Sunday, June 05, 2011

காவடி ஆடும் பெருமாள்!

இந்த வார இறுதியில் ஒரு பெரிய சண்டையா?
ஓரு ஓரமாய் உட்கார்ந்து தேம்பிக் கொண்டிருந்த போது, திடீர்-ன்னு இந்தப் பாட்டு!
சண்டை போட்டவனே வந்து...ஏய், என்ன, கோபமா, கோபமா?-ன்னு...இந்தப் அசைபடத்தை என் கண் முன்னே ஓட்ட...

என்னால் என்னையே நம்ப முடியலை! இப்படி ஒரு காவடி ஆட்டமா?
முருகா! உன்னைக் கைப்பி்டித்த குற்றத்துக்கு, எந்தையையும் காவடி ஆட வைத்து விட்டாயே! :) ChoShweeeet:)

இந்தப் பதிவுக்கு நான் என்னா-ன்னு எழுதுவேன்?
காவடிப் பாட்டு யாரு எழுதியது, என்னா-ன்னு ஒரு விவரமும் தெரியாது!
ஆனாலும் பாட்டை மட்டும் ஓட்டி ஓட்டி....கேட்டுக் கேட்டு.....டைப் பண்ணேன், உங்களுக்காக!
வாசிச்சிக்கிட்டே ஆடுங்க, என்ன? :)

என்னமா ஆட்டம்!
முருகா, இதே போல்...நீ ஆடி...ஒருநாள்...நான் பார்க்கணும்...ஆடுவியா?



நீலவானம் போல் இலங்கி, நெற்றியிடைச் சந்தனத்தின்
நேர்த்தியாய்த் திலகம் ஒளி வீசுதே - கண்ட
நெஞ்சமோடு அந்தரங்கம் பேசுதே!

நேசமாய் ஒரு வாச மாமலர், ஆசையாய்ப் பிரகாச மாகவும்
நின்றுநின்று காண ஆசை யாகுதே - இந்த
நேரம்கூட ஊழிப் போலத் தோனுதே!

பாடகம் தண்டைக் கொலுசும், பாத கங்கணச் சிலம்பும்
பண்ணும் தவ பேரிகை முழங்குதே - புகழ்
பாடும் நாலு வேதமும் மயங்குதே!

பங்கயத் திரு மங்கையர்க் கொரு, பங்கை இற்று எழில் அங்கை இற்றது
மானச் சந்திரக் காடென விளங்குதே - மனம்
மங்கி நின்ற ஞானமும் துலங்குதே!

சந்தனப் பேழைப் புறத்துச், சாயலிட்ட தன்மை ஒத்து
தக்க நின்ற ஓரச் சாயக் கொண்டையும் - தாவித்
தாவித் தாவித் துள்ளும் விழிக் கெண்டையும்!

தந்தனத் தன, தந்தனத் தன, தந்தனத் தன, தந்தனத் தன
தானம் ஈவ தெனப் பாதத் தண்டையும் - கண்டு
தாறு மாறாய்ப் போச்சு மாயச் சண்டையும்!


அல்லிக்கேணியில் அப்பாவுக்கு ஒரு ஆட்டம்-ன்னா,
அப்படி உனக்கில்லையா?-ன்னு மனசு அடிச்சிக்குமே முருகா...

வண்ண மயில் தோகை ஒன்று, முன்ன மாகப் பின்னி வைத்து
அங்கும் இங்கும் ஆடிஆடி நோக்குதே - கந்தன்

அழகு மயில் என்னை உற்றுப் பாக்குதே!
மரகதத் திரு, மயில் அணித் திரு, மலர் மணத் திரு, மகள் எனக்கொரு
காதலோடே ஆசை நடை நடந்தனன் - நான்
காணும் முன்னே வாசலைக் கடந்தனன்....


இப்படி ஒரு தினுசா உளறி, முருகனருள் வலைப்பூவில் இன்றே இடுகிறேன்! அவசியம் பாருங்க :) This Dance is Very Contagious! :) இன்று, அம்மா-அப்பாவின் மணநாளும் கூட! :)

10 comments:

  1. இந்த காவடிச் சிந்தை யாரு எழுதியிருப்பாங்க?
    பாட்டின் சந்தத்திலும் வரிகளிலும் அப்படியே அவரது முத்திரைகள் அச்சடித்து இருக்கின்றதே!
    அவர் ஊத்துக்காடு வேங்கடகவி அல்லவோ!

    ReplyDelete
  2. அப்பா அம்மாவுக்கு மணநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. ஓ...ஊத்துக்காடு பாட்டா? சூப்பர்! அதான் Dance Beat-ல வருது போல!:)
    அவரது முத்திரை எங்கே வருகிறது ஜீவா?

    முன்னர் கண்ணன் பாட்டில் ஒரு பதிவு இட்டிருந்தேன் - கண்ணன் வருகின்ற நேரம் - ஊத்துக்காடு காவடிச் சிந்து தான்! - ஆனா இந்த ஸ்டைல்-ல இல்ல! கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சி!
    http://kannansongs.blogspot.com/2008/01/blog-post_17.html

    ReplyDelete
  4. நன்றி குமரன்!
    பாட்டுக்குப் பொருள் சொல்லுங்க! பலதும் புரியலை! :)

    ReplyDelete
  5. தாறுமாறா போனது சண்டையா செண்டையா?

    ReplyDelete
  6. அதானே சண்டையா? செண்டையா?

    நான் போட்டது சண்டை!:)
    ஆனா இங்கே...?

    செண்டை-ன்னா கையில் இருக்கும் உழவுகோல்! சாட்டை போல இருக்கும்! அதுல என்ன மாயம்? தாறு மாறாப் போச்சு?

    ஹைய்யோ...ஒன்னுமே புரியலை! ஊத்துக்காட்டாரே! :)

    ReplyDelete
  7. ஆட்டமும் பாட்டமும் அழகு!

    அம்மா அப்பாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பணிவான வணக்கங்களும்.

    ReplyDelete
  8. @KRS: I was behind the camera (exactly) when they took this video! i remember once, somewhere in a comment i told u u were missing this! :)

    ReplyDelete
  9. @KRS: I was behind the camera (exactly) when they took this video! i remember once, somewhere in a comment i told u u were missing this! :)

    ReplyDelete
  10. And, one additional info: Perumal was dancing to "brahmamukate" tune in this video...i have heard unnikrishnan sing this song...one of my all-time favourites...but i was thinking of Periazhwar's words...

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP