Thursday, July 07, 2011

கா.சிவத்தம்பி! ஈழத்-தமிழகம்!

மறைந்த ஈழத் தமிழறிஞர், பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் இன்னுயிர், இறைவன் திருவடி நீழலில் இளைப்பாற, என் கரங் கூப்பிய அஞ்சலி!

அன்னாரைப் பற்றிய முக்கியமான தோட்டாப் புள்ளிகள் (Bullet Points):

1. பொதுவாக, தமிழ் இலக்கிய வரலாற்றில், தமிழகம் மட்டுமே பெரிதும் பேசப்படும்! ஈழம் சார்ந்த இலக்கிய வரலாற்றையும், தமிழ் இலக்கிய வரலாற்றில் கொண்டு வந்து இணைத்த பெருமகனார்=சிவத்தம்பி!

2. இயல்=ஆய்வுக் கட்டுரைகள், இசை=விபுலானந்த அடிகள் பற்றிய ஆய்வு, நாடகம்=வசனங்கள், என்று முத்தமிழிலும் கோலோச்சியவர்!

3. முருகனைப் போலவே, "திருமாலும் தமிழ்க் கடவுளே" என்ற தமிழ்த் தொன்ம ஆய்விலே இவரும் முக்கியமான அறிஞர்!
இவரின் முல்லை நில ஆய்வுக் கட்டுரைகள், மற்றும் சங்கத் தமிழ்த் திருமால், எங்ஙனம் வடக்கே சென்ற போது, 'விஷ்ணு'வாகக் கலந்து முதல்வன் ஆனான் போன்ற குறிப்புகள் மிக நுண்ணியவை!

இவரை ஒட்டி, டாக்டர் மு.வ, மற்றும் நீதியரசர் மு.மு இஸ்மாயில் போன்றவர்கள், தமிழ் இலக்கிய வரலாற்றை, பெரும்பான்மைச் சமய அரசியல் பூச்சில் இருந்து விடுவித்து, நல்ல பல ஆய்வுகளை நிகழ்த்தினர்!
சமணர் என்ற ஒரே காரணத்துக்காக, களப்பிரர் காலம்=இருண்ட காலம் என்று முத்திரை குத்தி, "தாங்கள் எழுதியதே வரலாறு" என்னும் சைவ ஆதிக்கச் சாதியினரின் போக்கும் ஒழியத் துவங்கியது!


4. கா.சிவத்தம்பி குறித்து, தமிழறிஞர்கள் பேசும் வானொலி ஒலிக் கோப்புகள் - கா.பி அண்ணாச்சியின் பதிவில்...இங்கே கேட்கலாம்!

5. இன்று, எத்தனை தமிழகப் பாடநூல்களில் ஈழ இலக்கியம் வைக்கப்படுகிறது? ஈழப் பாடங்களில் தமிழக இலக்கியம் உண்டு! ஆனால் தமிழகப் பாடங்களில் ஈழ இலக்கியம் இல்லையே!:(

6. மொழித் துறையில், தமிழகம்-ஈழம் 'இயைந்து'ருந்தால், இன்று தமிழக மக்கள் "உணர்வு"ப் பூர்வமாக ஈழத்தோடு இயைய, எளிதாக இருந்திருக்கும்! ஆனால் இன்னிக்கும் ஒட்டு மொத்த ஈழ உணர்வுக்கு நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம்!

7. >மொழித் துறையில் தமிழகம் Vs ஈழம் பாகுபாடு< இதைத் தான் பேரா. கா.சிவத்தம்பி ஓரளவு நேர் செய்ய முனைந்தார்!

8. அன்னாருக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலி, மொழித் துறையில் இந்த "ஒருங்கிணைப்பு" வேண்டும்!
தமிழ் வரலாறு-ன்னாலே, ஏதோ சோழர்களோடு அனைத்தும் நிறைந்தது என்றில்லாமல், ஈழத்துக்கும் நம் வரலாற்றுக் கைகள் நீள வேண்டும்!

9. ஈழம் சார் சொற்கள்=அவதானிப்பு, கதைத்தல், பகடி போன்றவை! இவை தமிழகத் தமிழ்ப் பதிவுகளிலெல்லாம், இப்போது புழங்கத் துவங்கி இருப்பது, மகிழ்வான சேதி!

10. பேரா. சிவத்தம்பி நினைவாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், ஒரு தமிழ் விருதினையும், ஆய்வு மையத்தையும் நிறுவி, தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ள வேணும்! தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஈழப் படைப்பிலக்கியங்கள், தமிழகத்தின் தமிழ் ஆக்கங்களோடு, ஒருங்கிணைந்து செயல்பட, இது போன்ற மையம் பேருதவியாக இருக்கும் என்பது என் பணிவான கருத்து!


கட்டுரைகள் மட்டுமல்லாது, சிவத்தம்பியின் இசை-நாடகப் பங்களிப்புகளும், தமிழ்த் தாயின் திருவடிக்கு தீஞ்சிலம்பு!
வாழ்க சிவத்தம்பி! வாழ்க சிவத்தம்பியின் தமிழ்!!

மேலும் வாசிக்க:
1. Prof. Sivathambi's Ebook: பண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி...
2. ஜெயமோகன் - சிவத்தம்பி குறித்த மதிப்பீடு - எனக்கு இதில் கிஞ்சித்தும் ஒப்புதல் இல்லை!
3. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்: சிவத்தம்பி - தொகுப்புப் பதிவு!

* தற்சமயம், வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளதால், பதிவாக எழுத நேரமில்லாமல், புள்ளிகளாகத் தொகுத்து விட்டேன்!
* பேரா. கா. சிவத்தம்பியோடு, கல்லூரி மலருக்காக உரையாடி, பதிவிட்டது...என் வாழ்நாளில் மறக்க முடியாத தமிழ் நிகழ்வு!

ஐயாவுக்கு எனது கண்ணீர்-மலர் அஞ்சலி!

8 comments:

 1. கா.சிவத்தம்பி ஐயாவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.நல்ல பொருள் நிறைந்த சிறப்பான பதிவு.

  ReplyDelete
 2. பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி ஐயாவுக்கு சிறந்த அஞ்சலி.

  ReplyDelete
 3. ஐயரின் ஆன்மா பரம்பொருளின் திருவடி நிழலில் இளைப்பாறுவதாகுக

  ReplyDelete
 4. @pirabuwin
  நன்றி! இது பதிவா? சும்மா அவசரம் அவசரமாத் தொகுத்ததுங்க! அவ்ளோ தான்:)

  ReplyDelete
 5. @ஷை-அக்கா,
  நன்றி!

  @இந்திரா
  நன்றி! கல்லூரி பிசியா? கல்லூரிப் பறவைகள் நலமா?:)

  ReplyDelete
 6. செய்தியில் வந்த உடனேயே எனது அஞ்சலியை செலுத்தினேன்..இந்த பதிவு பார்த்த உடன் இன்னொரு முறை.

  ReplyDelete
 7. கா.சிவத்தம்பி ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
  சிறப்பான பதிவு க்கு நன்றி.

  ReplyDelete
 8. திரு. கா.சிவத்தம்பி ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். பதிவு க்கு நன்றி.

  அன்புடன்

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP