Showing posts with label தமிழறிஞர்கள். Show all posts
Showing posts with label தமிழறிஞர்கள். Show all posts

Friday, September 06, 2013

வ.உ.சி -யை நொறுக்கிய "தமிழ்ப் பண்டிதர்கள்"!

இன்று Sep 5;
(ஹிந்து ஞான வித்தகர்: Dr. ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான) ஆசிரியர் தினம்..
ஆனால்... அது  மட்டுமே அல்ல!

கல்வியும்/ செல்வமும் ஒருங்கே இருந்தும்,
உடம்பால் பாடு எடுத்த தியாகச் செம்மல்..
தமிழறிஞர் = "வ.உ.சி" | அவர்களின் பிறந்த நாளும் கூட (Sep 5)!

என்னாது... வ.உ.சி = தமிழறிஞரா??? ஆமாய்யா ஆமாம்!
* வ.உ.சி = ஒரு தேச பக்தன் -ன்னு மட்டுமே பலருக்கும் தெரியும்!
* ஆனா, வ.உ.சி = ஒரு தமிழ் அறிஞன் -ன்னு தெரியுமா?

Only very few ppl. know;
Why? | Thatz the sad story of tamil media world:(

இன்று, பார்க்கப் போவது, ஒரு தமிழ்ப் "பஞ்சாயத்து":)
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி  vs  பண்டிதர் திரு. அனந்தராம ஐய்யர்




"ஐய்யர்" -ன்னு எழுதிட்டதாலேயே, Twitter பெரிய மனுஷாள், என்னை நோக்கிப் படையெடுக்க வேணாம்-ன்னு கேட்டுக்கறேன்:)
ஏற்கனவே 10 மாதங்கள் ஒதுங்கி இருந்து, இப்ப தான் மீண்டு வந்துள்ளேன்...

Group சேர்ந்து கொண்டு ஒதுக்கி வைத்தல்:
= இன்றைய Twitter மட்டுமல்ல!
= அன்றே, வ.உ.சி யும் பட்டிருக்காரு, இலக்கணத் தமிழ் வாத்திகளின் கையில்!

கருத்து வேற, மனிதம் வேற!
* நான் சொல்வது = தமிழ்க் கருத்து மட்டுமே!
* தனி மனிதத் தாக்குதல் = ஒரு போதும் நான் அறியாதவன்!

"KRS-ஐ ஒழிச்சிக் கட்டுங்கோ; பூச்சி மருந்து அடிச்சி ஒழிங்க"
- இது போன்ற "இட்லிவடை வாசகங்கள்" என் வாயில் வரவே வராது:(
பூச்சி மருந்து அடிச்சி, "என் சாவு"
= Twitter பெரிய மனுஷாள் ஒங்க கையில் இல்லை!

அது இன்னொருவன் கையில்!!
இதன் "தர்ம-நியாயங்களைத்" திருமுருகன் தாளில் வைத்து விடுகிறேன்;

உண்மை, உறுத்து வந்து ஊட்டும்!
அதுவும் தரவோடு வந்தா? = தாங்க முடியாது தான்:)))
* சொல்வது என்ன-ன்னா:  தமிழுக்கு நேர்ந்த கொடுமைகள்!
* என் ஏக்கம் = தமிழ் ஏக்கம்:  ஐய்யர் என்றல்ல! கருணாநிதி செய்தாலும் வரும்!

தமிழை = "டுமீல்" என்று எள்ளி விட்டு,
அதே தமிழில் இலக்கணப் பாடம் எடுக்கும் Twitter "வாத்திகள்" யாராயினும் = எனக்கு இதே ஏக்கம் தான்!

இவர்களுக்கு, தமிழ் = "உணர்வுப் பூர்வமானது" அல்ல!
வெறும் Rulebook; ஆடு-களம், அவ்வளவே! உள்ளத்தின் ஆழத்தில் = எள்ளலே!:(
இவங்களை விட்டுருவோம்; மற்றபடி...

தமிழுக்கு "மனதார நல்லது நினைப்போர்"
= யாராயினும்.. 
= பிராமணர்கள் உட்பட.. அனைவரும் தமிழர்களே!

தமிழ் = பிறப்பால் வருவது அன்று! உணர்வால் வருவது!

உ.வே. சாமிநாத ஐயர் என்றொரு தமிழ்த் தாத்தா; அவர் திருவடிகள் என்றும் எனக்குத் துணை!
Enough of this digression (or) Introduction..
Let's go & see வ.உ.சி-யின் தமிழ்ப் பஞ்சாயத்து:)



எட்டுக் கால் பூச்சிக்கு = எத்தினி கால்?
மாற்றிக் கேக்குறேன்; "Spider Man"-க்கு எத்தனை கால்?:)

18 கீழ்க்கணக்கு = மொத்தம் எத்தனை நூல்கள்?:)

18 கீழ்க் கணக்கில் = 18 நூல்கள்!
திருக்குறளே மிக்க பிரபலம்
ஆனா, ஒரே ஒரு நூலில் மட்டும் = "பஞ்சாயத்து"

அந்த 18ஆம் நூல் எது?
= இன்னிலையா? கைந்நிலையா?
= வ.உ.சி vs. அனந்த ராம ஐய்யர்

தமிழில், "தனிப்பாடல்கள்" -ன்னு ஒரு வகை இருக்கு!
வெண்பா  யாரு எழுதுனது-ங்கிற வெவரமெல்லாம் இருக்காது; திடீர்-ன்னு தோன்றி உலாத்தும்!
வெறும் சுவையே அன்றி, நம்பத் தகுந்த ஆதாரம் அல்ல!

எட்டுத் தொகை நூல்கள் என்னென்ன? ஒரு "வெண்பா" இருக்கு-ய்யா!
 "நற்றிணை நல்ல குறுந்தொகை" -ன்னு தொடங்கும்;
எட்டுத் தொகையில் என்னென்ன நூல்-ன்னு பல பேருக்குத் தெரியும்;
ஆனா, இந்தத் தனிப்பாடல் = just a memory tip;

அதே போல், 18 கீழ்க் கணக்குக்கும் ஒரு தனிப்பாடல்!
= ஆனா, அதுல தான் பிரச்சனையே!:) நீங்களே வெண்பாவைப் பாருங்க..

நாலடி, நான்மணி, நா நாற்பது, ஐந்திணை, முப் 
பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம், 
இன்னிலைய காஞ்சியோடு, ஏலாதி என்பவே, 
கைந்நிலைய வாம் கீழ்க் கணக்கு!

எவன் எழுதித் தொலைச்ச வெண்பாவோ? List போடுங்க பார்ப்போம்!:)
நாலடியார், நான்மணிக்கடிகை  2   
நா நாற்பது: (இன்னா, இனியவை, கார், களவழி)  4
ஐந் திணை: ஐந்திணை 50, திணைமொழி 50, ஐந்திணை 70, திணைமாலை 150  4
முப்பால் (திருக்குறள்)  1
திரிகடுகம், ஆசாரக் கோவை  2
பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம்  2
முதுமொழிக் காஞ்சி, ஏலாதி  2
17

Already 17 taken! ஆனா, வெண்பா-வில் இன்னும் ரெண்டு Balance இருக்கு!:)
இன்னிலைய  -ன்னும் இருக்கு;
கைந்நிலைய -ன்னும் இருக்கு;

ஆனா, கூட்டினா = 18 வரணுமே! 
17 + 2 = 18 ???

எந்தப் பொலவன்-யா Basic Maths தெரியாம, "வெண்பா" பாடி, உயிரை வாங்குறான்?:)
சங்கம் மருவிய காலம்; அந்த 18ஆம் நூல் எது? = இன்னிலையா? கைந்நிலையா??

அதாம்பா இது -ன்னு வாழைப்பழத் தீர்ப்பு சொல்ல முடியாது:) ரெண்டும் வெவ்வேறு நூல்கள்!
* வ.உ.சிதம்பரம் பிள்ளை சொல்வது = இன்னிலை;
* இ.வை. அனந்தராம ஐய்யர் சொல்வது = கைந்நிலை;



தமிழ்த் தாத்தா  உ.வே.சா ஓலை திரட்டினாரு -ன்னு பலரும் பேசிப் பேசி, அதுவே நிலைத்து விட்டது அல்லவா!
ஆனா அவரைப் போலவே, அவருக்கும் முன்பே = ஈழத் தமிழர் சி.வை. தாமோதரம் பிள்ளை கேள்விப்பட்டு இருக்கீயளா?

* உ.வே.சா  = இலக்கியம் திரட்டினாரு-ன்னா,
* சி.வை.தா = இலக்கணம் திரட்டினாரு!

தொல்காப்பியம் முழுசும் திரட்டினாரு;
இன்றுள்ள பல இலக்கண நூல்கள், உரை நூல் (சேனாவரையர்/ நச்சினார்க்கினியர்), கலித்தொகை, சூளாமணி -ன்னு...
சுவடி சுவடியாத் தேடிப் பதிப்பித்தவர் = சி.வை.தா

இவரும் தமிழ்த் தாத்தா தான்!
ஆனா பொது மக்களுக்குத் தெரியாது; ஏன்-னா பரப்புரை இல்லை:(

ஒடனே, உ.வே.சா-வை நான் குறைத்து மதிப்பிடுவதாக கும்மி அடிக்க வேண்டாம்:)
என்றும் அவர் = நம் தமிழ்த் தாத்தா!
சொல்ல வருவது என்ன-ன்னா: ஒன்றை மட்டுமே பரக்கப் பேசும் நிலை:(
சி.வை.தா -வும் = தமிழ் தாத்தா! மனத்தில் இருத்துவோம்!

உ.வே.சா / சி.வை.தா அளவுக்கு இல்லீன்னாலும்,
நம்ம வ.உ.சி யும், கொஞ்சமா ஓலை திரட்டி இருக்காரு; தெரியுமா??

* ஆனா, வெளியே போய், அதிகம் திரட்ட முடியலை = சிறை வாசம்;
* செக்கு இழுத்து வெளி வந்த பின்போ = நோய் வாசம்!

18 கீழ்க் கணக்கு:
 வ.உ.சி காட்டிய ஓலைச் சுவடிகள் = இன்னிலை!
ஆனால்.... ஆனால்.... ஆனால்?


இ. வை. அனந்தராம ஐய்யர் = ஒரு தமிழ்ப் "பண்டிதர்" / ஆசிரியர்!
நட்பு வட்டச் செல்வாக்கு மிக்கவர்;

இவரும், சில சுவடிகள் வச்சிருக்காரு;
மொத்தம் 45 பாட்டு;
அதிலே 18 பாட்டு = பாதி தான் இருக்கு! ஆங்காங்கு சொற்களே இல்லை;
சம்ஸ்கிருதச் சொல்லும் அதிகம்!

இவரைச், சேது சமஸ்தான வித்வான், உ.வே. இராகவ ஐயங்கார் பலமாக வழிமொழிகிறார்; அம்புட்டு தான்....
எல்லாப் பண்டிதர்களும் இந்தப் பக்கமே திரண்டு விட்டனர்; வ.உ.சி அம்போ!!
= Power of "Networking", even in Tamizh:(

உ.வே. இராகவ ஐயங்கார் = பெரும் அறிஞர் என்பதையும் மறைக்காது சொல்லி ஆகணும்!
கம்பனில் குளித்தவர்; "வடமொழிக் காளிதாசனை"த் தமிழுக்குள் கொண்டு வந்தவர் = "அபிஞான சாகுந்தலம்"

* ஒரு புறம் =  சிறை விட்டு வெளியே வந்து.. நொடிஞ்சி போன வ.உ.சி
* மறு புறம் =  சமஸ்தான வித்வான்கள் & தமிழ்ப் பண்டிதர் குழாம்

ஐய்யய்யோ, பத்திக்கிச்சே; உம்ம்... யாரு சொல்வது சரி?

தனி மனிதப் போக்கு தவறு..
* "யாரு?" -ன்னு வேணாம்!
* "எது?"    -ங்கிற கேள்வி கேட்போம்! => எது சரி??


இரண்டு பக்கமும், ஒரேயொரு தெளிவு இல்லை!

தனிப்பட்ட சுவடி எல்லாஞ் சரி தான்;
ஆனா.. 18 கீழ்க் கணக்கிலே, அந்தச் சுவடி சேர்த்தி என்பதற்கான ஆதாரம்?
= யாருக்குமே கிடைக்கலை;

வ.உ.சி  மட்டும் அரும்பாடுபட்டு, gave an "indirect" proof
= தொல்காப்பிய நூற்பா 113;
= அதுக்கு, தம்மிடம் உள்ள ஓலைச் சுவடியின் 5ஆம் செய்யுளை, மேற்கோள் காட்டியுள்ள பண்டைய உரையாசிரியர்;

யாப்பருங்கல விருத்தி உரையிலும்,
இன்னிலை 2ஆம் செய்யுள், மேற்கோள் காட்டப்பட்டு இருக்கு;
ஆனால்,  தரவு இருந்தும் = அன்றைய "செல்வாக்கு"?

** பதிப்பகம்/ தமிழ் வித்வான்கள் = வ.உ.சி யை  ஒப்புக் கொள்ளாது, அனந்த ராம ஐய்யர் பக்கமே "அணி" திரண்டனர்!
** இ. வை. ஐய்யர் தரவே தரலீன்னாலும்... வடசொற்கள் மிகுந்த ஏடு, கைந்நிலை: 18 கீழ்க் கணக்கு நூல் என்று ஆனது!
Today, It is Official;

வ. உ. சி = வரவேற்க யாருமில்லை!
(காங்கிரஸ் கட்சியே, அவரைக் கைவிட்டு விட்டது என்பது தனிக் கதை)
எனினும், தம் சொந்தச் செலவில், கொஞ்சம் கொஞ்சமாய் இன்னிலை நூலைப் பதிப்பித்தார்;
ஆனா, வறுமை/ வெறுமை! = அதிகம் முடியலை!:(

VOC didn't have a "social networking" in the field of Tamizh
His approach is more Frankness & Justice, rather than "self seek"
voc great
வ.உ.சி
சிறைக்கு முன்னிருந்த
கம்பீரம்
வ.உ.சி
சிறைக்குப் பின்
வெறுமை

ஆனா... இத்தோடு விட்டால் தான் பரவாயில்லையே!

வ.உ.சி  குடுத்த "தரவுகள்"
= உறுத்திக் கொண்டே இருக்கு போலும், பண்டிதர்களுக்கு!:)
= கிளப்பி விட்டாங்க...

--- வ.உ.சி -க்கு ஏடு குடுத்தவர் = திருமேனி இரத்தினக் கவிராயர்;
இவரு "பழைய நடையில்" தாமே கற்பனையாப் பாட்டெழுதி, அதைத் தான் "இன்னிலை" -ன்னு புகுத்தி விட்டார்---

கிளப்பலோ கிளப்பல்!
எப்படி இருக்கு கதை? "அசுரன்" ஆக்கீட்டோம்-ல்ல?
டொன் டொன் டொய்ய்ங்...

இ.வை. ஐய்யர் காட்டியதில், சிதைஞ்சி போன பாட்டு = 18;
கார்ப் பாம்புக் குப்பங் கி... க் கொண்......கரும் 
-ன்னு இருக்கு! என்னா புரியுதா?:)
ஆனா, இதையெல்லாம் எவருமே கேள்வி கேட்கலை;

"Official  தமிழ்ப் பண்டிதர்கள்", ஒன்று கூடி உரைத்த வாசகம்:
மற்ற 17 கீழ்க் கணக்கு நூல்களின் நடை
= வ.உ.சி காட்டிய இன்னிலையில் இல்லை 
= எனவே, இது பொய்யான புகுத்தல்!

திருக்குறளின் நடை, பழமொழி நானூறில் இல்லீயே; அது மட்டும் எப்படி 18 கீழ்க் கணக்கு?
= விடுய்யா, விடுய்யா.. Twitter/ Blog-ல கேக்குறதெல்லாம் "சபை" ஏறுமா?
= ஒம்ம கிட்ட Official Network இருக்கா?:)
------------------------

சொந்தக் காசையெல்லாம், தேச பக்தியில் தொலைச்சிட்டு, மாடு போல் செக்கிழுத்து..
இன்னிக்கி தனி மரமாய் நிக்கும் வ.உ.சி = "பொய்" சொல்லிட்டாரு-ன்னே வச்சிப்போம்.....

ஆனா..ஆனா..

* "இன்னிலை" -ன்னும் அந்த வெண்பாவில் இருக்கேப்பா? = ஓய், அதெல்லாம் கேக்காதீங் காணும்;
* சரிப்பா, இன்னிலை வேணாம்! "கைந்நிலை", னு என்பதற்குத் தரவு? = என்ன ஸ்வாமி, தரவெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீரு?:)

அதான்.... இன்னிலை அல்ல-ன்னு,
நாம, "குழுவாச் சேர்ந்து" சொல்லீட்டோமே!
அதுக்கு மேலேயா தரவு வேணும்?:)
So, 18ஆம் நூல் = கைந்நிலையே! <சுபம்>


முருகா,
* செக்கை, மாடு போல் இழுத்த செல்வந்தன் = அவனா பொய்யாப் பாட்டெழுதிப் புகுத்துவான்?
* விடுதலைப் போர் செய்து கொண்டே, இடைக்கால British அரசில் முதன்மந்திரி "வ.உ.சி-ஜி" ஆகாதவன் = அவனா பொய்ப் பாட்டு புகுத்துவான்?

அன்று ஒடிந்தது = வ.உ.சி உள்ளம்!!
அன்று ஒடிந்தது = வ.உ.சி உள்ளம்!!
voc last
வ.உ.சி - இறுதி யாத்திரை

ஆனாலும்...
= தன்னைக் கைவிட்ட தமிழை 
= வ.உ.சி  கைவிடவில்லை!

அவர் இறுதிக் காலத் "தனிமை"யில் = ஒரே ஆறுதல், தமிழ்!
*தொல்காப்பியத்துக்கு உரை எழுதினார்;
*சிவ ஞான போதம் என்ற நூலுக்குச், சமயம் கடந்து, "அன்பே சிவம்" என்று, புது உரை செய்து கொடுத்தார்;

இந்தக் கையெழுத்துப் பிரதிகள் எல்லாம்... இன்று காணாமலேயே போய்விட்டன:(

ஏதோ... நடிகர் திலகம் சிவாஜி... நடித்துக் குடுக்க... "கப்பலோட்டிய தமிழன்" என்ற நினைவாச்சும் தங்கியிருக்கு!
சினிமா மட்டும் இல்லீன்னா.. வ.உ.சி = இன்னிக்கி யாரோ!:(



* "அ முதல் ஹ" வரை 48 சம்ஸ்கிருத எழுத்தே = 48 சங்கப் புலவர்களா பிறவி எடுத்துச்சி;
49-வதா, சிவபெருமானும் சங்கத்தில் உட்கார்ந்தாரு -ன்னு  "திருவிளையாடற் புராணம்" எழுதிய "தமிழ்ப் பண்டிதாள்" குழு அல்லவா?

* தமிழ்த் தொன்ம முருகனை -> புராணக் கதைகள் ஏற்றி ஏற்றி..
சுப்ரமணியன் ஆக்கிய "தமிழ்ப் பண்டிதாள்" அல்லவா?

= இந்தக் "குழு அரசியல்"-ல்லாம் கடந்து வந்து தான்...
= இன்னிக்கும் நிக்குது தமிழ்!!!

சொற்பமான அறிஞர்கள், இன்றும்,
"இன்னிலை - கைந்நிலை",
இரு நூல்களையும் ஒருங்கே வைத்துத் தான், படிக்கின்றனர்; ஆனால்....

* "Officially", கைந்நிலையே = 18 கீழ்க் கணக்கு!
* இன்னிலை அல்ல என்று ஆக்கப்பட்டு விட்டது!

அதனால் என்ன?
= இன்னிலையும் தமிழ்த் தாய்க்கு அணிகலனே!

* தான் ஒடுங்கிப் போன நிலையிலும்...
* தமிழ் ஒடுங்கிப் போகாமல்,
தமிழுக்கு "இன்-நிலை" தேடித் தந்தவனே!
தூத்துக்குடி தந்த தூயோனே;
வ.உ.சி = உன் "தோல்வித்-தமிழ்" வாழ்க!!


Read more »

Thursday, August 01, 2013

ஒர் ஈழத் தமிழனே= உலகத் தமிழ் மாநாட்டின் தந்தை!

Xavier தனிநாயகம் அடிகள்!
= இந்த "ஈழத் தமிழரின்" நூற்றாண்டு விழா.. நாளை (Aug 2 - 2013)

யாருய்யா இவரு?
= நமக்குத் தெரியுமா?
= தெரியலீன்னாலும் பரவாயில்லை; தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கா? - நல்ல தமிழுக்கு உழைத்த நல்லோர் பற்றி?
மறைந்த நடிகை மஞ்சுளா அவர்களின் மருமகன் = "இயக்குநர் ஹரி" -ன்னு தெரிஞ்சி வச்சிக்கறோம்!
கலைஞரைப் பிடிக்காதவர்கள் கூட, அவர் பேரன் பேரு = "ஆதித்யா" -ன்னு தெரிஞ்சி வச்சிக்கறாங்க;
ஆனால்,  Xavier தனிநாயகம் அடிகள்??

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் - பாரதி

2000+ ஆண்டுக்கு முன்னுள்ள தொல்காப்பியத்  தமிழ் /  ஓசை நுட்பம் -ன்னுல்லாம் நாமளே பேசிக்கறோமே?  ஆனால் உலகம் பேசுமா???

பக்கத்தில் இருக்குற "தெலுங்கானா" நண்பன் கூட ஒத்துக்க மாட்டான் = தமிழ் 2000+ yrs முன்னுள்ள மொழி-ன்னு:)
ஆனா, "வேதம்" -ன்னு ஒசத்தியாப் பேசுவான்;
Vedas -ன்னு வெள்ளைக்காரனும் பேசுவான்! Power of Religious Marketing:)

ஆனால், தமிழையும், அப்படிப் பேச வைத்தவர் = ஒர் "ஈழத் தமிழர்"!



தமிழைத், தமிழகத்துக்கு வெளியேயும் பரவச் செய்ததில் பெரும் பங்கு! = Xavier Thanai Nayagam AdigaLar!
கிறிஸ்துவர் என்பதால், "அயல் நாட்டவர்" -ன்னு முடிவு கட்டிறாதீக! இவர் தாய் மண் = தமிழ் ஈழம் தான்!


* இராபர்ட் நொபிலி (Robert De Nobile - Italy)
* சீகன் பால்க் (Ziegenbalg - Germany)
* வீரமாமுனிவர் (Constantine Joseph Beschi - Italy)
* கால்டுவெல் (Robert Caldwell - Ireland)
* ஜி.யு. போப் (G.U. Pope - Canada/ England)
* ழான் பில்லியொசா (Jean Filliozat - France) (திருமுருகாற்றுப்படை & திருப்பாவை அறிஞர்)
-ன்னு பல பேரு, தமிழகத்துக்கு வெளியே, தமிழ் ஆய்வு செய்துள்ளார்கள்!

அண்மைய அறிஞர்கள்
* கமில் சுவலெபில் (Kamil Zvelebil - Praha, Czechoslovakia)
* ஜார்ஜ் ஹார்ட் (George Hart, California, USA)
-ன்னு, அந்தத் தமிழ் ஆய்வு தொடர்ந்தது/ தொடர்கிறது...

Young Xavier Thaninayagam
ஆனால்...
தனிப்பட்ட ஆய்வில் மட்டும் நிற்காமல்,
பலரையும் திரட்டியவர் = தனிநாயகம் அடிகளார்!

இப்படித் திரட்டியதால் தான், மேலும் பலருக்கு வெளிச்சம் பரவி, "தமிழ்" என்ற வெண்கொற்றக் குடையின் கீழ், பிற நாட்டு நல்லறிஞர் ஒருங்கிணைந்தார்கள்

அப்படி, அவர், திரட்ட உருவாக்கிய ஆயுதம் = "உலகத் தமிழ் மாநாடு"


Ulaga Tamizh Maanaadu - Chennai, 1968
Arignar Anna with President Zakir Hussain, Kalaignar at the back

IATR - International Assocation of Tamil Research (உலகத் தமிழ் ஆராய்ச்சிக் குழுமம்) என்பதை உருவாக்கி...
பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில், Tamil Chair என்று உருவாக வழி வகுத்து...

"உலகத் தமிழ் மாநாடு" என்றொரு நிகழ்வைத் தோற்றுவித்தவரே
= சேவியர் தனிநாயகம் அடிகளார் தான்!

1966 = 1st Word Tamil Conference = மலேசியா
2nd = Chennai
3rd = Paris
4th = Yaazh paaNam (Jaffna) - துயரம் கலந்த தமிழ் மாநாடு!

அடிகளார் இறந்து விட்டார்...

5th = Madurai
6th = Kuala Lumpur
7th = Mauritius
8th = Thanjavur

{இப்படி வழி வழி வந்த வாழையடி வாழை...
அதைத் தான் கலைஞர். கருணாநிதி, தன் வசதிக்கு வரலை-ன்னு உடைச்சாரு:(
உலகத் தமிழ் மாநாடு -> உலகச் செம்மொழி மாநாடு -ன்னு புது "அவதாரம்" எடுத்தது, 2010-இல்!

"தன் வழிக்கு வரவில்லை என்றால், தன் குடியையே பிரித்தாளு"
= இதென்ன வள்ளுவர் அறமா?
= "சாணக்கியத்" தந்திரம் அல்லவா!
வடநெறிக் காவலர் ஆகி விட்டார் போலும் கலைஞர்!

தமிழினும் காமமே பெரிது என்று "மவுண்ட் ரோடு மகா விஷ்ணுக்களோடு" சம்பந்தி ஆகி விட்டவர், வேறென்ன செய்ய முடியும்?:)
நம் பதிவுக்குத் தேவையற்ற ஒன்று; அடிகளாரைப் பற்றி மட்டும் காண்போம்!}



ஈழத்திலுள்ள காவலூர் (Kayts - ஊர்க்காவற் துறை)
யாழ்ப்பாண உச்சித் தீவுகளில் -  ஹென்றி & இராசம்மா - இவர்களின் பிள்ளையாகப் பிறந்தார் சேவியர்; (Aug 2, 1913)

யாழ்ப்பாணம், கொழும்பு என்று கல்லூரிகளில் படித்தவர்..
திருவனந்தபுரம் (இந்தியா) மூலமாக, இறையியல் (Religion) படிக்க, வெளிநாடு சென்றார்;
மீண்டு வந்து, வ.உ.சி (எ) மறத் தமிழ் அறிஞனைத் தந்த, தூத்துக்குடியில் தங்கிப் பணியாற்றினார்;

அண்ணாமலைப் பல்கலையில், தமிழறிஞர் தெ.பொ.மீ உந்துதலால், தமிழிலும் பட்டம் பெற்றார்;
அப்போது எழுந்த ஆராய்ச்சிக் கட்டுரை தான் = A study of Nature in Sanga Tamizh! (சங்கத் தமிழிலே இயற்கை)

இது, amazon.com இலும் கிடைக்கிறது;  "List of English Books on சங்கத் தமிழ்" - dosa365 தளத்திலும் கொடுத்துள்ளேன் (தினமொரு சங்கத் தமிழ்);

இலங்கைக்கே மீண்டும் சென்று, பின்பு இங்கிலாந்து, மலேசியா என்று Academic Circles - சுற்றிக் கொண்டே இருந்தார் அடிகளார்;
மலேசியப் பல்கலையில், தமிழ்ப் பேராசிரியராகவும் ஆனார்;
Academic Circles எனப்படும் கல்விக் குழுமங்களில், "தமிழ், தமிழ்" என்று புதிதாக ஒலிக்கத் துவங்கியது;

அப்படி என்னய்யா இருக்கு தமிழ்ல? 
அதுவும் வெள்ளைக்காரன் கல்லூரியில் = தமிழுக்கு எதுக்குய்யா மெனக் கெடணும்?
அடிகளார் வாயாலேயே கேட்போமா?


Nobody knows Tamizh!:(

"If Latin = is the Language of Law & Medicine
French = the Language of the Diplomacy
German = the Language of Science
And English = the Language of Commerce
Then Tamil = is the Language of Bhakti & Innate Devotion

தமிழ் மொழி = இந்துக்களுக்கு மட்டும் உரியதன்று! 
குறிப்பாகச் சைவர்களுக்கு மட்டுமே உரியதன்று! அப்படியொரு தோற்றம், வழி வழி வந்த பண்டிதர்களால் கொடுக்கப்பட்டு விட்டது;

தமிழ் மொழி = வைணவர், சமணர், பௌத்தர், இசுலாமியர், கிறித்துவர் என சிறுபான்மைச் சமயத்தவர்களுக்கும் உரிய தனித்துவமான மொழி!"
என்று வீறுடன் உரைத்தவர் அடிகளார்!

தமிழ்த் திறனாய்வு (Tamil Research) என்பதில், அடிகளார், முற்றிலுமாய்த் தலை-கீழ் மாற்றங்கள் செய்தார்;
அது வரை வ.வே.சு ஐயர், டி.கே.சி போன்றவர்கள் = 1) மதம் 2) ரசனை என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து, திறனாய்வுக்கு வித்திட்டனர்;

ஆனால், அடிகளார், பல நாடுகளிலும் பயின்றவர் அல்லவா? "அறிவியல் பார்வை" அவருக்கு இயல்பிலேயே இருந்தது!

சமய வெளியைத் தாண்டி வந்து... 
"அறிவியல் பார்வையில்" தமிழ்
என்று அணுகும் முறையைப் பெரிதும் ஊக்குவித்தார்; அதனால் தான், பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களில், தமிழ்க் கொடியும் பறக்க முடிந்தது;




"உலகத் தமிழ்" என்பதற்கும் வித்தினை நட்டார்!
எங்கே? = காங்கிரஸ் கோலோச்சும் தில்லி மாநகரில்! 1964!

தனியொரு ஆளாக, மத்திய அரசிடம், நேரில் சென்று வாதாடக் கூடிய மேலாண்மை பெற்ற அறிஞர்! (தன் "குடும்ப மந்திரிசபைக்கு" அல்ல)

தன் முன்னாள் ஆசிரியர் தெ.பொ.மீ,  டாக்டர் மு.வ  அவர்களுடன் சேர்ந்து..
Professor Filliozat (Paris), Prof. Burrow (Oxford),  Prof. Kuiper (Hague)
- என்று பன்னாட்டு அறிஞர்களையும், அரசின் முன் நிறுத்தி, தமிழ்த் திட்டங்கள் வகுக்க ஆரம்பித்தார்!

அப்படி உருவானதே! = முதல் உலகத் தமிழ் மாநாடு! (கோலாலம்பூர் - 1966)


பின்பு, அறிஞர் அண்ணா நடத்திய = இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் (சென்னை - 1968)...
"தனிநாயகம் அடிகளார் (எ) ஈழத் தமிழ்க் கொழுந்து" -என்று,
அண்ணா, அவரையே மாநாட்டுக்கு முன்னோடியாய் அறிவித்தார்; தன்னை அறிவித்துக் கொள்ளவில்லை:)

ஒரு செயல் வீரர் போல, ஓடியாடி உழைத்துச், சென்னை மாநாட்டை, அரசியலுக்கு அப்பாற்பட்டு, Academic என்று வெற்றி பெறச் செய்தார்!

அதே சமயம், "அறிஞர்" என்று அடைப்புக்குறிக்குள் தங்கி விடாமல்...
 "தமிழ்ப் பெருமை" மக்களிடமும் போய்ச் சேர வேண்டும் என்று = ரசனை மிக்கதாகவும் மாநாடு ஆக்கப்பட்டது!

சென்னைக் கடற்கரையில், எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு, திறந்து வைத்த தமிழ்ச் சான்றோர் சிலைகள், இன்றும் உள்ளன!

Some Research Papers during World Tamil Conferences:

* 1st உலகத் தமிழ் மாநாடு (கோலாலம்பூர்) = http://tamilnation.co/conferences/cnfMA66/index.htm

* 2nd உலகத் தமிழ் மாநாடு (சென்னை)
= http://tamilnation.co/conferences/cnfTN68/index.htm
(ஓவியக் கலை - சங்க காலம் முதல் கம்பன் வரை - இதைத் தேடிப் படிங்க:))

* 4th உலகத் தமிழ் மாநாடு (யாழ்ப்பாணம்) = http://tamilnation.co/conferences/cnfJA74/index.htm
(தமிழ் - சிங்கள அரசர்கள் கலப்புத் திருமணம் பற்றிய கட்டுரையும் உண்டு)


தமிழ் = உலக மொழி ஆகணும்; 
(meaning: people of the world should atleast know the name of Tamizh - like Greek or Latin
They should realize, Humanity had a great culture existed & existing! = Not a Culture of Rituals, But a Culture of Heart)
அதற்கான தகுதி தமிழுக்கு உள்ளது; தமிழின் வளங்களை உலகமெங்கும் ஆங்கிலம் வாயிலாகப் பரப்ப வேண்டும் - என்பதே அடிகளார் நோக்கம்!

ஜப்பானிய/ சீன மொழிக்கும் - தமிழுக்கும் இடையில் சில ஒற்றுமை நிலவுவதைக் கூடச் சுட்டிக் காட்டியுள்ளார்;

தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம்
= இவையே, தமிழில் முக்கியமான நூல்கள், என்று குறிப்பிடுவார்;

தமிழைப் பற்றிக் குறிப்பிடும் = 1335 பிறமொழி நூல்கள்; "Reference Guide to Tamil Studies" என்ற நூலாக வெளியிட்டார்; Also available on Amazon.com
------------------------------

1974 - யாழ்ப்பாண உலகத் தமிழ் மாநாட்டில் வெடித்த வன்முறை, அடிகளாரை மிகவும் பாதித்து விட்டது!
ஒடுங்கிய நிலையில், பணிகளைத் தொடர்ந்தவர் = Sep 1 1980, யாழ்ப்பாண மண்ணிலேயே மறைந்து போனார்:(
------------------------------

எனக்குத், தமிழ்நாட்டுத் தமிழறிஞர்கள் /  தமிழ்ப் "பண்டிதர்கள்" மீது, மிகப் பெரிய வருத்தம் ஒன்னு இருக்கு!
= ஈழத் தமிழ் இலக்கியங்கள், தமிழகத்தில் அறியப்படுவதே இல்லை!:(

1) பொதுவா, "சமயம் சார்ந்த", தமிழையே ரொம்பப் பரப்புவாங்க! அறிவியல் ஒத்த திறனாய்வு? = மிக அரிது! 

அதிலும், "சிறுபான்மைச் சமய" இலக்கியங்கள் அடக்கியே வாசிக்கப்படும்;
சங்க இலக்கியம்/ சிலம்பை விடக்...
"கம்பன்" என்றே தலையில் வைத்து ஆடும் "துதி" மனப்பான்மை கூட உண்டு!

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் போன்ற துதி மொழிகள் இளங்கோவுக்கு வாய்க்கவில்லை!
இளங்கோ வீட்டு இட்லித் தட்டும் இசை பாடும் -ன்னு பரப்பி இருக்கணுமோ?:))

கல்வியிற் பெரியவன் கம்பன்; அவனைக் குறை சொல்லவே முடியாது;
அவனை முன்வைத்து எழும்பும் குழு மனப்பான்மை/ துதி மனப்பான்மை மேல் தான் நம் வருத்தம்:(
= கம்பன் கழகம், கம்பன் விழா, கம்பன் தொலைக்காட்சி பட்டிமன்றப் பகடிகள்;
= ஆனா இளங்கோ மன்றம்? அப்பிடியொன்னு இருக்கா என்ன?

தேவாரம்/ அருளிச்செயல் ஏதோ ஒப்புக்கு இருக்கு!
அருணகிரியின் சந்தத் தமிழ்? = ஊகும்! அதெல்லாம் இலக்கியத்துக்குள்ளேயே வராது:(
சமணத் தமிழ் = ஊத்தி மூடியாச்சு:( மக்கள் கிட்ட போய்ச் சேராது;

2) சம்ஸ்கிருதம் (எ) வடமொழி மேல், ஒரு கீறலும் படாதவாறு செய்யும் தமிழ் முயற்சிகள் = இதை மட்டுமே, "பண்டிதர் குழு" வரவேற்கும்!

தனித் தமிழ்/ தூய தமிழ் எல்லாம், ஏதோ மறைமலையடிகள் காலத்தில் கொஞ்சம் முளைச்சி வந்தாலும்...

இன்று இணையத்தில், "திராவிட அரசியல் ஏளனம்" என்கிற பேரில், மெய்யான தமிழ் முயற்சிகளும் ஏளனமே செய்யப்படுகின்றன!:(

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை;
பண்டிதர்களே நிரம்பியுள்ள பதிப்புலகில்/ மீடியாவில், பாவாணர் போன்ற தனித்தமிழ் அறிஞர்கள் அறியப்படுவது அரிதே!:(

தொ. பரமசிவன் அய்யா (தொ.ப) போன்றவர்களின் தமிழ்ப் பூர்வகுடிகளின் ஆய்வு?
= நம்ம சமயத்துக்கு ஒத்து வரலை-ன்னு "தீண்டத் தகாதவர்களா" ஆக்கி வச்சிருக்கோம்:(

3) இது எல்லாத்தையும் விடக் கொடுமை 
= ஈழத் தமிழ் இலக்கியங்கள்... என்னான்னே பல பேருக்குத் தெரியாது!:(((
ஒரு நூலின் பேரைச் சொல்லுங்க பார்ப்போம்?




* சங்கத் தமிழில் = ஈழத்துப் பூதன் தேவனார் முதல்...
* நேற்றைய தமிழில் = ஈழத்து யாழிசை - விபுலானந்த அடிகள் வரை...

பொது மக்களிடம், இவர்களைக் கொண்டு சேர்ப்பதே இல்லை:(
* உ.வே. சா = பல பேருக்குத் தெரியும்;
* சி.வை. தாமோதரம் பிள்ளை? = தெரியுமா??? ஈழத் தமிழர்!

உ.வே.சா = இலக்கியம் திரட்டினாரு-ன்னா
சி.வை.தா = இலக்கணம் திரட்டினாரு!

தொல்காப்பியம் / நன்னூல் -ன்னு, இன்னிக்கு இருக்குற எல்லா இலக்கண நூல்களையும் திரட்டியவர் இவரே;
"உரை நூல்கள்" கூடச், சுவடி சுவடியாத் தேடிப் பதிப்பிச்சாரு!

ஆனா, நம்மில் எத்தனை பேருக்கு...
சி.வை. தாமோதரம் பிள்ளை தெரியும்??? = உ.வே.சாமிநாத ஐயர் மட்டும் தெரியும்!

{இப்படிச் சொன்னதுக்காக, ஒடனே சிலர், என்னிடம் கோபிக்க வரலாம்/ வந்துள்ளனர் = "பாப்பானைத் திட்டியாச்சா? You go... so Low"

ஆனா.. முருகனுக்கும், என் மனசாட்சிக்கும் தெரியும்; என் அந்தண நண்பர்கள் பலருக்கும் என்னை "மானசீகமாகத்" தெரியும் = How Low I am:))
ஒரு சொல்லு மேலே விழுந்துறாம, அவரவர் சொந்தப் பிடித்தங்களை யெல்லாம் , நான் பாத்துப் பாத்து எழுதணும்-ன்னா.... ரொம்பவே கஷ்டம்}

தமிழ் = பிறப்பால் வருவது அன்று!
தமிழுக்கு, மனதார நல்லது நினைப்போர் யாவரும்...
= பிராமணர்கள் உட்பட = அனைவரும் தமிழர்களே!

* உ.வே.சா = தமிழ்த் தாத்தா! அவர் காலடியில், என்றென்றும் நான் வீழ்ந்து வணங்குவேன்!
* சொல்ல வருவது என்ன-ன்னா.. அதே பாடுபட்ட, சி.வை. தாமோதரம் பிள்ளைக்கு மட்டும் "இருட்டடிப்பு" ஏனோ?
All you need is, "networking" of samasthana vidwans & tamil pundits??? Lobbying is the best!:(
உ.வே சா & சி.வை.தா

ஈழத் தமிழ்ப் பங்களிப்பு 
= இது பற்றிப் பொது மக்களிடம் எடுத்துச் செல்லும் தமிழ்ப் பண்டிதர்கள்/ ஊடகங்கள் மிகவும் குறைவு
= அப்பறம் எப்படி, ஒரு தலைமுறைக்கு, "ஈழம் = தொப்புள் கொடி உறவு" -ன்னு உணர்வு மட்டும் வரும்??

ஈழத் தமிழ்ப் பங்களிப்பு 
= செய்யாததை விதந்தோதச் சொல்லலை!
= ஆனா, உ.வே.சா  தெரிந்து, சி.வை. தாமோதரம் பிள்ளை தெரியலை-ன்னு இருக்கலாமா?

"உலகத் தமிழ் மாநாடு" -ன்னு
தமிழ்க் கொடி பறக்க விட்டதே = ஓர் "ஈழத் தமிழன்" தான்டா!

அவர் நூற்றாண்டு அடக்கி வாசிக்கப்படுகிறது;
அவர் விழாவில், கிறிஸ்துவர்கள் தென்படும் அளவுக்கு, "தமிழ்ப் பண்டிதர்கள்" தென்படுவதில்லை:((
வெளிநாட்டு விழாக்களை விடத் தமிழ் நாட்டு விழாக்கள் மிக மிகக் குறைவு:(

அதான், ஆத்தாமையில் எழுதினேன்!
சேவியர் தனிநாயகம் அடிகளார் வாழ்க! = அவர் நூற்றாண்டு வாழ்க!
http://thaninayagamadigalar.com
Read more »

Thursday, July 07, 2011

கா.சிவத்தம்பி! ஈழத்-தமிழகம்!

மறைந்த ஈழத் தமிழறிஞர், பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் இன்னுயிர், இறைவன் திருவடி நீழலில் இளைப்பாற, என் கரங் கூப்பிய அஞ்சலி!

அன்னாரைப் பற்றிய முக்கியமான தோட்டாப் புள்ளிகள் (Bullet Points):

1. பொதுவாக, தமிழ் இலக்கிய வரலாற்றில், தமிழகம் மட்டுமே பெரிதும் பேசப்படும்! ஈழம் சார்ந்த இலக்கிய வரலாற்றையும், தமிழ் இலக்கிய வரலாற்றில் கொண்டு வந்து இணைத்த பெருமகனார்=சிவத்தம்பி!

2. இயல்=ஆய்வுக் கட்டுரைகள், இசை=விபுலானந்த அடிகள் பற்றிய ஆய்வு, நாடகம்=வசனங்கள், என்று முத்தமிழிலும் கோலோச்சியவர்!

3. முருகனைப் போலவே, "திருமாலும் தமிழ்க் கடவுளே" என்ற தமிழ்த் தொன்ம ஆய்விலே இவரும் முக்கியமான அறிஞர்!
இவரின் முல்லை நில ஆய்வுக் கட்டுரைகள், மற்றும் சங்கத் தமிழ்த் திருமால், எங்ஙனம் வடக்கே சென்ற போது, 'விஷ்ணு'வாகக் கலந்து முதல்வன் ஆனான் போன்ற குறிப்புகள் மிக நுண்ணியவை!

இவரை ஒட்டி, டாக்டர் மு.வ, மற்றும் நீதியரசர் மு.மு இஸ்மாயில் போன்றவர்கள், தமிழ் இலக்கிய வரலாற்றை, பெரும்பான்மைச் சமய அரசியல் பூச்சில் இருந்து விடுவித்து, நல்ல பல ஆய்வுகளை நிகழ்த்தினர்!
சமணர் என்ற ஒரே காரணத்துக்காக, களப்பிரர் காலம்=இருண்ட காலம் என்று முத்திரை குத்தி, "தாங்கள் எழுதியதே வரலாறு" என்னும் சைவ ஆதிக்கச் சாதியினரின் போக்கும் ஒழியத் துவங்கியது!


4. கா.சிவத்தம்பி குறித்து, தமிழறிஞர்கள் பேசும் வானொலி ஒலிக் கோப்புகள் - கா.பி அண்ணாச்சியின் பதிவில்...இங்கே கேட்கலாம்!

5. இன்று, எத்தனை தமிழகப் பாடநூல்களில் ஈழ இலக்கியம் வைக்கப்படுகிறது? ஈழப் பாடங்களில் தமிழக இலக்கியம் உண்டு! ஆனால் தமிழகப் பாடங்களில் ஈழ இலக்கியம் இல்லையே!:(

6. மொழித் துறையில், தமிழகம்-ஈழம் 'இயைந்து'ருந்தால், இன்று தமிழக மக்கள் "உணர்வு"ப் பூர்வமாக ஈழத்தோடு இயைய, எளிதாக இருந்திருக்கும்! ஆனால் இன்னிக்கும் ஒட்டு மொத்த ஈழ உணர்வுக்கு நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம்!

7. >மொழித் துறையில் தமிழகம் Vs ஈழம் பாகுபாடு< இதைத் தான் பேரா. கா.சிவத்தம்பி ஓரளவு நேர் செய்ய முனைந்தார்!

8. அன்னாருக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலி, மொழித் துறையில் இந்த "ஒருங்கிணைப்பு" வேண்டும்!
தமிழ் வரலாறு-ன்னாலே, ஏதோ சோழர்களோடு அனைத்தும் நிறைந்தது என்றில்லாமல், ஈழத்துக்கும் நம் வரலாற்றுக் கைகள் நீள வேண்டும்!

9. ஈழம் சார் சொற்கள்=அவதானிப்பு, கதைத்தல், பகடி போன்றவை! இவை தமிழகத் தமிழ்ப் பதிவுகளிலெல்லாம், இப்போது புழங்கத் துவங்கி இருப்பது, மகிழ்வான சேதி!

10. பேரா. சிவத்தம்பி நினைவாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், ஒரு தமிழ் விருதினையும், ஆய்வு மையத்தையும் நிறுவி, தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ள வேணும்! தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஈழப் படைப்பிலக்கியங்கள், தமிழகத்தின் தமிழ் ஆக்கங்களோடு, ஒருங்கிணைந்து செயல்பட, இது போன்ற மையம் பேருதவியாக இருக்கும் என்பது என் பணிவான கருத்து!


கட்டுரைகள் மட்டுமல்லாது, சிவத்தம்பியின் இசை-நாடகப் பங்களிப்புகளும், தமிழ்த் தாயின் திருவடிக்கு தீஞ்சிலம்பு!
வாழ்க சிவத்தம்பி! வாழ்க சிவத்தம்பியின் தமிழ்!!

மேலும் வாசிக்க:
1. Prof. Sivathambi's Ebook: பண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி...
2. ஜெயமோகன் - சிவத்தம்பி குறித்த மதிப்பீடு - எனக்கு இதில் கிஞ்சித்தும் ஒப்புதல் இல்லை!
3. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்: சிவத்தம்பி - தொகுப்புப் பதிவு!

* தற்சமயம், வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளதால், பதிவாக எழுத நேரமில்லாமல், புள்ளிகளாகத் தொகுத்து விட்டேன்!
* பேரா. கா. சிவத்தம்பியோடு, கல்லூரி மலருக்காக உரையாடி, பதிவிட்டது...என் வாழ்நாளில் மறக்க முடியாத தமிழ் நிகழ்வு!

ஐயாவுக்கு எனது கண்ணீர்-மலர் அஞ்சலி!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP