Friday, September 06, 2013

வ.உ.சி -யை நொறுக்கிய "தமிழ்ப் பண்டிதர்கள்"!

இன்று Sep 5;
(ஹிந்து ஞான வித்தகர்: Dr. ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான) ஆசிரியர் தினம்..
ஆனால்... அது  மட்டுமே அல்ல!

கல்வியும்/ செல்வமும் ஒருங்கே இருந்தும்,
உடம்பால் பாடு எடுத்த தியாகச் செம்மல்..
தமிழறிஞர் = "வ.உ.சி" | அவர்களின் பிறந்த நாளும் கூட (Sep 5)!

என்னாது... வ.உ.சி = தமிழறிஞரா??? ஆமாய்யா ஆமாம்!
* வ.உ.சி = ஒரு தேச பக்தன் -ன்னு மட்டுமே பலருக்கும் தெரியும்!
* ஆனா, வ.உ.சி = ஒரு தமிழ் அறிஞன் -ன்னு தெரியுமா?

Only very few ppl. know;
Why? | Thatz the sad story of tamil media world:(

இன்று, பார்க்கப் போவது, ஒரு தமிழ்ப் "பஞ்சாயத்து":)
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி  vs  பண்டிதர் திரு. அனந்தராம ஐய்யர்




"ஐய்யர்" -ன்னு எழுதிட்டதாலேயே, Twitter பெரிய மனுஷாள், என்னை நோக்கிப் படையெடுக்க வேணாம்-ன்னு கேட்டுக்கறேன்:)
ஏற்கனவே 10 மாதங்கள் ஒதுங்கி இருந்து, இப்ப தான் மீண்டு வந்துள்ளேன்...

Group சேர்ந்து கொண்டு ஒதுக்கி வைத்தல்:
= இன்றைய Twitter மட்டுமல்ல!
= அன்றே, வ.உ.சி யும் பட்டிருக்காரு, இலக்கணத் தமிழ் வாத்திகளின் கையில்!

கருத்து வேற, மனிதம் வேற!
* நான் சொல்வது = தமிழ்க் கருத்து மட்டுமே!
* தனி மனிதத் தாக்குதல் = ஒரு போதும் நான் அறியாதவன்!

"KRS-ஐ ஒழிச்சிக் கட்டுங்கோ; பூச்சி மருந்து அடிச்சி ஒழிங்க"
- இது போன்ற "இட்லிவடை வாசகங்கள்" என் வாயில் வரவே வராது:(
பூச்சி மருந்து அடிச்சி, "என் சாவு"
= Twitter பெரிய மனுஷாள் ஒங்க கையில் இல்லை!

அது இன்னொருவன் கையில்!!
இதன் "தர்ம-நியாயங்களைத்" திருமுருகன் தாளில் வைத்து விடுகிறேன்;

உண்மை, உறுத்து வந்து ஊட்டும்!
அதுவும் தரவோடு வந்தா? = தாங்க முடியாது தான்:)))
* சொல்வது என்ன-ன்னா:  தமிழுக்கு நேர்ந்த கொடுமைகள்!
* என் ஏக்கம் = தமிழ் ஏக்கம்:  ஐய்யர் என்றல்ல! கருணாநிதி செய்தாலும் வரும்!

தமிழை = "டுமீல்" என்று எள்ளி விட்டு,
அதே தமிழில் இலக்கணப் பாடம் எடுக்கும் Twitter "வாத்திகள்" யாராயினும் = எனக்கு இதே ஏக்கம் தான்!

இவர்களுக்கு, தமிழ் = "உணர்வுப் பூர்வமானது" அல்ல!
வெறும் Rulebook; ஆடு-களம், அவ்வளவே! உள்ளத்தின் ஆழத்தில் = எள்ளலே!:(
இவங்களை விட்டுருவோம்; மற்றபடி...

தமிழுக்கு "மனதார நல்லது நினைப்போர்"
= யாராயினும்.. 
= பிராமணர்கள் உட்பட.. அனைவரும் தமிழர்களே!

தமிழ் = பிறப்பால் வருவது அன்று! உணர்வால் வருவது!

உ.வே. சாமிநாத ஐயர் என்றொரு தமிழ்த் தாத்தா; அவர் திருவடிகள் என்றும் எனக்குத் துணை!
Enough of this digression (or) Introduction..
Let's go & see வ.உ.சி-யின் தமிழ்ப் பஞ்சாயத்து:)



எட்டுக் கால் பூச்சிக்கு = எத்தினி கால்?
மாற்றிக் கேக்குறேன்; "Spider Man"-க்கு எத்தனை கால்?:)

18 கீழ்க்கணக்கு = மொத்தம் எத்தனை நூல்கள்?:)

18 கீழ்க் கணக்கில் = 18 நூல்கள்!
திருக்குறளே மிக்க பிரபலம்
ஆனா, ஒரே ஒரு நூலில் மட்டும் = "பஞ்சாயத்து"

அந்த 18ஆம் நூல் எது?
இன்னிலையா? கைந்நிலையா?
= வ.உ.சி vs. அனந்த ராம ஐய்யர்

தமிழில், "தனிப்பாடல்கள்" -ன்னு ஒரு வகை இருக்கு!
வெண்பா  யாரு எழுதுனது-ங்கிற வெவரமெல்லாம் இருக்காது; திடீர்-ன்னு தோன்றி உலாத்தும்!
வெறும் சுவையே அன்றி, நம்பத் தகுந்த ஆதாரம் அல்ல!

எட்டுத் தொகை நூல்கள் என்னென்ன? ஒரு "வெண்பா" இருக்கு-ய்யா!
 "நற்றிணை நல்ல குறுந்தொகை" -ன்னு தொடங்கும்;
எட்டுத் தொகையில் என்னென்ன நூல்-ன்னு பல பேருக்குத் தெரியும்;
ஆனா, இந்தத் தனிப்பாடல் = just a memory tip;

அதே போல், 18 கீழ்க் கணக்குக்கும் ஒரு தனிப்பாடல்!
= ஆனா, அதுல தான் பிரச்சனையே!:) நீங்களே வெண்பாவைப் பாருங்க..

நாலடி, நான்மணி, நா நாற்பது, ஐந்திணை, முப் 
பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம், 
இன்னிலைய காஞ்சியோடு, ஏலாதி என்பவே, 
கைந்நிலைய வாம் கீழ்க் கணக்கு!

எவன் எழுதித் தொலைச்ச வெண்பாவோ? List போடுங்க பார்ப்போம்!:)
நாலடியார், நான்மணிக்கடிகை  2   
நா நாற்பது: (இன்னா, இனியவை, கார், களவழி)  4
ஐந் திணை: ஐந்திணை 50, திணைமொழி 50, ஐந்திணை 70, திணைமாலை 150  4
முப்பால் (திருக்குறள்)  1
திரிகடுகம், ஆசாரக் கோவை  2
பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம்  2
முதுமொழிக் காஞ்சி, ஏலாதி  2
17

Already 17 taken! ஆனா, வெண்பா-வில் இன்னும் ரெண்டு Balance இருக்கு!:)
இன்னிலைய  -ன்னும் இருக்கு;
கைந்நிலைய -ன்னும் இருக்கு;

ஆனா, கூட்டினா = 18 வரணுமே! 
17 + 2 = 18 ???

எந்தப் பொலவன்-யா Basic Maths தெரியாம, "வெண்பா" பாடி, உயிரை வாங்குறான்?:)
சங்கம் மருவிய காலம்; அந்த 18ஆம் நூல் எது? = இன்னிலையா? கைந்நிலையா??

அதாம்பா இது -ன்னு வாழைப்பழத் தீர்ப்பு சொல்ல முடியாது:) ரெண்டும் வெவ்வேறு நூல்கள்!
* வ.உ.சிதம்பரம் பிள்ளை சொல்வது = இன்னிலை;
* இ.வை. அனந்தராம ஐய்யர் சொல்வது = கைந்நிலை;



தமிழ்த் தாத்தா  உ.வே.சா ஓலை திரட்டினாரு -ன்னு பலரும் பேசிப் பேசி, அதுவே நிலைத்து விட்டது அல்லவா!
ஆனா அவரைப் போலவே, அவருக்கும் முன்பே = ஈழத் தமிழர் சி.வை. தாமோதரம் பிள்ளை கேள்விப்பட்டு இருக்கீயளா?

* உ.வே.சா  = இலக்கியம் திரட்டினாரு-ன்னா,
* சி.வை.தா = இலக்கணம் திரட்டினாரு!

தொல்காப்பியம் முழுசும் திரட்டினாரு;
இன்றுள்ள பல இலக்கண நூல்கள், உரை நூல் (சேனாவரையர்/ நச்சினார்க்கினியர்), கலித்தொகை, சூளாமணி -ன்னு...
சுவடி சுவடியாத் தேடிப் பதிப்பித்தவர் = சி.வை.தா

இவரும் தமிழ்த் தாத்தா தான்!
ஆனா பொது மக்களுக்குத் தெரியாது; ஏன்-னா பரப்புரை இல்லை:(

ஒடனே, உ.வே.சா-வை நான் குறைத்து மதிப்பிடுவதாக கும்மி அடிக்க வேண்டாம்:)
என்றும் அவர் = நம் தமிழ்த் தாத்தா!
சொல்ல வருவது என்ன-ன்னா: ஒன்றை மட்டுமே பரக்கப் பேசும் நிலை:(
சி.வை.தா -வும் = தமிழ் தாத்தா! மனத்தில் இருத்துவோம்!

உ.வே.சா / சி.வை.தா அளவுக்கு இல்லீன்னாலும்,
நம்ம வ.உ.சி யும், கொஞ்சமா ஓலை திரட்டி இருக்காரு; தெரியுமா??

* ஆனா, வெளியே போய், அதிகம் திரட்ட முடியலை = சிறை வாசம்;
* செக்கு இழுத்து வெளி வந்த பின்போ = நோய் வாசம்!

18 கீழ்க் கணக்கு:
 வ.உ.சி காட்டிய ஓலைச் சுவடிகள் = இன்னிலை!
ஆனால்.... ஆனால்.... ஆனால்?


இ. வை. அனந்தராம ஐய்யர் = ஒரு தமிழ்ப் "பண்டிதர்" / ஆசிரியர்!
நட்பு வட்டச் செல்வாக்கு மிக்கவர்;

இவரும், சில சுவடிகள் வச்சிருக்காரு;
மொத்தம் 45 பாட்டு;
அதிலே 18 பாட்டு = பாதி தான் இருக்கு! ஆங்காங்கு சொற்களே இல்லை;
சம்ஸ்கிருதச் சொல்லும் அதிகம்!

இவரைச், சேது சமஸ்தான வித்வான், உ.வே. இராகவ ஐயங்கார் பலமாக வழிமொழிகிறார்; அம்புட்டு தான்....
எல்லாப் பண்டிதர்களும் இந்தப் பக்கமே திரண்டு விட்டனர்; வ.உ.சி அம்போ!!
= Power of "Networking", even in Tamizh:(

உ.வே. இராகவ ஐயங்கார் = பெரும் அறிஞர் என்பதையும் மறைக்காது சொல்லி ஆகணும்!
கம்பனில் குளித்தவர்; "வடமொழிக் காளிதாசனை"த் தமிழுக்குள் கொண்டு வந்தவர் = "அபிஞான சாகுந்தலம்"

* ஒரு புறம் =  சிறை விட்டு வெளியே வந்து.. நொடிஞ்சி போன வ.உ.சி
* மறு புறம் =  சமஸ்தான வித்வான்கள் & தமிழ்ப் பண்டிதர் குழாம்

ஐய்யய்யோ, பத்திக்கிச்சே; உம்ம்... யாரு சொல்வது சரி?

தனி மனிதப் போக்கு தவறு..
* "யாரு?" -ன்னு வேணாம்!
* "எது?"    -ங்கிற கேள்வி கேட்போம்! => எது சரி??


இரண்டு பக்கமும், ஒரேயொரு தெளிவு இல்லை!

தனிப்பட்ட சுவடி எல்லாஞ் சரி தான்;
ஆனா.. 18 கீழ்க் கணக்கிலே, அந்தச் சுவடி சேர்த்தி என்பதற்கான ஆதாரம்?
= யாருக்குமே கிடைக்கலை;

வ.உ.சி  மட்டும் அரும்பாடுபட்டு, gave an "indirect" proof
= தொல்காப்பிய நூற்பா 113;
= அதுக்கு, தம்மிடம் உள்ள ஓலைச் சுவடியின் 5ஆம் செய்யுளை, மேற்கோள் காட்டியுள்ள பண்டைய உரையாசிரியர்;

யாப்பருங்கல விருத்தி உரையிலும்,
இன்னிலை 2ஆம் செய்யுள், மேற்கோள் காட்டப்பட்டு இருக்கு;
ஆனால்,  தரவு இருந்தும் = அன்றைய "செல்வாக்கு"?

** பதிப்பகம்/ தமிழ் வித்வான்கள் = வ.உ.சி யை  ஒப்புக் கொள்ளாது, அனந்த ராம ஐய்யர் பக்கமே "அணி" திரண்டனர்!
** இ. வை. ஐய்யர் தரவே தரலீன்னாலும்... வடசொற்கள் மிகுந்த ஏடு, கைந்நிலை: 18 கீழ்க் கணக்கு நூல் என்று ஆனது!
Today, It is Official;

வ. உ. சி = வரவேற்க யாருமில்லை!
(காங்கிரஸ் கட்சியே, அவரைக் கைவிட்டு விட்டது என்பது தனிக் கதை)
எனினும், தம் சொந்தச் செலவில், கொஞ்சம் கொஞ்சமாய் இன்னிலை நூலைப் பதிப்பித்தார்;
ஆனா, வறுமை/ வெறுமை! = அதிகம் முடியலை!:(

VOC didn't have a "social networking" in the field of Tamizh
His approach is more Frankness & Justice, rather than "self seek"
voc great
வ.உ.சி
சிறைக்கு முன்னிருந்த
கம்பீரம்
வ.உ.சி
சிறைக்குப் பின்
வெறுமை

ஆனா... இத்தோடு விட்டால் தான் பரவாயில்லையே!

வ.உ.சி  குடுத்த "தரவுகள்"
= உறுத்திக் கொண்டே இருக்கு போலும், பண்டிதர்களுக்கு!:)
= கிளப்பி விட்டாங்க...

--- வ.உ.சி -க்கு ஏடு குடுத்தவர் = திருமேனி இரத்தினக் கவிராயர்;
இவரு "பழைய நடையில்" தாமே கற்பனையாப் பாட்டெழுதி, அதைத் தான் "இன்னிலை" -ன்னு புகுத்தி விட்டார்---

கிளப்பலோ கிளப்பல்!
எப்படி இருக்கு கதை? "அசுரன்" ஆக்கீட்டோம்-ல்ல?
டொன் டொன் டொய்ய்ங்...

இ.வை. ஐய்யர் காட்டியதில், சிதைஞ்சி போன பாட்டு = 18;
கார்ப் பாம்புக் குப்பங் கி... க் கொண்......கரும் 
-ன்னு இருக்கு! என்னா புரியுதா?:)
ஆனா, இதையெல்லாம் எவருமே கேள்வி கேட்கலை;

"Official  தமிழ்ப் பண்டிதர்கள்", ஒன்று கூடி உரைத்த வாசகம்:
மற்ற 17 கீழ்க் கணக்கு நூல்களின் நடை
= வ.உ.சி காட்டிய இன்னிலையில் இல்லை 
எனவே, இது பொய்யான புகுத்தல்!

திருக்குறளின் நடை, பழமொழி நானூறில் இல்லீயே; அது மட்டும் எப்படி 18 கீழ்க் கணக்கு?
= விடுய்யா, விடுய்யா.. Twitter/ Blog-ல கேக்குறதெல்லாம் "சபை" ஏறுமா?
= ஒம்ம கிட்ட Official Network இருக்கா?:)
------------------------

சொந்தக் காசையெல்லாம், தேச பக்தியில் தொலைச்சிட்டு, மாடு போல் செக்கிழுத்து..
இன்னிக்கி தனி மரமாய் நிக்கும் வ.உ.சி = "பொய்" சொல்லிட்டாரு-ன்னே வச்சிப்போம்.....

ஆனா..ஆனா..

* "இன்னிலை" -ன்னும் அந்த வெண்பாவில் இருக்கேப்பா? = ஓய், அதெல்லாம் கேக்காதீங் காணும்;
* சரிப்பா, இன்னிலை வேணாம்! "கைந்நிலை", னு என்பதற்குத் தரவு? = என்ன ஸ்வாமி, தரவெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீரு?:)

அதான்.... இன்னிலை அல்ல-ன்னு,
நாம, "குழுவாச் சேர்ந்து" சொல்லீட்டோமே!
அதுக்கு மேலேயா தரவு வேணும்?:)
So, 18ஆம் நூல் = கைந்நிலையே! <சுபம்>


முருகா,
* செக்கை, மாடு போல் இழுத்த செல்வந்தன் = அவனா பொய்யாப் பாட்டெழுதிப் புகுத்துவான்?
* விடுதலைப் போர் செய்து கொண்டே, இடைக்கால British அரசில் முதன்மந்திரி "வ.உ.சி-ஜி" ஆகாதவன் = அவனா பொய்ப் பாட்டு புகுத்துவான்?

அன்று ஒடிந்தது = வ.உ.சி உள்ளம்!!
அன்று ஒடிந்தது = வ.உ.சி உள்ளம்!!
voc last
வ.உ.சி - இறுதி யாத்திரை

ஆனாலும்...
= தன்னைக் கைவிட்ட தமிழை 
= வ.உ.சி  கைவிடவில்லை!

அவர் இறுதிக் காலத் "தனிமை"யில் = ஒரே ஆறுதல், தமிழ்!
*தொல்காப்பியத்துக்கு உரை எழுதினார்;
*சிவ ஞான போதம் என்ற நூலுக்குச், சமயம் கடந்து, "அன்பே சிவம்" என்று, புது உரை செய்து கொடுத்தார்;

இந்தக் கையெழுத்துப் பிரதிகள் எல்லாம்... இன்று காணாமலேயே போய்விட்டன:(

ஏதோ... நடிகர் திலகம் சிவாஜி... நடித்துக் குடுக்க... "கப்பலோட்டிய தமிழன்" என்ற நினைவாச்சும் தங்கியிருக்கு!
சினிமா மட்டும் இல்லீன்னா.. வ.உ.சி = இன்னிக்கி யாரோ!:(



* "அ முதல் ஹ" வரை 48 சம்ஸ்கிருத எழுத்தே = 48 சங்கப் புலவர்களா பிறவி எடுத்துச்சி;
49-வதா, சிவபெருமானும் சங்கத்தில் உட்கார்ந்தாரு -ன்னு  "திருவிளையாடற் புராணம்" எழுதிய "தமிழ்ப் பண்டிதாள்" குழு அல்லவா?

* தமிழ்த் தொன்ம முருகனை -> புராணக் கதைகள் ஏற்றி ஏற்றி..
சுப்ரமணியன் ஆக்கிய "தமிழ்ப் பண்டிதாள்" அல்லவா?

= இந்தக் "குழு அரசியல்"-ல்லாம் கடந்து வந்து தான்...
= இன்னிக்கும் நிக்குது தமிழ்!!!

சொற்பமான அறிஞர்கள், இன்றும்,
"இன்னிலை - கைந்நிலை",
இரு நூல்களையும் ஒருங்கே வைத்துத் தான், படிக்கின்றனர்; ஆனால்....

* "Officially", கைந்நிலையே = 18 கீழ்க் கணக்கு!
* இன்னிலை அல்ல என்று ஆக்கப்பட்டு விட்டது!

அதனால் என்ன?
= இன்னிலையும் தமிழ்த் தாய்க்கு அணிகலனே!

* தான் ஒடுங்கிப் போன நிலையிலும்...
* தமிழ் ஒடுங்கிப் போகாமல்,
தமிழுக்கு "இன்-நிலை" தேடித் தந்தவனே!
தூத்துக்குடி தந்த தூயோனே;
வ.உ.சி = உன் "தோல்வித்-தமிழ்" வாழ்க!!


47 comments:

  1. ரவி சங்கர்!
    நான் வ.உ.சி பற்றி எழுதிய இடுகையை காலி பண்ணிவிட்டீர்கள்.

    ஆசிரியர் தினமாம்; ராதா கிரிஷ்ணன்னாம்! வ.உ.சி யை விட அவர மேலோ!

    எனது இடுகையின் தலைப்பு:

    "சத்யமூர்த்திக்கு பவன்; ராஜாஜிக்கு ஹால். வ.உ.சிக்கு? பூழல் சிறை பேறாவது வையுங்க அய்யா!

    அடுத்த வருடம் தான் என் இடுகை நீங்கள் எழுதிவிட்டதால்.

    ஆகவே இன்று ஆசிரியர் தினத்தை மட்டுமே எழுதி ஒரு கட்டுரை வரும்.!

    ReplyDelete
    Replies
    1. //ஆசிரியர் தினமாம்; ராதா கிரிஷ்ணன்னாம்! வ.உ.சி யை விட அவர மேலோ!//

      :))
      டாக்டர் இராதாகிருஷ்ணனும் அறிஞரே!
      ஆனால் நம் வ.உ.சி = தொண்டனாய் வாழ்ந்து முடிந்த அறிஞன்

      Delete
  2. நல்ல பதிவு. தமிழ்நாட்டில் என்னுடைய அனுபவத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பற்றி ஈழத்தமிழர்களுக்கு தெரிந்த அளவுக்கு தமிழ்நாட்டில் உள்ள இளைய சமுதாயத்தினரூக்கு குறிப்பாக சென்னையில் எனக்கு தெரிந்தவர்களுக்கு தெரியாது. ஆனால் இராமநாதபுர மாவட்டத்தில் முத்துலிங்க தேவரை தேவர்களின் தலைவராக, காமராஜரை நாடார்களின் தலைவராக, வஉசியை வெள்ளாளர் அல்லது பிள்ளைமார்களின் தலைவராக மட்டும் பார்க்கிறார்கள். பரமக்குடியில் வைத்து என்னுடன் பேச்சுக் கொடுத்த ஒருவர்,நான் யாழ்ப்பாணம் என்றதும், சாதியைப் பற்றி எதுவும் பேச முன்பே, யாழ்ப்பாண வெள்ளாளர் எல்லாம் நம்ம ஆட்கள், உங்களுக்கு வஉசியை தெரியுமா என்றார். ஓம், கேள்விப்பட்டிருக்கிறேன் என்றதும், அவரும் நம்ம ஆள் தான் என்றார். எனக்கு சிரிப்புத் தான் வந்தது. தமிழர்களின் முன்னோர்களை சாதியடிப்படையில் சொந்தம் கொண்டாடும் தமிழ்நாட்டு வழக்கம் மாற வேண்டும். மாறாக அவர்களை தமிழன் என்ற அடிப்படையில் எல்லோரும் சொந்தம் கொண்டாடி போற்ற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் வியசன்
      வ.உ.சி மட்டுமல்ல! நாத்திகரான பாரதிதாசனே வியந்து போற்றிய இராமானுசர்/வள்ளலாரைக் கூட அப்படித் தான் சிலர் பார்க்கிறார்கள்;
      ஒரு குறிப்பிட்ட சாதி வளையத்துக்கு உள்ளேயே அடைத்து விடும் கொடும் போக்கு:(

      Delete
  3. வ.உ.சி பற்றிய சிறந்த பதிவு.
    தமிழர்கள் தங்கள் பெருமைகளைப் பேசுவதொடு,
    தமது உண்மையையும் பின்னால் திரும்பிப் பார்த்தால்தான்
    நல்ல தமிழ்க்குமுகத்தை உருவாக்க முடியும்.

    பல விதயங்களில் நமது பழைய காலங்கள்
    நாம் பேசுகின்ற அளவுக்குப் பெருமை வாய்ந்ததாக இல்லை.
    தொடர்க.
    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க நாக.இளங்கோவன் ஐயா.. உண்மை தான்! //நமது பழைய காலங்கள் நாம் பேசுகின்ற அளவுக்குப் பெருமை வாய்ந்ததாக இல்லை//
      So Called தமிழ்ப் பண்டிதர்கள், சமயத்தின் பேரால், தமிழுக்குச் செய்த பல கொடுமைகள்:(

      பெரியார், மக்கள் வாழ்வோடு நின்று விட்டார்;
      தமிழ் இலக்கியத்துக்கு, இன்னொரு பெரியார் வந்தால்... அப்போ தெரியும் இவர்கள் கொட்டம்:)

      Delete
  4. ///தமிழுக்கு "மனதார நல்லது நினைப்போர்" = யாராயினும்.. பிராமணர்கள் உட்பட.. அனைவரும் தமிழர்களே!//

    ஆனால் தமிழ்பேசுவோர்களும், தமிழ்நாட்டில் வாழ்கிறவர்கள் எல்லோரும் தமிழர்களும் அல்ல.

    //தமிழ் = பிறப்பால் வருவது அன்று!//

    ஆனால் தமிழன் என்ற அடையாளம் பிறப்பால் வருவது. தமிழன் என்ற ஒரு அடையாளத்தை விட வேறு ஏதாவது இன, மொழி அடையாளமுள்ளவர்கள் தமிழ் பேசினாலும், எத்தனை நூற்றாண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தமிழர்கள் அல்ல.

    இந்த வகையில் தமிழ்நாட்டில் வாழும் தமிழைப் பேசும், தம்மைத் தமிழராக மட்டும் அடையாளப்படுத்தும் பிராமணர்கள் தமிழர்கள் ஆகிறார்கள், ஆனால் வெளியே தமிழைப் பேசி, தமது வீட்டில் தெலுங்கு அல்லது வேறு மொழி பேசி, வேறு இன, மொழி அடையாளங்களைக் கொண்ட மலையாளிகள், தெலுங்கர்கள் போன்றோர் தமிழர்கள் அல்ல. அதிலும் சில விதி விலக்குகள் உண்டு. தமிழைத் தவிரவேறு எந்த மொழியும் பேசாத இலங்கை முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல, ஏனென்றால் அவர்கள் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. :)

    ReplyDelete
    Replies
    1. சற்றே மாறுபடுகிறேன் வியசன், உங்களிடம் இருந்து..

      ஏனோ.. நீங்கள் இதில் இறுக்கமாக இருக்கிறீர்கள் - //இலங்கை முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல, ஏனென்றால் அவர்கள் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை//
      முந்தைய பதிவிலும் இப்படியே சொன்னீர்கள்:) சில தலைவர்கள் தவறுவது உண்டு தான்! ஆனால், அவர்களின் புரியாமைக்காக, நம் மொழியாளர்களை நாமே ஒதுக்கிடல் கூடாது!

      //தமிழன் என்ற அடையாளம் பிறப்பால் வருவது//

      வீரமாமுனிவர் = தமிழுக்குச் செய்யாத கொடையா?
      (அல்லது)
      பிறப்பால் "தமிழ்" என்று ஆன சுப்ரமணியம் சுவாமி = தமிழுக்குச் செய்யாத தீங்கா?

      வை.கோ போன்ற தலைவர்களின் பிறப்பு, முன்னோர் பிறப்பெல்லாம் காரணம் காட்டித், தமிழர் அல்லர் என்றொரு கூட்டம் இங்கே வாதாடும்:)
      தாங்கள் அப்படிப்பட்டவர் அல்லர் என்று எனக்குத் தெரியும்! எனினும் சற்று இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ளுமாறு, நட்புடன் வேண்டுகிறேன்:)

      அழகார் ஈழத் தமிழ்ப் பின்னூட்டங்களுக்கு நன்றி!


      Delete
  5. கேஆரெஸ்,,

    தமிழை நீர் விட்டாலும் ,தமிழ் உம்மை விடாது :-))

    தமிழுக்கு இப்படி உம்மை போல ஊருக்கு ஒரு நாலு பேரு இருந்தா ,அது பாட்டுக்கு பொழைச்சுக்கிடக்கும்.

    //Group சேர்ந்து கொண்டு ஒதுக்கி வைத்தல்:
    = இன்றைய Twitter மட்டுமல்ல!//

    இதெல்லாம் வேற நடக்குதா, கெரகம் இவனுங்களையே இங்கே இருந்து தொறத்தி விட்டு தான் அங்கே போனோம்னு மறந்துட்டாங்க போல :-))

    #வ.வுசி இந்த புத்தகங்களை போட தனது மனைவியின் நகைகளை எல்லாம் அடகு வைத்தார்/விற்றாராம். அக்காலக்கட்டத்தில் வ.உ.சிக்கு சிறை சென்றதாக பென்ஷன் தரோம்னு காங்கிரஸ் சொன்னப்போ நான் என்ன சோத்துக்கு இல்லாம போயிட்டனானு , சொல்லிட்டு எனது நூல்களை வெளியிட உதவுங்கள்னு தான் சொன்னதாக ஒரு முறைப்படித்துள்ளேன்.

    உண்மையில் அக்கால கட்டத்தில் சோத்துக்கும் கஷ்ட ஜீவனம் தானாம், காங்கிரஸ் கட்சியினரே கண்டுக்கொள்ளாமல், வறுமையில் வாடியே மறைந்து போனார்.

    # பிராஜெக்ட் மதுரை திட்டத்தில் ,கைநிலை,இன்னிலை இரண்டுமே பதினென் கீழ்கணக்கு என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. he he..
      ஒரு வாய்மொழி-ன்னாலும் திரு வாய்மொழியாச் சொன்னீங்க:) தமிழ் என்னை விடாது தான்:))

      இணையத்தில் இஃதோர் சாபக்கேடு! குறிப்பா ட்விட்டரில்...

      பெரும் எழுத்தாளர்களை நட்பாக்கிக் கொண்டு, அவர்கள் ஆசியுடன் வலம் வருவது போல்.. தமிழுக்கு எதிரான பல நச்சு விதைகளை நடும் வழக்கம், இப்பல்லாம் பரவிப் போச்சு:(

      இசுடாலின் கேஸுப்பா -ன்னு மீண்டும் மீண்டும் சொல்லி, ம்க்களிடையே ஒரு விதத் தமிழ் ஒவ்வாமையை உருவாக்குவதும்,
      "ஸந்தேஹம்", "ஸ்வதந்த்ரம்" -ன்னுல்லாம் எழுதி எழுதிப் பரப்பும் முயற்சிகள் அபாரம் போங்க!:)

      இதுக்கு, "தமிழ் இலக்கணம்" சொல்லித் தரேன் -ன்னு, தமிழை வைத்தே தமிழின் கண்ணைக் குத்தும் முயற்சி, இந்தச் சோ ராமசாமிக்களுக்கு!

      Sorry to say - இலவசக் கொத்தனார் is one of the leading agent for this!

      Delete
    2. உண்மை தான்!
      Pensionக்கு வ.உ.சியை அலைக்கழித்த காங்கிரஸ்!:(
      அப்பவும், தன் நூல்களுக்குத் தான் உதவி கேட்டார், தன் குடும்பத்துக்கு அல்ல!

      வ.உ.சி க்குத் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் திரட்டிய நிதி.. காந்தியடிகள் வழியாகச் சற்றுத் தாமதமாகத் தான் கிடைத்தது;
      அதற்குள் வ.உ.சி மிக்க அலைக்கழிந்து போய் விட்டார்;

      அ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த "காந்தி-வ.உ.சி கடிதங்கள்" ஒரு முறை படியுங்கள்! வ.உ.சி எந்த அளவுக்கு நொடிந்து போனார் -ன்னு அவர் வாயாலேயே கேட்க முடியும்:(

      பின்னாளில், பெரியாரிடம், மகனுக்குச் சிபாரிசு கடிதம் கேட்கும் அளவுக்குப் போனது, வ.உ.சி யின் வறுமை/வெறுமை!
      பெரியாரே, மிகவும் கண் கலங்கிப் போய் விட்டாராம்

      Delete
    3. //# பிராஜெக்ட் மதுரை திட்டத்தில் ,கைநிலை,இன்னிலை இரண்டுமே பதினென் கீழ்கணக்கு என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது//

      தன்னார்வலர், சிலர் மட்டுமே இப்படிச் செய்கிறார்கள்;

      ஆனால் officially, even in Tamilnadu Govt records, இன்னிலை = பதினெண் கீழ்க்கணக்கு நூல் அல்ல!:(

      See wikipedia too! http://ta.wikipedia.org/wiki/இன்னிலை
      How cunningly they have written without any evidence! Tamizh ilakkiyam is in their clutches:(

      Delete
    4. கண்ணபிரான்:
      உங்கள் அளவிற்கு தமிழில் எனக்கு அறிவில்லை! விக்பீடியாவில், நீங்கள் எந்த எழுத்தையோம் challenge செய்து மாத்தலாம்! நிறைய அறிஞர்களுக்கு இது தெரிவதில்லை; அதே சமயம் தமிழை வைத்து தமிழன் கண்களில் குத்தும் நபர்களுக்கு இடைச்செருகல்கள் செய்வதே வேலை.

      இன்று கூட ஒரு தமிழ் அறிஞர் பற்றி விக்கிபீடியாவில் பார்த்தேன். நீங்கள் அவ்ற்குக்க்கு எளிதுன்க்சல். நீங்களே மாத்துங்கள்; அவர்களால் முடிந்தால் உங்கள் கூற்றை challenge செய்து மாற்றட்டும்!

      Delete
    5. KRS,

      //இதுக்கு, "தமிழ் இலக்கணம்" சொல்லித் தரேன் -ன்னு, தமிழை வைத்தே தமிழின் கண்ணைக் குத்தும் முயற்சி, இந்தச் சோ ராமசாமிக்களுக்கு!

      Sorry to say - இலவசக் கொத்தனார் is one of the leading agent for this!//

      தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும், நமக்கும் இணையம் வர தொல்லைகள் அதிகமாகிடுச்சு அவ்வ்!

      ஓரளவு ஊகித்திருந்தேன் , ஆனால் நீங்கள் தான் சாத்வீகம் ஆச்சே உங்களோடு முட்டிக்க மாட்டார்னு நினைச்சேன், நானெல்லாம் முட்டிக்கொண்டு ரொம்ப காலமாச்சு, அப்பவே எனது பின்னூட்டங்கள் கூட வெளியிட மாட்டார்,ஏன் எனில் அவர் விடும் பீலாக்களை சுட்டிக்காட்டியதால் :-))

      என்ன செய்ய பிரபலங்களின் மடியில் இருக்கும் நாய்க்குட்டிகள் குலைக்கத்தான் செய்யும் :-))

      நாலு பேரு ஒன்னுக்கூடிட்டா "தமிழ்சங்கமே" கூடிவிட்டதாக நினைத்து தமிழை மனம் போனபடி திருத்தப்பார்க்கிறார்கள், கேட்டால் நாங்கலாம் மரத்தடியில தமிழ் வளர்த்த புலவர்கள்னு சொல்லுவாங்க ,அவ்வ்!

      அவங்க கிடக்கட்டும் வழக்கம் போல உங்க "தமிழ் கச்சேரிய" நடத்துங்க, கைத்தட்ட நாங்களாம் இருக்கோம்ல!

      Delete
  6. முதன் முதலாக இட ஓதுக்கீட்டை ஆதரித்த தேசியவாதி வஉசி-தானாம். ஆக பிராமண எதிர்ப்பு ஒருபுறம், திராவிட மூலமான வெள்ளைகாரனுக்கு ஜால்ரா அடித்த ஜஸ்டிஸ் கட்சி எதிர்ப்பு என இருபுறமும் எதிர்ப்பினை சம்பாதித்தவர் வஉசி. அவரால் மாமா என அன்புடன் அழைக்கபட்டவன் பாரதி. "வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் மன்னனென மீண்டான் என்றே
    கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ" என அவன் எழுதியது பொய்யாய் பழங்கனவாய் போனது சோகம்தான்.

    பார்ப்பன மேன்மையை எதிர்த்ததால் புறக்கணிக்கப்பட்டவர் வஉசி. சாதி பார்க்காமல் 'பிள்ளைவாள்' வீட்டில் சோறு கேட்டு உண்டவனாக இருந்த போதும், பார்ப்பனாய் பிறந்த ஒரே காரணத்திற்காக இழிவு செய்யப்படுபவன் பாரதி. இருவருமே இந்த சாதி கொண்டலையும் பாழாய் போன தமிழ் சமூகத்தால் வஞ்சிக்கபட்ட தமிழ் தொண்டர்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நந்தவனத்தான்...
      பாரதியும் துன்பப் பட்டவன் தான்! ஆனா வ.உ.சி அளவுக்குக் "கொடுந்துன்பம்" இல்லை!

      //பிராமண எதிர்ப்பு ஒருபுறம், திராவிட மூலமான வெள்ளைகாரனுக்கு ஜால்ரா அடித்த ஜஸ்டிஸ் கட்சி எதிர்ப்பு என இருபுறமும் எதிர்ப்பினை சம்பாதித்தவர் வஉசி//

      உண்மையே!
      ஆனால் ஜஸ்டிஸ் கட்சி, கனவான்கள் கையில் இருந்து, பெரியாரிடம் சென்ற போது...
      பெரியாரிடம் உதவியும் நன்றி பாராட்டி நின்றவர் வ.உ.சி; திரு.வி.க அவர்களும் அப்படியே!
      பாடுபட்டு உழைத்த தேச பக்தி எல்லாம் காணாமல் போய், கடைசியில் தமிழ் மானத்தில் வந்து நின்றது!

      Delete
  7. //தமிழுக்கு இப்படி உம்மை போல ஊருக்கு ஒரு நாலு பேரு இருந்தா ,அது பாட்டுக்கு பொழைச்சுக்கிடக்கும்.//

    வவ்வால் சொன்னதை அப்படியே வழிமொழிகின்றேன். (சரியா எழுதிட்டேனா அந்த ஒத்தை வரியை!)

    ReplyDelete
    Replies
    1. வாங்க டீச்சர்:)

      தமிழால் நான் தான் பொழைச்சிக் கிடக்குறேன்! பல துன்பங்களிலும் = தமிழே மருந்து+அமிழ்தம்:)

      Delete
  8. நூல்களைப் பற்றியும், நாட்டை மட்டும் மல்ல, மொழியையும் தூக்கிப்பிடித்த தமிழன் பற்றி பலவன அறிந்துக் கொண்டேன். வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எந்த முன்முடிவும் இன்றி, இப்படி நீயே சொன்னதற்கு நன்றி ஓஜஸ்:)

      Delete
  9. உங்கள் எழுத்து நடை வித்தியாசமாக உள்ளது. என்றாலும் இன்னும் சற்று எளிமையாக இருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
    வ.உ.சி. புறக்கணிப்பு வருத்தத்தைத் தருகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே ரொம்ப Dilute பண்றேன்-ன்னு பேச்சு:)
      இருந்தாலும், நீங்க சொன்னபடி, இன்னும் எளிமையாக்கப் பாக்குறேன் முரளிதரன்!
      தமிழ்ப் பழம் பாடல்கள் எல்லாம் ஊடால வருவதால் அப்படியொரு தோற்றமோ? அதான் அவற்றை கருப்பு அல்லாது, வேறு வண்ணத்தில் கொடுப்பது, எப்பவுமே:)

      Delete
    2. இல்லை கேஆர்எஸ்..குறிச் சொல், கேலி, என்று நினைத்து நீங்கள் எழுதுவது பலமுறை படிப்பவர்களைக் குழப்புகிறது.

      நேரடியாக,குறுகத் தரித்து எழுதுவதே நல்ல எழுத்து. குறளிலிருந்து, சுஜாதா வரை இதைக் கையாண்டு வென்றவர்கள் பலர்.

      ஏற்கனவே இதைப் பற்றி ஒருமுறை உங்களிடம் சொல்லியிருக்கிறேன்...

      மற்றபடி எப்போதுப் போல், மிக நல்ல பதிவு.

      Delete
  10. துளசிகோபால் அவர்களே,

    //வவ்வால் சொன்னதை அப்படியே வழிமொழிகின்றேன். (சரியா எழுதிட்டேனா அந்த ஒத்தை வரியை!)//

    ஆஹா நான் சொன்னதையும் வழி மொழியிறாங்களே, நானும் பின்னூட்டம் போடக்கத்துக்கிட்டேன் !!!

    "உலக சுற்றுலாப்பதிவர்" நீங்க எழுதுனா தப்பா போயிடுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. டீச்சர், இன்னும் நிலவுச் சுற்றுலாக்குத் தான் போகலை:)
      மத்தபடி, உலகம் அவங்க காலடியில்:))

      Delete
  11. அருமை ரவி. தமிழனுடைய ஒற்றுமை உலகறிந்ததாயிற்றே.

    …எனக்கு ஒரு சந்தேகம். வ.உ.சி போன்ற நேர்மையானவர்களை மட்டும் உங்க கடவுள் ஏன் இப்படிப் பாடாய் படுத்துகிறார்.

    ReplyDelete
    Replies
    1. காரணம், கடவுளுக்குத் தமிழர்களைப் பிடிக்காது குட்டிப் பிசாசு!

      Delete
    2. //காரணம், கடவுளுக்குத் தமிழர்களைப் பிடிக்காது குட்டிப் பிசாசு!//

      ஞானம் அவர்களே,

      அப்போ மொர்கன கட்வுளாவே நின்க்கலையா, அவுர் ரொம்ப்ப நெல்ல டமில் கட்வுள்னு கே.ஆர்.எஸ் நம்பிக்கிட்டு இருக்கார் அவ்வ்!

      எதுக்கும் ஒருக்கா முருகன் சூசு கடையில ஒரு கிளாஸ் ஞானப்பழ சூசு வாங்கி குடிச்சுப்பாருங்க :-))

      "அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
      தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே"

      (டொட்டடொயுங் ..தான...தனனான்னா..தானா)

      சூலமங்கலம் சிஸ்டர்ஸே தெய்வம்னு சொன்னப்பொறவு என்னா டவுட்டு?

      Delete
    3. வணக்கம் குட்டிப் பிசாசு..
      தமிழ் ஒற்றுமை பத்தி என்ன சொல்ல:(

      @ஞானப்பிரகாசன்
      ஆனா, தமிழர்களுக்குக் கடவுளைப் பிடிக்குமே!:)) சங்கத் தமிழிலும் கடவுள் உண்டு, ஆனால் இயற்கையாய்.. புராணச் சடங்காய் அல்ல!

      @வவ்வால்
      //அவுர் ரொம்ப்ப நெல்ல டமில் கட்வுள்னு கே.ஆர்.எஸ் நம்பிக்கிட்டு இருக்கார் அவ்வ்!//

      he he!
      I don’t see Murugan as கடவுள்; Hez my dearest lover - best buddy அவ்ளோ தான்:)
      சங்கத் தமிழர்களுக்கும், முருகன் = ஒரு குடி காத்த முன்னோர்/ நடுகல் தொன்மமே!

      ஆறு முகம், பன்னிரெண்டு கை, ஞானப் பழம், ஒளவையார் லடாய், வீரபாஹூ, தேவயானை பாணிக்கிரஹணம்
      = எல்லாம் so called தமிழ்ப் பண்டிதாள், தமிழிலேயே செய்த "கப்சா" தான்:))

      Delete
  12. //எல்லாப் பண்டிதர்களும் இந்தப் பக்கமே திரண்டு விட்டனர்; வ.உ.சி அம்போ!!
    = Power of "Networking", even in Tamizh:(///

    இக்காலத்தில் Power of "Networking" க்கு தமிழ்மணத்தை விட வேறொரு சிறந்த உதாரணம் இருக்கவே முடியாது. :)

    ReplyDelete
    Replies
    1. he he
      வாசகர் networking வேறு; அறிஞர் networking செய்து, படைப்பையே அழிப்பது/மறைப்பது வேறல்லவா?:)

      Delete
  13. உள்ளத்தை உருக்கும் பதிவு! கேள்விப்படாத வரலாறு! நன்றி ஆசிரியரே!

    ReplyDelete
    Replies
    1. //கேள்விப்படாத வரலாறு//

      மறைக்கப்பட்ட வரலாறு:)
      I wrote this post last year itself, But twitter politics, had to stay away for 10 months:)

      Delete
  14. நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது.
    உண்மையில் இதை மறைக்கப்பட்ட வரலாறாகவே பார்க்க முடிகிறது.
    சில தனிப்பட்ட சூழல்களால், பதிவை உடனே படிக்க இயலவில்லை. பொறுத்தருள்க.

    பதிவை சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //உண்மையில் இதை மறைக்கப்பட்ட வரலாறாகவே பார்க்க முடிகிறது//

      ஆமாம் தமிழ்! "வ.உ.சி" கண்டெடுத்த இன்னிலை என்பதே மறந்து போன ஒன்றாகி விட்டது:(
      உ.வே.சா கண்டெடுத்தது மட்டுமே இன்றும் பரவலாகப் பேசப்படுகிறது;

      Delete
  15. ocavijay..
    sorry, i accidentally deleted your comment, while reading it from blackberry

    Here is the copy of your comment:)

    ocavijay has left a new comment on your post "வ.உ.சி -யை நொறுக்கிய "தமிழ்ப் பண்டிதர்கள்"!":

    Nalla padhivu, yen paarvayil, Va.Vu.Si - thannai 'Thamizhan' yendro, 'Dravidan' yendro, 'Velaalan' yendro oru mugamoodi pottu - vattathirkkul vaazhavillai - thannai indha Baratha Nattin maindhanaaga karudhi - 'Vande Maataram' yennum sollaye thaaragamaaga yetravar - Avarin vaazhkayin indha soga sambavangal, avar mel ulla mariyaadhayai uyarthi vittana - Vaazhga Va.Vu.Si - Valarga Maanudam. Mahakavi Bharathi - Va.Vu.Si - ivargalin natpu ondre podhum - Va.Vu.Si yin pirivugal thaandiya maanudaththirkku yeduththuk kaattaaga.

    Publish
    Delete
    Mark as spam

    ReplyDelete
  16. KRS..இப்படி க்ரூப் செய்தது யாரு? பதினென்கீழ்கணக்கு, பத்துப்பாட்டு எல்லாம்?

    ReplyDelete
    Replies
    1. எதுக்குக் கேக்குறீங்க ரசனையாரே?:)

      Delete
    2. சங்கத் தமிழ்க் கவிதைகள் = மன்னனுக்கு அடங்கியவை அல்ல!
      "பலவும்" அவையில் பாடப்பட்டவை அல்ல! சில மட்டுமே அவைக்களக் கவிதைகள்!

      பலவும், வெவ்வேறு ஊர்களில், குடும்பச் சூழல்களில் பாடப்பட்டவை;

      அதன் சுவை கருதி, தாங்கள் அறிந்த வரை, தாமாகவே "தொகுக்க" முன் வந்தனர், சில அறிஞர்கள்...
      அப்படித் தொகுத்த முதல் நூல் = எட்டுத் தொகை; பேருலயே "தொகை" இருக்கு பாருங்க!

      இதில் உள்ள Sub நூல்கள் (அகநானூறு/ புறநானூறு etc) = அவையும் தொகுக்கப்பட்டவையே!
      For ex: புறநானூறு = in turn, is another collection, not a single author!

      இப்படி, எட்டுத் தொகை = Not a single man show; Team Work; So No bias!
      -----

      பத்துப் பாட்டு/ பதினெண் கீழ்க்கணக்கு = பின்னர் வந்தவை! கடைச் சங்க காலம்/ சங்கம் மருவிய காலம்!

      பத்துப் பாட்டில் உள்ள Sub நூல்கள் ஒவ்வொன்றும் (மதுரைக் காஞ்சி, முருகாற்றுப்படை etc) = ஒவ்வொரு Single man show!
      For ex: முருகாற்றுப்படை by நக்கீரர்; மதுரைக் காஞ்சி by மாங்குடி மருதன் etc..

      குறிப்பா, அரசன் சொல்லியோ, அரசனின் நாடு என்ற பொருளிலோ பாடப்பட்டவை;
      -----

      பதினெண் கீழ்க்கணக்கு இன்னும் பிந்தி: பலவும் நீதி நூல்கள், Moral Science:)

      முக்கியமான குறிப்பு: நல்லாக் கவனிங்க;
      * இயற்கை/ குடும்பம்/ அகம் என்றே இருந்த காலம் = எட்டுத் தொகை;
      * கால மாற்றத்தால், மன்னர்கள்/ புறம் -ன்னு மிகுந்து விட்டது = பத்துப் பாட்டில்:)

      புராணக் கலப்புகள்… இப்போ தான்!
      * அதன் பின்னர் “நீதி போதனை” துவங்கியாச்சி = பதினென் கீழ்க்கணக்கு
      ஏன்னா புராணம் வந்த பின் அறம் குறையுது:) – வாழ்வியல் மாற்றங்கள்:)
      -----

      எட்டுத் தொகை போலொரு குடும்பத் தொகை வரலீன்னாலும்...

      Atleast, Singleman show-வையாச்சும் தொகுத்து வைப்போமே -ன்னு வந்தவை தான் பத்துப்பாட்டும், பதினெண் கீழ்க்கணக்கும்!

      இவற்றைத் தொகுத்தது = மன்னர்களின் சங்கத்தில் அமர்ந்திருந்த அறிஞர்களே!
      பொதுமக்கள் அவை ஆதலால், பலர் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டு, தொகுத்த நூல்கள்!

      நக்கீரர் = sangam official leader status பெற்றிருந்தாலும்,
      மக்களின் அவை = நக்கீரர் பாடிய நெடுநல்வாடையில், பாண்டியனின் வேப்பமரச் சின்னத்தை மறைமுகமாக் காட்டியதால்..
      அது அகப்பாடல் தகுதி இழந்து, புறப்பாடல் -ன்னு சொல்லும் அளவுக்கு democracy இருந்த தமிழ் அவை!

      இதான், "தொகுப்பின்" simple screenshot, for your easy understanding:)






      Delete
  17. வ.வு.சி. அவர்களுக்கு நேர்ந்த துன்பங்கள் அறிந்துள்ளேன். ஆயின், இப்பதிவு படித்த பின் நமது தமிழ் மக்களிடம் இருக்கும் ஒற்றுமை? பற்றி அறிய முடிகிறது. உங்கள் பணி மேன் மேலும் தொடர முருகன் அருளட்டும்.

    ReplyDelete
  18. மிகவும் அருமையான பதிவு. சில சுதந்திர வீரர்களின் வாழ்கையை பற்றி உணரும்போது மனது மிகவும் வலிக்கிறது.. இந்த வரலாற்று வில்லத்தனதில் ஒரு நல்ல நேர்மையான முயற்சி தோற்கடிக்கப்பட்டு மறைக்க மட்டும் போது ரொம்ப ஆத்திரமாக வருகிறது..
    மிகவும் நன்றி நண்பா

    ReplyDelete
  19. கண்ணபிரான் மற்றும் தமிழ் அறிஞர்கள், முனைவர்களுக்கு:
    உங்கள் அளவிற்கு தமிழில் எனக்கு அறிவில்லை! ஆகவே...மேலே சொன்ன அன்பர்களுக்கு என் விண்ணப்பம்.

    விக்கிபீடியாவில், நீங்கள் எந்த எழுத்தையும் 'challenge' செய்து மாத்தலாம்! நிறைய அறிஞர்களுக்கு இது தெரிவதில்லை; அதே சமயம் தமிழை வைத்து தமிழன் கண்களில் குத்தும் நபர்களுக்கு இடைச்செருகல்கள் செய்வதே வேலை.

    யார் வேண்டுமானலும், ஒருவர் கூற்றை நிராகரிக்கலாம்! நீங்களே மாத்துங்கள்; அவர்களால் முடிந்தால் உங்கள் கூற்றை challenge செய்து மறுபடியும் மாற்றட்டும்!

    விக்கிபீடியா பலருடைய நேரம் உழைப்பு எல்லாம் அன்பளிப்பு: அதே சமயம் விக்கிபீடியாவில் வருவது எல்லாம் உண்மையல்ல! சிலர் பொய்களையே அரங்கேற்றம் செய்கிரறாக்கள்; இவர்களுக்கு இதே வேலை! தமிழை சிதைப்பதே வேலை!

    இந்த பொய்களை எதிர்க்க நேரம் காலம் நம்மவர்களுக்கு இல்லாமல் போவதை அவர்கள் உபயோகப்படுத்திக் கொள்வதால், அவர்கள் பொய்கள் உன்ணமையாகிரது!

    இதை தடுக்க. நம் தமிழ் அறிஞர்கள், முனைவர்கள் முன் வரவேண்டும்; வருமுன் காப்போன் ஆக இல்லாவிட்டால்...விக்கிபெடியாவில் இருப்பது எல்லாம் உண்மை என்று நம் மக்கள் நம்பி...பொய்கள் உணமையாக உலாவரும்!

    இந்த நிலைமை நல்லதல்ல...

    ReplyDelete
  20. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  21. KRS,

    தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_15.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP