Sunday, February 08, 2009

சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன?

Update:(Mar-24,2009,10:30am)
* நந்தனார் மனு, தமிழக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது!

* நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர். கனிமொழி அவர்களிடத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது!

* Mar-21 அன்று, நாமக்கல் சிபி அண்ணா, இதை அலுவலகத்தில் சேர்ப்பித்தார்!

* இம்முயற்சியில் பெரிதும் உதவிய தமிழ் உலகம் குழுமம்-மணியம் ஐயா மற்றும் ஆல்பர்ட், நாக. இளங்கோவன் ஐயா, மதுமிதா அக்கா, அதிகாலை.காம் நவநீதன், அபி அப்பா மற்றும் அனைத்து ஆர்வலர்களுக்கும், தமிழ்மணத்துக்கும் நன்றி! ஒப்பமிட்டவர்க்கெல்லாம் ஓங்கிய நன்றி!

தேர்தல் காலமே ஆனாலும், செல்பவர் காதுக்கும், கருத்துக்கும் இது சென்று சேர்ந்து விட்டால்...
பிறகு சிறிது சிறிதாக உருப் பெறும்! தொடர்ந்து இதில் ஆர்வம் காட்டுவோம்!

திருநாளைப் போவார், நந்தனார் திருவடிகளே சரணம்! திருச்சிற்றம்பலம்!

......Previous updates and the post below:

தில்லையில் இப்போதே நந்தனார் சிலையை மீள்-நிறுவி வி்ட்டால்...
பின்னர் யாராலும் அதன் மீது மீண்டும் கை வைக்க முடியாது! - கண்டிப்பா ஒரு தயக்கம் இருக்கும்!

இதோ, தமிழக முதல்வரிடம் தரப் போகும் மனு!
http://www.petitiononline.com/Chid2009/petition.html

உங்கள் கையெழுத்தை இட்டு, நந்தனின் தலையெழுத்தை மாற்றுவீராக!
அடியேன்,
அம்பலவாணர் பேரால், மிக மிக நன்றி! திருச்சிற்றம்பலம்!


Update:(Feb-12,2009,12:15pm)
Tried a small pictorial representation.(Based on gopala krishna bharathi, u.ve.sa accounts and malarmannan’s article in thinnai)

"பழைய" நந்தனார் சிலை பற்றிய குறிப்புகள்:
1. ஆளுயரச் சிலை
2. கைகளில் கடப்பாரையோடு
3. கூப்பிய கரம்
4. தோளில் மண்வெட்டி
5. நின்ற திருக்கோலம்

* மீண்டும் வடிவமைக்க நேர்ந்தால் இந்தக் குறிப்பு சற்று உதவும்-ன்னு நினைக்கிறேன்!
* இருந்த இடம்: நிருத்த சபை நடராஜரைப் பார்த்தவாறு, தெற்குத் தூணில்! (நிருத்த சபை என்பது பொன்னம்பலத்துக்கு தெற்கே இருப்பது!)


தில்லையில் நந்தனாருக்கு
உங்கள் கையொப்பம்!


பல மாற்றுக் கருத்துடை அன்பர்களும் தங்கள் கையொப்பம் இட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி! நன்றி! நன்றி!!
இந்த நன்முயற்சியை மேலும் முனைப்பாக்க, எல்லாத் தரப்பினரும், தயங்காது யோசனை சொல்லுங்கள்!

* அன்று தில்லைக்குள் வர, நந்தனார் வரவேற்கப்பட்டரா? என்ற ஆய்வைத் தற்சமயம் விடுவோம்!
* இன்று தில்லைக்குள் வர, நந்தனாரை முழுமூச்சாய் வரவேற்போம்! பூரண பொற் குடம் எடுப்போம்!




பதிவு:

திருச்சிற்றம்பலம்! தில்லையம்பல நடராஜப் பெருமானின் காரியங்களை, "தான் வைத்ததே சட்டம்" என்று தனிப்பட்ட முறையில் நடத்திக் கொள்ளாமல், பொதுவில் நடத்த, நீதிமன்ற உத்தரவு ஆகியுள்ளது என்று அனைவரும் அறிவீர்கள்! (Feb-2, 2009)

அடியார்கள் முயற்சி கைக்கூட, இறைவன் திருவுள்ளம் சேர, இது வாராது வந்த வெற்றி! நெஞ்சுக்கு நீதி! முயற்சி திருவினை ஆக்கும்!
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்!
- என்று ஐயன் சொன்னது, மெய்யாலுமே அம்பலம் ஏறி உள்ளது! தில்லை அம்பலம் ஏறி உள்ளது!

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்...
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!!!


இவை வெறும் வரிகள் அல்ல! அம்பலவாணனை ஒவ்வொரு கோணத்தில் (angle) இருந்தும் பார்த்தவர்களுக்கு, இந்தக் குமிழ் சிரிப்பு கட்டாயம் தெரிந்திருக்கும்!
ஆண்களையும், பெண்களையும் ஒரு சேர ஈடழிக்க வல்ல குமிழ் சிரிப்பு! தீட்சிதர்கள் மொழியில் சொல்லணும்-ன்னா ஜகன் மோஹனாகாரம்!

இனி என்ன? அவ்வளவு தானா?
தீட்சிதர்களின் ஆதிக்கம் ஒடுங்கியதாலேயே, நல்ல விடயங்கள் எல்லாம் தானாய் நடந்து விடுமா என்ன? இனி என்ன செய்யணும் என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா? இது தொடர்பாகச் செய்ய வேண்டிய சில ஆக்கங்கள் பற்றி, முன்பு இட்ட பதிவு இதோ!

மேற்சொன்ன பதிவைப் பிரதி எடுத்து, அப்போது இரு தரப்புக்கும், அஞ்சல் (தபாலில்) அனுப்பி இருந்தேன்! சென்ற அக்டோபர் மாதம், அம்மா-அப்பா மணிவிழாவுக்கு இந்தியா சென்றிருந்த போது, தில்லை செல்லும் வாய்ப்பும் கிட்டியது!
அப்போது மதிய வேளை! தீட்சிதர் ஒருவரிடம்/இருவரிடம் பதிவுலகக் கருத்துக்கள் பற்றி லேசாப் பேச்சு கொடுத்த போது, நான் தான் அப்படி தபால் அனுப்பிச்ச ஆளு-ன்னு தெரியாம, என் கிட்டயே, என்னைத் திட்டித் தீர்த்தார்! இப்ப நினைச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருது! :)

ஆனால் சென்ற விஷயம் அம்மா-அப்பா விழா என்பதால், நானும் எதுவுமே பதில் பேசவில்லை! "சமத்துப் பிள்ளையா" இருந்து விட்டேன்! கடைசியா முடிக்கும் போது, நான் தான் அந்த மாதவிப் பந்தல்-ன்னு சொன்னேன்! சொன்னது தான் தாமதம்....முகம் மாறியது! ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு அவரும் சிரித்து விட்டார்! :))))

தாங்கள் வைத்ததே சட்டம்! 100% Obedience! மறுப்புரை, கருத்து விவாதங்கள் - இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாத ஜனநாயகவாதிகள் நம் தீட்சிதப் பெருமக்கள்!
கருத்துக்களைப் பேசக் கூடக் கூடாது, பேசினால் கோபித்துக் கொள்வோம் என்ற போக்குள்ளவர்களிடம், அரசும் தொழில் முறை ரீதியாகவே (Professionalism) நடந்து கொள்ளல் நலம்!



ஜூனியர் விகடன் செய்தி: (Feb-11-2009)
அறநிலையத் துறை அதிகாரிகள் புடை சூழ, விழுப்புரத்திலிருந்து அறநிலையத் துறை இணை ஆணையர் திருமகள், சிதம்பரத்துக்கு வந்துள்ளார்.
இதற்கிடையில் அதிகாரிகளில் சிலரிடம், தீட்சிதர்கள் எதிர்ப்பைக் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். உடனே அதிரடிப்படை போலீஸாரும், வஜ்ரா மற்றும் தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.

இந்தப் பரபரப்பின் 'க்ளைமாக்ஸா'க இரவு ஒன்பது மணி அளவில் அதிகாரிகள் கோயிலுக்குள் நுழைந்தனர். அதேநேரம், நானூறுக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் அதிகாரிகளை வழிமறித்தனர்.
அவர்களின் வழக்கறிஞர் சிவக்குமாரிடம் நீதிமன்றத் தீர்ப்பையும், அரசு உத்தரவையும் கொடுத்த இணை ஆணையர் திருமகள், "ஒழுங்கா வழிவிடுங்க..." என்றார்.
சில நிமிட வாக்குவாதத்துக்குப் பிறகு அரசிடம் கோயிலை ஒப்படைக்க தீட்சிதர்கள் சார்பாக சம்மதித்துக் கையெழுத்திட்டார் சிவக்குமார்.
உடனடியாக தில்லை காளியம்மன் கோயிலின் செயல் அலுவலர் கிருஷ்ணகுமாரையே நடராஜர் கோயிலுக்கும் செயல் அலுவலராக நியமித்து ஆணை பிறப்பித்தார் திருமகள். அன்றிரவே, கோயில் அலுவலகச் சுவர்களில், இந்தத் தகவல் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன.

மறுநாள் மூன்றாம் தேதி கோயிலுக்கு வந்த செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், கீழக் கோபுரம் அருகே இருந்த ஒரு இடத்தில் அலுவலகத்தை அமைத்து நிர்வாக வசதிக்காக பத்து தற்காலிகப் பணியாளர் களையும் நியமித்தார்.

இந்நிலையில் நம்மிடம் பேசிய தீட்சிதர்கள், "தலைமுறை தலைமுறையாகக் கோயிலை நம்பியே வாழ்ந்து வருகிறோம். அரசு இவ்வளவு வேகமாகச் செயல்படுவதைப் பார்த்தால், எங்களை கோயிலை விட்டே அப்புறப்படுத்தி விடுவார்களோ என பயமாக இருக்கிறது. நாங்கள் மேல் முறையீடு செய்யப் போகிறோம்.
அதன் தீர்ப்பு வரும் வரை, இப்படி தடாலடியான காரியங்கள் செய்வதை அரசு கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்..." என்றனர்.
(பத்திக்கும் படத்துக்கும் நன்றி: ஜூனியர் விகடன்)


சரி...........விகடன் செய்தியைப் பார்த்ததில் இருந்து, நமக்கே இருக்கும் உள்ளுணர்வில் இருந்து, அடுத்த கட்டம் நன்றாகத் தெரிகிறது! = மேல் முறையீடு! உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இந்த வழக்கு மேலும் நீட்டிக்கும்! இடைக்காலத் தடை கேட்டுப் பெற்றால் கூட ஆச்சரியம் இல்லை!

அதனால் அரசு செய்ய வேண்டியது என்ன? உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?

1. ஆன்மீக வளர்ச்சி தொடர்பானவை
2. நிர்வாகம் தொடர்பானவை

என்னென்னு கிடு கிடு-ன்னு பார்க்கலாமா? நீங்களும் விட்டுப் போனவற்றைச் சொல்லுங்கள்! தொகுத்து தமிழக அரசுக்கும், இணை ஆணையர் திருமகளுக்கும், மின்னஞ்சலில் கூட அனுப்பி வைக்கலாம்!


ஆன்மீக வளர்ச்சி தொடர்பானவை:

1. நந்தனார் என்னும் திருநாளைப் போவார் நாயனார் சிலையை உடனே தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்! நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு, அவர் திருவுருவச் சிலை முன்பு இருந்தது! அப்புறம் "மாயமானது"!
எங்கு இருந்ததோ, அங்கேயே நந்தனாரை நிறுவி, வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்!
பழைய சிலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை! உடனேயே புதிய சிலை ஒன்றினைத் தக்க ஸ்தபதி செய்து கொடுப்பார்!
இதை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு செய்து முடித்தால் மிகவும் நலம்! மிகவும் சுலபமான வேலை தான்! அதிக நேரமில்லை!

வருகிற Feb-23 மகா சிவராத்திரி! - அதற்குள் நந்தனார், நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு இருப்பது பெரும் சிறப்பு!

தமிழக ஆலயங்களின் வருவாய், தமிழக அரசுக்குப் பல வழிகளில் துணை செய்கிறது! எனவே இந்த நற்செயலை (சத் காரியத்தை), உடனே செய்து கொடுக்க,
* தமிழக அரசு நன்றிக் கடன் பட்டுள்ளது என்பதை மட்டும் இங்கே ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!
* முதல்வர் கலைஞர் இதைத் தன் தனிப்பட்ட பணியாக எடுத்துச் செய்து கொடுத்தால், தில்லைத் தெய்வத் தமிழில், அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்!

நந்தனார் சிலை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்: கோபால கிருஷ்ண பாரதியின் கீர்த்தனைகள், உ.வே.சா குறிப்புரைகள் மற்றும் அரசு அலுவலர்களின் கட்டுரைகள்!
இந்தத் திண்ணைக் கட்டுரையையும் அவசியம் வாசிக்கவும்!

2. திருக்கோயில் ஓதுவார்கள், இப்போது கீழிருந்து தேவாரப் பதிகங்களை ஓதுகிறார்கள்!
ஆறுகால பூசையின் போது, தீட்சிதர்கள் தங்கள் வழிபாடுகளை முடித்த பின்னர், மணி அடிப்பார்கள்! பின்னர் ஒரு ஓதுவார், தமிழ்ப் பதிகம் ஓத ஆரம்பிப்பார்!
ஆனால் கருவறைக்கு (சிற்றம்பலம்) வெளியே உள்ள பொன்னம்பல மேடையில் இருந்து அல்ல! அந்த மேடையின் படியிறங்கி, கீழே வளாகத்தில் ஒரு ஓரமாய் நின்று ஓதுவார்!

இனி அவரைப் பொன்னம்பல மேடையில் ஏறிப் பதிகம் பாடச் சொல்ல, ஆணையர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்! அவர் தனியாகப் பாடாமல், உடன் இன்னொருவர் துணைக்கு நின்றால் நலம்! பொது மக்களும் கூடவே தேவாரம் பாடினால், இன்னும் இன்னும் நலம்!

3. ஆலய வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள், ஓலைச் சுவடிக் குறிப்புகள், இன்னும் இதர வரலாற்று ஆதாரங்களை, உடனே டிஜிடைஸ் (Digitization) செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்! தொல்பொருள் துறையின் உதவியை நாடி, குறைந்த பட்சம் படங்கள் எடுத்து வைத்துக் கொள்வது நலம் பயக்கும்!

4. சிறிய அளவிலான தேவாரத் திருமுறைகள் பள்ளியை, தில்லையில் துவக்க வழி வகை உள்ளதா என்று அறநிலையத் துறை ஆராய வேண்டும்! இதற்கான பூர்வாங்க முயற்சிகளை முடுக்கி விட வேண்டும்!

5. சைவத் திருமடங்கள் - திருப்பனந்தாள், திருவாவடுதுறை, தருமபுர ஆதீனம், காஞ்சி மடம், சிருங்கேரி மடம், இன்னும் பல மடத் தலைவர்கள் ஒன்று கூடி, தமிழக அரசுக்கு வழிகாட்டுச் செயல் முறை (Policy Guidelines) ஒன்றை வகுத்துக் கொடுக்க வேண்டும்!

வைணவத் தலைநகரம் திருவரங்கம்! அதே போல் சைவத் தலைநகரம் தில்லை!
திருவரங்கத்தில் கோயில் ஒழுகு என்ற தினப்படி நடத்தை விதிமுறைகளை இராமானுசர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்து வைத்தார்! அனைத்து ஊழியர்களுக்கும் தனித்தனியான ஒழுகு முறைகள்! இன்னிக்கும் அது நடைமுறையில் இருக்கு!

தமிழ் வழிபாடு, தமிழ் விழாவான பகல் பத்து-இராப் பத்து, கருவறைக்குள் அர்ச்சகர்களே முன்னின்று சொல்ல வேண்டிய தமிழ்ப் பாசுரங்கள் என்னென்ன = என்று அனைத்தும் அதில் இருக்கு!
It is a kind of Code Book! Koil Ozhugu!
அதைத் திருவரங்க ஜீயர்களிடம் கேட்டுப் பெற்று, ஒரு உசாத் துணை (Reference) போலப் பயன்படுத்திக் கொள்ளலாம்! இது யோசனை தான்! கட்டாயம் இல்லை! ஆனால் அது போல ஒரு செயல்முறை Code Book-ஐத் திருமடங்கள் உருவாக்கித் தரவேண்டும்!

6. நடராஜப் பெருமானின் ஆலயக் குடமுழுக்கு, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! கடைசியாக நடந்தது 1987! இருபத்தி இரண்டு வருடங்கள் ஓடி விட்டன!
மூச்சுக்கு மூச்சு, கர்மானுஷ்டானம், கர்மானுஷ்டானம், என்று வாய் கிழியப் பேசும் தீட்சிதர்கள், 22 ஆண்டுகளாக குடமுழுக்கு இல்லாமல், ஒரு ஆலயம் நடத்தி வருகிறார்கள்!

ஆலயக் குடமுழுக்கு படோபடத்துக்கு அல்ல! சன்னிதிகள் சீரமைப்பிற்கே! வீட்டுக்கே அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறையாச்சும் வெள்ளை அடிக்கிறோம்! இது பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தானே? எனவே அரசு குடமுழுக்குக் குழுவை உடனே அமைத்தல் வேண்டும்!


நிர்வாகம் தொடர்பானவை:
1. கோயிலின் பொருள் ஆதாரங்களை, தனித்த ஆய்வாளர்கள் (Independent Evaluator) கொண்டு கணக்கெடுத்து, அதை வெள்ளை அறிக்கையாகப் பொது மக்கள் முன் வைப்பது!

2. ஆலய அளவில், சிறிது காலத்துக்குத் தினப்படி சந்திப்புகள் (Daily Status Meeting) நடத்துவது!

3. தீட்சிதப் பிரதிநிதிகளுடன் ஆணையர் அமர்ந்து பேசி, கொள்கை முடிவுகள் இன்னின்ன என்று தெளிவாக விளக்கி விடுவது!
அவர்கள் எதிரியாகப் பார்க்கப்பட மாட்டார்கள்! எனவே பழைய கசப்பை மறந்து பூரண ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோருவது!

4. ஆயிரம் தான் இருந்தாலும், தீட்சிதர்களும் இறைவனுக்குப் பணி செய்யும் வேலையில் இருப்பவர்கள் தான்! அவர்கள் எதிர்காலம், அவர்கள் மாத ஊதியம், அறநிலையத் துறையில் அவர்களுடைய ஊழியர் நிலை என்ன - இது போன்றவற்றையும் தெளிவாக விளக்கி விடுதல் நலம் பயக்கும்!

5. தில்லை நடராஜப் பெருமானின் திருக்கூத்தைப் பார்த்தாவாறு, அந்த மண்டபத்துக்கு வெளியேயே, மிக அருகில் கோயில் கொண்டுள்ளார் கோவிந்தராசப் பெருமாள்! மண்டபத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றால், நேராக நடராசரையும், இடப் பக்கம் திரும்பி, பெருமாளையும் சேவிக்கலாம்!

இந்தப் பெருமாள் கோயில் மட்டும் ஏற்கனவே அரசுக் கட்டுப்பாட்டில் தான் இருக்கு! அதனால் அதன் ஊழியர்களையே, ஆரம்ப கால அவசரப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்!
தேவை: சில விரைவான நடவடிக்கைகள்! மேல் முறையீடுகளுக்கு முன்பாக, குறிப்பாக நந்தனார் சிலை நிறுவுதல்!


தில்லை பற்றிய கருத்துச் சண்டைகள் நிறையவே நடந்துள்ளன! ஆனால் இப்போது கடமை நேரம்!
உங்களுக்குத் தோன்றும் வேறு யோசனைகள் என்ன? முன் வையுங்களேன், நண்பர்களே, சக பதிவர்களே!
* அவசரத் தேவை!
* நெடுங்காலத் தேவை!
* ஆன்மீக விடயம்!
* நிர்வாக விடயம்!

ஒன்றாகத் தொகுத்து, அறநிலையத் துறைக்கும், உதவி ஆணையர் திருமகள் அவர்களின் மின்னஞ்சலுக்கும் யோசனைகளாக அனுப்பி வைக்கலாம்! என்ன சொல்றீங்க?

திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!

91 comments:

  1. உங்கள் எண்ணங்கள் ஈடேரட்டும். வாழ்த்துகள்.

    இந்த பதிவுக்கு அஷ்டதிக்கு பாலகர்களின் ஆசி/சாபம் கிட்டுமா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  2. //கோவி.கண்ணன் said...
    உங்கள் எண்ணங்கள் ஈடேரட்டும். வாழ்த்துகள்//

    ஈடேறட்டும்! நன்றி-ண்ணா!

    //இந்த பதிவுக்கு அஷ்டதிக்கு பாலகர்களின் ஆசி/சாபம் கிட்டுமா என்று தெரியவில்லை//

    அட்டதிக் பாலகர்களா? யாரு?

    அது என்ன ஆசி/சாபம்? :)

    ReplyDelete
  3. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update

    your new blog posts and bring before your work to the large base of

    Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பரே!!

    //3. ஆலய வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள், ஓலைச் சுவடிக் குறிப்புகள், இன்னும் இதர வரலாற்று ஆதாரங்களை, உடனே டிஜிடைஸ் (Digitization) செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்! தொல்பொருள் துறையின் உதவியை நாடி, குறைந்த பட்சம் படங்கள் எடுத்து வைத்துக் கொள்வது நலம் பயக்கும்!

    4. சிறிய அளவிலான தேவாரத் திருமுறைகள் பள்ளியை, தில்லையில் துவக்க வழி வகை உள்ளதா என்று அறநிலையத் துறை ஆராய வேண்டும்! இதற்கான பூர்வாங்க முயற்சிகளை முடுக்கி விட வேண்டும்!

    5. சைவத் திருமடங்கள் - திருப்பனந்தாள், திருவாவடுதுறை, தருமபுர ஆதீனம், காஞ்சி மடம், சிருங்கேரி மடம், இன்னும் பல மடத் தலைவர்கள் ஒன்று கூடி, தமிழக அரசுக்கு வழிகாட்டுச் செயல் முறை (Policy Guidelines) ஒன்றை வகுத்துக் கொடுக்க வேண்டும்!//

    அருமையான கருத்துக்கள், இதுவே என்னுடைய கருத்தும்.

    //அட்டதிக் பாலகர்களா? யாரு?

    நண்பர் கோவி.கண்ணன் இந்து வழிபாட்டு முறைகளை மட்டும் கேலி செய்யும் ஒரு சமய சார்பற்ற ?:-)) கடவுள் மறுப்பாளர்.

    அவரிடம் விளக்கம் கேட்டால் அவர் என்ன செய்வார் பாவம் ?

    திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!

    ReplyDelete
  5. திருச்சிற்றம்பலம்.
    சிறந்த ஆலோசனைகள். " சிறப்பு தரிசனம்" என்று ஒரு டிக்கெட்டை போட்டு சிற்றம்பல மேடை ஏறுவதற்கு வசூல் செய்வார்கள் என எதிபார்க்கிறேன் (வரவு ஆச்சே) . தீக்ஷிதர்கள் பலமுறை "சுப்ரீம் கோர்ட்டிலே கோவில் எங்களக்குதான் என்று தீர்ப்பு வாங்கியாச்சு" அவர்கள் வாயாலே கூற கேட்டு இருக்கிறேன், நேரமிருந்தால் விளக்கவும்....

    ReplyDelete
  6. //அறிவன்#11802717200764379909 said...
    A constructive post to the core.
    Appreciations.
    //

    Thankyou Arivan Sire!
    Any more thoughts?

    ReplyDelete
  7. //veerantamil said...
    வாழ்த்துக்கள் நண்பரே!!
    அருமையான கருத்துக்கள், இதுவே என்னுடைய கருத்தும்.//

    நன்றி வீரத்தமிழ்!

    //நண்பர் கோவி.கண்ணன் இந்து வழிபாட்டு முறைகளை மட்டும் கேலி செய்யும் ஒரு சமய சார்பற்ற ?:-)) கடவுள் மறுப்பாளர்//

    ஹா ஹா ஹா!
    இத்தனை பட்டங்களா கோவி அண்ணனுக்கு? :)

    //அவரிடம் விளக்கம் கேட்டால் அவர் என்ன செய்வார் பாவம் ?//

    அட்டதிக் பாலகர்-ன்னு அவர் வேற யாரையோ கிண்டலாச் சொல்றாரு!
    இந்திரன்-அக்னி-யமன்-நிருதி
    வருணன்-வாயு-குபேரன்-ஈசானனைச் சொல்றாரு நினைச்சிட்டீங்களா? :))

    ReplyDelete
  8. //Logan said...
    திருச்சிற்றம்பலம்.
    சிறந்த ஆலோசனைகள்//

    நன்றி லோகன் ஐயா!

    //" சிறப்பு தரிசனம்" என்று ஒரு டிக்கெட்டை போட்டு சிற்றம்பல மேடை ஏறுவதற்கு வசூல் செய்வார்கள் என எதிபார்க்கிறேன் (வரவு ஆச்சே)//

    இதை இப்பவே தீட்சிதர்கள் செய்து கொண்டு தானே இருக்காங்க!
    என்ன டிக்கெட்டுக்கு ரசீது கொடுக்க மாட்டாங்க! 50ரூபாய் சென்ற முறை போன போது!

    //தீக்ஷிதர்கள் பலமுறை "சுப்ரீம் கோர்ட்டிலே கோவில் எங்களக்குதான் என்று தீர்ப்பு வாங்கியாச்சு" அவர்கள் வாயாலே கூற கேட்டு இருக்கிறேன், நேரமிருந்தால் விளக்கவும்....//

    தில்லை ஆலயம், ஆலயம் இல்லை! அது மடம் என்ற ஒரு சாசனைத்தை வைத்துக் கொண்டு அது Private Property என்பது தீட்சிதர்களின் வாதம்! அதனால் பழைய தீர்ப்புகள்!

    ஆனால் Private Property becomes Public Property, if public stake is more in it than private stake.
    அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கியின் நிலை போலத் தான்!

    இந்த நீதிபதி, தவறான மேலாண்மை நடக்கும் போது, அரசு தலையிடலாம் என்று சொல்லி உள்ளார்! தவறான மேலாண்மை என்று நிரூபணம் ஆகியுள்ளது! பரம்பரை பாத்தியதை, மதவழிபாடு - இதெல்லாம் மேலாண்மைக்கு குறுக்கே வராது என்று நீதிபதி. ஜஸ்டிஸ். ஆர். பானுமதி அவர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்!

    நீதிமன்றம் மேல் முறையீட்டில் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்!

    ReplyDelete
  9. கோயில் ஒழுகு ஆயிரம் ஆண்டுகால மரபு என்று பெருமிதம் கொள்கிறீர்கள். அதை மாற்றவேண்டும் என்று இந்து விரோத அரசியல்வாதிகள் சொன்னால் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்?

    அதே போல, சிதம்பரம் என்ற கோயிலுக்கும் ஆயிரம் ஆண்டு மரபு உள்ளது என்பதை மறந்து விடவேண்டாம். சொல்லப் போனால் ராமானுஜர் காலத்திற்கும் முன்பிருந்தே வரும் பழமரபு அது. தீட்சிதர்கள் ஏதோ மனித விரோதீகள் போன்றும், அவர்கள் "ஆதிக்கம்" செலுத்துகிறார்கள்' என்றும் எழுதுகிறீர்கள். உணமையில் பாரம்பரியத்தின் மீது மதிப்பு கொண்டவராக இருந்தால் நடுநிலையோடு பேசவேண்டாமா?

    கோயிலை சீரமைக்க கருணாநிதியிடம் கோரிக்கையா? 1960கள் வாக்கில் இதே தில்லை மாநகரில், இதே கருணாநிதியின் திமுக குண்டர்கள் சைவ சமய மகா குருவாக விளங்கிய திருமுரூக கிருபானந்த வாரியார் சுவாமிகளை அடித்துத் தாக்கிய சம்பவம் தங்களுக்கு நினைவில் இருக்கிறதா? பேஷ், நன்றாக நடக்கட்டும்.

    ReplyDelete
  10. அன்புள்ள கே ஆர் எஸ்,

    தில்லை, தீட்சிதர்கள் வரலாறு பற்றி தலைசிறந்த கல்வெட்டு, வரலாற்று ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன் அவர்களின் இந்த அருமையான கட்டுரையைப் படிக்க வேண்டுகிறேன் -

    http://sishri.org/thillai.html

    "1899 கமுதி கோயில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சான்றோர் குலத்தவர்கள் கோயில்களுக்குள் நுழைவதற்கு அனைத்து உரிமையும் பெற்ற உயர் வர்ணத்தவரே என்று சான்றோர்களுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்லி, ஆங்கிலேய நீதிபதியின் ஏளனத்துக்கு உள்ளான பெருமையும் இந்த தில்லை தீட்சிதர்களுக்கு உண்டு."

    "இப்படியாக ஒரு மரபைக் காப்பாற்றுவதற்காக ஏளனங்களையும் இழப்புக்களையும் எதிர்கொண்டாலும் தளராது நியாயத்தின் பக்கம் குரல் எழுப்பியுள்ளதையும் பார்க்கின்ற அதே நேரத்தில், வெகுஜனங்களின் மொழி உணர்வு சார்ந்த விருப்பங்களுக்கு அனுசரித்துச் செல்லாத தவறான ஒரு போக்கையும் தீட்சிதர்களிடம் நாம் காண்கிறோம். இந்தப் போக்கை எவ்விதத் தயக்கமும் இன்றி நாம் கண்டிக்கின்றோம். அதே வேளையில், தில்லை தீட்சிதர்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைத் திருடி அனுபவித்துக் கொண்டு வருவதாக குறிப்பிட்டு, இதுதான் தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வியலில் கனன்றுகொண்டிருக்கும் முதன்மையான பிரச்சினை போலச் சித்திரிக்கும் முயற்சியைத்தான் நம்மால் ஏற்க முடியவில்லை.

    தமிழகத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களில் இருந்து ஆற்று மணல், அரியவகை மண், மரங்கள் என இயற்கை வளங்களையெல்லாம் கொள்ளையடிக்க அனுமதித்துப் பங்கு பெற்று, நாட்டைப் பாலைவனமாக்கி உலகப் பணக்காரர் பட்டியலை நோக்கிக் குறிவைத்துப் பயணம் செய்துகொண்டே, ஆறுமுகசாமிக்கு மாதம் ரூ. 3000 தந்து பாவ நிவர்தி வேண்டுகிறவர்கள்தாம் சமூகத்தில் கனன்று கொண்டிருக்கும் பல சமூகப் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கிறார்கள் என்பது ஜெயராமன் போன்றவர்களின் கண்களுக்குப் புலப்படாதது விந்தையிலும் விந்தை. வரலாற்று விந்தை

    ReplyDelete
  11. நல்ல அலசல் கே.ஆர்.எஸ்...

    //இனி அவரைச் சிற்றம்பல மேடையில் ஏறிப் பதிகம் பாடச் சொல்ல, ஆணையர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்!//

    இதை செய்வதின் மூலம் ஒரு மிக பெரிய அரசியலையும் தவிர்க்கலாம். தமிழ் மொழியின் பெருமையையும் நிலைநிறுத்தலாம்.

    குடமுழுக்கு உடனடி தேவை. அனைவரும் இனிமேல் ஆவது அமர்ந்து பேசி ஒரு உடன்பாட்டுக்கு வருவது நலம். (எல்லாருக்குமே)

    ReplyDelete
  12. Excellent analysis!

    ReplyDelete
  13. //நாகை சிவா said...
    நல்ல அலசல் கே.ஆர்.எஸ்...//

    நன்றி சிவா!

    //இதை செய்வதின் மூலம் ஒரு மிக பெரிய அரசியலையும் தவிர்க்கலாம். தமிழ் மொழியின் பெருமையையும் நிலைநிறுத்தலாம்//

    எக்ஜாக்ட்லி! ஆன்மீகம் மட்டுமே தழைக்கும்! அரசியல் அடிபட்டு போகும்!

    //குடமுழுக்கு உடனடி தேவை. அனைவரும் இனிமேல் ஆவது அமர்ந்து பேசி ஒரு உடன்பாட்டுக்கு வருவது நலம். (எல்லாருக்குமே)//

    22 வருசமா இவிங்க எப்படி குடமுழுக்கு இல்லாம, சாஸ்திரம் பேசிக்கிட்டு இருந்தாங்க-ன்னு நினைச்சாத் தான் ஆச்சரியமா இருக்கு சிவா!
    தொட்டதுக்கு எல்லாம் ஆகமம், சாஸ்திரம்-ன்னு நீட்டுவாங்களே! எப்படி இதை மட்டும் விட்டாங்க?

    ReplyDelete
  14. //Anonymous said...
    Excellent analysis!//

    நன்றி அனானி! (From Boston/Lowell? :)

    ReplyDelete
  15. //ஜடாயு said...//

    வாங்க ஜடாயு சார்! நலமா?

    //கோயில் ஒழுகு ஆயிரம் ஆண்டுகால மரபு என்று பெருமிதம் கொள்கிறீர்கள். அதை மாற்றவேண்டும் என்று இந்து விரோத அரசியல்வாதிகள் சொன்னால் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்?//

    எதுக்கு அந்த ரியாக்ஷனை என் கிட்ட எதிர்பார்கறீங்க? :)
    மேலும் இப்போ யாரும் அப்படி மாற்று-ன்னு சொல்லவே இல்லையே!

    மேலும் கோயில் ஒழுகே காலம் காலமா மாறிக்கிட்டு தானே வந்திருக்கு! இராமானுசர் காலத்தில் 100 பக்கம்-ன்னா மணவாள மாமுனிகள் காலத்தில் 150 பக்கம்-ன்னு ஆகலையா என்ன?

    //அதே போல, சிதம்பரம் என்ற கோயிலுக்கும் ஆயிரம் ஆண்டு மரபு உள்ளது என்பதை மறந்து விடவேண்டாம்//

    யாரும் மறக்கலையே! அதான் திருமடங்கள் ஒன்று சேர்ந்து தொகுக்க வேணும்-ன்னு சொன்னேன்! நீங்க சொல்லும் அரசியல்வாதிகளையா தொகுத்துத் தரச் சொன்னேன்?

    //தீட்சிதர்கள் ஏதோ மனித விரோதீகள் போன்றும், அவர்கள் "ஆதிக்கம்" செலுத்துகிறார்கள்' என்றும் எழுதுகிறீர்கள்//

    ஆதிக்கம் செலுத்தறாங்க-ன்னு தான் சொன்னேன்! மனித விரோதி-ன்னு எங்கும் சொல்லலையே!

    //உணமையில் பாரம்பரியத்தின் மீது மதிப்பு கொண்டவராக இருந்தால் நடுநிலையோடு பேசவேண்டாமா?//

    அவங்க ஊதிய நிலை பற்றி அறிவிக்கணும் கூடச் சொல்லி இருக்கேனே? பார்க்கலையா?

    ReplyDelete
  16. //கோயிலை சீரமைக்க கருணாநிதியிடம் கோரிக்கையா? 1960கள் வாக்கில் இதே தில்லை மாநகரில், இதே கருணாநிதியின் திமுக குண்டர்கள் சைவ சமய மகா குருவாக விளங்கிய திருமுரூக கிருபானந்த வாரியார் சுவாமிகளை அடித்துத் தாக்கிய சம்பவம் தங்களுக்கு நினைவில் இருக்கிறதா? பேஷ், நன்றாக நடக்கட்டும்//

    ஹா ஹா ஹா
    கிருபானந்த வாரியாரை, அவர் உடல் தோற்றம் பற்றிக் குறிப்பிட்டுக் கேலியாக, "லாரியார்" என்று சொன்ன "பகுத்தறிவாளர்கள்" கிட்ட சண்டையும் பிடிச்சி இருக்கேன்!

    வாரியாரை அப்போது தாக்கிய சம்பவத்துக்காக, இப்போது ஒரு முதல்வர் என்ற முறையில், மனு கூடவா தரக் கூடாது?
    அப்படிப் பாத்தா, கோபுரத்துக்குள் நுழையும் போதே, எல்லாக் கல்வெட்டிலும் அரசியல்வாதிகள் பேரு தான் இருக்கும்! அதுக்காக கோச்சிக்கிட்டு கோயிலுக்கு உள்ளேயே போக மாட்டீங்களா என்ன? :)

    இப்போது வாரியார் சுவாமிகள்-கலைஞர் என்ற தனி மனிதர்களின் பழைய பிரச்சனை பேசும் நேரம் அல்ல ஜடாயு சார்!
    அரசுப் பொறுப்பில் உள்ள ஒரு முதல்வர், சில முக்கியமான செயல்களை நிறைவேற்றிக் கொடுக்கணும்! அவ்ளோ தானே!

    காரியம் பெருசா? வீரியம் பெருசா?

    //சைவ சமய மகா குருவாக விளங்கிய திருமுரூக கிருபானந்த வாரியார் சுவாமிகளை//

    இப்படிச் சொன்னதற்கு மிக மிக நன்றி!
    வாரியாரை எல்லாம் எப்படி குரு-ன்னு சொல்லறது-ன்னு "சில ஆன்மீகப் பீடாதிபதிகள்" தயங்கிய காலம் போய்,
    அண்ணலை "மகா குரு"-ன்னு சொன்னீங்களே, நீவிர் வாழ்க, வாழ்க!

    ReplyDelete
  17. //ஜடாயு said...
    அன்புள்ள கே ஆர் எஸ்,
    தில்லை, தீட்சிதர்கள் வரலாறு பற்றி தலைசிறந்த கல்வெட்டு, வரலாற்று ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன் அவர்களின் இந்த அருமையான கட்டுரையைப் படிக்க வேண்டுகிறேன்//

    இதை முன்னரும் வேறெங்கோ படித்திருக்கேன் ஜடாயு சார்! sishri சுட்டிக்கு நன்றி!
    எஸ். ராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் நன்று!

    நான் இப்பதிவில் தீட்சிதர்கள் தோற்றம் குறித்தோ, அவர்கள் இனம் குறித்தோ, அவர்கள் கொள்ளை அடித்தார்கள் என்றெல்லாம் எதுவும் பேசவே இல்லையே!

    இனி செய்ய வேண்டுவது என்ன என்பது தானே இங்கு பேசுபொருள்?
    ஆராய்ச்சிப் புலனங்களுக்குத் தாவும் நேரம் இதுவல்லவே!

    ReplyDelete
  18. //குமிழ் சிரிப்பும்//

    எழுத்துப்பிழை இருக்கின்றது என்று எண்ணுகிறேன். சரி பாருங்கள்.

    ReplyDelete
  19. //தீட்சிதர்கள் மொழியில் சொல்லணும்-ன்னா ஜகன் மோகனாஹாரம்!
    //

    அவங்க சொன்னதைச் சரியா நீங்க கேக்கலை போலிருக்கு. :-) அது ஜகன்மோஹனாகாரம் (உலகை மயக்கும் வடிவம்). ஜகன்மோகனாஹாரம் இல்லை.

    ReplyDelete
  20. //குமரன் (Kumaran) said...
    //குமிழ் சிரிப்பும்//
    எழுத்துப்பிழை இருக்கின்றது என்று எண்ணுகிறேன். சரி பாருங்கள்//

    குமிண் சிரிப்பு-ன்னு இருக்கணும்! சரி தானே குமரன்? :)

    குமிழ் சிரிப்பு-ன்னு பதம் பிரிச்சி எழுதினாப் புரியும்-ன்னு தான் அப்படி இட்டேன்!

    நீங்க சொன்னா பிறகு, "ழ்" எப்படி "ண்" ஆச்சுன்னு தேடினேன்! இதோ from thevaaram.org...

    //குமிழ் சிரிப்பு - புன்னகை. ` வளர்குமிழ் மலரும் ` ( கோயிற் புராணம் நடராசச். 14) என்றதால், மலரது முன்னிலையான அரும்பைக் குமிழ் எனல் புலப்படும். படவே, அரும்பும் நகையைக் குமிழ் சிரிப்பு என்பர். ` குமிண் சிரிப்பு ` என்றதிற் குமிண் என்றது முதனிலையாதல் வேண்டும். அவ்வாறொன்று தமிழில் வேறெங்கும் காணப்படவில்லை.//

    ஒன்னுமே புரியலை! :)
    என்னை மாதிரி ஆசாமிங்களுக்கு இலக்கணம் எங்கே புரியும்? நீங்க தான் இவிங்க என்ன சொல்றாங்க-ன்னு சொல்லி உதவணும் :)

    ReplyDelete
  21. நல்ல கருத்துகள் இரவி. மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.

    ReplyDelete
  22. //குமரன் (Kumaran) said...
    அவங்க சொன்னதைச் சரியா நீங்க கேக்கலை போலிருக்கு. :-)//

    அவங்க சொன்னதை என்னைக்கு கேட்டிருக்கேன்? :)))

    //அது ஜகன்மோஹனாகாரம் (உலகை மயக்கும் வடிவம்). ஜகன்மோகனாஹாரம் இல்லை//

    ஓ...
    காரத்தை ஹாரம் ஆக்கி ஹாரத்தை காரம் ஆக்கிட்டேனா?
    யப்பா...இம்புட்டு காரமா இருக்கே! :))

    ReplyDelete
  23. நண்பர் இரவிசங்கர்,
    நல்ல பதிவு.
    பாராட்டுகள்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  24. //குமரன் (Kumaran) said...
    நல்ல கருத்துகள் இரவி. மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.//

    இந்தப் பட்டியலில் வேறு ஏதாவது சேர்க்க வேண்டி இருக்கா குமரன்?

    ReplyDelete
  25. //nayanan said...
    நண்பர் இரவிசங்கர்,
    நல்ல பதிவு.
    பாராட்டுகள்.
    அன்புடன்
    நாக.இளங்கோவன்//

    நன்றி நாக.இளங்கோவன் ஐயா!

    இது குறித்து தங்களின் ஒரு உதவியும் தேவைப்படுகிறது! மின்னஞ்சல் அனுப்புகிறேன்!

    ReplyDelete
  26. மிக அருமையான பதிவு. பாராட்டுகள். திருக்கோயில் நிர்வாகங்கள் கைமாறுகையில்.. அதனால் நற்பலனும் நற்செயலும் விளைய விரும்புவதே அனைவரின் விருப்பமும். அந்த வகையில் அரசு என்ற முறையில் கருணாநிதி அவர்களிடம் இந்தக் கோரிக்கையை வைப்பது சரியானதே.

    வாரியாரைத் தாக்கியது தவறு என்றே எடுத்துக் கொள்வோம். நந்தனாரைத் தாக்கியவர்கள்... பிறகு ஏற்றுக்கொண்டார்களா? அல்லது நந்தனாரைத் தாக்கிய காரணத்தினாலேயே அவர்கள் இன்னமும் தீயவர்களாகவே கருதப்படுகின்றார்களா? இந்தக் கேள்விக்கு நேர்மையான விடை சொல்கின்றவர்களுக்கு கருணாநிதி அவர்களிடம் கோரிக்கை வைக்கலாமா என்பதற்கும் நேர்மையான விடையிருக்கும்.

    ReplyDelete
  27. சைவத்திருமறைகள் பல போற்றிய இடம் தில்லை. அந்தத் தில்லையை சைவத் தமிழுக்கு எல்லையாக்கும் முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும்.

    திருமுறைகளையும் சைவப் பெருமறைகளையும் வளர்க்கும்... உலகறியச் செய்யும் மையமாகவும் தில்லைக் கோயிலை உருவாக்க வேண்டும். தமிழை மின்னணுவில் ஏற்றி...உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும். அத்தோடு ஒரு இணையதளம் அமைத்து கோயிலின் பெருமையையும், தமிழகத்துக் கலைத் திறமையையும் உலகறியச் செய்ய வேண்டும்.

    கோயிலின் பராமரிப்பு கண்டிப்பாக சீர்தொடங்க வேண்டியுள்ளது. புணரமைப்பு செய்து குடமுழுக்கு செய்ய வேண்டியது மிக்க தேவை.

    தில்லைக் கோயிலில் தமிழ் வழிபாட்டு முறைகளை முன்னிறுத்தி... தேவார திருமறைகளை ஒரு சாராருக்கோ ஊராருக்கோ சொந்தம் என்ற நிலையை மாற்றும் வகையில் அனைவரும் தில்லைக் கோயிலில் ஓதும் வகை செயல் வேண்டும்.

    திருக்கோயிலில் அரசியல் நுழையாமல், ஆன்மீகமும் தமிழும் ஆளும் வகை செய்தால் முதல்வருக்கும் அரசுக்கும் நற்பெயர் கிட்டும் என்பது மறுப்பற்றது.

    ReplyDelete
  28. //G.Ragavan said...
    மிக அருமையான பதிவு. பாராட்டுகள்//

    :)
    ராகவா! ராகவா!

    //அந்த வகையில் அரசு என்ற முறையில் கருணாநிதி அவர்களிடம் இந்தக் கோரிக்கையை வைப்பது சரியானதே//

    நன்றி!

    //அல்லது நந்தனாரைத் தாக்கிய காரணத்தினாலேயே அவர்கள் இன்னமும் தீயவர்களாகவே கருதப்படுகின்றார்களா?//

    இப்படி எல்லாம் கேள்வி கேட்டா, உனக்கும் மைனஸ் குத்து தான் விழும் ராகவா! பாத்து! :)
    ஆச்சார்ய ஹ்ருதயம் வலைப்பூ இன்வைட் அனுப்பி வைக்கட்டுமா? அங்க மட்டும் தான் கேள்வி கேக்குறவங்களை ரொம்ப புடிக்குது-ன்னு சொல்றாங்க! :))

    ReplyDelete
  29. // ஆச்சார்ய ஹ்ருதயம் வலைப்பூ இன்வைட் அனுப்பி வைக்கட்டுமா? அங்க மட்டும் தான் கேள்வி கேக்குறவங்களை ரொம்ப புடிக்குது-ன்னு சொல்றாங்க! :)) //

    ஆச்சார்ய ஹ்ருதயமா? குழந்தைத்தனமாக ஆச்சர்ய இருதயத்தோடு உலகைப் பார்க்கும் உள்ளங்களை மாச்சர்யம் நீக்கி ஐஸ்வர்யம் பெற்றுத்தரும் இருதயங்களைப் பற்றிப் பேச விழையும் வலைத்தளமா?

    ஆசிரியர் என்றார் கற்பிப்போர். அப்படி நாம் கற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விசிறி வீசு சிறியர்கள் நாம். ஆயினும் வலையில் விழாமல் இருக்கவே விரும்புகிறேன். :)

    ReplyDelete
  30. // G.Ragavan said...
    தில்லையை சைவத் தமிழுக்கு எல்லையாக்கும்//

    வாவ்! சொல்லால் விளையாடும் பழைய ராகவன் வந்துட்டான்-டா! வந்துட்டான்! :))

    //திருமுறைகளையும் சைவப் பெருமறைகளையும் வளர்க்கும்...//

    திருமுறை தெரியும்!
    அது என்ன பெருமறை ராகவா?

    //தமிழை மின்னணுவில் ஏற்றி...உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும்//

    இதைத் தெலுங்குகாரவுங்க திருப்பதியில் பண்ணி முடிச்சிட்டாங்க! தெலுங்கு வளர்த்த தமிழ்-ன்னு ஆகிப் போச்சே! :)

    //அத்தோடு ஒரு இணையதளம் அமைத்து//
    Here u go!
    http://shrichidambaramtemple.org
    ஒரு தீட்சிதர் சொந்த முயற்சியில் அமைத்துள்ள அழகான வலைத்தளம்! ஆனா நாயன்மார்கள் பத்தி ஒரு வரி?...மூச்! :)

    //திருக்கோயிலில் அரசியல் நுழையாமல்//

    இது கொஞ்சம் கஷ்டம்!
    ரொம்ப ஓவர் எதிர்பார்ப்பு எல்லாம் கூடாது! தீட்சிதர்கள் காலத்திலும் அவங்க லெவல்-ல அரசியல் இருந்துச்சி! இனி வேற லெவல்-ல இருக்கும்! :)

    நமக்கு, குறைந்தபட்ச நடவடிக்கைகள் தான் உடனடித் தேவை!
    அலை எப்ப ஓயறது? எப்ப குளிக்கறது? :)

    ReplyDelete
  31. இடம், பொருள், ஏவல் - முத்துக்குமார்!
    அழுகையும் ஓலமுமாக முத்துக்குமாரின் உடலைப் பார்க்க வந்த அவருடைய மைத்துனர் கருக்கவேல், யாரிடமும் பேசத் திராணியற்று மயக்கமானார். சில நிமிடங்களில் லேசாகக் கண் விழித்தவரிடம், "முத்துக்குமார் எந்த அமைப்பிலாவது இருந்தாரா?" என ஒரு நிருபர் கேட்க,

    "ஆமாங்க... 'தமிழ்'ங்கிற தீவிரவாத அமைப்புல இருந்தான்னு கொட்டை எழுத்துல போடுங்க...

    * ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில பேசாம தமிழ் மேல வெறி பிடிச்சு அலைஞ்சு,
    * எந்த நேரமும் ஈழத்தைப் பத்தியே பேசி,
    * கடைசியில ஒரு எழவும் நடக்காம போன வருத்தத்துல உயிரையே விட்டுட்டான்.

    அவனைப் போய் எந்தத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன்னு கேட்குறீங்களே?" எனத் தலையிலடித்துக் கொண்டு அழுதார் கருக்கவேல்.
    - ஜூனியர் விகடன் (Feb 04)

    பத்திரிகையாளார்கள் இது போன்ற கேள்விகளை ஒரு தீவிரவாதத் தாக்குதலின் போது கேட்கலாம்! இங்கேயுமா? அதுவும் இப்போதேவா? ஒரு இடம், பொருள், ஏவல் இல்லை? :(

    ==================================இதில் அந்த நிருபர் "தீவிரவாத அமைப்பு" என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லையே? "எந்த அமைப்பிலாவது (organization) இருந்தாரா?" என்று தான் கேட்டிருக்கிறார்.அதை மகன் இறந்த சோகத்தில் முத்துகுமாரின் தந்தை தான் தவறாக புரிந்துகொண்டார் என்றால் நீங்களுமா?

    ReplyDelete
  32. //ஆச்சார்ய ஹ்ருதயம் வலைப்பூ இன்வைட் அனுப்பி வைக்கட்டுமா? அங்க மட்டும் தான் கேள்வி கேக்குறவங்களை ரொம்ப புடிக்குது-ன்னு சொல்றாங்க! :))//

    உங்க அரசியல் அருமையான அரசியல். வாழ்க வளமுடன்!

    - ஓரத்திலிருந்து வேடிக்கை பார்க்கும் ஒருவன்.

    ReplyDelete
  33. @அனானி
    //இதில் அந்த நிருபர் "தீவிரவாத அமைப்பு" என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லையே?//

    நானும் அப்படிப் பயன்படுத்தினார்-ன்னு சொல்லலையே!

    //"எந்த அமைப்பிலாவது (organization) இருந்தாரா?" என்று தான் கேட்டிருக்கிறார்//

    அதை எப்போ கேட்கணும்? எங்கே கேட்கணும்? யார் கிட்ட கேட்கணும்-ன்னு விவஸ்தை இருக்கு-ல்ல?
    சடலம் இருக்கும் போது, உற்றாரிடம் கேட்பதைத் தவிர்க்கலாம் அல்லவா?

    //அதை மகன் இறந்த சோகத்தில் முத்துகுமாரின் தந்தை தான் தவறாக புரிந்துகொண்டார் என்றால் நீங்களுமா?//

    மொதல்ல படிங்க! அப்படிச் சொன்னது தந்தை அல்ல! மைத்துனர்!

    ஐயா அனானி
    "தீவிரவாத அமைப்பு" என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லையே?-ன்னு பாத்து பாத்து சொல்லாராய்ச்சியை நீங்க வேணும்னா பண்ணலாம்!

    ஆனா அப்படிப் பண்ணக் கூடிய சூழல் அங்கில்லைங்க! மொதல்ல பரிவு அணுகுமுறையில் அணுகப் பாருங்க!

    விசாரணைக்கு உரியவர் தப்பு தண்டா கேசும் இல்லை! விசாரிப்பவர் போலீசும் இல்லை! பத்திரிகையாளர்!

    சொல்ல வந்ததைப் பரிவோட புரிஞ்சிக்கிட்டு, அப்புறம் உங்க சொல்லாராய்ச்சியை வச்சிக்குங்க!

    ReplyDelete
  34. //Anonymous said...
    உங்க அரசியல் அருமையான அரசியல். வாழ்க வளமுடன்!//

    ஓரத்திலிருந்து வேடிக்கை பார்க்கும் ஒருவரே...
    பேர் சொல்லாம, ஓரத்தில் இருந்து வேடிக்கை பாத்துக்கிட்டு,
    போற வரவனை எல்லாம் அரசியல் பண்றான்-ன்னு சதாய்க்கும் உங்க திண்ணைப் பேச்சு அரசியலை விடவா இது பெரிய அரசியல்? :)))

    ReplyDelete
  35. //ILA said...
    Xlnt!//

    TanQ

    என்ன இளா இது? ஆன்மீகப் பக்கம்? :))

    ReplyDelete
  36. @ஓரத்திலிருந்து வேடிக்கை பார்க்கும் ஒருவரே...

    தில்லையம்பல வழிபாட்டு மேம்பாடு பத்தி ஒன்னும் சொல்லாம,
    யார் யார் வராங்கோ, என்னென்ன பேசறாங்கோ-ன்னு மட்டும் பாத்துக்கிட்டு, அரசியல் டயலாக் அடிக்கும் உம்ம அரசியல் எப்படி?

    அரசியலுக்கு அரசியல் வையகத்தில் உண்டு வாத்தியாரே! :)

    ReplyDelete
  37. அருமையான பதிவு கே.ஆர்.எஸ்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. அருமையான படிவு ரவி!!!

    உங்களின் எண்ணங்கள் ஈடேர வாழ்த்துக்கள்!

    (அனேகமாக ஒரு வருடங்களுக்குப் பிறகு நான் இடும் முதல் பின்னூட்டம்,நல்ல ஒரு பதிவிலிருந்து மீண்டும் ஆரம்பித்து மகிழ்ச்சியே!)

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  39. உங்க கருத்தே சிறப்பா இருக்கு. முதலில் அரசு இதை நிறைவேற்றட்டும். பிறகு அடுத்த கோரிக்கையை வைப்போம். :))

    ReplyDelete
  40. // G.Ragavan said...
    ஆச்சார்ய ஹ்ருதயமா? குழந்தைத்தனமாக ஆச்சர்ய இருதயத்தோடு உலகைப் பார்க்கும் உள்ளங்களை மாச்சர்யம் நீக்கி ஐஸ்வர்யம் பெற்றுத்தரும் இருதயங்களைப் பற்றிப் பேச விழையும் வலைத்தளமா?//

    :))
    //இருதயத்தோடு-மாச்சர்யம்-ஐஸ்வர்யம்// - You got the language, you are fully qualified :)

    //ஆயினும் வலையில் விழாமல் இருக்கவே விரும்புகிறேன். :)//

    தப்பிச்சீங்க! :)

    ReplyDelete
  41. //Natty said...
    அருமையான பதிவு கே.ஆர்.எஸ்... வாழ்த்துக்கள்
    //

    நன்றிங்க Natty!

    ReplyDelete
  42. // அல்லது நந்தனாரைத் தாக்கிய காரணத்தினாலேயே அவர்கள் இன்னமும் தீயவர்களாகவே கருதப்படுகின்றார்களா? //

    நந்தனாரைத் தாக்கினார்களா? யார் தாக்கியது? எப்போது? வாரியார் சுவாமிகள் முதல் கீதா சாம்பசிவம் அம்மா வரை திருநாளைப் போவார் உண்மைச் சரிதத்தை பெரியபுராண அடிப்படையில் எழுதி ஓய்ந்தாயிற்று. அதைப் படித்திருக்கிறீர்களா? முதல்ல போய்ப் படிங்க.

    இது போக, பின்னாளில் கோபாலகிருஷ்ண பாரதியார் இதே கதையை பல கற்பனைகள் சேர்த்து நாடக வடிவமாக எழுதியதில் கூட "தாக்குதல்" எதுவும் கிடையாது. ஆண்டை நந்தனார் தில்லை போவதைத் தடுக்க முயற்சிக்கிறார்.. சிவனருளால் நந்தனார் அதைக் கடந்து தில்லை போனதும் தன் குலத்தை எண்ணி தானே நின்றுவிடுகிறார்.

    ஒன்றுமே படிக்காமல், இப்படி போகிற போக்கில் ஏதோ கொசு அடிப்பது மாதிரி ஒரு கமெண்ட் விட்டு விட்டுப் போகிறீர்களே.. என்ன நியாயம் சார் இது?

    மேலும், புராணப் படி, இறுதியில் திருநாளைப் போவாரை தில்லை வாழ் அந்தணர் உட்பட அனைவரூம் தொழுகின்றனர். இல்லையா? இன்றளவும், எல்லா சிவன்கோவில்களிலும் அறுபத்து மூவரில் திருநாளைப் போவார் உட்பட எல்லாக் குலங்களையும் சேர்ந்த, குலமுறைகள் அறியாத அடியார்களின் மூர்த்திகள் உள்ளன. சிவாச்சாரியார்களும், தீட்சிதர்களூம் அவற்றை பக்திபாவாத்துடன் பூஜிக்கிறார்களே? உண்டா இல்லையா? சொல்லுங்கள். (இந்தக் கேள்வியை பாரதி தன்னுடைய கட்டுரை ஒன்றில் கேட்கிறார்.)

    // இந்தக் கேள்விக்கு நேர்மையான விடை சொல்கின்றவர்களுக்கு கருணாநிதி அவர்களிடம் கோரிக்கை வைக்கலாமா என்பதற்கும் நேர்மையான விடையிருக்கும். //

    திமுக ஆட்சிக்கு வந்ததும், தில்லைக் கோவிலுக்கு நெடுஞ்செழியன் போனார். அப்போது மரபுப் படி, தீட்சிதர்கள் அவரை வரவேற்று, விபூதி அளித்தனர். அதைக் கையில் வாங்கி பூ என்று தீட்சிதர் மேலேயே ஊதி கொக்கலித்தார் நெடுஞ்செழியன். இந்த விஷயம் தெரியுமா? இதற்காக திமுக என்றாவது இந்துக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறதா? கேட்குமா?

    இது நாள் வரை வாரியாரைத் தாக்கியதற்காக கருணாநிதி மன்னிப்புக் கேட்டிருக்கிறாரா? இல்லை, அதை ஒப்புக்கொண்டாவது இருக்கிறாரா?

    பேசவந்துட்டானுங்க நேர்மையைப் பத்தி.

    ReplyDelete
  43. //உங்கள் நண்பன்(சரா) said...
    அருமையான படிவு ரவி!!!//

    இந்த மாற்றம் நல்லபடியா "படி"யணும் தான் சரா!

    //உங்களின் எண்ணங்கள் ஈடேர வாழ்த்துக்கள்!//

    என் எண்ணம் மட்டுமில்லைங்க! பல இறையன்பர்கள், இறைவனையே சட்டதிட்டத்துக்குள் ஒடுக்க நினைக்காதவர்கள் விழைவும் கூட!

    //(அனேகமாக ஒரு வருடங்களுக்குப் பிறகு நான் இடும் முதல் பின்னூட்டம்,நல்ல ஒரு பதிவிலிருந்து மீண்டும் ஆரம்பித்து மகிழ்ச்சியே!)//

    ஹா ஹா ஹா!
    தங்கள் வலையுலகப் பயணம் இங்கிருந்து இனிதே மீள்-துவங்கட்டும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  44. //குறும்பன் said...
    உங்க கருத்தே சிறப்பா இருக்கு. முதலில் அரசு இதை நிறைவேற்றட்டும்//

    நன்றி குறும்பன்!
    அரசுக்கு ஆன்மீக வளர்ச்சி என்பது குறிக்கோள் அல்ல! எனவே நாம் தான் அரசுக்கு எடுத்துச் சொல்லி, இதில் உள்ள நன்மைகளைக் காட்ட வேண்டும்!

    //பிறகு அடுத்த கோரிக்கையை வைப்போம். :))
    //

    போச்சுறா! இப்பவே அடுத்த கோரிக்கையா? :))

    ReplyDelete
  45. @ஜடாயு
    //பேசவந்துட்டானுங்க நேர்மையைப் பத்தி//

    ஏகவசனத்தைத் தவிர்த்து விடுங்கள் ஜடாயு சார்!
    எல்லார்க்கும் நன்றாம் பணிதல்!
    மற்றபடி உங்கள் கருத்துக்களைத் தாரளமாகத் தரவோடு முன் வையுங்கள்!

    //அதைக் கையில் வாங்கி பூ என்று தீட்சிதர் மேலேயே ஊதி கொக்கலித்தார் நெடுஞ்செழியன்//

    தவறு தான்!
    கடமையோடு, கண்ணியம்-கட்டுப்பாடு வேண்டும் என்று விதித்தவர் அண்ணா! அதற்காகவாவது இப்படிச் செய்திருக்கக் கூடாது!

    ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும், யோசனைகளை அரசுக்குச் சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?

    ReplyDelete
  46. //(From Boston/Lowell? :)//
    No. My id was hijacked when I
    commented on someone else's blog.
    :-(
    I enjoy reading your posts!

    ReplyDelete
  47. தீட்சதர்கள் நந்தனாரை தாக்கியதாக ராகவன் சொல்கிறார். உங்கள் கருத்தென்ன ரவி? இந்த செய்தி நான் அறியாதது. நான் அறிந்த செய்தி ஒன்று சொல்கிறேன். தில்லையை பீரங்கி வைத்து தகர்க்க வேண்டுமென்று சொன்னவர்கள் தான் இன்று ஆட்சியில் இருக்கிறார்கள். இதை அவர்கள் மறுக்கவும் இல்லை. மறந்ததாகச் சொல்லவுமில்லை. இது விஷயம் உங்களுக்குத் தெரியுமல்லவா?

    ReplyDelete
  48. //Anonymous said...
    //(From Boston/Lowell? :)//
    No. My id was hijacked when I
    commented on someone else's blog.
    :-(//

    Oh, sorry to hear that! Get a new id, Sire.
    I was just tracking the IP & location, bcoz I am getting a lotsa anony responses these days. Thatz why asked u.
    Sorry, If I had embarrased you.

    //I enjoy reading your posts!//

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  49. //ஓகை said...
    தீட்சதர்கள் நந்தனாரை தாக்கியதாக ராகவன் சொல்கிறார். உங்கள் கருத்தென்ன ரவி?//

    பதிவில் நந்தனார் சிலை மீண்டும் நிறுவல் இருக்கு! உங்கள் கருத்தென்ன ஓகை ஐயா? :)

    எதுக்கு இந்த விடயத்தில் மட்டும் அடியேன் கருத்தைக் கேட்கறீங்க-ன்னு புரியலை!
    ஆக்கங்களைப் பேசிட்டு, இதைப் பேசினால் கூட பரவாயில்லை!
    ஆனால் ஆக்கமே பேசாமல், தாக்கம் மட்டுமே பேசுவேன்-ன்னா என்ன செய்ய? :(

    கீதா சாம்பசிவம் அம்மா போன்றோர்கள் இது பற்றிச் சொல்லியிருக்காங்க-ன்னு ஜடாயு சொல்கிறார்! ராகவனும் சைவச் செம்மல் தான்! ராகவன் கருத்தை ராகவனே வந்து விளக்கட்டும்!

    //தில்லையை பீரங்கி வைத்து தகர்க்க வேண்டுமென்று சொன்னவர்கள் தான் இன்று ஆட்சியில் இருக்கிறார்கள்//

    சீரங்க நாதனையும் தான் அப்படிக் கவிதையாகப் பாடினார்கள்! பிளந்து விட்டார்களா?
    ஆட்சியாளர்களின் பூர்வீகம் பற்றியெல்லாம் "இப்போது" பேசினால், நந்தனார் சிலை பிப்-23க்குள் நிறுவப்பட்டு விடும்-ன்னு சொல்லுங்க! நானும் பேசறேன்!

    ReplyDelete
  50. வாசகர் பரிந்துரை இப்பதிவிற்கு: 3 of 9 Votes!
    இத்தனை பேர் வாழ்த்திப் பின்னூட்டம் இட்டிருக்காங்க! அப்படி இருக்கும் போது ஏன் இப்படி?


    இது பற்றி எல்லாம் நான் என்னிக்குமே கவலைப்பட்டதில்லை! சொல்லப் போனால் இருக்கும் நேரத்தில் அதையெல்லாம் எட்டிப் பார்ப்பது கூட இல்லை! நண்பர்கள் சொல்லித் தெரிவது தான்!

    இதுக்கு-ன்னு ஒரு பவித்ரமான கும்மி க்ரூப் இயங்குவது அடியேனுக்கு மார்கழி மாதத்தின் போது தான் லேசாத் தெரியும்! But Who Cares?

    ஆனால் இந்தப் பதிவின் யோசனைகளை அரசுத் துறைக்கு முன் வைக்க இருப்பதால் தான், I am little concerned about this Rating!

    இந்தப் பதிவைப் படித்து, இதிலுள்ள யோசனைகளைச் சரி என்று நினைத்தவர்கள்,
    இந்த வீண் Rating கும்மியை முறியடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! நன்றி அன்பர்களே!

    ReplyDelete
  51. "‘Oh Lord, I want to see your Cosmic Dance in Your Nritya Sabha. But, how can I? On account of my low birth they will not allow me to enter the temple.’ For days he went on praying like this. The Lord, pleased with his devotion, appeared in his dream and said: ‘Oh noble soul, do not grieve. You will come to Me. Take a fire bath. Then come to My Kanaka Sabha along with the Brahmins.’ Nandanar woke up and was highly pleased. At the same time, the Lord appeared before the Brahmins of Tillai, in their dream, and said: ‘O Brahmins, My dearest devotee, Tiru Nalai Povar, has come to Tillai. Prepare a sacred fire. Nandanar will take bath in it and then come to Me.’

    The next day, the Brahmins prepared the sacred fire. They went to Nandanar, prostrated before him and related their dream. Nandanar went round the fire, and with His Name on his lips and his mind fixed on the lotus feet of the Lord, he jumped into the fire. He emerged from the fire with a new holy body, with sacred ashes smeared all over, the holy thread and matted locks. He was then taken inside the temple."
    -----Swami Sivananda's version of Nandanar.

    In this day and age how would one
    intrepret this? Judging from the
    way Mr.Arumugasamy was treated it
    is hard to believe that Dikshithars
    Ancestors would have been kind to any Dalit. I have to add that other upper class people were no better than the Dikshithars. We have to move on. Nandanar should be
    honored!

    ReplyDelete
  52. //Anonymous said...
    We have to move on. Nandanar should be honored!//

    அப்பாடா! நீங்க நல்ல அனானியா இருப்பீங்க போலிருக்கே! வாழ்க!

    ReplyDelete
  53. கருத்துச் சண்டை ஒரு புறம் இருக்கட்டும்!

    ஆனால் நந்தனாருக்கு மதிப்புச் செய்யுங்கள்!

    மேல் முறையிட்டுக்குள் நந்தனார் சிலையை நிறுவி வி்ட்டால்...
    பின்னர் யாராலும் அதன் மீது மீண்டும் கை வைக்க முடியாது! ஒரு தயக்கம் இருக்கும்!
    அது தான் பதிவின் தலையாய குறிக்கோள்! அதற்குத் துணை நில்லுங்கள்! நன்றி!

    இதோ, தமிழக முதல்வரிடம் தரப் போகும் மனு!
    http://www.petitiononline.com/Chid2009/petition.html
    உங்கள் கையெழுத்தை இட்டு, நந்தனின் தலையெழுத்தை மாற்றுவீராக!


    அடியேன்,
    அம்பலவாணர் பேரால், மிக மிக நன்றி! திருச்சிற்றம்பலம்!

    ReplyDelete
  54. // Blogger ஜடாயு said...

    // அல்லது நந்தனாரைத் தாக்கிய காரணத்தினாலேயே அவர்கள் இன்னமும் தீயவர்களாகவே கருதப்படுகின்றார்களா? //

    நந்தனாரைத் தாக்கினார்களா? யார் தாக்கியது? எப்போது? வாரியார் சுவாமிகள் முதல் கீதா சாம்பசிவம் அம்மா வரை திருநாளைப் போவார் உண்மைச் சரிதத்தை பெரியபுராண அடிப்படையில் எழுதி ஓய்ந்தாயிற்று. அதைப் படித்திருக்கிறீர்களா? முதல்ல போய்ப் படிங்க.

    இது போக, பின்னாளில் கோபாலகிருஷ்ண பாரதியார் இதே கதையை பல கற்பனைகள் சேர்த்து நாடக வடிவமாக எழுதியதில் கூட "தாக்குதல்" எதுவும் கிடையாது. ஆண்டை நந்தனார் தில்லை போவதைத் தடுக்க முயற்சிக்கிறார்.. சிவனருளால் நந்தனார் அதைக் கடந்து தில்லை போனதும் தன் குலத்தை எண்ணி தானே நின்றுவிடுகிறார். //

    வணக்கம் ஜடாயு சார். தாக்குதலைப் பத்தித்தான் இப்பப் பேச்சா! சீர்திருத்தங்களைப் பத்தி இல்லையா. சரி தாக்குதலுக்கே வருவோம். தாக்குதல் என்பது எப்படியெல்லாம் நடத்தப்படலாம்? ஆயுதங்களையோ கையையோ கொண்டு மட்டுந்தானா? அப்ப நுண்மருங்கல் தாக்கு அணங்கு சீதைன்னு கம்பர் சொல்றாரே. அங்க தாக்கப்பயன்படுத்தப்பட்டது ஆயுதமா? அந்த ஆயுதம் தாங்கினால் உடம்பு வீங்குமா? :)

    என்ன சொன்னீங்க? தன் குலத்தை எண்ணித் தானே நின்று விட்டாரா? ஏன் நினைக்கனும்? ஏன் நிக்கனும்? அந்தக் குலத்தவர்கள் உள்ள போகலாம்னு இருந்தா... தன்னுடைய குலமே நினைவுக்கு வந்திருக்காதே! ஆக... குலத்தை நினைக்க வேண்டிய அளவிற்குச் சட்டம் இருந்திருக்கிறது. அது கொடுங்கோன்மை. அந்தக் கொடுங்கோன்மை தாக்கப்பட்ட மேன்மையரைப் போய்... தன் குலத்தை எண்ணி நின்றார்... என்று சொல்வது எப்படியிருக்கு தெரியுமா? ஊன் மெலிந்துரு ஞமலி ஊனறு எலும்பைக் கடிக்க.... வாலெயிறு ஊறு குருதியைச் சுவைத்தின்புறு நிலையொத்தது.

    தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே...நாவினால் சுட்ட வடு. கோயிலுக்கு வரனும்னு விரும்புறவனை... வெளிய நின்னு கும்புடனும்னு சட்டம் செஞ்சி வைச்சிருந்தா...அதைச் சமூகத்தின் மீதான தாக்குதல்னு சொல்லாம.... தூக்குதல்னா சொல்வாங்க?

    ஆகக்கூடி... ஆண்டவனே கனவுல வந்து சொன்னாத்தான் கேப்பாங்க. அப்படித்தானே. இங்கயும் ஆண்டவன் சொன்னது. நீதியை ஆண்டவன் சொன்னதுதான். ஆனா கனவுல இல்ல. நினைவுல.

    // ஒன்றுமே படிக்காமல், இப்படி போகிற போக்கில் ஏதோ கொசு அடிப்பது மாதிரி ஒரு கமெண்ட் விட்டு விட்டுப் போகிறீர்களே.. என்ன நியாயம் சார் இது? //

    கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு என்று உற்ற கலைமடந்தை ஓதுகிறாள். நான் எங்கே! ஏதோ எனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொன்னேன்.

    ReplyDelete
  55. // என்ன சொன்னீங்க? தன் குலத்தை எண்ணித் தானே நின்று விட்டாரா? ஏன் நினைக்கனும்? ஏன் நிக்கனும்? அந்தக் குலத்தவர்கள் உள்ள போகலாம்னு இருந்தா...//


    குல பேதம் இருந்தது. சாதிக் கொடுமை இருந்தது, அதை யாரூம் மறுக்கவில்லை. அந்த சூழலில் வாழ்ந்த அந்த மனிதர் தன் குலத்தை எண்ணி வெட்கினார் என்பது தான் இலக்கியத்தில் இருப்பது, சேக்கிழார் பதிவு செய்தது.

    அது சரியா, தவறா என்று இன்றைய சமூக மதிப்பீடுகளின் பற்றி ஆராய்வது பற்றி நான் கூறவே இல்லைஇ. வரலாற்றை உள்ளபடி, சரியான தரவுகளுடன், உள்நோக்கங்கள் இல்லாமல் சொல்லுங்கள் என்று மட்டும் தான் கூறுகிறேன்.

    அந்தக் காலத்திய ஒரு குறீப்பிட்ட சாராரின் தவறுகளுக்கு இன்றைக்கு ஒரு கூட்டத்தையோ சமூகத்தையோ பொறுப்பாக்குவது (அது யாராக இருந்தாலும்),மிகத் தவறான அணுகுமுறை.

    *கற்று* மறப்போம், முன்நோக்கி செல்வோம் என்கிறார் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்.
    அவரது கட்டுரை, என் மொழியாக்கத்தில் -
    http://www.thinnai.com/?module=displaystory&story_id=206041413&format=html

    ஜெயமோகனும் இதையே சொல்கிறார்:

    http://jeyamohan.in/?p=1330

    "ஒரு நாகரீகமான இந்து பலநூற்றாண்டுக்காலம் இந்த நாட்டில் இந்துமதம் நிகழ்த்திய சாதிக்கொடுமைகளுக்காக வெட்கப்பட்டாகவேண்டும். ஒரு நாகரீகமான கிறித்தவன் உலகமெங்கும் பன்மைக்கலாச்சாரம் மீது கிறித்தவம் நிகழ்த்திய அழித்தொழிப்புகளுக்காக வெட்கியாக வேண்டும். ஓரு நாகரீகமான இஸ்லாமியன் சென்றகாலத்தில் மதவெறிகொண்ட இஸ்லாமிய மன்னர்களால் நிகழ்த்தப்பட்ட அழிவுவேலைகளுக்காக வெட்கப்பட்டாக வேண்டும். ஒவ்வொரு கம்யூனிஸ்டும் ஸ்டாலினுகாகவும் போல்பாட்டுக்காகவும் தலைகுனிந்தாகவேண்டும். அது நம் ஒவ்வொருவர் மீதும் வரலாறு ஏற்றிவைத்துள்ள சுமை"

    ReplyDelete
  56. // இதோ, தமிழக முதல்வரிடம் தரப் போகும் மனு!
    http://www.petitiononline.com/Chid2009/petition.html //

    நல்ல முயற்சி கேயாரெஸ். பாராட்டுக்கள்.

    இதை சும்மா polemical ஆக, கோஷங்களுடன், வெறுப்பு அரசியல் கலந்து முன்வைக்காமல், வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைத்தால் இன்னும் சிறப்பாக, நன்றாக இருக்கும்.

    முதுபெரும் எழுத்தாளர் மலர்மன்னன் அவர்கள் திண்ணை இதழில் இந்த சிலையின் பின்னணி பற்றி, பல சான்றுகளுடன் அருமையாக எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை இதோ -
    http://www.thinnai.com/?module=displaystory&story_id=20511252&format=html

    // உங்கள் கையெழுத்தை இட்டு, நந்தனின் தலையெழுத்தை மாற்றுவீராக! //

    சிற்றம்பலத்தில் அம்பலவாணருடன் ஒன்றுலகந்து ஜோதியாய் நிறைந்து விட்ட நந்தனுக்கு ஏதையா தலையெழுத்து? அதுதான் எப்போதோ அழிந்து விட்டதே. தயவு செய்து அந்த "தலையெழுத்து" வரியை நீக்கி விடுங்கள். ஒரு மகா பக்தரை, நாயன்மாரை அவமதிப்பது போல் இருக்கிறது.

    ReplyDelete
  57. //1935 வரை இருந்து வந்த சிலையை, கோபால கிருஷ்ண பாரதியாரும், ஊ.வே. சாமிநாத அய்யரும், மகாதேவனைப் போன்ற பல அன்பர்களும் தரிசித்து மகிழ்ந்த நந்தனார் சிலையை, அல்லது அதனைப் போன்ற சிலையைத்தான் மீண்டும் நிறுவ விழைவதால் இதில் சம்பிரதாயச் சிக்கல் எதற்கும் இடமில்லை.


    நந்தனார் சிலையை நடராஜப் பெருமான் சன்னதியில் நிறுவ தீட்சிதப் பெருமக்கள் தாமகவே முன் வருவார்களேயானால் அது அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும். அவ்வாறு இல்லையேல் நடராஜப் பெருமானைத் தொழுது மகிழ்வோர் அனைவரும் தில்லை வாழ் அந்தணர்களுக்கு நந்தனாரின் திருவுருவச் சிலையை ஆலயத்துள் நிறுவுமாறு கடிதம், தந்திகள் வாயிலாக விண்ணப்பம் செய்ய வேண்டும். சிலையினை உருவாக்கவும் நிறுவவும் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்குமாயின் அன்பர்கள் அனைவரும் நன்கொடை வழங்கி அந்தத் தடையைக் களைய முன்வரவேண்டும். இக்கருத்திற்கு உடன்படும் உலகெங்கிலும் உள்ள அன்பர்கள், பொது தீட்சிதர்கள், சிதம்பரம் நடராஜர் ஆலயம், சிதம்பரம், தமிழ் நாடு என்ற முகவரிக்கு இவ்வாறான விண்ணப்பத்தைத் தெரிவிக்கவேண்டும். - From Malarmannan's article//

    Thank you!
    I never thought that I
    will agree with Malarmannan's views
    in this lifetime.

    ReplyDelete
  58. //பதிவில் நந்தனார் சிலை மீண்டும் நிறுவல் இருக்கு! உங்கள் கருத்தென்ன ஓகை ஐயா? :)//

    கட்டாயம் செய்யவேண்டிய செயல். இது குறித்து நேரிலேயே உங்களிடம் கூறியதாக நினவில் இருக்கிறது.அந்த சிலை நீக்கப்பட்டது என் மனதில் உறைத்த வலி.

    ReplyDelete
  59. // வாரியாரைத் தாக்கியது தவறு என்றே எடுத்துக் கொள்வோம். நந்தனாரைத் தாக்கியவர்கள்... பிறகு ஏற்றுக்கொண்டார்களா? அல்லது நந்தனாரைத் தாக்கிய காரணத்தினாலேயே அவர்கள் இன்னமும் தீயவர்களாகவே கருதப்படுகின்றார்களா? இந்தக் கேள்விக்கு நேர்மையான விடை சொல்கின்றவர்களுக்கு கருணாநிதி அவர்களிடம் கோரிக்கை வைக்கலாமா என்பதற்கும் நேர்மையான விடையிருக்கும்.//

    இப்படி எழுதியதற்கு இப்படி விளக்கமா?

    //வணக்கம் ஜடாயு சார். தாக்குதலைப் பத்தித்தான் இப்பப் பேச்சா! சீர்திருத்தங்களைப் பத்தி இல்லையா. சரி தாக்குதலுக்கே வருவோம். தாக்குதல் என்பது எப்படியெல்லாம் நடத்தப்படலாம்? ஆயுதங்களையோ கையையோ கொண்டு மட்டுந்தானா? அப்ப நுண்மருங்கல் தாக்கு அணங்கு சீதைன்னு கம்பர் சொல்றாரே. அங்க தாக்கப்பயன்படுத்தப்பட்டது ஆயுதமா? அந்த ஆயுதம் தாங்கினால் உடம்பு வீங்குமா? :)//

    ReplyDelete
  60. Status Update:
    இந்த முயற்சிக்கு நாக.இளங்கோவன் ஐயா பெரிதும் அறிவுறுத்தி உதவுகிறார்!
    காசி அண்ணன், முனைவர். நா. கண்ணன் அவர்கட்கும் நன்றி!

    இதுகாறும் ஐம்பது ஒப்பங்கள் கிடைத்துள்ளன.
    வாரயிறுதி வரை பார்த்துவிட்டு, அடுத்தவாரம், மனுவை அளித்துவிடலாம்-ன்னு எண்ணம்.

    அரசின் காதுகளுக்குக் கொண்டு போய்விட்டால் போதும்! இன்னும் பலர் பிடித்துக் கொண்டு விசிறி விடுவார்கள்! இந்த வேள்வித் தீ வளரும்!

    பல மாற்றுக் கருத்துடை அன்பர்களும் தங்கள் கையொப்பம் இட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி!

    இந்த நன்முயற்சியை மேலும் முனைப்பாக்க, எல்லாத் தரப்பினரும், தயங்காது யோசனை சொல்லுங்கள்!

    * அன்று தில்லைக்குள் வர,
    நந்தனார் வரவேற்கப்பட்டரா என்ற ஆய்வைத் தற்சமயம் விடுவோம்!
    * இன்று தில்லைக்குள் வர,
    நந்தனாரை முழுமூச்சாய் வரவேற்போம்! பூரண பொற் குடம் எடுப்போம்!

    ReplyDelete
  61. இதில் சிறப்பு என்னவென்றால் தில்லையில் தீட்சிதரிமிருந்து எம்பெருமானை மீட்டிருப்பது நாத்திகர்கள். இது என்ன திருவிளையாடல்! அட்டா

    ReplyDelete
  62. The current CM is a complete politician and is not known to be the most moral person around. Hence there is the concern that with elections around the corner and with his government not having a great name right now , he will play politics with the issue, disrespect the theists, bring up atheism and make this a big issue as in old times to divert the attention of the people.

    ReplyDelete
  63. //ஓசை said...
    இதில் சிறப்பு என்னவென்றால் தில்லையில் தீட்சிதரிமிருந்து எம்பெருமானை மீட்டிருப்பது நாத்திகர்கள். இது என்ன திருவிளையாடல்! அட்டா//

    :))
    நாத்திகர்க்கும் ஆத்திகர்க்கும் நடுநின்ற நடுவே!
    என்னரசே யான் புகலும் இசையும் அணிந்தருளே!

    ReplyDelete
  64. //Anonymous said...
    Hence there is the concern that with elections around the corner..//

    Thiru Anony
    So what is your immediate concern now?
    * Nandanar back before Nataraja? OR
    * Who is the most moral person around?

    ReplyDelete
  65. //ஓகை said...
    //பதிவில் நந்தனார் சிலை மீண்டும் நிறுவல் இருக்கு! உங்கள் கருத்தென்ன ஓகை ஐயா? :)//

    கட்டாயம் செய்யவேண்டிய செயல். இது குறித்து நேரிலேயே உங்களிடம் கூறியதாக நினவில் இருக்கிறது.அந்த சிலை நீக்கப்பட்டது என் மனதில் உறைத்த வலி//

    மிக்க நன்றி ஓகை ஐயா!தங்கள் கையொப்பம் கண்டு மிகவும் மகிழ்ச்சி!

    ReplyDelete
  66. //ஜடாயு said...
    நல்ல முயற்சி கேயாரெஸ். பாராட்டுக்கள்.//

    நன்றி ஜடாயு சார்!
    உங்கள் கையொப்பம் கண்டு மெத்த மகிழ்ச்சி!

    //இதை சும்மா polemical ஆக, கோஷங்களுடன், வெறுப்பு அரசியல் கலந்து முன்வைக்காமல்//

    முற்றிலும் உண்மை!

    //வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைத்தால் இன்னும் சிறப்பாக, நன்றாக இருக்கும்//

    ஆதாரங்கள் பலவும் பலர் பேசி ஏற்கனவே தந்துவிட்டார்கள்! பல தரப்பும் சிலை "காணாமல் போனதை" ஒப்புக் கொண்டுள்ளன!
    அதனால் தான் அது பற்றிப் பதிவில் மீண்டும் பேசவில்லை!
    "இனி" செய்ய வேண்டிய ஆக்கம் பற்றி மட்டுமே பேசினேன்!

    மலர்மன்னன் கட்டுரைச் சுட்டிக்கு நன்றி! செல்வனும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்து இருந்தார்!

    //தயவு செய்து அந்த "தலையெழுத்து" வரியை நீக்கி விடுங்கள். ஒரு மகா பக்தரை, நாயன்மாரை அவமதிப்பது போல் இருக்கிறது//

    அப்படித் தோன்றியிருந்தால் அடியேனை மன்னியுங்கள்!
    "நந்தனார் சிலையின்" தலையெழுத்து என்று வேண்டுமானால் கொள்ளுங்கள்!

    ஆயிரம் சொன்னாலும், அந்தச் சிலையின் தலையெழுத்து, சிலரின் கையெழுத்தால் மாறிற்று!
    இப்போ பலரின் கையெழுத்தால் மீண்டும் மாறி நன்னிலைக்கு திரும்ப வேணும்! அவ்வளவே!

    ReplyDelete
  67. "பழைய" நந்தனார் சிலை பற்றிய குறிப்புகள்:
    1. ஆளுயரச் சிலை
    2. கைகளில் கடப்பாரையோடு
    3. கூப்பிய கரம்
    4. தோளில் மண்வெட்டி
    5. நின்ற திருக்கோலம்

    * மீண்டும் வடிவமைக்க நேர்ந்தால் இந்தக் குறிப்பு சற்று உதவும்-ன்னு நினைக்கிறேன்!

    இருந்த இடம்: நிருத்த சபை நடராஜரைப் பார்த்தவாறு, தெற்குத் தூணில்! நிருத்த சபை என்பது பொன்னம்பலத்துக்கு தெற்கே இருப்பது!


    * தில்லையில் இருந்து கடலில் தூக்கி எறியப்பட்ட பெருமாள், வேறொரு சிலையாக வந்து விட்டார்!
    பெருமாள் வந்தது போல் நந்தனும் வந்துவிட மாட்டானா என்ன?

    ReplyDelete
  68. // ஏகவசனத்தைத் தவிர்த்து விடுங்கள் ஜடாயு சார்! //

    ஒரு வீச்சில் அப்படி வந்து விட்டது, மன்னியுங்கள்.

    //அதைக் கையில் வாங்கி பூ என்று தீட்சிதர் மேலேயே ஊதி கொக்கலித்தார் நெடுஞ்செழியன்//
    // ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும், யோசனைகளை அரசுக்குச் சொல்வதற்கும் என்ன சம்பந்தம்? //

    இல்லையா? இந்த யோசனைகளைச் சொல்வதற்கு முன், இன்றைக்கு அரசு பீடத்தில் இருப்பவர் அந்தப் புனித ஆலயத்தையும், சைவ குருவையும் அவமதித்தவர், அவரது கட்சிக்காரர்கள் அவமதிப்பு செய்ய ஊக்குவித்தவர் என்பதையெல்லாம் மறந்து விடவேண்டுமா? எந்த ஊர் நியாயம் இது?

    இதற்கு என்ன பதில்? -

    // இது நாள் வரை வாரியாரைத் தாக்கியதற்காக கருணாநிதி மன்னிப்புக் கேட்டிருக்கிறாரா? இல்லை, அதை ஒப்புக்கொண்டாவது இருக்கிறாரா? //

    "சில பேர் பேசின உடனேயே தெரியும் - பொய்னு. ஆனா இவரைப் பாரு - உட்கார்றது, சிரிக்கறது, நிக்கறது எல்லாமே இல்லையா பொய்யா இருக்கு" என்று மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னாராம், வைரமான கவியரசைப் பார்த்து.

    ஏனோ அது ஞாபகம் வந்து தொலைக்கிறது.

    ReplyDelete
  69. //Veerantamil Said... நண்பர் கோவி.கண்ணன் இந்து வழிபாட்டு முறைகளை மட்டும் கேலி செய்யும் ஒரு சமய சார்பற்ற ?:-)) கடவுள் மறுப்பாளர்.

    அவரிடம் விளக்கம் கேட்டால் அவர் என்ன செய்வார் பாவம் ?//

    ஐயையோ நான் சமய சார்பற்றவன் என்று எங்கும் சொல்லவில்லை.

    இதுபற்றி விளக்கமாக ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

    எனக்கு மதச்சார்ப்பு உண்டு. நான் பகுத்தறிவாளன் அல்ல, போலி பகுத்தறிவாளன் தான், போலி மதச்சார்பின்மை என்னும் சந்தர்பவாதம் போல்.... போலி பகுத்தறிவாளனான என்னால் இந்து மதத்தை மட்டுமே கேள்வி கேட்கமுடியும். :)

    ReplyDelete
  70. பதிவின் நோக்கமே திசைதிரும்பி வாலறுந்த பட்டம் போல் எங்கெங்கோ போகிறது.

    சைவ வைணவ நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு இடங்களை கோவில்களை நிர்வகிக்க என ஒரு தனியான அமைப்பு ஏற்படவேண்டும்.இந்த ரீதியிலான பல சீர்திருத்தங்கள் இன்று காலத்தின் தேவை.பொதுவாக இறை நம்பிக்கை அற்ற (அல்லது அப்படிக் காட்டிக் கொள்ள பிரியப்படும்)மனிதர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது இந்த வித முயற்சிகள் பலனளிக்குமா என்ற நோக்கில பல கேள்விகள் எழுப்பப் படுகின்றன என எண்ணுகிறேன்.

    ஆனால் அதற்காக வலிந்த நியாயமற்ற ஒடுக்குதல்களைச் செய்த தீட்சிதர்கள் தங்கள் இடம் எது எனக் காட்டப்படவேண்டியவர்கள்.

    அந்த வகையில் நடந்த செயல்களும்,இப்போதைய இந்த முயற்சிகளும் வரவேற்கப்படவேண்டியவையே.

    கோவில்களில் சீர்திருத்தம்,நிரவாக மாறுதல்கள் என்பவை wish list ல் தான் இன்றைய சூழலில் இருக்க முடியும்.

    எந்த சார்புமற்ற ஒரு அரசு வரும் போதுதான் அந்த வித சுதந்திரங்கள் சாத்தியம்.சிங்கை போன்ற இடங்களில் அதை லீ போன்றவர்கள் சாதித்திருக்கிறார்கள்.எனவே something is better than nothing என்ற அளவிலே இன்றைய அரசின் செயல்பாடுகளும்,அரசிடம் முறையீடுகளும் வரவேற்கப்பட வேண்டியவை.

    மீண்டும் வாழ்த்துக்கள் ரவி.(நீங்கள் ரவியா அல்லது கண்ணனா?!)

    ReplyDelete
  71. @அறிவன்
    //பதிவின் நோக்கமே திசைதிரும்பி வாலறுந்த பட்டம் போல் எங்கெங்கோ போகிறது//

    ஹா ஹா ஹா!
    யார் எங்கே இழுத்துச் சென்றாலும்...
    நான் மறுபடியும், "தற்போது" நந்தனார் வரவேற்கப்பட வேண்டும்-ன்னு இழுத்துக்கிட்டு வந்துடுவேன், அறிவன் ஐயா! :)

    //அந்த வகையில் நடந்த செயல்களும்,இப்போதைய இந்த முயற்சிகளும் வரவேற்கப்படவேண்டியவையே//

    நன்றி! நன்றி!

    //கோவில்களில் சீர்திருத்தம்,நிரவாக மாறுதல்கள் என்பவை wish list ல் தான்//

    அதே! அதெல்லாம் Long Term!
    இப்போது தேவை நம் விண்ணப்பத்தை முன் நகர்த்துவது!

    //மீண்டும் வாழ்த்துக்கள் ரவி.(நீங்கள் ரவியா அல்லது கண்ணனா?!)//

    யார் யார் எப்படிக் கூப்புடறாங்களோ-ன்னு கீதை வரிகளை ஞாபகப்படுத்திக்குங்க அறிவன்! :))
    கண்ணனும் நானே!
    இரவியும் நானே!
    கேஆரெஸ்-ஸும் நானே! :))

    ReplyDelete
  72. கோபால கிருஷ்ண பாரதியின் நந்தன் சரித்திரக் கீர்த்தனையில் இருந்து ஒரு பாடல்!
    இந்த இசை நூலை அவருக்கு ஆக்கத் தோன்றியதே, தில்லையில் நந்தனின் ஆளுயரச் சிலைக்கு அருகில் இருந்து தான்!

    வருகலாமோ ஐயா உந்தன்
    அருகில் நின்று கொண்டாடவும் பாடவும் நான்
    (வருகலாமோ)

    பரம கிருபாநிதி யல்லவோ - இந்தப்
    பறையனும் உபசாரஞ் சொல்லவோ - உந்தன்
    பரமாநந்தத் தாண்டவம் பார்க்கவோ -நானங்கே
    (வருகலாமோ)

    பூமியில் புலையனாப் பிறந்தேனே-நான்
    புண்ணியஞ் செய்யாமல் இருந்தேனே-என்
    சாமி உன் சந்நிதி வந்தேனே-பவ
    சாகரம் தன்னையும் கடந்தேனே-கரை
    கடந்தேனே சரணம் அடைந் னே-தில்லை
    வரதா பரிதாபமும் பாபமும் தீரவே-நான்
    (வருகலாமோ)

    ReplyDelete
  73. நந்தனை மறைத்த அந்த அவமானச் சுவரை என்ன செய்வது?

    ReplyDelete
  74. தீண்டாமை தீவிரமாக இருந்த காலத்திலேயே திருநாளைப்போவாருக்கு கிடைத்த மரியாதை இன்று கிடைக்கப் போராட வேண்டியிருப்பது மிகக் கேவலமான விஷயம். அவசியம் செய்யவேண்டியதுதான்.

    சிதம்பரத்தில் தீட்சிதர்களின் அட்டகாசத்தைப் பார்த்திருக்கிறேன்.

    கேவி நாராயணசாமியின் குரலில் மாதமொருமுறையாவது நான் கேட்கும் பாடல் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வருகலாமோ... நந்தனின் உருகலை அப்படியே மனக்கண் முன் நிறுத்தும் பாடல். ஆனால் நந்தன் சிலை முன் எழுதிய விவரம் புதிது... நன்றி. தொடரட்டும் உங்கள் நற்பணி. அடுத்த முறை ஊருக்குப் போகும்போது திருப்புன்கூர் போகமுடிகிறதா என்று பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  75. http://www.kamakoti.org/tamil/dk6-19.htm


    இங்கு பாருங்கள் காஞ்சிப் பெரியவர் மனவருத்ததை.

    அரைகுறையாகத் தெரிந்து கொண்டு எல்லாவற்றையும் குழப்புவதை என்னென்பது.

    முன்பும் இப்படியாகத்தான் கோபாலகிருஷ்ண பாரதி எழுதிய காவியத்தை மட்டும் அறிந்த வசதி படைத்தவர்கள் யாராவது நந்தனார் சிலையை வைத்திருப்பார்கள். பின்பு உண்மை அறிந்து அகற்றியிருப்பார்கள்.

    அவனருளின்றி அனுவும் அசையாது, ஆண்டவன் சித்தப்படியே எல்லாம் நடக்கும்.

    ReplyDelete
  76. //Anonymous said...
    இங்கு பாருங்கள் காஞ்சிப் பெரியவர் மனவருத்ததை//

    1. சரி, இப்போ நந்தனார் சி்லையை இருந்த இடத்திலேயே வைப்பதற்கும், காஞ்சிப் பெரியவர் கருத்துக்கும் என்ன சம்பந்தம்?

    2. அவர் காலத்திலும் தில்லையில் சிலை இருந்ததே! அவர் அதைப் பற்றி ஒன்றும் சொல்லலையே!

    3. கோபால கிருஷ்ண பாரதியார் வடித்த கதாபாத்திரங்களைப் பற்றி மட்டும் தானே காஞ்சிப் பெரியவர் சொல்லி உள்ளார்?

    4. இப்போ நந்தனாரை மீண்டும் வைக்கலாம்-ன்னு சொல்றீங்களா?
    வைக்கக் கூடாது-ன்னு சொல்றீங்களா?

    5. காஞ்சிப் பெரியவர் போன்ற பெரியவர்களைத் தரவாகத் தரும் போது, உங்கள் பேரைச் சொல்லி உரையாடுங்கள்! அனானி ஆப்ஷனைப் பயன்படுத்தினாலும், கீழே உங்கள் பெயரைக் குறிக்கவும்!

    //அரைகுறையாகத் தெரிந்து கொண்டு எல்லாவற்றையும் குழப்புவதை என்னென்பது//

    இப்போ நந்தனாரை மீண்டும் வைக்கலாம்-ன்னு சொல்றீங்களா?
    வைக்கக் கூடாது-ன்னு சொல்றீங்களா?

    நேரடியான பதில் தரவும்!

    ReplyDelete
  77. //யாராவது நந்தனார் சிலையை வைத்திருப்பார்கள்//

    யார் வைத்திருப்பார்கள்?

    //பின்பு உண்மை அறிந்து அகற்றியிருப்பார்கள்//

    யார் அகற்றியிருப்பார்கள்?

    //முன்பும் இப்படியாகத்தான் கோபாலகிருஷ்ண பாரதி எழுதிய காவியத்தை மட்டும் அறிந்த வசதி படைத்தவர்கள் யாராவது நந்தனார் சிலையை வைத்திருப்பார்கள்//

    நந்தன் சிலை, கோபால கிருஷ்ண பாரதியின் காலத்துக்கு முன்னாடியே அங்கிட்டு இருக்கு! பதிவையும், சுட்டிகளையும் ஒழுங்கா வாசியுங்க!

    சிலையைப் பார்த்து, அதனால் ஊக்கப்பட்டு, உந்தப்பட்டு, அதன் அருகில் இருந்து, அவர் கீர்த்தனைகளை எழுதினார்.

    நீங்க அதை அப்படியே சப்ஜாடா மாற்றி,
    கோ.கி. பாரதி எழுதினதுக்கு அப்பறம் தான் "எவனோ ஒருத்தன்" சிலை வச்சிருப்பான்-ன்னு சொல்றீங்க! அப்பறம் "ஏதோ பெரிய உண்மை தெரிஞ்சிப் போயி" சிலையை அகற்றி இருப்பான்-ன்னு சொல்றீங்க! அடா அடா அடா!

    நீங்க சொன்னதை உங்களுக்கே சொல்றேன்:
    "அரைகுறையாகத் தெரிந்து கொண்டு எல்லாவற்றையும் குழப்புவதை என்னென்பது அனானி ஐயா/அம்மா?"

    //அவனருளின்றி அனுவும் அசையாது, ஆண்டவன் சித்தப்படியே எல்லாம் நடக்கும்//

    அதே! அதே!
    ஆண்டவன் சித்தப்படியே தான் நிர்வாகம் கை மாறி இருக்கு!
    ஆண்டவன் சித்தப்படியே தான் நந்தன் சிலையை நிறுவ முயற்சியும் தொடங்கி இருக்கு!
    அவனருளின்றி அனுவும் அசையுமோ அனானி ஐயா/அம்மா? :))

    ReplyDelete
  78. மக்களே...
    காஞ்சிப் பெரியவர், நந்தனாரின் முதலாளியாகச் சொல்லப்படும் பாத்திரம் மட்டுமே கற்பனை என்கிறார்!

    சிலை வேண்டாம் என்றெல்லாம் அவர் எதுவுமே சொல்லவில்லை!

    எதற்கெடுத்தாலும் மறைந்த காஞ்சிப் பெரியவரை மேம்போக்காக காட்டிக் காட்டி, அரைகுறையாகப் பேசியே குழப்புவதை என்னென்பது?
    தனக்குச் சாதகம்-ன்னா ஒன்னு! தனக்குச் சாதகம் இல்லீன்னா வேற ஒன்னு! :))

    ReplyDelete
  79. மக்களே,
    நந்தனார் கதையை, ஏதோ கோபால கிருஷ்ண பாரதியார் சும்மா அடிச்சி விட்டுட்டாரு!
    நந்தனாரின் முதலாளி பற்றி எழுதி, பொய் கலந்து அடிச்சிட்டாரு-ன்னு சொல்லத் துவங்கி இருக்காங்க!


    ஆனால் மறைந்த காஞ்சிப் பெரியவர் கோபாலகிருஷ்ண பாரதியை அப்படிச் சொல்லவில்லை!
    //கோபாலகிருஷ்ண பாரதி என்கிற பெரியவர். நம்முடைய மதிப்பு மரியாதைக்குரிய உரிய பெரியவர். சிவ பக்தியில் ஊறியவர். கேட்கிற எவருடைய நெஞ்சத்தையும் அந்த பக்தியில் கரைக்கும்படியான உசந்த பாட்டுகள் கவனம் செய்தவர். கடைசிவரை ப்ரம்மச்சாரியாகவே வாழ்ந்து மஹா சிவ ராத்திரி புண்யகாலத்தில் ஸ்வாமியோடு கலந்து விட்டவர். அவர் ஏழை எளியவர்களிடம் ரொம்பவும் இளகின ஸ்வபாவத்துடன் இருந்திருக்கிறார்// என்று தான் சொல்கிறார்!

    ஒரு காவியம் செய்யும் போது பாத்திரப் படைப்பு அவசியம்.
    வரலாறு வேறு, காப்பியம் வேறு!


    வரலாற்றுக் காப்பியம் ஆனாலும், மூல வரலாற்றை மாற்றாமல், சில காட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க பாத்திரப் படைப்புகள் செய்வது இராமாயண காலம் தொட்டு கல்கி பொன்னியின் செல்வன் வரை வழக்கம் தான்!
    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்பது வால்மீகியில் இல்லை! என்வே கம்பர் பொய்யர்-ன்னு யாரும் சொல்வதில்லை!

    மூலமான வரலாற்றை மாற்றாதவரை இது சரியே!
    நந்தனாரின் முதலாளி தான் சதி செய்து, அவரைத் தில்லையில் தீக்குளிக்க வச்சாரு-ன்னு சொன்னா, அது தப்பு! கோபால கிருஷ்ண பாரதி அப்படியெல்லாம் சொல்லவில்லை!

    அப்படிப் பார்த்தால் சேக்கிழாரே, தன் கற்பனைகளையும் கலந்து தான் பாத்திரப் படைப்பு செய்திருக்கார்!
    சுந்தரர், நம்பியாண்டார் நம்பிகள் செய்தது தானே மூல நூல்?
    அதில் சொல்லாததைக் கூடச் சேக்கிழார் சொல்லி உள்ளாரே?

    - இது எப்படி? ஆக சேக்கிழார் செய்தால் தவறில்லை! கோபால கிருஷ்ண பாரதியார் செஞ்சா தப்பா?

    இதற்கு மாமுனிகளான காஞ்சி பரமாச்சாரியார் என்ன சொல்வார்? அந்த மகான் எதுவும் சொல்ல மாட்டார்! அவர் சொல்வதாக ஆடிக் கொள்பவர்கள் சிலர் தான்!

    மூலமான வரலாற்றை எவருமே மாற்றவில்லை! இதோ:
    1. நந்தனார் உழவும், புலைத் தொழிலும் செய்த புலையர் தொழில் வகுப்பினர்!
    2. அவருக்கு அந்நாளைய வழக்கப்படி ஆலயத்துக்குள் அனுமதி் இல்லை!
    3. ஆனால் ஆலயங்களுக்கு அவர் கொடுத்த கொடைகள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டன!

    4. சடங்கு, கர்மாக்கள் செய்யாவிடினும், சிவபிரான் பால் உண்மையாலுமே உள்ளத்தால் அன்பு பூண்டவர்!
    5. திருப்புன்கூர் நந்தி அவருக்காகச் சற்று விலகியது!

    6. தில்லைக்கு வந்தவர், ஆலய தரிசனத்துக்கு முன், தீக்குழிக்குள் இறங்கச் சொல்லப்பட்டார். காரணம்: புலைய உடம்பைத் தூய்மை படுத்திக் கொள்ள! இது இறைவனே இருவர் கனவிலும் தோன்றிச் சொன்னது என்பது சேக்கிழார் சொல்வது! ஆனால் சுந்தரர், நம்பியாண்டர் நம்பிகள் இப்படிச் சொல்லவில்லை!

    நம்பியாண்டார் நம்பி பாடல் இதோ:
    நாவார் புகழ்த் தில்லை அம்பலத் தான் அருள் பெற்று நாளைப்
    போவான் அவனாம் புறத்திருத் தொண்டன் தன் புன்புலைபோய்
    மூவா யிரவர் கை கூப்ப முனியா யவன் பதிதான்
    மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே

    சேக்கிழார் பாடல் இதோ:
    ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம்
    வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப...

    மறையவர்கள் மொழிந்து அதன் பின் "தென் திசையின் மதில் புறத்துப்
    பிறை உரிஞ்சும் திருவாயில்" முன்பாக பிஞ்ஞகர் தம்
    நிறை அருளால் "மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி" எய்தி
    இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம் கொண்டார்

    7. தீக்குள் இறங்கிய பின்னரே நந்தன் அம்பலவாணர் கோபுரத்துக்குள் செல்ல முடிந்தது! ஆனால் நந்தன் பொன்னம்பல மேடை ஏறினாரா என்று சரியாகத் தெரியவில்லை!

    தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்தி
    ஒல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி
    ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும்
    எல்லையினைத் தலைப்பட்டார்!
    ....
    மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து
    ஆசில் மறை முனியாகி அம்பலவர் தாள் அடைந்தார்!

    அந்தக் கோபுர எல்லைக்குள் உட்புகுந்து, நடமாடும் எல்லைக்குள் புகுந்தவுடன் இறைவன் கழலில் கலந்தார்! இத்தோடு சேக்கிழார் முடித்து விட்டார்!

    இந்த மூல வரலாற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தான் கோபால கிருஷ்ண பாரதியார், தன் நாடகத்தை அமைத்தார்! எனவே காஞ்சிப் பெரியவர், கோ.கி. பாரதியாரிடம் குறைபட்டுக்கொள்ள எந்தவொரு தேவையுமே எழவில்லை!

    //அரைகுறையாகத் தெரிந்து கொண்டு எல்லாவற்றையும் குழப்புவதை என்னென்பது//

    இதுகாறும் சொன்னதில் இருந்தே யாரு அரைகுறையா குழப்பறாங்க-ன்னு தெரிஞ்சிருக்கும்-ன்னு நினைக்கிறேன்! :)

    காஞ்சிப் பெரியவர் நந்தனார் சிலை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை!

    காஞ்சிப் பெரியவர் சொன்னதாகச் சொல்லி,
    இதை இப்போது வேறு மாதிரி கிளப்பி விட நினைத்தால்...

    வழக்கம் போல் சாந்தமான கேஆரெஸ்-ஐ பார்க்க முடியாது! என்று மட்டும் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்!

    திருச்சிற்றம்பலம்!
    சிவோஹம்! சிவோஹம்!

    ReplyDelete
  80. //ஆண்டவன் சித்தப்படியே தான் நிர்வாகம் கை மாறி இருக்கு!
    ஆண்டவன் சித்தப்படியே தான் நந்தன் சிலையை நிறுவ முயற்சியும் தொடங்கி இருக்கு!//

    ஓஹோ அதானால் தான் தாழ்த்தப் பட்டோர்க்கு ஒதுக்கீடோ!
    நந்தனாரும் தாழ்த்தப் பட்டவர் என்று தம்பட்டமடிப்பதற்காக மிகுதி
    62 நாயன்மார்களையும் விட்டு விட்டு இவருக்கு மட்டும் சிலை வைத்து இப்படி ஓரவஞ்சனை செய்கிறீர்களா.

    நந்தனார் ஜாதி பேதமெல்லாம் கடந்தவர் ஐயா. :)

    63 நாயன்மார்களின் சிலைகளுள் நந்தனார் சிலை இல்லையா?

    இப்படி சிவனடிய்யார்களுள் பிரித்து பேதம் பார்ப்பவர்களுடன் பேசுவதிலேயே அர்த்தமில்லை.

    நமச்சிவாய வாழ்க!
    நாதன் தாள் வாழ்க!!

    ReplyDelete
  81. //Anonymous said...
    ஓஹோ அதானால் தான் தாழ்த்தப் பட்டோர்க்கு ஒதுக்கீடோ!//

    ஓகோ, அதனால் தான் பொத்துக் கொண்டு வருகிறதோ? :)

    //நந்தனார் ஜாதி பேதமெல்லாம் கடந்தவர் ஐயா. :)//

    அது எங்களுக்கும் எப்பவுமே தெரியும் ஐயா! ஆனா உங்களுக்கு இப்ப மட்டும் தான் தெரியுது, இல்லையா ஐயா? :)

    //நந்தனாரும் தாழ்த்தப் பட்டவர் என்று தம்பட்டமடிப்பதற்காக மிகுதி
    62 நாயன்மார்களையும் விட்டு விட்டு இவருக்கு மட்டும் சிலை வைத்து இப்படி ஓரவஞ்சனை செய்கிறீர்களா//

    இவருக்கு மட்டும் "புதிதாக" திடீரென்று எல்லாம் சிலை வைக்கலை! இருந்ததை அப்புறப்படுத்தினீர்கள்! அதை இருந்த இடத்திற்கே மீண்டும் கொண்டு வருவது தான் இப்போதைய பேச்சு!

    ஏன் அப்புறப் படுத்தினீர்-ன்னு முதலில் சொல்லும்! பிறகு மற்றதைப் பேசிக் கொள்ளலாம்!

    //63 நாயன்மார்களின் சிலைகளுள் நந்தனார் சிலை இல்லையா?//

    அந்த அறுபத்து மூவருக்கே நீங்கள் தில்லையில் பூசை மறுத்ததைச் சொல்லட்டுமா?
    உமாபதி சிவச்சாரியாரை இழிவு படுத்தி, குலத்தில் இருந்து தள்ளி வச்சதையும் சொல்லட்டுமா?

    //இப்படி சிவனடிய்யார்களுள் பிரித்து பேதம் பார்ப்பவர்களுடன் பேசுவதிலேயே அர்த்தமில்லை//

    உங்களைப் பேசவே சொல்லலையே!
    முடிஞ்சா காஞ்சிப் பெரியவர் பற்றி நீர் கிளப்பிய விஷயத்தில், கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும்! பதில் சொல்லத் தெரியலை-ன்னா உடனே வழக்கம் போல ஜல்லியில் இறங்கிடுவீங்களே! :)

    ReplyDelete
  82. //63 நாயன்மார்களின் சிலைகளுள் நந்தனார் சிலை இல்லையா?//

    இந்த அனானி யாராய் இருந்தாலும் அவருக்கு நன்றி!
    உண்மை வெளிவர ரொம்பவே உதவி செய்யறாரு!

    மக்களே!
    தில்லையில் நந்தனாருக்கு மட்டும் தனியாக சிலை ஏன்?
    அதான் அறுபத்து மூவருள் ஒன்றாக இருக்காரே?


    அப்படி இருக்க, நிருத்த சபை நடராசரைப் பார்த்தவாறு, நந்தனுக்கு மட்டும் ஒரு சிலை, பல காலமாக இருந்தது ஏன்?
    அதை ஏன் இவர்கள் ராவோடு ராவாக அப்புறப் படுத்தினார்கள்?

    நந்தன், ஈசனுக்காகத் தன் இன்னுயிரையே ஈந்த இடம் தில்லை!
    அதனால் தான் அங்கு நந்தனுக்கு மட்டும் ஒரு சிறப்புப் பார்வை!


    நாளை போவேன், நாளை போவேன் என்று கனவிலும் நனவிலும் தில்லை ஈசனோடேயே காலம் கழித்த ஒரு உள்ளம்! அது தில்லைக்கு வந்தும் ஈசனைக் காண முடியாது தவித்தது! பின்னர் தீக்குழிக்குள் இறங்கித் தான் ஈசனைக் கண்டது!

    வேற எந்த ஒரு அடியவரும், தில்லையில் தீக்குழிக்குள் இறங்கிப், பின்னர் சோதியில் கலக்கவில்லை! இவர் ஒருவர் மட்டுமே அப்படி!

    மாணிக்கவாசகப் பெருமானும், அப்பைய தீட்சிதரும் கூடத் தில்லைச் சோதியில் கலந்தவர்கள் தான்! ஆனால் அவர்கள் யாரும் தீக்குழிக்குள் இறக்கப்பட்டுப் பின்னர் இறைவனடி சேரவில்லை! நந்தனார் ஒருவருக்கே இப்படி!

    தேச விடுதலையில் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் கலந்து கொண்டாலும், ஒருவர் உயிர் நீத்த இடத்தில், அவருக்கு ஒரு சிறப்புப் பார்வை தருவதில்லையா? உடனே அது மற்ற தியாகிகளை எல்லாம் பேதப்படுத்துவதாகவா எடுத்துப்போம்? அதே போல் தான் தில்லையும், நந்தனும்!

    இதனால் மற்ற அறுபத்தி இரண்டு நாயன்மார்களைப் பேதப் படுத்துகிறோம் என்று அர்த்தம் ஆகிவிடாது!

    மேலும், இதை வீம்புக்குன்னு புதுசா பண்ணலை! ஏற்கனவே இருந்து, அதை அப்புறப்படுத்தினார்கள்! அதைத் தான் மீட்டுக் கொண்டு வருகிறோம் என்பதை நினைவில் வையுங்கள், மக்களே! - நன்றி!

    * காரைக்காலிலும், திருவாலங்காட்டிலும், காரைக்கால் அம்மையாருக்கு மட்டும் தனியான சிலை ஏன்? அதான் அறுபத்து மூவர் சிலை இருக்கே, எதுக்குத் தனியாக இது வேற-ன்னு கேட்போமா?
    * ஆவுடையார் கோயிலில், மாணிக்கவாசகருக்கு மட்டும் தனியான சிலை ஏன்? இது அடியார் பேதம் ஆயிற்றே-ன்னு கேட்போமா?
    * பன்னிரு ஆழ்வார்கள் சிலை இருக்க, ஆண்டாளுக்கு மட்டும் எதுக்குத் தனிச் சன்னிதி-ன்னு கேட்போமா?

    ஆனா கேட்கிறார் பாருங்க அனானி ஐயா! இதிலிருந்து அவரைப் பற்றி என்ன தெரிகிறது? :)

    நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
    புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!

    ReplyDelete
  83. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  84. அனானி ஐயா/அம்மா

    கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாது,
    "கலி முத்திடுச்சி, பரமன் பாத்துக்கட்டும்"-ன்னு அருள்வாக்கு ரேஞ்சுக்கு பேசும் உங்கள் பின்னூட்டத்தை நிராகரிக்கிறேன்! மன்னிக்கவும்!

    நேரடியான பதில்கள் - ஆதரவோ/எதிர்ப்போ எதுவும் நிராகரிக்கப்படமாட்டாது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்!

    ReplyDelete
  85. //அனானி ஐயா/அம்மா
    இந்த "ஆர்ப்பாட்டம்" நந்தனாருக்கு அல்லவா? அவர் தான் வாழ்ந்தே இருந்திருக்காத ஒருவரா?

    நந்தனாரை வாழ்ந்தே இருந்திருக்காத கற்பனைப் பாத்திரம்-ன்னு மறைந்த காஞ்சிப் பெரியவர் எங்கும் சொல்லவே இல்லையே, நீங்கள் கொடுத்த தளத்தில்!//



    இங்கு சிவனை சித்தத்திலே இருத்தி சுதந்திரமாக வாழ்ந்த திருநாளைப் போவார் நாயனாரின் (உண்மையான நந்தனார்) உண்மையான சரித்திரத்திரம் எவருக்கும் தெரியவில்லை.


    கோபாலகிருஷ்ண் பாரதியின் கவித்திறமையால் உருவான கற்பனைப் பாத்திரமான

    "பார்ப்பானின் அடிமையாக, கொடுமைகுள்ளானவராக் சித்தரிக்கப் பட்ட நந்தனாரின்"" பொய்யான கதைதான் பிரசாரப் படுத்தப் பட்டு அனைவருக்கும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.


    //ஆண்டவன் கொடுத்த அறிவை நல்லவற்றிற்கு பயன்படுத்தலீன்னாக் கூடப் பரவாயில்லை! ஆனா இப்படிக் கீழ்மையான எண்ணங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்!//

    இங்குள்ள பார்பான துவேசத்தைப் பார்க்கும் போது மிக வருத்தமாக இருக்கிறது, இவ்விஷயங்களெல்லாம் அதை இன்னும் தூண்டி விடுவது போல் உள்ளது.

    இவர் கோபால கிருஷ்ண பாரதியார் வேறு இப்படி எழுதிவிட்டார். என்ன காரணத்திற்காக இப்படியெல்லம் நடக்கிறதோ?!

    நீங்கள் என்ன செய்தாலும் எனக்கு நஷ்டமோ லாபமொ எதுவும் இல்லை.

    ஆலயத்திற்குள் அமைதியின்மையை ஏற்படுத்துவது அவசியமின்மையே.!!!!

    ReplyDelete
  86. //Anonymous said...
    (உண்மையான நந்தனார்) உண்மையான சரித்திரத்திரம் எவருக்கும் தெரியவில்லை//

    ஆமாம்! உங்களுக்கு "மட்டும்" தான் "உண்மையான" சரித்திரம் தெரியும்! :)

    //கோபாலகிருஷ்ண் பாரதியின் கவித்திறமையால் உருவான கற்பனைப் பாத்திரமான
    "பார்ப்பானின் அடிமையாக, கொடுமைகுள்ளானவராக் சித்தரிக்கப் பட்ட நந்தனாரின்"" பொய்யான கதைதான் பிரசாரப் படுத்தப் பட்டு அனைவருக்கும் அறிந்து வைத்திருக்கிறார்கள்//

    இன்னொரு முறை உளறினால், நான் வேற மாதிரி பேச வேண்டி இருக்கும்!
    சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், கோபால கிருஷ்ண பாரதி என்று அத்தனை பேரும் சொன்ன மூலமான வரலாற்றைப் பட்டியல் இட்டு, செய்யுளுடன் கொடுத்திருக்கேனே! பார்க்கலையா? இல்லை வீண் ஜல்லி அடிச்சிக்கிட்டு இருக்கீங்களா?

    //இங்குள்ள பார்பான துவேசத்தைப் பார்க்கும் போது மிக வருத்தமாக இருக்கிறது, இவ்விஷயங்களெல்லாம் அதை இன்னும் தூண்டி விடுவது போல் உள்ளது//

    :)
    இந்தப் பதிவில் எந்த துவேஷமும் இல்லை!
    சொல்லப் போனால் தீட்சிதர்களின் அரசு ஊதியம் பற்றியும் சொல்லி உள்ளேன்!
    அரைகுறை-ன்னு துவேஷத்தோடு பேசியவர் நீங்கள் தான்!

    //இவர் கோபால கிருஷ்ண பாரதியார் வேறு இப்படி எழுதிவிட்டார். என்ன காரணத்திற்காக இப்படியெல்லம் நடக்கிறதோ?!//

    எல்லாம் பகவத் சித்தம் தான்! :)

    //ஆலயத்திற்குள் அமைதியின்மையை ஏற்படுத்துவது அவசியமின்மையே.!!!!//

    உண்மை! அம்பலத்தில் எண்ணெய் ஊற்றி களேபரப் படுத்த வேணாம்-ன்னு சொல்ல வேண்டியவர்களிடம் போய்ச் சொல்லும்!

    அனானி!
    இது தான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை! பேர் சொல்லி உரையாடுங்கள்!
    1. நந்தனார் வரலாற்றைச் செய்யுளோடு கொடுத்தாகி விட்டது!
    2. மற்ற நாயன்மார்கள் பேதம் என்ற உங்கள் போலியான குற்றச்சாட்டை காரைக்கால் அம்மையார், மணிவாசகர் சிலைகள் கொண்டு உடைத்தாகி விட்டது!

    இந்த இரு கேள்விகளுக்கும் நீங்க எஸ்கேப் ஆகாம, பதில் சொல்லிட்டு உரையாடுவது என்றால் உரையாடுங்கள்! இல்லையேல் உங்கள் பின்னூட்டங்களை மட்டுறுத்துவேன் என்று சொல்லிக் கொள்கிறேன்!

    ReplyDelete
  87. http://shivasevagan.blogspot.com
    http://pattamuthu.blogspot.com
    http://pattamuthu.webs.com
    http://saivism.webs.com
    http://thiruvilaiyaadal.blogspot.com
    http://arumuganavalar.webs.com
    http://shivaperuman.webs.com

    ReplyDelete
  88. நல்ல பதிவு. இவ்வளவு தெளிவாக, ஒரு பதிவை நான் பார்த்ததேயில்லை.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP