300) ஆண்டாள் எழுதிய உயில்! கடைசிக் கவிதை!
கவிதையிலேயே யாராச்சும் உயில் எழுதி வச்சி இருக்காங்களா? :) கேள்விப்பட்டு இருக்கீங்களா? தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!
தோழி கோதைக்கு நேற்று பிறந்தநாள் அல்லவா? (12-Aug-2010)! ஆடிப் பூரம்!
எனக்கும் அவளுக்கு மூன்றே நாள் தான் வித்தியாசம்! அதான் அவ்ளோ நெருக்கம் போல! :)
கண்டிப்பா அவ பிறந்தநாள் அன்னிக்கி, ஒவ்வொரு ஆண்டும் பதிவு வந்துரும்! ஆனால் இந்த ஆண்டு தான், ஆரம்பம் முதலே ஏதோ ஒன்னு தட்டுது! பரவாயில்லை! எதுன்னாலும் என் முருகன் பார்த்துக் கொள்வான்! நாம மேட்டருக்கு வருவோம்!
Happy Birthday dee kOthai! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழீ!
ஹேய், லேட்டா வாழ்த்துறேன்-ன்னு, உயில்-ல என் பேரை எழுதாம விட்டுறாதேடீ! :)
மாதவிப் பந்தலில் இது 300ஆம் பதிவு! முந்நூறில் முருகனருள் முன்னிற்க!
இந்தப் பந்தலில் கூவு குயில்களான...வாசகர்கள்...நீங்கள்...
உங்கள் அனைவருக்கும் முதலில் வாழ்த்துக்கள் + அப்புறம் நன்றி! :)
மாதவிப் பந்தல் மேல் பல் கால் அடியவர்கள் கூவின காண்!
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்! இன்புறுவர் எம்பாவாய்!
அப்படி என்ன தான்யா அவ எழுதிட்டுப் போயிருப்பா, கடைசிக் கவிதையில்? பார்க்கலாமா? இதோ....ஆண்டாள் எழுதிய உயில்...Last Testament!
பருந்தாட் களிற்றுக்கு அருள்செய்த பரமன் தன்னை, பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை, விட்டு சித்தன் கோதைசொல்,
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ், பிரியாது என்றும் இருப்பார்களே!
பிரியாது என்றும் இருப்பார்களே!! பிரியாது என்றும் இருப்பார்களே!!!
என்ன, ஏதாச்சும் புரிஞ்சுதா? :)
இதுல எங்கேய்யா சொத்து விபரம் சொல்லி இருக்கு? மறைச்சு சொல்லுறாளா? வெளிப்படையாச் சொல்லுறாளா? வில்லங்கம் ஒன்னும் இல்லியே? :)
சரி, உயில்-ன்னா என்ன?
1. முதலில் சொத்து பத்து சொல்லி இருக்கணும்!
2. அதுவும் நம்ம பேருக்குச் சொல்லி இருக்கணும்!
3. அதுவும் கொடுக்கறவங்க தெளீவாக் கையெழுத்து போட்டு இருக்கணும்!
4. போதாக்குறைக்கு, சாட்சிக் கையெழுத்து வேற கரெக்ட்டா இருக்கணும்!
5. முக்கியமா..சொத்து, உடனே கைக்கு வரா மாதிரி இருக்கணும்! இன்னும் இருபது வருசம் கழிச்சி தான் பாத்தியதை-ன்னு எழுதி வச்சிட்டா நல்லாவா இருக்கும்?
6. இவ்வளவும் ஆன பின்பு, வேற மனிதர்களாலோ/வாரிசுகளாலோ எழுதின உயிலில் வில்லங்கம் ஏதும் வராம இருக்கணும்!
ஹா ஹா ஹா...
இப்போ கே.ஆர்.எஸ் உயில்-ன்னு சொல்லுறோம்-ன்னு வைங்க!
அதுல கே.ஆர்.எஸ் நல்லா இருக்கானா போன்ற தகவல்களா வேணும்? சாகறவன் என்ன எழுதி வச்சிட்டு செத்தா நமக்கு என்ன? நமக்கு வேணுங்கறதை எழுதி வச்சிட்டாப் போதும்! அதானே ஒரு உயிலின் மேல் நம்ம "நியாயமான" எதிர்பார்ப்பு? :)
அப்பறம் எதுக்கு, எழுதி வச்சவர் பேரைக் கொண்டு, "இன்னார் உயில்"-ன்னு உலகம் சொல்லுது-ன்னு தான் தெரியலை!
பேசாம "இன்னாருக்கு உயில்"-ன்னு சொல்லீறலாம்-ல்ல?
மயிலே மயிலே உன் உயிலே எங்கே?? :) முருகா!
இன்னிக்கி தேதியில் ஆண்டாள் கதை, ஒரு Fairy Tale!.....ஆனால் அன்று?
* ஏலாப் பொய்கள் உரைப்பானை-ன்னு இறைவனைத் திட்டுறா!
* மானமிலாப் பன்றி-ன்னு எம்பெருமானை வசை பாடுறா!
* பெண் கொடியை வதை செய்தான் என்னும் சொல், வையகத்தார் மதியாரே-ன்னு சாபம் விடுறா!
இன்றைய அறிவியல் காலத்தில் கூட, லோக்கல் பாஷையில் எழுதினால், புனிதம் கெட்டு விட்டதாகப் பார்க்கும் ஆஸ்திக உலகம், எப்படி இவளை ஏற்றுக் கொண்டது?
* "எலே, கண்ணாலம், கிரிசை, கீச்-கீச், அல்குல், பெண்டாட்டி, மச்சான், புனித எருமை"-ன்னு லோக்கல் சொற்களை எல்லாம் "வேதம் அனைத்துக்கும் வித்தில்" கொண்டாந்து வைக்கிறா! :)
* ஆற்ற+அனந்தல் என்று கர்ம/ஞான கண்மூடித்தனமான பிடிப்பை, ஒரு பிடி பிடிச்சி பாக்குறா!
* பத்மநாபனை, பற்பநாபன்-ன்னு தமிழில் மாத்தி வடமொழியாளர் கோவத்தை வேற வாங்கிக்குறா! :)
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ?
வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கிறேன்!
வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே-ன்னு அவன் எச்சில் ருசிக்கு ஏங்குறாளே! - அடப் பாவிங்களா! இதையா கோயில் கருவறையில் இன்னிக்கும் பாடுறாங்க? சேச்சேச்சே! லேடீஸ் போற வர இடத்தில், இப்படியெல்லாம் பாடலாமா? இதே பாக்யராஜ் செஞ்சா சும்மா விடுவீங்களா? :) Nonsense of the stupid of the AndaaL :))
* ஆன்மீகத்தில்.....ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த ஒரு நிலையில்,
* இலக்கியத்தில்.....ஆண்கள் அல்குல்-ன்னு எல்லாம் வர்ணிச்சி எழுதினா, ஆகா ஓகோ போடும் ரசிக மணிகள் மத்தியில்,
ஒரு பெண் இப்படியெல்லாம் பாடினதா, சங்க இலக்கியத்தில் கூடச் சரித்திரமே இல்லையே!
சங்கப் பெண் புலவர்களான காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார் கூட அடக்கித் தானே வாசிச்சி இருக்காங்க? சங்க இலக்கியத்தில் பெண்கள் பங்கு மகத்தானது! ஆனால் அவர்களும் சமூக இழிவுணர்ச்சிக்கு (Social Stigma) கட்டுப்பட்டுத் தானே பாட முடிந்தது? ஆண்பாற் புலவரின் வர்ணிப்பைப் போல் பெண்பாற் புலவர்கள் வர்ணிக்கப் புகுந்தால் என்ன ஆகும்???
ஆன்மீகம் பேசிய ஒரே காரணத்துக்காக, இல்லறம் மறுக்கப்பட்ட ஒரு பேதைப் பெண்! அந்தப் புனிதா என்பவள் காரைக்கால் அம்மையாகி....சுடுகாட்டு வாய்க்கரிசியை எல்லாம் தின்று பசியாறி....ஐயோ! அவ உள்ளம் தனிமையில் எப்படி எல்லாம் துடிச்சிதோ?
பேய் மகளிர் ஆனாளே! தானே வலிந்து வேண்டி பேய் உருக் கொண்டார் என்றல்லவா ஆன்மீக உலகம் அதை மாற்றி எழுதியது? :(((
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பெண்கள்! ஆனால் யாரும் தலைவி அந்தஸ்துக்கு உயர முடியவில்லை!
வேதங்களைப் பெண்கள் வாயால் ஓதக் கூடாது என்று சாஸ்திரத்தைக் காட்டும் ஆண்கள்...
இவள் எழுதியதை மட்டும் "வேதம் அனைத்துக்கும் வித்தாகும்" என்று கொண்டாடுகிறார்களே! எப்படி?
இவள் எப்படி ஜெயிச்சிக் காட்டினா என்பது தான் ஆச்சரியமா இருக்கு! இவளை எப்படி வளர விட்டாங்க-ன்னு தான் ஆச்சரியமா இருக்கு!
வாய்ச் சொல் வீரி இல்லை இவள்!
ஆன்மீகமோ, இலக்கியமோ....இவள் "பேசுபவள்" அல்ல! "நடப்பவள்"!!
* தன்னை அவன் ஏற்றுக் கொள்வானா-ன்னு கூட இவளுக்குத் தெரியாது! = இவள் காதல், எப்படிக் "காதல்" ஆகும்?
* வீதியில் பார்த்து, புறத்து அழகில் மயங்கி, உடனே முத்தமிட்டு முயங்கி, கண்டவுடன் காதல் கொண்டு விடவில்லையே! = இவள் காதல், எப்படிக் "காதல்" ஆகும்?
* சிறுமியாய் இருக்கும் போது தோழனாய், படிப்படியாய் வளர்ந்த பின்னரோ காதலனாய்.....நட்பா? காதலா?? = இவள் காதல், எப்படிக் "காதல்" ஆகும்?
* வாய்ச் சுவைக்கும் நாற்றத்துக்கும் அப்படி என்ன பஞ்சம்? "உடல் உறவுக்கு" மட்டும் தேடினால் பல மாப்பிள்ளைகள் கிடைத்து இருப்பார்களே! "உள்ள உறவுக்கும்" அல்லவா, அவனைப் பற்றிக் கொண்டாள்!
அதுவும் யாரை? பக்கத்து வீட்டுப் பையனையா? இல்லையே! காலம் கடந்தவனை அல்லவா பற்றிக் கொண்டாள்! = இவள் காதல், "காதல்" ஆகுமா?
"ஏலோ" ரெம்பாவாய்! "ஏலோ" ரெம்பாவாய் என்று வரிக்கு வரி வரித்த...இவள் ஏற்றுக் கொள்ளப்பட்டாளா? = நெஞ்சகமே கோயில்! நினைவே சுகந்தம்!
இவள் ஏற்றுக் கொள்ளப்பட்டாளா என்ற கேள்விக்கே இடமில்லை!
இவளே ஏற்றுக் கொண்டாள்.....இப்படி ஒரு வாழ்வினை!
தன் நெஞ்சகமே இல்லம்! அவன் நினைவே சுகந்தம்!
என் பால் நோக்காயே ஆகிலும்...........உன் பற்றல்லால் பற்றில்லேன்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால்............அகங் குழைய மாட்டேனே!!
இவள் துணிவே எனக்குத் துணை!
ஆண்டாள், தமிழை ஆண்டாள்...திருவடிகளே சரணம்!!
ஆகா.....அந்த உயில் சமாச்சாரம் என்ன ஆச்சி? அதைச் சொல்லவே இல்லையே!
அவளோட கடைசிக் கவிதை! அந்த உயில்?
அஞ்சு குடிக்கும் அவள் ஒரே சந்ததியாமே! அப்படீன்னா அந்த உயில் எத்தனை கோடி தேறும்? ஸ்பெக்ட்ரம் புகழ் ஒரு லட்சம் கோடி கூட வேணாம்! அதுல ஒரு மூனு சைபர் கம்மி பண்ணிக் குடுத்தாக் கூட போதும்! :)
ஆண்டாள் உயிலில் என்ன தான் இருக்கு?
வழக்கம் போல, இனியது கேட்க இங்கே செல்லுங்கள்! சொத்து விபரம் தெரிந்து விடும்! :)

//ஆண்டாள் உயிலில் என்ன தான் இருக்கு?
ReplyDeleteவழக்கம் போல, இனியது கேட்க இங்கே செல்லுங்கள்! சொத்து விபரம் தெரிந்து விடும்! //
Link irukku!
Post enga irukku??
Anyways, i loved ur post, and my interpretation:
1) //1. முதலில் சொத்து பத்து சொல்லி இருக்கணும்!//
= //பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ், பிரியாது என்றும் இருப்பார்களே!
பிரியாது என்றும் இருப்பார்களே!! பிரியாது என்றும் இருப்பார்களே!!!//
2) //அதுவும் நம்ம பேருக்குச் சொல்லி இருக்கணும்!// :))
''pirAn'' peyar-udan thaane adiyavar peyar?
Adhukku mela enakku theriyavillai! :(
Where is the post?????
//அடப் பாவிங்களா! இதையா கோயில் கருவறையில் இன்னிக்கும் பாடுறாங்க?
சேச்சேச்சே! லேடீஸ் போற வர இடத்தில், இப்படியெல்லாம் பாடலாமா? //
:))))))))))))))))))
Kovilil sathumurai ketkumpodhu ninaippen...
Appo manasukulla kothai-yai ninaichu sirippen :))
That day, what ''sastras'' forbade Her, they sing Her praises daily! :))
//Link irukku!
ReplyDeletePost enga irukku??//
Sorry! Just posted! :)
இப்போ சுட்டியைச் சொடுக்கிப் பாருங்கள்! நீங்கள் கொடுத்த சொத்து விவரம் ஓரளவு சரியே! நன்றி :)
//Adhukku mela enakku theriyavillai! :(
Where is the post?????//
யப்பா! விட்டா எங்கே-ன்னு கேட்டு, அடிச்சிருவீங்க போல இருக்கே! :)
பருந்தாட் களிற்றுக்கு அருள்செய்த பரமன் தன்னை, பாரின்மேல்
ReplyDeleteவிருந்தா வனத்தே கண்டமை, விட்டு சித்தன் கோதைசொல்,
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ், பிரியாது என்றும் இருப்பார்களே!
பிரியாது என்றும் இருப்பார்களே!! பிரியாது என்றும் இருப்பார்களே
:)
மானமிலாப் பன்றி:)
ReplyDeleteமானமே இல்லாத பன்றியா! (வராக)
- I think
வலம்புரியே-ன்னு அவன் எச்சில் ருசிக்கு ஏங்குறாளே! - அடப் பாவிங்களா! இதையா கோயில் கருவறையில் இன்னிக்கும் பாடுறாங்க?
ReplyDeleteசேச்சேச்சே! லேடீஸ் போற வர இடத்தில், இப்படியெல்லாம் பாடலாமா? இதே பாக்யராஜ் செஞ்சா சும்மா விடுவீங்களா? :)
No -
Congragulation 300 posts
ReplyDeleteமாதவிப் பந்தல் மேல் பல் கால் அடியவர்கள் கூவின காண்!
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்! இன்புறுவர் எம்பாவாய்!
Your looking angle is different, writing style is different with /nuch' or 'nhach' . I have to comment in Ebglish only, as Tamil fonts are not in the brpwsing cente.
ReplyDeleteanbudan Raghavan
வாங்க சார் வாங்க சொந்த இடம் நினைவு இப்போவாவது வந்ததா?:)
ReplyDelete//கவிதையிலேயே யாராச்சும் உயில் எழுதி வச்சி இருக்காங்களா? கேள்விப்பட்டு இருக்கீங்களா? :) தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்//////
ReplyDeleteஇதை சொல்ல நீங்க தான் வரணும் வந்துருக்கீங்க அதுக்கு ரொம்ப நன்றி!
அத்திப்பூவை முதலல் வரவேற்கணுமே:)
//கண்டிப்பா அவள் பிறந்தநாள் அன்னிக்கி, ஒவ்வொரு ஆண்டும் பதிவு வந்துரும்! ஆனால் இந்த ஆண்டு தான், ஆரம்பம் முதலே ஏதோ ஒன்னு தட்டுது! பரவாயில்லை! எதுன்னாலும் என் முருகன் பார்த்துக் கொள்வான்! நாம மேட்டருக்கு வருவோம்!
ReplyDeleteHappy Birthday dee kOthai!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழீ!
ஹேய், லேட்டா வாழ்த்துறேன்-ன்னு, உயில்-ல என் பேரை எழுதாம விட்டுறாதேடீ! :)
///
பைசா காசு கிடையாதாம் கோபத்திலிருக்கிறாள் கோதை! அவள் பாட்டிலிருந்து அழகா மாதவிப்பந்தல் என்கிற வார்த்தை எடுத்து வலைப்பூக்கு வச்சிக்கத்தெரிகிறது ஆனா அவ பெர்த்டேக்கு கரெக்டா வாழ்த்தமுடியலையாக்கும்?:)
//பந்தலில் இது 300ஆம் பதிவு! முந்நூறில் முருகனருள் முன்னிற்க!
ReplyDeleteஇந்தப் பந்தலில் கூவு குயில்களான...வாசகர்கள்...
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் + நன்றி!
மாதவிப் பந்தல் மேல் பல் கால் அடியவர்கள் கூவின காண்!
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்! இன்புறுவர் எம்பாவாய்!
///
முன்னூறு மூன்றுகோடியாக வாழ்த்துகள்! அபப்போ எஸ்கேப் ஆகாம ஒழுங்கா வரணும் இல்லேன்னா எங்கேருந்து கூடிகுளிர்வது செம கோபத்தில் வெடிச்சிடுவோம் ஆமா:)
மானமிலாப்பன்றிக்கு அர்த்தம் எனக்குத்தெரியும்!!!அங்கே போய் படிச்சி பின்னூட்டமும் இட்டுவிட்டேன்!
ReplyDeleteஆண்டாளின் சொத்து அனைவருக்கும் சொத்துதான் திருப்பாவைல அவள் எங்கயுமே தனக்காக எதையுமே வேண்டிக்கலையே!
அருமையான புதுமையான சிந்தனை ரவி! ரசித்தேன் மகிழ்ந்தேன் .
நல்லாவே விளக்கம் கொடுத்திருக்கீங்க ரவி. இது போல உயில் அநேகமா எல்லாப் பெரியவங்களுமே எழுதியிருக்காங்களே! என்ன, ஒரு சில பேர் நினைவு தப்பறதுக்கு முந்தியே எழுதியிருப்பாங்க!:))
ReplyDeleteமுருகனருள் நிச்சயமா முன்னிற்கும் ரவி!
மானமிலாப்பன்றி என்றால் அளவிலாத
ReplyDeleteஅதாவது பூதாகாரமான வராஹவடிவுடன் வந்து பூமியை ரட்சித்தவன். வராஹ அவதாரம் எந்தவிதக்குறையும் இல்லாதது என்று கைசிக புராணம் கூறுகிறது.பூமா தேவியின் அவதாரம் தானே ஆண்டாள்? திட்டவில்லை அதை.அவள் வராஹத்தை மெச்சுவதில் அதிசியம் என்ன?
300 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். பதிவுகளில் சொல்லி இருக்கும் விஷயங்கள் காலத்திற்கும் நிற்குமே.
ReplyDeleteஆண்டாளே ஒரு சொத்து. அவளுக்கப்புறம் வேற என்ன வேணும்.
நன்றி ரவி.
@KRS: //யப்பா! விட்டா எங்கே-ன்னு கேட்டு, அடிச்சிருவீங்க போல இருக்கே! :)//
ReplyDeleteKonjam tension...sothu vishayam aache?
:))
(ORU SMILEY PODA MARANDHADHARKKU IVVALAVU MISUNDERSTANDING??!)
My dear Kothai,
//விருந்தா வனத்தே கண்டமை//
Aha!
All the wealth in the world with You!!
Adharkum mel ellorukkum..
''imburuvar empavaay''
" vayum nanmakkal petru magilvare"
(for this alone, i questioned U: is this what i came asking for???!?!
Maybe that's y u finished like this:)
//மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ், பிரியாது என்றும் இருப்பார்களே!
பிரியாது என்றும் இருப்பார்களே!! பிரியாது என்றும் இருப்பார்களே!!!//
:))))))))))))))))
This comment has been removed by the author.
ReplyDelete//மாதவிப் பந்தலில் இது 300ஆம் பதிவு! முந்நூறில் முருகனருள் முன்னிற்க!
ReplyDeleteஇந்தப் பந்தலில் கூவு குயில்களான...வாசகர்கள்...நீங்கள்...
உங்கள் அனைவருக்கும் முதலில் வாழ்த்துக்கள் + அப்புறம் நன்றி! :)//
அருமையாக எழுதி வரும் தங்களுக்கும் மிக்க நன்றி
ஷைலஜா said...
ReplyDeleteமானமிலாப்பன்றி என்றால் அளவிலாத
அதாவது பூதாகாரமான வராஹவடிவுடன் வந்து பூமியை ரட்சித்தவன். வராஹ அவதாரம் எந்தவிதக்குறையும் இல்லாதது என்று கைசிக புராணம் கூறுகிறது.பூமா தேவியின் அவதாரம் தானே ஆண்டாள்? திட்டவில்லை அதை.அவள் வராஹத்தை மெச்சுவதில் அதிசியம் என்ன?:)))
Thanks
ஹைய்யா! பந்தலில் 300 பூ பூத்தாச்சா!!
ReplyDeleteபின்னூட்டத்தண்ணீ ஊத்தின நேயர்களுக்கும், பந்தலோட சொந்தகாரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்!! :-)
இன்னும் தொடர்ந்து பூக்கவும் வாழ்த்துகள்......
நான் நேத்து பாத்தப்போ, ரெண்டு மூணு தடவை வந்து போனேன், ஆனா முருக வாரணமாயிரம் பதிவுதான் வந்துச்சு... இப்பத்தான் பதிவ(உயிலப்) படிச்சேன்... மிகவும் அருமை!
@ஷைலஜா அக்கா
ReplyDeleteமானமிலாப் பன்றி-ன்னு திட்டலையா? கொஞ்சறாளா? கீழே பாட்டைப் பாருங்க!
பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள்
மாசு உடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்,
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்,
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே
பூமகளைக் காப்பாற்ற வந்த வராக அவதாரத்தை வணங்குகிறாள் தான்! ஆனால் மானம் இலாப் பன்றி-ன்னு ஏன் சொல்லணும்? மாட்சி உடைய பன்றி-ன்னு சொல்லி இருக்கலாம்-ல்ல? "மானம் இல்லா"-ன்னு ஏன் சொல்லணும்? விளக்குங்க! :)
:)இவ்ளோ நல்லா சொல்றீங்க ஆண்டாளை பற்றி,
ReplyDeleteநீங்கள் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி விளக்கம் கொடுக்கலாமே?
ஆண்டாள் அனுபவித்த பெருமாளை மாதவிபந்தலில்
அனுபவிக்கலாமே!
Just my suggestion
ரவி! மானம் - உவமானம் தன்மானம் அபிமானம் இப்படி பல வார்த்தைளில் வருகிறது உவமானம் இங்க எடுத்துக்கலாமா? அது பொருந்துமா ...ஈடு இணையற்ற என்பதான பொருள் வருகிறதா? இதற்குமேல யோசிக்கமுடியல! நீங்களே சொல்லுங்க தம்பி!
ReplyDeleteஇதை படியுங்கள் அப்புறம் சொல்லுங்கள்
ReplyDelete3 இடியட்ஸ் =கலைஞர் + ஜெயா +ராமதாஸ் = மக்கள்
http://athiradenews.blogspot.com/2010/08/3.html
//ஷைலஜா said...
ReplyDeleteரவி! மானம் - உவமானம் தன்மானம் அபிமானம் இப்படி பல வார்த்தைளில் வருகிறது உவமானம் இங்க எடுத்துக்கலாமா?//
அதெல்லாம் செல்லாது செல்லாது! :)
//இதற்குமேல யோசிக்கமுடியல! நீங்களே சொல்லுங்க தம்பி!//
:)
இது உங்க திருவரங்கர் மேல் பாடுற பாட்டு வேற! :)
பெருமாளைக் காப்பாத்தணுமே இப்படியெல்லாம் இட்டுக் கட்டினா, இப்படித் தான் ஆகும்! :)
கோதை மெய்யாலுமே அவனைத் திட்டுகிறாள் தான்!
அவள் மெலிந்து போய், கை வளையும் கழண்டு விழ...
அதைக் கூடத் திருடி வைத்துக் கொண்டாராம் உங்க அரங்கர்! :(
காதலால் அவளை வதை செய்தது போதாதென்று,
உடல் நலிந்த வேளையிலும் அவள் சொத்தையே அபகரிப்பதா? சீச்சீ! Too bad Ranga! :)
எழில் உடைய அம்மனைமீர் என்னரங்கத்து இன்னமுதர்,
குழல் அழகர், வாய் அழகர் கண் அழகர், கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார், என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல்வளையே ஆக்கினரே!!
கழல் வளை - கழல்வளை!!
அவள் கையில் இருந்து கழலும் வளையை, தன் காலில் வீரக் கழலாக மாட்டிக் கொண்ட அரங்க வீரம்! :)
அதனால் தான் அடுத்தடுத்த பாசுரங்களில்..திட்டு திட்டு-ன்னு திட்டறா!
* வாமனன் = "பொல்லாக் குறள் உருவாய்", பொற்கையில் நீர் ஏற்று..
* வராகன் = மாசு உடம்பில் நீர்வார "மானமிலாப் பன்றியாம்"!!
ஆனால் அவனை இப்படித் திட்டினாலும்...அவன் ஆருயிர் ஆயிற்றே! உயிரைக் குறை சொல்லி உடம்பு என்ன செய்யும்?
அதான் அவனைத் திட்டினாலும், அவன் உடலை அன்போடு உகக்கின்றாள்! :)
* பொல்லாக் குறள் உருவாய்-ன்னு சொன்ன அடுத்த நிமிடமே, பொற்கையில் நீர் ஏற்று என்று சொல்லி, "பொற்கை" என்கிறாள்!
* மானமிலாப் பன்றி என்று சொன்ன அடுத்த நிமிடமே, தேசுடைய தேவர்-ன்னும் சேர்த்துக்கறா! மாசு உடம்பு தான், ஆனா தேசு (ஒளி) உடம்பு! :)
இது தான் கோதை! இது தான் நானும்! :))
ஆருயிர் ஆயிற்றே! உயிரைக் குறை சொல்லி உடம்பு என்ன தான் செய்யும்?
//பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள்
ReplyDeleteமாசு உடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்//
உலகம், பிறவிச் சுழலில் கிடந்து தவிக்கிறதே என்ற ஆதுரத்தால், எம்பெருமான், நம்மைத் தூக்கி விட...
தன் மானம் பார்க்காது, நம் மானம் பார்க்கின்றான்! = மானம் இலாப் பன்றி!
நமக்குத் தான் அழுக்கு உடம்பு! ஒரு வாரம் குளிக்கலீன்னா நாறும்! கழுவிக் கொள்ளலீன்னா நாறும்! ஆனால் வள்ளலார் மெச்சும் தூய உடம்பினன், நம்மோடு பழக வேண்டி இருப்பதாலே, தன்னை அழுக்காக்கிக் கொள்ளவும் தயங்குவதில்லை! = மாசு உடம்பில் நீர் வார, தேசுடைய தேவன் திருவரங்கச் செல்வன்!
இதோ ஆசார்ய வியாக்யானம்: மாயா மிருகத்தைக் கண்டு, அல்லாத மிருகங்கள், மோந்து பார்த்து வெருவி ஓடினவாறே, அப்படி அன்றிக்கே, ஸ்வஜாதீயங்கள், மோந்து பார்த்து, நம் இனம் என்று எண்ணும் படிக்கு, ஈச்வராபிமானம் வாசனையோடே போனபடி...
//பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே//
அவன் பேசின பேச்சுகளை மறந்தாலும் மறக்காது! என்னை விட்டுப் போகாது!
என்ன பேச்சு? = வராகம் சொன்ன உறுதி மொழி! வராக சரம சுலோகம்! அதில் என்ன இருக்கு?
"எவன் ஒருவன், உடலும் உள்ளமும் நல்லாயிருக்கும் போதே, என்-அவன் உறவை நினைக்கின்றானோ,
அவன் அந்திமக் காலத்திலே என் பேர் சொல்ல வேணும் என்ற அவசியம் இல்லாதபடிக்கு, அவனை நான் நினைப்பேன்! அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்"
இப்படிச் சத்தியம் சொன்ன அந்த பெருமான், என் உயிர் தினப்படி காதலால் போகின்றதே, என் அந்திம வேளையில், என்னை அவன் நினைக்கவில்லையோ? நினைக்கவில்லையோ? என்று ஏங்குகிறாள் இந்தப் பேதை!
//
ReplyDelete//சேச்சேச்சே! லேடீஸ் போற வர இடத்தில், இப்படியெல்லாம் பாடலாமா? இதே பாக்யராஜ் செஞ்சா சும்மா விடுவீங்களா? :)//
No -
//
@Rajesh, Why, "No"? :)
//Raghavan said...
ReplyDeleteYour looking angle is different, writing style is different with /nuch' or 'nhach'//
Thanks Ragavan :)
Where did u feel the "நச்"?
//வாங்க சார் வாங்க சொந்த இடம் நினைவு இப்போவாவது வந்ததா?:)//
ReplyDeleteஎன் சொந்த இடம் இனியது கேட்கின்-க்கா!
இது அடியார்களின் வலைப்பூ! :)
//பைசா காசு கிடையாதாம் கோபத்திலிருக்கிறாள் கோதை!//
காசும் பிறப்பும் கலகலப்ப-ன்னு என் கிட்ட பாடினாளே? :)
//அவள் பாட்டிலிருந்து அழகா மாதவிப்பந்தல் என்கிற வார்த்தை எடுத்து வலைப்பூக்கு வச்சிக்கத்தெரிகிறது ஆனா அவ பெர்த்டேக்கு கரெக்டா வாழ்த்தமுடியலையாக்கும்?:)//
நீங்க கோதை ஊர்ஸா அரங்கன் ஊர்ஸா? :)
//முன்னூறு மூன்றுகோடியாக வாழ்த்துகள்! அபப்போ எஸ்கேப் ஆகாம ஒழுங்கா வரணும் இல்லேன்னா எங்கேருந்து கூடிகுளிர்வது செம கோபத்தில் வெடிச்சிடுவோம் ஆமா:)//
:)
நன்றிக்கா...
என்னால் ஆனதை பந்தலில் அப்பப்போ தருகிறேன்!
அதான் முருகனருளில் வாரா வாரம் செவ்வாயன்று, செவ் வாயால் பாட்டு போடறேனே! போதாதா? :)
//திருப்பாவைல அவள் எங்கயுமே தனக்காக எதையுமே வேண்டிக்கலையே//
ReplyDeleteஉண்மை!
முத்தமிழால் பகர் ஆர்வம் ஈ-ன்னு கூடத் தனக்காக வேண்டிக்கலை!
நாச்சியார் திருமொழியில் தனக்காக அவன் வாய்த் தீர்த்தத்தை எல்லாம் வேண்டுவாள்! ஆனால் திருப்பாவை முழுக்க முழுக்க, அவளுக்காக அல்ல! அடியவர்களுக்காக!
அடியவர்கள் தூங்கினாலும், தட்டி எழுப்பி, அவனிடம் கொண்டு போய்ச் சேர்ப்பாள்! எங்கேயுமே ஒருமை வராது! எல்லாமே பன்மை தான்! யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ, "கூடி" இருந்து குளிர்ந்தேலோ, "எங்கும்" திருவருள் பெற்று இன்புறுவர்! - என்று எல்லாமே பன்மை தான்!
//VSK said...
ReplyDeleteநல்லாவே விளக்கம் கொடுத்திருக்கீங்க ரவி//
நன்றி SK! பந்தலுக்கு ரொம்ப நாள் கழிச்சி வரீங்க போல, என்னைப் போலவே! :)
நமக்கே நாம் நல்வரவு சொல்லிப்போம்! :)
//இது போல உயில் அநேகமா எல்லாப் பெரியவங்களுமே எழுதியிருக்காங்களே!//
பொதுவா, பல சுருதி என்னும் நூற் பயன் இருக்குமே தவிர, சாட்சியோடு கூடிய உயில் போல் இருக்காது! உயிலுக்கு உண்டான இலக்கணங்கள் சொல்லி இருக்கேனே! அதோடு பொருத்திப் பாருங்கள்! மற்ற ஆண்டாள் பாடல்களே அப்படி இருக்காது! இது மட்டும் அப்படி அமைந்தது!
//முருகனருள் நிச்சயமா முன்னிற்கும் ரவி!//
நன்றி SK!
என் முருகன் உங்க மூலமாச் சொன்னதாவே மகிழ்கிறேன்! அவனே எனக்கு முன்னிற்கட்டும்!
//வல்லிசிம்ஹன் said...
ReplyDelete300 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.//
வாங்க வல்லியம்மா! யப்பா, எவ்வளவு நாளாச்சி? எப்படி இருக்கீங்க?
//ஆண்டாளே ஒரு சொத்து//
ஆண்டாள் அரங்கனின் சொத்து!
ஆண்டாளின் சிந்தனை/உறுதி மட்டுமே என்னுடைய சொத்து!
நான் என் முருகனின் சொத்து!
என்ன தெளிவாக்கிட்டேனா? :)
//Kailashi said...
ReplyDeleteஅருமையாக எழுதி வரும் தங்களுக்கும் மிக்க நன்றி//
:)
நல்லா இருக்கீங்களா கைலாஷி ஐயா?
//தமிழ் said...
ReplyDeleteஹைய்யா! பந்தலில் 300 பூ பூத்தாச்சா!!//
:)
பூப் பூக்கும் மாசம் ஆடி மாசம்! :)
//பின்னூட்டத்தண்ணீ ஊத்தின நேயர்களுக்கும், பந்தலோட சொந்தகாரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்!! :-)//
உங்களை நீங்களே பாராட்டுக்கள்-ன்னு சொல்லிக்கறீகளா? :)
//நான் நேத்து பாத்தப்போ, ரெண்டு மூணு தடவை வந்து போனேன், ஆனா முருக வாரணமாயிரம் பதிவுதான் வந்துச்சு... இப்பத்தான் பதிவ(உயிலப்) படிச்சேன்... மிகவும் அருமை!//
உயிலுக்கு ரொம்ப பிரயத்தனப்பட்டு இருக்கீய போல! :)
//Narasimmarin Naalaayiram said...
ReplyDelete:)இவ்ளோ நல்லா சொல்றீங்க ஆண்டாளை பற்றி,
நீங்கள் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி விளக்கம் கொடுக்கலாமே?
ஆண்டாள் அனுபவித்த பெருமாளை மாதவிபந்தலில்
அனுபவிக்கலாமே!
Just my suggestion//
மாதவிப் பந்தலே அவளுது தான்!
I dont have any copy rights over it :)
அடிக்கிறது காப்பி! காப்பிக்கே காப்பி ரைட் போடுறது ரொம்ப கெட்ட பழக்கம்! :)
ரங்கன் அண்ணா நாலாயிரத்தில் நரசிம்மரைத் தொடர்வார்!
Mine are just Filler Posts! :)
//In Love With Krishna said...
ReplyDelete@KRS: Konjam tension...sothu vishayam aache? :))//
ஹிஹி! புரியிது!
//(ORU SMILEY PODA MARANDHADHARKKU IVVALAVU MISUNDERSTANDING??!)//
சேச்சே! சும்மா சொன்னேன்!
//My dear Kothai,
" vayum nanmakkal petru magilvare"
(for this alone, i questioned U: is this what i came asking for???!?!//
Yes!
//Maybe that's y u finished like this:)//
Yeah! :)
மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
பிரியாஆஆஆஆது என்றும் இருப்பார்களே!!
படத்துக்கு முன்னே கொடுக்கற கெட் அப் சூப்பர்
ReplyDeleteஅப்புறமா வர ப(பா)டம் அதவிட சூப்பர்...
MM
//
ReplyDeleteதோழி கோதைக்கு நேற்று பிறந்தநாள் அல்லவா? (12-Aug-2010)! ஆடிப் பூரம்!
எனக்கும் அவளுக்கு மூன்றே நாள் தான் வித்தியாசம்! அதான் அவ்ளோ நெருக்கம் போல! :)//
அடாடா, ரொம்ப லேட்டா வந்துட்டேனோ?,.. 12+ 3 ம் நாள் உங்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ்:)
மாதவிப்பந்தலின் முன்னூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்!
ReplyDeleteதன் மானம் பார்க்காது, நம் மானம் பார்க்கின்றான்! = மானம் இலாப் பன்றி!:)
ReplyDeleteஅற்புதம்
Krs Said:)
ReplyDeleteஅடிக்கிறது காப்பி! காப்பிக்கே காப்பி ரைட் போடுறது ரொம்ப கெட்ட பழக்கம்! :)
அடியார்கள் சொத்து அடியார்களுக்குதான்
அது என்ன காபி பால் :)
இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் அண்ணா.
ReplyDeleteநம் பழமை இலக்கியங்களின் பாடல் வரிகளின் சரியான பொருளை இனம் காண முடியாமல் அதை புகழ்தலை தவிர வேறு ஒன்றும் அறிந்திராத எம்மை போன்றோருக்கு பொருள் புரிந்து அமுது படைக்கும் கண்ணனே இதே போன்று தொல்காப்பியத்தின் பொருளதிகாரதையும் உங்களின் நடையில் எளிமையாக மக்களுக்கு சென்றடையும் படி செய்தால் அது பெரும் புரட்சியாக இருக்கும் இது அடியாளின் கனிவான வேண்டுகோள்
ReplyDeleteதீயதை அளிக்கும் கடவுளாக சிவனை நம் முன்னோர்கள் குறிப்பிட்டு சொன்னதால் நாம் அனைவரும் சிவனை பய பக்தியோடும் சிரத்தையோடும் வணங்கி நம் பாவங்களை களைய சொல்லி மன்றாடுகிறோம் .
இவள் ஏற்றுக் கொள்ளப்பட்டாளா என்ற கேள்விக்கே இடமில்லை!
ReplyDeleteஇவளே ஏற்றுக் கொண்டாள்.....இப்படி ஒரு வாழ்வினை!
தன் நெஞ்சகமே இல்லம்! அவன் நினைவே சுகந்தம்!
மாதவிப்பந்தலின் சுகந்தம் மணக்கிறது...மனம் மயக்குகிறது... பாராட்டுக்கள்..