Monday, March 16, 2009

பக்தி For Dummies - Part 2!

"ஆகா.....ஞான யோகம், கர்ம யோகம் செய்பவர்களைப் பிடிக்காதா?.....எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிஞ்சிக்கறவங்களைத் தான் பிடிக்குமா? ஹா ஹா ஹா! சும்மா விளையாட்டுக்குத் தானே சொல்கிறாய் கண்ணா?" முந்தைய பாகம் இங்கே!

"இல்லை அர்ச்சுனா! என்னை அறிந்து கொள்ளும் முன்னால், முதலில் உன்னை நீயே அறிந்து கொள்ளவே ஞான-கர்ம யோகங்கள்! ஆனால் அதை மட்டுமே பிடித்துக் கொண்டார்கள்! என்னை விட்டு விட்டார்கள்! இப்படிப்பட்டவர்களை எனக்குப் பிடிக்காது அருச்சுனா!"

"ஏன் கண்ணா?"

"கர்மா பண்ணுகிறேன், கர்மா பண்ணுகிறேன் என்று கர்மாவிலேயே ஊறிப் போய் விட்டார்கள்! குளிரைப் போக்கத் தானே எரியும் விறகுக் கட்டை? அதை இறுக்கி அணைத்துக் கொண்டால் என்ன ஆகும்? அதே தான் இவர்களுக்கும் ஆகிப் போனது!
ஒரு கட்டத்தில் ஆண்டவனே முன்னால் வந்து நின்றாலும், நீ ஆகமப் பிரகாரம் வந்திருக்கிறாயா? என்று கேட்கும் அளவுக்கு ஆச்சார போதை தலைக்கேறி விட்டது!"

"ஆகா! உண்மையாகவா கண்ணா???"

"* பிருகு மகரிஷி = கர்மா எல்லாத்தையும் ஒன்னு விடாமல் செய்த யோகி தானே? ஆனால் அவர் தான் திருமகள் வாழும் திருமார்பைக் காலால் எட்டி உதைத்தார்! அவர் செய்த கர்மாவின் மதிப்பு அவ்வளவு தான்!
* துர்வாச மகரிஷி = ஞான-கர்ம யோகம் செய்த ஆச்சார சீலர் தானே? ஆனால் அவர் தான், என் பரம பக்தனான அம்பரீஷனை, விரதம் முடிக்க விடாமல், துன்புறுத்தினார்! அவர் செய்த கர்மாவின் மதிப்பும் அவ்வளவு தான்!

ஞான-கர்ம யோகம் தன்னை மட்டுமே காட்டும்! என்னைக் காட்டாது! ஆத்ம சாஷாத்காரம் மட்டுமே தரும்! பரமாத்ம சாஷாத்காரம் தராது!"

"உம்ம்ம்...புரிகிறது! அப்போது இவர்களின் நிலை? இவர்கள் என்ன ஆவார்கள் கிருஷ்ணா?"

"’தானே எல்லாம்’ என்று ஆகி விடுவார்கள்! தமது கர்மாவே எல்லாம், தமது ஆச்சாரமே எல்லாம் என்று ஆகி விடுவார்கள்...துர்வாசர், பிருகுவைப் போலே!"

"ஆகா! அப்போ யாரைத் தான் உனக்குப் பிடிக்கும் கண்ணா?"

"இவர்களை எல்லாம் விட, என்னையே நினைந்து, காதலாகி, கசிந்து கண்ணீர் மல்குபவன் எவனோ.....அவனே பக்தன்!
அவனே சிறப்பானவன்! அவனே எனக்குப் பிடித்தமானவன்! இதுவே என் கருத்து அருச்சுனா!"
யோகினாம் அபி சர்வேசாம், மத் கதேன அந்தர் ஆத்மனா
ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம், சமே யுக்த தமோ மதா:
6:47

"அப்படியா?"

"ஆமாம்! குகன் என்ன கர்மா செய்தான்? சபரி என்ன செய்தாள்? அனுமன் என்ன செய்தான்? வீடணன் என்ன செய்தான்? விதுரர் என்ன செய்தார்?
யாரை எல்லாம் நான் தழுவி அணைத்திருக்கேன் என்று யோசித்துப் பார்த்தால் உனக்கே தெரிந்து விடும் அர்ச்சுனா!"என்னிடம் நான்கு வகையான மக்கள் வருகிறார்கள் அர்ச்சுனா! எதற்கு வருகிறார்கள் தெரியுமா?
சதுர் விதா பஜந்தே மாம்
ஜனா சுக்ருதோ அர்ஜூனா
ஆர்த்தோ, ஜிக்ஞாசுர், அர்தார்த்தி
ஞானீ ச பர தர்சப 7.16


* பலர் துக்கம் காரணமாக என்னை வேண்டி வருகிறார்கள்! = ஆர்த்தி!
அனுபவிக்க முடியலையே! கஷ்டப் படுறேனே! கண்ணா! காப்பாத்து! உன் மலைக்கு நடந்தே வரேன்! விரதம் இருக்கேன்! காவடி எடுக்கிறேன்! உண்டியல்ல துணி முடிஞ்சி ஒத்தை ரூவா போடுறேன் முருகா!

* பலர் சந்தோஷம் வேணும் என்பதற்காக என்னை வேண்டுகிறார்கள்! = அர்த்த ஆர்த்தி!
செல்வம், புகழ், போகம் எல்லாம் இன்னும் கொடுப்பா! இதை விடச் சிறப்பா என்னை வச்சிக்கோ! உன் உண்டியல்-ல ஆயிரத்தி ஒன்னாப் போடுறேன் பெருமாளே!

* பலர் ஆராய்ச்சி செய்ய ஆசைப்பட்டு வருபவர்கள்! = ஜிக்ஞாசு!
அது என்ன ஜீவாத்மா-பரமாத்மா? வேதம் அதைப் பத்தி என்ன சொல்லுது? ஞான பரமா யோசிப்போம்! பிரம்மத்தை அறிந்து கொள்வோம்! மாயை போயிடும்!
அப்பாடா, ஒன்னாயிட்டா, பிறவித் தொல்லை இருக்காது! ஜீவன் முக்தி! மோட்சம்!

* ஒரு சிலர் மட்டும், என்னிடம் என்னையே கேட்டு வருபவர்கள் = பக்தர்கள்! அடியவர்கள்!
இவர்களுக்கு வேண்டுவது எல்லாம் கண்ணனே! கண்ணனின் சிரிப்பே!

மோட்சம் கொடுக்கறேன், வருகிறாயா? என்று கேட்டேன்! வேண்டாம் என்று சொல்லி விட்டான் ஆஞ்சநேயன்!
தனக்குப் பாவம் வருதா? பரவாயில்லை! எங்கள் காலடி மண்ணைக் கண்ணன் தலைக்குப் பூசுங்கள்! கண்ணன் தலைவலி தீர்ந்தால் போதும் என்று சொல்லி விட்டார்கள் மாட்டுக்காரப் பெண்கள்!

என்னை அன்றி அவர்களுக்கு வேறு கேட்கக் கூடத் தெரியாது! இவர்கள் தான் உண்மையான ஞானிகள்! ஞான பரமாகப் பேசுபவன் ஞானி அல்லன்! எம்பெருமான் திருமுக உல்லாசமே தன் உல்லாசம் என்று இருப்பவன்! அவனே ஞானி!
அவனை மூட பக்தன் என்று சிலர் சொல்லலாம்! இல்லை! அவனே ஞானி!
அவனே எனக்குப் ப்ரியமானவன்!

தேசாம் ஞானி நித்ய யுக்தா, ஏக பக்திர் விசிஷ்யதே
ப்ரியோ ஹி ஞானினோ அதி அர்த்தம், அகம் சச மமப் ப்ரியஹ! 7.17

அவர்களுக்கு நானும் ஏதாச்சும் திருப்பிச் செய்யணும்-ன்னு பார்க்கிறேன்! முடியவில்லை அர்ச்சுனா! அவர்கள் என் மீது வைத்த காதலில், பாதியைக் கூட என்னால் திரும்பத் தர முடியவில்லை! நானே விக்கித்துப் போய் விடுகிறேன் அருச்சுனா!
என்ன சொல்வது? அதான் "மம ப்ரியஹ, மம ப்ரியஹ" - "எனக்குப் பிடித்தமானவர்கள், எனக்குப் பிடித்தமானவர்கள்" என்று கீதையில் சொல்லிச் சொல்லி, நானே மாய்ந்து போகிறேன்!இனி...நம்மில் பலரும் நன்கறிந்த ஒரு குரு, அவர் சீடர்களுடன் உரையாடுவதை, எழுத்து வடிவில் தருகிறேன்! இவர் யார் என்று பின்னால் பார்க்கலாம்!

"குருவே, இறைவனைச் சென்று அடைய, "நான்".."நான்".."நான்"... ஏதாச்சும் ஞானம்/கர்மா/யோகம்-ன்னு செய்யணுமா?

"செஞ்சி கிழிச்ச போ! கர்ம யோகம் தெரியுமா?"

"ஓ தெரியுமே"

"என்ன தெரியும்?"

"கீதையில இருக்கே!"

ஹிஹி! அதான் தெரியும்! ஒரு மணி நேரம் லெக்சர் பண்ணத் தெரியும்! பத்து கட்டுரை போடத் தெரியும்! கர்ம யோகத்தில் இரு பார்ப்போம்! ஆஆஆங்! அது தெரியாது! :)
குடும்பத்தில் இருந்து கொண்டே இருப்பது தானே கர்ம யோகம்? சுக-துக்கே சமே க்ருத்வா, லாப-அலாப, ஜய-அஜயெள-ன்னு இரேன் பார்ப்போம்! ஆஆஆங்! அது ரொம்ப கஷ்டம்! :)

கர்மாவைப் பற்றி ஏதாச்சும் சொன்னாலே, கோவம் மூக்கு மேல பொத்துக்கிட்டு வருது! பக்தி மட்டுமே போதும்-ன்னு யாரோ சொன்னதைக் கேட்டு, ஐயோ காது புளிச்சிப் போச்சே-ன்னு அங்கலாய்க்கத் தெரிகிறது! அப்புறம் என்ன சமே க்ருத்வா? சமமாகப் பாவிக்கற மனப்பான்மை? அப்பறம் என்ன பெருசா கர்ம யோகம்? :)

கர்மா உன்னைக் காப்பாற்றுமா? = காப்பாற்றாது!

மொதல்ல நல்ல பூநூல் கிடையாது! யாரோ நூல் கண்டில் இருந்து அறுத்துக் கொடுத்தார்கள்! போட்டுக் கொண்டாகி விட்டது!
நல்ல தண்ணீர் கிடையாது! குழாயில் இருந்து பிடிச்சி வச்சி கர்மா செய்கிறோம்!
நல்ல அக்னி கிடையாது! அவனவன் வத்திக்குச்சி வச்சி ஏத்துறான்!
செய்து வைக்க நல்ல ஆள் கிடையாது!
அப்படியே ஆள் கிடைச்சாலும், மந்திரம் நம்ம வாயில் நுழையாது!
அப்படியே நுழைஞ்சாலும் அது அன்னிக்கு மட்டும் தான்! மற்ற நாளில் எல்லாம் நேரம் கிடையாது!

இப்படி ஆயிரம் லோபம்! = மந்திர லோபம், கிரியா லோபம், திரவிய லோபம், நியம லோபம்! அப்பறம் என்ன பெருசா நீ கர்மா பண்றது? = கர்மா உன்னைக் காப்பாற்றாது!

நீ இன்னிக்கி செய்யற கர்மா, உருப்படாத கர்மா!
விட்டுடக் கூடாதே என்பதற்காக ஏதோ காமா சோமா-ன்னு கர்மா செய்கிறோம்!
அப்போ, செய்யும் கர்மாவுக்குப் பலனில்லையா என்றால், அதுக்கும் பக்தி தான் வேண்டி இருக்கு! அவன் மானசீக அன்பு வேண்டி இருக்கு!

மந்த்ர ஹீனம், க்ரியா ஹீனம், பக்தி ஹீனம் ஜனார்த்தனா
யத் பூஜிதம் மயம் தேவம், பரிபூர்ணம் ததஸ்து மே!

ஏதோ ஒப்புக்கு, காமா-சோமா-ன்னு கர்மாவைப் பண்ணிப்புட்டேன்! ஆனால் மார்க்கை நீ பார்த்து போடும்மா அம்பிகே, நீ பார்த்து போடுப்பா ஈஸ்வரா-ன்னு, கர்மாவிலும் பக்தி தான் வேண்டி இருக்கு!

உண்மை இப்படி இருக்க, என்ன பெருசா உனக்கு கர்மாவின் மேல் பிடிப்பு வேண்டிக் கிடக்கு?
அந்தக் கர்மாவை மீறினதாகச் சொல்லி, பெரிய பெரிய மகான்களான இராகவேந்திர சுவாமிகள், திருமழிசையாழ்வார், சித்தர்கள்-ன்னு எத்தனை பேரைத் தள்ளி வச்சோம்?
அப்படித் தள்ளி வைக்க வைச்சதெல்லாம் இந்தக் கர்மப் பிடிப்பு தானே? ஆச்சார மமதை தானே? தந்தை கர்மா மீறினார்-ன்னு சிறு குழந்தைகளைக் கூட தள்ளி வைத்தோமே! பாவம் பார்த்தோமா? :(


அடுத்து தியான யோகம்! :)

கர்ம யோகத்தில் மனசு நிலைச்சி, சித்த சுத்தி ஏற்படுத்தத் தானே தியான யோகம்?
ஆனா..."யோகா க்ளாஸ்-ல இந்த மாசம் மெம்பர்ஷிப் அவ்வளவா காணலையே! நஷ்டம் ஆயிருமோ"-ன்னு மனசு அங்கேயும் இங்கேயும் கிடந்து பறக்குது! :)
இதுல யமம், நியமம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், ஆசனம், தாரணம், சமாதி-ன்னு அடுக்கிக்கிட்டே போவலாம்! ஆனா ஒன்னும் வராது! :)

வேணும்னா வாசல்ல ஒரு போர்டு போட்டுக்கலாம்! ஒரு குட்டி 5 watt பல்ப்-ஐ போட்டுக்கிட்டு, அதையே ஒன்னரைக் கண்ணால உத்து உத்துப் பாக்கலாம்!
நமக்கும் ஆபீஸ்-ல இருக்குற பிக்கல் பிடுங்கல்-க்கு, இது கொஞ்சம் நிம்மதியா இருக்கு! வட்டம் வட்டமா, கருப்புச் சுழல் மாதிரி, ஏதோ ஒன்னு சுத்துதா? தானா தூக்கம் வந்துருது!
உடனே நமக்கு சமாதி நிலை வந்துருச்சி-ன்னு யோகா க்ளாஸ் மாஸ்டர் சொல்லீருவாரு! :)

படுத்துக்கிட்டு தூங்கினா தூக்கம்! உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி! :)அடுத்து ஞான யோகம்! :)

இப்பல்லாம் ஈஸ்வரோஹம்! ஈஸ்வரோஹம்!-ன்னு சொல்லுறது கொஞ்சம் ஃபேஷனாப் போயிருச்சி! கேட்டா, அதான் ஞான யோகமாம்! அஹம் பிரம்மாஸ்மி! நான் கடவுள்! நான் மட்டுமே கடவுள்! :)
இரண்யகசிபு கூட, தன்னைத் தானே அஹம் பிரம்மாஸ்மி-ன்னு தான் சொல்லிக்கிட்டு திரிஞ்சான்! :)

அது வேற விஷயம்-ப்பா!
பிரம்ம பூதனாய், ஆத்ம சொரூபத்தை உணர்ந்து, நான் பிராணன் இல்லை! நான் சரீரம் இல்லை! நான் உலகம் இல்லை!-ன்னு உணர்ந்து கொள்வது தான் ஞான யோகம்!
அதெல்லாம் ஒன்னுமே இல்லாம, அஹம் பிரம்மாஸ்மி-ன்னு நீ எதுக்கு ராசா கூவிக்கிட்டு இருக்கே?-ன்னு கேட்டா, அவனுக்குக் கோவம் தான் வருது! :)

ந புண்யம்! ந பாபம்! ந சௌக்யம்! ந துக்கம்!
ந மந்த்ரோ! ந தீர்த்தம்! ந வேதா! ந யக்ஞம்!-
ன்னு ஆதி சங்கரர் சொன்னது!
வேதமும் அவர் இல்லையாம்! யக்ஞமும் அவர் இல்லையாம்! - அச்சச்சோ.....நாஸ்திகமாவா பேசுறாரு பகவத்பாதர்? :) இல்லை! "உணர்ந்து" பேசுகிறார்!

பகவான் ரமணர் சொல்கிறார்! = நான் பிராணன் இல்லை! நான் சரீரம் இல்லை-ன்னு உணர்ந்து கொள்வதோட முடிஞ்சு போச்சா? சரி, ஆத்மா-வை உணர்ந்து கொண்டாய்! அடுத்து பரமாத்மாவை உணர வேண்டாமா?

இப்படிக் கேட்டா, நானே பரமாத்மா!-ன்னு சொல்றான்! அதான் ஜீவாத்மா, பரமாத்மா கூட மிக்ஸ் ஆயிருது-ன்னு வேதமே சொல்லியிருக்கே-ன்னு எடுத்து விடறான்! :)

சரிங்க சார், பிராணன் நான் இல்லை! சரீரம் நான் இல்லை-ன்னு சொல்றீங்களே...உங்க சரீர அபிமானம் போயிடுச்சான்னு பார்த்தா.....
சில்க்கு ஜிப்பா, மயில் கண் ஜரிகை வேஷ்டி, லண்டனில் இருக்கும் பிள்ளை வாங்கிக் கொடுத்த கால்வின் க்ளீய்ன் சென்ட்டு! இதெல்லாம் அடிச்சிக்கிட்டு, லெக்சர் கொடுக்கறாங்க! = கீதா சாரம்! :)

அதை நோட்ஸ் வேற எடுத்துக்கிட்டு போவாங்க சிஷ்ய கோடிகள் பல பேரு! இதையெல்லாம், இறைவன், அதே ஹாலில், மெளன சாட்சியாய் பார்த்துக்கிட்டு, சிரியோ சிரி-ன்னு சிரிக்கிறானாம்! அப்பர் சுவாமிகள் சொல்றாரு!
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு, நக்கு நிற்பார், அவர் தம்மை நாணியே! :)

காயமே இது பொய்யடா! காசு மட்டும் மெய்யடா-ன்னு பாடும் பிச்சைக்காரன் இதுக்கு எவ்வளவோ தேவலாம்! மெய்யில் வாழ்க்கையை, மெய் எனக் கொள்ளும், இவ்வையம் தன்னோடு கூடுவதில்லையாம்-ன்னு ஆழ்வார் பாடின ஞானம், இந்தப் பிச்சைக்காரனுக்கு வந்து விட்டதே! சிறப்பல்லவா! இது தான் மெய்யான ஞான யோகம்!


ஞானம், கர்மா-ன்னு ஆரம்பிப்பதே, "அவனை அவாவும்" பக்தி நிலைக்கு வருவதற்குத் தான்! என்ன தான் வேதங்களில் ஆரம்பித்தாலும்...இறுதியில் பாசுரப் பதிகங்களுக்கு வந்து தான் ஆக வேண்டும்! = ஏன்? முன்பு சொன்ன அதே காரணம் தான்!

* ஞானம்/கர்மா = அடிவாரம் வரை மட்டுமே இட்டுச் செல்லும்!
* பக்தியே மலை ஏற்றி விடும்! தரிசனம் தரும்!


"தன்" ஞானம், "தன்" கர்மா, "தன்" பக்தி என்ற "தன்னை" நீக்கி...
தொண்டர் குலம், அடியார் குலம் என்று ஆக்குவது பக்தி மட்டுமே!


வெறுமனே ஞான/கர்ம ஆட்கள் பலரை அன்றாட வாழ்க்கையில் பாருங்கள்! நல்ல ஆன்மீகத்தில்/குணானுபவத்தில், அவர்களால் ஒரு குழுவாகவே இயங்க முடியாது! அடியவர்கள் என்று அனைவரோடும் கலக்க முடியாது! "தான்", "தான்" என்ற ஆத்ம சாஷாத்காரம் மட்டுமே அவர்களிடம் தொனிக்கும்! பரமாத்ம சாஷாத்காரம் தொனிக்கவே தொனிக்காது!

தனக்குப் பிடிக்காதவர்கள் வீட்டில் அம்பாள் பூசை-ன்னா அவர்களால் கலந்து கொள்ள முடியாது! "தன் அம்பாள் தானே அங்கும் இருக்கிறாள்?" என்று தோன்ற விடாத படிக்கு, ஆத்ம சாஷாத்காரமே தளும்பி நிற்கும்! இது தான் ஞான/கர்ம யோகத்தால் கூடவே வரும் ஆபத்து! டேஞ்சர்! :)


"அப்போ என்ன தான் வழி?
ஞான/கர்ம மார்க்கங்கள் எல்லாம் வெறும் ஆத்ம அனுபவத்துக்கு மட்டுமே-ன்னு சொல்லிட்ட கண்ணா! சரியாத் தான் இருக்கு! அப்போ கடைத்தேற என்ன தான் வழி?"

":)))"

"எதுக்கு இந்த மயக்கும் சிரிப்பு? சாஸ்திரம் வேற கை கொடுக்காது-ன்னு சொல்லிட்டியே! ஆனா வழியைச் சொல்ல மாட்டேங்குறியே?"

"சாத்திரம் பொய்-ன்னு நான் சொல்லலையே! சாத்திரம் சத்தியம் தான்! மறைகள் சத்தியம் தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனா நீ லாயக்கு இல்லையே!"

"ஆகா! நான் லாயக்கு இல்லையா? என்ன கண்ணா, இப்பிடிச் சொல்லிட்ட?"

"ந தர்ம நிஷ்டோஸ்மி, நச் ஆத்ம வேதி
ந பக்திமான், த்வத் சரணார விந்தே
அகிஞ்சனக: அனன்யகதி:!"


"சுத்தமாப் புரியலை கண்ணா! நல்ல தமிழே எனக்கு ததி-கின-தோம்! இதுல தஸ்ஸூ புஸ்ஸூ-ன்னு சொல்லுறியே?"

"நோற்ற நோன்பிலேன் = கர்ம யோகம் இல்லேன்!
நுண்ணறிவு ஒன்றிலேன் = ஞான யோகம் இல்லேன்!
ஒன்றும் ஆற்ற கின்றிலேன் = தியான யோகம் இல்லேன்!
அகலகில்லேன் = அகல மாட்டேன்!
*புகல் ஒன்று இல்லா* அடியேன், புகுந்தேனே
!"

நானு எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிந்து கொண்டால், இன்னிக்கே மோட்சம்!" :))

(பக்தி For Dummies...தொடரும்.....)

28 comments:

 1. அறிவே தெய்வம்9:41 PM, March 16, 2009

  \\* பலர் துக்கம் காரணமாக என்னை வேண்டி வருகிறார்கள்! = ஆர்த்தி!
  அனுபவிக்க முடியலையே! கஷ்டப் படுறேனே! கண்ணா! காப்பாத்து! உன் மலைக்கு நடந்தே வரேன்! விரதம் இருக்கேன்! காவடி எடுக்கிறேன்! உண்டியல்ல துணி முடிஞ்சி ஒத்தை ரூவா போடுறேன் முருகா!

  * பலர் சந்தோஷம் வேணும் என்பதற்காக என்னை வேண்டுகிறார்கள்! = அர்த்த ஆர்த்தி!
  செல்வம், புகழ், போகம் எல்லாம் இன்னும் கொடுப்பா! இதை விடச் சிறப்பா என்னை வச்சிக்கோ! உன் உண்டியல்-ல ஆயிரத்தி ஒன்னாப் போடுறேன் பெருமாளே!

  * பலர் ஆராய்ச்சி செய்ய ஆசைப்பட்டு வருபவர்கள்! = ஜிக்ஞாசு!
  அது என்ன ஜீவாத்மா-பரமாத்மா? வேதம் அதைப் பத்தி என்ன சொல்லுது? ஞான பரமா யோசிப்போம்! பிரம்மத்தை அறிந்து கொள்வோம்! மாயை போயிடும்!
  அப்பாடா, ஒன்னாயிட்டா, பிறவித் தொல்லை இருக்காது! ஜீவன் முக்தி! மோட்சம்!

  * ஒரு சிலர் மட்டும், என்னிடம் என்னையே கேட்டு வருபவர்கள் = பக்தர்கள்! அடியவர்கள்!\\

  இந்த பொதுவான சிந்தனையை
  யாரும் பார்ப்பதில்லை. உணர்வதில்லை.

  \\குடும்பத்தில் இருந்து கொண்டே இருப்பது தானே கர்ம யோகம்\\

  இது பரவ வேண்டும். குடும்பத்திலும்
  சமுதாயத்திலும் அமைதி நிலவும். வேறென்ன வேண்டும்?

  \\பிரம்ம பூதனாய், ஆத்ம சொரூபத்தை உணர்ந்து, நான் பிராணன் இல்லை! நான் சரீரம் இல்லை! நான் உலகம் இல்லை!-ன்னு உணர்ந்து கொள்வது தான் ஞான யோகம்!\\

  \\"சாத்திரம் பொய்-ன்னு நான் சொல்லலையே! சாத்திரம் சத்தியம் தான்! மறைகள் சத்தியம் தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனா நீ லாயக்கு இல்லையே\\

  இதை ஆக்கபூர்வமாக உணர்ந்து, தகுதியாக்கி கொள்ளுதலே நன்மை தரும்.


  கடினமான வரிகளுக்கு மிகமிக எளிமையாக உரை. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

  ReplyDelete
 2. //அறிவே தெய்வம் said...
  இந்த பொதுவான சிந்தனையை
  யாரும் பார்ப்பதில்லை. உணர்வதில்லை//

  ஆமாங்க! பகவானின் திருவுள்ள உகப்பைச் சிந்திக்க நேரமில்லாம, கர்மப் பிடிப்பிலேயே இருந்தால் இப்படித் தான்! :))

  //
  \\குடும்பத்தில் இருந்து கொண்டே இருப்பது தானே கர்ம யோகம்\\

  இது பரவ வேண்டும். குடும்பத்திலும்
  சமுதாயத்திலும் அமைதி நிலவும்//

  ததாஸ்து! ஆமென்! அப்படியே ஆகட்டும்! நல் வார்த்தைகள் பலிக்கட்டும்! குடும்பம் தான் தர்மத்துக்கு அச்சாணி!

  //இதை ஆக்கபூர்வமாக உணர்ந்து, தகுதியாக்கி கொள்ளுதலே நன்மை தரும்//

  ஆக்கப் பூர்வமாகப் புரிந்து கொண்டமைக்கு நன்றிங்க!

  //கடினமான வரிகளுக்கு மிகமிக எளிமையாக உரை. வாழ்த்துக்கள். தொடருங்கள்//

  அவசியம் தொடர்கிறேன்!
  ஆனானப்பட்ட எம்பெருமானே, "செளலப்பியம்" என்று எளிமையா இறங்கி வராரு!
  ஒன்னுமில்லாத நான், மிக மிக எளிமையா, லோக்கலா, எல்லாருக்கும் சென்றடைவது போல் எழுதினா ஒன்னும் குறைஞ்சு போயிற மாட்டேன்! தங்கள் வாழ்த்துக்கு நன்றி! எளிமை தொடரும்! :)

  ReplyDelete
 3. சிறந்த கருத்துகள்

  //வேணும்னா வாசல்ல ஒரு போர்டு போட்டுக்கலாம்! ஒரு குட்டி 5watt பல்ப்-ஐ போட்டுக்கிட்டு, அதையே ஒன்னரைக் கண்ணால உத்து உத்துப் பாக்கலாம்!
  நமக்கும் ஆபீஸ்-ல இருக்குற பிக்கல் பிடுங்கல்-க்கு, இது கொஞ்சம் நிம்மதியா இருக்கு! வட்டம் வட்டமா, கருப்புச் சுழல் மாதிரி ஏதோ ஒன்னு, சுத்துற சுத்துல தானா தூக்கம் வந்துருது!
  உடனே நமக்கு சமாதி நிலை வந்துருச்சி-ன்னு யோகா க்ளாஸ் மாஸ்டர் சொல்லீருவாரு! :) //

  பல இடத்திலே இப்படித்தான் கற்று கொடுக்கிறார்கள் :)

  \\குடும்பத்தில் இருந்து கொண்டே இருப்பது தானே கர்ம யோகம்\\
  //இது பரவ வேண்டும். குடும்பத்திலும்
  சமுதாயத்திலும் அமைதி நிலவும்//
  //ததாஸ்து! ஆமென்! அப்படியே ஆகட்டும்! நல் வார்த்தைகள் பலிக்கட்டும்! குடும்பம் தான் தர்மத்துக்கு அச்சாணி!//

  - ரிபிடு

  ஒரு சில இடங்களில் ப்ரம்மர்ச்சரியும் மேற் கொள்கிறார்களே, அவர்களை என்னவென்று சொல்வது :(

  ReplyDelete
 4. //"* பிருகு மகரிஷி = கர்மா எல்லாத்தையும் ஒன்னு விடாமல் செய்த யோகி தானே? ஆனால் அவர் தான் திருமகள் வாழும் திருமார்பைக் காலால் எட்டி உதைத்தார்! அவர் செய்த கர்மாவின் மதிப்பு அவ்வளவு தான்!
  * துர்வாச மகரிஷி = ஞான-கர்ம யோகம் செய்த ஆச்சார சீலர் தானே? ஆனால் அவர் தான், என் பரம பக்தனான அம்பரீஷனை, விரதம் முடிக்க விடாமல், துன்புறுத்தினார்! அவர் செய்த கர்மாவின் மதிப்பும் அவ்வளவு தான்!//

  இப்படியெல்லாம் முனிவர்களின் செயலுக்கு அநார்த்தம் கற்பித்தால் துவாரபாலகர்களுக்கு பிடிக்காமல் போய்விடும். அப்பறம் கம்சனாக பிறக்க கடவதுன்னு சாபம் விட்டுறுவாங்க. சாக்கிரதை !

  ReplyDelete
 5. //Logan said...
  சிறந்த கருத்துகள்//

  நன்றி லோகன்!

  //பல இடத்திலே இப்படித்தான் கற்று கொடுக்கிறார்கள் :)//

  ஹா ஹா ஹா! நானும் பார்த்து இருக்கேன்!

  //ஒரு சில இடங்களில் ப்ரம்மர்ச்சரியும் மேற் கொள்கிறார்களே, அவர்களை என்னவென்று சொல்வது :(//

  பிரம்மத்தை அறிவது பிரம்மச்சரியம்! தொடர்ந்து கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம் என்று தான் சாத்திரமும் சொல்கிறது!

  சிலர் பிரம்மத்திலேயே லயித்து பிரம்மச்சரியம் இருக்கிறார்கள்! வள்ளலார், பரமாச்சாரியார் போல! அவர்கள் நிலை வேறு! அவர்கள் பிரம்மச்சாரி என்று பெருமை பேசிக் கொள்ள மாட்டார்கள்! அது"வும்" ஒரு நிலை!

  ReplyDelete
 6. //கோவி.கண்ணன் said...
  இப்படியெல்லாம் முனிவர்களின் செயலுக்கு அநார்த்தம் கற்பித்தால் துவாரபாலகர்களுக்கு பிடிக்காமல் போய்விடும்//

  துவார பாலகர்களுக்கா?
  "ரிஷிகளுக்குப் பிடிக்காமல் போய்விடும்"-ன்னு சொல்ல வந்தீங்களாண்ணே?

  //அப்பறம் கம்சனாக பிறக்க கடவதுன்னு சாபம் விட்டுறுவாங்க. சாக்கிரதை !//

  ஹிஹி! சாபமா?
  கண்ணன் வாங்காத சாபங்களா? :)

  தன் காரியம் நடக்கலையே-ன்னு கொடுக்கறதுக்குப் பேரு சாபம் இல்லை! அதுக்குப் பேரு வேற! :)

  முனிவர்கள் கம்சனாகப் பிறக்க சாபம் விடல! சிசுபாலன்(சேய்ச்சிறுவன்), தந்தவக்த்ரன்(பல்நகத்தான்)-ஆகப் பிறக்கத் தான் பழித்தொழித்தார்கள்!

  மோட்ச நிலையில் இருந்த ஜய-விஜயர்கள், நமக்காக இறைவனோடு இறங்கி வரத் தயங்கினார்கள்! அந்தத் தன்னலத்தை பொதுநலமாக, இந்தச் சம்பவம் மூலம் மாற்றி விட்டான் இறைவன்!

  ஜய-விஜயர்கள் பெரிய தவறெல்லாம் ஒன்னும் பண்ணலை! தவறு செய்தது முனிவர்கள் தான்! இறைவன் சன்னிதியில், அடியார்களை வணங்காது, தனக்கும் இறைவனுக்கும் Direct Dealing என்ற இறுமாப்போடு நுழையப் பார்த்தார்கள்!

  ஜய-விஜயர்கள் என்னும் சக அடியார்களுக்கு ஒரு முறை வணக்கம் சொல்லத் தவறியவர்கள், பிற்பாடு அதே "அசுர ஜய-விஜயர்களான" இரண்யாட்சன்-இரண்யகசிபுக்கு....ஓம் இரண்யகசிபுவே நமஹ-ன்னு விழுந்து விழுந்து நமஸ்கரித்தார்கள்! உயிர் பயம் :)

  இறைவன், ரிஷிகளே ஆனாலும், செய்யும் தவறுக்கு, கழுவாய் எப்படி ஒன்னோடு ஒன்னு கோர்த்து விடுகிறான் என்பது தான் அதிசயம்! ஆச்சர்யம்! வியப்பு! :)

  ReplyDelete
 7. //வேணும்னா வாசல்ல ஒரு போர்டு போட்டுக்கலாம்! ஒரு குட்டி 5watt பல்ப்-ஐ போட்டுக்கிட்டு, அதையே ஒன்னரைக் கண்ணால உத்து உத்துப் பாக்கலாம்!//

  ஹா ஹா :)))

  இந்த முறை எனக்கே புரியற மாதிரி இருக்கு :) நன்றி கண்ணா.

  படங்களெல்லாம் அருமை - அதிலும் அந்த படிப்படியாய் இருக்கும் படமும், கடைசி படமும்.

  ReplyDelete
 8. //கவிநயா said...
  //வேணும்னா வாசல்ல ஒரு போர்டு போட்டுக்கலாம்! ஒரு குட்டி 5watt பல்ப்-ஐ போட்டுக்கிட்டு, அதையே ஒன்னரைக் கண்ணால உத்து உத்துப் பாக்கலாம்!//

  ஹா ஹா :)))//

  என்னக்கா! பதிவு முழுக்க ஹாஸ்யமா? :)
  இந்த முறை புரியனும்-ன்னு லைட் பண்ணிட்டேன்!

  //இந்த முறை எனக்கே புரியற மாதிரி இருக்கு :) நன்றி கண்ணா//

  ஆகா! அக்காவுக்குப் புரிவதும் பரிவதும் ஒரு விஷயமா? கற்பூரக் கிரகிப்பு ஆச்சே!

  //படங்களெல்லாம் அருமை - அதிலும் அந்த படிப்படியாய் இருக்கும் படமும், கடைசி படமும்//

  எனக்கு அந்தக் கருப்பைச் செல்வம் படம் ரொம்ப பிடிக்கும்-க்கா! தோன்றாத் துணை-ன்னு சொல்வாங்களே! நாம உலகில் தோன்றும் முன்னரே துணையாய் இருப்பதைக் காட்டுறா மாதிரியே இருக்கும், அந்தப் படம்!

  ReplyDelete
 9. \\logan-- ஒரு சில இடங்களில் ப்ரம்மர்ச்சரியும் மேற் கொள்கிறார்களே, அவர்களை என்னவென்று சொல்வது :(\\

  இக்காலத்திற்கு பொருத்தமில்லாதவர்கள். அவர்களின் உடல் ரீதியான பிரம்மச்சாரியம் சந்தேகத்துக்கு உரியதே..
  பலன் என்ன.. ? தலைகீழ்தான்.

  ReplyDelete
 10. //அறிவே தெய்வம் said...
  \\logan-- ஒரு சில இடங்களில் ப்ரம்மர்ச்சரியும் மேற் கொள்கிறார்களே, அவர்களை என்னவென்று சொல்வது :(\\

  இக்காலத்திற்கு பொருத்தமில்லாதவர்கள். அவர்களின் உடல் ரீதியான பிரம்மச்சாரியம் சந்தேகத்துக்கு உரியதே..
  பலன் என்ன.. ? தலை கீழ்தான்//

  இல்லீங்க அறிவே தெய்வம்!
  அப்படிப் பொதுப்படையாச் சொல்லீற முடியாது! பிரம்மச்சர்யம் என்பது உயர்ந்த விஷயம் தான்! நாமே நம்மை அறியாமல் பல முறை கடைப்பிடிக்கிறோம்!

  பிரம்மத்தை அறிவது பிரம்மச்சரியம்!
  வெறுமனே உடல் ரீதியான பிரம்மச்சரியம் என்னும் போது தான் பிரச்சனை! ஆனால் அதுவும் ஒரு வகை ஒழுக்கம் தான்! எக் காலத்துக்கும் பொருந்தும்! வள்ளலார் போன்றவர்கள் பிரம்மச்சரியத்தில் இல்லையா?

  தானே விழைந்து கொள்ளும் பிரம்மச்சரியம் தவறு அல்ல!
  அதையே ஸ்தாபனம் ஆக்கி, அறியா வயதில், கட்டாயப்படுத்தல் தான் தவறு!

  இன்றும் சில திருமடங்கள், கட்டாயப்படுத்தப்பட்ட பால சன்னியாசிகளைக் கொள்வதில்லை! குடும்பத்தில் இருந்து, நிறைவடைந்து, ஒப்புதல் பெற்று வருபவர்களையே துறவி-ஆச்சார்யராக ஏற்கிறார்கள்!

  ReplyDelete
 11. கடினமான கருத்துக்களை எளிதாக விளங்க வைப்பது போல் சொல்லி உள்ளீர்கள் கே.ஆர்.எஸ். நன்றி. அதுவும் ஆத்ம சாஷாத்காரம், பரமாத்ம சாஷாத்காரம் இது வரை அறியாத ஒன்று. கர்மயோகம் ஆத்ம சாஷாத்காரம் மட்டுமே கொடுக்கும் என்பது நீங்களாக சொன்னதா? இல்லை சாஸ்திரத்தில் உள்ளதா?

  ஆனால் சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.குறிப்பாக நான்கு விதமாக இறைவனை அணுகுபவர்களில் நாலாவதாக ஞானியைத் தான் ஸ்லோகத்தில் சொல்லி இருக்கு. அதை நீங்கள் அடியவர், பக்தர் என்று எப்படி மாற்றிச் சொல்லலாம்?

  தியான யோகம், ஞான யோகம் பற்றிச் சொன்னது சரி தான். ஆனால் கர்ம மார்க்கத்தில் நீங்கள் சொன்ன சில வார்த்தைகள் தேவை இல்லாத எள்ளல்கள். குறிப்பாக இப்போதெல்லாம் நல்ல தண்ணீர், நல்ல அக்னி, நல்ல பூனூல் கிடையாது என்பதை தவிர்த்து இருக்கலாம்.இப்போதும் அரணிக் கட்டையில் கடைந்து அக்னி உருவாக்குபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

  ஆனாலும் மிகவும் யோசிக்க வைத்த பதிவு. நன்றாக கோர்த்து சுய விசாரணை செய்ய வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அடுத்த பகுதி என்ன? எதற்கு ஒவ்வொரு முறையும் "லாயக்கில்லை என்று புரிந்து கொண்டால் மோட்சம்" என்றே முடிக்கிறீர்கள்? லாயக்கில்லை என்றால் தகுதியை வளர்த்துக்க வேண்டாமா? லாயக்கு இல்லாதவர்களுக்கு எப்படி மோட்சம் கிட்டும்? இது தான் ஒரே சந்தேகமா இருக்கு. ஆனால் போன பதிவிலும் விளக்கவில்லை.இந்தப் பதிவிலும் ஒன்றுமே சொல்லவில்லையே.என்ன சொல்ல வருகிறீர்கள் என்று யோசித்து யோசித்து பார்த்துவிட்டேன். புரியலை.

  ReplyDelete
 13. kannabiran, RAVI SHANKAR (KRS) s  \\அதையே ஸ்தாபனம் ஆக்கி, அறியா வயதில், கட்டாயப்படுத்தல் தான் தவறு!\\

  இதை மனதில் வைத்தே சொன்னேன்.

  \\பிரம்மத்தை அறிவது பிரம்மச்சரியம்\\

  பிரம்மச்சரியம் என்பது இக்காலத்தில்
  பொதுவாக உடல் ரீதியாகவே பயன்படுத்தப் படுகிறது.சந்தேகத்தைத்
  தவிர்க்க ’பிரம்மஞானம்’ என்ற வார்த்தை பொருத்தமாக இருக்குமா?

  ReplyDelete
 14. Anony,
  unga keLvigaL nyayamaanathe!
  Rendu naaLa ooril illa. Will reply when I return tomorrow.

  ReplyDelete
 15. கடினக் கருத்துக்களையும் கற்-சொல் இன்றி நற்-சொல் கொண்டும் சொல்ல முடியும் அல்லவா!

  solla mutinthathu inke

  ReplyDelete
 16. தெரியாமத்தான் கேட்கிறேன், மத்த இந்து சாமிங்க எல்லாம் தன்னை அடைய எந்த உபதேசமும்
  செஞ்சதில்லையா?

  ReplyDelete
 17. //தி. ரா. ச.(T.R.C.) said...
  கடினக் கருத்துக்களையும் கற்-சொல் இன்றி நற்-சொல் கொண்டும் சொல்ல முடியும் அல்லவா!

  solla mutinthathu inke//

  புரியலையே திராச ஐயா!
  கடினக் கருத்துக்களை இங்கு சொல்ல முடிந்ததா? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்! :)

  ReplyDelete
 18. // ramachandranusha(உஷா) said...
  தெரியாமத்தான் கேட்கிறேன், மத்த இந்து சாமிங்க எல்லாம் தன்னை அடைய எந்த உபதேசமும்
  செஞ்சதில்லையா?//

  ஹா ஹா ஹா! எதுக்கு கேக்கறீங்கன்னே தெரியலையே உஷாக்கா! மத்த சாமிங்க எல்லாம் ஒன்னாச் சேர்ந்து உபதேசம் செஞ்சது தானே இது? விஸ்வரூபம்-ன்னு எல்லா சாமிங்களும் குருக்ஷேத்திரத்தில் தெரிவாங்களே! சினிமாவில் நீங்க பாக்கலையா? பாப்-கார்ன் வாங்க வெளியே போயிட்டீங்களா என்ன? :))

  Jokes apart...
  கீதை என்றால் பல கீதைகள் இருக்கின்றன! இராம கீதை, சிவ கீதை கூட இருக்கு-க்கா!

  ஆனால் பீடத்தில் உட்கார்ந்து கொண்டு உபதேசமாகச் செய்யாமல், நம் லெவலுக்கு இறங்கி வந்து தோழனாகச் சில விஷயம் பேசும் போது, மனம் யோசிக்கத் தொடங்குது-ல்ல? அதான் பகவத் கீதை மட்டும் பிரபலம் அடைந்தது போலும்!

  இறைவன் மனிதனுக்குச் சொன்னது = கீதை!
  மனிதன் மனிதனுக்குச் சொன்னது = திருக்குறள்
  மனிதன் இறைவனுக்குச் சொன்னது = திருவாசகம், திருவாய்மொழி

  இதுல அந்தந்த சாமி, இந்திந்த சாமி தன்னை வந்து அடைய ரூட் போட்டுக் கொடுக்கறது எல்லாம் ஒன்னும் இல்ல! எல்லாம் ஒரே சாமி தான்! ஒரே ரூட் தான்!
  கீதையிலும் "மோட்ச இஸ்யாமி"-ன்னு தான் சொல்கிறானே தவிர, வைகுண்டம் இஸ்யாமி, கைலாசம் இஸ்யாமி, கந்தமாதானம் இஸ்யாமி, கணபதிலோகம் இஸ்யாமி-ன்னு எல்லாம் சொல்லலை! நல்லாப் பாருங்க! :))

  ReplyDelete
 19. //பிரம்மச்சரியம் என்பது இக்காலத்தில்
  பொதுவாக உடல் ரீதியாகவே பயன்படுத்தப் படுகிறது. சந்தேகத்தைத்
  தவிர்க்க ’பிரம்மஞானம்’ என்ற வார்த்தை பொருத்தமாக இருக்குமா?//

  வாங்க அறிவே தெய்வம்! பிரம்ம+ஆசரியம்=பிரம்மத்தை அறிவது! அதாவது மாணாக்கனாய் அறியத் துவங்குவது! அதான் பிரம்மச்சரியம்! பிரம்ம ஞானம் என்பது பிற்பாடு வருவது!

  பிரம்மச்சரியம் = Knowledge
  பிரம்ம ஞானம் = Wisdom

  ReplyDelete
 20. // Anonymous said...
  கடினமான கருத்துக்களை எளிதாக விளங்க வைப்பது போல் சொல்லி உள்ளீர்கள் கே.ஆர்.எஸ். நன்றி//

  :)
  நன்றிங்க அனானி! லோக்கலாகச் சொல்வதே அதுக்குத் தான்! மனசுக்கு விளங்கினால் நல்லது தான்!

  //அதுவும் ஆத்ம சாஷாத்காரம், பரமாத்ம சாஷாத்காரம் இது வரை அறியாத ஒன்று. கர்மயோகம் ஆத்ம சாஷாத்காரம் மட்டுமே கொடுக்கும் என்பது நீங்களாக சொன்னதா? இல்லை சாஸ்திரத்தில் உள்ளதா?//

  ஆகா! நமக்கு வடமொழி எல்லாம் அவ்வளவா தெரியாதுங்கோ! இதுல எங்கிருந்து நானே ஆத்ம சாஷாத்காரம்-ன்னு வார்த்தை எல்லாம் கண்டுபுடிச்சி சொல்ல முடியும்? சங்கரர்-இராமானுசர்-மத்வர்-பிரபுபாதர்-ன்னு பல பேர் கீதைக்குப் பாஷ்யம் (உரை) செய்துள்ளார்கள்! அதில் இருந்து தான் சொன்னேன்!

  //ஆனால் சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை//

  நல்லது தானே! கேள்வியே வேள்வி! கேளுங்க!

  //குறிப்பாக நான்கு விதமாக இறைவனை அணுகுபவர்களில் நாலாவதாக ஞானியைத் தான் ஸ்லோகத்தில் சொல்லி இருக்கு. அதை நீங்கள் அடியவர், பக்தர் என்று எப்படி மாற்றிச் சொல்லலாம்?//

  ஹா ஹா ஹா!
  "ஞானீ ச பர தர்சப"-ன்னு முடியறதா நீங்க நினைச்சிட்டீங்க! அதுனால ஞானியைச் சொல்லி இருக்கு-ன்னு சொல்றீங்க! ஆனால் 7.16 சுலோகம் அத்தோடு முடியலை! யார் அந்த ஞானி-ன்னும் 7.17 இல் தொடர்கிறாரே!

  தேசாம் ஞானி நித்ய யுக்தா, ***ஏக பக்திர்*** விசிஷ்யதே என்று சொல்கிறார் பார்த்தீங்களா?

  அதான் ஞானபரமா பேசுறவன் ஞானி அல்லன்! ஏக பக்தி என்று இருப்பவனே ஞானி! அவனை மூட பக்தன்-ன்னு சில பேர் சொன்னாலும், அவனே ஞானி என்றும் சொல்லி இருந்தேன்! நீங்க பார்க்கலையா?

  ReplyDelete
 21. //தியான யோகம், ஞான யோகம் பற்றிச் சொன்னது சரி தான். ஆனால் கர்ம மார்க்கத்தில் நீங்கள் சொன்ன சில வார்த்தைகள் தேவை இல்லாத எள்ளல்கள். குறிப்பாக இப்போதெல்லாம் நல்ல தண்ணீர், நல்ல அக்னி, நல்ல பூனூல் கிடையாது என்பதை தவிர்த்து இருக்கலாம்//

  ஹா ஹா ஹா! ஏன் தவிர்த்து இருக்கலாம்? எதுக்கு Concession? தியான யோகம், ஞான யோகம் பற்றிய எள்ளல்கள் சரி தான் என்று சொல்லும் நீங்கள், இதை மட்டும் ஏன் தவிர்த்து இருக்கலாம்-ன்னு சொல்றீங்க?

  //இப்போதும் அரணிக் கட்டையில் கடைந்து அக்னி உருவாக்குபவர்கள் சிலர் இருக்கிறார்கள்//

  Exceptions are there every where! We are talking abt predominance!
  எத்தனை கர்மவாதிகள், அக்னி ஹோத்ரம் செய்யவும், இன்ன பிற ஹோமத்திலும், தினப்படி அரணிக் கட்டையில் கடைகிறார்கள்?

  //ஆனாலும் மிகவும் யோசிக்க வைத்த பதிவு. நன்றாக கோர்த்து சுய விசாரணை செய்ய வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்//

  நன்றிங்க!
  யாரையும் எள்ளும் எண்ணத்தோடே சொல்லவில்லை! ஞானம்-கர்மா என்பது ஆத்ம சாஷாத்காரம் மட்டுமே! அதையே கட்டிக் கொண்டு அழக்கூடாது என்பதற்காகவும், அதனிலும் இறை அன்பு எப்படி மேம்பட்டது என்று காட்டவும் வரிசையாக சொல்லப்பட்டது தான் பதிவில்!

  இந்தச் சமயத்தில் இன்னொன்றும் சொல்லிக் கொள்கிறேன்! கர்மானுஷ்டானம்...நல்ல தண்ணீர், நல்ல அக்னி, நல்ல பூநூல் கிடையாது என்பதெல்லாம் அடியேன் சொல்லவில்லை! அவை அத்தனையும் பரனூர் அண்ணா என்று போற்றப்படும் கிருஷ்ண ப்ரேமி சுவாமிகளும், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளும் சொல்பவை! மேல் விவரங்களுக்கு - ரஹஸ்ய த்ரய சாரம் - என்ற பரனூர் அண்ணாவின் ஒலிப் பேழையைக் காண்க!

  கர்ம மார்க்கத்தைப் பற்றிப் பேசும் போது அவற்றின் குறைபாடுகள் பற்றி மட்டுமே அடியேன் எடுத்துச் சொன்னேன்! எள்ளல் என்று சிலர் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று தான்... பிரபலமான குரு அவர் சீடர்களுடன் உரையாடும் பகுதி என்றும் குறிப்பிட்டு இருந்தேன்!

  ReplyDelete
 22. //Anonymous said...
  லாயக்கில்லை என்றால் தகுதியை வளர்த்துக்க வேண்டாமா? லாயக்கு இல்லாதவர்களுக்கு எப்படி மோட்சம் கிட்டும்?//

  :)

  //இது தான் ஒரே சந்தேகமா இருக்கு. ஆனால் போன பதிவிலும் விளக்கவில்லை.இந்தப் பதிவிலும் ஒன்றுமே சொல்லவில்லையே//

  ஹா ஹா ஹா!
  ஹிஹி! அடுத்த பதிவு போட்டாச்சு! பாருங்க!

  ReplyDelete
 23. திரு கண்ணபிரான்,

  //கர்மா பண்ணுகிறேன், கர்மா பண்ணுகிறேன் என்று கர்மாவிலேயே ஊறிப் போய் விட்டார்கள்! குளிரைப் போக்கத் தானே எரியும் விறகுக் கட்டை? அதை இறுக்கி அணைத்துக் கொண்டால் என்ன ஆகும்? அதே தான் இவர்களுக்கும் ஆகிப் போனது!
  ஒரு கட்டத்தில் ஆண்டவனே முன்னால் வந்து நின்றாலும், நீ ஆகமப் பிரகாரம் வந்திருக்கிறாயா? என்று கேட்கும் அளவுக்கு ஆச்சார போதை தலைக்கேறி விட்டது!"//


  சபாஷ். இதைத்தான் நம்மாழ்வார்
  "நெறி காட்டி நீக்குதியோ?" என்று கண்ணனைப் பார்த்துக் கேட்கிறார். இங்கு "நெறி" என்றது சாத்திரங்களையே என்பது திண்ணம்.

  இக்கருத்தையே பூதத்தாழ்வாரும்....

  "நகரம் அருள்புரிந்து நான்முகற்குப் பூமேல் பகர மறை பயந்த பண்பன் பெயரினையே, புந்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும் அந்தியாலாம் பயனங்கென்" என்கிறார். அதாவது, இறைவனைப் பற்றி எண்ணாது சும்மா காயத்ரி ஜபம் (ஓதி உரு எண்ணும் அந்தி) பண்ணுகிறேன் என்பதில் பயனே இல்லை என்கிறார்.

  அருமையான விளக்கங்கள்.

  அடியேன்
  வேங்கடேஷ்

  ReplyDelete
 24. //Venkatesh said...
  சபாஷ். இதைத்தான் நம்மாழ்வார்
  "நெறி காட்டி நீக்குதியோ?" என்று கண்ணனைப் பார்த்துக் கேட்கிறார். இங்கு "நெறி" என்றது சாத்திரங்களையே என்பது திண்ணம்//

  வாங்க வேங்கடேஷ்! நல்ல மேற்கோள் கொடுத்திருக்கீங்க! நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி தானே?

  நெறி காட்டி நீக்குதியோ, நின்பால் கருமா
  முறி மேனி காட்டுதியோ, மேனாள் அறியோமை
  எஞ்செய்வான் எண்ணினாய் கண்ணனே, ஈதுரையாய்
  எஞ்செய்தால் என்படோம் யாம்?
  -ன்னு கேட்பார் அல்லவா?

  அந்த யோகம், இந்த நெறி-ன்னு விதம் விதமா மாயம் காட்டி, நம் பற்றுதல் நெறியையா, அவன் பாதங்களையா என்பதை அழகாகக் கேள்வி கேட்பார்!

  இவை அன்றே நல்ல இவை அன்றே தீய,
  இவை என்று இவை அறிவன் ஏலும் - இவை எல்லாம்
  என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே
  என்னால் செயற்பாலது என்?

  சான்ஸே இல்லை! பொட்டில் அறைந்தாற் போல இருக்கும்! :))

  //இறைவனைப் பற்றி எண்ணாது சும்மா காயத்ரி ஜபம் (ஓதி உரு எண்ணும் அந்தி) பண்ணுகிறேன் என்பதில் பயனே இல்லை என்கிறார்//

  ஆகா! இப்படி எல்லாம் பாட்டு எடுத்துக் கொடுத்தா சிலருக்கு உங்கள் மேல் கோவம் வந்துருப் போகுது! பார்த்து! :)))

  தொடர்ந்து வாசித்து, நல்ல இயைந்த மேற்கோள்களைத் தாருங்கள் வேங்கடேஷ்! நன்றி!

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. திரு கண்ணபிரான்,

  //இவை எல்லாம்
  என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே
  என்னால் செயற்பாலது என்?
  //

  ஒரு தடவை இல்லை, பல தடவைகள் கூறுகிறார் நம்மாழ்வார். இப்பாசுரத்தை "எனது ஆவி யார்?, யான் ஆர்?, தந்த நீ கொண்டு, ஆக்கினயே!" என்ற பாசுரத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பெரிய திருவந்தாதிக்கும் திருவாய்மொழிக்கும் உள்ள ஒரு இழை வெளிப்படும்.

  மேலும், இக்கருத்தையே ஆளவந்தாரும்.... "மம நாத! யதஸ்தியோஸ்ம்யஹம், ஸகலம் தத்தீ தவைவ மாதவ (என் நாதனே! எனதென்று என்ன இருக்கிறது இவ்வுலகில். அனைத்துக்கும் எஜமானன் நீயே) நியத: ஸ்வம் இதி, பரபுத்ததீ: அதவா கிந்நு ஸமர்ப்பயாமிதே! (இவ்வுலகின் நிகழ்வுகள் அனைத்தும் உன் திருவுள்ளத்தாலேயே நடக்கின்றது. ஆகையால் என்னிடன் என்ன இருக்கிறது உனக்குக் கொடுக்க?) என்கிறார். சொத்துக்குச் சொந்தக்காரன் தன் சொத்தை தன் இஷ்டம் போல் அனுபவிப்பான் என்பதால், தன்னிடம் எதுவும் இல்லை என்கிறார்.

  //ஆகா! இப்படி எல்லாம் பாட்டு எடுத்துக் கொடுத்தா சிலருக்கு உங்கள் மேல் கோவம் வந்துருப் போகுது! பார்த்து! :)))//

  அந்த கோபத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டேன். ஆனால், இது அடியேன் வாக்கன்று. ஆழ்வார் வாக்கு. சில உண்மைகள் சுடத்தான் செய்யும். ஆனால் சிறிது சிந்திப்பார்களேயானால், ரோபோ மாதிரி ஸந்த்யாவந்தனம் பண்றதுல ப்ரயோஜனமே இல்லங்கறது தெளிவா விளங்கும். ஆழ்வாரும், சந்த்யாவந்தனத்தைக் குறை கூறவில்லை. அவனைப் பற்றிய சிந்தனையின்றிச் செய்யும் காரியம் waste என்றுதான் சொல்கிறார்.

  அடியேன்
  வேங்கடேஷ்

  ReplyDelete
 27. //Venkatesh said...
  பெரிய திருவந்தாதிக்கும் திருவாய்மொழிக்கும் உள்ள ஒரு இழை வெளிப்படும்//

  இதை நீங்களே அழகான ஒரு பதிவாகப் போட்டால் நல்லா இருக்குமே வேங்கடேஷ்!

  //சொத்துக்குச் சொந்தக்காரன் தன் சொத்தை தன் இஷ்டம் போல் அனுபவிப்பான் என்பதால், தன்னிடம் எதுவும் இல்லை என்கிறார்//

  அதனால் தான் ஸ்வம் நாம்! ஸ்வாமி அவனல்லவா?

  //அந்த கோபத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டேன். ஆனால், இது அடியேன் வாக்கன்று. ஆழ்வார் வாக்கு.//

  ஹா ஹா ஹா!
  கோபம் எல்லாம் அறியாக் காலத்தில் தான்! அறியும் காலத்தில் கோபம் நீங்கி கோபாலம் ஆகிடும்! :)

  //சிறிது சிந்திப்பார்களேயானால், ரோபோ மாதிரி ஸந்த்யாவந்தனம் பண்றதுல ப்ரயோஜனமே இல்லங்கறது தெளிவா விளங்கும்//

  :))

  //ஆழ்வாரும், சந்த்யாவந்தனத்தைக் குறை கூறவில்லை. அவனைப் பற்றிய சிந்தனையின்றிச் செய்யும் காரியம் waste என்றுதான் சொல்கிறார்//

  உண்மை!
  ஆனால் பலர் என்ன நினைத்துக் கொள்கிறார்களென்றால், விட்டுடக் கூடாதே என்பதற்காகவாச்சும் மாங்கு மாங்கு என்று செய்யக் கடவது என்று நினைத்துக் கொள்கிறார்கள்! சந்தி செய்யும் போது, சத சவித்ரு மண்டல் மத்யவர்த்தே, நாராயணஹ, சரசிஜாசன, சாம்னிவிஷ்டஹ என்று எம்பெருமானைக் கண்டு ஒழுகுவார்களேயானால், இந்த ஆசாரக் கோபமே முதற்கண் வராது! :)

  ReplyDelete
 28. திரு. கண்ணபிரான்,

  //இதை நீங்களே அழகான ஒரு பதிவாகப் போட்டால் நல்லா இருக்குமே வேங்கடேஷ்//

  சிற்சில இடங்களில் தெரிகிற ஒற்றுமையைச் சுட்டிக்காட்டத் தெரியுமே ஒழிய இன்னும் அவ்வாறெல்லாம் பூரண ஆராய்ச்சி செய்யவில்லை. முகஸ்துதிக்காகச் சொல்லவில்லை, உண்மையாகச் சொல்கிறேன் தாங்கள் அறிந்த அளவிற்கு அடியேன் அறிந்தேனல்லேன். (நீங்கள் நெளிவது புரிகிறது. ஸ்ரமத்திற்கு மன்னிக்கவும்>

  //கோபம் எல்லாம் அறியாக் காலத்தில் தான்! அறியும் காலத்தில் கோபம் நீங்கி கோபாலம் ஆகிடும்! :)//

  இதைத்தான் அடியேனும் விரும்புகிறேன். ஆனால்....... அனைவரும் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அதற்கு முக்கியத்துவம் தருகிற வரையில் கோபம் ஒழிவதற்கு வாய்ப்பேயில்லை என்றே தோன்றுகிறது.


  //ஆனால் பலர் என்ன நினைத்துக் கொள்கிறார்களென்றால், விட்டுடக் கூடாதே என்பதற்காகவாச்சும் மாங்கு மாங்கு என்று செய்யக் கடவது என்று நினைத்துக் கொள்கிறார்கள்! சந்தி செய்யும் போது, சத சவித்ரு மண்டல் மத்யவர்த்தே, நாராயணஹ, சரசிஜாசன, சாம்னிவிஷ்டஹ என்று எம்பெருமானைக் கண்டு ஒழுகுவார்களேயானால், இந்த ஆசாரக் கோபமே முதற்கண் வராது! :)//

  நிதர்சனமான உண்மை.

  அடியேன்
  வேங்கடேஷ்

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP