Thursday, July 28, 2011

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? ஏன்?

கிரந்தம் தேவை தானா? = தவிர்க்கணுமா? எழுதலாமா?
- இது பற்றி இணையத்தில் ஏற்கனவே பல தளங்களில் உரையாடல் நிகழ்ந்துள்ளது!

Unicode Consortium, கிரந்தத்தைத் தமிழ்ப் பலகையில் கொண்டாந்து கலந்தோ (அ) தமிழைப் புதிய கிரந்தப் பலகையில் கொண்டு போய் வைத்தோ...
இந்தக் குழப்படி பற்றி, படம் வரைந்து முன்பு விளக்கி இருந்தேன்! இராம.கி ஐயாவும் சிறப்புப் பதிவு இட்டிருந்தார்கள்!

ஆனால்.....இந்தப் பதிவு Unicode கிரந்தம் பற்றி அல்ல!
அதையும் தாண்டி....அடிப்படையிலேயே......
1. கிரந்தம் தமிழுக்குத் தேவை தானா?
2. கிரந்த எழுத்து பற்றிப் பல்வேறு தமிழர்களின் "Mood" என்ன?-என்று பார்க்கும் பதிவே இது!

ஏன் இப்படித் திடீர்ப் பதிவு-ன்னு பாக்குறீங்களா?

Twitter-இல், அப்பப்போ இது பத்திக்கும்! காரசாரம் தூள் பறக்கும்!
அண்ணன் @tbcd தலைமையில் தமிழ் ஆர்வலர் குழுவும், குழுவல்லாத சில ட்வீட்டர்களும், பிரிச்சி மேய்ஞ்சி பந்து வீசுவாங்க! IPL போட்டிகளை விட ஆர்வத்தைத் தூண்டும்!:)
அப்படித் தான் இன்னிக்கும் தூள் பறந்தது! சில பேருக்கு, அடிப்படையே தெரியாமல், தங்கள் மனசுக்குத் தோனுவதையே வைத்து உரையாடினார்கள்! பல டமால்-டுமீல் கேள்விகளும் எழுப்பப்பட்டன!

அத்தனை பேர் ஆதங்கத்தையும் ஒன்னாத் திரட்டி.....இதோ...கிரந்தம் FAQ! @twitter மக்களுக்கு நன்றி!


1. கிரந்தம் என்பது என்ன? அது வடமொழியா?
கிரந்தம் மொழி அல்ல! அது ஒரு எழுத்துரு (Notation) மட்டுமே!
வடமொழி ஓசைகளைத் தமிழில் எழுத உருவாக்கப்பட்ட ஒரு Notation!

கீழே படத்தைப் பாருங்க......கொஞ்சம் தமிழும் இருக்கும் ('யத') ! 'ஜ'-வும் இருக்கும்! புரியாத Round Round Jilebi-யும் இருக்கும் :)
பண்பாட்டுக் கலப்பு + வடமொழி வீச்சு! இவை அதிகார/அரச மட்டத்தில் தான் முதலில் பரவத் தொடங்கியது!
அந்த அயல் ஓசைகளுக்குத் தமிழில் நேரடியான எழுத்து இல்லை...அதை எழுத ஒரு Lipi (எழுத்துரு) உருவாகியது! அது பல்லவர்கள் காலம்!
பின்பு வந்த சோழர்கள் - அந்த ஆட்சியின் பண்டிதர்களால் - அரசுமுறை, கல்வெட்டு என்று எல்லாவற்றிலும் கிரந்தம் கன்னாபின்னா-ன்னு பரவியும் விட்டது!


2. கிரந்த எழுத்தக்கள் எவை?
தமிழில் கலந்து விட்ட அடிப்படைக் கிரந்த எழுத்துக்கள்: ஜ, ஸ, ஷ, ஹ! கூடவே க்ஷ, ஸ்ரீ

ஆனா இவை ஆறு மட்டும் தான் கிரந்த எழுத்து-ன்னு நினைச்சிறாதீங்க!
மொத்தம் 16 உயிர் x 34 மெய் = 500+ எழுத்துரு உண்டு!
நல்ல வேளை, எல்லாமே தமிழ்ப் பலகையில் புகுந்து விடவில்லை!

எந்தச் சில ஓசைக்கு எழுத்து இல்லையோ, அவை மட்டுமே அடிப்படையாப் புகுந்தன!
வேறு சில ஓசை, ka, kha, ga, gha, na -ன்னு இந்தியில் வருமே, அவை எல்லாம் உள்ளாறப் புகவில்லை! வேதப் படிப்பு/கல்வெட்டோடு நின்று விட்டன:)

Gaந்தம்=வாசனை! kaந்தன்=முருகன்!
அது வேற "க", இது வேற "க"! ஓசைக்காக அதையும் தமிழில் புகுத்துவோம்-ன்னு, நல்ல வேளை, புகுத்தாம விட்டாங்க!
இல்லீன்னா க, ங, ச, ஞ-க்கு பதில், நாமளும் ka, kha, ga, gha, na-ன்னு படிச்சிருப்போம்!:))

Gaந்தம்=வாசனை! kaந்தன்=முருகன்-ன்னு சொன்னேன்-ல்ல? பொதுவா "க" என்பதே, இடத்துக்கு ஏற்றவாறு ஒலிக்க வல்ல Flexibility (நெகிழ்வு) தமிழில் உண்டு! ஆங்கிலத்துக்கும் இது பொருந்தும்!

யம்மாடியோவ்...தமிழ் எழுத்துக்கள் = 247-ன்னு மலைச்சிப் போகத் தேவையே இல்ல! மொத்தம் 31 எழுத்து தான் தமிழில்!
உயிர்=12, மெய்=18 & ஆய்தம்=1! மீதியெல்லாம் உயிர்-மெய் கலவை எழுத்துக்களே!


சரி, வரலாறு போதும்! அது நடந்து முடிந்த கதை! தொடங்கிய பிரச்சனைக்கு வாரும்!:)

3. கிரந்தம் கலந்து எழுதுவது = தப்பா? சரியா?
ஆதித் தமிழ்த் தந்தையான தொல்காப்பியரைப் பொறுத்த வரை = தப்பு!
"வடசொல் ஒரீஇ"-ன்னு தான் சொல்லுறாரு!

அவர் காலத்தில், பண்பாடு ரொம்பக் கலக்கவில்லை! இருந்தாலும் பக்கத்து ஊரு, அண்டை நாட்டு வாணிப முறையில், சில சொற்கள் அங்கும் இங்கும் புழங்கின! அந்தச் சொற்களைக் கையாள, அவர் வகுத்துக் குடுத்தது:
* தற்சமம்: கமலம் = அப்படியே எழுத முடிபவை
* தற்பவம்: பங்கயம் (பங்கஜம்) = தமிழுக்கு ஏற்றவாறு, மாற்றி எழுதுபவை

தொல்காப்பியம், இன்று கிடைக்கும் தமிழ் நூல்களிலேயே மிகப் பழமையானது!

தொல்காப்பியர் மாயோன், சேயோன் (திருமால், முருகன்) என்று இருவரையுமே தமிழ்க் கடவுளாத் தான் காட்டுறாரு! = ஆனா நாம ஒத்துப்போமா? நம்ம மனசுக்குப் எது பிடிச்சி இருக்கோ அதானே "வரலாற்று உண்மை"! :)
அட போப்பா, தொல்காப்பியர் சொன்னதெல்லாம் இன்னிக்கி செல்லாது-ன்னு சொல்லீருவோம்-ல்ல? :) அதே போல் தான், அவர் சொன்ன "வடசொல் ஒரீஇ" என்பதும் செல்லாமப் போயிருச்சோ? :(

4. கிரந்தம் இல்லாம, இலக்கியத் தமிழை எழுதவே முடியாதா?
முடியும்!

சங்கப் புலவர்கள் தொட்டு, வள்ளுவர், இளங்கோ, ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன்-ன்னு யாருமே கிரந்தம் பயன்படுத்தவில்லை!
பிராகிருத மொழி (சமஸ்கிருதம் அல்ல) விரவி வரும் சமண சமயம் கூட, அதன் தமிழ் இலக்கியத்தில் கிரந்தம் தவிர்த்து, தமிழையே தாங்கியது!

அவ்வளவு ஏன்? பின்பு வந்த எளிமையான பாரதியார் கவிதையில் கூட கிரந்தம் காண்பது கொஞ்சம் அரிது தான்! ஆனால்...ஆனால்...


5. கிரந்தம் இல்லாம, இன்னிக்கி தமிழை எழுதவே முடியாதா?

இது ரொம்பச் சிக்கலான கேள்வி!
அதுவும்.........பல சமயங்கள், பல மொழிகள்-ன்னு கலந்து, "தமிழர்" என்னும் ஒரே குடையின் கீழ் வாழ்கிறார்கள்!
அவரவருக்குப் பேர்கள், ஊர்கள்-ன்னு அமைஞ்சிப் போச்சி! "Santosh" என்பதைச் "சந்தோசு"-ன்னு எழுதினால், அவர் கோவிச்சிப்பாரா-ன்னு தெரியாது!

என்னை "இரவிசங்கர்" என்று எழுதுவதையே நான் விரும்புகிறேன்! நண்பர்களிடமும் அப்படியே புழங்கச் சொல்கிறேன்! அவரவர்களே ஒத்துக்கிட்டா, அப்போ பிரச்சனையில்ல! ஆனால்.....
குஷ்பு-வுக்கு என்ன தான் வயசானாலும், கோயில் கட்டிய கொலவெறி ரசிகர்கள் இன்னும் இருக்காங்களே....குசுபு-ன்னு எழுதினா என்னைக் கொலை பண்ணவே வந்துருவாங்களோ? :))

இதுக்கு, என்ன தான் வழி?
ஆலயங்களில் தமிழை முன்னிறுத்திய இராமானு'ஜ'ர், தன்னை "இராமானுசன்" என்றே கையொப்பம் இட்டார்!
இலக்கியங்களிலும் அவரை "இராமானுசன்" என்றே குறித்து வைத்தார்கள்! இது அவரே விருப்பமுடன் செய்து கொண்டது!

ஆனாலும் எல்லாரும் இராமானுசர் ஆகி விட விரும்புவதில்லை! அதே சமயம் தமிழும் கலப்படம் இல்லாமல் இருக்கணும்! அதுக்கு என்ன வழி?

* Mr. Santosh என்பதை, அவர் விரும்பவது போல், திரு. சந்தோஷ் என்று எழுதலாம்!
* ஆனால், "எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்று புழங்காமல்...."எனக்கு ரொம்ப மகிழ்ச்சி"-ன்னே புழங்கலாம்! :)

* தமிழால், தனி மனித உரிமை பாதிக்கிறது-ன்னு பேச்சும் எழாது!
* அதே சமயம், மொழிக்கு வளஞ் சேர்க்கும் தமிழ்ச் சொற்களும் தேய்ந்து போகாது!


6. இப்படியெல்லாம் மெனக்கெட்டு கிரந்தம் தவிர்க்கணுமா? ஏன்?
உம்ம்ம்ம்...இது நல்ல கேள்வி!
* க'ஷ்'டம்-ன்னு எழுதினாத் தான், நான் சந்தோசமா இருக்கேன்! "துன்பம்"-ன்னு எழுதறது ரொம்ப துன்பம்-ப்பா!:)
* க'ஷ்'டத்தில் இருக்கக் கூடிய ஒரு அதிர்வு, "துன்பத்தில்" இல்லை!

- இப்படியெல்லாம் சில இலக்கியவாதிகள் பேசக் கூடும்! பேசியும் உள்ளார்கள்! தமிழில் அர்ச்சனை பண்ணா "அதிர்வு" இல்லை-ன்னு சொல்றா மாதிரி தான் இதுவும்:)

தமிழுக்கு எப்போதுமே "நெகிழ்வுத் தன்மை" உண்டு!
தனி மனிதர்களின் பெயர்ச் சொற்களுக்குக் கொடுக்கப்படும் நெகிழ்வை, எல்லாவற்றுக்குமே தவறாப் பயன்படுத்த நினைச்சா எப்படி?

எப்படியோ கிரந்த எழுத்து உள்ளே வந்து விட்டது! முதலிலேயே இடம் குடுத்திருக்கக் கூடாது! குடுத்தாச்சு!........இடத்தைக் குடுத்தா மடத்தையும் புடுங்குவேன்-ன்னா எப்படி? :(


7. அதுக்காக கிரந்த எழுத்தை வெறுக்கணுமா? Is Grantham Untouchable?

Nopes! கிரந்தத்தை வெறுக்கச் சொல்லவில்லை! கிரந்தத்தை ஒழித்தால், நம்மளோட பாதி வரலாறு காணாமப் போயீரும்!
சரியோ/தவறோ...பழஞ் சுவடி, கல்வெட்டையெல்லாம் அரசர்கள் கிரந்தத்தில் எழுதி வச்சிட்டாங்க! அரசாங்கத்தை ஒட்டி வாழ்ந்த "அந்நாளைய படித்தவர்களின்" பின்புலம் அப்படி!

நாம், ஒருக்காலும் மரபியல் பதிவுகளை அழித்து விடக் கூடாது!
கல்வெட்டுப் படிப்புக்கு கிரந்தம் தேவை தான்! ஆனால் அவை துறை சார்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே!

மற்ற தமிழர்கள், இயன்ற வரை, இயல்பான தமிழில் புழங்குவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேணும்!
"கஷ்டம்" என்பதைக் "கடினம்"-ன்னு சொல்வதில் கடினம் இல்லை! கொஞ்சம் மெனக்கெடணும்! அவ்ளோ தான்!
"தஸ்தாவேஜ்"-ன்னு முன்பு எழுதினாங்க! ஆனா, இப்போ "ஆவணம்"-ன்னு எழுதினாத் தான் நமக்கே பிடிச்சிருக்கு, இல்லீயா?:)

நம் தலைமுறையில் மெனக்கெட்டால், அடுத்த தலைமுறையில் நல்ல தமிழ் பரவும்!
நம்மால் இயன்ற வரையில் மெனக்கெடுவோமே! ஒன்னும் கொறைஞ்சிப் போயீற மாட்டோம்!8. Dai krs, எல்லாம் நல்லாத் தான் சொல்லுற! ஆனா அதே கேள்வியைத் தான் நான் திருப்பித் திருப்பிக் கேக்குறேன்! = ஏன் இப்படி மெனக்கெட்டு கிரந்தம் தவிர்க்கணும்? அதனால் தமிழுக்கு என்ன பெருசா நன்மை?ங்கிலம் எல்லாத்தையும் ஏத்துக்கிடுது-ல்ல? அதனால் தானே அதுக்குச் சிறப்பு?

உம்ம்ம்ம்...இதுக்குப் பதிலைச் சுருக்கமாச் சொல்லுறேன்!
மெனக்கெட்டு கிரந்தம் தவிர்ப்பதால் வரும் பயன் என்ன?-ன்னு நம்ம @nchokkan சரியான நேரத்தில் கேள்வி கேட்டு, என் சிந்தனையைத் தூண்டி விட்டார்! அவருக்கு நன்றி!

a) ஆங்கிலம் எல்லாத்தையும் ஏத்துக்கிடுது-ல்ல?
ஆங்கிலம் எல்லாமும் ஏற்றுக் கொள்வதில்லை!
Alphabets are now 26! You cannot change that! It only accepts punctuation, diacritical marks etc.......to spell French Names and similar stuff!
α,β,γ are all notations in Scientific English! But they dont become English Alphabets!
Even in Scientific Tamizh medium, we use only angles=α,β,γ Not angles=க,ங,ச!:)

மற்றபடி ஆங்கிலத்தின் Universal Acceptability, அந்நாட்டின் அரசியல் பரவலால் தானே தவிர, மொழித் தன்மையால் அல்ல! இது அவரவர் மனசாட்சிக்கே தெரியும்!

'உற்றார்' என்று ஒலிக்கும் 'ற்று' ஓசை ஆங்கிலத்தில் இல்லை! அதுக்காக ஒரு புது எழுத்தைப் புகுத்தி விடுவார்களா?
They write uppercase "R" for ற்று!
They only "adapt".....NOT "adopt"! - Gotcha?

b) வடமொழித் தாக்கம் எல்லா இந்திய மொழிகளிலும் உண்டு! தமிழால் தனித்து இயங்க இயலுமா?
இயலும்! இயலும்! இயலும்!

தமிழில் வடமொழித் தாக்கம் போல், வடமொழியிலே தமிழ்த் தாக்கமும் உண்டே! அதை ஏன் யாரும் பேசுவதில்லை?
பண்டைத் தமிழ்க் கடவுள்களான மாயோன்(திருமால்), சேயோன்(முருகன்) அல்லவா, அங்கு விஷ்ணு/ஸ்கந்தன்-ன்னு ஆனார்கள்?
பூவை-நிலை என்னும் திணை/துறை, அங்கு போய் பூ'ஜை' ஆகவில்லையா? அது வரை அங்கே பலி குடுத்த யாகம் தானே?

கொடுக்கல்-வாங்கல்.....எல்லா மொழிகளிலும் உண்டு!
தொல்காப்பியரும் ஒதுக்கவில்லை! தற்சமம்/தற்பவம்-ன்னு அவரு குடுத்த Flexibility-யை முன்பே பார்த்தோம் அல்லவா!
ஆனால் Fundamental-யே கொடுக்கல்-வாங்கல் பண்ண முடியாது! அது மொழி என்னும் தனித்த அடையாளத்துக்கே கேடு!

c) மொழி வெறும் கருவி தானே? அதுக்கு எதுக்கு இம்புட்டு.......?
மொழி கருவி தான்! ஆனால் கருவி மட்டுமே அல்ல! அதையும் தாண்டி...
* இனத்தின் அடையாளம்,
* பண்பாட்டின் அடையாளம்,
* பெரும் தொன்மத்தின் அடையாளம்!

Children are NOT born "for" you! Children are just born "through" you!-ன்னு பேசலாம்! உண்மையும் கூட!
ஆனா.....அம்மா-அப்பா உறவு just natural convenience, அவிங்க வெறும் கருவி தானே, விட்டுத் தள்ளுறா-ன்னு ஒருத்தன் சொன்னா, அவனை நாம என்ன செய்வோம்?

அம்மா-அப்பா, நம் வேர்களின் அடையாளம்! மொழியும் அப்படியே!


அண்டை வீட்டாரிடம் அன்பாப் பழகலாம்! ஆனால் அங்கு போய் புதுப் பெண்டாட்டியுடன் படுக்க முடியாது!
இல்ல, எனக்கு அங்கே படுத்தால் தான் நல்லா இருக்கு, அதிர்வா இருக்கு-ன்னு சொன்னா? :((
"சந்தோஷம்" என்பதில் உள்ள அதிர்வு, "மகிழ்ச்சியில்" இல்லை-ன்னு நாமளே சொன்னா? = குடும்பம் என்னும் இல்லம் சிதைந்து போகும்! நம் இல்லறமே நமக்கு நல்லறம்!

d) தவிர்த்து எழுதுவதால் தமிழுக்கு என்ன நன்மை?
கிரந்தச் சொற்களின் புழக்கம், தெரிந்தோ தெரியாமலோ, ஆதிக்க சாதி அரசியல் மூலமாகப் பெருத்து விட்டது! அதை இப்போது பேசிப் பயனில்லை!
ஆனால் தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போய் விடக் கூடாது! மொழியில் உள்ள சொற்கள் எல்லாம் வழக்கொழிந்து போனால், தொன்மமும் சேர்ந்தே தொலைந்து போகும்!

* பல தமிழ்ச் சொற்கள் இப்படிச் செத்து விட்டன!
ஒருபுடை உருவகம்= ஏகதேச உருவகம்,ரேழி=வெராண்டா, பாழ்=பூஜ்ஜியம், சோறு=சாதம், சாளரம்=ஜன்னல், இதழ்=பத்திரிகை, பொருள்=அர்த்தம்....
* இன்னும் பல தமிழ்ச் சொற்கள் செத்துக் கொண்டே இருக்கின்றன! பண்பாடு=கலாச்சாரம்! முகவரி=விலாசம்! காட்டு=உதாரணம்

எவனும் தமிழ்ப் பண்பாடு-ன்னு சொல்லுறது இல்ல! தமிழ்க் "கலாச்சாரமாம்"! அந்த அளவுக்கு கலப்படம் செய்து விட்டார்கள்!
பாடநூல்களிலேயே, "ஏக-தேச" உருவகம்-ன்னு தான் இருக்கு! ஏக்-தோ-தீன் உருவகம்-ன்னு மாத்தாம இருந்தாச் சரி!:(

இப்படி ஒவ்வொரு எழுத்தாய், சொல்லாய், பொருளாய் விட்டுக் கொண்டே இருந்தால்...
கடைசியில் துளு, செளராட்டிர மொழிகளுக்கு ஆன கதி தான், தமிழுக்கும் நேரும்!

அதனால் தான்.....கிரந்தக் கலப்பால், ஒவ்வொரு தமிழ்ச் சொல்லாக் காணாமல் போவதைத் தவிர்ப்போம்-ன்னு உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறது! மற்றபடி இதுல அரசியல் ஒன்னுமில்லை!
தமிழ்ச் சொற்கள் செத்துருக் கூடாது = அதான் இந்த முயற்சியில் கிடைக்கும் "நன்மை"!

நல்ல வேளை, நம் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் தொன்மத்துக்கும், பண்பாட்டுக்கும் அரணாய் இருக்கின்றன!
நாமும் ஆற்றின் கரையை அப்பப்போ வலுப்படுத்துவோம்! ஆற்றிலே மணலை அள்ளி அல்ல! :(முடிப்பாக.....

தமிழுக்கு எப்போதும் நெகிழ்வுத் தன்மை உண்டு!
பெயர்ச் சொற்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம் (இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே)! - ஏன்னா அவை தமிழ் மொழிக்கு வளஞ் சேர்க்கும் சொற்கள் அல்ல!

ஆனால்...
இந்த விலக்கு தனி நபருக்கும், சில நிறுவனக் குறியீடுகளுக்கும் மட்டுமே!

ஸ்ரீரங்கம் என்ற இடத்தின் பெயரை, திருவரங்கம் என்று புழங்கலே அழகு! அவனையே எண்ணி வாழ்ந்த ஆழ்வார்கள் எங்காவது ஸ்ரீரங்கம்-ன்னு பாடி இருக்காங்களா?.........தேடினாலும் கிடைக்காது!
"ஆவியே அமுதே, திருவரங்கத்து அரவணைப் பள்ளியானே"-ன்னு தான் இருக்கும்! ஆவியே அமுதே, ஸ்ரீரங்க ஸ்ரீவத்ஸ ஸ்ரீநிவாஸா -ன்னு இருக்காது :)

* Mr. Gnana Skandan என்ற நண்பரை, ஞானக் கந்தன் என்று நான் அழைக்க முயல்கிறேன்! ஆனால் அவருக்கு அது பிடிக்கவில்லை! என்ன செய்ய?
= அவர் பெயருக்கு நான் கட்டாயம் மதிப்பளிப்பேன்! I want to respect his name! ஞானஸ்கந்தன் என்றே அழைப்பேன்!
* அதே சமயம், இராமானுசன் என்று தானே விரும்பி எழுதுபவரை, எழுந்து நின்று, கரம் கூப்பி, வரவேற்பேன்!

மற்றபடி, பெயர்ச் சொல் அல்லாத பலப்பல கிரந்தச் சொற்கள்
- தஸ்தாவேஜ், கஷ்டம், சந்தோஷம்
இவற்றையெல்லாம்
- ஆவணம், கடினம், மகிழ்ச்சி
-ன்னு ஒலிக்கப் பழகிக் கொள்வதில் தவறே இல்லை!
கொஞ்சம் ஈடுபாடு தான் தேவை!.....நான் ஈடுபடப் போகிறேன்! நீங்கள்???
யானே தவமுடையேன்!
யானே தமிழ்ச் சொல்லால் சொன்னேன்!
பெருந்தமிழன் நல்லேன் பெரிது!!! (ஆழ்வார் பாசுரம்)


214 comments:

 1. My spl thanks to @iamkarki for inspiring கிரந்தம் FAQ!
  Also thanks to @tbcd @nchokkan @4sn @njganesh @jsrigovind @elavasam @scanman @ksrk @tparavai - The Gangs of Twitter! :)

  ReplyDelete
 2. நீ புரியாம‌ பேசிய‌துக்குதான் இந்த‌ ப‌திவுன்ற‌த‌ இப‌ப்டியும் சொல்ல‌லாமா? ஹிஹிஹிஹி

  ஜோக்ஸ் அபார்ட், ந‌ல்ல‌ ப‌திவு

  நான் பெய‌ர்ச்சொல் விஷ‌ய‌த்தில் ம‌ட்டுமே முர‌ண்டு பிடித்தேன். பிடிப்பேன்.

  ம‌ற்ற‌ப‌டி, இது ந‌ல்ல‌ விஷ‌ய‌ம்.

  ReplyDelete
 3. நல்ல கட்டுரை...வேதங்கள் கிரந்தத்தில் வாசிக்கும் போதுதான் ஸ்வரமாக வரும்..ஆகையால் நடைமுறையில் நல்ல தமிழில் உரையடுங்கள்.துறை சார்ந்தவர்கள் கிரந்தத்தை பயன்படுத்தட்டும்.இதனால் தமிழ் அழிவதில்லை.கிரந்தம் பயன்படும் இடத்தில் தமிழ் ஆர்வலர்கள் அதை எதிக்காமல் இருக்க வேண்டும்.அடியேனுடைய ஆசை அதுதான்...!

  ReplyDelete
 4. சரியான பார்வையில் அமைந்துள்ளது இப்பதிவு...

  "ராஜா ஜெய்சிங்" என்பதை எப்படி தமிழ்ப்படுத்தலாம்...

  ஆலோசனை ஏதும் உண்டா...??

  ReplyDelete
 5. அன்பு இரவிசங்கர்:-)

  கிரந்தம் மக்களால் ஏற்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. இனி இப்படி எல்லாம் தீர்மானம் போட்டு அதை ஒழிக்க இயலாது. இதனால் தமிழுக்கு துளி நன்மை இல்லை. ஆங்கிலம் புதிய எழுத்தை ஏற்பதில்லை என்பது உண்மை அல்ல. கிரந்தம் தம்ழில் கலந்து பல நூறு ஆண்டுகள் கழிந்தா பின்னர் தான் ஆங்கில எழுத்து J, W ஆங்கில அரிச்சுவடியில் கலந்தன. மலையாளம், தெலுங்கு என்ற புதிய மொழிகள் கூட காலத்தால் தமிழில் கிரந்தம் கலந்ததுக்கு பிற்பட்டவையே.அவை இன்று செம்மொழி கூட ஆகிவிட்டன.ஆனால் நாம் இன்னும் கிரந்தம் வேண்டுமா, வேண்டாமா என விவாதிக்கிறோம்.விவாதத்தால் பொழுது போகுமே ஒழிய மொழிக்கும், மக்களுக்கும் பலன் ஏதும் ஏற்படும் என தோன்றவில்லை

  ஜெர்மனியை செருமனி என எழுதினால் தமிழ் வளர்ந்துவிடுமா? சக்கரத்தை மீள்கண்டுபிடிப்பு செய்வதுக்கு ஒப்பான விஷயம் இது.

  ReplyDelete
 6. :)

  கிரந்த ஆதரவாளர்களை சீனாவில் கொண்டு போய் விட்டு சீன மொழியில் அவர்களுடைய பெயரை எழுதச் சொல்லனும்.

  ஈழவர்கள் ஜெர்மனியை யேர்மனி என்று எழுதிபுழங்குகிறார்கள், ஜானி யைக் கூட யானி ன்னு எழுதலாம் தப்பே இல்லை.

  எனக்கு சீனா அலுவலகத்தில் ஷன்னா(ன்) ன்னு பெயர் வைத்தார்கள், ஏனென்றால் அதைத்தான் அவர்களால் சரியாக பலுக்க முடியும், எனக்கு உபர்பாக இல்லை. சிங்கப்பூர் கூட சீனர்களுக்கு

  Chinese : 新加坡
  Pinyin : xīn jiā pō
  Literal Meaning : Singapore

  ஜின்ஜியபூ தான்.

  ஒரு மொழியின் ஒலி மொழிப் பேசுபவர்களுக்கு புரிந்தால் போதும், அயலர் பலுக்குதலுடன் ஒத்துப் போக வேண்டும் என்பதாக எந்த இலக்கணமும் இல்லை, மொழிப்பற்றிய அறிவு குறைந்தோர்கள் மட்டுமே தேவையற்ற பரிந்துரைகளை செய்துவருகிறார்கள்

  ReplyDelete
 7. கோவியாரே...

  ஜெர்மனின்னு எழுதினால் தமிழர்கள் யாருக்கும் புரியாதா?:-)

  காய்ச்சி என்பது கிரந்தம் நீக்கபட்ட தனிதமிழ் சொல்.கிரந்தம் கலந்த தமிழில் இதன் மூலம் என்னன்னு சொல்ல முடியுமா?

  ReplyDelete
 8. நல்ல பதிவு.

  இதில் ஒரு கோணம்: எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பு 1:1 என்று இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.

  சந்தோசம் என்று எழுதினாலும் சந்தோஷம் என்று உச்சரிக்கலாம்.

  ராமானுசர் என்று எழுதினாலும் ராமானுஜர் என்று உச்சரிக்கலாம்.

  பழக்கத்தின் மூலமாக எங்கு எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்வோம் (eg. Ghost, Rough)

  புது ஒலிகளை நம் நாக்குகளில் புழங்கவிடமாட்டோம் என்று பிடிவாதம் இல்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு எழுத்து வேண்டுமா என்பது தான் கேள்வி.
  அது சாத்தியமும் அல்ல.

  பங்கம் என்பதை bungam என்று இயல்பாகப் படிக்கிறோம். bungkam என்று உச்சரிப்பதில்லை.

  இதைப்போலவே பிற இடங்களில் ga/ka வித்தியாசங்களை நாம் பழக்கம் மூலமாகக் கற்றுக்கொள்வோம்.


  இவ்வளவு நீட்டி முழக்குகிறேன், ஆனால் என்னளவில் ஜ,ஷ பயன்படுத்துவதை எல்லாம் தவிர்ப்பேன் என்று தோன்றவில்லை. பழகிவிட்டது என்பது தான் உண்மையான காரணம். விஷயம் என்பதை 'விடயம்' என்று எழுதும்போது, அதை அப்படியே உச்சரிப்பதாக நினைப்பதால் ஒரு மனத்தடை ஏற்படுகிறது.


  என் நிலைப்பாடு: status quoவான ஜ, ஷ, ஹ அதுபாட்டுக்கு இருந்துவிட்டு போகட்டும். பெயர்கள் தவிர்த்து, சொற்களில் அவற்றின் பயன்பாடும் இயல்பாகவே தேய்ந்துவிடும் என்றே நினைக்கிறேன். ஸ -வை (பெயர்கள் தவிற) அனேகமாக யாரும் இப்போது பயன்படுத்துவதில்லையே.

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. ////ஜெர்மனின்னு எழுதினால் தமிழர்கள் யாருக்கும் புரியாதா?:-)
  //

  எம்சிஆர், பாக்கியராசு, ரசினிகாந்து ன்னு சொல்வது தமிழுக்கு நெருக்கமாக அமையும், சிறுநகர் மக்கள் அவ்வாறு தான் சொல்லுவார்கள், நாம ஆங்கிலம் படித்து பழகியதால் பிற மொழி எழுத்துகளை சொல்ல முடிகிறது, ஒரு சீனனுக்கு 'R' ல் தொடங்கும் அல்லது இருக்கும் சொற்களை பழக்கிப் பாருங்கள்.


  கிரமத்தில் குசுப்பு ன்னு சிரித்துக் கொண்டே சொல்லுவர்களே அன்றி 'குஷ்பு'ன்னு 'பஷ்ட'மாக ஒலிக்கமாட்டார்கள் கிராமத்தினர். அவங்க போகாத ஊரை ஜெர்மனி என்றால் என்ன யேர்மனி என்றால் என்ன சொல்லிவிட்டு திருப்பிக் கேட்டால் 'செருமனியோ என்னவோ' ன்னு தான் சொல்லுவாங்க. படிச்சவங்களுக்காக மொழிகளை வளைக்க அல்லது வளைக்கலாம் என்று பரிந்துரைக்க யாருக்கும் உரிமை இல்லை

  கிரந்தம் கலந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது என்றால் ஏன் லக்‌ஷமி யை நம்மவர்கள் இலக்குமி என்று எழுதிவந்தார்கள் அவர்கள் என்ன அறிவில்லாதவர்களா ?

  ReplyDelete
 11. // விஷயம் என்பதை 'விடயம்' என்று எழுதும்போது, அதை அப்படியே உச்சரிப்பதாக நினைப்பதால் ஒரு மனத்தடை ஏற்படுகிறது.//

  விஷயம், விடயம் உபரிச் சொல்லாத்தான் வழக்கில் இருக்கிறது, அது இல்லாமலே வரிகளை அமைக்க அல்லது பேசமுடியும். எ.க

  உங்களிடம் ஒரு விஷயம் பேசனும்

  உங்களிடம் ஒன்று கூறனும் அல்லது பேசனும்.

  இங்கே விஷயம் இன்றி இருக்கும் இரண்டாவது வரியின் பொருள் மாறவில்லை. இதே போன்றே அனைத்து விஷயம் நுழைக்கப்பட்ட வரிகளிலும் அவை தேவையின்றியே நுழைக்கப்பட்டு இருக்கின்றன.

  ReplyDelete
 12. //"ராஜா ஜெய்சிங்" என்பதை எப்படி தமிழ்ப்படுத்தலாம்...//

  ராஜா என்ற சொல்லே அரசன் என்ற சொல்லின் திரிபே,

  அரசன் > ராசன் > ராஜ அல்லது ராஜா

  ராஜா ஜெய்சிங்(கம்) - அரசன் வெற்றி அரிமா அல்லது மன்னர் வெற்றி அரிமா

  :)))))

  ReplyDelete
 13. KRS,

  நான் அவ்வபொழுது உங்களது எழத்துக்களை வாசிப்பேன். சிரமம் என்பதே ஒரு சம்ஸ்கிருத வார்த்தை. எனது நண்பன் ஒருவன் தன்னுடைய பெண் குழந்தைக்கு பெயர் தம்ழில சூட்ட விரும்பினான்... அவனுடைய பல தெரிவுகள் சம்ஸ்கிருத மூல சொற்க்கள். e.g. சந்திரா, கமலா போன்றவை. இது போல இன்றைய தமிழ்ர்களுக்கு எது தூய தமிழ் வார்த்தை என்றே தெரியவில்லை. இப்படி இருக்க க்ரந்தம் சேர்த்தல் என்ன சேர்க்க விட்டால் என்ன? தமிழை நான் நேசிக்கறேன் ஆனால் இது போன்ற பதிவுகளால் நாம் கால விரயம் தான் செய்கிறோமா?

  PS: Sanskrit verbal root śram: "to exert effort, labor or to perform austerity"
  ஆஹ்வனம் என்பது magazine என்று பொருள்...

  ReplyDelete
 14. கோவி கண்ணன்:விஷயம், விடயம் உபரிச் சொல்லாத்தான் வழக்கில் இருக்கிறது

  நஹீ.
  ஆஃப் த டாப் அஃப் மை ஹெட்:


  - அதுதானா விஷயம்?
  - அவன் விஷயன் தெரிஞ்சவன்
  - விஷயத்துக்கு வருவோமா?

  இந்த மாதிரி, உபரியா இல்லாம, நட்டநடுவாவும் வழக்குல இருக்கு.

  இதெல்லாம் வேற மாதிரி சொல்ல முடியாதான்னு கேட்டா, முடியும்தான். ஆனா அதில்ல விஷயம்!

  விஷயமோ, விசேஷமோ நான் சொல்ல வந்தது சொல்லின் தேவையைப் பத்தி இல்லை.
  இன்னிக்கு வஜ்ரம்ங்கறது புழக்கத்துல இல்லை. அதுனால வைரம்ன்னு எழுதுறதுல யாருக்கும் தயக்கம் இருக்காது.

  ஆனா விஷயம்ங்கறது தான் புழக்கத்துல இருக்குற உச்சரிப்புங்கறப்போ 'விடயம்' 'ன்னு எழுதறதுல ஒரு மனத்தடை இருக்கு ('விடயம்'னு எழுதி 'விஷயம்'னு படிக்கலாம்னாலுமே). அதைத்தான் சொன்னேன்.

  ReplyDelete
 15. ஈடுபடப்போகிறேன் எனச் சொல்லியிருக்கீங்க ரவி! ஸந்தோஷம்! உங்க அளவுல நீங்க செய்யற எதுவுமே சரிதான். சொல்லிட்டுத்தான் செய்யணும்ன்றது இல்லை! உலகத்தைத் திருத்த முயற்சி செய்வதைவிட நம்மை நாம் மட்டுமே செம்மை செய்துகொண்டால், எல்லாமே நன்றாகவே நடக்கும்! வாழ்க உங்கள் பணி!

  ReplyDelete
 16. In Bengali, Loki=Lakshmi, Suraj=Surya, Ajoda=Ayodhya, and so on ... Are they not proud of their language? .. Even in Hindi/Punjabi there are many words like Sapna (for Swapna) that are used commonly

  ReplyDelete
 17. @கார்க்கி
  //ஜோக்ஸ் அபார்ட், ந‌ல்ல‌ ப‌திவு//
  //ம‌ற்ற‌ப‌டி, இது ந‌ல்ல‌ விஷ‌ய‌ம்//

  நன்றி கார்க்கி! உன்னிடம் இருந்தே துவங்கட்டுமா? மங்களகரமா:))

  >இது ந‌ல்ல‌ விஷ‌ய‌ம்< = இது நல்ல சேதி, இது நல்ல பொருள், இல்லீன்னா இது நல்ல விடயம்!:)

  ReplyDelete
 18. @சாரல்
  //நல்ல கட்டுரை...நடைமுறையில் நல்ல தமிழில் உரையடுங்கள்.துறை சார்ந்தவர்கள் கிரந்தத்தை பயன்படுத்தட்டும்//

  தெளிவான புரிதலுக்கு நன்றி!

  //கிரந்தம் பயன்படும் இடத்தில் தமிழ் ஆர்வலர்கள் அதை எதிக்காமல் இருக்க வேண்டும்.அடியேனுடைய ஆசை அதுதான்...!//

  தமிழ் ஆர்வலர்கள் யாரும் கிரந்தத்தைக் கண்ணை மூடிக்கிட்டு எதிர்ப்பதில்லை-ங்க!
  அது வழக்குத் தமிழில் வந்து உட்கார்ந்து கொண்டு சேட்டை பண்ணும் போது மட்டுமே எதிர்க்கிறார்கள்!

  கிரந்தச் சுவடிகள், கல்வெட்டுத் தமிழறிஞர்கள்-ன்னு எத்தனையோ பேர் இருக்காங்களே!

  ReplyDelete
 19. //அகல்விளக்கு said...
  சரியான பார்வையில் அமைந்துள்ளது இப்பதிவு...//

  நன்றி!

  //"ராஜா ஜெய்சிங்" என்பதை எப்படி தமிழ்ப்படுத்தலாம்...//

  தமிழ்ப்"படுத்தலாம்" = தமிழாக்கலாம்-ன்னு சொல்லுவோமா?:)

  முதலில் ராஜா ஜெய்சிங் என்ற நபர் அதுக்கு உடன்படுகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்!
  உடன்பட்டால், ராசா செய்சிங்-ன்னு எழுதலாம்! வெற்றிக்கோ-ன்னும் எழுதலாம்!
  ஜெய்=வெற்றி ராஜா=கோ!

  ராஜா ஜெய்சிங் என்பவர் பழங்கால மன்னர்-ன்னா, அப்போ வெற்றிக்கோ-ன்னு எல்லாம் மாத்தீற முடியாது! வரலாற்றுக் குழப்பம் வரும்! ராசா செய்சிங் என்றே பலுக்கலாம்!

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. //எம்சிஆர், பாக்கியராசு, ரசினிகாந்து ன்னு சொல்வது தமிழுக்கு நெருக்கமாக அமையும், சிறுநகர் மக்கள் அவ்வாறு தான் சொல்லுவார்கள், நாம ஆங்கிலம் படித்து பழகியதால் பிற மொழி எழுத்துகளை சொல்ல முடிகிறது, ஒரு சீனனுக்கு 'ற்' ல் தொடங்கும் அல்லது இருக்கும் சொற்களை பழக்கிப் பாருங்கள்.
  //

  எம்ஜிஆர், பாக்கியராஜ், ரஜினி என்பதும் தமிழ் தான்.எந்த கிராமத்தில் இன்னும் எம்சிஆரு, ரசினி என்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை.சீனனுக்கு ஆர் வருதோ இல்லையோ, தமிழனுக்கு ஜே, ஜா எல்லாம் வருது. ஜெயலலிதா, ஜெயாடிவின்னு தான் எல்லோரும் சொல்கிறாரக்ளே ஒழிய செயா டிவின்னு சொல்லும் யாரையும் நான் பார்த்தது இல்லை.

  //கிரந்தம் கலந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது என்றால் ஏன் லக்‌ஷமி யை நம்மவர்கள் இலக்குமி என்று எழுதிவந்தார்கள் அவர்கள் என்ன அறிவில்லாதவர்களா ?//

  பேச்சு தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் இருக்கும் இடைவெளியே காரணம். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து நம் வலைபதிவுகள் மூலம் மட்டுமே தமிழ்நாட்டை பற்றி அறிய இயலும் பிற்கால தலைமுறையினர் "அந்த காலத்தில் தமிழர்கள் கணிணி என தான் புழங்கினார்கள்.கம்ப்யூட்டர் என யாரும் சொல்லவில்லை" என நினைத்து கொள்வார்கள்.

  சரி காய்ச்சி என்பது எதை குறிக்கும் தனிதமிழ் சொல் என கேட்டிருந்தேன்:-)பதிலை நானே போடுகிறேன்.அது ஹாஜி என்பதன் தனிதமிழாக்கம்.மக்களுக்கு ஹாஜி என்றால் புரியுமா இல்லை காய்ச்சி என்றால் புரியுமா>?

  ReplyDelete
 22. @செல்வன்
  //அன்பு இரவிசங்கர்:-)//

  சொல்லுங்க அன்புச் செல்வன் அண்ணா:)

  //கிரந்தம் மக்களால் ஏற்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது//

  மக்களிடம் கலந்து-ன்னு சொல்லுங்க! மக்களால் ஏற்கப்பட்டு-ன்னு சொல்லாதீக!
  இன்னிக்கும் தென் தமிழகத்தில், கிரந்தம் இல்லாமலே பலுக்குகிறார்கள்! = எலே ராசா, சோடிச்சிக்கிட்டு வாரியா? சில்லுனு இருக்கு...

  //இனி இப்படி எல்லாம் தீர்மானம் போட்டு அதை ஒழிக்க இயலாது//

  தீர்மானம் போட நான் என்ன திமுக-வா?:)
  யாரும் கிரந்தத்தை ஒழிக்கலை! தமிழை அதன் தன்மையில் இருக்க விடுகிறோம்! அவ்வளவே!

  //இதனால் தமிழுக்கு துளி நன்மை இல்லை//

  சும்மா அடிச்சி விடாமல்...எப்படி நன்மை இல்ல?-ன்னு சொல்லுங்க:)

  //தான் ஆங்கில எழுத்து J, W ஆங்கில அரிச்சுவடியில் கலந்தன//

  Nopes! Originally, both I and J repesented /i/, /iː/, and /j/; but Romance languages developed new sounds (from former /j/ and /ɡ/) that came to be represented as I and J
  http://en.wikipedia.org/wiki/J

  //மலையாளம், தெலுங்கு என்ற புதிய மொழிகள் கூட காலத்தால் தமிழில் கிரந்தம் கலந்ததுக்கு பிற்பட்டவையே. அவை இன்று செம்மொழி கூட ஆகிவிட்டன//

  he he! கிரந்தத்தைச் செம்மொழி ஆக்கச் சொல்லுறீயளா? :))
  தெலுங்கு, மலையாளம் போல் கிரந்தத்துக்கு மக்கள் "உணர்வு" கிடையாது! அது சும்மா ஒரு Robot! Not even Humanoid :)

  //ஆனால் நாம் இன்னும் கிரந்தம் வேண்டுமா, வேண்டாமா என விவாதிக்கிறோம்.விவாதத்தால் பொழுது போகுமே ஒழிய மொழிக்கும், மக்களுக்கும் பலன் ஏதும் ஏற்படும் என தோன்றவில்லை//

  பலன் ஏற்படாது-ன்னு என்பதை நிரூபியுங்கள்!
  நான் பதிவில் சொற்களைக் கொஞ்சம் கொஞ்சமாப் பறிகொடுத்து, அழிந்து போன மொழி-பண்பாடுகளைச் சொல்லி உள்ளேன்! பாக்கலையா?

  //ஜெர்மனியை செருமனி என எழுதினால் தமிழ் வளர்ந்துவிடுமா?//

  ஜெற்மனியைச் செருமனி-ன்னு எழுதினால் மக்கள் பலன் ஏற்படாமல் அழிந்து விடுவார்களா?:)

  //சக்கரத்தை மீள்கண்டுபிடிப்பு செய்வதுக்கு ஒப்பான விஷயம் இது//

  சக்கரத்தை அப்பப்போ மீள் கண்டு புடிக்கலாம்! அப்படிக் கண்டு புடிச்சது தான் Skating Wheel:)

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. This comment has been removed by the author.

  ReplyDelete
 25. கோவி அண்ணா-வுக்கு என் சிறப்பு நன்றி!
  ஆபிசில் ஆணி! இந்தப் பதிவைக் கொஞ்சம் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்! ஒலிக்கட்டும் முரசு! சங்கே முழங்கு:)

  ReplyDelete
 26. @ராதா
  வணக்கம் செல்வி ராதா! நலமா?:))

  //இந்த விஷயத்தில் என்னுடைய நிலைப்பாடு அருட்பிரகாச வள்ளலார் நிலைப்பாட்டுடன் ஒன்றிப் போகிறது//

  வள்ளலார் வடமொழி பத்திச் சொன்ன பாட்டை நான் இங்கே குடுக்கட்டுமா?:)

  //அன்னாரை, "தமிழ் உங்கள் தாய்மொழியாக இருக்க சமஸ்கிருதத்தில் எல்லாம் பாடல்கள் எழுதலாமா?" என்று சிலர் கேட்டனராம்.
  அதற்கு அவர், "தமிழ் என் தாய்மொழி என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் சமஸ்கிருதம் என் தந்தை மொழி" என்றாராம்//

  சூப்பரோ சூப்பர்!

  அப்படிச் சொன்ன வள்ளலார், எங்கே சொன்னாரு-ன்னு தரவு கேக்க மாட்டேன்! ஆனா ஒரு சங்கதியை மறக்காமப் பாருங்க! - வள்ளலார் வடமொழிப் பாட்டை எழுதுவேன்-ன்னு தான் சொன்னாரே தவிர, எங்கவாச்சும் வடமொழியைத் தமிழில் புகுத்தி எழுதுவேன்-ன்னு சொன்னாரா?

  வள்ளலார் தம் தமிழ்ப் பாடல்களில் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தினாரா? அறியத் தருவீர்களா?

  ReplyDelete
  Replies
  1. ஜோதி ஜோதி ஜோதி சுயம்
   ஜோதி ஜோதி ஜோதி பரம்
   ஜோதி ஜோதி ஜோதி அருள்
   ஜோதி ஜோதி ஜோதி சிவம்
   வாம ஜோதி சோம ஜோதி
   வான ஜோதி ஞான ஜோதி
   மாக ஜோதி யோக ஜோதி
   வாத ஜோதி நாத ஜோதி
   ஏம ஜோதி வியோம ஜோதி
   ஏறு ஜோதி வீறு ஜோதி
   ஏக ஜோதி ஏக ஜோதி
   ஏக ஜோதி ஏக ஜோதி

   ஆறாந்திருமுறை

   Delete
  2. வள்ளலார் காலத்தில், முற்றிலுமான தனித் தமிழ் இயக்கம் அவ்வளவாகப் பரவவில்லை!
   அதனால் "ஜோதி" என்பதை அப்படியே கைக் கொண்டார்; அவ்வளவு தான்!

   (அட, நானே, இந்தப் பதிவில், சில கிரந்தம் கலந்து எழுதியுள்ளேனே! கலப்பின் வீச்சு அப்படி)

   ஆனா அவர் கொள்கையின் அடிநாதம் என்ன? என்பது இங்கே இருக்கு!

   This comes in Thiruvarutpaa - urai nadai! http://www.vallalar.org/BooksTamil/11056
   ஆரியம் போன்ற கடின மொழிகளில் என்னுடைய மனத்தைப் பற்றவொட்டாது தடுத்துத்
   தமிழ்போல் இனிய எளிய மொழியினில் என்னுடைய மனத்தைப் பற்றுவித்த தேவரீர் பெருங்கருணைக்கு வந்தனம்!

   Delete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. @ராதா
  //தயவு செய்து பாரதியார் கதைகளை, கட்டுரைகளைப் படிக்கவும்//

  தமிழ் இந்து பற்றி எனக்கும் தெரியும்:)
  நான் சொன்னது பாரதியார் "கவிதைகள்"! கதை/கட்டுரை அல்ல! மேலும், >பாரதியார் கவிதையில் கூட கிரந்தம் காண்பது அரிது தான்<-ன்னு தான் சொன்னேன்! அரிது, அரிது :)

  'ஜ'ய பேரிகை கொட்டடா-ன்னு அவரு பாட்டு இருக்கு! அது தெரியாதா? அதான் "அரிது"-ன்னு குறிப்பிட்டேன்! Rare!

  ஆழ்வார்கள், கம்பன் கிட்ட காட்டுங்களேன் பார்ப்போம்!
  பதிவில் ஒரே ஒரு இடத்தில் சொன்னதை மட்டும் பிடிச்சிக்கிட்டு, தாங்கள் செய்யும் 'கிரந்த நிரூபணம்' செல்லாது செல்லாது! :)

  இன்னிக்கி கோவி அண்ணாவும் நானும் ஒரே கட்சி! பழைய திருக்குறள் பதிவில் அவரோட போட்ட சண்டையெல்லாம் எப்பவோ போச்சு-ன்னு மறந்துடாமப் பேசுங்க:)

  ReplyDelete
 29. //மக்களிடம் கலந்து-ன்னு சொல்லுங்க! மக்களால் ஏற்கப்பட்டு-ன்னு சொல்லாதீக!
  இன்னிக்கும் தென் தமிழகத்தில், கிரந்தம் இல்லாமலே பலுக்குகிறார்கள்! = எலே ராசா, சோடிச்சிக்கிட்டு வாரியா? சில்லுனு இருக்கு... //

  தென் தமிழகத்துகாரர்கள் தானே சரவணா ஸ்டோர்ஸ், நெல்லை லாலா ஸ்வீட்ஸ் எல்லாம் நடத்துகிறார்கள்? படிக்காத மேதையை பெற்றவர்கள் கூட காமராஜர் என பெயர் வைத்தார்கள்.அவர்களுக்கா கிரந்தம் வராது?:-)

  //Nopes! Originally, both I and J repesented /i/, /iː/, and /j/; but Romance languages developed new sounds (from former /j/ and /ɡ/) that came to be represented as I and J
  http://en.wikipedia.org/wiki/J//

  J originated as a swash character to end some Roman numerals in place of i. A distinctive usage emerged in Middle High German.[3] Gian Giorgio Trissino (1478–1550) was the first to explicitly distinguish I and J as representing separate sounds, in his Ɛpistola del Trissino de le lettere nuωvamente aggiunte ne la lingua italiana ("Trissino's epistle about the letters recently added in the Italian language") of 1524.[4] Originally, both I and J repesented /i/, /iː/, and /j/; but Romance languages developed new sounds (from former /j/ and /ɡ/) that came to be represented as I and J; therefore, English J, acquired from the French J, has a sound value quite different from /j/ (which represents the sound in the English word "yet").

  அதாவது ஆங்கிலம் ஜேவை பிரேஞ்சுமொழியிலிருந்து கடன் வாங்கியது..இது நடந்தது 16ம் நூற்றாண்டில்.இன்று ஜேவை ஆங்கில எழுத்து இல்லை என சொல்ல முடியுமா?அல்லது அவர்கள் தான் ஜேவை ஒழித்து தூய ஆங்கிலம் காக்க இயக்கம் நடத்துகிறார்களா?

  //பலன் ஏற்படாது-ன்னு என்பதை நிரூபியுங்கள்!
  நான் பதிவில் சொற்களைக் கொஞ்சம் கொஞ்சமாப் பறிகொடுத்து, அழிந்து போன மொழி-பண்பாடுகளைச் சொல்லி உள்ளேன்! பாக்கலையா?//

  இத்தனை பேர் கிரந்தம் கலக்காமல் பேசுகிறீர்கள்...எழுதுகிறீர்கள்..உங்கள் யாருக்கும் என்ன பலனும் ஏற்பட்டது போல தெரியவில்லை.அப்படி எதாவது பலன் ரகசியமா ஏற்பட்டிருந்தால் எனக்கும் சொல்லுங்க:-)

  மற்றபடி ஒரு மொழியை அழிக்க மிக சிறந்த வழி மொழிதூய்மை பேணுவது தான்.தமிழை இதே போல சுத்திகரிக்க முனைந்தால் அப்புறம் அது சமஸ்கிருதம் மாதிரி யாராலும் பேசபடாத மொழியாகிடும்.

  ReplyDelete
 30. மற்றபடி வி.எஸ்.கே ஐயா சொல்லுவது போல ஒவ்வொருவரும் தமக்கு விருப்பபட்ட உச்சரிப்பில் பேசலாம், எழுதலாம். ஈழதமிழர்கள் டிவியை ரீவி என்கிறார்கள், டொரொண்டோவை ரொரொன்றோ என்கிறார்கள்.அதே போல நாமும் ஜெருமனியை செருமனி, ஜெர்மனி என இரு விதங்களில் எழுதலாம்.பல்வேறு நடைகள் இருப்பது ஒரு மொழிக்கு இயல்பானதே.

  ReplyDelete
 31. @கோவி அண்ணா
  //கிரந்தம் கலந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது என்றால் ஏன் லக்‌ஷமி யை நம்மவர்கள் இலக்குமி என்று எழுதிவந்தார்கள் அவர்கள் என்ன அறிவில்லாதவர்களா ?//

  சூப்பரு! கையைக் குடுங்க!

  இலக்குமி-ன்னு எழுதும் போது மனத்தடை ஏற்படுது-ன்னா, திருமகள்-ன்னு தெள்ளு தமிழில் எழுதலாம்! மனமிருந்தால் வழியுண்டு!!

  தமிழில் அர்ச்சனை பண்ணும் போது அதிர்வு வரல, மனத்தடை ஏற்படுது, சமஸ்கிருத அர்ச்சனையில் தான் எனக்கு லயிக்குது-ன்னா வீட்டிலேயே அர்ச்சனையை வச்சிக்கிட்டும்! :)

  பல 108 திருத்தலங்களில் மகாலக்ஷ்மித் தாயார்-ன்னே இருக்காது!
  * திருமாமகள் நாச்சியார்
  * அலர் மேல் மங்கை
  * என்னைப் பெற்ற தாயார்
  * செங் கமல வல்லி
  * பெருந் தேவித் தாயார்
  * உய்ய வந்த நாச்சியார்
  - இப்படித் தான் இருக்கு! "மனத்தடை" வருதா என்ன? சாமி குத்தம்! புத்தி போட்டுக்கோங்கோ :))

  ReplyDelete
  Replies
  1. மணிப்பவள நடை பேணியவர்கள் கூடவே தூய தமிழ்ப்பெயரையும்
   பேணினர் என்பதை ஒப்புக்கொண்டால் சரி

   Delete
  2. இங்கே "ஒப்புக் கொள்வதில்" எந்த வெட்கமும் இல்லை!
   மறைமலை அடிகளுக்கும் முன்பே... ஜாமாத்ரு முனி = மணவாள மாமுனிகள் -ன்னு தூய தமிழில் மாற்றிக் கொண்டவர்கள் தான், வைணவப் பெரியவர்கள்!

   ஆனால், அவர்கள், "தமிழை முன்னிறுத்தினாலும்", சமயத் துறையில் இருந்ததால், வடமொழியை விட முடியவில்லை!

   ஆனால் அந்த நிலை எங்களுக்கு இல்லை! வடமொழியை முற்றும் புறம் தள்ளி, தெய்வத் தமிழோடு இருந்தாலே போதும்!
   உலக வளர்ச்சிக்கு உடன் ஆங்கிலம் போதும்! தேவ பாஷையான செத்த மொழிகள் தேவை இல்லை!:)

   Delete
 32. // dagalti said...
  நல்ல பதிவு. இதில் ஒரு கோணம்: எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பு 1:1 என்று இருக்கவேண்டும் என்று அவசியமில்லை//

  புரிதல