்தாங்கங்குறதுக்கு எதாச்சும் தரவு வெச்சிருப்பீங்க. எடுத்துச் சொன்னா தெரிஞ்சிக்கிறோம். அத்தோட.... முன்னாட் புலவர்களெல்லாம் திருமாலைத் தமிழ்க்கடவுள்னு பாடுன பாட்டுகளைக் கொடுத்தா படிச்சிப் பேரானந்தம் அடைஞ்சிருக்கிருவோம்.

    // "அது என்னமோ சரி தான்! சில பேரு ராஜாவுக்கு கூஜா தூக்க, வலிந்து போய் காதல் பாடல்களை எழுதுவாங்க! உலா, கலம்பகம்-ன்னு பின்னாளைய சிற்றிலக்கியம்! அதில் எல்லாம் செயற்கைக் காதல் தான்! //

    என் செய்வது? கோயில் மதிலொட்டி.... சுற்று வீடுகளில் சோற்றுப் பாத்தி வெட்டி....பாலும் நெய்யும் பெய்து கையொழுகத் தின்றுவிட்டு...உண்ணோம் உண்ணோம் என்று சொல்லும் நிலையில் பின்னாட் புலவர்கள் இருந்தனரோ என அறியோம். உண்டேன் உண்டேன் உண்டேன் என்று சொல்லி நெருக்குண்டேன்... தள்ளுண்டேன்... வயிறு சுறுக்குண்டேன்...சோறு மட்டும் உண்டிலேன் என்று வழுதி திருமணத்திலேயே பாடுகின்றவர்கள்...உலாவும் தென்றலைக் கூட்டி உலா பாடுவதில் வியப்பென்ன! கலங்கும் குடும்பத்திற்கு கலங்கரை விளக்காக கலம்பகம் பாடுவதில் வியப்பென்ன! அவளை நினைத்து வறியவர் குரலை இடிக்க வேண்டாம் என்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  17. //இந்திர உலகில் காணலாகும் வண்ண வண்ண ஜாலங்கள்! வண்ண வண்ண வானவில்லை இந்திர தனுசு என்று சொல்வது போல், வண்ண வண்ண வண்ணாத்திப் பூச்சியை இந்திர கோபம்-ன்னு சொல்லுறது வழக்கம்!
    அவன் கோபாலன்! அவள் கோபிகை! அது "கோ"பம்!//

    உண்மையிலேயே இந்தக் காரணத்துனால அதுக்குக் கோவம்னு பேரா? இல்ல.. இப்பிடியிருக்கலாம்னு நெனைக்கிறீங்களா?

    இந்தக் கோவத்தப் பத்தி வேறெந்தத் தமிழ்ப் புலவராச்சும் எழுதீருக்காங்களா? தெரிஞ்சிக்குறதுக்காகத்தான் கேக்குறேன். :-)

    ReplyDelete
  18. //G.Ragavan said...
    உண்மையிலேயே இந்தக் காரணத்துனால அதுக்குக் கோவம்னு பேரா? இல்ல.. இப்பிடியிருக்கலாம்னு நெனைக்கிறீங்களா?//

    அதையும் நீங்க தாங்க சொல்லணும்! :)

    //இந்தக் கோவத்தப் பத்தி வேறெந்தத் தமிழ்ப் புலவராச்சும் எழுதீருக்காங்களா? தெரிஞ்சிக்குறதுக்காகத்தான் கேக்குறேன். :-)//

    "கோவம்" பத்தி நீங்க எழுதலாம்ங்க! ஆனா "கோ"பம் பத்தி வேறெந்தத் தமிழ்ப் புலவராச்சும் எழுதீருக்காங்களா-ன்னு உங்களைப் போல பெரியவங்க தாங்க சொல்லி விளக்கணும்! சொல்லுங்க! அறிஞ்சிக்குறதுக்காகத் தான் கேக்குறேன்.:)

    ReplyDelete
  19. //G.Ragavan said...
    கோரிக்கையை ஏத்துக்கிட்டு பதிவிட்டமைக்கு நன்றி. நன்றி. நன்றி//

    ஓ அது கோரிக்கையா? நான் ஆணை-ன்னுல்ல நினைச்சேன் ராகவா? :)

    //வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும்//

    :)
    அந்தப் படத்தில் வந்த ஒரே நல்ல பாட்டு-ன்னு சொல்லலாமா?

    //ஆக...ஆண்டளைத் தவிர வேறு எந்தக் கவிஞரும் வண்ணத்துப்பூச்சியைப் பத்தி எழுதலையே. எனக்கென்னவோ அவங்கள்ளாம் உண்மையிலேயே தமிழ்க்கவிஞர்களான்னு சந்தேகமா இருக்கு//

    ஆகா! சந்தக் கவி படிக்கும் இந்தக் கவிக்கு மந்தச் சந்தேகம் வரலாமுங்களா? :)

    வண்ணத்துப்பூச்சியைப் பாடினா மட்டுமே தமிழ்க் கவிஞர்கள்!
    எல்லாக் கோயிலுக்கும் உருகி எழுதினாத் தான் பரந்த மனம் கொண்டவர்கள்-ன்னு எல்லாம் சட்டம் போட வண்ணத்துப்பூச்சிக்கும் பிடிக்காது! கவிதைக்கும் பிடிக்காது! எனக்கும் பிடிக்காது! :)

    ReplyDelete
  20. //G.Ragavan said...
    அத்தோட.... முன்னாட் புலவர்களெல்லாம் திருமாலைத் தமிழ்க்கடவுள்னு பாடுன பாட்டுகளைக் கொடுத்தா படிச்சிப் பேரானந்தம் அடைஞ்சிருக்கிருவோம்//

    "முன்னாள் புலவரான" தொல்காப்பியர் கொடுத்த பாட்டே போதும்-ன்னு நினைக்கிறேன்!

    போதாது, இன்னும் வேணும்-ன்னு கேக்கறத்துக்கு முன்னாடி, "முருகப் பெருமான் மட்டும் தான் தமிழ்க் கடவுள்"-ன்னு சொல்லுற பாட்டுகளை நீங்களும் கொடுத்தா, நாங்களும் படிச்சிப் பேரானந்தம் அடைஞ்சிருக்கிருவோம்-ல? :)

    எப்பமே ஆனந்தம் உங்களுக்கு மட்டும் தானா?
    அடுத்தவங்களுக்கும் கொஞ்சம் கொடுங்க! :)

    ReplyDelete
  21. //என் செய்வது? கோயில் மதிலொட்டி.... சுற்று வீடுகளில் சோற்றுப் பாத்தி வெட்டி....பாலும் நெய்யும் பெய்து கையொழுகத் தின்றுவிட்டு...உண்ணோம் உண்ணோம் என்று சொல்லும் நிலையில் பின்னாட் புலவர்கள் இருந்தனரோ என அறியோம்//

    மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்..."கூடி இருந்து" குளிர்ந்த கவிஞர்களும் உண்டல்லவா?
    உண்ணோம் என்று நோன்புக்குச் சொன்ன கவிஞர்கள், உண்போம், மற்றவர்க்கும் கொடுத்து உண்போம், என்று நோன்பு முடிந்த பின்னரும் வெளிப்படையாகவே சொல்வார்கள்!

    //உலாவும் தென்றலைக் கூட்டி உலா பாடுவதில் வியப்பென்ன! கலங்கும் குடும்பத்திற்கு கலங்கரை விளக்காக கலம்பகம் பாடுவதில் வியப்பென்ன!//

    ஏழு பெண்டுகளை வைத்து அந்தப்புரம் நடத்தும் மன்னன், கந்தப்புரம் வராது, சொந்தப்புரத்தில் உலா வருவதைப் பார்த்து, நல்ல இள மகளிரும், அரைக் கிழவனிடத்தில் மயங்கினார்கள்-ன்னு உலா பாடிய புலவர்கள் ரொம்பவே "தொண்டு" ஆற்றியவர்கள் தான்! :))

    //அவளை நினைத்து வறியவர் குரலை இடிக்க வேண்டாம் என்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்//

    அவளை நினைத்தால் வறியவர் தமக்கு ஐயமும் ஈகையும் ஆந்தனையும் கைகாட்டி, கூடி இருந்து குளிரத் தான் வரும்!

    செயற்கையான காதலுக்காக கண்ட கண்ட உலா பாடியவர்கள் மட்டுமே பதிவில் சொல்லப்பட்டது! மன்னன்-காதல்-உலா மட்டுமே சொல்லப் பட்டது!

    அதனால், அவலை நினைத்து ஆன்றோர் உரலையும் குரலையும் ஒரு சேர இடிக்க வேண்டாம் என்று தங்களையும் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்! :))

    ReplyDelete
  22. // //G.Ragavan said...
    கோரிக்கையை ஏத்துக்கிட்டு பதிவிட்டமைக்கு நன்றி. நன்றி. நன்றி//

    ஓ அது கோரிக்கையா? நான் ஆணை-ன்னுல்ல நினைச்சேன் ராகவா? :) //

    ஆணையா... ஆனையிட்டுப் படை நடத்தும் மன்னனல்லவே நான். கோரிக் கையேற்றுக் கொண்டு பதிவிட்டதாகவே நானறிகிறேன். மறுப்பீரோ!

    ////வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும்//

    :)
    அந்தப் படத்தில் வந்த ஒரே நல்ல பாட்டு-ன்னு சொல்லலாமா? //

    இல்ல... அந்தப் படத்துல எல்லாப் பாட்டுமே நல்ல பாட்டுகதான். டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டு கலக்கல். அதே மாதிரி வெத்தல மடிச்சிக் கொடுத்த பொம்பளையும் நல்ல பாட்டுத்தான். இன்னோரு பாட்டு கூட இருக்கே. என்ன பாட்டு அது?

    ReplyDelete
  23. //G.Ragavan said...
    மறுப்பீரோ!//

    ராகவன் சொல்லை மறுப்பேனோ? :)

    //இல்ல... அந்தப் படத்துல எல்லாப் பாட்டுமே நல்ல பாட்டுகதான். டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டு கலக்கல்//

    சூப்பர் கார் - பாட்டு பார்க்க நல்லா இருக்கும்! டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டும் அப்படியே! சின்னப் பையன்-ல்ல? வச்ச கண்ணு வாங்காம பாப்பேன்! :)

    //இன்னோரு பாட்டு கூட இருக்கே. என்ன பாட்டு அது?//

    சலாம் சடுகுடு!

    ReplyDelete
  24. // //இந்தக் கோவத்தப் பத்தி வேறெந்தத் தமிழ்ப் புலவராச்சும் எழுதீருக்காங்களா? தெரிஞ்சிக்குறதுக்காகத்தான் கேக்குறேன். :-)//

    "கோவம்" பத்தி நீங்க எழுதலாம்ங்க! ஆனா "கோ"பம் பத்தி வேறெந்தத் தமிழ்ப் புலவராச்சும் எழுதீருக்காங்களா-ன்னு உங்களைப் போல பெரியவங்க தாங்க சொல்லி விளக்கணும்! சொல்லுங்க! அறிஞ்சிக்குறதுக்காகத் தான் கேக்குறேன்.:) //

    அறியக் கேக்குறீங்க. ரொம்பப் பெரியவங்க நீங்க. அறியேன் அறியேன்னு சொல்ற எங்கிட்டக் கேக்குறீங்களே! இது முறையா? செந்தமிழ்ச் செல்வர் குமரன் இருக்காரு. அவரைக் கேளுங்க.

    // //G.Ragavan said...
    அத்தோட.... முன்னாட் புலவர்களெல்லாம் திருமாலைத் தமிழ்க்கடவுள்னு பாடுன பாட்டுகளைக் கொடுத்தா படிச்சிப் பேரானந்தம் அடைஞ்சிருக்கிருவோம்//

    "முன்னாள் புலவரான" தொல்காப்பியர் கொடுத்த பாட்டே போதும்-ன்னு நினைக்கிறேன்!

    போதாது, இன்னும் வேணும்-ன்னு கேக்கறத்துக்கு முன்னாடி, "முருகப் பெருமான் மட்டும் தான் தமிழ்க் கடவுள்"-ன்னு சொல்லுற பாட்டுகளை நீங்களும் கொடுத்தா, நாங்களும் படிச்சிப் பேரானந்தம் அடைஞ்சிருக்கிருவோம்-ல? :)

    எப்பமே ஆனந்தம் உங்களுக்கு மட்டும் தானா?
    அடுத்தவங்களுக்கும் கொஞ்சம் கொடுங்க! :) //

    யாருங்க அந்த முருகன். அவனைப் பத்தி நான் எதுவுமே சொல்லலையே! அவனப் பத்திப் பேச வேண்டிய அளவுக்குப் பெரியாளா என்ன? நானோ கேள்வியைக் கேக்குறேன். பதில் சொல்லாம.. என்னென்னவோ சொல்றீங்களே. :(

    ReplyDelete
  25. //G.Ragavan said...
    யாருங்க அந்த முருகன். அவனைப் பத்தி நான் எதுவுமே சொல்லலையே! அவனப் பத்திப் பேச வேண்டிய அளவுக்குப் பெரியாளா என்ன?//

    ஆமாம்ம்ம்ம்ம்ம்!
    என் முருகனை உங்களுக்குத் தெரியாதா என்ன?
    முருகனைப் பத்திப் பேச வேண்டிய அளவுக்கு பெரியாளு தான் அவன்! அவனைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

    //நானோ கேள்வியைக் கேக்குறேன். பதில் சொல்லாம.. என்னென்னவோ சொல்றீங்களே. :(//

    ரிப்பீட்டே! :)
    பதில் சொல்லு ராகவா!

    //அறியேன் அறியேன்னு சொல்ற எங்கிட்டக் கேக்குறீங்களே!//

    அரி ஏன்? அரி ஏன்? கேக்கறீங்களா? நீங்களா? சேச்சே! நான் நம்ப மாட்டேன்! :)

    //செந்தமிழ்ச் செல்வர் குமரன் இருக்காரு. அவரைக் கேளுங்க//

    அவரைக் கேட்டாலும், அவரு, அவரிலும் பெரிய, செழுந்தமிழ்ச் சைவச் செம்மல், உங்களைத் தான் கேட்கச் சொல்றாரு!
    குமரனிலும் பெரிய ராகவன்! சரி தானே குமரன்? :))

    ReplyDelete
  26. அந்தக் காலத் திரைப்படங்கள்ல ஆங்கிலத்துல பேசிட்டு அதையே அப்படியே தமிழ்லயும் பேசுவாங்க. நிறைய மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது; அதனால அப்படி செய்யுறாங்கன்னு சொல்லலாம். ஆனா இந்த பட்டாம்பூச்சி இடுகைகள்ல எல்லாம் தமிழ்ல சொல்லிட்டு அப்புறம் ஆங்கிலத்துல விதிகளைச் சொல்றீங்களே, ஏன்? நிறைய தமிழ்ப்பதிவர்களும் இந்த பட்டாம்பூச்சி இடுகைகளைப் படிக்கிறவங்களும் தமிழ் 'வரும்ம்ம்ம்ம் வராது' வகையினர் தான்ங்கறதால தானே?! :-)

    'விரைவுல' பட்டாம்பூச்சியை மத்தவங்ககிட்ட குடுக்க முயற்சி செய்றேன். :-)

    ReplyDelete
  27. //குமரன் (Kumaran) said...
    அந்தக் காலத் திரைப்படங்கள்ல ஆங்கிலத்துல பேசிட்டு அதையே அப்படியே தமிழ்லயும் பேசுவாங்க. நிறைய மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது; அதனால அப்படி செய்யுறாங்கன்னு சொல்லலாம்//

    இது எந்த சினிமா குமரன்?
    இதெல்லாம் நான் பார்த்தது கூட கெடையாதே! :)

    //ஆனா இந்த பட்டாம்பூச்சி இடுகைகள்ல எல்லாம் தமிழ்ல சொல்லிட்டு அப்புறம் ஆங்கிலத்துல விதிகளைச் சொல்றீங்களே, ஏன்?//

    தெரியாது! விதிகள் காப்பி & பேஸ்ட் ஃப்ரம் ஜிரா! ப்ளீஸ் ஆஸ்க் ஹிம்! :)

    //நிறைய தமிழ்ப்பதிவர்களும் இந்த பட்டாம்பூச்சி இடுகைகளைப் படிக்கிறவங்களும் தமிழ் 'வரும்ம்ம்ம்ம் வராது' வகையினர் தான்ங்கறதால தானே?! :-)//

    நாரதா, இன்று உமக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? :)
    சூடா பக்தி for dummies வந்துக்கிட்டு இருக்கு! அங்க வந்து வேணும்னா வச்சிக்கலாம்! :))

    //'விரைவுல' பட்டாம்பூச்சியை மத்தவங்ககிட்ட குடுக்க முயற்சி செய்றேன். :-)//

    பட்டாம்பூச்சிக்கு பந்தல்லயே இருந்தா பசிக்கும்! "ஹரி" அப் ப்ளீஸ்! :)

    ReplyDelete
  28. காலம் ஒருவரை எப்படி எல்லாம் மாற்றுகிறது? எங்கள் காமராசர் மாவட்டத்துப் பெண் என்று சொந்தம் கொண்டாடி அவள் கவிதைகளுக்குப் பொருளை ஒரு திங்கள் முழுவதும் தவறாமல் எழுதிய கை தான் இப்போது இரவிசங்கர் சொன்னது ஒளவையாரை என்று தவறாகப் புரிந்து கொண்டு அதற்கு மறுப்பு சொல்ல வேண்டி தன்னால் பலவாறாகப் போற்றப்பட்டவளையே பொய்யளாக்கி எழுதுகிறது! :-(

    ReplyDelete
  29. //குமரன் (Kumaran) said...
    இப்போது இரவிசங்கர் சொன்னது ஒளவையாரை என்று தவறாகப் புரிந்து கொண்டு அதற்கு மறுப்பு சொல்ல வேண்டி தன்னால் பலவாறாகப் போற்றப்பட்டவளையே பொய்யளாக்கி எழுதுகிறது! :-(//

    ஆகா!
    ஒளவையாரா? தமிழ்ப் பெரும் மூதாட்டி இங்க எங்கே வந்தாங்க? தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே-ன்னு பாடியவங்க இங்கே எங்கே வந்தாங்க?
    என்ன குமரன்.....சொல்றீங்க? புதசெவி!

    ReplyDelete
  30. //காலம் ஒருவரை எப்படி எல்லாம் மாற்றுகிறது? எங்கள் காமராசர் மாவட்டத்துப் பெண் என்று சொந்தம் கொண்டாடி அவள் கவிதைகளுக்குப் பொருளை ஒரு திங்கள் முழுவதும் தவறாமல் எழுதிய கை தான்//

    ஆகா! அப்படி எல்லாம் இல்லை குமரன்! ராகவன் அப்படிச் சொல்ல வரலை-ன்னே நினைக்கிறேன்! கோதையின் தமிழ் வரிகளான "உண்ணோம்" என்பதை ராகவன் எடுத்தாண்டதை வைத்தா அப்படிச் சொல்கிறீர்கள்? தமிழ்ச் சொற்களை வைத்து விளையாடுவது என்பது இயல்பு தானே! அதையெல்லாம் ரொம்ப பாராட்டக் கூடாது! அழகிய "சிங்கர்"-ன்னு கமல் சொல்லலையா? ஈசனுக்கு முக்கண் இல்லை! அரைக்கண்-ன்னு காளமேகம் பாடலையா? கோதை சுயம்வரப் பதிவில், பல திவ்யதேச பெருமாளை அடியேனே நையாண்டி பண்ணலையா? :)))))

    எலே ராகவா, அப்படியாச் சொன்ன?

    ReplyDelete
  31. விருதுக்கு நன்னி அண்ணா. இப்போ கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல். ஆணி அம்புட்டு அதிகமாப் போச்சு. This too will pass அப்படின்னு நினைச்சுக்கிட்டு காத்திருக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  32. //இலவசக்கொத்தனார் said...
    விருதுக்கு நன்னி அண்ணா. இப்போ கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல்.//

    அடக்கி வாசிங்க கொத்ஸ் அண்ணா! ஆனா வாசிக்காம இருந்துடாதீங்க! அப்பப்போ வாசிங்க! :)

    //This too will pass அப்படின்னு நினைச்சுக்கிட்டு காத்திருக்க வேண்டியதுதான்//

    yessu! this too will pass! let it pass...sooner...
    நிறைய பேரு வீடு மறுபடியும் கட்டி இருக்காங்களாமே! பொருளாதார முன்னடைவு துவங்கட்டும்! :)

    ReplyDelete
  33. //அடக்கி வாசிங்க கொத்ஸ் அண்ணா! ஆனா வாசிக்காம இருந்துடாதீங்க! அப்பப்போ வாசிங்க! :)//

    வழிமொழிகிறேன் :)ப்

    ReplyDelete
  34. //நாகை சிவா said...
    //அடக்கி வாசிங்க கொத்ஸ் அண்ணா! ஆனா வாசிக்காம இருந்துடாதீங்க! அப்பப்போ வாசிங்க! :)//

    வழிமொழிகிறேன் :)//

    பாவம் கொத்ஸ்! அவரை வாசிக்காம வுட மாட்டாரே இந்தப் புலி? :)

    ReplyDelete
  35. இந்திர கோபம் என்னும் பட்டாம்பூச்சி வேற. வண்ணாத்திப்பூச்சி தான்
    பாப்பாத்திப் பூச்சின்னு சொல்லுவோம் எங்க மருதையில. வெறும் மஞ்சள் வண்ணத்தில மட்டும் இருக்கும். தொட்டா ஒட்டிக்குமே அந்த மஞ்சள். எப்படியோ ஆண்டாள் ஒருத்திதான் பாடியிருக்கிறாள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ரவி.

    ReplyDelete
  36. மலையில் இறங்கிய மகளிர் மர நிழல் மற்றும்
    பளிக்குப் பாறையில் இளைப்பாறி துயில் கொள்ளுதல்
    கொவ்வை நோக்கிய வாய்களை இந்திரகோபம்
    கவ்வி நோக்கின என்றுகொல்....

    - கம்பராமாயணம் பால காண்டம் 14 சந்திரசயிலப் படலம்

    இந்திரகோபம் என்று தேடிய போது கிடைத்தது.

    ReplyDelete
  37. //குமரன் (Kumaran) said...
    - கம்பராமாயணம் பால காண்டம் 14 சந்திரசயிலப் படலம்
    இந்திரகோபம் என்று தேடிய போது கிடைத்தது//

    சூப்பர்! கம்பரும் பாடி இருக்காரா? வேற யாரும் பாடின மாதிரி தெரியலையே குமரன்! அதுவும் நான் சொல்லும் காதலர்க்கு பறக்கும் பட்டாம்பூச்சிகள் என்ற நோக்கில் யாருமே பாடலை! கம்பரும் உவமையாத் தான் பாடியிருக்காரு!

    பதிவை இடும் முன்னால், tamilnation.org தமிழ் இலக்கியப் பக்கத்தில் கூகுள் தேடல் செஞ்ச போது, அத்தனை இலக்கியத்திலும், கோதையின் பாடல் மட்டுமே வந்தது!

    வெறும் இந்திரகோபம் என்ற சொல்லை கூகுளில் தேடினால் கூட, அதிகம் இல்லையே! கம்பர் மட்டுமே வருகிறார்! சேரமான் பெருமாள் நாயனார் முழுச்சொல்லையும் பயன்படுத்தாமல், குறிப்பாக மட்டுமே வருகிறார்!

    ReplyDelete
  38. //வல்லிசிம்ஹன் said...
    இந்திர கோபம் என்னும் பட்டாம்பூச்சி வேற. வண்ணாத்திப்பூச்சி தான்
    பாப்பாத்திப் பூச்சின்னு சொல்லுவோம் எங்க மருதையில//

    வாங்க வல்லீம்மா, ஊருக்கு ஊரு பேரு மாத்திக்கும் போல பட்டாம்பூச்சி! :)

    //வெறும் மஞ்சள் வண்ணத்தில மட்டும் இருக்கும். தொட்டா ஒட்டிக்குமே அந்த மஞ்சள்//

    ஆமாம்! அப்பறம் கையில் வேற பிசுபிசு-ன்னு ஒரு மணம் வீசும் :)
    சின்ன வயசுல பிடிச்சி விளையாண்டது! :)

    //எப்படியோ ஆண்டாள் ஒருத்திதான் பாடியிருக்கிறாள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி//

    குமரன் கம்பர் பாட்டைக் காட்டி இருக்காரு பாருங்க!
    ஆனா அவரும் காதலர்க்கு பறப்பது போல் பாடலை! வேற யாரும் அந்தப் பேரைக் கூட பாடலை போல!

    ReplyDelete
  39. ரொம்ம்ம்ம்ம்ப தாமதமா வந்திருக்கிறேன் ரவி. ஆராய்ச்ச்ச்ச்சியே செஞ்சிருக்கிறீங்க
    மனமார்ந்த வாழ்த்துகள்.

    கொத்ஸ், குமரனுக்கு குடுத்தாச்சா
    இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்

    நன்னி ரவி
    இம்சை அரசி, சுவாமி ஓம்கார், நா. கணேசனுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP