Friday, August 06, 2010

சந்தன வீரப்ப சிவபக்தர்! தலைக்குத் தலையெடுத்த சிவபக்தர்!

அடியார்களின் திருக்கதைகளை, புனைவுகள் அதிகம் இன்றி,
மூல நூல்களில் உள்ளது உள்ளவாறு,
அடுத்த தலைமுறைக்கும் ஏற்றாற் போல,
சென்று சேர்க்க வேணும் என்ற ஆசையில், இதோ..........

இனி, ஒவ்வொரு நாயன்மாரின் நினைவுநாளின் (குருபூசை) போதும், அவர்களைப் பற்றிப் பந்தலில் எழுத முற்படுகிறேன்!
பெருமாளை இடத்தே வைத்த ஈசன் இன்னருள் செய்க!சென்ற கோட்புலி நாயனார் பதிவில்.....
ஏழைகள் நிதியில் இருந்து பிடுங்கித் தின்றுத் தவறிழைத்த சுற்றத்தை நாயனார் கொன்றார்; பின் தானும் மாண்டார் என்று மட்டும் தான் சொல்லிச் சென்றேன்!

ஆனால்...குழந்தையைக் கூட மேலே எறிந்து வாள் பிடிக்க, அது விழுந்து இரண்டானது என்பதெல்லாம் பின்னாளைய பெரிய புராணத்தில் தான் வரும்!
மூல நூலான திருத்தொண்டத் தொகை/திருத்தொண்டர் திருவந்தாதியில் அப்படி வாராது! நானும் பதிவில் அப்படிச் சொல்லவில்லை! இருப்பினும் கேள்விகள் பறந்து வேள்விகள் செய்தன! எல்லாம் நன்மைக்கே!

இன்று வெளியில் காணலாகும் நாயன்மார் நூல்கள்/சைவத் திருமடங்களின் நூல்கள் பெரும்பாலும் சேக்கிழாரை ஒட்டியே இருக்கும்! உதாரணமாக நீங்களே பாருங்கள்...
"அந்நாளில் வடுக அரசன் நீதிவகையாலன்றிப் படைவலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆசையால் பெரும் படை கொண்டு வந்தான். பாண்டியனோடு போர் செய்து பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான். அவன் நன்நெறியாகிய சிவநெறியில் செல்லாது தீ நெறியாகிய சமணர் திறத்தில் ஆழ்ந்தான்"

இப்படிச் சமண வெறுப்பு அப்பட்டமாகத் தெரியும்! ஒரு நெறியைத் "தீ நெறி" என்று, ஒரு கதையில் பழித்துச் சொல்ல நாம் யார்?
இது நாளைய தலைமுறைக்கு நன்மை பயக்குமா? அன்பே சிவம் அல்லவா?

சம்பந்தப் பெருமான் போன்றோரின் சில பாடல்களில் இப்படி இருக்கலாம்! அது அந்நாளைய அரசியல் நிகழ்வு! அதற்காக நாம் அவர் பாடலை மாற்றப் போவதும் இல்லை! பூசி மெழுகப் போவதும் இல்லை!
ஆனால் அடியவர் கதைகளில் கூட இது தேவை தானா? "தீ நெறியாகிய சமணம்" என்ற வார்த்தைப் பிரயோகம் ஒரு கதையில் தேவையா? நாயன்மார் சொல்லாத ஒன்றை, அவர் மேல் ஏற்றி, ஏன் நாமே சொல்ல வேண்டும்?

தலைமுறைக்குச் சென்று சேர்ப்பிக்க வேண்டுவது = சிவ அன்பா? அல்லது பழைய காழ்ப்பா? - Where is the Focus??
அடியவர்களின் சிவபக்தி பற்றிப் பேச வரும் போது, அவர்களின் ஊக்கத்தை அல்லவா பேச வேண்டும்?

இதனால் தான் அடியவர் திருக்கதைகளை, மூல நூலில் இருந்து மட்டும் சொல்லிச் செல்கிறேன்!
முன்பு காரைக்கால் அம்மையார் (எ) புனிதா என்னும் பேதையைப் பற்றியும் அவ்வாறு தான் சொல்லிச் சென்றேன்!

அவள் எழுதியது Icon Poetry (குறியீட்டுக் கவிதை)! ஆனால் ஆன்மீகம் என்பதால் அந்த அழகிய கவிதை வெளியில் செல்லவில்லை! வெள்ளைக்காரர் DH Lawrence தான் Icon Poetry-ஐ முதலில் எழுதியவர் என்று அறியாமல் சொல்கிறார்கள்! அதான் புனிதாவை எடுத்துக் கோடிக் காட்டினேன்! அதுவே தமிழ்மண விருதும், வாசகர் விருப்பும் பெற்றது!

மாணிக்கவாசகரின் உருக்கங்கள், நீலநக்க நாயனாரின் மனைவி சாஸ்திரம்/தோஷம் என்று பார்க்காது, சிவலிங்கம் மேல் எச்சில் பட ஊதி, விஷச் சிலந்தியை அகற்றியது....இப்படியெல்லாம் தான் பந்தலில் நாயன்மார் பதிவுகள் வந்தன!

இது ஒரு சிலருக்கு, முக்கியமாகப் பெரியவர்களுக்கு, பிடிக்காமல் போகக் கூட வாய்ப்புண்டு! சைவக் கதைகளை dilute செய்கிறேன் என்று சில சைவப் பற்றாளர்கள் நினைக்கலாம்! சாஸ்திரத்தை "இறக்கி", காதலை/அன்பை "ஏற்று"வதாகவும் கருதலாம்!
வழக்கம் போல் என்னிடம் தூக்கி வரும் "வைணவக் கும்மி", "வைணவ முத்திரை" குத்தி, தங்கள் மனதைத் தாங்களே ஆ(ஏமா)ற்றிக் கொள்ளலாம்! :)

ஆனால், முன்பே சொன்னது போல்...
* சைவம் என்பதை விடச் சிவம் முக்கியம்! வைணவம் என்பதை விட பெருமாள் முக்கியம்!
* பக்தி என்பதை விட, அவனோடு உறவு பாராட்டல் முக்கியம்!

அதனால் இந்தப் பணியில், "வைணவ முத்திரைக்கு" எல்லாம் பயந்து பின் வாங்கப் போவதில்லை! என் காதல் முருகன் காக்கட்டும்!

சைவக் குடும்பத்தில் பிறந்து, சிறு வயதில் என்னைப் பாதித்த கேள்விகள், வேறு எந்தச் சிறுவனையோ/சிறுமியையோ, இனி பாதிக்க வேண்டாம்!
ஏன் புனிதா வாழ்க்கை பாழடிக்கப்பட்டது? ஆண்டாள் வாழ்க்கை மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது? என்ற யோசனைகளையும் தாண்டி...

ஒவ்வொரு தலைமுறைக்கும், அருளாளர்களின் கதைகளை, "அருள்" பொங்க மட்டுமே சென்று சேர்ப்போம்! "காழ்ப்பு" பொங்க அல்ல!
குறைந்த பட்சம், அவற்றைப் பெருமை பேசாமாலாச்சும் இருப்பதே சிறப்பு!

"தீ நெறியாகிய சமணம்" என்றோ, "பச்சைக் குழந்தை என்றும் பாராது சுற்றத்தாரின் குழந்தையை வெட்டினார்" என்றோ...நாயன்மார் கதைகளில் சொல்ல எனக்கு வராது! அதனால்....
* அதீத புனைவுகள் ஏதுமின்றி...
* மற்ற நெறிகளில் உள்ள நல்லதைத் தயக்கமின்றிக் காட்டி...
* இதனால், பெரிய புராணத்துக்கும் சற்றே மாறுபட நேர்ந்தாலும், மாறுபட்டு...
* மூலநூலான திருத்தொண்டத் தொகை/அந்தாதியை மட்டுமே ஒட்டி...

நாயன்மார்களின் கதைகள், இனி அவரவர் குருபூசையில், மாதவிப் பந்தலில் தொடர்ந்து மலரும்!
அந்த வகையில்.....
இன்று (ஆடியில் கிருத்திகை) 1. புகழ்ச்சோழ நாயனார், 2. மூர்த்தி நாயனார் குருபூசை! பார்க்கலாமா?
முதலில் மூர்த்தியைப் பார்ப்போம்! இவருக்காகவே சந்தன வீரப்பன் மரம் வெட்ட வேண்டியிருக்கும்! :)மூர்த்திக்குச் சொந்த ஊர் மதுரை! வியாபாரி! தேர்ந்த வணிகர்! மதுரைச் சொக்கநாதப் பெருமானுக்கும் மீனாட்சி அம்மைக்கும், தினப்படி சந்தனம் அரைத்துக் கொடுப்பவரும் கூட! பூசைக்கு வேண்டிய மொத்த சந்தனமும் தடைபடாமல் நடத்திக் கொடுப்பவர்!

அந்நாளில் வடுக அரசன் (கர்நாடகத்தில் இருந்து) பாண்டிக்குப் படை எடுத்து வந்தான்! பாண்டியனை வீழ்த்தி, மதுரையும் கைப்பற்றிக் கொண்டான்!
அவன் வேறு சமயம் (சமணம்)! மதுரையோ...ஊர் முழுதும் திருநீறு மணம் வீசுவது! வாய் முழுதும் மீனாட்சி மணம் வீசுவது! மக்களை மீனாட்சி கோயிலுக்குப் போகாதே-ன்னா சட்டம் போட முடியும்? ஆலயப் பணிகளுக்கும் பல முட்டுக்கட்டைகளைப் போட்டான்!

ஜீவ காருண்யமே சமணத்தின் அடிப்படை! ஆனால் அருகரை விட்டுவிட்டு சமணம் என்ற "அமைப்பை மட்டும் பற்றிக் கொண்டவன்" கதி என்ன?
அருகதேவருக்கு இச்செயல் உவக்குமா என்று அவன் யோசிக்கவில்லை போலும்! நாம் தான் கருத்தைக் கருத்தாகப் பார்க்காது, ஆட்களை மட்டும் பிடித்துக் கொள்வோமே! :)

அதனால் தான் பலமுறை பந்தலில் எழுப்புவது:
ஆன்மீகம் என்ற பெயரில், ஒரு செயலைச் செய்யும் போது, ஒவ்வொரு முறையும், இதைச் செய்கிறோமே, இதனால் பெருமாள் உள்ளம் உவக்குமா? இல்லை பெருமாள் உள்ளம் வாடுமா? என்று கேட்டுக் கொள்ள வேணும்!
அப்படியெல்லாம் யோசிக்கத் துவங்கினால், வடகலையாவது, தென்கலையாவது? :)


கதைக்கு வருவோம்! மூர்த்தியின் சந்தனப் பணிக்கும் முட்டுக்கட்டை வந்தது! திடீரென்று சந்தனக் கட்டைகள் கிடைக்காமல் நின்று போனது!
தினப்படி அதையே தொண்டாகச் செய்து வந்தவருக்கு, எங்கு விசாரித்தும் சந்தனம் கிடைக்கவில்லை! அதுக்காக வீரப்பனுக்கோ/விஜயகுமாருக்கோ SMS-ஆ அனுப்ப முடியும்? :)

பழைய சந்தனக் கட்டை, தேய்க்கத் தேய்க்கத் தேய்ந்து போனது! இனி அதில் தேய்க்க ஒன்றுமே இல்லை! பார்த்தார் மூர்த்தி! தன் கையையே தேய்க்க ஆரம்பித்து விட்டார்!
முழங்கை தேய, எலும்பு தெரிய, என்ன பைத்தியக்காரத்தனம் இது? கையைத் தேய்ச்சா சந்தன வாசனையா வரும்? ரத்த வாசனை அல்லவா வரும்??

இப்படியெல்லாம் நாம வேணும்-ன்னா யோசிப்போம்!
அதான் நாம் நாமாக இருக்கிறோம்!
அவர் நாயனாராக, ஈசனுக்கு நேயனாராக இருக்கிறார்!

ஒன்னுமே முடியாத நிலையில், இனி என்ன செய்வதென்றே தெரியாத போது, நாமும் இது போன்ற "முட்டாள்தனங்களை" செய்யறது தானே!
என்ன, நாம் சுயநலத்தில் செய்வோம்! மூர்த்தி சிவநலத்தில் செய்தார்! அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு!

ஈசன் அருள் வந்து முந்த, மூர்த்தியைத் தடுத்தாட் கொண்டார் மதுரைச் சொக்கன்! மூடபக்தியோ? இப்படியும் செய்குவையோ? எனக் கேட்க...அன்பினால் தலை கவிழ்ந்து, வெட்கி நின்றார் மூர்த்தி!
அட, தவறு செய்யாதவன் எதுக்குத் தலை குனியணும்? = அட, பின்னே கண்ணீரை எப்படி மறைப்பதாம்? :)

அன்று இரவு, வடுக மன்னன் மாண்டு போக, வாரிசே இல்லாமல் இறந்த அவனுக்குப் பதிலாக, புதிய ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்க அமைச்சர்கள் குழுமினர்! ஒரு சிலரின் அந்நாளைய வழக்கப்படி யானையின் துதிக்கையில் பூமாலை! அதுவோ வீதியில் மூர்த்திக்கே மாலையிட்டது!

மூர்த்தி சிறிது நாள் அரசாண்டு, ஆலயப் பணிகள் அனைத்தும் குறைவற நடத்திக் கொடுத்து...
முன்பு, தான் கரைத்த சந்தனம் போலவே, சிவத்தில் கரைந்து...
மூர்த்தி நாயனார் என்னும் சந்தனமாகவே சந்ததமும் மணக்கிறார்!


சரி, இப்போ புகழ்ச்சோழரைப் பார்ப்போம்! யார் இந்தப் புகழ்ச்"சோழர்"? சோழ அரசரா? அப்படி ஒரு சோழன் இருந்ததா எனக்குத் தெரியவே தெரியாதே! கல்வெட்டு இருக்கா? :)

சோழ நாடு பல துண்டுகளாய் இருந்த போது, அதன் பல பகுதிகளை ஆண்ட அரசர்கள் கூட "சோழன்" என்ற பட்டம் கொள்வதுண்டு! கிளிச் சோழன் திருவரங்க ஆலயத்தின் ஆரம்பக் காலப் பகுதிகளை மண்மேட்டில் கண்டுபிடித்தானே! அதே போலத் தான்! புகழ்ச்சோழர் சிறந்த சிவ பக்தர்! திருச்சிக்குப் பக்கத்தில், உறையூரில் இருந்து ஆண்டு வந்தார்!

குடநாட்டில் அதிகன் என்னும் மன்னன் திறைப் பணம் தர மறுத்தான்! திறை திரட்ட வந்த மன்னர், வழியில் கருவூர் வந்து சேர்ந்தார்!
கருவூரில் கோயில் கொண்டுள்ள ஆனிலையப்பர் பற்றியும், கருவூர்த் தேவர் பற்றிய பதிவும் இங்கே!

கருவூர் கோயிலுக்குப் பூக்கூடை சுமந்து செல்லும் வயதான பெண்மணி சிவாகாமியாண்டார்!
அன்னிக்கு-ன்னு பார்த்து, அவர் சுமந்து செல்லும் வீதியில், ஊருக்கு வந்துள்ள அரசரின் யானை, ராஜபாட்டைக்கு வந்தது! சின்ன ஊர்! குறு வீதி, யானைக்குத் தாங்குமா?

யானை, வீதியில் வந்து கொண்டிருந்த சிவகாமியின் பூக்குடலையைச் சிதறச் செய்தது! கூடையில் பச்சை இலைகளும் வண்ண மாலைகளுமாகத் தின்பண்டம்-ன்னு நினைத்திருக்குமோ என்னவோ? வீதிவிடங்கப் பெருமானுக்குச் சேரவேண்டிய பூக்கள் எல்லாம் வீதியில் புரண்டு கிடந்தன!

ஆனால், பாகன்கள் கண்டு கொள்ளவே இல்லை! தவறுக்கு வருந்தவும் இல்லை! வயதான முதியவரைத் தூக்குவோம் என்று கூட இல்லை! கேலியாகப் போய் விட்டார்கள்!
அப்பவே அதிகாரம் கையில் இருந்தால் ஆங்காரம் மனத்தில் இருக்கும் போல! யானைக்கு என்ன தெரியும்? பாகனும், சோழ வீரர்களும் அல்லவா வழிநடத்த வேணும்? ஆனால் அவர்களுக்கோ அரச பட்டாளம் ஊருக்கு வந்த டாம்பீகம்!

சிவகாமி, "சிவதா சிவதா" என்று கேவிக்கேவி அழுகிறார்! என்ன செய்ய முடியும் ஒரு அரசனின் யானையை?
அந்த ஊரில் உள்ள ஒரு வீரர் ஓடோடி வருகிறார்! இந்த மாதிரி விஷயம் நடக்கும் போதெல்லாம் ஊரில் எதிர்ப்புக் குரல் கொடுப்பவர் போல! யார்?


எறிபத்தர்! அவரும் பின்னாளில் ஒரு நாயன்மார் தான்! ரொம்ப ரோஷம் மிக்கவர்! காதலர் தினம் அன்னிக்கி, நம்ம ரோஜாப்பூ பொக்கேயை, ரோட்டில் சண்டிக் கூட்டம் ஒன்று பிடுங்கி நாசப்படுத்தினால், ஹீரோவுக்கு கோவம் வரும்-ல்ல? அது போல வந்தது எறிபத்தருக்கு! :)

எறிபத்தர் எகிறிக் குதித்து, பாகன்களை மடக்கிக் கேள்வி கேட்டார்! ஆனால் பாகன்கள் அரசாங்க அதிகாரிகள் ஆயிற்றே! எகத்தாளமாகப் பேசினர்! - "ராஜா வீட்டு யானை-ன்னா அப்படி இப்படித் தான் இருக்கும்! போய் கெழவியை வேற பூ கட்டிக்கச் சொல்லு!"

வாய்ச் சண்டை முற்றிக், கைகலப்பில் முடிய...அரச வீரர்கள் கொல்ல வாள் உருவ, அவர்களுக்கும் முன்னே, எறிபத்தர் தன் மழுவை உருவிச் சாய்த்து விட்டார்! சேதி கேட்டு, நம்ம புகழ்ச் சோழ மன்னர், யார் அவன்-ன்னு ஓடி வர, வந்து பார்த்தால் சிவ பக்தர்! முழு விவரமும் தெரிய வர...மன்னன் கலங்கி நிற்கிறான்! என்ன சொன்னான்?

"தவறு பாகன்கள் பேரில் இல்லை! அவர்களைப் பொது மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேணும் என்று வரையறுக்காத என் பேரில் தான் உள்ளது!
இதோ என் வாள்! என்னையும் கொன்று, சிவப்பணி தடையானதற்கு தண்டனை தாருங்கள்
!"

இதை எறிபத்தர் சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை! இப்படி ஒரு அரசனா? நாம் தான் அவசரப்பட்டு விட்டோமோ-ன்னு, அரசன் தந்த வாளால் தன்னையே மாய்த்துக் கொள்ளத் துணிய...
தென்னாடுடைய ஈசன், வானின்று வாக்காக வெளிப்பட்டு, அவர்கள் இருவரையுமே அரவணைத்துக் கொண்டார்!

சுபம்-ன்னு சொல்லிடுவேன்-ன்னு பார்த்தீங்களா? கதை இன்னும் முடியலை! :)


திறை வாங்க வந்த அரசுக் குழு, போரில் இறந்து போன பகைவர்கள் தலையை எல்லாம் அரசரின் முன்னே அணிவகுப்பு காட்டியது! அதானே அந்நாளைய "வீர லட்சணம்"? ஆனால் புகழ்ச் சோழருக்கோ தூக்கி வாரிப் போட்டது! ஏன்?

அந்தத் தலைகளுக்கு நடுவில் ஒரு சடாமுடித் தலை! சிவனடியார்?
ஆகா! அரசு வீரர்கள், போரில் ஈடுபடாத பலரையும் அல்லவா, எல்லை மீறி வெட்டி வீழ்த்தி இருக்கிறார்கள்!! ஐயோ! யார் இந்த அடியார்? என்ன தொண்டில் இருந்தாரோ? துண்டாகி வந்து நிற்கிறாரே-ன்னு கலங்கினார் புகழ்ச் சோழர்!

திறை மறுத்த அதிகனோடு தானே போர்? அப்புறம் ஏன் இப்படி ஆனது?
அடப் பரவாயில்லை விடுங்க! ஏதோ Judgemental Error! விபத்து-ன்னு எடுத்துக்க வேண்டியது தான்!
இதுக்கெல்லாம் கலங்கிட்டு நிப்பாங்களா? பேசாமல், திறைப் பணத்தை எண்ணுகிற வழியைப் பாருங்க! :) அப்பறமா அவங்க குடும்பத்துக்கு நிவாரண நிதி-ன்னு கொஞ்சம் கொடுத்து சரி பண்ணிக்கலாம்!! :(

புகழ்ச்சோழர் தீ மூட்டச் சொன்னார்! சரி, ஏதோ சிவனடியாருக்கு இறுதி மரியாதை ஈமச் சடங்கு தான் செய்கிறார்-ன்னு பார்த்தால்...
யாரும் எதிர்பார்ப்பதற்குள், குபுக்-கென்று தீயுள் பாய்ந்து ஆயுள் முடித்துக் கொண்டார்!
மன்னவன் காக்கும் தென்புலக் காவல்
என்முதல் பிழைத்தது! கெடுக என் ஆயுள்!
- என்று, அன்று கண்ணகி முன் வீழ்ந்த மன்னனின் இரத்தமோ இவர்? அவனோ பாண்டியன்! இவரோ சோழர்!

புகழ்ச் சோழர், மெய்யாலுமே, "புகழ்" சோழர் ஆனார்! ஈசனிடம் "புகல்" சோழர் ஆனார்!
மூர்த்தி நாயனார் திருவடிகளே சரணம்!
புகழ்ச் சோழ நாயனார் திருவடிகளே சரணம்!

அடியவர்கள் வாழ்வுக்கு...என்றுமே...தலை வணங்குவோம்! மனம் வழங்குவோம்!

17 comments:

 1. ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.::))

  மதமா அப்படினா??

  அவரவர் தமதமது அறிவறி வகைவகை
  அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
  அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
  அவரவர் விதிவழி அடையநின்றனரே
  --நம்மாழ்வார்

  ReplyDelete
 2. . மூர்த்தி - மதுரைச் சொக்கநாதப் பெருமானுக்கும் மீனாட்சி அம்மைக்கும், தினப்படி சந்தனம் அரைத்துக் கொடுப்பவரும் கூட! பூசைக்கு வேண்டிய மொத்த சந்தனமும் தடைபடாமல் நடத்திக் கொடுப்பவர்

  பழைய சந்தனக் கட்டை, தேய்க்கத் தேய்க்கத் தேய்ந்து போனது! இனி அதில் தேய்க்க ஒன்றுமே இல்லை! பார்த்தார் மூர்த்தி! தன் கையையே தேய்க்க ஆரம்பித்து விட்டார்!
  -------
  Suppose மூர்த்தி nayanaar - மதுரை, கள்ளழகர் பெருமாளுக்கு பூசைக்கு வேண்டிய மொத்த சந்தனமும் தடைபடாமல் நடத்திக் கொடுப்பவர் என்றால்….

  பழைய சந்தனக் கட்டை, தேய்க்கத் தேய்க்கத் தேய்ந்து போனது! இனி அதில் தேய்க்க ஒன்றுமே இல்லை!
  இதன் பிறகு என்ன செய்திருப்பார்.?
  I just think..

  ReplyDelete
 3. பெருமாளை இடத்தே வைத்த ஈசன் இன்னருள் செய்க!:)

  இடபாகம் பெருமாளா! புரியவில்லையே!
  சிவனின் பாதி சக்திதானே

  ReplyDelete
 4. ரெண்டு கதையும் சூப்பரு தல ;)

  ReplyDelete
 5. //நரசிம்மரின் நாலாயிரம் said...
  இடபாகம் பெருமாளா! புரிய வில்லையே! சிவனின் பாதி சக்திதானே//

  சிவபெருமானின் இடப் பாகம் உமை அன்னைக்கு உரியது!
  அரியும் சிவனும் ஒன்றே என்பதை உலகுக்குக் காட்ட, கோமதியம்மன் தவம் செய்து, தன் பாகத்திலே, பெருமாளைக் காட்டி அருளுமாறு ஈசனை வேண்டினாள்! அவ்வண்ணமே சங்கரநாராயணப் பெருமானாக ஈசன் கோலம் காட்டிய பதிவு இதோ! http://madhavipanthal.blogspot.com/2008/08/sankaran-kovil-gomathi-amman-adi.html

  ஆழ்வார்களும், பெருமாளின் திருமேனி வலப்பக்கத்தில் ஈசன் விளங்குவதைக் காட்டுகின்றனர்! "பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து" என்று பாடுகிறார்!

  ReplyDelete
 6. @ராஜேஷ்
  உங்கள் முதல் பின்னூட்டம் கண்டு எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! அது ஒரு விளம்பரப் பின்னூட்டம்! யாரோ சும்மானா போட்டுள்ளார்கள்! அதைக் கண்டு கொள்ளாதீர்கள்! :)

  ReplyDelete
 7. //Suppose மூர்த்தி nayanaar - மதுரை, கள்ளழகர் பெருமாளுக்கு பூசைக்கு வேண்டிய மொத்த சந்தனமும் தடைபடாமல் நடத்திக் கொடுப்பவர் என்றால்….//

  :))

  //இனி அதில் தேய்க்க ஒன்றுமே இல்லை!
  இதன் பிறகு என்ன செய்திருப்பார்.?
  I just think..//

  :)
  சரி, யோசிச்சிச் சொல்லுங்க! பெருமாளுக்கு அவர் சந்தனம் அரைத்து, இப்படி ஆகியிருந்தால், என்னவாகியிருக்கும்?
  ....
  ஒரு வேளை சந்தனம் ஏன் கொடுக்க மறுக்கிறாய் இறைவா-ன்னு கட்டையை எடுத்து வீசி இருப்பாரோ? :)

  ReplyDelete
 8. மூர்த்தி நாயனார் திருவடிகளே சரணம்!
  புகழ்ச் சோழ நாயனார் திருவடிகளே சரணம்!
  எறிபத்த நாயனார் திருவடிகளே சரணம்!

  ReplyDelete
 9. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ரவி

  ReplyDelete
 10. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ரவி

  ReplyDelete
 11. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ரவி

  ReplyDelete
 12. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ரவி

  ReplyDelete
 13. படிங்க படிங்க உங்களுக்கு பிடிச்சத படிங்க .. எழுதுங்க எழுதுங்க ஆக்கபூர்வமா எழுதுங்க
  அப்படியே பரிசுகளையும் வெல்லுங்க !! ஜீஜிக்ஸ் .( www.jeejix.com )

  ReplyDelete
 14. பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 15. ஒரு வேளை சந்தனம் ஏன் கொடுக்க மறுக்கிறாய் இறைவா-ன்னு கட்டையை எடுத்து வீசி இருப்பாரோ? :)


  சாதா கட்டை இல்ல! உருட்டு கட்டையை எடுத்துகிட்டு ஓடுவார்!
  i think

  பால் வடியும் முகம் அப்பாவி பெருமாளைதான்பா இப்படியெல்லாம் ஏமாற்றாங்க!:)))))

  ReplyDelete
 16. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 17. pls change the heading. u r writing about Nayanmars. how u relate with veerapa?.(pls check ur own words, 'punaivugal adhigam indri' ) i request you, nayanmarin anbuku munaal ketkindren thayai koorndhu maatravum.
  arupathu moovarin anbaana paadhangale thunai

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP