Showing posts with label ஆண்டாள். Show all posts
Showing posts with label ஆண்டாள். Show all posts

Wednesday, August 28, 2013

கண்ணன் பிறந்தநாள்: Kissing For Dummies!

மக்களே... (இது 18+ பதிவு:) சற்று "விழிப்புடன்" படிக்கவும்:)

என் மனத்துக்கினிய தோழி - தென் பாண்டித் தெள்ளமுது,
தமிழ்த் தாய்க்கு நல்லாள் - காமக் காதலர்க்கு வல்லாள்
...அவ காதலனுக்கு இன்னிக்கு பொறந்த நாளாம் (Aug-28-2013)

அவனக்கு நான் எதுக்கு-ய்யா வாழ்த்து சொல்லணும்?
சரி, சரி, முறைக்காதே டீ! உனக்காகச் சொல்லுறேன்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - கண்ணா! from me & my murugavan:)
* சேலை திருடறது, பானை உடைக்குறது = இதெல்லாம் தான் ஒங்கூருல Romance-ஆ?
* டேய் வெண்ணைய்.. = Atleast today, Learn from my dearest தோழி, What is Romance?

பின்னிய கூந்தல் கருநிற நாகம்..
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்


என்னடா, ஒரு பொண்ணு கிட்ட போயி.. பையன் எப்படி. இதெல்லாம்? -ன்னு வெட்கப்படாதே!
பெண்கள், ஆண்களை விட........ :)

கொஞ்சம் தூண்டி விடணும், அவ்ளோ தான்! அப்பறம், இன்ப தீபம் அணையவே அணையாது:)


இச்சு தா, இச்சு தா! கன்னத்துல இச்சு தா
-ன்னு "ரன்" பாடல் போலவே.. நாச்சியார் திருமொழியில் பாடலாம் தான்; ஆனா பாசுரச் சந்தம்/ இலக்கிய மருவாதை-ன்னு ஒன்னு இருக்குல்ல? :)

இருப்பதிலேயே சுவையான சுவை எது? = "இச்-" சுவை!
அதான் இன்னொருவர் பாட்டை, ஆண்டாள் "இச்" சுவையா மாத்திப் பாடுறா! :)

"இச்"-சுவை தவிர யான் போய், 
இந்திர லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன், 

அரங்க மா நகர் உளானே!

Eyes over Eyes, Lips over Lips, Hips over Hips, Everything over Everything
* முத்தத்திலேயே துவங்கி, முத்தத்திலேயே முடிப்பது = ஒரு பெரிய கலை!
* "ஏழு பிறவி முத்தம்" கொடுப்பது எப்படி? = கோதை கிட்டயே கேட்கலாமா?
Here we go... Java For Dummies அல்ல! = Kissing For Dummies :)



1. முதலில் கோச்சிக்கணும்! 
அதாச்சும் கோச்சிக்கறது போல நடிக்கணும்!:) 

ஏன்னா...
கோவம் தீர்க்கக் கொடுக்கப்படும் முத்தத்துக்கு = சுவை அதிகம்!:)

அட, வேங்கடத்தில் உலாவும் கொழுத்த மேகங்களே! போயி உங்க ஆளிடம் சொல்லுங்க!
திரு-வேங்கடம்-உடையானை இந்த உலகத்தில் இனி ஒருத்தனும் மதிக்க மாட்டான்!

எப்பவும் அவனே கதி -ன்னு கிடக்குற என்னை, அவன் கேவலமா நினைச்சிட்டான்-ல்ல?
இவ இளிச்ச வாயி, அன்பைத் தானாவே கொடுத்துருவா-ன்னு நினைச்சிட்டான்-ல்ல?

வேங்கடவா...
கதி என்றும் தான் ஆவான், கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் - உன்னை வையகத்தார் மதியாரே!




2. இப்போ கோவம் தணிக்க அவன் வந்தாகணும் இல்லையா? 

அப்போ என்ன பண்ணலாம்? 
உடனே "இச்" கொடுத்துறதா? No No! :)

அவன் ஆடையைப் பிடிச்சி இழுத்து அவனை வம்பு செய்யணும்!

அது என்ன, எப்பமே அவன் தான் சேலையை ஒளிக்கணுமா?
= அவன் "உள்ளாடை"-யை  நான் ஒளிச்சி வச்சா என்ன?:)))

அவன் உள்ளாடை வாசத்தில் = அவன் வாசம் வீசுதே! 
அந்தத் துணியை என் மேல இறுக்கமாச் சுத்திக்குவேன்!

அவனுக்குத் தெரியாமல், அவன் ஆடையை, அவன் Suitcase-இல் இருந்து களவாடி, என் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுகிறேன்! :)

பெண்ணின் வருத்தம் அறியாத,
பெருமான் அரையில் (இடுப்பில்) - பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை - 
வாட்டம் தணிய வீசீரே!


3. அடுத்து??? 
ஆளு கிட்டக்க கிட்டக்க வரான்! 

கண்ணு படக் படக்-ன்னு அடிச்சிக்குது! 
இதயம் தடக் தடக்-ன்னு அடிச்சிக்குது!

ச்சே! என்ன வீரம் பேசினாலும், அவன் கிட்டக்க வரும் போது மட்டும்..
இந்த மனசு, Last Minute கூட்டணிக் கட்சியா மாறிடுதே! :)

அய்யோ! என் உதடே! அவன் கிட்டக்க போயிறாத!
அதுக்கப்புறம் நான் கண்ணை மூடிக்குவேனா?
அவன் "உடம்பழகை" முழுக்கப் பார்க்க முடியாம போயீரும்!

* தொடர் வண்டியில் என்னுடன் விசில் அடித்து வரும் = வாய் அழகு!
* என்னை முழுங்குவது போல் பார்க்கும் = கண் அழகு!
* அவனுடைய தொப்புளில் (கொப்பூழ்) = நான் விடும் பம்பரம் அழகு!
* அதற்கும் கீழே = அவன் குழல் அழகு!:)))))))

சேச்சே, crowd பாக்குது, கீழே வேணாம்! மேலே -ன்னு மாத்தீருவோம்;
அவன் முடியைக் கோதி விடும் = (மேல்) குழல் அழகு!

அவன் உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும், முத்தம் கொடுப்பதற்கு முன்பே பார்த்துடணும்;
முத்தத்தில் கண்ணை மூடிட்டா, அப்பால அதெல்லாம் பாக்க முடியாமப் போயீரும்:)

எனவே..
* முதலில் மேலோர் = கண்கள்!
* அப்பறம் கீழோர் = இதழ்கள்!

* அதனினும் கீழோன் = குழல்கள்!

எழிலுடைய அம்மனை மீர்! என் அரங்கத்து இன் அமுதர்,
குழல் அழகர் -> வாய் அழகர் -> 
கண் அழகர்! 
கொப்பூழில் = எழு கமலப் பூ....
எழு கமலப் பூ அழகர்! எம்மானார்! எம்மானார்!


4. அய்யோ! அவன் பச்சைக் கர்ப்பூர நெடி...
என் பச்சை உடம்பை என்னமோ பண்ணுதே! 

அவன் கிட்டக்க வந்துட்ட்டான்! 
அவன் உதடு கிட்ட்டக்க வந்துரிச்சி!

என்ன tooth paste use பண்ணுவான்-ன்னு தெரியலையே?
சரியான வெண்ணையா இருப்பானோ??? வெண்ணைய் வீச்சம் அடிக்குதே!
Pepsodent Butter-ன்னு புது Brand ஏதாச்சும் வந்திருக்கா என்ன? :)

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய் தான் = தித்தித்து இருக்குமோ?


மருப்பு ஒசித்த மாதவன் தன் "வாய்ச் சுவையும்+நாற்றமும்"
விருப்புற்றுக் கேட்கின்றேன், சொல் ஆழி வெண் சங்கே!


அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!
அண்ணலும்  தேக்கினான்! அவளும் தேக்கினாள்!


* அடியார்க்கு = நீர்த் தீர்த்தம்! 
* எனக்கோ அவன் = வாய்த் தீர்த்தம்!

என் எச்சிலை, அவன் பருகி...
அவன் எச்சிலை, அதில் கலந்து...
மீண்டும் எனக்கே ஊட்டி விடுவான் = என்னெச்சில் ருசி, எனக்கே தெரிகிறது!!!

சேய்த் தீர்த்தமாய் நின்ற - செங்கண் மால் தன்னுடய
"வாய்த் தீர்த்தம்" பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே!


5. முத்தக் கலை முடித்த பின்னர்...

தேன் உண்ட மயக்கத்தில், "வாழ்வின் பயனை அடைந்தேன்"-ன்னு டயலாக் விட்டுறாதே!
லேசு மாசா, "Hmm, ’twaz Okay" என்பது போல் ஒரு லுக்கு விட்டுறணும்! :)


அப்போ தானே அடுத்த முறை, இன்னும் அறிவா/அழகா வேறு மாதிரி முயல்வான்? :)

ஞாபகம் வச்சிக்கடீ கோதை!
* வேடனுக்குத் தானே சென்று விழும் பறவையை விட..
* வேட்டையாடி விழும் பறவை மேலத் தான் காதல் அதிகம்!

அதனால் நீ அவனிடம் விழ நினைச்சாலும்...
வேட்டை நாடகம் நடத்தி, அப்புறமா விழு! :)

மாலாய்ப் பிறந்த நம்பியை, 
மாலே செய்யும் மணாளனை,
ஏலாப் பொய்கள் உரைப்பானை,
இங்கே போதக் கண்டீரே?


ஏலாப் பொய் சொல்லும் Porkki-ன்னு திட்டி அனுப்பு!
அப்போ தான் ஏக்கமாத் தூங்கப் போவான்!
அடுத்த முத்தச் சுவை, இன்னும் சுவை பெறும்! :))

பாவம், ரொம்ப உழைச்சவனை, வாயராப் பாராட்டலையே? -ன்னு நினைக்குறியா?
அவன் தூங்கும் போது, அவனையும் அறியாமல், உன் உதட்டுச் சாயத்தை அவன் கன்னத்தில் பூசு!  அவனுக்கு = சிவப்பு மையால் மதிப்பெண் வழங்கு!


கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!


"அடியே! கோதை! அவனைக் கட்டிக்கிட்டா எங்கேடி இருப்பாய்? அவனுக்கு-ன்னு தனியா வீடு கூடக் கெடையாது!
வெளியில பார்க்க பணக்கார "மலை-வீடு" போல இருக்கும்; ஆனா மொத்தமா முப்பது நிமிஷம் கூடத் தூங்க வுட மாட்டானுங்க! :)

108 வீடு வீடாச் சுத்தணும்!
வேர்வை பொங்கி வழியும் அவன் கரு-அறையில்!
A/C கூட இருக்காது!
பாம்புப் படுக்கை! சொர சொர-ன்னு இருக்கும்! என்னடி பண்ணுவ?"

Kothai Says:
"Just a small room, power cuts ok...
Even with a lil' candle light,
His sight is tight that makes me light!

High Definition in his Eyes...
Sub Woofer as he Whispers...
Home Theater in his Prank
That makes me really crank...
Armani, CK, Obsession
Are dull and dumbest possession!
His fragrance comes and fascinates
The "Smell of my Lover" oscillates!

His arms have rooms. Thatz my home! Thatz my home!

* எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
* "உன்" தன்னோடு!
* உறவேல் இங்கு ஒழிக்க ஒழியாது!

அவனுக்கு என்னை "விதி!" = நான் கடவா வண்ணமே நல்கு!

அவன் களைத்துப் படுத்தாலும் விட மாட்டேன்...
என் கூந்தலில் உதிர்ந்த... முல்லைச் சரத்தின் வாழை நாரால்...
அவன் கைகளையும் கால்களையும் - கட்டிலில் கட்டிப் போடுவேன்
நாளை காலையும், அவன் = எனக்கே! எனக்கே!!!

பிறந்த நாள் இரவில்...
அவன் உடம்பின் ஒவ்வொரு பாகத்துக்கும் = தன்னை "ஈ"ந்தாள்! 
= முருகா, பகர் ஆர்வம் "ஈ"!

குத்து விளக்கெரியக்...
கோட்டுக் கால் கட்டில் மேல்...
"மெத்" என்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி...

கொத்து அலர் பூங் குழல்...
நப்பின்னை கொங்கை மேல்...
கொங்கை மேல்ல்ல்ல் வைத்துக் கிடந்த மலர் மார்பா = உனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Read more »

Friday, March 30, 2012

ஆண்டாள் என்னும் "பறை"ச்சி! பறை என்றால் என்ன?

(முன்குறிப்பு: "தீவிரமான" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

கோதையை "ஆன்மீகமாக" மட்டுமே புரிந்து கொள்ளாமல், 
அவள் "ஆன்மா"-வாகவும் புரிந்து கொள்ளும் பதிவே இது!
நான் இப்போதுள்ள நிலையில்... தோழியின் மனப்பாங்கு, முன்னெப்போதை விடவும் "மெல்லியலாகப்" புரிகிறது்)



"பறை" என்றால் என்ன?

மிக உயர்ந்த சங்கத் தமிழ்ச் சொல்லான = "பறை",
ஆதிக்க மனப்பான்மை கொண்டோரின் செயல்களால், இன்று, தாழ்வான சொல் போல் பிறழ்ந்து விட்டது!
பாணன் ""பறையன்" துடியன் கடம்பன்
இந்நான்(கு) அல்லது குடியும் இலவே
- என்பது புறநானூறு! நெறிகளை, அரசுக்கே "பறை"ந்த பறையர் என்ற தமிழ் ஏற்றம்!

ஆனால்... சிறந்த ஒன்றைக், கும்மியடித்து கும்மியடித்தே, தவறாகப் பலுக்கிப் பலுக்கி, இழிவு பெறச் செய்தல் என்பது ஆதிக்கப் புத்தி!
சிறுபான்மையினரும் தங்கள் மரபுச் சிறப்பைப் பேணிக் கொள்ளலாம், ஆனால் எங்களுக்கு உட்பட்டே/அடக்கி வாசித்தே... = இதுவொரு மேலாளப் போக்கு:(

இதுக்கெல்லாம் போராடித் தான் மீளணும்!
போராட்டங்களுக்குப் பின் நிலைமை மாறி, இப்போது அப்படியெல்லாம் இல்லை என்று ஆகிவிட்டாலும்,
"பறை" என்ற அழகான தமிழ்ச் சொல்லு போனது போனது தானே?

நெருடல் இல்லாமல் நம்மாலேயே பலுக்க முடிகிறதா? யோசித்துப் பாருங்கள்?
இன்று: பறையன்/பறைச்சி = வசைச்சொல்! சொல்லாடினால் சட்டப்படிக் குற்றம்!


ஆனால் என் தோழியை நான் "பறைச்சி"-ன்னு சொல்லலாமா?
இதற்காக, கோதை என் தோழமையை மறுதலிப்பாளா என்ன?

அப்படிப் பார்த்தா, என் கிட்ட தினப்படி திட்டு வாங்குறான் முருகன்:)
"Hey PoRkki Muruga" என்பதற்காக அவன் என்னை மறுதலித்து விடுவானா?
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் என்ற பந்தமாகி விட்டதே!

என்னடா இது, ரொம்ப நாள் கழிச்சி, இப்படி ஒரு பதிவு-ன்னு பாக்குறீங்களா?
பந்தலின் புதிய வாசக அன்பர் ஒருவர்...
நேற்றிரவு, என்னையப் பார்த்து,  திடீர்-ன்னு இப்படிக் கேட்டுட்டாரு:

"பந்தலில் (2008-09) வந்த திருப்பாவைப் பதிவுகள் இப்போது தான் பார்த்தேன். ஒரே மூச்சாக வாசித்து முடித்தேன். 
ரொம்ப எளிமையா, அப்படியே மனசிலேயே தங்கி விட்டது. ஆனால் ஒரே ஒரு குறை. 
பறை என்பது பற்றி ஒன்றுமே சொல்லாமல் திருப்பாவை விளக்கம் எப்படி ரவி பூர்த்தி ஆகும்?
நீ (ங்க)முழு ’ஜஸ்டிஸ்’ பண்ணலை"

ஆகா! இப்படியொரு கணையா?
அப்படி என்ன எழுதி இருந்தேன் -ன்னு எனக்கே ஞாபகம் இல்லை! சரி, பொடிநடையா போய்ப் பார்த்தாக்கா...
Yes! வாசகர் சொல்வது சரியே! போதையில் தான் எழுதி இருக்கேன்:)

How did I forget lime and salt, when drinking Tequila?
Only, if I was already under the influence of my beloved's salty tamizh lips, I wud have forgotten :)

திருப்பாவைப் பதிவுகளில் என்னென்னமோ சொல்லிட்டு,
"பறை" பற்றி மட்டும் பொத்தாம் பொதுவாத் தான் சொல்லி இருக்கேன்; என் தவறு தான்!

"பறை" என்ற குறிப்புச் சொல்லாட்சி, வேறு எந்த ஆழ்வார்-நாயன்மார் பாட்டிலும் காண முடியாது!
ஒரு பெண்-கவிஞராக அவள் மட்டுமே செய்து காட்டிய Poetical Abstraction - கவிதை மறைக்கரு!

எதையோ மறைபொருளாச் சொல்லி வைக்கிறா = என்ன அது?
"வாய்ச்சுவையும் நாற்றமும்" எல்லாம் வெளிப்படையாச் சொன்னவ... இதை மட்டும் மறைபொருளா வைக்கிறாளே? ஏன்?
ஒரு பெண், தன் ஆணிடம் மிக விரும்பும் ஒன்றைத் தானே = மறைபொருளாச் சொல்லுவா?

* உள்ளத்தின் உண்மையான உணர்ச்சியில்....
* அவனே அவனே என்று ஊறித் திளைக்கும் ஒருத்திக்கு...
* அவன் சம்பந்தப்பட்ட எல்லாமே, தன் சம்பந்தமாகக் கொண்டு வாழ்பவளுக்கு...
"அவனுடைய" பறை -ன்னா என்ன?

தோழிக்குக் குறை வைக்க மனசு வருமா?
இதோ இரவிலே எழுதி, காலையில் "பறை"ந்து விடுகிறேன்! வாருங்கள்!


ஏய்.....இரு, இரு, ரவீ! அதுக்கும் முன்னாடி ஒரு கேள்வி!
ஆண்டாளை எப்படி நீ "பறைச்சி"-ன்னு சொல்லலாம்? அவள் ஒரு பிராமணப் பொண்ணு அல்லவா? :)

ஹிஹி! இன்றைய நிலைமைகளை அன்றைய உள்ளங்களின் மேல் ஏற்றிட முடியாது!
மேலும் ஆண்டாள் என்பவள் பிராமணப் பெண்ணல்ல! அப்படியான வீட்டில் வளர்ந்தவள் மட்டுமே!

கோதை, பிராமண வீட்டில் வளர்கிறாளே தவிர, அவள் ஒரு "இடைச்சி" போலவே தான் வளர்கிறாள்!
அவள் ஓர் அனாதைக் குழந்தை! "அயோனிஜை" என்று சமயத்தவர் சொல்லுவார்கள்! = யோனி தெரியாதவள்!
"அப்பன் பேர் தெரியாதவள்" என்ற கேலியும் இருந்திருக்குமோ என்னவோ?
= பட்டர்பிரான். கோதை, விட்டுசித்தன். கோதை
என்று வரிக்கு வரி, தன் இனிஷியலைப் போட்டுக் கொள்ள அவள் தவறுவதே இல்லை! வேறெந்த ஆழ்வார்களும் இப்படிச் செய்யவில்லை! (பிறப்பறியா முதலாழ்வார்கள் உட்பட)

* ஆன்மீக அன்பர்களுக்கு மட்டுமின்றி..
* தமிழ் அன்பர்களுக்கு மட்டுமன்றி..
* காதல் அன்பர்களுக்கு மட்டுமன்றி..
"உளவியல்" அன்பர்களுக்கும் அவள் வாழ்வு = ஒரு பெரும் பொக்கிஷம்!

"இதே சொந்த மகளாக இருந்திருந்தா, பெரியாழ்வார் இப்படித் திருமணப் பேச்சு எடுக்காமல் விட்டு வைப்பாரா?" - என்று திருமால் பெருமை படத்தில், ஊர் கேலி பேசுவது போல் ஒரு காட்சி காட்டுவார்கள்!
என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமலேயே, கண்ணனை ஊட்டி ஊட்டி வளர்த்தாகி விட்டது!
தோழனாய்த் துவங்கிய பாவனை, அறுக்க முடியாத காதலாகவே மாறி முடிந்து விட்டது! :(

ஆண்டாளின் கதை 
= இன்று வேண்டுமானால் ஒரு Fairy Tale போல இருக்கலாம்! 
= ஆனால் அவள் காலத்தில்?

காரைக்கால் அம்மை (எ) புனிதாவை, "பேய் மகளிர்" ஆக்கிச், சுடுகாட்டுக்குத் துரத்தியது போல் துரத்தவில்லையே தவிர,
கோதையின் வித்தியாசமான மனப் போக்குக்கு, அவளை என்ன கேலி பேசினார்களோ, நாம் அறியோம்!
அவள் தன் வாழ்வை எப்படி எதிர் கொண்டாளோ, நாம் அறியோம்!
தன் உள்ளத்தே தங்கி விட்ட மாசில்லாத காதலின் உயர்வு!

அரங்கனில் ஏறிக் "கலந்தாள்" என்பது சமயப் பூர்வமாக நிலைநிறுத்தப்பட்டு விட்டது.. இன்று!
ஆலயம் தோறும் அவள் தான்! முன்பு நப்பின்னையைத் தொலைத்த தமிழ்க்குடி.. நல்ல வேளை, கோதையாவது மீட்டுக் கொண்டது!

அரங்கனில் ஏறிக் "கலந்தாள்"
* ஆனால், அவள் "கலந்தாளா"?...
* ஒருத்தன் நினைப்பிலேயே "கரைந்தாளா"?

யார் அந்த "ஒருத்தன்"?
வெளியிற் சொல்ல வழியின்றி, இறையை ஏறிட்டுக் கொண்டாளா?
சரி, "இறையை" ஏறிட்டுக் கொண்டவள், "பறையை" ஏன் ஏறிடுகிறாள்??

அவள் கடைசிப் பாட்டு இங்கே இனியதில் இருக்கு; பாருங்க; அவள் மனப்போக்கை உங்களுக்கு எடுத்துக்காட்டக் கூடும்!
மருந்தாம் என்று தன் மனத்தே, 
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்..
அவனைப் பிரியாது, என்ன்ன்றும் இருப்பார்களே!

மனசாலேயே வைச்சிக்கிட்டு வாழ்ந்தால் = அவனைப் பிரியாது இருக்கலாம்
..... என்று தன் கவிதை அனைத்தையும் முடித்து விடுகிறாள்!

அரங்கன் சிலையில் கலந்தாளா?
= இப்படி எழுதுவதால், ஆன்மீக அன்பர்கள், சில வைணவ அன்பர்கள் கூட என் மேல் கோவித்துக் கொள்ள வாய்ப்புண்டு!
"நீயே இப்படியெல்லாம் எழுதலாமா ரவி?" என்று கேட்கவும் கூடும்! :)

ஆனால் என்னையத் தான் இப்படியான "நிறுவன"க் கட்டுகளில் கட்டிவைக்க முடியாதே! தோழனும் நண்பர்களும் நன்கு அறிவார்களே!
கோதையை, அவள் "ஆன்மாவை" ஒட்டியும் புரிந்து கொள்வோம் வாருங்கள்!

கோதை, பிராமண வீட்டில் வளர்ந்தாலும், ஒரு "இடைச்சி" போலத் தான் வளர்ந்தாள்-ன்னு சொன்னேன் அல்லவா?
(இன்றளவும் அவள் ஊரிலே, கண்டாங்கிச் சேலை கட்டி, இடைச்சி போலவே அலங்காரம் செய்து வைக்கிறார்கள்)

இடைச்சியா? என்ன ஆதாரம்? என்ன தரவு? = அவள் கவிதையே ஆதாரம்!
கீழ்வானம் வெள்ளென்று "எருமைச் சிறுவீடு"
மேய்வான் பரந்தன காண்...

இதில்... எருமைச் சிறுவீடு மேய்தல்-ன்னா என்ன?

எதுக்கு எருமை மாட்டை மட்டும் சொல்லுறா கோதை?
பசு தானே "புனிதம்"?:)
எருமையைப் போய், "வேதம் அனைத்துக்கும் வித்தாகும்" திருப்பாவையில் கொண்டாந்து வைக்கலாமா? ha ha ha:)

பசு மாட்டை அவிழ்த்து விடணும்-ன்னு அவசியம் இல்லாமல் வைக்கோலைப் போட்டாலேயே அது திங்கும்!
ஆனால் எருமை அப்படி அல்ல! அதுக்கு மேய்ந்தே ஆகணும்!

அதுக்காக அவ்வளவு அதிகாலையில் மேய்ச்சலுக்குக் கூட்டிப் போக முடியுமா? அதான் சேரி வீட்டுக்குள்ளேயே ஒரு "சிறுவீடு"!
கொல்லையை ஒட்டிய மேய்ச்சல் புல்! அங்கேயே மேய விடுவாங்க!

உங்கள்-ல்ல எத்தனை பேருக்குச் "சிறுவீடு" பற்றித் தெரியும்? சின்ன வீடு-ன்னா தெரியும்:)
நகரத்தை விடுங்க! கிராமங்களில் இருந்து வந்தவர்கள்?
அவிங்களுக்குச் "சிறுவீடு" தெரிவது கூடக் கொஞ்சம் கஷ்டம் தான்!

பறைச் சேரி/ஆயர்ச் சேரிக்கே உரிய வழக்கத்தை...
எப்படி ஒரு "பிராமண வீட்டில்" வளரும் ஆண்டாள்...
தெரிந்து வைத்துக் கொண்டுப் புழங்குகிறாள்? வியப்பிலும் வியப்பு!

இது மட்டுமல்ல..
* பறைச்சேரிக்கே உரிய பிற சொற்களும்,
* கண்ணாலம் போன்ற பாமரச் சொற்களும்,
* கணவனை, "மைத்துனன்/மச்சான்" என்று அழைக்கும் முறையும்,
அவள் திருமொழியில் மறைக்காமல் அப்படியே வரும்!

= யார் அந்த ஒருத்தன்?

கண்டாங்கிச் சீலையும், கோடாலி முடிச்சும்,
உடம்பிலே வெண்ணைய் வீச்சமும், பறைச்சேரிப் பேச்சுமாய்...
அவனையே நினைச்சி நினைச்சி,
தன்னையும் அவன் குடும்பமாகவே பாவித்து பாவித்து,

அவளும் அப்படியே ஆயிட்டாள்!
= பாவனை அதனைக் கூடில்,அவனையும் கூடலாமே!

பறை:
பறை = Drums!
பறை தருவான்-ன்னா Drums தருவான்-ன்னா பொருள்? :)
பசங்க மட்டும் தான் பறையடிச்சி குத்துப்பாட்டுக்கு ஆடலாமா? நாங்களும் எறங்கறோம் பாரு-ன்னு இறங்கிட்டாளா? :)

* பறை = மோட்சம்      (ஆன்மீக ரீதியில்)
* பறை = பேரின்பம்    (இலக்கிய ரீதியில்)
* பறை = அவன் இன்பம்! (உண்மையா, காதல் ரீதியில்)

அட, வெறுமனே ஒரு வாத்தியக் கருவி..
அது எப்படிங்க மோட்சத்தை/ இன்பத்தை எல்லாம் குறிக்கும்???

சங்கத் தமிழரோடு நெருங்கிய தொடர்புள்ள இசைக்கருவி = பறை!

பிறப்பு முதல் முடிவு வரை, ஒவ்வொரு கட்டத்திலும் பறை இருக்கும்!
போர், உழவு, கூத்து-ன்னு ஒவ்வொரு திணை/துறையிலும் பல்வேறு பறைகள்!
அரிப் பறை, செருப் பறை, ஆகுளிப் பறை என்றெல்லாம் சங்கத் தமிழில் வரும்!

அப்பேர்ப்பட்ட சங்கத்தமிழ்க் கருவியைத் தான், நோன்புக் கருவியாக கொண்டாந்து வைக்கிறா கோதை!
(வேற எந்த இந்து மத-"உயர் வகுப்பு" விரதத்திலாச்சும் பறை இருக்கா?
இதெல்லாம் வீட்டுல தான் விடுவாங்களா? இதென்ன கோதை செய்யும் பழக்கம்?)

மலையாளத்தில் "என்ன பறையும்"-ன்னு கேக்கறோம்-ல்ல?
பறை = சொல்!
இசையால் அடித்துச் சொல்வது = பறை!
ஆனால், பறை என்பது வெறுமனே இசைக்கருவி மட்டும் தானா?
= இல்லை! சமூக வழக்கிலே அது "அளக்கும் கருவி"யாகவும் மாறி விட்டது!

மேலே படத்தைப் பாருங்க! தட்டைப் பறை;
அதைக் கவிழ்த்தால், பறை ஒரு கொள்-கலன் (container) ஆகி விடும்!

கூத்து முடிந்த பின், பறையைக் கவிழ்த்து, அதிலேயே காசுகள் பெறும் தெருவோரக் கலைஞர்களைப் பார்த்திருக்கோம் அல்லவா?

முற்காலத்தில், பறையடித்து முடிந்ததும், அளந்துவிடும் நெல் கூலியைப் பறையிலேயே வாங்கிக் கொள்ளலாம்! = பறைக் கூலி!
* அதே போல், தெய்வம் தரும் கூலி = மோட்சம் = பறை!
* காதலன் தரும் கூலி = பேரின்பம் = பறை!

காதல் ரீதியில்:
அவனுக்கு என்னையே குடுத்து, அவன் தரும் கூலியையும் என்னுள்ளேயே வாங்கிக் கொள்வேன்!
(எப்படி பறையடித்து, கூலியும் அதிலேயே வாங்குறாங்களோ.. அது போல)

ஆன்மீக ரீதியில்:
* பிறவி கொடுத்து, அதன் கூலியான மோட்சத்தையும், பிறவியின் முடிவிலேயே கொடுத்து விடுகிறான் இறைவன்!
(எப்படி பறையடித்து, கூலியும் அதிலேயே வாங்குறாங்களோ.. அது போல)

சரணம் ஆகும் தன-தாள் அடைந்தோர்க்கு எல்லாம்,
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
என்று மாறன்-நம்மாழ்வாரின் திருவாய்மொழியை ஒப்பு நோக்குங்கள்!



இப்படி, கூலி கொடுக்கும்/படியளக்கும் ஐயன்! இந்தப் படியளத்தலே = பறை!
* யார் தருவார் பறை? = நாராயண"னே"!
* யாருக்குத் தருவார் பறை? = நமக்"கே"!
நாராயணனே, நமக்கே, பறை தருவான்!! என்று முதல் பாட்டைத் துவங்கி விட்டாள்!

"பறை" என்பது "உள்ளுறை உவமம்" | Abstraction in Poetry

* வேறு எந்தவொரு ஆழ்வாரோ, நாயன்மாரோ குறியீடு காட்டாத...
* ஒரு பெண் மட்டுமே சாதித்துக் காட்டிய...
* அவள் அப்பாவின் கவிதையிலும் காணமுடியாத உள்ளுறை! இப்படி ஒரு தனித்தன்மை இந்தப் பெண்ணுக்கு!

"பறை" எங்கெல்லாம் வருகிறது? = மொத்தம் 11 இடங்களில்
---------------------------------------------------------------------------------------

1. நமக்கே "பறை" தருவான் (தி:1 - மார்கழித் திங்கள்)
2. பாவாய் எழுந்திராய், பாடிப் "பறை" கொண்டு (தி:8 - கீழ்வானம் வெள்ளென்று)

3. போற்றப் "பறை" தரும் புண்ணியனால் (தி:10 - நோற்றுச் சுவர்க்கம்)
4. அறை "பறை" மாயன் மணிவண்ணன் (தி:16 - நாயகனாய் நின்று)

5. வேல் போற்றி! உன் சேவகமே ஏத்திப் "பறை" கொள்வாம் (தி:24 - அன்று இவ்வுலகம்)
6. உன்னை அருத்தித்து வந்தோம் "பறை" தருதியாகில் (தி:25 - ஒருத்தி மகனாய்)

7. சாலப்பெரும் "பறை"யே பல்லாண்டு இசைப்பாரே (தி:26 - மாலே மணிவண்ணா)
8. பாடிப் "பறை"கொண்டு யாம்பெறும் சம்மானம் (தி:27 - கூடாரை வெல்லும்சீர்)

9. இறைவா நீ தாராய் "பறை"யேலோ ரெம்பாவாய் (தி:28 - கறவைகள் பின்சென்று)
10. இற்றைப் "பறை" கொள்வாம், அன்று காண்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு (தி:29 - சிற்றஞ் சிறுகாலே)

11. அங்கு அப்"பறை" கொண்ட ஆற்றை,
பட்டர்பிரான் கோதை சொன்ன =(தி:30 - வங்கக் கடல்கடைந்த)
---------------------------------------------------------------------------------------

திருப்பாவையில் மட்டுமேயான சொல்லாட்சி = பறை!
அதுவும் Last 7 Songs = தொடர்ச்சியா வரும் சொல்லாட்சி! (24-30)

* துவக்கத்திலே, பறை=நோன்புக்கான இசைக்கருவி என்பது போல் காட்டி விட்டு...
* நடுவிலே, பறை=யாம்பெறும் சன்மானம் என்று, படியளந்து கிடைச்ச பரிசைச் சொல்லி...
* இறுதியிலே, பறை=பேரின்பக் கூலி...

இற்றைப் பறையெல்லாம் வேணாம்,
"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நீயே! உன் உறவே"-ன்னு முடிக்கிறாள்!

இப்போது தெரிகிறதல்லவா?
பறை = அவள் தனித்துவமான கவிதை!
உள்ளுறை உவமம்! கவிதை மறைக்கரு (Poetical Abstraction)

* பறை = இசைக்கருவி
* பறை = அதில் படியளந்து பெறும் கூலி
* பறை = "எனக்கு-அவனே" என்ற பேரின்பக் கூலி! = பேறு

ஒரு காதல் உள்ளத்துக்கு, 
 "அவன்" கொடுக்கும் உச்ச கட்ட இன்பம் | இன்பக் கூலியே=பறை!
என் தோழி ஆண்டாளின் அடிமனசே...
அவன் பெருமாளோ? பெருமாள் என்று ஏறிட்டுக் கொண்டு வேறு யாரோ? எவனாயினும்...
"உனக்கு-அவனே" என்னும் "பறை" ஏல்-ஓர் எம்பாவாய்!!!

Read more »

Tuesday, August 02, 2011

ஆண்டாள் பாசுரம்! - முருகனுக்கு!!

என்னாது, ஆண்டாள்........முருகன் மேல பாட்டு பாடி இருக்காளா?

மறந்தும் புறம் தொழா-எல்லாம் கிடையாதா?
ha ha ha! நான் ஒன்னும் சொல்லலை! நீங்களே பாருங்க! - இது தமிழ் அர்ச்சனைப் பாடல்!  சுசீலாம்மாவின் குரலில், இதோ:  இங்கே போங்க.........



Read more »

இளையராஜா இசையில்...ஆண்டாள் பிறந்தநாள்!

இன்று....
என் அந்தரங்கத் தோழியின் பிறந்தநாள்!
அந்த-ரங்கத் தோழியின் பிறந்தநாள்! (Aug-02, 2011)!
திரு ஆடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே! Happy Birthday dee, Kothai! :)

இவள் பிறந்த நாளை ஒட்டி, இவளின் மகுடமான கனவுப் பாட்டை, நனவுப் பாட்டாக....இதோ...கண்ணன் பாட்டிலே!


வாரணமாயிரம் = பல திரைப்படங்களில், பல்வேறு இசையமைப்பாளர்கள் கை வண்ணத்தில் வந்திருக்கு!
ஆனால் அத்தனைக்கும் மகுடமாக, இளையராஜாவின் இசையில்.....கேளடி கண்மணி படத்தில்.....ஜானகி பாடும் ஏக்கமான மெல்லிசை!


ஹே ராம் படத்திலும், சிறு சிறு துணுக்குகளாக.....
கோயில் அரையர்கள் ஓதும் நடையில்
இந்த ஆண்டாள் பாட்டு! இதுவும் இளையராஜே இசையே! விபா சர்மா பாட, அரையர்கள் ஓதுவது!


நாட்டியப் பேரொளி பத்மினி நடனமாடுவது! - செந்தாமரை என்னும் படத்தில்!MSV இசையிலே, பி. லீலா பாடுகிறார்கள்!


** சுசீலாம்மாவும் இந்தப் பாட்டைப் பாடி இருக்காங்க! ஆனால் முதல் இரு வரிகள் மட்டுமே!அப்பறம் Track மாறீடும்! திருமால் பெருமை படத்தில்! இதோ!

** SPB, அதே கேளடி கண்மணியில் பாடுவது!

** வியப்பு என்ன-ன்னா மரபிசை-கர்நாடக இசையில், எவருமே இதை இதுவரை பாடாதது தான்! பிரபல கலைஞர்கள், இதைப் பாடிக் குறையைப் போக்கிக் கொள்ள வேண்டும்!


முழுப் பதிவையும் வாசிக்கணுமா?

இங்கே செல்லுங்கள்! கண்ணன் பாட்டு வலைப்பூவுக்கு!

பின்னூட்டங்கள், இங்கே பூட்டப்படுகின்றன!:)
Read more »

Friday, August 13, 2010

300) ஆண்டாள் எழுதிய உயில்! கடைசிக் கவிதை!

கவிதையிலேயே யாராச்சும் உயில் எழுதி வச்சி இருக்காங்களா? :) கேள்விப்பட்டு இருக்கீங்களா? தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!

தோழி கோதைக்கு நேற்று பிறந்தநாள் அல்லவா? (12-Aug-2010)! ஆடிப் பூரம்!
எனக்கும் அவளுக்கு மூன்றே நாள் தான் வித்தியாசம்! அதான் அவ்ளோ நெருக்கம் போல! :)

கண்டிப்பா அவ பிறந்தநாள் அன்னிக்கி, ஒவ்வொரு ஆண்டும் பதிவு வந்துரும்! ஆனால் இந்த ஆண்டு தான், ஆரம்பம் முதலே ஏதோ ஒன்னு தட்டுது! பரவாயில்லை! எதுன்னாலும் என் முருகன் பார்த்துக் கொள்வான்! நாம மேட்டருக்கு வருவோம்!
Happy Birthday dee kOthai! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழீ!
ஹேய், லேட்டா வாழ்த்துறேன்-ன்னு, உயில்-ல என் பேரை எழுதாம விட்டுறாதேடீ! :)

மாதவிப் பந்தலில் இது 300ஆம் பதிவு! முந்நூறில் முருகனருள் முன்னிற்க!
இந்தப் பந்தலில் கூவு குயில்களான...வாசகர்கள்...நீங்கள்...
உங்கள் அனைவருக்கும் முதலில் வாழ்த்துக்கள் + அப்புறம் நன்றி! :)
மாதவிப் பந்தல் மேல் பல் கால் அடியவர்கள் கூவின காண்!
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்! இன்புறுவர் எம்பாவாய்!



அப்படி என்ன தான்யா அவ எழுதிட்டுப் போயிருப்பா, கடைசிக் கவிதையில்? பார்க்கலாமா? இதோ....ஆண்டாள் எழுதிய உயில்...Last Testament!

பருந்தாட் களிற்றுக்கு அருள்செய்த பரமன் தன்னை, பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை, விட்டு சித்தன் கோதைசொல்,

மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ், பிரியாது என்றும் இருப்பார்களே!

பிரியாது என்றும் இருப்பார்களே!! பிரியாது என்றும் இருப்பார்களே!!!



என்ன, ஏதாச்சும் புரிஞ்சுதா? :)

இதுல எங்கேய்யா சொத்து விபரம் சொல்லி இருக்கு? மறைச்சு சொல்லுறாளா? வெளிப்படையாச் சொல்லுறாளா? வில்லங்கம் ஒன்னும் இல்லியே? :)

சரி, உயில்-ன்னா என்ன?

1. முதலில் சொத்து பத்து சொல்லி இருக்கணும்!
2. அதுவும் நம்ம பேருக்குச் சொல்லி இருக்கணும்!

3. அதுவும் கொடுக்கறவங்க தெளீவாக் கையெழுத்து போட்டு இருக்கணும்!
4. போதாக்குறைக்கு, சாட்சிக் கையெழுத்து வேற கரெக்ட்டா இருக்கணும்!

5. முக்கியமா..சொத்து, உடனே கைக்கு வரா மாதிரி இருக்கணும்! இன்னும் இருபது வருசம் கழிச்சி தான் பாத்தியதை-ன்னு எழுதி வச்சிட்டா நல்லாவா இருக்கும்?

6. இவ்வளவும் ஆன பின்பு, வேற மனிதர்களாலோ/வாரிசுகளாலோ எழுதின உயிலில் வில்லங்கம் ஏதும் வராம இருக்கணும்!

ஹா ஹா ஹா...
இப்போ கே.ஆர்.எஸ் உயில்-ன்னு சொல்லுறோம்-ன்னு வைங்க!
அதுல கே.ஆர்.எஸ் நல்லா இருக்கானா போன்ற தகவல்களா வேணும்? சாகறவன் என்ன எழுதி வச்சிட்டு செத்தா நமக்கு என்ன? நமக்கு வேணுங்கறதை எழுதி வச்சிட்டாப் போதும்! அதானே ஒரு உயிலின் மேல் நம்ம "நியாயமான" எதிர்பார்ப்பு? :)

அப்பறம் எதுக்கு, எழுதி வச்சவர் பேரைக் கொண்டு, "இன்னார் உயில்"-ன்னு உலகம் சொல்லுது-ன்னு தான் தெரியலை!
பேசாம "இன்னாருக்கு உயில்"-ன்னு சொல்லீறலாம்-ல்ல?
மயிலே மயிலே உன் உயிலே எங்கே?? :) முருகா!



இன்னிக்கி தேதியில் ஆண்டாள் கதை, ஒரு Fairy Tale!.....ஆனால் அன்று?

* ஏலாப் பொய்கள் உரைப்பானை-ன்னு இறைவனைத் திட்டுறா!
* மானமிலாப் பன்றி-ன்னு எம்பெருமானை வசை பாடுறா!
* பெண் கொடியை வதை செய்தான் என்னும் சொல், வையகத்தார் மதியாரே-ன்னு சாபம் விடுறா!
இன்றைய அறிவியல் காலத்தில் கூட, லோக்கல் பாஷையில் எழுதினால், புனிதம் கெட்டு விட்டதாகப் பார்க்கும் ஆஸ்திக உலகம், எப்படி இவளை ஏற்றுக் கொண்டது?

* "எலே, கண்ணாலம், கிரிசை, கீச்-கீச், அல்குல், பெண்டாட்டி, மச்சான், புனித எருமை"-ன்னு லோக்கல் சொற்களை எல்லாம் "வேதம் அனைத்துக்கும் வித்தில்" கொண்டாந்து வைக்கிறா! :)
* ஆற்ற+அனந்தல் என்று கர்ம/ஞான கண்மூடித்தனமான பிடிப்பை, ஒரு பிடி பிடிச்சி பாக்குறா!
* பத்மநாபனை, பற்பநாபன்-ன்னு தமிழில் மாத்தி வடமொழியாளர் கோவத்தை வேற வாங்கிக்குறா! :)

திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ?
வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கிறேன்!
வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே
-ன்னு அவன் எச்சில் ருசிக்கு ஏங்குறாளே! - அடப் பாவிங்களா! இதையா கோயில் கருவறையில் இன்னிக்கும் பாடுறாங்க? சேச்சேச்சே! லேடீஸ் போற வர இடத்தில், இப்படியெல்லாம் பாடலாமா? இதே பாக்யராஜ் செஞ்சா சும்மா விடுவீங்களா? :) Nonsense of the stupid of the AndaaL :))


* ஆன்மீகத்தில்.....ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த ஒரு நிலையில்,
* இலக்கியத்தில்.....ஆண்கள் அல்குல்-ன்னு எல்லாம் வர்ணிச்சி எழுதினா, ஆகா ஓகோ போடும் ரசிக மணிகள் மத்தியில்,
ஒரு பெண் இப்படியெல்லாம் பாடினதா, சங்க இலக்கியத்தில் கூடச் சரித்திரமே இல்லையே!

சங்கப் பெண் புலவர்களான காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார் கூட அடக்கித் தானே வாசிச்சி இருக்காங்க? சங்க இலக்கியத்தில் பெண்கள் பங்கு மகத்தானது! ஆனால் அவர்களும் சமூக இழிவுணர்ச்சிக்கு (Social Stigma) கட்டுப்பட்டுத் தானே பாட முடிந்தது? ஆண்பாற் புலவரின் வர்ணிப்பைப் போல் பெண்பாற் புலவர்கள் வர்ணிக்கப் புகுந்தால் என்ன ஆகும்???

ஆன்மீகம் பேசிய ஒரே காரணத்துக்காக, இல்லறம் மறுக்கப்பட்ட ஒரு பேதைப் பெண்! அந்தப் புனிதா என்பவள் காரைக்கால் அம்மையாகி....சுடுகாட்டு வாய்க்கரிசியை எல்லாம் தின்று பசியாறி....ஐயோ! அவ உள்ளம் தனிமையில் எப்படி எல்லாம் துடிச்சிதோ?
பேய் மகளிர் ஆனாளே! தானே வலிந்து வேண்டி பேய் உருக் கொண்டார் என்றல்லவா ஆன்மீக உலகம் அதை மாற்றி எழுதியது? :(((

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பெண்கள்! ஆனால் யாரும் தலைவி அந்தஸ்துக்கு உயர முடியவில்லை!
வேதங்களைப் பெண்கள் வாயால் ஓதக் கூடாது என்று சாஸ்திரத்தைக் காட்டும் ஆண்கள்...
இவள் எழுதியதை மட்டும் "வேதம் அனைத்துக்கும் வித்தாகும்" என்று கொண்டாடுகிறார்களே! எப்படி?

இவள் எப்படி ஜெயிச்சிக் காட்டினா என்பது தான் ஆச்சரியமா இருக்கு! இவளை எப்படி வளர விட்டாங்க-ன்னு தான் ஆச்சரியமா இருக்கு!
வாய்ச் சொல் வீரி இல்லை இவள்!
ஆன்மீகமோ, இலக்கியமோ....இவள் "பேசுபவள்" அல்ல! "நடப்பவள்"!!



* தன்னை அவன் ஏற்றுக் கொள்வானா-ன்னு கூட இவளுக்குத் தெரியாது! = இவள் காதல், எப்படிக் "காதல்" ஆகும்?
* வீதியில் பார்த்து, புறத்து அழகில் மயங்கி, உடனே முத்தமிட்டு முயங்கி, கண்டவுடன் காதல் கொண்டு விடவில்லையே! = இவள் காதல், எப்படிக் "காதல்" ஆகும்?
* சிறுமியாய் இருக்கும் போது தோழனாய், படிப்படியாய் வளர்ந்த பின்னரோ காதலனாய்.....நட்பா? காதலா?? = இவள் காதல், எப்படிக் "காதல்" ஆகும்?
* வாய்ச் சுவைக்கும் நாற்றத்துக்கும் அப்படி என்ன பஞ்சம்? "உடல் உறவுக்கு" மட்டும் தேடினால் பல மாப்பிள்ளைகள் கிடைத்து இருப்பார்களே! "உள்ள உறவுக்கும்" அல்லவா, அவனைப் பற்றிக் கொண்டாள்!
அதுவும் யாரை? பக்கத்து வீட்டுப் பையனையா? இல்லையே! காலம் கடந்தவனை அல்லவா பற்றிக் கொண்டாள்! = இவள் காதல், "காதல்" ஆகுமா?

"ஏலோ" ரெம்பாவாய்! "ஏலோ" ரெம்பாவாய் என்று வரிக்கு வரி வரித்த...இவள் ஏற்றுக் கொள்ளப்பட்டாளா? = நெஞ்சகமே கோயில்! நினைவே சுகந்தம்!

இவள் ஏற்றுக் கொள்ளப்பட்டாளா என்ற கேள்விக்கே இடமில்லை!
இவளே ஏற்றுக் கொண்டாள்.....இப்படி ஒரு வாழ்வினை!
தன் நெஞ்சகமே இல்லம்! அவன் நினைவே சுகந்தம்!

என் பால் நோக்காயே ஆகிலும்...........உன் பற்றல்லால் பற்றில்லேன்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால்............அகங் குழைய மாட்டேனே!!


இவள் துணிவே எனக்குத் துணை!
ஆண்டாள், தமிழை ஆண்டாள்...திருவடிகளே சரணம்!!



ஆகா.....அந்த உயில் சமாச்சாரம் என்ன ஆச்சி? அதைச் சொல்லவே இல்லையே!
அவளோட கடைசிக் கவிதை! அந்த உயில்?
அஞ்சு குடிக்கும் அவள் ஒரே சந்ததியாமே! அப்படீன்னா அந்த உயில் எத்தனை கோடி தேறும்? ஸ்பெக்ட்ரம் புகழ் ஒரு லட்சம் கோடி கூட வேணாம்! அதுல ஒரு மூனு சைபர் கம்மி பண்ணிக் குடுத்தாக் கூட போதும்! :)

ஆண்டாள் உயிலில் என்ன தான் இருக்கு?
வழக்கம் போல, இனியது கேட்க இங்கே செல்லுங்கள்! சொத்து விபரம் தெரிந்து விடும்! :)
Read more »

Monday, December 07, 2009

நரசிம்மனைப் பார்த்தீரா?


இடம்: ஒரு மண்டபம்
காலம்: கலியுகம்
நேரம்: கேள்வி நேரம்

(மண்டபத்தில், ஒரு பாகவதர் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் செய்து கொண்டிருக்கிறார்; ஒரு கூட்டம் அதை உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது)

ஒரு பக்தன் (திடீரென எழுந்து): ஸ்வாமி! ஒரு கேள்வி கேட்கலாமா?

பாகவதர்: தாராளமாக!

பக்தன்: நான்முகனும், நீலகண்டனும் நாளும் நாடும் நாராயணனை நாம் எங்கு நோக்கலாம்?

பாகவதர்: கண்ணனே நாராயணன்! ருக்மிணியை வலியக் கைப்பற்றி, தேரில் ஏற்றிக் கொண்ட கண்ணனுடன் ருக்மிணியின் அண்ணன் போரிட வருகின்றான். அப்போது இருவருக்கும் நடந்த போரை நன்றாகக் கண்டவர் உளர். கண்ணனைப் பார்த்தால் நாராயணனைப் பார்த்த மாதிரித் தானே!


பக்தன்: யார்? அந்தச் சிறுவனா? அவன் பொல்லாதவன் ஆயிற்றே? தாய் போன்ற பூதனையின் முலையைச் சுவைத்து அவள் உயிர் உண்டதாகச் சொல்வார்களே? பெண்கள் மீது இரக்கமற்றவன் தானே இப்படிச் செய்ய முடியும்?

பாகவதர் ('ஐயோ! மீண்டும் பூதனையா!' என்ற முனகலுடன்): அப்படிப் பேசாதே! அந்தக் கண்ணனே, கம்சன் அடைத்து வைத்திருந்த பதினாயிரம் கன்னிகைகளை விடுவித்து, தானே அனைவரையும் மணந்து கொண்டவன்! இவனா பொல்லாதவன்?


கண்ணன் தன் தேவிமார்களொடு, துவாரகையில் சிம்மாசனத்தில் அமர்ந்து அரசாண்டதைப் பார்த்தவர்கள் உள்ளனர்!

பக்தன் (மீண்டும்): இவன் ஏழு உலகையும் உண்டதாகச் சொல்வார்களே? இதையாவது யாராவது பார்த்திருக்கின்றனரா?

பாகவதர் (சற்று கோபத்துடன்): நீ இன்று இங்கு நின்று, என்னைக் கேள்வியால் துளைப்பது, அன்று நாராயணன் வராக உருவில் கடலைத் துளைத்து, பூமியை வெளிக் கொணர்ந்ததால் தானே? அதற்காகவாவது அவனிடம் கொஞ்சம் நன்றியோடு நடந்து கொள்!


பக்தன்: ஸ்வாமி! குழப்புகிறீர்களே! நாம் கடைக்குச் சென்று கடைக்காரனிடம் 'பச்சரிசி இருக்கின்றதா' என்று கேட்டால், 'புழுங்கரிசி இருக்கு' என்று கடைக்காரன் சொல்வது போல் அல்லவா இருக்கின்றது?

(பாகவதர் பதில் சொல்வதற்குள், பின்னால் இருந்து, 'ஏய்! உக்காருப்பா! Chance கிடைத்தால் போதுமே! பேசிட்டே இருப்பீங்களே!’ என்று ஒரு குரல் ... அதற்கு சில ஆமாம் சாமிகள் கூட ... அங்கு சிறு சலசலப்பு!)

பாகவதர் (எல்லோரையும் பார்த்து): அமைதி! அவன் கேட்கட்டும்!

இன்னொரு பக்தன் (குறிக்கிட்டு): எங்களுக்கும் Chance கொடுப்பா! ... ஸ்வாமிகளே! எம்பெருமானுக்கு, சங்கு சக்கரங்கள் எல்லாம் இருக்குமே! இந்தக் கண்ணனுக்கு அவை இல்லையே?

பாகவதர்: கொடியில் அனுமன் அமர, வெள்ளைக் குதிரைகளின் கடிவாளத்துடன் அருச்சுனன் தேர் முன் அமர்ந்த கண்ணன், அவனுக்கு ஆயிரம் கைகளுடன் விசுவரூப தரிசனம் தந்தாரே? அந்தக் கைகளில் சங்கு, சக்கரம், வாள், தண்டு, வில் அனைத்தும் இருந்தனவே! அவற்றை, இரண்டு பெரும் படைகள் பார்த்தனவே!

அதே பக்தன்: சரி! கண்ணன் நாராயணன் தான்! ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ராமன் நாராயணனா?

பாகவதர் (சற்று யோசித்து): இதில் சந்தேகமென்ன? ராமன் மிதிலையில், சிவனுடைய வில்லை வளைத்தானே? சிவனுடைய வில்லை வளைப்பவன் எம்பெருமானாகத் தான் இருக்க வேண்டும்? மேலும் பிராட்டியை வேறு யாரும் மணக்க முடியுமா?

இதை, அங்கு கூடியிருந்த மிதிலை மக்களும், ஸ்வயம்வரத்திற்கு அங்கு வந்த மற்ற மன்னர்களும் பார்த்திருக்கின்றனரே?


அதே பக்தன்: ஸ்வாமி! இன்னொரு கேள்வி!

(கூட்டத்தில் முணுமுணுப்பு ... 'ஸ்வாமிகள் பாகவதம் சொல்ல வந்தால், இங்கு ராமாயணம் ஆரம்பித்து விட்டார்களே!' என்று ஒரு வயதானவர் புலம்புகிறார்)

பாகவதர் (எரிச்சலுடன்): இன்னும் என்னப்பா?

பக்தன்: இந்த ராமன், கண்ணன் எல்லாம் பாரதத்தில் தான் பிறந்தார்கள். ஆனால், கலியுகத்தில் பிறக்கவில்லையே? இந்த ராமனை நாம் இப்போது எங்கு பார்ப்பது?

பாகவதர் (’எப்ப பாத்தாலும் நமக்கு இப்படி ஒருத்தன் வந்து மாட்டுகிறானே’ என்று நினைத்து): அந்த ராமனைத் தேடுகிறீர்களா? மார்பைப் பிளந்து ரத்தத்துடன் அளைந்த கைகளுடன் நரசிம்மம் இருந்ததைப் பார்த்தவர்கள் இருக்கின்றனர்!

இன்னொரு பக்தன் (பாகவதரை மடக்க, வேகமாக எழுந்து): இதுவும் எப்பொழுதோ நடந்தது தானே? நரசிம்மரை இப்போது எப்படிப் பார்ப்பது?

கூட்டத்தில், ஒருவர் (சத்தமாக): 'நீ எப்பொழுதும் நாராயணனை நன்றாகத் திட்டிக் கொண்டிரு! அவர் வந்து உன் மார்பையும் பிளப்பார்; அப்போது உன் மூலம் நாங்களும் நரசிம்மனைப் பார்ப்போம்!

(மண்டபத்தில் சிரிப்பலை!
Tension ஆன பாகவதர், துண்டால் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, கேள்விக்குப் பதில் சொல்லாமல், அத்துடன் அன்றைய பாகவதத்தை முடித்துக் கொள்கிறார் ... சபை கலைகிறது)

***

இது அடியேன் கற்பனை அல்ல ... பெரியாழ்வார் எழுதியது!

இதற்கு முன், பல பாசுரங்களில் தன்னை யசோதையாக நினைத்து, கண்ணனை அனுபவித்து மகிழ்ந்த பெரியாழ்வாருக்கு, ஒரு புறம் அவனை மீண்டும் நேரில் காணும் ஆவலும், மறுபுறம், அனுபவ முதிர்ச்சியால் எம்பெருமானை ஏற்கனவே நன்கு பார்த்துவிட்ட ஞானமும் வருகிறது! விளைவு?

தானே 'நாராயணனைக் காண வேண்டுமா? என்ற கேள்வியைக் கேட்டு, தானே, 'அவனைக் கண்டவர்கள் இருக்கின்றார்களே!' என்று பதிலும் உரைத்துக் கொண்டு, ’கதிராயிரம்’ எனும் இத் திருமொழியை இயற்றியுள்ளார்.

ஒவ்வொரு பாசுரத்திலும், முதல் இரண்டு வரிகளில், எம்பெருமானையோ அவனது அவதாரத்தையோ அல்லது அவதார லீலைகளையோ காண வேண்டுமா என்ற கேள்வி! அடுத்த இரண்டு வரிகளில் அதற்குப் பதில்!

(இதே போல் ஸ்ரீ ஆண்டாளும், 'பட்டி மேய்ந்து' [நாச்சியார் திருமொழி-14] எனும் திருமொழியை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது)

(இத்தகைய தமிழ்ப் பாடல்களுக்கு, ’எதிரும் புதிரும்’ என்ற பெயர் உண்டு என்று கேள்விப் பட்டுள்ளேன்! தமிழ் அறிஞர்களே! இது சரியா? பதில் சொல்லுங்கள்! தெரிந்து கொள்கிறேன்)

பெரும்பாலும், ஆழ்வார் கேள்விக்கும் பதிலுக்கும் தொடர்பு இருந்தாலும், சில பாசுரங்களில் தொடர்பு நேரடியாக இல்லை. இந்தத் தொடர்பிலும் ஆசாரியர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு!

இதில் முதல் பாசுரத்திலேயே நரசிம்மனைப் பார்க்கின்றார் ஆழ்வார்.

***

கதிராயிரம் இரவி கலந்தெறித்தால் ஒத்த நீள்முடியன்*
எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்*

அதிரும் கழற்பொருதோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்*

உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டாருளர்.

கதிராயிரம் 4-1-1

ஆயிரம் கதிர்கள் உடைய சூரியன் ஒளி வீசுவதை ஒத்து இருக்கும் நீண்ட முடியை உடையவனும், ஒப்பு இல்லாத பெருமை உடைய ராமன் இருக்கும் இடத்தைத் தேடுகிறீர்களா?

வீரக் கழல் அணிந்தவனும், போர் புரியும் தோள்களையும் உடைய இரணியனின் மார்பைப் பிளந்து, ரத்தத்தை விலக்க அளைந்த கைகளோடு, நரசிம்மன் இருந்ததைப் பார்த்தவர்கள் இருக்கின்றனர்.

(இரவி - சூரியன்; ஆகம் - மார்பு; எதிரில் = எதிர் + இல் - ஒப்பு இல்லாத)

ஆயிரம் கதிரா? ஆயிரம் இரவியா?

***

கதிர்கள் ஆயிரம் உண்டு ஒவ்வொரு சூரியனுக்கும்! எனவே, இதைச் சொல்வதில் ஒன்றும் புதிதில்லை! ஆனால், எம்பெருமான் நீள் முடி, ஒரு சூரியன் ஒளி மட்டுமே கொண்டதா? இல்லையே?


இங்கு, 'ஆயிரம்' எனும் வார்த்தை, கதிருடனும், இரவியினுடனும் சேரும்! 'கதிர் ஆயிரம், (ஆயிரம்) இரவி கலந்து எறித்தால் போல்' என்று பொருள் கொள்வதே சரி!

பாசுரத்தில், ராமனை, ‘எதிரில் பெருமை இராமனை’ என்கின்றார். தன்னிகர் இல்லாத பெருமை உடையவனாம் ராமன்!

இதற்குப் பொருள் கூற ஆரம்பித்தால், முன்னால் மண்டபத்தில் ஒருவர் கூறியது போல், நரசிம்மாவதாரத்தில் இருந்து ராமாயணம் ஆரம்பித்து விடும். எனவே ராமனுக்கு ‘எதிர் இல்’ என்று ஒப்புக் கொண்டு, பாசுரத்தில் கவனம் செலுத்துவோம்!

ஆழ்வாரின் கேள்வி: இந்த ராமன் உண்மையிலேயே இருக்கின்றானா? அவன் இருக்கும் இடம் தேடுகிறீர்களா?

அவர் பதில்: நரசிம்மன் இருக்கின்றான்! அவன் இரணியனை அன்று மார்பு பிளந்ததை, பலர் பார்த்தனர்!

ராமரைக் கேட்டால் நரசிம்மரைச் சொல்கிறாரே? இன்னொரு ’பச்சரிசி+புழுங்கரிசி’ கதையா? ஒருவேளை ஆழ்வார் வேறு கணக்குப் போட்டாரோ?

***

a=b, a=c என்றால், ஃ b=c என்று தானே அர்த்தம்?

நாராயணன் = ராமன்; நாராயணன் = நரசிம்மன்; ஃ ராமன் = நரசிம்மன்

இது தான் ஆழ்வார் போட்ட கணக்கு!

கணக்கு இருக்கட்டும்! ஆழ்வார் நமக்கு என்ன சொல்கிறார்?

எம்பெருமான் பாற்கடலிலேயே இருந்தால் நம்மால் அவனைப் பார்க்கவே முடியாது! நமக்காக அவன் அவ்வப் பொழுது கீழே வந்து, ’நான் வந்திருக்கிறேன்! பார்த்துக் கொள்’ என்று தரிசனம் தருகிறான்.

எல்லா அவதாரங்களும் ’தானே’ என்று முத்திரையும் காட்டிவிட்டுப் போகிறான்!

இவனை நீங்கள் நேரிலே பார்க்காவிட்டாலும், ’உங்கள் மூதாதையரில் ஒருவராவது பார்த்திருப்பர்’ என்கிறார்!

கலியுகத்தில் அவன் இன்னும் வரவில்லை! நமக்கு தரிசனம் தருவதற்காகவே கோயில்களில் இருக்கிறான்!


நரசிம்மன், கைகளில் ரத்தத்துடன் இருந்ததைப் பலர் பார்த்தனராமே? யார் அவர்கள்?

***

செவ்வை சூடுவார், சுமார் ஐந்நூறு ஆண்டுகள் (சிலர் 300 என்பர்) முன்பு வாழ்ந்த புலவர்! 'தமிழில் பாகவதம் இல்லையே' என்ற குறையைத் தீர்க்க அவதரித்தவர்! இவர் ஓலைச் சுவடியில் எழுதிய பாகவதத்தை, உ.வே.சாமிநாத ஐயர் வெளிக் கொணர்ந்தார்! இதிலும் பிரகலாத சரித்திரம் விவரமாக இருக்கின்றது!

இரணிய வதத்தின் பின், எம்பெருமான் இருந்த நிலையை வருணிக்கிறார் இவர்! அவற்றுள் சில பாடல்கள் இதோ:

கழை சுளி களிறு அன்னானை, கவானிடைக் கிடத்தி, மாலைக்
குழவி வெண் திங்கள் அன்ன கூருகிர் நுதியின், பைந்தேன்

பொழி மலர் அலங்கல் மார்பம் போழ்ந்து, செங்குருதி ஊறி,

வழி பசுங் குடர் மென் கண்ணி ஆளரி வளைந்தது அன்றே.
1692

யானையைப் போல் இருந்த இரணியனை மடியில் கிடத்தி, சந்திரன் போல் பளபளக்கும் தன் கூர்மையான நகங்களால், மாலை அணிந்த அவன் மார்பைக் கீறி, அவன் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொள்கிறார் ஆளரி!

ஆர்த்தனர் அமர் ஓடி; அரும்பு அவிழ் பசும்பொற் போது
தூர்த்தனர்; உலகம் உண்ட சுடர் நகைப் பவள வாயும்,

கூர்த்த வாள் உகிரும், கையும், கொழுங்குடர் அணிந்த மார்பும்

பார்த்தனர்; வெருவல் உற்றார், பனி இரு விசும்பு மொய்த்தார்.
1693


தேவர்கள் இதை ஓடி வந்து, மேலிருந்து பார்க்கின்றனராம் (அதுவரை இரணியனிடம் உள்ள பயத்தால் ஒளிந்து இருந்தவர்கள்)! அன்றே பூத்த மலர்களைத் தூவுகின்றனர்! போட்டி போட்டுக் கொண்டு, அந்தரத்தில் இடம் பிடிக்கின்றனர்!

ஆனால் அவர்கள் பார்த்ததோ ஒரு புதிய உருவத்தை! உலகம் உண்ட அந்தப் பவள வாயையும், கூர்மையான அந்த நகங்களையும், குடல் அணிந்த அந்த மார்பையும்! விசுவ ரூபத்தையும்! தேவர்கள் மட்டுமா பார்த்தனர்? மற்றவர்களும் தான்!

வெஞ்சினத் திகிரி மாயன் வெருவரு தோற்றம் நோக்கி,
கஞ்ச நாண் மலரினானும் கண்ணுதல் பிறரும் அஞ்சி,
செஞ்சுடர் விரிக்கும் போதின், 'தெரிவை! நீ, சேறி!' என்ன,
அஞ்சினள் அணங்கு, நண்ண அவ்வுருக் கண்டு; மன்னோ.
1694

அவனுடைய கோபம் தரும் தோற்றம் காண்கின்றனர், பிரமனும், சிவனும், இந்திரனும்! அருகே செல்லப் பயப்படுகின்றனர்! பிரமன், அருகே நிற்கும் திருமகளைப் பார்த்து, 'தெரிவை! நீ சேறி!' என்று கூறுகின்றான்!

ஆனால் அருகில் செல்ல, திருமகளும் பயப்படுகின்றாள்! ஏன்?

***

இதற்கு முன்பு, 'ஆளரிநாதன்' பதிப்பில், அடியேன், 'நரசிம்மனை யாரும் இதற்கு முன் பார்த்திருக்க வில்லை என்பதற்குச் சிறந்த சான்று எது?' என்று கேட்டிருந்தேன். இதோ ஒரு விளக்கம்:

பிரமனும் சிவனும் திருமகளைப் பார்த்து, 'நீ செல்!' என்று கூற, திருமகள் அஞ்சுகின்றாளாம்! பயத்தினால் அல்ல!

தான் இதுவரை பார்த்திராத உருவமாம் அது! தன் கணவனையே அடையாளம் தெரியவில்லை அவளுக்கு! ஒரு வேளை இது நாராயணன் இல்லை என்றால்! பிற புருஷனிடம் எப்படிச் செல்வது? எனவே அஞ்சினாளாம் திருமகள்! இதற்கு மேல் வேறு சான்று வேண்டுமா நரசிம்மம் புதிது என்பதற்கு?

திருமகள் தயங்கித் தயங்கிப் பார்க்கின்றாள்!

மலரயன், கிரீசன், தேவர், வாசவன், முனிவர், சித்தர்,
இலகு தென்புலத்தோர், நாகர், இயக்கர், கந்திருவர், ஆதி

அலகிலோர் அணுகார் ஆகி; ஆளரி உருவத்தோனை,

பலமுறை தொழுது, பாத பங்கயம் பரவினார்; ஆல். 1695


எல்லாத் தேவர்களும் பார்க்கின்றனர்! ஆனாலும், அருகில் நெருங்க பயம்! தள்ளி இருந்தே திருவடி தொழுகின்றனர்!

சண்டைக்குப் பின், மீதமுள்ள அசுரர்களும் பார்க்கின்றனர்! அசுரர்களின் ஒரே ஒரு ஆழ்வானான ப்ரகலாதாழ்வானும் பார்க்கின்றான்! இரணியன் அரண்மனையில் அப்பொழுது இருந்த புரோகிதர்களும், மற்ற மனிதர்களும் பார்க்கின்றனராம்!

இப்படி, 'நரசிம்மனைப் பார்த்தவர்கள் பலர் உண்டே' என்கின்றார் ஆழ்வார்! சரிதானே!

- நரசிம்மர் நமக்கும் தரிசனம் தருவார்!

Read more »

Saturday, July 25, 2009

கோதையின் பிறந்தநாள்: Kissing For Dummies

மக்களே, என் மனத்துக்கினிய தோழி, என் மன்னவன் காதலி,
தென் பாண்டித் தெள்ளமுது, பேரழகுப் பெட்டகம்,
தமிழன்னையே விரும்பிச் சுவைக்கும் தமிழ் பேச வல்லாள், காதலர்க்கு நல்லாள்
...அவளுக்கு இன்று பிறந்த நாள் (Jul-25-2009, ஆடிப் பூரம்)!

திரு ஆடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!
திருப் பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
தோள் மேல் கை போட்டுப் பேச வல்ல தோழியே!
நாள் எல்லாம் உன் நட்பில் நானும் வாழி வாழியே!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்-டீ, கோதை!
Happy Birthday dee, my sweet lil' village girl! :)

அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ, இன்னும் பல நூற்றாண்டு இரு!


பின்னிய கூந்தல் கருநிற நாகம்..
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்


மற்ற ஆழ்வார் பாடல்களை எல்லாம் கோதை பாடியிருந்தா எப்படிப் பாடி இருப்பா? சும்மா கற்பனைக் குதிரையில் போய் வருவோமா?
வாங்க மக்கா! ஆடல் மா என்னும் வெண் புரவி காத்துக்கிட்டு இருக்கு! :) மொதல்ல அரங்கத்தில் இருந்தே ஆரம்பிப்போம்!

இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகர் உளானே!
- இது தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பாடல்! இதையே என் தோழி ஆண்டாள் பாடினா?

இச்சு தா, இச்சு தா! கன்னத்துல இச்சு தா-ன்னு "ரன்" படப் பாடல் போல பாடலாம் தான்! ஆனால் பாசுரச் சந்தம் வரணும்-ல்ல? இலக்கிய மருவாதை-ன்னு ஒன்னு இருக்குல்ல? :)

இருப்பதிலேயே சுவையான சுவை எது? = "இச்-இச்" சுவை!
அதான் ஆண்டாள் "இச்" சுவையைப் பாடுகிறாள்! :)
"இச்" சுவையைத் தவிர, இந்திர லோகத்துச் சுகமே கொடுத்தாலும் வேணவே வேணாம் என்கிறாள்! :)

"இச்" சுவை தவிர யான் போய், இந்திர லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன், அரங்க மா நகர் உளானே!


காதல் விளையாட்டை...முத்தத்திலேயே துவங்கி, முத்தத்திலேயே முடிப்பது என்பது ஒரு பெரிய கலை!
ஏழு ஜென்ம பந்தத்து முத்தம் கொடுப்பது எப்படி?
கோதை கிட்டயே கேட்கலாம் வாரீகளா?
Here we go...முத்தம் For Dummies :)



1. முதலில் கோச்சிக்கணும்! அதாச்சும் கோச்சிக்கறது போல நடிக்கணும்! :) ஏன்னா, கோவம் தீர்க்கக் கொடுக்கப்படும் முத்தத்துக்குச் சுவை அதிகம்! :)

அட, வேங்கடத்தில் உலாவும் கொழுத்த மேகங்களே! போயி உங்க ஆளிடம் சொல்லுங்க! திரு-வேங்கடம்-உடையானை இந்த உலகத்தில் ஒருத்தனும் மதிக்க மாட்டான்!
எப்பவும் அவனே கதி என்று கிடந்த என்னை, அவன் கேவலமா நினைச்சிட்டான்-ல்ல? இவ இளிச்ச வாயி, அன்பைத் தானாவே கொடுத்துருவா-ன்னு நினைச்சிட்டான்-ல்ல?

கதி என்றும் தான் ஆவான்,
கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல்
வையகத்தார் மதியாரே!



2. இப்போ கோவம் தணிக்க அவன் வந்தாகணும் இல்லையா? அப்போ என்ன பண்ணனும்? உடனே "இச்" கொடுத்துறதா? நோ நோ! :)

அவன் ஆடையைப் பிடித்து இழுத்து அவனை வம்பு செய்யணும்! அது என்ன எப்பமே அவன் தான் சேலையை ஒளிக்கணுமா? அவன் இடுப்புத் துணியை நான் ஒளிச்சி வச்சா என்ன?

அவன் இடுப்புத் துணியின் வாசத்தில் அவன் வாசம் வீசுகிறதே! அந்தத் துணியைப் பிடித்திழுத்து என் மேல் சுற்றிக் கொள்கிறேன்!
அவனுக்குத் தெரியாமல், அவன் ஆடையை, அவன் சூட்கேசில் இருந்து களவாடி, என் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுகிறேன்! :)

பெண்ணின் வருத்தம் அறியாத,
பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை,
வாட்டம் தணிய வீசீரே!



3. அடுத்து??? ஆளு கிட்டக்க கிட்டக்க வரான்! கண்ணு படக் படக்-ன்னு அடிச்சிக்குது! இதயம் தடக் தடக்-ன்னு அடிச்சிக்குது!
ச்சே! என்ன வீரம் பேசினாலும், அவன் கிட்டக்க வரும் போது மட்டும் மனசு லாஸ்ட் மினிட் கூட்டணிக் கட்சியா மாறிடுதே! :)

அய்யோ! என் உதடே! அவன் கிட்டக்க போயிறாதே! அதுக்கப்புறம் நானோ கண்ணை மூடிக்குவேன்! அதுனால அவனைச் சரியாப் பார்க்க முடியாது போயிடும்!

* அவன் முடியைக் கோதி விடும் குழல் அழகு!
* தொடர் வண்டியில் என்னுடன் விசில் அடித்து வரும் வாய் அழகு!
* என்னை முழுங்குவது போல் பார்க்கும் கண் அழகு!
* அவனுடைய தொப்புளில் (கொப்பூழ்) நான் விடும் பம்பரம் அழகு!

அதையெல்லாம் நான் முத்தம் கொடுப்பதற்கு முன்பே பார்த்து விடுகிறேன்! அதுக்கு அப்பறமா என் மூடின கண்ணு மூடினது தான்! :)
எனவே, இதழொடு இதழ் கலக்கும் முன், கண்ணோடு கண் கலக்கட்டும்!
* முதலில் மேலோர் = கண்கள்!
* அப்பறம் தான் கீழோர் = இதழ்கள்!

எழிலுடைய அம்மனை மீர்! என் அரங்கத்து இன் அமுதர்,
குழல் அழகர்! வாய் அழகர்! கண் அழகர்! கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர்! எம்மானார்! எம்மானார்!




4. ஹைய்யோ! அவன் பச்சைக் கர்ப்பூர நெடி என் பச்சை உடம்பை என்னமோ பண்ணுதே! அவன் கிட்டக்க வந்துட்ட்ட்ட்ட்ட்டான்! அவன் உதடுகள் கிட்ட்ட்ட்ட்ட்டக்க வந்துரிச்சி!

என்ன டூத் பேஸ்ட் யூஸ் பண்ணுவான்-ன்னு தெரியலையே?
சரியான வெண்ணையா இருப்பானோ??? வெண்ணைய் வீச்சம் அடிக்குதே!
Pepsodent Butter-ன்னு புது பிராண்ட் ஏதாச்சும் வந்திருக்கா என்ன? :)

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ?
மருப்பு ஒசித்த மாதவன் தன் "வாய்ச் சுவையும்+நாற்றமும்"
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே!

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!
அண்ணலும் தேக்கினான்! அவளும் தேக்கினாள்!

சேய்த் தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடய
"வாய்த் தீர்த்தம்" பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே!


அடியார்க்கு நீர்த் தீர்த்தம்! எனக்கோ அவன் வாய்த் தீர்த்தம்!
* முதல் தீர்த்தம் = பிரதமம் கார்ய சித்தயர்த்தம்! = உன்-என் வாழ்வில், செயல் வெற்றி!
* இரண்டாம் தீர்த்தம் = த்வீதீயம் தர்ம ஸ்தாபனம்! = உன்-என் வாழ்வில், அறன் வலியுறுத்தல்!
* மூன்றாம் தீர்த்தம் = த்ரிதீயம் மோக்ஷ ப்ரோக்தம்! = உன்-என் வாழ்வில், வாழ்வாங்கு வாழல்!


5. முத்தம் கொடுத்து முடித்த பின்னர், தேன் உண்ட மயக்கத்தில்,
"ஆகா, வாழ்வின் பயனை அடைந்தேன்"-ன்னு தப்பித் தவறிக் கூட டயலாக் விட்டுறாதே!
லேசு மாசா, "I am not that satisfied, But ’twaz Just Okay" என்பது போல் ஒரு லுக்கு விடணும்! :)

அப்போ தானே அடுத்த முறை, இன்னும் அறிவா அழகா வேறு மாதிரி முயல்வான்? :)
ஞாபகம் வச்சிக்க மனசே! வேடனுக்குத் தானே சென்று விழும் பறவையை விட, வேட்டையாடி விழும் பறவை மேலத் தான் காதல் அதிகம்!
அதனால் நீ அவனிடம் விழ நினைச்சாலும், வேட்டை நாடகம் நடத்தி, அப்புறமா விழு! :)

மாலாய்ப் பிறந்த நம்பியை,
மாலே செய்யும் மணாளனை,
ஏலாப் பொய்கள் உரைப்பானை,
இங்கே போதக் கண்டீரே?

ஏலாப் பொய் சொல்லும் என் செல்லப் Porkki-ன்னு கொஞ்சம் திட்டி அனுப்பு!
அப்போ தான் ஏக்கமாப் போவான்! அப்போ தான் அடுத்த முத்தச் சுவை இன்னும் சுவை பெறும்! :))


கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!


"அடியே! கோதை! அவனைக் கட்டிக்கிட்டா எங்கேடி இருப்பாய்? அவனுக்கு-ன்னு தனியா வீடு-ன்னு கெடையாது! வெளியில் இருந்து பார்க்க வேணும்-ன்னா ரொம்ப பணக்கார மலைவீடு போல இருக்கும்! ஆனா மொத்தமா முப்பது நிமிஷம் கூடத் தூங்க விட மாட்டானுங்க! :)
108 வீடு வீடாச் சுத்தணும்! வேர்வை பொங்கி வழியும் அவன் கரு-அறையில்! ஏசி கூட இருக்காது! கரென்ட் கூட இருக்காது! பாம்புப் படுக்கை! சொர சொர-ன்னு இருக்கும்! என்னடி பண்ணுவ?"

Kothai Says:
"Just a small room, power cuts ok...
Even with a lil' candle light,
His sight is tight that makes me light!

Soothing music from the street
My windows open, welcome beat...
Gentle breeze that brings in ease

High Definition in his Eyes...
Sub Woofer as he Whispers...
Home Theater in his Prank
That makes me really crank...
Armani, CK, Obsession
Are dull and dumbest possession!
His fragrance comes and fascinates
The "Smell of my Lover" oscillates!

Thatz my home, Thatz my home!
His arms have rooms that are large enough!
Thatz my home! Thatz my home!

* எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
* "உன்" தன்னோடு உற்றோமே ஆவோம்!
* "உனக்கேஏஏஏ" நாம் ஆட் செய்வோம்!
* மற்றை நம் காமங்கள் மாற்று!

அவனுக்கு என்னை "விதி!"
என்ற இம் மாற்றம் நான் கடவா வண்ணமே நல்கு!



இவள் விசித்திர விறுவிறு காதல், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு,
பல கோடி நூறாயிர முத்தங்களுடன் வாழியே! வாழியே!!
Read more »

Sunday, March 15, 2009

தமிழில் பட்டர்ஃபிளைக்கு பெயர் இருக்கா?

ஓ பட்டர்ஃபிளை பட்டர்ஃபிளை! ஏன் கொடுத்தாய் விருதை?-ன்னு மாத்திப் பாடலாமா? ஹிஹி! மகரந்தத்தைத் தேடித் தானே பட்டர்ஃபிளை வரும்? ஆனால் மகரந்தமோ, பட்டர்ஃபிளையை என்னிடம் அனுப்பி வைச்சிருக்கு! :)பட்டாம்பூச்சி விருது அளித்த மகரந்தன், நண்பன் ராகவனுக்கு நன்றி! :)

இந்த மாஆஆஆசம் என்ன விருது மாசமா? தமிழ்மணத்தின் இரண்டு விருதுகளோடே, தமிழ் மணக்கும் ராகவன் இன்னொரு விருதும் அடியேனுக்குத் தந்து ஹாட் ட்ரிக் ஆக்கி இருக்கான்! :)
யார் இந்த பட்டாம்பூச்சியைப் பறக்க விட்டாங்களோ தெரியலை....ஆனால் துள்ளித் திரிந்த காலங்கள் கணக்கா, ஒவ்வொரு வலைப்"பூ"வுக்கும் அழகாப் பறந்துக்கிட்டே இருக்கு!


"சரி..... தமிழில் பட்டர்ஃபிளைக்கு என்ன பெயர்???"

"அட மாங்கா கேஆரெஸ், உன்னைப் போயி தமிழ் கொஞ்சும் பதிவு-ன்னு சொல்லுறாங்க பாரு! இது கூடவா தெரியாது?....குழந்தைக்குக் கூடத் தெரியுமே...பட்டர்ஃபிளைக்குத் தமிழ்ப் பேரு = பட்டாம்பூச்சி, வண்ணத்துப் பூச்சி! இது என்னடா கேள்வி?"

"எலே! வண்ணான் பூச்சி, வண்ணாத்திப் பூச்சி-ன்னு எனக்கும் தெரியும்! அதெல்லாம் இப்போ நாம ஜாலியா சொல்றது!
ஆனால் இவ்வளவு அழகான, காதலர்களின் பட்டாம்பூச்சியை, தமிழ் இலக்கியப் பாடல்களில் யாரும் பாடினா மாதிரியே தெரியலையே! அதான் என் கேள்வி! நீயே யோசிச்சிப் பாரு! சினிமாப் பாட்டு தவிர, வேற எங்காச்சும் பட்டர்ஃபிளை பறந்திருக்கா?"

"அட, ஆமாம்-ல? சினிமாவில் பட்டர்ஃபிளை பாட்டு இருக்கு! ஆனா இலக்கியத்தில் வண்ணத்துப் பூச்சி பத்தி யாரும் பாடலை போலிருக்கே!
எத்தனை எத்தனை காதல் இருக்கு தமிழ் இலக்கியத்தில்? ஆனால் ஒருத்தர் கூடவா நம்ம பட்டாம்பூச்சியைப் பாடலை? எ.கொ.ச?"

"ஹா ஹா ஹா! ஒரு வேளை...இந்த வண்ணத்துப் பூச்சி, "தமிழ்க் கடவுள்" மாதிரி, "தமிழ்ப் பூச்சியா" இல்லாம இருந்திருக்குமோ? அதான் இலக்கியத்தில் பின்னாளைய புலவர்கள் பாடலையோ?"

"டேய்....வேணாம்! ஒதை படுவ கேஆரெஸ்ஸு! ஒழுங்காச் சொல்லிரு! இப்ப எதுக்கு இதைக் கெளப்பி விட்ட நீயி? தமிழில் வண்ணாத்திப் பூச்சிப் பாட்டு இருக்கா? இல்லையா? அதச் சொல்லு!"

"இருக்கு! இருக்கு!....ஒவ்வொன்னா எடுத்து விடவா? அடா, அடா, அடா....காதல்-ல்ல தான் எத்தனை எத்தனை பட்டாம்பூச்சி பாட்டு இருக்கு?
1. வண்ணத்துப் பூச்சி...வயசென்ன ஆச்சி?
2. ஒரு பட்டாம் பூச்சி நெஞ்சுக்குள்ள சுத்துகின்றதே!
3. ஓ...பட்டர்ஃபிளை...பட்டர்ஃபிளை, ஏன் விரித்தாய் சிறகை?"


"டேய்....தமிழ் இலக்கியத்தில் ஏன் பட்டாம் பூச்சி இல்லை-ன்னு கேட்டா, நீ என்னமோ சினிமாப் பாட்டை எல்லாம் காட்டுற?"

"அட ராசா, சினிமாப் பாட்டு இலக்கியம் ஆவாதா என்ன? இன்றைய பாட்டு, இன்னும் இருநூறு வருசத்துல இலக்கியம் ஆயிரும்-டா! தெரிஞ்சிக்கோ" :)

"யாரு கண்டா? ஒன்னை மாதிரி, ஜிரா மாதிரி, கானா பிரபா மாதிரி ஆளுங்க இருந்தாக்கா, ஆனாலும் ஆயிரும்! :) ஆனாலும் வண்ணத்துப் பூச்சி, வயசென்ன ஆச்சி பாட்டு எனக்கும் ரொம்ப புடிக்கும்-டா கேஆரெஸ்!"

"அப்படி வா வழிக்கு! இன்னும் நிறைய பாட்டு இருக்கு! நடு நடுவுல வண்ணத்துப் பூச்சி வரும்! - விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே....அதுல கூட, நீ பட்டுப் புடைவை கட்டிக் கொண்டால், பட்டாம் பூச்சிகள் மோட்சம் பெறும்-ன்னு வரிகள் வரும்! செம கிக்கா இருக்கும்-ல?"

"சரி, நீ மேட்டருக்கு வா! தமிழ் இலக்கியத்தில் பட்டாம் பூச்சி இருக்கா? இல்லையா?"


பட்டாம் பூச்சி வேற! பட்டுப் பூச்சி வேற! பட்டுப் பூச்சி, மின்மினிப் பூச்சி, பட்டாம்பூச்சி, வண்டு, தும்பி-ன்னு நிறைய இருந்தாலும், மகரந்தம் தேடிப் பறப்பது...மூனே மூனு தான்! = பட்டாம்பூச்சி, வண்டு, தும்பி!

இதுல வண்டு, தும்பி = இந்த இரண்டு பத்தியும் இலக்கியத்தில் நிறையவே இருக்கு!
கோத்தும்பீ என்று மாணிக்கவாசகர் தனியாகவே ஒரு தொகுப்பு போட்டு இருக்காரு! சங்க காலத்திலேயே, கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் "தும்பி" தான் திருவிளையாடல் புகழ் பெற்றதாச்சே!

வண்டு பற்றியும் இலக்கியத்தில் உண்டு! திரையிசைப் பாடல்களும் உண்டு!
பூவில் வண்டு கூடும் கண்டு, பூவும் கண்கள் மூடும் என்பது என்னவொரு அழகிய சினிமாப் பாடல்! அதில் இலக்கிய அழகு இல்லீயா என்ன?

"வண்டினம்" முரலும் சோலை என்பது ஆழ்வார் பாசுரம்! வண்டார் குழலி/சுரும்பு ஆர் குழலி என்று இரத்தினகிரி முருகன் கோயிலில் உள்ள அம்பாளுக்குப் பேரு!
இப்படி வண்டும் தும்பியும் இலக்கியத்தில் நிறையவே இருக்கு! ஆனால்.....

* அழகிய வண்ணம் வண்ணமாய்ப் பறக்கும் பட்டாம் பூச்சி...
* காதல் தேனை உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கும் பட்டாம் பூச்சி...
* "I Love U" என்ற மந்திரச் சொல் சொல்லும் போது இளசுகளின் கண்கள், உள்ளமெல்லாம் பறக்கும் பட்டாம் பூச்சி....
தமிழ் இலக்கியத்தில் கிட்டத்தட்ட இல்லை-ன்னே சொல்லிறலாம்! :(((



"அடடா......அப்படியா சேதி? பட்டாம் பூச்சிக்குத் தமிழ் இலக்கியத்தில் இடம் இல்லையா? கேட்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கேஆரெஸ்!"

"என்னாங்க பண்றது? பின்னாளைய தமிழ்ப் புலவர்கள் மனசு வைக்கணும்! அவிங்க யாரும் வைக்கலை போல இருக்கே! தமிழ்க் கடவுளான திருமாலையே தமிழ்க் கடவுள்-ன்னு பாடாத சில பின்னாள் புலவர்களா, பட்டாம் பூச்சிக்கு எல்லாம் மனசு இரங்கப் போறாங்க?"

"அது என்னமோ சரி தான்! அறுபது வயசு ராஜா அந்தப்புர உப்பரிகையில் நடந்து வருவதைப் பார்த்துட்டு, வீதி இளம்பெண் வயசுக்கு வந்துட்டா-ன்னு "உலா" எழுதினானுங்க சில பேரு! சில பேரு ராஜாவுக்கு கூஜா தூக்க, வலிந்து போய் காதல் பாடல்களை எழுதுவாங்க! உலா, கலம்பகம்-ன்னு பின்னாளைய சிற்றிலக்கியம்! அதில் எல்லாம் செயற்கைக் காதல் தான்! என்ன இருந்தாலும், சங்க இலக்கியத்து உண்மைக் காதல் மாதிரி வருமா? அரசனுக்குப் பயப்படாம, உள்ளது உள்ளபடி இயற்கையாகப் பாடின காதல் ஆச்சே அது?"

"இதுக்குத் தான் காதலர்களே பெரும் தமிழ்ப் புலவர்களா ஆயிரணும்! அப்போ தான் காதலர்களுக்கு எல்லாம் ஒரு கெத்தா இருக்கும்! பட்டாம் பூச்சிக்கும் ஒரு மதிப்பு!" :)

"ஆமாம்! அப்படி யாராச்சும் ஆகியிருக்காங்களா கேஆரெஸ்ஸூ? பட்டாம் பூச்சிக்கு விடிவு கொடுக்க, ஒருத்தர் கூடவா இல்ல, தமிழ் இலக்கியத்தில்?"

"ஏன் இல்லை? அதுவும் என் தோழி இருக்கும் போது....."

"ஆகா! கோதையா? அவளா?....அந்தக் காதலி பெரிய புலவர் தான்! ஆனால் அவளாச்சும் பட்டாம் பூச்சியைப் பாடுறாளா என்ன?"

"சிந்துரச் செம்பொடி போல்
திருமாலிருஞ் சோலை எங்கும்,
இந்திர கோபங்களே
எழுந்தும் பறந்து இட்டனவால்,
மந்தரம் நாட்டி அன்று
மதுரக் கொழுஞ் சாறு கொண்ட
சுந்தரத் தோள் உடையான்
சுழலையின் இன்று உய்துங் கொலோ"

"ஆகா! ஆகா! அருமை! அருமை! காதலர்கள் விரும்பும் பட்டாம் பூச்சியைப் பாடிட்டாளா? இதுக்கு விளக்கம் ப்ளீஸ்!


தமிழ்ப் பட்டாம் பூச்சியைப் பாக்கணும்-ன்னா மதுரைக்குத் தான் போவோணும்! மதுரை அழகர் கோயில்-ல தான், அவள் காதலன், சுந்தரத் தோள் உடையான் இருக்கான்! சூப்பர் அழகன்! கள்ளழகன்! - அவனுக்கு ஏன் சுந்தரத் தோள்-ன்னு பேரு? மருதைக் காரவுங்களே வந்து சொல்லட்டும்!

அவன் என்ன பண்ணுறானாம் என் தோழியை?
மந்தர மத்தினை நட்டு, மதுரமான வெள்ளமுதம் தந்தவன் அவன்! மந்தரம் நாட்டி, அன்று மதுரக் கொழுஞ் சாறு கொண்ட சுந்தரத் தோள் உடையான்!
அவன் ஏற்படுத்திய சுழலில் சிக்கித் தவிக்கிறாள் தோழி! பட்டாம்பூச்சி பறக்குது அவளுக்கு! :)

திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் கோயில்! அங்கு சிந்தூரப் பொடிகள் தூவினாற் போலே, இந்திர கோபங்கள் என்னும் வண்ணத்துப் பூச்சிகள், ஒரேயடியாக எழுந்து, ஒட்டு மொத்தமாகப் பறக்கின்றன! Butterfly Effect in Love! :) சிந்துரச் செம்பொடி போல், திருமாலிருஞ் சோலை எங்கும், இந்திர கோபங்களே எழுந்தும் பறந்து இட்டனவால்....

இந்திர கோபம் என்னும் வண்ணத்துப் பூச்சி வகையினைச் சார்ந்தவை! சில பேரு தம்பலப் பூச்சி-ன்னும் சொல்லுவாய்ங்க!
எது என்ன இந்திர கோபம்? ரொம்ப கோவமா இருக்குமா? ஹிஹி! லவ்வுல ஏதுங்க கோவம்?

வண்ண வண்ண வானவில்லை இந்திர தனுசு என்று சொல்வது போல், வண்ண வண்ண வண்ணாத்திப் பூச்சியை இந்திர கோபம்-ன்னு சொல்லுறது வழக்கம்! - அவன் கோபாலன்! அவள் கோபிகை! அது "கோ"பம்!

திருமாலின் பலப்பல உருவொளியைக் காட்டுகின்றீர்! அவன் கிட்ட சொல்லி வைங்க! - திருமாலிருஞ் சோலை நம்பி, அவன் வரி வளையில் புகுந்து, வந்தி பற்றும் வழக்குளதே!
என் வளையல் எல்லாம் கழண்டு கழண்டு விழுது! எல்லாம் அவனால் தான்! என்னமோ பண்ணிட்டான் என்னை! என் வளை விழக் காரணமான அந்த மதுரைக்காரன் மேல் கேஸ் போடுவேன்! = வழக்கு உளதே! :)

நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்,
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்,
ஏறு திரு உடையான், இன்று வந்து இவை கொள்ளும் கொலோ?

மந்தர மத்திலே மதுரமான வெள்ளமுதம் தந்தவன் அவன்!
பதிலுக்கு நானும் வெண்மையான வெண்ணையும், அக்கார அடிசிலும் அவனுக்குத் தருவேன்!
நூறு பானை வெண்ணையும், நூறு பானை சர்க்கரைப் பொங்கலும் அவனுக்கு நேர்ந்து வச்சேன்! ஒழுங்கு மரியாதையா வந்து வாங்கிக்கச் சொல்லுங்க! :)

இப்படி காதலர்களுக்குப் பறக்கும் பட்டாம்பூச்சிகளை, பாட்டிலே காட்டும் ஒரே தமிழ்க் கவிஞர் = கோதை!
காதல் இளவரசி கோதைப் பொண்ணு திருவடிகளே சரணம்!" :)


அப்பாடா...பட்டாம்பூச்சி பதிவு எழுதியாச்சு! அடுத்து மூனு பேருக்கு இந்த விருதைக் குடுத்துப் பதிவுக்கு அழைக்கனுமாமே! யார் அங்கே....?

1. இம்சை அரசி = வாம்மா தங்காச்சி! நீ இம்சை அரசின்னா, என் தோழீ காதல் அரசி! கோதை கூடவே சண்டை போட நீ தான் சரியான ஆளு! புது கல்யாணப் பொண்ணு :)

2. சுவாமி ஓம்கார் = சுவாமிகளைப் பற்றி அடியேன் என்ன சொல்ல? மந்திரம், யோகம் என்பதையெல்லாம் வறட்டு வேதாந்தமாக இல்லாமல்...திரட்டு வேதாந்தமாக, திரட்டி வேதாந்தமாகப் பேச முடியும் என்று வெற்றிகரமாகக் காட்டி வருபவர்!
சந்திராயன் வெற்றிக்கு ஜாதகம் கணித்தவர்! வாழ்க நீர் எம்மான்! உங்க கிட்ட கேட்க பல கேள்விகள் இருக்கு சுவாமி! புருவ மத்தியில் தோன்றிய பல கேள்விகள் :)

3. இலவசக் கொத்தனார் = பொருளாதாரப் பின்னடைவு ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது! இப்பல்லாம்....இலவசம் ரெம்ப கம்மி ஆயிருச்சி! :)
குறுக்கெழுத்துப் போட்டி மட்டும்-ன்னே ஆகிப் போச்சி! இவருக்கு விருது கொடுத்தாவது, நம்ம பழைய கொத்தனாரை இஸ்துக்கினு வருவோம்! We want the Old & Gold Kothanar :)

4. குமரன் = சூரியனுக்கு நான் எப்படிங்க டார்ச் லைட்டு அடிக்க முடியும்? இவருக்கு விருது கொடுத்தாலாச்சும், கோதைத் தமிழுக்கு இவரு பதில் விருது கொடுக்கிறாரா பார்ப்போம்! :)
தமிழமுதம் தரும் செஞ்சொற் கொண்டலே வருக!
எளியோன் தரும் பட்டாம்பூச்சி விருதினைப் பெறுக!

5. நா.கணேசன் = அன்னாரின் பன்முகத் தமிழைப் பருகாதவர்கள் உளரோ? நாசா முதல் நற்றமிழ் வரை...One of The Coolest Blog I ever know!


பட்டாம் பூச்சி பறக்கும் முறை:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP