Sunday, July 10, 2011

நாயன்மார் அல்லாத ஒரு நாயன்மார்: இளையராஜா!

பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்!
பணி நிமித்தமாக Rio de Janeiro பயணம்! ஓர் இரவு, சற்று நலமின்மை! அதனால் ஒரு முக்கியமான பதிவு miss ஆயிருச்சி!

அப்படியென்ன நாளு-ன்னு கேக்கறீங்களா? = Jul-05-2011 (ஆனி மகம்)! ஒரு பெரும் தமிழ்ச் சான்றோரின் குரு பூசை (நினைவு நாள்)!
= யாரு? நாயன்மாரா? அல்ல!
= நாயன்மார் அல்லாத நாயன்மார்! யார் அவர்?


இசைஞானி இளையராஜா செய்த Thiruvaachaga Oratorio அருமையானதொரு படைப்பு!
ஒரு பழந் தமிழ்ப் பதிகத்தை, மேற்கத்திய இசை முறையில் தருவதற்கு நுண்ணிய இசைப் புலமை வேண்டும்! ஆனால்.....

இளையராஜா செய்தது Symphony-ஆ அல்லது Oratorio-வா? என்பதில் சர்ச்சைகள் எழுந்து,.......இன்றும் பேசப்படுகின்றன!
இளையராஜாவே அது Oratorio என்று சொல்லி விட்ட பின்பும்....விளம்பரப் பேரலை எழுப்பக் கருதி, ஒரு சிலர் பரப்பிய Symphony என்ற வணிக முயற்சிகளால், சர்ச்சையாகிப் போனது!
ஆனால் இந்தச் சர்ச்சைகளாலெல்லாம், தமிழ் உலகம் தந்த இசை ஞானியான, இளையராஜாவின் புகழுக்கு, ஒரு போதும் மாசு கற்பித்து விட முடியாது!

List of symphony composers என்று இங்கே Wiki-இல் பார்த்தால், ராஜாவின் பெயர் இருக்காது! ராஜாவே ஒப்புக் கொண்டதும் கூட!
அது வெறும் Oratorio, அவ்வளவே! இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

* Oratorio = நீண்ட இசைக் கோர்வை! புனிதப் பொருட்கள் மீதான இசை! பொதுவாகத் தேவாலயங்களில் பாடவல்லவை! நாடக மேடைகளுக்கு அல்லாமல், இசை மேடைகளுக்கு மட்டுமே உரித்தானது!
* Symphony = அதனினும் நுட்பமான இசைக் கோர்வை! கடினமான இலக்கணங்கள் கொண்டது! நான்கு அசை வடிவுகள் கட்டாயம் இருக்க வேண்டும்!
1. opening sonata or allegro
2. slow movement, such as adagio
3. minuet with trio or solo sonata
4. and... allegro, rondo, or sonata

Symphony=பாடல் வரிகள் முக்கியம் அல்ல! இசை வடிவம் தான் முக்கியம்!
ஒரு முறை வடிவமைத்து விட்டால், பின்னர், திறமையுள்ள யார் வேண்டுமானாலும், அதை மீள் நடத்தி இசைக்கலாம்!
Beethoven, Schubert, Mendelssohn, Schumann போன்றவர்களின் சிம்பனிக்கள் இன்றும் இசைக்கப்படுகின்றன! பீத்தோவன் 5th Symphony புகழ், உலகம் அறிந்த ஒன்று!

இந்தியர் ஒருவர் எழுதிய சிம்பனி என்று பார்த்தால்...
இது வரை ஒருவரே! KS Sorabji! ஆனால் இதன் கடினத்தால், இன்று வரை இசைக்கப்படாமலேயே இருக்கிறது! :(

நம்ம இசைப் பொக்கிஷமான ராஜா செய்தது என்ன?
* தான் அமைத்த ஒரு Oratorio இசைக் கோர்வைக்கு ஏற்றவாறு, வரிகளைத் தேடியது! திருவாசகத்தில் எல்லா வரிகளும் அப்படியே பொருந்தி விடுமா?
* அதனால் தன் இசைக்கு/மெட்டுக்குப் பொருந்தி வரக் கூடிய திருவாசகப் பாடல்களை மட்டுமே தேடி, இசையூடே அமைத்து, மாலையாய்க் கட்டினார்!
= அதுவே அழகிய திருவாசக ஓரட்டோரியோ!


இந்நேரம் கண்டு புடிச்சிட்டு இருப்பீங்க-ன்னு நினைக்கிறேன்! :)
யார் அந்த "நாயன்மார் அல்லாத நாயன்மார்"?

தெய்வத் தமிழிசைக்கு வந்து வாய்த்த பெருமகனார் = திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்னும்படியான...
*** திருவாதவூரர் (எ) மாணிக்கவாசகர்!

சைவ சமயக் குரவர் நால்வருள் மூத்தவர் என்றாலும்...
ஏனோ 63 நாயன்மார்களில், மாணிக்க வாசகரை வைக்கவில்லை! :(((
என்னளவில் இது பெருங்குறையே!

நாயன்மார் கதைகளில் இவர் வரலாறு வராததால், இளந் தலைமுறைக்கு, இவர் கதையைத் தனியே தான் சொல்ல வேண்டும்!:(

சைவத் திருமடங்கள், காலத்துக்கு ஏற்றவாறு மாறி....
மாணிக்கவாசகப் பெருமானின் கதையை, பெரிய புராணத்தோடு சேர்த்து, மற்ற அடியவர் கதைகளோடு ஒன்றாக்கி விட வேணும் என்பது என் பேரவா! சிவ சிவ! துணை நின்றருள்!


மாணிக்கவாசகரின் தெள்ளு தமிழ்த் திருவாசகத்தை,
* இளையராஜாவின் இசையிலும்,
* மரபு வழியிலான ஓதுவார் திருமுறையிலும்
ஒருமுறை கேட்போமா? வாங்க! வாங்க! கேட்டுக்கிட்டே வாசகத்தை வாசிங்க!

8ஆம் திருமுறை - திருவாசகம் 35 - அச்சப் பத்து:
(மாணிக்க வாசகர் அரசாங்கப் பணத்தைக் "களவாடியவர்" என்று கிளம்பிய போது, அவர் மனம் அச்சப்பட்டதா? என்ன சொல்லிற்று? அதுவே இந்த அச்சப் பத்து!)

புற்றில் வாள் அரவும் அஞ்சேன்!
பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்!
கற்றை வார் சடை எம் அண்ணல்
கண் நுதல் பாதம் நண்ணி....

புற்றில் இருக்கும் கொடும் பாம்பு? = அஞ்ச மாட்டேன்!
பொய்....இன்று பலருக்கு, மெய் போல் தோன்றினாலும் = அஞ்ச மாட்டேன்!
கட்டிய சடையான், நெற்றியிலே கண் உடையவன்,
என் அண்ணல்...அவன் பாதங்களை அடைந்து விட்டு...

மற்றும் ஓர் தெய்வம் தன்னை
உண்டென நினைந்து-எம் பெம்மாற்(கு)
அற்றிலா தவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சு மாறே!!

ஈசனை அடைந்த பின்னர், "மற்ற தெய்வங்களும் உண்டு" என்று...என் பெருமானிடத்திலே அற்று இல்லாதவர்கள் (உறுதியான பற்று இல்லாதவர்கள்)...
இவர்களைக் கண்டு மட்டுமே, அம்மா! நான் அச்சப் படுகிறேன்!

ஓதுவார் தருமபுரம் சுவாமிநாதன் குரலில்...அதே பாடல்...

வன் புலால் வேலும் அஞ்சேன்!
வளைக் கையார் கடைக்கண் அஞ்சேன்!
என்பெலாம் உருக நோக்கி
அம்பலத்து ஆடு கின்ற

மாமிச வேடர்களின் வேல் = அஞ்ச மாட்டேன்!
வளையல் பெண்களின் காமப் பார்வை = அஞ்ச மாட்டேன்!
எலும்பும் உருகுமாறு பார்த்துக் கொண்டே இருப்பேன்! யாரை?

என் பொலா மணியை ஏத்தி
இனிது அருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சு மாறே!!

தில்லைச் சிறு அம்பலத்தில் ஆடுகின்றான்! துளையற்ற மணி = ஈசன்!
அவனைப் போற்றி, அவன் அருளைப் பருகாமல் இருப்பவர்கள்...
அன்பே இல்லாத அவர்களைக் கண்டு மட்டுமே, அம்மா! நான் அச்சப் படுகிறேன்!


என்ன மக்கா, பாடலைப் படித்தும் + கேட்டும் இன்புற்றீர்களா?

'மற்ற தெய்வங்கள்' என்று சில கருத்துகள் வந்தாலும்...மொத்த திருவாசகத்தையும், இதைக் கொண்டே, அவசரப்பட்டு எடை போட்டு விடாதீர்கள்! :)
இது ராஜா, அவர் இசைக்குப் பொருந்தி வந்ததால் மட்டுமே எடுத்துக் கொண்டது! அதுவும் தீவிரமான மன உளைச்சலில் இருக்கும் போது, மாணிக்க வாசகர் பாடியது! அந்தச் சூழலையும் நோக்க வேணும்!

என்னமாச் சொல்லாட்சி பாருங்கள்! பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்!
* பொய் உரைக்கும் அரசியல்வாதிகள், மெய் போல் காட்டும் வித்தைகளை அஞ்ச மாட்டேன்-ன்னும் கொள்ளலாம்!
* நாம் நம்பிய ஒரு உள்ளமே, பொய்யை, மெய்யோ? என்று எண்ணி, என்னை மறுதலித்து விட்டால்? = அப்போதும் அஞ்ச மாட்டேன்-என்கிறார்!

கோபம் வேறு வருகிறது! இப்படி ஒரு இக்கட்டில் சிக்க வைத்து விட்டானே ஈசன்!
அரசாங்கப் பணத்தை எடுத்து ஆலயம் அமைத்து விட்டேன் என்று பேசுகிறார்களே! ஐயோ...........
அன்பில்லாத அவரின் மனப்போக்கைக் கண்டே அஞ்சுகிறேன்! அஞ்சுகிறேன்!.....என்று மொத்தம் 10 பாடல்கள்=அச்சப் பத்து!

மாணிக்கவாசகரின் கதை?

பொதுவாக, எல்லா நாயன்மார்களின் நினைவுநாள் போதும், பெரிய புராண புனிதப் பூச்சுக்கள்/ மிகைகளைக் களைந்து, மூலநூலில் உள்ளது உள்ளவாறு, இக்காலத்துக்கும் ஏற்றாற் போல் சொல்வேனே!
இன்று எங்கே அந்தக் கதை? மாணிக்கவாசகரின் கதை?

= நாயன்மார் அல்லாத நாயன்மார் திருவடிகளே சரணம்!
எங்கள் தமிழிசை வாழ வந்த, மாணிக்க வாசகப் பெருமான் திருவடிகளே சரணம்!


தொடர்புடைய பதிவு: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ?

59 comments:

 1. நாயன்மார் அல்லாத ஒரு நாயன்மார்: இளையராஜா!" பற்றிய பகிர்வு மனம் நிறைத்தது. நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. சைவ சமயக் குரவர் நால்வருள் மூத்தவர் என்றாலும்...
  ஏனோ 63 நாயன்மார்களில், மாணிக்க வாசகரை வைக்கவில்லை! :(((

  அப்படிஎன்றால் நாயன்மார் பெயரில் சேர்த்தால் தான் பக்தனா?
  நாயன்மார்கள் பக்திக்கு உதாரணமாக இருப்பவர்கள் . அதற்காக பக்தர்கள் எல்லாருமே நாயன்மார்கள் பெருமை வேண்டும் என்ற அவசியமில்ல

  இதை நிருபிக்கவே மாணிக்கவாசகர் முதலானவர்கள் நாயன்மார்களாக என்ற அடையாளத்தை ஏற்காமல் இருக்கிறார்கள் என்பது என்னளவில் கருத்து

  அதனால் மாணிக்கவாசகர் நாயன்மாரில் இல்லை என்பதில் எனக்கு துளியும் வருத்தம் இல்ல :))

  அப்படி சேர்த்தாக வேண்டும் என்றால் பல ஆயிரம் பேர்களை சேர்க்க வேண்டும் 63 பெருக்கே மக்கள் குழம்புறாங்க! எல்லாரையும் சேர்த்தால் அவள்தான் . :))

  ReplyDelete
 3. @ராஜேஷ்
  //அப்படிஎன்றால் நாயன்மார் பெயரில் சேர்த்தால் தான் பக்தனா?//

  உங்கள் புரிதலின் அடிப்படையே தவறு! இவ்வாறு சொல்வதற்கு என்னை மன்னிக்கவும்!
  நாயன்மார் என்பது 'அந்தஸ்து'ப் பெயர் கிடையாது! நாயன்மார் என்று ஒரு பக்தரைக் குறிப்பிடுவதால் 'அந்தஸ்து' கிடைத்துவிடப் போவதில்லை!

  இங்கே முக்கியமான புள்ளி என்னவென்றால், நாயன்மார் கதைகள் = அடியவர் கதைகளின் "ஒன்றுபட்ட தொகுப்பு"! பெரியபுராணம் என்னும் தொகுப்பைப் படிக்கும் பலரும் 63-வரை மட்டுமே படித்து, மாணிக்க வாசகரை அறிந்து கொள்ள ஏது இல்லாமல் போகும்! அவர் கதையைத் தனியாகத் தான் சொல்ல வேண்டும்! அப்படித் தனிமைப்படும் போது, எத்தனை தூரம் எல்லாரையும் சென்று சேரும் என்று தெரியாது!

  மற்ற அடியவர்களுக்காக மட்டுமே, மாணிக்க வாசகரை, 63 அடியவர் தொகுப்பிலே வைக்க வேண்டுவது! மாணிக்க வாசகரின் தனிப்பட்ட 'அந்தஸ்துக்கு' அல்ல! இதைப் பதிவிலும் சொல்லி உள்ளேன்!

  ReplyDelete
 4. அருமையான பகிர்வு தல !

  ReplyDelete
 5. //அப்படி சேர்த்தாக வேண்டும் என்றால் பல ஆயிரம் பேர்களை சேர்க்க வேண்டும் 63 பெருக்கே மக்கள் குழம்புறாங்க! எல்லாரையும் சேர்த்தால் அவள்தான் . :)//

  "பல ஆயிரம் பேர்களையும்" பொதுவாகச் சேர்த்து 'தொகை அடியார்கள்' என்ற தொகுப்பும் உள்ளது! பதிவின் கடைசியில் உள்ள சுட்டியைப் பாருங்கள்!

  நாயன்மார்கள் காலத்துக்குப் பின்னால் வந்த பல பக்தர்கள் இருக்கிறார்கள்! அருள்நந்தித் தம்பிரான், உமாபதி சிவம் போன்ற சந்தான குரவர்களும் உண்டு! ஆனால்.....
  இவர்கள் வாழ்க்கைச் சம்பவங்கள் பலவும், பின்னால் வரும் அடியார்களுக்கு ஊக்கம் தருவதற்காக நிகழவில்லை! தன்னளவில் மட்டும் அவர்கள் பக்தி நின்று விட்டது!

  ஆனால் மாணிக்க வாசகர் வாழ்வியல் அப்படி அல்ல! அவர் பலருக்கும் மூத்தவர் என்பதோடு மட்டுமில்லாமல், அவர் வாழ்க்கைச் சம்பவங்கள், பின்னால் வரும் பல அடியார்களுக்கு ஒரு ஊக்கமுள்ள எடுத்துக்காட்டு! தேவார வரிகளிலேயே அவர் கதையை உவமையாக அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொல்லுவார்கள்!

  அதனால் 'எல்லாரையும் சேத்தா அவ்ளோ தான்' என்ற வாதம் செல்லாது!
  மாணிக்க வாசகரின் கதை, 63 அடியவர்களோடு, சேர்த்து அறியப்பட வேண்டிய திருக்கதை!

  ReplyDelete
 6. //அப்படி சேர்த்தாக வேண்டும் என்றால் பல ஆயிரம் பேர்களை சேர்க்க வேண்டும்//

  சடையனார்-இசை ஞானியார் = இவர்கள் இருவரும் சுந்தர மூர்த்தி நாயனாரின் அம்மா-அப்பா என்பதைத் தவிர வேறு எந்தவொரு அடியவர் கதையும் இவர்களுக்கு இல்லை! இருந்தாலும் அவர்களைச் சேக்கிழார் சேர்க்கிறார்! :(

  சடையனார்-இசைஞானியார், பிற அடியவர்களுக்கு கொடுத்த ஊக்கத்தைக் கூடவா, மாணிக்க வாசகர் தரவில்லை? :(

  மாணிக்க வாசகர் நாயன்மார் வரிசையில் இடம் பெறுவது ஏதோ தனிப்பட்ட அந்தஸ்துக்காக இல்லை! அவர் கதை, இனி வரும் அடியவர்களுக்கு எல்லாம் "ஒருங்கே" போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே!

  ReplyDelete
 7. நல்லதொரு பதிவில் எப்போதும்போல ஒரு வில்லங்கத்தையும் சேர்த்து வைத்து அளிச்சிருக்கீங்க ரவி.

  இளையராஜா இன்றைய உலகுக்கு செய்த நல்லதொரு சேவை திருவாசக அறிமுக ஒலிப்பேழை. அதை யார் [அவர் உட்பட] எப்படி அழைத்தாலும், அது ஒரு நல்ல அறிமுகம் இன்றைய தலைமுறைக்கு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதனாலெல்லாம் ஒரு நாயன்மாராக ஆக அவரே விரும்ப மாட்டார்!:))

  100 பாடல்களுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடிய கம்பர், மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதனை 1000 பாடல்களுக்கு ஒன்று என மாற்றியதாக ஒரு கதை உண்டு.

  அதுபோலத்தான் வாதவூரரின் கதையும்!

  63-உடன் 64-ஆக இல்லாமல் அவரது கதை தனித்தே இருப்பது நல்லது எனப் பெரியோர்கள் கருதியிருப்பின், அது எனக்கு சரியாகவே படுகிறது.
  புத்தகத்தின் அளவைப் பார்த்துவிட்டே, பெரியபுராணத்தை முழுதும் படிக்காமல் இருக்கும் பலரை நான் அறிவேன்.

  மாணிக்கவாசகர் தனித்தே நிற்கட்டும்!

  ReplyDelete
 8. @ராஜேஸ்வரி
  நன்றி , மனம் நிறைந்தமைக்கு மகிழ்ச்சி:)

  ReplyDelete
 9. // Narasimmarin Naalaayiram said...
  great post:)//

  ராஜேஷ் - நன்றி! பாசுர வகுப்பெல்லாம் எப்படிப் போகுது? ஊருக்கு வந்தா எனக்கும் சொல்லிக் குடுப்பீங்களா?

  ReplyDelete
 10. @கோபி - நன்றி தல! நலமா?

  ReplyDelete
 11. @SK ஐயா, வாங்க!
  //எப்போதும்போல ஒரு வில்லங்கத்தையும் சேர்த்து வைத்து அளிச்சிருக்கீங்க ரவி//

  ஹா ஹா ஹா
  வில்லங்கமா? வேல்-அங்கம்-ன்னு சொல்லுங்க!:) என் முருகனை மீறி ஒன்று சொல்வேனா?

  //இளையராஜா...இதனாலெல்லாம் ஒரு நாயன்மாராக ஆக அவரே விரும்ப மாட்டார்!:))//

  நானும் இளையராஜாவை "நாயன்மார்"-ன்னு சொல்லலையே! பதிவின் தலைப்பு அப்படி ஒரு ஊகத்தைக் குடுத்ததா? :)
  "நாயன்மார் அல்லாத நாயன்மார்=மாணிக்க வாசகர்! அவரைப் பற்றி இளையராஜா" - இதான் சொன்னேன்!

  //63-உடன் 64-ஆக இல்லாமல் அவரது கதை தனித்தே இருப்பது நல்லது எனப் பெரியோர்கள் கருதியிருப்பின்//

  பெரியோர்கள் அப்படிக் கருதக் காரணம் என்ன என்றும் சொல்ல வேண்டுவது அவர்கள் கடமை அல்லவா?
  சடையனார்-இசைஞானியார் செய்த சிவத் தொண்டு என்ன? சுந்தரமூர்த்தி நாயனாரை ஈன்றது மட்டும் தானா? எதனால் அவர்களை நாயன்மார் வரிசையில் வைக்க முடிந்தது, சேக்கிழாரால்?

  //புத்தகத்தின் அளவைப் பார்த்துவிட்டே,பெரிய புராணத்தை முழுதும் படிக்காமல் இருக்கும் பலரை நான் அறிவேன்//

  புத்தகத்தின் அளவைப் பார்த்தா, பொன்னியின் செல்வனை யாரும் படிப்பதில்லையா என்ன? சிறு சிறு பகுதிகளாக வருவதில்லையா?

  நாயன்மார்களில் = கண்ணப்ப நாயனார் கதையைக் கேளுங்கள்! பலரும் சொல்லுவாங்க! மாணிக்க வாசகர்-ன்னு சொல்லுங்க! பேரு தான் தெரியும்! வாழ்க்கை பலருக்கு அறிய இயலவில்லை!

  பிட்டுக்கு மண் சுமந்ததே மாணிக்க வாசகருக்குத் தான்-ன்னு பலருக்கும் தெரியாது!
  உங்களைப் போல அறிஞர்களுக்கு மட்டுமே தெரியும்! எளியவர்களுக்கு?

  ReplyDelete
 12. //மாணிக்கவாசகர் தனித்தே நிற்கட்டும்//

  இது உங்கள் கருத்து!
  நான் என் அவாவினை முன் வைத்தேன்! அவ்வளவே!

  இது குறித்து ஒரு முறை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் பேசியுள்ள போது, அவரும் இந்தத் தேவையை ஒப்புக் கொண்டார்!

  //மாணிக்கவாசகர் தனித்தே நிற்கட்டும்//

  அடியார்க்கும் அடியேன்! அடியார்க்கும் அடியேன் - என்று அடியவர்களை ஒட்டியே, ஈசனும் நிற்கிறான்! அதனால் மாணிக்க வாசகர் "தனித்து நிற்கட்டும்" என்பதை மனம் ஒப்பவில்லை! அடியார் சூழ இருக்கும் காட்சி, அற்புதத் திருக்காட்சி!

  ReplyDelete
 13. பிட்டுக்கு மண் சுமந்தது மாணிக்கவாசகரா? திருவிளையாடல் படத்தில் சிவனான சிவாஜி தானே மண் சுமந்தார். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி வாங்கினது சொக்கன் இல்லையா?

  ReplyDelete
 14. என் பொலா மணி - இதைப் படிச்சா பொல்லாதவன்னு சொன்ன மாதிரி தோணலை இரவி. குறைந்தது இந்த இடத்தில்; வேறு எங்காவது மாணிக்கவாசகர் இறைவனைப் பொல்லாதவன்னு சொல்லியிருக்கலாம்; அப்படி சொல்றதும் வழக்கம் தான். ஆனா இங்கே 'துளைக்கப்படாத மணி' என்ற பொருள் வருகிறதோ என்று தோன்றுகிறது. பெரியவர்கள் என்ன பொருள் சொல்லியிருக்கிறார்களோ?!

  ReplyDelete
 15. நக்கீரரே (இந்திரன்)!

  இரவி சொன்னது சரி தான். நீங்கள் சொன்னதும் சரி தான். தூக்கக் கலக்கத்தோடு படிக்கிறீர்களா? :-)

  ReplyDelete
 16. //இந்திரன் said...
  பிட்டுக்கு மண் சுமந்தது மாணிக்கவாசகரா?//

  ஹா ஹா ஹா
  பாத்துக்கிட்டீங்களா SK ஐயா? இம்புட்டுத் தான் மாணிக்க வாசகர் அறிமுகமாகி இருக்காரு, எளிய மக்களுக்கு! இதத் தான் சொன்னேன்!

  சமய அறிஞர்கள், அதிலும் குறிப்பாகச் சைவ சமய அறிஞர்கள், 'அறிஞர்கள்' லெவல்-லயே யோசிப்பது தான் பிரச்சனை! எளியவருக்கு இறங்கி வந்து இரங்கல் அல்லவோ ஈசன்?

  சில பேருக்குப் பிடிக்கா விட்டாலும் சொல்லியே ஆக வேண்டும்!
  அடியவர்களை முன்னிறுத்தி சமயம் தழைக்கச் செய்யும் பழக்கம் வர வேண்டும்!
  நம்மாழ்வார் எங்கும் போக மாட்டார்! அவரைத் தேடி பதினோரு கோயில் இறைவன்களும், பதினோரு கருடன் மேலேறி வருவது இன்றும் நடக்கிறது! அடியவரைத் தேடி இறைவன் ஓடி வருகின்றான்! என்னைப் பாடு, என்னைப் பாடு என்று கெஞ்சி, வாங்கிக் கொண்டு போகின்றான்! :)

  ஏன்? = "தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!"
  வெறும் பாட்டில் இருந்தால் போதாது! பலரும் காண, பழக்கத்தில் இருக்க வேண்டும் என்பதே என் ஆராத அவா!

  ReplyDelete
 17. //63-உடன் 64-ஆக இல்லாமல் அவரது கதை தனித்தே இருப்பது நல்லது எனப் பெரியோர்கள் கருதியிருப்பின், அது எனக்கு சரியாகவே படுகிறது.//

  இங்கு பெரியோர்கள் என்பதற்கு சேக்கிழார் and/or அவர் சம்மந்தம் உள்ளவர்கள் எனப் பொருள் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மாணிக்கவாசகர் தனியாக இருப்பதே அவருக்குப் பெருமை என்று அவர்/அவர்கள் கருதினர் என்னும் லாஜிக் படிப் பார்த்தாலும் மாணிக்கவாசகரைப் பற்றித் தனி நூல் ஆர் அட்லீஸ்ட் பெரிய புராணத்திலேயே ஒரு சிறப்புப் பிரிவு கொடுத்திருக்க வேண்டுமே. அப்படி இல்லாமல் முழு இருட்டடிப்பு செய்திருப்பது உங்கள் வாதத்தை வலுவிழக்கச் செய்கிறதே...

  இதன் பின்னணியில் இன்னதென்று இதுவரை அறியப்படாத காரணம் இருக்க வேண்டும்.

  ReplyDelete
 18. //இந்திரன் said...
  பிட்டுக்கு மண் சுமந்தது மாணிக்கவாசகரா? திருவிளையாடல் படத்தில் சிவனான சிவாஜி தானே மண் சுமந்தார்//

  ஆமாம்! சிவாஜி தான் சொமந்தாரு! அவரு கையெல்லாம் புட்டு வாசம் வீசுமே :))

  இந்திரா...பிட்டுக்கு மண் சுமந்தது ஈசன் தான்! ஆனால் அது யார் பொருட்டுத் தெரியுமா?=மாணிக்க வாசகர் பொருட்டு!
  அவரைச் சிறை மீட்கத் தான் இத்தனை நாடகம், இத்தனை களேபரம்! :) அதைத் தான் சொன்னேன்! :)

  ReplyDelete
 19. எனக்கு இன்னும் புரியலையே. பிட்டுக்கு மண் சுமந்தது யாரு. சிவனா? மாணிக்கவாசகர? அல்லது இருவரும் இருவேறு சந்தர்ப்பங்களில் சுமந்தனரா?

  ReplyDelete
 20. நம்ம கூடல் விவாதம் நட்டாற்றிலே நிற்கிறதே. நாளைக்கே கரைக்கு இழுக்க ஆரம்பிக்கலாமா? கண்ணபிரான் கண்ணசைவுக்கு வெயிட்டிங் .....

  ReplyDelete
 21. பின்னொரு நாள் மாணிக்கவாசகரைப் பற்றி விரிவான பதிவு போடுங்கன்ன. எளியோனும் அவர் varalaatrai அறிய ஆவல். அந்த அறியப்படாத 'காரணம்' அல்லது ஊகங்கள் உங்கள் உள்ளறிவுக்கு எட்டும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 22. //ஹா ஹா ஹா
  பாத்துக்கிட்டீங்களா ஸ்K ஐயா? இம்புட்டுத் தான் மாணிக்க வாசகர் அறிமுகமாகி இருக்காரு, எளிய மக்களுக்கு! இதத் தான் சொன்னேன்!//

  பரவாயில்லை ரவி! அவர் கிண்டல் செய்து கேட்டதையும், அறியாமை ரகத்தில் சேர்த்துட்டீங்களே! :)))

  ReplyDelete
 23. குமரன். 4 நாள் லீவு கேட்டேங்க.. அப்புறம் அட்டேண்டன்சே போடலையே :):)

  ReplyDelete
 24. ஐயோ சாமி. நான் கிண்டல்லாம் செய்யலை. மெய்யாலுமே சின்னப் பையனுக்கு தெரியாது vsk சார்.

  ReplyDelete
 25. //இது உங்கள் கருத்து!
  நான் என் அவாவினை முன் வைத்தேன்! அவ்வளவே!//

  இது உங்கள் அவா!
  நான் என் கருத்தினை முன்வைத்தேன்.
  அவ்வளவே!:)) .

  ReplyDelete
 26. //மனம் ஒப்பவில்லை! //

  உங்கள் மனம் ஒப்பவில்லை. எனக்கு அதில் பிரச்சினை இல்லை. அவாவும் இல்லை.
  63 நாயன்மார்களும் கோவிலின் ஒரு மூலையில் எங்கோ இருக்க, மாணிக்கவாசகர் இறைவனுடனேயே ஒன்றி நிற்கிறார்.

  எந்த அளவுகோலை வைத்து அறுபத்துமூவர் வைக்கப்பட்டனர் என்பது வைத்தவருக்கே தெரியும். அதுவே பெரிய புராணம். இனி அதில் சேர்க்க நினைப்பவை எல்லாம், பிற்சேர்க்கையாகத்தான் இருக்கும். கம்பராமாயணத்தில் செருகப்பட்ட மிகைப்பாடல்கள் போலத்தான் ஆகும்.

  ReplyDelete
 27. // நம்மாழ்வார் எங்கும் போக மாட்டார்! //

  இந்தச் சைவ, வைஷ்ணவச் சண்டைக்கு நான் வர விரும்பவில்லை. எனக்கு இருவரது செயல்பாடு மீதும் மதிப்பு உண்டு.

  ReplyDelete
 28. திரைப்படங்களில் வந்ததால் சில கதைகள் பலருக்கும் தெரிந்திருக்கிறதே தவிர, மற்றபடி நாயன்மார் கதைகள் அனைத்துமே அனைவருக்கும் தெரிவதில்லை என நினைக்கிறேன்.

  அவை தெரியாதவர்க்கும் கூட மாணிக்கவாசகரைப் பற்றித் தெரியும்.

  அவரை நாயன்மாராக நீங்கள் வைத்துப் பாடுவதில் எனக்கு மறுப்பும் இல்லை!

  ReplyDelete
 29. @SK ஐயா
  இந்திரன் தமாஷூக்குச் சொல்ல வில்லையாம்! உண்மையிலேயே தெரியாது என்று சொல்கிறார் பாருங்கள்! ஆனால் கண்ணப்ப நாயனாரைக் கேளுங்கள்! தெரியும்-ன்னு சொல்லுவார்-ன்னு தான் நினைக்கிறேன்!

  //63 நாயன்மார்களும் கோவிலின் ஒரு மூலையில் எங்கோ இருக்க, மாணிக்கவாசகர் இறைவனுடனேயே ஒன்றி நிற்கிறார்//

  இந்தப் புள்ளியில் தான் உங்களுக்கும், எனக்கும் மாறுபாடான கருத்து-ன்னு நினைக்கிறேன்!:)

  மாணிக்க வாசகர் பாத்தீங்களா? வெளிய இல்ல, நடராஜர் சிலைக்குப் பக்கத்திலேயே இருக்காரு என்ற 'பெருமை' ஒரு புறம்! = உங்கள் நிலைப்பாடு!

  மாணிக்க வாசகர், இறைவனுக்குப் பக்கத்தில் நிற்பது பெரிதல்ல! அடியவர்கள் அனைவரும் அவர் திருக்கதை அறியும் வண்ணம் ஊக்கமாக நிற்பதே சமயத்தின் பயன்! = அடியேன் நிலைப்பாடு!

  //உங்கள் மனம் ஒப்பவில்லை. எனக்கு அதில் பிரச்சினை இல்லை அவாவும் இல்லை//

  ha ha ha
  Thatz fine sk ayya! we all have different tastes and itz fine too! Purpose is what matters - illaiyaa? Thanks for your understanding on this aRiya chiRuvan :)

  ReplyDelete
 30. @குமரன்
  //என் பொலா மணி = 'துளைக்கப்படாத மணி'//

  ஓ! பொல்லுதல்-ன்னா துளை (தொண்டி) போடுதல்-ல்ல? உம்ம்ம், ஆனா அது என்ன துளை போடாத மணி? சம்பந்தமே இல்லாத உவமையா? புரியலை! விளக்குங்களேன்!

  //பெரியவர்கள் என்ன பொருள் சொல்லியிருக்கிறார்களோ?!//

  SK ஐயா! ஹெல்ப் ப்ளீஸ்!

  ReplyDelete
 31. @இந்திரன்
  //கண்ணபிரான் கண்ணசைவுக்கு வெயிட்டிங் .....//

  அடிங்க! :)
  கூடல்-ல்ல போய்ப் பாருங்க!

  //பின்னொரு நாள் மாணிக்கவாசகரைப் பற்றி விரிவான பதிவு போடுங்கன்ன//

  நியாயமா, நான் இந்தப் பதிவிலேயே அவர் கதையைச் சொல்லி இருக்கணும்! முடியல! நேத்து காலைல தான் ஊருக்கு வந்தேன்!

  //அந்த அறியப்படாத 'காரணம்' அல்லது ஊகங்கள் உங்கள் உள்ளறிவுக்கு எட்டும் என்று நினைக்கிறேன்//

  :)
  வேணாம்! சரியான தரவில்லாமல் என் ஊகங்களைச் சொல்ல மாட்டேன்!
  அப்படியே தரவோடே சொன்னாலும், மனக் கசப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு! :)

  ReplyDelete
 32. குமரன் சொல்வதே சரி எனச் சொல்லுகிறது இந்த உரை. முழுமையான மாணிக்கம், துளையிடப்படாத மாணிக்கம். எனும் பொருளில் சிவபெருமானைப் போற்றுகிறார் வாதவூரர்.

  வலிமையான மாமிசம் பொருந்திய வேற்படைக் கும் அஞ்சமாட்டேன். வளையலை அணிந்த பெண்களுடைய கடைக் கண் பார்வைக்கும் அஞ்சமாட்டேன். எலும்புகளெல்லாம் உருகும் படியாகப் பார்த்துப் பொன்னம்பலத்தில் நடிக்கின்ற, எனது துளை யிடப்படாத மாணிக்கத்தைத் துதித்து அவனது திருவருளை நன்கு நுகர மாட்டாத, அன்பற்றவரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

  ReplyDelete
 33. //பெரிய புராணம். இனி அதில் சேர்க்க நினைப்பவை எல்லாம், பிற்சேர்க்கையாகத்தான் இருக்கும். கம்பராமாயணத்தில் செருகப்பட்ட மிகைப்பாடல்கள் போலத்தான் ஆகும்//

  கம்ப ராமாயணத்தில், அவனவன் நடுவில் செருகியது வேறு!

  அகநானூறுக்கும், புறநானூறுக்கும் சம்பந்தமே இல்லாமல், கடவுள் வாழ்த்தைச் செருகலையா?:(

  ஆனால், இங்கே அப்படியல்ல!
  மாணிக்க வாசகர் மூலநூலில் இல்லை, எனினும் அடியவர் அறியும் பொருட்டு, இதுவும் சேர்த்து ஒருங்கே வைக்கப்படுகிறது என்று சொல்லிட்டுத் தானே வைக்கப் போகிறோம்?:) மனம் இருந்தால் மார்க்கமுண்டு! :)

  ReplyDelete
 34. //திரைப்படங்களில் வந்ததால் சில கதைகள் பலருக்கும் தெரிந்திருக்கிறதே தவிர...//

  கண்ணப்பர் கதை சிவாஜி நடிக்கவில்லையே! ஆனாலும் அனைவரும் அறிந்துள்ளனர் அல்லவா?

  //மற்றபடி நாயன்மார் கதைகள் அனைத்துமே அனைவருக்கும் தெரிவதில்லை என நினைக்கிறேன்//

  SK-உடன் இந்த விஷயத்தில் உடன்படுகிறேன்! மானக்கஞ்சாற நாயனார்-ன்னா யாருக்கும் தெரியாது! ஏன்-ன்னா கண்ணப்பன் போல், அது ஆழமான கதை இல்லை! ஆனால் மாணிக்க வாசகர் அப்படி அல்லவே! எத்துணை திருப்பங்கள் கதையில்?

  ReplyDelete
 35. //நானும் இளையராஜாவை "நாயன்மார்"-ன்னு சொல்லலையே! பதிவின் தலைப்பு அப்படி ஒரு ஊகத்தைக் குடுத்ததா? :)//

  யெஸ். அது எப்பிடின்னா ஒன்னும் தெரியாத பப்பா மாதிரிக் கேக்குறீங்க. நீங்களே ஒரு தடவை படிச்சுப் பாருங்க. தலைப்பை (மட்டும்) படிக்கும்போது அத்தகைய புரிதல் தான் வருகிறது. அப்பிடியான்னு நடிக்கக்கூடாது.... உங்களுக்குத் தெரியாம இருக்க வாய்ப்பே இல்ல. வில்லங்கமா தலைப்பு வைக்கிறது தான் உங்க வழக்கம். (நல்லா தான் இருக்கு)

  ReplyDelete
 36. //இந்தச் சைவ, வைஷ்ணவச் சண்டைக்கு நான் வர விரும்பவில்லை.//

  ஹிஹி! இதுக்குத் தான் பதிவில் சொல்லவே நான் பயந்த காலங்கள் உண்டு! எல்லாருக்கும் நல்ல பிள்ளையா, அடக்கி வாசித்த காலம் :)
  சர்ச்சையில் சிக்காத ஒரே பதிவர் - என்று கோவி குடுத்த பட்டம்:))

  SK ஐயா
  இதுல என்ன சைவ-வைணவச் "சண்டை"?

  ஒன்றில் இருக்கும் நல்லதை எடுத்துக் காட்டி, அதைப் போல் அமைத்துக் கொள்வது நல்லது தானே?=Benchmarking என்று சொல்லுவார்கள்! இதைப் போய் "சண்டை" என்று பதிவுலகில் சிலர் பாவிப்பது...இன்று வரை நான் புரிந்து கொள்ளாத புதிர் :(

  நாயன்மார் வரிசை முறை பிடிச்சி இருக்கு, ஆழ்வார் வரிசை முறையை விட நல்லா இருக்கு-ன்னும் பல முறை சொல்லி இருக்கேன்!
  ஏன்-ன்னா பாசுரம் எழுதியவர்கள் மட்டுமே ஆழ்வார்கள்! ஆனால் ஒன்றுமே எழுதாமல், பக்தியில் ஒழுகியவர்களைக் கூட நாயன்மாரா வச்சிருக்காங்க-ன்னு publicஆ சொல்லி இருக்கேன்!

  ஆனா, அதுக்கு, அப்போ வைணவர்கள் கோச்சிக்கிட்டாங்க! இப்போ நீங்க வருத்தப்படறீங்க!

  ஆக மொத்தம், ஒரு பக்கமாத் தான் நிக்கணும் போல! நிறுவனப்படுத்தல் என்பதற்குள் நிற்க வேணும்...இல்லீன்னா அவரும் இல்லாது, இவரும் இல்லாது...அனாதை தான் போல நானு :((

  முருகா...பயந்த தனி வழிக்கு, நீயே என் வாழ்க்கைத் துணை!

  ReplyDelete
 37. @SK ஐயா
  பதிவில் தவறாகச் சொல்லி இருந்தால் என்னை மன்னியுங்கள்! என் மனம் உங்களுக்குத் தெரியும்-ன்னு நினைக்கிறேன்! என்ன செய்ய, அப்படியே பழகிட்டேன்!

  //அவரை நாயன்மாராக நீங்கள் வைத்துப் பாடுவதில் எனக்கு மறுப்பும் இல்லை!//

  மிகவும் நன்றி, புரிந்துணர்வுக்கு!

  //முழுமையான மாணிக்கம், துளையிடப்படாத மாணிக்கம்//

  நன்றி SK ஐயா மரபு வழி விளக்கத்துக்கு! பதிவிலும் மாற்றி விடுகிறேன்!
  புரிதலோடு கூடிய உரையாடலுக்கு,மிக்க நன்றி!

  ReplyDelete
 38. @இந்திரா
  // வில்லங்கமா தலைப்பு வைக்கிறது தான் உங்க வழக்கம். (நல்லா தான் இருக்கு)//

  ஹா ஹா ஹா
  குமரன் இதைக் கன்னா பின்னா-ன்னு வழி மொழிவாரு பாரேன்!
  நான் வழக்கம் போல, என் தோழன் இராகவன் கிட்டயே போயி ஆறுதல் தேடிக்கறேன் :))

  ReplyDelete
 39. பெரிய புராணம் சிவத்துக்கு அர்ப்பணம்... (சேக்கிழாரால் எழுதப்பட்டாலும் அவர் காப்புரிமை கோரமுடியாது) அடியார் பக்தியை மக்களுக்கு அறிவிப்பதே அதன் நோக்கம். சைவ மென்மையின் பொருட்டு மாணிக்க வாசகரைச் சேர்ப்பதால் நிறைவே அன்றிக் குறையொன்றும் இல்லை. . .

  பாடப் புத்தகங்களில் திருத்தங்கள் செய்யப்படுவது இல்லையா? காலத்துக்கு ஏற்ப வேண்டிய பாடங்கள் சேர்க்கப்பட்டு தரம் உயர்த்தப் படுவது இல்லையா?

  ReplyDelete
 40. கூடலில் இட்டிருக்கு

  ReplyDelete
 41. //ஆக மொத்தம், ஒரு பக்கமாத் தான் நிக்கணும் போல! நிறுவனப்படுத்தல் என்பதற்குள் நிற்க வேணும்...இல்லீன்னா அவரும் இல்லாது, இவரும் இல்லாது...அனாதை தான் போல நா//

  இந்த விஷயம் தான் எனக்கும் புரியவில்லை. ஒரு கட்சியில் சேர்ந்து விட்டால் அந்தக் கட்சி செய்வ'தெல்லாம்' நேர்மையானது சொல்வ'தெல்லாம்' சரியானது என்று மேடை போட்டுப் பேசும் நாலாந்தர அரசியல்வாதிகளைப் போல்தான் இருக்க வேண்டுமா? நமக்கென்று சுய சிந்தனை இருக்கக்கூடாதா? சரி தவறை எடை போடும் தராசை நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் ஒப்படைத்திருக்க அதை கொண்டு போய் அடமானம் வைப்பது ஏனோ....


  என்னுடைய கொள்கைகளுடன் பெரும்பாலும் ஒத்துப்போகும் கொள்கைகளைக் கொண்டிருப்பதால் இந்தக் கட்சியில் இருக்கிறேன்.

  வேறுபாடு வரும் பொது சுட்டிக்காட்டுவேன்-எதிர்ப்பேன்-கேள்விக்கு உட்படுத்துவேன் என்னும் அற நேர்மை எல்லோருக்கும் வருவது எந்நாளோ....

  ReplyDelete
 42. இந்திரன்,

  இரவி சொன்னது: பிட்டுக்கு மண் சுமந்ததே மாணிக்க வாசகருக்குத் தான்.

  நீங்க படிக்கும் போது 'பிட்டுக்கு மண் சுமந்ததே மாணிக்க வாசகர் தான்'னு படிச்சீங்க போல. பிட்டுக்கு மண் சுமந்தது ஈசன் தான்.

  ஐயம் தீர்ந்ததா நக்கீரா?

  (லீவு இன்னும் முடியலை. விரைவில் வருகை பதிக்கிறேன்)

  ReplyDelete
 43. இரவி,

  அது தான் ஊரறிஞ்சதாச்சே! குமரன் 'கண்ணா பின்னா'ன்னு தான் புலம்புவேன்னு! :-) (இதுக்கு விளக்கமெல்லாம் கேக்கக் கூடாது; சொல்லணும்!)

  ReplyDelete
 44. @இந்திரா
  //வேறுபாடு வரும் பொது சுட்டிக்காட்டுவேன்-எதிர்ப்பேன்-கேள்விக்கு உட்படுத்துவேன் என்னும் அற நேர்மை//

  இது இந்தக் காலத்தில் Business, Professionalism லேயே இருப்பதில்லை! 'மதத்தில்' இருக்குமா? :)

  அதற்கெல்லாம் வெட்காது, ஊதுகிற சங்கை ஊதிக்கிட்டுத் தான் இருக்கணும்...ஆழ்வார் சொல்வது போல, சொன்னால் விரோதமிது, ஆயினும் சொல்லுவேன்...:)

  Thatz what I used to tell many of my friends or "former" friends...//I dont blog for social networking//
  I wish to trigger hearts towards unbounded love to emperumaan!


  SK ஐயாவுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்! அவர், அவர் தரப்பு வாதங்களை வைத்தார் அவ்வளவே!Take it ez..:))

  பொதுவா, பல நண்பர்கள் என்னைப் புரிஞ்சிக்கிடுவாங்க!
  சிலர் மட்டும், யார் எழுதினாலும், இப்படியெல்லாம் நான் எழுதக் கூடாது என்ற எதிர்பார்ப்பு உண்டு! :)
  ஆனாலும் அவர்கள் நட்பை என்றுமே மதிப்பேன்!

  எதுவானாலும் என் ஆருயிர்த் தோழனின் கரங்கள் மட்டும் என் கண்களுக்கு என்றுமே உண்டு! முருகா!

  ReplyDelete
 45. //நீங்க படிக்கும் போது 'பிட்டுக்கு மண் சுமந்ததே மாணிக்க வாசகர் தான்'னு படிச்சீங்க போல.//

  அட ஆமா. சின்ன நேப் எடுத்திட்டேன் போலிருக்கு :)

  ReplyDelete
 46. //கூடலில் இட்டிருக்கு//

  எங்கே? எந்த சூழல்ல அப்படி துணிவா சொல்லியிருக்கேன்னு பாக்கத்தான். :-)

  ReplyDelete
 47. //சின்ன நேப் எடுத்திட்டேன் போலிருக்கு :)//

  இன்னுமா நீ பெரிய நேப் எடுக்கல? :))

  ஆராரோ ஆரரிரோ
  இந்திரனே கண்வளராய்!
  அண்ணாவின் பல்கலையில்
  அயர்ந்தேநீ கண்ணுறங்கு! :))

  ReplyDelete
 48. நானும் தலைப்பைப் படிச்சுட்டு திருவாசகம் சிம்பொனி படத்தைப் பார்த்துட்டு இளையராஜாவைத் தான் நாயன்மார்ன்னு இரவி சொல்றாருன்னு நினைச்சிகிட்டேன். படிக்கத் தொடங்குன பின்னாடி தான் 'ஓ இது ஏற்கனவே இரவி சொன்னது தான். வாதவூராரைச் சொல்றார்'ன்னு புரிஞ்சிக்கிட்டேன். :-)

  ReplyDelete
 49. தம்பி.. நானும் எளியவன் தான்.. முதலில தலைப்பை பார்த்ததும் ... என்ன இப்படி சொல்லீடுச்சு ரவின்னு தோணுச்சு.பிறகு பதிவை ப்படிச்ச உடன் தான் சில உண்மைகள் தெரிஞ்சது.. வாரியார் எழுதின பெரிய புராண விரிவுரை எப்பவோ படிச்சது..இப்ப நேரமின்மையால வாசிப்பு அதிகமாக முடியாத போது, இப்படி பதிவு படிச்சு விளக்கை தூண்டி விட்டுக்கணும் போல..

  ReplyDelete
 50. @சரவணன் அண்ணா
  //முதலில தலைப்பை பார்த்ததும் ... என்ன இப்படி சொல்லீடுச்சு ரவின்னு தோணுச்சு//

  ஹா ஹா ஹா
  சரி, ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி நடிச்சது போதும்! (ஓக்கே இந்திரா?:)

  வேணும்-ன்னே தான் அப்படித் தலைப்பு வச்சேன்!:)
  இதை ட்விட்டரில் அறிவிச்சதும், அத்தனை ராஜா ரசிகர்களும் இங்க வந்துட்டாங்க! அங்கிட்டும் விவாதம் வேற! :)

  அடிப்படையில் இது ராஜா + மணிவாசகர் - இருவரும் கலந்து கொள்ளும் பதிவு! அதான்:)
  ராஜாவின் திருவாசகமும் சொல்லி ஆகணும்! மணிவாசகர் பற்றியும் பேசி ஆகணும்!

  >நாயன்மார் அல்லாத ஒரு நாயன்மார்: இளையராஜா!< என்றால் நாயன்மார் அல்லாத ஒரு நாயன்மார் (மாணிக்கவாசகர்), அவரைப் பற்றி இளையராஜா என்பது பொருள்! :)

  ReplyDelete
 51. @குமரன் அண்ணா சொல்வது மிகவும் சரி
  //படிக்கத் தொடங்குன பின்னாடி தான் 'ஓ இது ஏற்கனவே இரவி சொன்னது தான். வாதவூராரைச் சொல்றார்'ன்னு//

  படிக்கத் தொடங்குன பிறகு...பதிவில் இருந்து முடிவுக்கு வாங்க! தலைப்பில் இருந்து அல்ல:))

  ReplyDelete
 52. தல. பதிவில இருந்து தான் முடிவுக்கு வர்றோம். ஆனா நிறைய பேரு தலைப்பைப் பாத்துட்டு தானே பதிவுக்கே வர்றாங்க. அதனால தான் இந்திரன் சொன்ன மாதிரி முந்தியே உங்க தலைப்பு வைக்கும் திறமையைப் பத்தி சொன்னேன். :-)

  ReplyDelete
 53. ’பொலா மணி’ துளையிடப்படாத மணி எனும் பொருளைத் தராது.

  ’பொல்லுதல்’ அணி செய்தல், உளி கொண்டு செதுக்குதல் எனும் பொருளைத்தரலாம்.

  பொல்லாப் பிள்ளையார் - விடங்க விநாயகர்

  ”என்னுடைக் கோவலனே, என் பொல்லாக்கருமாணிக்கமே” (அருளிச் செயல்)


  தோளா மணியைப் பசும்பொன்னைத்
  தூண்டா விளக்கைத் தொழுவார்....
  (கச்சிக் கலம்பகம்)

  தோளாத மாமணியைத் தொண்டர்க் கினியானை,
  கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே
  (அருளிச் செயல்)

  தோளா மணி - துளையிடப்படாத மணி


  தேவ்

  ReplyDelete
 54. //பொல்லுதல் = உளி கொண்டு செதுக்குதல் = பொல்லாப் பிள்ளையார்//

  இதுக்குத் தான் ஒவ்வொரு பதிவுக்கும் தேவ் ஐயா வேணுங்கிறது! நன்றி ஐயா!:)

  நானும், என்னடா இது, ஈசனைப் போய், துளைக்காத மணியே-ன்னா என்ன பொருள், துளைச்சா மதிப்பு கொறைஞ்சிடுமா என்ன-ன்னு நினைச்சேன்!
  இப்ப புரியுது! பொல்லா மணி = வேலைப்பாடுகள், நகாசு எல்லாம் செய்யாத இயற்கையான மாணிக்கம்!

  ReplyDelete
 55. @குமரன் அண்ணா
  //பதிவில இருந்து தான் முடிவுக்கு வர்றோம்//

  ஹிஹி! அது ஒங்களைச் சொல்லலை! பதிவை அவங்கவங்க மனசில் இருந்து படிப்பாங்களே! அவங்களுக்குச் சொன்னது! :)
  நீங்க பதிவில் இருந்து படிச்சாலுமே பத்து தரவு கேட்டுத் தானே ஒத்துப்பீங்க? - என் கிட்ட மட்டும் :))

  இதே அவன்-ன்னா மட்டும், தரவு குடுக்காம அடிச்சி விட்டாலும், ஆகா, உம்மைப் போல் வருமா-ன்னு பாராட்டுப் பத்திரம் வாசிப்பீங்க! என்ன செய்ய! கேஆரெஸ் பய புள்ள ராசி அவ்ளோ தான்! :))

  ReplyDelete
 56. This comment has been removed by the author.

  ReplyDelete
 57. This comment has been removed by the author.

  ReplyDelete
 58. நரியை பரியாக்கி, பரியை நரியாக்கியது போல் (கதையைத் தொட்டுவிட்டேனோ!!!), நாயன்மார் அல்லாத நாயன்மாரைவிடவும் பெரியவரைப் பற்றிக் கூறப் போகிறீர்கள்.
  நன்றி

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP