தமிழ்ச் சினிமாவிலே சங்க இலக்கியம்! - Part1
"தமிழ்ச் சினிமாவில் சங்க இலக்கியப் பாட்டு போட்டா எடுபடுமா? மிக மிகப் பழங்காலத் தமிழ்! அதைச் சினிமாவில் வைத்தால் செல்லுமா?
ஆடியன்ஸ் கல்லெறிவார்களே! இசை மெட்டில் பாடினால்? கல்லா?...பாறையே எறிவாய்ங்க!" :)
"டேய், அதெல்லாம் ஒண்ணுமில்லை மச்சி! காலேஜ் பொண்ணுங்க எல்லாரும் சங்கத் தமிழ் ட்யூனைத் தான் ஹம் பண்ணுறாங்கடா!
இதுவரை...தமிழ்ச் சினிமாவில் வந்த சங்கப் பாட்டு, எல்லாமே ஹிட்-ன்னா பார்த்துக்கோயேன்!"
"ஆகா! அப்படியா?"
"ஆமா! சில பேரு, தமிழ்-லயும் வீக்கு! காதல்-லயும் வீக்கு! இந்தப் பாட்டு வந்த போது, என்னைக்கும் இல்லாத திருநாளா, தமிழ் ஆசிரியருக்கு, பசங்க ரொம்பவே மரியாதை காட்டுனாங்க! எதுக்காம்? - இந்தப் பாட்டின் வரிகளை வாங்கி மனப்பாடம் செய்யத் தான்" :)
"உன்னி கிருஷ்ணனும் பாம்பே ஜெயஸ்ரீயும் பாடின பாட்டு! இருவர் படத்தில், AR ரஹ்மான் சங்கத் தமிழும் மெலடியுமாய்க் கொடுத்த மாஸ்டர் பீஸ்!
அப்படி என்ன, சங்கத் தமிழ்ப் பாடல்கள்-ல்ல அப்படி ஒரு மேஜிக் இருக்கு?
சங்க இலக்கியம் - அகம்/புறம் - என்று அகத்தைக் கரைத்து, புறத்தையும் கரைக்க வல்லது! ஏன்-ன்னா சங்க இலக்கியக் காதலில் இருப்பது = "உண்மை"!
சங்க காலக் கவிஞர்கள் எல்லாம் "வீறு" மிக்கவர்கள்!
"எங்கள் ரங்கநாயகியே, திருவாரூர் தமிழ்த் தேரே"-ன்னு.......தமிழை, பிச்சிப் போட்டு பிழைப்பு நடத்தத் தெரியும் 'வாலி-கூலி' அல்ல அவர்கள்!
பரிசில் பெற வேண்டி, மன்னனின் அவை நோக்கி அடகு வைப்பதெல்லாம் சங்க காலத்தில் அல்ல! பிற்காலத்தில் தான்! கலம்பகம், உலா -ன்னு அதன் பேரே 'சிற்றிலக்கியம்' என்று ஆகி விட்டது!
எழுபது வயது மன்னன் உப்பரிகையில் 'உலா' வந்ததைப் பாத்து, ஏழு வயசுப் பெண் பூப்படைந்தாள்-ன்னு உலா பாடிய 'கவிஞ்சர்கள்' எல்லாம் உண்டு! :)
நல்ல வேளை, இந்த மட்டமான போக்கை மாற்றி அமைத்து, தெய்வத் தமிழிசையில் திருப்பியது = ஆழ்வார்களும் நாயன்மார்களும்!
நாம் சங்க காலத்துக்கு வருவோம்! கிமு 300-கிபி 300!
ஆற்றுப்படை என்னும் தனிப் பிரிவே இருந்தாலும், அது கலைகளை ஆதரிக்கும் மன்னர்கள் எங்கெங்கு உள்ளனர் என்பதை மட்டுமே சொல்லும்!
கவிஞர்கள், பாணர், விறலியர் எல்லாரும் அங்கு சென்று, மன்னனிடம் உரையாடி, கலையாக்கம் தான் குடுத்தார்களே தவிர, 'துதி' பாடவில்லை!
கவிஞர்-பாணர்-விறலியரா? அப்படி-ன்னா? உதாரணமாகப் பார்க்கலாமா?
* கவிஞர் = கண்ணதாசன் (Lyric Writer)
* பாணர் = எம்.எஸ்.விஸ்வநாதன் (Music Composer cum Singer)
* விறலியர் = பத்மினி (Dancer cum Singer)
சங்க காலத்தில், எல்லாருமே இப்படி இசை நாடகங்களைச் செய்வதில்லை!
சில கவிஞர்கள், மன்னனையே எட்டிப் பார்க்காமல், சமூகத்தை மட்டும் பதிந்து வைக்கும் கவிகளாகவே இருந்து விட்டனர்!
அது போன்ற கவிஞர்களின் கவிதையில் இருக்கும் "காதல்" அப்படியே இதயத்தை அழுத்தி விடும்! அப்படியொரு வீச்சு! அதான் இன்னிக்கும் ஹிட்!
பார்க்கலாமா? - தமிழ்ச் சினிமாவில் சங்க இலக்கியம்!
1. நறுமுகையே நறுமுகையே, நீயொரு நாழிகை நில்லாய் - செம்புலப் பெயனீரார் - குறுந்தொகை!
படம்: இருவர்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
குரல்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: வைரமுத்து
ரஹ்மான், சங்கத் தமிழை, காதல் தமிழை, இப்படி மெலடியாக்கிக் கொடுப்பதில் வல்லவர்! வைரமுத்து-ரஹ்மான் கூட்டணியே, அதிகமான சங்கப் பாடல்களை, சினிமாவுக்கு கொண்டு வந்தது!
உன்னி கிருஷ்ணன் பாடுவது இனிமை! பாம்பே ஜெயஸ்ரீ, யாயும் ஞாயும் என்பதை யாயும் யாயும்-ன்னு மூச்சு இழுத்துப் பாடுகிறார்கள்! :)
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
நெஞ்சு நேர்ந்தது என்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்தது என்ன?
- இப்படிக் கவிஞர் வைரமுத்து எழுதினாலும், இதன் அடிப்படைப் பாடல் கீழே!
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர், "பிரிவர்" எனக் கருதி அஞ்சிய தலைவியின் குறிப்பு கண்டு, தலைவன் கூறியது:
யாயும் ஞாயும், யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும், எம்முறைக் கேளிர்?
யானும் நீயும், எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
- செம்புலப்பெயனீரார், குறுந்தொகை-40, குறிஞ்சித் திணை
எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா?
எங்க டாடியும் ஒங்க டாடியும் பார்ட்னர்ஸா?
எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம்? Made for Each Other மாதிரி?
செம்மண்ணில் தண்ணி கொட்டிருச்சுன்னா, அப்படியே ஒன்னா மிக்ஸ் ஆயிடுமே! அது போல, நம்ம ஹார்ட்டு ரெண்டும் ஒன்னாயிருச்சு ஸ்வீட் ஹார்ட்! - இதான் பொருள்!
சூப்பரு! பொருளை, இந்த மாதிரியே தேர்வில் எழுதினேன்னு வையி, நூத்துக்கு நூறு தான்! :)
ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு-ன்னு பாட்டு வருமே, அதுல கூட "செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது"-ன்னு கண்ணதாசன் இதே பொருள்-ல நடுவால எழுதி இருப்பாரு! ஆனால் அதை ஏனோ அண்ணன்-தங்கை உறவுக்குப் பாட்டா எழுதிட்டாரு!
செம்-புலம்-பெயல்-நீர் ன்னு காதலை வித்தியாசமாய் யோசித்து, "ஓவியத் தமிழ்" தீட்டியதால் தான் இந்தப் பாட்டு ஹிட்!
இதுல இன்னொரு குறிப்பும் இருக்கு! அந்த நீர் (பெண்), செம்மண்ணிலே (அவனிலே) கலந்த பின்னாலே, அவள் கலரே மாறி விடுகிறது! அவன் சிவப்பு, இவளுக்குள் முழுமையாக ஓடுகிறது! அப்படி ஸ்ட்ராங்கான கலப்பு! :)
என்ன செய்தாலும், அந்த நீரின் சிவப்பை இனி மாற்ற முடியுமா? அவனில் கலந்த அவள், அவனாகவே மாறி விட்டாள்!
2. தீண்டாய், மெய் தீண்டாய்! தாண்டாய், படி தாண்டாய்! - வெள்ளிவீதியார் - குறுந்தொகை!
படம்: என் சுவாசக் காற்றே
இசை: ஏ ஆர் ரஹ்மான்
குரல்: SPB, சித்ரா
வரிகள்: வைரமுத்து
இந்தப் பாட்டில், வைரமுத்து பாட்டை மாற்றி எழுதாமல், சங்கப் பாடலை அப்படியே முன்னிகையாக வைத்து விட்டார்!
அதைச் சித்ரா, மிக்க விரகத்தோடு, மிக இனிமையாகப் பாடுகிறார்! ஏக்கம் தொனிக்கும் எழில் தமிழ்! ரஹ்மானின் இசையில், பல இசைக் கருவிகள் பின்னணியில் வண்ண ஜாலம் காட்டுகின்றன!
பிரிவு ஆற்றாள் என்று கவன்ற தோழிக்கு, தலைவி உரைத்தது!
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால், நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது, என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல், என் மாமைக் கவினே
- வெள்ளி வீதியார், குறுந்தொகை-27, பாலைத் திணை
நல்ல பசும்பால்-ன்னா ஒன்னு கன்று குடிக்கணும்! இல்லை கலத்தில் கறக்கணும்! ஆனா இப்படி நிலத்தில் வீணே வழிகிறதே!
எனக்கும் உதவாமல், என்-அவருக்கும் உதவாமல், என் மாந்தளிர் மேனியும், வரியுள்ள அல்குலும் (பெண் உறுப்பும்), பசலையால், வீணே அழிந்து உழல்கிறதே!
(*அல்குல் = இடுப்பு (அ) பெண்ணுறுப்பு, அவ்வக் கவிதையில் இடத்துக்கு ஏற்றாற் போல்)
ஏதோ, "காமம்" பிடிச்சிப் போயிப் பாடிட்டாங்க-ன்னு நினைக்காதீங்க!:)
இந்தப் பாடல் மிகவும் சோகமான + புரட்சிகரமான பாடல்!
பொதுவாக, ஆண் கவிஞர்கள் வர்ணனைகள் பாடுவதுண்டு! பெண்களின் உறுப்புகளை வர்ணிப்பதுண்டு! ஆனால் பெண்கள்? = வெளிப்படையாக காமம் பற்றிப் பாடியதில்லை!
அதிலும் உறுப்பைக் காட்டி எல்லாம் பெண்கள் பாடியதே இல்லை! வெள்ளிவீதியார் என்னும் இந்தப் பெண் மட்டுமே இத்தனை "துணிவு"! தோழி கோதை என்னும் ஆண்டாளுக்கு முன்னோடி!
ஒளவையார், காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தை, பாரி மகளிர் போன்ற 25+ பெண்பாற் புலவர்கள் உண்டு! ஆனால் வெள்ளிவீதியாருக்கு மட்டுமே இத்துணை துணிவு!
வெள்ளி வீதியார் கதை, நெஞ்சைப் பிழியும் கதை!
அவள் தமிழ்த் திறன் கண்டு, மாற்றுக் கொள்கை கண்டு.....,தன்னிலும் அறிவுள்ள இவள் நமக்குச் சரி வருவாளோ?-ன்னு காதலைக் கைவிட்டு விட்டான் காதலன்!
அன்றிலிருந்து ஓடாய் அலைந்து அலைந்தே இவள் மாண்டு போனாள்!
காதலன் இருக்கும் ஊருக்கு நடையாய் நடப்பாள்! ஆனால் இல்லத்தின் சுவரிலே சாய்ந்து விட்டு வந்து விடுவாள்! அவனைத் தொல்லை செய்ய மாட்டாள்!
* சொல்பேச்சு கேளாத இவளைப் பிறந்த வீட்டிலும் புறக்கணித்து விட்டார்கள்!
* இவள் வித்தியாசமான மனசுக்கு நண்பர்களும் புறக்கணித்து விட்டார்கள்!
* ஆனாலும் நெஞ்சின் காதலை...இவள் மட்டும் கடசி வரை மறுதலிக்கவே இல்லை!
இவள் வாழ்ந்த அந்த "வாழ்வை", ஒளவையாரே வேறு சில பாடல்களில் பாடிக் கண்ணீர் விடுகிறார்!
இந்த வெள்ளிவீதியார் எழுதியவை தான், சங்க இலக்கியப் பெண் கவிதைகளிலேயே மிக அதிகம்!
அழகான சொல்லாட்சி & உவமை! ஓவியமாய்க் கவிதையை வரைந்த பெண்!
ஒவ்வொரு வரியும் 'சுருக்' என்று தைக்கும்! கீழ்க் கண்ட காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்!
வெட்ட வெயிலில், வெள்ளைப் பாறையில், வெண்ணைய் உருண்டை!
அதுக்குக் காவல் = கண்ணுள்ள, ஆனால் வாய் இல்லாத + கைகள் இல்லாதவன்!
பாறையிலே வெண்ணைய் உருக உருக,....
அதைக் காப்பாற்றக் கையும் இல்லை! பிறரை உதவிக்கு அழைக்க வாயும் இல்லை!
இடிக்கும் கேளிர், நும்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ, நன்றுமன் தில்ல!
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமண் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே!!
(- வெள்ளிவீதியார் - குறுந்தொகை 58 - குறிஞ்சித் திணை - கழற்றெதிர்மறை)
அந்த வெண்ணெய் கரைவதைப் பார்த்துப் பார்த்தே, ஏங்கி ஏங்கி...
அது போல்.............,
* அவன் என்னை விட்டுவிட்டான் என்று ஊரார்/நண்பர்கள் முன் வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல்,
* அதே சமயம் தன்னைத் தள்ளும் அவனை அள்ளவும் முடியாமல்...
இவள் தனிமைக் காட்டிலே....கரைந்து, கரைந்து.....முருகா!
வெள்ளிவீதியார் வாழ்க! முருகா, இவளுக்கு இன்பம் கொடு! பேதைக்கொரு "வாழ்வு" அருள், பெருமாளே!
* ரஹ்மான், இளையராஜா, MSV என்று பலரின் இசையில்...
* கலித்தொகை, திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம்...என்று....
* தமிழ்ச் சினிமாவி்லே சங்க இலக்கியம்.....அடுத்த பகுதியில் தொடரும்!
அதுவரை...சங்க இலக்கியம் பற்றிய எளிமையான குறிப்புகள்/வரலாற்றை, இங்கு காணலாம்! (இது சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள் என்பதற்கான குறிப்பு மட்டுமே)

அருமை
ReplyDeleteசங்க இலக்கியங்களை சினிமாவில் கையாண்ட விதத்தினை மிக அழகாக விளக்கினீர்கள். இளைஞர்கள் இதெல்லாம் சங்க இலக்கியம்னு தெரியாமலே ரசித்த பாடல்கள்.
ReplyDeleteவெள்ளி வீதியாரின் வாழ்க்கை எனக்கு புது தகவல். சங்க இலக்கியங்களை உங்கள் பதிவின் வாயிலாக அறிய ஆவலாக உள்ளேன். அருமையான பதிவு.
நான் வெள்ளிவீதியார் இருந்த காலத்தில் அவருடன் இருந்திருக்கக்கூடாதா.....இருந்திருந்திருந்தால் என்னால் இயன்றதைக்கூறி அவரைக் காதலனுடன் சேர்த்து வைத்திருப்பேன்.... அல்லது குறைந்தபட்சம் அவளுக்கு ஆறுதலாகவாவது இருந்திருப்பேனே....
ReplyDeleteஇது சாத்தியமில்லாத சிந்தனை தான் (சிந்தனை என்பதை விட உணர்ச்சி என்பது சரியாக இருக்கும்).... என் செய்வது. சாத்தியமில்லை என்பது அறிவுக்குத் தெரிகிறது. மனது சட்டென்று புரிஞ்சுக்க மாட்டேங்குதே....
@சமுத்ரா - நன்றி
ReplyDelete@கடம்பவனக் குயில் - பல இளைஞர்களுக்கும் அது சங்க இலக்கியம்-ன்னு தெரியும்-ங்க! ஆர்வம் தான் காரணம்! பிடித்தது போல் தந்தால் பிடித்துக் கொள்வார்கள்!
வெள்ளிவீதியார் வாழ்வு பற்றி சங்கப் பாடல்களிலேயே / ஒளவை பாடல்களிலேயே உள்ளது!
@இந்திரன்
ReplyDelete//நான் வெள்ளிவீதியார் இருந்த காலத்தில் அவருடன் இருந்திருக்கக் கூடாதா//
இருக்கிறாயே! :)
//சிந்தனை என்பதை விட உணர்ச்சி என்பது சரியாக இருக்கும்//
எதுவானாலும், எளிமை கண்டு இரங்கல்!
சரி, வெள்ளிவீதியே முழுதும் நிறைந்து விட்டதா என்ன? சங்கப் பாடல்கள் பற்றிப் பேசலையே? :)
ஆடியன்ஸ் கல்லெறிவாய்ங்களா?... ம்ம்..கீழேயே தமிழ்ல விளக்கம் ஓடுச்சுன்னா பசங்க கப்புன்னு புடிச்சுக்குவாங்க ..விறலியர் விளக்கம் ரொம்ப பொறுத்தம்..ஒவ்வொரு முறையும் மழை பெய்து செம்மன் கலக்கும் போது( கோலார் தங்க வயல்ல), இந்த சங்கப்பாட்டும், கண்ணதாசனின் அந்த பாட்டும் ஞாபகம் வரும்.. நானும் யோசிச்சிருக்கேன்..உறவு முறை மாறி வருதேன்னு..
ReplyDeleteவெள்ளிவீதியாரின் இந்த இரண்டு பாடல்களையும் படித்திருக்கிறேன். அவரைப் பற்றி இருக்கும் வேறு சங்க பாடல்கள், ஒளவையார் பாடல்கள் பற்றிய குறிப்புகளை எனக்கு அனுப்புகிறீர்களா இரவி?
ReplyDelete@சரவணன் அண்ணா
ReplyDelete//கீழேயே தமிழ்ல விளக்கம் ஓடுச்சுன்னா பசங்க கப்புன்னு புடிச்சுக்குவாங்க//
இது என்ன டாக்குமென்டரியா? படத்தோட ஒட்டி இருக்குறா மாதிரி இயக்குனர் காட்சி அமைக்கணும்:)
//ஒவ்வொரு முறையும் மழை பெய்து செம்மன் கலக்கும் போது( கோலார் தங்க வயல்ல),//
ஓ, KGF போவீங்களா? தங்கத்தோட கலந்த தண்ணி எடுத்துக்கிட்டு வாங்க! செம்மண் தண்ணி வேணாம்!:)
@குமரன்
ReplyDelete//அவரைப் பற்றி இருக்கும் வேறு சங்க பாடல்கள், ஒளவையார் பாடல்கள் பற்றிய குறிப்புகளை எனக்கு அனுப்புகிறீர்களா இரவி?//
எதுக்குண்ணா?:)
இதோ, இருக்கே! http://www.tamilvu.org/library/libcontnt.htm
சங்கப் பாடல்களைப் பற்றி நிறைய எழுதுங்கள் கே ஆர் எஸ். உங்கள் பாணி எனக்கு மிகவும் பிடித்தமானது.
ReplyDeleteபழனியப்பன் வைரம் ‘கற்க நிற்க’ எனும் பதிவு போல நீங்களும் ஒரு தனிப்பதிவே சங்கப்பாடல்களுக்கென உருவாக்கவேண்டும்
வாழ்க,, வளர்க!!
திவாகர்
வேறு ஊரான ரியோவுக்கு வந்து, அறையின் தனிமை இரவில்...வெள்ளிவீதி...நினைவுக்கு வந்து...அழ வைக்கிறாள்!
ReplyDelete@திவாகர் சார்
ReplyDelete//சங்கப் பாடல்களைப் பற்றி நிறைய எழுதுங்கள் கே ஆர் எஸ். உங்கள் பாணி எனக்கு மிகவும் பிடித்தமானது//
நன்றி:)
சங்க இலக்கியப் பதிவுகள் தனியாத் துவங்கும் எண்ணம் இருந்தது முதலில்! ஆனால் அதுக்கு ஆர்வலர்கள் மட்டுமே வருவார்கள்! அதான் அனைவரும் கண்ணிலும் படும்படி பந்தலில் இடுகிறேன்!
http://madhavipanthal.blogspot.com/search/label/சங்கத்தமிழ்
இலக்கிய இழையா ஆகா awesome! படிச்சிட்டு வரேன்! வெள்ளிவீதியார் பாடல்கள் பல படிச்சிருக்கேன் பாக்றேன் இங்க உங்க கைவண்ணத்தையும்
ReplyDeleteshylaja
//தமிழ்ச் சினிமாவில் சங்க இலக்கியப் பாட்டு போட்டா எடுபடுமா? மிக மிகப் பழங்காலத் தமிழ்! அதைச் சினிமாவில் வைத்தால் செல்லுமா?
ReplyDeleteஆடியன்ஸ் கல்லெறிவார்களே! இசை மெட்டில் பாடினால்? கல்லா?...பாறையே எறிவாய்ங்க!" :)
///////
ஆனா பழைய இலக்கியபாடல்கள் பல திரைக்கவிஞர்களுக்கு ஆதாரமாக இருந்திருக்கிறது படிக்காசுப்புலவரின் பாடல்கள் பலவற்றின் தாக்கம் கண்ணதாசனின் பாடல்களில் கண்டிருக்கிறேன்
//சங்க காலக் கவிஞர்கள் எல்லாம் "வீறு" மிக்கவர்கள்!
ReplyDelete"எங்கள் ரங்கநாயகியே, திருவாரூர் தமிழ்த் தேரே"-ன்னு.......தமிழை, பிச்சிப் போட்டு பிழைப்பு நடத்தத் தெரியும் 'வாலி-கூலி' அல்ல அவர்கள்!
///
hello vali is from srirangam! goththaayiththaa?:) samje?:)
//கவிஞர்-பாணர்-விறலியரா? அப்படி-ன்னா? உதாரணமாகப் பார்க்கலாமா?
ReplyDelete* கவிஞர் = கண்ணதாசன் (Lyric Writer)
* பாணர் = எம்.எஸ்.விஸ்வநாதன் (Music Composer cum Singer)
* விறலியர் = பத்மினி (Dancer cum Singer)
//
:):):) aahaa! dhool!
பெர்லினிலிருந்து இந்த மடல்கள் பெங்களூரிலிருந்து அல்ல:)(Europe tour)
ReplyDeleteஅதனால தமிழ் ஃபாண்ட் நடுல மக்கர் பண்ணி ஆங்கிலம் கலக்கவேண்டி இருக்கும்! ம்ம்...நல்ல அலசல் இந்த பதிவு ரவி. பெண்பாற்புலவர்களே அந்த நாளில் அதிகம் இல்லை எனினும் இப்படிச் சிலர் மிக அருமையாக எழுதினதை பலர் பார்வையில் படுவதே இல்லை. நீங்க இப்போதாவது எடுத்து உங்க நடைல எழுதி சிறப்பிச்சிட்டீங்க இதுக்கு முதல்ல நன்றி ரவி
//வெள்ளிவீதியார் என்னும் இந்தப் பெண் மட்டுமே இத்தனை "துணிவு"! தோழி கோதை என்னும் ஆண்டாளுக்கு முன்னோடி!
ReplyDelete////அதான பாத்தேன் ஆண்டாள
இன்னும் எங்கடா காணமேன்னு:)
பெண் புலவர்களில் ஒளவையாருக்கு அடுத்ததாக அதிகமாக அறியப்பட்டவரான வெள்ளிவீதியார் . காமத்தையும், உயிரையும் ஒப்பிட்டு பாடியிருக்கிறார். காமம் வந்தால் பெண்களிடம் இயல்பாகவே இருக்கும் நாணம் எனப்படும் வெட்கமும் போய் விடும் என்று அவர் அப்பாடலில் கூறுகிறார்.
“”"அளிதோ தானே நாணே, நும்மொடு
நனிநீ டுழந்தைன்று மன்னே, இனியே
வான்பூங்கரும்பி னோங்கு மணல்
சிறுசிறை தீம்புன னெரிதர வீய்ந்துக்
காஅங்குத் தாங்கு மளவைத் தாங்கிக்
காமம் நெரிதரக் கைந்நில்லாதே
” (குறுந் தொகை 149)
இதன் பொருள்: நாணமே, நெடுங்காலம் உன்னோடு இருந்து வருந்தியது போதும். இனிமேல் கரும்புக்கு நீர் பாய்ச்சுவதற்கு மண்ணால் இடப்பட்டிருந்த சிறு மணல் பாத்தியின் கரை நீர் நெருங்கி அடிக்கும் போது அக்கரை உடைந்து விடுவது போல தாங்கும் அளவைத் தாங்கி காமம் (காதல்) மென்மேலும் நெருக்க என்னிடம் இருந்த நாணமும் போய் விட்டது என்று தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. பெண்களிடம் இயல்பாகவே இருக்கும் நாணம், காம மிகுதியால் உடைந்து போயிற்று; இல்லாது போயிற்று என காதல் பரிமாணத்தை இப்பாடல் எடுத்துரைக்கிறது.
@shy-akka!
ReplyDeleteBerlin-aa? Me in Rio, Brazil :)

5:08 PM, July 05, 2011///
wow! really? akkaavum thambiyum nallaa uurai sutharompolrukku!!!
btw.....indha photo naan pomona temple vasalla eduthathuthaane?:) kalakkalas!
அருமையான பதிவு ரவி பாடல்கள் அற்புதம் குறுந்தொகையும் காதலை அதிகமாக பாடும் நூல் முழுதும் படிக்காவிட்டியும் சிலதை பள்ளிக்காலத்தில் படித்தது சினிமாப்பாடல் சிறப்பு என்றாலும் பாடல்காட்சி சொதப்பல் என்பது என் பார்வை.
ReplyDeleteதங்களுடைய ஆய்வுச் சிந்தனை அற்புதம் ..தமிழ்ப்பேராசியரான எனக்கே வியப்பு .தங்களின் நடை .முன்வைக்கும் திறன் அழகுதான்..பணி தொடர வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் தூரிகை கபிலன்
ReplyDeleteவெள்ளி வீதியாரின் வாழ்க்கை எனக்கு புது தகவல். சங்க இலக்கியங்களை உங்கள் பதிவின் வாயிலாக அறிய ஆவலாக உள்ளேன். அருமையான பதிவு....பணி தொடர வாழ்த்துக்கள்.............
ReplyDeleteமிக்க நன்று
ReplyDeleteகன்றும் உணாது எனும் வெள்ளி வீதியார் பாடல் தலைவனின் தவிப்பைத் தோழனுக்குக் கூறுவது. தலைவி கூற்றில்லை.
ReplyDelete’கன்றும் உணாது’ எனும் வெள்ளிவீதியார் கவிதை, பாலைத் திணை. பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. எனவே, இது தலைவி கூற்றே!
Deleteதலைவன் பிரிவினை இவள் ஆற்றாள் ஆயினாள் என்று கவலையுற்ற தோழியை நோக்கித் தலைவி, “நான் ஆற்றியிருப்பவும் என் மாமை அழகு வீணாகும்படி அதனைப் பசலை உண்டது” என்று கூறியது.