Wednesday, August 28, 2013

கண்ணன் பிறந்தநாள்: Kissing For Dummies!

மக்களே... (இது 18+ பதிவு:) சற்று "விழிப்புடன்" படிக்கவும்:)

என் மனத்துக்கினிய தோழி - தென் பாண்டித் தெள்ளமுது,
தமிழ்த் தாய்க்கு நல்லாள் - காமக் காதலர்க்கு வல்லாள்
...அவ காதலனுக்கு இன்னிக்கு பொறந்த நாளாம் (Aug-28-2013)

அவனக்கு நான் எதுக்கு-ய்யா வாழ்த்து சொல்லணும்?
சரி, சரி, முறைக்காதே டீ! உனக்காகச் சொல்லுறேன்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - கண்ணா! from me & my murugavan:)
* சேலை திருடறது, பானை உடைக்குறது = இதெல்லாம் தான் ஒங்கூருல Romance-ஆ?
* டேய் வெண்ணைய்.. = Atleast today, Learn from my dearest தோழி, What is Romance?

பின்னிய கூந்தல் கருநிற நாகம்..
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்


என்னடா, ஒரு பொண்ணு கிட்ட போயி.. பையன் எப்படி. இதெல்லாம்? -ன்னு வெட்கப்படாதே!
பெண்கள், ஆண்களை விட........ :)

கொஞ்சம் தூண்டி விடணும், அவ்ளோ தான்! அப்பறம், இன்ப தீபம் அணையவே அணையாது:)


இச்சு தா, இச்சு தா! கன்னத்துல இச்சு தா
-ன்னு "ரன்" பாடல் போலவே.. நாச்சியார் திருமொழியில் பாடலாம் தான்; ஆனா பாசுரச் சந்தம்/ இலக்கிய மருவாதை-ன்னு ஒன்னு இருக்குல்ல? :)

இருப்பதிலேயே சுவையான சுவை எது? = "இச்-" சுவை!
அதான் இன்னொருவர் பாட்டை, ஆண்டாள் "இச்" சுவையா மாத்திப் பாடுறா! :)

"இச்"-சுவை தவிர யான் போய், 
இந்திர லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன், 

அரங்க மா நகர் உளானே!

Eyes over Eyes, Lips over Lips, Hips over Hips, Everything over Everything
* முத்தத்திலேயே துவங்கி, முத்தத்திலேயே முடிப்பது = ஒரு பெரிய கலை!
* "ஏழு பிறவி முத்தம்" கொடுப்பது எப்படி? = கோதை கிட்டயே கேட்கலாமா?
Here we go... Java For Dummies அல்ல! = Kissing For Dummies :)1. முதலில் கோச்சிக்கணும்! 
அதாச்சும் கோச்சிக்கறது போல நடிக்கணும்!:) 

ஏன்னா...
கோவம் தீர்க்கக் கொடுக்கப்படும் முத்தத்துக்கு = சுவை அதிகம்!:)

அட, வேங்கடத்தில் உலாவும் கொழுத்த மேகங்களே! போயி உங்க ஆளிடம் சொல்லுங்க!
திரு-வேங்கடம்-உடையானை இந்த உலகத்தில் இனி ஒருத்தனும் மதிக்க மாட்டான்!

எப்பவும் அவனே கதி -ன்னு கிடக்குற என்னை, அவன் கேவலமா நினைச்சிட்டான்-ல்ல?
இவ இளிச்ச வாயி, அன்பைத் தானாவே கொடுத்துருவா-ன்னு நினைச்சிட்டான்-ல்ல?

வேங்கடவா...
கதி என்றும் தான் ஆவான், கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் - உன்னை வையகத்தார் மதியாரே!
2. இப்போ கோவம் தணிக்க அவன் வந்தாகணும் இல்லையா? 

அப்போ என்ன பண்ணலாம்? 
உடனே "இச்" கொடுத்துறதா? No No! :)

அவன் ஆடையைப் பிடிச்சி இழுத்து அவனை வம்பு செய்யணும்!

அது என்ன, எப்பமே அவன் தான் சேலையை ஒளிக்கணுமா?
= அவன் "உள்ளாடை"-யை  நான் ஒளிச்சி வச்சா என்ன?:)))

அவன் உள்ளாடை வாசத்தில் = அவன் வாசம் வீசுதே! 
அந்தத் துணியை என் மேல இறுக்கமாச் சுத்திக்குவேன்!

அவனுக்குத் தெரியாமல், அவன் ஆடையை, அவன் Suitcase-இல் இருந்து களவாடி, என் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுகிறேன்! :)

பெண்ணின் வருத்தம் அறியாத,
பெருமான் அரையில் (இடுப்பில்) - பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை - 
வாட்டம் தணிய வீசீரே!


3. அடுத்து??? 
ஆளு கிட்டக்க கிட்டக்க வரான்! 

கண்ணு படக் படக்-ன்னு அடிச்சிக்குது! 
இதயம் தடக் தடக்-ன்னு அடிச்சிக்குது!

ச்சே! என்ன வீரம் பேசினாலும், அவன் கிட்டக்க வரும் போது மட்டும்..
இந்த மனசு, Last Minute கூட்டணிக் கட்சியா மாறிடுதே! :)

அய்யோ! என் உதடே! அவன் கிட்டக்க போயிறாத!
அதுக்கப்புறம் நான் கண்ணை மூடிக்குவேனா?
அவன் "உடம்பழகை" முழுக்கப் பார்க்க முடியாம போயீரும்!

* தொடர் வண்டியில் என்னுடன் விசில் அடித்து வரும் = வாய் அழகு!
* என்னை முழுங்குவது போல் பார்க்கும் = கண் அழகு!
* அவனுடைய தொப்புளில் (கொப்பூழ்) = நான் விடும் பம்பரம் அழகு!
* அதற்கும் கீழே = அவன் குழல் அழகு!:)))))))

சேச்சே, crowd பாக்குது, கீழே வேணாம்! மேலே -ன்னு மாத்தீருவோம்;
அவன் முடியைக் கோதி விடும் = (மேல்) குழல் அழகு!

அவன் உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும், முத்தம் கொடுப்பதற்கு முன்பே பார்த்துடணும்;
முத்தத்தில் கண்ணை மூடிட்டா, அப்பால அதெல்லாம் பாக்க முடியாமப் போயீரும்:)

எனவே..
* முதலில் மேலோர் = கண்கள்!
* அப்பறம் கீழோர் = இதழ்கள்!

* அதனினும் கீழோன் = குழல்கள்!

எழிலுடைய அம்மனை மீர்! என் அரங்கத்து இன் அமுதர்,
குழல் அழகர் -> வாய் அழகர் -> 
கண் அழகர்! 
கொப்பூழில் = எழு கமலப் பூ....
எழு கமலப் பூ அழகர்! எம்மானார்! எம்மானார்!


4. அய்யோ! அவன் பச்சைக் கர்ப்பூர நெடி...
என் பச்சை உடம்பை என்னமோ பண்ணுதே! 

அவன் கிட்டக்க வந்துட்ட்டான்! 
அவன் உதடு கிட்ட்டக்க வந்துரிச்சி!

என்ன tooth paste use பண்ணுவான்-ன்னு தெரியலையே?
சரியான வெண்ணையா இருப்பானோ??? வெண்ணைய் வீச்சம் அடிக்குதே!
Pepsodent Butter-ன்னு புது Brand ஏதாச்சும் வந்திருக்கா என்ன? :)

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய் தான் = தித்தித்து இருக்குமோ?


மருப்பு ஒசித்த மாதவன் தன் "வாய்ச் சுவையும்+நாற்றமும்"
விருப்புற்றுக் கேட்கின்றேன், சொல் ஆழி வெண் சங்கே!


அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!
அண்ணலும்  தேக்கினான்! அவளும் தேக்கினாள்!


* அடியார்க்கு = நீர்த் தீர்த்தம்! 
* எனக்கோ அவன் = வாய்த் தீர்த்தம்!

என் எச்சிலை, அவன் பருகி...
அவன் எச்சிலை, அதில் கலந்து...
மீண்டும் எனக்கே ஊட்டி விடுவான் = என்னெச்சில் ருசி, எனக்கே தெரிகிறது!!!

சேய்த் தீர்த்தமாய் நின்ற - செங்கண் மால் தன்னுடய
"வாய்த் தீர்த்தம்" பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே!


5. முத்தக் கலை முடித்த பின்னர்...

தேன் உண்ட மயக்கத்தில், "வாழ்வின் பயனை அடைந்தேன்"-ன்னு டயலாக் விட்டுறாதே!
லேசு மாசா, "Hmm, ’twaz Okay" என்பது போல் ஒரு லுக்கு விட்டுறணும்! :)


அப்போ தானே அடுத்த முறை, இன்னும் அறிவா/அழகா வேறு மாதிரி முயல்வான்? :)

ஞாபகம் வச்சிக்கடீ கோதை!
* வேடனுக்குத் தானே சென்று விழும் பறவையை விட..
* வேட்டையாடி விழும் பறவை மேலத் தான் காதல் அதிகம்!

அதனால் நீ அவனிடம் விழ நினைச்சாலும்...
வேட்டை நாடகம் நடத்தி, அப்புறமா விழு! :)

மாலாய்ப் பிறந்த நம்பியை, 
மாலே செய்யும் மணாளனை,
ஏலாப் பொய்கள் உரைப்பானை,
இங்கே போதக் கண்டீரே?


ஏலாப் பொய் சொல்லும் Porkki-ன்னு திட்டி அனுப்பு!
அப்போ தான் ஏக்கமாத் தூங்கப் போவான்!
அடுத்த முத்தச் சுவை, இன்னும் சுவை பெறும்! :))

பாவம், ரொம்ப உழைச்சவனை, வாயராப் பாராட்டலையே? -ன்னு நினைக்குறியா?
அவன் தூங்கும் போது, அவனையும் அறியாமல், உன் உதட்டுச் சாயத்தை அவன் கன்னத்தில் பூசு!  அவனுக்கு = சிவப்பு மையால் மதிப்பெண் வழங்கு!


கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!


"அடியே! கோதை! அவனைக் கட்டிக்கிட்டா எங்கேடி இருப்பாய்? அவனுக்கு-ன்னு தனியா வீடு கூடக் கெடையாது!
வெளியில பார்க்க பணக்கார "மலை-வீடு" போல இருக்கும்; ஆனா மொத்தமா முப்பது நிமிஷம் கூடத் தூங்க வுட மாட்டானுங்க! :)

108 வீடு வீடாச் சுத்தணும்!
வேர்வை பொங்கி வழியும் அவன் கரு-அறையில்!
A/C கூட இருக்காது!
பாம்புப் படுக்கை! சொர சொர-ன்னு இருக்கும்! என்னடி பண்ணுவ?"

Kothai Says:
"Just a small room, power cuts ok...
Even with a lil' candle light,
His sight is tight that makes me light!

High Definition in his Eyes...
Sub Woofer as he Whispers...
Home Theater in his Prank
That makes me really crank...
Armani, CK, Obsession
Are dull and dumbest possession!
His fragrance comes and fascinates
The "Smell of my Lover" oscillates!

His arms have rooms. Thatz my home! Thatz my home!

* எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
* "உன்" தன்னோடு!
* உறவேல் இங்கு ஒழிக்க ஒழியாது!

அவனுக்கு என்னை "விதி!" = நான் கடவா வண்ணமே நல்கு!

அவன் களைத்துப் படுத்தாலும் விட மாட்டேன்...
என் கூந்தலில் உதிர்ந்த... முல்லைச் சரத்தின் வாழை நாரால்...
அவன் கைகளையும் கால்களையும் - கட்டிலில் கட்டிப் போடுவேன்
நாளை காலையும், அவன் = எனக்கே! எனக்கே!!!

பிறந்த நாள் இரவில்...
அவன் உடம்பின் ஒவ்வொரு பாகத்துக்கும் = தன்னை "ஈ"ந்தாள்! 
= முருகாபகர் ஆர்வம் "ஈ"!

குத்து விளக்கெரியக்...
கோட்டுக் கால் கட்டில் மேல்...
"மெத்" என்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி...

கொத்து அலர் பூங் குழல்...
நப்பின்னை கொங்கை மேல்...
கொங்கை மேல்ல்ல்ல் வைத்துக் கிடந்த மலர் மார்பா = உனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

18 comments:

 1. இன்று...

  அர்ஜூன் பிறந்த நாளாகவும் இருப்பதால்:
  Kissing For Dummies = dedicated to @iVedhaLam :))
  மல்லி நாடாண்ட மடமயில் = நாச்சியார் திருமொழி!

  ReplyDelete
 2. கொழந்தை இன்னிக்குத்தான் பொறந்துருக்கு. முதல் நாளே இன்னும் முடியலை. அதுக்குள்ளே இம்மாம் பாடமுன்னா எப்படிப் படிக்கும்?????? அதுவும் 18+ பதிவை!!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க டீச்சர்
   குழந்தை எப்பவோ பொறந்துருச்சி; இன்னிக்கு Re-enactment கொண்டாடி Enjoy பண்ணிக்குது:)
   18+ எல்லாம் இந்தக் கொழந்தைக்குத் தண்ணி பட்ட பாடு; 18+ நாளாச் சண்டை போட்டுது-ல்ல?:)

   Delete
 3. ஆஹா, இம்புட்டு இருக்கா இதுல... சூப்பர் செம. எல்லாம் சொந்த அனுபவமா மிஸ்டர்.கண்ணன் ?
  அப்படியே இத நீங்க ஒரு Podcastடா பேசனும்.. ;)

  ReplyDelete
  Replies
  1. //ஆஹா, இம்புட்டு இருக்கா இதுல//

   எம்புட்டு?:)

   //சூப்பர் செம. எல்லாம் சொந்த அனுபவமா//

   பாத்தீயா, இதானே வேணாம்ங்கிறது? பாடினது அவ, பழி எனக்கா?
   கேட்டோக்கோடீ கோதை, ஒன்னை இந்த ஒலகம் இன்னும் நம்புது:)

   Podcast பேசீருவோம்! ஆனா அதுக்கு முன்னாடி, "கம்ப ராமாயணத்தில் முருகன் வரும் இடங்கள்" -பேச்சு பாக்கி இருக்கு:)

   Delete
 4. //"இச்"-சுவை தவிர யான் போய்// - ஆண்டாள் பாசுரத்துக்கு இப்படி ஒரு பொருள் நான் இதுவரை படித்ததுமில்லை; இப்படியும் இருக்குமென்று கற்பனை செய்து கூடப் பார்த்ததுமில்லை.

  ஆனாலும், பச்சை வண்ணனுக்கும் அவன் காதலிக்குமான உறவை இப்படி ரொம்பப் பச்சையாக எழுதிவிட்டீர்களே!!!

  ReplyDelete
 5. முருகா
  "பச்சை"யாய் எழுதுனது அவ தான், நான் அப்பாவி:)

  பச்சைப் பாசுரங்கள்
  அவள் இச்சைப் பாசுரங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஓ அப்படியா! மொத்தப் பதிவுமே பாசுரத்தில் கரந்திருந்த கருத்துக்களிலிருந்து கறந்தவைதானா? அருமை உங்கள் உரை விளக்கம்! இப்படியெல்லாம் உரை விளக்கம் எழுதத் தொடங்கினால் இன்றைய இளம் தலைமுறையென்ன, நாளைய தலைமுறையையும் உட்கார்ந்து சங்கத் தமிழ் சுவைக்க வைக்கலாம்!

   Delete
 6. "இச்"-சுவை தவிர யான் போய்,
  இந்திர லோகம் ஆளும்
  அச் சுவை பெறினும் வேண்டேன்,
  அரங்க மா நகர் உளானே! "இச்" ல நாலு புள்ளிய வெச்சு நச்சுனு மாத்தீட்டீர்~ ;-)))

  ReplyDelete
  Replies
  1. சந்தோசமா ராஜா?:)
   ஒன் சிரிப்பானே சொல்லுதே! அம்புட்டு லேசுல சிரிப்பான் போடுற பையனா நீயி?:)

   Delete
 7. அருமையான விளக்கம் !

  ReplyDelete
 8. வெட்கப்பட வச்சிட்டியே முருகா. :-))))))))))))

  ReplyDelete
 9. ஏண்ணே..சும்மா சொல்லக்கூடாது..பிச்சு ஓதரிட்டீக..

  நெடுமாற் கடிமை செய்வேன்போல் அவனை கருத வஞ்சித்து,

  தடுமாற் றற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர்நி னைந்தால்,

  கொடுமா வினையேன் அவனடியார் அடியே கூடும் இதுவல்லால்,

  விடுமா றென்ப தென்னந்தோ! வியன்மூ வுலகு பெறினுமே?

  - மாறன் சடகோபன்

  ReplyDelete
 10. முதல் முறையாக உங்க blog ஐ படிக்குறேன்.
  முதல் தரவே..18+ ஆ..ல்ல பாத்துருக்கேன்! முருகா!
  எனினும் அருமை..அருமை..

  ReplyDelete
 11. Beautiful Paasurams! Its true that almost many cine duet songs were derived from Nacchiyar thirumozhi!! The beauty of Andal thoughts! You seem to be Kothai's best friend. As though she had shared everything with u! But y kannabiran Sir the pics are so Adult-like? Couldnt share the article with anyone! This being my favourite blog, I really feel difficult in sharing this article becoz of its pic! Dont know whether I am wrong but y so many pictures of that sort! Words are beautiful as usual!!

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP