திருப்பதிக்கே "லட்டு" குடுத்த M.R. ராதா!
சில மாதங்களுக்கு முன்... எத்தியோப்பியா/ சாட் (Chad) பயணம்;
"பாலியல் தொழிலில் இருந்து சிறார் மீட்பு" - என்பதே அந்தத் தன்னார்வ முகாமின் நோக்கம்!
குட்டிப் பசங்க / வாலிபப் பசங்க -ன்னு சில புதிய நண்பர்கள் கிடைச்சாங்க:)
கள்ளத் தொழிலிலும்...
கள்ளங் கபடில்லா...
"முருக" உள்ளங்கள்!
"நீங்க யாருடா, எங்களை 'மீட்க'? நாங்க சந்தோசமாத் தான் இருக்கோம்" -ன்னு மூஞ்சில துப்பி அனுப்பியிருக்கலாம்; ஆனா, அவர்கள் அப்படிச் செய்யலை;
"என்ன தான் சொல்லுறான்- ன்னு கேட்போமே!
"கருத்து" தானே!
நீ ஆதாரமே குடுத்தாலும்.. சுயப் பிடித்தத்தை விட்டு எங்களால் வெளியே வர முடியலைய்யா;
எடுத்துக் கொள்வதும்/ எடுத்துக்காததும் எங்க கையில் தானே இருக்கு?"
இந்தத் தெளிவு, அவுங்களுக்கு என்னமா இருக்கு! அடேயப்பா!
வெறும் கருத்துக்காக, மனத்தில் வஞ்சம் கொள்ளுதல்
= "கள்ளத் தொழிலில்" கூட இல்லை; ஆனா நம் சமூக ஊடகங்களில் இருக்கு;
வஞ்சம் கொள்வதற்குப் பதிலா, வாஞ்சை கொள்வது அவர்களிடம் இருக்கு; "Itz not as bad as you think; Let’s try once" ன்னு என்னிடமே one person asked in the camp:) முருகா!
என்ன நடக்குமோ? -ன்னு பயந்துகிட்டே தான் போனோம்! (UNICEF plain clothes officer accompanied too); ஆனால்?....
வசதிகளே இல்லீன்னாலும், வித்தியாசமான பயணம்; மிக மிக ரசித்தேன்!
அதுக்கும் முன்பே, ட்விட்டர் போன்ற ஊடகங்களில் இருந்து, ஒதுங்கியே இருந்தேன்;
ஆனா சென்று வந்தததில் இருந்து.. ஏனோ தெரியலை.. மனசுக்குள் ஒரு "பெரும் சோர்வு"..
அந்தச் சின்னஞ் சிறு பெண்களுக்கு/ பொடியன்களுக்கு
= நல்ல காதல் கிடைக்கட்டும்; நல்ல வாழ்வு கிடைக்கட்டும்!
= இளமையில் கல்; இளமையில் வாழ்!
M.R. ராதாவுக்கும், மேற்கண்ட முன்னுரைக்கும் என்ன தொடர்பு? -ன்னு பாக்குறீங்களா?:)
அதெல்லாம் ஒன்னுமில்லை! வரும் வழியில், விமானத்தில், MR ராதாவின் புத்தகம் - சிறைச்சாலைச் சிந்தனைகள்... வாசிச்சிக்கிட்டே வந்தேன்!
படிக்க படிக்க, மனசுக்குள் ஒரே சிரிப்பு; அவரு நடிகவேள் மட்டுமல்ல! நகைச்சுவை வேள்!:)
எழுத்தாளர் விந்தன், ராதாவைப் பேட்டி கண்டு, அவர் சொல்லச் சொல்ல எழுதிய உரையாடல் நூல்!
இணையத்திலும், ebook ஆகக் கிடைக்கிறது; இதோ!
MR ராதாவின் குணமும் அப்படியே! = வஞ்சத்தால் கறுவாத குணம்!
"ஆமாம், கோவம் வந்துச்சி, எம்.ஜி.ஆரைச் சுட்டேன்! நண்பர்கள் போட்டுக் கொண்ட சண்டை; துப்பாக்கி சரியாக வெடிக்காதோ?" -ன்னு கேட்டவரு தான்:)
தன்னையும் சுட்டுக்கொண்டு, காவல்துறைக்கும் தானே தகவல் சொன்னவரு:)
பெரியாரைப் பிரிந்த போது, "அவசரப்பட்டார் அண்ணா" -ன்னு ராதா கருத்து சொன்னாலும்...
"கருத்து வேற, மனிதம் வேற" -என்பதை அறிந்த "வில்லன்" அவரு; அறியாத "ஹீரோக்கள்" நாம்:)
தி.மு.க-வின் முக்கிய ஆட்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, ராதாவும் அருகில் இருந்தாரு;
"ஐயோ, இவன் பெரியாருக்கு நெருக்கம்; அங்க போய் வத்தி வச்சிருவான்" -ன்னு யாரோ சொல்ல...
அறிஞர் அண்ணா, அதை வன்மையா மறுத்தாராம்!
"ராதாவுக்கு என்னை விட = பெரியார் நெருக்கம் தான்; ஆனா பெரியாரை விட = மனிதம் நெருக்கம்!
இங்கு இருப்பதை அங்கும், அங்கு இருப்பதை இங்கும் பேசும் "குணம்" ராதாவுக்குக் கிடையாது" - என்பதே அண்ணாவின் emphatic reply!
இதையெல்லாம் படிக்கப் படிக்க...
MR ராதா-வின் மேல் நான் கொண்டிருந்த எதிர்மறை எண்ணங்கள் பலவும் மாறித் தான் போனது;
நான் இதுவரை கொண்டிருந்த கருத்து பிழையானது -ன்னு ஒப்புக் கொள்வதில் எனக்கு எவ்வித வெட்கமும் இல்லை!
* ராதாவின் நடிப்பு = அப்போதே, எனக்குப் பிடிக்கும் தான்;
* ராதாவின் குணம் = இப்போது, இதுவும் பிடிக்கத் துவங்கி விட்டது:)
அரசியல்/ சினிமா கடந்து, ராதாவின் நகைச்சுவை ஒன்றைப் பார்ப்போம்!
"சகல சக்தி" படைத்த திருப்பதி தேவஸ்தானத்தையே வம்புக்கு இழுத்த காட்சி:)
அழ்வார்களின் இயற்கை-வழிபாட்டு வேங்கடவனா, இப்போ இருக்கான்???
"சிந்து பூ மகிழும் திருவேங்கடத்துக் கார் எழில் எந்தை"
பூமாலைக்கே வழியில்லாம, காட்டில் சிந்து பூ! உதிரிப் பூக்கள்=வேங்கடவன்...
இப்போ வைரப் பூக்களை அல்லவா எண்ணிக்கிட்டு இருக்கான், நாள் பூராக் கால் கடுக்க நின்னுக்கிட்டு?:)
ஆழி -சங்கு ஏந்திப், பூ ஆடையில் பொலியத் தோன்றிய மாயோன் -ன்னு சிலப்பதிகாரத்தில் வேங்கடவனைப் பாடிய இளங்கோவடிகள்..
இப்போ அவன் இருக்கும் சிறைச்சாலையைப் பார்த்து.. ரொம்பவே வருத்தப் படுவாரு;
வாங்க, MR ராதாவின் வம்புகளைப் பார்ப்போம்:)
------------
ராதா: "யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை நாடகக் கம்பெனியோடு நான் ஒரு சமயம் திருப்பதிக்குப் போயிருந்தேன்..."
விந்தன்: "அது எப்போது? திருப்பதி வேங்கடேசப் பெருமானுக்கு வெடி வைப்பதாக நினைத்துக் கொண்டு, நீங்க இருந்த வீட்டுக்கே வெடி வைத்துக் கொண்டீர்களே, அப்போதா?”
ராதா: "இல்லை, இது அதுக்கும் முந்தி-ன்னு நினைக்கிறேன்.
தரிசனத்துக்காக எல்லாருமாகச் சேர்ந்து மலைக்குப் போயிருந்தோம். அங்கே வைச்சிருந்த சந்தனக் கலவையின் வாசனை என் மூக்கைத் துளைச்சுது;
இவ்வளவு வாசனை வீச, இதிலே என்னவெல்லாம் சேர்த்திருப்பாங்களோ?-ன்னு நினைச்சேன்.
அவங்களாக் கொடுத்தா, தொட்டுச் சேவிச்சிக்கிற அளவுக்குத்தான் கொடுக்கப் போறாங்க; அதுக்கு மேலேயா கொடுக்கப் போறாங்க? ன்னு தோனுச்சி.
அந்தச் சமயம் எனக்கென்னவோ அதிலேயே குளிச்சி எழுந்தா தேவலை-ன்னு பட்டுது:)))
அக்கம் பக்கம் பார்த்து, யாருக்கும் தெரியாம அதிலே பாதியை வழிச்செடுத்து மடியிலே வைச்சுக் கட்டிக்கிட்டேன்;
என் போதாத காலம், உடனே அதைக் கவனிச்சி விட்ட அர்ச்சகர்களிலே ஒருத்தர்...
’இங்கே வைச்ச சந்தனத்திலே பாதியை எவனோ திருடி எடுத்து வைச்சிக்கிட்டான்;
இந்த இடத்தை விட்டு வெளியே போறதுக்கு முந்தி அவனைப் பிடிக்கனும். எல்லாக் கதவையும் சாத்துங்கோ!’ன்னு கத்த ஆரம்பிச்சிட்டார்.
இது என்ன வம்பு? ன்னு நான் மெல்ல நழுவினேன்.
அதுக்குள்ளே எல்லாக் கதவையும் ஒன்னொன்னா சாத்த ஆரம்பிச்சிட்டாங்க.
அகப்பட்டுக்கிட்டா அவ்வளவுதான்-னு, தப்பினோம், பிழைச்சோம்-னு தலைதெறிக்க மலையடிவாரத்துக்கு ஓட்டமும் நடையுமா வந்துட்டேன்...
விந்தன்: "அப்போ சந்தனம்...?"
ராதா: "விடுவேனா? அது என் மடியிலேயே இருந்தது. ஸ்ரீபாத ரேணுலு -ன்னு அந்தக் கலவைச் சந்தனத்துக்குப் பேராம்.
பச்சைக் கற்பூரம், அத்தர், அது இது-ன்னு என்னவெல்லாமோ அதிலே சேர்த்திருந்தாங்க;
தரிசனம் செய்யறச்சே இந்தப் பக்தருங்க, கோவிந்தா, கோவிந்தா! ன்னு ஓயாமச் சத்தம் போடறானுங்க, இல்லையா? அதாலே பெருமாளுக்குத் தலையை வலிக்க ஆரம்பிச்சுடுமாம்:)
அந்த வலியைப் போக்கறதுக்காக இந்தச் சந்தனத்தைக் கலந்து அவர் மேலே பூசுவாங்களாம்:)))
வாரத்துக்கு ஒரு நாள் அதை வழிச்சி எடுத்து, சின்னச் சின்னப் பொட்டலமாக் கட்டி, வேணுங்கிற பக்தர்களுக்கு விலைக்கு விற்பாங்களாம்...”
விந்தன்: "ஆகா! திருப்பதி ‘ரேட்’டிலே பார்த்தால் நீங்க எடுத்துக் கொண்டு வந்த சந்தனமே ஜந்நூறு, ஆயிரம் என்று விலை போயிருக்கும் போலிருக்கிறதே?"
ராதா: "யார் கண்டது? போனாலும் போயிருக்கும்; அதுக்குள்ளே அங்கே என்னைக் காணாத பொன்னுசாமிப் பிள்ளை சும்மா இருப்பாரா?
சந்தனத் திருடன் நானாத் தான் இருக்கும் -கிறதை அவர் எப்படியோ ஊகிச்சிக்கிட்டுக் கீழே வந்து ‘ஏன்டா, இப்படிக் கூடச் செய்யலாமா? ன்னார்;
"நாமெல்லாம் காசு கொடுத்து வாங்கிக் கட்டுப்படியாகிற சமாசாரமா இது? ன்னு நான் அவர் மேலேயே கொஞ்சம் சந்தனத்தை எடுத்துப் பூசி, ‘எப்படி இருக்கு? ன்னு கேட்டேன்.
அது அவர் சூட்டைத் தணிக்கலே-ன்னாலும் என் சூட்டைக் கொஞ்ச நாள் தணிச்சி வந்தது. எல்லாம் தீர்ந்து போய், அதை எடுத்து வைச்சிக்கிட்டு வந்த வேட்டியைச் சலவைக்குப் போட்டேன்.
ஒரு தடவையில்லே, பல தடவை போட்டேன். வேட்டி கிழியற வரையிலே அந்தச் சந்தன வாசனை போகவேயில்லே!”
விந்தன்: "சந்தன வாசனையும் போகவில்லை; அதன் நினைவும் உங்கள் மனசை விட்டுப் போகவில்லை"
Oh, MR Radha, You missed the "taste" of Tiruchendur Puttu:) அங்கேயும், ஒம்ம கைவேலையைக் காட்டியிருக்கப் படாதோ?:)
எந்தை = பெருமாளை மட்டுமா ராதா கலாய்ச்சாரு?
என் காதல் முருகனையும் அல்லவா, நோண்டி நொங்கு எடுத்தாரு:))
வேலும் மயிலும் துணை -எனும் படத்தில், பகுத்தறிவுப் பேச்சாளராத் தோன்றி, முருகனை ஒரு கலக்கு கலக்கி எடுப்பாரு:)
கந்தர் அலங்காரம் -ங்கிற படத்தில், "லொள்ளு கதா காலட்சேபம்" செய்யும் முருக பக்தர்:)
ஆதி தேவனின் மைந்தா நமோ நமோ!
ஆறு வீட்டுக்கு ராஜா நமோ நமோ!:)) - Remix of MR Radha!
Hi Honey; நீ ஆறு வீட்டுக்கு ராஜாவாமே? நான் கூட ஏதோ சீட்டுக் கட்டுக்கு ராஜா-ன்னு நினைச்சேன்:) கோச்சிக்காத முருகா!:)
Under this inspiration, I wrote in a birthday post: முருகன் = கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா:)
கோ= அரசன்; கோக்-கோ= அரசர்க்கு அரசன்
வேல் பிடிச்சா= வேலா; ஆண்டிக் கோல் பிடிச்ச = கோலா:)
கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா!:) Sorry da muruga! Love u honey:)
------
*தமிழ் வேடம் = வெளியில்! உள்ளே "மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுக்களோடு" காமம்;
*தமிழ்க் கருத்து = வாய்க்கு மட்டுமே! வாழ்வுக்கு அல்ல!
= இது போன்ற Hypocrisy இல்லாத "குணம்"!
அதே சமயம்: தனக்குப் பிடிக்காத ஒரு கருத்தைச் சொல்லிட்டானே -ன்னு, பின்புலத்தில், க்ரூப் சேர்த்துக் கும்மியடிக்காத "குணம்";
தன் கருத்துக்களை அறிந்த பின்னும், தன் நாடகங்களுக்கு உதவி செய்த கணேச "ஐயர்" - அவர் பால் நன்றி மறவாத "குணம்"!
"குணம்" நாடிக், குற்றமும் நாடி - அவற்றுள்
மிகை நாடி, மிக்க கொளல்!
கருத்து வேறு/ மனிதம் வேறு என்ற "குணம்"! = M.R.ராதா "குணம்"!
வாழ்க அவர் இன உணர்வும், தமிழ்-மொழி உணர்வும்!!
முழு நூலையும் வாசித்து விடுங்கள்! - ஒங்களுக்கு மிகவும் பிடிச்சிப் போகும்:)

MR Radha with Periyar |

தமிழ்ச் சேவை போதாதெனப் பொதுச் சேவையும் செய்யும் உங்கள் அன்பு உள்ளத்துக்கு என் வணக்கங்கள்!
ReplyDeleteஅதெல்லாம் இல்லீங்க; இதிலும் என் தன்னலம் (நட்புநலம்) உண்டு:)
Deleteஎன்ன கண்ணபிரான் அவர்களே, நீங்கள் கூட இப்படி நூல்களைப் பகிரத் தொடங்கிவிட்டீர்கள்?! இதனால் பதிப்பகங்களும், எழுத்தாளர்களும், தமிழும் பாதிக்கப்படும் என்பது என்னைப் போன்ற சிறார்கள் சொல்லித்தானா உங்களுக்குத் தெரிய வேண்டும்?
ReplyDeleteஆகா! மன்னிக்கவும் ஞானப்பிரகாசன்; தப்பு-ன்னா சொல்லுங்க; சுட்டியை எடுத்து விடுகிறேன்!
Deleteஇது தமிழ்ப் பல்கலைக்கழகத்துச் சுட்டி! ஏற்கனவே நாட்டுடைமை ஆகிவிட்ட நூல்;
நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள் பலவற்றின் சுட்டிகள், பல்கலையில் வெளிப்படையாகவே இருக்கு; அதனால் தான் அப்படியே பகிர்ந்தேன்;
ஓ அப்படியா! மன்னிக்க வேண்டும்! நீங்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணைய நூலகத்தைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். சிறியேனும் வாரம் ஒருமுறையாவது தவறாமல் அங்கு செல்பவன்தான். 'நிலாச்சாரல்' இணைய இதழ் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதில்தான் நான் 'படைப்புகள் தேர்ந்தெடுப்பவ'னாகவும், பிழை திருத்துநராகவும் பகுதி நேரமாகப் பணியாற்றுகிறேன். எதற்குச் சொல்கிறேன் என்றால், நான் சொல்லித்தான், குறிப்பிட்ட அந்த நூலகத்திலிருந்து, இதுவரை அவ்வளவாகப் பொதுமக்கள் கவனத்துக்கு வராத நல்ல நூல்களாகத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தொடராக வெளியிட்டு வருகிறோம் எங்கள் இதழில். ஆனால், இந்த 'நடிகவேள் நூல்' வருடிய பதிப்பு போல இருந்ததால் ஏமாந்து விட்டேன். மன்னியுங்கள்!
ReplyDeleteநிலாச்சாரல் என் மனத்துக்கு மிகவும் பிடித்தமான ஒன்று! - "தமிழ்" என்பதால்:)
Delete//தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணைய நூலகத்தைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்//
அதே:)
http://tamilvu.org/library/nationalized/html/index.htm
//நிலாச்சாரல் என் மனத்துக்கு மிகவும் பிடித்தமான ஒன்று! - "தமிழ்" என்பதால்:)// - நன்றி! மன்னித்ததற்கும் நன்றி!
ReplyDeletenice post :)
ReplyDeletenice post :)
ReplyDeleteகொஞ்சம் லேட்டா வந்துட்டேன்னு நெனைக்கறேன்..நடிகவேள் ஈ-புக் சுட்டி கிடைக்குமா?? நன்றி
ReplyDelete